அறிவியல் ஆயிரம்: சிலந்தி வலை
சிலந்தி வலையில் வட்டம், குறுக்காக இழைகள் இருக்கும். வட்ட இழைகளில்தான் பசை இருக்கும். குறுக்கு இழைகளில் பசை இருக்காது. அதனால் சிலந்தி அதன் வலையில், குறுக்கு இழைகளில்தான் நடக்கும். வட்டமான இழைகளைத் தொடாது.
அப்படியே அதில் பட்டு விட்டாலும் ஒட்டாமல் இருக்க அதன் வளைந்த கால்கள், கால்களில் உள்ள பிரத்யேக ரோமங்கள் உதவுகின்றன. சிலந்திகளுக்கு அதன் வலைகளின் மூலைகளே பிடித்த இடம். அதன் உமிழ்நீராலேயே அது வலையைப் பின்னும். வலையில் ஏதேனும் இழை அறுந்தாலும் திரும்பவும் அந்த இடத்தை மிக அழகாகப் பின்னி விடும்.
தகவல் சுரங்கம்:தேசிய கணித தினம்
உலகின் தலைசிறந்த கணித மேதைகளில் ஒருவர் சீனிவாச ராமானுஜன். இந்தியாவில் இளைஞர்களிடம் கணித ஆர்வத்தை வளர்க்கும் வகையில் இவரது பிறந்த தினமான டிச. 22, தேசிய கணித தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அனைத்து துறைகளிலும் கணிதம் முக்கியமானது.
உலகின் ஆரம்பகால கணித வளர்ச்சிக்கு இந்தியா பல்வேறு பங்களிப்பை செய்துள்ளது. பூஜ்யத்தை உலகுக்கு அறிமுகம் செய்தது இந்தியாதான். விடை காண முடியாத 6 ஆயிரம் தேற்றங்களை நிரூபிக்க முயற்சி எடுத்தார் ராமானுஜன். ஆர்க்கிமிடிஸ், நியூட்டன் போன்ற விஞ்ஞானிகளுடன் ஒ