அறிவியல் ஆயிரம் : பிரமாண்டமான பால்வீதி
பால்வீதி (மில்கிவே) ஏற்கனவே மதிப்பிட்டதை விட பெரியதாக இருக்கிறது என ஐரோப்பிய விண்வெளி மையம் தெரிவித்துள்ளது. பால்வீதி என்பது விண்மீன் மண்டலங்களின் தொகுப்பு (கேலக்சி). இதில் ஒன்று தான் நம் சூரிய குடும்பம். பால்வீதி 1400 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவானவை. 10 ஆயிரம் - 40 ஆயிரம் கோடி நட்சத்திரங்களையும், 10 ஆயிரம் கோடி கோள்களையும் கொண்டது. இது தட்டை வடிவத்தில், சுருள் அமைப்பில் காணப்படுகிறது. நம் சூரிய குடும்பம், பால்வீதியின் மையத்தில் இருந்து 26,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.
தகவல் சுரங்கம் : உலக பாம்புகள் தினம்
பூமியில் 3500 வகை பாம்புகள் உள்ளன. இதில் 600 வகை விஷம் கொண்டவை. பொதுவாக பாம்புகள் சுற்றுச்சூழல் சமநிலையை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இவற்றை பாதுகாக்க வலியுறுத்தி ஜூலை 16ல் உலக பாம்புகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகின் நீளமான பாம்பாக 'கிங் கோப்ரா' உள்ளது. பாம்புக்கு வெளிப்புற காது கிடையாது. அதன் தாடையில் உள்ள எலும்புகள் ஒலியை உணரச்செய்கிறது. அதேபோல நாக்கின் மூலம் தண்ணீர், காற்று, நிலத்தில் உள்ள வாசனையை உணர்கிறது. இதனால் தான் எப்போதும் நாக்கை வெளியே நீட்டியவாறு உள்ளது.