அறிவியல் ஆயிரம் : கொசுக்கள் கடிப்பது ஏன்

0 views
Skip to first unread message

Dhivisha dhivi

unread,
Jun 21, 2026, 9:05:43 PM (10 days ago) Jun 21
to valluvanpaarvai, inaiathendral, brailleacl

அறிவியல் ஆயிரம் : கொசுக்கள் கடிப்பது ஏன்
 
கொசுக்கள் கடிப்பது ஏன்

கொசுக்கள், உருவத்தில் சிறியதாக இருந்தாலும், அவை உருவாக்கும் உடல்நல பாதிப்புகளில் பெரியது. சிலரை கொசுக்கள் அடிக்கடி கடிக்கும். சிலரை அந்தளவுக்கு கடிக்காது. இதற்கான காரணம் குறித்து சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். மனிதர்கள் வெளியேற்றும் வாயுவை (வாசனை), 100 மீட்டர் துாரத்தில் இருந்தே கொசுக்கள் கண்டறிந்து விடுகிறது. ஒருவரது தோலில் இருந்து வெளியாகும் வாசனை, உடல் வெப்பநிலை, வெளியேறும் வாயு, சருமத்தின் வேதியியல் பண்புகள் ஆகியவற்றின் தன்மையே காரணம் என கண்டறிந்தனர்.
  தகவல் சுரங்கம் : உலக மழைக்காடுகள் தினம்
 
மழைக்காடுகள் என்பது பெருமளவு மழைப்பொழிவு உள்ள வெப்பமண்டல பகுதிகளில் காணப்படும் அடர்ந்த காடு. இவையே பூமியின் பழமையான காடுகள். பூமியில் 50 சதவீத பல்லுயிரினங்களுக்கு இருப்பிடமாக உள்ளன. உலகில் வெளியிடப்படும் மொத்த கார்பனில் 30 சதவீதத்தை இவை உறிஞ்சுகின்றன. இயற்கை மருத்துவத்துக்கான பல மூலிகைகள் இங்கு தான் கிடைக்கின்றன. பூமியின் பாதுகாவலனாக விளங்கும் காடுகளை பாதுகாக்க வலியுறுத்தி ஜூன் 22ல் உலக மழைக்காடுகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகின் பெரிய மழைக்காடு அமேசான்.


Reply all
Reply to author
Forward
0 new messages