ராஜ்ய சபா

68 views
Skip to first unread message

Aravind R

unread,
Jun 30, 2016, 10:30:09 PM6/30/16
to brailleacl
ராஜ்ய சபா
இந்திய நாடாளுமன்றத்தில் இரு அவைகள் உள்ளன. அவை ராஜ்ய சபா மற்றும் லோக்
சபா ஆகும். இவை இரண்டும் இந்திய கட்டமைப்பு சட்டத்தின் கீழ்
உருவாக்கப்பட்டவை. "ராஜ்ய சபா" தமிழில் "மாநிலங்களவை" என்று
அழைக்கப்படுகிறது. "லோக் சபா" தமிழில் "மக்களவை" என்று அழைக்கப்படுகிறது.
இந்திய அமைச்சரவை மக்களவைக்கு கடமையுற்றது.
லோக் சபா "கீழ் சபை" அல்லது "கீழ் அவை" என்றும் அழைக்கப்படுகிறது. அதே
போல ராஜ்ய சபா, "மேல் சபை" அல்லது "மேலவை" என்றும் அழைக்கப்படுகிறது.
மாநிலங்களவை 250 உறுப்பினர்கள் கொண்ட சபை ஆகும். இவர்களில் 12 பேர்
இந்திய குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள். கலை, இலக்கியம்,
அறிவியல், விளையாட்டு, தொழில் போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்களை
குடியரசுத் தலைவர் இதன் உறுப்பினர்களாக நியமிக்கிறார். இந்த 12 பேரைத்
தவிர்த்த மற்ற 238 உறுப்பினர்கள் மாநில சட்டமன்ற உறுப்பினர்களால்
தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள்.
ஒரு மாநிலங்களவை உறுப்பினரின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள் ஆகும்.
மாநிலங்களவையின் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்களின் பதவிக்காலம் ஒவ்வொரு
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை முடிவடையும். மாநிலங்களவைத் தலைவராக
குடியரசுத் துணைத்தலைவர் பதவி வகிப்பார்.
மாநிலங்களவைக்குக் குறிப்பிட்ட அளவிலான உறுப்பினர்கள் ஒவ்வொரு
மாநிலத்திலிருந்தும் அந்த மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களால்
தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இம்முறை கனடாவின் "செனட்" மற்றும்
ஜெர்மனியின் "பந்தர்ஸ்ரேட்" ஆகிய மன்றங்களின் தேர்ந்தெடுக்கும்
முறைகளின்படி நம் இந்தியாவில் பின்பற்றபடுகின்றது. இதன் உறுப்பினர்களின்
எண்ணிக்கை மாநிலங்களின் பிரதிநிதித்துவத்திற்கேற்றார் போல் அதன் மக்கள்
தொகை, பரப்பளவு இவற்றின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளது. பெரிய
மாநிலங்களுக்கு அதிக உறுப்பினர்களும் சிறிய மாநிலங்களுக்குக் குறைவான
உறுப்பினர்களும் சரிசம பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில்
ஒதுக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவை கூட்டங்கள் மக்களவை கூட்டங்களைப் போல் அல்லாமல் தொடர்ச்சியாக
நடைபெறும். மக்களவையை குடியரசு தலைவர் கலைக்க முடியும். ஆனால்,
மாநிலங்களவையை யாரும் கலைக்க முடியாது. இதன் அதிகாரங்கள் மக்களவைக்கு
ஈடானதாகவும் மக்களவைக்கென வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை குறைக்காதனவாகவும்
கருதப்படுகின்றது. இரு அவைகளினாலும் எதிரொலிக்கும் சர்ச்சைகளுக்கு இரு
அவைகளின் கூட்டுக் கூட்ட அமர்வின் மூலம் தீர்வு காணப்படுகின்றது. இவ்வாறு
நடைபெறும் கூட்டுக் கூட்டங்களில் மக்களவை மாநிலங்களைவையை விட இரு மடங்கு
உறுப்பினர்களை கொண்டதாக இருப்பினும், மாநிலங்களவை உண்மையான நடப்பிலுள்ள
(defacto) வீட்டோ அதிகாரங்களை கொண்டதாக கூட்டுக் கூட்டங்களில்
கருதப்படுகின்றது.
மாநிலங்களவையின் அலுவல் நிலை (ex-officio) கூட்டத் தலைவராக இந்தியக்
குடியரசுத் துணைத் தலைவர் பொறுப்பு வகிப்பார். மாநிலங்களவையின் முதல்
கூட்டம் மே 13, 1952 அன்று துவக்கப்பட்டது.
ராஜ்யசபா உறுப்பினர்கள் மாநில சட்டமன்ற உறுப்பினர்களால் மக்கள் தொகை
அடிப்படையில் விகிதாச்சார முறைப்படி ஒற்றை மாற்று வாக்கு மூலம்
தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதன் கட்டமைவு இந்திய அரசியலமைப்பு சட்ட
விதி 81 இல் கூறப்பட்டுள்ளதின்படி அமைக்கப்பட்டுள்ளது.
ராஜ்ய சபா ஒரு நிரந்தர அமைப்பு. இதன் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள்
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பதவி விலகுகின்றனர். முப்பது வயதுக்கு
குறையாத இந்திய பிரஜைகள் எவரும் ராஜ்ய சபா உறுப்பினராகலாம். தற்போதைய
ராஜ்ய சபாவின் எண்ணிக்கை 244 இதில் 232 உறுப்பினர்கள் மாநில சட்ட
சபைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.
மனிதா! இரவில் வானில் பல விண்மீன்களைக் காண்கிறாய். ஆனால் சூரியன்
உதித்ததும் அவை கண்களுக்குத் தென்படுவதில்லை. ஆதலால் பகலில் ஆகாயத்தில்
நட்சத்திரங்களே இல்லை என்று சொல்ல முடியுமா? மனிதனே! உனது அறியாமையின்
காரணமாக நீ இறைவனைக் காண முடியாததனால் இறைவனே இல்லை என்று நினைக்காதே !

