1,072 views
Skip to first unread message

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
May 6, 2015, 11:48:53 PM5/6/15
to brail...@googlegroups.com
தன்னேரிலாத தமிழ்
க.தில்லைக்குமரன்


”ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
யேங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் – ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது
தன்னே ரிலாத தமிழ்” – தண்டியலங்காரவுரை மேற்கோள்
Indus Valley Map
4000 ஆண்டுகளுக்கு முன் ஆதி இந்தியாவின் (பாக்கிசுதானும் சேர்த்து) பெரும்பாலானப்
பகுதிகளில் தொல் திராவிட மொழி பேசப்பட்டு வந்ததற்குச் சான்றுகள் கிடைத்து வருகின்றன.
பலுசிசுத்தான் பகுதியில் பிராகூயி என்கிற திராவிட மொழி பேசப்பட்டு வருவது இதற்குச்
சான்று. கி.மு 1900-க்குப் பின்பு ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து (கசாக்சுதான்)
சிறிது சிறிதாக அரப்பாவில் (http://en.wikipedia.org/wiki/Harappa) குடியேறத்
துவங்கினர். ஆரியர் அரப்பாவிற்கு வந்த போது சிந்து வெளி நாகரீகம் (கி.மு. 2900 –
1900) பெரும்பாலும் அழிந்திருந்தது. அங்கு வாழ்ந்த மக்கள் தொல் திராவிட மொழி
பேசியிருக்க வாய்ப்புள்ளது என்று பின்லாந்தைச் சேர்ந்த இந்தியவியல் பேராசிரியர் அசுகோ
பர்ப்போலா (http://en.wikipedia.org/wiki/Asko_Parpola) அவர்களும், தமிழகத்தைச்
சேர்ந்த திரு ஐராவதம் மகாதேவன்
(http://en.wikipedia.org/wiki/Iravatham_Mahadevan) அவர்களும் கூறுகின்றனர்.
ஆனால் அரப்பாவிலும் மொகஞ்சதாரோவிலும் பல மொழிகள் பேசப்பட்டுள்ளதாக கூறுகின்றார் ஆர்வர்டு
பல்கலைக்கழகத்தின் சமசுகிருதப் பேராசிரியர் மைக்கல் விட்சல்
(http://en.wikipedia.org/wiki/Michael_Witzel) அவர்கள். அவர் அப்பகுதியில்
முண்டா மொழிகளும் பேசப்பட்டிருக்கக் கூடும் என்கிறார். எது எப்படியோ சிந்து வெளி மக்கள்
ஆரியருக்கு முன்னரே வாழ்ந்துள்ளனர் என்று இதிலிருந்து தெரிகிறது. தொல் திராவிட மொழி
அங்கு பேசப்பட்டிருக்கும் வாய்ப்புமுள்ளது என்பது வேதகாலத்தில் ஆரியர்கள் எழுதிய இருக்கு
(Rig Veda : 1500 -1200 BCE) வேதத்திலிருக்கும் திராவிடச் சொற்கள் மூலம்
தெரிகிறது. முண்டா மொழிச் சொற்களும் இருக்கு வேதத்திலிருப்பதிலிருந்து முண்டா
மொழியும் அங்கு பேசப்பட்டிருக்க வாய்ப்புள்ளது.
ஆரியர் வருகைக்குப் பின் வட மொழியின் நெருக்கடியினாலும் ஆரிய மன்னர்களின் பலத்தினாலும்
வடக்குத் திராவிட மொழிகள் ஒன்றன்பின் ஒன்றாக அழியத் துவங்கின. தென்னிந்தியாவில்
அக்காலத்தில் ஆரிய மொழியின் தாக்கம் அதிகமில்லாததால் திராவிடமொழி அங்கு தொடர்ந்து
வழக்கத்திலிருந்தது. தொல் திராவிட மொழியிலிருந்து முதலில் தோன்றியது தமிழ் மொழி.
அதன் பின் கன்னடமும் தெலுங்கும் தோன்றின. ஆனால் இவ்விரண்டு மொழிகளிலும் சமசுகிருதத்தின்
தாக்கம் அதிகமாகவுள்ளது. 12-ம் நூற்றாண்டிற்குப் பின்பு தமிழிலிருந்து தோன்றிய மலையாள
மொழியிலும் வட மொழியின் தாக்கம் அதிகமுள்ளது. ஆனால் தமிழர் மட்டும் வட மொழி ஆதிக்கத்தை
ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்த்து தமிழின் தனித்துவத்தைக் காத்து வருகின்றனர்.
ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தமிழின் இலக்கியத் தொடர்ச்சி வியக்கத் தகுந்தது.
அதனால்தான் அன்று எழுதப்பட்ட சங்கத் தமிழ் இன்றும் நம்மால் படித்து புரிந்துக் கொள்ள
முடிகிறது. இந்த இலக்கியத் தொடர்ச்சி எம்மொழிக்குமில்லை என்பது வெறும்புகழ்ச்சியில்லை,
உண்மை. இதற்குக் காரணம் நம் முன்னோர்களின் உழைப்பும் தமிழுணர்வுமாகும். தமிழ் மன்னர்கள்
தங்களுக்குள் போரிட்டாலும் தமிழ்ப்புலவர்கள் தமிழுணர்வோடு மன்னர்களினிடையில் அமைதிக்காகப்
போராடியுள்ளனர் என்பதை புறநானூற்றுப் பாடல்களில் காணலாம். (எ.கா. புறம் 27).
அதியனுக்கு ஆதரவாக ஔவை மூவேந்தர்களிடம் பேசியது சங்கப் பாடல்களில் காண்கிறோம்.
தமிழின் தொன்மையை அறிய மற்றுமொரு சான்று கி.மு. 2-ம் நூற்றாண்டில் காரவேல மன்னனின்
புவனேசுவரம் நகர் (ஒரிசா மாநிலம்) அருகிலுள்ள உதயகிரி மலையிலுள்ள அதிகும்பா
கல்வெட்டுக்கள் (http://en.wikipedia.org/wiki/Hathigumpha_inscription).
அக்கல்வெட்டுக்களில் காரவேல, ’த்ரமிரா (தமிழ்) கூட்டரசை (confederacy)’ தோற்கடித்ததாக
கூறப்பட்டுள்ளது. இதை ஆய்ந்த அமெரிக்காவில் வாழும் முனைவர் சு. பழனியப்பன் அவர்கள்
அகநானூற்றின் 31-ம் பாடலை மேற்கோள் காட்டித் தமிழர் கூட்டரசு இருந்ததை நிறுவியுள்ளார்.
மாமூலனார் எனும் சங்கப் புலவர் எழுதிய அப்பாடல், “தமிழ் கெழு மூவர் காக்கும் மொழி பெயர்
தேஎத்த பல் மலை”. இப்பாடலில் மூவர் என்பது சேர, சோழ, பாண்டியரைக் குறிக்கிறது என்பது
தெள்ளத் தெளிவு. இம்மூவரின் தமிழ்ப் படை வடக்குத் தமிழகத்தில் நிலை கொண்டு தமிழகத்தைக்
காத்து வந்தது என்பது இப்பாடலின் மூலம் தெளிவாகிறது. பழனியப்பன் அவர்களின் ஆய்வைக்
கீழ்க்கண்ட இந்தியவியல் குழுமத்தில் காணலாம்.
http://listserv.liv.ac.uk/cgi-bin/wa?A2=ind0908&L=INDOLOGY&P=R4899&I=-3
http://listserv.liv.ac.uk/cgi-bin/wa?A2=ind0908&L=INDOLOGY&P=R6548&I=-3
மேலும் சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோ ஒரு தமிழ்த் தேசியவாதியாக வாழ்ந்துள்ளார் என்பது
அவரது காவியத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம். சேரநாட்டில் பிறந்த அவர் சோழநாட்டையும்,
பாண்டிய நாட்டின் பெருமையையும் தம்நூலில் விவரித்துள்ளார். செக்கோசுலேவியால் பிறந்த
பெரும் தமிழறிஞரான பேராசிரியர் கமில் சுவலபில் அவர்கள் சிலப்பதிகாரத்தைத் ‘தமிழில்
எழுதப்பட்ட முதல் தமிழ்த்தேசிய நூல்’ என்று வருணித்துள்ளது கவனிக்கத் தக்கது. மேலும் அவர்
எழுதிய”Smile of Murugan, The Tamil Literature” என்கிற நூலில்,
”There is no “Dravidian” Literature per se. It is however entirely
different with respect to Tamil Literature. It is of course only the
earliest period of the Tamil literature which shows those unique
features. But the early Tamil poetry was rather unique not only by
virtue of the fact that some of its features were so unlike everything
else in India, but by its literary excellence. There is yet another
important difference between Tamil and other Dravidian literary
languages: the meta language of Tamil has always been Tamil, never
Sanskrit.
Tamil and Sanskrit cultures have shared with each other. The very
beginnings of Tamil literature manifest clear traces of Aryan influence
– just as the very beginnings of Indo-Aryan literature, the Rgvedic
hymns, and show traces of Dravidian influence. On the other hand, there
are some sharply contrasting features which are typical for Tamil
classical culture alone, for the Tamil cultural and literary tradition
as opposed to other non-Tamil tradition – and in this respect, Tamil
cultural tradition is independent, not derived, not imitative; it is
pre-Sanskritic, and from this point of view Tamil alone stands apart
when compared with all other major languages and literatures of India”
AK Ramanujan
அமெரிக்காவில் பணியாற்றிய மற்றுமொரு பெரும் தமிழறிஞரான பேராசிரியர் அ.கி.
இராமானுசன் அவர்கள் தமிழைக் குறித்து எழுதும் போது, ”In most Indian languages
the technical gobbledygook is Sanskrit; in Tamil the gobbledygook is
ultra-Tamil. Tamil, one of the two classical languages of India, is the
only language of contemporary India which is recognizably continuous
with a classical past”.
அண்மையில் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரிலுள்ள பொருந்தல் என்கிற கிராமத்தில் புதை
குழியொன்றில் பிராமி எழுத்துக்கள் பொறித்த பானையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கு
இறந்தவருடன் புதைக்கப்பட்ட விலையுயர்ந்த மணிகள் போன்ற பல பொருள்களுடன் நெல்மணிகளும்
கண்டெடுக்கப்பட்டுள்ளன. அந்த நெல்மணிகள் கி.மு. 490-ம் ஆண்டைச் சேர்ந்தவை என்று ஒரு
அமெரிக்க நிறுவனம் மூலம் அறியப் பட்டுள்ளது. இப்பானையில் தமிழ்ப் பிராமி
எழுத்துக்களினால் ‘வயரா’ என்று எழுதியிருந்ததை வைத்துப் பார்க்கையில் பிராமி
எழுத்துக்கள் அக்காலத்தில் புழக்கத்திலிருந்திருக்கின்றன என்பது தெளிவாகிறது.
(http://www.thehindu.com/news/states/tamil-nadu/article2408091.ece)
இக்கண்டுபிடிப்பினால் பிராமி எழுத்துக்கள் அசோகப் பேரரசனுக்கு பின்பு தமிழகத்தில்
புழக்கத்திற்கு வந்தது என்பது கேள்விக்குறியாகிறது.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட சங்கப் பாடல்கள் மூலம் பழந்தமிழர் வாழ்வை நாம்
தெளிவாக அறிய முடிகிறது. சாதி, மத பேதமின்றி, எவ்வித ஏற்றதாழ்வுமின்றி தமிழர்கள்
வாழ்ந்திருப்பதை நாம் காண முடிகிறது. தன்னேரிலாத தமிழ் மொழியை இன்று நாம் படிப்பதற்கு
முக்கியக் காரணம் தமிழ்ப் பெரியவர்கள் உ.வே.சாமிநாதைய்யரும் ஈழத்தைச் சேர்ந்த சி.வை.
தாமோதரம் பிள்ளையவர்களும்தான். அதுவரை சங்க இலக்கியங்கள் தமிழ் அறிஞர்களால் அறியப்படாமல்
இருந்தன. இவர்கள் இருவரைத் தொடர்ந்து பல தமிழறிஞர்கள் சங்க நூல்களைப் பதிப்பித்து
உரையெழுதியுள்ளனர்.
திராவிட மொழிக்குடும்பம் குறித்த ஆய்வு கி.பி 1800-க்கு பின்புதான் துவங்கியது.
அதற்கு முன் அனைத்து மொழிகளும் (தமிழ் உட்பட) சமசுகிருதத்திலிருந்து தோன்றியதாகத்தான்
அறிஞர்கள் கருதியிருந்தார்கள். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு போன்ற மொழிகள்
திராவிட மொழியிலிருந்து தோன்றின என்கிற உண்மையை உணர்த்தியர்வர்கள் மேலை நாட்டு
மொழியிலறிஞர்கள்தான். 1816-ம் ஆண்டு பிரான்சிசு எல்லிசு (Francis W. Ellis) அவர்கள்
A.D. Campbell அவர்களின் ‘A Grammar of the Teloogoo Language’ என்கிற நூலின்
அறிமுகவுரையில் திராவிட மொழிகளைக் குறித்து எழுதியுள்ளார். அவர் முதலில்
தென்னிந்திய மொழிக்குடும்பம் என்று அழைத்தார். அதன் பின்பு 1856-ம் ஆண்டில் இராபர்ட்
கால்டுவெல் என்கிற பாதிரியார் தனது வரலாற்றுச் சிறப்புமிக்க நூலான ‘A comparative
Grammar of the Dravidian or South-Indian Family of Languages’ என்கிற
நூலில் முதன் முறையாகத் திராவிட மொழிக்குடும்பத்தைக் குறித்து எழுதி, தமிழ் உட்பட
மற்றைய திராவிட மொழிகள் சமசுகிருதத்திலிருந்து தோன்றவில்லை. இவையொரு தனி மொழிக்
குடும்பம் என்று உலகிற்கு உணர்த்தினார். (Preface of ‘A Dravidian Etymological
Dictionary’ by T. Burrow and M.B. Emeneau).
தமிழ் மொழிக்கு மேலை நாட்டு அறிஞர்கள் செய்த தொண்டு சிறப்பு மிக்கது. அவர்கள் தமிழை
அறிவியல் பூர்வமாக, மொழியியல் அடிப்படையில் ஆய்ந்து தமிழுக்குச் சிறப்பு சேர்த்துள்ளனர்.
இராபர்ட் கால்டுவெல், அருட்தந்தை ஜியு போப், பேராசிரியர் கமில் சுவலபில், பேராசிரியர்
அ.கி. இராமானுசன், பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட்டு, முனைவர் சு. பழனியப்பன் மற்றும்
பலருக்கு நாம் கடமைப் பட்டுள்ளோம். அவர்களுடன் தமிழகத்தில் தமிழைக் காக்க உழைத்த மறைமலை
அடிகள், தேவநேயப் பாவாணர், திரு.வி.க, இலக்குவனார், பெருஞ்சித்திரனார் போன்ற
ஆயிரக்கணக்கான அறிஞர்களுக்கு நாம் செய்யும் கடமையொன்றே. தன்னேரிலாத தேனினும் இனிய
தமிழை நாமும் கற்று அடுத்த தலைமுறைக்கு தமிழிலக்கியத்தை எடுத்துச் செல்வதுதான் அது.
கடந்த 30 ஆண்டுகளில் பல்வேறுக் காரணங்களினால் நல்ல தமிழறிஞர்கள் தமிழகத்தில் தோன்றுவது
பின் தங்கி விட்டது. அதற்கு அரசும் ஒரு காரணம் என்று கூறுவதில் தவறேதுமில்லை. மீண்டும்
தமிழை அரியணையிலேற்றி அதை மேம்படுத்துவது நம் கடமை. அதற்கான பணியை நாம்
தமிழுணர்வாளர்களுடனும், தமிழ் நாட்டிலும் மேலை நாட்டிலும் வாழும் தமிழறிஞர்களுடனும்
இணைந்து செயல்பட்டு உருவாக்க வேண்டும்.


--
--
இருள்கவிந்தால் ஒளிகிளம்பி விரட்டுதல்போல் இன்னுயிராம் தமிழ்க்கின்னல் சூழுமென்றால் திரள்திரளாய் ஒளிப்பிழம்புத் தீரர் கூட்டம் திரண்டெழுந்தால் பகையிருட்டுத் தூள் பறக்கும்.
இவன்
கெ. குமார்
உதவிப் பேராசிரியர்
தமிழ்த் துறை மாநிலக் கல்லூரி தன்னாட்சி சென்னை-5.


அலைபேசி எண் – 9444218357.
kaviku...@gmail.com

--
--
இருள்கவிந்தால் ஒளிகிளம்பி விரட்டுதல்போல் இன்னுயிராம் தமிழ்க்கின்னல் சூழுமென்றால் திரள்திரளாய் ஒளிப்பிழம்புத் தீரர் கூட்டம் திரண்டெழுந்தால் பகையிருட்டுத் தூள் பறக்கும்.
இவன்
கெ. குமார்
உதவிப் பேராசிரியர்
தமிழ்த் துறை மாநிலக் கல்லூரி தன்னாட்சி சென்னை-5.


அலைபேசி எண் – 9444218357.
kaviku...@gmail.com

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
May 7, 2015, 12:06:19 AM5/7/15
to brail...@googlegroups.com
பக்தியும் அற்புதங்களும்
பேராசிரியர். க.பூரணச்சந்திரன்

Apr 25, 2015

0
inShare
1
Tweet
This page has been shared 1 times. View these Tweets.

0
இதை பொதுவாக விரும்ப இங்கு கிளிக் செய்க.


