684 views
Skip to first unread message

Professor k. kumar

unread,
Nov 19, 2014, 2:40:35 AM11/19/14
to brail...@googlegroups.com
Ильяс : இல்யாஸ்
L.N.Tolstoy

மூலம் : லியோ டால்ஸ்டாய்
தமிழில் : மா. புகழேந்தி

ஒரு காலத்தில் இல்யாஸ் என்று ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனது தந்தை அவனுக்கு ஒரு நல்ல
பெண்ணை மணமுடித்துக் கொடுத்த ஓர் ஆண்டுக்குப் பின்னர் மறைந்து போனார், சொல்லிக்கொள்ளும்படி
எந்த ஒரு சொத்தினையும் விட்டுச் செல்லவில்லை. இல்யாஸ் அப்போது ஏழு குதிரைகளையும்,
இரண்டு மாடுகளையும், சில ஆடுகளையும் வைத்திருந்தான். அவன் நல்ல நிர்வாகி விரைவில்
தனது சொத்து பத்தினை அதிகரித்துக் கொண்டான். அவனும் அவனது மனைவியும் விடியலிலிருந்து
இரவுவரை கடுமையாக உழைத்தார்கள்; மற்றெல்லாரும் விழிப்பதற்கும் முன்னர் எழுந்து மற்றவர்கள்
எல்லாம் தூங்கிய பின்னர் தூங்கினர்; அவனது சொத்து ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்து கொண்டே
இருந்தது. இவ்வாறு வாழ்ந்ததால், இல்யாஸ் கொஞ்சம் கொஞ்சமாக சொத்தினைப் பெருக்கிக் கொண்டான்.
அவனது முப்பத்தி ஐந்தாவது வயதில் அவனிடம் 200 குதிரைகளும், 150 கால் நடைகளும் 1200
ஆடுகளும் இருந்தன. ஆண் வேலைக்காரர்கள் கால் நடை மந்தைகளை மேய்த்தனர், பெண் வேலைக்காரர்கள்
பால் கறந்து தயிறும் மோரும் வெண்ணெயும் நெய்யும் செய்தனர். இப்போது இல்யாஸ் அபரிமிதமான
செல்வத்தைக் கொண்டிருந்தான், அவனது மாகாணத்தில் உள்ள அனைவரும் அவனைப் பார்த்துப் பொறாமை
கொண்டனர். அவனைப்ப்ற்றி அவர்கள் சொன்னார்கள், "இல்யாஸ் ஓர் அதிர்ஷ்டக்காரன், தேவைக்கும்
அதிகமாக அவன் எல்லாம் வைத்துள்ளான், இந்த உலகமே அவனுக்கு சொர்கமாக இருக்கிறது."
இல்யாசைக் கேள்விப்பட்ட செல்வந்தர்களெல்லாம் அவனிடம் நட்புக்கொள்ள முற்பட்டனர். தூரம்
தொலைவிலிருந்து எல்லாம் அவனைக்காண பலர் வந்தனர், அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்றான்,
அனைவருக்கும் அருந்தவும் உண்ணவும் கொடுத்து மகிழ்ந்தான். யார் வந்தாலும் அங்கே அவர்களை
வரவேற்க தேனீர் சர்பத் மற்றும் ஊணுடன் உணவு காத்திருந்தது. எப்போது விருந்தினர் வந்தாலும்
ஒரு கிடா வெட்டப்பட்டது, சில நேரங்களில் இரண்டு, விருந்தினர் எண்ணிக்கை அதிகமானால்
குதிரை வெட்டப்பட்டது.
இல்யாசுக்கு மூன்று குழந்தைகள்: இரண்டு மகன்கள் ஒரு மகள்; அவர்களுக்கு எல்லாம் திருமணம்
செய்து வைத்தான். அவன் ஏழ்மையாக இருந்த போது அவன் மகன் அவனுடன் பாடுபட்டான். கால் நடை
மந்தைகளை அவன் மகன் மேய்த்தான்; இல்யாசிடம் செல்வம் பெருகிய போது அவனது மகன்கள்
கெட்டுப்போனார்கள். ஒரு மகன் குடிகாரன் ஆனான்.
மூத்த மகன் தெருச் சண்டையில் பலியானான், இளையவன் தற்பெருமை கொண்ட பெண்ணை மணந்ததால் தந்தை
சொல்லை மதிக்காமற்போனான், அதன் பிறகு தந்தையும் மகனும் சேர்ந்து வாழவே முடியாமல் போனது.
அதனால் அவர்கள் பிறிந்து வாழ ஆரம்பித்தனர், இல்யாஸ் தன் மகனுக்கு ஒரு வீடும் சில கால்
நடைகளையும் கொடுத்தான்; இதனால் அவனது செல்வம் குறைந்து போனது. இதன் பிறகு கால்
நடைகளுக்குத் திடீரென நோய் கண்டது அதனால் பல கால் நடைகள் பலியாயின. அதன் பின்னர் வந்த
வெள்ளாமை பொய்த்துப் போனது; அடுத்து வந்த கடுங்குளிர் காலத்துக் குளிரில் பல கால் நடைகள்
இறந்து போயின. அதன் பிறகு கிர்கிஸ் கொள்ளையர்கள் அவனது நல்ல குதிரைகளை ஓட்டிச்
சென்றனர்; இவ்வாறாக இல்யாசின் சொத்துக்கள் சேதமுற்றன. அவனது வலிமையைப் போலவே அவனது
செல்வமும் மெலிய ஆரம்பித்தது. அவன் எழுபது வயதினை அடைந்த போது அவன் செலவுகளுக்காக
துணிமணிகளை எல்லாம் விற்க ஆரம்பித்தான். அவன் முடிவாக அனைத்து உடைமைகளையும் இழந்து
தனது அனைத்துக் கால் நடைகளையும் விற்று வறுமையை நேருக்கு நேராக எதிர்கொண்டான். எப்படி
இதெல்லாம் நடந்தது என்று அவன் அறியும் முன், அவன் அனைத்தையும் இழந்திருந்தான், தள்ளாத
வயதில் அவனும் அவன் மனைவியும் கூலிக்குச் செல்ல நேர்ந்தது. அணிந்து கொண்டிருந்த உடை,
ஒரு கம்பளி மேலாடை, ஒரு கோப்பை, இரு சோடிக் காலணிகள், வயதாகிப் போன அவனது மனைவி
ஷாம்-ஷெமாகி ஆகிவற்றைத் தவிர இல்யாசிடம் இப்போது ஒன்றுமில்லை. அவனை விட்டுப் பிறிந்து
போன மகன் தூர தேசம் ஒன்றிற்குச் சென்று விட்டான், அவனது மகளும் இறந்து விட்டாள், அதனால்
கிழட்டுத் தம்பதியினரைப் பார்த்துக் கொள்ள ஒருவரும் இல்லாமல் போனது.
பக்கத்து வீட்டுக் காரன் முகம்மது-ஷா இவர்களைப் பார்த்து இரக்கம் கொண்டான். முகம்மது-ஷா
பெரிய பணக்காரனோ ஏழையோ அல்ல, ஆனால் வசதியாக வாழ்ந்துவந்தான், அதோடல்லாமல் அவன் நல்ல
மனிதனும் கூட. இல்யாசின் விருந்தோம்பலை நன்கு அறிந்தவன், இல்யாசின் மீது அன்பு கொண்டு
சொன்னான்: " இல்யாஸ், வா! வந்து எங்களுடன் தங்கிக்கொள், உன்னையும் உன் மனைவியையும்
வரவேற்கிறோம்
கோடையில் எனது பூசணித்தோட்டத்தில் உன்னால் முடிந்த மட்டும் வேலை செய், குளிர் காலத்தில்
எனது கால் நடைகளுக்குத் தீவனம் போட்டுப் பார்த்துக்கொள். அதே நேரம் உன் மனைவி பால் கறந்து
கடைந்து வெண்ணெயெடுக்கட்டும். நான் உங்களிருவருக்கும் உண்ண உணவும் உடுத்த உடையும் இருக்க
இடமும் தருகிறேன்."
இல்யாஸ் தனது பக்கத்து வீட்டுக்காரனுக்கு நன்றி சொன்னான். முகம்மது-ஷாவின் தோட்டத்தில்
கூலிக்கு இல்யாசும் அவன் மனைவியும் சேர்ந்தார்கள். முதலில் அவர்களுக்கு அது கடினமாக
இருந்தது. ஆனால் அதற்குப் பழகிப் போனார்கள், தங்களது அனைத்து வலிமையையும் கொடுத்து
உழைத்தார்கள்.
இந்த மாதிரியான மக்களை வேலைக்காரர்களாக கொண்டிருப்பது முகம்மது-ஷாவுக்கு வசதியாக
இருந்தது, அவர்கள் முன்னாள் முதலாளிகள், அவர்கள் சோம்பேறிகள் அல்லர், பிறரைத் திறமையாக
வேலை வாங்கியும் இருந்தனர், ஆனாலும் எல்லா வேலைகளையும் இப்போது தாங்களாகவே செய்தார்கள்.
இருந்தாலும், எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தவர்கள், இப்போது இவ்வளவு கீழ் நிலைக்கு வந்து
வேலை செய்கிறார்களே என்று முகம்மது-ஷா வருத்தப் படவே செய்தான்.
ஒருமுறை நீண்ட தொலைவிலிருந்து முகம்மது-ஷாவைப் பார்க்க அவனது உறவினர்கள் வந்திருந்தனர்,
அவர்களில் ஒரு முல்லாவும் இருந்தார். முகம்மது-ஷா தனது வேலையாளான இல்யாசை அழைத்து
ஒரு கிடாவைக் கொன்று விருந்து வைக்கச் சொன்னான்.
இல்யாஸ் ஆட்டினைக் கொன்று தோலை உறித்து, சுத்தம் செய்து, சமைத்து விருந்தினர்களுக்குப்
படைத்தான். விருந்தினர்கள் விருந்துண்டு பின்னர் தேனீர் அருந்தினர்.
அவர்கள் அவ்வாறு கம்பள விரிப்புகளில் அமர்ந்து அளவளாவிக் கொண்டிருந்த போது, தனது
வேலைகளை எல்லாம் முடித்து விட்டு இல்யாஸ் அவ்வழியே போனான். இல்யாஸ் போவதைப் பார்த்துக்
கொண்டிருந்த முகம்மது-ஷா தனது உறவினர்களிடம் அவனைக் காட்டிச் சொன்னான்:
"இப்போது போன வயசானவரைக் கவனித்தீர்களா?"

"ஆமாம். அப்படி என்ன அவரிடத்தில் சொல்லிக் கொள்கிற மாதிரி இருக்கு?" ஒரு விருந்தினன்
கேட்டான்.

"அது என்னன்னா--அவர்தான் ஒரு காலத்தில் நம்மில் மிகப் பெரிய பணக்காரராக இருந்தவர். அவர்
பெயர் தான் இல்யாஸ். நீங்க கூடக் கேள்விப் பட்டிருப்பீங்களே!" முகம்மது-ஷா சொன்னான்.
" நான் கூடக் கேள்விப் பட்டிருக்கிறேன்," ஒரு விருந்தினன் சொன்னான் "ஆனால் நான் அவரை
இதற்கு முன் பார்த்ததில்லை, இருந்தாலும் அவரது புகழ் எட்டுத்திக்கும் பரவி இருக்குதே."
"ஆமாம், ஆனால் இப்பொழுது அவர் கிட்ட ஒன்னும் மிச்சமில்லை," முகம்மது-ஷா சொன்னான், "இப்போ
அவர் என்னிடம் கூலிக்கு இருக்கிறார், அவர் மனைவியும் கூட இங்கே தான் வேலைக்கு
இருக்கிறார்--அவர் கறவை வேலைகளைப்பார்த்துக் கொள்கிறார்."
விருந்தினன் ஆச்சரியப் பட்டான்: உச்சுக் கொட்டினான், தலையைச் சிலிப்பிக் கொண்டான், பிறகு
சொன்னான்:
"விதி சக்கரம் போல சுழலுது பாருங்க. ஒருத்தனை அது உயர்த்துது இன்னொருத்தனை அது
தாழ்த்துது! அந்தப் பெரியவர் இழந்ததற்கெல்லாம் வருத்தப் படுகிறாரா?"
"யாரால் சொல்ல முடியும். அமைதியாக வாழ்கிறார், நல்லாவும் வேலை செய்கிறார்"
" நான் அவர்கிட்ட பேசிப் பார்க்கட்டுமா?" விருந்தினன் கேட்டான், "அவரது வாழ்க்கையைப் பற்றி
அவரிடம் கேட்க வேண்டும்."
"தாராளமா" முதலாளி சொன்னான், பிறகு இல்யாசைக் கூப்பிட்டான் "தாத்தா வாங்க! எங்களோடு
சேர்ந்து கொஞ்சம் சர்பத் சாப்பிடுங்க, உங்க மனைவியையும் இங்கே கூப்பிடுங்க!"
இல்யாஸ் மனைவியுடன் அங்கே வந்தான்; விருந்தினர்களுக்கும் முதலாளிக்கும் வணக்கம் செய்தான்,
பிறகு கதவருகே அமர்ந்தான், அவனது மனைவி அவனிற்கும் பின்னே சென்று திரைக்குப்
பின்னிருந்த முதலாளியம்மாவின் அருகில் அமர்ந்தாள்.
இல்யாசுக்கு அருந்துவதற்குக் கொடுத்தார்கள்; அவன் பதிலுக்கு அனைவரையும் வாழ்த்திவிட்டு,
சிறிது அருந்திவிட்டு, கோப்பையை கீழே வைத்தான்.
" நல்லது அய்யா," இல்யாசிடம் பேச விரும்பிய விருந்தினன் அவனிடத்தில் சொன்னான், "உங்களை
இந்த மாதிரி நிலைமையில பார்க்கிறதுக்கு வருத்தமாக இருக்கு. இப்போதைய வறுமையில உங்க
பழைய செல்வத்த நினைச்சுப் பர்க்கும் போது வறுத்தமா இல்லையா?"
இல்யாஸ் புன்னகைத்தவாறு சொன்னான்: " நான் உங்க கிட்டே மகிழ்ச்சி எது துன்பம் எதுன்னு
சொன்னா நீங்க நம்ப மாட்டீங்க. என்னை விட என் மனைவி கிட்டேயே கேளுங்க. அவள் பெண், அவளது
மனதில் என்ன படுகிறதோ அது தான் வார்த்தையில வரும். அவளே அத்தனை உண்மைகளையும் சொல்லுவாள்."
விருந்தினர்கள் திரையை நோக்கித் திரும்பினர்.
"சொல்லுங்கம்மா," அவன் ஆர்வமாகக் கேட்டான், " எப்படி நீங்க உங்க பழைய மகிழ்ச்சியையும்
இப்போதைய துன்பத்தையும் ஏற்றுக் கொள்கிறீர்கள்?"
திரைக்குப் பின்னிருந்து ஷாம்-ஷெமாகி பதிலளித்தாள்:
" நான் என்ன இதைப்பற்றி நினைக்கிறேன்னு சொன்னால்; நானும் என்னுடைய கணவரும் ஐம்பது
ஆண்டுகாலமா மகிழ்ச்சியைத் தேடிகிட்டு இருந்தோம் ஆனால் கண்டு பிடிக்கமுடியவில்லை, அது
இப்போத்தான் இந்த இரண்டு ஆண்டுகளாத்தான் பார்க்கிறோம், எங்களுக்குன்னு எதுவும் இல்லாத போது,
வறுமையில கூலியா வேலை செய்யுற போது, மகிழ்ச்சியைக் கண்டோம். அப்புறம் நாங்க இப்போ
இருக்கிற நிலைமையை விட வேறு ஒன்னை விரும்பலை."
விருந்தினர்களும் முதலாளியும் ஆச்சரியப்பட்டார்கள்; கிழவியின் முகத்தைப் பார்க்கவேண்டி
முதலாளி எழுந்து திரையைக் கூட விலக்கிப் பார்த்தான். அங்கே அவள் அமைதியாக இருந்தாள்,
கைகளைக் கட்டிக்கொண்டு புன்னகை புரிந்தவாறே தன் கணவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவனும்
அவளைப் பார்த்து புன்னகைத்தான். கிழவி தொடர்ந்தாள்:
"நான் சொல்வதெல்லாம் உண்மை சமாளிப்பதற்காகச் சொல்லவில்லை. அரை நூற்றாண்டுகளாக நாங்கள்
மகிழ்ச்சியைத் தேடினோம், நாங்கள் செல்வந்தர்களாக இருந்த போது அதைக் காண முடியவில்லை.
எங்களுக்குன்னு இப்போ ஒன்னுமில்லை. கூலிவேலை தான் செய்யுறோம். இப்போதான் நாங்க மகிழ்சியா
இருக்கிறதா உணர்கிறோம். இதை விட பெரிசா வேற என்ன வேணும்?"
"ஆனால் எதை வச்சு நீங்க அப்படிச் சொல்றீங்க?" விருந்தினன் கேட்டான்.
"ஏன்னா, " அவள் தொடர்ந்து பேசினாள், " நாங்க செல்வந்தர்களா இருந்த போது எங்களுக்குன்னு
நிறையப் பொறுப்புக்கள் இருந்துச்சு, நாங்க ஒருத்தருக்கொருத்தர் பேசுறதுக்குக்கூட
நேரமில்லாமல் இருந்துச்சு, கடவுளைத் தொழக்கூட நேரமில்லை.
"அப்போ நிறைய விருந்தினர்கள் வருவார்கள், என்ன மாதிரி உணவை அவர்களுக்குச் சமைத்துப்
போடுவதுன்னு கவலையா இருக்கும், என்ன பரிசு அவங்களுக்குக் கொடுக்கிறதுன்னு சிந்திப்போம்,
நம்மைத் தரக்குறைவா அவங்க பேசவோ நினைக்கவோ கூடாதுங்கிறதுக்காக நிறையக் கவலைப் படுவோம்.
"அவர்கள் சென்ற பின், எங்களது வேலைக்காரர்களை நாங்கள் பார்க்க வேண்டும், அவர்கள் எப்போதுமே
வேலை செய்ய சங்கடப்படுவாங்க ஆனால் தங்களுக்குன்னு நல்லா இருக்கிற உணவை எடுத்துக்குவாங்க,
நாங்க அதையும் கவனிச்சு அவங்க கிட்டே வேலை வாங்கணும்.அதனால நாங்க பாவம்
செஞ்சவங்களானோம். அப்புறம் நாங்க எப்போதுமே அச்சத்தின் பிடியிலேயே இருப்போம், எதாவது
கன்றுக்குட்டியை ஓநாய் பிடிச்சிடுமோ, குதிரைகளைத் திருடர்கள் ஓட்டீட்டுப்
போயிருவாங்களோன்னு பயந்துகிட்டே இருப்போம். நாங்க இரவு முழுக்கத் தூங்காமல் கவலையோடே
கிடப்போம். ஏதாவது தாய் ஆடு தன்னோட குட்டியின் மேல விழுந்திருச்சோன்னு அடிக்கடி போய்
பார்த்துட்டு வருவோம். ஒரு பிரச்சினை முடிஞ்சிதுன்னா இன்னொன்னு முளைச்சிக்கும். எப்படீன்னா
பனிக்காலத்துக்கு தீவனம் சேகரிச்சு வச்சுக்கணும், இதைப்போல. அதைவிட நானும் என்
வீட்டுக்காரரும் அடிக்கடி சண்டைப்போட்டுக்குவோம். அவர் தான் சொன்னதைத் தான் செய்யனும்பாரு,
நான் ஒத்துக்க மாட்டேன், அப்புறம் சண்டைதான்--பாவம் செஞ்சுகிட்ட மாதிரித்தானே. ஒரு
பிரச்சினையிலிருந்து இன்னொன்னு, ஒரு பாவத்திலிருந்து இன்னொன்னு, அப்புறம் எங்கே இருக்கு
மகிழ்ச்சி?"
"சரி இப்ப எப்படி?"
"இப்போ நாங்க நிம்மதியாத் தூங்குறோம், விடிஞ்ச பிற்பாடுதான் எழுந்திருக்கிறோம், இரண்டு
பேருமே அன்பாப் பேசிக்கிறோம், எங்களுக்குள்ளே சண்டை போட்டுக்க ஒன்னுமே இப்ப இல்லை.
எங்க முதலாளிக்கு நல்லா வேலை செய்யனும்கிறதைத் தவிர நாங்க கவலைப்பட ஒன்னுமே இல்லை.
எங்க வலிமை உள்ள மட்டும் உண்மையா உழைக்கிறோம், அதனால எங்க முதலாளி எங்களால நன்மை தான்
அடைகிறார், நஷ்டம் அடைகிறதில்லை.
"நாங்க வேலை முடிச்சிட்டு வந்தா சாப்பிடறதுக்கும் அருந்துகிறதுக்கும் ஏதாவது தயாரா
இருக்கும். குளிர் அதிகமானா கணப்புக்கு விறகும் போர்த்திக்க கம்பளியும் இருக்கு. அப்புறம்
நாங்க எங்களுக்குள் பேசிக்கொள்ள நிறைய நேரம் இருக்கு, கடவுளைத் தொழ நிறைய நேரம்
இருக்கு. ஐம்பது ஆண்டுகளாத் தேடிய மகிழ்ச்சி இப்போதான் கிடைச்சிருக்கு."
விருந்தினர்கள் சிரித்தார்கள்.

ஆனால் இல்யாஸ் சொன்னான் :
"சிரிக்காதீர்கள் நன்பர்களே. இதை நாங்க சமாளிக்கிறதுக்காகச் சொல்லலை- இது தான்
வாழ்க்கையில் ஒளிந்துள்ள உண்மை. ஆரம்பத்துல நாங்ககூட முட்டாள் தனமாத் தான் இருந்தோம்,
செல்வம் தொலைஞ்சதை நினைச்சு அழுதோம்; ஆனால் கடவுள் எங்க கண்ணைத் திறக்க வைச்சு உண்மையைக்
காட்டினார், அதனால தான் சொல்றோம் இந்த வார்த்தைகளெல்லாம் சத்தியமானவை ஆறுதலுக்காகச்
சொல்லலை, உங்க நன்மைக்காகவும் தான் சொல்றோம்."
முல்லா சொன்னார்:
"இது தான் அறிவுபூர்வமான பேச்சு. இல்யாஸ் சரியான உண்மையைத்தான் சொன்னார். இதையே தான்
புனித நூலும் சொல்கிறது."
பிறகு விருந்தினர் அனைவரும் சிரிப்பதை நிறுத்தி விட்டுச் சிந்திக்க ஆரம்பித்தனர்.
*********
Posted by புகழேந்தி at 6:25 PM 4 comments Email Post

--
--
இருள்கவிந்தால் ஒளிகிளம்பி விரட்டுதல்போல் இன்னுயிராம் தமிழ்க்கின்னல் சூழுமென்றால் திரள்திரளாய் ஒளிப்பிழம்புத் தீரர் கூட்டம் திரண்டெழுந்தால் பகையிருட்டுத் தூள் பறக்கும்.
இவன்
கெ. குமார்
உதவிப் பேராசிரியர்
தமிழ்த் துறை மாநிலக் கல்லூரி தன்னாட்சி சென்னை-5.


அலைபேசி எண் – 9444218357.
kaviku...@gmail.com

--
--
இருள்கவிந்தால் ஒளிகிளம்பி விரட்டுதல்போல் இன்னுயிராம் தமிழ்க்கின்னல் சூழுமென்றால் திரள்திரளாய் ஒளிப்பிழம்புத் தீரர் கூட்டம் திரண்டெழுந்தால் பகையிருட்டுத் தூள் பறக்கும்.
இவன்
கெ. குமார்
உதவிப் பேராசிரியர்
தமிழ்த் துறை மாநிலக் கல்லூரி தன்னாட்சி சென்னை-5.


அலைபேசி எண் – 9444218357.
kaviku...@gmail.com

Professor k. kumar

unread,
Nov 19, 2014, 2:56:59 AM11/19/14
to brail...@googlegroups.com

Professor k. kumar

unread,
Nov 19, 2014, 3:01:40 AM11/19/14
to brail...@googlegroups.com
மோசக்காரப் பையன்
மூலம் ; அன்டன் செக்ஹோவ்
தமிழில் : மா. புகழேந்தி.
வான் லாப்கின், அழகிய தோற்றம் கொண்ட இளைஞன், அனா சாம்ப்ளிட்ச்காயா, நுனி மூக்கு வளைந்த
பெண், செங்குத்தான மலைப்பாதையில் ஆற்றங்கரையில் இறங்கி அடிவாரத்தில் இருந்த பலகையில்
அமர்ந்தார்கள். பலகை ஆற்றங்கரையின் மிக அருகில் வில்லோ மரக்கூட்டங்களின் நடுவில்
அமைந்திருந்தது. மிக அழகிய இடமாக இருந்தது. எந்தவித வெளியுலகத் தொடர்பும் இன்றி
அங்கே அமர்ந்திருக்கலாம், நீருக்குள் நீந்தும் மீன்களும் நீர்ப்பரப்பில் ஓடும் நீண்ட கால் கொண்ட
நீர்ப்பூச்சிகளையும் தவிர யாரும் கவனிக்க மாட்டார்கள். அந்த இளம் நண்பர்கள் மீன்பிடிக்கத்
தேவையான தூண்டில், வலைகள், புழுக்கள் மற்றும் இன்ன பிற மீன்பிடி சாதனங்களுடன் இருந்தனர்.
அந்தப் பலகையில் அமர்ந்ததும் மீன்பிடிக்கத் தூண்டிலிட்டனர்.
"ஒரு வழியா நாம தனிமையில் இருக்கிறது எனக்குச் சந்தோசம்," லாப்கின் தன் பின்னால்
பார்த்துக் கொண்டு பேசினான். "நான் உனக்கு ஒன்றைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன், அனா.
உன்னைப் பார்த்த முதல் பார்வையிலேயே நான் விழுந்துவிட்டேன். நான் பிறந்ததுக்கான அர்த்தம்
விளங்கி விட்டது. நீ தான் என் காதல் தெய்வம் என்னுடைய முழு வாழ்க்கையையும் உன் காலடியில்
சமர்ப்பிக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். உன்னைப் பார்த்த நொடியே காதலில் விழுந்து
விட்டேன், என் வாழ்வில் முதல் முறையாகக் காதல் கொண்டேன். நான் பைத்தியக்காரத்தனமாக உன்னைக்
காதலிக்கிறேன். --- உடனே இழுக்காதே, கொஞ்சம் கடிக்க விடு-- சொல்லு என் அன்பே, உன்னைக்
கெஞ்சிக் கேட்கிறேன், என்னுடைய காதலை நீ திரும்பச் செலுத்த வேண்டும் என்பதில்லை- நான்
அதற்குத் தகுதியானவனா என்று எனக்குத் தெரியாது.--ஆனால் நான் அப்படி ஒன்றை
விரும்புகிறேன். "
அனா சிறிய கூச்சலுடன் தூண்டிலை வைத்திருந்த கையை காற்றில் சுண்டி இழுத்தாள். ஒரு
சிறிய வெள்ளி நிற மீன் சூரிய ஒளியில் மின்னியவாறு நீரின் மேல்தளத்தில் தூண்டிலில்
இருந்து தொங்கிக்கொண்டிருந்தது.
"ஆகா அற்புதம், இது பெர்ச் வகை மீன்! ஓ ஓ சீக்கிரம் , அது வந்திட்டு இருக்கு!"

மீன் தூண்டிலில் இருந்து தப்பி புற்களை எல்லாம் தாண்டி அதன் வசிப்பிடமான நீரில் விழுந்தது.
எப்படியோ, அதைப் பிடித்து இழுக்கும் போது மீனைப் பிடிப்பதற்குப் பதிலாக அனாவின் கையைப்
பற்றினான், எதேச்சையாக அவளது இதழ்களில் தன் உதடுகளைப் பதித்தான். அனா விடுவித்துக்
கொண்டாள், இருந்தாலும் காலம் கடந்துவிட்டது, அவர்களது உதடுகள் முத்தமிட்டுக் கொண்டன.
அதெல்லாம் ஒரு விபத்தினப் போல நடந்து முடிந்து விட்டது. இரண்டாவது முத்தமும் தொடர்ந்தது.
அதற்குப் பிறகு தப்பு நடக்கக் கூடாது என்ற உறுதிமொழிகள் இருவரும் கூறிக்கொண்டனர்.
மகிழ்ச்சியான தருணங்கள்! ஆனால் பாருங்கள் இதைப்போன்ற மகிழ்சிகள் இந்தப் பூமியில்
நிலைப்பதில்லை! அதில் எதோ ஒரு நஞ்சு சேர்ந்து விடுகிறது, தானாகவோ அல்லது வேறு
ஏதாவது வெளிச் சக்தியாலோ. இந்த இடத்திலும் அப்படித்தான். அந்த இளம் காதலர்கள்
முத்தமிட்டுக் கொண்டபோது திடீரென யாரோ சத்தமிட்டுச் சிரிப்பது கேட்டது. மகிழ்ச்சியைக்
கைவிட்டவாறு ஆற்றினைப் பார்த்தனர்; அவர்கள் முன்னே இடுப்பளவுத் தண்ணீரில் ஒரு சிறுவன்
துணியில்லாமல் நின்றுகொண்டு இருந்தான்: அவன் தான் கோலியா, அனாவின் தம்பி! இருவரையும்
வைத்த கண் வைத்தவாறு பார்த்துக் கொண்டு குறும்பாகப் புன்னகைத்துக் கொண்டிருந்தான்.
"ஆகா, நீங்க ஒருத்தருக்கு ஒருத்தர் முத்தம் கொடுத்திட்டு இருக்கீங்களா? சரி சரி அம்மா
கிட்டச் சொல்றேன்!"
"நீ நல்ல பையனல்லவா-" லாப்கின் வெட்கப் பட்டுக் கொண்டே அவனை சமாளிக்கப் பார்த்தான்.
"எங்களைப் பின்தொடர்வது, என்ன பேசுறோம்கிறதை ஒளிஞ்சிருந்து கேட்கிறது எல்லாம் நல்ல பசங்க
செய்ய மாட்டாங்க. நீ ரொம்ப நல்ல பையன்..."
"எனக்கு ஒரு ரூபிள் கொடுங்க அப்புறம் இதை பத்தி ஒன்னும் பேச மாட்டேன்!", நல்ல பையன்
சொன்னான். "கொடுக்கலைன்னா நான் சொல்லிவிடுவேன்"

லாப்கின் தன்னுடைய சட்டைப் பையிலிருந்து ஒரு ரூபிளை எடுத்து கோலியாவிடம் கொடுத்தான்.
சிறுவன் வெடுக்கென்று தன்னுடைய ஈரக்கையால் பிடுங்கினான் , சீட்டியடித்தபடி நீந்திச்
சென்றான். அதற்குப் பிறகு இருவரும் அங்கு முத்தமிட்டுக் கொள்ளவில்லை.
அடுத்த நாள் லாப்கின் கோயிலாவிற்கு நகரத்திலிருந்து வண்ணம் தீட்ட பெட்டியும் ஒரு பந்தையும்
வாங்கி வந்தான்; அவனது அக்கா தனது பழைய சிறு பெட்டிகளை எல்லாம் எடுத்துக்
கொடுத்திருந்தாள். கோயிலாவிற்கு நிறையப் பரிசுப்பொருட்கள் கிடைத்தது. சிறுவன்
விளையாடுவதை எல்லாம் விட்டு விட்டு காதலர்களை வேவு பார்ப்பதிலேயே கவனமாக இருந்தான்,
இன்னும் நிறையப் பரிசுப்பொருள் கிடைக்குமென்று எண்ணினான். எங்கு அனாவும் லாப்கினும்
செல்கிறார்களோ அங்கெல்லாம் பின் தொடர்ந்தான். அவர்களை அவன் ஒரு நொடி கூடப்
பிரிந்திருக்கவில்லை.
"குட்டிச் சாத்தான்!" பற்களை நெரித்துக் கொண்டே லாப்கின் பொருமினான். "இத்துனூண்டு
இருக்கிற போதே இப்படியெல்லாம் செய்யிறானே, என்னை மாதிரி வளர்ந்தா என்னவெல்லாம் செய்வானோ?"

ஜூன் மாதம் முழுக்க கோயிலா இன்பமில்லாக் காதலர்களுக்குத் தொந்தரவு கொடுத்துக் கொண்டே
இருந்தான். காட்டிக் கொடுத்து விடுவதாக அவர்களை மிரட்டினான், வேவு பார்த்தான், பரிசுகள்
வேண்டுமென்று கேட்டான், போதுமானது கிடைக்கவில்லை என்ற போது கடிகாரம் வேண்டுமென்று
கோரிக்கை வைத்தான். கடிகாரமும் அவனுக்குக் கொடுக்கப் பட்டது.
ஒரு நாள் எல்லாரும் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது , கண்ணடித்தபடி அவன் சிரித்தான்,
லாப்கினைப் பார்த்துக் கேட்டான்: "அவங்க கிட்ட அதைச் சொல்லட்டுமா?"
லாப்கின் வெட்கப்பட்டுப் போனான் உணவைத் திணிப்பதற்குப் பதிலாக சிறுவனின் வாயில் துணியைத்
திணித்தான். அனா துள்ளிக் குதித்து வேறு ஓர் அறைக்கு ஓடினாள்.
ஆகஸ்ட் மாத இறுதி வரை இளம் காதலர்கள் அந்தத் தவிப்பிலேயே இருந்தார்கள், இறுதியாக
லாப்கினுக்கு அணாவை மனம் முடிக்க பேச்சு வார்த்தை தொடங்கியது. என்ன மகிழ்ச்சியான நாள்!
தனது கனவுக்கன்னியின் பெற்றோர்களிடம் பேசி சம்மதம் வாங்கிய உடனேயே லாப்கின் கோலியாவைத்
தேடி தோட்டத்துக்குள் ஓடினான். தேடிக்களைத்து வேர்த்து நனைந்துவிட்ட கடைசியில், இடைஞ்சல்
தரும் கோலியாவைக் கண்டுபிடித்து விட்டான். காதைப் பற்றித் திருகினான். அனாவும் அவனைத்
தேடிவந்தாள், இன்னொரு காதை அவளும் பற்றிக்கொண்டாள். காதலர்கள் முகத்தில் மகிழ்ச்சி
களைகட்டி இருந்தது, கோலியா அழுது கொண்டே கருணை காட்டுமாறு கெஞ்சினான் அப்போது
பார்ப்பதற்குக் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
"அன்பானவர்களே, நல்லது, நான் இது மாதிரி இனிமேல் செய்யமாட்டேன், மன்னிச்சுக்கங்க!"
கோலியா விண்ணப்பித்தான்.
கோலியாவின் காதைத் திருகியபோது தங்களுக்குக் கிடைத்த ஆனந்தத்தைப் போன்ற ஒன்று அதற்குப்
பிறகு கிடைக்கவில்லை என்று காதலர்கள் தங்களுக்குள் பேசும் போதெல்லாம் ஒத்துக் கொண்டார்கள்.
******

Professor k. kumar

unread,
Nov 19, 2014, 3:18:27 AM11/19/14
to brail...@googlegroups.com
Бог правду Bидит, да Hе Cкоро Cкажет:கடவுளுக்கு எல்லாம் தெரியும்; ஆனால்
எதையும் செய்ய மாட்டார்
leo+tolstoy




மூலம் : லியோ டால்ஸ்டாய்
தமிழில் : மா. புகழேந்தி
விளாதிமிர் நகரத்தில் இவான் த்மிற்றிச் அக்சிநோவ் என்ற இளம் வணிகன் வசித்து வந்தான்.
அவனுக்கு சொந்தமாக இரு கடைகளும் ஒரு வீடும் இருந்தது.
அக்சிநோவ் வேடிக்கையான, அழகான, சுருள் முடி கொண்ட பாடுவதில் விருப்பமுள்ள இளைஞன்.
அவன் வளரிளம் பருவத்தில் இருந்தபோது குடித்து விட்டு வம்பு தும்புகளில் ஈடுபட்டு
வந்தான், திருமணத்திற்குப் பின் குடிப்பதை சுத்தமாக விட்டு விட்டான், எப்போதாவது தவிர.
ஒரு கோடையில் அவன் நிஷ்னி சந்தைக்கு புறப்பட்டு குடும்பத்தினரிடம் விடைபெற்றுக் கொண்டு
இருந்தான், அப்போது அவன் மனைவி அவனிடம் சொன்னாள் "இன்று புறப்பட வேண்டாமே! உங்களைப்
பற்றி நான் ஒரு கெட்ட கனாக் கண்டேன்"
அக்சிநோவ் சிரித்துவிட்டுச் சொன்னான், "நான் அங்கே போகும் போதெல்லாம் நீ அச்சமடைகிறாய்,
அங்கு எந்த கவலையுமில்லாமல் நான் சென்று வருகிறேன் பார்."
அவன் மனைவி சொன்னாள் "எதுக்கு பயந்தேன் என்று தெரியாது! நான் சொல்றதெல்லாம் என்னன்னா நான்
கண்டது கெட்ட கனவு. நீங்கள் பட்டணத்திலிருந்து திரும்பி உங்கள் தொப்பியைக் கழற்றிய போது
உங்கள் முடியெல்லாம் வெளுத்து இருந்ததைப் பார்த்தேன்."
அக்சிநோவ் வாய் விட்டுச் சிரித்தான், "அது தான் அதிர்ஷ்டத்துக்கு அறிகுறி . நான்
சந்தைக்குப் போய் என்னுடைய பொருட்களை விற்க வில்லை என்றால் உனக்கு பரிசுப்பொருட்களை
எப்படி வாங்குவது?"
அதன் பிறகு அவன் குடும்பத்தாரிடம் விடை பெற்று புறப்பட்டுச் சென்றான்.
அவன் பாதி வழியில் அவனுக்கு ஏற்கனவே அறிமுகமாகியிருந்த இன்னொரு வணிகனைச் சந்தித்தான்.
அவனுடன் சேர்ந்து ஒரு சத்திரத்தில் தங்கமுடிவு செய்தான். இருவரும் சேர்ந்தே தேநீர்
அருந்தினர். இரவு அடுத்தடுத்த அறைகளில் தங்கினர்.
இரவு நேரமாகித் தூங்குவதும் குளிர்கொண்ட அதிகாலையில் பயணம் செய்வதும் அக்சிமொவின்
பழக்கமாக இருந்தது. அதனால் அவன் வண்டியோட்டியை விடிவதற்கு முன்னரே எழுப்பி குதிரைகளை
வண்டியில் பூட்டச்சொன்னான்.
அதன்பின்னர் அவன் சத்திரத்தின் முதலாளியின் வீட்டுக்குச் சென்று (முதலாளி சத்திரத்தின்
பின்னால் வசித்து வந்தான்) தங்கியதற்கான கட்டணத்தைச் செலுத்தி விட்டு பயணத்தைத் தொடர்ந்தான்.
இருபத்தி ஐந்து மைல்கள் சென்ற பின்பு குதிரைகளுக்கு தீவனம் போட நிறுத்தினான்.
அருகிலிருந்த விடுதிக்குச் சென்று தேநீர் போட அடுப்பினில் தீயிடச் சொல்லிய பின் தனது
கிதாரை எடுத்து வாசிக்க ஆரம்பித்தான்.
திடீரென மூன்று குதிரைகள் பூட்டப்பட்ட குதிரை வண்டி மணிகள் ஒலித்தபடி வந்து நின்றது
அதிலிருந்து ஓர் அலுவலரும் இரண்டு காவலர்களும் இறங்கினர்.
அலுவலர் அக்சிநோவிடம் வந்து எங்கிருந்து வருகிறாய் எப்போது வந்தாய் என்று கேள்வி கேட்க
ஆரம்பித்தார். அக்சிநோவ் அனைத்துக்கும் பதில் சொன்னான், பிறகு கேட்டான், "என்னோடு சேர்ந்து
நீங்கள் தேநீர் அருந்தலாமே?". ஆனால் அலுவலர் மீண்டும் அவனைக் கேள்விகளால் குறுக்கு விசாரணை
செய்ய ஆரம்பித்தார். "நேற்றிரவு எங்கே தங்கினாய்? தனியாகத் தங்கினாயா? வேறு ஒரு
வணிகருடன் தங்கினாயா? இன்று காலை அந்த வணிகனைப் பார்த்தாயா? ஏன் விடிவதற்கு முன்
புறப்பட்டு வந்தாய்?"
எதற்கு இதையெல்லாம் கேட்கிறார்கள் என்று அக்சிநோவ் ஆச்சரியப் பட்டான், அனால் என்ன நடந்தது
என்று ஒன்று விடாமல் சொன்னான், அப்புறம் திருப்பிக் கேட்டான் " நான் என்ன திருடனா
கொள்ளைக்காரனா எதுக்கு இதையெல்லாம் என்னிடம் கேட்கிறீர்கள், நான் என் வியாபார விஷயமாக
போய்க் கொண்டு இருக்கிறேன் இந்தக் கேள்வியெல்லாம் என்கிட்டே கேட்கவேண்டிய அவசியம் இல்லை."
அலுவலர் காவலர்களை அழைத்தார், "நான் தான் இந்த மாவட்டத்து காவல்துறைத் தலைவன், நேற்று
உன்னுடன் தங்கிய வணிகன் கழுத்து அறுபட்டு இறந்து கிடந்தான். உன்னுடைய உடைமைகளை நான்
சோதனை போட வேண்டும்."
அவர்கள் அவன் தங்கியிருந்த வீட்டுக்குள் நுழைந்தனர். அவனது பைகளைச் சோதனை போட்டனர்.
அப்போது அலுவலர் அவனது ஒரு மூட்டையிலிருந்து ஒரு கத்தியை எடுத்தார். "யார் கத்தி
இது?" சத்தமிட்டார்.
அக்சிநோவ் பார்த்தான், ரத்தம் தோய்ந்த கத்தி, அவன் கலவரமடைந்தான்.
"எப்படி கத்தியில் ரத்தம் படிந்தது ?"
அக்சிநோவ் பதில் சொல்ல முயன்றான் அனால் ஒரு வார்த்தை கூட வரவில்லை பிதற்ற ஆரம்பித்தான்,
"அது என்னுடையதல்ல"
இப்போது காவல் அலுவலர் பேசினார் " இன்று காலை அந்த வணிகர் தனது படுக்கையில் கழுத்து
அறுபட்டு இறந்து கிடந்தார். உன் ஒருவனால் தான் அதைச் செய்து இருக்க முடியும். அந்த வீடு
உள்புறம் தாழிடப்பட்டு இருந்தது. வேறு யாரும் அங்கு இல்லை. இங்கே ரத்தம் படிந்த கத்தி
இருக்கிறது, உன் வெளுத்துப்போன முகம் உன்னைக் காட்டிக் கொடுக்கிறது. சொல்லு எப்படி
அவனைக் கொன்றாய்? எவ்வளவு பணம் திருடினாய்? "
அக்சிநோவ் சத்தியம் செய்தான் தான் அதைச் செய்யவில்லை என்று, தேநீர் அருந்திய பின்பு அந்த
வணிகனைப் பார்க்கவில்லை என்று சொன்னான், தன்னுடைய எட்டாயிரம் ரூபிளைத் தவிர வேறு பணம்
இல்லை என்றும் சொன்னான். கத்தி அவனுடையதல்ல என்றும் சொன்னான். ஆனால் அவனது குரல் உடைந்து
போயிருந்தது, முகம் வெளுத்துப் போயிருந்தது, அச்சத்தாலும் குற்றச்சாட்டை எதிர்
கொண்டதாலும் தடுமாறினான்.
அலுவலர் காவலர்களை அக்சிநோவைக் கைது செய்து வண்டியில் ஏற்றச் சொன்னார். அவனது கால்களைக்
கட்டி வண்டியில் காவலர்கள் ஏற்றும் போது அக்சிமோவ் சிலுவையிட்டுக் கொண்டு அழுதான். அவனது
பொருட்களும் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது அருகிலிருந்த நகரத்துக்கு கொண்டு செல்லப்
பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.
விலாதிமிரில் அவனது நடவடிக்கைகள் பற்றி விசாரணை மேற்கொள்ளப் பட்டது. முன்பெல்லாம் அவன்
குடித்து விட்டு தகராறு செய்பவன் தான் ஆனால் நல்ல மனிதன் என்று சக வணிகர்களிடமிருந்தும்
உள்ளூர் வாசிகளிடமிருந்தும் தெரிய வந்தது.
வழக்கு விசாரணைக்கு வந்தது; ரியாசான் வணிகரைக் கொன்று இருபத்தி ஐந்து ஆயிரம்
ரூபில்களைத் திருடியதாக அவன் மீது குற்றம் சுமத்தப் பட்டது.
அவன் மனைவி நம்பிக்கையற்றுப் போனாள்; எதை நம்புவது என்று தடுமாறினாள்; அவனது
குழந்தைகள் சின்னஞ் சிறியவர்களாக இருந்தார்கள், ஒன்று தாயின் இடுப்பில் இருந்தது. அவைகள்
அனைத்தையும் கூட்டிக் கொண்டு அவன் சிறையில் இருந்த நகரத்துக்கு அவள் போனாள். முதலில்
அவளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது, நீண்ட நேரக் கெஞ்சல்களுக்குப் பிறகு அவளுக்கு அனுமதி
கொடுக்கப்பட்டது. சிறையின் சீருடையில் விலங்கிட்டு திருடர்களுடனும் குற்றவாளிகளுடனும்
அடைபட்டுள்ள தனது கணவனைக் கண்டதும் மயங்கி விழுந்தாள். நீண்ட நேரத்துக்குப் பின் சுய
நினைவுக்கு வந்தாள். பிறகு தனது குழந்தைகளை அவனுக்கு அருகில் கூட்டிச்சென்று
அமர்ந்தாள். வீட்டில் நடந்துகொண்டு இருப்பதைப் பற்றி அவனிடம் பேசினாள். அவனுக்கு என்ன
நடந்தது என்று கேட்டாள். அவளிடம் நடந்ததைச் சொன்னான்,"இப்போது என்ன செய்வது?" கேட்டாள்.
"ஜார் மன்னனுக்கு கருணை மனு அனுப்பலாம் ஓர் அப்பாவி பாதிக்கப் படக் கூடாது."
அவன் மனைவி சொன்னாள் தான் ஜார் மன்னனுக்கு ஏற்கனவே அனுப்பி அது ஏற்கப்படவில்லை என்றாள்.
அக்சிநோவ் பதில் கூறவில்லை தலையைக் கவிழ்ந்து கொண்டான்.
அவன் மனைவி சொன்னாள் "நான் சொன்னேனல்லவா கெட்ட கனவைப் பற்றி உங்களது தலை முடி
வெளுத்ததாக. கேட்காமல் புறப்பட்டீர்களே." தலையைக் கோதியபடியே கேட்டாள் "அன்பே உண்மையைச்
சொல்லுங்கள், நீங்க அதைச் செய்யவில்லையா?"
"சே! நீ கூட என்னை நம்பலையா?" , அக்சிமோவ் முகத்தை மூடிக்கொண்டு தேம்பினான். அப்புறம்
ஒரு காவலன் வந்தான் மனைவியும் குழந்தைகளையும் போகச் சொன்னான், அக்சிமோவ் தனது
குடும்பத்தாருக்கு கடைசியாக விடைகொடுத்தான்.
அவர்கள் போன பின்பு அக்சிமோவ் நடந்தவைகளையும் பேசப்பட்டவைகளையும் அசை போட்டான். மனைவி
கூடத் தன்னை சந்தேகிக்கிறாள் . தனக்குத் தானே சொல்லிக் கொண்டான் "கடவுளுக்கு மட்டுமே
உண்மை தெரியும்! அவரிடம் மட்டுமே நாம் முறையிடமுடியும்! அவரிடம் தான் நாம் கருணையை
எதிர் பார்க்கலாம்!"
அதற்குப் பிறகு அவன் எந்த விண்ணப்பமும் எழுத வில்லை நம்பிக்கை அற்றுப் போனான் கடவுளை
வேண்ட ஆரம்பித்தான்
அக்சிநோவுக்கு கசையடி தண்டனை கொடுக்கப் பட்டது, சுரங்கத்து வேலைக்குப் பணிக்கப் பட்டான்.
அடிபட்ட காயங்கள் ஆறியதும் மற்ற கைதிகளுடன் சைபீரியாவுக்கு நாடு கடத்தப் பட்டான்.
இருபத்தியாறு ஆண்டுகள் அவன் சைபீரியாவில் தண்டனையை அனுபவித்தான். அவனது தலை முடி வெண்
பனியைப் போல் மாறியிருந்தது தாடி நீண்டு வளர்ந்து வெளுத்து இருந்தது. அவனது அனைத்து
மகிழ்ச்சியும் அவனை விட்டுப் போயிருந்தது, கூன் விழுந்திருந்தது, மெதுவாக நடந்தான்,
குறைவாகப் பேசினான், சிரிப்பதே இல்லை, எப்போதும் கடவுளை வேண்டிக் கொண்டே இருந்தான்.
சிறை வாழ்வில் அவன் காலணிகளைச் செய்யக் கற்றுக் கொண்டான், அதன் மூலம் சிறிது வருமானம்
ஈட்டினான், அதில் அவன் துறவிகளின் வாழ்க்கை (The lives of the Saints :Жития
святых ) என்ற நூலை வாங்கினான். போதுமான வெளிச்சம் சிறையில் இருந்த போதெல்லாம் இந்த
நூலைப் படித்தான். ஞாயிற்றுக் கிழமைகளில் தேவாலயத்தில் பைபிள் படித்தான். பக்திப் பாட்டு
பாடினான். அவனது குரல் இப்போதும் இனிமையாகவே இருந்தது. அவனது பெருந்தன்மையை சிறை
அலுவலர்கள் மதித்தார்கள் சக கைதிகள் அவனை விரும்பினார்கள் அவனை தாத்தா என்றும் துறவி
என்று அழைத்தார்கள். ஏதேனும் சிறை அலுவலர்களிடம் முறை இட வேண்டி வந்தாலும் சக
கைதிகளுக்குள் தகராறுகள் வந்தாலும் தீர்ப்புக் காக அவனிடம் வந்தார்கள். அவர்கள் சார்பில்
அக்சிமோவ் பேசுவார் .
அவரது குடும்பத்தைப் பற்றி எந்த ஒரு செய்தியும் அவருக்கு வரவில்லை, அவரும் அவர்கள்
எல்லாம் உயிரோடு இருக்கிறார்களா என்று கூட தெரிந்து இருக்கவில்லை.
ஒரு நாள் புதிதாக தண்டனை அடைந்த குற்றவாளிகள் சிறைக்கு வந்து சேர்ந்தார்கள். பழைய
கைதிகள் அன்றைய மாலையில் புதிய கைதிகளைச் சுற்றிக் கொண்டு எந்த கிராமத்திலிருந்து எந்த
நகரத்திலிருந்து வருகிறீர்கள் எதற்கு தண்டிக்கப்பட்டீர்கள் என்று விசாரித்துக் கொண்டு
இருந்தார்கள். எல்லோரோடும் அமர்ந்து அக்சிமொவும் என்ன பேசுகிறார்கள் என்று கேட்டுக் கொண்டு
இருந்தார்.
ஒரு புதிய கைதி உயரமாகவும் திடகாத்திரமாகவும் தனது அறுபதாவது வயதிலிருந்தவன்,
தனது சாம்பல் நிறத் தாடியினை தடவியபடி சொல்லிக்கொண்டு இருந்தான்.
"நண்பர்களே நான் ச்லேட்ஜில் பூட்டப்பட்டு இருந்த குதிரையை அவிழ்த்துக்கொண்டு இருந்த போது
திருட்டுக் குற்றச் சாட்டுக்காக கைது செய்யப் பட்டேன். " என்றான். "நான் அவசரமாக
வீட்டுக்குப் போகனும் என்பதுக்குத் தான் அவிழ்த்தேன் பிற்பாடு விட்டுவிடுவேன் அப்படீன்னு
சொன்னேன். அதல்லாமல் வண்டி ஓட்டி எனது நண்பன் தான். விடுங்கன்னு சொன்னேன். அவங்க
முடியாதுன்னுட்டாங்க. திருடினேன்னு சொன்னாங்க. ஆனால் எங்க எப்பத் திருடினேன்னு அவங்க
சொல்லலை. ஒரு தடவை தப்பு செஞ்சிருக்கேன் ரொம்ப நாள் முந்தியே இங்கே வந்திருக்கணும்,
அனால் அப்பப் பிடிபடலை. இப்ப ஒண்ணுமே செய்யாததுக்கு மாட்டிகிட்டேன். .......ஆ அதெல்லாம்
பொய். நான் ஏற்கனவே சைபீரியாவுக்கு வந்திருக்கிறேன். ஆனால் ரொம்ப நாள் இருக்கலை. "
"எங்கிருந்து வர்றீங்க?" யாரோ கேட்டார்கள்.
"விலாதிமிரில் இருந்து. என் குடும்பம் அங்கிருக்கு. என் பேரு மகர், எல்லாரும் என்னை
செம்யோனிச் அப்படீன்னு கூப்பிடுவாங்க"
அக்சிமோவ் தலையை உயர்த்தி கேட்டார், "அக்சிமோவ் வணிகக் குடும்பத்தைப் பத்தி உங்களுக்கு
ஏதாவது தெரியுமா? அவங்க இன்னும் உயிரோடு இருக்கிறார்களா ? "
"ஒ தெரியுமே. அவங்க எல்லாம் பணக்காரர்கள். ஆனாலும் அவங்க அப்பா இங்க தான் சைபீரியாவுல
இருக்கிறான். நம்மள மாதிரி அவனும் ஒரு பாவிதான் தாத்தா. ஆமா நீங்க எப்படி இங்க வந்தீங்க?"
அக்சிமோவ் தனது துரதிர்ஷ்டத்தப் பற்றிக் கூற விரும்பவில்லை.பெரு மூச்சு விட்டுக்கொண்டே
சொன்னான் "எதோ என்னோட பாவத்துக்காக இங்கே இருபத்தி ஆறு வருஷமா இருக்கிறேன்."
"என்ன பாவம்" மகர் செம்யோனிச் கேட்டான்.
ஆனால் அக்சிமோவ் அதற்குமேல் எதுவும் சொல்லாமல் "சரி சரி எனக்கு என்ன கிடைக்கனுமோ அது
கிடைச்சது!" என்றார். ஆனால் புதியவனிடம் மற்ற கைதிகள் அக்சிமோவ் எப்படி சைபீரியாவுக்கு
வந்தார் என்றும் யாரோ ஒருவன் ஒரு வணிகனைக் கொன்று விட்டு அக்சிமொவின் பொருட்களுக்குள்
கத்தியை வைத்து விட்டு சென்று விட்டன என்றும் நியாயமே இல்லாமல் அக்சிமோவ் தண்டிக்கப்
பட்டதைப் பற்றியும் சொன்னார்கள்.
இதைக் கேட்டதும் மகர் செம்யோனிச், அக்சிநோவைப் பார்த்தான், தனது காலைத் தானே அடித்துக்
கொண்டு வியந்து போய் சொன்னான் "ஐயோ இது ஆச்சரியம் , மெய்யாலுமே ஆச்சரியம் . ஐயோ எப்படி
உங்களுக்கு வயசாகீருச்சு பாருங்க தாத்தா "
எல்லோரும் அவனைக் கேட்டார்கள் ஏன் ஆச்சரியப் படுகிறாய் என்று இதற்கு முன் அக்சிநோவைப்
பார்த்து இருக்கிறாயா என்றும் கேட்டார்கள். ஆனால் மகர் செம்யோனிச் பதில் சொல்லவில்லை "இங்கு
நாம் சந்தித்தது ஆச்சரியமே!" என்று மட்டும் சொன்னான்.
இந்த வார்த்தைகளிக் கேட்டதும் அக்சிமோவ் உணர்ந்து கொண்டார் மகர் செம்யோனிச் வணிகனைக் கொன்றவன்
யாரென்று தெரிந்து இருப்பான் என்று ,"செம்யோனிச் இந்த செய்தியை நீ ஏற்கனவே தெரிந்து
இருக்கிறாயா? அல்லது என்னை நீ முன்னாலையே பார்த்து இருக்கிறாயா?" .
"கேட்டுத் தெரிஞ்சுக்கிரதுல என்ன பிரயோசனம், இந்த உலகம் முழுக்க வதந்திகள் தான் இருக்கு.
நான் இதைப் பற்றிக் கேட்டு ரொம்ப காலம் ஆச்சு. என்ன கேட்டேனென்றே மறந்து போச்சு. "
"யார் கொன்றது என்று உனக்குத் தெரியும் என்று நினைக்கிறேன் " அக்சிமோவ் கேட்டார்.
மகர் செம்யோனிச் சிரித்துக் கொண்டே சொன்னான் " யார் பையில் கத்தியை கண்டு எடுத்தார்களோ
அவன் தான் கொன்று இருக்க வேண்டும். வேற யார் வச்சா என்ன, உங்களுக்குத் தெரியாதா?
அகப்படும் வரைக்கும் ஒருத்தன் திருடன் அல்லங்கிறது? யாரு கத்தியைக் கொண்டு போய் உங்க
தலையணைக்கு கீழே இருக்கும் பையில் வைக்க முடியும்? உங்களை நிச்சயமா அந்த சத்தம் எழுப்பி
விட்டு இருக்கும். "
இந்த வார்த்தைகளைக் கேட்டதும் அக்சிமோவ் முடிவு செய்தார் அவன் தான் அந்த வணிகனைக் கொன்றவன்
என்று. அவர் எழுந்து வெளியேறினார். அன்று இரவு முழுதும் அக்சிமோவ் உறங்காமல் விழித்து
இருந்தார்.அவர் மிகுந்த துயரம் கொண்டார். எல்லா வகையான காட்சிகளும் அவர் மனக் கண் முன்
தோன்றியது. அங்கே சந்தைக்குச் செல்லும் போது நடந்தது அவர்முன் தோன்றியது அவரது
மனைவியின் முகத்தினைக் கண்டார். அவள் தன முன்னே இப்போது இருப்பதாக கண்டார், அவருக்கு
முன் அவளது கண்களும் முகமும் நின்றாடியது. அவள் பேசுவதாகவும் சிரிப்பதாகவும்
தோன்றியது. அவர் தனது குழந்தைகளையும் கண்டார், பிரிந்த போது எப்படி இருந்தார்களோ
அப்படியே இருப்பதாகக் கண்டார், ஒன்று கையில் எதையோ வைத்து விளையாடிக்கொண்டு இருந்தது,
இன்னொன்று அவள் இடுப்பில் இருந்தது.
தான் எப்போதும் இளமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தததாக இப்போது நினைத்துப் பார்த்தார்,
கைது செய்யப்படும் போது விடுதியில் தான் கிதார் வாசித்துக் கொண்டு இருந்ததை நினைத்துப்
பார்த்தார். கவலையில்லாமல் களித்த காலத்தை நினைத்துப் பார்த்தார். தன் மனதில் கட்சிகளாகப்
பார்த்தார் தான் கசையடி பட்டதைப் பார்த்தார், தன்னைச் சுற்றி நின்ற மக்கள், கை விலங்கு, சக
கைதிகள், குற்றவாளிகள், இருபத்தியாறு ஆண்டுகால சிறை வாழ்க்கை, முன் கூட்டியே வந்த
முதுமை. இந்த சிந்தனைகள் எல்லாம் அவரை வாட்டின, தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று
அவருக்குத் தோன்றியது.
இதெல்லாம் அந்த அயோக்கியனால் வந்தது. அக்சிமோவ் நினைத்துப் பார்த்தார். மகர் செம்யோநிசின்
மேல் அவருக்குக் கோபம் பெருக்கெடுத்தது. அவனை பழி வாங்க வேண்டும் என்று துடித்தார்,
அதனால் என்ன ஆனாலும் பரவாயில்லை என்று நினைத்தார். அவர் தொடர்ந்து பிரார்த்தனை செய்து
கொண்டே இருந்தார். ஆனால் அமைதி கிடைக்க வில்லை. அடுத்த நாள் மகர் செம்யோனிச்சை அவர்
பார்க்கவேயில்லை. தவிர்த்தார்.
இரு வாரங்கள் ஓடியது. அக்சிமோவால் இரவில் தூங்க முடியவில்லை. கொடுமையாக இருந்தது.
என்ன செய்வது என்று தவித்தார்.
ஒரு நாள் இரவு அவர் சிறைக்குள் நடந்து வந்து கொண்டு இருந்த போது கைதிகள் உறங்கும்
இடத்தின் கீழே தளத்திலிருந்து இருந்து மண் வந்து விழுந்து கொண்டு இருப்பதைக் கவனித்தார்.
அங்கே நின்று அது என்ன என்று கவனித்தார். திடீரென மகர் செம்யோனிச் குழியிலிருந்து
வெளிப்பட்டு திகைத்து நின்றான். கையும் களவுமாகப் பிடிபட்டதில் அவன் முகம் அச்சமுற்று
இருந்தது. அக்சிமோவ் அதைக் கவனிக்காதது போல் அங்கிருந்து நகர முற்பட்டார். ஆனால்
செம்யோனிச் அவரது கைகளைப் பற்றிக் கொண்டான். அப்போது அவன் சொன்னான் சுவற்றுக் அடியில்
சுரங்கம் தோண்டி தப்பிச் செல்ல வழி செய்து கொண்டு இருப்பதாகவும், தோண்டப் படும் மண்ணை
காலணிகளில் போட்டு கைதிகளை அழைத்துச் செல்லும் போது மண்ணை வழியில் இறைத்து
விடுவதாகவும் கூறினான்.
"கிழவா இதைப்பற்றி மூச்சு விடாதே, நீ கூட என்னுடன் தப்பித்து வந்து விடலாம், ஏதாவது
உளறினாயானால் என்னைக் கொன்றே விடுவார்கள், ஆனால் அதற்கு முன் உன்னை நான் தீர்த்துக்
கட்டிவிடுவேன்" என்றான்.
.
அக்சிநோவ் ஆத்திரத்தில் அதிர்ந்தார். அவனிடமிருந்து கையை உதறினார். "தப்பிச்செல்ல எனக்கு
ஆசையில்லை. நீ என்னை கொல்ல வேண்டும் என்பது இல்லை. ஏற்கனவே நீண்ட காலத்துக்கும் முன்னாலேயே
என்னைக் கொன்று விட்டாய்! என்ன செய்ய வேண்டு என்று நீ எனக்குச் சொல்லாதே கடவுள் என்ன செய்ய
வேண்டும் என்று எனக்கு வழிகாட்டுவார்.”
அடுத்த நாள் கைதிகளை வேலைக்கு அழைத்துச் செல்லும் போது எதோ ஒரு கைதி மண்ணை காலணி
யிலிருந்து கொட்டுவதை ஒரு காவலாளி கவனித்தான்.
சிறை சோதனை இடப்பட்டது. சுரங்கம் கண்டறியப்பட்டது. ஆளுநர் வந்து கைதிகளிடம் யார்
தோண்டியது என்று விசாரணை மேற்கொண்டார் . எல்லோரும் ஒன்றும் தெரியாது என்று சொன்னார்கள்.
தெரிந்தவர்கள் சொன்னால் மகர் செம்யோனிச்சை சவுக்கால் அடித்தே கொன்று விடுவார்கள்.
ஆளுநர் வந்தார். விசாரணை ஆரம்பம் ஆனது.
ஆளுநர் அக்சிமொவிடம் திரும்பிக் கேட்டார், "நீங்கள் தான் இங்கு உண்மையான மனிதர், பெரியவர்,
கடவுள் மீது ஆணையாகக் கூறுங்கள் இதை யார் செய்தது?"
மகர் செம்யோனிச் இது எதற்கும் சம்பந்தமே இல்லாதவன் போல நின்று கொண்டு இருந்தான்.
அக்சிமோவை அவன் கண்டு கொள்ளவே இல்லை. அக்சிமொவுக்கு உதடுகள் துடித்தது கைகள் நடுங்கின
நீண்ட நேரம் அவர் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் நின்றார். அவர் எண்ணினார், "எதற்கு அவனைக்
காப்பாற்ற வேண்டும்? அவன் ஏன் வாழ்வையே சீரழித்தவன் தானே. செய்ததுக்கு அவன்
அனுபவிக்கட்டும். நான் சொன்னால் அவனை அவர்கள் அடித்தே கொன்று விடுவார்கள், நான் அவனை
தவறாகச் சந்தேகித்து இருந்தால், எந்த வகையில் நான் நல்லவன் ஆவேன்? "
"சரி பெரியவரே சொல்லுங்க , யார் சுவற்றுக்கு அடியில் சுரங்கம் தோண்டினார்கள்?" ஆளுநர்
மீண்டும் கேட்டார்.
அக்சிமோவ் , மகர் செம்யோநிசைப் பார்த்தார், "கடவுள் அதைச் சொல்ல வேண்டாமென்று எனக்கு ஆணை
இட்டுள்ளார். நான் உங்கள் முன் நிற்கிறேன் எனக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள்
உங்கள் கைகளில் என்னை ஒப்படைக்கிறேன் "
ஆளுநர் என்னென்னமோ செய்து பார்த்தார் அக்சிமொவிடம் பதில் பெற முடியவில்லை. அந்தப்
பிரச்னையை அத்தோடு விட்டு விட்டார்கள்.
அன்று இரவு அக்சிமோவ் படுக்கையில் படுத்து தூங்க முயன்று கொண்டு இருக்கும் போது, அவரது
படுக்கையில் யாரோ வந்து அமர்ந்தார்கள். அது மகர் செம்யோனிச் தான் என்று இருளில் அவரால்
அடையாளம் காண முடிந்தது.
"இன்னும் என்னிடமிருந்து என்ன எதிர் பார்க்கிறாய்?" கேட்டார் அக்சிமோவ், " ஏன் வந்தாய்?"
மகர் செம்யோனிச் அமைதியாக இருந்தான். அக்சிமோவ் எழுந்து உட்கார்ந்தார், "என்ன வேணும்
உனக்கு? போ இங்கிருந்து. இல்லாட்டி காவலாளிகளைக் கூப்பிடுவேன்"
மகர் செம்யோனிச் குனிந்து அக்சிமொவிடம் சொன்னான் "இவான் த்மிற்றிச் என்னை மன்னிக்கணும்."
"எதுக்கு" அக்சிமோவ் கேட்டார்.
"நான் தான் முன்னொரு நாளில் அந்த வணிகனைக் கொன்றேன். உன்னையும் கொல்ல இருந்தேன், ஆனால்
எதோ சத்தம் கேட்டதாலே கத்தியை உன் பையில் வைத்து விட்டு ஜன்னல் வழியாகக் குதித்து
ஓடிவிட்டேன்."
அக்சிமோவ் அமைதியாக இருந்தார், என்ன சொல்வது என்று தெரியவில்லை. மகர் செம்யோனிச்
படுக்கையில் இருந்து எழுந்து மண்டியிட்டுக் கெஞ்சினான், "இவான் த்மிற்றிச் என்னை
மன்னியுங்கள். கடவுள் அருளால் என்னை மன்னியுங்கள். நான் போய் என்னுடைய குற்றத்தை
ஒத்துக்கொள்கிறேன். நீங்கள் விடுதலையாகலாம். வீட்டுக்குச் செல்லலாம்."
"இதை பேச உனக்கு எளிதாக இருக்கலாம். நான் இருபத்தியாறு ஆண்டுகளாக இங்கு நரக
வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டு இருக்கிறேன். இப்போது நான் எங்கே போவது? என் மனைவி
இறந்து விட்டாள். என்னுடைய குழந்தைகளும் என்னை மறந்து விட்டார்கள். எனக்குப் போக்கிடம் இல்லை. "
மகர் செம்யோனிச் எழுந்து இருக்கவில்லை தலையைத் தரையில் முட்டி முட்டி அழுதான். "இவான்
த்மிற்றிச் என்னை மன்னியுங்கள்" கதறினான். "என்னை சவுக்கால் அடிக்கும் போது கூட எனக்கு
வலிக்கலை உங்களைப் பார்க்கும் போது வலி தாங்க முடியலை. என் மீது உங்களுக்கு பரிதாபம்
இருக்கு கருணை இருக்கு அதுனால தான் நீங்க என்னைக் காட்டிக்கொடுக்கலை. கடவுளே என்னை
மன்னியுங்கள். எவ்வளவு பெரிய பாவி நான். " தேம்பித்தேம்பி அழுதான்.
அவன் அழுவதைப் பார்த்து அக்சிமொவும் கண்ணீர்விட்டார். "கடவுள் உன்னை மன்னிப்பார்" அக்சிமோவ்
சொன்னார். "நானும் கூட உன்னை விட நூறு மடங்கு மோசமானவன் தான். " அதைச் சொல்லும் போது
அவரது இதயம் லேசானது. வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசை விலக ஆரம்பித்தது. அதற்கும்
மேல் அவர் அந்த சிறையை விட்டுச் செல்ல வேண்டும் என்று விருப்பப் படவில்லை. அவரது கடைசி
மணித்துளிக்காகக் காத்து இருந்தார்.
அக்சிமோவ் எத்தனை முறை சொல்லியும் மகர் செம்யோனிச் கேட்கவில்லை. தான் செய்த கொலையை
அலுவலர்களிடம் போய் ஒத்துக்கொண்டான் . ஆனால் விடுதலை ஆணை வந்தபோது அக்சிமோவ் ஏற்கனவே
உயிரை விட்டு இருந்தார்.

