அறிவியல் ஆயிரம்:உயரும் கடல் நீர்

0 views
Skip to first unread message

Dhivisha dhivi

unread,
Mar 8, 2026, 8:43:44 PM (5 days ago) Mar 8
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம்:உயரும் கடல் நீர்

 உலகில் கடல்நீர்மட்டம் 4.9 அடி உயரும் வாய்ப்புள்ளது. இது ஏற்கனவே மதிப்பிட்டதை விட அதிகம். 13.2 கோடி பேர் பாதிக்கப்படுவர் என நெதர்லாந்தின் வாஜினிங்கன் பல்கலை ஆய்வு எச்சரித்துள்ளது. 20ம் நுாற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரை கடல்நீர்மட்டம் 28 செ.மீ., உயர்ந்துள்ளது.
 ஐ.பி.சி.சி., அமைப்பின் ஆய்வு, பருவநிலை மாற்றத்தின் தற்போதைய வேகம் குறையவில்லை எனில், 2100க்குள் கடல்நீர்மட்டம் 3.5 அடி உயரும் என்கிறது. ஆனால் உண்மையான கடல்நீர்மட்டம் உயர்வு, இதைவிட அதிகமாக இருப்பின் கூடுதலாக 68% மக்கள் பாதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 தகவல் சுரங்கம்:தங்கம் எங்கு அதிகம்

 தங்கம் விலை தொடர்ந்து உயர்கிறது. இது ஆபரணமாக மட்டுமல்லாமல், முதலீடாகவும் இருக்கிறது.
 உலக தங்க கவுன்சில் தகவலின் (2026 ஜன.,) படி உலகில் தங்கத்தை அதிகம் கையிருப்பு வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் அமெரிக்கா (8133 டன்) உள்ளது. அடுத்த ஐந்து இடங்களில் ஜெர்மனி (3350 டன்), இத்தாலி (2452), பிரான்ஸ் (2437), ரஷ்யா (2329), சீனா (2303) உள்ளன. ஏழாவது இடத்தில் இந்தியா (880 டன்) இருக்கிறது.
Reply all
Reply to author
Forward
0 new messages