அறிவியல் ஆயிரம்: நுாறாண்டு காலம் வாழ....
நுாறாண்டு காலம் வாழ....
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு உணவு பிடிக்கும். இந்நிலையில் சைவ உணவை விட அசைவ உணவு எடுப்பவர்களுக்கு நுாறு வயதை தொடும் வாய்ப்பு அதிகம் என சீன ஆய்வு தெரிவித்து உள்ளது. உடற்பயிற்சி, புகைப்பழக்கம் உள்ளிட்ட காரணிகளை தவிர்த்து, அசைவ உணவை முற்றிலும் தவிர்ப்பவர்கள், நுாறு வயதை தொடும் வாய்ப்பு, அசைவத்துடன் ஒப்பிடும்போது 19 சதவீதம் குறைகிறது. இதுவே முட்டை, பால் சாப்பிடும் சைவ உணவு பிரியர்களுக்கான வாய்ப்பு 14% குறைவாக உள்ளது. அதுபோல அசைவத்தில் மீன் உணவு எடுப்பவர்களுக்கும் வாய்ப்பு குறைவு என சீன ஆய்வு தெரிவித்துள்ளது.
தகவல் சுரங்கம் கிரீன்லாந்தின் முக்கியத்துவம்
கிரீன்லாந்தை' அமெரிக்கா குறிவைப்பதற்கு அப்பகுதியின் தாதுப்பொருள் வளங்கள், பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்டவை முக்கிய காரணம் என கூறப்படுகிறது. ஆர்டிக் - அண்டார்டிக் பெருங்கடலின் இடையே கிரீன்லாந்து உள்ளது. உலகின் மிகப்பெரிய தீவு என அழைக்கப்படுகிறது. டென்மார்க்கின் கீழ் செயல்பட்டாலும், இது ஒரு தன்னாட்சி பகுதி. இதன் தலைநகரம் நுாக். பரப்பளவு 21.6 லட்சம் சதுர கி.மீ. இதில் 80 சதவீதம் பனிப்பிரதேசமாக உள்ளது. 56 ஆயிரம் பேர் மட்டுமே வாழ்கின்றனர். இது உலகில் மக்கள் அடர்த்தி குறைந்த நாடு. உலகின் பெரிய தேசியப்பூங்கா இங்கு உள்ளது.