அரச மரம்
பூமியில் வாழும் உயிர்களுக்கு உயிர் கொடுப்பது மரங்கள்தான். மரங்கள்தான்
சூரிய ஒளியிலிருந்து வெப்பத்தை உள்வாங்கி, குளோரோபில் மூலம் காற்றில்
உள்ள கார்பன்டை ஆக்ஸைடை உறிஞ்சி ஆக்ஸிஜனை வெளியிடுகிறது.
பண்டைய காலத்தில் இருந்தே நம் முன்னோர்கள் மரங்களை தெய்வமாக வழிபட்டனர்.
இந்துக்களின் வழிபாட்டில் வேம்பு, ஆல், அரசு என பல மரங்களுக்கு முக்கிய
இடமுண்டு. அனைத்து மரங்களையும் விட அரசமரத்திற்கு தனிச்சிறப்புகள்
அதிகம். மரங்களின் அரசன் அரசமரம்.
இன்று குளக்கரை, கோவில்களில் அரச மரம் இல்லாத கிராமங்களை நாம் காண
முடியாது. நீண்ட காலம் வாழும் அரச மரங்கள் தெய்வமாக போற்றப்படுகின்றன.
வேம்பை பெண் தெய்வமாக வணங்குவார்கள். அரச மரத்தை ஆண் தெய்வமாக வணங்குவர்.
பெரும்பாலும் அரச மரம் இருக்கும் இடமெல்லாம் பிள்ளையார் சிலை இருக்கும்.
அரச மரத்தை சுற்றிவிட்டு அடிவயிற்றைத் தொட்டுப்பார்த்தாள் என்ற பழமொழி
உண்டு. இதன் பொருள் அரச மரம் குலம் தழைக்கச் செய்யும் பிள்ளைப்பேறை
உண்டாக்கும். அரச மரத்தின் காற்று கர்ப்பப்பை கோளாறுகளை போக்கும்
தன்மையுடையது. அதுபோல் மூளையின் செயல்பாடுகளை தூண்டி, மன அமைதியைக்
கொடுக்கும் குணமும் இதற்கு உண்டு.
புராதான காலம் தொட்டே அரச மரம் இந்தியாவில் இருந்து வந்துள்ளது. நீண்டு
நெடிய மரம், அழகான இலைகள் என்று பரந்து விரிந்து காணப்படும் அரச
மரத்திற்கு அஸ்வத்தம், அச்சுவத்தம், திருமரம், போதி, கவலை, பேதி, கணவம்,
சராசனம், மிப்பலம் என பல பெயர்கள் உண்டு.
நன்கு வளர்ந்த அரச மரம் நாளொன்றுக்கு 1808 கிலோ கரியமில வாயுவை உள்வாங்கி
2400 கிலோ பிராண வாயுவை வெளியிடுவதாக நவீன ஆராய்ச்சியாளர்கள்
கண்டறிந்துள்ளனர். மேலும் இந்த பிராண வாயு காற்று மண்டலத்தில் கலந்து
காலை நேரங்களில் இம்மரத்தை சுற்றி வரும்போது நாளமில்லா சுரப்பிகளில்
செயல் பாடுகளைத் தூண்டுகின்றன என்றும் கூறுகின்றனர். இதன் இலை, வித்து,
வேர், பட்டை அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது.
அரச இலை கொழுந்துகளை எடுத்து நீரில் கொதிக்க வைத்து கஷாயம் செய்து
அருந்தி வந்தால் உடல் வன்மை கொடுப்பதுடன் சுரக்காய்ச்சல் குறையும்.
முக்குற்றத்தையும் அதாவது வாதம், பித்தம், கபம் போன்றவற்றை சீராக்கி உடலை
சீராகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்.
அரசமரத்தின் பட்டை, வேர், விதை இவற்றை பாலில் கொதிக்கவைத்து ஆறிய பின்
அதில் தேன் கலந்து தொடர்ந்து 1 மண்டலம் அருந்தி வந்தால் தாது
விருத்தியடையும். பெண்களுக்கு கருப்பைக் கோளாறுகள் நீங்கும்.
அரசமரப் பட்டையை சிதைத்து நீரில் போட்டு கொதிக்க வைத்து குடிநீராக
அருந்தி வந்தால் சொறி, சிரங்கு குணமாகும். உடல் வெட்கை குறையும். வியர்வை
நாற்றம் நீங்கும். சருமம் பளபளப்பதுடன், சரும நோய்கள் அண்டாது.