4
LikeLike

pakthiyum arputhangalum2
உலக மொழிகளிலேயே தமிழில்தான் பக்தி இலக்கியம் மிகுதியாக இருக்கிறது. ஏறத்தாழத் தமிழ்
இலக்கியப் பரப்பில் பாதியளவுக்கும் மேல் பக்தி இலக்கியம்தான். பரிபாடலில் காணும் முருகன்,
திரு மால் பற்றிய வழிபாட்டுப் பாக்களில் தொடங்கி, காரைக்காலம்மையார் வழியாக,
நாயன்மார்கள், ஆழ்வார்கள் ஊடே பயணம் செய்து கடைசியாக தாயுமானவர், மஸ்தான் சாகிபு,
வள்ளலார் வரையிலும் வந்து நிற்கிறோம். அதற்குப் பின்னும் தொடர்ந்து எழுதிவருபவர்கள் உண்டு.
ஆனால் அவை பெரும்பாலும் சிற்றிலக்கியங்கள் புராணங்கள் என்று ஆகிவிடுகின்றன.
இதைப் பெருமையாகச் சொல்பவர்களும் இருக்கிறார்கள், சிறுமையாகக் கருதுபவர்களும்
இருக்கிறார்கள். ஆங்கிலம் வணிகத்தின் மொழி என்றால், பிரெஞ்சு காதலின் மொழி என்றால்,
ஜெர்மன் தத்துவத்தின் மொழி என்றால்…. என்று நீட்டிக்கொண்டே போய், தமிழ் பக்தியின் மொழி என்று
முடிப்பவர்கள் உண்டு.
இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் இதனை எப்படி எதிர் கொள்வது என்பது மிகப் பெரிய
பிரச்சினை. ஆங்கிலம் போன்ற மொழிகளில் பக்தி இலக்கியம் என்ற ஒன்று இல்லவே இல்லை யாதலின்
அவர்கள் இதனை இலக்கியம் என்ற வட்டத்திற்குள் சேர்க்காமலே விட்டுவிட்டார்கள். ஆனால் தமிழின்
பக்திமணத்தில் அமிழ்ந்து பாராட்டியவர்களும் உண்டு. உதாரணமாக, திருவாசகத்தை மொழிபெயர்த்த
ஜி. யூ. போப், அதற்கு இணையான உருக்கமான இலக்கியம் உலகில் இல்லை என்று பாராட்டுகிறார்.
இது ஒருபுறமிருக்க, நாம் பாடப்புத்தக கர்த்தாக்களுக்கு பக்தி இலக்கியம் ஒரு தலைவலி.
அவர்களுக்கு சைவ இலக்கியத்தில் ஒரு பக்திப் பாடலைப் பாடமாக வைத்தால், வைணவ இலக்கியத்தில்
ஒன்று வைக்க வேண்டும்; பிறகு முஸ்லிம் இலக்கியம், கிறித்துவ இலக்கியம் என்று அவ்வவற்றில்
ஒவ்வொரு பாடலையாவது பாடமாக வைத்தாக வேண்டும். இல்லையென்றால் தம்மை மதச்சார்புள்ளவர்கள்
என்று சொல்லிவிடுவார்களோ என்ற பயம். அதனால் தேவையோ இல்லையோ, மாணவர்கள் ஆண்டாண்டுதோறும்
தேவாரத்தில் அல்லது திருவாசகத்தில் சில, ஆழ்வார் பாடலில் சில, சீறாப்புராணத்தில் சில,
இரட்சணிய யாத்திரிகத்தில் சில என்று படித்தாக வேண்டும். நல்லவேளையாக சமண பௌத்த
இலக்கியங்களுக்கு யாரும் பிரதிநிதித்துவம் கேட்டு வரவில்லை போலும்!
எவ்விதமாயினும், வாழ்க்கைக்காக, வாழ்க்கைக்குள்தான் சமயம், மதம் எல்லாம் இருக்கின்றன.
மதத்திற்காக, மதத்திற்குள் வாழ்க்கை இல்லை. எனவே வாழ்க்கையின் உண்மைகளைச் சொல்லும்
அனுபவங்களைக் கொண்ட இலக்கியம் என்றுதான் பக்தி இலக்கியத்தைப் பயில வேண்டும். பக்திக்காக
அன்றி இலக்கியமாகப் பயில வேண்டும். இது சாத்தியமா என்றால் சாத்தியம் தான். எத்தனையோ
முஸ்லிம்களும் கிறித்துவர்களும் கம்பராமாயணத்தை இலக்கியமாகப் பயிலவில்லையா? எத்தனையோ
சைவர்கள் சீறாப்புராணத்தை இலக்கியச் சிறப்பு கருதிப் படிக்க வில்லையா? அதுபோல மதத்தை
ஒதுக்கிவிட்டு, இலக்கியமாக நோக்கும் பார்வை வேண்டும்.
பிற இலக்கியங்களைப் பண்பாட்டிற்கெனவும் வரலாற்றுச் சான்றுகளுக்கெனவும் படிப்பதுபோல, பக்தி
இலக்கியங்களையும் படிக்கமுடியும். பக்தி இலக்கியத்திலும் அரசு ஆதிக்கமும் வர்க்கப்
போராட்டமும் இயங்குவதைக் காணவே முடிகிறது. பெரும்பாலும் ஆதிக்க சக்திகள் பக்தியைப்
பயன்படுத்துவதால்தான் மக்கள் பிளவுபடுகிறார்கள், மோதுகிறார்கள், சமயச் சண்டைகளில்
ஈடுபடுகிறார்கள். எங்குமே வெளிப்படையாகவோ உள்ளார்ந்தோ ஆதிக்கத்திற்கு மதத்தின் ஆதரவு
தேவைப்படுகிறது. மதத்திற்கு ஆதிக் கத்தின் பலமும் பணமும் தேவைப்படுகிறது.
அர்த்தசாஸ்திரத்தில் சாணக்கியர் வெளிப்படையாகவே, அரசாங்கம் மக்களின் பக்தியைப் பணம்
திரட்டுவதற்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிறார். மக்கள் செல்லும் வழியில் கடவுள்
சிலைகளைப் புதைத்து வைத்து, அவை தானாகவே வெளித்தோன்றியவை போலக்காட்டி, அதற்காகத்
திரளும் மக்களிடம் பணம் வசூல் செய்யவேண்டும் என்கிறார். இந்தக் காலத்திலும் பிள்ளையார் பால்
குடிக்கிறது என்றவுடனே நம்பி ஓடிப்போய் பூசை செய்கின்ற மக்களைப் பார்க்கிறோம் இல்லையா?
பக்தி இலக்கியங்களில் இந்த மாதிரி அற்புதச் செயல்கள் இடம் பெறுவது ஒரு பெரிய
பிரச்சினைதான். பாடம் நடத்தும் ஆசிரியர் பக்திமானாக இருந்தால் அவை அப்படியே நடந்தன
என்று சொல்வார். அதிலும் மதவேறுபாடு உண்டு. கடவுள் பற்றி அக்கறை கொள்ளாதவராக இருந்தால்
இம்மாதிரி நடப்பது சாத்தியமில்லை என்பார். இவை காரணமாக மாணவர்களுக்கும்
ஆசிரியர்களுக்கும் நிர்வாகத்துக்கும் என மோதல்கள் ஏற்படுவதும் உண்டு.
pakthiyum arputhangalum1
இதெல்லாம் ஒருபுறமிருக்க, பக்திப்பாக்களில் காணும் அற்புதச் செயல்களை நாம் எப்படி
எடுத்துக்கொள்வது? கவிதை உள்ளத் தோடு உலகத்தை நோக்குபவனுக்கு ஒவ்வொரு இயற்கைக்
காட்சியும் அற்புதம்தான். நயாகரா நீர்வீழ்ச்சியும் ஆல்ப்ஸ் மலையும் தான் அற்புதங்கள் என்றில்லை,
வானில் காணும் மாறிச் செல்லும் மேகங்களின் பல்வேறு வடிவங்களும், புல்லின் சிரிப்பும்,
பூவின் தலையாட்டலும் அற்புதங்கள்தான். ஆனால், நாயன்மார்களுக்கும் ஆழ்வார்களுக்கும் பிற
பக்திமான்களுக்கும் பற்பல அற்புதச் செயல்கள் சுமத்தப்பட்டுள்ளன. திருநாவுக்கரசரை நீற்றறையில்
(சுண்ணாம்புக் காளவாயில்) இட்டார்களாம், அவர் அதில் உயிர்பிழைத்து வந்தாராம். கல்லோடு
சேர்த்துக் கட்டிக் கடலில் தூக்கிப் போட்டார்களாம், அதிலும் அவர் உயிர்பிழைத்தாராம்.
இப்படியெல்லாம் உண்மையில் நடந்திருக்குமா? நடந்தன என்பார்கள் சிலர். நடந்திருக்காது,
கட்டுக்கதை என்பார்கள் சிலர்.
நீற்றறையில் இட்டபோது நாவுக்கரசர் பாடிய பாடல் எது?
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே.
என்பதை எடுத்துக்காட்டுவார்கள். இதில் இறைவனின் இணையடி நிழல் வீணையின் கானம் போலவும்
முழுநிலவு போலவும் தென்றல்போலவும் இளவேனிற் காலம் போலவும் பொய்கை போலவும் இனிமையானது
என்றிருக்கிறதே தவிர, வேறு என்ன இருக்கிறது? இதே போலத்தான், அவரைக் கடலில் இட்டபோது
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணையாவது நமச்சிவாயவே
என்று பாடினார் என்பர். இதிலும், கல்லைக் கட்டிக் கடலில் இட்டாலும் சரி, நமச்சிவாயம்தான்
துணை என்ற பொதுவான கூற்றுதான் இருக்கிறதே தவிர, தம்மை அவ்வாறு இட்டதாக, இறைவன்
அற்புதச் செயலால் தாம் பிழைத்ததாக எங்கிருக்கிறது? பூம்பாவை இறந்தபோது ஞானசம்பந்தரும்
இவ்வுலக இன்பங்களையெல்லாம் இழந்து போகின்றாயே பூம்பாவாய் என்று பாடும் குரல் கேட்கிறதே
தவிர, எலும்பைச் சாம்பலைப் பெண்ணாக்கினார் என்று எங்கிருக்கிறது?
கண்ணனைத் தன் காதலனாக, மணாளனாக வரித்த ஆண்டாளும், கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ
திருப்பவளச் செவ்வாய்தான் தித்திருக்குமோ என்றெல்லாம் பாடுவது கற்பனை தானே தவிர, இது
உண்மையில் அனுபவித்தது என்று சொல்ல முடியுமா?
நல்ல பக்திமான்களின் பாக்கள் யாவும் இம்மாதிரி இறைவன் தரும் இன்பத்தைப் பாடுபவையே தவிர,
அவற்றில் அற்புதச் செயல்கள் செய்த குறிப்பிருப்பதாகக் கொண்டது நமது தவறான பார்வை என்றே
கருதுகிறேன். ஆனால் சிவபெருமானோ திருமாலோ செய்ததாகப் பல அற்புதச் செயல்கள்
இப்பாக்களில் இடம் பெறுகின்றன. இறைவன் எதனையும் செய்ய வல்லவன் என்பதை உணர்த்துவது இதன்
நோக்கமாகலாம். மாணிக்கவாசகரும் ஓரிடத்தில் இறைவன் கருதினால் நரியைப் பரியாக்க
முடியும், பரியை நரியாக்க முடியும் என்று பாடுகிறாரே அன்றி, தம் வாழ்க்கையில் அவ்விதம்
இறைவன் நடத்தியதாகக் குறிப்பினைத் தரவில்லை.
இன்னும் கேட்டால், திருமாலின் அவதாரங்களில், கண்ணன் அவதாரத்தில் எத்தனையோ
துராக்ருதங்களையும் கூடக் காண்கிறோம். இறைவனின் நோக்கில் நன்மை-தீமை என்பவைகூடச்
சார்புள்ளவை தான் என்று உணர்த்துவது இதன் நோக்கமாகலாம். ஆகவே இறைவனின் அருளாற்றலை
மேம்படுத்திச் சொல்வதற்காகப் புனைந்த கதைகள் என்று இவற்றைக் கொள்ளவேண்டும்.
மதங்கள் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள நிறுவனங்களின் உதவியை நாடுகின்றன. மதங்களே
நிறுவனங்களாகவும் இருக்கின்றன. இவற்றை நிலைநிறுத்துவதற்கு எத்தனையோ கதைகள்
தேவைப்படுகின்றன. மதங்களின் உண்மை நோக்கத்தை அறியாதவர்கள் இந்தக் கதைகளில்
தொலைந்துபோய்விடுகிறார்கள். அற்புதச் செயல்களில் தொலைந்துபோவது கடைசியில் யாரோசிலர்
பணம் பண்ணுவதற்கு உதவுவதாகத்தான் முடிகிறது. உண்மையில் மதங்கள் மனிதனை நல்வழிப்படுத்த
ஏற்பட்ட உத்திமுறைகள் என்றே கருதவேண்டும். எவ்வளவு தூரம் இதில் அவை வெற்றி
பெற்றிருக்கின்றன என்பதுதான் நாம் நோக்க வேண்டியது.
அற்புதச் செயல்கள் நாயன்மார்கள் ஆழ்வார்கள் வரலாற்றில் தான் என்றில்லை. நாம் இன்று
நடைமுறையிலும் அவற்றை நம்பவே செய்கிறோம். எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் தமது கடையில்
முதலில் சிவபெருமான் உருவப்படத்தை மாட்டிவைத்திருந்தார். பிறகு சிலகாலம் கழித்து அதை
நீக்கிவிட்டுத் திரு வேங்கடப் பெருமாளின் படத்தை மாட்டினார். “என்னய்யா இது, ஏன் இந்த
மாற்றம்? நீர் சைவர்தானே?” என்று அவரைக் கேட்டேன். அவர் சொன்னார்: “சிவபெருமான் படத்தை
மாட்டியிருந்தபோது எனக்கு இலாபம் வரவில்லை. எனக்குத் தெரிந்த ஒருவர்
சொன்னார்-’சிவபெருமான் ஆண்டி, பிச்சையெடுப்பவன். அவன் படத்தை மாட்டினால் நீயும்
அப்படித்தான் ஆகவேண்டும். சீனிவாசப் பெருமாள்-ஏழுமலையான்தான் உலகத்திலேயே பணக்காரக்
கடவுள். அவர் படத்தை மாட்டினால் நீயும் பணக்காரனாகி விடுவாய், இலாபம் வந்து கொட்டும்’
என்றார். அதனால் நான் படத்தை மாற்றிவிட்டேன்” என்றார். அவருக்குப் பணம் வந்து கொட்டியதோ
இல்லையோ தெரியாது, இன்றும் அற்புதச் செயல்களை நம்புபவர்கள்-தங்களுக்கேற்ற கதைகளை
உருவாக்கிக் கொள்பவர்கள் இருக்கிறார்கள் என்பதை அன்று புரிந்து கொண்டேன்.
பக்தி இலக்கியத்தை அதில் உள்ள அற்புதச் செயல்களுக்காக, கதைகளுக்காகப் படிக்காமல், அது
தரும் வாழ்க்கை மதிப்புகளுக்காகப் படித்தால் நம் வாழ்க்கை எவ்வளவோ பயன் பெறும்.

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
May 7, 2015, 12:13:41 AM5/7/15
to brail...@googlegroups.com
உலகநாதர் இயற்றிய உலகநீதி
தேமொழி

Feb 14, 2015

0
inShare
2
Tweet
This page has been shared 2 times. View these Tweets.

0
இதை பொதுவாக விரும்ப இங்கு கிளிக் செய்க.


