அறிவியல் ஆயிரம் : வேகமாக சாப்பிடுகிறீர்களா...
உணவின் தரம் போல, சாப்பிடும் முறையும் முக்கியம். சிலருக்கு வேகமாக சாப்பிடும் பழக்கம் இருக்கலாம். இது உடல் ஆேராக்கியத்துக்கு சிறந்ததல்ல. செரிமான கோளாறு, ரத்தத்தில் சர்க்கரை அளவு உயர்வு, அதிகமாக சாப்பிடுதல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலை தெரிவித்துஉள்ளது. வேகமாக சாப்பிடும் போது சரியாக மெல்லாமல் விழுங்குவதால், உணவு பெரிய துண்டுகளாகவும், அதனுடன் சேர்ந்து காற்றும் வயிற்றுக்குள் செல்கிறது. இவை இரண்டும் வயிற்று உப்புசம், அசவுகரியம், அதிக அமில சுரப்புக்கு காரணமாகிறது என தெரிவித்துள்ளது.
தகவல் சுரங்கம் : சர்வதேச அமைதி வாழ்வு தினம்
'அமைதி என்பது ராணுவத்தால் கொண்டு வர முடியாது. இதை புரிந்து கொள்வதன் மூலமே ஏற்படுத்த முடியும்' என்றார் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். உலகில் போர் இல்லாமல் இருப்பதை விட, அமைதி மிக முக்கியமானது. உலகில் ஜாதி,மதம், இனம், மொழி, கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு வேறுபாடுகள் இருந்தாலும், ஒருவருக்கொருவர் சகிப்புத்தன்மை, விட்டுக் கொடுத்தல், பரஸ்பர மரியாதை, நீதி, ஒற்றுமையுடன் வாழ்வதே அமைதியான உலகுக்கு ஏற்றது. இதை வலியுறுத்தி ஐ.நா.,சார்பில் ஜன.28ல் சர்வதேச அமைதியான சகவாழ்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது.