அறிவியல் ஆயிரம் : காணாமல் போன பனிப்பாறை
உலகின் பெரிய பனிப்பாறை (ஏ23ஏ) 40 ஆண்டுக்குப்பின் தற்போது மறைந்து விட்டது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதன் பரப்பளவு 3500 சதுர கி.மீ. 920 அடி. எடை ஒரு லட்சம் கோடி டன். அண்டார்டிகாவில் 'பில்ச்னர்'பனிப்பாறையிலிருந்து 1986ல் முதன்முதலில் உடைந்து பிரிந்தது. 40 ஆண்டாக இதன் நகர்வை விஞ்ஞானிகள் கண்காணித்தனர். பருவநிலை மாற்றம், வெப்பநிலை உயர்வு உள்ளிட்டவையால் இதன் பெரும்பாலான பகுதி உடைந்து, உருகி வந்தது. கடைசியாக 2026 ஏப்ரலில் கண்டறியப்பட்டது. தற்போது செயற்கைக்கோள் பார்வையில் இருந்து முழுதும் மறைந்து விட்டது.
தகவல் சுரங்கம் : சர்வதேச நீதி, எமோஜி தினம்
* சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உருவாக அடிப்படையாக அமைந்த ரோம் ஒப்பந்தம் 1998 ஜூலை 17ல் கையெழுத்தானது. இதை நினைவுபடுத்தும் விதமாக ஜூலை 17ல் சர்வதேச நீதி தினம் கடைபிடிக்கப்படுகிறது. 123 நாடுகள் உறுப்பினராக உள்ளன.
* நேருக்கு நேர் பேசும் போது முகபாவனையை அறிய முடியும். இணையத்தில் 'சாட்டிங்' செய்யும் போது உணர்வு, தகவல், தேவை, துன்பம், மகிழ்ச்சியை தெரிவிப்பதற்காக 'எமோஜி' குறியீடுகள் பயன்படுத்தப்படுகிறது. ஜூலை 17ல் உலக எமோஜி தினம் கடைபிடிக்கப்படுகிறது.