அறிவியல் ஆயிரம் : ஆயுளை பலமாக்கும் பளுதுாக்குதல்
ஆயுளை பலமாக்கும் பளுதுாக்குதல்
வாரத்துக்கு 90 - 120 நிமிடங்கள், தசைகளை வலிமைப்படுத்தும் பளுதுாக்குதல் பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு ஆயுட்காலம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. அந்நாட்டில் 1.47 லட்சம் பேர், 30 ஆண்டுகள் கண்காணிக்கப்பட்டனர். இதில் வாரத்துக்கு 2 மணி நேரம் உடற்பயிற்சி செய்பவர்கள் எந்த காரணத்துக்காகவும் உயிரிழக்கும் வாய்ப்பு 13% குறைந்தது. இதே இதய பாதிப்பு எனில் 29% என இருந்தது. ஆனால் எடை துாக்கும் பயிற்சி எடுத்தவர்கள், எந்த காரணத்துக்காகவும் உயிரிழக்கும் வாய்ப்பு 27 சதவீதம் குறைந்தது என கண்டறிந்தனர்.
தகவல் சுரங்கம் : உலக சுற்றுச்சூழல் தினம்
சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ஜூன் 5ல் உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இயற்கைச்சூழல், அவசர நிலையில் உள்ளது. இதை தடுக்க உலகின் சராசரி வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியஸ்க்குள் கட்டுப்படுத்த வேண்டுமெனில், கார்பன் உள்ளிட்ட பசுமை இல்ல வாயுக்கள் வெளியீட்டை 2030க்குள் பாதியாக குறைக்க வேண்டும்.இல்லையெனில், காற்று மாசு பாதிப்பு, அடுத்த பத்தாண்டுக்குள் 50% அதிகரிக்கும். 'இயற்கையால் உத்வேகம் பெற்றது: பருவநிலைக்காக. நம் எதிர்காலத்துக்காக' என்பது இந்தாண்டு மையக்கருத்து.