அறிவியல் ஆயிரம்:முதல் விண்வெளி ஓட்டல்
உலகின் முதல் விண்வெளி சொகுசு ஓட்டல் (வொயாஜர்ஸ்டேஷன்) 2027ல் விண்ணில் ஏவப்படவுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா நிறுவனம் உருவாக்கி
யுள்ளது.
ராட்சத சக்கரம் வடிவில் இருக்கும். நிலவில் (பூமி போல ஆறில் ஒரு மடங்கு) உள்ள ஈர்ப்பு விசை இதில் நிலை நிறுத்தப்படும். பரப்பளவு 1.25 லட்சம் சதுர அடி. 120 பணியாளர்கள், 280 வாடிக்கையாளர்கள் என மொத்தம் 400 பேர் தங்கலாம்.
தகவல் சுரங்கம்:வெற்றி தினம்
ஆங்கிலேயர் சுதந்திரம் வழங்கிய போது இந்தியா - பாக்., என பிரித்து வழங்கினர். பாகிஸ்தான் மேற்கு, கிழக்கு என இருந்தது. கிழக்கு பாக்., மக்கள் தனிநாடு வலியுறுத்தி 1971 மார்ச் 26ல் 'வங்கதேச விடுதலைப்போரை' தொடங்கினர்.
அனுமதி
சேலம்
ago-btn
இந்த கோரிக்கைக்கு இந்தியா ஆதரவளித்து பாகிஸ்தானுக்கு எதிராக 1971 டிச.3ல் போரில் இறங்கியது. இந்தியாவின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் 1971 டிச.,16ல் பாக்., படையினர் சரண் அடைந்தனர். இத்தினம் ஆண்டுதோறும் 'விஜய் திவாஸ்' என கொண்டாடப்படுகிறது. 13 நாள் போர் முடிவுக்கு வந்தது. வங்கதேசம் உருவாக்கப்பட்டது.