Professor k. kumar

unread,
Nov 19, 2014, 3:24:32 AM11/19/14
to brail...@googlegroups.com
பசங்க
anton3
மூலம் : அன்டன் செக்ஹோவ்
தமிழில் : மா. புகழேந்தி
"வோலோத்யா வந்தாச்சு " யாரோ தோட்டத்தில் சத்தமிட்டார்கள்.
"ஆஹா வோலோத்யா தம்பி வந்தாச்சு " சமையல் கார நடாலியா சமயல் அறைக்கு ஓடிவந்து
கூச்சலிட்டான். சின்னப்பையன் வோடோல்யோவின் வருகையை மணிக்கு மணி எதிர்பார்த்துக் கொண்டு
இருந்த கொரோல்யோவின் குடும்பமே இப்போது ஜன்னலுக்கு ஓடி வந்து பார்த்தது. பனி ப்புகையின்
நடுவே பெரிய ஸ்லெட்ஜ் வண்டி மூன்று குதிரைகளுடன் வாசலில் நின்று கொண்டு இருந்தது.
ஸ்லெட்ஜ் இல் யாரையும் காணவில்லை, வோலோட்யோவ் ஏற்கனவே வரவேற்பறைக்கு வந்து தனது
சிவப்பேறிய விரல்களால் உடைகளை களைந்து கொண்டு இருந்தான்.
அவனது பள்ளிச சீருடை, தொப்பி, காலணி, தலை முடி, கன்னம் ஆகியவை பனி படிந்து
வெளுத்து இருந்தது. அவனது உடலில் புதுப் பனியின் மணம் வீசிக்கொண்டு இருந்தது “ப்ர்ர்ர்”
என்று நடுக்கத்துடன் ஒலியை அவனிடம் எழுப்பியது..
அவனது தாயும் அத்தையும் அவனை ஆரத்தழுவி முத்தமிட ஆவலாக ஓடினர். நடாலியா அவனது
காலணிகளை கழற்றினான். அவனது சகோதரிகள் உற்சாக மிகுதியால் குதித்தனர். கதவு மிகுந்த
சத்தத்துடன் திறந்தது.. அவனது தந்தை கத்தரிக்கோலுடன் வந்தார். மகிழ்ச்சியுடன் கத்தினார்,
"நாங்கள் உன்னை நேற்றே எதிர் பார்த்தோம் ..எப்படி இருக்கிறாய்? ... பயணம் எப்படி
இருந்தது? அவன்கிட்ட சொல்லுங்க அவன் அப்பாவைப் பார்த்து எப்படி இருக்கீங்கன்னு
கேட்கட்டும்..ஏன்னா நான் தான் அவன் அப்பா!"
"போவ் வாவ் " என்று சத்தமாக கத்தியபடி மிலோர்ட் நாய் தனது வாலை சுவற்றிலும்
நாற்காலியிலும் அடித்துக் கொண்டது. இரண்டு நீண்ட நிமிடங்களுக்கு அங்கு மகிழ்ச்சியின்
கூச்சலே நிறைந்து இருந்தது. முதல் சந்தோஷ அலை ஓய்ந்த போது கொரோல்யோ கவனித்தார்
அவர்களது வோலோத்யா மட்டுமல்ல இன்னுமொரு சிறுவன் கூட அவனைப்போலவே துணியினாலும்
கம்பளியினாலும் சுற்றிக்கொண்டு அவனுடன் வந்து இருந்தான் என்று. அவன் அறையின் மூலையில்
அசையாமல் நின்று இருந்தான். அவன் ஒரு ஓவர்கோட் அணிந்து இருந்தான்.
மெல்லிய குரலில் அவனது தாய் அவனிடம் கேட்டாள், "வோலோட்யோ யாரிது?"
"ஒ இது என்னுடைய பள்ளித் தோழன் லேண்டிலோவ். நம் வீட்டில் தங்குவதற்காக அழைத்து வந்தேன். "
என்றான்.
"ரொம்ப சந்தோசம். வா தம்பி" கொரோல்யோ வாஞ்சையுடன் வரவேற்றார்.
“மன்னிக்கவும் நான் கோட் இல்லாமல் வேலை செய்து கொண்டு இருக்கிறேன். "அந்த நாய்க்குட்டியை
விரட்டுங்கள். நடால்யா லேண்டிலோவுக்கு உதவிகள் செய். அவரது பொருட்களை எடுத்துக் கொண்டு
பொய் உள்ளே வை. " அடுத்தடுத்து ஆணை இட்டுக்கொண்டு இருந்தார். சிறிது நேரத்துக்குப் பின்
ஆரம்ப உற்சாகம் ஓய்ந்த பிறகு, வோலோட்யோவும் லேண்டிலோவும் டி அருந்த மேசையில் அமர்ந்தனர்.
அவர்களது உடல் இன்னும் வெளிப்புறக் குளிரில் சிவந்து காணப்பட்டது. அறைக்குள் குளிர் கால
சூரியனின் கதிர் கள் ஊடுருவியது. அது தேநீர் பேசினிலும் சமொவரிலும் எதிரொளித்தது.
அந்த அரை வெது வெதுப்பாக இருந்தது. அந்தச் சிறுவர்களுக்கு அது இதமாக இருந்தது.
வெதுவெதுப்பும் குளிரும் அவர்களது உடலுக்குப் புத்துணர்ச்சி ஊட்டிக்கொண்டு இருந்தது.
"சரி கிறிஸ்துமஸ் விரைவில் வர இருக்கிறது " கொரோல்யோ மெலிதாக ராகமிட்டு க் கொண்டு
கருஞ்சிவப்பு சுருட்டை உருட்டிக்கொண்டே சொன்னார்.
“இது ஒன்றும் ரொம்ப நாளாகத் தெரியவில்லை. உன் அம்மா நீ படிக்கச் சென்ற கோடைகாலத்தில்
அழுது ஆர்ப்பாட்டம் பண்ணினாள் ஆனால் நீ திரும்பியாயிற்று. காலம் ஓடிவிடும் பய்யா... நீ
சிந்திப்பதற்குள் முதுமை உன்னை அடைந்து விடும். லேண்டிலோவ் இன்னும் கொஞ்சம் தேநீர் எடுத்துக்
கொள். இங்கு நாம் எந்த சம்பிரதாயத்திலும் இல்லை. நன்றாக சாப்பிடுங்கள். "
வோலோட்யோவின் மூன்று சகோதரிகளும் காடியா சோனியா மாஷா (மூத்தவளுக்கு பதினோரு வயது
) மேசை இன் அருகில் அமர்ந்து புதியவனையே கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டு இருந்தனர்.
வோலோட்யோவின் உயரத்தையும் வயதையும் கொண்டிருந்தான் லேண்டிலோவ். ஆனால் உருண்டை முகமும்
நல்ல நிறமுமாக இல்லை. அவன் ஒல்லியாகவும் நிறம் குறைந்தும் காணப்பட்டான். உதடுகள்
தடித்தும், சிறுத்த கண்களோடும், ப்ருஷ் போன்ற முடியோடும் அழகற்றும் இருந்தான். அவன் மட்டும்
பள்ளிச் சீருடையில் இல்லை என்றால், அவன் ஒரு சமையல் காரனின் மகனாக அறியப்பட்டு இருப்பான்.
அவன் அழுத்தக் காரனாகத தெரிந்தான், ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை, ரொம்ப நேரம்
சிரிக்காமலேயே இருந்தான். சின்னப் பெண்கள் அவனை தீர்க்கமாகப் பார்த்தார்கள், அவன் பெரிய
அறிவாளி நிறைய படித்தவன் என்று ஒரு முடிவுக்கு வந்தார்கள். அவன் எதோ ஒரு சிந்தனையில்
அகப்பட்டவனாகவும் அடிக்கடி அதில் மூழ்கி விடுபவனாகவும் தெரிந்தது. அவன் பேசும்
போதெல்லாம் தலையை பின்னால் கொண்டு சென்று மீண்டும் மீண்டும் கேள்வியைக் கேட்ட்கும்படி வைத்தான்.
வோலோட்யோவைக் கூட சின்னப் பெண்கள் கவனித்தார்கள், சதா பேசிக்கொண்டே இருப்பவன், குறைவாகப்
பேசுகிறான், வீட்டுக்கு வந்த மகிழ்ச்சி அவனிடம் குறைவாகவே இருக்கிறது.
எப்போது தேநீர் குடிக்க அமர்ந்தாலும் அவன் பேசவில்லை ஒரே ஒரு முறை தான் அவனது
சகோதரிகளிடம் பேசினான். முற்றிலும் மாறுபட்ட கருத்தை அப்போது கூறினான்.
“கலிபோர்னியாவில் யாரும் தேநீர் குடிப்பதில்லை, ஜின் மட்டுமே குடிக்கிறார்கள்” என்றான்.
அவனும் சிந்தனை வயப்பட்டவனைப் போலவே இருந்தான். லேண்டிலோவும் அவனும் ஒரே சிந்தனையில்
இருப்பதாகத் தெரிந்தது. தேநீர் குடித்த பின் அனைவரும் நாற்றங்காலுக்கு சென்றனர். சின்னப்
பெண்கள் தங்களது தந்தையுடன் பையன்கள் வந்ததால் தடைப்பட்ட வேலையை தொடர்ந்தனர். பல்வேறு நிற
காகிதங்களை வைத்து கிறிஸ்துமஸ் மரத்துக்கு பூக்களை கத்தரித்துக் கொண்டு இருந்தனர். அது
உற்சாகமான வேலையாக இருந்தது. ஒவ்வொரு பூவின் வேலை முடிந்த போதும் ஆனந்தமாக பெண்கள்
கூச்சலிட்டனர், ஏதோ அவை சொர்கத்திலிருந்து நேரே அவர்களது மடியில் விழுந்ததைப் போல
கத்தினர், அவர்களது தந்தையும் அவர்களுடைய சந்தோசத்தில் பங்கேற்றார். சிலநேரங்களில் அவர்
சலிப்புடன் கத்தரிக்கோலை நிலத்தில் குத்தினார்.
"இவன் நிகொலாவித்ச் எனது கத்தரிக்கோலை நீ மறுபடியும் எடுத்தாயா ?" என்று அவர்களது தாய்
கேட்டவாறு அங்கே வந்தாள். "நான் எடுக்கவில்லை" என்று அழுவது போல் தந்தை கூறினார்.
பிறகு மீண்டும் சின்னப் பெண்களுடன் உற்சாகமாக பூக்களை வெட்ட ஆரம்பித்தார்.
இதற்கு முந்தைய விடுமுறையில் வோலோட்யோ வீட்டுக்கு வரும் போதெல்லாம் இந்த வேலைகளில் அவன்
ஆர்வமுடன் ஈடு பட்டான், தோட்டத்திற்குச் சென்று பனியினால் கட்டப் படும் பொம்மையை
மகிழ்ச்சியுடன் பார்ப்பான். இப்போது ஆளே மாறிவிட்டான்.
இந்த முறை அவன் அவ்வாறு செய்யாமல் லேண்டிலோவுடன் அளவளாவிக் கொண்டு இருந்தான். இருவரும்
தனிமையில் ஒரு வரைபடத்தை வைத்துக் கொண்டு விவாதித்துக் கொண்டு இருந்தார்கள். "முதலில்
பேரம், பிறகு அங்கிருந்து தயுமேன், அப்புறம் டோம்ச்க் அதன் பின் கமச்சடகா. " என்று
மெல்லிய குரலில் சொல்லிக்கொண்டு போனான் லேண்டிலோவ்.
"பிறகு பெரிங் நீரினைப்பைக் கடந்து படகின் மூலம் அமேரிக்காவை அடையலாம். அங்கு நிறைய
அதிசயமான விலங்குகளைக் காணலாம். "
"அப்புறம் கலிபோர்னியாவுக்கும் " என்றான் வோலோட்யோ.
“கலிபோர்னியா கீழே இருக்கிறது. அமேரிக்கா சென்றால் கலிபோர்னியா ஒன்றும் தூரமில்லை.
அங்கு சென்றோமானால் வேட்டை யாடியும் கொள்ளையிட்டும் சந்தோசமாக வாழலாம். "
அத்துணை நேரமும் லேண்டிலோவ் சின்னப் பெண்களைத் தவிர்த்து வந்தான். அவர்களை சந்தேகக்
கண்களுடனே பார்த்தான். மாலையில் அவர்களுடன் ஐந்து நிமிடங்கள் இருக்க வேண்டி வந்தது.
அந்நேரம் மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்தியது.
அவன் தனது தொண்டையை இப்படியும் அப்படியும் அசைத்து செருமிக்கொண்டே காட்டியாவிடம்
கேட்டான் " நீ மேய்ன் ரீட் படித்திருக்கிறாயா?"
"இல்லை நான் கேட்பதெல்லாம் உனக்கு ஸ்கேட் பண்ணத்தெரியுமா? " கேட்டாள்.
லேண்டிலோவ் எந்த பதிலும் சொல்லாமல் உஸ் என்று பெரு மூச்சு விட்டான். ஏதோ தான்
புழுக்கத்தில் இருப்பது போல் காட்டிக்கொண்டான்.
காட்டியாவை மீண்டும் ஒருமுறை பார்த்துக் கொண்டு அவன் கூறலானான் " பிரெய்ரி புல்தரையில்
காட்டெருமைகள் நெருக்கி யடித்து ஓடும் போது தரைகள் அதிரும் அப்போது அச்சம் கொண்ட
குதிரைகள் பக்கத்திலுள்ள வற்றை உதைத்து ஓடும் . "
அவன் அர்த்தத்துடன் புன்னகைத்தான்.
" சிவப்பு இந்தியர்கள் ரயிலைத்தாக்குவார்கள். கொசுக்களும் பூச்சிகளும் மனிதர்களைக் கடிக்கும். "
"அது என்ன?"
அதுவும் எறும்பு மாதிரித்தான். அனால் இறக்கை இருக்கும். பயங்கரமாகக் கடிக்கும். நான் யார்
தெரியுமா? "
" லேண்டிலோவ் "
இல்லை நான் மொண்டேஹோமோ. கழுகின் நகம். எப்போதும் வெல்பவர்களின் தலைவன் "
மாஷா இருட்டில் ஜன்னலுக்கு வெளியே பார்த்தபடி சொன்னாள். "இரவு உணவில் லேண்டில் சேர்த்துக்
கொள்வோம்.
லேண்டிலோவின் நடவடிக்கையும் வோலோட்யோவுடன் அவன் விளையாடாமல் எதையோ பற்றி விவாதிப்பதும்
எதோ சிந்தனை வயப்பட்டு இருப்பதும், அந்நியமாகவும் சந்தேகப்படும் படியாகவும் இருந்தது.
மூத்த இரு சின்னப் பெண்கள் காட்டியாவும் சோனியாவும் இந்த இருவரின் நடவடிக்கைகளை
சந்தேகத்துடன் நோக்கலானார்கள்.
இரவில் இரு சிறுவர்களும் தூங்கச் செல்லும் பொது சின்னப் பெண்கள் இருவரும் பையன்கள் என்ன
பேசுகிறார்கள் என்று ஒட்டுக் கேட்க முயன்றார்கள்.
ஆ கண்டுபிடித்தே விட்டார்கள்! இரு சிறுவர்களும் அமெரிக்காவிற்கு ஓடிவிடத் திட்டம் போட்டு
உள்ளார்கள். அங்கு சென்று அவர்கள் தங்கம் தோண்டப் போகிறார்களாம்! பயணத்துக்குத் தேவையான
அனைத்தையும் அவர்கள் தயார் படுத்தி விட்டார்கள்! ஒரு துப்பாக்கி, இரு கத்திகள்,
பிஸ்கட்டுகள், தீப்பெட்டிகளுக்கு பதிலாக கண்ணாடித் தூள் ஒட்டிய காகிதங்கள், ஒரு காம்பஸ்
மற்றும் பணமாக நான்கு ரூபிள்கள். அவர்கள் அறிந்து கொண்டார்கள் பையன்கள் ஆயிரக்கணக்கான
மயில்கள் நடந்தே செல்ல இருக்கிறார்கள், சாலையில் புலிகளுடனும் மற்ற கொடிய
விலங்குகளுடனும் சண்டை போடப்போகிறார்கள், தங்களது எதிரிகளை வீழ்த்தி விட்டு, தங்கமும்
தந்தமும் கொண்டு வரப்போகிறார்கள். பெரிய கடற் கொள்ளையர்களாகப் போகிறார்கள், ஜின்
குடிப்பார்கள், அழகான மனைவிமார்களை அடையப்போகிறார்கள், பெரிய தோட்டம் வாங்குவார்கள்,
என்றெல்லாம் எண்ணினார்கள். பையன்கள் பேசும் போது ஒருவரை ஒருவர் இடைமறித்தார்கள்.
லேண்டிலோவ் தன்னை அடிக்கடி மொண்டேஹோமோ, கழுகின் நகம், என்று அழைத்துக் கொண்டான்.
வோலோட்யோவை வெளுத்த மூஞ்சிக்காரா என்று கூப்பிட்டான்.
காட்டியா தனது தங்கையை எச்சரித்தாள், "இதையெல்லாம் அம்மாவிடம் சொல்லாதே! சொன்னால் அம்மா
வோலோட்யோவை அமரிக்கா செல்ல விடமாட்டாள். பிறகு நமக்கு தங்கமும் தந்த வேலை செய்யப்பட்ட
விலை உயர்ந்த பொருட்களும் கிடைக்காமல் போய்விடும்!". கிரிச்த்மசுக்கு இரண்டு நாள் முன்பு
லேண்டிலோவ் ஆசியா வரை படத்தை வைத்துக் கொண்டு குறிப்பு எடுத்துக் கொண்டு இருந்தான்.
வோலோட்யோவோ அறைகளின் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டு உணவருந்தாமல் ஏதோ தேனீயால்
கொட்டப்பட்டவன் போல வீங்கிய முகத்துடன் இருந்தான்.
தோட்டத்தில் இருந்த கடவுள் சிலைமுன்பு சிலுவைக் கோடு நெஞ்சில் இட்டுக் கொண்டு சொன்னான்,
"கடவுளே இந்தப் பாவியை மன்னியுங்கள்! ஒரு பாவமும் அறியாத எனது தாயிடம் கருணை
காட்டுங்கள் !"
அந்த மாலையில் அவன் வாய் விட்டு அழ ஆரம்பித்தான்.
படுக்கப் போகும் முன்பு தனது தந்தை, தாய் மற்றும் சகோதரிகளைக் கட்டிக்கொண்டு பேசாமல்
இருந்தான்.
காட்டியாவுக்கும் சோனியாவுக்கும் விளங்கியது, ஆனால் குட்டிப் பெண் மாஷா குழம்பினாள்,
முற்றாகக் குழம்பினாள்.
ஒவ்வொரு முறையும் லேண்டிலோவை அவள் பார்க்கும்போதும் எண்ணிக்கொண்டாள், "இவன் வந்ததிலிருந்து
சாப்பாட்டுக்கு பயறும் பருப்பும்தான் "
கிறிஸ்துமசுக்கு முந்தைய நாள் காலையில்
பையன்கள் என்ன செய்கிறார்கள், எப்படி அமெரிக்காவுக்கு தப்பிச் செல்கிறார்கள் என்று கண்டறிய
காட்டியாவும் சோனியாவும் அவர்களது படுக்கையறைக்கு அருகில் ஊர்ந்து சென்றனர்.
லேண்டிலோவ் கோபமாகக் கேட்டுக் கொண்டு இருந்தான், "அப்படீன்னா நீ அமெரிக்காவுக்கு வரலையா?
சொல்லு நீ வரலையா? "
வோலோத்யா மென்மையாக அழுதுகொண்டு சொன்னான் "எப்படி முடியும்? என்னோட அம்மா பாவம் இல்லையா?"
“வெளுத்த மூஞ்சிக்காரா முதல்ல நீ தானே போலாமுன்னு சொன்னாய். இப்ப வேண்டாம் என்கிறாயே.
உன்னால் எல்லாம் பாழாச்சு”
"நான் பாழாக்கலை என்னோட அம்மாவை நினைச்சா பாவமா இருக்கு "
"கடைசியாச் சொல்லு நீ அமேரிக்கா போகிறாயா இல்லையா? "
"அமெரிக்காவுக்கு போகிறேன். ஆனால் வீட்டில் கொஞ்ச நேரமாவது இருக்கலாம்னுட்டு..."
லேண்டிலோவ் முடிவாகச் சொன்னான் "அப்படீன்னா நான் தனியாக அமேரிக்கா போகிறேன் "
"என்னால் தனியாகப் போக முடியும். நீ தான் புலிகளுடன் சண்டை போடவேண்டும் என்று
ஆசைப்பட்டாய்! இருந்துட்டுப் போகட்டும் என்னுடைய வெடிமருந்துகளையும் தோட்டாக்களையும் கொடு "
அந்த நேரத்தில் வோலோத்யா கசப்புடன் அழுதான், அவனது சகோதரிகள் உதவமுடியாமல் தவித்தனர்.
அமைதி அங்கே சிறிது நேரம் இருந்தது.
"நீ வரலை? " மீண்டும் லேண்டிலோவ் ஆரம்பித்தான்.
"நா... நா... நான்... வர்றேன் "
"நல்லது உன்னோட பொருட்களை எல்லாம் எடுத்து வை "
வோலோட்யோவை லேண்டிலோவ் உற்சாகமூட்டினான் , அமெரிக்காவைப் புகழ்ந்து பாடினான், புலியைப்
போல உறுமினான்,சிங்கத்தின் தோலும் புலிகளின் தோலும் உனக்குத்தான் என்றான்.
இந்தக் கருத்த சின்னப் பையன் சிறுமிகளைக் கவர்ந்தான் ஏதோ அசாதாரணமாக அவர்களுக்குத் தோன்றினான்.
அவன் ஒரு வீரனைப்போல் காட்சி தந்தான். உறுதியானவனாகவும் பயம் அற்றும் தெரிந்தான் அவன்
நிற்கும் தோரணை மெய்யாக புலி நிற்பது போலவே இருந்தது.
சிறுமிகள் தங்களது அறைக்குத் திரும்பி உடுத்திக் கொண்டனர். காட்டியாவின் கண்களில் நீர்
கோர்த்து இருந்தது. "நான் மிகவும் பயந்து போய் இருக்கிறேன்" என்றாள்.
எல்லாம் சரியாகவே இருந்தது மதியம் இரண்டு மணிக்கு சாப்பாட்டு மேசைக்கு அனைவரும் வரும்
போது வரைக்கும் .
பையன்களை வீட்டில் காணவில்லை.
அக்கம் பக்கத்திலுள்ள வீடுகளுக்கு ஆட்களை அனுப்பித்தேடினர். ஒவ்வொரு குடியிருப்பாகத்
தேடினர். அவர்களைக் காணவில்லை.
பக்கத்திலுள்ள கிராமத்துக்கும் ஆட்கள் போனார்கள் அங்கேயும் கண்டுபிடிக்க முடியவில்லை.
மாலை நேரத்து தேநீர் குடிக்க பையன்கள் வரவில்லை. இரவு உணவுக்கும் கூட அவர்கள் வரவில்லை.
இப்போது அம்மாவின் கண்களில் நீர் எட்டிப் பார்க்க ஆரம்பித்தது.
அடுத்த நாள் மீண்டும் சுற்று வட்டாரங்களுக்கு ஆட்களை அனுப்பித் தேட ஆரம்பித்தனர். இப்போது
ஆற்றின் கரைகளில் விளக்குகளுடன் சென்று தேடினர். என்ன இப்படி ஒரு தேவை இல்லாத கவலைகள் .
அடுத்த நாள் ஒரு காவல் துறை அலுவலர் ஏதோ காகிதங்களுடன் வீட்டுக்கு வந்தார். அம்மா கதறினாள்.
திடீரென ஒரு ஸ்லெட்ஜ் வீட்டின் முன் வந்து நின்றது. மூன்று குதிரைகள் பனிப் புகையின்
நடுவே நின்று கொண்டு இருந்தது.
"வோலோத்யா வந்தாச்சு " யாரோ தோட்டத்தில் கத்தினார்கள்.
"குட்டி எஜமான் வோலோத்யா வந்துட்டாரு " நடாலியா உணவறைக்கு ஓடிவந்து கத்தினான்.
மிலோர்ட் நாய் "போவ் வோவ் " சத்தமிட்டுக் குறைத்தது.
பையன்களை கடைவீதியில் பிடித்ததாக பின்னர் தெரிந்து கொண்டார்கள், அவர்கள் துப்பாக்கிக்கு
தோட்டா வாங்க விசாரித்துக் கொண்டு இருந்த போது பிடிபட்டனர்.
வோலோட்யோ தனது தாயைக் கண்ட போது கட்டிக்கொண்டு கதறினான் .
சின்னப் பெண்கள் அடுத்தது என்ன நடக்கும் என்று ஆடிப்போய் இருந்தார்கள்.
தந்தை சின்னப் பையன்கள் இருவரையும் தனது அறைக்கு கூட்டிச் சென்று நிறைய நேரம் பேசினார்.
"இது தான் நீங்க செஞ்ச நல்ல காரியமா? உங்களுக்கே நல்லா இருக்குதா இது? உங்க பள்ளிக்
கூடத்துக்கு இது தெரியாமல் இருக்கணும், கடவுளே! தெரிஞ்சுதுன்னா அவுங்க உங்களை
நிருத்தீருவாங்க! நீங்க இதுக்கெல்லாம் வெட்கப்படனும்! லேண்டிலோவ் இதை நீதான் ஆரம்பிச்சு
இருக்கணும் இதுக்கு நீ உன் அப்பா அம்மா கிட்ட தண்டனை வாங்கியே தீரனும்! ராத்திரி எங்கே
இருந்தீங்க? "
"காவல் நிலையத்தில் " பெருமையுடன் சொன்னான் லேண்டிலோவ்.
வோலோட்யோ நெற்றியில் வினிகரில் நனைத்த பற்றுடன் படுக்கைக்குச் சென்றான்.
ஒரு தந்தி கொடுக்கப்பட்டது, அதன் பின் ஒரு பெண்மணி வந்தார், அவர்தான் லேண்டிலோவின் தாய்.
லேண்டிலோவ் சோகமாகவும் பெருமையுடனும் காணப்பட்டான், சின்னப் பெண்களை விட்டுச் செல்லும்
போது எந்த ஒரு வார்த்தையும் பேசவில்லை.
ஆனால் காட்டியாவின் நோட்டுப் புத்தகத்தில் எழுதினான் "மொண்டேஹோமோ, கழுகின் நகம்,
எப்போதும் வெல்பவர்களின் தலைவன்."

Professor k. kumar

unread,
Nov 19, 2014, 3:34:39 AM11/19/14
to brail...@googlegroups.com
குற்றம்புரிந்தவன்
anton+2
மூலம் : அன்டன் செக்ஹோவ்
தமிழில் : மா. புகழேந்தி
நார் இழைகளால் ஆனா மேல் சட்டையையும் கிழிந்து தைக்கப்பட்ட கால் சட்டையையும் உடுத்திக்
கொண்டு நின்ற மெலிந்து ஒல்லியான அந்த விவசாயத் தொழிலாளியை விசாரணை நீதிபதி
கேள்விகளால் துளைத்துக் கொண்டு இருந்தார். அவனது முகத்தில் அம்மைத் தழும்பும் முடியும்
மண்டிக் கிடந்தது, அவனது கண்கள் வெளியே தெரியாத அளவுக்கு புருவம் அடர்ந்தும் முகம்
சோகத்தில் வீங்கியும் இருந்தது. அவனது தலை முடி வாரப்படாமலும் சிக்குடனும் இருந்தது,
அது அவனுக்கு கசப்பான சோகத்தைக் கூட்டிக் காட்டியது. வெறுங்காலுடன் நின்றுகொண்டு இருந்தான்.
"டெனிஸ் க்ரிகோர்யேவ்" நீதிபதி ஆரம்பித்தார். "பக்கத்தில் வா, கேட்கிறதுக்கு பதிலைச்
சொல்லு. ஜூலை ஏழாம் தேதி ரயில்வே காவலாளி, இவான் செம்யோநோவித்ச் அகின்போவ் ,
தண்டவாளத்தைக் காவல் காத்துக் கொண்டு இருந்தபோது நூற்றி நாற்பத்து ஓராவது மயிலில்
தண்டவாளங்களை இணைக்கும் கட்டைகளில் இருந்து நீ நட்டுகளைக் கழற்றிக் கொண்டு இருந்தாய். இங்க
பார் அந்த நட்டு. மேற்கண்ட காரணத்துனால உன்னைப் பிடிச்சிட்டு வந்தாங்க. அப்படியா?"
"ய்யன்னா ?"
"அகின்போவ் சொன்னது சரியா?"
"இருக்கலாம்"
"சரி எதுக்கு நட்டைக் கழற்றினாய்?"
"ய்யன்னா ?"
"ய்யன்னா அப்படீங்கறதை விடு கேள்விக்கு மட்டும் பதிலைச் சொல்லு. எதுக்கு நட்டைக் கழற்றினாய்?"
"எனக்குத் தேவை இல்லை யின்னு சொன்னா எதுக்கு நான் கழற்றுகிறேன்?", கூரையைப் பார்த்துக்
கொண்டு தவளையைப் போல கரகரத்த குரலில் சொன்னான்.
"அந்த நட்டை வச்சு என்ன செய்யப் போகிறாய்?"
"நட்டு? அதை வச்சு நாங்க எங்க பிழைப்புக்கு தூண்டிலுக்கு எடையா பயன்படுத்தறோம்"
"யாரெல்லாம் 'நாங்க'"?
"நாங்க கிளிமொவின் விவசாயக் கூலிகள், அவ்வளவு தான்."
"இங்க கவனி...என்னை முட்டாளாக்காதே, அர்த்தத்தோடு பேசு, பொய் சொல்றதுல பிரயோசனம்
இல்லை, எடையா எப்படி பயன்படுத்துவீங்க?"
"குழந்தையா இருந்த காலத்திலிருந்து நான் பொய்யே பேசியதில்லை. இப்ப சொல்ல வைக்கிறாங்க
..." டெனிஸ் கண்களைப் படபடவென அடித்துக்கொண்டு முணுமுணுத்தான். "ஆனால் நீங்க எடையே
போடாமல் தூண்டில் முள்ளில் புழுவை மாட்டி எப்படி நீருக்குள்ள மூழ்க வைப்பீங்க எஜமான். எடை
இல்லாமல் அது தண்ணீரில் மூழ்குமா? "நான் பொய் சொல்றனா?" ஏளனமாகச் சிரித்தான் டெனிஸ்.
“புழு நீரின் மேல் நீந்தினால் அதுனால என்ன பிரயோசனம்? பெர்ச், பைக் அப்புறம் ஈல் மீன்கள்
எல்லாம் நீரின் ஆழத்துல தான் இருக்கும். மேல்தளத்து தண்ணியில மிதக்கிரதைக் ஷில்லிச்பேர்
மீன்கள் தான் சாப்பிடும். அதுகளுக்கு நிறைய இடம் வேணும். எங்க ஆற்றிலே அதுகள் இல்லை. "
"இப்ப எதுக்கு என்கிட்டே ஷில்லிச்பேர் மீன்களைப் பற்றிச் சொல்கிறாய்?"
"ய்யன்னா ? ஏன் நீங்கதானே அதைப்பத்திக் கேட்டீங்க! வலை போட்டு மீன் பிடிக்கிறதும் எங்க ஊர்ல
இருக்கு. அப்பாவிப் பசங்க தான் எடை போடாமல் மீன் பிடிப்பாங்க! புரிஞ்சுக்கத் தெரியாதவன்
தான் மீன் பிடிக்க எடை போடாமல் தூண்டிலோடு போவான். முட்டாள்களுக்கு எதுக்கு சட்டம் ? "
"அப்படீன்னா நீ உன் தூண்டிலுக்கு எடை போடத்தான் நட்டைக் கொண்டுபோனாய்?"
"பின்ன வேற எதுக்கு விளையாடவா?"
"ஆனால் நீ ஏன் வேறு எதாவதை.... ஆணி மாதிரி, தோட்டா மாதிரி...ஈயம் போல..."
"ஈயத்தை எல்லாம் சாலையில் கண்டெடுக்க முடியாது, அதை நீங்க வாங்கணும். ஆணி எதுக்கும்
உதவாது. நட்டை விட நல்ல பொருள் உங்களால் சொல்ல முடியாது. அது கனமானது, ஓட்டையும்
இருக்குது. "
"அவன் ஒண்ணுமே தெரியாதது போல் நடிக்கிறான், எதோ நேற்றுத்தான் பிறந்தவன் போலவும்,
சொர்கத்திலிருந்து குதித்தவன் போலவும் பேசுகிறான். மரமண்டையே புரிஞ்சுக்க மாட்டாயா இந்த
நட்டைக் கழற்றினதால என்ன நடக்கும் என்று? காவலாளி மட்டும் இதைப் பார்க்கவில்லை என்றால்
தண்டவாளம் பிரிஞ்சிருக்கும் ரயில் கவிழ்ந்து போயிருக்கும். பயணிகள் எல்லாம் பலியாகி
இருப்பார்கள். நீ அவங்களைக் கொன்று இருப்பாய்"
"கடவுளே மன்னிக்கணும். நான் எதுக்கு அவங்களைக் கொல்லனும்? நான் என்ன காட்டுமிராண்டியா
கொடுமைக்காரனா? அய்யா நாங்கள் அந்த மாதிரி எந்த ஒரு கெட்ட எண்ணமும் இல்லாமல் வாழ்ந்து
கொண்டு வருகிறோம். பரலோகத்தில் இதுக்கும் கடவுளே கருணை காட்டுங்கள். நீங்க என்ன சொல்றீங்க
எஜமான்?"
"பின்ன எப்படி ரயில் விபத்துக்கள் நடக்குதாம்? ரெண்டோ மூனோ நாட்டைக் கழற்றிப் பாரு ரயில்
கவிழுதா இல்லையான்னு!"
டெனிஸ் நீதிபதியைப நம்பிக்கை இல்லாமல் பார்த்து ஏளனமாகப் புன்னகைத்தான்.
"நாங்க எத்தனை காலமா இதைச் செஞ்சுட்டு வர்றோம், கடவுள் கருணையோடு தானே இருக்கிறார்,
இப்பப் போய் ரயில் விபத்து மக்கள் சாகுறாங்க அப்படீன்னு எல்லாம் சொல்றீங்களே."
"நீங்க சொல்லுங்க நான் தண்டவாளத்துல ஒரு பாறாங்கல்லையோ தடி மரத்தையோ வச்சா ரயில்
கவிழும், ஆனால் போயும் போயும் ஒரு நட்டைக் கழற்றினால் ரயில் கவிழுமா?"
"ஆனால் புரிஞ்சுக்க நட்டு தான் கட்டைகளை தண்டவாலத்துடன் சேர்த்து வைக்குது, அதுனால அது
விலகாமல் இருக்குது. "
"எங்களுக்குப் புரியுது... நாங்க எல்லாத்தையுமா கழற்றினோம்... நாங்க நிறைய நட்டுகளை
விட்டுத்தானே வச்சிருக்கிறோம்... நாங்களும் யோசிக்காமல் செய்யவில்லை... புரிஞ்சுதான்
செய்யிறோம்..."
டெனிஸ் கொட்டாவி விட்டான். வாய் மேல் சிலுவை இட்டுக்கொண்டான்.
"போன வருஷம் இங்க ரயில் கவிழ்ந்திருந்தது" நீதிபத் சொன்னார் "இப்பத தெரியுது ஏன்னு?"
"என்ன சொல்றீங்க எஜமான்"
"உன்கிட்ட என்ன சொல்றேன்னா போன வருஷம் நடந்த ரயில் விபத்துக்கு என்ன காரணம் என்று இப்ப
எனக்கு விளங்குது."
"அதான் நீங்க படிச்சவங்க, அய்யா நீங்க புரிஞ்சுக்குவீங்க, அதுக்குத்தானே படிச்சீங்க. கடவுள்
தான் யாருக்குப் புரிய வைக்கனுமோ அவுங்களுக்கு புரிய வைப்பார். உங்களுக்குத் தெரியும்
ஏன் எதுக்குன்னு, ரயில்வே காவலாளி எங்களைப் போல கூலிதானே அவனுக்கு என்ன தெரியும்
சட்டையைப் பிடித்து இழுத்துட்டு வந்துட்டான், நீங்க எப்படி காரணத்தைக் கண்டு பிடிச்சிட்டு
என்னை மடக்குறீங்க. உங்களுக்குத் தெரியும்னு நினைக்கிறேன் விவசாயிக்கு விவசாயின்
அறிவுதான் இருக்கும்னு. எழுதிக்குங்க எஜமான் அவன் என்னை ரெண்டு தடவை அடிச்சான், ஒரு
தடவை என் தாடையில இன்னொரு தடவை என் நெஞ்சில. "
'உன் குடிசையை சோதனை போட்ட போது இன்னொரு நட்டையும் கண்டு புடிச்சிருக்காங்க. அதை
எப்போ எங்கிருந்து கழற்றினாய்?"
"நீங்க சொல்றது அந்த சிவப்புப் பெட்டியில் இருந்ததையா?"
"அது எங்கே இருந்ததுன்னு தெரியாது, அதைக் கண்டு புடிச்சாங்க. எப்பக் கழற்றினாய்?"
“அதை நான் கழற்றலை. ஒத்தக் கண் செம்யோனின் மகன் இஷ்கா தான் கொடுத்தான். அது தான்
பெட்டியில இருந்தது. ஆனால் ச்லேட்ஜில் இருந்த நட்டை நானும் மிற்றோபானும் தான் கழற்றினோம். "
'எந்த மிற்றோபான்?"
"மிற்றோபான் பெற்றோவ்....அவனைத் தெரியாதா? அவன்தான் எங்க ஊருல வலை பின்றவன். விற்கவும்
செய்வான். அவனுக்கு நிறைய நட்டு தேவைப்படும். ஏறக் குறைய பத்து நட்டுக்கள் ஒரு வலைக்கு
வேணும். "
"கேள். தண்டனைச் சட்டத்தின் பிரிவு 1081 என்ன சொல்லுதுன்னா, ரயில் தண்டவாளத்தில்
யாராலாவது செய்யப்படும் எந்த ஒரு நடவடிக்கைகளாலும் சேதம் ஏற்பட்டு சிதைப்புக்கள் உண்டாகி
அந்த வழியாகப் போகும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு விபத்து நடக்கும் என்று குற்றம்
புரிந்தவனுக்கு தெரிந்திருந்தால் ..... (புரியுதா. புரிஞ்சுக்க. நட்டைக் கழற்றினால்
என்ன ஆகும்கிறதை தெரிஞ்சுக்க. ) தண்டனை அவனுக்கு அளிக்கப்பட வேண்டும்.”
"தெரியுது...நாங்க ஏதுமறியா அப்பாவிகள்...புரிஞ்சு என்ன ஆகப்போகுது?"
"உனக்கு எல்லாம் தெரிஞ்சு இருக்குது. இங்க பொய் சொல்ற நடிக்கிற."
"எதுக்கு நான் பொய் சொல்லணும். நம்பலைன்னா எங்க ஊருல கேட்டுப் பாருங்க. எடை போடாமல் எந்த
மீனையும் புடிக்க முடியாது குட்கான் மீனைக் கூட பிடிக்க முடியாது. அது கூட எடை
போடலைன்னா மாட்டாது."
"அடுத்த தடவை ஷில்லிச்பேர் மீனைப் பத்தி சொன்னா நல்லா இருக்கும்" நீதிபதி புன்னகை
புரிந்தவாரே கூறினார்.
"எங்க பக்கம் ஷில்லிச்பெர்கள் இல்லை. நாங்க எடைபோடாமல் தூண்டி போட்டா மேல பட்டாம்பூச்சி
இருக்கும். முல்லேட் மீன்களைத் தான் அப்படிப் பிடிக்க முடியும். அதுவும் அடிக்கடி கிடையாது."
"போதும் வாயை மூடு"
சிறிது நேரம் அமைதி நிலவியது. டெனிஸ் ஒரு காலை மாற்றி ஒரு காலில் நின்றான்.
மேசையின் மேலிருந்த விரிப்பினை படபடவென இமைத்துக் கொண்டு பார்த்தான், எதோ அது துணி
யல்லாமல் சூரியனைப் பார்ப்பது போல் பார்த்தான்.
நீதிபதி வேகமாக எழுத ஆரம்பித்தார்.
நீண்ட மௌனத்திற்குப் பின் டெனிஸ் கேட்டான், "நான் போலாமா?"
"இல்லை நான் உன்னை சிறைக்கு அனுப்பப் போகிறேன்"
டெனிஸ் இப்போது இமைப்பதை நிறுத்திக் கொண்டான், புருவத்தை உயர்த்தி, கேள்வி கேட்பதைப் போல
நீதிபதியைப் பார்த்தான்.
"என்ன சொல்றீங்க எஜமான். எனக்கு இப்ப நேரம் இல்லை, நான் சந்தைக்குப் போக வேண்டும், அங்கே
எகோரிடம் மூன்று ரூபிள்கள் கொழுப்பு விற்றதற்காக வாங்க வேண்டும்"
"வாயை மூடு. குறுக்கே பேசாதே"
"சிறைக்கா .. ஏதாவது காரணம் இருந்தா போலாம், எந்தக் காரணமும் இல்லாமல் என்னை ஏன் போகச்
சொல்கிறீர்கள். நான் எதையும் திருடலையே. நான் நம்புகிறேன் நான் சண்டை போடலை. உங்க
முகவரைக் கேளுங்கள். அவன் தான் அயோக்கியன். கிழவன், உங்களுக்கே தெரியும்"
"வாயை மூடு. குறுக்கே பேசாதே"
"நான் வாயை மூடீட்டுத்தான் இருக்கிறேன். " முணுமுணுத்தான்.
“நான் ஒழுங்காகத்தான் உறுதிமொழி எடுத்தேன். மூத்தவங்க கணக்கைத் தப்பாகச் சொல்லி இருக்கலாம்.
நாங்க மூன்று சகோதரர்கள் குஸ்மா க்ரிகோர்யேவ், அப்புறம் எகோர் க்ரிகோர்யேவ் அப்புறம் நான்
டெனிஸ் க்ரிகோர்யேவ்”
"நீ என்னைத் தொந்தரவு செய்கிறாய். செம்யோன் இவனைக் கூட்டீட்டுப் போ!"
"நாங்க மூணு அண்ணன் தம்பிங்க " டெனிஸ் முணுமுணுத்துக் கொண்டிருந்தான். இரண்டு காவலர்கள்
அவனை அறைக்கு வெளியே இட்டுச் சென்றனர்.
"ஒரு சகோதரனுக்கு இன்னொரு சகோதரன் பொறுப்பில்லை. குஸ்மா பணம் செலுத்தவில்லை அப்படியே
டெனிஸ், பதில் சொல்லியே ஆகவேண்டும்,.... நிச்சயமாக நீதிபதிகளே! எங்கள் தலைவன் இறந்து
விட்டான், சொர்க்கம் அவனுடையதாகட்டும். இல்லையென்றால் அவன் உங்களுக்கு நீதியைக் காட்டி
இருப்பான். நீங்கள் உண்மையை அறிந்து நீதி சொல்லுங்கள். மனம் போன போக்கில் சொல்லக் கூடாது.
சவுக்கடி கொடுக்க வேண்டுமானால் கொடுங்கள், யாருக்கு நியாயமாகக் கொடுக்க வேண்டுமோ
அவனுக்குக் கொடுங்கள். மனசாட்சிப்படி கொடுங்கள்".
*********

Professor k. kumar

unread,
Nov 19, 2014, 3:40:32 AM11/19/14
to brail...@googlegroups.com
Un Bandit Corse : கோர்சிப் போராளி
250px-Maupassant_2
மூலம் : கய் தே மாப்பசான்
தமிழில் : மா. புகழேந்தி

ஐத்தோன் காடு வழியாக சாலை மெல்ல முன்னேறியது. எங்களது தலைக்கும் மேல் பைன் மரங்கள்
கூடாரமிட்டு இருந்தன. வீசிய காற்று எதோ ஓர் இசைக் கருவியை இசைப்பது போல்
வித்தியாசமான ஒலியை எழுப்பிக் கொண்டிருந்தது.
மூன்று மணி நேர நடைக்குப் பின் ஒரு வெட்ட வெளி தென்பட்டது, சிறிது இடைவெளிக்குப்
பிறகு ஒரு பெரும் பைன் மரம் பெரிய கூடையைப் போல் கிளை பரப்பி இருந்தது, காட்டின்
முடிவுக்கே வந்து விட்டோம், சில நூறு அடிகள் கீழே, நியோலோ பள்ளத்தாக்கை நோக்கி ஒரு
கணவாய் சென்றது.
கணவாய்க்கு இரு புறமும் துருத்திக் கொண்டு இருந்த குன்றுகளின் மேல், மிகப் பெரும்
மரங்கள், திருகியவாறு வளர்ந்திருந்தன, பார்வைக்கு முதுகில் பொருட்களைக் கட்டிக்கொண்டு
மலை ஏறுபவர்களைப் போலவும் எதோ கடும் முயற்சிக்குப்பின் அங்கு ஏறியவைகளைப் போலவும்
தெரிந்தது. நாங்கள் திரும்பிப் பார்த்த போது முழுக் காடும் நீட்டிவிடப் பட்டது போல் எங்கள்
கால்களுக்குக் கீழ் மாபெரும் செழிப்பான பசுமையான காடு வானை முட்டும் மலைகளுக்கிடையில்
தெரிந்தது.
நாங்கள் நடக்கத் தொடங்கினோம், பத்து நிமிடம் கழித்து கணவாயில் இருந்தோம்.
அங்கு நான் குறிப்பிடத்தகுந்த நிலப்பரப்பினைக் கண்டேன். அதற்கும் பின்னால் காடு பள்ளத்தாக்கு
வரை நீண்டு இருந்தது, இதற்கும் முன்னர் நான் கண்டிராத பள்ளத்தாக்காக இருந்தது. ஒற்றைக் கல்
இரண்டு மலைகளுக்கும் நடுவில் இணைப்பு போல் பல அடி நீளத்துக்குக் கிடந்தது, எந்த ஒரு
வயலையோ மரத்தையோ பார்க்க முடியாமல் இருந்தது. இது தான் நியோலோப் பள்ளத்தாக்கு, கோர்சித்
தந்தையகம், அடைய முடியாத கோட்டை, ஊடுரவல் காரர்களால் மலையகத்தோரை விரட்டவே முடியாத இடம்.
என்னுடன் வந்தவர் சொன்னார், "இங்கு தான் நமது போராளிகள் பதுங்கி இருக்கும் இடமா? "
விரைந்து நாங்கள் கணவாயின் குறுகிய வாயினை அடைந்தோம், அது விவரிக்க முடியாத காட்டு
அழகுடன் விளங்கியது.
ஒரு புல் பூண்டு கூட இல்லை. எல்லாம் கருங்கற்கள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை, தகிக்கும் கற்
பாலைவனமாக இருந்தது, சூரியனால் அடுப்பு போல வெம்மையூட்டப் பட்டு இருந்தது, சூரியன்
தலைக்கும் மேலாக அந்த வேலைக்காகத் தான் இருப்பது போலத் தோன்றியது. எங்கள் கண்களை மலை
முகத்தினை நோக்கி உயர்த்திய போது, நாங்கள் கண்டது கண்களைக் கூசச் செய்யவதாகவும் செயலை
மறக்கச் செய்வதாகவும் இருந்தது. மலை உச்சிகள் பவழ மாலை போல, மின்னும் கற்களைக்
கொண்டிருந்தது. தலைக்கும் மேலிருந்த வானம் நீலமாகவும் ஊதா நிறத்துடனும் மலைகளின் பின்
புலத்தில் கண்டிராத காட்சியைக் கட்டியவாறு இருந்தது. கீழே கருங்கற்கள் மின்னும் சாம்பல்
வண்ணத்தில் இருந்தது. காலுக்குக் கீழ் உள்ள தரை சாம்பலோ என்று எண்ணுமாறு இருந்தது. வலது
புறத்தில் சிற்றாரொன்று ஒழுங்கற்று ஒலி எழுப்பிக் கொண்டு ஓடிக்கொண்டிருந்தது. நாங்கள்
தடுமாறியபடி எரிச்சலூட்டும் வெப்பத்திலும் முன்னேறினோம்.
இந்த வெய்யிலில், இந்தப் புழுக்கத்தில், இந்த வறண்ட பள்ளத்தாக்கில், ஓடும் இச் சிற்றாறு,
எப்போதும் வேகமாக ஓடிக்கொண்டு, பாறைகளுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டு இருந்தது. அவ்
வெள்ளத்தை எல்லாம் சூளை போலக் காய்ந்திருந்த பாறைகள் பேராசையுடன் பருகி
புத்துணர்ச்சியற்று தாகத்துடனேயே இருந்தன.
மரத்தாலான சிலுவை ஒன்று கற்களுக்கிடையில் செருகப் பட்டிருந்தது எங்கள் கண்களில் பட்டது.
ஒரு மனிதன் இங்கே கொல்லப் பட்டு இருக்க வேண்டும்; என்னுடன் வந்தவரிடம் சொன்னேன்.
"உங்கள் போராளிகளை பற்றிச் சொல்லுங்கள்."
அவர் பதிலளித்தார்:
"எனக்குத் தெரிந்த புகழ் பெற்ற ஒரு போராளியைப் பற்றிச் சொல்கிறேன். அவன் செயின்ட் லூசீ"
"இந்த மாவட்டத்தில் இருந்த ஒரு இளைஞனால் அவனது தந்தை கொல்லப் பட்டார் என்று சொல்வார்கள்,
செயின்ட் லூசீ அவனது சகோதரியுடன் அனாதையாக விடப்பட்டான். அவன் சிறுத்த நோஞ்சானான
இளைஞன், சக்தி யற்று அடிக்கடி நோயுறுபவன். அவன் தந்தையைக் கொன்றவன் மீது சூளுரைக்க
வில்லை. அவனது உறவினர்களெல்லாம் அவனைப் பழிவாங்கத் தூண்டினர், ஆனால் அவன் அதை எல்லாம்
காதில் போட்டுக் கொள்ள வில்லை. "
இருப்பினும் பழைமையான கோர்சி நடைமுறையின் படி அவனது சகோதரி பழிவாங்கும்
ஆத்திரத்துடன், கொல்லப்பட்டவனுக்காக பழிவாங்கப்படவில்லை துக்கப் படவில்லை என்பதை நினைவூட்ட
அவனது கருப்பு உடையைக் கொண்டு சென்றாள்.
அவன் அதையெல்லாம் பொருட் படுத்த வில்லை , வேண்டு மென்றே அவமதிப்பதைப் போல குண்டுகளால்
நிரப்பப் பட்டு சுவற்றில் தொங்கிக் கொண்டிருந்த தனது தந்தையின் துப்பாக்கியினைக் கூட அவன்
கண்டுகொள்ளவில்லை , மாவட்டத்தில் இருந்த மற்ற இளைஞர்களைப் பார்க்கக் கூசி வெளியில்
செல்லாமல் ஒளிந்து கொண்டிருந்தான் .
அவன் அந்தக் குற்றத்தை மறந்து விட்டான் என்றே தோன்றியது. தனது சகோதரியுடன் தனிமையில்
வாழ்ந்தான்.
ஆனால் ஒரு நாள் அவன் தந்தையைக் கொன்றதாகக் கருதப் பட்ட இளைஞனுக்குத் திருமண ஏற்பாடு நடந்தது.
செயின்ட் லூசீவை இச்செய்தி பாதிக்க வில்லை. ஆனால் மாப்பிள்ளைப் பையன் சுற்றிக் கொண்டு
சர்ச்சுக்குப் போகாமல், எந்தக் கவலையுமில்லாமல், இரண்டு அனாதைகள் இருந்த வீட்டின் வழியாகப்
போனான்.
அந்தத் திருமண ஊர்வலம், பயறுகளை உண்டுகொண்டு ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்த
இருவரின் கண்களில் பட்டது.
செயின்ட் லூசீ நடுங்கினான், ஒரு வார்த்தை கூட பேசாமல் திடீரென எழுந்தான், கைகளால்
சிலுவை இட்டுக் கொண்டான், சுவற்றில் தொங்கிக் கொண்டிருந்த துப்பாக்கியினை எடுத்தான்,
வெளியில் வந்தான்.
"இதைப் பற்றி பிற்பாடு பேசும் போது அவன் சொன்னான்,' எனக்குள்ள என்ன நடந்ததுன்னு எனக்குத்
தெரியாது, என் ரத்தத்தில் தீப்பிடிச்சது போல இருந்தது, இத செஞ்சே ஆகணும்னு தோணிச்சு,
என்னென்னவோ செஞ்சாலும் என்னால் தடுக்க முடியலை, கோர்த் போகும் சாலையில் இருந்த ஒரு
குகையில் துப்பாக்கியை மறைச்சு வச்சேன்….. "
ஒரு மணி நேரம் கழிச்சு மனதில் எந்தக் கவலையும் இல்லாமல் அவன் திரும்பினான், எப்போதும்
போல சோகமான முகத்துடன் இருந்தான். அவனுக்கு வேறு சிந்தனை இனிமேல் இல்லை என்று அவன்
சகோதரி நம்பினாள்.
பொழுது விழுந்ததும் அவன் காணாமல் போனான்.
அவனது எதிரி, மாப்பிள்ளைத் தோழர்கள் இருவருடன் அன்று மாலை கோர்திற்கு நடந்து புறப்பட்டான்.
பாட்டுப் பாடிக்கொண்டே மாப்பிள்ளை நடந்தான், அப்போது செயின்ட் லூசீ அவன் முன் வந்து
நின்றான். கொலைகாரன் முகத்தை நேருக்கு நேராய்ப் பார்த்தான். வியப்புடன் சொன்னான் 'இது தான்
சரியான நேரம்' , அப்புறம் மாப்பிள்ளையின் நெஞ்சில் சுட்டான்.
துணைக்கு வந்ததில் ஒருவன் ஓடிவிட்டான்; அடுத்தவன் செயின்ட் லூசீவைப் பார்த்து
"நீ என்ன செஞ்சிட்ட தெரியுமா?", என்று சொல்லி உதவிக்கு கோர்த்தை நோக்கிச் செல்ல
முற்பட்டான், அப்போது செயின்ட் லூசீ கடுமையான குரலில் எச்சரித்தான் 'இன்னொரு அடி எட்டு
வச்ச, கால்ல சுடுவேன்'
இது வரை பொறுமையாக இருந்த செயின்ட் லூசீவை அறிந்திருந்த இன்னொருவன் 'உனக்கு அவ்வளவு
தைரியம் இல்லை' என்று சொல்லி ஓட முற்பட்டான், ஆனால் அலறியபடி விழுந்தான், அவனது தொடை
குண்டுகளால் துளைக்கப்பட்டிருந்தது.
அவன் விழுந்த இடத்துக்கு வந்து செயின்ட் லூசீ அவனைப் பார்த்துச் சொன்னான் ,' நான் காயத்தைப்
பார்ப்பேன், கொஞ்சமா இருந்தா விட்டுட்டுப் போவேன், இல்லை பலமா இருந்துதுன்னா கொன்னுருவேன்'
காயத்தை ஆராய்ந்தான், பலமாக இருந்தது, மெல்ல அவனது துப்பாக்கியில் குண்டுகளை
நிரப்பினான், காயம் பட்டவனை கடவுளிடம் வேண்டிக்கச் சொன்னான், பிறகு தலையில் சுட்டான்.
அடுத்த நாள் அவன் மலையில் இருந்தான்.
'உங்களுக்குத் தெரியுமா அதற்கப்புறம் அவன் என்ன செய்தான் என்று?"
"காவல் துறையால் அவனது குடும்பத்தார் அனைவரும் கைது செய்யப் பட்டனர். இறந்து போனவனின்
உறவினர்களால் குற்றம் சாட்டப் பட்டவரும் அவனைக் கொலை செய்யத் தூண்டியதாக
சந்தேகத்துக்குட்பட்டவருமான அவனது மாமா சிறையில் போடப்பட்டார். ஆனால் அவர்
சிறையிலிருந்து தப்பித்தார், போகும் போது துப்பாக்கி ஒன்றையும் எடுத்துக் கொண்டு
ஓடிவிட்டார். காட்டுக்குள் சென்று தனது மருமகனுடன் சேர்ந்து கொண்டார்.
அடுத்ததாக செயின்ட் லூசீ தனது மாமாவைக் காட்டிக் கொடுத்தவர்கள், ஒவ்வொருத்தரையாகக் கொல்ல
ஆரம்பித்தான், மற்றவர்களை எச்சரிப் பதற்காக இறந்தவர்களது கண்களைப் பிடுங்கினான், அது
பார்த்தவற்றைச் சொல்லாதே என்பதாக இருந்தது.
தனது எதிரியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரையும் கொன்று போட்டான். தனது வாழ்வில்
பதிநான்கு காவலர்களை அவன் கொன்றிருக்கிறான். அவனுக்குப் பிடிக்காத எதிரிகளது வீடுகளைக்
கொளுத்தி இருக்கிறான், அவனது இறப்பு வரை அவனது செயல்கள் மிகக் கொடுமையானவை, மற்ற
போராளிகளை விட அவனைப் பற்றிய நினைவுகளை எங்களது மனதில் நாங்கள் காத்து வைத்திருக்கிறோம்.”
சூரியன், மாண்டி சிந்தோ மலை முகட்டுக்குப் பின் மறைந்தது , உயர்ந்த கருங்கல் மலையின்
நிழல் பள்ளத்தாக்கில் தூங்கச் சென்றது. இரவுக்குள் ஆல்பர்ட்ஆச்சியோ கிராமத்தை அடைய வேண்டும்
என்று நாங்கள் வேகமாக எட்டு வைத்தோம், கூரான கற்களே பாதை முழுக்க நிறைந்திருந்தன.
அந்தக் போராளியை நினைத்துக் கொண்டு நான் கேட்டேன்
"என்ன கொடுமை உங்களது பழிவாங்கும் உணர்ச்சி"
என்னுடன் வந்தவர் பொறுமை யற்றுத் திருப்பிச் சொன்னார்,
"பிறகு நீங்க என்ன செய்வீங்களாம்? ஓர் ஆண் தனது கடமையைச் செய்தே ஆக வேண்டும்."
***
Posted by புகழேந்தி at 10:05 PM Email Post

