அறிவியல் ஆயிரம்
அணு ஆயுத போரின் ஆபத்து
ago-btn
audio-btn
comment-btn
உலக நாடுகளிடையே போர் அதிகரிக்கிறது. ஒருவேளை பெரிய அளவில் அணு ஆயுத போர் ஏற்பட்டால், உணவு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும். இது 7 - 8 ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்பதால் மக்கள் பட்டினியால் பாதிக்கப்படுவர் என அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலை ஆய்வு எச்சரித்துள்ளது. மேலும் அணு குண்டுகள் வெடித்தால் மேல் எழும்பும் புகை, துாசி உள்ளிட்டவை வளிமண்டத்தில் சேர்ந்து, சூரிய ஒளி திறனை மாதக்கணக்கில் குறைத்து விடும். மேலும் அணுஆயுதத்தால் வெளியாகும் நைட்ரஜன் ஆக்சைடு, வளிமண்டலத்தில் ஓசோன் படலத்தை பாதிக்கும்.
தகவல் சுரங்கம்
இளைஞர்கள், யானைகள் தினம்
S
ago-btn
* உலகில் பாதி பேர் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள். இது 2030ல் 57% என அதிகரிக்கும். நாட்டின் முன்னேற்றத்துக்கு இளைஞர்களின் பங்களிப்பு அவசியம். இதை வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ஆக. 12ல் சர்வதேச இளைஞர்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
* யானைகளை பாதுகாப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த ஆக., 12ல் உலக யானைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. வனப்பரப்பு குறைவது, உணவு, தண்ணீர் பற்றாக்குறை உள்ளிட்டவை இதன் அழிவுக்கு காரணமாகிறது. ஆப்ரிக்கா, ஆசியாவில் தான் யானைகள் அதிகம். ஆசிய யானைகளில் 44 சதவீதம் இந்தியாவில் உள்ளன.
Se