119
LikeLike

needhinool1
உலகநீதி என்ற நீதிநூல் உலகநாதர் என்ற புலவரால் எழுதப்பட்டுள்ளது, இந்நூலின் இறுதிவரிகள்
இயற்றிய புலவரின் பெயரைத் தருகின்றன. பதின்மூன்று ஆசிரிய விருத்தப்பாக்களைக் கொண்ட இந்த
நூலின் நோக்கம், உலக மக்களுக்குப் பொதுவான நீதிகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பது. பாக்களின்
ஒவ்வொரு அடியும் ஒரு நீதியை அறிவுறுத்துகிறது. பாடல் வரிகளின் மூலம் உலகநாதர் ஒரு
முருகபக்தர் என்பது மட்டுமே தெரிகிறது. இத்தகவலைத் தவிர இவரைப்பற்றிய பிற தகவல்களோ,
காலமோ, வரலாறோ அறியக்கூடவில்லை. தமிழிலக்கியம் தரும் நீதி நூல்களின் தொகுப்பில் மிக
முக்கியமான இடத்தைப் பிடித்த நூல்களுள் உலகநாதர் இயற்றிய உலகநீதியும் ஒன்று.
நீதி என்ன என்பதை அனைவரும் புரிந்து கொள்வது இன்றியமையாததாகிறது. இந்த நோக்கத்தை
நிறைவேற்றும் வகையில் விளக்க உரையின்றி அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிய பாடல்
வரிகளை பள்ளிச் சிறுவர்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் எழுதியுள்ளார் உலகநாதர். ஒலி
நயத்தோடு பாடவும் அதனால் மனதில் இருத்தவும் கூடிய வரிகளைக் கொண்ட பாடல்களாக இவை
விளங்குகின்றன. உலகநீதியைப் பள்ளியில் படித்த நினைவில்லையே என்று வியப்பவர்களுக்கு
“ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம், ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்” என்ற வரிகள்
சட்டென இப்பாடல் படித்ததை நினைவிற்கு கொண்டு வந்துவிடும்.
உலகநீதி புராணத்தை உரைக்கவே
கலைகளாய் வரும் கரிமுகன் காப்பு
என்ற இரு இறைவணக்க வரிகளுடன் துவங்கி 13 ஆசிரிய விருத்தப்பாக்களும் தொடர்கின்றன.
ஒவ்வொரு விருத்தப்பாவும் எட்டு வரிகள் என்ற வீதத்தில் (13 X 8) 104 வரிகளையும்,
பிள்ளையாரிடம் இந்த உலகநீதிபுராணத்தைப் பாட அருள் பெற வேண்டி வணங்கும் இரு காப்பு
வரிகளுடன் சேர்த்து முழுப் படைப்பும் 106 வரிகள் மட்டும் கொண்டது. மிகச் சுருக்கமாக
உலகநாதர் உலகிற்கு சொல்ல விரும்பபிய நீதிகள் அனைத்தும் இவற்றுள் சொல்லப்பட்டுவிடுகின்றன.
பதினொன்றாவது பாடலும், பதின்மூன்றாவது பாடலும் அமைப்பில் சற்றே மாறுபட்டவை.
பதினொன்றாம் பாடல் முழுவதும் கோர்வையாக ஒருகருத்தை முன்வைக்கும் நோக்கத்தில்
அமைக்கப்பட்டுள்ள பாடல். எனவே வரிக்கு வரி ஒரு நீதியை குறிக்கும் பொதுவான முறையில்
இருந்து பதினொன்றாவது பாடல் மாறுபட்டுள்ளது.
இப்பாடல் நமக்கு இன்றியமையாச் சேவை செய்த ஐந்து வகை மக்களை ஏமாற்றாது கூலி கொடுக்க
வேண்டும், அவர்கள் நமக்கு செய்த ஊழியத்திற்கு ஊதியம் செலுத்தப்பட வேண்டும் என்பதை
வலியுறுத்துகிறது. துணி வெளுத்துக் கொடுக்கும் வண்ணான், முடிதிருத்தும் நாவிதன், கல்வி
அல்லது கலை கற்பித்த ஆசிரியர், குலம் தழைக்க மகப்பேறு பணியாற்றிய மருத்துவச்சி, நோய்
தீர்த்த மருத்துவன் ஆகியவர்களுக்கு அவர்களது வாழ்வாதாரமான வருமானத்தை இனிய சொற்களுடன்
அளிக்காது ஏமாற்றுபவர்கள் எமனால் துன்புறுத்தப்படுவார்கள் என்று அச்சுறுத்தும் கோணத்தில்
வலியுறுத்தியுள்ளார் உலகநாதர்.
அஞ்சு பேர் கூலியைக் கைக் கொள்ள வேண்டாம்
அது ஏது இங்கு என்னில் சொல்லக் கேளாய்
தஞ்சமுடன் வண்ணான் நாவிதன் தன் கூலி
சகல கலை ஓதுவித்த வாத்தியார் கூலி
வஞ்சமற நஞ்சு அறுத்த மருத்துவச்சி கூலி
மகா நோவுதனைத் தீர்த்த மருத்துவன் கூலி
இன் சொலுடன் இவர் கூலி கொடாத பேரை
ஏதேது செய்வானோ ஏமன் தானே! … 11
மேற்சொன்ன பாடலின் எட்டு வரிகளைப் போலவே 13 வது அல்லது இறுதிப்பாடலின் எட்டு வரிகளும்
பொது நடையில் இருந்து விலகியுள்ளது. இப்பாடலின் முதல் நான்கு வரிகளிலும் கல்வியும்
பொருளும் தேடி அடைந்த தன்னைப்பற்றிக் குறிப்பிட்டுவிட்டு, அழகிய தமிழால் முருகனைப்
போற்ற விரும்பும் உலகநாதனாகிய நான் பாடிவைத்த இந்தப் பாடல்களை விரும்பி கற்றவர்களும்
கேட்டவர்களும் இந்த நீதிகளைக் கடைபிடிப்பதால், மகிழ்ச்சியும் புகழும் பெற்று வாழ்வார்கள்
என்று சொல்லிச் செல்கிறார் உலகநாதர்.
ஆதரித்துப் பலவகையால் பொருளும் தேடி
அருந்தமிழால் அறுமுகனைப் பாடவேண்டி
ஓதுவித்த வாசகத்தால் உலக நாதன்
உண்மையாய்ப் பாடி வைத்த உலக நீதி
காதலித்துக் கற்றோரும் கேட்ட பேரும்
கருத்துடனே நாள்தோறும் களிப்பினோடு
போதமுற்று மிக வாழ்ந்து புகழும் தேடிப்
பூலோகம் உள்ள அளவும் வாழ்வார் தாமே! … 13
ஒவ்வொரு பாடலின் இறுதி இரு வரிகளை முருகனை வாழ்த்த ஒதுக்கி வைக்கிறார். “மயிலேறும்
பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே!” என்ற போற்றுதல் எட்டு முறை கூறப்படுகிறது. எவ்வாறு
கடவுள் வாழ்த்துப் பாடலில் பிள்ளையாரை நேரடியாகக் குறிப்பிடாமல் கரிமுகன் என்று
குறிப்பிட்டாரோ, அது போல முருகனை “குமரவேள்” என்று இரு இடத்திலும், ஒன்பது முறை
“வள்ளி பங்கன்” என்றும், “மயிலேறும் பெருமான்” என்று எட்டு முறையும் குறிப்பிடுகிறார்.
முருகனை தேவர் குலமகள் தெய்வானையின் மணாளனாக இவர் பார்க்கவில்லை, குறவள்ளியின் கணவனாக
மட்டுமே போற்றுகிறார். ஓரிடத்தில் மட்டும் திருமாலின் தங்கையான உமையின் மைந்தன் என்றுக்
குறிப்பிடுகிறார்.
“குமரவேள் பாதத்தைக் கூறாய் நெஞ்சே!” என்று ஒருமுறையும், “குமரவேள் நாமத்தைக் கூறாய்
நெஞ்சே!” என்று ஒரு முறையும், “திருக்கை வேலாயுதனைச் செப்பாய் நெஞ்சே!” என்று மற்றொரு
இடத்திலும் குறிப்பிட்டு திருவடியையும், நாமத்தையும், திருக்கை வேலாயுதத்தையும்
போற்றுகிறார். இந்த வேறுபாடுகளைத் தவிர்த்து “வள்ளிபங்கன் மயிலேறும் பெருமானை வாழ்த்தாய்
நெஞ்சே!” என்பதே தனது நெஞ்சிடம் புலவர் மன்றாடும் முறையாக இருக்கிறது. பாடலில் இறுதி
இருவரி போற்றுதாலாக வரும் 22 வரிகளையும் பிரித்தெடுத்து பாடினாலும் வேலவனைப் பாடும்
அழகிய சிறு போற்றுதல் பாடல் கிடைக்கும். உலகநீதி ஏதும் குறிப்பிடப்படாத இறைவணக்கப்
பாடல்வரிகள் மட்டுமே இவை.
இறைவணக்கப் பாடல்வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது …
(அடைப்புக் குறிக்குள் பாடல் வரியின் எண் கொடுக்கப்பட்டுள்ளது)
வாகாரும் குறவருடை வள்ளிபங்கன் ( 7 )
மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே! ( 8 )
மஞ்சாரும் குறவருடை வள்ளிபங்கன் (15)
மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே! (16)
வனம் தேடும் குறவருடை வள்ளி பங்கன் (23)
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே! (24)
மற்று நிகர் இல்லாத வள்ளி பங்கன் (31)
மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே! (32)
வாழ்வாரும் குறவருடை வள்ளி பங்கன் (39)
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே! (40)
சேர்த்த புகழாளன் ஒரு வள்ளி பங்கன் (47)
திருக்கை வேலாயுதனைச் செப்பாய் நெஞ்சே!(48)
குருகாரும் புனம் காக்கும் ஏழை பங்கன் (55)
குமரவேள் பாதத்தைக் கூறாய் நெஞ்சே! (56)
வாராரும் குறவருடை வள்ளி பங்கன் (63)
மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே! (64)
மண் அளந்தான் தங்கை உமை மைந்தன் எங்கோன் (71)
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே! (72)
குறம் பேசி வாழ்கின்ற வள்ளி பங்கன் (79)
குமரவேள் நாமத்தைக் கூறாய் நெஞ்சே! (80)
மாறான குறவருடை வள்ளி பங்கன் (95)
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே! (96)
முதல் இருவரி காப்புப்பாடல், கூலி தருவதை வலியுறுத்தும் 11 வது பாடல் மற்றும் பாடலின்
ஆசிரியர் குறிப்பு தரும் 13 வது பாடல் ஆகியவற்றின் இரு எட்டு வரிகள், வள்ளிபங்கன்
மயிலேறும் பெருமானை வாழ்த்தும் 22 வரிகள் தவிர்த்து ஏனைய 66 பாடல்வரிகளும் உலகநீதியை
அறிவுறுத்தும் பாடல்வரிகள், அப்பாடல் வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன …
needhinool2
(அடைப்புக் குறிக்குள் பாடல் வரியின் எண் கொடுக்கப்பட்டுள்ளது)
ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் ( 1 )
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் ( 2 )
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம் ( 3 )
வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம் ( 4 )
போகாத இடந்தனிலே போக வேண்டாம் ( 5 )
போகவிட்டுப் புறம் சொல்லித் திரிய வேண்டாம் ( 6 )
நெஞ்சாரப் பொய் தன்னைச் சொல்ல வேண்டாம் ( 9 )
நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம் (10)
நஞ்சுடனே ஒருநாளும் பழக வேண்டாம் (11)
நல் இணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம் (12)
அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம் (13)
அடுத்தவரை ஒருநாளும் கெடுக்க வேண்டாம்(14)
மனம்போன போக்கு எல்லாம் போக வேண்டாம் (17)
மாற்றானை உறவு என்று நம்ப வேண்டாம் (18)
தனம் தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம் (19)
தருமத்தை ஒரு நாளும் மறக்க வேண்டாம் (20)
சினம் தேடி அல்லலையும் தேட வேண்டாம் (21)
சினந்து இருந்தார் வாசல் வழிச் சேரல் வேண்டாம் (22)
குற்றம் ஒன்றும் பாராட்டித் திரிய வேண்டாம் (25)
கொலை களவு செய்வாரோடு இணங்க வேண்டாம் (26)
கற்றவரை ஒருநாளும் பழிக்க வேண்டாம் (27)
கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம் (28)
கொற்றவனோடு எதிர்மாறு பேச வேண்டாம்(29)
கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம் (30)
வாழாமல் பெண்ணை வைத்துத் திரிய வேண்டாம்(33)
மனையாளைக் குற்றம் ஒன்றும் சொல்ல வேண்டாம்(34)
வீழாத படுகுழியில் வீழ வேண்டாம் (35)
வெஞ்சமரில் புறம் கொடுத்து மீள வேண்டாம் (36)
தாழ்வான குலத்துடனே சேர வேண்டாம் (37)
தாழ்ந்தவரைப் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் (38)
வார்த்தை சொல்வார் வாய்பார்த்துத்திரிய வேண்டாம்(41)
மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம் (42)
மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம் (43)
முன்கோபக் காரரோடு இணங்க வேண்டாம் (44)
வாத்தியார் கூலியை வைத்திருக்க வேண்டாம் (45)
வழிபறித்துத் திரிவாரோடு இணங்க வேண்டாம் (46)
கருதாமல் கருமங்கள் முடிக்க வேண்டாம் (49)
கணக்கு அழிவை ஒருநாளும் பேச வேண்டாம் (50)
பொருவார் தம் போர்க்களத்தில் போக வேண்டாம் (51)
பொது நிலத்தில் ஒருநாளும் இருக்க வேண்டாம் (52)
இருதாரம் ஒருநாளும் தேட வேண்டாம் (53)
எளியாரை எதிரிட்டுக் கொள்ள வேண்டாம் (54)
சேராத இடம் தனிலே சேர வேண்டாம் (57)
செய்த நன்றி ஒருநாளும் மறக்க வேண்டாம் (58)
ஊரோடும் குண்டுணியாய்த் திரிய வேண்டாம் (59)
உற்றாரை உதாசினங்கள் சொல்ல வேண்டாம்(60)
பேரான காரியத்தைத் தவிர்க்க வேண்டாம் (61)
பிணைபட்டுத் துணை போகித் திரிய வேண்டாம் (62)
மண் நின்று மண் ஓரம் சொல்ல வேண்டாம் (65)
மனம் சலித்துச் சிலிக்கிட்டுத் திரிய வேண்டாம் (66)
கண் அழிவு செய்து துயர் காட்ட வேண்டாம் (67)
காணாத வார்த்தையைக் கட்டுரைக்க வேண்டாம் (68)
புண்படவே வார்த்தைகளைச் சொல்ல வேண்டாம் (69)
புறம் சொல்லித் திரிவாரோடு இணங்க வேண்டாம் (70)
மறம் பேசித் திரிவாரோடு இணங்க வேண்டாம் (73)
வாதாடி வழக்கு அழிவு சொல்ல வேண்டாம் (74)
திறம் பேசிக் கலகமிட்டுத் திரிய வேண்டாம் (75)
தெய்வத்தை ஒரு நாளும் மறக்க வேண்டாம்(76)
இறந்தாலும் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம் (77)
ஏசலிட்ட உற்றாரை நத்த வேண்டாம் (78)
கூறாக்கி ஒரு குடியைக் கெடுக்க வேண்டாம் (89)
கொண்டைமேல் பூத்தேடி முடிக்க வேண்டாம்(90)
தூறாக்கித் தலையிட்டுத் திரிய வேண்டாம் (91)
துர்ச்சனராய்த் திரிவாரோடு இணங்க வேண்டாம் (92)
வீறான தெய்வத்தை இகழ வேண்டாம் (93)
வெற்றியுள்ள பெரியோரை வெறுக்க வேண்டாம் (94)
மேற் கூறிய பாடல் வரிகளின் பொருள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது…
(அடைப்புக் குறிக்குள் பாடல் வரியின் எண் கொடுக்கப்பட்டுள்ளது)
(1) நூல்களை கற்காமல் ஒருபொழுதும் நீ வாளா இராதே
(2) யார் ஒருவர்க்கும் தீமை பயக்கும் சொற்களை சொல்லாதே
(3) பெற்ற தாயை ஒருபொழுதும் மறவாதே
(4) வஞ்சகச் செயல்களை செய்யுங் கயவர்களுடன் சேராதே
(5) செல்லத்தகாத இடத்திலே செல்லாதே
(6) ஒருவர் தன்முன்னின்றும் போன பின்னர் அவர் மீது புறங்கூறி அலையாதே
(9) மனதார பொய்யை சொல்லாதே
(10) நிலைபெறாத காரியத்தை நிலைநாட்டாதே
(11) நஞ்சுபோன்ற மக்களுடன் ஒரு பொழுதும் சேர்ந்து பழகாதே
(12) நல்லவரிடம் நட்பு கொள்ளாதவர்களுடன் நட்புக்கொள்ளாதே
(13) அஞ்சாமல் தன்னந்தனியான வழியில் செல்லாதே
(14) தன்னிடத்து வந்துஅடைந்தவரை ஒரு பொழுதும் கெடுக்காதே
(17) உள்ளமானது சென்றவாறெல்லாம் செல்லாதே
(18) பகைவனை உறவினன் என்று நம்பாதே
(19) பொருளை வருந்தித் தேடி உண்ணாமல் மண்ணிற் புதைக்காதே
(20) அறஞ் செய்தலை ஒரு பொழுதும் மறக்காதே
(21) சினம் தேடிக்கொண்டு அதனால் துன்பத்தினையும் தேடாதே
(22) வெகுண்டிருந்தாருடைய வாயில் வழியாக செல்லாதே
(25) ஒருவர் செய்த குற்றத்தை மாத்திரமே எடுத்துச்சொல்லி அலையாதே
(26) கொலையும் திருட்டும் செய்கின்ற தீயோருடன் நட்புச்செய்யாதே
(27) நூல்களைக் கற்றவரை ஒரு பொழுதும் பழிக்காதே
(28) கற்புடைய பெண்களை சேர்தற்கு நினையாதே
(29) எதிரேநின்று அரசனோடு மாறான சொற்களை பேசாதே
(30) கோயில் இல்லாத ஊர்களில் குடியிருக்காதே
(33) மனையாளை வீட்டில் துன்பமுற வைத்து, அவளோடு கூடி வாழாமல் அலையாதே
(34) மனைவியின் மீது குற்றமான சொல் யாதொன்றும் சொல்லாதே
(35) விழத்தகாத பெரும் பள்ளத்தில் வீழ்ந்துவிடாதே
(36) கொடிய போரில் புறமுதுகு காட்டி திரும்பிவாராதே
(37) கீழான நடவடிக்கை கொண்டோருடன் சேராதே
(38) எளியோரின் மீது தீங்கு சொல்லாதே
(41) பயனில்லா சொற்கள் கூறுவாருடைய வாயைப் பார்த்துக் கொண்டு அவரோடு கூட
அலையாதே
(42) நம்மை மதிக்காதவருடைய தலைவாயிலில் அடியெடுத்து வைக்காதே
(43) தாய், தந்தை, தமையன், ஆசான், அறிவிற்பெரியோர் அறிவுரைகளை மறக்காதே
(44) முன்கோபமுடையாருடன் சேராதே
(45) கல்வி கற்பித்த ஆசிரியருடைய சம்பளத்தை கொடுக்காமல் வைத்துக்கொள்ளாதே
(46) வழிப்பறி செய்து திரிந்து கொண்டிருப்பவருடன் சேராதே
(49) செய்யத்தக்க காரியங்களை, அவற்றை செய்யும்வழியை ஆராயாமல் முடிக்க முயலாதே
(50) பொய்க்கணக்கை ஒருபொழுதும் பேசாதே
(51) போர் செய்வாருடைய போர் நடக்கும் இடத்தின்கண் போகாதே
(52) பொதுவான இடத்தை ஒரு பொழுதும் ஆக்கிரமிக்காதே
(53) இரு மனைவியரை ஒருபொழுது தேடிக் கொள்ளாதே
(54) எளியாரை பகைத்துக் கொள்ளாதே
(57) சேரத்தகாத இடங்களில் சேராதே
(58) ஒருவர் செய்த உதவியை ஒருபொழுதும் மறக்காதே
(59) ஊரெல்லாம் திரியும் கோள் சொல்பவராக இருக்காதே
(60) உறவினரை இகழ்வாகப் பேசாதே
(61) புகழ் அடைதற்கு உதவும் செயலை செய்யாது விலக்காதே
(62) ஒருவருடைய அடிமையைப் போல அவருடன் துணையாக அலையாதே
(65) ஒரு நிலத்தில் நின்று அந்த மண்ணைப்பற்றி ஒருதலைச் சார்பாகப் பேசாதே
(66) உள்ளம் சலித்து யாருடனும் சண்டையிட்டு அலையாதே
(67) இரக்கமில்லாது பிற உயிர்கட்குத் துன்பஞ் செய்யாதே
(68) கண்ணால் காணாதவற்றைப் பற்றிக் கட்டுக்கதைகள் சொல்லாதே
(69) கேட்போர் மனதைப் புண்படும் சொற்களை சொல்லாதே
(70) புறம் சொல்லி அலைபவருடன் சேராதே
(73) வீரமொழி கூறி சண்டைக்காக அலைபவருடன் நட்புக்கொள்ளாதே
(74) வாதாடி ஒருவரை அழிக்கும் நோக்கில் கெடுவழக்கு சொல்லாதே
(75) வலிமைகூறி, கலகம் செய்து அலையாதே
(76) தெய்வத்தை ஒருபொழுதும் மறவாதே
(77) இறக்கநேரிடுமாயினும் கூட பொய்யை சொல்லாதே உண்மை
(78) இகழ்ச்சி செய்த உறவினரை விரும்பாதே
(89) ஒரு குடும்பத்தை பிரிவுபடுத்தி கெடுக்காதே
(90) பூவைத் தேடி கொண்டையின் மீது முடிக்கும் பகட்டையொத்த செயலைச் செய்யாதே
(91) பிறர்மீது பழி ஏற்படும்வகையில் அவர் வாழ்வில் தலையிட்டு அலையாதே
(92) தீயவர்களாகி ஊர்தோறும் அலைவருடன் சேராதே
(93) பெருமையுடையனவாகிய தெய்வங்களை இகழாதே
(94) மேன்மையுடைய பெரியோர்களை வெறுக்காதே
உலகநீதி பாடல் வரிகள், தான் கூறும் அறிவுரைகளை எதிர்மறையாகவே கூறிச் செல்கிறது.
இம்முறையை புலவர் கையாண்டதை, அவர் சொல்லும் கருத்தை வலியுறுத்தும் முயற்சியாக,
எச்சரிக்கும் நோக்கில் அமைக்கப்பட்ட அறிவுரைகளாகக் கொள்ளலாம். இதை ஒட்டிய சுவையான தகவல்
ஒன்றும் உண்டு. திரு அருட்பிரகாச வள்ளலார் இளமையில் கல்வி பயிலும்பொழுது “வேண்டாம்,
வேண்டாம்” என்று முடியும் இப்பாடல் வரிகளைக் கண்டு வியப்புற்றாராம். ஏன் அறநெறிகளை
“வேண்டும், வேண்டும்” என்று எழுதலாகாது என்ற எண்ணம் கொண்டு “உள்ளொன்று வைத்து புறமொன்று
பேசுவோர் உறவு கலவாமை வேண்டும்” என்ற பாடலை எழுதியதாகக் கூறப்படுகிறது.
உலகநீதி பாடலகளில் காணும் வெறும் 66 வரிகளே உள்ள அறநெறிப் பாடல் வரிகளை சிறுவயதில்
பொருள் புரியாமல் மனனம் செய்தாலும்கூட, வளர்ந்த பின்னர் வாழ்நாள் முழுவதும்
நல்வழிப்படுத்தும் கருத்துரைகளைக் கொண்டதாக அமைந்துள்ளது தெரிகிறது. எனவே அதன்
அடிப்படையில் மனதில் எழும் கேள்வி; ஏனிந்த 66 வரிகளையும் ஆரம்பப்பள்ளி கல்வி
நாட்களிலேயே சிறார் எண்ணத்தில் பதியுமாறு சொல்லி, கடைபிடிக்கும் அவசியத்தையும்
வலியுறுத்தக் கூடாது என்பதே.
பாடலின் ஒவ்வொரு வரியையும் ஒரு திருக்குறள் கருத்துடன் இணைத்தும் கவிதை நயம்
பாராட்டலாம், அத்துடன் மற்ற அறநெறி நூல்களின் பாடல்களும் நினைவுக்கு வருவதைத்
தவிர்க்கவும் இயலாது. உலகநீதி பாடல் வரிகளை மேலும் பலகோணங்களிலும் ஆராய்ந்து இலக்கிய
நயம் பாராட்டலாம்.
[தொடரும் …]

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
May 7, 2015, 11:54:17 AM5/7/15
to brail...@googlegroups.com, valluva...@googlegroups.com
Saturday, May 2, 2015
இடம் பிடிப்பது
Dog's Life by tortuegraphics
முன்னேறுவதற்கு ஆள் பிடிக்கணுமா வேலை செய்யணுமா? எவ்வளவு அதிகமாய் ஆள் பரிச்சயம் உண்டோ
அவ்வளவு எளிதாய், சீக்கிரமாய் உங்களுக்கு வேலை வாய்ப்புகள், புகழ், பணம் ஆகியவை
கிடைக்கும். ஆனால் இவ்வாய்ப்புகளை பயன்படுத்தி உயர்வதற்கு உழைக்க வேண்டும். பெரும்பாலும்
ஆள்பிடிக்கிற வேலையில் சமர்த்தாக உள்ளவர்கள் வேலையில் சொதப்புவார்கள். அதாவது கிடைக்கிற
வாய்ப்புகளை நாய் வாய் தேங்காய் போல் வைத்துக் கொண்டு அலைவார்கள். தாமும் பெரிதாய்
பயன்படுத்த மாட்டார்கள்; அடுத்தவர்களுக்கும் கொடுக்க மாட்டார்கள்.

