அறிவியல் ஆயிரம்: பனிப்பாறை நிலநடுக்கம்
பனிப்பாறை நிலநடுக்கம்
அண்டார்டிகாவில் 2010 - 2023 வரை ஆய்வு நடத்தியதில் 368 பனிப்பாறை நிலநடுக்க நிகழ்வுகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதில் மூன்றில் இரண்டு பங்கு (245), அங்குள்ள 'டூம்ஸ்டே' பனிப்பாறையில் ஏற்பட்டுள்ளது. பொதுவாக பெரிய பனிக்கட்டிகள் கடலில் சரிந்து, அவற்றின் 'தாய்' பனிப்பாறையில் மோதும்போது பனிப்பாறை நிலநடுக்கம் உருவாகின்றன. இவை 2003ல் கண்டறிய பட்டது. 'டூம்ஸ்டே' பனிப்பாறை உடைந்து உருகினால், உலகின் சராசரி கடல்நீர்மட்டம் 10 அடி உயரும் என ஆய்வில் தெரிவித்துள்ளனர்.
தகவல் சுரங்கம் : உலக புலம் பெயர்ந்தோர் ,தேசிய சிறுபான்மையினர் தினம்
உலகில் 2014ல் இருந்து 70 ஆயிரம் புலம் பெயர்ந்தோர் காணாமல் அல்லது உயிரிழந்துள்ளனர் என ஐ.நா., தெரிவிக்கிறது. இவர்களை பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் டிச. 18ல் உலக புலம் பெயர்ந்தோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'எனது சிறந்த கதை: கலாசாரம், வளர்ச்சி' என்பது இந்தாண்டு மையக்கருத்து.
* மத வழி சிறுபான்மையினரான முஸ்லிம், கிறிஸ்துவம், புத்தம், பாரசீகர்கள், சீக்கியர்கள், ஜெயின் சமூகத்தினரின் உரிமையை பாதுகாக்க வலியுறுத்தி டிச.18ல் தேசிய சிறுபான்மையினர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.