அறிவியல் ஆயிரம் : சமையலறையில் பிளாஸ்டிக் துகள்

0 views
Skip to first unread message

Dhivisha dhivi

unread,
Jun 9, 2026, 9:00:29 PM (2 days ago) Jun 9
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம் : சமையலறையில் பிளாஸ்டிக் துகள்
 
 

பயன்படுத்தி துாக்கி வீசும் பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் பாத்திரம் கழுவ பயன்படும் பஞ்சுகள், பிளாஸ்டிக் நுண் துகள்களின் ஆதாரமாக உள்ளது என ஜெர்மனியின் பான் பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. தினசரி பயன்பாட்டில் பஞ்சு தேய்வதால், அதிலிருந்து பிளாஸ்டிக் நுண்துகள்கள் வெளியேறுகின்றன. ஒரு வீட்டில், ஆண்டுக்கு தோராயமாக 0.68 கிராம் முதல் 4.21 கிராம் (பஞ்சுகளை பொறுத்து) பிளாஸ்டிக் நுண் துகள் வெளியிடப்படுகிறது. உலகில் 2 லட்சம் - 10 லட்சம் கிலோ, நுண்துகள் வெளியாகிறது என தெரிவித்துள்ளனர்.
  தகவல் சுரங்கம் : பேச்சுவார்த்தையின் வலிமை
 
 உலகில் பல்வேறு நாகரிகங்கள், வாழ்க்கை முறைகள் உள்ளன. உலகில் அமைதியை நிலைநாட்டுவதற்கு பேச்சுவார்த்தை ஒன்றே வழி. இவற்றை வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ஜூன் 10ல் உலக நாகரிகங்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை தினம் கடைபிடிக்கப்படுகிறது. 2024ல் ரஷ்யா முன்மொழிந்த இத்தீர்மானத்தை 80 நாடுகளின் ஆதரவுடன் ஐ.நா., ஏற்றுக்கொண்டது. பல்வேறு விஷயங்களில் நாடுகளிடையே பிரச்னைகள் உருவாகலாம். ஆனால் இதற்கு தீர்வு, பேச்சுவார்த்தையின் மூலம் காணலாம். இது அமைதி, நல்வாழ்வு, வளர்ச்சி, முன்னேற்றத்துக்கு வழிவகுக்கிறது.
Reply all
Reply to author
Forward
0 new messages