அறிவியல் ஆயிரம்: செவ்வாயில் பெரிய கடல்

0 views
Skip to first unread message

Dhivisha dhivi

unread,
Jan 18, 2026, 8:12:19 PMJan 18
to valluvanpaarvai, brailleacl, inaiathendral
அறிவியல் ஆயிரம்: செவ்வாயில் பெரிய கடல்


 'சிவப்பு கோள்' எனும் செவ்வாயில் விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக ஆய்வு செய்கின்றனர். இந்நிலையில் 30 லட்சம் ஆண்டுகளுக்கு முன், செவ்வாய் கோளின் பாதி அளவுக்கு, கடல் இருந்தது. இது பூமியிலுள்ள ஆர்க்டிக் பெருங்கடல் போல இருந்தது.

  அதனால் இது எப்போதும் துாசி, வறண்ட கிரகமாக இருந்ததில்லை என சுவிட்சர்லாந்து பெர்ன் பல்கலை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். ஏற்கனவே சில ஆய்வில் கடல் இருப்பது கண்டறியப்பட்டாலும், நாங்கள் துல்லிய ஆய்வுகளுடன் கண்டுபிடித்துள்ளோம். இது (கடல்) செவ்வாயின் வடக்கு அரைக்கோளத்தில் இருந்தது என தெரிவித்துள்ளனர்.
 தகவல் சுரங்கம்: நீண்டகால பெண் அதிபர்

 உலகில் பல்வேறு நாடுகளில் பெண்கள் அதிபராக அல்லது பிரதமராக பதவி வகிக்கின்றனர். இந்நிலையில் உலகில் இப்பதவியில் நீண்டகாலம் இருந்தவர், ஜெர்மனி பிரதமராக இருந்த ஏஞ்சலா மெர்க்கல். இவர் 2005 நவ.22 முதல் 2021 டிச.8 வரை 16 ஆண்டு, 6 நாட்கள் பதவியில் இருந்தார்.

 
 
அடுத்து இரண்டாவது இடத்தில் ஐஸ்லாந்து அதிபர் விக்திஸ் பின்போகடோடிர், 1980 ஆக. 1 முதல் 1996 ஆக.1 வரை 16 ஆண்டுகள் பதவி வகித்தார். இவர் உலகின் முதல் பெண் அதிபர் என்ற பெருமைக்குரியவர். அடுத்து மூன்றாவது இடத்தில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா (15 ஆண்டு, 212 நாட்கள்) உள்ளார்.

 

Reply all
Reply to author
Forward
0 new messages