சருமத்தில் சுருக்கம் ஏற்படாது. அரசமரப் பட்டையை சிதைத்து பொடியாக்கி
நாள்பட்ட புண்களின் மீது தடவினால் புண்கள் விரைவில் குணமாகும்.
அரச மரப் பட்டையை நீரில் போட்டு கொதிக்க வைத்து ஆறிய பின் அந்த நீரால்
வாய் கொப்பளித்து வந்தால் வாயில் உள்ள புண்கள் விரைவில் குணமாகும். அரச
இலை, பட்டை, வேர் இவைகளை எடுத்து நன்கு இடித்து நீரில் கொதிக்க வைத்து
கஷாயமாக்கி தேவையான அளவு பனைவெல்லம் கலந்து அருந்தி வந்தால், மன
அழுத்தம், மன எரிச்சல், அதீத கோபம், தீரா சிந்தனை போன்றவை தீரும்.
அரசமரத்தின் வேர் பகுதியில் பிரம்மனும், நடுவில் திருமாலும், உச்சியில்
ஈசனும் அருள்புரிவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன அதனாலேயே அரசமரம் "ராஜ
விருட்சம்" என்று அழைக்கப்படுகிறது. "மரங்களில் நான் அரசமரமாக
இருக்கிறேன்" என்று பகவத்கீதையில் கண்ணன் கூறியிருக்கிறான். புராதான
காலம் தொட்டே அரச மரம் இந்தியாவில் இருந்து வந்துள்ளது. இதன் பூர்வீகம்
இந்தியாதான் என்பதற்கு சான்றுகள் உள்ளன.
அரசமரம் இந்துக்களுக்கும், பௌத்தர்களுக்கும் புனித மரமாகும். புத்தபிரான்
போதி மரத்தின் கீழே ஞானம் பெற்றதாக நாம் அறிவோம். அந்த போதிமரம் என்பது
அரச மரம்தான். "அரசுநீழலிருந்தோன்" என புத்தரை "சூடாமணி நிகண்டு" என்ற
நூலில் "கடவுட் பெயர்" என்ற தொகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. நீண்டு
நெடிய மரம், அழகான இலைகள் என்று அரசமரம் பரந்து விரிந்து காணப்படும்.
இதற்கு அஸ்வத்தம், அச்சுவத்தம், திருமரம், போதி, கவலை, பேதி, கணவம்,
சராசனம், மிப்பலம் என பல பெயர்கள் உண்டு.
அரசமரத்தை சுற்றினால் குழந்தை பேறுகிடைக்கும் என்பது என்பது ஒரு
நம்பிக்கை. இதன் காரணமாகவே "அரசினை நம்பி புருசனை கைவிட்டாள்" என்ற
பழமொழி வழக்கத்தில் உள்ளது. இது அறிவியல் பூர்வமாக
நிரூபிக்கப்பட்டுள்ளளது. அரசமரம் வெளியிடும் காற்றில் பெண்களின்
மாதச்சுழற்சி மற்றும் அது சம்பந்தமான சுரப்பிகள் சீரடைகின்றன என்று
நிரூபிக்கப்பட்டுள்ளது
"அரச மரத்தை சுற்றிவிட்டு அடிவயிற்றைத் தொட்டுப்பார்த்தாள்" என்ற பழமொழி
உண்டு. இதன் பொருள் அரச மரம் குலம் தழைக்கச் செய்யும் பிள்ளைப் பேற்றை
உண்டாக்கும். சூலகத்தை சீராக்கும். சூலகத்தில் உண்டான நோய்களை போக்கும்
என்பதே. அரச மரத்தின் காற்று கர்ப்பப்பை கோளாறுகளை போக்கும்
தன்மையுடையது. அதுபோல் மூளையின் செயல்பாடுகளை தூண்டி, மன அமைதியைக்
கொடுக்கும் குணமும் இதற்கு உண்டு.
