அறிவியல் ஆயிரம் : உலகளவில் வறட்சி பரவுமா...

0 views
Skip to first unread message

Dhivisha dhivi

unread,
Jul 17, 2026, 9:31:03 PM (9 days ago) Jul 17
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம் : உலகளவில் வறட்சி பரவுமா...
 
பெருங்கடல்களின் வெப்பநிலை அமைப்புகள், வறட்சி ஒரே நேரத்தில் உலகளவில் பரவுவதை தடுக்க உதவுகிறது என காந்திநகர் ஐ.ஐ.டி., ஆய்வு தெரிவித்து உள்ளது. 1901 - 2020 வரையிலான பருவநிலை தொடர்பான ஆய்வுகளை பரிசோதித்தது. இதனடிப்படையில் பூமியின் 1.8 - 6. 5 சதவீத நிலப்பகுதிகள் மட்டுமே ஒரே நேரத்தில் வறட்சியை சந்திக்கின்றன. இதற்கு முந்தைய ஆய்வுகளில், பூமியில் ஆறில் ஒரு பங்கு ஒரே நேரத்தில் பாதிக்கப்படுகின்றன என தெரிவித்து இருந்தது. ஆனால் பாதிப்பு பகுதிகள் இதை விட குறைவாக இருக்கும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  தகவல் சுரங்கம் : நெல்சன் மண்டேலா தினம்
 
 
தென்னாப்பிரிக்காவில் இனவெறியை எதிர்த்து போராடிய அந்நாட்டின் முன்னாள் அதிபர் மறைந்த நெல்சன் மண்டேலாவை சிறப்பிக்கும் விதமாக அவரது பிறந்த தினம் (1918 ஜூலை 18), ஐ.நா. சார்பில் உலக நெல்சன் மண்டேலா தினமாக கடைபிடிக்கப்படுகிறது. நிறவெறியை எதிர்த்து தென் ஆப்ரிக்க அரசுக்கு எதிராக இவரது தலைமையில் பல போராட்டங்கள் நடைபெற்றன.இதனால் தொடர்ந்து 27 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். இவரை விடுதலை செய்ய உலகம் முழுவதும் கோரிக்கை எழுந்தது. 1990 பிப்., 11ல் விடுதலையானார். 1994 மே 10ல் அந்நாட்டின் அதிபரானார்.

Reply all
Reply to author
Forward
0 new messages