Professor k. kumar

unread,
Nov 19, 2014, 3:56:34 AM11/19/14
to brail...@googlegroups.com
Революционер : புரட்சியாளன்
artsy
மூலம் : மிக்ஹில் பெட்ரோவிச் ஆர்த்சிபஷேவ்
தமிழில்: மா. புகழேந்தி
1
கேப்ரியல் ஆண்டர்சன், ஆசிரியர், பள்ளித் தோட்டத்தின் எல்லை வரை நடந்து வந்தவர் அதன் பிறகு
என்ன செய்வது என்று தெரியாமல் நின்று கொண்டு இருந்தார். சற்று தூரத்தில், இரண்டு
மைல்களுக்கு அப்பால், பனி நிறைந்திருந்த காட்டில் மரங்கள் நீல நிறமாகத தென்பட்டன. அது
ஒளிமிகுந்த நாளாக இருந்தது. தோட்டத்து வேலிகளில் உள்ள இரும்புப் பட்டைகளில் வெண்மையான
ஒளி பட்டு ஒளிர்ந்து கொண்டு இருந்தது. வசந்த காலத்தின் ஆரம்பத்தினை சொல்வது போல வானம்
தூய்மையாகவும் சுடராகவும் தெரிந்தது. கேப்ரியல் ஆண்டர்சன் காட்டுக்குள் நடக்கத்
திரும்பினார். ஆழமாக மூச்சினை இழுத்து விட்டுக்கொண்டு தனது மூக்குக் கண்ணாடி வழியே
பார்த்துக் கொண்டு சொன்னார், "என் வாழ்வில் இன்னொரு வசந்த காலம்." அவர் உணர்ச்சிமிகுந்த
கவிதைகளை எழுதுவார். பின்னால் கைகளைக் கோர்த்துக் கொண்டு கைத்தடியைச் சுழற்றிக் கொண்டு
மெல்ல நடந்தார்.
சில அடிகள் அவர் நடந்திருந்த போது, தோட்டத்துக்கு வெளியே சில படை வீரர்கள் குதிரைகளில்
வந்து கொண்டு இருந்ததைக் கவனித்தார். அவர்களது பழுப்பு மஞ்சள் சீருடைகள் பனியின்
பின்புலத்தில் எடுப்பாக இல்லாமல் இருந்தது, ஆனால் அவர்களது வாள்களும் குதிரைகளின்
சேணங்களும் சுடராக எதிரொளித்துக் கொண்டு இருந்தது. பனி படர்ந்த தரையின் மேல் அவர்கள்
ஒழுங்கற்று நடந்து போனார்கள். ஆண்டர்சன் இவர்கள் இங்கு என்ன செய்கிறார்கள் என்று ஆச்சரியப்
பட்டார். அவர்கள் எதற்கு வந்தார்கள் என்று திடீரென புரிந்துகொண்டார். வெறுக்கத் தக்க வேலை
ஒன்றுக்காக அவர்கள் அங்கு வந்துள்ளார்கள் என்று அவரது உள்ளுணர்வு சொல்லியது. அசாதாரணமான
பயங்கரமான ஒன்று அங்கு நடக்கப் போகிறது. அதே உள்ளுணர்வு அவரை படை வீரர்களின் கண்களில்
படாமல் ஒளிந்து கொள்ளச் சொல்லியது. விரைவாக இடது புறம் திரும்பினார், மண்டியிட்டு,
ஊர்ந்து பனியில் வைக்கோல் போருக்குள் முன்னேறினார், பனி உருகி நீரானது, பின்னால்
திரும்பி படை வீரர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்தார்.
அவர்கள் பன்னிரண்டு பேர், அதில் ஒரு தடித்த இளம் அலுவலர், அவர்களது தலைவன் தனது உடையை
அழகான வெள்ளி பெல்டால் இறுக்கிக் கட்டி இருந்தான். அவனது முகம் சிவந்து இருந்தது,
அவனது வித்தியாசமான நிறம் கொண்ட முகத்தில் முளைத்திருந்த மீசையும் புருவ முடியும்
தூரத்திலிருந்து ஆண்டர்சனால் கவனிக்க முடிந்தது,
அவனது முரட்டுக் குரல் ஒளிந்து கவனித்துக் கொண்டு இருந்த ஆண்டர்சனுக்கு தெளிவாகக் கேட்டது,
"நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத்தெரியும். யாரும் எனக்கு ஆலோசனை சொல்லத் தேவை
இல்லை." அவன் கத்தினான். இடுப்பில் கை வைத்து நின்று கொண்டு கூட்டத்திலிருந்த ஒருவனைப்
பார்த்துச் சொன்னான், "எப்படிப் புரட்சி செய்ய வேண்டும் என்று நான் உனக்குக் காட்டுகிறேன்"
என்றான்.
ஆண்டர்சனின் இதயம் வேகமாக அடித்துக் கொண்டது. "ஐயோ இது நடக்குமா?" அவரது தலை குளிர்
அலையால் தாக்கப் பட்டது போல குளிர ஆரம்பித்தது.
"அய்யா " ஒரு வீரனின் குரல் மென்மையாகக் கேட்டது, "உங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை.
நீதிமன்றம் தான் முடிவுசெய்ய வேண்டும். அவர்கள் தான் தண்டனை அளிக்க வேண்டும். விசாரணை
இல்லாமல் தண்டிப்பது கொலைக்குச் சமம். "
"மூடு வாயை" ஆத்திரத்தில் வெடித்தான். " நான் உனக்குக் காட்டுகிறேன் நீதி
மன்றத்தை.இவானோவ் சொன்னதைச் செய்! "
காலால் தனது குதிரையை உதைத்து ஓட்டிச்சென்றான். குதிரை எதோ நடனத்துக்கு தயாராவதைப்
போல எப்படி கவனமுடன் எட்டு வைத்தது என்று ஆண்டர்சன் இயந்திரத்தனமாகக் கவனித்தார்.ஒவ்வொரு
சத்தத்தையும் அதன் காதுகள் உள்வாங்கின. இப்போது படை வீரர்கள் ஆர்வமுடன் நகர ஆரம்பித்தனர்,
அவர்கள் நகரும் போது சரசர வென்று ஒலி கிளம்பியது. மூன்று பேரைத் தனியாக விட்டு
விட்டு அவர்கள் வெவ்வேறு திசைகளில் நகர்ந்தார்கள். . இரண்டு உயரமான ஆட்கள், மற்றும் ஒரு
சிறுவன். சிறுவனது புடைத்திருந்த இளஞ்சிவப்புக் காதுகளை ஆண்டர்சன் கவனித்தார்
அவருக்கு இப்போது என்ன நடக்கப் போகும் என்று முழுமையாக விளங்கியது . இது
அசாதாரணமானது, கொடுமையானது, எதோ கற்பனையில் நடக்கப் போவதாக நினைத்துக் கொண்டார்.
"இங்கே ஒளிமயமாக இருக்கிறது, அழகாக இருக்கிறது, -- பனி, வயல்கள், காடுகள் மற்றும்
வானம். வசந்தத்தின் மணம் எல்லா இடத்திலும் படர்ந்து இருக்கிறது. இருந்தாலும் மக்கள் கொல்லப்
படப்போகிறார்கள். எப்படி நடக்கும் இது? இருக்காது!". அவரது மனம் குழம்பியது. எதைப்
பார்க்கவே கூடாதோ, எதைக் கேட்கவே கூடாதோ எதை உணரவே கூடாதோ அவற்றை எல்லாம் பார்க்க
நேர்ந்ததால் திடீரென பைத்தியம் பிடித்தவர் போல ஆனார்.
மூன்று பேரும் கருப்பு உடையில் அருகருகே இருந்தார்கள், இருவர் மிக
அருகிலும் சிறுவன் சற்று விலகியும் இருந்தார்கள்.
"அய்யா " ஒருவன் பரிதாப மான குரலில் சொன்னான், ஆண்டர்சனால் யார் சொன்னது என்று அறிய
முடியவில்லை- "கடவுள் எங்களைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்!"
எட்டு வீரர்கள் குதிரையிலிருந்து இறங்கினார்கள். அவர்களது துப்பாக்கிகளை அச்சமூட்டும்
அளவுக்கு நீட்டிக்கொண்டு நின்றார்கள். அவர்களது அவசரம் எதோ திருட்டு வேலை செய்யப் போவது
போல் இருந்தது.
சற்று நேரம் அமைதியாகக் கழிந்தது. வீரர்கள் கருப்பு உருவங்களுக்கு சில அடிகள் முன்
வரிசையாக தங்களது துப்பாக்கிகளை நீட்டியபடி நின்றார்கள்.
அப்படிச் செய்யும் போது ஒரு வீரன் தனது தொப்பியைத் தவற விட்டான். உடனே கீழே விழுந்த
தொப்பியை அவசரமாக எடுத்து ஒட்டிக் கொண்டு இருந்த பனியைத் தட்டிக்கூட விடாமல் தலையில்
வைத்துக் கொண்டான்.
தலைவன் குதிரை ஒரே இடத்தில் அசைந்தவாறு நின்று கொண்டு இருந்தது, மற்றவர்களின்
குதிரைகளும் எந்த ஓசையையும் தவறவிடாமல் காதுகளைத் தீட்டிக் கொண்டு கவனித்தவாறு
தலைகளைச் சற்றே சாய்த்து கருப்பு உருவங்களைப் பார்த்துக்கொண்டு இருந்தது.
"சிறுவனையாவது விட்டு விடுங்கள். " காற்றைக் கிழித்துக் கொண்டு ஒரு குரல் வந்தது. "ஏன்
ஒரு குழந்தையைக் கொல்கிறீர்கள் ? அவன் என்ன பாவம் செய்தான்?"
"இவானோவ், என்ன சொன்னேனோ அதைச் செய்!" தலைவன் வெடித்தான் .
அவனது சத்தம் இன்னொருவனின் குரலை கேட்காமல் செய்தது. அவன் முகம் சிவப்பேறி இருந்தது.
அதன் பின்னர் காட்டு மிராண்டித் தனமான கொடூரமான காட்சி அரங்கேறியது. சிறிய கருப்பு
உருவம், அளவான தலைமுடியுடனும் சிவப்புக் காதுகளுடனும் இருந்தது , குழந்தைக் குரலில்
அலறியபடி ஒரு பக்கம் சாய்ந்து விழுந்தது. இரண்டு மூன்று வீரர்களால் அது பிடிக்கப்
பட்டது. ஆனால் அந்தச் சிறுவன் போராடினான், மேலும் இரண்டு வீரர்கள் பிடிப்பதற்குப் போனார்கள்.
"ஐயோ என்னைப் போக விடுங்கள். ஐயோ என்னைப் போக விடுங்கள். " சிறுவன் கதறினான்.
அவன் இட்ட ஓலம் பலியிடப்படும் பன்றியின் அலறலைப் போல கொடுமையாக இருந்தது. திடீரென அவன்
அமைதியானான். யாரோ அவனை அடித்து இருக்க வேண்டும். எதிர்பாராத வேண்டாத ஒடுக்கப்பட்ட
அமைதி நிலவியது. சிறுவன் முன்னே நெட்டித் தள்ளப்பட்டான். மூன்று செவிடாக்கும் ஓசைகள்
கேட்டது. ஆண்டர்சன் அதிர்ச்சியுடன் பின் வாங்கினார். கனவு காண்பதைப் போல அவர் கண்டார்,
இரண்டு கருப்பு உடல்கள் விழுந்தது, சுத்தமான அந்த இடத்தில் வெடியினால் உண்டான ஒளிகளும்
புகையும் கண்டார். அவர் பார்த்தார், வீரர்கள் அவசரமாக குதிரையின் மேலேறிப் புறப்பட்டார்கள்,
கீழே கிடக்கும் உடல்களைப் பார்க்கக் கூட இல்லை அவர்கள். சேறு படிந்திருந்த அந்தச் சாலையில்
குதிரைகளின் சேணங்களும் வீரர்களின் ஆயுதங்களும் உராய்ந்து ஒலி எழுப்பியபடி போவதையும்
பார்த்தார்.
அவர் அனைத்தையும் நேரில் பார்த்தார். இப்போது சாலையின் நடுவில் நின்று கொண்டு இருந்தார்,
எப்போது வைக்கோல் போருக்குள் இருந்து வெளியே வந்தார் என்று தெரிய வில்லை. அவர்
பேயறைந்ததைப் போல நின்று கொண்டு இருந்தார். அவருக்கு வேர்த்துக் கொட்டியது, உடல்
நடுங்கிக் கொண்டு இருந்தது. சோகம் அவரை வாட்டியது, அசதியாகத் இருந்தது. அவரால் அந்த
உணர்வைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதீத நோயால் அவதிப்படுவதைப் போல உணர்ந்தார், தலை
சுற்றியது, மயக்கம் வருவதைப் போல இருந்தது.
வீரர்கள் காடுகளுக்குள் மறைந்த பின் துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தை நோக்கி மக்கள் வந்தனர்,
அது வரை அங்கு யாரும் இருக்கவில்லை. உடல்கள் பனி படர்ந்திருந்த சுத்தமான வெளிச்சம்
மிகுந்திருந்த சாலையின் அந்த ஓரத்தில் கிடந்தன. அங்கு மூன்று உடல்கள் இரண்டு ஆட்கள் மற்றும்
ஒரு சிறுவன், பிணங்களாக. சிறுவனது கழுத்து பனியில் நீண்டு இழுபட்டுக் கிடந்தது.
பையனுக்கு அருகில் கிடந்த ஒருவனது முகம் பார்வைக்குத் தெரியாமல் கிடந்தது. அவனது
முகம் ரத்த வெள்ளத்தில் புதைந்து தரையை நோக்கி இருந்தது, மூன்றாவது ஆள்
திடகாத்திரமாகவும் தாடி யுடனும் பெரியதாகவும் கிடந்தான். ரத்தம் சிதறிய பனியின் மேல்
கைகளை நீட்டிக் கொண்டு கிடந்தான்.
வெண் பனியின் மேல் சுடப்பட்டுக் கிடந்தவர்களது உடல்கள் அசைவற்று இருந்தது. மக்கள் அங்கு
குழுமியிருந்தார்கள். யாருக்கும் என்ன நடந்தது என்று சொல்லத் தேவை இல்லை.
அன்று இரவு கேப்ரியல் ஆண்டர்சன் வழக்கம் போல் கவிதை எழுத வில்லை. ஜன்னலுக்கு அருகில்
நின்று பனி மூட்டமுள்ள வானத்தின் வழியே தட்டு போலத் தெரிந்த நிலவைப் பார்த்து யோசனை
செய்து கொண்டு இருந்தார். சிந்தனைகள் குழம்பின, மண்டை கனக்க ஆரம்பித்தது, எதோ அவரது
மூளையில் மேகம் கவிழ்ந்ததைப் போல எண்ணினார். நிலவின் குறைந்த வெளிச்சத்தில் தோட்டத்தைக்
கவனித்தார்.வேலிகள், மரங்கள், வெறுமையான தோட்டம். மூன்றுபேரையும், இரு ஆட்கள் மற்றும்
ஒரு சிறுவன், அவர் பார்ப்பதாக நினைத்தார். அவர்கள் இன்னும் அந்த சாலையோரத்தில், அமைதியான
வெற்று வயலுக்கு அருகில், தூரத்தில் இருக்கும் குளிர்ந்த நிலவைத் தங்களது இறந்து போன
கண்களால், எப்படி - தான் தனது கண்களால் பார்க்கிறாரோ அப்படிப் பார்த்துக் கொண்டி
இருக்கிறார்கள்.
"காலம் ஒருநாள் வரும் " அவர் நினைத்தார், "மக்களை மக்களே கொல்வது நடக்காமல் போகும்.
காலம் ஒருநாள் வரும். இந்த வீரர்களும் அவர்களது தலைவனும் என்ன செய்தோம் என்று உணர்வார்கள்,
என்ன காரணத்துக்காக இவர்களைக் கொன்றோம் என்றும் யாருக்காக யாருடைய தேவைக்காக இவர்களைக்
கொன்றோம் என்றும் புரிந்து கொள்வார்கள் " என்றும் சிந்தித்தார்.
"ஆம்" அவர் சத்தமாகவும் உறுதியாகவும் சொன்னார். "காலம் ஒருநாள் வரும். அவர்கள் புரிந்து
கொள்வார்கள்". தட்டு போல் இருந்த நிலவு அவரது கண்ணீரால் அவரது பார்வைக்கு மறைந்து போனது.
மிகப் பெரிய சோகம் அவரது மனதை அடைத்துக் கொண்டது. மூன்று பேர்களது கண்ணும் நிலவை
வெற்றுப் பார்வை பார்க்கிறதே, எண்ணினார். எதோ ஒரு வெறி கத்தி போல் அவரது சிந்தனையை
கிழித்துக் கொண்டு அவரை ஆட்கொண்டது. .
ஆனால் அவர் தனது மனதை சமாதானப் படுத்திக் கொண்டார். "அவர்கள் என்ன செய்கிறோம் என்று
அறிந்து இருக்க வில்லை" இந்த வரிகள் அவரது ஆத்திரத்தையும் ஆற்றாமையையும் சற்றே அமைதிப்
படுத்த வலிமையைக் கொடுத்தது. .
2
அந்த நாள் வெளிச்ச மாகவும், வெண்மையாகவும் இருந்தது, வசந்த காலம் ஏற்கனவே பாதிமுடிந்து
இருந்தது. ஈர மண் வசந்தத்தின் வாசம் கொண்டிருந்தது. தூய குளிர்ந்த நீர் பனிஉருகி
எங்கெங்கும் ஓடிக்கொண்டு இருந்தது.மரங்களின் அனைத்துக் கிளைகளிலும் வசந்தத்தின் சாரல்
தெரிந்தது. நெடுந்தூரத்துக்கு வானத்தின் நீல நிறம் அப்பழுக்கில்லாமல் நாடு முழுக்கத்
தெரிந்தது.
இருந்தாலும் வசந்தத்தின் மகிழ்ச்சி கிராமத்தில் இல்லை. அது வேறெங்கோ இருந்தது, மக்கள்
இல்லாத இடத்தில்--வயல்களில் காடுகளில், மலைகளில். கிராமத்தில் காற்று வெம்மையாகவும்,
கெட்டகனாக்களில் வருவதைப் போல வேகமாகவும் ஊளையிட்டும் வீசிக்கொண்டு இருந்தது.
கேப்ரியல் ஆண்டர்சன், ஞாபக மறதி கொண்ட மக்களுக்கு நடுவே சாலையில் நின்று கழுத்தை நீட்டி
கசையடி படக் காத்து இருந்த அந்த ஏழு விவசாயிகளைப் பார்த்தார்.
எல்லோரும் உருகும் பனுயின் மேல் நின்று கொண்டு கவனித்துக் கொண்டு இருந்தார்கள், இவர்களை
அவர் நீண்ட நாட்களாக அறிவார் புரிந்திருக்கிறார். அதனாலேயே அவரால் தன்னை சமாதானப்
படுத்திக்கொள்ள முடியவில்லை. அது அவர்களுக்கு நடக்க இருக்கிறது, வெட்கப்படக்கூடிய
கொடூரமான மறக்கவே முடியாத கொடுமை நடக்க இருக்கிறது, அவர்கள் உலகின்
மற்றவர்களிடமிருந்து பிரிந்து இருந்தார்கள், தன்னால் என்ன உணரப்படுகிறது என்று
மற்றவர்களால் அறியப்படாமலும், மற்றவர்களால் என்ன உணரப்படுகிறது என்று தன்னால் அறியப்
படாமலும் ஆண்டர்சன் நின்று கொண்டு இருந்தார். அவர்களைச் சுற்றி படையினர் நின்று கொண்டு
இருந்தார்கள், அவர்கள் கம்பீரமாகவும் நேர்த்தியாகவும் குதிரைகளின் மேல் அமர்ந்து
இருந்தார்கள், குதிரைகள் தங்களது தலைகளை மெல்ல ஒருபக்கத்திலிருந்து மறு பக்கத்துக்கு
அசைத்துக் கொண்டு நின்றன. நடக்கப் போகும் கொடுஞ்செயலை காணப் போகும் கேப்ரியல் ஆண்டர்சன்
செய்வதறியாது எதுவும் செய்ய முடியாமல் திகைத்து நின்றார். நடக்கப் போகும் மன்னிக்கவே
முடியாத கொடுமையை எண்ணி வருந்தினார், அவமானம் அவரை வாட்டியது , எதோ இரண்டு பனிப்
பாறைகளுக்குள் சிக்குண்டது போல குளிரில் நடுங்கினார்,
அங்கிருந்து நகர முடியாமல், நடப்பவற்றை எல்லாம் பார்த்தார். ஒரு துளி சத்தம கூட அவரால்
எழுப்ப முடியவில்லை.
அவர்கள் முதல் விவசாயியை இழுத்துக் கொண்டு போனார்கள். அவனது நம்பிக்கை இழந்த அந்நியமான
பார்வையை அண்டர்சன் கவனித்தார். அவனது உதடுகள் துடித்தன, ஓசை வரவில்லை, கண்கள்
அலைபாய்ந்து எதையோ தேடியது. பைத்தியக் காரனது கண்களைப் போல கண்கள் ஒளிர்ந்து கொண்டு
மின்னின. அவரது மனம் அதற்கும் மேலும் என்ன நடக்கும் என்பதை அறிந்து கொள்ள விரும்பவில்லை.
ஒரு முறை தெளிவாகவும் மறுமுறை குழப்பமாகவும், கொடூரமாகவும் அவன் முகம் தெரிந்தது,
அவனைக் குப்புறத் தள்ளினார்கள், அவனது முகம் பனியில் புதைந்தது அவனது அச்சமடைந்த
கண்களுக்கு பதில் இப்போது அவனது பின்புறத்தைத் தான் பார்க்க முடிந்தது, ஆண்டர்சன் சற்றே
நிம்மதி கொண்டார், ஆனால் அவனது உடையற்ற பின் புறத்தை -- வெட்கப்படவேண்டிய
வேதனைப்படவேண்டிய கொடூரமான கட்சியைப் பார்க்க வேண்டி வந்தது.
சிவப்புத் தொப்பியணிந்த தடித்த சிவப்பு முகம் கொண்ட படைவீரன் அவன் முன் வந்தான், கீழே
கிடப்பவனைப் பார்த்து சந்தோஷமாக தெளிவான குரலில் கூச்சலிட்டான், "கடவுள் அருளால் அவளைப்
போக விடுங்கள்"
ஆண்டர்சன் படைவீரர்களையோ , வானத்தையோ , குதிரைகளையோ, கூட்டத்தினரையோ பார்ப்பதைத்
தவிர்த்தார். இப்போது அவருக்கு குளிர் விட்டு இருந்தது, அச்சமோ வெட்கமோ இல்லாமல் போனது.
சவுக்கின் சுழற்றப் படும் ஓசையோ, வலியால்துடித்து கதறும் விவசாயியின் வேதனைக் குரலையோ
அவரால் கேட்க முடியவில்லை. சவுக்கால் அடிபட்டு பின்புறம் துணி இல்லாமல் கிடந்த அவனது
உடலில் ஏற்பட்டு இருந்த காயங்களையும் கரு நீல நிறத்தில் தடித்து வீங்கியிருந்த
தழும்புகளையும் பார்த்தார். காயங்களில் இருந்து ரத்தம் சொட்டுச் சொட்டாக வழிந்து ஓடி
பனியினை உருக்கிக் கொண்டு இருந்தது. அச்சம் ஆண்டர்சனின் மனத்தைக் கவ்வியது, விழுந்து
காயம் பட்டு ரத்த வெள்ளத்திலிருக்கும் இந்த மனிதன் எழுந்து தனது உடையற்ற உடலைப் பார்த்த
இந்த மக்களை எந்த முகத்தைக் கொண்டு எதிர்கொள்வான் என்று சிந்தித்தார். கண்களை
மூடிக்கொண்டார். அவர் மீண்டும் கண்களைத் திறந்த போது நான்கு படைவீரர்கள் இன்னொரு விவசாயியை
கீழே குப்புறத் தள்ளி அவனது உடையை உருவிக் கொண்டு இருந்தனர். அதே போன்ற கொடுமையான
வெட்கப் படவேண்டிய நாகரீகமற்ற காட்டுமிராண்டித் தனமான காட்சி.
அப்புறம் மூன்றாவது ஆள், பிறகு நான்காவது ஆள், அப்படியே கடைசி ஆள் வரை போனது.
ஆண்டர்சன் உருகும் பனியில் நடுங்கியபடி கழுத்தை நீட்டியபடி எந்த ஒரு வார்த்தையையும் பேச
முடியாமல் நின்று கொண்டிருந்தார். அவரது உடல் முழுக்க வேர்வை ஊற்றெடுத்தது. வெட்க
உணர்வு அவரை முழுதாக ஆக்கிரமித்தது. வெளியேறினால் தான் கவனிக்கப் பட்டு துகில்
உரியப்பட்டு சவுக்கால் அடிகொடுக்கப்பட்டு விடுவேனோ என்ற அச்சத்தில் உருகும் பனியுள்
நின்றிருந்தார், அந்த உணர்வு அவரைக் கொடுமைப் படுத்தியது.
வீரர்கள் சவுக்கைச் சுழற்றி விளாசினார்கள், குதிரைகள் தலையைச் சுண்டிக்கொண்டன, உடையற்ற
உடல்களின் மேல் அடிகள் விழுந்து தசைகள் கிழிக்கப் பட்டு ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது,
அடிபட்டவர்கள் பாம்பினைப் போல சுருண்டு கிடந்தார்கள்.
அந்த வசந்த கால நாளில் தூய காற்றின் நடுவே அந்த கிராமத்தில் உறுதிமொழி மழையாகக்
கொட்டியது
ஆண்டர்சன் இப்போது நகரமன்றப் படிக்கட்டுகளில் நின்று இருந்த ஐந்து வீரர்களைக் கவனித்தார்,
அவர்கள் வெட்கப்பட வேண்டிய கொடுஞ்செயல் புரிந்தவர்கள், அவர் அறிந்து கொண்டார். அவர்
விரைவாகக் கண்களைத் திருப்பிக் கொண்டார். அவர்களைப் பார்த்த பிறகு முடிவு செய்தார் இவர்கள்
சாக வேண்டும்.
3
அங்கே பதினேழு பேர் இருந்தார்கள், பதினைந்து வீரர்கள், ஒரு துணைத் தலைவன், அப்புறம்
தாடியில்லாத உயர் அலுவலர். நெருப்பின் முன் அமர்ந்து அலுவலர் தீக்காய்ந்து கொண்டு
இருந்தார். வீரர்கள் வண்டியிலிருந்து ஆயுதங்களை சோதித்துக் கொண்டு இருந்தனர்.
அவர்களது உருவங்கள் தரையில் அங்குமிங்கும் ஓசையின்றி நகர்ந்து கொண்டு இருந்தது. எரிந்து
கொண்டு இருந்த கட்டைகள் எப்போதாவது வெடித்துக் கொண்டு இருந்தன. கேப்ரியல் ஆண்டர்சன்,
ஓவர்கோட் அணிந்து இருந்தார், கையில் கைத்தடியை பின்னால் வைத்துக் கொண்டு அவர்களிடம் நடந்து
சென்றார். மீசை கொண்ட தடித்த துணைத் தலைவன், நெருப்பின் பக்கமிருந்து திரும்பிக் குதித்து
முன்னால் வந்து அவரைப் பார்த்தான்.
"யார் நீ? என்ன வேணும்?" கேட்டான். இந்த மாவட்டத்தில் உள்ள மக்களைக் கண்டு வீரர்கள் அச்சம்
கொண்டுள்ளது அவனது குரலில் தெரிந்த பரபரப்பிலிருந்து அறிய முடிந்தது, ஏனெனில் அவர்கள்
செய்த கொடுமைகளும் கொலைகளும் அழிவுவேலைகளும் அவ்வாறு அச்சப் படவைத்தன.
"அய்யா இங்கே ஒருத்தன் எனக்குத் தெரியாதவன் வந்திருக்கிறான்" சொன்னான்.
தலைமை அலுவலர் பேசாமல் ஆண்டர்சனைப் பார்த்தார்.
"அய்யா" ஆண்டர்சன் மெல்லிய குரலில் சொன்னார், "என் பெயர் மிக்கெல்சன், நான் வணிக வேலையாக
கிராமத்துக்குப் போகிறேன், நான் பயந்து போய் இருக்கிறேன் உங்களுக்கு தெரியும் என்னை
தவறாக புரிந்து கொள்ளக் கூடாது. "
"பின்ன எதுக்கு இங்க வந்து மோப்பம் பிடிச்சிட்டு இருக்கிறாய்?" கோபமாகச் சொல்லி விட்டு
தலைமை அலுவலர் திரும்பிக் கொண்டார்.
"வணிகனா இவன், இவனை சோதனை போடணும்,எதுக்கு ராத்திரியில வந்து இங்க தட்டிகிட்டு
இருக்கிறாய்?, தாடையில ஒன்னு கொடுத்தா சரியாக இருக்கும்" ஒரு வீரன் சொன்னான்.
"இவன் மேல எனக்கு சந்தேகமா இருக்கு. இவனை கைது செய்யலாமா? அய்யா?" துணைத்தலைவன்
கேட்டான்.
"வேண்டாம்" தலைமை அலுவலர் சோம்பல் முறித்தவாறு சொன்னார், "சலிப்பாக இருக்கிறது"
ஆண்டர்சன் அமைதியாகப் பார்த்துக் கொண்டு இருந்தார். இருட்டில் அவரது கண்கள் நெருப்பின்
வெளிச்சத்தில் ஒளிர்ந்து கொண்டு இருந்தது. இருளில் வீரர்களுக்கு நடுவில் அவரது குள்ள
உருவத்தை ஓவர்கோட் உடனும் கைத்தடி உடனும் மின்னிக் கொண்டு இருக்கும் கண்ணாடியுடனும்
பார்க்க வித்தியாசமாக இருந்தது.
வீரர்கள் அவரை விட்டு நகர்ந்தனர். ஆண்டர்சன் சிறுது நேரம் அங்கேயே நின்று கொண்டு இருந்தார்.
பிறகு அங்கிருந்து அவசரமாக வெளியேறி இருளில் மறைந்தார்.
இரவு முடிவுக்கு வந்து கொண்டு இருந்தது. காற்று கடுமையாக குளிரத்தொடங்கியது,
புதர்கள் இருளில் தங்களது வடிவத்தை முழுமையாக வெளிப்படுத்திக் கொண்டு இருந்தன. ஆண்டர்சன்
மீண்டும் ராணுவ சாவடிக்குப் போனார். இம்முறை மறைந்து கொண்டார். புதர்களில் மறைந்து கொண்டு
ஊர்ந்து நகர்ந்தார். அவருக்குப் பின் சிலர் புதர்களுக்குள் எச்சரிக்கையாகவும் அமைதியாகவும்
நிழல்களைப் போல நகர்ந்தார்கள். ஆண்டர்சனுக்கு வலப்புறத்தில் உயரமான ஒருவன் கைகளில்
ரிவால்வருடன் வந்து கொண்டு இருந்தான்.
குன்றின் மேல் ஒரு படை வீரனின் உருவம் தெரிந்தது, அவர்கள் எதிர்பார்க்காத நேரத்தில்
எதிர்பார்க்காத இடத்தில் நின்றிருந்தான். அணைந்து கொண்டிருக்கும் நெருப்பின் மங்கிய
வெளிச்சத்தில் அவன் இருப்பது தெரிந்து கொண்டிருந்தது. கேப்ரியல் ஆண்டர்சன்னால் அவனை
அடையாளம் காண முடிந்தது, அவன் தான் அவரைச் சோதனை போடவேண்டும் என்று சொன்னவன். அவருடைய
இதயம் கருணை காட்டவில்லை. தூங்குபவனைப் போல அவரது முகம் சலனமற்றும் குளிர்ச்சியாகவும்
இருந்தது. நெருப்பினைச் சுற்றி வீரர்கள் நீட்டிப் படுத்து இருந்தனர், துணைத் தலைவனைத்
தவிர, அவன் தனது தலையை முழங்காலின் மேல் சாய்த்து வைத்துக் கொண்டு இருந்தான் .
ஆண்டர்சனின் வலது புறம் வந்து கொண்டிருந்த உயரமானவன் தனது துப்பாக்கியின் விசையை
இழுத்தான். அடுத்த நொடி கண்கூசும் வெளிச்சத் துடனும் காதைச் செவிடாக்கும் ஒலியுடனும்
துப்பாக்கி வெடித்தது. ஆண்டர்சன் பார்த்தார் காவல் காத்துக் கொண்டு இருந்தவன் கையைத் தூக்கி
பிறகு நெஞ்சைப் பிடித்தபடி தரையில் உட்கார்ந்தான். அனைத்துத் திக்குகளில் இருந்தும்
வெளிச்சத் துடன் வெடிச் சத்தங்கள் பேரிரைச்சலாய்க் கிளம்பியது. துணைத் தலைவன் குதித்து
எழுந்து நேரே நெருப்பில் விழுந்தான். வீரர்களின் உருவங்கள் எல்லாத் திக்குகளிலும்
குழப்பத்துடன் கைகளைக் கண்டபடி அசைத்துக் கொண்டு கருநிற நிலத்தில் திருகிக் கொண்டு
விழுந்தன . இளம் படைத்தலைவன் பயந்த பறவையைப் போல கைகளை அடித்தபடி ஆண்டர்சன் அருகில்
ஓடி வந்தான்,
ஆண்டர்சன் என்ன நினைத்தாரோ தனது கைத்தடியைத் தூக்கினார். தனது அனைத்து பலத்தையும்
திரட்டி படைத்தலைவனின் தலையில் ஓங்கி அடித்தார். ஒவ்வொரு தடவையும் அறுவறுக்கும்
ஒலியுடன் அடி விழுந்தது. இரண்டாவது அடி விழுந்த போது படைத்தலைவன் சுருண்டு புதரில்
இடித்துக் கொண்டு உட்கார்ந்தான், குழந்தைகளைப் போல தனது கைகளால் மண்டையை மறைக்கப்
பார்த்தான் . ஆண்டர்சனிடம் இருந்து எடுக்கப் படுவதைப் போல ஒருவன் ஓடிச் சென்று அவனது
கைத்துப்பாக்கியைப் பிடுங்கினான். படைத்தலைவன் தலைகுப்புறக் கவிழ்ந்து நிலத்தில்
விழுந்தான். அவனது கால்கள் துடித்த பின்பு அமைதியாகச் மடித்துக் கொண்டது.
வெடிச் சத்தங்கள் நின்றது. இருளுள் கருப்பு உடையணிந்து வெண்முகம் கொண்ட மனிதர்கள் இறந்து
கிடக்கும் படை வீரர்களது ஆயுதங்களையும் வெடி மருந்துகளையும் கைப்பற்றினர். இவை
அனைத்தையும் ஆண்டர்சன் இமைக்காமல்ப் பார்த்துக் கொண்டு இருந்தார். இதெல்லாம் ஓய்ந்த பிறகு அவர்
நெருப்பின் அருகில் சென்று தீயில் கிடக்கும் துணைத் தலைவனின் உடலைக் கால்களைப் பற்றி
இழுத்தார். அது இழுக்க முடியாமல் கனமாக இருந்ததால் அப்படியே விட்டு விட்டு வந்தார்.
4
நகர மன்றத்தின் படிகளில் அமைதியாக ஆண்டர்சன் அமர்ந்திருந்தார். அவர் நினைத்துக் கொண்டார்,
எப்படி நான் இந்த ஆண்டர்சன் , மூக்குக் கண்ணாடிபோட்டுக் கொண்டு கைத்தடி வைத்துக்கொண்டு
ஓவர்கோட் அணிந்து கவிதைகள் எழுதுபவன் பொய் சொல்லிப் பதினைந்து பேரை ஏமாற்றினேன்.
கொடுமையாக இருந்தது இருப்பினும் பரிதாபப் படமுடியவில்லை, வெட்கப் படவோ, இதயத்தில்
வேதனையோ இல்லை. அவர் எங்கு அமைதி காண முடியும், அவருக்குத் தெரியும் வழக்கம் போல்
தன்னால் தனது கண்ணாடியுடனும் கவிதைகளுடனும் மீண்டும் நேரே இணைய முடியும் என்று. தனது
மனதுக்குள் என்ன நடக்கிறது என்று எடை போட்டார். அவரது மனம் கனத்து குழப்பமுற்று
இருந்தது. என்ன காரணத்தாலோ தூரத்தில் காய்ந்து கொண்டிருந்த நிலவை நோக்கியபடி திறந்து
கிடந்த கண்களுடன் பனியில் கிடந்த மூன்று பேரின் உடல்களை நினைக்கும் போது தன்னால்
கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட படைத் தலைவனைப் பற்றி நினைப் பதைவிட அவருக்கு மிகவும்
வலித்தது. அவர் தன்னுடைய சாவைப்பற்றி பொருட்படுத்த வில்லை. நீண்ட நாள் முன்பே செத்து
விட்டதாகக் கருதினார். வெறுமையாக உணர்ந்தார். இதைப் பற்றி எல்லாம் சிந்திக்க வேண்டாம்
என்று நினைத்தார்.
அவர்கள் அவரது தோளைப் பற்றிய போது மெல்ல எழுந்தார். முட்டைக் கோசுகள் எட்டிப் பார்த்துக்
கொண்டிருக்கும் காய்கறித் தோட்டத்தின் வழியே விரைவாக இழுத்துச் சென்றனர். அவரால்
நிலையாகச் சிந்திக்க முடியவில்லை. சாலைக்குக் கொண்டு செல்லப் பட்டு சாலையோரத்தில் இருந்த
இரும்புக் கம்பத்தில் நிறுத்தப் பட்டார்.
கண்ணாடியைச் சரி செய்து கொண்டார். கைகளைப் பின்னால் கட்டிக் கொண்டார், பருத்த உடலை நேராக
நிறுத்திக் கொண்டார், தலையைச் சற்றே சாய்த்து நின்றார். கடைசித்தடவையாக தன் முன்னால்
நடப்பவற்றைக் கவனித்தார். உதடுகள் துடிக்க வெளுத்த முகங்களுடனும் படை வீரர்கள் தங்களது
துப்பாக்கிகளை அவரது தலை, மார்பு மற்றும் வயிறு ஆகியவற்றைக் குறிபார்த்துக் கொண்டு
இருப்பது தெரிந்தது. அவரது நெற்றியை நோக்கிக் கொண்டிருந்த ஒரு துப்பாக்கி முனை
சரிந்து கொண்டிருப்பதையும் தனியாக கவனித்தார் . இந்த மண்ணுக்குச் சம்பந்தமே இல்லாத , இந்த
உலகத்துக்குச் சம்பந்தமே இல்லாத விளக்க முடியாத எதோ ஒரு சிந்தனை அவர் மனத்தில் ஓடியது.
தனது குள்ள உருவத்தை நேராக நிமிர்த்திக் கொண்டார், பெருமையுடன் தனது தலையை
நிமிர்த்தினார். முன்னெப்போதும் இல்லாத உணர்வாக அவரது நெஞ்சில் தூய்மை, வலிமை பெருமை
ஆகியவை நிறைந்து குடி கொண்டது. கதிரவனும் வானமும் மக்களும் வயல்களும் பிறப்பும்
இறப்பும் அவருக்கு இப்போது ஒன்றுமே இல்லை என்று தோன்றியது.
தோட்டாக்கள் அவரது மார்பில் , இடது கண்ணில், வயிற்றில் , சீராக அணியப் பட்டிருந்த அவரது
கோட்டை எல்லாம் துளைத்துக் கொண்டு சென்றது, அணிந்திருந்த கண்ணாடி தூளாகச் சிதறியது.
அலறலுடன் சுழன்று இரும்பு கம்பத்தின் மேல் தலையை மோதி விழுந்தார். அவரது இன்னொரு கண்
அகன்று திறந்து இருந்தது. தரையைத் தன் விரிந்த கைகளால் நகங்களைக் கொண்டு கீறி
ஆதரவுக்காகப் பற்றி நிற்க முயற்சித்தார். படை அலுவலர் ஒருவன் அவர் அருகில் ஓடி வந்து
அவரது கழுத்தில் காரணமே இல்லாமல் இரண்டு முறை சுட்டான். ஆண்டர்சன் தரையில் நீண்டு கிடந்தார்.

படையினர் விரைந்து அகன்றனர். ஆண்டர்சன் தரையில் அப்படியே கிடந்தார். அவரது இடது கைச்
சுட்டு விரல் பத்து நொடிகள் தொடர்ந்து துடித்துக் கொண்டு இருந்தது.

**********

Professor k. kumar

unread,
Nov 19, 2014, 4:11:27 AM11/19/14
to brail...@googlegroups.com
Рассказ старшего садовника : தலைமைத் தோட்டக்காரர் சொன்ன கதை
anton4
மூலம் : அன்டன் செக்ஹோவ்
தமிழில் : மா. புகழேந்தி
மதிப்புக்குரிய நா-வின் தோட்டத்து சாலையில் பூ விற்பனை நடந்து கொண்டிருந்தது.
வாங்குவதற்கு மிகச்சிலரே வந்திருந்தனர் -- , என் பக்கத்து வீட்டு நிலச்சுவான்தார், ஒரு
இளம் மர வணிகன் அப்புறம் நான். வேலைக்காரர்கள் எங்களால் வாங்கப் பட்டவற்றை எல்லாம் கட்டி
வண்டியில் ஏற்றிக் கொண்டிருந்த போது நாங்கள் சாலையின் முகப்பருகே அமர்ந்து பல
தலைப்புகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். ஏப்ரல் மாத காலைவேளையில் தோட்டத்தில் அமர்ந்து
தூய காற்றில் பறவைகளின் சத்தங்களுக்கிடையே பூக்களை வாங்குவதை ரசிப்பது அளவிட முடியாத
மகிழ்ச்சியை அளிப்பதாக இருந்தது.
தலைமைத் தோட்டக்காரர், மிக்ஹில் கர்லோவித்ச், வயதானவர் மதிக்கப் பட வேண்டியவர், மழிக்கப்பட்ட
முகமும், விலங்குகளின் ரோமத்தால் செய்யப்பட மேலாடையும் அணிந்து, வாங்கப்பட்ட பொருட்கள்
ஏற்றப் படுவதை மேற்பார்வை பார்த்துக்கொண்டே ஏதாவது புதுத் தகவல் அறிந்து கொள்ளலாம் என்று
நாங்கள் பேசுவதையும் கவனித்துக் கொண்டு இருந்தார். அவர் புத்திசாலியாகவும், நல்ல மனம்
கொண்டவராகவும் இருந்தார், எல்லோராலும் மதிக்கப்பட்டார். என்ன காரணத்தாலோ சிலர்
ஜேர்மன்காரராகவே அவரைப் பார்த்தனர், இத்தனைக்கும் அவரது தந்தை ஸ்வீடன்காரர், தாய் ரஷ்யன் அவர்
ஆர்தோடக்ஸ் சர்ச்சுக்குச் செல்பவர். அவருக்கு ரஷ்யன், ஸ்வீடிஷ் மற்றும் ஜேர்மன் ஆகிய மொழிகள்
தெரியும். இந்த மொழிகளில் அவர் நிறையப் படித்திருக்கிறார். சொல்லப் போனால் அவருக்குப்
புத்தகங்கள் கடன் கொடுப்பதும் இலக்கியம் பற்றிப் பேசுவதும், எடுத்துக் காட்டாக -இப்செனைப்
பற்றிப் பேசுவதும் போல மகிழ்ச்சி தருவது வேறொன்றும் இல்லை.
அவரிடமும் குறைகள் இருந்தன, ஆனால் அவை அறியாமையால் தான், தன்னை தலைமைத் தோட்டக்காரர்
என்று அழைத்துக் கொண்டார், இருப்பினும் அவருக்குக் கீழே எந்தத் துணைத் தோட்டக்காரரும் இல்லை,
பேசும் போது அவரது முகம் அதிகப்படியான மரியாதையைக் காட்டும், தான் பேசும் போது
எதிர்க் கருத்து இருக்கக் கூடாது என்றும் கவனமுடனும் மரியாதையுடனும் அவை கேட்கப்
படவேண்டும் என்றும் நினைப்பார்.
"நான் உங்களுக்குச் சொல்வது என்னவென்றால் அந்த இளைஞன் ஒரு பரம அயோக்கியன்", என் பக்கத்து
வீட்டுக் காரர் தண்ணீர் பீப்பாயை எடுத்துச் செல்லும் கருப்பு முகம் கொண்ட ஒருவனைப் பார்த்துச்
சொன்னார். "போன வாரம் நகரத்தில் திருட்டுக் குற்றத்துக்காக விசாரணை செய்யப்பட்டு
விடுவிக்கப் பட்டான். எதோ அவன் மன நோயாளி என்று சொல்லித் தீர்ப்பு வாசித்தார்கள், ஆனால்
பாருங்கள் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறான் என்று. இப்பெல்லாம் ரஷ்யாவில் இது மாதிரி
நிறையத் தீர்ப்புகள் வருது, நிறையக் குற்றவாளிகள் விடுதலையாகிறார்கள், இதெல்லாம்
நல்லதுக்கு இல்லை. இப்படிச் செய்தால் மக்கள் நம்பிக்கை இழப்பார்கள், குற்றவாளிகள் தண்டிக்கப்
படாததால் தீர்ப்புகள் தவறாகின்றன. ஷேக்ஸ்பியரின் வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால்,
'கொடுமையும் குழப்பமும் மலிந்த இந்தக் காலத்தில் நாம் குற்றவாளிகளின் கருணையைத் தான்
வேண்ட வேண்டும்.' "
"ஆமாம்" , வணிகர் ஒத்துக் கொண்டார். "இதே போல அடிக்கடி குற்றவாளிகள் விடுவிக்கப்
படுவதால நாட்டில் கொலையும் கொள்ளையும் அதிகமாகீருச்சு. விவசாயிகளைக் கேட்டுப் பாருங்க!"
மிக்ஹில் கர்லோவித்ச் எங்களிடம் திரும்பிச் சொன்னார், "நண்பர்களே என்னைப் பொறுத்தவரை குற்றம்
செய்யவில்லை அப்படீன்னு விடுவிக்கப் பட்டவங்களை நான் சந்திக்க ஆசைப்படுகிறேன். நீதிக்கும்
நேர்மைக்கும் நான் பயப்படலை குற்றம் செய்யவில்லைன்னு ஒருத்தன் சொல்றபோது நான் மாறுதலுக்காக
மகிழ்ச்சியடைகிறேன். நீதிபதி விடுவிக்கிறதால தப்புப் பண்றாருன்னு என் உள் உணர்வு சொன்னால்
கூட நான் வெற்றிமிதப்பில் மகிழ்ச்சியடைகிறேன். நீதிபதிகள் மனிதனுக்கும் மேலேயா சாட்சிகள்
மேலவும் ஆதாரங்கள் மேலவும் வாதங்கள் மேலவும் நம்பிக்கை வைக்கிறது? அதுக்கும் மேல
மனிதர்கள் மேல வைக்கணும். அது மாதிரி செய்ய கடவுளை நம்பி உணர்கிறவர்களால் தான்
முடியும். "
"நல்ல சிந்தனை" , நான் சொன்னேன்.
"ஆனால் அது புதியதல்ல. எனக்கு நினைவிருக்கு ஒரு கதையைப் பற்றி, ரொம்ப நாள் முந்தி
கேட்டது . அது ரொம்ப நல்ல கதை." , தோட்டக்காரர் புன் முறுவலுடன் சொன்னார், "என் பாட்டி
எனக்குச் சொன்னது, என் அப்பாவோட அம்மா, நல்ல பொம்பளை. ஸ்வீடிஷில் அதை எனக்குச் சொன்னார்கள்.
அது நம்ம மொழியில் சொன்னா நல்லா இருக்குமா அப்படீன்னு தெரியலை."
மொழியைப் பற்றி என்ன கருத்துதானே முக்கியம் சொல்லுங்கள் என்று நாங்கள் அவரை அந்தக் கதையைக்
கூறச் சொல்லி வற்புறுத்தினோம். மிக்க மகிழ்ச்சியடைந்தார், வேண்டுமென்றே பைப்பைப் பற்ற
வைத்துக் கொண்டு கோபத்துடன் வேலையாட்களைப் பார்த்துக் கொண்டு ஆரம்பித்தார்.
"ஒரு சிறிய நகரத்தில், மரியாதைக்குரிய வயதான பெரியவர் இருந்தார், அவர் பேரு தாம்சனோ
வில்சனோ -- பேரா முக்கியம்? அவர் எல்லோராலும் மதிக்கப்ப்படும்படியான மருத்துவராக
இருந்தார். அவர் தனியாகவும், மற்றவர்களோடு பழகாமலும், தன தொழிலுக்கு தேவைப்படும்போது
மட்டும் பேசுபவராகவும் இருந்தார். யாரையும் போய்ப் பார்க்க மாட்டார், தனக்குத்
தெரிந்தவர்களைப் பார்த்தால் தலையைச் சிறிது ஆட்டுவார், மதிக்கப்படும் துறவியின் வாழ்க்கையை
வாழ்ந்து வந்தார். என்ன காரணம்னா அவர் படித்தவர், அந்தக் காலங்களில் படிச்சவங்க மத்தவங்களை
மாதிரி இருக்கமாட்டாங்க. அவங்க அல்லும் பகலா சிந்திச்சுகிட்டோ , படிச்சுகிட்டோ ,
மத்தவங்க நோய்களை குணப்படுத்திகிட்டோ இருப்பாங்க, மத்ததெல்லாம் அவுங்களுக்கு தூசு
மாதிரி, ஒரு வார்த்தையைக் கூட வீணாக்க மாட்டாங்க. அந்த நகரத்துல இருந்தவங்களுக்கேல்லாம்
இது புரிஞ்சதால, அவரை யாரும் சும்மா போய்ப் பார்த்துத் தொந்தரவு செய்ய மாட்டாங்க. அவுங்க
ரொம்ப சந்தோசத்துல இருந்தாங்க கடவுள் நமக்கு இப்படி ஒருத்தரை அனுப்பி நம்ம நோய்களைக்
குணமாக்குறார்னு. இப்படி ஒருத்தர் நம்மளோடு இருக்கிறார்னு பெருமைப் பட்டாங்க.
'அவருக்குத் தெரியாதது ஒண்ணுமில்லை' அப்படீன்னு சொல்லுவாங்க.
"ஆனா, அது மட்டும் போதாது. 'அவர் எல்லாரையும் விரும்பினார். ' அப்படீன்னும் அவங்க
சொல்வாங்க. அவரது நெஞ்சுக்குள்ளே ஒரு நல்ல தேவதை குடி இருந்துச்சுன்னும் சொல்லலாம். அந்த
நகர மக்கள் அவருக்கு அன்னியமானவங்களா இருந்தாலும், அவரோட மக்களா இல்லாட்டிப் போனாலும்,
அவங்களை எல்லாம் தன்னோட குழந்தை மாதிரி பார்த்துகிட்டார். தனக்கு உடம்பு சரியில்லாமல்
இருந்தாலும், இருமிகிட்டே இருந்தாலும் காய்ச்சல்ல அவதிப்பட்டாலும் வேறு யாருக்காவது
உடம்பு சரியில்லைன்னு வந்து கூப்பிட்டா அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மேடு பள்ளம்னு
பார்க்காம ஓடிப் போய் மருத்துவம் பார்ப்பார். சோறு தண்ணி மழை வெய்யில்னு எதையும் பார்க்க
மாட்டார், ஏதாவது நோயாளிகள் இறந்துட்டாங்கன்னா அவங்க சொந்தக்களோட இவரும் கண்கலங்குவாரு
இறுதிச்சடங்கில் கலந்துக்குவாரு,
"நகரத்துல இவர் இல்லாமல் ஒண்ணுமே முடியாதுன்னு நினைச்சாங்க, இவர் இல்லாத போது இதுக்கு
முந்தி எப்படி இருந்திருக்கும்னு ஆச்சரியப் பட்டாங்க. அந்த மரியாதைக்கு எல்லை இல்லாமல்
இருந்தது. குழந்தைங்க முதல் பெரியவங்க வரை, நல்லவன் கெட்டவன், யோக்கியன்
அயோக்கியன்--எல்லாரும் அவரை மதிச்சாங்க, அவரது மதிப்பு என்னன்னு அத்தனை பேருக்கும்
தெரிஞ்சு இருந்தது. அந்த நகரத்துலயும் சுத்துவட்டாரத்துலயும்
அவருக்கு மரியாதையைக் குறைக்கிற மாதிரி யாரும் நடந்துக்க மாட்டாங்க அதைப் பத்திக்
கனவுல கூட நினைச்சுப் பாக்க மாட்டாங்க. அவர் வீட்டை விட்டு வெளிய வந்தார்னா கதவு
ஜன்னலைப் பூட்ட மாட்டார், யாரும் திருட மாட்டாங்கன்னு தெரியும், திருடன் கூட தனக்கு
கெடுதல் செய்ய மாட்டார்னு நம்புவார் .தன்னோட வேலையா அவர் நேரம்காலம் பாக்காம தனியா
சாலைகளிலும் காட்டு வழியாவும் மலைகள் மேலயும் நடந்து போவார், அங்கெல்லாம் திருடங்க
இருப்பாங்க, இருந்தாலும் அவரை யாரும் ஒன்னும் செய்ய மாட்டாங்க.
"ஒரு தடவை காட்டு வழியா அவர் வந்துட்டு இருந்த போது கொள்ளைக்காரங்க அவர் மேல
பாஞ்சாங்க, யார்னு தெரிஞ்சதும், தொப்பிகளைக் கழற்றி மரியாதையா நின்னாங்க, அவருக்கு
சாப்பிடக் கூடக் கொடுத்தாங்க, அவர் பசியில்லைன்னு சொன்னதுக்கு விலகி வழிவிட்டு அவரைப்
பாதுகாப்பாகக் கூட்டிகிட்டு வந்து நகர எல்லை வரை விட்டாங்க. விதி பாருங்க அந்தத்
திருடங்களுக்குக் கூட ஒரு நல்லவனுக்கு சேவை செய்ய வச்சிருக்கு. ம்ம்ம் பாட்டி
சொல்லீருக்காங்க குதிரைகள் மாடுகள் நாய்கள் கூட அவரைத் தெரிஞ்சு வச்சிருந்துதுன்னு ,
அவரைப் பார்த்தா அவைகளும் சந்தோசப்ப்படுமாம்.
இந்த மாதிரி ஒரு நல்லவர் ஒவ்வொரு கெட்டதில இருந்தும் மக்களைப் பாது காத்தவர் அயோக்கியன்
திருடன் கூட இவருக்கு கெடுதல் செய்ய நினைக்க மாட்டான் அப்படிப்பட்டவர் ஒரு நாள் காலைல
கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். ஒரு நீரோடையில மண்டை உடைஞ்சு ரத்த வெள்ளத்துல கிடந்தார்,
அவர் முகத்துல ஆச்சரியப் பட்டுப் பார்க்குற மாதிரி உணர்ச்சி தெரிஞ்சுகிட்டு இருந்தது ,
ஆமா, பய உணர்ச்சி இல்லை ஆச்சரிய உணர்ச்சி தான் கொலையாளியைப் பார்த்த போது அவருக்கு
அச்சமில்லை ஆச்சரியம்தான் இருந்துச்சு. நீங்க புரிஞ்சுக்குவீங்க அந்த நகரத்துலயும்
சுத்துவட்டாரத்துலயும் எவ்வளவு துக்கம் படிஞ்சிருக்கும்னு. எல்லாரும் வேதனைப் பட்டாங்க,
கண்களை நம்பமுடியாம இருந்தாங்க, எப்படி ஒருத்தனால இவரைக் கொல்ல முடிஞ்சுதுன்னு
ஆச்சரியப் பட்டாங்க. விசாரணை செஞ்ச நீதிபதிகள் அவரோட உடலைப் பார்த்த பின்னாடி சொன்னாங்க
, 'இங்க கொலை செய்யப் பட்டதற்கான அடையாளம் இருக்கு. ஆனால் நம்ம டாக்டரைக் கொல்ல இந்த
உலகத்துல இருக்குற எந்த மனிதனுக்கும் மனசு வராது, அதுனால இந்த வழக்கு கொலை வழக்கு
அல்ல, இந்த தடயங்கள் முக்கியமானவை அல்ல, இருட்டில் அவர் தடுமாறி விழுந்து உயிர் போகும்
அளவுக்கு அடிபட்டு எதிர்பாராத விபத்து நடந்து போச்சு.'
"நகரமே இதுக்கு ஒத்துகிச்சி. டாக்டர் புதைக்கப் பட்டார். கொடுமையான மரணத்தைப் பத்தி
அதுக்கப்புறம் யாருமே பேசலை. டாக்டரைக் கொலை செய்யுமளவுக்கு இருக்கிற இறக்கமேயில்லாத
காட்டுமிராண்டியை அந்த நகர மக்கள் மறந்தே போனாங்க. திருடனும் ஒருநாள் அகப்படுவானில்லையா?"
"திடீர்னு ஒருநாள், நீங்க ஆச்சரியப் படுகிற மாதிரி, கொலை காரனைப் பிடிக்கிறதுக்கு
வாய்ப்பு வந்துச்சு. ஒரு அயோக்கியன், பல தடவை சிறைக்குப் போயிட்டு வந்தவன், தன்னோட
அருவருக்கத்தக்க வாழ்க்கையால எல்லாராலும் வெறுக்கப் பட்டவன், குடிக்கிறதுக்காக டாக்டரோட
பொருட்களை விற்க முயற்சி செஞ்ச போது பிடிபட்டான். கேள்விகள் கேட்டபோது,
குழம்பிப்போனான், முன்னுக்குப் பின்னா பேசினான், அவனோட வீட்டைச் சோதனை போட்ட போது அவனது
படுக்கைக் கடியில் ரத்தக் கறை பட்ட சட்டை ஒன்னும் டாக்டரோட தங்கக் கத்தியும் கிடைச்சது.
அதுக்கப்புறம் என்ன ஆதாரம் வேணும்? அவனை சிறையில் அடைச்சாங்க. நகர மக்கள் ஆத்திரப்
பட்டாங்க, ஆனா அதே நேரம் என்ன சொன்னாங்கன்னா
"நம்ப முடியலை. அப்படி இருக்காது. தப்பு நடக்காமப் பாத்துக்கங்க, உங்களுக்குக் கூடத்
தெரியும் தடயங்க தவறாக் கூட இருக்கும்! "
"விசாரணையின் போது கொலைகாரன் குற்றத்தை ஒத்துக்கலை. எல்லா ஆதாரங்களும் அவனையே குற்றம்
சாட்டியது. தடயங்களின் படி அவன் தான் குற்றவாளி என்று உறுதியா நம்பமுடிஞ்சுது இந்த மண்
கருப்புன்னு சொன்னா எப்படி மறுக்கமுடியாதோ அப்படி. ஆனா நீதிபதிகள் ரொம்ப எச்சரிக்கையா
இருந்தாங்க, ஒவ்வொரு ஆதாரத்தையும் பத்துத் தடவை பார்த்தாங்க. சாட்சிகளை நம்பிக்கை இல்லாமல்
விசாரிச்சாங்க, முகம் சிவந்தாங்க தண்ணி குடிச்சாங்க......விசாரணை காலையில ஆரம்பிச்சா
சாயந்திரம் வரைக்கும் நடந்தது "
"குற்றம் சாட்டப்பட்டவரே", தலைமை நீதிபதி கொலைகாரனைப் பார்த்துச் சொன்னார்,"இந்த நீதிமன்றம்
டாக்டர் -- இன்னாருன்னு சொல்லி---, நீதான் அவரைக் கொன்றது என்று உறுதியாகத்
தீர்மானிக்கிறது, அதற்காக உனக்கு...."
" மரண தண்டனை விதிக்கப்படுகிறது...என்று தலைமை நீதிபதி சொல்லவந்தார் , ஆனால் அவரது
கைகள் தீர்ப்பு எழுதப்பட்ட காகிதத்தின் மேல் தானா விழுந்தது. தனது நெற்றியிலே வழியும்
வேர்வையைத் துடைத்துக் கொண்டு கத்தினார், "
"இல்லை! கடவுளே நான் தப்பாச் சொன்னா என்னை தண்டியுங்கள், ஆனால் அவன் குற்றவாளி இல்லை.
என்னால ஒத்துக்கொள்ள முடியாது, நம் நண்பரும் மருத்துவருமான அவரைக் கொல்ல யாருக்கும்
மனது வராது. அந்த அளவுக்கு யாரும் தரங்கெட்டுப் போக மாட்டார்கள்"
"அந்த மாதிரி யாரும் இருக்க முடியாது" , இன்னொரு நீதிபதியும் சொன்னார்.
"வேண்டாம். அவனைப் போகச் சொல்லுங்க" , கூட்டமும் கத்தியது.
"கொலைகாரனை எங்கு வேண்டுமானாலும் போ , என்று விடுவித்தார்கள். ஒருத்தர் கூட இந்தத்
தவறான தீர்ப்பைக் குறை சொல்லவில்லை. என் பாட்டி சொன்னாங்க மனிதகுலத்துக்கு நம்பிக்கை
ஊட்டியதற்காக அந்த நகரத்தில் இருந்தவங்க செஞ்ச பாவத்தை எல்லாம் கடவுள் மன்னிச்சாருன்னு.
மக்கள் மனித உருவில் தன்னைக் காணும் போதெல்லாம் அவர் மகிழ்ச்சியடைகிறார், மனிதத் தன்மை
குறைந்து நாயை விடக் கேவலமாகப் போகும் போதெல்லாம் அவர் துக்கப் படுகிறார். குற்றவாளி
விடுவிக்கப் பட்டதனால் அந்த நகர மக்களுக்கு கெடுதல் வேண்டுமானால் நடந்திருக்கலாம்,
நினைச்சுப் பாருங்க , ஒரு மனிதன் மேல நம்பிக்கை வெச்சு , அந்த நம்பிக்கை வீண் போகலைன்னு
சொன்னா எவ்வளவு உயர்ந்த சிந்தனைகள் எல்லாருக்கும் வரும், ஒருத்தரை ஒருத்தர் மதிக்கவும்
அன்புகாட்டவும் தூண்டும், ஒவ்வொருத்தரையும், அது தான் முக்கியம். "
மிக்ஹைல் கர்லோவித்ச் தனது கதையை முடித்த போது என் பக்கத்து வீட்டுக்காரர் எதிர்த்து எதோ
சொல்ல முற்பட்டார், ஆனால் தலைமைத் தோட்டக்காரர், சைகை காட்டினார் தனக்கு எதிர்த்துப்
பேசுவது பிடிக்காது என்பது போல, பின் பெருமிதத்துடன் நடந்து அவர் பொருட்கள் ஏற்றப்படும்
வண்டியினை நோக்கிச் சென்றார்.

muruganandan.k

unread,
Nov 19, 2014, 9:07:39 AM11/19/14
to brail...@googlegroups.com
அருமயான ரஷ்ய பிரெஞ்சு சிறுகதைகளின் மொழிபெயர்ப்புகளை வழங்கியமைக்கு
மிக்க நன்றி ஐயா, உண்மையாகவே ஒவ்வொரு சிறுகதையையும் ரசித்துப் படித்தேன்!
தொடர்ந்து மொழிபெயர்ப்புக் கதைகளை வழங்கி உதவுங்கள். கூடவே மூல
இணைப்பையும் வழங்கினால் முகநூல் பக்கத்தில் பகிர உதவியாக இருக்கும்...

நன்றி.
> --
> --
> You received this message because you are subscribed to the Google
> Groups "Brailleacl" group.
> To post to this group, send email to brail...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> brailleacl+...@googlegroups.com
>
> ---
> You received this message because you are subscribed to the Google Groups
> "Brailleacl" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to brailleacl+...@googlegroups.com.
> For more options, visit https://groups.google.com/d/optout.
>


--
“THE OPPOSITE OF LOVE IS NOT HATRED, BUT INDIFFERENCE”
MURUGANANDAN.K
Ph.D Scholar,
Department of English,
Pondicherry University,
puducherry-14
mobile:+919787871008.

