அறிவியல் ஆயிரம் : உள்ளங்கையின் நிறத்துக்கு காரணம்

0 views
Skip to first unread message

Dhivisha dhivi

unread,
May 19, 2026, 11:15:16 PMMay 19
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம் : உள்ளங்கையின் நிறத்துக்கு காரணம்






உடலின் மற்ற பகுதிகளின் நிறங்கள் வேறுபட்டாலும், உள்ளங்கை, உள்ளங்கால் மட்டும் வெளுப்பாக இருக்கிறது. பொதுவாக தோலில் உள்ள மெலனோசைட் எனும் நிறமி செல்கள் ஏற்படுத்தும் நிறமி காரணமாகவே தோல் கருமை அடைகிறது. தோலுக்கு ஆபத்து ஏற்படுத்தும் புற ஊதாக்கதிர்களை உறிஞ்சிப் பாதுகாப்பதே இந்த மெலனின் எனும் நிறமி வேதிப் பொருளின் பணி. ஆனால் உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களில் மெலனோசைட் செறிவு ஐந்தில் ஒன்று என்ற அளவிலேயே உள்ளது. எனவே இவை ஒப்பீட்டளவில் வெளுப்பாக இருக்கிறது என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
 தகவல் சுரங்கம் : உலக தேனீக்கள் தினம்

 தேனீக்களிடம் இருந்து சுறுசுறுப்பு, உழைப்பை கற்றுக்கொள்ளலாம். இவை பல வழிகளில் மனிதர்களுக்கு உதவுகிறது. இவற்றை பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் மே 20ல் உலக தேனீக்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. தேனீக்கள் இல்லையெனில் உயிரினங்களின் சூழலியல் சுழற்சி பாதிக்கப்படும். தேன் முக்கிய உணவு. மருத்துவத்திலும் முக்கிய பங்காற்றுகிறது. தேனீக்கள் வளர்ப்பு, விவசாயத்துக்கும் உதவுகிறது. 'மக்கள், பிரபஞ்சத்துக்காக தேனீக்கள் ஒன்றிணைதல்; இந்த கூட்டு நம் அனைவரையும் பாதுகாக்கிறது' என்பது இந்தாண்டு மையக்கருத்து.
Reply all
Reply to author
Forward
0 new messages