தமிழ்மலர் மின்-இதழ் படியுங்கள்
தமிழ்மலர் - இனிய எளிய தமிழில் வெளியிடப்படும் மின்-இதழ். ஜனவரி 2015ல்
முதல் இதழ் வெளியிடப்பட்டது. ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து ஒரு இதழ்
வெளியிடப்பட்டு வருகிறது. இது பொது அறிவுத் தகவல்கள் நிறைந்தது. இதைப்
படித்தால், தெரியாத பல புதிய, நல்ல விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம்.
குடும்பத்தில் உள்ள அனைவரும் படித்து பயன் பெறலாம். இதில் அறிவுபூர்வமான,
ஆக்கபூர்வமான தகவல்கள் அதிக அளவில் இடம் பெறுகின்றன.
"தமிழ்மலர்" மின்-இதழுக்கு ஒரு ஆண்டிற்கான சந்தாக் கட்டணம் (Rs.20 only)
மட்டுமே. ஒவ்வொரு மாதமும் உங்கள் இ-மெயிலுக்கு ஒரு மின்-புத்தகம்
(E-Book) அனுப்பப்படும். சந்தாக் கட்டணத்தை செக் (Cheque), டிமாண்ட்
டிராப்ட் (D.D), மணியார்டர் (Money Order)"நெட் பேங்கிங்" (Net Banking)
அல்லது டெபிட் கார்டு (Debit Card), கிரெடிட் கார்டு (Credit Card) மூலம்
செலுத்தலாம்.
செக் / டி.டி அனுப்புபவர்கள் "S.MALLIGA" என்ற பெயரில் செக் / டி.டி
எடுத்து அனுப்புங்கள். சந்தாக் கட்டணத்தை (Rs.20 only) செக் (Cheque),
டிமாண்ட் டிராப்ட் (D.D) அல்லது மணியார்டர் (Money Order) மூலம் அனுப்ப
வேண்டிய முகவரி :
Mrs.S.Malliga
3/1178, Lingapuram Colony
Opp. Latcham Theater
Sivakasi - 626189.
சந்தாக் கட்டணத்தை Net Banking மூலம் செலுத்த விரும்பினால், கீழ்க்கண்ட
Bank Account-ல் பணம் செலுத்துங்கள்.
Bank : TAMILNAD MERCANTILE BANK
Branch : SIVAKASI
IFSC CODE : TMBL0000003
Bank A/C Name : S.ARUMUGASAMY
Bank A/C Number : 003100050127211
டெபிட் கார்டு (Debit Card) அல்லது கிரெடிட் கார்டு (Credit Card) மூலம்
சந்தாக் கட்டணத்தை செலுத்த விரும்பினால், கீழ்க்கண்ட இணையதள முகவரியில்
பணம் செலுத்துங்கள்.
http://imojo.in/5gkq2r
நீங்கள் பணம் அனுப்பிய பிறகு, அது பற்றிய விபரங்களை எங்களுக்கு
இ-மெயிலில் infot...@gmail.com-க்கு அனுப்புங்கள். ஒவ்வொரு மாதமும்,
இ-புத்தக வடிவில் (E-Book) "தமிழ்மலர்" மின்-இதழை உங்களுடைய இ-மெயிலுக்கு
அனுப்புகிறோம். அந்த இ-புத்தகத்தை உங்கள் இ-மெயிலிருந்து டவுன்லோடு
(Download) செய்து படித்துக்கொள்ளுங்கள்.
1. கலை 2. பண்பாடு 3. அறிவியல் 4. தொழில்நுட்பம் 5. ஆன்மீகம் 6. வணிகம்
7. தமிழ் 8. ஆங்கிலம் 9. வரலாறு 10. உயிரியல் 11. புவியியல் 12. கணிதம்
13. மகளீர் 14. பொருளாதாரம் 15. விளையாட்டு 16. மருத்துவம் 17. அரசியல்
18. சுற்றுலா 19. சிறுதொழில் 20. சிறுகதை 21. கவிதை 22. நகைச்சுவை 23.
பொது அறிவு - தொடர்பான தரமான தகவல்களுடன் மின்அஞ்சல் (e-mail) வழியாக
"தமிழ்மலர் மின்-இதழ்" உங்களுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படும்.
தமிழ்மலர் மின்இதழ் - மே 2016 புத்தகத்தை டவுன்லோடு செய்ய இங்கே க்ளிக்
செய்யுங்கள்
Click here to Download Tamil Malar May 2016 E-Magazine (in PDF Format)


Edited by : Mrs.S.Malliga
Contact Address : 3/1178, Lingapuram Colony, Sivakasi - 626189.
E-Mail : infot...@gmail.com
Website : http://tamilmalar.esy.es
Visit our Website to read interesting General Knowledge informations.











--
nothing is difficult unless you make it appear so.

r. aravind,

Assistant manager
Department of sales
bank of baroda retail loan factory, Chennai.
mobile no: +91 9940369593, 9710945613.
email id : aravi...@yahoo.com, aravind.a...@gmail.com.
Reply all
Reply to author
Forward
0 new messages