உழைப்பு வேறு ஒரு மனநிலையை கோருவது. மனதின், உடலின் மொத்த ஆற்றலையும் ஓரிடத்தில்
குவிப்பது தான் உழைப்பு. நான் சொல்வது அலுவலகத்துக்கு போய் எந்திரத்தனமாய் கோப்பை
நகர்த்துகிற உழைப்பல்ல. படைப்பூக்கமான உழைப்பு. ஒரு தொழில்முனைவோனின், கலைஞனின்,
சிந்தனையாளனின், தன் வேலையில் தனித்துவமாய் இயங்குபவனின் உழைப்பு.
என் பார்வையில் அதிகமாய் மக்களிடம் புழங்கி நன்றாய் வலைதொடர்பாக்கம் செய்பவர்கள்
உருட்டப்படும் சப்பாத்தி மாவைப் போன்றவர்கள். அவர்கள் பரந்து பரந்து கிழிகிற அளவுக்கு
மெல்லிசாய் சல்லிசாய் ஆகி விடுவார்கள். ஒரு திசையை நோக்கி உக்கிரமாய் செயல்படும் ஆற்றல்
அவர்களுக்கு இருக்காது. ஏனென்றால் அதிகமாய் மக்களுடன் சேர்ந்து பயில பயில அவர்களின்
எண்ணங்கள் தாம் உங்களில் அதிகமாய் செயல்படும். உங்கள் மூளை காலியாகி, ஸ்விட் ஆப் நிலைக்கு
சென்று விடும். அடுத்தவர்கள் உங்களுக்காய் சிந்திப்பார்கள். நீங்கள் அடுத்தவர்களுக்கு ஏற்றபடி
செயல்படுவீர்கள். வாழ்க்கையில் ஒரு நடுநிலைக்கு போக இந்த சமூகத்துக்கு வளைந்து கொடுக்கும்
சாமர்த்தியம் போதும். ஆனால் உச்சத்துக்கு போக இது உதவாது.
படைப்பூக்கம் கொண்ட உழைப்புக்கு ஒருவிதமான கிறுக்கு, தனித்துவம், மூர்க்கம், தனிமை
தேவையுள்ளது. சமூகமாக்கலுக்கு முதல் தேவை சொந்தமாய் கருத்தோ நிலைப்பாடோ இல்லாமல்
இருப்பது. அடுத்து மனதை வெளிநோக்கி குவிப்பது. முதல் ஆள் கடுமையான சமூக தனிமைக்கு
ஆட்படுவார். இரண்டாமவர் உள்ளே காலியாக உணர்வார். பேஸ்புக்கில் அதிக நேரம் செயல்பட்டால்
நிறைய நண்பர்களும், கவனமும், அதனாலான வாய்ப்புகளும் அமையும். ஆனால் அடிக்கிற திசையில்
பறக்கிற கொடி போல் ஆகி விடுவீர்கள். சொந்தமாய் எதையும் தீவிரமாய் செய்ய இயலாது.
இரண்டையும் சமநிலையுடன் செய்ய அபூர்வமான ஆற்றல் வேண்டும். நம்மில் பெரும்பாலானோருக்கு
அது கிடையாது.
இது ஒரு புறம் இருக்கட்டும். ஒரு திறமையான ஆள் இங்கு கண்டுகொள்ளப்படுவதே இல்லை என
அடிக்கடி பேசிக் கொள்கிறோம். இவ்வளவு நெரிசல் கொண்ட நம் சமூகத்தில் இது இயல்பு தான்.
இங்கே ஆட்கள் அதிகம், இடம் குறைவு. இணையமும் உலகமயமாக்கலும் நிறைய இடம் உள்ளதாய் ஒரு
பாவனையை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் இப்போதும் ஒரு மனிதன் தன் திறமையை
வெளிப்படுத்த, கவனமும் வாய்ப்புகளும் அடைய நிறைய நிறைய போராட வேண்டி உள்ளது. ஒரு
விவாத நிகழ்ச்சி நடத்தும் டிவி ஒருங்கிணைப்பாளர் ஒருமுறை சொன்னார். அரசியல்
விவாதங்களில் கலந்து கொள்ள குட்டித்தலைவர்கள் போட்டோபோட்டி போடுகிறார்கள் என. எனக்கு
அபத்தமாய் இருந்தது.
இத்தலைவர்கள் டி.வியில் தோன்றி பேசுவதை கூடியமட்டும் தமக்கு சாதகமாய் பயன்படுத்தி
அரசியல் ஆதாயம் பெறுவார்கள். நான் கடந்து சில ஆண்டுகளில் பல முறை டி.வி நிகழ்ச்சிகளில்
பேசியிருக்கிறேன். ஆனால் எனக்கு அதைக் கொண்டு ஆதாயம் பெறத் தெரியாது. எனக்கு அதனால்
பிரச்சனைகள் தாம் அதிகம். வேலை பார்க்கிற இடங்களில் மேலதிகாரிகள் என்னை இதற்காக
வெறுப்பார்கள். ஒரு மேலதிகாரி கொடுத்த வதை தாங்காமல் நான் ராஜினாமா பண்ணி ஓடி வந்து
விட்டேன். அவருக்கு என்னிடம் எரிச்சலூட்டும் முக்கியமான விசயம் டி.வியில் என் மூஞ்சியை
பார்ப்பது தான். உண்மையில் என் இடத்தில் இந்த அரசியல்வாதிகள் இருக்க வேண்டும். அதற்காய் பல
இடைநிலை அரசியல்வாதிகள் கடுமையாய் முயன்று கொண்டிருக்கவும் கூடும். அவர்களுக்கு அந்த
இடத்தைப் பெற பிரயத்தனிக்க வேண்டி உள்ளது. ஆனால் எனக்கு அது கேட்காமலே வந்தது. ஒரு
கிரிக்கெட் உலகக்கோப்பையை ஒட்டி முதன்முறை நீயா நானாவில் பங்கேற்றது தான் துவக்கம்.
பிறகு நான் கூப்பிட்டால் வருகிறேன், சென்னையில் இருக்கிறேன், அவர்களுக்கு பொருத்தமாய்
பேசுகிறேன் என்பதற்காய் அவ்வப்போது அழைக்கிறார்கள். நானும் அதிக உபத்திரவமில்லாத
பொழுதுபோக்கு என்பதற்காய் போய் வருகிறேன். டி.வியில் பேசுவது தோசை சுடுவதை விட
எளிய காரியம். கொஞ்சம் தயாரித்துக் கொண்டு போனால் போதும். ஒருமணிநேர நிகழ்வில் ஐந்து
நிமிடம் பேசினால் அதிகம்.
நான் எப்படி எனக்கு அவசியமே இல்லாமல், அதிக பிரயத்தனங்கள் இன்றி அவ்வப்போது ஒரு டி.வி
நிகழ்ச்சி இடத்தை பிடித்துக் கொள்கிறேனோ அதே போல் வேறு சிலர் வேறு துறைகளில் செய்வதை
பார்க்கிறேன். சில கல்லூரிகளில் பேசச் செல்லும் போது அங்குள்ள ஆங்கில பேராசிரியர்களுக்கு
சரளமாய் பேசக் கூட வருவதில்லை என பார்த்திருக்கிறேன். அவர்கள் மாதம் ஐம்பதாயிரத்துக்கு
மேல் சம்பளம் வாங்கியபடி இலக்கணப் பிழையான ஆங்கிலத்தை வகுப்பில் பேசுகிறார்கள். என்னுடன்
ஆங்கில இலக்கியம் படித்த ஒரு மாணவனுக்கு மிக மிக சுமாராய் தான் ஆங்கிலம் வரும். அவன்
பெற்ற மதிப்பெண்களும் குறைவு. படித்து முடித்ததும் அவனுக்கு தெரிந்த ஒருவர் மூலமாய்
அரபு நாடொன்றில் ஆங்கில ஆசிரியராய் வேலை கிடைத்தது. லட்சங்களில் சம்பாதிக்கிறான். நான்
முதுகலைப்படிப்பில் அவனை விட பத்து விழுக்காடு அதிகம் வாங்கி தங்கப்பதக்கம் பெற்றேன்.
ஆனால் எனக்கு கிடைத்த முதல் வேலையில் சம்பளம் 2500. அப்போது துவங்கி 14 வருடங்களாய்
ஒரு சாதாரண வேலைக்கு நான் அல்லாட வேண்டி இருக்கிறது. சமீபமாய் என் கல்லூரியில் படித்த
தோழி ஒருவரை சந்தித்தேன். படித்து முடித்ததும் துறையில் உள்ள பேராசிரியர் ஒருவரே
அத்தோழியை அங்கு ஆசிரியராய் சேர்ந்து கொள்ளக் கேட்டாராம். அவர் அங்கு சற்று காலம் பணி
புரிந்து விட்டு இப்போது மற்றொரு பல்கலையில் பணி புரிகிறார். அவருக்கு மடியில் வந்து
விழுந்த வாய்ப்பை பெற நான் நிறைய போராடி இருக்கிறேன். நான் முதுகலையில் படிக்கிற
போது அனைத்து பேராசிரியர்களுக்கு என்னை பிடிக்கும். எல்லா செமஸ்டிரலும் முதல் மதிப்பெண்
வாங்குவேன். ஆனால் படிப்பு முடித்த பின் என்னிடம் ஒருவர் கூட அங்கு வேலைக்கு சேர
கேட்கவில்லை. சரி போகட்டும் என நானே இரண்டு முறை முயன்றேன். நிராகரித்தார்கள்.
ஒருமுறை என் உடல் குறையை காரணமாய் சொன்னார்கள். ஆனால் உண்மையான காரணம் அது மட்டுமல்ல
என எனக்குத் தெரியும். என் நண்பர்களுக்கு இருந்த ஆள் பரிச்சயம் எனக்கு இல்லை. செல்வாக்கு
உள்ளவர்களிடம் நான் தொடர்பில் இருப்பதில்லை. வாய்ப்புகளுக்காய் கண்ணைத் திறந்து
காத்திருப்பதில்லை. பதிலுக்கு என் துறையில் முழு ஆற்றலையும் செலுத்தி உழைக்கிறேன்.
ஆனால் அண்ணாவின் “செவ்வாழையில்” வருவது போல் வாழைக்குலை பழுத்து தயாரானது வேறொருவர்
வந்து வெட்டி எடுத்துக் கொண்டு போய் விடுவார்கள். சரி, எடுத்துக் கொண்டு போகிறவர்கள்
முழுக்க பயன்படுத்துவார்களா என்றால் இல்லை. வீணடிப்பார்கள்.
ஒரு சின்ன இடமாய் இருக்கலாம். உங்கள் திறமை, தகுதிக்கு அது நியாயமாய் உங்களுக்கே வர
வேண்டியதாய் இருக்கும். ஆனால் அப்படி நடக்காது. அந்த சின்ன இடத்துக்காய் நீங்கள் உயிரைக்
கொடுத்து போராட வேண்டும். ஒரு நீண்ட இருக்கையை கற்பனை பண்ணிக் கொள்ளுங்கள். அதன் நுனியில்
ஒடுங்கி ஒட்டியபடி இருப்பது தான் நோக்கம். அதற்காய் வாழ்க்கை முழுக்க யாரையாவது தள்ளி
இடித்துக் கொண்டு கண்ணிமைக்காமல் போராட வேண்டும். ஆனால் சிலநேரம் ஒரு இடம் நம் வருகையை
எதிர்பார்த்து இருப்பதும் உண்டு. இதெல்லாம் ஏன் இப்படி நிகழ்கிறது என்பது வாழ்க்கையின்
விசித்திரம். ஒரு வலைப்பூவை ஆரம்பித்து அதை ஆயிரம் பேர் படிக்க வைப்பது, பேஸ்புக்கில்
நூறு லைக் வாங்குவதில் ஆரம்பித்து வேலை, சம்பாத்தியம், காதல், திருமணம் என சாதாரண
சாதாரண விசயங்களுக்கு தான் அசாதாரண உழைப்பு தேவையுள்ளது. அட, ஆயிரம் பேர் வாசிக்கிற
இலக்கிய பத்திரிகையில் ஒரு கட்டுரை வரவழைக்க கூட நிறைய பேரை முந்தி துண்டு போட்ட
வைக்க வேண்டும்.
இதையெல்லாம் நினைத்து நான் ஓய்ந்து போகிற வேளையில் தான் என் மனைவி தான் சோறு போடும்
தெருநாய் ஒன்றின் கதையை சொன்னாள். அது ஒரு வயதான நாய். அதை கருத்தடை பண்ணி வேறு ஒரு
இடத்தில் இருந்து எங்கள் பகுதிக்கு மாற்றிக் கொண்டு வந்து விட்டனர் கார்ப்பரேஷன் ஆட்கள்.
இடமாற்றம் செய்வதை விட ஒரு நாயை நீங்கள் அடித்துக் கொன்று விடலாம். அந்தளவுக்கு
கொடுமையான பிரச்சனை அது. புது இடத்தில் அந்நாயால் நிம்மதியாய் எங்கும் தூங்க
முடியாது. பிற நாய்கள் அடித்து துரத்தும். எங்கு சாப்பாடு கிடைக்கும் என தெரியாது.
அப்படி கண்டுபிடித்தாலும் அங்கு ஒரு எச்சில் இலைக்காய் பத்து நாய்களிடம் சண்டை போட்டு கடி
வாங்கி காயம்பட வேண்டும். அந்த நாய் வந்த புதிதில் பல இடங்களிலாய் அலைந்து கொண்டே
இருக்கும் என்றாள் என் மனைவி. பிறகு மூன்று மாதங்கள் தாக்குப்பிடித்த பின் அதற்கு ஒரு
நாய்க்குழுவில் இணைய வாய்ப்பு கிடைக்கிறது. சில நண்பர்களை அமைத்துக் கொண்டு அது குழுவை
விரிவு படுத்தி ஒரு நல்ல பகுதியை பிடித்துக் கொண்டது. இப்போது அது தன் இடத்துக்கு
பிற நாய்களை வர அனுமதிப்பதில்லை. அப்படி மீறி வந்தால் தன் தோஸ்துகளின் துணையுடன்
அடித்து துரத்தும். அப்பகுதியில் ஒரு காலியான வீட்டின் மொட்டை மாடியில் இரவில் தூங்கிக்
கொள்ளும். அங்குள்ள வீட்டுக்காரர் ஒருவர் தினமும் அந்நாய்க்கு உணவளிக்கிறார். அது போக அங்கு
ஒரு சிக்கன் 65 தள்ளுவண்டி கடையும் உள்ளது. அக்கடை மாலை 6 மணிக்கு துவங்கியதும் நம்
நாய் அங்கு போய் நின்று கொள்ளும். மீதம் வருகிற எலும்புத் துண்டுகளை பொறுக்கித் தின்னும்.
இப்படி உணவு, தூங்க இடம், கொறிக்க எலும்புத்துண்டுகள், பாதுகாப்புக்கு நண்பர்கள் என
எல்லாமே அமைந்து விட்டது. ஆனால் இந்த சாதாரண தேவைகளை நிறைவேற்ற அது மூன்று மாதங்கள்
பட்டினியிலும், மோசமான தாக்குதல்கள் மத்தியிலும் பிடித்து நிற்க வேண்டி இருந்தது.

