அறிவியல் ஆயிரம் : கொசுக்கள் கடிப்பது எப்படி

0 views
Skip to first unread message

Dhivisha dhivi

unread,
May 17, 2026, 9:14:04 PMMay 17
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம் : கொசுக்கள் கடிப்பது எப்படி

  கொசுவின் வாய்ப்பகுதியில் ஆறு நுண்ணிய குழல்கள் உள்ளன. இதில் இரண்டு தோலில் துளையிடுகிறது. மற்ற இரண்டு, தோலை விரித்து இழுத்து பிடித்துக்கொள்ளவும், 5வது குழல் துளையின் உள்ளே சென்று ரத்த நாளத்தை அடைந்து உறிஞ்சுகிறது. இதன் முனையில் ரத்தத்தை உணரும் உணர்வி செல்கள் உள்ளதால் தோலுக்கு அடியில் ரத்தக் குழாய்களை கண்டறிந்து துளைக்கிறது. 'ஹைபோபேரிங்ஸ்' எனும் 6வது குழல் வழியே ரத்தத்தில் தன் எச்சிலைக் கொசு செலுத்துகிறது.இந்த வழியேதான் நோய் ஏற்படுத்தும் கிருமிகளும் உடலில் நுழைகின்றன.
 தகவல் சுரங்கம் : மியூசியம், எய்ட்ஸ் தடுப்பூசி தினம்

  * அருங்காட்சியகத்தின் (மியூசியம்) முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மே 18ல் உலக அருங்காட்சியக தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகளவில் கலாசார பரிமாற்றம், மேம்படுத்துதல், அமைதியை ஏற்படுத்துவது இதன் நோக்கம்.

* எச்.ஐ.வி., வைரசால் ஏற்படும் எய்ட்ஸ் நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் முயற்சித்து வருகின்றனர். இது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 1998 முதல் மே 18ல் உலக எய்ட்ஸ் தடுப்பூசி விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது. எய்ட்ஸ் வைரஸ் 1983ல் கண்டறியப்பட்டது.
Reply all
Reply to author
Forward
0 new messages