Professor k. kumar

unread,
Nov 19, 2014, 9:57:15 AM11/19/14
to brail...@googlegroups.com
TRB PG TAMIL:சிறுகதைகள்

தமிழில் சிறுகதைகள்
•சிறுகதை உலகின் தந்தை செகாவ்
•சிறுகதை தோன்றிய முதல் இந்திய மொழி வங்காளி
•தமிழ்ச் சிறுகதையின் முன்னோடி = வீரமாமுனிவர்
•தமிழின் முதல் சிறுகதை வ.வே.சு.ஐயரின் குளத்தங்கரை அரச மரம்
•தமிழின் முதல் சிறுகதை தொகுப்பு = மங்கையர்கரசியின் காதல்
•சிறுகதையின் தந்தை = வ.வே.சு.ஐயர்
தமிழ்ச் சிறுகதை முன்னோடி
- வீரமாமுனிவர்
தமிழ் சிறுகதையின் தந்தை
- வ.வே.சு.ஐயர்
தமிழின் முதல் சிறுகதை
- குளத்தங்கரை அரச மரம்
தமிழின் முதல் சிறுகதை தொகுப்பு
- மன்கையர்கரசியின் காதல்
கி.இராஜ நாராயணன்
- வட்டாரக் கதைகளின் முன்னோடி
கி.இராஜ நாராயணன்
- கரிசில் கதைகளின் தந்தை
புதுமைபித்தன்
- சிறுகதை மன்னன்
புதுமைபித்தன்
- தமிழ்நாட்டின் மாப்பசான்
புதுமைப்பித்தன்
- தமிழ்ச் சிறுகதையின் தூண்
புதுமைபித்தன்
- சிறுகதைச் செல்வர்
கல்கி
- தமிழ்நாட்டின் வால்டர் ஸ்காட்
கல்கி
- தமிழ் சிறுகதை இலக்கியத்தின் ஆசான்
ந.பிச்சமூர்த்தி
- சிறுகதையின் சாதனை
மௌனி
- சிறுகதையின் திருமூலர்(புதுமைபித்தன்)
பாரதியார்
சிறுகதைகள்:
•நவதந்திரக் கதைகள்
•கதைக்கொத்து
•பூலோக ரம்பை
•திண்டிம சாஸ்திரி
•ஸ்வர்ணகுமாரி
•சின்ன சங்கரன் கதை
•ஆறில் ஒரு பங்கு
•ரவீந்திரநாத் தாகூரின் சிறுகதைகள் 11ஐத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்
வ.வே.சு.ஐயர்
குறிப்பு:
•முழுப்பெயர் = வரகனேரி வேங்கட சுப்பிரமணிய ஐயர்
•தமிழின் முதல் சிறுகதையான "குளத்தங்கரை அரச மரம்" எழுதியவர்
•குளத்தங்கரை அரசமரம் தாகூர் எழுதிய "காட்டேர் கதா" என்ற வாங்க மொழியின் கதைத் தழுவல் ஆகும்
•குளத்தங்கரை அரச மரம் இடம் பெற்றுள்ள சிறுகதைத் தொகுதி மங்கையர்க்கரசியின் காதல்
•தமிழின் முதல் சிறுகதை தொகுப்பு = மங்கையர்க்கரசியின் காதல்
•மங்கையர்க்கரசியின் காதல் எட்டு சிறுகதைகளைக் கொண்டது
•லைலா மஜ்னு, அனார்கலி போன்ற பாத்திரங்களைத் தமிழுக்கு அறிமுகம் செய்தவர்
•சிறுகதைகளை "காபுலி வாலா" என்ற தொகுப்பின் மூலம் மொழிப்பெயர்த்து வெளியிட்டார்
சிறுகதைகள்:
•குளத்தங்கரை அரச மரம்
•கமழ விஜயம்
•காங்கேயம்
•எதிரொலியாள்
புதுமைப்பித்தன்
குறிப்பு:
•இயற்பெயர் = விருத்தாசலம்
•புனைபெயர் = புதுமைபித்தன்
சிறப்பு பெயர்:
•சிறுகதை மன்னன்
•தமிழ்நாட்டின் மாப்பசான்
•தமிழ் சிறுகதையின் தூண்
•சிறுகதைச் செல்வர்
•ஜெயகாந்தன் = காவியத்திற்கு கம்பன், கவிதைக்கு பாரதி, சிறுகதைக்கு புதுமைபித்தன்
•தெ.பொ.மீ = புதுமைப்பித்தன் சிறுகதைகள் கவிதையுடன் போட்டியிடுகின்றன
சிறுகதை தொகுதிகள்:
•கபாடபுரம்
•புதிய ஒளி
•சித்தி
•ஆண்மை
•அன்று இரவு
சிறுகதை:
•கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்
•அகல்யை
•சாப விமோசனம்
•துன்பக்கேணி
•மனித எந்திரம்
•சிற்பியின் நரகம்
•தியாக மூர்த்தி
•பொன்னகரம்
•கயிற்றிரவு
•கல்யாணி
•நினைவுப்பாதை
•மகாமசானம்
•வேதாளம் சொன்ன கதை
•காஞ்சனை
•காலனும் கிழவியும்
•விநாயகர் சதுர்த்தி
•பக்தகுசேலா
•கவந்தனும் காமனும்
ஜெயகாந்தன்
குறிப்பு:
•ஞானபீட பரிசு பெற்றவர்
•இவரை "சிந்தனைச் சிற்பி" என பாராட்டப் படுபவர்
சிறுகதை தொகுப்பு:
•உதயம்
•ஒரு பிடி சோறு
•இனிப்பும் கரிப்பும்
•தேவன் வருவாரா
•சுமைதாங்கி
•யுகசக்தி
•புதிய வார்ப்புகள்
•சுயதரிசனம்
•குருபீடம்
•சக்கரங்கள் நிற்பதில்லை
•மாலை மயக்கம்
சிறுகதை:
•அக்கினிப் பிரவேசம்
•புதுச் செருப்புக் கடிக்கும்
•உண்மை சுடும்
•பிரமோபதேசம்
•ஒரு பிடி சோறு
•இருளைத் தேடி
•பிரளயம்
•ஒரு பகல் நேர பாசென்ஜெர் வண்டி
•திரிசங்கு சொர்க்கம்
•இரவில்
•ஆண்மை
•கல்யாணி
சு.சமுத்திரம்
சிறுகதை:
•அங்கே கல்யாணம் இங்கே கலாட்டா(முதல் சிறுகதை)
•போதும் உங்க உபகாரம்
•ஒரே ஒரு ரோஜா
•இழவு காத்த கிளி
•பலவேசம்
சிறுகதை தொகுப்பு:
•உறவுக்கு அப்பால்
•ஒரு சத்தியத்தின் அழுகை
•காகித உறவு
கு.ப.ரா
குறிப்பு:
•முழுப்பெயர் = கு.ப.இராசகோபாலன்
சிறுகதை:
•நூருன்னிஸா(முதல் சிறுகதை)
•புனர் ஜென்மம்
•காணாமலே காதல்
•கனகாம்பரம்
•காஞ்சன மாலை
•சிறிது வெளிச்சம்
•விடியுமா?
•திரை
•இறுதி வெளிச்சம்
•அடி மறந்தால் ஆழம்
•நடுத்தெரு நாகரிகம்
கல்கி
குறிப்பு:
•இயற்பெயர் = இரா.கிருஷ்ணமூர்த்தி
•திரு.வி.க.வின் மீது கொண்ட ஈடுபாட்டால் தம் பெயரைக் கல்கி என வைத்துக் கொண்டார்
•இவரை "தமிழ்நாட்டின் வால்டர் ஸ்காட்" என அழைப்பர்
•இவரை "சிறுகதை உலகின் ஆசான்" ஆவார்
சிறுகதை:
•சாரதையின் தந்திரம்(முதல் சிறுகதை)
•கோத்தாரியின் தாயார்
•காரிருளில் ஒரு மின்னல்
•அபலையின் கண்ணீர்
•மாடத்தேவன் சுனை
•மயில்விழிமான்
•வீனை பவாணி
•கணையாழியின் கனவு
•திருவெழுந்தூர் சிவக்கொழுந்து
•திருடன் மகன் திருடன்
•காதறாக் கள்ளன்
•மயில் விழிமான்
•ஒற்றை ரோஜா
•மாடத்தேவன் சுனை
•மயிலைக் காளி
•அலையின் கண்ணீர்
அறிஞர் அண்ணா
சிறுகதை:
•பலாபலன்
•சுடுமூஞ்சி
•அன்னதானம்
•பேய் ஓடிப்போச்சி
•இரு பரம்பரைகள்
•சூதாடி
•செவ்வாழை
•தஞ்சை வீழ்ச்சி
•பிடி சாம்பல்
•புலி நகம்
•ராஜாதி ராஜா
•சொர்க்கத்தில் நரகம்
•சொர்க்கத்தில் நரகம்
•ஒளியூரில்]
சிதம்பர ரகுநாதன்
சிறுகதை:
•சேற்றிலே மிதந்த செந்தாமரை
•நிலாவிலே பேசுவோம்
•அபாய அறிவிப்பு
•ஐந்தாம் படை
•ஆணைத் தீ
•மனைவி
கி. இராஜ நாராயணன்
குறிப்பு:
•வட்டாரக் கதைகளின் முன்னோடி
•கரிசில் கதைகளின் தந்தை
சிறுகதை:
•கதவு
•கன்னிமை
•வேட்டி
•அம்மா பிள்ளை
•அப்பா பிள்ளை
•நாற்காலி
மௌனி
குறிப்பு:
•இயற்பெயர் = சுப்பிரமணியம்
•இவரை "சிறுகதையின் திருமூலர்" என்றவர் புதுமைப்பித்தன்
•க.நா.சுப்பிரமணியன் = மௌனியின் கதைகள் தமிழ் இலக்கிய உலகில் தனிப்பெருஞ்சசிகரம்
சிறுகதை:
•ஏன்(முதல் சிறுகதை)
•தவறு(இறுதி சிறுகதை)
•அழியாச் சுடர்
•மணக்கோலம்
•காதல் அலை
•மாறுதல்
•பிரபஞ்ச கானம்
•மனத்தேர்
•சாவில் பிறந்த சிருஷ்டி
பி.எஸ்.ராமையா
குறிப்பு:
•மணிக்கொடி இதழிச் சிறுகதை இதழாக மாற்றியவர்
சிறுகதை:
•பணம் பிழைத்தது
•தழும்பு
•நினைவு முகம்
•மறக்கவில்லை
•காம தகனம்
•நட்சத்திரக் குழந்தை
•கொத்தனார் கோவில்
•மலரும் மணமும்
•ஞானோதயம்
•பாக்கியத்தின் பாக்கியம்
•புதுமைகோயில்
•பூவும் பொன்னும்
•குங்குமப்பொட்டு குமாரசாமி
•அடிச்சாரைச் சொல்லி அழு
கு. அழகிரிசாமி
குறிப்பு:
•மலேசியாவில் "இலக்கிய வட்டம்" நடத்தியவர்
சிறுகதை தொகுதிகள்:
•உறக்கம் கொள்வான்(முதல் சிறுகதை)
•சிரிக்கவில்லை
•தவப்பயன்
•காலகண்ணாடி
•புது உலகம்
•தெய்வம் பிறந்தது
•இரு சகோதரிகள்
•கற்பக விருட்சம்
•வரப்பிரசாதம்
•அன்பளிப்பு(சாகித்ய அகாடமி பரிசு)
சிறுகதை:
•ஆண் மகன்
•புது உலகம்
•திரிபுரம்
•இரு பெண்கள்
•திரிவேணி
•ஞாபகார்த்தம்
இராசாசி
சிறுகதை:
•நிரந்தர செல்வம்
•பிள்ளையார் காப்பாற்றினார்
•கற்பனைக் கோடு
•தேவ்வனி
•முகுந்தன் பறையனான கதை
•கூன் சுந்தரி
•அறியாக் குழந்தை
•அன்னையும் பிதாவும்
சி.சு.செல்லப்பா
சிறுகதை:
•சரசாவின் பொம்மை
•மலை வீடு
•அறுபது
•சத்தியாகிரகி
•வெள்ளை
•மார்கழி மலர்
வல்லிக்கண்ணன்
சிறுகதை:
•சந்திர காந்தக்கல்(முதல் சிறுகதை)
•நாட்டியக்காரி
•பெரிய மனுஷி
•கவிதை வாழ்வு
•தத்துவ தரிசனம்
•கல்யாணி
•ஆண் சிங்கம்
•வால் விரும்பியவன்
ந.பிச்சமூர்த்தி
குறிப்பு:
•இவரை "சிறுகதையின் சாதனை" அனப் போற்றுவர்
சிறுகதை:
•மாயமான்
•இரும்பும் புரட்சியும்
•பாம்பின் கோபம்
•முள்ளும் ரோஜாவும்
•கொழு பொம்மை
•பதினெட்டாம் பெருக்கு
•ஜம்பரும் வேஷ்டியும்
•நல்ல வீடு
•அவனும் அவளும்
•மாங்காய்த் தலை
•மோகினி
•களையும் பெண்ணும்
தி.ஜானகிராமன்
சிறுகதை:
•அக்பர் சாஸ்திரி
•சிவப்பு ரிக்க்ஷா
•கோபுர விளக்கு
•பஞ்சத்து ஆண்டி
•ரசிகரும் ரசிகையும்
•தேவர் குதிரை
•அம்மா வந்தால்
•ரிக்க்ஷா
•கொட்டு மேளம்
•சிலிர்ப்பு
•சக்தி வைத்தியம்(சாகித்ய அகாடமி விருது)
•அபூர்வ மனிதர்கள்
அசோகமித்திரன்
சிறுகதை:
•அப்பாவின் சிநேகிதர்(சாகித்ய அகாடமி விருது)
•உத்திர ராமாயணம்
•விரிந்த வயல்
மு.வ
சிறுகதை:
•விடுதலையா?
•குறட்டை ஒலி

Professor k. kumar

unread,
Nov 19, 2014, 10:02:04 AM11/19/14
to brail...@googlegroups.com
ஐஞ்சிறுகாப்பியங்கள்


•ஐஞ்சிறுகாப்பியங்கள் அனைத்தும் சமணக் காப்பியங்கள்
•ஐஞ்சிறுகாப்பியங்கள் இலக்கணம் கூறும் நூல் = தண்டியலங்காரம்
•ஐஞ்சிறுகாப்பியங்கள் என்ற வழக்கத்தை ஏற்படுத்தியவர் = சி.வை.தாமோதரம்பிள்ளை
•நாக குமார காவியம் = ஆசிரியர் பெயர் தெரியவில்லை
•உதயன குமார காவியம் = ஆசிரியர் பெயர் தெரியவில்லை
•யசோதர காவியம் = வெண்ணாவலூர் உடையார் வேள்
•நீலகேசி = ஆசிரியர் பெயர் தெரியவில்லை
•சூளாமணி = தோலாமொழித்தேவர்
ஐஞ்சிறுகாப்பியங்கள் அட்டவணை:
நூல்
சமயம்
பாவகை
ஆசிரியர்
அமைப்பு
நாக குமார காவியம்
சமணம்
விருத்தம்

5 சருக்கம், 170 பாடல்
உதயன குமார காவியம்
சமணம்
விருத்தம்

6 காண்டம், 369 பாடல்
யசோதர காவியம்
சமணம்
விருத்தம்
வெண்ணாவலூர் உடையார் வேள்
5 சருக்கம், 320 பாடல்
நீலகேசி
சமணம்
விருத்தம்

10 சருக்கம், 894 பாடல்
சூளாமணி
சமணம்
விருத்தம்
தோலாமொழித்தேவர்
12 சருக்கம், 2330 விருதப்பாக்கள்
நாககுமார காவியம்
நாககுமாரகாவியத்தின் உருவம்:
•ஆசிரியர் = பெயர் தெரியவில்லை
•காலம் = கி.பி.16ஆம் நூற்றாண்டு
•பாடல்கள் = 170
•சருக்கம் = 5
•பாவகை = விருத்தப்பா
•சமயம் = சமணம்
பெயர்க்காரணம்:
•கதைத் தலைவன் நாககுமாரன் பற்றிக் கூறுவதால் நூல் இப்பெயர் பெற்றது.
வேறு பெயர்:
•நாகபஞ்சமி கதை
பொதுவான குறிப்புகள்:
•நாகபஞ்சமி நோன்பின் சிறப்பைக் கூறும் நூல்.
•மனதையும் போகத்தையும் மிகுதியாக கூறும் சமண நூல்.
•519 பெண்களை மணக்கிறான் தலைவன்
•இந்நூலை "சொத்தை நூல்" என்கிறார் மது.ச.விமலானந்தம்
மேற்கோள்:
•அரனின்றிப் பின்னை ஒன்றுமுயிர்க்கு அரணில்லை என்றும்
மறமின்றி உயிர்க்கு இடர்செய் மற்றொன்றும் இல்லைஎன்றும்
திறமிகு உணர்ந்து தேறித் தீக்கதிப் பிறவிக்கு அஞ்சி
மறம் இதை விட்டு அறத்தில் வாழுமின் உலகத்தாரே
உதயணகுமார காவியம்
உதயனகுமார காவியத்தின் உருவம்:
•ஆசிரியர் = பெயர் தெரியவில்லை
•காலம் = கி.பி.15ஆம் நூற்றாண்டு
•பாடல்கள் = 369
•காண்டம் = 6
காண்டங்கள்:
•உஞ்சைக் காண்டம்
•இலாவண காண்டம்
•மகத காண்டம்
•வத்தவ காண்டம்
•நரவாகன காண்டம்
•துறவுக் காண்டம்
வேறு பெயர்:
•உதயணன் கதை
பொதுவான குறிப்பு:
•இந்நூலின் மூலநூல் = பெருங்கதை
•கதைத்தலைவன் = உதயணன்
•உதயணனை "விச்சை வீரன்" என்றும் கூறுவர்.
•உதயணன் யாழின் பெயர் = கோடபதி
•"பெயர் தான் காவியம், ஆனால் காவியம் என்பது இம்மியும் இல்லை" என்பார் மது.ச.விமலானந்தம்
மேற்கோள்:
•வீணை நற்கிழத்தி நீ, வித்தக உருவி நீ
நாணின் பாவை தானும் நீ, நலன்திகழ்மணியும் நீ
காண என்றன் முன்பாய்க் காரிகையே வந்து, நீ
தோணி முகம் கட்டு எனச் சொல்லியே புலம்புவான்
யசோதர காவியம்
யசோதர காவியத்தின் உருவம்:
•ஆசிரியர் = வெண்ணாவலூர் உடையார் வேள்
•காலம் = 13ஆம் நூற்றாண்டு
•பாடல்கள் = 320
•சருக்கங்கள் = 5
•பாவகை = விருத்தம்
•சமயம் = சமணம்
பொதுவான குறிப்புகள்:
•வடமொழியில் எழுதப்பட்ட உத்திர புராணத்தில் இருந்து இதன் கதை எடுக்கப்பட்டது என்றும்,
புட்பதத்தார் எழுதிய யசோதர சரிதத்தின் தழுவல் என்றும் கூறுவர்.
•"மாளவ பஞ்சம்" என்னும் கருநாடக இசை பற்றி கூறப்பட்டுள்ளது.
மேற்கோள்:
•யான் உயிர் வாழ்தல் எண்ணி எளியவர்
•தம்மைக் கொல்லின் வான்உயிர் இன்பமே
அல்லால் வருநெறி திரியும் அன்றி
ஊன்உயிர் இன்பம் எண்ணி எண்ணாமல்
மற்றொன்றும் இன்றி மானுடர்வாழ்வு மண்ணில்
மரித்திடும் இயல்பித்ரு அன்றோ
நீலகேசி
நீலகேசியின் உருவம்:
•ஆசிரியர் = பெயர் தெரியவில்லை
•காலம் = 6ஆம் நூற்றாண்டு
•பாடல்கள் = 894
•சருக்கம் = 10
•பாவகை = விருத்தம்
•சமயம் = சமணம்
வேறு பெயர்:
•நீலகேசி தெருட்டு
•நீலம்(யாப்பருங்கல விருத்தியுரை)
பெயர் காரணம்:
•நீலம் = கருமை, கேசம் = கூந்தல்
•கேசி = கூந்தலை உடையவள்
•நீலகேசி = கரிய கூந்தலை உடையவள்
பொதுவான குறிப்புகள்:
•நீலகேசி என்றால் கருத கூந்தலை உடையவள் என்று பொருள்
•இந்நூல் குண்டலகேசி என்னும் நூலிற்கு எதிராக எழுதப்பட்டது.
•நூலுக்கு உரை எழுதியவர் = திவாகர வாமன முனிவர்.
•இவரின் உரை "சமய திவாகரம்" எனப்படுகிறது.
மேற்கோள்:
•கோறல் பொய்த்தல் கொடுங்களவு
நீங்கிப் பிறர் மனைகண்மேல்
சேரல் இன்றிச் செலும் பொருள்மேல்
சென்ற சிந்தை வேட்கையினை
ஆறு கிற்பின் அமர் உலகம்
நுன்கண் கடியதாம் என்றாள்
சூளாமணி
சூளாமணியின் உருவம்:
•ஆசிரியர் = தோலாமொழித் தேவர்
•காலம் = கி.பி.பத்தாம் நூற்றாண்டு
•பாடல்கள் = 2330
•சருக்கம் = 12
•பாவகை = விருத்தம்
•சமயம் = சமணம்
பெயர்க்காரணம்:
•மிக்க ஒளியையும் சிறப்பினையும் உடையது சூளாமணி. ஆற்றல்களும் சிறப்புகளும் கொண்டு
திவிட்டனும் விசயனும் சூளாமணி போல் ஒளிர்ந்தமையால் நூல் இப்பெயர் பெற்றது.
பொதுவான குறிப்புகள்:
•நூல் ஆசிரியர் தோலாமொழித் தேவரின் இயற் பெயர் வர்த்தமான தேவர்.
•இந்நூலின் முதல் நூல் = வடமொழியில் உள்ள ஆருகத மாபுராணம்
•சூளாமணியின் கதை நாயகன் திவிட்டன்
•நூலை முதலில் பதிப்பித்தவர் சி.வை.தாமோதரம்பிள்ளை
•"விருதப்பாவை கையாள்வதில் இவர் சீவக சிந்தாமணி ஆசிரியரையும் மிஞ்சிவிட்டார்" என்கிறார்
மு.வரதராசனார்
•"சிந்தாமணியை விடச் செப்பமான நடையை உடையது சூளாமணி" என்று கி.வா.ஜகன்னாதன்
கூறுகிறார்.
•"சிந்தாமணியிலும் கூட இத்தகைய ஓடமும் இனிமையும் இல்லை" என்கிறார் தெ.பொ.மீ
மேற்கோள்:
•ஆணை துரப்ப அரவு உரை ஆழ்குழி
நானவிர் பற்றுபு நாளும் ஒருவன் ஓர்
தேனின் அழிதுளி நக்கும் திறத்தது
மானுடர் இன்பம் மதித்தனை கோல் நீ

Professor k. kumar

unread,
Nov 19, 2014, 10:06:38 AM11/19/14
to valluva...@googlegroups.com, brail...@googlegroups.com, Thamaraikkannan B, kaviku...@gmail.com
TRB PG TAMIL :காப்பியம்
தனிப்பாடல்களின் தொகுப்பாக அமையாமல், நீண்ட கதையைத் தொடர்நிலைச் செய்யுளில் அமைத்துக்
கூறுவது காப்பியம் ஆகும். காப்பியத்தில் கிளைக் கதைகள் பல இடம் பெறுவதுண்டு
ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள், பிற காப்பியங்கள் எனத் தமிழ்க் காப்பியங்களை
வகைப்படுத்தலாம்.
ஐம்பெருங்காப்பியங்கள்
1. சிலப்பதிகாரம் - இளங்கோவடிகள்
2. மணிமேகலை - சீத்தலைச் சாத்தனார்
3. சீவக சிந்தாமணி - திருத்தக்க தேவர்
4. வளையாபதி - பெயர் தெரியவில்லை
5. குண்டலகேசி - நாதகுத்தனார்
இவற்றுள் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் எனப்படுகின்றன.
ஐஞ்சிறு காப்பியங்கள்
1. சூளாமணி - தோலாமொழித் தேவர்
2. யசோதர காவியம் - வெண்ணாவலூருடையார் வேள்
3. உதயணகுமார காவியம் - ஆசிரியர் பெயர் தெரியவில்லை
4. நீலகேசி - ஆசிரியர் பெயர் தெரியவில்லை
5. நாககுமார காவியம் - ஆசிரியர் பெயர் தெரியவில்லை
பிற காப்பியங்கள்
1. பெருங்கதை - கொங்குவேளிர்
2. கம்பராமாயணம் - கம்பர்
3. வில்லிபாரதம் - வில்லிபுத்தூராழ்வார்
4. பெரியபுராணம் - சேக்கிழார்
5. கந்தபுராணம் - கச்சியப்ப சிவாச்சாரியார்
6. தேம்பாவணி - வீரமாமுனிவர்
7. சீறாப்புராணம் - உமறுப்புலவர்
8. பிரபுலிங்க லீலை - சிவப்பிரகாசர்
இவையேயன்றித் திருவிளையாடற்புராணம் முதலான தலபுராணங்களும், பிற்காலத்தில் இயற்றப்பட்ட
இயேசு காவியம் போன்றனவும் காப்பியம் என்னும் இலக்கியப் பகுப்பில் அடங்குவனவாகும்.
இக்காப்பியங்களின் உருவம், உள்ளடக்கம், உத்திமுறை ஆகியன குறித்து இனிக் காணலாம்.


6.2.1 உருவம்

சிலப்பதிகாரம் ஆசிரியப்பா, வெண்பா, இடையிடை உரைநடை, விருத்தம் எனக் கலவையான
யாப்புடையது.
மணிமேகலை, பெருங்கதை ஆகியன ஆசிரியப்பா யாப்பின. ஏனைய காப்பியங்கள் யாவும்
விருத்தப்பாக்களால் ஆனவை.

ஆசிரியப்பா

சிலம்பு 3 காண்டங்களும், 30 காதைகளும் கொண்டது.
புகார்க் காண்டம் - 10 காதை
மதுரைக் காண்டம் - 13 காதை
வஞ்சிக் காண்டம் - 7 காதை
என்னும் அமைப்புடையது. ஆசிரியப்பாக்கள் 'என்' என்னும் ஈற்றசை பெற்று முடிகின்றன.

விருத்தம்

கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்கள் (6, 7, 8 சீர்கள்) கலிவிருத்தம் ஆகியவற்றால்
பெரும்பான்மையான காப்பியங்கள் யாக்கப் பெற்றுள்ளன. ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட
சீர்களையுடைய அடிகள் நான்கு கொண்டது ஆசிரிய விருத்தம் ஆகும்.
ஆசிரிய விருத்தம்- 6 சீர்கள்
தண்டலை மயில்கள் ஆடத்
தாமரை விளக்கம் தாங்கக்
கொண்டல்கள் முழவின் ஏங்கக்
குவளைகண் விழித்து நோக்கத்
தெண்டிரை எழினி காட்டத்
தேம்பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட
மருதம்வீற் றிருக்கும் மாதோ
(கம்பராமாயணம்)

கலிவிருத்தம்

நான்கு சீர்களையுடையதாகிய அளவடிகள் நான்கு கொண்டது கலிவிருத்தமாகும்.
ஆனை துரப்ப அரவுஉறை ஆழ்குழி
நால்நவில் பற்றுபு நாலும் ஒருவன்ஓர்
தேனின் அழிதுளி நக்கும் திறத்தது
மானுடர் இன்பம் மதித்தனை கொள்நீ
(சூளாமணி)
(துரப்ப = துரத்த; நால் = தொங்கும்; நவில் = விழுது; நாலும் = தொங்கும்)
யானை துரத்த அஞ்சி ஓடி வந்தவன் பாம்பு உள்ள ஒரு குழியில் சறுக்கி விழ, தற்செயலாக ஆலம்
விழுது ஒன்றைப் பற்றியவனாக உள்ளான்; அதுவும் அறுந்து கொண்டே வருகிறது. இந்நிலையில்
தேனடையிலிருந்து ஒழுகும் தேன்துளியைச் சுவைக்கின்றான் என வாழ்வின் இன்பத்தை இப்பாடல்
எடுத்துரைக்கின்றது.

6.2.2 உள்ளடக்கம்

'பாவிகம் என்பது காப்பியப் பண்பே' என, காவியம் முழுவதும் பரவிக் கிடப்பதும்
மையப்பொருளாவதுமாகிய பொருண்மையைப் பாவிக அணியாக எடுத்துரைக்கும்,
தண்டியலங்காரம்.காப்பியத்தில் கிளைக்கதைகள் பல வருதல் போன்றவற்றால் ஒன்றற்கு மேற்பட்ட நீதிக்
கருத்துகள் பல இடம் பெறுதல் இயல்பேயாகும்.
அறம் பிறழாமை, மண்ணாசையின் தீங்கினையுரைத்தல், சமயம் சார்ந்த கருத்துகள் என மூவகைகளில்
காப்பிய உள்ளடக்கத்தினைக் காணலாம்.

அறம் பிறழாமை

சிலம்பில் மூவகைக் கோட்பாடுகள் காணப்படுகின்றன.
அரைசியல் பிழைத்தோர்க்கு அறம்கூற் றாவதூஉம்
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம்
சூழ்வினைச் சிலம்பு காரண மாக
நாட்டுதும் யாம்ஓர் பாட்டுடைச் செய்யுள்
என்பது பாயிரப் பகுதி.
1. அறம் பிறழாமை
யானோ அரசன் யானே கள்வன்
மன்பதை காக்கும் தென்புலம் காவல்
என்முதல் பிழைத்தது கெடுகஎன் ஆயுள்
எனப் பாண்டியன் உயிர் நீக்கின்றான்.
2. பத்தினியின் பெருமை
இவளோ
கொங்கச் செல்வி குடமலை யாட்டி
தென்தமிழ்ப் பாவை செய்தவக் கொழுந்து
ஒருமா மணியாய் உலகிற்கு ஓங்கிய
திருமா மணி
என்பது கவுந்தியடிகள் கூற்று.
3. ஊழ்வினை
கோவலன் கொலை செய்யப் பெற்றமையைக் கூறும் பகுதி.
கல்லாக் களிமகன் ஒருவன் கையில்
வெள்வாள் எறிந்தனன் விலங்கூடு அறுத்தது
காவலன் செங்கோல் வளைஇய வீழ்ந்தனன்
கோவலன் பண்டை ஊழ்வினை உருத்தென

மண்ணாசை கூடாது

வில்லிபாரதம் மண்ணாசை கூடாது என்பதை வலியுறுத்தக் காண்கிறோம். பாண்டவர்களிடமிருந்து
சூதாடி நாடு கவர்ந்த கௌரவர்கள், பாண்டவர்கள் தமக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை முடித்து
மீண்டும் வந்து நாடு கேட்டபோது, சிறிதளவும் நிலமும் தரமறுத்து, அதனால் ஏற்பட்ட போரில்
உறவினர் சூழ அழிந்தொழிந்தனர்.


சமயம்

சிலப்பதிகாரம் சமயப் பொதுநோக்குடையதாகத் திகழ்கின்றது. மணிமேகலை, பௌத்த சமய
மேம்பாட்டை உணர்த்துவதற்கென்றே எழுதப் பெற்றது. சீவக சிந்தாமணி சமணமே உயர்ந்தது என
நிறுவும் நோக்குடையது. வளையாபதி சமண நூல். குண்டலகேசி பௌத்தக் காப்பியம்.
ஐஞ்சிறு காப்பியங்கள் சமணம் சார்ந்தவையே என்பது குறிப்பிடத் தக்கது.
பெரியபுராணம், கந்தபுராணம், திருவிளையாடற் புராணம் என்பவை சைவ சமயம் சார்ந்தவை. இவை
முறையே சிவபெருமானின் வலக்கண், நெற்றிக்கண், இடக்கண் எனப் போற்றப் பெறுகின்றன.
கம்பராமாயணமும் வில்லிபாரதமும் வைணவம் சார்ந்தவை.
தேம்பாவணி, இரட்சணிய யாத்திரிகம், இரட்சணிய மனோகரம், இயேசு காவியம் ஆகியன கிறித்துவ
சமயத்தன.
சீறாப்புராணம் இசுலாமியக் காப்பியமாகும்.
தலபுராணங்கள் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் மூன்றன் பெருமையுரைப்பன. இவையும் காப்பியம்
எனத்தகும் தன்மையன. இவை எண்ணற்றன.
இருபதாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டனவாகிய புலவர் குழந்தையின் இராவண காவியம், கவிஞர்
முடியரசனின் பூங்கொடி ஆகியன முறையே தமிழினம், தமிழ்மொழி ஆகியவற்றின் சிறப்புரைக்க
வந்தனவாகும்.


6.2.3 உத்திமுறை


விரிவாகச் சொல்வதுடன், விளங்குமாறு சொல்வதும் காப்பியத்தின் இன்றியமையா இயல்புகள் ஆதலின்
பல்வேறு உத்திமுறைகளைப் பயன்படுத்த வேண்டியது காப்பியங்களின் தேவையாகின்றது.

தன்மையணி

துயரம் ஒன்று நேரும் என உணர்த்தும் பகுதி, உள்ளவாறு வருணிக்கப்படுகிறது.

குடப்பால் உறையா, குவிஇமில் ஏற்றின்
மடக்கணீர் சோரும் - வருவதொன்று உண்டு ;
உறிநறு வெண்ணெய் உருகா, உருகும்
மறிதெறித் தாடா - வருவதொன்று உண்டு ;
நான்முலை ஆயம் நடுங்குபு நின்றிரங்கும்.
மான்மணி வீழும் - வருவதொன்று உண்டு
(சிலப்பதிகாரம்)

உவமையணி

உவவனம் என்னும் மலர்வனம், ஓவியம் தீட்டிய போர்வையைப் போர்த்தியதுபோல் உள்ளது என்கிறது
மணிமேகலை.

வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினைச்
சித்திரச் செய்கை படாம்போர்த் ததுவே
என்பது அது.
உதயகுமாரன் செலுத்திய தேரின் வேகம்,
ஓடுமழை கிழியும் மதியம் போல
மாட வீதியின் மணித்தேர்க் கடைஇ
என உவமை கொண்டு உணர்த்தப்படுகின்றது.


தற்குறிப்பேற்றம்

மதுரையில் கண்ணகிக்கு நேரப்போகும் துயரினை அறிந்து, அதனால் தனக்குப் பெருகிய கண்ணீரைக்
கோவலனும், கண்ணகியும் அறியாவாறு பூக்களாகிய ஆடையால் மறைத்துக் கொண்டது வையை ஆறு
என்கிறது சிலம்பு. அப்பகுதி:
வையை என்ற பொய்யாக் குலக்கொடி
தையற்கு உறுவது தான்அறிந் தனள்போல்
புண்ணிய நறுமலர் ஆடை போர்த்துக்
கண்நிறை நெடுநீர் கரந்தனள் அடக்கி
(புறஞ்சேரி இறுத்த காதை)
.

பின்னோக்கு உத்தி

நடந்து முடிந்த நிகழ்வுகளை நினைவு கூர்தல் என்னும் அமைப்பில் கதை பின்னப்படும் முறை
பின்னோக்கு உத்தி எனப்படும்.
கோவலன் கொலைப்படுவதற்கு முன்பாக, அவனைக் குறித்துப் புகழ்கிறான் மாடல மறையோன்.
மணிமேகலைக்குப் பெயர் சூட்டிய நாளில், பரிசுபெற வந்த முதியவர் ஒருவரை யானை தன்
துதிக்கையால் பற்ற, உடனே ஓடிச்சென்று அவரை மீட்டு யானையை அடக்குகிறான் கோவலன். இதனால்
'கருணை மறவன்' எனப் பாராட்டப் பெறுகிறான்.
தன் குழந்தையைப் பாம்பிடமிருந்து காத்த கீரிப்பிள்ளையைத் தவறுதலாகப் புரிந்து கொண்ட
பார்ப்பனி, அதனைக் கொன்றதால் தன் கணவனால் புறக்கணிக்கப்பட்டபோது, வேண்டியன செய்து அவர்களை
ஒன்று சேர்க்கிறான் கோவலன். அதனால் 'செல்லாச் செல்வன்' எனப்படுகிறான்.
பொய்ச் சாட்சி கூறிய ஒருவனைச் சதுக்கப் பூதம் விழுங்க முற்பட்டபோது, கோவலன் அவனுக்காகத்
தன் உயிரைத் தரமுனைகின்றான். அவ்வுதவி ஏற்கப் பெறாமையால் அவன் குடும்பத்தைக் காக்கின்றான்.
இதனால் 'இல்லோர் செம்மல்' எனப்படுகிறான்.
இவற்றால் கோவலன் பெருமை கூடுகிறது; கோவலன்மேல் கற்போர்க்கு இரக்கம் பிறக்கிறது.

கனவுக் குறிப்பு

காப்பியங்களில் கனவுக் குறிப்பு, முன் உணர்த்தல் உத்தியாகப் பெரும்பாலும் கையாளப்
பெறுகின்றது. சிலம்பு, சீவகசிந்தாமணி, கம்பராமாயணம் எனப் பலவற்றிலும் இதனைப் பரக்கக்
காணமுடிகின்றது.
சிலப்பதிகாரத்தில், கோப்பெருந்தேவி, கோவலன், கண்ணகி ஆகிய மூவரின் கனவுகளும் சுட்டப்
பெறுகின்றன. அவற்றின்படி, அடுத்தடுத்த நிகழ்வுகளும் அமைகின்றன.
கோப்பெருந்தேவி கனவில், 'பாண்டியனின் வெண்கொற்றக் குடையும் செங்கோலும் வீழ்கின்றன;
வாயில்மணி அதிர்கிறது; எண்திசையும் அதிர்கின்றன; ஒளியை இருள் விழுங்குகிறது; இரவில்
வானவில் தோன்றுகிறது; பகலில் விண்மீன்கள் எரிந்து வீழ்கின்றன'.
கோவலன் கனவில், ஆடை கொள்ளப்பட்டு எருமைமீது அவன் ஊர்ந்து செல்கிறான்.
கண்ணகி கனவில், கோவலனும் கண்ணகியும் வேற்றூர் சென்ற நிலையில், பொய்ப்பழி தோன்றுதலும்,
கோவலன் தீங்குறுதலும், கண்ணகி வழக்காடுதலும், அரசனுக்கும் ஊருக்கும் அழிவேற்படுதலும்
தோன்றுகின்றன.
கனவும் ஒரு சகுனமாய் அமைகின்றது.

Raman Lingam

unread,
Nov 19, 2014, 10:34:50 AM11/19/14
to brail...@googlegroups.com
மகிழ்ச்சி ென்பது வெலியில் இல்லை மணத்தில் தான் ென்பதை சுட்டிக்காட்டியது அழகுணா
ramalingam

Professor k. kumar

unread,
Nov 19, 2014, 10:35:02 AM11/19/14
to brail...@googlegroups.com
கிசான் விகாஸ் பத்திரங்கள் விற்பனை: 100 மாதங்களில் பணம் இரட்டிப்பு
Posted by: Mayura Akilan
Published: Wednesday, November 19, 2014, 11:10 [IST]
Ads by Google
Brigade Palmgrove: Mysore
Well Planned, Premium 4-BR Villas in Bogadi Road, Mysore. Book Now!
www.brigadepalmgrove.com/Villas
Top Mutual Funds India
Stop Spending Time Doing Research. Invest in The Best Funds Every Year
www.scripbox.com
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்க
ஷேர் செய்ய
ட்வீட் செய்ய
ஷேர் செய்ய
கருத்துக்கள்
மெயில்
டெல்லி: கிசான் விகாஸ் பத்திரங்களில் செய்யப்படும் முதலீடு சரியாக 100 மாதங்களில்
இரட்டிப்பாகும் என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி கூறியுள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திரும்பப் பெறப்பட்ட கிசான் விகாஸ் பத்திர திட்டம்
மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய
நிதியமைச்சர் அருண் ஜெட்லி இத்திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார்.
கிசான் விகாஸ் பத்திரங்கள் விற்பனை: 100 மாதங்களில் பணம் இரட்டிப்பு
கிசான் விகாஸ் பத்திரம் ஆயிரம் ரூபாய், 5 ஆயிரம் ரூபாய், 10 ஆயிரம் ரூபாய், 50 ஆயிரம்
ரூபாய் ஆகிய முக மதிப்புகளில் விற்கப்படும். ஒருவர், இந்தப்பத்திரங்களை எந்த
எண்ணிக்கையிலும் வாங்கலாம். உச்ச வரம்பு எதுவும் கிடையாது என்று அரசு தெரிவித்துள்ளது.
மோசடியான முதலீட்டு திட்டங்கள் பக்கம் மக்கள் செல்வதைத் தடுக்க இத்திட்டம் உதவும் என
நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தப் பத்திரங்களில் செய்யப்படும் முதலீடு சரியாக 100
மாதங்களில் அதாவது 8 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்களில் இரட்டிப்பாகும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிசான் விகாஸ் பத்திரங்கள் ஆரம்பத்தில் தபால் அலுவலகங்கள் மூலம் விற்கப்படும் என்றும் பிறகு
பொதுத் துறை வங்கிகள் மூலமும் விற்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் நிதியமைச்சகத்தின்
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவரது பெயரில் இருந்து மற்றொருவர் பெயருக்கு இந்தப்பத்திரங்களை உரிமை மாற்றம் செய்து
கொள்ள முடியும் என்றும் இதனை பிணையாக வைத்து கடன் பெற முடியும் எனவும் அறிக்கையில்
கூறப்பட்டிருக்கிறது.
பத்திரத்தின் முதலீட்டுக் காலம் 100 மாதங்களாக இருந்தாலும் முதலீடு செய்த இரண்டரை
ஆண்டுகளுக்கு பின்பு, அதாவது 30 மாதங்களுக்குப் பிறகு இதிலிருந்து வெளியேறலாம்
என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நிர்ணயித்த காலத்துக்கு முன்பே வெளியேறினால்
முழுமையான பணப்பலன் கிடைக்காது ஆண்டுக்கு 8 புள்ளி 7 சதவிகித வட்டி தரும்
இத்திட்டத்திற்கு தற்போதைக்கு வரிச் சலுகை எதுவும் கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Topics:
kisan vikas patra, savings, finance minister, கிசான் விகாஸ் பத்திரங்கள், அருண்
ஜெட்லி, நிதி அமைச்சகம்

aranga. raja tamil

unread,
Nov 21, 2014, 7:16:29 AM11/21/14
to brailleacl, Valluvan Paarvai
விகடன் டைம்பாஸ்.

பெரியார் ஆவி மட்டும் பேச மாட்டேங்குது!
தமிழ்நாட்டில் அறிவியல் ஆராய்ச்சி நடக்கிறதோ இல்லையோ, ஊருக்கு ரெண்டு
பேராவது ஆவிகளை ஆராய்ச்சி செய்கிறார்கள். ஆவிகளை அழைத்துப் பேசவும்
செய்கிறார்கள். அப்படி என்னதான் ஆராய்கிறீர்கள் என மயிலாடுதுறையைச்
சேர்ந்த ஆவி ஆராய்ச்சியாளர்  ஆர்.ரமணியிடம் பேசினேன்.
''உலகத்துல இருக்கிற எல்லோருமே மரணத்துக்கு அப்புறம் ஆவிகள் உலகத்துக்கு
தான் போறாங்க. ஆவிகள் உலகம் உங்களைச் சுற்றி இருக்கிற நான்கு கிலோ மீட்ட
ருக்கு உள்ளேதான் இருக்கு (பார்ரா!). அந்த ஆவிகள் உலகத்துல பாவலோக
ஆவிகள், மத்தியலோக ஆவிகள், புண்ணியலோக ஆவிகள்னு மூணு விதமான பிரிவுகள்
இருக்கு. உயிரோட இருக்கும்போது மனிதன் எப்படி வாழ்கிறானோ அதுக்குத்
தகுந்தபடி, அவர்களுடைய மரணத்துக்கு அப்புறம் இந்த மூணு உலகத்துல ஓர்
உலகத்துக்குப் போவாங்க. பறவைகள், பூச்சிகள், விலங்குகள்னு எல்லா உயிரினங்
களுக்கும் தனித் தனி ஆவியுலகம் இருக்கு. மத்தியலோக ஆவிகள் நல்லதும்
பண்ணாது, கெட்டதும் பண்ணாது. புண்ணியலோக ஆவிகள் மனிதர்களோட சகஜமா பேசவும்
பழகவும் செய்யும். நம்மளைத் தொந்தரவு பண்றதெல் லாமே பாவலோக ஆவிகள்
மட்டும்தான். தவிர, நம்ம நாட்டுல இருக்கிற மாதிரி ஆவிகள் உலகத்திலேயும்
சட்ட திட்டங்கள் இருக்கு. இதெல்லாம் ஆவிகள் உலகத்துல நான் பயணப்பட்டு
தெரிஞ்சுக்கிட்ட விஷயங்கள்'' கொஞ்சம் டெரராகவே ஆரம்பித்தார் ரமணி.
''புண்ணிய லோகத்துல இருக்கிற ஆவிகள் மனிதனுக்கு ஏதாவது உதவிகள்
பண்ணிக்கிட்டே இருக்கணும்னு ஆசைப்படும். 'கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தாலும்
நான் செத்திருப் பேன்டா’னு யாராவது சொல்லியிருப்பாங்க. இதெல்லாம்
புண்ணியலோக ஆவிகளோட செயல்தான். பாவலோக ஆவிகள் பற்றி நான் சொல்லித்
தெரியவேண்டிய அவசியம் இல்லை. சினிமாவுல காட்டுற பெரும்பாலான ஆவிகள்
அதுகதான். இப்படி சக மனிதனுக்கு உதவணும்னு நினைக்கிற புண்ணியலோக ஆவிகளை
வெச்சு என்கிட்ட வர்றவங்களோட பிரச்னைகளைத் தீர்த்து வைக்கிறேன். தவிர,
எல்லா ஆவிகள்கிட்டேயும் நல்லா பேசி, பழகி என்னோட ஆராய்ச்சிகளுக்கும்
பயன்படுத்திக் குவேன்'' என்றவர், ''எனக்கு வழி காட்டுறதுக்கு ரமேஷ்ங்கிற
புண்ணியலோக ஆவி இருக்கு. அவர்தான் என்னை ஆவிகள் உலகத்துக்கு
கூட்டிட்டுப்போவார். அவர்கிட்ட உங்களுக்கு ஏதாவது உதவி கேட்டுப்
பார்க்கிறீங்களா?'' என்றபடியே அவருக்குள் ரமேஷை இறக்கிக்கொண்டார்.
'சொல்லுங்க தம்பி. என்ன உதவி வேணும்?’ எனக் கரகர குரலில் 'ஆவி’ ரமேஷ்
கேட்க, 'பெர்சனல் லோன் அப்ளை பண்ணியிருக்கேன். எப்போ கிடைக்கும்?''
என்றேன். கொஞ்சம் யோசித்துவிட்டு, 'இன்னும் ஐந்து மாசம் கழிச்சுதான்
கிடைக்கும்’ என்றது அந்த ஆவி. ''சரிங்க... நான் ரமணி கிட்ட பேசணும்.
நீங்க கௌம்புங்க'' என்று அந்த ஆவியை அனுப்பிவிட்டு ரமணியிடம் பேச்சைத்
தொடர்ந்தேன்.
''மனிதனோட நடுமூளையில என்டோபிளாசம்னு ஒண்ணு இருக்கு. அதோட லெவல் 50
சதவிகிததுக்கு  மேல இருந்தாதான் ஆவிகளோட பேசமுடியும். எனக்கு 100
சதவிகிதம் இருக்கிறதனால நான் ஆவிகளை நேரடியா பார்க்கவே செய்வேன். இதோ,
என்னைச் சுற்றி ஐந்து ஆவிகள் உட்கார்ந்திருக்கு. நீங்களும் நானும்
பேசிக்கிட்டு இருக்கிறதை அவங்களும் கேட்டுக்கிட்டு இருக்காங்க'' என்றார்
சீரியஸாக.  ''பிரபலங்களின் ஆவிகளிடம் பேசிய அனுபவங்கள் என்ன?'' எனக்
கேட்டேன்.
''அறிஞர் அண்ணா 'நான் நினைச்சது ஒண்ணு நடக்கிறது ஒண்ணா இருக்கு’னு
புலம்பினார். 'கட்சியில இருக்கிறவங்க நான் காட்டின வழியில நடக்காம அவங்க
இஷ்டத் துக்கு நடந்துட்டு இருக் காங்க’னு
எம்.ஜி.ஆர் ரொம்பவே வருத்தப்பட்டார். காமராஜரோ, 'நான் என்னென்ன நடந்துடக்
கூடாதுனு பயந்தேனோ, அதெல்லாம் நடக்குது’னு கோபப்பட்டார். பெரியார்கிட்ட
பேசணும்னு பல தடவை முயற்சி பண்ணிக் கூப்பிட்டும் வரவே இல்லை'' என்றவர்,
விடாமல் தொடர்ந்தார்.
''இதுவரை 30,000க்கும் அதிகமான ஆவிகள்கிட்ட பேசியிருக்கேன். மனிதர்களோட
உலகத்தைவிட ஆவிகள் உலகம் ரொம்ப சந்தோஷமானதா இருக்கு. சராசரி நண்பன்கிட்ட
பேசுற மாதிரி தினமும் அவங்களோட பழகுறேன். 'மனிதர்களை நம்புறதைவிட ஆவிகளை
நம்பிடலாம்’ங்கிற மனநிலைக்கு வந்துட்டேன். ஏன்னா, ஆவிகள்ங்கிறது
மாந்திரீகமோ, அமானுஷ்யமோ கிடையாது. அறிவியல். ஆவிகள் மனிதர்களுக்கு
அடுத்த பரிணாமங்களில் இருக்கக்கூடிய உயிரினங்கள்'' என்றார் ரமணி!
ஆத்தி. பயந்து வருது!
ஆகமொத்தத்துல மனுஷனுங்கக்கிட்ட வச்சிகிரதே இல்ல ம்ம்!

--
"தோல்வியின் அடையாளம் தயக்கம்!
வெற்றியின் அடையாளம் துணிச்சல்!
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர்" வென்றதில்லை!!.
நட்புடன்
ர. ராஜா. M. a, M ed, Phd'
முனைவர் பட்ட ஆய்வாளர்
தமிழ்த்துறை
மாநிலக் கல்லூரி
சென்னை 5.

Professor k. kumar

unread,
Nov 23, 2014, 1:01:01 AM11/23/14
to brail...@googlegroups.com
மிக அவசரம்!
கதையாசிரியர்: துடுப்பதி ரகுநாதன்
கதைத்தொகுப்பு: சமுகநீதி
கதைப்பதிவு: November 20, 2014
பார்வையிட்டோர்: 180





rating-89771559-5
Rate this
View More
+1
0
Tweet
0
Share

Like
0
அவிநாசி ரோடு லட்சுமி மில் சிக்னல். மஞ்சள் விளக்கு மாறி சிவப்பு விளக்கு விழ இரண்டு
நொடிப் பொழுது தான் இருக்கும்
வேகமாக வந்த ராஜேஸின் பைக் அதே வேகத்தில் பறந்தது. எல்.ஐ.சி. சிக்னல் வந்து கொண்டே
இருந்தது. சிவப்பு விளக்கு மாறிய அதே நொடியில் ராஜேஸ் சிக்னலைக் கடந்து விட்டான். ஆனல்
பச்சை விளக்கு வரும் அதே நொடியில் பார்க் பக்கம் இருந்து வேகமாக வந்த கார், ‘சடர்ன்
பிரேக்’ போட்டதால், ஒரு விபத்து தவிர்க்கப்பட்டது!
ராஜேஸுக்கு அதை எல்லாம் கவனிக்க நேரம் ஏது?..அவன் அதை கண்டு கொள்ளவே இல்லை! அவனுக்கு
என்ன அவசரமோ? தலை போகும் காரியமாக எங்கு அப்படி பறந்து போகிறானோ?
உப்பிலி பாளையம் சந்திப்பு. ராஜேஸின் பைக் சிக்னலை நெருங்கு முன்பே சிவப்பு விளக்கு
விழுந்து விட்டது!. பச்சை விளக்கைப் பார்த்து மேம்பாலத்துப் பக்கம் இருந்து வரும்
வண்டிகளுக்கு முன்பாகப் போய் விட முடியும் என்ற நம்பிக்கையில் வேகமாக சிக்னலை கடக்க
முயற்சி செய்தான்!
ராஜேஸைப் போல, ஒரு மாதேஸ் பாலத்திற்குப் பக்கமிருந்து பச்சை விளக்கு விழும் முன்பே
பறந்து வந்தான்!
“ டமார்! ”
aclk sa=L&ai=CowHhb3VxVJ2aIczT…

போக்குவரத்து ஸ்தம்பித்தது! …….இரண்டு டூவீலர்களையும் அப்புறப் படுத்த சிறிது நேரம்
ஆனது!……அதற்குள் 108 வந்து விட்டது! அடிபட்டவர்களை அள்ளிப் போட்டுக் கொண்டு அரசு
மருத்துவமனைக்குப் போனது!
aclk sa=L&ai=CjBpab3VxVJ3vKIin…

அங்கு கூட ‘மிக அவசரம்’ பகுதிக்குத் தான் ராஜேஸைக் கொண்டு போனார்கள்.!
டவுன் ஹால் திரை அரங்கில் அன்று ராஜேஸ் வருகையைப் பற்றி கவலைப்படாமலேயே அவனுடைய
அபிமான ஹீரோ வின் திரைப் படம் அன்று ரீலீஸ் ஆனது!

Professor k. kumar

unread,
Nov 23, 2014, 1:06:33 AM11/23/14
to brail...@googlegroups.com
நெஞ்சுக்கொம்பு
கதையாசிரியர்: ம.நவீன்
கதைத்தொகுப்பு: சமுகநீதி
கதைப்பதிவு: November 20, 2014
பார்வையிட்டோர்: 104





rating-87962723-5
Rate this
Error: Bad Request
Your client has issued a malformed or illegal request.
ஓலம்மா அலறல் அன்று வேறு மாதிரி ஒலித்தது. வழக்கமாக அது கழுத்தறுந்த ஆட்டின் கடைசி
உயிர் வேட்கை போல உள்ளிருந்து வெளியே பிளிரி பின் அடங்கும். அம்மா அப்போது என்ன வேலை
செய்துகொண்டிருந்தாலும் போட்டதைப் போட்டபடி குசினிக் கதவைப் பரபரப்புடன் திறப்பாள்.
குசினிக் கதவுக்கு மூன்று தாழ்ப்பாள்கள். அதை இணைப்பதற்கும் கழட்டுவதற்கும் விசேட உக்திகள்
இருந்தன. தாழ்ப்பாளை போடும்போது கீழிறிருந்து தொடங்கி படிப்படியாக மேலேற வேண்டும்.
கழற்றும்போது நடுவில் தொடங்கி கீழே தொடர்ந்து முதல் தாழ்ப்பாளில் முடித்தால்தான் கதவு
திறக்கும்.
அது கதவின் தவறு இல்லை.
குசினிக்கதவை பொறுத்தியபோது மொச்சை போதையில் இல்லை. அப்பா எவ்வளவோ அவரை
வற்புறுத்தியும் “சனிக்கிழம சாராயம் குடிக்கிறதில்ல ஐயாவு” என அழுத்தமாக
மறுத்துவிட்டார். விளைவு அவரைப் போலவே குசினிக் கதவும் கோணலாகிவிட்டதாக அப்பா
ஊதியத்தில் பத்து வெள்ளியைப் பிடித்துக்கொண்டார். மொச்சை அதுக்கெல்லாம் அப்போது
கவலைப்படவில்லை. திருநீரை தண்ணீரில் குழைத்து நெற்றியில் அப்பியிருப்பார் போல. பக்தி
மாறாமல் எஞ்சிய தொகையை அப்பாவிடமிருந்து பெற்றுக்கொண்டு கண்ணில் ஒத்திக்கொண்டார்.
சனிக்கிழமை மட்டும்தான் அவர் சமத்து. ஞாயிறு வட்டியும் முதலுமாக படு சூரோடு மீண்டும்
வீட்டின் முன் ஆஜராகி பத்து வெள்ளிக்கு அதிகமாகவே கொச்சை வார்த்தைகளை எங்கள்
குடும்பத்துக்கே சொல்லிக்கொடுத்துவிட்டுப் போனார்.
***
ஓலம்மாவின் அலறல் இம்முறை தொண்டையிலேயே சிக்கிக்கொண்டு பின்னர் தம்பிடித்து வெளிவந்து
மிஞ்சிய ஓலம் எங்கள் வீடு வரை தவழ்ந்து வந்து சேர்ந்தது. பின்வாயிலில் பொத்துக்கொண்டுவரும்
அம்மாவைப் பார்த்ததும் சாக்கடையைத் தாண்டாமலேயே தலையை அடித்துக்கொண்டு புல்லில் அமர்ந்தாள்.
வழக்கமாகச் சாக்கடையைத் தாண்டுவதுதான் அவள் கொய்தியோ மணியத்திடம் தப்பிக்கும் ஒரே உபாயம்.
எங்கள் இரு வீட்டுக்குமான எல்லைச் சுவர் அது. வயது முதிர்ந்து, கண்பார்வை மங்கிய பின்பும்
உயிர் பயத்தால் அவளால் விரைவாகவே மரப்பாலத்தைத் தாண்ட முடிவது ஆச்சரியமாக இருக்கும்.
எவ்வளவு போதையில் இருந்தாலும் கொய்த்தியோ மணியம் அந்தச் சாக்கடையைத் தாண்டி வந்து
ஓலம்மாவை அடிப்பதில்லை. ராஜநாகங்கள் தங்கள் இணைக்காக எவ்வளவு மூர்க்கமாகச் சண்டையிட்டாலும்
மூன்று அடிக்குமேல் தலையைத் தூக்குவதில்லை என்ற நிபந்தனையை வைத்திருப்பது போலதான்
அவரும். கொய்த்தியோ மணியமும் ராஜநாகம் போலதான்.
கள்ளுக்கடை தைக்கோவாகத்தான் கொய்த்தியோ மணியம் பொது வாழ்க்கைக்கு அறிமுகமானார். முழு
பியர் போத்தல் ஒரு ரிங்கிட்டுக்கும் முக்கால் போத்தல் 75 காசுக்கும் விற்கப்பட்ட சூழலில்
கொய்தியோ மணியம் போன்ற தினக்கூலிகளுக்கு ஒரு குவளை 35 காசுக்கு விற்கப்பட்ட கள்ளே
சாத்தியப்பட்டது. சாராயம் அவருக்குச் சரிபடாது. உடலை குழைக்கும் எதிலும் அவருக்கு
அப்போது ஆர்வமில்லை. யூ.பி. தோட்டத்தில் அன்றைய ஆனந்தகிருஷ்ணனாக அறியப்பட்ட ஆறுமுகம்
பிள்ளையை எதிர்த்ததால் அவர் நாடு கடத்தப்பட்டவர் என்று கம்பத்தில் பொதுவாக ஒரு பேச்சு
உண்டு. ஒரே மாநிலத்தில் இருந்த இன்னொரு தோட்டத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டதற்கு
‘நாடு கடத்தப்பட்டவர்’ என்ற பதம் முதலில் குழப்படியாக இருந்தாலும் கொய்தியோ மணியத்தைப்
பற்றிப் பேசும் போது அவர் மேல் ஓர் இனம் புரியாத அச்சத்தை உண்டு பண்ண அந்தக் குறிப்பு
துணையாக இருந்ததால் அப்படியே விட்டுவிட்டார்கள்.
aclk sa=L&ai=CvSEEqXdxVJKIHo6u…

கொய்த்தியோ மணியம் எவ்வளவு கள் குடித்தாலும் 35 காசுதான் விலை. யார் என்ன இறைச்சிக்கு
ஆர்டர் கொடுத்தாலும் அதில் ஒரு பிளேட் கொய்த்தியோ மணியத்தின் மேசைக்கு வந்து விடும்.
கள்ளுக்கடைக்கு வருபவர்கள் தொலைவிலேயே கொய்த்தியோ மணியம் இருக்கிறாரா எனப்
பார்த்துவிட்டே நுழைவர். பலவீனமானவர்களுக்கு அவர் இருப்பு பாதுகாப்பு. சில்லரை ரௌடிகள்
சூராகும் முன்பு வாலைச் சுருட்டி வைத்துக்கொள்ள வேண்டும் என மன ஆழத்தில் மனனம்
செய்துகொள்வர் அல்லது அவர்களின் வீரிடும் ஆற்றல் கொப்பளிக்கும் முன்பே அவ்விடத்தை விட்டு
அகன்று விடுவார்கள். ஆறடிக்குக் குறையாத உயரம், அகன்ற மார்பு, உரமேறிய கரங்கள் என உடல்
முழுவதும் திமிரைப் பொருத்தியிருக்கும் கொய்த்தியோ மணியத்திடம் மல்லுக்கட்ட
செட்டிக்கம்பத்தில் ஒருவரும் இல்லை. சட்டென மேலேறி துரிதமாக இணையும் புருவங்களும்
காலில் தொடங்கி தலை வரை சுருண்டிருக்கும் மயிரும், வயிற்றுப்பகுதியின் கட்டான மடிப்பும்
சமாதானப் பேச்சுக்குக் கூட அச்சமூட்டுபவை. கள்ளுக்கடைக்குக் கொய்த்தியோ மணியம் அதிகமே
தேவைப்பட்டார்.
கடைகளுக்கு அரிசி மூட்டையை இறக்குவதுதான் மணியத்தின் வேலை. அப்போதெல்லாம் ஒரு மூட்டை
நூறு கிலோ. வழக்கமாக ஒரு மூட்டையத் தூக்க இரண்டு பேராவது மெனக்கெடுவர். ஆனால் அவர்
ஒற்றை ஆளாக மூட்டையைப் பரபரவென இறக்கி விடுவார். சம்பளம் போக சீன தௌக்கே பக்கத்துக்
கடையில் மணியத்துக்குக் கொய்த்தியோ வாங்கி கொடுப்பான். அப்போதெல்லாம் கொய்த்தியோ கோரிங்
விரிந்த பரப்பளவைக் கொண்ட ஒரு காட்டு இலையில்தான் பரிமாறப்படும். மணியத்துக்காகப்
பிரட்டப்படும் கொய்த்தியோவில் கூடுதலாக பன்றிக் கறியும் காரமும் சேர்க்கப்பட்டு சட்டியில்
கதறும். சீனர்கள் பொதுவாகவே காரம் விரும்பாதவர்கள். கொய்த்தியோ மணியம் ‘லாகி தம்பா’ என
மிளகாய் சாந்தை அதிகரிக்கச் சொல்லும் போது, பிரட்டுபவன் உட்பட அமர்ந்திருக்கும்
சீனர்களுக்கும் குதம் எரியும். எத்தனை பிளேட் சாப்பிட்டாலும் தௌக்கே பணம் செலுத்தி
விடுவான் என்பதால் பல ரவுண்டுகள் ஓடும் கொய்த்தியோ கோரிங். இதனால்தான் அவருக்குக்
‘கொய்த்தியோ’ என்ற அடைமொழி வந்ததாக லுனாஸ் வரலாற்று ஆசிரியர்கள் சாராயம் குடித்தபின்
பேசிக்கொள்வதுண்டு.
கொய்த்தியோ மணியத்துக்கு நண்பர்கள் இல்லை. சிஷ்யப்பிள்ளைகள் மட்டும்தான். எப்போதாவது மணியம்
அவர்களுக்கு சிலம்பம் சுற்றச் சொல்லிக் கொடுப்பார். சொல்லிக் கொடுப்பார் என்பதைவிட சுற்றி
சிஷ்யப்பிள்ளைகளை அமர வைத்து அனல் பரக்க ஒரு தரம் கழியைச் சுழற்றிக் காட்டுவார்.
குறிபார்த்து லஸ்டிக்கில் குருவி அடிக்கத்தெரியாத சிஷ்யப்பிள்ளைகள் “துப்பாக்கி தோட்டாகூட
மணியத்தோட கம்ப தாண்டி போகாது டோ” என கூச்சலிடுவார்கள். உண்மையில் மணியத்தின் கழி
வேகம் அசாத்தியமானதுதான். அதை கவனமாகப் பார்த்திருந்து சிஷ்யர்கள் சுழற்ற வேண்டும்.
விளையாட்டாகச் சுழற்றத் தொடங்கி சிஷ்யப்பிள்ளைகள் ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்வார்கள்.
மணல் பரக்க, சிலம்பக் கம்பின் வீச்சு ‘சொய்ங் சொய்ங்’ என உக்கிர ஓசையில் கண்ணில் அகப்படாமல்
சுழல , மோதிக்கொள்ளும் கழிகளின் ஓசை பற்களை நடுங்க வைக்கும். அப்படி கழியுடன் கழி
மோதும் சத்தம் இல்லாமல் வேறு விதமான ஓசை எழுந்தால் மோதியவர்களில் ஒருவனின் உடலில் ஏதோ
ஒரு இடம் செத்துவிட்டதென பொருள். மணியத்துக்கு அதுதான் பொழுதுபோக்கு. கைதட்டி
ஆரவாரமாகச் சிரிப்பார். ஆனால் உண்மையான சண்டையென வந்துவிட்டால் அவருக்கு ஆயுதமெல்லாம்
தேவைப்பட்டதே இல்லை.
கூர்மையான ஆயுதங்களைக் கூட வெறுங்கையில் தடுக்கும் லாவகம் தெரிந்தவர் கொய்த்தியோ மணியம்.
இரு கருவிழிகளும் தன்னை நோக்கி வரும் எந்த ஆயுதத்தையும் கனநேரத்தில் அளந்து அதன் போக்கை
அறிந்து விலகவும் தடுக்கவும் திருப்பவும் கரங்களுக்குக் கட்டளையிடும் கூர்மைகொண்டிருந்தன.
கை மூட்டுகள் ஒவ்வொன்றும் ஆட்டுக்கொம்புகள் போல நீண்டு மிரட்டும் மணியத்துக்கு. கம்பத்தில்
சகஜமாக உலவும் நாகங்களின் நஞ்சு அவர் உடலில் பரவாமல் இருக்கவும் உடலில் தினவு
நிரந்தரமாக தங்கியிருக்கவும் ஏதோ ஒருவகை இரகசிய மூலிகையைக் காட்டில் பரித்து
உண்கிறார் என அவரது சிஷ்யப்பிள்ளைகள் கூறுவதுண்டு.
அவர் போட்ட சண்டைகளில் மிகப் பிரபலமானது சூத்து சண்டை. செண்ட்டு போர்ட்டை ஓட்டி வந்த
இளைஞன், கோயில் உபயத்துக்காக வந்து இருட்டுவதற்குள் ஊர் சேர குறுக்குப் பாதையில் தணித்து
நடந்த வெளியூர் இளம் பெண்ணின் பிட்டத்தைத் தட்டப்போக அவள் ஊரைக்கூட்டிக் கத்தத் தொடங்கினாள்.
செண்ட்டு போர்ட்டுக்காரன் முதலில் வண்டியில் குப்பையை ஏற்றாமல் ஊரைவிட்டு ஓடிவிடலாம்
என்றுதான் நினைத்தான். ஆனால், உடல் முழுதும் பருவம் பூத்திருந்த ஒருத்தி இவ்வளவு
கத்தியும் யாரும் அப்பக்கம் வராத நிசப்த சூழல் மேலும் ஆர்வத்தைத் தூண்டியிருக்க வேண்டும்.
கூட வந்த இரண்டும் கெட்டான் வயது சிறுவனின் துணையுடன் அவளை வண்டியில் ஏற்றி குப்பை மீது
கிடைத்தினான். சிறுவன் ‘வேணாமண்ணா வேணாமண்ணா ‘ எனச் சொல்லிக்கொண்டே காட்சியை ஆர்வமாக
பார்த்ததோடு குப்பைக்குள் கிடந்த கயிற்றை எடுத்து அவள் காலைக் கட்ட முனைந்தான்.
“அஞ்சடிக்கார நாய… இதுக்கு கால கட்டினா வேலையாவுமா மசிரே… வாய கட்டுடா” என இளைஞன்
கத்தவும் கயிறு இடம் மாறியது.
ஒரு முரட்டு ஆடு குப்பை லாரியில் திணறுவதைப் போல லாரி குலுங்கவே அவ்வழியாக வந்த
கொய்த்தியோ மணியத்துக்குச் சந்தேகம் வந்திருக்க வேண்டும். அவர் உயரத்துக்கு லாரியை எக்கிப்
பார்க்கவெல்லாம் சிரமப்பட வேண்டியதாய் இல்லை. ‘சத்தேரிக்க…’ என அவர் உள்ளே எகிரி
குதிக்க, குறியில் ரத்தம் ஒழுக ஓடிய செண்ட்டு போர்ட்டுக்காரன் உதவிக்கு வந்த யாரிடமும்
உண்மையைச் சொல்லாமல் கதறியழுததாக மட்டுமே பின்னாளில் செய்தி கிடைத்தது. காரியமாய்
குறியை பிடித்துக்கொண்டு நின்ற சிறுவன் , இச்சம்வத்துக்குப் பின் சுருங்கிப்போக லபக்கென
அதை கால்சட்டையினுள் விட்ட பின்பும் கொய்தியோ மணியத்தின் முழு அறையிலிருந்து தப்பிக்க
முடியவில்லை. “ஆத்தா…” என அலறியபடி லாரிக்கு வெளியே விழுந்தான். கலைந்திருந்த
உடையோடு அந்த இளம்பெண் கையெடுத்து நன்றியோடு கூம்பிட, கொய்தியோ மணியம் அவள் இரு
கரங்களையும் தன் ஒரு கையால் அடக்கி அவள் மேல் படர்ந்தார். வெளியிலிருந்து அரைமயக்கத்தில்
பார்த்த சிறுவனுக்கு ஒரு மத யானை குப்பை லாரியில் திணறுவதைப் போல இருந்தது.
ஊர் பஞ்சாயத்தின் முடிவுபடி அப்பெண்ணை திருமணம் செய்ய கொய்த்தியோ மணியத்துக்குத்
தடையொன்றும் இருக்கவில்லை. “மேரா எஸ்டேட்டுல அவய்ங்க என்னா அளுங்கன்னு தெரியுமா மணியம்?
” என மட்டும் பஞ்சாயத்தில் ஒரு தரம் எச்சரிக்கை குரல் எழுந்தது. பெண்கள் விசயத்தில்
கொய்த்தியோ மணியத்துக்கு சாதியெல்லாம் ஒரு இடையூரே இல்லை. இன்னும் சொல்லப்போனால்
கொய்த்தியோ மணியத்துக்கு அப்போது பெண்ணின் வாசனை அவசியமாய் இருந்தது. அவரது இரவுகளைக்
கொடூரமாய் விரித்துக்காட்டும் வயது அப்போது. “கோழி பழசா இருந்தா என்ன… பறையா இருந்தா
என்னா அப்பு… கொழம்பு ருசிக்குதே”. பெண் வீட்டார் முதலில் மறுத்தனர். ஆனால் அவர்களால்
அதற்குப் பின் தங்கள் தோட்டத்தில் நுழைய முடியவில்லை. வெறுத்த வாழ்வோடு அத்தோட்டத்தில்
காலடி வைத்ததும் முனியாண்டி கோயில் பூசாரிதான் உடலை முறுக்கி முதலில்
அலரத்தொடங்கினார். மண்ணை அள்ளி அவர்களை நோக்கி வீசி அடித்தார். நாக்கை வெளியே
தொங்கப்போட்டவாரே புரியாத சப்தங்களை எழுப்பி முறைத்தார். முனியாண்டி சாமியின் மொழியைப்
புரிந்துகொண்ட ஊர் பெருசு, கன்னி கழிஞ்ச பெண் அதை கழிச்சவனோடுதான் வாழவேண்டும் எனவும்
அப்படி இல்லாத பட்சத்தில் தோட்டத்துக்கே பெஞ்சாதியாக வாழலாம் எனவும் குறியைச் சொறிந்தபடி
கூறினார். சூழ்ந்திருந்த ஒத்துஊதிகளும் ‘ஆமாமா’ என அவளின் சதைப்பற்றை வெறித்தபடி
கூவினர். சாவு செய்தி சொல்பவனின் மகளுக்கு அதுவே அவர்கள் காட்டும் அதிகபட்ச கருணையாக
இருந்தது. பெற்றவர்கள் கொய்த்தியோ மணியத்திடமே அவளை தலைமுழுகினர். மணியத்தின் பிடியில்
அகப்படாமல் மண்வாரி இறைத்தப்பின்தான் ஊர் திரும்பினர்.
Gardening Tips & Supplies
One Stop Shop For Gardening Needs Install Free Gardening Toolbar Now!