மனிதப் பிரச்சனைகள் மனிதப் பிரச்சனைகள் மட்டும் அல்ல. அடுத்த முறை நாய்ப்பிழைப்பு எனும்
போது இதை நினைத்துக் கொள்ளுங்கள்!
Posted by Abilash Chandran at 9:48 AM Email Post

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
May 8, 2015, 12:37:11 PM5/8/15
to brail...@googlegroups.com
வெடிக்கும் விண்மீன்கள் வெளியேற்றும்
அகிலக் கதிர்கள் (Cosmic Rays) பூமியின் இடிமுகிலில் மின்னழுத்தம் அளக்க உதவுகிறது
சி. ஜெயபாரதன், கனடா
Lightening measurements
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
பூமியில் இடி இடிக்குது
மின்னல் அடிக்குது
பேய்மழை பெய்யுது
மின்னழுத்தம் தீமூட்டுது
காடுகளில் !
மனிதரைத் தாக்கி எரிக்குது.
விண்வெளியில் ஒளி மந்தைகளோ
வெடிப்பு மீன்களோ,
பரிதிக் கதிர்த் துகள்களோ
அகிலக் கதிர்களாய்
அடிக்குது.
பூமியில் புரளும்
இடிமுகில் மின்னழுத்தம் அளக்க
அகிலக் கதிர்கள் உதவும்.
மின்னலைத் தூண்டி விடுமா அவை
என்றறிய உதவலாம்.
+++++++++++++
Thunder clouds -2
அகிலக் கதிர்கள் இடிமுகில் மின்னழுத்தம் அளக்கப் பயன்பாடு
20 கி.மீடர் [12 மைல்] உயரத்தில் அகிலக் கதிர்ப் புரோட்டான் பூகோளச் சூழ்வெளி வாயுவைத்
தாக்கிய பிறகு, 10 மில்லி செகண்டுகளில் உண்டாகும் கதிர்ப் பொழிவுகளை ஒரு கணினிப்
போலி வடிவில் [computer Simulation Model] போட்டு வானியல் பௌதிக விஞ்ஞானி ஹைனோ
ஃபால்கே [Heino Falcke] ஆராய்ந்ததில் ஓர் அரிய விளைவைக் கண்டார். ரேடியோ வானியல்
ஆய்வகத்தில் வேலை செய்யும் ஃபால்கே குழுவினர் பூமியின் இடிமுகிலில் உள்ள ஆற்றல் மிக்க
மின்னழுத்ததை, ஒரு கருவி மூலம் அளக்க முடிந்தது. அந்தக் கருவி அகிலக் கதிர்கள்
உருவாக்கும் மின் காந்த விளைவை அளவிட்டுக் காட்டியது. இதற்கு முன் வாயு பலூன்கள்,
உளவு ராக்கெட்டுகள் மூலம் அளந்தாலும், ஃபால்கேயின் புதுவித பொறிநுணுக்கம் துல்லிய
முறையில் மேம்பாட்டாகக் காட்ட முடிந்தது. அத்துடன் மின்னல் எப்படி தூண்டப்படுகிறது என்று
அறியவும், அகிலக் கதிர்கள் மின்னலைத் தூண்டுகிறதா என்று அறியவும், ஆய்வுகள் உதவின.
ரேடியோ வானியல் கருவியின் பெயர் : லோஃபர் [(LOFAR – Low Frequency Array) A
Network of Radio Antennas & Particle Detectors, kept in Five European
Countries]
Lightning on Earth
பரிதியின் ஆற்றல் மிக்க காந்தப்புலம் இங்கிலாந்தில் மின்னல் அடிப்பு வீதத்தை மிகைப் படுத்தத்
தூண்டுவதில் பெரும்பங்கு ஏற்கிறது. சூரிய காந்தப்புலம் ஒரு பட்டைக் காந்தம் போல் [Bar
Magnet] நடந்து கொள்கிறது. பரிதி சுற்றும் போது, அதன் காந்தப்புலம் பூமியை நேராக
நோக்கியோ அல்லது மாறாக எதிர் நோக்கியோ தென்பட்டுப் பூகாந்தப் புலத்தை இழுத்தோ,
விலக்கியோ வருகிறது. காந்தப்புல மாற்றங்கள் மின்னேற்றும் பாட்டரிபோல் [Battery
Charger] சேர்ந்து இடிமின்னல் புயல்களைத் தீவிரமாக்கி அதிகப் படுத்துகின்றன.
டாக்டர் மாத்தியூ ஓவன்ஸ் [Leading Researcher, University of Reading, UK]
காலநிலை அறிவிப்போர் சம்பிரதாய முன்னறிப்புடன், துல்லியமாகப் பரிதியின் சுழி வடிவக்
காந்தப் புலத்து அளவையும் [Spiral-shaped Magnetic Field, known as
Heliospheric Magnetic Field (HMF)] சேர்த்து வெளியிட வேண்டும். 2001 ஆண்டு
முதல் 2006 வரை கிடைத்த காலநிலைத் தகவலை ஆராய்ந்து, பரிதி காந்தப்புலம் பூமிக்குப்
புறம்பாக நோக்கிய போது, இங்கிலாந்தில் 50% இடிமின்னல் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாகத்
தெரிகிறது.
டாக்டர் மாத்தியூ ஓவன்ஸ் [Leading Researcher, University of Reading, UK]
LIGHTNING IN UK -1பரிதியின் காந்தப் புலச் சுழற்சி இடிமின்னலை மிகையாக்குகிறது
2014 நவம்பர் 19 ஆம் தேதி வெளியான ஓர் விஞ்ஞான அறிக்கையில் [IOP Journal,
Environmental Research Letters] இங்கிலாந்தின் ரீடிங் பல்கலைக் கழக [University
of Reading, UK] ஆராய்ச்சியாளர், ஐந்தாண்டு காலத்தில் 50% மிகையான எண்ணிக்கையில் இடி
மின்னல்கள் இங்கிலாந்தில் அசுர ஆற்றலில் அடித்துள்ளன வென்று கூறியுள்ளார். குறிப்பாக
அந்தக் காலங்களில் பூமியின் காந்தத் தளத்தைச் சூரியனின் காந்தப் புலம் ஒருபுறமாய்
வளைத்துள்ளது என்று காரணம் தெரிந்துள்ளது. விண்வெளியிலிருந்து வீழும் அகிலக் கதிர்
மின்னேற்றத் துகள்களி லிருந்து [Charged Particles like Protons from the Cosmic
Rays ] பாதுகாத்துக் கவசம் அளிப்பது பூமியின் காந்த மண்டலமே. அவ்விதத் துகள்களே
தொடரியக்கங்களைத் தூண்டி, தீவிரமான இடி மின்னல் களை முன்பு அறியப்பட்டது. இம்முறைகள்
மூலமாய் இப்போது பல வாரங்களுக்கு முன்பே இடி மின்னல் பேரிடர் விளைவுகளை முன்னதாகவே
அறிவிக்க முடியும் என்பது புலனாகிறது.
Lightening striking Earth
அதைச் செய்ய காலநிலை அறிவிப்பாளருக்கு, சம்பிரதாயக் காலநிலைக் குறிப்புகளும்,
துல்லியமாக சூரியனின் கோள நிலைக் காந்தப் புலம் [Heliospheric Magnetic Field
(HMF)] தேவைப்படுகிறது. சூரியன் சுற்றும் போது, பரிதிப் புயல், பூமியை நோக்கிக்
காந்தப் புலத்தை உதைத்துத் தள்ளுகிறது. இதை அறிவித்த பிரிட்டீஷ் ஆய்வாளர் டாக்டர் மாத்யூ
ஓவனஸ் [Dr. Matthew Owens] “சூரியனின் ஆற்றல் மிக்க காந்தப்புலம் இங்கிலாந்தில் வீழும்
இடி மின்னல் எண்ணிக்கையை அதிகமாக்குவதில் பெரும் பங்கு ஏற்கிறது,” என்றார்.
இங்கிலாந்தின் காலநிலை நிறுவகம் [United Kingdom Met Office], கடந்த 2001 ஆண்டு
முதல் 2006 வரை கணிசமாக இடிமின்னல் எண்ணிக்கை 50% கூடியுள்ளதாக வெளியிட்டுள்ளது.
இடிமின்னல்களின் எண்ணிக்கை, தீவிரத்தை முன்பெல்லாம் முன்னறிய முடியாது. புதிய
ஆய்வுகளின்படி எங்கு, எப்போது இடிமின்னல்கள் தாக்கும் என்பதை முன்னறிவிப்பு செய்வது
எளிதானது. சூரியனின் காந்தப் புல எழுச்சி மேலும், கீழும் ஏறி இறங்கும் போது,
பூமியின் காந்தப் புலத்தை ஒருபுறம் வளைத்து, தீவிரச் சக்திப் புரோட்டான்கள் கொண்ட அகிலக்
கதிர்களைப் [The Cosmic Rays (High Energy Protons)] புவித்தளம் மீது பொழியச்
செய்கிறது. அப்போது அகிலக் கதிர்கள் புவியின் வாயு மண்டலத்தில் வழி யுண்டாக்கிப் புயல்
முகிலில் மின்னேற்றம் மிகையாக்கி [Electrical Charge builds up in Storm Clouds]
பூமியைத் தாக்குகிறது. சூரிய கோளம் 27 நாட்களுக்கு ஒருமுறை தன்னச்சில் சுற்றுகிறது.
அதாவது சூரிய காந்தப்புலம் இரண்டு வாரங்கள் பூமியை நேர் நோக்கியும், இரண்டு வாரங்கள்
எதிர் நோக்கியும் உள்ளது. ஆதலால் பாதி பரிதி சுழற்சியில், பூமியில் தாக்கும்
இடிமின்னல்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
Solar magnetic field -1“சமீபத்தில் நான் கற்றுக் கொண்டது இதுதான் : பூமியின்
உட்கருவை மெதுவாக ஆனால் அசுரத் தீவிரத்தில் பாதிப்பது சூரியன் ஒன்றே ! பூமியின்
காலநிலைச் சூழ்வெளி மாறுதலுக்குச் (Climate & Weather Change) சூரியனே பிரதானக்
காரணி என்பதை நானும் எனது கீர்த்தி பெற்ற விருந்தினர்கள் டாக்டர் பீட்டர் ஆல்ஸனும் டாக்டர்
நிகோலா ஸ்கஃபீட்டாவும் ஒப்புக் கொண்டோம்.”
மிட்செல் பாட்டிரோஸ் (Mitchel Battros) (Solar Rain நூல் படைப்பாளி)
“பரிதி உச்சத்தின் (Solar Maximum) போது எப்போதும் (பரிதித் துருவத் திருப்பம்)
நிகழ்கிறது ! பரிதி வடுக்களின் எண்ணிக்கை (Sunspots) உச்சமாகும் போது அதன் துருவ
முனைகள் மாறுகின்றன. இப்போது அந்த உச்ச நிலையைப் பரிதி அடைவது ஒரு நல்ல
அறிகுறியாகத் தெரிகிறது.”
டேவிட் ஹாத்தவே (David Hathaway, Solar Physicist, Marshal Space Flight Center)
பரிதிக் கோளத்தில் (Heliosphere) நிகழும் துருவத் திருப்பத்தின் தாக்கம் மிகவும்
சிக்கலானது ! பரிதி வடுக்கள் தீவிரக் காந்த முடிப்புகள் சேமிக்கப் பட்டுள்ள பெரும்
களஞ்சியம். இரட்டைத் துருவக் காந்தப் பட்டை (Dipole Magnetic Field) மறைந்து போனாலும்
முடிச்சு அவிழ்ந்து காந்த தளம் சுருள் சுருளாக வெளிப்புறம் பாய்கிறது. துருவத்
திருப்பம் நேரும் போது பரிதிக் கோளம் காணாமல் போவதில்லை ! வெற்றிடத்தை நிரப்பிட
ஏராளமான, சிக்கலான அளவுக் காந்த அமைப்பாடுகள் இருக்கின்றன. இதுவரை விஞ்ஞானிகள்
மேலிருந்து கீழ் நேரான நோக்கில் துருவத் திருப்பத்தைக் காணவில்லை. இப்போது “யுலிஸிஸ்
விண்ணுளவி” விஞ்ஞானிகளுக்கு பரிதியின் மெய்யானச் சோதிப்பு உளவைக் காட்டப் போகிறது.
டேவிட் ஹாத்தவே. (டிசம்பர் 9, 2005)
“பரிதியின் காந்த மண்டலம் சூரிய குடும்பம் முழுவதையும் பரிதிக் கோளம் எனப்படும் ஒரு
குமிழிக்குள் (Heliosphere Bubble) மூடிக் கொள்கிறது. அப்பரிதிக் கோளம் 50 AU முதல்
100 AU வானியல் அளவீட்டில் நீட்சி அடைந்து புளுடோ சுற்று வீதிக்கு அப்பாலும் செல்லும்.
[1 Astronomical Unit (AU) = Unit Distance Between Sun & Earth]. சூரியனின்
காந்தத் தள மாறுபாடுகள் பரிதிக் கோளத்தின் வழியாக பரிதிப் புயலால் எடுத்துச் செல்லப்
படுகின்றன.”
ஸ்டீவ் சூயஸ் (Steve Suess, Solar Physicist, Marshal Space Flight Center)
Fig 1A Earth's Internal Structure
அடித்தட்டு நகர்ச்சியின் போது பூமிக்குள்ளே என்ன நிகழ்கிறது ?
பூமிக்குள் அடித்தட்டு நகர்ச்சியைத் (Plate Tectonics) துடிக்க வைத்துப் பூகம்பத்தை எந்த
விதப் புறத் தூண்டல் உண்டாக்குகிறது என்பதைப் பூதள விஞ்ஞானிகள் இதுவரைக் குறிப்பிட்டுக்
காட்ட வில்லை ! ஆனால் அவர்கள் கருதுவது : பூமியின் உட்கருவில் எழும் வெப்பம் மெதுவாக
உள்தட்டு (Mantle) ஓட்டத்தைத் தடிப்பான மேல்தட்டு (Lithosphere) அடுக்கில் எழுப்பி
விடுகிறது. கடந்த மில்லியன் கணக்கான ஆண்டுகளாய்க் கடையும் இந்த கொந்தளிப்பு இயக்கமே
கடற்தட்டுகளையும், அடித்தட்டு
களையும் நகர்த்தி வருகிறது. பூதள விஞ்ஞானிகள் இவ்வித அடித்தட்டு நகர்ச்சி நிகழ்ந்து
கடந்த 2.5 முதல் 4 பில்லியன் ஆண்டுகளாகப் பூமியின் மேல் தளத்தை உருவாக்கி
வந்திருக்கிறது என்று மதிப்பிடு கிறார்கள். இப்போதும் அந்த நகர்ச்சி தொடர்ந்து இயங்கி
வருகிறது. இந்திய மண்திணிவு எதிர்த்துத் தள்ளுவதால் இமயத்தின் சிகரங்கள் உயர்ந்து கொண்டே
போகின்றன ! ஹவாயித் தீவுகள் ஜப்பானை நோக்கி அங்குல அங்குலமாய் நகர்கின்றன ! ஐரோப்பாவும்
வட அமெரிக்காவும் ஒன்றை விட்டு ஒன்று விலகிச் செல்கின்றன ! அதாவது அட்லாண்டிக் கடல்
அகலமாகிப் பசிபிக் கடல் சுருங்கி வருகிறது ! இன்னும் மில்லியன் ஆண்டுகள் தாண்டி ஒருவர்
நோக்கினால் உலகக் கண்டங்களின் புதிய அமைப்பில் வேறு முகத்தோடு செதுக்கப் பட்டிருக்கும் !
பூமியானது மாபெரும் ஏழு அடித்தட்டுகளோடு பல்வேறு சிறு அடித்தட்டுகளைப் பின்னி மேல்
தளத்தை அமைத்துக் கொண்டுள்ளது ! உள்ளே உள்ள பூமியின் வெப்ப திரவம் வலுவற்ற பகுதிகளின்
வழியே கசிந்து வெளியேறி அவற்றில் எரிமலை அரங்குகள், தீவுகள் உண்டாகின்றன.