பெண்களுக்கு வயிற்றில் கர்ப்பப்பை உள்ளது. பெண்ணின் "ஓவரி"க்கு சினை
முட்டைகள் வந்து சேரமுடியாவண்ணம் "ஃபிலோப்பியான் ட்யூப்" என்ற உள்
உறுப்பில் ஏதாவது தடை அல்லது அடைப்பு ஏற்பட்டு இருக்கலாம். இந்த
"ஃபிலோப்பியான் ட்யூப்"-க்கு அடியில் தசை வளர்ச்சி ஏற்பட்டு அதன்மூலம்
அடைப்பு ஏற்பட்டும் இருக்கலாம். இத்தடையை நிவர்த்திக்கவே, பெரியோர்கள்
கூறிய ஒப்பற்ற வழி அரச மரப் பிரதட்சிணம். புத்திர பாக்கியம் அடைய
வேண்டுமானால், பெண்கள் அரச மரத்தைச் சுற்ற வேண்டும் என்று நம் மூதாதையர்
அரசமரப் பிரதட்சணம் 108 முறை செய்ய வேண்டும் என்றும், அவ்வாறு
செய்யும்போது வெறுமனே சுற்றி வராமல், ஒவ்வொரு சுற்று முடிந்ததும் ,
மரத்தின் அடியில் வீற்றிருக்கும் வினாயகப் பெருமான் சிலை முன்பு குனிந்து
வணங்கி பஞ்சாங்க நமஸ்காரம் செய்தாக வேண்டும்.
ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு பெண் இப்படி செய்து நமஸ்கரிக்கும்போது பெண்ணின்
அடிவயிறு அழுத்தப்படுகின்றது. இம்மாதிரி 108 முறை அழுத்தப்படும்போது அந்த
அடைப்பானது சிறிது சிறிதாக நீங்கி விடக்கூடும். அதன்பிறகு பரிபூரணமாக தடை
ஏற்படுத்தும் அடைப்பு நீங்கியவுடன், சினை முட்டைகள் இப்போது எளிதாக
கருப்பையைச் சென்று எளிதாகச் சேர்ந்துவிட முடியும். பிறகு புத்திர
பாக்கியம் சுலபமாக ஏற்பட்டு விடும்.
தாவரங்களில் அதிகப்படியான பிராண வாயுவை வெளியிடும் தாவரம் அரச மரம்தான்.
அதற்கடுத்து வேப்பமரம். சூரிய உதயத்தில் அரச பிரதட்சிணம் செய்யும்போது
இம்மரத்தடியில் ஆரோக்கியமான வகையில் காற்றோட்டம் அமைந்திருப்பதுதான்.
அதாவது சூரிய ஒளிக்கு முன் இம் மரத்திற்கு மேல் "ஓஸோன்" என்னும்
காற்றழுத்த மண்டலம் ஒன்று அமையப்பெற்று , பிராண வாயுவை வெளியிடாமலும்,
சிதற விடாமலும், மரத்தடியில் உள்ளவர்க்கு அளிக்கின்றது. இந்த அமைப்பு
சூரிய ஒளி ஏற்பட்டவுடன் சிதறி காற்றழுத்தத்தையும் சிதைத்துவிடுகின்றது.
சிலருக்கு திருமணத்திற்கு சில தோஷங்கள் தடையாக அமைந்துள்ளன. அவைகளுள் நாக
தோஷம் ஒன்றாகும். அரச மரத்தடியில் பெரும்பாலும் வினாயகர் சிலையுடன், நாக
தேவதைகளின் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். காலையில் குளித்து
முடித்து , நம்பிக்கையோடு, மரத்தை பிரதட்சிணம் வரும்போது நாகதோஷத்தின்
பாதிப்பும் விலகி, திருமணம் இனிது நிறைவேறும்.
அரசமரமும், வார வழிபாடும் :
ஞாயிறு: ஞாயிறு அன்று அரச மரத்தை வலம் வந்து சூரியனைப் பிரார்த்தனை
செய்தால் எல்லாவிதமான துன்பங்களும் விலகும்.
திங்கள்: திங்கட்கிழமை சிவபெருமானை மலர்களால் அர்ச்சித்து அரசமரத்தை வலம்
வந்தால் சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.
செவ்வாய்: செவ்வாய்க்கிழமை அன்னை உமா தேவியை அர்ச்சித்து அரச மரத்தை வலம்
வந்தால் காரியசித்தி, உத்தியோக உயர்வு முதலான பல்வேறு வெற்றிகளும்
எளிதில் அடையலாம்.
புதன்: புதன்கிழமை தேவகணங்களை நமஸ்கரித்து அரச மரத்தை வலம்
வருபவர்களுக்கு விரும்பிய லாபங்கள் கிடைக்கும். வர்த்தகர்களுக்கு
சுபிட்சம் தரும் என்பது குறிப்பிடத்தக்கது.
