அறிவியல் ஆயிரம் : நிலவில் நகரம்
'மீண்டும் நிலவு' பயணத்தை அமெரிக்கா 'ஆர்டிமிஸ்' திட்டத்தின் மூலம் தொடங்கியுள்ளது. இம்முறை நிலவில் தரையிறங்குவதை தவிர, அங்கு தங்கி ஆய்வு செய்வதையும் இலக்காக கொண்டுள்ளது 'நாசா' விண்வெளி மையம். இதற்காக அடுத்த ஆறு ஆண்டுகளில் 'நிலவில் நகரம்' எனும் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்காக 2029 - 2032ல் நிலவில் விண்வெளி வீரர்களை தரையிறக்குதல், 60 டன் அளவிலான சரக்குகளை நிலவுக்கு அனுப்புதல், கட்டடங்களை நிறுவுதல் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த உள்ளதாக நாசா திட்டமிட்டுள்ளது.
தகவல் சுரங்கம் : பெற்றோர், பால் தினம்
* குழந்தைகளின் எதிர்காலத்துக்காக உழைக்கும் ஒவ்வொரு பெற்றோரும் போற்றுதலுக்குரியவர்கள். வயதான காலத்தில் அவர்களை அரவணைக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ஜூன் 1ல் உலக பெற்றோர்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'பெற்றோருக்காக இணைந்திருங்கள்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.
* இந்தியாவில் பால் பொருட்கள் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர் குஜராத்தின் வர்கீஸ் குரியன். இதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி ஜூன் 1ல் உலக பால் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'பெண் விவசாயிகளை கொண்டாடுங்கள்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.