அறிவியல் ஆயிரம்:நிலவின் முதல் லேண்டர்

0 views
Skip to first unread message

Dhivisha dhivi

unread,
Feb 16, 2026, 8:24:10 PM (4 days ago) Feb 16
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம்:நிலவின் முதல் லேண்டர்

 சோவித் யூனியன் (ரஷ்யா) நிலவுக்கு அனுப்பிய 'லுானா 9' லேண்டர், 1966 பிப். 3ல் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இது இச்சாதனையை நிகழ்த்திய முதல் லேண்டர். எடை 99 கிலோ. 3 நாட்கள் மட்டுமே செயல்பட்டது. 9 படங்களை அனுப்பியது.

60 ஆண்டுகளுக்குப்பின் இந்த லேண்டர் தரையிறங்கிய பகுதியை, நாசாவின் 'ரீகனைசன்ஸ் ஆர்பிட்டர்' படம்பிடித்துள்ளது. இதில் லேண்டர் தரையிறங்கியதால் ஏற்பட்ட தடயம் இடம்பிடித்துள்ளது. ஏற்கனவே 'லுானா 9' அனுப்பிய படத்துடன், நாசா எடுத்த படத்தை ஒப்பிட்டு விஞ்ஞானிகள் இதை உறுதி செய்தனர்.


தகவல் சுரங்கம்:சுற்றுலா நெகிழ்திறன் தினம்

 சுற்றுலா கொண்டாட்டத்தின் ஒரு பகுதி மட்டுமல்ல. இது பல்வேறு கலாசாரம் உடைய உலகை ஒன்றிணைக்கிறது. உலகில் லட்சக்கணக்கான மக்களுக்கு நேரடி, மறைமுக வேலைவாய்ப்பை வழங்குகிறது.

வளரும் நாடுகள், நடுத்தர வருமானம் உடைய நாடுகளில் வருவாய், வேலைவாய்ப்பு, பொருளாதாரம் உள்ளிட்டவைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. நெருக்கடி, பேரிடர் உள்ளிட்ட சவால்களில் இருந்து சுற்றுலாத்துறையை மீட்க, நிலைத்தன்மையுடன் இருக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் பிப். 17ல் சர்வதேச சுற்றுலா நெகிழ்திறன் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
Reply all
Reply to author
Forward
0 new messages