வியாழன்: வியாழன் அன்று தட்சிணாமூர்த்தியை வணங்கி அரச மரத்தை பிரதட்சிணம்
செய்தால் கல்வி ஞானமும் கீர்த்தியும் பெற முடியும்.
வெள்ளி: வெள்ளிக்கிழமை லட்சுமியை நமஸ்கரித்து அரச மரத்தை வலம் வந்தால்
அமோக ஐஸ்வரியமும் யோக சுபிட்சங்களும் குவியும்.
சனி: மகாவிஷ்ணுவிற்கு நைவேத்தியங்கள் செய்து வணங்கி, அரச மரத்தை வலம்
வந்தால் சர்வ துக்கமும் போகும்.
அரசமரத்தை 7 முறை சுற்றினால் இஷ்ட சித்தி.
9 முறை சுற்றினால் காரிய ஜயம்.
11 முறை சுற்றினால் சற்குணம் உண்டாகும்.
13 முறை சுற்றினால் புத்திர பிராப்தி.
15 முறை சுற்றினால் ஆயுள் அபிவிருத்தி.
108 முறை சுற்றினால் தன பிராப்தி, தன விருத்தி.
1008 முறை சுற்றினால் அஸ்வமேத யாக பலன் கிடைக்கும்.
அரச மரத்தடி விநாயகர் மட்டுமல்ல அரசமரமே சக்தி வாய்ந்தது தான்.
பெரியவர்கள் பஞ்சாயத்து பேசுவதற்கும் சிறியவர்கள் பம்பரம் விளையாடுவதற்கு
மட்டுமே அரசமர நிழல் பயன்படுவதாக நினைப்பது தவறு. சித்திரை, வைகாசி போன்ற
கடும்வெயில் கால மாதங்களில் மதிய நேரம் அந்த நிழலில் இளைப்பாறினாலே தோல்
சம்பந்தப்பட்ட நோய்கள் வராது. இருக்கும் நோய் கூட வீரியம் குறையும்.
மருத்துவக் குணங்கள்:
அரச மரத்தினுடைய காற்று கர்ப்பத்தையே பலப்படுத்தக்கூடிய அளவிற்கு
மருத்துவ சக்தி பெற்றது. அரச மரத்தில் ஒருவித மின் ஆற்றல்கள், பாசிடிவ்
எனர்ஜி அளிக்கக் கூடிய மின் ஆற்றல்கள் அரச இலை போன்றவற்றில் இருக்கிறது.
அரசங்குச்சியில் இருந்து வரக்கூடிய புகை மூச்சுத் திணறல், சளித்
தொந்தரவுகளை போக்கக் கூடியது. நரம்புகளை முறுக்கேற்றக் கூடியது. சோர்வு,
களைப்பு, நரம்புத் தளர்ச்சியுடன் இருப்பவர்களுக்கெல்லாம் மிகவும் நல்லது.
குறிப்பாக சொல்ல வேண்டுமானால், விந்தணுக்களினுடைய எண்ணிக்கை
அதிகப்படுத்தக்கூடிய பலப்படுத்தக்கூடியதெல்லாம் அரச பழத்தை பதப்படுத்தி
உண்ணும் போது வருகிறது.
நம்முடைய மூதாதையர்கள், முன்னோர்கள் அரச மரத்தின் மருத்துவ குணங்களை
சூசகமாக சொல்லிச் சென்றிருக்கிறார்களே தவிர, நேரடியாக அறிவியலாக அதை
சொல்லாமல் சென்றுவிட்டார்கள். அதனால், பகுத்தறிவாளர்கள் இதெல்லாம் மூட
நம்பிக்கை, அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று சொல்ல
ஆரம்பித்துவிட்டார்கள்.
நம் முன்னோர்கள் அரச, வேம்பு போன்ற மரங்களை மண்ணில் நட்டு, வளர்த்து,
பராமரிப்பது என்பது பரிகாரம் போன்றது என்று சொல்லியிருக்கிறார்கள். ஒரு
அரச மரத்தை நட்டு அதன் கீழ் 10 பேர் உட்கார்ந்து மருத்துவ குணம் பெற்று
உடல் நலம் தேறிச் செல்கின்றனர் என்றால், அந்தப் புண்ணியம் அந்த மரத்தை
நட்டவரைப் போய்ச் சேரும்.
அதிகளவு ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் மரங்களுள் அரச மரமும் ஒன்று. எனவே
அரச மரத்தை நட்டு அதன் பயனை நாமும், நம் சந்ததியினரும் பெற வழி செய்வோம்.