www.gardeningenthusiast.com


ஆனால், அவளை கல்யாணம் செய்ய இருந்த ஒடிசலான தாய்மாமன் நியாயம் கேட்க, கம்போங் செட்டிக்கு
வந்ததும்தான் சிக்கல் சண்டையில் முடிந்தது. வந்தவன் சதையில்லாதவன். பேச்சு பேச்சாக
இருக்கும்போதே கொய்தியோ மணியம்தான் முதலில் அவன் சட்டையை கிழித்தெரிந்து தோலைப்
புடைத்துக்கொண்டு தெரிந்த எலும்புக்கூட்டை பார்த்துச் சிரித்து “பள்ளிக்கூட புள்ளைங்க
கணக்கு பண்ணலாம்டெ” என அவமானப்படுத்தினார். முன்மண்டை மூக்கைத் தாண்டி இருந்ததாம்
தாய்மாமனுக்கு. முதலில் சாதாரணமாக இருந்த அவரின் ஒற்றைநாடி உடம்பில் உஷ்ணம் ஏறியவுடன்
திடீரென ஒரு மாற்றத்தை ஊரார் பார்த்துள்ளனர். “நல்ல கூரான கத்திய எடுத்து முதுவு பக்கம்
சொறுகிவிட்டு அதோட முனை நெஞ்சை துருத்தியமாதிரி மாரோட தோலை தள்ளிக்கிட்டு கூரா
நிக்கிதோன்னு இருந்துச்சி, அந்த ஆளோட சட்டை கிழிஞ்சி போயி கொய்தியோ மணியத்தை எதுத்து
நின்னப்ப. அத்தன அடி வாங்கியும் எதுத்து நிக்கிறான். அவன் நெஞ்சுக்கூட்டை ஊரே பார்க்குது.
எங்கேருந்துடா இவனுக்கு புதுசா ஒரு எலும்பு பொத்துக்குட்டு வந்துருக்குன்னு
முழிக்கிறாங்க. கோவத்துல மணியம் எதையும் எங்கனயும் சொருவிட்டாரோன்னு கூட
பேசிக்கிட்டாய்ங்க… ஏதோ காண்டா மிருகத்தோட கொம்பாட்டம் நெஞ்சிக்கு நடுவுல நீட்டிக்கிட்டு
நிக்குது ஒத்த எலும்பு… அதெல்லாம் பொறப்பு” அம்மா சின்னப்பிள்ளையில் பார்த்த சண்டையின்
மனப்பதிவை முன்பு ஒருதரம் சொல்லியிருக்கிறாள்.
என்ன எலும்பு துருத்தி நின்றாலும் கொய்தியோ மணியத்திடம் பலிக்குமா? “என்னடா கீழ நீட்ட
வேண்டியத நெஞ்சில நீட்டிக்கிட்டு” என நடுநெஞ்சில் மிதிக்க மூச்சடைத்து சரிந்தவனை
உள்ளூர்வாசிகளே காப்பாற்றினர். நீட்டியிருந்த கத்தி எலும்பு கொய்த்தியோ மணியத்தின் விரலை
தீண்டியிருக்க வேண்டும். கொஞ்ச நேரம் மணியம் காலைப் பிடித்து அமர்ந்தார். பின்னர் விரலை
பரக் பரக்கென மண்ணின் தேய்த்து நொண்டுவதை மறைக்க சிரமப்பட்டு நடந்தார். அதற்குப்பின்
தாய்மாமன் அவ்வூர் பக்கம் வரவே இல்லை. அவமானம் கப்பிய முகத்துடன் அவள்தான் கம்பத்தில்
நுழைந்தாள். நிதானமான ஆனால் அழுத்தமான நடை. வெற்றுக்காலில் பூமி அதிர அவள் வைத்த
அடியில் விழுந்த நிலத்தின் வடு இறுக்கமும் திடமும் நிரம்பியுள்ளதாக மாரியம்மன் கோயில்
பூசாரி அன்று இரவு போதையில் உளறினான். “வந்தது யாருண்ணு நெனச்சிகினீங்க… ஆத்தா டே…
அருள் வந்த ஆத்தா பூமியில வைக்கிற அடிடே அது”. பிட்டத்தில் அடித்ததிலிருந்து
உருவாகிய சண்டையில் மணியத்துக்குத் திருமணம் நடந்ததால் ‘சூத்து சண்டையை’ ஊரில் யாரும்
மறக்கவில்லை. அந்தச் சின்னஞ்சிறிய வீட்டுக்குள் ஓர் இளம்பெண் துணி மூட்டையுடன் நுழைந்த
தினமே கொய்த்தியோ மணியத்துக்கு திருமண நாள் ஆனது. ஆனாலும் குழந்தை பிறப்பேனா என
ஐந்து வருடங்களாகியும் அடம் பிடித்தது.
வந்த சில நாள்களிலேயே ஓலம்மா சில அன்னாசி செடியை நட்டுவைத்தது கம்பத்துக்குப் புதிது.
பெரும்பாலோர் அதுவரை அன்னாசி செடியைப் பார்த்ததே இல்லாததால் தொட்டுப்பார்க்கிறேன் என
ரம்பம் போன்ற அதன் இலைகளில் காயப்பட்டுக்கொண்டனர். ஓலம்மாவை அன்னாசி விரும்பியாகவே
கம்பத்தில் பலர் குறிப்பறிந்து வைத்திருந்தனர். அவளும் வீட்டைச்சுற்றிலும் அதன் இனத்தைப்
பெருக்கினாள். அனேக நேரங்களில் அவளது நேரம் அன்னாசிச்செடிகளுடன்தான் கழிந்தது. ஆனால்,
அதில் கிரீடம் வைத்த அரசன்போல மஞ்சள் ஒளிவீசும் அன்னாசி பழத்தைக் கம்பத்தில் யாரும்
கண்டதில்லை. “என்ன அங்கலாப்பு புள்ள… நீ வாயில வைக்கிறதுக்குள்ள நாங்க நாக்க
வச்சிருவோமாக்கும்…” என கனியும் முன்பே காயைத் திண்ணும் அவளை சிலர் இடிப்பதுண்டு.
செடியைப் பார்க்க அவர்களுக்கு அனுமதி உண்டே தவிர காயைப் பழமாக்குவது பற்றி யாராவது
கேட்டுவிட்டால் கேட்டவர்கள் கண்ணில் இருந்து மறையும் வரை முறைப்பாள். ஓலம்மாவின் சில
செயல்களைப் புரிந்துகொள்ள முடியாமல்தான் கம்பத்துவாசிகளுக்கு இருந்தது. ஒவ்வொரு மாதமும்
ஓலம்மா தூமை துடைத்த கைலியை வீட்டு வாசலில் காயப்போடுவதை கம்பமே அருவருப்பாகப்
பேசினாலும் மணியம் வீட்டு விவகாரத்தில் தலையிட யாருக்கும் துணிவில்லை. மணியம் வீட்டைக்
கடப்போரெல்லாம் சற்று சங்கடமாகவே பார்வையைத் திருப்பிக்கொள்ள ஒரு எதிர்க்கட்சி கொடியின்
கம்பீரத்துடன் காற்றில் படபடக்கும் தூமைத் துணி.
மற்ற சங்கதி என்றால் மணியம் கொஞ்சம் காரசாரமாகவே அணுகுவார். குழந்தை விசயம் அவர்
நினைப்பது போல இல்லை. பெருசுகள் ஆலோசனை பேரில் டவுனில் டாக்டரைப் பார்த்துவர மூட்டை
முடிச்சோடும் மனைவியோடும் கிழம்பியவர் இரண்டு நாள்களுக்குப் பின் தனியே திரும்பினார்.
குறைத்துபேசும் மணியம் மௌன சாமியாரானது அனேகமாக அதற்குப் பிறகுதான். ஒரு மாதம்
கழிய சில தினங்கள் இருக்கையில்தான் அவள் இரவோடு இரவாக வந்து சேர்ந்தாள். மணியம்
எதுகுறித்தும் வாய் திறக்காதது கம்பத்துக்கே ஆச்சரியமாக இருந்தது. கேட்பவர்களிடம்
அப்படியே குலதெய்வ வழிபாட்டுக்குப் போனதாக அவள் சொல்லி வைத்தாள். திரும்பி வந்த இரு
மாதங்களில் அவள் கர்ப்பமானாள். தாய்வீடு செல்லாமல் கம்பத்தில்தான் குழந்தை பெற்றுக்கொண்டாள்.
முதல் குழந்தைக்கு ஓலை எனப் பெயரிட்டாள். மணியம் பெயர் சொல்லி அழைக்காமல் ஊரும் அவளை
கொய்த்தியோ பெஞ்சாதி என அழைத்து வந்தச் சூழலில் ஓலை பிறந்ததும் ஓலையின் அம்மா என்பது
ஓலம்மா என அவளுக்குப் பெயராக மாறியது. ஓலை பிறந்ததிலிருந்து அவள் முற்றிலும்
மாறியிருந்தாள். நடந்த மண்ணில் தடங்கள் இல்லை. தூமை கைலிகள் தொங்கவில்லை.
மணியத்திடமும் நிறைய மாற்றங்கள் இருந்தன. ஓலம்மாவை அடிக்கத் தொடங்கியதெல்லாம் அதற்குப்
பின்தான். “புள்ள பொறந்தோனே ஆம்பளய விட்டு வெலவ சொல்லும் ஒடம்பு… கொஞ்சம் அணுசரிக்கோ…
அடியெல்லாம் அதுவாயிடுமுல்ல” என அவளுக்கு மாத்ருபூதிகள் ஆலோசனை சொல்லாத நாளில்லை.
இள வயதில் ஓலம்மா எவ்வளவு அடியையும் தாங்குவாளாம். ரத்தம் ஒழுகினாலும் சத்தம்
வருவதில்லை. மூப்பு அவளை சோர்வடைய வைத்திருந்தது. அவள் ஆதரவு தேடி ஓடுவதெல்லாம்
மூப்பின் தளர்வில்தான்.
***
ஓலம்மாவின் அலறலை அம்மா சின்ன வயதிலிருந்தே பார்த்து வருகிறாள். நான் பிறந்த பின்பு
ஏதாவது குறும்பு செய்தால் கொய்த்தியோ மணியத்திடம் பிடித்துக்கொடுத்து விடுவதாகவே
பயமுறுத்துவார். பள்ளிக்குச் செல்ல நான் அவர் வீட்டைக் கடந்தாக வேண்டும். வீட்டினுள் எப்போதும்
இருண்டிருக்கும். மணியமோ ஓலம்மாவோ அதனுள் இருந்து நான் பார்த்ததில்லை. அனேகமாக அவர்கள்
அதை படுக்க மட்டும்தான் பயன்படுத்துவார்கள் போல. வெளி வரண்டாவில்தான் மணியம்
அமர்ந்திருப்பார். ஒரு பெரிய பிடி குவளை அருகிலேயே இருக்கும். அதில் எப்போதும்
ஏதாவது ஒன்றை ஊற்றி பருகிக்கொண்டே இருப்பார். அவர் உறுமும் தோரணையைப் பொருத்து அது
என்னவாக இருக்கலாம் என ஊகித்துவிடலாம். கள் குடித்திருத்திருந்தால் நா பிரளாது.
சாராயம் என்றால் உறுமல் அதிகமாக இருக்கும். அந்தச்சின்ன சத்தத்தைக் கொண்டு கொய்த்தியோ
மணியத்தின் மொத்தக் குரலையும் கற்பனை செய்துக்கொள்வேன். புலியில் உறுமல் அது.
அப்படியானால் அன்று ஓலம்மாவுக்கு கச்சேரி இருக்கிறது என்று அர்த்தம். தொடக்கத்தில் சாராயம்
குடிக்காமல் இருந்த அவர் பியர் மற்றும் கள்ளின் விலை கிடுகிடுவென உயர, இதையே மாற்று
வழியாகத் தேடிக்கொண்டார் என சிலர் சொன்னாலும், 35 சதவிகிதத்துக்கு அதிகமாக இருக்கும்
போதையினால்தான் மணியம் மலிவான சாராயத்தை நாடுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறின.
முதுமைக்குப் பின் அரிசி மூட்டை தூக்கும் வேலை தடைப்பட அவ்வப்போது வேட்டையில் கிட்டும்
சம்பாத்தியமே இரு வயிற்றுக்கு தீவனம் கொடுத்தது.
ஒரே புத்திரன் ஓலையால் அக்குடும்பத்துக்குச் சம்பாத்தியம் ஒன்றும் இல்லாத நிலையில் ஓலையை
ஊரில் உள்ளவர்கள் பரிதாபத்துடன் பார்ப்பார்கள். எந்த நேரமும் சாராயத்தில் மிதப்பான்.
ஒட்டினால்போல உடல். எப்போதும் பேச்சில் தெளிவிருக்காது. தாயின் வழிக்காட்டலில் லுனாஸில்
சாவு செய்தி சொல்வதை தனது தொழிலாக அவரே ஏற்றுக்கொண்டான். ஒவ்வொரு முறையும் சாவு
செய்தி சொல்லும் வீடுகளிலும் சாவு விழுந்த வீட்டிலுமாகச் சேர்த்து எப்படியும் பத்து
ரிங்கிட்டுக்கு மேல் கிடைக்கும். இன்னும் சில எடுபிடி வேலைகள் செய்தால் மாதம் முழுக்க
சாராயம் குடிக்க தட்டுப்படாத பணம் உண்டு. ஆனால் கொய்த்தியோ மணியத்தின் உடல் உரம் ஓலையிடம்
இல்லை.
ஒரு வீட்டில் சாவு சேதி சொல்லியப்பின் ஒப்புக்கொண்ட கூலி தராததால் இறந்தவரின் பழைய
ஹெர்குளஸ் சைக்கிளை எப்போது ஓலை எடுத்தாரோ அப்போதிருந்தே அதுதான் அவர்
வாகனமாகிவிட்டது. பொதுவாக ஓலைக்கு எல்லாமே இலவசமாகவே கிடைத்துவிடும். சைக்கிளை
பஞ்சர் பார்க்கும் கட்டையன், டீக்கடை பிளாக்காயன், கள்ளுக்கடை வீரன் என எல்லாருமே தங்களுக்கும்
சாவு வரும் என்றும், அதை சொந்த பந்தங்களுக்குச் சொல்ல ஓலை தேவை எனவும் உணர்ந்திருந்தனர்.
ஒருவேளை ஓலையைப் பகைத்துக்கொண்டால் தங்கள் மரணச் செய்தியை அவன் எவ்வளவு அலட்சியமாகச்
சொல்லி செல்வான் என நினைக்கும் போது வயிறு கலக்கும். தங்கள் சாவை ஒரு கொண்டாட்ட மன
நிலையில் ஓலை சொல்லாமல் இருக்கவாவது அவரை அணுசரித்துப்போக வேண்டியிருந்தது.
மதியம்தான் கொய்த்தியோ மணியத்தின் உற்சாகமான பொழுது. துடிப்புடன் வேட்டைக்குக்
கிளம்பிக்கொண்டிருப்பார். இரண்டு வேட்டை நாய்கள், ஒரு கத்தி, லாஸ்டிக் இவைதான் வேட்டைக்கான
ஆயத்தங்கள். எங்கள் கம்பத்துக்கு அருகில் இருந்த காட்டில் அதிகபட்சம் ஆபத்தான விலங்கு
உடும்புதான். லாலான் புலிகள் இருந்தாலும் அவை மனிதனைத் தாக்குவதில்லை. அவற்றுக்கு
வீட்டில் வளர்க்கும் கோழிகளே வேட்டை. மனிதன் வாடைபட்டாலே தூர ஓடிவிடும். உடும்புகள்
அப்படியல்ல. எதிர்க்கும்; தாக்கும். கொய்த்தியோ மணியத்தின் கட்டை விரல் உடும்பு வாயில்
அகப்பட்டே பிய்ந்து போனது. வாயில் தன் விரலை வைத்திருந்த உடும்பை லாவகமாகப் பிடித்து,
கொன்று, பிளந்து விரலை எடுத்து உடும்பு இறைச்சியுடன் இணைத்து விற்றுவிட்டதாக ஒரு
பேச்சு உண்டு. ஒவ்வொரு வேட்டைக்குப் பின்பும் உடும்பின் பித்தை லாவகமாக எடுத்து வைப்பார்.
இரவில் வேட்டை நாய்களின் மூக்கில் அதை தேய்த்துக் கட்டிப்போடுவார். வேட்டை நாய்கள் தாளாத
கசப்பில் கத்தும். கத்தல் உறுமலாகும். உறுமல் மறுநாள் வெறியாகியிருக்கும். அப்போது அதன்
தேடல் முழுக்க உடும்பாகவே இருக்கும்.
உடும்பைத் தவிர்த்து அழுங்குகளுக்கு நல்ல மவுசு இருந்தது. தடித்த செதில்கள் சூழ்ந்த
அழுங்கை ஆய்வது சிரமம் என்பதால் அதை வாங்குபவர்கள் பொறுப்பிலேயே விட்டு விடுவார்.
ஆனால், நல்ல விலைக்கு வருகிறதென சீன தௌக்கேவுக்காக அதை கொதிநீரில் போட்டு ஆய்ந்த போது
ஓடுகளற்ற அழுங்கு ஒரு குழந்தை போல அவர் கையில் சிவப்பாகக் கத்திக்கொண்டு
பிசுபிசுத்தது. ‘கொழந்தடி’ என்ற மணியத்தின் கூச்சலுக்கு ஓலம்மா வந்து நின்றாள். பல
வருடங்களுக்குப் பிறகு அவர் ஓலம்மாவிடம் போதையில் இல்லாமல் பேசிய முதல் வார்த்தை அது.
ஓலம்மா எங்கோ பார்த்துக்கொண்டு “உன்னது இல்ல…” என்றாள் வெறுப்பாக. மணியம் அதிக நேரம்
அதைப் பார்த்துக் கொண்டிருந்தார். இறந்த அந்தச் சதைப் பிண்டத்தை வீட்டுக்குப் பின் புறம்
புதைத்து ஒரு செடி நட்டார். அன்றிரவு முழுவதும் அங்கேயே காவல் இருந்தார்.
***
அம்மா, ஓலம்மாவை அடைந்த போது அவர் முகத்திலும் உடலிலும் காயங்கள் இருக்கிறதா எனத்
தேடினார். வழக்கமாக அப்படி ஏதாவது இருக்கும். ஓலம்மா மார்பில் அடித்துக்கொண்டு
கதறியபடி தரையில் சாய்ந்தபோது வேறென்னவோ என ஓலம்மா வீட்டை நோக்கினார். நான் அம்மாவுக்கு
முன்னமே ஓடும் திறன் பெற்றிருந்தாலும் வீட்டை நெருங்க பயமாக இருந்தது. எங்கு
ஒளிந்திருந்து என்ன ஆயுதத்துடன் வருவாரோ மணியம்!
நான் நினைத்தது போலல்லாமல் மணியம் சரிந்து கிடந்தார். சுவாதீனம் இல்லை. மூச்சு எங்கெங்கோ
இடித்து பின்னர் நாசியில் திணறியது. உடலில் மணல் படிந்திருந்தது. மொச்சை நல்ல வேளையாக
அந்த வழியில் வந்தார். சனிக்கிழமையாக இல்லாமல் போதையில் இருந்ததால் உடனடியாக அடுத்து
செய்ய வேண்டிய காரியத்தில் இறங்கினார். அம்மா, வீட்டுக்கு ஓடி புளியைக் கரைத்து வாயில்
ஊற்றி முதலுதவி செய்தாள். அம்மாவால் அவ்வளவு துரிதமாக ஓட முடிவது ஆச்சரியமாக
இருந்தது. நான் என் பங்குக்கு என்ன செய்வது என தெரியாமல் திணரிக்கொண்டிருந்தேன்.
ஓரிரு நாள்களில் கொய்த்தியோ மணியம் வீடு திரும்பியிருந்தார். யாரிடமும் பேசாமல் வெளி
வராண்டாவில் படுத்திருந்தார். அவரிடம் எதையும் கேட்க யாருக்கும் துணிவில்லை.
பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டவர்கள் அந்தக் காலத்தில் பிழைப்பது சிரமம். மணியத்துக்கு
உடல் போல உயிரும் கெட்டி என ஊர்க்காரர்கள் பேசிக்கொண்டனர். “கொவளையில ஊத்தி குடிக்கிறது
சாராயமா பூச்சி மருந்தான்னா கூட உனக்கு தெரியலயா ஓலம்மா… ஏதோ விரத்தியில அவருதான்
குடிக்கிறார்னா தடுக்கிறதில்லையா நீ…” என வருவோர் போவோரெல்லாம் கருத்துக்கூறிச்
சென்றனர். ஓலம்மா ஒன்றும் பேசாமல் சூனியம் பிடித்தவள் போல இருந்தாள்.
அன்றிரவு நான் அம்மாவின் பின் பதுங்கியபடி கொய்தியோ மணியத்தைப் பார்க்கச் சென்றேன்.
நிதானமாக எழுந்தமர்ந்தார். அம்மா, “என்னண்ண இது?” என்றார் கரிசனத்துடன். உயிரைக்
காப்பாற்றிய உரிமை அம்மாவின் குரலில் இருந்தது. “வார்த்த பேச்சாயி… வார்த்த…” அம்மாவின்
பெயரை அவர் மட்டும்தான் சொல்லி அழைப்பது வழக்கம். பொதுவாக போதையில் இருக்கும்போது
கால்வாய்க்கு மறுபுறத்திலிருந்து ஓலம்மாவை அனுப்பச் சொல்லி கத்துவார். அப்போது பேச்சாயி
என்ற பெயர் அவர் வாயிலிருந்து கொடூரமாக அதிரும். இப்போது அது ஒரு குழந்தையை
அழைப்பது போலிருந்தது. அம்மா, அங்கிருந்த படியே ஓலம்மாவிடம் , “என்ன சொன்னீங்க அண்ணண…”
என்றார். அம்மா குரலில் மிரட்டலும் எரிச்சலும் கலந்திருந்தது. காலம் முழுதும் ஓலம்மாவின்
மீதிருந்த கரிசனம் ஒரு மரணத்தின் அனுபவத்துக்குப் பின் திசைமாறிப் போயிருந்தது.
ஓலம்மா சூனியத்திலிருந்து விடுபடவில்லை. கண்ணீர் வற்றியிருந்தது. கொண்டு வந்திருந்த
உணவை கொடுத்துவிட்டு அம்மா புறப்படும் நேரம் மணியம் மீண்டும் சொன்னார், “வார்த்த… ஒரு
வார்த்த சொல்லிட்டா பேச்சாயி…”
***
மறுநாள் ஓலை வீட்டின் முன் நின்று, மீண்டும் மணியம் பூச்சிக்கொல்லியைக் குவளையில்
ஊற்றிக்குடித்து நேற்று நள்ளிரவுக்குப்பின் மாண்டுவிட்டதாக சாவு செய்தி சொன்னான். அவன்
குரலில் எவ்வித வருத்தமோ பதற்றமோ இல்லை. ஆனால் பார்வையில் ஒரு தீவிரம் இருந்தது.
அப்போதுதான் மருள் வந்து அடங்கிய கண்கள்போல சிவந்திருந்தன. அம்மா சாவு செய்தி கொடுத்த
அதிர்ச்சியிலிருந்து மீளாமல் அமர்ந்துவிட்டபோதும் ஓலை தனது கூலிக்காக நெடுநேரம் வெளியே
காத்துக்கொண்டே இருந்தான். மேலே அடிக்கடி பார்த்து பெருமிதமான ஒரு முகபாவனை செய்து ,
தலையை இறக்கும் போது சராசரியாக வைத்துக்கொண்டான்.
“சாவு சேதி சொல்லியிருக்கேன் கூலி கொடுக்கா…” என மீண்டும் உற்சாகத்தில் ஓலை உரத்து
கத்தியபோது வெக்கையில் நனைந்துவிட்டிருந்த அவன் பனியனின் நெஞ்சுப்பகுதியில் மேலெலும்பி
பின் அடங்கியது என்னவென்று அம்மாவிடம் கேட்டுவர உள்ளே ஓடினேன்.
- புதுவிசை, 2014

Professor k. kumar

unread,
Nov 23, 2014, 1:27:33 AM11/23/14
to valluva...@googlegroups.com, brail...@googlegroups.com
மயிரு
கதையாசிரியர்: மு.முருகேஷ்
கதைத்தொகுப்பு: சமுகநீதி
கதைப்பதிவு: November 27, 2013
பார்வையிட்டோர்: 2,882





rating-31351148-5
Rate this (4 Votes)
View More
+1
0
Tweet
0
Share

Like
0
மஞ்சப்பட்டு கூட்டுரோடு, ஆட்டை விழுங்கிய மலைப் பாம்பாய் சுற்றியிருக்கிற ஏழெட்டு
கிராமங்களைத் தின்று செரித்தபடி நெளிந்து கொண்டிருந்தது.
இரண்டு பெட்டிக்கடைகள், மூன்று டீக்கடைகள், வாடகை சைக்கிள் கடை, பூக்கடை, டிபன் கடை,
பிரியாணி ஸ்டால், பிராய்லர் கறிக்கடை, ரெடிமேட் துணிக்கடை, மளிகைக் கடை, உரக்கடை,
ஓமியோபதி கிளினிக், செல் ரீசார்ஜ் கடை, ‘இதோ நான் நகரமாகி வருகிறேன் பார்…’
என்பதற்கான அடையாளமாய் ஒரு ஃபாஸ்ட் புட் கடை. இதில் மீதமிருக்கிற இரண்டு கடைகளில் ஒன்று
பழனியின் ‘முத்து சலூன்கடை’. மற்றொன்று நான் வேலை செய்கிற தனியார் கூரியர் சர்வீஸ் கடை.
விவசாய நிலங்கள் ரியல் எஸ்டேட்டுகளாய் மாற, பிழைப்புக்கு வழியில்லாமல் நகரங்களை நோக்கி
இடம் பெயர்கிற கிராமத்து மனிதர்களை இழுத்து வந்து, நெடுஞ்சாலைப் புழுதியோடு
சேர்த்தணைத்து மூச்சுத் திணற வைக்கின்றன இந்த கூட்டு ரோடுகள்.
பக்கத்து மாவட்டத்தின் சிறு நகரமொன்றிலிருந்து வந்து, கூரியர், சர்வீஸ் கடையிலேயே தங்கி
வேலை செய்யும் எனக்கு, பேச்சுத் துணைக்கு ஆறுதலாயிருப்பது பழனி மட்டுந்தான்.
பழனிக்கு நெட்டு முகம். நாற்பது வயதிற்குள்ளேயே மீசையும், முன்பக்க முடியும் நரைத்து
வயதானவர் போன்ற தோற்றம். மேல் வரிசைப் பல் லேசாய் துருத்திக் கொண்டிருக் கும். எப்போதும்
முகத்தில் இருக்கும் சாந்தமும், குழந்தைத் தனமான சிரிப்பும் பழனியை என்னோடு ரொம்பவும்
நெருக்க மாக்கி விட்டது.
பழனிக்கு என்னைவிட ஒரு வயது அதிகம்தான். இருந்தாலும் என்னை ‘சார்’ என்று தான்
கூப்பிடுவார். நானும் பதிலுக்கு, ‘சொல்லுங்க சார்’ என்பேன். ‘என்ன சார் கிண்டல் பண்றீங்க?’
என்பார். அவர் என்னைக் கூப்பிடும் போது மரியாதையான சொல்லாகவும், நான் அவரைக்
கூப்பிடுகையில் ‘கிண்டலாகவும்’ மாறிப் போகிற இந்த ‘சாரை’ இன்னும் விட்டொழிக்க முடியவில்லை.
எனக்கும் பழனிக்குமான அறிமுகம் கடந்த மூன்று மாதமாகத்தான். நான் வேலை செய்யும் கூரியர்
கடை மாடியிலிருந்து பார்த்தால், நேர் எதிரே பழனியின் கடை தெரியும். பெரும்பாலும்
பெஞ்சில் காலைக் குத்த வைத்து, சுவற்றில் சாய்ந்தபடியோ, எப்போதாவது முடிவெட்டிக் கொண்டோ
இருக்கும் பழனியைப் பார்க்கலாம்.
பழனி சவரம் செய்கிற அழகே தனி சுகம்தான். முதலில் சவரம் செய்ய வருகிறவர்களை ‘வாங்க
சார்… உக்காருங்க… சார்’ என்பார். கடைக்கு வருகிறவர் குழந்தையாக இருந்தாலும் இதே
மரியாதைதான்.
aclk sa=L&ai=C2xh8W3pxVLjSIM-c…

சிறிய கிண்ணத்தில் இருக்கிற தண்ணீரை கொஞ்சமாய் கையில் அள்ளி, ஷேவ் செய்து கொள்பவர்
முகத்தில் இப்படியும், அப்படியுமாய் பதமாய் தேய்த்து விடுவார். பிறகு ஷேவிங் கிரீமை
எடுத்து தாடையில் வைப்பார். பிரஷை தண்ணீரில் முக்கி எடுத்து, லேசாய், உதறிவிட்டு,
அப்படியே தாடையில் வைத்த கிரீமைத் தொட்டு கன்னமெங்கும் பூசி விடுவார். முகமே நுரைப்
பூவால் மூடிவிடும். இப்போதே சிலர் கண்மூடி தூங்க ஆரம்பித்து விடுவார்கள்.
அடுத்து, பிளேடு கத்தியை எடுத்து, சத்தமே வராமல் பிளேடை இரண்டாக உடைத்து, ஒன்றை
பிளேடு கத்தியில் பொருத்துவார். தூங்குபவரை சற்றும் தொல்லை செய்யாமல் தலை எந்தப்பக்கம்
சாய்கிறதோ, அந்தப் பக்கத்திற்கு வாகாக ஷேவ் செய்வார்.
“சரியானு பாருங்க, சார். எதாவது குறை இருந்தா சொல்லுங்க, செய்யிறேன்…” என்று கேட்பார்.
முடிவெட்டினாலோ, ஷேவிங் செய்தாலோ … செய்து முடித்தவுடன் ஒரு முடிகூட கீழே கிடக்க
விடமாட்டார். மொத்தமாய்க் கூட்டிப் பெருக்கி, அள்ளி, ஒரு பாலிதீன் பையில் கட்டி வைத்து
விடுவார். அவ்வளவு சுத்தம்.
பல நேரங்களில் பழனியின் கடை அருகிலிருந்தே கவனித்ததில் எனக்குள் நெருடிய சந்தேகமொன்றை
ஒருநாள் கேட்டே விட்டேன்.
“ஏன் பழனி, ‘மயிரு’ன்னு சொல்லாட்டியும் ‘முடி’ங்கிற வார்த்தையக் கூட சொல்ல மாட்டேங் கிறீங்க…?
லேசாய்ச் சிரித்துக் கொண்டே பழனி சொன்ன பதில் என்னை உலுக்கிப் போட்டது.
“எனக்கு சோறு போடுற வார்த்தை சார் அது..”
மஞ்சப்பட்டு, கூட்டு ரோடிலிருந்து சரியாய் ஆறு கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது கீரப் பள்ளம்
கிராமம். பழனியின் கிராமமது. அறிமுக மான இந்த மூன்று மாதத்திலேயே பழனி இரண்டு
முறை அவரது கிராமத்திற்கு கூட்டிப் போயிருக் கிறார். முப்பது, நாற்பது வீடுகள் கொண்ட
சிறிய கிராமம். ஊர் எல்லையில் காளியம்மன் கோயில். அதையொட்டி பெரிய அரசமரமொன்று.
“எங்க தாத்தன் முப்பாட்டன் காலங் காலமா தொழில் செஞ்ச இடம் சார்..” என்று பெரிய கல்லொன்றை
காட்டினார் பழனி.
கல்லுக்கான சொர சொரப்பின்றி மழ மழவென்று பளிங்காய் ஜொலித்தது. அந்தக்கல். இப்படி கல்லே
தேய்ந்திருக்கிறதென்றால், அதில் உட்கார்ந்து உழைத்த மனிதர்கள் எப்படி தேய்ந்
திருப்பார்களென்று நினைவு உள்ளுக்குள் ஓடியது. பழனி குடும்பத்தினர்தான் அந்த கிராமத்தில்
இருந்த ஒரே நாவிதர் குடும்பம். பழனியின் தாத்தா, அப்பா எல்லாமே ஊர் நாவிதர்களாக இருந்
திருக் கிறார்கள்.
ஊரில் இருக்கிறவர்களுக்கு முடிவெட்டுதல், ஷேவ் செய்தல், மொட்டை போடுதல் எல்லாமே
அரசமரத்தடியில்தான். கோயில் தர்மகர்த்தா, குருக்கள் இருவருக்கு மட்டும் வீட்டிற்கே போய்
செய்து விட வேண்டும்.
இவர்கள் செய்கிற வேலைக்கு ஊரில் யாரும் காசு தரமாட்டார்கள். ஆண்டுக்கொருமுறை அறுவடை
சமயத்தில் வீட்டுக்கு ‘மூணு மரக்கா’ நெல்லைக் கூலியாகத் தந்துவிடுவார்கள். இந்த நெல்லை
வாங்க ஒவ்வொரு வீட்டு வாசல் படியையும் பலமுறை ஏறி இறங்க வேண்டி யிருக்கும்.
இதில்லாமல் ராத்திரி சாப்பாட்டுக்குத் தட்டெடுத்துப் போனால், ஒவ்வொரு வீட்டிலும் ஒரு
கைப்பிடிச் சோறு கொடுப்பார்கள். ஊரிலுள்ள வண்ணான் குடும்பத்திற்கும் இதுதான் கூலி.
பழனியின் அப்பாவுக்கு கண் பார்வை குறையவே, நான்காம் வகுப்போடு படிப்பைத்
தலைமுழுகிவிட்டு, கத்தியை எடுத்துவிட்டார் பழனி.
முட்டி நோக உட்கார்ந்து வேலை செய்தாலும், அரை வயிறு பசியோடு படுப்பதும், வீட்டுக்கு
வீடு தட்டேந்தி போவதும் பழனிக்கு அறவே பிடிக்க வில்லை.
தப்பிப் பிழைக்க வழிதேடி தவித்துக் கிடந்த பழனியை எப்படியோ இழுத்து வந்துவிட்டது இந்த
மஞ்சப்பட்டு கூட்டுரோடு.
மூன்று பக்கமும் மண்சுவர். மேலே கீற்று வேய்ந்த கூரை. கதவு கிடையாது. பலகைத் தடுப்பு
வைத்து, கயிறு போட்டு கட்ட வேண்டும். பழனி யின் இந்தக் கடைக்கு இருநூற்றைம்பது ரூபாய்
வாடகை வேறு. அட்வான்ஸ் ஏதுமில்லை என்பது ஆறதலாயிருந்தது.
காலொடிந்த ஒரு பெஞ்ச் கடையில் கிடந்தது. அதில் இருவர் உட்காரலாம். முடிவெட்டிக்
கொள்கிறவர் உட்காருகிற நாற்காலி ஒன்று. எதிரே லேசாய் ரசம் போன கண்ணாடி. சாமிப்பட க்
காலண்டர். இதுதான் பழனியின் மொத்தக் கடையுமே.
பழனியைத் தேடி ஊர்க்காரர்கள் கூட்டு ரோட்டிற்கே வந்துவிட்டார்கள்.
“பாருப்பா, நம்மூரு பழனி கடை போட்டிருக் காம்பா”என்றபடியே ஷேவ் செய்து கொண்டும்,
முடிவெட்டிக் கொண்டும், மனசே வராமல் சட்டைப் பையைத் துழாவி ஒரு ரூபாயோ, இரண்டு
ரூபாயோ சில்லறையைத் தந்து விட்டு போனார்கள்.
பழனி தயங்கித் தயங்கிக் கேட்டால், “ ஏய், நீ நம்மூரு அமட்டன்டா. அசலூருக்காரன் மாதிரி
எங்கிட்ட காசு கேக்காதே .வீட்ல வந்து நெல்லு வாங்கிக்க. வழக்கத்த மாத்தி ஏதாவது சாமி
குத்தம் வந்துடப்போவுதுடா…” என்று கொஞ்சம் பயமும் காட்டி விட்டு நகர்ந்தார்கள்.
வாயடைத்துப் போய் நின்றார் பழனி.
பழனியும் நானும் பக்கத்திலிருந்த கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தோம்.
மண் ரோட்டிலிருந்து புழுதி கிளப்பியபடி மேலேறி, தார்ச்சாலையில் வந்து நின்றது அந்த
டிவிஎஸ் விக்டர். வண்டியை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினார் கனத்த சரீரம் கொண்ட அந்த மனிதர்.
முன்னே பெருத்த தொப்பை. நடு ரோட்டில் நின்று சட்டையைத் தூக்கி கரைவேட்டியை இறுக்கிக்
கட்டிக் கொண்டார்.
டீக்கடைப் பக்கமாய் பார்வையைத் திருப்பினார்.
“டேய் பழனி! அங்க என்னடா மயிரப் புடுங்கிற. ‘வெரசா வாடா இங்கெ”- என்று அதட்ட லான
குரலில் பழனியைப் பார்த்து கத்தினார்.
பாதி டீயை அப்படியே வைத்துவிட்டு பழனி ஓடினார்.
“ஊருக்குள்ள இருந்து வேலை செய்யிறத வுட்டுப்புட்டு, எங்கள இப்படி அலைய விடுற ..ம்ம”
என்றார்.
அப்படியெல்லாமில்லே…என்பதாய்த் தலையாட்டி மறுத்தார் பழனி.
நாற்காலியில் உட்கார்ந்தபடியே, பரட்டென சட்டையைக் கழற்றி பழனியின் முகத்தில் அடிப்பது
போல் வீசினார். அதை பவ்வியமாகப் பிடித்து ஆணியில் மாட்டினார் பழனி.
“பெரிய மாப்பிள்ளைக்கு ஆபரேசன். நானும் எஞ் சம்சாரமும் நாலு மாசமா பெங்களூர்ல
இருந்துட்டு நேத்து தான் வந்தோம். ஊரே ரொம்ப மாறிப் போச்சு. மொத்தப் பயலுமே கூட்டுரோடே
கதின்னு கெடக்கிறாங்க. சரி… புது பிளேடா போடுடா…”
அவர் போக்கில் ஏதேதோ பேசிக் கொண்டே இருந்தார். பழனி கத்தியை லேசாய் துணி வைத்து
துடைத்து, புது பிளேடை எடுத்து மாட்டி ஷேவ் செய்ய ஆரம்பித்தார்…
“டேய்… லேசா கத்திய போடுடா… இந்த இழு இழுக்கிறே. எதிர் போடாதே… “
“ம்ம்… ம்ம்” என்றபடியே பழனி ஷேவ் செய்து முடித்தார்.
பழனி முகத்தைக் கழுவி பவுடர் போட்டு விட்டார். சீப்பெடுத்து தலைவாரி விட்டார். அப்
போதும் நாற்காலியை விட்டு இறங்காதவர், படக்கென வலது கையைத் தூக்கினார்.
ஈரவாடை மூக்கைத் துளைத்தது. சாம்பல் நிறத்தில் அக்குளில் அழுக்குத் திரண்டிருந்தது.
உள்ளிருந்த மயிர்களில் அழுக்குப் பின்னிக் கொண்டு அடை அடையாக இருந்தது. வியர்வை
நாற்றமில்லை. கொழுப்பின் நாற்றம்.
“அக்குள் மயிர எடுடா…” என்றார்.
பக்கத்தில் சென்ற பழனியும், பவுடரை எடுத்து அக்குளில் அடித்தார். வெள்ளைப் பஞ்சே அழுக்கு
நிறமாய் மாறியது.
இடது கை ஆட்காட்டி விரலாலும், கட்டை விரலாலும், அவரது வலது கை மேல் சதையை சற்றே
அழுத்திப் பிடித்தார். அக்குள் மயிரை மழித்தெடுத்தார். அழுக்குக் கட்டியாய் “ சொத்” தென்று
தரையில் விழுந்தது. இடது கையைத் தூக்கினார். அதையும் மழித்தெடுத்தார்.
எழுந்து சட்டையைப் போட்டவர், சட்டைப்பைக்குள் சம்பிரதாயமாக கையை விட்டுப் பார்த்து “சில்லற
இல்ல, அடுத்த வாட்டி வர்றப்ப கேட்டு வாங்கிக்க..” என்று வேகமாய் வெளியே வந்தவர், அதே
வேகத்திலேயே வண்டியையும் கிளப்பிக் கொண்டு புழுதியோடு கலந்தார்.
இதையெல்லாம் தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருந்த எனக்குள் ஆத்திரம் பொங்கியது.
“யாரு பழனி இந்தாளு?” என்றேன்.
“எங்கூரு தான் சார். வெத்துவேட்டு வைத்தி. மேலத்தெருக்காரன். சும்மா ஊரை மெரட்டிக்
கிட்டு திரியிறான். பத்துக்காசு தேறாது சார். “பழனியின் குரலில் இறுக்கம்.
“ சரி “நானுங் கேக்கிணுமுனு பல நாலா நெனச்சிட்டு இருந்தேன். இப்பெல்லாம் டவுன்ல எந்த
சலூன்லயும் கமுக்கோடு மயிரை யாரும் எடுக்கிறதில்லே. தெரியுமா?”
“அதெல்லாம் டவுனுக்கு தான் சரிப்பட்டு வரும். இங்க கிராமத்தில சொல்ல முடியாது சார்.
அவங்களே கூச்சமில்லாம கையத் தூக்கி எடுக்கச் சொல்லயில தொழில் செய்யிற நான் மாட்டேன்னு
சொல்லலாமா ?….”
Dr.Batra's Skin Treatment
Visit Dr. Batra's For Homeopathic Skin Treatment. Book Now.


www.drbatras.com/Skin


அடுத்து என்ன சொல்வதென்று புரியாமல் நின்றேன். பழனியே தொடர்ந்தார்.
“சார் .இது ஈரமேயில்லாத காஞ்ச பய ஊரு. இவங்க சாவகாசமே வேண்டாமுனு தானே இங்க வந்து
கடை போட்டேன். ரெண்டு ரூவா பிளேடை போட்டு ஷேவ் செஞ்சா, ஒத்த ரூபா தர்றானுங் களே.
இவங்களுக்கெல்லாம் பழைய பிளேடு போட்டு செய்யணும்னு நெனைச்சாலும், மனசு ஏனோ கேக்க
மாட்டேங்கிது ”
“ உனக்கு மட்டுந்தான் தர்மம் நியாயமா …?”
என் கேள்வி பழனியை பெரிதாய் பாதிக்கவில்லை.
“விடுசார். ஒரு நாளக்கி நா குடும்பத்தோட இந்த ஏரியாவை விட்டுக் கௌம்பணும். ஊர்க்காரங்கெ
மொத்தப் பேருமே செரைக்க ஆளில்லாம தாடி மீசையோட காட்டுப்பயக மாதிரி அலையணும். பேசிக்
கொண்டிருந்த பழனி சட்டென குரலைத் தாழ்த்தி, அந்தப் பக்கமாய் போகிற துண்டுக்காரரைக் காட்டி..
“சார் … அந்தாளு தான் நம்ம கடையோட ஓனரு. எங்க ஊரு ஆளுகளோட சாதிக்கார ஆளு. இவர்ட்ட
ஏதாச்சும் ஏடா கூடம் பண்ணி கடைய காலி செஞ்சிடுவாங்களோன்னு பாக்றேன். இல்லேன்னா…”
பழனியின் வார்த்தைகளில் லேசாய் கோபம் தெரிந்தாலும், முகத்தில் மட்டும் அதே சாந்தம்.
கூட்டு ரோடே அல்லோகலப்பட்டது. ஜீப்பில் இருந்து இறங்கிய நான்கைந்து நெடுஞ்சாலைத் துறை
அதிகாரிகள் ரோட்டின் இருபுறமும் நீள நீளமாய் கூடி நின்று ஏதேதோ பேசிக் கொண்டே கிளம்பிப்
போனார்கள்.
ரோட்டை அகலப்படுத்தப் போகிறார்களாம். எப்படியும் ரோட்டின் மேற்கு வரிசையிலுள்ள ஏழெட்டுக்
கடைகளை காலி செய்ய வேண்டுமாம்.
அந்த ஏழெட்டுக் கடைகளில் பழனியின் கடையும் ஒன்று என்பதே எனக்கு வருத்தமா யிருந்தது.
ஆனால் பழனி மட்டும் ஏதும் பேசாமல் மௌனமாயிருந்தார்.
அன்று -
மாடியிலிருந்து கீழிறங்கி வந்து கொண்டிருந் தேன். தடதடத்தப்படியே வந்து நின்ற டிவிஎஸ்
விக்டரிலிருந்து இறங்கினார் வைத்தி. கையிலிருந்த புகையும் சிகரெட்டை ரோட்டில்
வீசியெறிந்தார்.
பழனி கடைக்குள் போனவர், முடி வெட்டிக் கொண்டவர் எழுந்ததும், நாற்காலியில் சட்டென
உட்கார்ந்தார். ஷேவ் செய்து கொள்ள ஒரு பெரியவர் பெஞ்சில் காத்திருந்ததைப் பற்றி அவர் கண்டு
கொள்ளவேயில்லை.
“டோய் சீக்கிரமா ஷேவ் செய்யி..” என்றார். பழனி ஏதும் பேசாமல் ஷேவ் செய்ய ஆரம்பித்தார்.
ஷேவிங் முடிந்தது.
கையை உயர்த்தி… “இதை எடு” என்றார்.
பழனி “முடியாது” என்பதாய்த் தலையாட்டி மறுத்தார்.
“டேய், சொல்றேன்ல . மயிரெ செரைடா!” என்றார் அதட்டலான குரலில். “அதெல்லாம் இப்ப
எடுக்கிறதில்லே”-என்றார் பழனி.
பல்லைக் கடித்தப்படியே, பழனியின் சட்டையைப் பிடிக்க கையை நீட்ட, சற்றே பின்னால் விலகிப்
போனார் பழனி.
நாற்காலியைப் பின்னால் தள்ளி விட்டு ஆவேசமாய் எழுந்தார் வைத்தி.
“என்னடா கொழுப்பேறிப் போச்சா? பத்தே நிமிசத்தில உங்க கடையை காலி பண்ண வைப்பேன். கவட்டி
மசிரை செரைன்னாலும் செரைச்ச பயக, இப்ப பதிலாடாப் பேசுறீக ?”
பழனியை அடிக்க வலது கையை ஓங்கினார் வைத்தி. இடது கையால் வைத்தியின் கையை இறுக்கிப்
பிடித்தார் பழனி.
திமிறிக் கொண்டே, “கைய விடுடா, கைய விடுடா…” என்று கத்தினார் வைத்தி.
வைத்தியின் கையை அவர் நெஞ்சோடு சேர்த்தணைத்து, கோபமாய் அவரை வெளியே தள்ளியபடி பழனி
சொன்ன வார்த்தைகள் மட்டும் தெளிவாய், உறுதியாய் என் காதில் விழுந்தது:
“வெளியே போடா, மயிரு !”
(2010 கவிஞர் கந்தர்வன் நினைவுச் சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற கதை)

mahendran u

unread,
Nov 23, 2014, 2:08:14 AM11/23/14
to brail...@googlegroups.com
sensasional story sir. Thanks a lot for sharing.
> --
> --
> You received this message because you are subscribed to the Google
> Groups "Brailleacl" group.
> To post to this group, send email to brail...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> brailleacl+...@googlegroups.com
>
> ---
> You received this message because you are subscribed to the Google Groups
> "Brailleacl" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to brailleacl+...@googlegroups.com.
> For more options, visit https://groups.google.com/d/optout.
>


--
Never do tomorrow what you can do today, procrastination is the thief of time.
Beautifully said by the ever great Dickens!


With regards for happiness ever,
U. Mahendran,
Ph.D researcher,
Department of English,
Pondicherry University.

Phone: 9944505154
Mail: mahendra...@gmail.com

Professor k. kumar

unread,
Nov 23, 2014, 8:44:21 AM11/23/14
to brail...@googlegroups.com
இந்துமதம் குறித்து மூன்று நூல்கள்
January 19, 2013
- ஜடாயு feed
அச்சிட அச்சிட
இந்து மதம் குறித்து மேலும் சில அறிமுக நூல்களா? அது தான் ஏற்கனவே நிறைய இருக்கிறதே
என்று சிலர் எண்ணக் கூடும். ஆனால், இந்துமதம் போன்ற பன்முகத் தன்மை கொண்ட ஒரு மாபெரும்
விஷயத்தைக் குறித்து ஒவ்வொரு காலகட்டத்திலும் உருவாகி வரும் புதிய வாசகர்களுக்காக
புதுப்புது நூல்கள் எழுந்தபடியே இருப்பது ஆச்சரியமல்ல. ஆங்கிலத்தில் வரும் அளவுக்கு
தமிழில் இவை வெளிவருவதில்லை என்பது மட்டுமே ஒரு குறை.
தமிழில் 1960களில் கவியரசு கண்ணதாசன் எழுதிய அர்த்தமுள்ள இந்துமதம் என்ற நூல் தொகுதி
வெளிவந்தது. இன்று வரை இந்துமதம் என்றால் உடனடியாக தமிழ் வாசகர்களுக்கு நினைவில் எழும்
நூலாக அது இருக்கிறது. அந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தில் திராவிட இயக்க பிரசாரர்கள்
இந்து மதம் குறித்து பரப்பிய கீழ்த்தரமான, மோசமான அவதூறுகளுக்கும்,
திரிபுவாதங்களுக்கும் எதிர்வினையாகவே அந்த நூல் எழுந்தது. அத்தகைய பிரசாரங்களால்
குழம்பிப் போயிருந்த ஒரு தலைமுறையினருக்கு, தங்களது பண்பாடு மீதே சுயவெறுப்பு கொள்ளத்
தொடங்கியிருந்த இளைய சமுதாயத்திற்கு, இந்துமதம் குறித்த ஒரு அடிப்படையான புரிதலை
அளிப்பதில் அந்த நூல் பெரும் வெற்றி பெற்றது என்று சொல்லலாம்.. இன்று வரை தமிழ் மனதில்
அது நீடிப்பதற்குக் காரணமும் அதுவே. அதன் பிறகு, சமீப காலங்களில் சோ ராமசாமி எழுதிய
“ஹிந்து மகா சமுத்திரம்” போன்ற நூல்கள் வெளிவந்துள்ளன.
ஆனால் அறிவுத் தேடல் கொண்ட இன்றைய நவீனத் தமிழ் வாசகர்கள் பலருக்கு அத்தகைய நூல்கள்
ஆர்வமூட்டுவதாக இருக்குமா என்றால் பெரும்பாலும் இருக்காது என்றே சொல்ல வேண்டும்.
இந்துமதத்தின் நம்பிக்கைகள், ஐதீகங்கள், சடங்குகள், மகான்களின் வாழ்க்கைச் சரிதங்களிலிருந்து
சில சம்பவங்கள் ஆகியவற்றை கவித்துவமான நடையில் கோர்த்து எழுதப் பட்டவை இந்த நூல்கள்.
அறிவியல் பூர்வமான, விமர்சனக் கண்ணோட்டம் கொண்ட பார்வைகள் அதில் இல்லை. முற்றிலும் மரபு
சார்ந்த விளக்கங்களே உள்ளன. வேதங்கள், உபநிஷதங்கள், ஆறு தரிசனங்கள் போன்றவை குறித்த
முறையான அறிமுகம் கூட அர்த்தமுள்ள இந்துமதம் போன்ற ஒரு நூலில் இல்லை.
இன்றைய நவீன வாசகர்கள் பலர் இந்து மதத்தை வரலாற்றின் வழியாக, சமூக இயக்கங்களின் வழியாக,
ஞானத் தேடல்களின் வழியாக, தத்துவ விவாதங்களின் வழியாக அறிவதில் தான் பெருமளவு ஆர்வம்
காட்டுகின்றனர். இத்தகைய வாசகர்களின் தேடலைப் பூர்த்தி செய்யும் நூல்கள்
அத்தியாவசியமானவை. சென்ற வருடம் ஸ்ரீரங்கம் மோகனரங்கன் இந்த வகையிலான தொடர் கட்டுரைகளைத்
தன் வலைப்பதிவில் எழுதினார். பிறகு “ஹிந்து மதம்: ஓர் அறிமுகத் தெளிவு” என்ற பெயரில்
அது புத்தகமாக வெளிவந்தது (சந்தியா பதிப்பகம்).
இந்த வருடம் சொல்புதிது பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மூன்று நூல்கள் இந்த வகையில் வரும்
என்று உறுதியாகச் சொல்ல முடியும்.
hindu-books-1
முதலாவதாக, க்ஷிதி மோகன் சென் எழுதிய “இந்து ஞானம்: ஓர் எளிய அறிமுகம்”.
எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் மாபெரும் சம்ஸ்கிருத அறிஞரும் காந்தியருமான சென்
எழுதிய சிறிய புத்தகத்தின் மொழியாக்கம் இது. மேற்கத்தியர்களையும், அதே மோஸ்தரில்
உருவாகி வந்து தங்கள் கலாசாரம் பற்றிய அடிப்படைப் புரிதல்கள் இல்லாத அப்போதைய படித்த
இளைஞர்களையும் மனதில் கொண்டு எழுதப் பட்ட புத்தகம் இது. எனவே, இன்றைக்கும் அதற்கான
வாசகர்கள் கணிசமான எண்ணிக்கையில் இருக்கத் தான் செய்கிறார்கள்.
பிரிட்டிஷ் காலகட்டத்திய ஆங்கில மொழி நடையில் எழுதப் பட்ட இந்த நூலை சுனில் கிருஷ்ணன்
மிக அருமையாக சரளமான நவீனத் தமிழிலக்கிய நடையில் மொழியாக்கம் செய்திருக்கிறார். பல
ஆங்கிலக் கலைச் சொற்களுக்கு மிகச் சரியான தமிழ்ப் பதங்களை எடுத்தாண்டிருக்கிறார்
(mysticism = “மறைஞானம்” என்பது போல). இதனால், தமிழ் மொழியாக்கம் நல்ல வாசிப்பு
அனுபவத்தைத் தருவதாக உள்ளது.
மூன்று பகுதிகளாக அமைந்துள்ள நூல் இது. முதலிரண்டு பகுதிகளீல் இந்து மதத்தின் வரலாறு
மற்றும் பல்வேறு சமயப் பிரிவுகள், தத்துவ மரபுகள், பக்தி இயக்கம் ஆகியவை குறித்து பேசப்
படுகிறது. மூன்றாவது பகுதி ஆசிரியரால் எழுதப் படவில்லை. அதற்குப் பதிலாக, வேதங்கள்,
உபநிஷதங்கள், கீதை ஆகியவற்றிலிருந்து தேர்ந்தடுத்த பகுதிகள் நேரடியாக அப்படியே
வாசகனுக்கு அளிக்கப் படுகின்றன. ஆங்கிலப் பதிப்பில் கிரிஃபித், மேக்ஸ் முல்லர் ஆகியோரது
புகழ்பெற்ற மொழியாக்கங்கள் இதற்காகப் பயன்படுத்தப் பட்டன. தமிழில், நான் செய்திருக்கும்
வேத, உபநிஷத கவிதை வடிவ மொழியாக்கங்கள் இணைக்கப் பட்டுள்ளன. இந்தப் பணியில் சுனிலையும்
என்னையும் ஊக்குவித்த ஜெயமோகனுக்கு எனது பணிவன்பு கலந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜெயமோகன் எழுதியிருக்கும் முன்னுரையில் இந்த நூலின் சாதக, பாதக அம்சங்களை மிகத்
தெளிவாக எடுத்துரைக்கிறார். அதனை முதலிலேயே படித்து விட்டு நூலுக்குள் நுழைவது
நல்லது. உதாரணமாக, இன்றைக்கு காலாவதியாகி விட்ட ஆரியப் படையெடுப்பு வரலாற்றை,
அன்றைக்கு இருந்த பல இந்திய அறிஞர்கள், கல்வியாளர்கள் போன்று க்ஷிதி மோகனும் அப்படியே
ஏற்கிறார். நூலின் பல அத்தியாயங்களில் இந்த சட்டகத்தை அவ்வப்போது அவர் கொண்டு வருவது
இன்றைக்கு படிக்கையில் சங்கடமாகவும், எரிச்சலூட்டுவதாகவும் உள்ளது. ஆயினும்
ஒட்டுமொத்தமாக அவர் கூறும் கருத்தாக்கம் பிளவுபடுத்தும் நோக்கம் கொண்டதாக இல்லை என்பதால்
இதைச் சகித்துக் கொண்டு நூல் கூறும் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தலாம். க்ஷிதிமோகன் சென்
மட்டுமல்ல, டாக்டர் ராதாகிருஷ்ணன், தத்துவ அறிஞர் ஹிரியண்ணா, வீர சாவர்க்கர் போன்றோரது
நூல்களிலும் இதே அனுபவம் நமக்கு ஏற்படுகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்து மதத்தில் ஆதிகாலம் தொட்டே கேள்வி கேட்கும், விவாதிக்கும் மரபு உண்டு என்பதை
ஆசிரியர் விளக்கும் பகுதி நன்றாக உள்ளது. நான்கு வர்ணங்கள் பற்றிய அத்தியாயம்
சமநிலையுடன் எழுதப் பட்ட ஒன்று. தமிழகத்து சித்தர்கள் போல வங்கத்தில் நாடோடிகளாகத்
திரிந்த பால்கள் என்ற ஆன்ம சாதகர்கள் பற்றிய அத்தியாயம் மிகுந்த உணர்வெழுச்சியைத் தருவதாக
உள்ளது. இஸ்லாமிய சூபி மரபு இந்து ஞான மரபில் ஏற்படுத்திய தாக்கம் என்பதாக ஆசிரியர்
கூறிச் செல்லும் விஷயங்கள் விவாதத்திற்குரியவை. அதே போல “வேதமல்லாத பிற போக்குகள்”
என்ற அத்தியாயத்தில் அவர் குறிப்பிடும் விஷயங்கள் உண்மையில் வேத இலக்கியத்தில் அழுத்தமாக
இடம் பெறுவதையும், இந்த பிரிவினையே அர்த்தமற்றது என்பதையும் பிற்காலத்தில் வந்த பல
ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டியிருக்கின்றனர். அரவிந்தன் நீலகண்டன் சமீபத்தில் எழுதிய “ஆழி
பெரிது” தொடரிலும் இதைக் குறிப்பிட்டுள்ளார். சில அத்தியாயங்களில் சில அடிப்படையான
தகவல் பிழைகளும் (ஆழ்வார்கள் வேதகாலத்திற்கு முற்பட்டவர்கள், ஆண்டாள் தாழ்த்தப் பட்ட சாதியைச்
சேர்ந்த பெண் – இத்யாதி), சில குறைத்தல் வாதங்களும் பொதுமைப் படுத்தல்களும் உள்ளன என்பதைத்
தவிர்த்து விட்டுப் பார்த்தால் இந்த சிறிய, எளிய நூல் இந்து ஞானத்தின் பூரண ஒளியின்
கீற்றுகளை செம்மையாகத் தொகுத்தளிக்கிறது என்றே கூற வேண்டும். அதுவே இந்த நூலை
இன்றைக்கும் முக்கியமானதாக்குகிறது.
*****
இரண்டாவதாக உள்ள நூல் “இந்து மதம் – ஒரு விவேகிக்கான வழிகாட்டி”. ஸ்ரீ நாராயண குரு
மரபில் வந்த குரு நித்ய சைதன்ய யதி எழுதியுள்ள சிறிய கையேடு இது.
hindu-books-2
“கோயில் செல்லும் பக்தர்களுக்கு, குறிப்பாக சிலைகளை அலட்சியமாகப் பார்த்து
செல்பவர்களுக்கு இந்தப் புத்தகத்தை பெருவாரியாக வினியோகிக்க வேண்டும் என்பது எனது ஆவல்”
என்று முன்னுரையில் குருவின் சீடரான ஜான் ஸ்பியர்ஸ் குறிப்பிடுகிறார்.
இந்த நூல் இந்து மதம் பற்றிய ஒட்டுமொத்தமான அறிமுகம் அல்ல, இதன் பேசுபொருள் குறுகியது.
கோயில்கள் மற்றும் தெய்வத் திருவுருவங்களின் பின்னுள்ள தத்துவக் குறியீடுகளை விளக்குவது
என்பதே நூலின் நோக்கம்.
“கோயில்கள் கல்லால் ஆன புத்தகங்கள்” என்பதில் தொடங்கும் அத்தியாயம் எப்படி பஞ்ச பூதங்களின்
குறியீடுகள் ஆலய அமைப்பில் உள்ளன என்பதை அழகுற விளக்குகிறது. பின்னர், கடவுளரின்
வாகனங்கள் குறிப்பது எதை என்பதை ஆழ்மன உளவியல், யோகம் ஆகியவற்றின் அடிப்படையில் குரு
எடுத்துரைக்கிறார். கணபதி, சரஸ்வதி, சுப்பிரமணியர், மகாவிஷ்ணு, சிவன் ஆகிய தெய்வத்
திருவுருவங்கள் குறித்து அடுத்தடுத்த அத்தியாயங்கள் பேசுகின்றன.
தெய்வ வடிவங்கள் பற்றி குறியீட்டு ரீதியிலான விளக்கங்கள் இப்போது நாம் அடிக்கடி
கேள்வியுறுபவை. ஆனால் நித்யா இந்த நூலை 1960களில் எழுதியபோது இந்த புரிதல் வெகுஜன
அளவில் மிகக் குறைவாகவே இருந்தது என்று எண்ண இடமிருக்கிறது. மேலும், குருவின்
விளக்கங்கள் பாடப் புத்தக தன்மையிலானவை அல்ல, அவரது நேரடியான ஆன்மீக அனுபவங்களில்
முகிழ்த்தவை என்பதால் அவை தனித் தன்மை கொண்டவை. அவற்றின் மதிப்பும் அதிகம். குரு அவற்றை
விளக்கும் முறையும் மிகுந்த கவித்துவம் நிரம்பியது..
”கணபதி கொழுக்கட்டையால் நமது வயிற்றையும் ஞானத்தின் குறியீட்டால் (வேத புத்தகம்,
ஞானமுத்திரை, தாமரை, முறிந்த தந்தம்..) நமது ஆன்மாவையும் நிரப்ப விரும்புகிறார்.
உலகின் அனைத்து நன்மைகளையும் “பிரியங்கள்” (ப்ரேயஸ்) என்னும் பிரிவில் தொகுக்கலாம்.
கொழுக்கட்டை பிரியங்களின் குறியீடாகிறது. வேதங்கள், தாமரை மற்றும் ஞான முத்திரை இவை
ஆன்மீக மதிப்பீடுகளின் தொகுப்பைக் குறிக்கின்றன. இது ‘ஸ்ரேயஸ்’ எனப் படுகிறது. அறிவார்ந்த
மனம் படைத்த ஒருவர் ஒன்றிற்காக மற்றொன்றைத் துறக்க மாட்டார். அவர் இரண்டையும் ஏற்றுக்
கொள்வார். சுவையான உணவை உண்டு மகிழ்வது, கீதை போன்று ஞானம் தரும் புத்தகங்களைப்
புரிந்து கொள்ள ஒரு போதும் தடையாக இருப்பதில்லை. இவை இரண்டிற்கும் நம் வாழ்வில் தனித்
தனி இடங்கள் உள்ளன…. ஆன்மீகத்தின் பெயரால் உணவை மறுப்பது, உண்ணா நோன்பு இருப்பது போன்ற
மிகைகள் தேவையற்றவை. அனைத்து குருக்களும் இந்த எளீய உண்மையை உணர்ந்தவர்களே”.
கணபதி குறித்த இத்தகைய விளக்கம் நாம் பொதுவாகக் கேள்விப் படாத ஒன்று.
இந்த நூலிலும், குரு நித்யா ஆரியர் – ஆரியல்லார் கோட்பாட்டு சட்டகத்தைப் பொருத்தும் பல
இடங்களைப் பார்க்கலாம் (வள்ளி – தெய்வயானை இருவரும் சுப்பிரமணியரை மணம் புரிந்ததைக்
குறிப்பிடும் இடம் ஒரு உதாரணம்). இந்த விஷயத்தில் அவர் தனது ஆசிரியரான நடராஜ
குருவைப் பின்பற்றுகிறார். நடராஜ குரு ஆன்ம சாதகர் மட்டுமல்ல, மேற்குலகின் புகழ்பெற்ற
பல்கலைக் கழகங்களில் தத்துவப் பேராசிரியராகவும் பணியாற்றியவர்.
எனது வாசிப்பில், பொதுவாக கல்விப் புல பின்னணி கொண்ட இந்திய அறிஞர்கள் அனைவருமே
அனேகமாக ஆரியப் படையெடுப்பு கோட்பாட்டை முற்றாகவே ஒரு காலத்தில் ஏற்றுக் கொண்டு
விட்டார்கள் என்பதைக் காண்கிறேன். வரலாறு என்ற துறையில், அது சார்ந்த நிபுணர்களின்
ஆய்வுகளுக்கும், முடிவுகளுக்கும் மரியாதை அளிக்கப் பட வேண்டும் என்ற கல்விப் புல
நெறிமுறையே கூட இதற்குக் காரணமாக அமைந்திருக்கலாம். ஆரியப் படையெடுப்புக் கோட்பாட்டை
தீவிரமாக மறுதலித்தவர்களில் முக்கியமானவர்கள் அனைவரும் விவேகானந்தர், ஸ்ரீஅரவிந்தர்,
டாக்டர் அம்பேத்கர் போன்று கல்விப் புலங்களுக்கு வெளியே சமூக, ஆன்மிகத் தலைவர்களாக
இருந்தவர்களே. ஆரியக் கோட்பாடு வாதம் தொடர்ந்து இவ்வாறூ ஒரு தரப்பினரால் கேள்விக்கு
உட்படுத்தப் பட்டதால் தான், பின்னர், நவீன அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியின் உதவி கொண்டு
தொல்வரலாறு குறித்த பல புதிர்களை நாம் விடுவிப்பதற்கு ஒரு முகாந்திரம் ஏற்பட்டது
என்பதையும் கவனிக்க வேண்டும். அறிவு வளர்ச்சியும், தேடலும் கல்விப் புலங்களுக்கு
வெளியேயும் தீவிரமாக நடைபெற முடியும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.
இந்தப் புத்தகத்தை கே.பி.வினோத் சீரான நடையில் மொழியாக்கம் செய்திருக்கிறார். சிக்கலான
தத்துவக் கலைச் சொற்களும் தமிழில் பொருள் புரியுமாறு எடுத்தாளப் பட்டுள்ளன. சில
இடங்களில் மொழியாக்கம் நெருடுகிறது. உதாரணமாக, சரஸ்வதி குறித்த அத்தியாயத்தில் “அவர்
நான்கு கைகளுடன் காட்சி தருபவர்… வீணையை ஏந்தியிருப்பார்…” போன்ற வாக்கிய அமைப்புகள்
அன்னியமாகத் தெரிகின்றன. கடைசி சில பத்திகளில் மட்டும் ”அவள்” என்ற சரியான பிரயோகம்
வந்திருக்கிறது.
*****
மூன்றாவதாக உள்ளது, “இந்துமதம் – சில விவாதங்கள்”. ஜெயமோகன் தனது வலைப்பதிவில் இந்து
மதம் & தத்துவம் குறித்து நிகழ்த்திய சில உரையாடல்களும், கேள்வி பதில்களும்
இப்புத்தகத்தில் தொகுக்கப் பட்டுள்ளன. கேள்வி-பதில் என்றவுடன் இவை வழக்கமான ஒன்றிரண்டு
பத்திகளில் சொல்லப் படும் பதில்கள் என்று நினைத்து விடவேண்டாம். ஒவ்வொரு பதிலும் ஒரு
முழு நீளக் கட்டுரையாக உள்ளது. சிலவற்றில் கேள்விகளே பல பத்திகளில் விரிவாக முன்வைக்கப்
படுகின்றன.
hindu-books-3
இதற்கு முன்பு ஜெ.யின் வலைப்பதிவில் வந்த கட்டுரைகள் “இந்து ஞானம்” என்ற பெயரில்
வெளிவந்திருக்கின்றன (தமிழினி வெளியீடு). இப்புத்தகத்தை ஒரு வகையில் அதன்
தொடர்ச்சியாகவே காண முடியும். இந்து மதம், இந்து தத்துவம் என்று இரு பிரிவுகளில்
கட்டுரைகள் இப்புத்தகத்தில் தொகுக்கப் பட்டுள்ளன.
மேற்கூறிய இரண்டு புத்தகங்களுடன் ஒப்பிடுகையில், இந்தப் புத்தகத்தின் சமகாலத் தன்மையே இதை
முக்கியமான ஒன்றாக்குகிறது. “நான் இந்துவா?” என்ற முதல் கட்டுரையே ”இந்து அடையாளம்”
என்கிற அடிப்படையான விஷயம் குறித்து தீர்க்கமான பார்வைகளை முன்வைப்பதாக உள்ளது.
இந்துமதத்தின் ஒருமை – பன்முகத் தன்மை, முரண்கள் – இசைவுகள் ஆகியவற்றை அதன் முழுமையான
வீச்சுடனும், நடைமுறையில் காணும் உதாரணங்களூடனும் எடுத்துச் சொல்லிப் புரியவைக்கும் ஒரு
கட்டுரை இது. “கலாசார இந்து” என்ற கட்டுரையும் இதே வகையிலானது தான். என்னைப் பொறுத்த
வரையில், இந்தியாவின் எல்லா வரலாறு, சமூகவியல் பாடப் புத்தகங்களிலும் பாடமாக இடம் பெற
வேண்டிய இரு கட்டுரைகள் என்று இவற்றைச் சொல்வேன்.
தமிழ்ச் சூழலில் சம்ஸ்கிருதம் பற்றிய முற்றிலும் எதிர்மறையான கண்ணோட்டம் திராவிட இயக்க
அரசியலால் விதைக்கப் பட்டது. இத்தொகுப்பில் சம்ஸ்கிருதம், நாட்டார் தெய்வங்கள், கோயில்கள்
குறித்து எழுப்பப் பட்ட கேள்விகள் அது உருவாக்கியவையே. அவற்றுக்கு மிகவும்
தர்க்கபூர்வமாகவும், ஆதார பூர்வமாகவும் ஜெயமோகன் விடையளித்திருக்கிறார். இவை பொதுவான
தமிழ் வாசகர்களுக்கு பல்வேறு வகையில் திறப்புகளை அளிப்பவையாக இருக்கும்.
“மானுட ஞானம் தேங்குகிறதா?”, “அறிதல் – அறிதலுக்கு அப்பால்” ஆகிய கட்டுரைகள் மானுட
பிரக்ஞையின் விளிம்பில் நின்று இந்து தத்துவ சிந்தனைகளை மதிப்பீடு செய்து விவாதிப்பவை.
”பரிணாமவாதமும் இந்திய மதங்களும்” என்ற கட்டுரை இந்து சிந்தனை மரபு எவ்வாறு நவீன
அறிவியல் கோட்பாடுகளை, குறிப்பாக பரிணாமவாதத்தை தத்துவ ரீதியாக எதிர்கொள்கிறது
என்பதைப் பேசுகிறது. ஏதோ ஒரு ஊரில் நடக்கும் சிறூ சம்பவங்களைப் பிடித்துக் கொண்டு
“இந்து பிற்போக்குத் தனத்தை” பொதுப்படையாக விளாசித் தள்ளும் நமது ஊடகத்தினரும்,
அறிவுஜீவு வர்க்கத்தினரும் வசதியாக மறந்து விடும், அல்லது புறந்தள்ளி விடும் விஷயம்
இது. மேற்கத்திய நாடுகளில் கிறீஸ்தவ சூழலில் இது எவ்வளவு பெரிய கருத்துலக/தத்துவ
பிரசினை என்பதை தங்கள் ஊடக சகபாடிகள் மூலம் இவர்களில் சிலர் அறிந்திருக்கக் கூடும்.
ஆனால், இந்து சூழலில் எப்படி எப்படி அறிவியல் நோக்கு மிக இயல்பாக கைகூடுகிறது என்பதை
நாட்டு மக்களுக்கு விளக்கிச் சொல்லவேண்டும் என்று அவர்களுக்குத் தோன்றுவதில்லை. இக்கட்டுரை
அதை அழகாக செய்கிறது. நாத்திகம், ஆத்திகம் குறித்த கட்டுரையும் சிறப்பாக உள்ளது.
உபநிஷத காலம் தொடங்கி இன்று வரை இந்து ஞான மரபு விவாதங்களினூடாகவே வளர்ந்து
வந்துள்ளது. அதன் நீட்சியாக, தொடர்ச்சியாக இத்தகைய புத்தகங்கள் வெளிவருவது, அந்த மரபு
உயிர்த்துடிப்புடன் உள்ளது என்பதை விளக்கும் பிரத்யட்ச உதாரணமாகவே அமைகிறது.
தனது பதிப்பக செயல்பாட்டின் ஆரம்பத்திலேயே இந்துமதம் குறித்த சிறப்பான நூல்களை
வெளியிடும் சொல்புதிது பதிப்பகத்திற்கு வாழ்த்துக்கள்!

