அறிவியல் ஆயிரம் : காலநிலை பாதிப்பை தடுக்க...

1 view
Skip to first unread message

Dhivisha dhivi

unread,
Jun 18, 2026, 8:55:53 PM (13 days ago) Jun 18
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம் : காலநிலை பாதிப்பை தடுக்க...
 
 காலநிலை பாதிப்பை தடுக்க...

உலகில் பேரழிவை ஏற்படுத்தும் காலநிலை பாதிப்பை தடுக்க வேண்டுமெனில், நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு உள்ளிட்ட புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டை, 2035க்குள் பாதியாக குறைக்க வேண்டும். 2070க்குள் முற்றிலும் நிறுத்த வேண்டும் என ஜெர்மனியின் 'கிளைமேட் அனாலிட்டிக்கல்'நிறுவன ஆய்வு வலியுறுத்தியுள்ளது. புதைபடிவ எரிபொருட்கள், பருவநிலை மாற்றம் எனும் தீயில் மேலும் எண்ணெய்யை ஊற்றுகின்றன. சமீபத்தில் வெளியான ஆய்வில், உலகில் இதுவரை இல்லாத அளவில் 2024ல் 5680 கோடி டன் கார்பன் வெளியிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

  தகவல் சுரங்கம் : பாலியல் வன்கொடுமை தடுப்பு தினம்
 
  போர் சூழல்களில் பாலியல் வன்கொடுமை ஒரு போர்க்குற்றம், இது சர்வதேச சட்டத்தின் கீழ் இனப்படுகொலையின் ஒரு அங்கமாகும், இரண்டாம் உலகப்போருக்குப்பின், பெரிய போர்களை உலகம் தற்போது சந்தித்துள்ளது. 11.70 லட்சம் பேர் வீடுகளை இழந்துள்ளனர். ரஷ்யா - உக்ரைன், இஸ்ரேல் - பாலஸ்தீனம், அமெரிக்கா - ஈரான் போர் உள்ளிட்டவை அடங்கும். போர், உள்நாட்டு சண்டை உள்ளிட்ட சூழல்களில் பாலியல் வன்கொடுமையை தடுக்க வலியுறுத்தி, ஐ.நா., சார்பில் ஜூன் 19ல் போர்களில் பாலியல் வன்கொடுமையை ஒழிக்கும் தினம் கடைபிடிக்கப்படுகிறது.


 
Reply all
Reply to author
Forward
0 new messages