அறிவியல் ஆயிரம் : கோள்களின் அணிவகுப்பு
கோள்களின் அணிவகுப்பு
சூரிய குடும்பத்தில் உள்ள எட்டு கோள்களும் அதற்குரியபாதையில் சூரியனை சுற்றுகின்றன. இதன் அடிப்படையில் சில கோள்கள் எப்போதாவது ஒரே வரிசையில் அமையும் வானியல் நிகழ்வு தோன்றும். இது கோள்கள்இணைவு என அழைக்கப்படுகிறது. இதன்படி 2வதாக உள்ள வெள்ளி, நான்காவதாக உள்ள வியாழன்ஆகிய இரண்டும், 2026 ஜூன் 8, 9ல் சூரியன் மறைவுக்குப்பின், 1.6 டிகிரி இடைவெளியில் தோன்றும். பிரகாசமாக தெரியும், இவற்றை உபகரணம் இன்றி பார்க்கலாம். பின் ஜூன் 11 - 15ல் புதனும் இவ்வரிசையில் இணையும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
தகவல் சுரங்கம் : ரஷ்ய மொழி தினம்
ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகளில் ரஷ்யாவும் ஒன்று. ஐ.நா., சபையின் அங்கீகரிக்கப்பட்ட ஆறு மொழிகளில் ரஷ்ய மொழியும் அடங்கும். பெலாரஸ், கஜகஸ்தான், தஜிகிஸ்தானின் அதிகாரப்பூர்வ மொழியாகவும் உள்ளது. நவீன ரஷ்ய மொழியின் தந்தை என அழைக்கப்படும் அலெக்சாண்டர்புஷ்கினை கவுரவிக்கும் விதமாக அவரது பிறந்த தினமான ஜூன் 6, ரஷ்ய மொழி தினமாக ஐ.நா.,வின் யுனெஸ்கோ அமைப்பு 2010ல் அறிவித்தது. உலகில் அதிக பேசப்படும் மொழிகளின் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் ரஷ்ய மொழி (25 கோடி பேர்) உள்ளது.