Professor k. kumar

unread,
Nov 23, 2014, 9:38:07 AM11/23/14
to brail...@googlegroups.com
நேர்காணல் – பவள சங்கரி
புகழ் கண்டு மயங்காதேPhoto0112

புகழ் தேடிச் செல்லாதே
புகழாரம் பாடாதே.
இன்னல் கண்டு கலங்காதே
இகழ்ச்சி கண்டு பதராதே
இகழ்ந்துரைக்க எண்ணாதே
தியானம் என்றால் என்ன?
“எண்ணத்தை வெளிப்படுத்துவதுதான் தியானம். நல்லெண்ணத்தை நாம் கொள்ளும்போது அதுவே நம்
செயலுக்கு ஆதாரமாக விளங்குகிறது. நற்சுவாசத்துடன், நல்லெண்ணத்தை நாம்
வெளிப்படுத்தும்போது அந்த அலைகள் அதற்கு தகுந்தவற்றை ஈர்த்து நம் செய்கைக்கு துணை
புரிகின்றது.”
“தியானம் மூலம் தம் குருதேவர் ஈஸ்வரபட்டர் மாமகரிஷிகள் கொடுக்கும் பாடங்களின் மூலம்
தம்முடைய மெய்ஞ்ஞானத்தை உயர்த்திக் கொள்வதோடு தம் வாழ்க்கை முறையையும் மாற்றிக் கொண்டு அதன்
தரத்தையும் உயர்த்திக் கொள்ளலாம். சப்த ரிஷிகளின் துணையோடு, மாமகரிஷிகள், நவகோள்கள் ,
ராசி மண்டலங்கள், நட்சத்திர மண்டலங்களின் ஈர்ப்போடு தம்மைத் தாமே உயர்த்திக் கொள்ள்லாம்” என்று
ஆணித்தரமாகக் கூறும் ஞானத்திருமதி ராஜம்மாள் பாலசுப்பரமணியம் அம்மையார், தன்னுடைய 70
அகவையைத் தாண்டியவர். சற்குருதேவர் ஈஸ்வரபட்டர் மாமகரிஷியின் அருளாசிகளால்தான் உங்களுடன்
உரையாடுகிறேன் என்று ஆரம்பித்தவர், நல்ல ஆரோக்கியமும், தெளிவான சிந்தனையும், கலகலப்பான
உற்சாகமும், அமைதியான மனோநிலையும் கொண்ட இளம் மங்கையாக வலம் வருதலே இதற்கான சான்று..
ஆவிகளுடன் தம்மால் உரையாட முடியும் என்றும் அதற்கான அனுமதி கிடைக்கும் போது மட்டுமே
அது குறித்த செய்திகளை பகிர்நது கொள்ள முடியும் என்றும் சொல்லி நம்மை ஆச்சரியத்தில்
ஆழ்த்துகிறார். இது குறித்து அவரிடம் மேலும் சில வினாக்களும் அதற்கான அவ்ருடைய
விடைகளும் பல ஐயங்களை தெளிவாக்கும் விதமாக அமைந்துள்ளது. நாமக்கல் மாவட்டம்,
குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். பொறியியல் கல்லூரியின் தாளாளர் ’கவாலியர்’ எம். எஸ் மதிவாணன்
அவர்களின் உடன் பிறந்த சகோதரி இவர். இவர்களின் குடும்பமே ஆழ்ந்த ஞானமும், எண்ணமே கடவுள்
என்ற உறுதியான நிலைப்பாடும், நேர்மையே இலட்சியம் என்ற கடப்பாடும் கொண்டு செயல்படும்
பாங்கு மகிழ்ச்சியளிக்கக்கூடியது.
தியானத்தினால் சாதிக்கக்கூடியவை எவை?
தம்முள் இறைவனைக் காணும் சக்தியைப் பெற்று தெய்வ நிலை பெறச் செய்வதே தியானம். இல்லறத்தை
நல்லறமாக்கி, இல்லத்தையே ஆலயமாக்கி, இல்லறத்தில் இருந்தபடியே உயர் ஞானம் பெற்று
இறைத்தன்மையை அடையச் செய்வதே தியானம்.
இறைவனை எங்கனம் அறிவது?
பாலாகி, தயிராகி, மோராகி, வெண்ணெயாகி,நெய்யுமாகி உருப்பெற்ற பிறகு மீண்டும் மாற்ற
முடியுமா? அதை நெய்யாக மட்டுமே பயன்படுத்த முடியும். கொடிய விடமும், அமுதுணவும்
அனைத்துமே ஆண்டவன் படைப்புதான். பாலைப்போல எண்ணமும், பாலின் உருமாற்றத் தயிரைப்போல்
இவ்வெண்ணத்தால் எடுக்கும் சுவாசமும், மோரைப்போல் கடையப்பெற்ற உணர்வும், வெண்ணெயைப்போல்
அவ்வுணர்வின் வழித்தொடர் திரட்டலும், நெய்யைப் போல ஞானமும் பெற்றால் அந்த ஞானத்தையே
ஒவ்வொரு ஆத்மாவும் அவரவர்கள் எதன் வழித்தொடரை செயலாக்கும் குறிக்கோள் கொண்டுள்ளனரோ
அவற்றில் நெய்யைப் போன்று செயல்படுத்தலாம்.
தியானத்தின் மூலம் கடவுளைக் காண முடியுமா?
“எண்ணமேதான் கடவுள்;
கடவுளேதான் எண்ணம்;
எண்ணத்தை பரிசுத்தப்படுத்தினால்
கடவுளைக் காணலாம்!
Photo0115
இயற்கையே கடவுளாக்கி, அன்பையே தெய்வமாக்கி நல்லெண்ணம், நல் சுவாசம் எடுக்கும் முறையை
வழிப்படுத்துதல் வேண்டும். இயற்கையே கடவுள் என்றால் இயற்கையின் படைப்பான நாமும்
கடவுள்தான். இயற்கையின் கடவுளான நாம் அன்பான தெய்வ உணர்வை உணர்ந்தோமானால், அத்தெய்வீக
நல்லுணர்வு கொண்ட சுவாசம் நாமெடுக்கும் பொழுது அவ்வுணர்வால் ஏற்படும் நல்லெண்ணமுடன் கூடிய
சுவாசத்தால் இறைவனின் இயற்கைப் படைப்பிற்கு நற்சக்தி ஒளி அலை கூடுகின்றது.
இயற்கையாய் உள்ள் நம் பூமியின் உணர்வின் சுவாச நிலைக்கொப்ப அமில குணக்காற்றைத்தான்
பால்வெளி மண்டலத்தில் பலவாக பரவியுள்ள அமில குண நிலையையே சூரியனின் அமில
குணத்திற்கும், பூமியின் உணர்வு அமில சுவாச மோதலுக்கும் தனக்கு வேண்டிய அலையை மட்டும்
எடுப்பதினால், இன்றுள்ள இவ்வகத்தக் காற்று மண்டல நிலையையே நாமெடுக்கும் நல்லுணர்வின்
கூட்டுச் சக்தியினால் எடுக்கப்படும் ஜெபசுவாச அலையின் ஈர்ப்பினால் பூமியையே புனிதத்
தன்மை ஈர்ப்பாக்கலாம். எண்ணிலடங்கா மனித ஆத்மாக்களின் எண்ண சுவாசமும் மற்ற இனவர்க்கங்களின்
சுவாசமும் நம் பூமி எடுத்து வெளிகக்கும் சுவாசமுடன் கலந்து வெளிப்படும் இயற்கையையே
நற்கடவுளாக்க நல்லெண்ண சுவாசம் நாம் எடுக்க வேண்டும்.
நல்லெண்ணம் மட்டுமே இறைவனைக் காணும் வழி என்றால் எண்ணத்தை பரிசுத்தப்படுத்துவது எங்கனம்?
பசி, தூக்கம் மற்றும் இயற்கையின் சில மாற்றங்களும் நம் உடலில் எண்ணத்தைச் செலுத்தாமலே
உணர்வினால் ஏற்படுகிறது. உணர்வால் எண்ணத்தால் தெரிவதைப் போன்று எண்ணத்தைக் கொண்டு
உணர்வையும் மாற்றி அமைக்க முடிகிறது.
ஜீவனுக்கே சக்தி நீர். அந்நீர் சக்தியுடன் வளரும் பூமியில் எப்படிச் சில இரசாயணத் திரவங்களை
எடுத்து அவற்றைப் பக்குவ முறையினால் மாற்றிய பிறகு அதே நீரை அவற்றில் சேர்த்தால்
கெட்டுவிடுகிறது. நீரில்லாமல் எண்ணெய் இல்லாவிட்டாலும் நீர் சேர்த்தால் எண்ணெய்
கெட்டுவிடுகிறது. இதைப்போன்று நம் எண்ணத்தை நாம் செலுத்தும் முறைப்படியே தெயவமாகவும்
ஆகலாம் அன்றி பேயாகவும் சுழலலாம்.. ஆக நல்ல எண்ணங்களே நம்மை கடவுட்தன்மை
பெறச்செய்கிறது. அதாவது, உணர்வுடன் கூடிய எண்ணங்களைச் செலுத்தி பலவாக நிலைகளைப்
புரியும் ஆற்றல் கொண்ட முதிர்ச்சியுற்ற பிறப்பினனான மனிதன், எந்த உணர்வின் அடிப்படையில்
வளர்ச்சியின் வழிப்பெற்றானோ அதே உணர்வலைக்குத் தன்னை வழிநடத்த இந்த ஞானத்தைச்
செலுத்துவானேயானால் அவனே தேவனாகலாம்.
இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் கோபம், குரோதம், வஞ்சனை, வெறி போன்ற தீய எண்ணங்களை
வளர்த்து ஆண்டவனின் ஆலயத்தை அசுத்தம் செய்யாமல், நம் எண்ணத்தை உயர் ஞானம் கொண்டு சொல்லாலும்,
செயலாலும் , நம்முள் இருக்கும் இறைவனை வணங்குதலே அந்த இறைவனை நேரில் காணும் மார்க்கமாகும்.
மதம் என்பதன் அடிப்படையில் இறைநிலையை அடையும் தன்மை பற்றி தங்கள் கருத்து என்ன?
பேரண்ட பூமியின் காற்று மண்டலத்தின் ஈர்ப்பு ஓட்டத்தில் ஓடும் நம் பூமி ஒலிக்கும் நாதம்தான்
‘ஓம்’ என்ற நாதம். இந்த ‘ஓம்’ என்ற நாதமே பூமியின் சகல ஜீவராசிகளுக்கும் அடிப்படை. இந்த
‘ஓம்’ என்ற நாதத்தின் ஒலியில்தான் எல்லாமில் எல்லாமாய் நாம் உள்ளோம். மற்ற மண்டலங்களில்
இவ்வொலியின் தன்மை மாறுபடுகிறது. நம் பூமியின் ஜீவ ஒலியான இந்த ‘ஓம்’ என்ற ஒலியை நாம்
எடுக்கும்போது நம் ஆத்மாவும் அவ் ‘ஓம்’ என்ற ஒலியுடனே ஐக்கியப்படுகிறது. இதையே
கிறித்துவ மதம் ‘ஆமென்’ என்றும் முகமதியர்கள் , ‘அல்லாஹீ அக்பர்’ என்றும் நாதமெழுப்புகின்றனர்.
மனித இனங்களை மதத்தினால் அவர்களுக்கு நல் உணர்வுகளும், சில வழித்தொடர் வாழ்க்கையில் நல்
வழிகளையும் ஒழுங்குபடுத்தி மதம் என்ற அடிப்படை பிணைப்பிற்குள் ஓர் கூட்டு அமைப்பு
ஏற்படுத்தி மனித இனங்களின் எண்ணங்கள் சிதறாமல் ஒழுங்கு முறையென்ற வேலி அமைத்து
பாதுகாப்பு உணர்வைக் கூட்ட வழிவந்தது மதம். ஆனால் வளர்ந்துவிட்ட இந்த சமுதாய வளர்ச்சிப்
பெருக்கத்தில் மதத்தைக் கொண்டு இனத்தைப் பிரிக்கும் துவேச அலைகளும், தன் மதம் என்ற
வெளியின் பிணைப்பும் வளர்த்துக் கொண்டு ஒன்றே குலமான மனித இனத்தை ஒருவனே தேவனாக
உணரும் வழித் தொடரை மதங்களைப் பிரித்து, உணர்வுகளை மாற்றி தத்தம் சமுதாய இச்சையின்
வெறியில் சுழன்றுள்ள் இக்கலியின் காலத்தில் வளர்ந்துவிட்ட இனப்பெருக்கத்தில் எந்த
அடிப்படையில் மதம் உருவானதோ அதற்கெல்லாம் மீறிய இனப்பெருக்கத்தில் உள்ள சமுதாய
வளர்ச்சியில் மாற்றம் கொண்டுள்ள இந்நாளிலும் இம்மதம் என்ற பிடியிலிருந்து எல்லா மதமும் நம்
மதம்தான் என்ற மனித ஆத்மாவின் உயர்ந்த ஞான மதம் செல்ல வேண்டும். எம்மதமும் தனதாகக் கொள்ளும்
ஞான உணர்வுதான் இன்றைய காலகட்டத்தின் அவசியத் தேவையாகும். எண்ணத்தால், உணர்வால் ஞான மதம்
ஒவ்வொருவரும் பெறல் வேண்டும்.
”காற்றிலிருந்தே ஆகாரம் பெற முடியும்” என்ற தங்கள் கருத்தின் அடிப்படை யாது?
சரீரத்தில் சுவாசம் நாசியின் வழிகாற்று ஆகாரம் உட்செல்லும் பொழுது உடலினுள் இயங்கும்
உயிர்காற்று நொடிக்கும் குறைவான நேரத்தில் நாடிகளின் வழியோடி செயல்படும் விதமே,
சரீரத்தை இயக்கி தொழில்படும்பொழுது உடலில் பசி, தாகம் ஏற்படுவதெல்லாம் இந்த உயிர்காற்றின்
மூலம்தான் சரீரசெயல் அனைத்தையும் ஓர் கட்டுக்கு வைத்து பஞ்சேந்திரியங்கள் புற வாழ்க்கைச்
செயலில் இயங்கும் இயக்கத்தை நிலைநிறுத்தி, ஒருமையுள் ஐந்திடக்கிட்டால், தியானத் தொடரே
நிலைபெற்றுவிட்டால், காற்றிலிருந்தே ஆகாரம் பெற்றிடும் அமைவு ஏற்பட்டுவிடும்!
மனிதன் மகானாவது எங்கனம்?
வாழ்க்கையில் எளிமையும், ஆத்மாவில் சுகத்தையும் அனுபவிக்கும் எண்ணத்தின் குணத்தைப் பெறும்
மார்க்கமே மனிதன், மனிதனாகும் முதல் நிலை. இம் முதல் நிலையில் மனிதனால் எடுக்கப்படும்
அறிவின் பகுத்தறிவு உயர்ஞானத்தின் மெய்ஞானத்தில் கண்டறியும் உண்மையின் சக்தியை
மனிதருக்குள் மனிதராய் விதைக்கப்படும் ஒலி அலைகள் ஒளி பெறும். மனிதனைப்
பக்குவப்படுத்தும் நிலைதான் மகானாகும் நிலை!
தியானத்தின் பலன் பற்றி….?
காற்றலையில், ஜீவ நீர்ச்சக்தியில் சூரியனுக்கும் பூமிக்கும் மற்ற கோள்களின் தொடர்புக்கும்
ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்ளும் சுழல் ஓட்டத்தினால் காந்த மின் தொடர்பு ஒலியாகி,
ஒளியாகி, நீராகி உருவாகும் உயிர்த்துடிப்பு ஒவ்வொன்றிலுமே காந்த மின் அலை வளர்த்து,
சக்தியின் தொடர்பை மனித உணர்வு எண்ணத்தால் ஜீவகாந்த நினைவு அறியும் அறிவு,
பகுத்தறியும், ஞானமுதிர்ச்சியுற்ற நம் சரீரத்தை, நாம் நம்முள்ளுள்ள ஜீவகாந்த நுன்ணலையை
உயர்காந்த ஈர்ப்பு நிலைக்கு இவ்வுடல் என்ற கோளத்தையே எண்ணத்தில் தியானம் கொண்டு மனிதனின்
உயர்வு நிலைக்கு ஒளிநிலை என்றும், பிறவாநிலை என்றும் உணர்த்திய வழித்தொடருக்குச் செல்ல
வழிகாட்டுவதே தியான முறை.
புறத்தடைகளைத் தகர்த்து அகத்தினுள் ஆழ்ந்து தியானம் செய்யும் முறை யாது?
கண்மூடி அமர்ந்து முதலில் தாய், தந்தை, அடுத்து குலதெய்வத்தையும், அடுத்து குருவையும்
வணங்கிப் பின் உயர்வு வழி காட்டிய நற்குண தெய்வநிலை பெற்றோரின் எண்ணமுடன் நம் எண்ணத்தைச்
செலுத்தி பின் எண்ணத்தை மேல்நோக்கி சூரியனின் எதிரில் நாம் உள்ளதாக எண்ணி ‘ஓம்’ என்ற
ஒலியுடன் சுவாசத்தை மேலே சூரியனிலிருந்து எடுத்து சூரியனை புருவ மத்தியில் பொட்டு
வைக்கும் இடத்தில் நினைத்து, எண்ணத்தைக் குவித்து, சித்தர்கள், ஞானிகள், முனிவர்கள்,
மகரிஷிகள் ஆகியவர்களை மனதில் எண்ணிச் சாந்தமாய் சுவாசமெடுத்து தியானித்துப் பழக வேண்டும்.
அப்போது நம் வாழ்க்கைத் தொடர்பில் நடந்தவை, நடப்பவை, நடக்க வேண்டியவை போன்ற எண்ணங்கள்
யாவும் இவ்வுணர்வில் இச்சரீரம் பெற்ற காலம் முதற்கொண்டு ஓடிய நினைவோட்டங்கள் மோதும். அதே
ஓட்டத்தில் எண்ணத்தைச் செலுத்தாமல், அவரவர்கள் தெய்வமாய் வணங்கும் குல தெய்வத்தின் தொடர்பு
கொண்டு சாதி, மத வேற்றுமை இன்றி முன்னோர்களால் வழிப்படுத்திக்காட்டிய தம் குருத்
தொடர்பைக் கூட்டிக்கொண்டு , நாம் எண்ணும் குரு சூரியனில் இருந்தே நம் ஆத்மாவை உயர்வு
நிலைப்படுத்தும் உணர்வுடன் எண்ணத்தைச் செலுத்தி அறியும் தொடர்புடன் உணர்வை ‘ஓம்’ என்ற
ஒலியுடன் இச்சுவாசத்திற்கு உயர்காந்த நுண் அலையை எடுக்க வேண்டும்.
இச்சரீரம் ஜீவகாந்த சக்தி கொண்டது. நாமெடுக்கும் அலை உயர்காந்த நுண்ணிய ஒலி சக்தி
பெற்றது. உடல் என்ற ஜீவசக்தி உணர்வு எண்ணத்தில் உயர்காந்த தொடர்பலையை அறியும் ஆற்றலுடன்
தியானத்தை மேற்கொண்டோமானால் மனிதனுக்கடுத்த தெய்வநிலை இச்சரீர பிம்பத்திலிருந்தே
ஒவ்வொருவரும் பெறலாம்!!
நாமும் தெய்வநிலையைப் பெற முயற்சிப்போம் என்ற நற்சிந்தையுடனான மன நிலையுடன் ராஜம்மாள்
அம்மையாரை வணங்கி விடைபெற்று வந்தோம்.
பவள சங்கரி
பவள சங்கரி

Professor k. kumar

unread,
Nov 23, 2014, 9:49:57 AM11/23/14
to brail...@googlegroups.com
» மனிதப் பயிர்களுக்கு மழையைப் போன்றவர்!
மனிதப் பயிர்களுக்கு மழையைப் போன்றவர்!
Friday, August 10, 2012, 11:17
Featured, நேர்காணல்கள்
1 comment
பவள சங்கரி
தி.க.சிவசங்கரன் – சிறப்பு நேர்காணல்
mail.google.com_
‘நான் ஒரு சாதாரண களப்பணியாளன்’ என்று தம்முடைய சாகித்திய அகாதமி பரிசு பெறும்
விழாவில் நிறைகுடமாகத் தம்மை வெளிப்படுத்திக் கொண்ட தி.க.சி. என்று இலக்கிய
வட்டாரத்தில் அழைக்கப்பெறும் திரு. தி.க. சிவசங்கரன் அவர்கள் கவிஞர், சிறுகதை ஆசிரியர்,
மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், கட்டுரையாளர், பத்திரிக்கை ஆசிரியர், சிறந்த விமர்சகர் என
பன்முகங்கள் கொண்ட ஒரு வல்லமையளார். தனக்குச் சரி எனப்படுவதை அழுத்தமாக எடுத்துச்
சொல்கிற தன்மையுடையவர் என்று மூத்த எழுத்தாளர் திரு வல்லிக்கண்ணனால் பாராட்டப் பெற்றவர்,
திறனாய்வுத் தென்றல் தி.க.சி அவர்களின் முழு பரிமாணங்களையும், எஸ்.இராஜகுமாரன் இயக்கிய
‘21இ சுடலைமாடன் கோயில் தெரு, திருநெல்வேலி டவுன்’, என்ற ஆவணப்படம் வாயிலாக, கண்டு
உணர முடிகிறது. கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களால் ‘Literrary Activist’ அதாவது
‘தமது உற்பத்தி அளவினை அல்லது தம் குழுவின் உற்பத்தியளவினைப் பெருக்கி வெற்றி காணும்
பொதுவுடைமைக் கட்சி உழைப்பாளர்’ என்று பொருள்படும்படி பாராட்டியிருப்பதும்
குறிப்பிடத்தக்கது.
DSC099561
8/8/2012 புதன்கிழமையன்று, ஈரோடு புத்தகத் திருவிழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து
கொள்ள்ள வந்திருந்த திரு தி.க.சி. அவர்களுடன் நம் வல்லமை இதழுக்காக நேர்காணல் எடுக்க
சந்தித்த போது அவருடைய உற்சாகமும், உபசரிப்பும், சுறுசுறுப்பும், 88 வயதை சுத்தமாக
மறைத்து விட்டது ஆச்சரியம். மிக எளிமையான தோற்றமும், சக மனிதர்களின் மீது அவர் காட்டும்
நெருங்கிய நட்புறவும், அவர்பால் நம்மை எளிதாக ஈர்க்கச் செய்கிறது. ஒவ்வொரு பேச்சிலும்,
செயலிலும் பரந்த சமூகச் சிந்தனையும், நல்ல மனிதாபிமான நோக்கமும் வெளிப்படையாகத்
தெரிகிறது. நல்ல படைப்புகளை வழங்குவதோடு, மனிதர்களையும் நாடிப்ப்ழகும் இவருடைய
தன்மையினால், சாதாரண மனிதர்களிடையேயும் இவருடைய எழுத்து சென்றடைவதோடு, அவர்களுக்குள்
இருக்கும் படைப்பாற்றலையும் வெளிக்கொணரும் வல்லமை பெற்றுவிடுகிறது. மார்க்சிய தத்துவ
நோக்குடன் படைப்புகளை விமர்சிக்கும் ஒரு விமர்சக வித்தகர் இவர். பிரபல எழுத்தாளர்
வண்ணதாசன் இவருடைய மகனார்.
கேள்வி: தங்களுடைய பதினேழாவது வயதில் ஆரம்பித்த இலக்கியப் பணிகள் பற்றி..?
தி.க.சி. : (மகிழ்ச்சி பொங்க குழந்தையாய் மலர்கிறார்) ஆமாம். என்னுடைய முதல் சிறுகதை
பேராசிரியர் நாரண துரைக்கண்ணன் ஆசிரியராக இருந்த, ‘பிரசண்ட விகடன்’ இதழில்
வெளிவந்தது. திருவள்ளுவரும், பாரதியாரும், பாரதிதாசனும் எம்முடைய வழிகாட்டிகள்.
ஒவ்வொரு தமிழனுக்கும் இவர்கள்தானே வழியாட்டியாக இருக்க முடியும்? என் படைப்புத்
தொழிலுக்கு ஊக்கம் கொடுத்து எனக்கு குருவாக இருந்தவர் வல்லிக்கண்ணன். அவரில்லையென்றால்
இன்று இந்த தி.க.சி. இல்லை.
1941ஆம் ஆண்டில், நெல்லை இந்துக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது வல்லிக்கண்ணன் என்ற
என் இலக்கிய குருநாதரைக் கண்டுபிடித்தேன். முழுநேர எழுத்தாளராக ஆகவேண்டும் என்ற
எண்ணத்தில் தம்முடைய அரசாங்க வேலையை உதறித் தள்ளிவிட்டு தம் குடும்பத்தினருடன் எங்கள்
வீட்டிற்கருகில் குடிவந்தவர். நேரம் கிடைத்த போதெல்லாம் அவ்ருடன் கழிந்த என் பொழுதுகள்
எனது இலக்கியப்பசிக்குக் கிடைத்த உணவு எனலாம்.
கேள்வி: தாமரை இதழாசிரியராக தங்களுடைய அனுபவம்?
தி.க.சி. : அமரர் ஜீவா அவர்கள் தோற்றுவித்த ‘தாமரை’ என்ற இலக்கிய இதழில் ஆசிரியர்
பொறுப்பில், தரமான 100 இதழ்களைத் தயாரித்து, தாமரையின் DSC099681
பொற்காலம் என்ற பெரும் பேற்றைப் பெற்றேன். எழுபதுகளில், தமிழக இடதுசாரி இலக்கியம்
தமிழ்ப் பண்புடனும், அதிகமான தத்துவப்பழு இல்லாத வகையிலும், ஒரு வரையறையுடன்
வெளிவந்தது. இன்றைய முற்போக்கு இலக்கிய உலகில் சாதனை புரிந்துவரும் பலரையும் இனங்கண்டு
ஊக்குவித்து தமிழுக்கு வழங்கிய பெருமை தாமரைக்கு உண்டு. எனக்கு அரசியலிலும்
முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் ஜீவா என்கிற அடலேறுதான்.
கேள்வி : சோவியத், சீன நாவல்கள் பலவற்றை தமிழாக்கம் செய்துள்ளீர்கள். தமிழாக்கம் செய்வதற்கான
முறைமைகளின் அடிப்படை கருத்துகள் பற்றி சொல்லுங்கள்
தி.க.சி. மொழிபெயர்ப்பு ஒரு கலை. படைப்பாளியின் மூலம் கெடாமல், வேறு ஒப்புமையை
புகுத்தாமல், சொந்த நடையில் நல்ல மொழியில் எளிமையா, கொடுப்பதே நல்ல மொழிபெயர்ப்பு.
வார்த்தைக்கு வார்த்தை மாற்றம் செய்ய வேண்டுமென்பது பொருளல்ல. தவறுகளை திருத்திக்கொள்ள
சற்றும் தயக்கம் வேண்டியதில்லை. நான் என்றுமே அதற்கு வெட்கப்பட்டதும் இல்லை. எழுதப்பட்ட
காலம், அதன் சூழல் இவையெல்லாம் கருத்தில் கொண்டு, அந்த மூலக்கருவில் மாற்றம் வராமல் தம்
சொந்த நடையில் புரியும்படி கொடுக்க வேண்டும். சரஸ்வதி ராமநாதன் சிறந்த
மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்ய அகாதெமி விருது பெற்றவர். 1965 – 72 காலகட்டத்தில்,
நான் தாமரை இதழில் பொறுப்பாசிரியராக இருந்த போது ஆண்டுதோறும் ’மொழிபெயர்ப்பு
சிறுகதை மலர்’ ஒன்றை வெளியிட்டு வந்தோம். அதில் சரஸ்வதி ராம்நாத் அவர்களின் ஒரு இந்தி
மொழிபெயர்ப்பு சிறுகதை தவறாமல் இடம்பெறும். அதேபோல், ‘கலை மகள்’ இதழில் உதவி
ஆசிரியராக இருந்து கொண்டே, (1940-50களில்) மராத்தியிலிருந்து நேரடியாக காண்டேகரின்
பதிமூன்று நாவல்கள், மற்றும் நூற்றைம்பது சிறுகதைகளையும் அற்புதமாக தமிழாக்கி, இலக்கிய
உலகிலும், எழுத்தாளர்களிடையேயும் ஓர் எழுச்சியை உருவாக்கியவர், கா.ஸ்ரீ.ஸ்ரீ என்கிற
ஸ்ரீனிவாச ஆச்சார்யா. இத்தோடு நிற்காமல், தமிழ் இலக்கியத்தின் பெருமைகளை இந்தி
வாசகர்களுக்கும் உணர்த்தும் வகையில் புதுமைப்பித்தன், கல்கி, கு.ப.ரா, வ.வே.சு ஐயர்,
கல்கி, பி.எஸ்.ராமையா, மகாகவி பாரதியின் கட்டுரைகள் போன்றவற்றை இந்தியில் சிறப்பாக
மொழிபெயர்த்துள்ளார். இந்தியைவிட, தமிழ்தான் சிறந்தது என்று ஆணித்தரமாக வாதிடுவாராம்..
கேள்வி: இன்றைய தமிழ்க் கவிதைகள் மற்றும் இலக்கியங்கள் பற்றி…?
தி.க.சி. : படைப்புகள் சமுதாய நோக்கம் கொண்டவைகளாக இருக்க வேண்டியது அவசியம்.
திருக்குறளை அடிப்படையாகக் கொண்டு ஆயிரம் கவிதைகள் அழகாகப் புனையலாம். புதுக்கவிதை
என்ற பெயரில் எதிர்மறையான கருத்துக்களை அழகு நடையில் கொடுத்து சமுதாயத்தை தீய வழியில்
நடத்திச் செல்பவர்கள் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியவர்கள். மொழியைப் போன்றே உள்ளார்ந்த
கருத்துகளும் இன்றியமையாதவை. மனிதநேயமிக்க அழகியல், அறிவியல், அறயியல் இம்மூன்றையும்
ஒருங்கிணைத்து புதிய படைப்புகளை வெளியிடுவதும், படைப்பதுமான பணிகளே இன்றைய
காலத்தின் அவசியமாகும்.
தமிழ் உள்ளவரை பாரதி எனும் ஞானசூரியனின் ஒளி வெள்ளம் இவ்வுலகில் பாய்ந்து கொண்டேதான்
இருக்கும். புதுமைப்பித்தன், கல்கி போன்ற எத்த்னையோ எழுத்தாளர்கள் மகாகவியின்
கதிர்வீச்சுகளாக தமிழ் இலக்கிய உலகில் வாழ்ந்தார்கள், இன்றும் வாழ்ந்து கொண்டும்
இருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை, நமக்குக் கல்கியும் வேண்டும், புதுமைப்பித்தனும்
வேண்டும். இருவரும் பாரதியின் குறிக்கோள்களைத் தமிழர்களின் வாழ்விலும், அவர்தம்
இதயத்திலும் தம் படைப்புகள் மூலமாக் விதைத்தவர்கள். அவர்களின் பாதையும், இலக்கியத்தரமும்
மிக வித்தியாசமானது. ஆயினும் இருவரும் தமிழில் மறுமலர்ச்சி இலக்கியம் படைத்தவர்கள்.
அதற்காகவேத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டு, இடையறாது உழைத்தவர்கள். தமிழ் இலக்கிய
வரலாற்றில் சி.சு. செல்லப்பா விட்டுச் சென்ற சுவடுகள் என்றும் அழியாதவை. தற்காலத் தமிழ்க்
கவிஞர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர்களுள் ஒருவர் கே.சி.எஸ். அருணாசலம். தமிழ்
இலக்கிய உலகில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக, தரமான கவிஞராகவும், சிறுகதை
ஆசிரியராகவும், பத்திரிக்கை ஆசிரியராகவும், திரைப்படப் பாடலாசிரியராகவும் கலை,
இலக்கிய அமைப்புகளில் செயற்பாட்டு வீரராகவும் திகழ்ந்தவர்.
கேள்வி: தமிழ்ர் வாழ்வில் தாங்கள் எதிர்பார்க்கும் புரட்சிகர மாற்றங்கள் எவை?
தி.க.சி. ”இருக்கும் நிலைமாற்ற ஒரு புரட்சி மனப்பான்மை ஏற்படுத்தல் பிறர்க்குழைக்கும்
எழுத்தாளர் கடனாம். பொதுமக்கள் நலம் நாடிப் பொதுக்கருத்தைச் சொல்க. புன்கருத்தைச் சொல்வதில்
ஆயிரம் வந்தாலும் அதற்கொப்ப வேண்டாமே” என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.
கார்ப்பரேட் கலாச்சாரம் தீவிரமாக வளர்க்கப்பட்டு வரும் இன்றைய தமிழக, இந்திய சூழலில் சிறு
பத்திரிக்கைகள் மற்றும் எழுத்தாளர்களின் கொள்கை நெறியும், போக்கும் பாரதிதாசன் பாதையில்
இருக்க வேண்டுமென்பது என்னுடைய அழுத்தமான கருத்து. புரட்சிகரத் தமிழ் தேசியம், பன்முக
இந்திய தேசியம், மனித நேயமிக்க சர்வ தேசியத்தின் தலைசிறந்த பிரதிநிதிகளான மகாகவி
பாரதி, புரட்சிக்கவி பாரதிதாசன், இலத்தீன் அமெரிக்கா மகாகவி பாப்லோ நெரூடா இவர்களின்
பாதையில் படைப்பாளிகளின் உள்ளடக்கமும், படைப்புகளும் அமையப் பெறுதல் வேண்டும். மகாகவி
பாப்லோ நெரூடாவின் படைப்புகள் தமிழாக்கம் பெற வேண்டும். மக்களின் பண்பாட்டைச் சீரழிக்கும்
படுமோசமான உளவியல் யுத்தத்தை பெரும்பான்மையான, அச்சு ஊடகங்களும், காட்சி ஊடகங்களும்
தவறான பாதையில் திசை திருப்பும் வகையில் வரிந்து கட்டிக் கொண்டு செயல்படுகின்றன. இதில்
எழுத்தாளர்களும், படைப்பாளிகளும் பலிகடா ஆகாமல் இருக்க வேண்டும். தம் மன நிறைவிற்காக
எழுதும் எண்ணம் எழுத்தாளர்களிடையே வளர வேண்டும். தரம் காக்கப்பட வேண்டும். சுதந்திரம்,
சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய உன்னத இலட்சியங்கள் கொண்டவைகளாக இருக்க வேண்டும்.
தமிழியம், தலித்தியம், பெண்ணியம், சுற்றுச்சூழலியம், விஞ்ஞானப் பூர்வமான மார்க்ஸியம்
என்னும் துறைகளில் தமிழ்ப் பண்பாட்டை வளர்க்க முயலும் முற்போக்கு எழுத்தாளர்களும்,
படைப்பாளிகளும் தகுந்த அங்கீகாரம் பெறுதல் வேண்டும். கடந்த பத்தாண்டுக் காலத்தில் தமிழ்
வாசகர்கள், பத்திரிக்கைகள், பதிப்பாளர்களிடையே தரமான இலக்கியங்களையும்,
படைப்பாளிகளையும் இனங்கண்டு பாராட்டும் போக்கு அதிகரித்து வருகிறது. இலக்கிய மதிப்பு
வாய்ந்த நூல்களை வாங்கிப் படிப்பதோடு, அது குறித்து கலந்துரையாடுதல், ஆழ்ந்த சர்ச்சைகளில்
ஈடுபடுதல், கருத்தரங்குகள் நடத்துதல் போன்றவற்றில் தமிழ் மக்கள், குறிப்பாக இளம்
தலைமுறையினர் மிகுந்த ஆர்வம் காட்டுவது மகிழ்ச்சிக்குரிய விசயம். சிந்திக்க விரும்பும்
வாசகர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் கூடுகிறது. குறிப்பாக சரிபாதியினராக உள்ள
பெண்களின் சிந்தனையில் தீவிர மாற்றம் நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. பெண்கல்வி
பெரும் முன்னேற்றம் கண்டிருக்கிறது. உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல்
என்னும் கொள்கைகள் மக்கள் மீது திணிக்கப்படும் இவ்வேளையில், சுதந்திரம், ஜனநாயகம், சமதர்மம்,
வளமான வாழ்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, ஆழ்ந்து சிந்தித்து செயல்பட வேண்டிய காலமிது.
கேள்வி : விஞ்ஞானப்பூர்வமான மார்க்சியம் என்றீர்களே? அதைப்பற்றி சற்று விளக்கமாக…….
தி.க.சி. இது குறித்து ஒரு நீண்ட கட்டுரையே எழுத வேண்டும். என் உடல் நலமும்,
அகவையும், அதற்கு இடம் கொடுக்கவில்லை. சுருக்க்மாக பதில் கொடுக்கிறேன்.
விஞ்ஞானப்பூர்வமான மார்க்சியம் என்பது, என் கருத்தில், மார்க்ஸ் – எங்கல்ஸ் – லெனின் கூறிய
கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு, இந்திய முகமும் குரலும்கொண்ட ஒரு சோசலிசத்தை
இந்தியாவில் நாம் அமைப்பதுதான்! இரசியப்பாதை, சீனப்பாதை, வியட்நாம் பாதை, கியூபா
பாதை, இவற்றில் அமைந்த அரசுகள் எல்லாம் விஞ்ஞானப்பூர்வமான மார்க்சிய அடிப்படையில்
அமைந்தவைதாம்; அந்த அரசுகளும்கூட இன்றைய உலகமய் நவீன – தாராளமய – தனியார்மயச்
சூழ்நிலைக்கு ஏற்ப இன்று தம்மைத்தக அமைத்துக்கொண்டு மக்கள் ஜனநாயகத்திற்கும் அரசாகத் திகழ
முயன்று கொண்டிருக்கிறது. எனவே ’விஞ்ஞானப்பூர்வமான மார்க்சியம்’ நம் நாட்டில் பெருமளவு
வளர வேண்டுமென்றால் அதற்கேற்ற நடைமுறைச் சூழ்நிலைகளை அரசியல், பொருளாதார, சமுதாய
கலாச்சாரத் துறைகளில், நாம் – அதாவ்து – இந்திய மக்கள் ஏற்படுத்த வேண்டும்; அதற்கு
இன்றையச் சூழலில் பற்பல ஆண்டுகள் ஆகலாம். எனினும் அந்தப் பாதையில் தத்துவத் தெளிவுடனும்,
ஸ்தாபன பலத்துடனும் துணிந்து களம் இறங்கிப் போராட வேண்டும்!!
ஒரு மனிதநேயமிக்க சிறந்த தமிழறிஞரை சந்தித்த மன நிறைவுடன், அவர் மனமுவந்து வழங்கிய
, வே.முத்துக்குமார் அவர்கள் தொகுப்பில் வெளிவந்துள்ள தி.க.சி. அவர்களின் ‘காலத்தின்
குரல்’ என்ற அருமையான நூலுடனும் விடைபெற்று வந்தோம்.
editor

Professor k. kumar

unread,
Nov 23, 2014, 10:08:22 AM11/23/14
to brail...@googlegroups.com
பேருந்து நடத்துநர் வாழ்வில் 1 நாள் – நேர்காணல்
Friday, June 1, 2012, 4:02
Featured, நேர்காணல்கள்
1 comment
மோகன் குமார்
bus
அண்மையில் சென்னை மாநகர பேருந்தில் பயணிக்கும் சந்தர்ப்பம் அமைந்தது. மதிய நேரம் என்பதால்
அதிக கூட்டமில்லை. அமர்ந்து விட்டேன். அருகில் இருந்த 45 – 50 வயது மதிக்கத்தக்க நபர்
இயல்பாய் உரையாட ஆரம்பித்தார். பேச ஆரம்பித்ததும் தான் தெரிந்தது. அவர் ஒரு கண்டக்டர் என்று!
சென்னை பேருந்துகள் பற்றியும் டிரைவர் கண்டக்டர் வாழ்க்கை பற்றியும் என் சந்தேங்கள் பலவும்
கேட்டு விட்டேன். கேட்கும்போது பதிவெழுத நினைக்கவே இல்லை. ஆனால் இறங்கிய பின்
யோசித்தால் பஸ் வாழ்க்கை பற்றி அவர் நிறையவே சொன்னது புரிந்தது
இதோ உங்களுக்காக ஒரு பிரத்யேக சென்னை கண்டக்டர் பேட்டி:
கண்டக்டருங்க ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் வேலை பாக்கணும்? எத்தனை ஷிப்ட் இருக்கு?
ஒவ்வொரு கண்டக்டருக்கும் எட்டு மணி நேரம் டியூட்டி. முதல் ஷிப்ட் காலை நாலு மணிக்கு
ஆரம்பிக்கும். நான் போகும் தாம்பரம் டு டீ. நகர் ரூட்டை வச்சு சொல்றேன். இந்த ரூட்டில் முதல்
பஸ் தாம்பரத்தில் நான்கு மணிக்கு கிளம்பும். நாலு மணிக்கு வண்டியில் ஏறும் கண்டக்டர்,
டிரைவர் மதியம் 12 வரை வேலை செய்துட்டு இறங்கிடுவாங்க. இதே ரூட்டில் அடுத்த பஸ்
நாலரைக்கு கிளம்பும். இதில் ஏறும் பஸ் ஊழியர்கள் மதியம் 12.30-க்கு இறங்குவாங்க. இப்படி
வரிசையா கண்டக்டர்-டிரைவர் அடுத்தடுத்த அரை மணி கேப்பில் அடுத்தடுத்த வண்டிக்கு
வருவாங்க. கடைசி ஷிப்ட் மாலை நான்கு மணிக்குத் துவங்கும். இதில் ஏறுவோர் இரவு 12 மணி
வரை வேலை செய்வாங்க. இரவு 12 முதல் காலை 4 வரை சென்னையில் பஸ் ஓடாது
இப்படி ஆறு நாள் டியூட்டி பார்த்தா ஒரு நாள் Off. பிரிட்டிஷ் காலத்தில் கொண்டு வந்த
பழக்கம் இது. இன்னிக்கு வரை தொடருது
மதுரையில் மட்டும் இரவு நேர பஸ் எல்லாம் இருக்கே அது எப்படி ?
மதுரையில் ஒரு பஸ்ஸில் டிரைவர் கண்டக்டர் காலை ஆறு மணிக்கு ஏறினா மறு நாள் காலை
நான்கு மணிக்கு தான் இறங்குவார்கள். இவர்களுக்கு அடுத்த நாள் ரெஸ்ட். ஒரு நாள் விட்டு ஒரு
நாள் வண்டி ஓட்டுவாங்க
உங்க ஷிப்ட் நாலரைக்கு ஆரம்பம்னா ரொம்ப சீக்கிரம் எழணும் இல்லை. தினம் இப்படி எழ கஷ்டமா
இல்லையா?
பழகிடுச்சுங்க. பொதுவா எல்லா வாரமும் ஒரே ஷிப்ட் இருக்காது. ஒரு வாரம் காலை டு எனில்
அடுத்த வாரம் மதியம் டு என இருக்கும். ஆனால் மதியம் இதே பஸ்ஸில் வரும் கண்டக்டர் ஒரு
விவசாயி. அவர் காலையில் வயல் வேலை பார்ப்பார். அவருக்கு மதிய ஷிப்ட் தான் தோது. அதனால்
தினம் நான் காலை ஷிப்ட்டும் அவர் மதியம் டு இரவு ஷிப்ட்டும் செய்றோம். எங்களுக்கு இது ஒரு
அண்டர் ஸ்டாண்டிங் காலை 3 மணிக்கெல்லாம் நான் எழுந்திருக்கணும். நைட்டு ஏ. சி போட்டுட்டு
தூங்கிடுவேன். பசங்க நைட்டு கண்ணு முழிச்சு படிச்சுட்டு லேட்டா தான் படுப்பாங்க.
அலாரம் வச்சி மூணு மணிக்கு எழுந்திருப்பேன். சீக்கிரமா பல் விளக்கிட்டு, குளிச்சுட்டு
கிளம்பிடுவேன். அதுக்குள் என் மனைவி எழுந்து ரெண்டு தோசை ஊற்றி கொடுப்பார். நைட்டே
சட்னி பண்ணி வச்சிடுவார். சில நேரம் தோசை அல்லது இட்லி கூட நைட் ஊற்றி வச்சிடுவார்.
அதையும், குடிக்க சுடு தண்ணியும் எடுத்துட்டு மூணரைக்கு வீட்டை விட்டு கிளம்பிடுவேன்.
நான் இருப்பது பெருங்களத்தூரில். வீட்டிலிருந்து மெயின் ரோடு வரை காலையில் ஓடி
வருவேன். அது ஒரு எக்சர்சைஸ் மாதிரி. மெயின் ரோடில் பஸ் பிடிச்சி தாம்பரம் வந்து எங்க
ஸ்டாண்ட் வருவேன். ஆயிடுச்சு சார். இப்படியே 20 வருஷம் ஓடிப் போச்சு
உங்களுக்கு கலக்க்ஷன் வச்சு கமிஷன் உண்டா?
பஸ் டிக்கெட் விலை ஏறும் வரை எங்களுக்கு 2 % கமிஷன். டிக்கெட் விலை ஏறினா எங்க கமிஷனை
கொஞ்சம் குறைச்சுடுவாங்க. முன்னாடி மூவாயிரம் தினம் வசூலாகும். அதில் 2 % கமிஷன்
அப்படின்னா அறுபது ரூபாய் வரும். இப்போ தினம் ஐயாயிரம் கலக்சன் ஆகும். அதில் 1.90%
கமிஷன். அதாவது 90 ரூபா. டிரைவர் கண்டக்டர் இதை பிரிச்சு எடுத்துக்கணும். டீ சாப்பாடு
இதுக்கு ஆகும் செலவு போக ஆளுக்கு 25 ரூபா தான் தினம் நிக்கும்
இந்த கமிஷன் கிடைப்பதே எம். ஜி. ஆர் காலத்தில் இருத்த ஈரோடு முத்துசாமி அப்படிங்கற
மந்திரியால் தான். அவர் போக்கு வரத்து துறை அமைச்சரா இருந்தப்ப தான் எங்களுக்கு கமிஷன்
கொண்டுவரணும் என பேசி வாங்கித் தந்தார். நல்ல மனுஷன் சார். இப்போ தி.மு.க வுக்கு
மாறிட்டார். இந்த தேர்தலில் நின்னு தோத்துட்டார்.
சாப்பாட்டுக்கு செலவுன்னு சொல்றீங்க. உங்களுக்கு தான் பஸ் நிற்கும் இடங்களில் சாப்பாடு
கிடைக்குமே?
அதெல்லாம் வெளியூர் போகும் பஸ்ஸில் தான் நடக்கும். கோயம்பேடு டு பாண்டிச்சேரி ஒரு பஸ்
போகுதுன்னு வைங்க. அந்த பஸ் ECR ரோடு வழியா போகும். அங்கு ஒரு கடையில்
சாப்பிடுவாங்க. பஸ்ஸில் வந்த ஜனம் சொல்லும் ” பாருங்கையா இந்த டிரைவர் கண்டக்டருக்கு
ஓசியில் சாப்பாடு கிடைக்குது”ன்னு. உண்மையில் அந்த சாப்பாடு நல்லா இருக்காது அத்தோட
டிரைவரும் கண்டக்டரும் கம்மியா தான் சாப்பிடுவாங்க.
உங்க பசங்க என்ன செய்றாங்க?
பொண்ணு +2 படிக்குது.1000 மார்க் வாங்கும்னு நினைக்கிறேன். பையன் எட்டாவது படிக்கிறான்.
நாங்க யாதவா சார். எங்க ஜனங்களில் பெரும்பாலும் ஆடு மாடு மேய்ச்சவங்க தான். எங்களை போய்
BC -யில் வச்சிருக்காங்க. MBC -யில் சேர்க்கணும்னு இன்னைக்கு உண்ணாவிரதம் நடந்தது. அதில்
நானும் கலந்து கிட்டு தான் இப்போ திரும்ப வர்றேன். லல்லு பிரசாத் யாதவ், முலாயம் சிங்
யாதவ், சரத் யாதவ் எல்லாரும் எங்க கம்மியூநிட்டி தான். அவங்க நினைச்சா, போராடினா எங்களை
MBC -யில் சேர்க்க வாய்ப்பிருக்கு இதற்குள் நான் இறங்கும் இடம் வந்து விட, அவரிடம் சொல்லிக்
கொண்டு விடை பெற்றேன்.
அக்கறையுடன் விசாரித்ததில், மனம் விட்டு பேசியதில் மிக மகிழ்ச்சியாக என் கைகளைப்
பிடித்துக் கொண்டு குலுக்கினார் அவர். ஒவ்வொரு மனிதருக்குள்ளும் தான் எத்தனை எத்தனை
விஷயங்கள் புதைந்து கிடக்கிறது!
படத்திற்கு நன்றி :
http://aeva-dhara.blogspot.in/2010/06/ticket-less-travel.html
மோகன் குமார்
மோகன் குமார்
சட்டம் மற்றும் கம்பனி நிர்வாகம் படித்து விட்டு சென்னையில் ஒரு
நிறுவனத்தில் கம்பனி செகரட்டரி ஆக பணியாற்றுகிறார். வீடுதிரும்பல் என்கிற வலை தளத்தில்
கடந்த இரு ஆண்டுகளாக எழுதி வருகிறார்.
வாங்க முன்னேறி பார்க்கலாம் என்கிற தலைப்பில் வெளிவந்த சுய முன்னேற்ற கட்டுரை விரைவில்
புத்தகமாக வரவுள்ளது. அரசு பள்ளி மாணவர்களின் கல்விக்கு உதவும் வகையில் நண்பர்களுடன்
சில நற்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
http://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-6873855596687150&format=728x90_as&output

Professor k. kumar

unread,
Nov 23, 2014, 10:23:31 AM11/23/14
to brail...@googlegroups.com
ஸ்ரீ ஹரி ஓம் அம்மா!
Saturday, September 6, 2014, 22:47
Featured, நேர்காணல்கள்
Add a comment
பவள சங்கரி
“துறவியரில் நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது பேர் காமத்தையும் செல்வத்தையும் துறந்துவிட்ட
பிறகும்கூட, பெயர், புகழ் ஆசையால் விலங்கிடப்படுகிறார்கள். மாபெரும் உள்ளங்களுக்கும்
கடைசியாக உள்ள பலவீனம் புகழில் உள்ள ஆசை”
சுவாமி விவேகானந்தர்
நம் இந்தியத் திருநாடே ஆன்மீகம் என்னும் அடித்தளத்தின்மீது கட்டப்பட்ட ஒரு மாபெரும் கோட்டை
என்பதே உலகறிந்த உண்மை. நம் நாட்டில் மட்டுமே பல மதங்கள், பல இனங்கள், பல தெய்வங்கள்,
ஒவ்வொன்றிற்கும் ஒருவிதமான தத்துவங்கள், எண்ணற்ற வழிபாட்டு முறைகள் என்று திரும்பிய
புறமெல்லாம் ஏதோவொரு ஆன்மீகச் சின்னம் நம் கண்ணில் பட்டவாறே இருக்கும். அந்த வகையில்
துறவறம் பூண்டு, நாட்டை விட்டு காட்டில் சென்று தவம் புரிந்த சங்க காலத்தின்
சக்கரவர்த்திகளாகட்டும், சகல செல்வங்களும் கொட்டிக்கிடக்க, எந்தச் சுகமும் தேவையில்லை என்று
துறந்து தெருவில் இறங்கிச் செல்லும், செல்வந்தராகட்டும், நாகரீக உலகில் பிறந்து,
வளர்ந்தாலும் இளமை முதல் எதிலும் எதுவித நாட்டமும் இன்றி, இறைமையை அல்லும், பகலும்
மனதிலேற்றி மெல்ல, மெல்ல துறவை நாடியோராகட்டும், அனைவரின் இலக்கும் இறைவனை அடைவது
என்பதோடு, உள்ளத் தூய்மையும், அதனால் பெறக்கூடிய மன நிம்மதியும்தான். அந்த வகையில்,
இறைவனின் படைப்பில் ஒவ்வொரு மலரும் ஒரு தனிப்பட்ட குணமும், மணமும், நிறமும்
கொண்டிருப்பது ஆச்சரியப்படத்தக்கது. இயல்பாகவே பெண்கள் இளம் வயதிலிருந்தே, தங்களை
அழகுபடுத்திக்கொள்வதில் தனி விருப்பம் கொண்டவர்களாக இருப்பவர்கள். ஒரு இளம் பெண் மனதில்
ஆசா, பாசங்கள் அனைத்தும் மறைந்து, அன்பும், அமைதியும், பேரானந்தமும் நிலைத்து நிற்கும்
வண்ணம் துறவு நிலையை தேர்ந்தெடுப்பது என்பது சாமான்ய காரியம் அல்ல. பிறவியிலேயே
அப்படி ஒரு எண்ணம் வாய்க்கப் பெற்றவர்களுக்கே இது சாத்தியம் என்பதே நிதர்சனம்.
வண்ண வண்ணச் சிற்றாடையுடன், சிங்காரம் செய்து, இன்பமாய் வலம் வரும் காலத்தில், பாண்டியும்,
பல்லாங்குழியும் விளையாடும் பருவத்தில், தூய வெண்ணாடையை உடுத்தி, அதே தூய்மையை
உள்ளத்திலும் புகுத்தி, மங்கையரில் தாம் ஒரு தனி ரகம் என்பதை ஆச்சரியமாகக் காணச்
செய்துள்ளவர் ஸ்ரீ ஹரிஓம் அம்மையார் அவர்கள். தம் இளம் பருவத்திலேயே இறைவனின் மீது நாட்டம்
கொண்டு, இயற்கையாய் ஒரு இளம் பெண்ணிற்கு உள்ள எந்த உணர்வினாலும் ஆட்படாமல், அறிவும்,
இறைமையும் தம் இரு கண்களாக எண்ணி தம் வாழ்நாளைத் தவமாக கழித்துக் கொண்டிருப்பவர். அதற்கு
இணையான ஆசிரியப் பணியில் தம் கடமையைச் செவ்வனே நிறைவேற்றி, எண்ணிலடங்கா பெண்
குழந்தைகளை ஒழுக்கச் சீலர்களாக உருவாக்கியுள்ள பெருமை அம்மையாரையேச் சேரும். தாம்
புனிதமாகக் கருதியத் தம் ஆசிரியப் பணியிலும், மற்ற ஆசிரியர்களுக்கு ஒரு
முன்மாதிரியாகவும் திகழ்ந்தவர், 72 வயது நிரம்பிய ஸ்ரீஹரிஓம் அம்மையார் அவர்கள்.
ஒரு மனிதரின் தனிப்பட்ட அடையாளத்தை அவருக்கே புரிய வைப்பவரே நல்லாசிரியர் என்பவர்.
இளம் சிறார்கள், ஊக்கம், தன்னம்பிக்கை , விடா முயற்சி ஆகிய நற்பண்புகளைக் கொண்டு ஒரு
நாட்டின் சிறந்த குடிமகனாக உருவாகுவதற்கு ஆசிரியத் தொழில் பெரும்பங்கு வகிப்பதை
எவரும் மறுக்க இயலாது. அந்த வகையில் சுயநலம் மட்டுமே கருத்தில் கொண்டு, தம் ஆன்மா
கடைத்தேற வழிவகுக்கும் எண்ணம் மட்டுமேயன்றி, சமுதாயத்திற்கும் தம்மால் ஆன சேவையைச்
செய்துள்ள மன நிறைவையும் பெற்று ஈரோடை மாநகரின், அவல் பூந்துறை கிராமத்தில்,
பெரியமணியம்பாளையம் என்னும் புனிதமான இடத்தில் அமைந்துள்ள ஸ்ரீபூர்ண வித்யா குருகுலத்தில்
தம் தவ வாழ்க்கையை மேற்கொண்டிருக்கும், அம்மையாரைச் சந்தித்து உரையாடினோம்.