Sun's Pole Reversalஓராண்டில் சுமார் ஒரு மில்லியன் நிலநடுக்கங்கள் பூமியில்
நேருகின்றன என்று பூதள விஞ்ஞான நூலில் குறிப்பிடப் பட்டுள்ளது ! இவற்றில் பல மிகச்
சிறிய அதிர்வுகள். கருவிகளால் மட்டுமே அவை உணரப்பட்டுப் பதிவாகின்றன. ஒவ்வோர்
ஆண்டிலும் சராசரிச் சுமார் 10,000 பூகம்ப மரணங்கள் நேருகின்றன. அதாவது ஓராண்டில்
இரண்டு பூகம்பங்கள் நேர்ந்தால் சராசரி மரணங்கள் 5000 (2X5000 =10,000) ஏற்படலாம்.
1900 ஆண்டு முதல் 2009 வரை 6.1 முதல் 9.5 ரிக்டர் அளவீட்டில் சுமார் 50 அசுரப்
பூகம்பங்கள் நேர்ந்துள்ளன ! அவற்றில் 2004 ஆம் ஆண்டு இந்து மாக்கடலில் 9 ரிக்டர் அளவீட்டில்
நேர்ந்த இந்தோனேஷியா கடற்தட்டுப் பூகம்பத்தில் எழுந்த சுனாமி அலையடிப்பில் தென்னாசியக்
கடற்கரை நாடுகளில் 250,000 மக்கள் உயிரிழந்தனர் ! உடைந்த இல்லங்கள், இழப்புகள் பல
பில்லியன் டாலர் மதிப்புள்ளவை ! வரலாற்றில் மாபெரும் மனித இனச் சேதம் !
Fig 1C Solar Magnetic Field
பூகம்ப நகர்ச்சியும் பூமியின் பூதள மின் ஜனனியும்
பூகம்பம் என்பது பூமிக்கடியில் எழுந்து மேல் தளத்தில் அல்லது கடற் தளத்தில் நேரும் ஒரு
திடீர் நில அதிர்ச்சி ! அந்த நிலநடுக்கத்தைப் பூமிக்கடியில் மெதுவாகப் பாறைகளில்
சேமிக்கப்பட்ட சக்தியின் வெளிப்பாடே உண்டாக்குகிறது ! இந்தச் சக்திக்கு மூல காரணி யாது
? எப்படிச் சக்தி பாறைகளில் சேமிப்பாகிறது ? ஏன் திடீரென நிலநடுக்கம் ஏற்படுகிறது ?
பூமியின் உள்ளமைப்புப் படத்தைப் பார்த்தால் “லித்தோ கோளம்” (Lithosphere) முறியும்
பாறைகளைக் கொண்டதாகத் தெரியும். அக்கோளம் சுமார் 100 கிலோமீடர் (60 மைல்)
தடிப்புள்ளது. மேலும் “ஆஸ்தெனோ கோளத்தின்” (Asthenosphere) சூடான பிளாஸ்டிக்
பாறையில் அது மிதக்கிறது. லித்தோ கோளம் அனைத்தும் “நகர்ச்சி அடித்தட்டுகள்” (Tectonic
Plates) எனப்படும் ஏழு பெரும் துண்டங்களாகவும் பல்வேறு சிறு துண்டங்களாகவும் பிரிக்கப்
பட்டுள்ளன ! அந்த நகர்ச்சி அடித்தட்டுகள் ஆண்டுக்குச் சதா 1 முதல் 1.8 செ,மீடர் நகர்ந்து
செல்வதால், ஒன்றை ஒன்று முட்டி, மோதி, நழுவிக் குதிரை ஏறி எல்லைப் பகுதியில் (Plate
Boundaries) தள முறிவுகளை ஏற்படுத்துகின்றன. அவ்விதம் அடுத்தடுத்து ஜப்பான்,
இந்தோனேஷியா, ஸான்பிரான்சிஸ்கோ, தென்னமெரிக்காவின் பெரு (Peru) நாட்டுப் பகுதிகளில்
தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.
Fig 1D Earthquake Wave Travel
பூதள விஞ்ஞானிகள் பூமி உட்கருவின் காந்தத் தளத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கத்துக்கு என்ன
காரணம் என்பதை நீண்ட காலமாக அறிந்திருந்தார்கள். நமது பூமி மற்ற சூரியக் கோள்களைப் போல்
தனது உட்புறப் “பூதள மின் ஜனனியைக்” (Internal Geodynamo) கொண்டு சுயக் காந்த
தளத்தை உண்டாக்கிக் கொள்கிறது. பூமியின் மின் ஜனனி சாதாரண மின்சார ஜனனி போல் சுழலும்
உட்கருவின் இயக்கத்தால் மின்னோட்டத்தை நிகழ்த்துகிறது. நிலவைப் போல் ஏழு மடங்கு
கொள்ளளவுள்ள ஓர் இரும்புத் திரவக் கடல் பூமிக்குள் சுற்றிப் பூதள மின் ஜனனியாக இயங்கி
வருகிறது.
பரிதி வடுக்களின் விளைவுச் சமன்பாடு
பூமியின் மாறுதலைப் பற்றி ஒளிக்காட்சி (Earth Change TV) முறையில் அறிவித்து வரும்
மிட்சல் பாட்டிரோஸ் (Mitchel Battros) என்பவர் சூரிய வடுக்களின் தீவிரக் காந்த சக்தி
பூமியைத் தாக்கி விளைவிக்கும் தீங்குகளுக்கு ஒரு சமன்பாட்டை (Sunspot Effect
Equation) எழுதி யிருக்கிறார். அவர் சூரிய மழை (Solar Rain) என்றொரு நூலை
எழுதியிருக்கிறார். அவர் தயாரித்த சமன்பாடு கீழே கொடுக்கப் பட்டுள்ளது :
Mitch Buttros Equation : Sunspots ==>> Solar Flares ==>> (Solar)
Magnetic Field Shift ==>> (Earthern) Shifting Ocean & Jet Stream
Currents ==>> Extreme Weather & Human Disruption
Fig 3 The Equation for Sunspots & Extreme Weather
மிட்செல் பட்டிரோஸ் சமன்பாடு :
பரிதி வடுக்கள் ==>> பரிதி கனல்வீச்சுகள் ==>> பரிதிக் காந்த முனைத் திருப்பம் ==>>
பூமியின் கடல் தட்ப வெப்ப ஆறோட்ட நகர்ச்சி ==>> அசுரக் காலநிலை மற்றும் மனித இனத்
துன்பங்கள். மிட்செல் பாட்டிரோஸ் இரண்டு முறை ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த
பூதளவாதி டாக்டர் பீட்டர் ஆல்ஸன் (Dr. Peter Olson) & டியூக் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த
பௌதிகவாதி டாக்டர் நிகோலா ஸ்கா·பெட்டா (Dr. Nicola Scafetta) ஆகியோருடன்
உரையாடித் தனது சமன்பாட்டைத் தெளிவாக விருத்தி செய்தார்.
Fig 5 Ulysses Solar Probe
சூரியனே பூமியின் காலநிலைச் சூழ்வெளி மாறுதலுக்குக் காரணம்
பூமியின் காலநிலைச் சூழ்வெளி மாறுதலுக்குச் (Climate & Weather Change) சூரியனின்
வாயுக் கோளக் கொந்தளிப்பே காரணம் என்பது பூதள விஞ்ஞானிகள் பலரது முடிவாகத்
தெரிகிறது. பூகோளச் சூடேற்றத்தின் நீட்சிக்குப் (Global Warming Trend) பரிதியின்
கொந்தளிப்புப் புயலே பெரும் பங்கேற்கிறது. அதற்கு மனித விளைவுகளின் பங்கு சிறிதளவே
! சூரியனே நமது பூமியில் நேரும் பாதிப்புகளுக்கு பூகோளத்தின் உட்கருவில் ஒரு சங்கிலி
இயக்கத்தைத் தூண்டும் ஒரு யந்திரமாக உள்ளது ! நமது விஞ்ஞான நுண்கருவிகள் அனைத்தும்
(விண்ணுளவிகள், தொலைநோக்கிகள்) விண்ணை நோக்கிப் பரிதியின் இயக்கத்தையும், அதனால் ஏற்படும்
பூமியின் காந்த தளம், பூமியின் சூழ்வெளியில் அயனிக் கோளம், ஸ்டிராடோ கோளம் ஆகியவற்றின்
பாதிப்புகளையும் ஆராய்ந்து அளந்து வருகின்றன. பூமியில் இடி மின்னல் தாக்குவது போல்
பூமியின் சக்தி முறுக்கேறிய உட்கருவும் (Highly Charged Core) நடந்து கொள்கிறது.
பூமியின் உட்கரு, கீழ்த்தட்டு, மேல்தட்டு (Core, Mantle & Crust) ஆகிய வற்றை ஆய்ந்து
உளவு செய்த டாக்டர் பீட்டர் ஆல்ஸன் கருத்துக்கேற்ப பரிதியின் “கனற் திணிவு வெளியேற்றம்”
[Corona Mass Ejection (CME)] மற்றும் பல்வேறு விண்வெளி அனுப்பும் மின்கொடைத்
துகள்கள் (Charged Particles) மின்னல் அடிப்பு போல் தாக்கும் பொருட்களில் எதிரடியும்
உண்டாக்குகின்றன !
Fig 4 Sunspot Cycle Predictions[தொடரும்]
+++++++++++++++++++
தகவல்:
Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine,
Discovery, Scientific American & Astronomy Magazines, Science
Illustrated, Wikipedia & Earth Science & the Environmental Book.
Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine,
Discovery, Scientific American & Astronomy Magazines, Science
Illustrated, Wikipedia & Earth Science & the Environmental Book.
1.Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
2. 50 Greatest Mysteries of the Universe – How Did the Solar System form
? (Aug 21, 2007)
3. Astronomy Facts File Dictionary (1986)
4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
5. National Geographic – Invaders from Space – Meteorites (Sep 1986)
6. Cosmos By Carl Sagan (1980)
7. Dictionary of Science – Webster’s New world (1998)
8. Physics for Poets By : Robert March (1983)
9. Atlas of the Skies (2005)
10 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
11 Universe By : Roger Freedman & William Kaufmann III (2002)
12 Science Daily : Magnetic Field Reversals Illuminated By Lava Flows
Study [September 26, 2008]
13 Pure Energy System News : Earth’s Magnetic Field Reversal By :
Mary-Sue Haliburton
14 Magnetic Storm Home Page What Drives Earth’s Magnetic Field (Oct 2003)
15 BBC News : Is The Earth Preparing to Flip ? By : David Whitehouse
(March 27, 2003)
16 Scientific American Magazine – Our Ever Changing Earth – Probing the
Geodynamo By : Gary Glatzmaier & Peter Olson (September 26, 2005)
17 Solar Pole Shift & Pole Reversal in 2012
(http://newsvote.bbc.co.uk/mpapps/pagetools) By : Patrich Geryl (May 19,
2009)
18 Science at NASA – The Sun Does a Flip (February 15 2001)
19 India Daily Technology Team (Aug 8, 2005)
20 NASA Claims Sun Polar Shift Due in 2012 (Dec 9, 2005)
21 Earth Wobbles Linked to Extinctions (Oct 11, 2006)
22 The Sun’s Magnetic Cycle By Dr. David Stern (April 12, 2007)
23 Earth’s Magnetic Reversals & Moving Continents By Dr. David Stern
(Feb 23, 2008)
24 The Sunspot Cycle By Mitzi Adams (June 6 2009)
25 ECTV News Letter – Has The Solar Magnetic Pole Reversal Already Begun
? By : Mitch Battros (Oct 10, 2005)
26 New Sunspot Activity Threatens Mobile Phone Networks (Jan 7, 2008)
27 Sun’s Polar Reversal 2012 – The Next Magnetic Polar Shift & Consequences
28http://www.thinnai.com/?module=displaystory&story_id=40906041&format=html(Earth’s
Pole Reversal)
29 National Geographic Picture Atlas of Our Universe By : Roy Gallant (1986)
29 (a) National Geographic – Sun Bursts By Curt Suplee (July 2004)
30 American National Oceanic & Atmospheric Administration (NOAA)
Forecast – Next Solar Storm Cycle 24 Will Start Late NOAA Website
:http://www.noaa.gov & NOAA’s Space Environment Center:
<http://www.sec.noaa.gov&gt; (April 25, 2007)
31 Philip’s World Atlas – Solar System Profile & Anatomy of the Earth (2005)
32 Oxford Essential World Atlas – Restless Earth (2006)
33 Hutchison The Encyclopedia of Earth : Magnetism, Gravity & Heat (1985)
34 National Geographic Picture Atlas of Our Word (1990)
35 Earth Science & The Environment By : Graham Thompson & Jonathan Turk
(1993)
i. http://en.wikipedia.org/wiki/Stellar_magnetic_field [March 7, 2014]
ii. http://www.sciencedaily.com/releases/2014/11/141119204849.htm
[November 19, 2014]
iii. http://www.iop.org/news/14/nov/page_64495.html [November 19, 2014]
iv.http://www.spacedaily.com/reports/Suns_rotating_magnetic_field_may_pull_lightning_toward_Earth_999.html
[November 24, 2014]
v.http://en.wikipedia.org/wiki/Stellar_magnetic_field [November 24, 2014]
vi.http://phys.org/news/2015-04-stars-thunderclouds-earth.html [April
22, 2015]
******************
S. Jayabarathan [jayaba...@gmail.com] May 2, 2015

