அறிவியல் ஆயிரம்: பெரிய வெள்ளம்
PUBLISHED ON : ஏப் 16, 2025 12:00 AM
பெரிய வெள்ளம்
பூமியின் மிகப்பெரிய வெள்ளம் 50 லட்சம் ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்டது. இது அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்து தண்ணீரை, ஜிப்ரால்டர் நீரீணை வழியாக, மத்திய தரைக்கடலில் நிரப்பியது. அதற்கு முன்பு வரை மத்திய தரைக்கடலில் தண்ணீரே இருந்ததில்லை என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வெள்ளத்தால் உருவான தண்ணீர் என்பது, தற்போது அமேசான் ஆற்றில் செல்லும் தண்ணீரை விட, 1000 மடங்கு அதிகமாக இருந்தது. இருப்பினும் இந்த ஆய்வு முடிவை, அனைத்து ஆராய்ச்சியாளர்களும் ஏற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் சுரங்கம் :வரிகள் இல்லாத தேசிய கீதம்
PUBLISHED ON : ஏப் 16, 2025 12:00 AM
வரி இல்லாத தேசிய கீதம்
நாட்டுப்பற்றை வளர்ப்பதில் தேசிய கீதம் முக்கிய பங்கு வகிக்கிறது. இது அந்நாடுகளின் கலாசாரம், பாரம்பரியம், வரலாறு போன்றவற்றை குறிப்பிடும் விதமாக இருக்கும்.இந்திய தேசிய கீதம் 1950ல் அங்கீகரிக்கப்பட்டது. இந்நிலையில் வரிகள் இல்லாத தேசிய கீதம் என்பது தேசிய கீத பாடலில், வரி இல்லாமல் இசை மட்டும் இருப்பதை குறிக்கிறது. உலகில் ஸ்பெயின், போஸ்னியா ஹெர்ஜ்கோவின்யா, சான் மரினோ, கொசவோ ஆகிய நான்கு நாடுகளில் மட்டும் இந்த வரி இல்லாத தேசிய கீதம் உள்ளது. இதில் ஸ்பெயினை தவிர மற்ற மூன்றும் சிறிய நாடுகள்.