அறிவியல் ஆயிரம் : பறவையின் நீண்டதுார பயணம்
பறவையின் நீண்டதுார பயணம்
'அமுர் வல்லுாறு' என்ற பறவையினம் நீண்ட துாரம் இடம் பெயர்பவை. ஆண்டுக்கு 20 ஆயிரம் கி.மீ., துாரம் செல்லும். இந்நிலையில் மணிப்பூரில் கண்டறியப்பட்ட ஒரு அமுர் வல்லுாறு பறவைக்கு 'சியுலுவான் 2' என பெயரிடப்பட்டது. இந்திய வனவிலங்கு அமைப்பு, இதை செயற்கைகோள் வழியாக கண்காணித்ததில், சோமாலியாவில் இருந்து எங்குமே நிற்காமல் தொடர்ந்து பறந்து 3800 கி.மீ., துாரத்தை 93 மணி நேரத்தில் கடந்து இந்தியாவை வந்தடைந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பறவைகளின் இடம்பெயர்தலின் பாதையை கண்டறிவதற்காக இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
தகவல் சுரங்கம் நிலக்கரி சுரங்க தினம் மற்றும் சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினம்
மின்சாரம், இரும்பு, சிமென்ட் உற்பத்தி பணிகளுக்கு நிலக்கரி அவசியம். நிலக்கரி சுரங்கங்களில் தினமும் தோண்டுதல், நிலக்கரியை பிரித்தெடுத்தல் போன்ற ஆபத்து, சவாலான பணியில் ஈடுபடும் தொழிலாளர்களின் உழைப்புக்கு மரியாதை அளிக்கும் விதமாக மே 4ல் நிலக்கரி சுரங்க தினம் கடைபிடிக்கப்படுகிறது.
* தீ விபத்துகளில் உயிரை பணயம் வைத்து, அதை அணைக்கும், மீட்பு பணிகளில் ஈடுபடும் தீயணைப்பு வீரர்களின் பணியை அங்கீகரிக்கும் விதமாக மே 4ல் சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.