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
May 8, 2015, 1:07:10 PM5/8/15
to valluva...@googlegroups.com, brail...@googlegroups.com
ஒரு மொக்கையான கடத்தல் கதை
சிவக்குமார் அசோகன்
சிறுகதை
ஒரு மொக்கையான கடத்தல் கதை
சிவக்குமார் அசோகன்
ஆர்.பி டிரேடர்ஸ் முதலாளியை ஏதாவது செய்ய வேண்டும். ஏதாவது என்றால் ஏதாவது இல்லை.
அவர் கடைசி மூச்சு நிற்கும் வரை நினைவில் வைத்திருக்கும் படி, என் முகத்தை மறக்க
முடியாத படி மூச்சு நிற்கும் வேளையில் நான் எதிரே போய் நின்றால் ‘நீயா?’ என்று
கலவரத்துடன் தலையை எக்கிப் பார்த்துவிட்டு மண்டையை போட்டுவிட வேண்டும். அந்தளவிற்கு
டர்ர்ர்ராக ஏதாவது செய்ய வேண்டும். ஆனால் எந்தவிதத்திலும், யாரிடமும் மாட்டிக் கொள்ளக்
கூடாது. என் உடம்பு சப்பை. தாங்காது. வெளியே சொல்வதற்கே அவர் கூசிப் போய் விட்டுவிட
வேண்டும்.
கல்லாவில் உட்கார்ந்திருக்கும் போது காறித் துப்பிவிடலாம். உடனடியாக வேலையாட்களால்-
நூறு கிலோ ஜீனி மூட்டையை முதுகில் சுமந்து இரண்டாவது மாடிக்கு ஏறுகிறவர்கள்-
கிழிக்கப் படுவேன். ஜீனி சாக்கைக் கிழித்து வெயிலுக்குத் திரை செய்வது போல என்னையும்
கிழித்து வீசிவிடுவார்கள்.
எனவே துப்புவது தப்பு.
காலை நேரங்களில் பூங்கா பக்கம் அவரைப் பார்த்திருக்கிறேன். கரும்புக் கொல்லையை துவம்சம்
செய்துவிட்ட யானை செரிமானத்திற்கு அனத்திக் கொண்டிருப்பது போல நடந்து கொண்டிருப்பார்.
கல்லாவில் பாதி பிள்ளையார் கணக்காகத் தெரிபவர், நடந்து போகும் போது தேர் கணக்காகத்
தெரிவார். பல்க் என்றால் அப்படி ஒரு பல்க். மதுரை நாயக்கர் தூண் போல. பூங்காவில் அவர்
நடந்து கொண்டிருக்கும் போது அரச மரத்துக்கு பின்னாடி ஒளிந்து கொண்டு, அருகே வரும்
போது கரைத்த சாணியை மேலே ஊற்றி விடலாம் என்று யோசித்தேன். முகத்தை மட்டும் நன்றாகக்
காட்டிவிட்டு விழுந்தடித்து ஓடிவிடலாம்.
என்ன நடந்தது என்று அவரும் பூங்காவும் சுதாரிப்பதற்குள் தப்பிக்க வழி இருக்கிறது.
மறுபடி ஏதாவது யோசிப்பதற்குள், அவர் சாணியுடன் முகத்தைக் கேவலமாக சுழித்துக் கொண்டு
விதிர்த்து என்னை வெறித்து நிற்பது போல் நினைத்துப் பார்த்தேன். கண் கொள்ளாக் காட்சி.
‘மீதி சில்லறை அஞ்சு ரூபா இல்லை.. இந்த சாக்லெட்டை வாங்கிக்க..’
‘என்னங்க எக்ஸ்பைரி ஆனதைக் கொடுக்கறீங்க…?’
‘அஞ்சு ரூபா சாக்லெட்! டேட் போய் பதினைஞ்சு நாள் தான் ஆகுது. ஒண்ணும் ஆகாது தம்பி.’
‘ஒண்ணும் ஆகாதுனா ஏன் சார் தேதி போடணும்? எனக்கு முதல்ல சில்லறை வேணும். நான்
சாக்லெட்டே கேட்கலையே..’
‘கொஞ்சம் ஓரமா நில்லு… அடுத்த ஆளைக் கவனிக்கணும். இந்தா இரு நூறு ரூபா சாமானை
வெச்சுட்டு போ.. நூத்தித் எழுபத்தஞ்சு ரூபா சில்லறையா கொடுத்துட்டு எடுத்துக்கோ..
இப்போதைக்கு நகரு… கூட்டம்.’
நகர்ந்திருப்பேன். அவரின் அடுத்த வார்த்தை தான் எனக்கு எக்குத் தப்பாகக் கோபமூட்டியது.
‘சாவு கிராக்கி காலையிலேயே.. ‘ என்று என் காதில் விழுவது போலவும், விழாதது
போலவும் ஏதோ திட்டினார்.
எனக்கு குப்பென்று இரத்தம் தலைக்கு ஏறியது. ‘யாரு நானா சாவுகிராக்கி..அஞ்சு ரூபா
சில்லறைக்கு சாக்லெட் கொடுக்கிறே.. அதுவும் எக்ஸ்பைரி.. கேட்டது தப்பு?’ என்று
ஒருமையில் பேசிவிட..
‘ஏய் மரியாதையா பேசு…’ என்று அவர் சொல்ல, அதற்குள் வேலையாட்கள் என்னை சூழ்ந்து கொள்ள,
ஆவேசமாக ‘அவனை அடிச்சு வெளில போடுங்கடா..’
போட்டார்கள். செருப்பும், மனசும் பிய்ந்து போய் ரோட்டில் கிடந்தேன். சுற்றிலும் சந்தடி
நிறைந்த கடைத் தெருவே சற்று குனிந்து என்னைப் பார்க்கிறது. உச் கொட்டுகிறது. திருடனா
என்கிறது. ‘திமிர் பிடித்தவன் என்ன பேச்சு பேசறான்’ என்று ஒரு வேலையாள் என்னை
தெருவிடம் அறிமுகப்படுத்தினான்.
இது நடந்து ஒரு வாரம் ஆகிறது. ஒரு வாரமாகப் பேயறைந்தது போல் தான் இருக்கிறேன்.
இப்படி ஒரு அவமானத்தை நான் சந்தித்ததில்லை. அதுவும் தேவையில்லாத அசிங்கம். நான் என்ன
செய்தேன்? அவர் கடையில் ஏறி சாமான் வாங்கியது குற்றமா? அல்லது இரு நூறு ரூபாய் துட்டை
நீட்டியது தான் குற்றமா? காசு ஏறிப் போனதால் விளைகிற கொழுப்பை ஆர். பி ட்ரேடர்ஸிடம்
காண்கிறேன். அவர் பெயர் கூட எனக்குத் தெரியாது. அவசியமில்லை. கரைக்க வேண்டும்.
கொழுப்பைக் கரைக்க வேண்டும். அலறவிட வேண்டும்.
‘தப்பு தாம்ப்பா சில்லறை கொடுக்காமல் விட்டதிலிருந்து நான் செய்த எல்லாம் தப்பு. மன்னிச்சிடு’
மாட்டுச் சாணி வாங்க கோனார் தெருவுக்குப் போய்க் கொண்டிருக்கும் என்னை ‘அம் தினேஷ்.
எம்.சி.ஏ ஃபைனல் இயர்!’ என்று இந்தத் தருணத்தில் சுய அறிமுகம் செய்து கொள்வது
அழகியதொரு முரண். என் காலேஜில் எம்.சி.ஏ டிபார்ட்மெண்ட் என்றில்லை எந்த டிபார்ட்மெண்ட் போய்
தினேஷ் என்று கேட்டாலும், டாப்பர் தினேஷா என்று கேட்பார்கள். காலேஜ் முதல்
செமஸ்டரிலிருந்து இந்த செமஸ்டர் வரை நான் தான் முதல் ரேங்க். மொத்தமிருக்கும் எழுபது
பேரில் ஒருவன் அல்லது ஒருத்தியைக் கூட முதல் ரேங்க் எடுக்கவிட்டதில்லை. நிகர பர்சண்டேஜ்
93. விப்ரோவிலிருந்து கேம்ப்பஸ் வந்திருந்தது. கடைசித் தேர்வு எழுதி முடித்தக் கையோடு
வந்துவிடு என்றிருக்கிறார்கள். சம்பளம் முப்பதாயிரம்.
இந்த மேல் விபரங்கள் எல்லாம், இந்தக் கதைக்கும், தொடர்ந்து வரப் போகும் நிகழ்வுகளுக்கும்
கடுகத்தனை பிரயோஜனமில்லை என்றாலும், ஹீரோ(இல்லையா?) அறிமுகம் சற்றே பந்தாவாக இருக்க
வேண்டியதன் அவசியம் பொருட்டே சொல்லப் பட்டிருக்கிறது.
”யாருப்பா அது?”
”சாணி விலைக்குக் கொடுப்பீங்களா?” இப்படி ஒரு டயலாக்கை என் வாழ்வில் நான் பேசுவேன் என்று
கனவிலும் எதிர்பார்க்கவில்லை என்று சொன்னால், இதற்கு மேல் எதுவும் வார்த்தை கிடைக்காமல்
தடுமாறுகிறேன் என்று தான் அர்த்தம். கேட்டேன். வேட்டியையே ட்ரவுசர் போல் குறுக்கே விட்டுக்
கட்டியிருந்த அழுக்கு ஆசாமி என்னை ஏற இறங்கப் பார்த்தார். அருகில் வந்தார். பாலில்
குளித்துவிட்டு வந்தவர் போல அவர் மேலெல்லாம் ஒரே பால் வாடை. ஒரு மாதிரி குமட்டலாக
இருந்தது.
”சாணியா? எதுக்கு?” அவ நம்பிக்கையாகக் கேட்டார்.
”ஆமா சார். என் அம்மா வாங்கிட்டு வரச் சொன்னாங்க.. எதுக்குனு தெரியல.. ” – அவர்
விபரங்கள் கேட்கவில்லை.
”வாளி இருக்கா?”
”இதுல போட்டுக் கொடுத்துடுங்க..” என்று ஒரு பாலிதீன் கவரை நீட்டினேன். சாணி கை
மாறியது. விலையைக் கேட்காதீர்கள்.
மறு நாள் அதிகாலை எழுந்து, காலியான ரெண்டரை லிட்டர் பெப்ஸி பாட்டிலில் சாணிக் கரைசலை
ஊற்றிக் கொண்டு வெளியே கிளம்பும் சமயம் அம்மா விழித்துக் கொண்டாள்.
”என்னடா இது?”
”சாணி. ஒரு ப்ராஜெக்ட்க்காக..”
”பாத்ரூம் பூரா இது தான் வாடையா..? கருமம். என்ன ஏதுனு புரியாம இருந்தேன்.”
பூங்காவின் அரச மரத்தடி அருகில் பைக்கை நிறுத்தி, அங்கேயே ஒரு கால் மணி நேரம்
நின்றிருப்பேன். அதிகம் காக்க வைக்கவில்லை அந்த ஆர்.பி.
மஞ்சள் நிற டி-சர்ட்டும், கருப்பு நிற லோயரும் அணிந்திருந்தார். சற்று நேரத்தில் அந்த
மஞ்சள் பனியன் சாணி பனியன் ஆகப் போகிறது என்று நினைத்துக் கொண்டே பைக்கில் சாணி பாட்டில்
இருக்கிறதா என்று தொட்டுப் பார்த்தேன். இருந்தது. அவர் என்னைப் பார்த்துவிடாத படி
மரத்திற்குப் பின்னால் ஒளிந்து கொண்டேன். பைக்கில் சாய்ந்து உட்கார்ந்திருந்தேன்.
கையைக் காலை ஆட்டிக் கொண்டே யாரையோ அழைத்தார். அழைத்த திசையை நான் பார்த்தேன். இந்தக்
கதை இந்த இடத்திலிருந்து அநியாயத்திற்கு ஃபேண்டஸியாகவோ அல்லது நம்ப முடியாதபடியோ
இருந்தால் அதற்கு நான் எந்த விதத்திலும் பொறுப்பல்ல.. நடந்த நிகழ்வுகள் அப்படி.
அவள் செக்கச் செவேலென்று இருந்தாள். கால் முட்டியை சற்றே தாண்டிய ஒரு ட்ரவுசர். முதலில்
அதைச் சொல்லுவதற்கு மன்னிக்கவும், முதலில் அதைத் தான் பார்த்தேன். கறுப்பு நிறத்தில்
வட்டக்கழுத்து பனியன். கண்கள் காணும் காட்சிக்கு முரணாக invisible என்று பனியனில்
எழுதியிருந்தது. கொஞ்சம் தொளதொளவென்றிருந்த அந்த பனியன் அவளின் மெல்லிய வியர்வையில்
உடலுடன் ஒட்டியிருந்தது. சாணி மேட்டர் என்னாயிற்றா? இதற்கு மேல் அவளை வர்ணிக்கவிடாமல்
யாராவது இப்படிக் கேட்பார்களா? அந்தத் திட்டமே இப்போது இல்லை தெரியுமா? நான் வேறு
மாதிரி யோசித்துக் கொண்டிருந்தேன். ஏன் அப்படி யோசித்தேன் என்று இந்த நிமிடம் வரை எனக்கே
ஆச்சரியம் தான். ஆனால் என் மூளையில் வினோதமாக அந்த ஐடியா தோன்றியது. செயல்படுத்த
முடியுமா என்று என் மனசு குறுக்குக் கேள்வி கேட்கவில்லை. செய்துவிடு என்று மட்டும் தான்
சொல்லியது.
ஆம், அந்தப் பெண் ஆர்பியின் மகளாக இருக்கும் பட்சத்தில் அவளைக் கடத்திவிட வேண்டும். மறுபடி
படித்தாலும் அது தான் உண்மை. கடத்தல். சினிமாவா? நாவலா என்ற யோசனையெல்லாம் வேண்டாம்.
நிஜம். கிள்ளிப் பார்த்துக் கொள்ளுங்கள்.
என் அருகில் வந்தார்கள். திரும்பிக் கொண்டு கால்களை அகல விரித்துக் கொண்டு குனிந்து
குனிந்து நிமிர்ந்தேன். என்ன பேசுகிறார்கள் என்று காதுகளை அனுப்பினேன். மகள் தான்
ஊர்ஜிதம் ஆகிவிட்டது.
”இப்படி மெதுவா நடந்தா தொப்பை குறையாதுப்பா.. வேர்க்க வேர்க்க நடக்கணும். தோ இப்படி…”
-அவள் கைகளை வீசிக் கொண்டு அவரைக் கடந்து நடந்து காண்பித்தாள். அவள் முன்னே நடந்து
செல்வதை பின்னால் நின்று பார்த்துக் கொண்டு ‘அவள் முகமும் அழகு’ என்று சொன்னால் இரட்டை
அர்த்தத்தில் சேருமா?
கற்பனை செய்யாதீர்கள். நான் அவர்கள் பின்னே ஒரு பத்தடி தள்ளி பூங்காவை அவர்களோடு வலம் வர
ஆரம்பித்தேன். அவசர அவசியமாக ஒரு திட்டம் வேண்டும். ஆர்பி மகள் கடத்தல்.
கடத்தல்- கடத்துலுக்கான நாள், நேரம், இடம்- கடத்திய பின் எங்கே மறைப்பது- என்ன டிமாண்ட்-
எப்போது ரிலீஸ்- எல்லாவற்றையும் விட விபரீதம் இல்லாமல், ஒரு சினிமா பார்த்துவிட்டு
திரும்புவது போல் இயல்பு வாழ்க்கைக்கு எப்படித் திரும்புவது?
சீனிவாசபுரம் தாண்டி செந்தமிழ் நகர் என்று ஒரு லே அவுட் போட்டிருக்கிறார்கள். மண்ணை
முகர்ந்தால் நெல் வாடை அடிக்கும். அந்தளவிற்கு விவசாய பூமியாக இருந்த நிலம், இப்போது
சதுரம் சதுரமாக ப்ளாட்டாக மாறிவிட்டது. அந்த நகரின் ப்ளாட் நெ.48 எங்களுடையது.
மொத்தமிருக்கும் 72 ப்ளாட்டில் நாலு வீடு தான் முளைத்திருக்கிறது. ஐந்தாவது வீடாக நாங்கள்
கட்டிக் கொண்டிருக்கிறோம். முக்கால்வாசி கட்டியாகிவிட்டது. இன்னும் கொஞ்சம்
வேலையிருக்கிறது. பணப் பிரச்சனை. ஒரு ரூமிற்கு கதவு போட்டுவிட்டோம். நிலை வைக்கும்
போது யாருமே நினைத்திருக்க மாட்டார்கள். இந்த ரூம் தனது முதல் சேவையாக, அபர்ணாவைப்
பதுக்கி வைத்திருக்கப் போகிறது என்று.
காலை பத்து மணி. பைக்கை நிறுத்திவிட்டு, உள்ளே சென்றேன். பூட்டியிருக்கும் கதவைத்
திறந்தேன். உள்ளே அபர்ணா ஒரு இற்றுப் போன பாயில், கை, கால் இழுத்துக் கட்டப்பட்ட
நிலையில், வாயில் பிளாஸ்திரியோடு என்னை முறைத்தாள். ‘ம்ம்ம்ம்’ என்று முனகிக் கொண்டே
என்னருகில் வந்தாள். கண்களில் நீர்.
கடத்தியே விட்டாயா? என்று இத்தனை தாமதமாகவா கேட்பீர்கள். ஆம். எப்படி? சொல்கிறேன்.
அதற்கு முன், அபர்ணாவுக்குத் தண்ணீர் கொடுப்போம்.
கொண்டு வந்திருந்த பாட்டில் நீரை அவள் வாயில் ஊற்றினேன். பாதி தொண்டைக்கும், மீதி
மாருக்கும் வழிந்தது. கன்று தாய்ப்பசுவிடம் பால் குடிக்கும் போது ஒரு மாதிரி முட்டுமே
அந்த மாதிரி பாட்டிலை முட்டினாள்.
பயங்கரமான குழப்பத்திலும், கலக்கத்திலும் இருக்கிறாள் என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது.
‘என்னை எப்போ தான் விடப் போறே?’’ என்றாள்.
“உன்னை இங்கே கூட்டி வர்றப்பவே சொல்லிட்டேனே.. ?’’
“ உன் அப்பா கிட்டே பேசியிருக்கேன். எல்லாம் சரியா முடிஞ்ச உடனே உன்னை அனுப்பிடுவேன்.
கொஞ்ச தூரத்துல மினி பஸ் ஸ்டாப்பிங் இருக்கு. அங்க விட்டுடறேன். அங்கேயிருந்து நீ
போயிடலாம்.’’
“ எங்க அப்பா கிட்டே ஃபோன் போட்டுக் கொடு, எத்தனை லட்சம் வேணும் நான் வாங்கித் தர்றேன்.’’
“இந்தா லட்சமெல்லாம் யாருக்கு வேணும்? சில கண்டீஷன்ஸ் போட்டுருக்கேன். சொல்றேன் கேளு..’’
அபர்ணா குழப்பத்துடன் பார்த்தாள். நனைந்த மேல் சுடிதார் உள்ளே இருப்பவற்றை ஒரு மாதிரி
கோடிட்டுக் காட்டியது. நான் பார்ப்பதைக் கவனித்தவள், சற்றே திரும்பி உட்கார்ந்து கொண்டாள்.
சொல்லு என்பது போல் பார்த்தாள்.
“ உங்க கடைக்கு முன்னாடி ஒரு எட்டுக்கு நாலு ஃப்ளக்ஸ் போர்டு வைக்கணும்.. அதுல ‘இங்கு
மீதி சில்லறைக்குப் பதிலாக எந்தவித சாமானும் கொடுப்பதில்லை. வாடிக்கையாளர்கள் எந்தப்
பொருளுக்கு எந்த ரூபாய் கொடுத்தாலும், சரியான சில்லறை கொடுக்கப்படும்.’
அபர்ணா என்னை வியப்புடன் பார்த்தாள். அந்த வியப்பை வெளிப்படுத்தும் விதமாகத் தான் இருந்தது
அவளுடைய கேள்வி.
“நீ என்ன லூஸா..?’’
“சொல்லிக்கோ.. ஒரு நாலாயிரம் கலர் நோட்டீஸ் அடிக்கணும். ‘ஆர்பி ட்ரேடர்ஸில் சில்லறைத்
தட்டுப்பாடே இல்லை.. ஆயிரம் ரூபாய் கொடுத்து ரெண்டு ரூபாய்க்கு சாமான் வாங்கினாலும்,
மீதி சில்லறைக் கொடுக்கப்படும்’ அப்படினு பிட் நோட்டீஸ் அடிச்சு ஊர் பூரா கொடுக்கணும்.
லோக்கல் டீவியில இதையே விளம்பரம் பண்ணனும்.’’
அபர்ணா அழுதாள். “ பணம் கேட்டு கடத்துவாங்க.. முன் பகைக்குக் கடத்துவாங்க.. சில்லறைக்கா
என்னைக் கடத்துனே..?’’
அபர்ணாவிடம் அன்று எனக்கு நடந்த அவமானத்தைச் சொன்னேன். சாணி திட்டத்தையும், அவளை
பூங்காவில் பார்த்து திட்டம் மாற்றியதையும் சொன்னேன். உன் கோபம் நியாயமானது என்று சொல்வாள்
என எதிர்பார்த்தேன்.
“உனக்குத் தலையில அடி பட்டிருக்கு’’ என்று மட்டும் சொன்னாள். இல்லை அப்படி எல்லாம் இல்லை.
ஆனால் அதை அவளிடத்தில் நியாயயப் படுத்திக் கொண்டிருக்கவில்லை.
“உன் அப்பா கிட்டே இந்த கண்டீஷன்ஸ் எல்லாம் சொல்லியிருக்கேன். டீவியில விளம்பரம்
கொடுத்துட்டாராம். ப்ளக்ஸூம், நோட்டீஸும் சாயங்காலம் ரெடி ஆகிடும்னு சொல்லியிருக்கார். அது
ஊர்ஜிதமான உடனே உன்னை அனுப்பிடுவேன்.’’
அபர்ணா கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனாள். “நீ என்ன பண்றே?” என்றாள். சொல்லவில்லை. அவள் பி.இ
படிக்கிறாள் என்பதை மட்டும் தெரிந்து கொண்டேன்.
காலையில் பூரி வாங்கிக் கொடுத்தேன். மதியம் லெக் பீஸுடன் பிரியாணி. கூச்சமில்லாமல் ஒரு
கட்டு கட்டினாள். ஒரு நாலு மணி சுமாருக்கு புது சிம்கார்டுக்கு ஆர்பியிடமிருந்து
ஃபோன் வந்தது.
“ ஹலோ சொன்னதையெல்லாம் பண்ணிட்டேன்பா.. என் பொண்ணு..’’
“நம்புறேன். நைட் ஒன்பது மணிக்குள்ள வீட்டுக்கு வந்துடுவா.. என்னைப் பிடிச்சு வெளில
தள்ளின.. சாவுகிராக்கினு திட்டினே..அதுக்கு பர்சனலா ஒரு நஷ்ட ஈடு இருக்கு..’’
“டேய்…. எல்லாத்துக்கும் ஒரு அளவு இருக்கு.. நீ இருக்கிற இடத்தைக் கண்டுபிடிக்கறது
ஒண்ணும் பெரிய கஷ்டமில்லை எனக்கு. பெருசு படுத்த வேணாம்னு பார்க்கிறேன்.”
“எனக்கும் தெரியும்டா..?’’
“மரியாதை?’’
“உனக்கு அவ்ளோ தான்.’’- பேசிக் கொண்டிருக்கிறேனே தவிர நெஞ்சுக்குள் பகீரென்றிருந்தது.
கண்டுபிடித்தால் நாஸ்தி பண்ணிடுவார். அத்தனைக் கஷ்டமும் இல்லை.
“எனக்குத் தெரியும். போலீஸ்க்கு செலவு பண்றதை விட என் டிமாண்ட் ஈஸி உனக்கு. அதனால இதை
செலக்ட் பண்ணிட்டே.. பொண்ணு வந்த உடனே மாட்டின போர்டை எடுத்துவிடலாம்னு நினைக்காதே…
அப்படி பண்ணா வேற ப்ளான் வெச்சிருக்கேன். இதைவிட படு மோசமா இருக்கும் அது.”
ஆர்பி பயந்தார் என்பதைவிட, ஒரு மாதிரி அசூயை ஆனார். என்னுடைய மொக்கைக் கடத்தல்
அவருக்கு சொல்ல முடியாத அவஸ்தையை ஏற்படுத்தியிருந்தது. எனக்கும் அது தான் வேண்டும்.
ஒரு சாதாரண மனிதனின், மிகச் சாதாரண கோபம்.
“வேண்டாம்.. “ என்று அலறினார். “பேங்க்ல லட்ச ரூபாய்க்கு சில்லறை மாத்தி வெச்சுக்கறேன்.
உன் ப்ளான் எதையும் என் கிட்ட காட்டிடாதே.. கொடுமை. வேற என்ன வேணும் சொல்லு”
“அஞ்சு ரூபா சில்லறையா ஒரு பத்தாயிரம் ரூபாயை ஊருக்கு அந்தண்டை பழைய மாரியம்மன்
கோவில் இருக்கு தெரியுமா? கோவில் பக்கத்துல பெரிய தாடி வெச்சிட்டு ஒரு செருப்பு
தைக்கிறவர் உட்கார்ந்திருப்பார். அவர் கிட்டே கொடுத்துட்டு திரும்பிப் பார்க்காம வந்துடணும்.
நீ மட்டும் வரணும். நீ கொடுக்கறதை மறைவான இடத்திலர்ந்து நான் பார்த்துட்டு இருப்பேன்.
கொடுத்துட்டு திரும்பி வீட்டுக்குப் போய் வீட்டு லேண்ட் லைன்ல இருந்து எனக்கு ஃபோன் பண்ணு.
உன் பொண்ணை அனுப்பி வைக்கிறேன். டீல்!”
“மகா மோசம்!” என்றார் அழாத குறையாக.
ஒரு வாரம் கழிந்தது.
ஊர் முழுதும் இந்த சில்லறை விளம்பரம் எதிர்பார்த்ததை விட வேறு மாதிரி ஹிட்
அடித்திருந்தது. ஆர்பியைத் தொடர்ந்து வேறு சில கடைகளும் இதே பாணியில் களமிறங்கின.
ஆர்பி ட்ரேடர்ஸ் முதலாளியை மேலும் சில வணிகர்கள் ‘சரியான லூஸுப் பய.. விளம்பரமா
இது..’ என்று கிண்டலடிக்கவும் செய்தனர்.
அபர்ணாவை அனுப்பிய மறுதினம் அதிகாலை அந்த செருப்பு அண்ணனிடம் பேசி வைத்தது போல
ஐநூறு ரூபாய் கமிஷனுக்கு பத்தாயிரம் சில்லறை மூட்டையைப் பெற்றுக் கொண்டேன்.
நேற்று காலேஜ் பஸ் ஸ்டாப்பில் அபர்ணாவை அவள் அப்பாவுடன் பார்த்தேன். அவளும் பார்த்தாள்.
காட்டிக் கொடுத்துவிடுவாளோ என்று அவசரமாக ஆக்ஸிலேட்டரை முறுக்கினேன்.
பைக்கில் ஒரு திருப்பத்தை திரும்பும் வரை பார்த்தவள், கடைசி நொடி சிரித்தாள்.
‘இழுக்காதே.. எப்படிக் கடத்தினாய் சொல்’ என்று கேட்கறீர்களா?
அதற்கு முன் பிரபல கோடீஸ்வர தொழிலதிபர் ஆர்பி எனக்கு மாமனார் ஆன சுவாரஸ்யமான லவ் கம்
ஆக்ஷன் கதை இருக்கிறது சொல்லவா?
நோ நோ நோ பேட் வேர்ட்ஸ் !
என்னது சாவு கிராக்கியா?
தொலைந்தீர்கள், குறித்துக் கொள்ளுங்கள், எண்ணி ஏழே நாளில் அடுத்து உங்களைத் தான் கடத்தப்
போகிறேன்!