paval
வினா : துள்ளி விளையாடும் பருவத்திலேயே, தூய வாழ்வைப் பற்றிய சிந்தை தோன்றியதன்
பிண்ணனி குறித்து அறியத் தாருங்கள் அம்மா.
அம்மா: ஆம். இளம் வயதிலேயே எனக்கு ஆழ்ந்த வாசிப்பின்பாற் ஈடுபாடு ஏற்பட்டது. அதுவே
எனக்குக் கிடைத்த வரமாக எண்ணுகிறேன். பத்து, பன்னிரெண்டு வயதிலேயே, மு.வரதராசனார்
புத்தகங்களும், கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ எனும் புதினமும் என்னை அதிகமாகவேக்
கவர்ந்தன. ஆன்மீகமும், சரித்திரமும், தேச பக்தியும் என்னை ஆட்கொண்டது என்றே சொல்ல வேண்டும்.
நல்ல வாசிப்பு, ஒரு நல்ல மனிதனை உருவாக்குகிறது என்பதற்கு ஆதாரமே என் வாழ்க்கை. வளர்
இளம் பருவத்திலேயே மற்ற குழந்தைகள் போல இயல்பான இச்சைகள் எதுவுமே எனக்கு இல்லாமலே
போனது. வெள்ளை ஆடை உடுத்துவது மட்டுமே என் விருப்பமாக இருந்தது. உடன் பயின்ற
மாணவர்களுக்கும் நான் ஒரு வித்தியாசமான பிறவியாகவே காட்சியளித்திருக்க வேண்டும் என்று
எனக்கு இப்போது தோன்றுகிறது.
pavala2
வினா : ஆன்மீகப் பாதையில் தங்களின் வளர்ச்சி பற்றி சொல்லுங்களேன்
pavala1
அம்மா: நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக, என் பள்ளிக் கல்வியுடன், பற்றில்லாத ஒரு
நிலையும் என்னையறியாமல் என்னுடன் வளர்ந்து வந்தது என்றே சொல்ல வேண்டும். பெற்றோர் (இவர்
தந்தை பிரபலமான ஒரு மருத்துவராக இருந்தவர்) சகோதரிகள் என அனைவரும் என்னுடன்
இருந்தபோதும், தனிமை மட்டுமே என் உள்ளொளியை பெருகச் செய்தது என்றே சொல்ல வேண்டும். அதன்
காரணமாகவே என் முதுகலை கல்லூரிப் படிப்பை முடித்தவுடனே, வினோபாஜியின் மடத்தில்
சென்று இரண்டு ஆண்டுகள் தங்கிவிட்டேன். அங்குதான் தேசபக்தியும், என் ஆன்மீகமும் இணைந்த பயணம்
தலை தூக்கியது. வினோபாஜியின் உரைகள் என்னை மென்மேலும் பண்படுத்தியதோடு, என் ஆன்மீகத்
தேடலுக்கும் நிறைய நூல்கள் களம் அமைத்துக் கொடுத்தன. கட்டுப்பாடான வாழ்க்கைக்கும் தயாராக
முடிந்தது.
வினா : தேச பக்தியும், துறவும் ஒன்றிணைந்து பயணிக்க இயலுமா?
அம்மா: இல்லை. என்னைப் பொருத்தவரை தேசப்பற்றும், என்னுள் இருந்த கலைப்பற்றும் என் ஆன்மீக
வாழ்க்கைக்குத் தடையாகவே இருந்தது. நாட்டியம், பாடல், கவிதை எழுதுவது போன்ற கலைகள்
நான் கற்றிருந்தேன். ஆனாலும் அதைச் சுமக்க விரும்பாமல் விட்டுவிட்ட பின்புதான் என் துறவு
வாழ்க்கை சூடு பிடிக்க ஆரம்பித்தது. அதாவது எதுவுமற்ற வெறுமையே வழிபாடு என்ற நிலை
அரும்பியது. எந்தத் தேவையும் இருக்கவில்லை. தம் தொண்ணூறு வயதுகளில் இருந்த
வினோபாஜியின் அறிவுரைகளும், வாழ்க்கை முறைமைகளும் எனக்குள் பெரும் மாற்றத்தையே
ஏற்படுத்தியது. அதன் பின் ஆசிரியத் தொழிலைத் தேர்ந்தெடுத்து, மாணவச் செல்வங்களுக்கும் நல்ல
ஆன்மீக ஒழுக்க நெறியுடன் இயைந்த கல்வியைப் புகட்ட முடிந்தது. என்னுடைய இந்த எழுபத்தி
இரண்டு வயதிலும், இன்று திருமணம் ஆகி நல்ல நிலையில் வாழும் பெண்கள் பலர் தங்கள்
அமைதியான வாழ்வின் ஆதாரமாக என் பயிற்சி முறைகள் இருந்துள்ளது என்று மகிழ்வுடன்
சொல்வதைக் கேட்கும்போது மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது.
வினா: துறவு வாழ்க்கையை தேர்ந்தெடுத்த ஒருவர் நாட்டிற்கான சேவை ஏதும் செய்யத்
தேவையில்லையா? குறிப்பாக அரசியலில் அவர்கள் ஈடுபடலாமா?
அம்மா : தேவையில்லை. சும்மா இருத்தலே துறவறம். (உண்மையான துறவிகளுக்கு). அவர்களின்
இருப்பே நன்மை. ஏதும் செய்ய வேண்டிய தேவையே இல்லை.
வினா: புரியவில்லை அம்மா. சும்மா இருப்பதில் யாருக்கு என்ன நன்மை விளையப் போகிறது.
நாட்டிற்கும், வீட்டிற்கும் நம் சக மனிதர்களுக்கும் கூட எந்த சேவையும் செய்யாமல்
சும்மாயிருப்பதில் தன்சுகம் காண்பதன்றி வேறு என்ன நன்மை விளையப்போகிறது.
அம்மா: ஆம். உண்மையான துறவு நிலையை மேற்கொண்டிருப்பவர்களின் இருப்பே நாட்டிற்கு நலம்
விளைவிப்பவை. ஒரு தீபச் சுடர் போல ஒளி பரவும். அந்த ஒளியில் எண்ணற்ற நலம் பெருகும்.
வினா: அப்படி ஒரு நல்ல அலை பரவும் என்ற நம்பிக்கையில் வாழ்நாள் முழுவதும் ஏதும்
செய்யாமலே காத்திருப்பது சரியா? அப்படி ஒரு நிலை வந்துவிட்டது என்பதை ஒருவரால் உணர
முடியுமா?
அம்மா: நிச்சயம் உணர முடியும். உண்மையான துறவு நிலையில் இருப்பவர்களுக்கு அந்த
பேருண்மையை உணர முடியும். உள்ளத்தில் ஒரு நிரந்தர மகிழ்ச்சியும், அமைதியும்
குடிகொண்டிருக்கும். தன்னைச் சுற்றி இருக்கும் சகல சீவன்களும் அதன் பலனை அனுபவிக்கவும்
முடியும்.
வினா: அம்மா, தவறாக எண்ண வேண்டாம். என் ஐயம் தீர வேண்டியே இப்படி ஒரு வினா. துறவு
நிலையில் இருப்பவர்கள் ஏதும் செய்யாமல் சும்மா இருப்பதே நலம் என்ற தங்களின் வாதம்
உண்மையென்றால், சுவாமி விவேகானந்தர் நாடு முழுவதும் சுற்றி மக்களுக்கு நாட்டுப் பற்றை
ஏற்படுத்தியதோடு, பல வெளிநாடுகளுக்கும் சென்று நம் நாட்டின் பெருமையை பரவச் செய்தாரே
அந்த துறவறமும் சரிதானே?
அம்மா: நிச்சயமாக ஆம். சுவாமிஜி, நாட்டின் அப்போதையத் தேவையைக் கருத்தில்கொண்டு,
மக்களுக்கு தேசப்பற்று
pavala4
வளரவேண்டும், சுதந்திரப் போராட்டம் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கில் தம் செயல்களை
மேற்கொண்டிருந்தார். அதனால் நாட்டில் பெரும் நன்மைகளும் விளைந்தது. இந்து மதத்தை
எப்படியும் உயர்வான நிலைக்குக் கொண்டுவர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ஒரு
விதத்தில் அது அவருடைய மறைமுகமான ஒரு சுதந்திரப் போராட்டம் என்றே சொல்ல வேண்டும். நம்
இந்தியாவில் சமஸ்கிருதம், வேதங்கள், உபநிசத்துகள் போன்ற பல அற்புதமான வளங்கள் இருக்கின்றன
என்பதை உலக அரங்கில் எடுத்துச் சென்றார். அவருடைய உள்நோக்கம் துறவறம் என்பதைக்காட்டிலும்,
நாட்டுப் பற்று என்பதிலேயே இருந்தது. ஆனாலும் அவரும் தனக்குள் ஏதும் இல்லாமலேதான்
இருந்தார். துயரப்படுவோருக்காக அவர் மனம் அழுதாலும், அவருக்குள் தனிப்பட்ட எந்தவிதப்
பற்றும் இல்லாத வெறுமையே இருந்தது. அதுவே அவருக்கு வெற்றியையும் தந்தது.
வினா: அப்படியானால் துறவு நிலையிலும் வேறுபாடுகள் உள்ளது என்கிறீர்களா?
அம்மா : ஆம். அவரவர் சூழலுக்கேற்ப மாற்றங்கள் உண்டு. வாழ்க்கையில் படாத துன்பங்களெல்லாம்
பட்ட பின்பு, துறவு நிலையைத்
தேர்ந்தெடுத்தவர் பலர் மிகவும் மனம் ஒன்றிய நிலை துறவில் இருப்பதை பார்த்திருக்கிறேன்.
வினா : காலம் குறித்து தங்களுடைய கருத்து என்ன? எதிர்காலம் பற்றி தங்களால் சொல்ல முடியுமா?
அம்மா: காலம் என்பதில் எனக்கு நம்பிக்கையே இல்லை. இறந்த காலம் முடிந்துபோன ஒன்று.
எதிர்காலம் நம் கையில் இல்லை. நிகழ் காலமென்றாலும் அடுத்த நொடி என்றாலே அது
முடிந்துபோன காலம். ஆக காலம் என்பது இல்லாத ஒன்று. இருப்பில் இல்லாமல் ஓடிக்கொண்டே இருப்பது…
வினா : உங்கள் குடும்பம் பற்றி?
அம்மா: ஒரு சன்யாசிக்கு இந்த உலகமே குடும்பம்தான். அவர்களுக்கென்று தனிப்பட்ட குடும்பம்
இல்லை என்றாலும், தாய் தந்தை இல்லாமல் எவரும் பிறக்க முடியாது. என் தந்தை ஒரு பிரபல
மருத்துவராக இருந்தவர். தாய் மிக நல்லதொரு ஆத்மா..
வினா: குடும்பம் எனும் சாகரத்தில் நீந்தி இன்ப துன்பங்கள் அனைத்தும் கடந்த நிலையில்
பிற்காலங்களில் சன்னியாசம் பெறுவது நல்லதா? அது தேவையா?
அம்மா: நம் இந்து மதம் இதை வானப்பிரஸ்தம் என்று முழுமையாக ஆதரிக்கிறது. நம் முன்னோர்கள்,
அரசர் முதல் ஆண்டி வரை எண்ணற்றோர் அப்படி வானப்பிரஸ்தம் சென்றுள்ளார்கள். இன்றும் வயதான
காலத்தில் பெற்றோர் பிள்ளைகளை விட்டு விலகி இருத்தலே நலம். அதற்காக காவி உடுத்தி
காட்டிற்குச் செல்ல வேண்டும் என்பதல்ல. மனதில் எந்த எதிர்பார்ப்பும், ஆசைகளும் இன்றி
தனிமையில் அமைதியான நிலையை மேற்கொள்வதே தவம். வாழ்ந்து முடித்தவர்கள் வாழ
வேண்டியவர்களுக்கு வழி விட்டு விலகி இருத்தலே சிறந்த தவம்.
வினா: அப்படியாயின் கூட்டுக் குடும்பம் என்ற ஒரு விசயமே தேவையில்லையா? தாத்தா, பாட்டி
என்ற உறவு குழந்தைகளுக்கு அத்தியாவசியம் இல்லையா?
அம்மா: எல்லாம் ஒரு எல்லைக்குட்பட்டு இருந்தாலே அமைதியான வாழ்க்கை கிடைக்கும்.
குடும்பத்தில் உழன்று கொண்டே இருப்பதால், தன் மன அமைதி, இறை நிலை ஆகிய அனைத்தும் இழக்க
வேண்டியும் வந்துவிடுகிறது. மின் கட்டணமும், பால் அட்டையும், காய்காரி பிரச்சனையிலேயே
வாழ்க்கையை ஓட்டிவிட்டு ஆன்மா கடைத்தேறும் வழியறியாது திகைத்து நிற்பதே
முடிவாகிவிடும். அவரவர் கடமையை அவரவர் காலமறிந்து செய்வதே சிறந்த தவம். அதுவே மன
அமைதிக்கும் வழி.
வினா: புனிதப் பயணங்கள் செல்வது தேவையா?
அம்மா: புனிதப் பயணங்கள் செல்வதன் மூலம் மனம் தூய்மை அடைகிறது. நம் முன்னோர்கள், புண்ணிய
ஆத்மாக்கள் பாதம் பதிந்த மண்ணையும், ஆதிசங்கரர் போன்ற மகான்கள் கண்ணுற்ற தெய்வங்களை நாமும்
தரிசிக்கும் போது நல்ல அலைகள் பரவும் வாய்ப்பு அதிகமாகிறது.
ஆனால் ஒரு துறவிக்கு அதுவும் தேவையில்லை. தானே இறைவனுமாய் இருப்போரே உண்மையான
துறவிகள். காட்டில் சென்று அமைதியாக தனிமையில் வாழுவதே சிறந்த தவம்.
வினா: வினோபாஜியின் ஆசிரமத்தில் இருந்தபோது நீங்கள் கற்றுக்கொண்டவைகள் எவை?
books
அம்மா: ‘கேதாரேஷ்வர் தாம்’ நதிக்கரையில் உள்ள அந்த ஆசிரமத்தில், வாழ்க்கையின் நெறி
முறைகள் அனைத்தும் அங்குதான் கற்றேன். வினோபாஜியின் ஆசிரமத்தில் என்னுடைய இரண்டாண்டு
வாழ்க்கையில் நான் தவ வலிமையும், யோகமும், வேத சாத்திரங்கள் மற்றும் உபநிசங்களும் ஞானமாய்
பெற்றேன். ஒரு வேளை உணவு மட்டுமே உயிர் வாழப் போதுமானது என்று அங்கு பழகி வந்ததை
கடந்த ஐம்பது ஆண்டுகளாக கடைபிடித்து வருகிறேன். அதனால்தானோ என்னவோ இந்த 72 வயதிலும்
பூரண ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். அவரவர் உழைப்பிற்கேற்ற உணவு எடுத்துக்கொள்வதே
சிறந்தது. சத்தான உணவு எடுத்துக்கொள்வது அவசியம் என்றாலும், கூலித் தொழிலாளி தன்னுடைய
கடிமான வேலைக்குப் பிறகு சாப்பிடும் அதே அளவு உணவை உடலுழைப்பு அதிகம் இல்லாத
அலுவலக அறையில் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்க்குத் தேவையில்லை. அந்த வகையில் துறவு
நிலையில் சும்மா இருப்பவர்கள் இன்னும் கட்டுப்பாடான உணவுப் பழக்கம் கொள்வதே சரியாகும்.
வினா: தியானம் யாருக்கெல்லாம் அவசியம்?
அம்மா: தியானம் அனைவருக்கும் அவசியமான ஒன்று. குறிப்பாக குடும்பத்தில் உள்ளவர்கள்
அன்றாடம் இருபது நிமிடங்களேனும் செய்ய வேண்டியது அவசியம். நான் தியானம் பயின்றது,
தம்மகிரியில் கோயங்காவிடம். அதன் பிறகு தயானந்த சரசுவதி சுவாமிகளிடம் தியானம்
பயின்றேன். நான் மிக அதிகமாகக் கற்றுக்கொண்டது என்றால் அது நுவரேலியாவில், காயத்ரி
பீடத்தின், காயத்ரி சுவாமிகளிடம்தான். “கடைசி காலத்தில் நீ ஸ்ரீலங்காவில்தான் வந்து
சேருவாய்” என்றும் சொல்லியிருக்கிறார் சுவாமிகள். தியானம் அன்றாடம் பயிற்சி செய்வதன்
மூலமாக ஒரு மணி நேரத்தில் செய்யும் வேலையை அரை மணியில் முடிக்க முடியும்.
வினா : இன்றைய பெண்களின் நிலை பற்றி?
அம்மா: என் கருத்து சற்று மாறுபட்டும் இருக்கலாம். பாரதி சொல்வான், ‘பெண்ணை வீட்டிற்குள்
பூட்டி வைத்த விந்தை மனிதர் தலை சாய்ந்துவிட்டார்’ என்று. ஆனால் அன்று பெண்களை அப்படி
வீட்டில் பொத்தி வைத்திருந்ததாலேயே நம் இந்தியக் கலாச்சாரம் காப்பாற்றப்பட்டிருந்தது என்றே
சொல்லலாம். அன்றைய காலகட்டத்தில் அது மிகவும் அவசியமானதாகவே இருந்தது. பல ஆயிரம்
வருடங்களாக அந்நியர் பூந்துவிட்ட நாடு இது. நம்நாட்டில் திலகவதியார், மைத்ரேயி,
மங்கையர்கரசியார் போன்ற எத்துனை மாதரசிகள் வாழ்ந்து காட்டியுள்ளார்கள். அவர்களெல்லாம்
கட்டுப்படுத்தப்பட்டவர்கள் அல்ல. அவர்களுக்குரிய சுதந்திரமும் இருக்கத்தான் செய்தது.
இன்றைய நிலையில் ஒரு பெண் அநாவசியமாக, இரவு நேரங்களில், பாதுகாப்பற்ற சாலைகளில்
அச்சத்துடன் செல்வதைக் காட்டிலும், வீட்டிற்குள் பாதுகாப்பாக இருப்பதே முழுமையான
சுதந்திரம் என்றே கூற முடிகிறது. பெண்கள் என்றுமே தங்களுக்கென ஒரு கட்டுப்பாடு
வைத்துக்கொண்டு அதற்குள் வாழ்வது மட்டுமே சிறந்ததொரு வாழ்க்கை. சுதந்திரம் என்ற பெயரில்
தேவையற்ற செயல்களைச் செய்து மாட்டிக்கொள்வதில் அல்ல சுதந்திரம். இன்று பெண்கள் கட்டாயமாக
பணிக்குச் செல்ல வேண்டிய நிலையில், ஆக்கப்பூர்வமாகச் செயல்படும் துணிவு, அதாவது,
அச்சமின்றி பிரச்சனைகளை எதிர்கொள்ளும் பக்குவம் உள்ளவர்கள் மட்டுமே அதற்குத்
தகுதியுடைவராகிறார். அதுமட்டுமல்லாமல், பெண்கள் பணிக்குச் செல்வதால், குழந்தை வளர்ப்பு
பெரும் சவாலாகிவிடுகிறது. குழந்தைகளிடம் சில மணி நேரங்கள் செலவிடுவது கூட
பெற்றோருக்கு இயலாமல் போகிறது. இதனால் இன்று குழந்தைகளின் மன நிலைகளிலும் பெரும்
மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. சம நிலை என்பதிலெல்லாம் பெரும் அர்த்தம் இல்லை. அவரவர் கடமையை
அவரவர் சரிவர செய்வதே சிறந்த சமத்துவம். இயற்கையோடு இயைந்த வாழ்க்கையே இனிமையான
வாழ்க்கை. அதை உணர்ந்து வாழவேண்டியதே இன்றைய தேவை.
மெய்ஞ்ஞான உணவை ஊட்டியது போதாது என்று நினைத்த அன்னை எங்களுக்கு அரிசிச் சாதமும்,
கொத்தமல்லித் துகையலும், தேங்காய் எண்ணெயும் கலந்து, தம் கைகளால் பிசைந்து உருண்டைகளாக
உருட்டிக் கொடுத்து வயிரையும் நிறையச் செய்தார்கள். மதிய நேரமான அந்த பகல் வேளையிலும்,
திறந்த வெளித் திண்ணையில், நல்ல நினைவலைகளின் பகிர்வுகளோடு, நிலாச்சோறு உண்ட மன
நிறைவையும் ஏற்படுத்திய அன்னையை நெஞ்சில் சுமந்தபடி, அமைதியாக அவர் சிந்தைகளை அசை
போட்டபடியும் வந்து சேர்ந்தோம், எங்கள் கடமைகளைத் தொடர….
editor

Professor k. kumar

unread,
Nov 23, 2014, 10:43:15 AM11/23/14
to valluva...@googlegroups.com, brail...@googlegroups.com
கம்பனும், வால்மீகியும் – இராமாயண இலக்கிய ஒப்பீடு – 1
Friday, September 26, 2014, 5:30
ஆய்வுக் கட்டுரைகள், இலக்கியம், கட்டுரைகள், மறு பகிர்வு
2 comments
கம்பனும், வால்மீகியும் – இராமாயண இலக்கிய ஒப்பீடு – 1
அகலியை சாப விமோசனம், இராமன்-சீதை முதல் சந்திப்பு
ஒரு அரிசோனன்
இராமாயணம் என்றாலே நம் நினைவுக்கு வருவது வால்மீகியும், கம்பனும்தான். ஆயிரமாயிரம்
ஆண்டுகளாக இந்துக்களின் மனதில் படிந்து நிலைத்து நிற்கும் காவியமான வால்மீகியின்
இராமாயணத்தைப் பலரும் பலப்பல மொழிகளில் எழுதியிருந்தாலும், வால்மீகியின் மூலத்திற்கு
அடுத்தபடியாக உயர்வாக கருதப்படுவது, கவிப் பேரரசன் கம்பனின் ராமகாதைதான். அவனது கவி
நயத்தைச் சுவைப்பதற்காவது, தமிழைக் கற்க வேண்டும் என்றால் அது மிகையாகாது (not an
exaggeration). இருபத்தினான்காயிரம் இருவரிக் குறட்பாக்களில் வால்மீகி எழுதிய
காவியத்தை, பன்னிரண்டாயிரம் நால்வரி விருத்தப்பாக்களில் வடிவமைத்தான் கம்பன் என்றால்,
கம்பனின் இராமகாதையும் 48000 வரிகைளைக் கொண்டதுதானே? அதிலும் கம்பன் உத்தர காண்டத்தை
எழுதவில்லை; ஓட்டக் கூத்தரின் உத்தர காண்டமே இராமாயணத்துடன் சேர்த்து வைக்கப்படுகிறது.
வால்மீகி முனிவர் இராமாயணத்தை நமக்கு விட்டுச் சென்று சில ஆயிரம் ஆண்டுகள் சென்றுதான்
கம்பன் தனது இராமகாதையைத் தீட்டினான். தமிழ்க் கவித்திறன் மிக்க கம்பன், வடமொழியான
சம்ஸ்கிருதத்தையும் நன்கு கற்று அறிந்திருக்கத்தான் வேண்டும். இல்லாவிட்டால், வால்மீகியின்
கவிப்பெருக்கை சுவை மாறாமல், கருத்து மாறாமல் அளித்திருக்க இயலாது.
ஆயினும், கம்பன் இராமாயணத்தை தமிழுலகுக்குத் தரும்பொழுது, தமிழ் மரபுகளை ஒட்டியே
வடிவமைத்தான். எனது ஒப்பீட்டில் வால்மீகியின் வடமொழி மூலத்தையும் (மொழி பெயர்ப்பு அல்ல,
வடமொழி மூலம் மட்டுமே), கம்ப இராமாயணத்தையும் மட்டுமே துணை கொண்டிருக்கிறேன். எனது
வடமொழி அறிவு தமிழ் அறிவு அளவுக்கு ஈடானதல்ல. எனவே, தவறிருந்தால், பிழை
பொறுக்குமாறு வடமொழி அறிஞர்களை வேண்டிக் கொள்கிறேன்.
ஆராய்ந்து பார்த்ததில் ஐந்து நிகழ்ச்சிகள் மிகவும் முக்கியமாகக எனக்குப் பட்டன. ஆகவே,
கம்பனையும், வால்மீகியையும் ஒப்பிட்டு, என் மனதில் தோன்றியதைத் தமிழ் மக்களுடன் பகிர்ந்து
கொள்ள விரும்புகிறேன். எனது ஒப்பீடு காவியங்களின் வேறுபாடு பற்றி மட்டுமே. எதையும்
உயர்த்தியோ தாழ்த்தியோ சுட்டிக் காட்டுவதற்காக எழுதப் பட்டதல்ல. என்னுடன், இராமாயணப்
பாலையும் தேனையும் கலந்து பருகுமாறு தமிழன்பர்களை அழைக்கிறேன்.
முதலாவதாக, பால காண்டத்தில் அகலியை பாவ விமோசனத்திற்கும், இராமன்-சீதையின் முதல்
சந்திப்புக்கும் உங்களை அழைத்துச் செல்கிறேன்…
வால்மீகி சொல்வதற்கும், கம்பனின் வர்ணனைக்கும் வேறுபாடு இங்கு காணப் படுகிறது…
அரக்கி தாடகையைக் கொன்று, முனிவர்களின் வேள்வியைக் காத்தபின், அவர்களின் ஆசியுடன்,
இராமனையும், இலக்குவனையும், மாமுனிவர் விசுவாமித்திரர் மிதிலைக்கு அழைத்து வருகிறார்.
வால்மீகியின் வழித்தடம் நடந்து செல்வோம்:
मिथिल उपवने तत्र आश्रमम् दृश्य राघवः |
पुराणम् निर्जनम् रंयम् पप्रच्छ मुनि पुंगवम् || १-४८-११
மிதில உபவனே தத்ரா ஆஸ்’ரமம் திருஸ்’ய ராகவ: |
புராணம் நிர்ஜனம் ரம்யம் பப்ரச்ச முனி புங்கவம் || 1-48-11
इदम् आश्रम संकाशम् किम् नु इदम् मुनि वर्जितम् |
श्रोतुम् इच्छामि भगवन् कस्य अयम् पूर्व आश्रमः || १-४८-१२
இதம் ஆஸ்’ரமம் சங்காஸ’ம் கிம் நு இதம் முனி வர்ஜிதம் |
ஸ்’ரோதும் இச்சாமி பகவன்னு கஸ்ய அயம் பூர்வ ஆஸ்ரம: || 1-48-12
அங்கே மிதிலைக்கு அருகில் இருக்கும் சோலையில் பழையதாகவும், மனிதர்கள் இல்லாததும்,
மனத்தைக் கவரும் ஆசிரமத்தை இரகுவின் வழித்தோன்றல் (இராமன்) பார்த்தான். (அதைப்பற்றி)
முனிவரில் சிறந்தவரை வினவினான்.
“பூசிக்கத்தகுந்தவரே! ஆசிரமத்தை நிகர்த்தத்தும் முனிவரால் விடப்பட்டதுமான இந்த ஒரு
ஆசிரமம் உண்மையில் முன்னால் யாருடையது? செவிமடுக்க விரும்புகிறேன்”
முனிவர் கௌதமரும் அவர் மனைவி பேரழகி அகலியையும் வசித்து வந்த ஆசிரமம் அது என்றார்.
அகலியையின் அழகில் மயங்கிய விண்ணவர் கோன் இந்திரன், முனிவரைப் போன்று வேடம் பூண்டு
அவளுடன் கள்ள உறவு கொள்ள வந்த நிகழ்ச்சியை விவரிக்கத் துவங்கினார்.
मुनि वेषम् सहस्राक्षम् विज्ञाय रघुनंदन |
मतिम् चकार दुर्मेधा देव राज कुतूहलात् || १-४८-१९
முனி வேஷம் சஹஸ்ராக்ஷம் விக்ஞாய ரகுநந்தன |
மதிம சகார துர்மேதா ராஜ குதூஹலாது || 1-48-19
अथ अब्रवीत् सुरश्रेष्ठम् कृतार्थेन अंतरात्मना |
कृतार्था अस्मि सुरश्रेष्ठ गच्छ शीघ्रम् इतः प्रभो || १-४८-२०
आत्मानम् माम् च देवेश सर्वदा रक्ष गौतमात् |
அத அப்ரவீது ஸுரஸ்’ரேஷ்ட்டம் க்ருதார்த்தேன அந்தராத்மணா |
க்ருதார்த்தாஸ்மி ஸுரஸ்’ரேஷ்ட்ட கச்ச ஸீ’க்ரம் இத: ப்ரபோ ||
ஆத்மானம் மாம் ச தேவேஸ’ ஸர்வதா ரக்ஷ கௌதமாது | 1-48-20
ரகுவின் வழிதொன்றலே (இராமா)! தபஸ்வியின் உருக்கொண்டு வந்த ஆயிரம் கண்ணனை (இந்திரனை)
அறிந்துகொண்டு, தீய அறிவினால் வானவர் அரசனின் மகிழ்வுக்காக (உறவு கொள்ள) மனதில்
முடிவெடுத்தாள்
பிறகு, (அச்)செயலின் (உடலுறவின்) பயனினால் மனநிறைவு அடைந்தவளாக, தேவர்களில்
சிறந்தவனிடம் (இந்திரனிடம்) சொன்னாள். “வானவரில் சிறந்தவரே! (இச்)செயலின் பயனை
அடைந்தேன். பிரபோ! நீர் விரைவில் இங்கிடமிருந்து செல்லும். விண்ணவர் கடவுளே, தம்மையும்,
என்னையும், எப்பொழுதும் கௌதமரிடமிருந்து காப்பீராக!”
அதைக்கேட்டு அஞ்சிக் குடிலை விட்டு வெளிவந்த இந்திரனை, முனிவர் கௌதமர் பார்த்து
விட்டார். குடிலில் நடந்ததையும் ஞானக் கண்ணினால் அறிந்து கொண்டார். தாங்க இயலாத சினம்
கொண்டு, ஆண்மையை இழந்து தவிக்குமாறு இந்திரனுக்குச் சாபமிட்டார்.
तथा शप्त्वा च वै शक्रम् भार्याम् अपि च शप्तवान् |
इह वर्ष सहस्राणि बहूनि निवषिस्यसि || १-४८-२९
ததா ஸ’ப்த்வா ச வை ஸ’க்ரம் பார்யாமபி ச ஸ’ப்தவான் |
இஹ வர்ஷ ஸஹஸ்ராணி பஹூனி நிவஷிஸ்யஸி ||
वायु भक्षा निराहारा तप्यन्ती भस्म शायिनी | 1-48-29
अदृश्या सर्व भूतानाम् आश्रमे अस्मिन् वषिस्यसि || १-४८-३०
வாயு பக்ஷா நிராஹாரா தப்யந்தீ பஸ்ம ஸா’யினீ |
அத்ருஸ்’யா ஸர்வ பூதானாம் ஆஸ்ரமே அஸ்மின்னு வஷிஸ்யஸி || 1-48-30
இந்திரனைச் சபித்த பின்னரும், (சினம் தணியாமல் தன்) மனைவியையும் சபித்தார். “பல்லாயிரம்
ஆண்டுகள் இங்கு குடியிருப்பாய். உணவின்றி, காற்றையே குடித்து, சாம்பலில் படுப்பவளாகத்
துடிதுடிப்பாக. எல்லா உயிரினங்களாலும் காண இயலாதவளாக இந்த ஆசிரமத்தில் வசிப்பாயாக.
यदा तु एतत् वनम् घोरम् रामो दशरथ आत्मजः |
आगमिष्यति दुर्धर्षः तदा पूता भविष्यसि || १-४८-३१
யதா து ஏதத் வனம் கோரம் ராமோ தஸ’ராத்மஜ: |
ஆகமிஷ்யதி துர்தர்ஷ: ததா பூதா பவிஷ்யஸி || 1-48-31
“எப்போது இப்படிப்பட்ட கோரமான சோலைக்கு தசரதனின் புதல்வனும், வெல்ல முடியாதவனுமான
இராமன் வருகிறானோ, அப்பொழுது தூய்மையை அடையப் பெறுவாய்..
तस्य आतिथ्येन दुर्वृत्ते लोभ मोह विवर्जिता |
मत् सकाशे मुदा युक्ता स्वम् वपुः धारयिष्यसि || १-४८-३२
தஸ்ய ஆதித்யேன துர்வ்ருத்தே லோப மோஹ விவர்ஜிதா |
மத் ஸகாசே முதா யுக்தா ஸ்வம் வபு: தாரயிஷ்யஸி || 1-48-32
“தீய நடத்தையாளே (நடத்தை கெட்டவளே)! அவனை விருந்தோம்புவதினால் பேராசையிலிருந்தும்,
மயக்கத்திலிருந்தும் விடுவிக்கப் படுவாய். என் அருகாமையில் மகிழ்ச்சியைப் பெற்று, உனது
வடிவத்தை அணிந்திருப்பவள் ஆகிறாய் (பெறுகிறாய்).”
இவ்வாறு, அகலியையின் கதையைச் சொல்லி, முனிவர் கௌதமரின் குடிலில் நுழைந்து, அவளது
சாபத்தை நீக்கும்படி இராமனிடம் விசுவாமித்திரர் சொன்னார். அதை ஏற்றுக்கொண்டு, முனிவரின்
பின்னால், இராமனும், இலக்குவனும், குடிசைக்குள் நுழைந்தனர். உடனே, சாபம் நீங்கப் பெற்று,
அகலியை இராமனின் கண்களுக்குப் புலப்பட்டாள். இருவரும், அவள் தாள் பணிந்து வணங்கினர்.
கௌதமரின் சொற்களை நினைவில் நிறுத்தி, இருவரின் கால்களைக் கழுவி, கைகளைக் கழுவ நீர்
வழங்கி முறைப்படி உபசரித்தாள் திரும்பி வந்த கௌதமரும், அவளை ஏற்றுக்கொண்டார் என்று
முடிக்கிறார், மாமுனி வால்மீகி.
இனி, இந்நிகழ்ச்சியைக் கம்பரின் கண்களால் காண்போம்:
இணைய நாட்டினில் இனிதுசென்று இஞ்சி சூழ் மிதிலை
புனையும் நீள்கொடிப் புரிசையின் புறத்து வந்து இறுத்தார்
மனையின் மாட்சியை அழித்து இழி மாதவன் பன்னி
கனியும் மெட்டு உயர் கருங்கல் ஓர் வெள்ளிடை கண்டார். – பால காண்டம் — 1.470
இத்தகைய நாட்டிற்கு இனிமையாகச் சென்று, நீண்ட கொடிகளை (மாலையாகப்) சூடிக்கொண்டு
இருக்கும் மதில்கள் சூழும் மிதிலை நகரத்தின் புற மதிலின் அருகாமையை அடைந்தனர். இல்லற
வாழ்வின் சிறப்பை (கற்பை) அழித்ததால் இழிந்து, மாபெரும் தவசியின் (கௌதமரின்) சாபத்தால்
வெற்றிடத்து மேட்டில் ஒரு கருங்கல்லைக் கண்டனர்.
கண்ட கல்மிசைக் காகுத்தன் கழல் துகள் கதுவ
உண்ட பேதைமை மயக்கு அற வேறுபட்டு உருவம்
கொண்டு மெய் உணர்பவன் கழல் கூடியது ஒப்ப
பண்டை வண்ணமாய் நின்றனள் மாமுனி பணிப்பான். – 1.471
(மனத்தில்) உள்வாங்கிய அறியாமை என்னும் மயக்கம் நீங்கியதும் மெய்ஞானத்தை உணர்ந்து வேறு
(ஞான) உருவம் அடைந்து (இறைவனின்) திருவடிகளில் சேர்வது போல, (அவர்கள்) பார்த்த கல்லின்
மீது காகுத்தர் வழிவந்தவனின் (இராமனின்) கால் தூசி பட்டவுடன் (அகலியை) முந்தைய (அழகு)
வடிவத்தில் நின்றாள். பெரும் முனிவரும் (விசுவாமித்திரரும்) (அப்பெண் முனிவர் கௌதமரின்
மனைவி அகலியை என்று) கூறினார்…
…முன்னை ஊழ் வினையினாலோ நடு ஒன்று முடிந்ததுண்டோ
அன்னையே அனையாட்கு இங்கன் அடுத்தவாறு அருளுக என்றான். – 1.473
“முன்னாளின் (முன்பிறப்பின்) தீய செயலினாலா, (இப்பிறப்பில்) நடுவில் ஒன்று (செய்து)
முடிந்ததால் உண்டாகியதா? தாய்க்கு நிகரானவளுக்கு இவ்வாறு (நிகழ்ந்ததை) அடுத்துக் கூறி
அருளுங்கள்” என்று (இராமன்) கேட்டான்.
“வானவர்களுக்கு அதிபனான இந்திரன், அகலியையின் அழகில் மயங்கி, அவளை அடைய வேண்டும் என்ற
தீய எண்ணம் கொண்டான். அதற்குத் தகுந்த தருணத்தை நோக்கிக் காத்திருந்த அவன், ஒரு நாள் கௌதம
முனிவரை அகலச் செய்தான்.” என்று சொன்ன விசுவாமித்திரர், மேலும் தொடர்ந்தார்…
…பொய்இலா உள்ளத்தான் தன் உருவமே கொண்டு புக்கான். – 1.475
புக்கு அவளோடும் காமப் புது மண மதுவின் தேறல்
ஒக்க உண்டு இருத்தலோடும் உணர்ந்தனள் உணர்ந்தபின்னும்
தக்கதென்று என்ன ஒராள் தாழ்ந்தனள் இருப்ப தாழா
முக்கணான் அனைய ஆற்றல் முனிவனும் முடுக்கி வந்தான். – 1.476
மனத்தில் பொய்மையே இல்லாதவரின் (கௌதமரின்) உருவத்தை மேற்கொண்டு (குடிலில்) நுழைந்தான்.
புகுந்து, காமம் என்ற புது மதுவின் மணத்தை உடைய கள்ளை அவளுடன் உண்டு (மயங்கி)
இருந்தபோது, (தன்னுடன் இருப்பவன் இந்திரன் என்று அகலியை) உணர்ந்தாள். உணர்ந்த பின்னும்
(அது கற்புக்கு) தகுந்தது அல்ல என்று (அதைத்) மறுக்காமல் தாழ்ந்த (நிலைக்கு) வந்தாள்.
(அப்படி) இருக்கும் போது தாழ்ந்ததைச் செய்யாத, முக்கண்ணனுக்கு இணையான ஆற்றல் கொண்ட
முனிவர் (கௌதமர்) விரைவாக வந்தார்.
…இந்திரன் ஒரு பூனையின் வடிவில் தப்பிச் செல்ல முயன்றான். அதை அறிந்த கௌதமர்
இந்திரனுக்கு சாபம் கொடுத்தார்…
…ஆயிரம் மாதர்க்குள்ள அறிகுறி உனக்குண்டாக என்று
ஏயினான் அவைஎலாம் வந்து இயைந்தன இமைப்பின் முன்னம். — 1.478
…மெல்லியலாளை நோக்கி விலைமகள் அனைய நீயும்
கல்இயல் ஆதிஎன்றான் கருங்கல் ஆய்மருங்கு வீழ்வாள். — 1.479
பிழைத்தது பொறுத்தல் என்றும் பெரியவர் கடனே அன்பால்
அழல் தருங் கடவுள் அன்னாய் முடிவு இதற்கருளுக என்ன
தழைத்து வண்டு இமிரும் தண் தார்த் தசரதராமன் என்பான்
கழல் துகள் கதுவஇந்தக்கல் உருத் தவிர்தி என்றான். – 1.480
…அண்ணலே உன் கை வண்ணம் அங்கு கண்டேன் கால் வண்ணம் இங்கு கண்டேன். – 1.481
…பெண்களின் அடையாளம் (பெண்குறி) ஆயிரம் உன்னிடம் உண்டாகட்டும் என்று சபித்தார். கண்
இமைக்கும் நேரத்திற்குள் அவை (இந்திரன் உடம்பில்) வந்து சேர்ந்தன.
பெண்ணைப் (அகலியையை) பார்த்து, “வேசியைப் போன்று நடந்த நீயும் கல் ஆகக் கடவாய்!” என்றார்.
(அவளும்) கருங்கல் ஆகித் தடுமாறி விழப் போனாள்.
“(மற்றவர் செய்யும்) தவறுகளைப் அன்புகொண்டு பொறுத்துக்கொள்ளுதல் சான்றோர்களின் கடமை ஆகும்.
நெருப்பைக் கக்கும் (கண்ணுள்ள) கடவுளைப் போன்றவரே, இதற்கு (இந்தச் சாபத்திற்கு) ஒரு
முடிவை எனக்கு அருளுக” என்கவே (என்று அகலியை கேட்கவே), “(நன்கு தேனைப் பருகி)
செழித்த வண்டுகள் (ரீங்கார) ஒலி எழுப்பக்கூடிய குளிர்ந்த மலர் மாலை அணிந்த தசரத(னின்
மகன்) இராமன் என்பவன் கால் தூசு பட்டு இந்தக் கல் உருவத்தை தவிர்ப்பாய்!” என்றார் (கௌதமர்)…
(இப்படி அகலியையின் கதையைச் சொல்லி முடித்த விசுவாமித்திரர்), “என் அன்புக்கு
உரியவனே, (அரக்கி தாடகையைக் கொன்ற) உன் கைத்திறனை அங்கு (வேள்வி நடந்த இடத்தில்)
கண்டேன். உன் காலின் (கருணைத்) திறத்தை (அகலியை சாபவிமோசனம் மூலம்) இங்கு கண்டேன்”
(என்று வியந்தார்.)
ஒப்பீடு
அகலியையின் கதையை இருவருமே கிட்டத்தட்ட ஒரே மாதிரித்தான் சொல்லி இருக்கிறார்கள்.
இருப்பினும் சொன்ன முறையிலும், உட்பொருள்களிலும் வேறுபாடுகள் உள்ளன. அகலியை தன் கணவன்
உருவில் வந்து தன்னைச் சேர்ந்தவன் தன் கணவன் அல்ல என்று தெரிந்தும், அதற்கு உடன்படுவது
தவறு, கற்புடைமை ஆகாது என்று அறிந்தும் அத்தவறைச் செய்தாள் என்றுதான் இருவருமே எழுதி
இருக்கிறார்கள்.
அவள் ஏன் அப்படிச் செய்யத் துணிந்தாள் என்பதற்கு கம்பர் விளக்கம் தரவில்லை.
ஆனால் வால்மீகியோ दुर्मेधा என்ற ஒரு சொல்லினாலும், கள்ள உறவிற்குப் பிறகு தான் அதனால் மன
நிறைவு அடைந்ததை அகலியை இந்திரனிடமே சொல்லி, அதைத் தன் கணவரிடமிருந்து மறைத்து,
இருவரையும் எப்போதும் காக்குமாறு வேண்டிக்கொள்வதைக் குறிப்பிடுவதின் மூலம் அகலியையின்
மன நிலையை விளக்குகிறார்.
அகலியைக்கு தீய நினைவுகள், கெட்ட எண்ணங்கள் (दुर्मेधा – vanity) இருந்தன. அவை தன் அழகு
குறித்த செருக்கால் அவளிடம் தோன்றின. தனது அழகை வானவர்கோன் இந்திரனே விரும்புகிறானே,
அந்த அழகினால் கவரப்பட்டு, தன்னை அடைவதற்காகக் கடும் தவத்தின் வல்லமையால் அவனையே
சுட்டெரிக்கும் சாபம் கொடுக்க வல்ல கௌதம முனிவரின் கோபத்தையும் எதிர்கொள்ளத் தயாராக
இருக்கிறானே என்ற மனக் களிப்பும் இருந்தது. அதுதான் அவளுக்கு அந்தக் கள்ள உறவு உள்மனதில்
நிறைவைத் தந்தது என்று இந்திரனிடம் கூறுவதாகக் குறிப்பிட்டிருக்கிறார் என்று படுகிறது.
அதைச் சொல்ல விருப்பம் இல்லாத காரணத்தால், கம்பர் அது பற்றி மௌனம் சாதிக்கிறார் என்றும்
தோன்றுகிறது. ஆயினும் கம்பர் தனது உள்ளத்தில் அகலியைபால் எழுந்த குமுறலை, கௌதம
முனிவர் வாய் மூலமாக “விலைமகள் அனைய” என்று பழிக்கச் செய்து, அவளை அடித் தளத்திற்கே
தள்ளி விடுகிறார்.
கற்பிற்கு அவர் கொடுத்த தலை சிறந்த மதிப்பு அவரை அவ்வாறு எழுதத் தூண்டியது போலும்!
ஆகவே, உயிரை விடக் கற்பைச் சிறப்பாக எண்ணாத கல் நெஞ்சக்காரி அகலியை என்று எண்ணி,
கல்லாகச் சமைந்து போகுமாறு சாபம் பெற்றதாகக் காட்டுகிறார்.
வால்மீகியோ, அகலியையின் அழகு வெளியார்க்குப் புலப்பட்டதுதானே இத் தவறுக்கு மூல
காரணமாயிற்று என்று, அவள் யார் கண்ணுக்கும் புலப்படாமல் போகட்டும் என்று சபிக்கப்பட்டதாகப்
புனைந்திருக்கிறார்.
இருந்த பொதிலும், அகலியையின் கதையை அறிந்த பின்னும் அகலியையைத் தாயாகவே இராமபிரான்
நோக்கினார் என்று இருவருமே எழுதியிருப்பது, இராமன் பெண்களுக்குக் காட்டும் மதிப்பை
உணர்த்துவதாவே அமைந்து இருக்கிறது.
இதனாலேயே, அகலியைக்கு சாபவிமோசனம் எப்படி நிகழ்ந்தது என்பதைச் சொல்வதில் இருவரும்
மாறுபடுகிறார்கள்.
கண்ணுக்குப் புலப்படாத நிலையில் அகலியை இருப்பதால், ஆசிரமத்தின் நிலை கண்டு, இராமன்
வினவ, அகலியையைப் பற்றி விசுவாமித்திரர் விளக்குவதாக வால்மீகி வரைந்திருக்கிறார்.
கம்ப நாட்டாரோ, கருங்கல்லாக இருந்த அகலியை, இராமனின் கால் தூசி பட்டுத் தன்னுருவத்தை
அடைந்ததும், அந்த விந்தையான நிகழ்வைப் பற்றி விசுவாமித்திரர் தெளிவு படுத்துவதாக
எழுதி இருக்கிறார். இதுதான் மாற்றத்தின் காரணம் என்று எனக்குப் படுகிறது.
இந்திரனுக்குக் கொடுக்கப்பட்ட சாபத்திலும் இருவரும் மாறு படுகிறார்கள்.
இந்திரனின் ஆண்மையே அவனைத் தவறான வழியில் நடத்திச் சென்றது என்று கருதிய வால்மீகி அவன்
ஆண்மை அழியட்டும் என்ற சாபத்தைப் பெற்றதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
கம்பரோ, பிறன்மனை புகுந்தவனுக்கு மிகக் கொடிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று
எண்ணுகிறார். எனவே, உடல் முழுதும் பெண் குறிகள் பரவி நிலைத்திருக்கும் நிலைக்குத்
தள்ளப்பட்டான் என்று பாடியிருக்கிறார். மேன்மையான நிலையில் இருக்கும் ஒருவன், செய்த
தவற்றின் விளைவு அனைவர் கண்ணுக்கும் தெரியும் தண்டனையைப் பெறவைக்க வேண்டும், எதற்காக
அத்தண்டனை கிடைத்தது என்பதும் தெள்ளத் தெளிவாகப் புலப்பட வேண்டும், அனைவரும் அவனைத்
தூற்றவேண்டும், அவன் மனம் புழுங்கித் தன் தவற்றை உணர்ந்து திருந்த வேண்டும் என்றே, அத்தண்டனை
கொடுக்கப் பட்டதாக நம்மை நினைக்க வைக்கிறார் என்பது நமக்கு விளங்குகிறது.
இதனால், பிறன் மனை நோக்குவார்பால் தமிழருக்கு இருக்கும் வெறுப்பும் புலப்படுத்தப் படுகிறது.
வால்மீகி சொல்லிச் சென்றதையே கம்பரும் வடித்திருந்தாலும், அவர் தமிழ் மரபை எவ்வாறு
இந்நிகழ்ச்சியில் இழைத்து இருக்கிறார் என்று புலனாகிறது.
இராமன்-சீதை முதல் சந்திப்பு
சிவனாரின் வில்லை முறித்தபின்தான் இராமனும் சீதையும் மிதிலையில் சந்தித்தார்கள் என்று
வால்மீகி முனிவர் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், கவிச் சக்கரவர்த்தி கம்பரோ மிதிலையில்,
கன்னி மாடத்தில் நின்ற சீதையை முதல் முதலாக இராமன் பார்த்து இருவரும் ஒருவருக்கு
மற்றொருவர் தத்தம் உள்ளங்களைப் பறிகொடுத்ததாகப் புனைந்துள்ளார்.
ஆகவே, இந்த விஷயத்தில் ஒப்பீடு எதுவும் செய்ய இயலாது. இருப்பினும், வால்மீகி ஏன் அப்படி
எழுதினார் என்பதற்குத் தகுந்த சான்றுகள் இருப்பதால், அதையே ஒப்பீடாகப் பிறகு எழுதுகிறேன்.
விசுவாமித்திர முனிவர், இராமன், இலக்குவனுடன் நாமும் சீதையைச் சந்திக்கச் செல்வோம்.
பால காண்டத்தில், பத்தாம் படலமான மிதிலைக் காட்சிப் படலத்தின் துவக்கத்தில் கம்ப நாட்டார்
இருபது வெண்பாக்களில் மிதிலையின் அழகைத் தீட்டியிருக்கிறார்.
அப்படிப்பட்ட அழகோவியம் வால்மீகி இராமயணத்தில் காணப்படவில்லை.
இராமன் மிதிலைக்குள் நுழையும் பொது அடித்த காற்றில் சுற்றியும் படர்ந்திருந்த கொடிகள்
அசைந்தாடின. படலத்தின் முதல் வெண்பாவில் அதை கம்பர் வர்ணிக்கும் பங்குதான் என்னே!
கம்பரசத்தைப் பருகுவோம்!
மை அருமலரின் நீங்கியான்செய் மாதவத்தின் வந்து
செய்யவள் இருந்தாள் என்று செழு மணிக் கொடிகள் என்னும்
கைகளை நீட்டி அந்தக் கடி நகர் கமலச் செங்கண்
ஐயனை ஒல்லை வாஎன்று அழைப்பதுபோன்றது அம்மா. – 1.486
“நான் பெரிய தவத்தினைச் செய்யவே, குற்றமற்ற (தாமரை) மலரைத் துறந்துவிட்டு, அவள் (சீதை
இங்கு) வந்து இருந்தாள்!” என்று நன்கு வளர்த்திருந்த அழகிய கொடிகளால் ஆன (தனது) கைகளை
நீட்டி (ஆட்டி), செந்தாமரைக்கண்ணனை விரைந்து வா என்று மிதிலை நகரமே அழைப்பது போல
இருந்ததம்மா.
இந்தச் செய்யுளின் வாயிலாக சீதையைச் செந்தாமரையில் அமர்ந்திருக்கும் இலக்குமி என்றும்,
இராமனைச் செந்தாமரைக்கண்ணனான திருமால் என்றும் குறிப்பிட்டிருக்கிறார் கம்பர்.
அது மட்டுமல்லாது, மிதிலை நகரமே மாபெரும் தவத்தைச் செய்து இலக்குமியின் அவதாரமான
சீதையை அடைந்தது, தனது கைகளான மலர்க்கொடிகளை நீட்டி, திருமாலின் அவதாரமான் இராமனை
அழைத்தது என்று புனைந்திருக்கிறார்.
ஒருகணம் கண்களை மூடிக்கொண்டு, கம்பரின் வர்ணிப்பை நமது மனக்கண் முன்பு நிறுத்திப்
பார்த்தோமானால், அவரது ஆழ்ந்த புலமை நமக்குப் புலனாகும்.
…அழகு மிகுந்த மிதிலை மாநகரைக் கண்ணுற்றுக்கொண்டே வந்தவர்கள், கன்னிமாடத்தில் சீதையைக்
காண்கின்றார். சீதையை முதன்முதலாக கம்பர் உருவகித்து இருப்பது நமது மனதைத் தொடுகிறது…
உமையாள் ஒக்கும் மங்கையர் உச்சிக் கரம் வைக்கும்
கமையாள் மேனி கண்டவர் காட்சிக் கரை காணார்
இமையா நாட்டம் பெற்றிலம் என்றாரிரு கண்ணால்
அமையாது என்றார் அந்தர வானத்தவர் எல்லாம். – 1.509
மங்கையரால் தலைக்கு மேலே கைகூப்பி வணங்கத்தக்க உமையவளைப் போன்ற நற்குணம் கொண்டவளின்
உருவத்தைக் கண்டவர், அந்த அழகின் எல்லையைக் கானா இயலாது போனார்கள். (வானவர்கள் போல
கண்களை) இமைக்காமல் நோக்கும் திறன் இல்லது போனோமே என்று (வருந்தினர்). விண்ணில்
(குடியிருக்கும்) தேவர்கள் அனைவரும் (சீதையின் அழகைக் காண) இரு கண்கள் போதாது என்று
(பதிலிருத்தனர்).
இங்கு கம்பன் சீதையின் அழகை வர்ணிக்க முயன்று, அதைச் செய்யும் வகை அறியாது — அரம்பை,
ஊர்வசி, மேனகை, திலோத்தமை என்ற அழகு மிக்க வானுலகு மாதரைக் கண்ட விண்ணவரே
தங்களால்கூட சீதையின் வனப்பைக் காண இரு கண்கள் போதாது என்று சொல்வதாகச் சொல்லித் தனது
இயலாமையை முன்வைக்கிறார்.
இருந்தபோதிலும் சீதையின் இயல்பு, அழகு பற்றிப் புகழ்ந்து பத்து செய்யுள்களின் தெரிவிக்கிறார்.
‘கண்டதும் காதல்’ (love at first sight) என்ற இலக்கணத்தை உருவாக்கியவர்களாக இராமனும்
சீதையும் ஒருவரைக் கண்டு ஒருவர் விரும்பியதையும், இராமன் சென்றதும், காதல் நோய் கொண்டு
சீதை தவித்ததையும், இராமன் சீதை நினைவால் என்கியதையும் 56 பாக்களில் விளக்கி உள்ளார்
கவிச் சக்கரவர்த்தி கம்பர். அப்பாக்களில், இராமனும் சீதையும், ‘கண்டதும் காதல் கொண்ட’ பாக்கள்
இரண்டை மட்டும் காண்போம்:
எண்ண அரு நலத்தினாள் இனையள் நின்றுழி
கண்ணொடு கண் இணை கவ்வு ஒன்றை ஒன்று
உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள். – 1.519
பருகிய நோக்கு எனும் பாசத்தால் பிணித்து
ஒருவரை ஒருவர் தம் உள்ளம் ஈர்த்தலால்
வரி சிலை அண்ணலும் வாட்கண் நங்கையும்
இருவரும் மாறிப் புக்கு இதயம் எய்தினர். – 1.521
எண்ணிப் பார்க்கக் கூட இயலாத நற்குணங்களைப் (பெற்ற) இத்தன்மையை உடையவள்(சீதை) (கன்னி
மாடத்தில்) நின்று கொண்டிருந்த பொழுது, ஒருவர் கண்ணை மற்றவர் கண்கள் கவ்வி விழுங்கவும்,
(என்ன செய்வது என்று அறியாது) நிலையாக நிற்க முடியாமல், உணர்வுகள் (ஒருவரோடு
ஒருவர்) பின்னிக் கொள்ள, மேன்மை மிகுந்த (இராமனும்) நோக்கினான், அவளும் (சீதையும்
இராமனைத் திரும்ப) நோக்கினாள்.
ஒருவரை ஒருவர் கண்களால் பருகியதால் ஏற்பட்ட காதலால், ஒருவரின் உள்ளத்தை மற்றொருவரின்
உள்ளம் தன்னிடத்தில் இழுத்துக் கொண்டதால், சிறந்த வில்லை ஏந்திய மாந்தரில் சிறந்தவரும்
(இராமனும்), வாள் போன்ற (பார்வையாலே வெல்லக்கூடிய) கண்ணுடைய நங்கையும் (சீதையும்),
ஒருவர் இதயத்தில் மற்றவர் குடியேறினர்.
எப்படிப்பட்ட வர்ணனை! ஒருவரை ஒருவர் விழிகளால் கவ்வி விழுங்கிக் கொள்கிறார்களாம்! அதனால்
நிலை தடுமாறுகிறார்களாம், உள்ளத்தைப் பறிகொடுத்து, ஒருவர் இதயத்தில் மற்றொருவர் இடம்
பிடித்துக் கொள்கிறார்களாம். தூய காதலுக்கு இதைவிட விளக்கம் வேண்டுமா என்ன?
ஒப்பீடு
முதலில் வால்மீகி முனிவர் இந்த நிகழ்ச்சியை ஏன் எழுதவில்லை என்பதற்குக் காரணம் ஆரண்ய
காண்டத்தில் இருக்கும் இரண்டு சுலோகங்களில் (3.87.4, 3.87.10) கிடைக்கிறது.
இராவணன் அந்தண வேடமிட்டு, சீதைக் கவர வருகிறான். அவனை ஒரு முனிவர் என்று நினைத்த
சீதை, வரவேற்று, அவன் அமர தர்ப்பைப் புற்களால் நெய்யப்பட்ட இருக்கையை அளிக்கிறாள். தன்னைப்
பற்றிச் சொல்லும் பொது,
उषित्वा द्वादश समाः इक्ष्वाकूणाम् निवेशने |
भुंजाना मानुषान् भोगान् सर्व काम समृद्धिनी || ३-४७-४
உஷித்வா த்வாதஸ’ ஸமா: இக்ஷ்வாகூணாம் நிவேஸ’னே |
புஞ்ஜானா மானுஷானு போகானு ஸர்வ காம ஸம்ருத்திநீ || 3-47-8
இக்ஷ்வாகுகளின் இல்லத்தில் பன்னிரண்டு ஆண்டுகள் வசித்து, மனிதர்களின் அனைத்து இன்பங்களையும்
நன்றாக அடையப்பட்டவள் ஆனேன். (என்னுடைய எல்லா விருப்பங்களும் நிறைவேற்றப்பட்டன.)
(பிறகு கைகேயின் தூண்டுதலால் பதினான்கு ஆண்டுகள் கானகம் வர நேர்ந்தது என்று தெரிவித்த
சீதை, புறப்படும் சமயத்தில் தங்கள் வயது என்ன என்று அறிவிக்கிறாள்.)
मम भर्ता महातेजा वयसा पंच विंशकः || ३-४७-१०
अष्टा दश हि वर्षाणि मम जन्मनि गण्यते |
மம பர்த்தா மஹாதேஜா வயஸா பஞ்ச விம்ஸ’க: |
அஷ்டா தஸ’ ஹி வர்ஷாணி மாமா ஜன்மனி கன்யதே || 3-47-10
பேரொளி கொண்ட என் கணவர் இருபத்தைந்து வயதானவர். என் வயது பதினெட்டு ஆண்டுகளாகவே
எண்ணப்பட்டது.
அவள் 12 ஆண்டுகள் அயோத்தியில் இருந்ததற்குப் பிறகு, தனக்கும் தன் கணவருக்கும் என்ன வயது
என்று ஐயத்திற்கு இடமின்றி சீதை இராவணனிடம் உரைக்கின்றதாக வால்மீகி எழுதியிருக்கிறார்.
மனக்கணக்குப் போட்டப் பார்த்தால், சீதை இராமனை மணந்த பொது அவளுக்கு ஆறே வயது (18-12=6)
என்று விளங்கும். இராமனுக்கு பதிமூன்று ஆண்டுகள் நிரம்பி இருந்தன. அந்த வயதில் ஆறு
வயதுச் சிறுமியான சீதைக்குக் காதல் என்ற உணர்வு தோன்ற வழி இல்லையே! அதனாலேயே,
திருமணத்துக்கு முன் அவர்கள் சந்தித்ததாக வால்மீகி எழுதவில்ல என்று புலனாகிறது.
வால்மீகியின் இராமாயணத்தை நன்கறிந்த மகாகவி கம்பர் ஏன் இப்படி மாற்றி எழுதத் துணிந்தார்?
இதற்கு தமிழ் நாட்டின் களவு, கற்பு இவற்றைப் பற்றி சுருக்கமாகக் கூறித்தான் விளக்க வேண்டும்.
செந்நாப் போதாரான வள்ளுவப் பெருமான் உலகுக்கு ஈந்த தனது திருக்குறளை அறம், பொருள்,
இன்பம் என்று மூன்று பிரிவுகளாக(பால்களாக)ப் பிரித்திருக்கிறார். இன்பத்துப் பாலையும்
களவியல், கற்பியல் என்று இரண்டாகப் பகுத்திருக்கிறார்.
கற்பைப் பற்றி நாம் அனைவரும் நன்கறிவோம். களவு என்றால் என்ன? திருட்டு என்பதுதானே?
அதுவும் எப்படிப்பட்ட திருட்டு? ஒருவர் உள்ளத்தை மற்றொருவர் திருடிக் கொள்வது. நமது
இதயத்தில் மற்றொருவர் குடியேற அனுமதிப்பது. நமது உள்ளம் நம்மிடத்தில் இல்லாதபோது, அது
களவாடப் பட்டபின்பு, அதை எப்படி இன்னொருவருக்குக் கொடுக்க இயலும்? இன்னொருவரை நாடி
மனம் எப்படிச் செல்லும்? இல்லை, நம்மிடமிருந்து திருடப்பட்ட பொருளை மீண்டும்
இன்னொருவருக்கு எப்படித் திருட்டுக் கொடுக்க இயலும்? அப்படி ஒருவர் உள்ளத்தை
மற்றொருவரிடம் பறிகொடுத்து, அவர் நினைவாக வாழ்வதுதான் கற்பு. ‘
ஒருத்தனுக்கு ஒருத்தி’ என்ற பழமொழி உருவாகக் காரணமே இராமனும், சீதையும்தான். இராமன்,
சீதை இருவருமே கற்புக்கு இலக்கணமாகத்தான் வாழ்ந்தார்கள், வடிவமைக்கப்பட்டர்கள், அனைவருக்கும்
முன்மாதிரியாக விளங்கினார்கள்.
இதுவே தமிழ்ப் பண்பின் எடுத்துக்காட்டாகக் கம்பராமாயணத்தில் பரிணமித்தது.
எனவே, இராமகாதையைத் தமிழில் வடித்தெடுக்கும் பொது, கற்பிற் சிறந்த சீதையும், ‘பிறன்
மனை நோக்காப் பேரறிவாளனும், ஒரு மனைவி உறுதியாளனுமான இராமனும், ஒருவரிடத்தில்
மற்றொருவர் உள்ளத்தைப் பறிகொடுத்தால்தான் தமிழ் மரபுப்படி வடிவமைக்க இயலும் என்று
களவியலையும் கம்பர் தனது இராமகாதையில் புகுத்தினார்.
முழுமையான களவு நடந்த பின்னர்தான், மாற்றுக் குறையாத கற்பு இருவரிடமும் நிலைக்கும்
என்று கம்பர் முடிவு செய்திருக்க வேண்டும். அதுதான் இராமன்-சீதையின் முதற் சந்திப்பையும்,
கண்டதும் கொண்ட காதலையும் விவரித்து, இருவரின் கற்புக்கும் அடித்தளம் அமைத்திருக்க வேண்டும்.
மேலும், கடவுளர்களின் அவதாரங்களாகக் கம்பரால் எண்ணப்பட்ட இராமனும், சீதையும், மனித
உருவில்தான் காதல் என்ற நுட்பமான உணர்வைப் பெற இயலும் என்ற எண்ணமும் அவருக்கு
இருந்திருக்கக் கூடும். அதுவும் இன்னொரு காரணமாக இருந்திருக்கலாம் அல்லவா!
மூலத்தை மாற்றினாலும், கவிச்சக்கரவர்த்தி கம்பன் எந்த உயர்வான எண்ணத்துடன் அவ்வாறு செய்தார்
என்று நம்மால் பகுத்து அறிந்து கொள்ள முடிகிறது.
அடுத்த ஒப்பீட்டில் இராவணன் சீதையைக் கவர்ந்து சென்றதைப் பற்றி அணுகுவோம்.
===========================================
படங்களுக்கு நன்றி:
http://www.tamilhindu.com/2014/03/kamban-valmiki-literary-comparison/
cc ep=4YuJUkcUnVmggoKvF2Ghgw9G…
(i)