தமிழ்மலர் மின்-இதழ் படியுங்கள்
"தமிழ்மலர்" மின்-இதழுக்கு ஒரு ஆண்டிற்கான சந்தாக் கட்டணம் (Rs.20 only)
மட்டுமே. ஒவ்வொரு மாதமும் உங்கள் இ-மெயிலுக்கு ஒரு மின்-புத்தகம்
(E-Book) அனுப்பப்படும். சந்தாக் கட்டணத்தை செக் (Cheque), டிமாண்ட்
டிராப்ட் (D.D), மணியார்டர் (Money Order)"நெட் பேங்கிங்" (Net Banking)
அல்லது டெபிட் கார்டு (Debit Card), கிரெடிட் கார்டு (Credit Card) மூலம்
செலுத்தலாம்.
செக் / டி.டி அனுப்புபவர்கள் "S.MALLIGA" என்ற பெயரில் செக் / டி.டி
எடுத்து அனுப்புங்கள். சந்தாக் கட்டணத்தை (Rs.20 only) செக் (Cheque),
டிமாண்ட் டிராப்ட் (D.D) அல்லது மணியார்டர் (Money Order) மூலம் அனுப்ப
வேண்டிய முகவரி :
Mrs.S.Malliga
3/1178, Lingapuram Colony
Opp. Latcham Theater
Sivakasi - 626189.
சந்தாக் கட்டணத்தை Net Banking மூலம் செலுத்த விரும்பினால், கீழ்க்கண்ட
Bank Account-ல் பணம் செலுத்துங்கள்.
Bank : TAMILNAD MERCANTILE BANK
Branch : SIVAKASI
IFSC CODE : TMBL0000003
Bank A/C Name : S.ARUMUGASAMY
Bank A/C Number : 003100050127211
டெபிட் கார்டு (Debit Card) அல்லது கிரெடிட் கார்டு (Credit Card) மூலம்
சந்தாக் கட்டணத்தை செலுத்த விரும்பினால், கீழ்க்கண்ட இணையதள முகவரியில்
பணம் செலுத்துங்கள்.
http://imojo.in/5gkq2r
நீங்கள் பணம் அனுப்பிய பிறகு, அது பற்றிய விபரங்களை எங்களுக்கு
இ-மெயிலில் infot...@gmail.com-க்கு அனுப்புங்கள். ஒவ்வொரு மாதமும்,
இ-புத்தக வடிவில் (E-Book) "தமிழ்மலர்" மின்-இதழை உங்களுடைய இ-மெயிலுக்கு
அனுப்புகிறோம். அந்த இ-புத்தகத்தை உங்கள் இ-மெயிலிருந்து டவுன்லோடு
(Download) செய்து படித்துக்கொள்ளுங்கள்.
1. கலை 2. பண்பாடு 3. அறிவியல் 4. தொழில்நுட்பம் 5. ஆன்மீகம் 6. வணிகம்
7. தமிழ் 8. ஆங்கிலம் 9. வரலாறு 10. உயிரியல் 11. புவியியல் 12. கணிதம்
13. மகளீர் 14. பொருளாதாரம் 15. விளையாட்டு 16. மருத்துவம் 17. அரசியல்
18. சுற்றுலா 19. சிறுதொழில் 20. சிறுகதை 21. கவிதை 22. நகைச்சுவை 23.
பொது அறிவு - தொடர்பான தரமான தகவல்களுடன் மின்அஞ்சல் (e-mail) வழியாக
"தமிழ்மலர் மின்-இதழ்" உங்களுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படும்.
தமிழ்மலர் மின்இதழ் - ஏப்ரல் 2016 புத்தகத்தை டவுன்லோடு செய்ய இங்கே
க்ளிக் செய்யுங்கள்
Click here to Download Tamil Malar April 2016 E-Magazine (in PDF Format)
Edited by : Mrs.S.Malliga
Contact Address : 3/1178, Lingapuram Colony, Sivakasi - 626189.
E-Mail :
infot...@gmail.com
Website :
http://tgv.netne.net
Visit our Website to read interesting General Knowledge informations.
--
nothing is difficult unless you make it appear so.
r. aravind,
Assistant manager
Department of sales
bank of baroda retail loan factory, Chennai.
mobile no:
+91 9940369593, 9710945613.
email id :
aravi...@yahoo.com,
aravind.a...@gmail.com.