அறிவியல் ஆயிரம் : மீண்டும் நிலவு பயணம்...
நிலவில் மனிதர்களை முதலில் தரையிறக்கிய அமெரிக்கா மீண்டும் நிலவு ஆராய்ச்சியை தொடங்கியுள்ளது. இதற்காக 'ஆர்டிமிஸ்' திட்டத்தை (3 பகுதி) தொடங்கியது. முதலாவதாக 2017ல் 'ஆர்டிமிஸ் 1' திட்டத்தில் 'ஓரியன்' விண்கலம் நிலவுக்கு சென்று திரும்பியது. அடுத்ததாக 2026 பிப். 5ல் 'ஆர்டிமிஸ் 2' திட்டத்தில் நான்கு வீரர்கள் நிலவுக்கு செல்ல உள்ளனர். ஆனால் நிலவில் தரையிறங்க மாட்டார்கள். வீரர்களுடனான தகவல் தொடர்பு, விண்கலம், வீரர்கள் நிலவில் செயல்படும் விதத்தை ஆய்வு செய்வதே இதன் நோக்கம். மூன்றாவதாக 'ஆர்டிமிஸ் - 3' திட்டம், வீரர்கள் நிலவில் தரையிறங்கும் வகையில் உள்ளது.