Professor k. kumar

unread,
Nov 23, 2014, 10:51:40 AM11/23/14
to brail...@googlegroups.com
கம்பனும் வால்மீகியும் – இலக்கிய ஒப்பீடு 3
Wednesday, October 8, 2014, 5:02
ஆய்வுக் கட்டுரைகள், இலக்கியம், பத்திகள், மறு பகிர்வு
Add a comment
கம்பனும் வால்மீகியும் – இலக்கிய ஒப்பீடு 3
ஒரு அரிசோனன்
சென்ற இரு ஒப்பீடுகளில் கம்பனும், வால்மீகியும் எப்படி வேறுபடுகிறார்கள் என்பதைக் கண்டோம்.
இந்த ஒப்பீட்டில் இராவணன் சீதையைக் கவர்ந்து செல்வதைப் பற்றிக் கண்ணுறுவோம். இவண், மரபுப்
பண்பாடு மாற்றம் மிக நன்றாகவே தெரிகிறது. அது மட்டுமன்றி, சீதையின் வாக்குத் திறனும்
புலனாகிறது.
வால்மீகி ஆரண்ய காண்டத்தில், நான்கு சர்க்கங்களில் (46-49), 130 குறள் பாக்களில் (260
வரிகள்), இராவணன்-சீதையின் வாக்கு வாதத்தை எழுதி உள்ளார்.
அக்காட்சியே, சடாயு உயிர் நீத்த படலத்தில் 53 விருத்தப் பாக்களில் (212 வரிகள்) கம்பனால்
தீட்டப் பட்டிருக்கிறது. இருவரின் கைவண்ணமுமே நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுகிறது.
சீதை சொல்லத்தகாத வார்த்தைகளைச் சொன்னதால் மனம் உடைந்த இலக்குவன், இராமன் சென்ற இடம்
நோக்கிச் சென்றான். சீதை தனியாக விடப்பட்டாள். அது கண்டு, இராவணன் ஒரு துறவியைப் போல
வேடம் அணிந்துகொண்டு, சீதை இருக்கும் பர்ணகசாலையை அடைந்தான்.
வால்மீகியின் ஆரண்ய காண்டத்தின் 46வது சர்க்கத்தில் துவங்குவோம்:
संदृश्य न प्रकंपन्ते न प्रवाति च मारुतः |
शीघ्र स्रोताः च तम् दृष्ट्वा वीक्षंतम् रक्त लोचनम् || ३-४६-७
स्तिमितम् गंतुम् आरेभे भयात् गोदावरी नदी |
ஸந்த்ருஷ்ஸ்ய ந ப்ரகம்பந்தே ந ப்ரவாதி ச மாருத: |
ஸீக்ர ஸ்ரோதா: ச தம் த்ருஷ்ட்வா வீக்ஷந்தம் ரக்த லோசனம் || 3-46-7
ஸ்திதமிதம் கந்தும் ஆரேபே பயாது கோதாவரீ நதீ |
அவனைக் கண்ட காற்றும் தனது வேகத்தைக் குறைத்துக்கொண்டது. குருதிச் சிவப்பான கண்களை உடைய
அவனைப் பார்த்த அச்சத்தால் வேகமாகச் செல்லும் கோதாவரி ஆறும் மெல்லச் செல்ல ஆரம்பித்தது. –
3.46.7
अभ्यवर्तत वैदेहीम् चित्राम् इव शनैश्चरः |
सहसा भव्य रूपेण तृणैः कूप इव आवृतः || ३-४६-१०
அப்யவர்த்தத வைதேஹீம் சித்ராமிவ சனைச்சர: |
ஸஹஸா பவ்ய ரூபேண த்ருணை: கூப இவ ஆவ்ருத: || 3-46-10
புற்களால் மறைக்கப்பட்ட கிணறுபோல, தகுந்த (துறவி) வேடத்தில் (மறைத்துக்கொண்டு),
சித்திரையில் (தோன்றும்) சனியைப்போல வைதேகி முன்னால் சென்றான். – 3.46.10
दृष्ट्वा काम शर आविद्धो ब्रह्म घोषम् उदीरयन् |
अब्रवीत् प्रश्रितम् वाक्यम् रहिते राक्षस अधिपः || ३-४६-१४
த்ருஷ்ட்வா காம ஸ’ர ஆவித்தோ ப்ரஹ்ம கோஷம் உதீரயன்னு |
அப்ரவீது பிரஸ்ரிதம் வாக்கியம் ரஹிதே ராக்ஷசம் அதிப: || 3-46-10
ताम् उत्तमाम् त्रिलोकानाम् पद्म हीनाम् इव श्रियम् |
विभ्राजमानाम् वपुषा रावणः प्रशशंस ह || ३-४६-१५
தாம் உத்தமாம் த்ரிலோகானாம் பத்மஹீனாமிவ ஸ்ரியம் |
விப்ராஜமானாம் வபுஷா ராவண: பிரஸ’ஸ’ம்ஸ ஹ || 3-46-15
காமனின் அம்புகளால் அடிக்கப்பட்ட அரக்கர் தலைவன் தனியளான (சீதையைப்) பார்த்துவிட்டு,
பிரம்ம கோஷங்களை (வேதங்களை) முழங்கிக்கொண்டு, மரியாதையான சொற்களைச் சொன்னான். மூன்று
உலகங்களிலும் சிறந்தவளும், தாமரை இல்லாத (தாமரையில் நிற்காத) இலக்குமியைப் போன்ற
அவளின் உடலை முன்னும் பின்னுமாக (முன்னழகையும், பின்னழகையும்) இராவணன் புகழ்ந்தான். –
3.46.14-15
…இராவணன் பதினோரு சுலோகங்களில் சீதையின் உடல் உறுப்புக்கள் ஒவ்வொன்றையும் கொச்சையாக
வர்ணிக்கிறான். அதன் பிறகு, நான்கு சுலோகங்கள் மூலமாக தன்னந்தனியளாக ஏன் சீதை
இருக்கிறாள் என்று கேட்கிறான்….
द्विजाति वेषेण हि तम् दृष्ट्वा रावणम् आगतम् |
सर्वैः अतिथि सत्कारैः पूजयामास मैथिली || ३-४६-३३
த்விஜாதி வேஷேண ஹி தம் த்ருஷ்ட்வா ராவணம் ஆகதம் |
ஸர்வை: அதிதி ஸத்காரை: பூஜயாமாஸ மைதிலீ || 3-46-33
प्रसह्य तस्या हरणे धृढम् मनः समर्पयामास आत्म वधाय रावणः || ३-४६-३७
பிரஸஹ்ய தசா ஹரணே த்ருடம் மன: ஸமர்ப்பயாமாஸ ஆத்ம வதாய ராவண: || 3-46-37
ब्राह्मणः च अतिथिः च एष अनुक्तो हि शपेत माम् |
इति ध्यात्वा मुहूर्तम् तु सीता वचनम् अब्रवीत् || ३-४७-२
ப்ராஹ்மண: ச அதிதி: ச ஏஷ அனுக்தோ ஹி சபேத மாம் |
இதி த்யாத்வா முஹூர்த்தம் து சீதா வசனம் அப்ரவீது || 3-47-2
இருபிறப்பாளரின் (அந்தணரின்) வேடத்திலேயே வந்த அந்த இராவணனைப் பார்த்த மைதிலி,
எல்லாவிதமான விருந்தினர் உபசாரத்துடன் பூசித்தாள். – 3.46.33
இராவணன் அவளைக் கட்டாயப்படுத்திக் கடத்தவேண்டுமென்ற உறுதியைத் தன் அழிவிற்காக மனதில்
அர்ப்பணித்தான். – 3.46.37
மறையவராகவும் விருந்தினராகவும் (இருக்கும்) இவர் பதில் கூறாமல் இருந்தால் என்னைச்
சபித்து விடுவார் என்று சிறிது நேரம் சிந்தித்த சீதை பதில் சொன்னாள். – 3.47.2
…மிதிலையின் அரசமுனி ஜனகனின் மகள் சீதை தான் என்றும், பேரரசன் தசரதனின் மைந்தன் இராமனை
மணமுடித்து, அயோத்தியில் பன்னிரண்டு ஆண்டுகள் இனிது வாழ்ந்ததையும், கைகேயின் சொற்கேட்டு,
தசரதன் இராமனை பதினான்கு ஆண்டுகள் காட்டில் வாழ்ந்து வருமாறு பணித்ததால், தனது கணவன்
இராமன், தான், மற்றும் இளையோன் இலக்குவன் கங்கையைத் தாண்டி தண்டகாரண்யம் வந்ததையும்,
பொன்மானைப் பிடிக்க இராமன் சென்றதையும், சீதை வாய்மொழியாக இருபது சுலோகங்களால் வால்மீகி
வரைந்திருக்கிறார்…
आगमिष्यति मे भर्ता वन्यम् आदाय पुष्कलम् |
रुरून् गोधान् वराहान् च हत्वा आदाय अमिषान् बहु || ३-४७-२३
ஆகமிஷ்யதி மே பர்த்தா வந்யம் ஆதாய புஷ்கலம் |
ருருனு கோதானு வராஹானு ச ஹத்வா ஆதாய அமிஷானு பஹு || 3-47-23
सः त्वम् नाम च गोत्रम् च कुलम् आचक्ष्व तत्त्वतः |
एकः च दण्डकारण्ये किम् अर्थम् चरसि द्विज || ३-४७-२४
ஸ: த்வம் நாம ச கோத்ரம் ச குலம் ஆசக்ஷ்வ தத்த்வத: |
ஏக: ச தண்டகாரண்யே கிம் அர்த்தம் சரஸி த்விஜ || 3-47-24
என் கணவர் காட்டிலிருந்து நிறையக் கருவரி மான்கள், கீரிப்பிள்ளைகள் (போன்ற மிருகங்கள்),
பன்றிகளையும் கொன்று, நிறைய இறைச்சி எடுத்துக் கொண்டு வருவார். இருபிறப்பாளரே
(அந்தணரே), உண்மையில் உமது பெயரையும், கோத்திரத்தையும், குலத்தையும், தெளிவு
படுத்துவீராக; தண்டகாரண்யத்தில் தனியாக எதற்காக அலைகிறீர்? – 3.47.23&24
…தான் அரக்கர்கோன் இராவணன் என்றும், கடலின் நடுவில் உள்ள இலங்கைக்கு அரசன் என்றும், அழகுள்ள
பல மனைவியர் இருந்தும், அவளிடம் தான் மனதைப் பறிகொடுத்ததாகவும், அவள் தன்னுடன் வந்தால்,
அனைவருக்கும் தலைவியாக ஆக்குவதாகவும், (9 சுலோகங்கள்) ஆசை காட்டுகிறான். அதனால் கோபம்
அடைந்த சீதை.பதினேழு சுலோகங்களில் தான் இராமனின் கற்புள்ள மனைவி என்றும், தன் கணவனின்
பெருமையைப் பற்றியும், இராவணனால் தன் கணவரை வெற்றி கொள்ள இயலாது என்றும், இந்திரனின்
மனைவி சசிதேவியைக் கடத்திச் சென்றாலும் ஒருவேளை அவனிடமிருந்து தப்பிவிடலாம், ஆனால்
இராமனிடமிருந்து அவன் தப்ப இயலாது என்றும் அறிவிக்கிறாள். இபாடி ஒரு அரக்கனிடம்
தனியாகச் சிக்கிகொண்டோமே என்று…
गात्र प्रकंपात् व्यथिता बभूव वात उद्धता सा कदली इव तन्वी || ३-४७-४९
காத்திர பிரகம்பாது வ்யதிதா பபூவ வாத உத்ததா கதலீ இவ தன்வீ || 3-47-49
…காற்றினால் வீழ்த்தப்பட்ட வாழைமரத்தைப் போல உடல் நடுங்கி சித்திரவதைக்கு உள்ளானாள் (சீதை).
– 3.47.49
…குபேரனின் மாற்றாந்தாய் மகனான தான் மிகுந்த பலவான் என்றும், மானிடனான இராமன் தனக்கு
ஒரு பொருட்டே இல்லை என்றும் இராவணன் தற்பெருமை பேசுவதாக நாற்பத்திஎட்டாம் சர்க்கத்தில் 19
சுலோகங்களில் விளக்குகிறார் வால்மீகி….
कथम् वैश्रवणम् देवम् सर्व देव नमस्कृतम् |
भ्रातरम् व्यपदिश्य त्वम् अशुभम् कर्तुम् इच्छसि || ३-४८-२१
கதம் வைஸ்’ரவணம் தேவம் சர்வ தேவ நமஸ்க்ருதம் |
ப்ராதரம் வ்யப்திஸ்’ய த்வம் அசுபம் கர்த்தும் இச்சஸி || 3-48-21
அதைக் கேட்ட சீதை, “எல்லா வானவர்களாலும் வணங்கப்படும் தேவனான வைஸ்ரவனை (குபேரனை)
உடன்பிறப்பு என்று அறிவித்துக்கொண்டே, நீ எப்படி நலமில்லாததைச் (தீய செயலை) செய்ய
விரும்புகிறாய்?” என்று கோபிக்கிறாள். – 3.48.21
…அதனால் சினமடைந்த இராவணன், தனது அரக்க உருவத்தைக் காட்டி, (12 குறட்பாக்களில்)
தற்பெருமை பேசுகிறான். அதன் பிறகு சீதையின் சொற்களால் மிகவும் கோபம் அடைந்து, தனது
பெரிய வடிவத்தை எடுக்கிறான். தனது பலத்தால் எதையும் அழிக்கும் ஆற்றல் தனக்கு இருக்கிறது
என்று மார் தட்டுகிறான். அந்தண வடிவை விட்டுவிட்டு, பத்து தலையுடனும், இருபது
கைகளுடனும் காட்சி அளிக்கிறான்…
जग्राह रावणः सीताम् बुधः खे रोहिणीम् इव || ३-४९-१६
ஜக்ராஹ ராவண: சீதாம் புத: க்கே ரோஹிணீம் இவ || 3-49-16
वामेन सीताम् पद्माक्षीम् मूर्धजेषु करेण सः |
ऊर्वोः तु दक्षिणेन एव परिजग्राह पाणिना || ३-४९-१७
வாமென சீதாம் ப்த்மாக்ஷீம் மூர்த்தஜெஷு கரேண ஸ: |
ஊர்வோ: து தக்ஷிணேன ஏவ பரிஜக்ராஹ பாணினா || 3-49-17
तम् दृष्ट्वा गिरि शृंग आभम् तीक्ष्ण दंष्ट्रम् महा भुजम् |
प्राद्रवन् मृत्यु संकाशम् भय आर्ता वन देवताः || ३-४९-१८
தம் த்ருஷ்ட்வா கிரி ஸ்ருங்க ஆபம் தீக்ஷ்ண தம்ஷ்ட்ரம் மஹா புஜம் |
ப்ராத்ரவன்னு ம்ருத்யு ஸங்காஸ’ம் பய ஆர்த்தா வன தேவதா: || 3-49-18
புதன் ரோகிணியைப் பிடித்தது போல, இராவணன் சீதையைப் பற்றினான். அவன் தாமரையைப் போன்ற
கண்களை உடைய சீதையின் கூந்தலை இடது கையாலும்,, வலது கையினால் தொடைகளின்
பின்புறத்தையும் பிடித்தான். நீண்ட கோரைப் பற்கள் உள்ளவனும், பெரிய புஜங்கள் உடையவனும்,
காலனைப் போன்றவனுமான அவனைப் பார்த்துப் பயந்து வனத்தின் தெய்வங்கள் விரைந்தோடின. –
(3.49.16-18)
…அப்படியே சீதையைத் தனது புஷ்பக விமானத்தில் இராவணன் கவர்ந்து சென்றான் என்கிறார் வால்மீகி…
சடாயு உயிர்நீத்த படலத்தில் கம்பநாட்டார் இதைப்பற்றி என்ன சொல்கிறார் என்பதைக் காதுறுவோம்:
ஊண் இலனாம் என உலர்ந்த மேனியன்
சேண் நெறி வந்தது ஓர் வருத்தச் செய்கையன்
பாணியின் உழந்து இடைப் படிக்கின்றான் என
வீணையின் இசைபட வேதம் பாடுவான். – 3-823
உணவே இல்லாதவன் போல மெலிந்த உடல் உடையவன்; நீண்ட தூரம் வந்ததால் துயர் அடைந்து,
தாளத்திற்கு ஏற்றவாறு பாடுவதைப்போல வீணையின் இசையைப்போன்ற குரலில் (சாம)வேதத்தைப் பாடினான்.
…இவ்வாறு தவசியின் வேடத்தைப் புனைந்த இராவணன் தூய்மையான மனமுடைய அருந்ததிக்கு இணையான
கற்புடைய சீதை இருந்த இடத்தை அடைந்து நாக்குழற, “இங்கு இருப்பது யார்?” என்று கேட்டான்.
தோகையும் அவ் வழி தோம் இல் சிந்தனைச்
சேகு அறு நோன்பினர் என்னும் சிந்தையால்
பாகு இயல் கிளவியாள் பவளக் கொம்பர் போன்று
ஏகுமின் ஈண்டு என எதிர் வந்து எய்தினான். – 3.827
குற்றமற்ற நினைவு உடையவர் ஆறு (விதமான) நோன்புகளைச் செய்பவர் (அந்தணர்) என்ற
நினைப்பால், (சர்க்கரைப்) பாகு போன்ற மொழியுடையவுளும், தோகை மயிலைப் போன்றவளும்,
பவளக்கொடி போல இருந்த (சீதை), இங்கு வாருங்கள் என்று (அழைக்கவும்), எதிரே வந்து நின்றான்.
…சீதையின் அழகில் மயங்கிய இராவணன், தன்னை மறக்கிறான். தான் பெற்ற நீண்ட ஆயுளும், இருபது
கண்களும் சீதையின் அழகைக் கண்டு களிக்கப் போதாது என்று மறுகுகிறான். மூன்று உலகத்தில்
இருக்கும் அனைவரும் இவளுக்கு தொண்டு செய்யும்படி செய்வேன். இவள் காலடியில் விழுந்து
கிடப்பேன், இவளைப் பற்றிச் சொன்ன என் தங்கை சூர்ப்பனகைக்கு என் அரசைத் தந்து விடுவேன் என்று
பகல் கனவு காண்கிறான். அந்தணன் வேடத்தில் வந்த அவனுக்கு பிரம்பினால் செய்த ஆசனத்தை
அளித்து உபசரிக்கிறாள் சீதை….
நடுங்கின மலைகளும் மரனும் நா அவிந்து
அடங்கின பறவையும் விளங்கும் அஞ்சின
படம் குறைந்து ஒதுங்கின பாம்பும் பாதகக்
கடுந்தொழில் அரக்கனைக் காணும் கண்ணினே. – 3.837
மற்றவர்களுக்குக் தீமை விளைவிக்கும் கொடிய செயல்களைச் செய்யும் அரக்கன் (இராவணனைக்) கண்ட
உடனே, மலைகளை கூட நடுங்கின. (காற்றில் இலைகளை அசைத்து ஒலி எழுப்பிக் கொண்டு
இருக்கும்) மரங்களும் பேச முடியாமல் அடங்கிப் போய்விட்டன. பரவைகளும், (காட்டில்
இருக்கும்) மிருகங்களும் பயந்து (அமைதியாகி விட்டன). படம் எடுத்து ஆடக்கூடிய
பாம்புகளும், (படத்தை) குறுக்கிக்கொண்டு ஒதுங்கி (ஒளிந்து) கொண்டன.
..இராவணன் சீதையிடம் அவளைப்பற்றிக் கேட்கிறான். சிற்றன்னையின் சொல்லை நிறைவேற்றுவதற்காகக்
கானகம் வந்திருக்கும் தனது கணவர், தம்பியுடன் தானும் வந்திருக்கிறேன் என்று பதில்
சொல்கிறாள் சீதை. அவன் எங்கிருந்து வந்திருக்கிறான் என்று வினவுகிறாள். அதிற்கு எட்டு
விருத்தப் பாக்களில் இராவணன் பதில் அளிப்பதாகச் சொல்கிறார் கம்பர். துறவி வேடம் பூண்ட
அரக்கர் தலைவன், தான் இராவணின் தலை நகரான இலங்கையில் நீண்ட காலம் இருந்து விட்டுத்
திரும்பியதாகக் கூறுகிறான். திருக்கயிலை மலையையே பெயர்த்து எடுத்தவன் இராவணன்,
படைக்கும் கடவுளான பிரம்மனின் குளத்தில் தோன்றியவன், மிகவும் அறிவாளி, பலசாலி,
சிவபெருமான் தந்த வாளைப் பெற்றவன், அவன் ஒரு மங்கையைத் தேடிக் கொண்டிருக்கிறான் என்று
சீதையிடம் தன்னைப்பற்றியே பெருமையாகச் சொல்லிக் கொள்கிறான். அதைக் கெட்ட சீதை…
வேதமும் வேதியர் அருளும் வெஹ்கலா
சேதன மன்னுயிர் தின்னும் தீவினைப்
பாதக அரக்கர்தம் பதியின் வைகுதற்கு
ஏகு என் உடலமும் மிகை என்று எண்ணுவீர். — 3.851
“என் உடம்புகூட துறக்கப்பட வேண்டிய ஒன்று என்று நினைக்க வேண்டிய (துறவியான) நீங்கள்,
வேதங்களையும், வேதியர் (வேதத்தைக் தந்த சிவபெருமானின்) அருளையும் வேண்டித் (தவம்)
புரியாமல், ஆறறிவு உடைய மனிதர்களைத் உண்ணகூடிய தீய செயல்களைச் செய்கின்ற பாவிகளான
அரக்கர்களின் நகரத்தில் தங்குவதற்காக எதற்காகச் சென்றீர்கள்?” என்று கேட்கிறாள்.
…நீங்கள் மிகவும் தவறான செயலைச் செய்து விட்டர்கள் என்று அவனைக் கடிந்து கொள்கிறாள். சீதை
தன்மீது சந்தேகம் கொள்கிறாள் என்று இராவணன் அறிந்து கொள்கிறான். எனவே, மனிதர்களைப்
புசிப்பது அரக்கர்களின் இயல்பு, நாம் என்ன செய்ய முடியும் என்று அதற்குச் சமாதானம்
சொல்கிறான். அதை சீதை ஒப்புக் கொள்ளாமல் அவனுடன் வாதம் செய்கிறாள். இருவரும் தங்கள் பக்கமே
சரி என்று விவாதம் செய்கிறார்கள்.
அரண் தரு திரள் தோள் சால வள எனின் ஆற்றல் உண்டோ
கரண்ட நீர் இலங்கை வேந்தைச் சிறைவைத்த கழற்கால் வீரன்
திரண்ட தோல் வனத்தை எல்லாம் சிறியது ஓர் பருவம்தன்னில்
இரண்டு தோள் ஒருவன் அன்றோ மழுவினால் எறிந்தான் என்றாள். — 3.863
மதில்கள் போன்று பாதுகாப்புத் தருகின்ற சிறந்த தோள்கள் பல இருந்தால் மட்டும் வலிமை
உண்டாகி விடுமா? நீர்க் காக்கைகள் மிகுந்த இலங்கையின் அரசனை (இராவணனை) வீரக் கழல்கள்
(சிலம்புகள்) அணிந்த வீரன் (கார்த்த வீர்யார்ச்சுனன்) சிறைப் பிடித்தான். (அப்படிப்பட்ட கார்த்த
வீர்யார்ச்சுனனின்) காட்டு மரங்கள் போன்ற (ஆயிரம்) பலம் பொருந்திய தோள்களை, இரண்டே தோள்கள்
கொண்ட ஒருவன் (பரசுராமன்)தான் கோடாரியால் வெட்டி எறிந்தான் என்று கேட்டாள்
…அதனால் கடும் கோபம் கொண்ட இராவணன், தனது துறவி வேடத்தை நீக்கிவிட்டு, தனது இயல்பான
அரக்க உடலை எடுத்துக் கொள்கிறான். சீதை அதைக்கண்டு பயப்படுகிறாள் “என்னை இவ்வாறு தூற்றிய
எவரையும் நான் கொன்று தின்று விடுவேன். நீ பெண் என்பதால் உன்னை விட்டு விடுகிறேன். நீ
என்னுடன் வந்துவிடு, உன்னை மிகவும் சிறப்பாக வைத்துக் கொள்கிறேன்” என்று கூறுகிறான்…
புவியிடை ஒழுக்கம் நோக்காய் பொங்குஎரி புனிதர் ஈயும்
அவியை நாய் வேட்டதென்ன என் சொனாய் அரக்க என்னா. — 3.869
“இந்த உலகத்தில் ஒழுக்கமாக இருப்பதை விரும்ப மாட்டாய்; பெரிதாக எரிகின்ற (யாக
அக்னியில்) தூயவர்கள் இடப்போகும் ஆகுதியை நாய் விரும்புவதைபோல எத்தகைய (இழிவான
சொற்களைச்) சொல்கிறாய், அரக்கா?” என்று கேட்டாள்.
… என் கணவர் இராமனின் கூரிய அம்புகள் உன் மீது பாய்வதற்கு முன் இங்கிருந்து ஓடிப்போய் உன்
இலங்கையில் ஒளிந்துகொள் என்று சிறிதும் அஞ்சாமல் சீறி எழுகிறாள் சீதை. அதைப்
பொருட்படுத்தாமல், இராமனின் அம்பு என்னை ஒன்றும் செய்யாது. என்னை ஏற்றுக்கொள் என்று
தரையில் விழுந்து அவளை வணங்கிக் கேட்கிறான் இராவணன். தன்னை இந்த இக்கட்டான் நிலைமையில்
இருந்து காக்குமாறு இராமனையும், இலக்குவனையும் சீதை, கூவி அழைக்கிறாள்…
ஆண்டு ஆயிடை தீயவன் ஆயிழையைத்
தீண்டான் அயன் முன் உரை சிந்தைசெயா
தூண்தான் எனல் ஆம் உயர்தோள் வலியால்
கீண்டான் நிலம் யோசனை கீழ்ப் புடையே. — 3.874
முன்காலத்தில் பிரம்மா கொடுத்த (சாபச்) சொற்களை நினைவில் கொண்டு, அப்பொழுது தீயவனான
(இராவணன்), நூலைப்போன்ற இடையுடைய (சீதையை)த் தொட வில்லை. தூண்கள் போன்ற உயர்ந்த
தோள்களின் வலிமையால், (சீதையையும் சேர்த்து ஒரு) யோசனை அளவுக்கு நிலத்தைத் தோண்டி எடுத்தான்.
அதனால் மயக்கம் அடைந்த சீதையை, தான் தோண்டி எடுத்த நிலத்துடன் புஷ்பக விமானத்தில்
எடுத்துச் சென்றான் என்று எடுத்துரைக்கிறார் கம்பர்.
ஒப்பீடு
துவக்கம் ஒரே மாதிரி இருந்தாலும், வால்மீகியும், கம்பனும் இந்நிகழ்ச்சியைக்
கூறியிருப்பதில் நிறைய மாற்றமிருக்கிறது. எனவே, மாற்றங்கள் என்ன என்று பார்ப்போம்.
1.மிகப் பெரிய மாற்றம், இராவணன் சீதையைத் தூக்கிச் செல்லும் முறைதான். சீதையின் தலை
மயிரை ஒரு கையாலும், தொடைகளின் பின்புறத்தை இன்னொரு கையாலும் பிடித்துத் தூக்கிச்
சென்றான் என்று வால்மீகி எழுதி உள்ளார். ஆனால், ஒரு யோசனை நிலத்தை அகழ்ந்து, சீதையைக்
கவர்ந்தான் என்று கம்பர் குறிப்பிடுகிறார். “அயன் முன் உரை சிந்தைசெயா தீயவன் ஆயிழையைத்
தீண்டான்”, அதாவது, பிரம்மா முன்நாளில் அளித்த சாபத்தைக் கருதியே, சீதையைத் தீயவனாகிய
இராவணன் தொடவில்லை என்று எழுதி இருக்கிறார்.
கற்பில் சிறந்த சீதையை இராவணன் தொட்டுத் தூக்கிச் செல்வதைத் தமிழ் மக்கள் ஒப்புக்கொள்ள
மாட்டார்கள், எனவே, மரபு காரணமாக கம்பர் இராவணனுக்கு ஒரு சாபம் இருந்தது என்று கம்பர்
புனைந்து விட்டார் என்று எண்ணிவிடக் கூடாது. அந்த சாபத்திற்கு ஆதாரத்தை அவர் வால்மீகியின்
வடமொழி மூலத்திலிருந்துதான் பெற்றிருக்கிறார். யுத்த காண்டத்தில், பதிமூன்றாம்
சர்க்கத்தில், பத்திலிருந்து பதினைந்தாம் சுலோகங்களில் அதை இராவணனின் வாய்மொழியாகவே,
வால்மீகி எழுதிருக்கிறார். மகாபார்ச்வனுக்கு ஒரு இரகசியத்தைச் சொல்கிறேன் என்று இராவணன்
தனது சாபத்தைப் பற்றிக் கூறுகிறான். புஞ்சிதஸ்தலை என்ற தேவகன்னிகையைத் தான் பலாத்காரம்
செய்ததாகவும், அதை பிரம்மா அறிந்து மிகவும் கோபம் கொண்டு சபித்ததாகவும் சொல்கிறான்.
अद्यप्रभृति यामन्याम् बलान्नारीम् गमिष्यसि |
तदा ते शतधा मुर्धा फलिष्यति न संशयः || ६-१३-१४
அத்யப்ரபூதி யாமன்யாம் பலான்நாரீம் கமிஷ்யஸி |
ததா தே சததா முர்த்தா பலிஷ்யதி ந ஸம்சய: || 3-49-18
இன்றிலிருந்து எந்த பிற பெண்ணிடம் பலவந்தமாகச் செல்கிறாயோ (பலாத்காரம் செய்கிறாயோ),
அப்பொழுது உன் தலை நூறாக வெடிக்கும், சந்தேகமில்லை. — 6.13.14
இதற்குப் பயந்தே நான் சீதையைக் கட்டாயப்படுத்தித் தன் விருப்பத்திற்கு உள்ளாக்கவில்லை என்று
இராவணன் தெரிவிக்கிறான். இந்த ஆதாரத்தையே, கம்பர் குறிப்பிட்டு, சீதையை, அத்தீயவன்
தீண்டவில்லை என்று தமிழ் மரபுக்கு ஏற்ப மாற்றி அமைத்திருக்கிறார். இதிலிருந்து கம்பருக்கு
வால்மீகி இராமாயணத்தில் இருந்த புலமையும், வடமொழித் திறனும் புலனாகிறது.
இருவருமே சீதையை கற்பில் சிறந்தவளாகத்தான் போற்றி இருக்கிறார்கள். இராவணன் சீதையை
பலாத்காரமாகத் தூக்கித்தான் சென்றான், ஆனால் பலவந்தம் செய்யவில்லை என்பதை இராவணனின்
மூலமாகவே வால்மீகி தெள்ளக் தெளிவாக்கி உள்ளார்.
அந்தணத் துறவியாக வேடம் அணிந்து வந்த இராவணனை சீதை வரவேற்று உபசரித்தாள் அரக்கரின்
அரசன் சீதையை அங்கம் அங்கமாக, அவளிடமே வர்ணிக்கிறான் என்று வால்மிகி கூறியிருந்தாலும்,
ஒரு பெண்ணை, அவள் முன்னே அப்படி வர்ணிப்பது தமிழ் மரபாகாது என்று கம்பர் தவிர்த்து
விடுகிறார்.
அதற்குப் பதிலாக, சீதையின் காலடியிலேயே விழுந்து கிடப்பேன், அவளைப் பற்றிச் சொன்ன தனது
தங்கை சூர்ப்பனகைக்குத் தனது அரசையே பரிசளிப்பேன் என்று மனதிற்குள் மருகியதாக
எழுதிவிடுகிறார்.
அரக்கன் அப்படித் தன்னை வர்ணித்தாலும், தன்னைச் சபித்துவிட்டால் என்ன செய்வது என்றே சீதை
அவனுக்குப் பதில் சொல்கிறாள் என்று வால்மீகி சொல்கிறார்.
கம்பர் சொல்லாத ஒரு செய்தியை வால்மீகி சீதையின் வாயிலாகத் தெரிவிக்கிறார். காட்டு
மிருகங்களின் இறைச்சியை (மாமிசத்தை) என் கணவர் நிறையக் கொண்டு வருவார், அந்த உணவு
கிடைக்கும் என்று தெளிவு படுத்திய பின்னரே, கள்ளவேடம் பூண்ட துறவியின் குலம், கோத்திரம்
பற்றி வினவுவதாக எழுதி இருக்கிறார். இதன்மூலம், இராமாயண காலத்தில் அனைவரும் இறைச்சி
உண்டார்கள் என்று புலனாகிறது.
ஆயினும், கம்பனுக்கு ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்னரே, திருவள்ளுவர் புலால்
மறுத்தல், கள் உண்ணாமை போன்ற இரண்டு பண்புகளையும் வலியுறுத்தி இருக்கிறார். எனவே,
மறையவர்கள், துறவிகள் மாமிசம் உண்ணுவது என்பது திருவள்ளுவர் காலத்திலேயே தமிழ் நாட்டில்
இருந்திருக்க இயலாது. அதனாலேயே கம்பர் இவ்வாறு எழுதாமல் தவிர்த்திருக்கிறார்.
மேலும் புறநானூற்றில் எவர் வீட்டில் எப்படிப்பட்ட உணவு கிடைக்கும் என்பது பற்றிய பாட்டில்,
அந்தணர் வீட்டில், அரிசிச் சோறும், கீரையும் கிட்டும் என்று நான் படித்திருக்கிறேன். ஆகவே,
இடத்திற்குத் தகுந்தவாறு உணவும் மாறுபட்டது. இன்றும் காஷ்மீர் பண்டிதர்கள் ஆட்டிறைச்சியும்,
வங்காள பிராமணர்கள் மீனும் உண்ணுகிறார்கள். ஆனால் தென்னிந்தியா, குஜராத், ராஜஸ்தானில்
புலால் (இறைச்சி) அவர்களால் தவிர்க்கப்படுகிறது.
எனவே, வால்மீகியை ஆதாரம் காட்டி தவறாக யாரையும் பழிக்கக் கூடாது என்பதற்காகவே, சீதை
வாய்மொழியான இந்த சுலோகம் இக்கட்டுரையில் சேர்க்கப்பட்டது. எவர் மனத்தையும்
புண்படுத்தவதற்காக அல்ல.
யார் என்று சீதை கேட்டதும், தன்னை இலங்கை மன்னன் என்றே அறிமுகம் செய்துகொள்வதாக வால்மீகி
சொன்னாலும், கம்பர் அதை வேறுவிதமாகச் சொல்கிறார்.
இலங்கை மன்னனின் அரசவையில் சுகமாகக் காலம் கழித்து விட்டுத் திரும்பி வருவதாக அவன்
சொல்வதாகக் கூறுகிறார். அதோடு மட்டுமல்லாமல், சீதையின் அறிவையும், வாதத் திறமையையும்
கம்பர் வெளிப்படுத்துகிறார். தவசி வேடத்தில் இருந்த இராவணன், இலங்கை அரசனின் புகழை –
அதாவது, தந்து புகழையே — பாடியதைக் கேட்டதும், “ஆறு நோன்புகளை மேற்
கொள்ளவேண்டியவரும், யாக்கையின் (உடலின்) நிலையாமையை அறிந்த நீர் எப்படி மனிதரைத்
தின்னும் அரக்கனை அண்டி இருந்தீர்?” என்று கேட்கிறாள். வேதத்தை ஓதுதல், ஓதுவித்தல்,
வேள்விகளைச் செய்தல், மற்றவர்களுக்குச் செய்வித்தல், தானம் வாங்குதல், தனது அன்றாடத்
தேவைக்கு மீந்ததை மற்றவர்க்குத் தானமாக அளித்தல் என்ற ஆறு நோன்புகளையும் அந்தணர்கள்
செய்யவேண்டும் என்பதையும் நன்கு அறிந்திருக்கிறாள்; துறவிகளும், அந்தணர்களும் மற்றவர்களை
அண்டியே இருக்கவேண்டும் என்றாலும், நல்லவர் அல்லாதோரை அண்டி இருக்கக் கூடாது என்ற
அறிவுரையையும், ஒரு துறவிக்குச் சுட்டிக்காட்டத் தயங்காதவளாகவே சீதை கம்பரால்
சித்தரிக்கப்பட்டு இருக்கிறாள்.
இராவணன் அரக்க வடிவத்தை எடுத்த பின்னும் சீதை கலங்கவில்லை, அவனை எதிர்த்து
வாதிட்டிருக்கிறாள் என்றுதான் இரு கவிகளும் எழுதி உள்ளார்கள். வாதிட்ட விதம்தான் மாறி
உள்ளது.
எல்லா தேவர்களாலும் வணங்கப்படும் குபேரனின் சகோதரனான நீ இந்த இழிவான எண்ணத்தை ஏன்
மேற்கொண்டாய் என்று கடிகிறாள் என்று வால்மீகி சொல்கிறார்.
ஆனால், உடல் வலிமை பயனற்றது, உன்னை ஆயிரம் கை கொன்ற கார்த்தவீர்யாஜுனன் சிறைப்
பிடித்தான், அவனை இரண்டே தோள் கொன்ற பரசுராமன் வெட்டித் தள்ளினார் என்று இராவணனின்
வரலாற்றையும், கார்த்தவீர்யாஜுனனின் வரலாற்றையும் சொல்லி அவனை எள்ளி நகையாடுகிறாள்.
சீதையின் சீரிய கல்வி அறிவை இதன்மூலம் நமக்குக் கம்பர் புலப்படுத்துகிறார். அதுமட்டுமல்ல,
வேள்வியில் (யாகத்தில்) இடப்படும் பலியை நாய் விரும்புவது போல, என்னை அடைய
விரும்புவதாகச் சொல்கிறாயே என்று அவனை நாயுடன் துணிச்சலாக ஒப்பிடும் வீராங்கனையாகத்
திகழ்கிறாள் சீதை என்று உச்சாணிக் கொம்புக்கே அவளை ஏற்றி விடுகிறார் கம்பர். அவளது
வீர்த்திற்கு அடி பணிந்து என்னை ஏற்றுக்கொள் என்று அவள் காலிலேயே இராவணன் விழுகிறான்
என்று சீதியின் கற்புச் செருக்கை ஏத்தி இருக்கிறார் கம்பநாட்டார்.
இரு கவிச்சக்கரவர்த்திகளுமே, சீதையை, ஆணுக்கு அடங்கிப் பயந்து போகும், அடிமையாக
வாழ்ந்திருக்கும் பெண்ணாகக் காட்டவில்லை. கற்புக்கே சிகரமாகவும், கற்பைக் காப்பாற்றிக் கொள்ள
எத்தகைய பலமுள்ள அரக்கனையும் எதிர்த்து நிற்கும் வீரப் பெண்ணரசியாகவும்தான் காட்டி உள்ளார்கள்.
சீதையின் அந்தத் துணிச்சலை, இராவணன் அழிவுக்குப் பின்னர், இராமனுக்கும் சீதைக்கும் இடையில்
நடக்கும் உரையாடலை, அடுத்த ஒப்பீட்டில் காண்போம்.

Professor k. kumar

unread,
Nov 27, 2014, 12:17:22 PM11/27/14
to brail...@googlegroups.com
தேவாரத் திருமுறைகள்

தேவாரத் திருமுறைகள்
சைவத் திருமுறைகள் பன்னிரண்டில் திருஞானசம்பந்தர்,
திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் பாடிய பாடல்கள் முதல்
ஏழு திருமுறைகளாகத் தேவாரம் என்ற பெயரில் தொகுக்கப்
பெற்றன. மூவர் பாடல்களைத் தேவாரம் என வழங்கும் வழக்கம்
நம்பியாண்டார் நம்பி காலத்திற்கு முன்னமேயே இருந்திருக்கிறது.
தேவாரம் என்ற சொல்லுக்குப் பல்வேறான பொருள்களை
அறிஞர்கள் தருவர். தே + ஆரம் (தே = தெய்வம்,
ஆரம் = மாலை) எனப்பிரித்து இறைவனுக்கு மாலை ஆகியது
எனச் சிலர் பொருள் கூறுவர். தே + வாரம் (வாரம் = அன்பு
எனப் பிரித்து இறைவனிடத்தில் அன்பை விளைவிப்பது எனவும்
பொருள் கூறுவர். தமிழகத்தில் கிடைக்கப் பெற்றுள்ள 11ஆம்
நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் தேவாரம் என்ற சொல் இடம்
பெற்றுள்ளது. கல்வெட்டு்களில் அச்சொல் வழிபாடு என்ற
பொருளில் இடம் பெற்றுள்ளது. எனவே தேவாரம் என்ற
சொல்லுக்கு இறைவன் முன் பாடப்பெறுகின்ற பாடல்கள் என்ற
அடிப்படையில் பல்வேறு நிலையில் பொருள் கூறப்படுகிறது
எனலாம்.
இத்தகைய தேவாரப் பாடல்களில் முதல் மூன்று
திருமுறைகளாகத் திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல்கள்
தொகுக்கப் பெற்றன. திருநாவுக்கரசர் பாடிய தேவாரப் பாடல்கள்
அடுத்த மூன்று திருமுறைகளாகத் தொகுக்கப் பெற்றன. அடுத்து
ஏழாம் திருமுறையாகச் சுந்தரர் பாடிய தேவாரப் பாடல்கள்
தொகுக்கப் பெற்றன. மூவராலும் தேவாரப் பாடல்கள்
ஆயிரக்கணக்கில் பாடப் பெற்றன. எனவேதான் திருஞானசம்பந்தர்
பாடியவை பதினாறு ஆயிரம் எனவும், திருநாவுக்கரசர் பாடியவை
நாற்பத்தொன்பதாயிரம் எனவும், சுந்தரர் பாடியவை முப்பத்து
எட்டாயிரம் எனவும் தேவாரப் பதிகங்கள் திருமுறை கண்ட
புராணத்தில் குறிக்கப் பெறுகின்றன. ஆனால் அப்பதிகங்கள்
அனைத்தும் கிடைக்கப் பெறவில்லை. கிடைத்த திருஞானசம்பந்தர்
பதிகங்கள் - 384, திருநாவுக்கரசர் பதிகங்கள் - 310, சுந்தரர்
பதிகங்கள் - 100 என்பனவாகும். ஒவ்வொரு பதிகத்திலும் பத்து
அல்லது பதினோரு பாடல்கள் இடம் பெற்றுள்ளன. மூவர் பாடிய
பிற பாடல்கள் தமிழ் மக்களின் விழிப்பின்மையால் செல்லரித்துப்
போய்விட்டன என்பது வருத்தத்திற்கு உரியது. பண்டைக்காலத்தில்
பாடல்கள் பனைஓலை ஏடுகளால் எழுதப் பெற்றமையால்
கரையானுக்கு எளிதாக உணவாயிற்று. கி.பி 11ஆம் நூற்றாண்டில்
வாழ்ந்த சோழர் படைத்தலைவன் மணவிற்கூத்தன்
காளிங்கராயன் என்பவன் தேவாரப் பதிகங்களைச் செப்பேடுகளில்
எழுதுவித்தான். இச்செய்தி கல்வெட்டுகளில் காணப்பெறுகிறது.
நம்பியாண்டார் நம்பியின் காலத்திற்குப் பின் தேவாரத்
திருமுறைகள் போற்றப் பெற்றுச் செப்பேட்டிலும் கல்லிலும்
எழுதிப் பாதுகாக்கப் பெற்றன. தேவாரப் பாடல்கள் இறைவனுக்குப்
பக்கத்தில் வைத்துப் பூசனையும் செய்யப்பெற்றன. சோழமன்னர்கள்
காலத்தில் தேவாரப் பாடல்கள் கோயிலில் பண்ணோடு பாடுவதற்கு
நிவந்தங்களும் (அறக்கொடைகள்) அளிக்கப் பெற்றன.
பண்ணோடும் இசையோடும் திருக்கோயில்களில் நாள்தோறும்
பாடப்பெற்று, பாடுவோருக்கு ஊதியமும் வழங்கப் பெற்றன.
இத்தகைய செய்திகள் சோழ மன்னர்கள் காலக் கல்வெட்டுகளால்
தெரிய வருகின்றன. இன்றைக்கும் தேவாரத் திருமுறைகள் சைவத்
திருக்கோயில்களிலும் சைவசமயத்தார் இல்லங்களிலும் பண்ணோடு
இசைக்கப் பெற்று வருகின்றன. தேவாரத் திருமுறைகள்
பண்முறை, திருக்கோயில்கள் அமைந்துள்ள திருத்தலங்களின்
வரிசை முறை என்னும் இருவகையில் அச்சேற்றிப் பதிப்பிக்கப்
பெற்று வருகின்றன.
3.1.1 திருஞானசம்பந்தர் அருளியவை
தேவாரம் பாடிய ஆசிரியர்களில் திருஞானசம்பந்தரும்
திருநாவுக்கரசரும் கி.பி. 7ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில்
ஒரே காலக் கட்டத்தில் வாழ்ந்தவர்கள். இவ்விருவர்
வரலாற்றையும் சேக்கிழார் தன்னுடைய பெரியபுராணத்தில்
விரிவாகப் பாடியருளியுள்ளார். பெரியபுராணத்தில்
திருஞானசம்பந்தர் வரலாறே அதிகமான பாடல்களைப் பெற்றது.
எனவேதான் பெரியபுராணத்தைப் "பிள்ளைபாதி புராணம் பாதி"
என்று கூறும் வழக்கம் ஏற்பட்டது. இவர்களுடைய வரலாற்றைப்
பெரியபுராணம் கொண்டு விரிவாக அறியலாம். வரலாற்றில் சில
குறிப்புகள் மட்டுமே இப்பாடத்தில் தரப்பெற்றுள்ளன.
திருஞானசம்பந்தர் சீர்காழியில் அந்தணர் குலத்தில்
பிறந்தவர். தந்தை பெயர் சிவபாத இருதயர், தாயார் பகவதியார்.
அவர் குழந்தைப் பருவத்தில் பிள்ளையார் என அழைக்கப்
பெற்றார். பிள்ளையார் தந்தையோடு சீர்காழித் திருக்கோயிலில்
உள்ள திருக்குளத்திற்கு நீராடச் செல்கின்றார். தந்தை குளத்தில்
விதிப்படி மூழ்கிச் சிறிதுநேரம் மந்திரங்களை ஓதிக் கொண்டிருந்த
பொழுது தந்தையைக் காணாது குளத்தின் கரையில் இருந்த
பிள்ளையார் 'அப்பா' என்று ஓலமிட்டு அழுதார். அவரின்
அழுகுரல் கேட்ட சிவபெருமான் உமாதேவியின் மூலம் அவருக்கு
ஞானப்பால் ஊட்டினார். நீராடிவிட்டுத் திரும்பி வந்த தந்தை பால்
உண்ட மகனைக் கண்டார். மகனிடம் 'பால் ஊட்டியது யார்?'
என்று கேட்டார். தந்தையின் கேள்விக்குச் சீர்காழியில்
எழுந்தருளியுள்ள தோணியப்பர்தான் பாலூட்டினார் என்ற
பொருள் அமைந்த தோடுடைய செவியன் என்று தொடங்கும்
தேவாரப் பதிகத்தைப் பாடி அருளினார். இவ்வாறு ஞானப்பால்
உண்ட நிகழ்ச்சியால் ஞானசம்பந்தர் ஆனார். அந்தநாள் முதல்
திருஞானசம்பந்தர் இறைவனையே போற்றி வணங்கிப் பாடுகின்ற
பணியை மேற்கொண்டார். திருத்தலங்கள் (ஊர்கள்) தோறும்
யாத்திரை (பயணம்) செய்து வழிபட்டார். வழிபடும்
பொழுதெல்லாம் பாடல்கள் பாடினார். சில திருத்தலங்களில்
தெய்வீக அருளிச் செயல்பாடுகளையும் செய்வித்தார். அவற்றில்
குறிப்பிடத்தக்கவை :

திருக்கோலக்காவில் பொற்றாளம் (பொன்தாளம்) பெற்றது.

திருநனிபள்ளியில் பாலை (மணல்) நிலத்தை நெய்தல் நிலமாக
மாற்றியது.

நெல்வாயில் அறத்துறையில் முத்துச்சிவிகை, குடை பெற்றது.

திருப்பாச்சிலாச்சிரமத்தில் சிற்றரசன் கொல்லிமழவன்
மகளுக்கு ஏற்பட்டிருந்த முயலக நோயை நீ்க்கியது.

திருவாவடுதுறையில் உலவாக்கிழி (பணமுடிப்பு) பெற்றுத்
தந்தைக்குக் கொடுத்தது.

திருமருகலில் பாம்புகடித்து நஞ்சு (விடம்) தீண்டப்பெற்ற
வணிகனின் விடத்தைப் போக்கியது.

திருவீழிமிழலையில் பொன்காசு பெற்றது.

திருமறைக் காட்டில் திருக்கோயில் கதவைத் திறந்தது.

மதுரையில் சமணரை வாதில் வென்றது.

பாண்டியனின் வெப்புநோயை நீக்கியது.

திருத்தெளிச்சேரியில் புத்தரை வாதில் வென்றது.

சென்னை மயிலாப்பூரில் எலும்பைப் பெண்ணாக்கியது.

திருநல்லூரில் திருமண நாளில் பெருஞ்சோதி (நெருப்பில்)யில்
கலந்தது.
இவ்வாறு மண்ணுலகில் 16 ஆண்டுக்காலம் வாழ்ந்து
தேவாரப் பதிகங்கள் தந்து திருவருட் செயல்களைச் செய்து
திருஞானசம்பந்தர் பெருமை பெற்றார்.
திருஞானசம்பந்தர் பாடி அருளிக் கிடைத்த தேவாரப்
பதிகங்கள் பண் முறையில் மூன்று திருமுறைகளாகத் தொகுக்கப்
பெற்றுள்ளன. முதல் திருமுறையில் நட்டபாடை, தக்கராகம்,
பழந்தக்கராகம், தக்கேசி, குறிஞ்சி, வியாழக்குறிஞ்சி, மேகராகக்
குறிஞ்சி என்னும் 7 பண்களுக்குரிய 135 திருப்பதிகங்களும்,
யாழ்முரி என்ற திருப்பதிகமும் சேர்த்து 136 திருப்பதிகங்கள்
தொகுக்கப் பெற்றன.
இரண்டாம் திருமுறையில் இந்தளம், சீகாமரம், காந்தாரம்,
பியந்தைக் காந்தாரம், நட்டராகம், செவ்வழி என்னும் ஆறு
பண்களில் அடங்கிய 122 திருப்பதிகங்கள் தொகுக்கப் பெற்றுள்ளன.
மூன்றாம் திருமுறையில் காந்தார பஞ்சமம், கொல்லி,
கொல்லிக் கவ்வாணம், கௌசிகம், பஞ்சமம், சாதாரி,
பழம்பஞ்சுரம், புறநீர்மை, அந்தாளிக்குறிஞ்சி என்னும் 9
பண்களுக்குரிய 125 பதிகங்கள் தொகுக்கப் பெற்றுள்ளன.
திருஞான சம்பந்தரின் தேவாரப் பதிகத்தில் பதிகந்தோறும்
11ஆம் பாடல் திருக்கடைக்காப்பு என்று கூறப் பெறும். அந்தப்
பாடல் அந்தப் பதிகத்தைப் பாடுவதால் வரும் பயனைக்
குறிப்பதாகும். அதுபோல ஒவ்வொரு பதிகத்திலும் எட்டாம்
பாடல் இராவணன் கயிலைமலையைத் தூக்க முயன்று
துன்பப்பட்டதைக் குறிக்கும். ஒன்பதாம் பாடல் பிரமனும்,
திருமாலும் அடி, முடி தேடிக் காணமுடியாத சிவனின் பெருமை
கூறும். பத்தாம் பாடல் சைவ, பௌத்த துறவிகளின் போலி
வாழ்க்கையை எள்ளி நகையாடும். பாடல்கள் தோறும் அவ்வத்
திருத்தலங்களின் இயற்கை வனப்பும், அத்திருத்தல இறைவனின்
தலபுராணச் செய்திகளும் குறிக்கப் பெற்றிருக்கும். சிவபெருமானின்
திருவிளையாடல்கள், சிவனடியார்களின் வாழ்வியல் சிறப்புகள்
ஆகியவையும் இடம் பெற்றிருக்கும். இளமைப் பருவத்தாராகிய
திருஞானசம்பந்தர் தனக்குக் கிடைத்த அருள் ஞானத்தால்
தேவாரப் பதிகங்களைப் பாடியதால் அப்பதிகங்களில் சைவத்
தத்துவக் கருத்துகளும் இடம் பெற்றுள்ளன. இப்பொருள்களைத்
தனித்தனியே ஆராய்ந்தால் திருஞான சம்பந்தரின் தேவாரத்
திருப்பதிகங்கள் சைவ வரலாற்றுத் தத்துவநூல் என அறியலாம்.
3.1.2 திருநாவுக்கரசர் அருளியவை
தேவாரம் பாடிய ஆசிரியர்களில் 4, 5, 6 திருமுறைகளைத்
தந்தவர் அப்பர் என்கிற திருநாவுக்கரசர். இவருடைய
வரலாற்றையும் பெரியபுராணம் சிறப்பாக எடுத்துக் கூறுகிறது.
இவர் பிறந்த ஊர் திருமுனைப்பாடி நாட்டில் உள்ள திருவாமூர்.
தந்தை புகழனார், தாய் மாதினியார். இயற்பெயர் மருள்நீக்கியார்.
இளம்வயதில் தாய் தந்தையரை இழந்ததால் தம் சகோதரி
திலகவதியாரால் வளர்க்கப் பெற்றார். சூழ்நிலையால் சைவசமயத்தை
விட்டுச் சமண சமயம் சேர்ந்தார். தருமசேனர் என்ற பெயரோடு
அச்சமயத்தில் குருவாக வாழ்ந்தார். இவரை மீண்டும் சைவத்திற்கு
மாற்றுவதற்காகச் சிவபெருமான் அருளால் இவருக்குத் தீராத
வயிற்றுவலி ஏற்பட்டது. சமணர்களின் மருந்துகளாலும்
மந்திரங்களாலும் தீராத வயிற்று வலியைத் தீர்த்துக் கொள்ளத்
தமக்கையாரைத் தேடி வந்தார். திலகவதியாரின் சிவத்தவத்தால்
வயிற்றுவலி தீர்ந்தது. சமணத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாறினார்.
திருவதிகைவீரட்டானத்து இறைவன் மீது முதன்முதலில் பாடல்கள்
பாடத் தொடங்கினார். சமணர்கள் மற்றும் பல்லவனின் சூழ்ச்சிகளை
வென்றார். திருஞானசம்பந்தரைப் போல இவரும் திருத்தல
யாத்திரைகள் செய்து திருத்தலங்கள் தோறும் இறைவனைப் போற்றிப்
பதிகங்கள் பாடினார். இவரும் பல அற்புதச் செயல்களைச் செய்தார்.
அவற்றில் குறிப்பிடத்தக்கன :

சுண்ணாம்பு நீற்றறையின் துன்பத்தை நீக்கிக் கொள்ளுதல்.

கொல்ல ஏவப்பட்ட யானையை அடக்கியது.

கட்டப்பெற்ற கல்லையே தெப்பமாக மாற்றிக் கடலில் மிதந்து
உயிர்பெற்றது.

திருநல்லூரில் இறைவனின் திருவடியைச் சூடிக்கொண்டது.

பாம்பு தீண்டப்பெற்ற அப்பூதியின் மகனின் விடத்தை
நீக்கியது.

திருவீழிமிழலையில் படிக்காசு பெற்றது.

திருமறைக்காட்டில் திருக்கோயில் கதவைத் திறக்கச் செய்தது.

பழையாறையில் உண்ணாநோன்பு இருந்து கடவுட்காட்சி
பெற்றது.

இறுதியில் திருப்புகலூரில் இறைவனோடு இரண்டறக் கலந்தது.
இவ்வாறு பல அற்புதச் செயல்களைச் செய்து தேவாரத்
திருப்பதிகங்களைப் பாடி எண்பத்தொரு வயதில் திருவருளோடு
இரண்டறக்கலந்தார்.
திருநாவுக்கரசர் பாடிய தேவாரத் திருமுறைகள் மூன்று
திருமுறைகளாக வகுக்கப் பெற்றன. இவர் பாடிய திருப்பதிகங்களில்
113 பதிகங்கள் பண் முறையில் நான்காம் திருமுறையாகத்
தொகுக்கப் பெற்றன. திருக்குறுந்தொகைப் பதிகங்கள் 100-ம்
ஐந்தாம் திருமுறையாகத் தொகுக்கப் பெற்றன. திருத்தாண்டகப்
பதிகங்கள் 99-ம் ஆறாம் திருமுறையாகத் தொகுக்கப் பெற்றன.
திருநாவுக்கரசர் பாடிய திருப்பாடல்கள் சைவசித்தாந்தக்
கருத்துகளைப் பின்னால் சாத்திரங்களாகத் தொகுப்பதற்குப்
பெரிதும் உதவின. இறைத்தொண்டு என்பதை அவரின் பதிகங்கள்
வகைப்படுத்திக் காட்டின. கற்றவர்களும், ஞானிகளும்
இறைவனிடத்தில் வைத்திருக்கும் அன்பினை எடுத்துக்
கூறுவதாகவும் அமைந்துள்ளன. உழவாரப் படையைத் (புல்,
பூண்டு நீக்கும் ஆயுதம்) தாங்கி, இறைத்தொண்டும் திருநாவுக்கரசர்
செய்ததால் அவருடைய பாடல்கள் திருக்கோயில் தொண்டினையும்,
மனிதநேயத்தினையும் வலியுறுத்துவதாக உள்ளன. சிறுதெய்வ
வழிபாடு, சாதிச்சண்டைகள், சமயச்சண்டைகள் ஆகியவை
நீங்கவேண்டும் எனவும் அவருடைய பாடல்கள் கூறுகின்றன.
தாண்டகம் என்ற செய்யுள் அமைப்பு இவருடைய பாடல்களில்
அமைந்ததால் தாண்டக வேந்தர் என்று திருநாவுக்கரசர்
அழைக்கப் பட்டார்.
3.1.3 சுந்தரர் அருளியவை
தேவாரம் பாடிய மூவரில் மூன்றாமவர் சுந்தரமூர்த்தி ஆவார்.
பிறந்த ஊர் திருமுனைப்பாடி நாட்டின் திருநாவலூர் ஆகும்.
பெற்றோர் சடையனார், இசைஞானியார். இவர் காலத்தில்
அரசராய் இருந்த நரசிங்க முனையரையர் என்பார் இவரைத்
தத்துப் பிள்ளையாகப் (மகன்மை கொண்டு) போற்றி வளர்த்தார்.
திருவெண்ணெய் நல்லூர் என்ற ஊரில் இவருக்குத் திருமணம்
நடக்க இருந்த நேரத்தில் இறைவன் இவரைத் தடுத்தாட்
கொண்டார். அதுமுதல் இறைவனுக்கு இவர் அடிமையானார்.
திருவாரூரில் வாழ்ந்த கணிகையர் குலத்தைச் சார்ந்த பரவையார்
என்ற பெண்ணையும் திருவொற்றியூரில் வாழ்ந்த வளோளர்
குலத்தைச் சேர்ந்த சங்கிலியார் என்ற பெண்ணையும் திருமணம்
செய்து கொண்டார். இறைவனைத் தம் தோழராக எண்ணிப் பாடிப்
போற்றித் தமக்கு வேண்டியவற்றைப் பெற்றுக் கொண்டார்.
நம்பியாரூரர், தம்பிரான் தோழர் என்றெல்லாம் இவர்
பெருமையாக அழைக்கப்பட்டார். தம்முடைய திருப்பாடல்களால்
பல அரிய நிகழ்வுகளை நிகழ்த்தினார்.

தமக்குக் கிடைத்த நெற்குவியலை எடுத்துச் செல்ல
வேலையாட்களைப் பெற்றமை.

பரவை நாச்சியாருக்காக இறைவனிடத்தில் பொன்பெற்று
அதனை எடுத்துச் செல்ல, மணிமுத்தாற்றில் பொன்னை
இட்டுத் திருவாரூர்த் திருக்குளத்தில் எடுத்தமை.

இறைவனிடத்தில் சோறு பெற்றுப் பசியாற்றிக் கொண்டமை.

சத்தியத்தை மீறியதால் கண்களை இழந்து, இறைவனருளால்
மீண்டும் பெற்றமை.

பரவையாரின் ஊடலைத் தீர்க்க இறைவனை இருமுறை
தூதுவிட்டமை.

ஏயர்கோன் என்ற அடியவரின் வயிற்று நோயைத் தீர்த்தமை.

முதலை உண்ட பாலனை மீட்டமை.

இறைவனால் அனுப்பப் பெற்ற வெள்ளை யானையின்மேல்
ஏறி நேரே கயிலாயம் சென்றமை.
இவர் வாழ்ந்த காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் இறுதி -
எட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியாகும். இவர் 84 திருப்பதிகளில்
எழுந்தருளி உள்ள இறைவனைப் பாடிய 100 திருப்பதிகங்கள்
இப்பொழுது கிடைத்துள்ளன. இவருடைய தேவாரப் பதிகங்கள்
பண்களின் வரிசையில் தொகுக்கப் பெற்றுள்ளன. இவருடைய
திருப்பதிகங்களில் இந்தளம், தக்கராகம், நட்டராகம் உள்ளிட்ட
17 பண்கள் அமைந்துள்ளன. இவருடைய திருத்தொண்டத்
தொகையில் அமைந்துள்ள பாடல்கள்தாம் பின்னால் சேக்கிழாரால்
பெரியபுராணமாக விரித்துப் பாடப் பெற்றன. இவருடைய
பதிகங்களில் இயற்கை வருணனைகள் அதிகம் உண்டு. மேலும்
தமிழகத்து உள்நாட்டுப் பிரிவுகள், ஊர்களின் பெயர்கள், ஆறுகளின்
பெயர்கள் ஆகிய பல குறிக்கப் பெற்றுள்ளன. இவருடைய
பாடல்களில் பல தன் வரலாற்றுப் பாடல்களாக அமைந்துள்ளன.
இவர் மண்ணுலகில் 18 ஆண்டுகள் வாழ்ந்தார்.

Professor k. kumar

unread,
Nov 27, 2014, 12:25:26 PM11/27/14
to brail...@googlegroups.com
முதுகலைத் தமிழாசிரியர் தேர்வு-2014 வினாத்தாள் 2-5
1.மொழி முதலில் வரும் எழுத்து ஒவ்வொன்றுக்கும் செய்யுள்பாடுவது
A ஐந்திணைக்கோவை .B வருக்கக்கோவை .C ஒருதுறைக்கோவை .D அந்தாதி
2.சிற்றிலக்கிய வேந்தர்
A.மாணிக்கவாசகர் B. குமரகுருபரர் .C ஒட்டக்கூத்தர் .D பகழிக்கூத்தர்
3. .ஒன்றென்றிரு,தெய்வம் உண்டென்றிரு எனப்பாடிய சித்தர்
A.பட்டினத்தார் B. திருமூலர் .C சிவவாக்கியர் .D பத்திரகிரியார்
4 முதல் தூது நூலினை இயற்றியவர்
A. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை B. கச்சியப்ப முனிவர்
.C பத்மகிரியார் .D உமாபதி சிவச்சாரியார்
5.வாயில் இலக்கியம் , சந்து இலக்கியம் என்று அழைக்கப்படுவது
A.உலா B. தூது .C பள்ளு .D கோவை
6 .மிகுதியான நூல்கள் தோன்றிய சிற்றிலக்கியம்
A.உலா B. மாலை .C பள்ளு .D அந்தாதி
7 அட்டமா சித்தியுள் பொன்போல் பளுவாதல்
A. அணிமா B. மகிமா .C கரிமா .D பிராப்தி
8 சதகம் என்பது
A.10 பாடல்களைக்கொண்டது B. .100 பாடல்களைக்கொண்டது
. C .50 பாடல்களைக்கொண்டது .D 200பாடல்களைக்கொண்டது
9. நம்பியகப்பொருளுக்கு உரைமேற்கோளாக அமைந்த கோவை
A. பாண்டிக்கோவை B. தஞ்சைவாணன்கோவை C திருக்கோவை D சீர்காழிக்கோவை
10 திருவரங்கத்தந்தாதி பாடியவர்
A பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் .B. நம்மாழ்வார் .C மதுரகவியாழ்வார் .D குலசேகர ஆழ்வார்
11.யமக அந்தாதி பாடியவர்
A பெரியாழ்வார் .B. சிவப்பிரகாச சுவாமிகள் .C கம்பர் .D அபிராமிப்பட்டர்
12. உழத்திப்பாட்டு என்று அழக்கப்படும் ஏசல் இலக்கியம்
A.உலா B. அந்தாதி .C பள்ளு .D கோவை
13. செங்கையில் வண்டு கலின் கலின் என்று செயம் செயம் என்றாட பாடல்வரிளைப் பாடியவர்
A.செயங்கொண்டார் B.குமரகுருபரர் .C திரிகுடராசப்பக் கவிராயர் .D வரதநஞ்சயப்பப்பிள்ளை
14 தமிழரசிக்குறவஞ்சியின் பாட்டுடைத்தலைவன்
A. முருகன் B. சிவன் .C திருமால் .D யேசுபிரான்
15. அறம் வைத்துப் பாடப்படும் இலக்கியம்
A.அந்தாதி B. கலம்பகம் .C பள்ளு .D மாலை
16. இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய இஸ்லாமிய நூல்
A. நாயக வெண்பா B. கவிப்பூஞ்சோலை .C இலக்கிய பூங்கா .D நெஞ்சில்நிறைந்த நபிமணி
17 உலாவில் வரும் மடந்தைப் பருவப்பெண்ணுக்குரிய வயது
A. 14-19 B. 8-11 .C 32-40 .D 8-11
18. நாடு,தலைநகர்,மலை ,ஆறு போன்ற உறுப்புகள் இடம்பெறும் இலக்கியம்
A.உலா B. கலம்பகம் .C பள்ளு .D கோவை
19. விஞ்சு நிறம் தோயாத செந்தமிழே,சொல்லேர் உழவர்தம் தீயாது சொல்வினையும்
செய்யுளே-பாடல் வரிகள் இடம்பெற்ற நூல்
A.தமிழ்விடு தூது B. நெஞ்சுவிடுதூது C அழகர் கிள்ளைவிடுதூது D தென்றல் விடுதூது
20 இரண்டடி தாழிசையால் பாடப்படுவது
A.உலா B. பரணி .C அந்தாதி .D கோவை
21.காரைக்காலம்மையார் பாடிய சிற்றிலக்கியம்
A.மாலை B. தூது .C பள்ளு .D இவற்றுள் ஏதுமில்லை
22.இளஞ்சூரியன்,முதுசூரியன் எதைப்பாடுவதில் வல்லவர்கள்
A.உலா B.கலம்பகம் .C குறம் .D மாலை
23 சொற்றொடர்நிலையில் அமைந்த இலக்கியம்
A அற்புத திருவந்தாதி B. நந்திக்கலம்பகம் C. முக்கூடற்பள்ளு D மூவருலா
24. கொச்சக ஒருபோகு,வெண்பா,கட்டளைக்கலித்துறை ஆகியவற்றைத் தொடக்கமாகக் கொண்டு
பாடப்படும் இலக்கியம்
A.உலா B. கலம்பகம் .C பள்ளு .D கோவை
25 கவிச்சக்ரவர்த்தி கவிராட்ச்சசன் என்று போற்றப்படுபவர் எழுதிய நூல்
A. சட்கோபர் அந்தாதி B.இராசராச சோழன் உலா
C திருவிரட்டைமணிமாலை .D வீர வெட்சிமாலை
26. இஸ்லாமிய சமய சித்தர்கள் இவ்வறு அழக்கப்பட்டனர்
A பக்கீர்கள் .B.. மஸ்தான்கள் C ஹஜரத்துகள் D சாரணர்கள்
27 சித்தர்களில் தலயாயவர்
A. பத்மகிரியார் B.திருமூலர் C அகத்தியர் answer D இடைக்காடர்
28 பத்திரகிரியார் யாருடைய சீடர்
A. பட்டினத்தடிகள் B.புலிப்பாணி C கொங்கனர் D சாட்டைமுனி
29. பேச்சு நடையும்,மரூஉ மொழிகளும் வடசொற்கள் மிகுந்தும் எழுசீர் சந்த விருத்தத்தில்
பாடல்கள் இயற்றியவர்
A சிவவாக்கியர் B.. கடுவெளி சித்தர் C குதம்பைச்சித்தர் D கருவூரார்
30. ஒன்பதாம் திருமுறையில் திருவிசைப்பா பாடிய சித்தர்
A பத்ரகிரியார் B.. ஏனாதிச்சித்தர் C குதம்பைச்சித்தர் D கருவூரார்
31. தமிழில் உள்ள திருவருள்மாலைக்கு ஒப்பாக கருதக்கூடிய இஸ்லாமிய இலக்கியம்
A மஸ்-அலா .B கிஸ்ஸா C.முனாஜாத்து D நாமா
32. பொருந்தாதைச் சுட்டுக
A மஸ்-அலா .B கிஸ்ஸா C.படைப்போர் D நாமா
33. கதைகூறும் போக்கினை உடைய இஸ்லாமிய இலக்கியம்
A மஸ்-அலா .B கிஸ்ஸா C.முனாஜாத்து D நாமா
34. குத்பு நாயகம் புராணம் பாடியவர்
A.உமறுப்புலவர் B. சேகணாப் புலவர் .C பனுஅகமது மரைக்காயர் .D சவ்வாது புலவர்
35 .இஸ்லாமிய கம்பர்
A செய்குத்தம்பிப் பாவலர் .B.காசிம்புலவர் .C குணங்குடிமஸ்தான் .D உமறுப்புலவர்
36.வண்டமிழ் -----------------------------------வாயெல்லாம் நஞ்சே.
A சேகணா .B.சவ்வாது .C வண்ணக்களஞ்சியம் D மஸ்தான்
37. ஜிபுறீல் மூலம் இஸ்லாம் மார்கத்தை நபிகள் அறிவதைக் கூறும் காண்டம்
A செலவியற்காண்டம் B. செம்பொருட்காண்டம் C பிறப்பியற்காண்டம் .D ஹிஜ்ஜிரத்துக்காண்டம்
38.மதுரகவி, மதுரகவி ராசன் என்று போற்றப்படுபவர்
A சவ்வாது புலவர் B குலசேகராழ்வார் C.காசிம்புலவர் D பச்சை இபுராஹிம் புலவர்
39 பென்முத்திமாலை பாடியவர்
A சக்கரைப்புலவர் .B. வேதநாயகம்பிள்ளை .C முகமது உசேன் .D வேதநாயக சாஸ்திரி
40.தமிழில் முதலில் ஏளன இலக்கியம் எழுதியவர்
A வ.வே.சு.அய்யர் B. வேதநாயகம்பிள்ளை C வீரமாமுனிவர் .D ஜி.யு.போப்
41. சென்னைப்பல்கலைக்கழகத்திடமிருந்து இலக்கிய வேந்தர், வேத விற்பன்னர் பட்டம்பெற்றவர்
A கால்டுவெல் B. வேதநாயகம்பிள்ளை C எல்லீஸ் .D பர்சிவெல் பாதிரி
42 67 ஆயிரம் சொற்கள் அமைந்த தமிழ் ஆங்கில அகராதி தயாரித்தவர்
A சாந்தலர் B. லேசரஸ் C வின்சுலோ .D ஹெண்டிரிக் பாதியார்
43.திக்காரம் எனும் மறுப்பு நூல் எழுதியவர்
A.ஆபிராகாம் பண்டிதர் B. முத்துசாமிப்பிள்ளை answer C வ.வே.சு.அய்யர் .D வேதநாயக
சாஸ்திரி
44. ஞானதீபக்கவிராயர்
A. வேதநாயகம்பிள்ளை B. முத்துசாமிப்பிள்ளை C தெய்வநாயகம் .D வேதநாயக சாஸ்திரி
45.கிறித்துவர்களின் தேவாரம்
A இரட்சணிய யாத்ரிகம் .B இரட்சணிய மனோகரம்
C. இரட்சணிய குறள் D இரட்சணியசமயநிர்ணயம்
46. தத்துவ போதகர் என்று போற்றப்படுபவர்
A.ஆபிராகாம் பண்டிதர் B. இராபர்ட்-டி--நொபிலி C பர்சிவல் பாதிரி .D வேதநாயக சாஸ்திரி
47.தினவர்த்தமாணி
A வார இதழ் .B மாத இதழ் C நாளிதழ் D சிறப்பிதழ்
48. பைபிளை தமிழில் முதலில் மொழிபெயர்த்தவர்
A கால்டுவெல் .B.சீகன்பால்கு அய்யர் C வேதநாயகம்பிள்ளை D பர்சிவல் பாதிரி
49.தாயுமானவர் பாடலில் ஈடுபாடுகொண்டவர்
A உமறுப்புலவர் B.. சவ்வாது புலவர் C குணங்குடி மஸ்தான் . D காசிம்புலவர்
50. திரு.வி.க படித்த முதல் இலக்கண நூலை எழுதியவர்
A கால்டுவெல் B. வேதநாயகம்பிள்ளை C வேதநாயக சாஸ்திரி .D ஜி.யு.போப் answr
வெற்றி என்பது உங்கள் விரல் நுனி விடைகளில்
Reply all
Reply to author
Forward
0 new messages