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
May 8, 2015, 1:21:09 PM5/8/15
to Palaniappan Nalliappan, rajavelu....@gmail.com, brail...@googlegroups.com, Thamaraikkannan B
நல்ல காலம்
வே.ம.அருச்சுணன்
ஆண்டு இறுதியில் டிசம்பர் மாதத்திலேயே புதிய ஆண்டில் பயிலவிருக்கும் மாணவர்களைச்
சேர்க்கும் நடவடிக்கையில் இறங்கிய நேரம் அது.
“என் பிள்ளைங்க இரண்டு பேரையும் இந்தப் பாலர் பள்ளியில சேர்க்கனும், இடம் கிடைக்குமா ஐயா?”
“முன்கூட்டியே நீங்க வந்ததால உங்க இரண்டு பிள்ளைங்களுக்கும் படிக்க இடம் இருக்கு. எந்தப்
பிரச்னையும் இல்லாம அவர்கள் இருவரும் இங்கே படிக்கலாம்….”
“நன்றிங்கையா.என் பெயர் தமிழரசி. பிள்ளைங்க இரண்டு பேரும் இரட்டையர்களா
பிறந்தவங்க.அவுங்களுக்கு வயசு நான்காவுது. மூன்றாண்டு பாலர் பள்ளி முடிந்ததும் அவர்கள்
இருவரும் அருகிலுள்ள தமிழ்ப்பள்ளியில படிக்கப் போறாங்க. இதோ….. பிள்ளைங்களோடப்
பிறப்புப் பத்திரங்க….பதிவு பண்ணிக்கங்கையா”
பிறப்புப் பத்திரங்களைக் கூர்ந்து பார்க்கிறேன்.தழிழகன், தமிழகி நல்ல தமிழ்ப்பெயர்களாகக்
குழந்தைகளுக்கு வைத்திருக்கிறார்களே……! வியப்பாக இருக்கிறதே! மூக்கும் விழியுமா
குழந்தைகள் அழகாக இருக்கிறார்கள்.செக்கச் சிவந்த மேனியும் வயசுக்கு ஏற்றார் போல்
உயரமாகவும் அளவான உடல் வாகுடன் காணப்படுகின்றனர்.என் முகம் மலர்கிறது.அழகிய ரோஜா
மலர்கள் அல்லவா அவர்கள்! அவர்களை எண்ணி மனதுக்குள் மகிழ்கிறேன். இறைவனின் அற்புதப் படைப்பை
எண்ணி வியக்கிறேன். எதிரில் அமர்ந்துள்ள குழந்தைகளின் தமிழரசியை ஏறிட்டுப் பார்க்கிறேன்.
அவர் என் முகத்தை ஆவலுடன் பார்த்துக்கொண்டிருக்கிறார்.
“அம்மா…..நீங்க இந்த ஊருக்குப் புதுசா? உங்கள இந்த வட்டாரத்தில இதற்கு முன்னே
பார்த்ததில்லையே……?”
“நீங்க சொல்றது உண்மைதாங்கையா. நாங்கள் சிரம்பான்ல இருந்து இங்கு வந்திருக்கோம்……..வந்து
ஐந்து வருடங்கள் ஆவுது……….ஏன் கேட்கிறிங்கையா?”
“உங்களப் பார்த்தா வசதியான குடும்பமா தெரியுது.வசதியானவங்க பெரும்பாலும்
தமிழ்ப்பள்ளிக்குப் பிள்ளைங்கள அனுப்பத் தயங்குவாங்க. ஆனா…………..நீங்க தெளிவான முடிவோடப்
பிள்ளைகளச் சேர்க்க எங்க பாலர் பள்ளிக்கு வந்திருக்கிறீங்க, ஆச்சரியமா இருக்கு……! இந்த
பாலர் பள்ளியப் பற்றி உங்களுக்கு எப்படி தெரியும்? ”
“தமிழ் தினசரியில் உங்கள் பாலர் பள்ளியின் நடவடிக்கைகளைப்பற்றி பல முறை
வாசித்திருக்கேன், ‘ஆஸ்ட்ரோ’ வானவில்லில் ஒளிபரப்பப்பட்ட பேட்டி மற்றும் ‘பேஸ்
புக்கிலும்’ பல விபரங்களைத் தெரிந்து கொண்டேன்”
“தினசரி நாளிதழ் வாசிக்கும் வழக்கத்தை நீங்க கொண்டிருப்பதை எண்ணி மகிழ்ச்சியா
இருக்கு. ‘ஆஸ்ரோவில்’ ஒளியேறிய பேட்டியைக் கண்டு களித்ததற்கும் நன்றி”
நம்மில் பலர் தமிழ் தினசரிகளை வாங்கி வாசிப்பதில்லை. ஆஸ்ட்ரோவில் ஒளிபரப்பப்படும் நல்ல
நிகழ்ச்சிகளைக் கண்டு பயனடையாமல்,சீரியல்களைப் பார்த்து சீரழியும் குடும்பங்களுக்கிடையில்
பயனுள்ள நிகழ்ச்சிகளைத் தவறாமல் பார்க்கும் இவர்களைப் போன்றவர்களைப் பாராட்டத்தான் வேண்டும்.
“அம்மா……உங்கள் கணவரை அழைத்துவரலியே?அவரைப் பற்றித் தெரிந்து கொள்ளலாமா?”
“ஓ….தாராளமா! என் கணவரும் நானும் தமிழ்ப்பள்ளியிலதான் படிச்சோம்.
இருவரும் பட்டதாரிகள். உணவு தயாரிக்கும் தொழில் பற்றி பல்கலைக்கழகத்தில படித்துப்
பட்டம் பெற்று, இப்போ சொந்தமா தொழில் பண்றோம். நூற்றுக்கும் மேற்பட்டவங்க எங்கள் நிறுவனத்தில
வேலை செய்யிறாங்க. வேலை செய்யும் அனைவரும் நம்மவர்கள்தாம். அவர்களோட முழு ஒத்துழைப்பால
வியாபாரம் நல்லா போய்க்கிட்டு இருக்கு. மிக விரைவில் இங்கு மேலுமொரு கிளை நிறுவனம்
ஒன்றைத்திறக்கவிருக்கிறோம்!”
“கேட்க மகிழ்ச்சியாக இருக்கு.பெரும்பாலும் நம்மவர்கள் சொந்த தொழிலில் ஈடுபடுவதைக் காண
முடிவதில்லை. ஆனா….நீங்க துணிவுடன் சொந்த தொழில் செய்வது உண்மையில் போற்றப்பட வேண்டிய
ஒன்று. நீங்க சொந்த தொழில் செய்ய முனைந்த காரணத்தத் தெரிஞ்சிக்கலாமா?!”
“திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடுன்னு…..நம்ம முன்னோர்கள் சொன்னது மட்டுமல்லாம
துணிவுடன் உலகின் பல நாடுகளுக்குச் சென்று வாணிபம் செய்து,வணிகத்துறையிலே கொடிகட்டி
பறந்த பரம்பரையில வந்த நாம அடிமையா மற்றவங்களிடத்திலே வேலை செய்யிறது கேவலம்
இல்லைகளா ஐயா? துணிச்சலுடன் தொழில் தொடங்கினோம். இன்று வசதியா வாழ்றோம். அதோடு நம்
இனத்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள ஏற்படுத்தித் தர்ரோம்!”
“உங்கள நினைக்கும் போது பெருமைப்படாம இருக்க முடியாது. நம்ம சமுதாயத்துல உங்களப்
போல பலர் சிந்திச்சாங்கன்னா……2020 ஆம் ஆண்டுக்குள்ள நிச்சயமா நம்ம இனம் இந்த நாட்டுல
தலைநிமிர்ந்து வாழும். நம்ம சமுதாயத்துக்கு முன்னுதாரணம விளங்கும் உங்களப் பாராட்டாம
இருக்க முடியாது.”
அவரைப்பார்த்து நான் புன்னகைக்கிறேன்,பதிலுக்கு அவரும் புன்னகை பூக்கிறார்.
குழந்தைகளின் பிறப்புப் பத்திரங்களை மீண்டுமொருமுறை சரி பார்க்கிறேன். தேவைப்பட்ட
அனைத்துப் பத்திரங்களும் சரியாக இருந்தன. உதவியாளர் மாணவர்களின் விவரங்களைக் கணினியில்
பதிவு செய்கிறார். சில நிமிடங்களில் அவர் தம் வேலைகளை நிறைவு செய்கிறார்.
மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அந்த அம்மா முழுமையாச் செலுத்தியப் பின் இருக்கையை விட்டு
எழுகிறார்.பணிவுடன் அவர் இருகரங்களையும் கூப்புகிறார்.அருகிலிருந்த அவரது இரு
குழந்தைகளும் அம்மாவைப்போன்று கரங்களைக் கூப்பி வணக்கம் கூறிய பின் விடை பெறுகின்றனர்.
இனிய முகத்துடன் அவர்களுக்கு விடையளிக்கிறேன்.அவர்கள் செல்வதை அமைதியுடன்
பார்க்கின்றேன்.என் முகத்தில் புன்னகை மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. இவரைப் போன்ற
பெற்றோர்களால் வரும் கல்வி ஆண்டில் மாணவர்களின் எண்ணிக்கை கண்டிப்பாகக் கூடும் என்ற நம்பிக்கை
மனதில் ஆலமரமாய்த் தழைத்து நின்ற போது மனதுக்குள் சிரித்துக் கொள்கிறேன்.
தமிழ்ப்பள்ளிகளின் மீது தனியாத அன்பு கொண்டு,பாலர் பள்ளியிலே தங்களின் குழந்தைகள் தமிழ்
மொழியைப் பயில்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யும் பெற்றோர்களின் எண்ணிக்கை அண்மைய காலமாகக்
சற்று கூடியிருந்தாலும், பல பெற்றோர்கள் இன்னும் மனமாற்றம் அடையவில்லை என்றே தெரிகிறது.
தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் சேர்கை ஆண்டுதோறும் சரிவு நிலையில் இருப்பதைக் கொண்டு
அறியமுடிகிறது. நாம் எப்படி எடுத்துச் சொன்னாலும் எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல்
பிறமொழிகள் மீது மோகம் கொண்டு,ஆரம்பக் கல்வியைப் பெற வேற்று மொழிப் பள்ளிகளுக்குப்
பிள்ளைகளை அனுப்பிவிடுகின்றனர். பாலர்பள்ளியை நடத்தும் வேற்று மொழியினரும் தாய்மொழியான
தமிழ்மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
நாடு சுதந்திரக்காற்றைச் சுவாசிக்கும் முன்பே,1936 ஆம் ஆண்டிலே கோலாலம்பூர் அப்பர்
தமிழ்ப்பள்ளியில் இடைநிலைப் பள்ளி இயங்கியுள்ளது.அப்பள்ளியின் புதிய கட்டிடத்தை 1958 இல்
அப்போதைய சிலாங்கூர் மாநில சுல்தான் அவர்கள் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்துள்ளார்.
ஆனால்,78 ஆண்டுகளுக்கு முன் நம்முடன் இருந்து வந்த இடைநிலைப்பள்ளியைத்தொலைத்துவிட்டு
இன்று அல்லாடுவது ஒட்டுமொத்த இந்திய சமுதாயத்தின் அலட்சியம் அல்லவா?
இன்னொரு உண்மையையும் புறம் தள்ளிவிட முடியாது. சுமார் ஆயிரம் பள்ளிகள் சுதந்திரத்திற்கு
முன் இருந்த நிலை மாறி இன்று 523 பள்ளிகளாகக் குறைந்திருக்கின்றன.அவற்றுள் பல பள்ளிகள்
மாணவர்களின் எண்ணிக்கை குறைவினால் மூடுவிழா காணும் துயர நிலையில் தள்ளாடிக்
கொண்டிருக்கின்றன என்னும் செய்தி மனதுக்கு வேதனையைத் தந்து
கொண்டிருக்கிறது.இப்பிரச்சனைக்குத் தீர்வு காண அவசரமாக சமுதாயம் கூட வேண்டும்.தலைக்கு
மேல் வெள்ளம் போய்விட்டால் பலன் இல்லாமல் போய்விடும் அல்லவா?
டிசம்பர் மாத இறுதி வாரத்தில், ஞாயிற்றுக்கிழமை எல்லா மாணவர்களும்,பெற்றோர்களும் கலந்து
கொள்ள ஏதுவாக நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. மாணவர்களின் அறிமுக
விழாவுக்குகான எல்லா ஏற்பாடுகளையும் ஆசிரியர்கள் கவனித்துக்கொள்கின்றனர்.நிகழ்வில்
நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
வருகை புரிந்த பெற்றோர்களையும் மாணவர்களையும் முன்னின்று வரவேற்றேன்.எதிர்பார்த்தது போல்
மாணவர்களின் பதிவு சிறப்பாக அமைந்ததால் மகிழ்ச்சியாக இருந்தது.
அதிகமான எண்ணிக்கையில் தமிழ் மாணவர்கள் இருந்தாலும்,இருபது விழுக்காட்டினர் வேற்று
இனங்களைச்சேர்ந்த மாணவர்களும் வழக்கம் போல் கல்வி கற்க பதிந்திருந்தனர்.
பத்தாண்டுகளுக்கு முன் அறிமுக விழாவுக்கு வரும் மாணவர்கள் பயத்தால் அழுது
பெற்றோர்களுக்கு மட்டுமின்றி ஆசிரியர்களுக்கும் சங்கடத்தை
ஏற்படுத்திவிடுவார்கள்.ஆனால், இப்போதெல்லாம் மாணவர்கள் அவ்வாரெல்லாம் நடந்துகொள்வதில்லை.
இதற்கு பெற்றோர்கள் பிள்ளைகளை வீட்டிலேயே தயார் படுத்திவிடுவதேயாகும்.நான்கு வயதிலேயே
மாணவர்கள் கற்றல்,கற்பித்தலுக்குத் தங்களைத் தயார் படுத்திக்கொண்டிருப்பது கால மாற்றத்தின்
விளைவு என்றே கூறவேண்டும். இது ஆரோக்கியமான வளர்ச்சிதான்.
பாலர் பள்ளியின் வளாகத்தில் போடப்பட்டிருந்த கூடாரங்களில் போடப்பட்டுள்ள இருக்கைகள்
அனைத்திலும் வருகை புரிந்தோர் அமர்ந்திருந்தனர்.இருக்கைகள் இல்லாமல் தவித்த சிலருக்கு
இருக்கைகளைக் கொடுத்து அமரச் செய்வதில் ஆசிரியர்கள் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தனர்.
“வணக்கம் ஐயா”
“வணக்கம்.வாங்க தமிழரசி”
“இவர்தான் என் கணவர்”
“வணக்கம்,வந்து உள்ளே உட்காருங்க”
“வணக்கம் ஐயா……என் பெயர் தமிழன்பன்”
“என்னது………குடும்பமே தமிழ் மயமாக இருக்கே!” வியப்பாகிப்போகிறேன்.
“எங்கப்பா பெயர் தமிழரசன்” என்று கூறி வேகமாகச் சிரிக்கிறார்
அவரோடு நானும் சேர்ந்து சிரிக்கிறேன்.
தமிழன்பன் அங்கு வந்ததுமே, அன்று நடை பெறவிருந்த நிகழ்வே உயிர் பெற்றுவிட்டது போல்
உணர்கிறேன். புத்துணர்சியடைகிறேன். பல சிரமங்களுக்கிடையில் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வு
எப்படி நடை பெறுமோ என்ற மனத்திகிலுக்கிடையில் உற்சாக மூட்டும் தமிழன்பனின் பேச்சு
மனதுக்கு இதமாக இருந்தது.
தமிழன்பன் எல்லாரிடமும் கலகலப்புடன் பேசுவார் என்று நான் சிறிதும் எதிர்பார்க்கவே இல்லை.
வருகை புரிந்த பெற்றோர்களிடையே அவர் இனிமையாக உரையாடிக்கொண்டிருந்தார்.அவரைச்
சுற்றியிருந்த பெற்றோர்களும் அவருடன் ஆர்வமுடன் பேசி மகிழ்வதைப் பார்த்து எனக்கும்
மகிழ்ச்சியாக இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் தமிழன்பனைப் போன்று யாராவது ஒருவர் சொல்லி
வைத்தது போல் அமைந்துவிடுவார். நிகழ்ச்சி களைகட்டிவிடும்.இதுவரையிலும் ஏற்பாடு
செய்யப்பட்ட எல்லா நிகழ்வுகளும் வெற்றிகரமாகவே நடந்து முடிவது ஒருவகையில் என் அதிர்ஸ்டம்
என்றே எண்ணிக்கொண்டேன்.
அப்போது, திடீரென,வாசலில் காவல் துறையினர் இரண்டு வாகனங்களில் வந்து
இறங்குகின்றனர்.வாசலில் பெற்றோர்களை வரவேற்று கொண்டிருந்த நான் அதர்ச்சிக் குள்ளானேன்! உயர்
அதிகாரி ஒருவர் காரைவிட்டு இறங்கி என்னை நோக்கி வருகிறார்.சில காவல் துறையினர் அவரை
பின் தொடர்கின்றனர்.ஏதும் புரியாமல் வரும் அதிகாரியைப் பதற்றமுடன் எதிர்கொள்கிறேன்.
“வணக்கம் மிஸ்டர் தமிழ்ச்செல்வன்!” என்னுடன் கைகுலுக்குகிறார்.அவரது உடையில்
அணிந்திருந்த பெயர் பட்டையில் ‘தமிழரசன்’ என்ற பெயர் பளிச்சென்று தெரிகிறது.
“மிஸ்டர் தமிழரசன்……தாங்கள் வந்த நோக்கத்த நான் தெரிஞ்சிக்கலாமா?”
“நிச்சயமா…….நான்தான் இந்த மாவட்ட காவல் துறைத்தலைவர்.என் பேரனும்,பேத்தியும் உங்க பாலர்
பள்ளியில் படிக்கப்போறாங்க.இன்றைய அறிமுக விழாவுல நானும் கலந்து கொள்ள
வந்திருக்கிறேன்.கலந்து கொள்ளலாமா?!”
“உங்க பேரன்,பேத்தியின் பெயர்களச் சொல்ல முடியுமா?”
“தமிழகன்,தமிழகி!”
“ஓ………அவர்களோட பெற்றோரும் வந்திருக்கிறாங்க,பிளீஸ் கம் இன்!”
காவல் துறையின் திடீர் வருகை அங்கிருந்த பெற்றோர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்துகிறது.
“செலாமட் பாகி செமுவா……!அனைவருக்கும் காலை வணக்கம்…..!” அனைவரையும்
வணங்கிய, தமிழரசன் பேரன்,பேத்தி அமர்ந்திருந்த இருக்கையின் அருகில் சென்று அமர்கிறார்.
ஏதோவொரு அசம்பாவிதம் நடைபெறப்போவதாகப் பதறிப்போனக் கூட்டத்தினர்,அவ்வாறு ஏதும்
நடைபெறாமல் போனதால் நிம்மதிப்பெருமூச்சு விட்டவர்களாக அமைதி அடைகின்றனர்.
அன்றைய நிகழ்வு குறிப்பிட்டபடித் தொடங்குகிறது. பள்ளி ஆசிரியை குமாரி இராஜபிரியா
மலாய், ஆங்கிலம், தமிழ் மற்றும் மென்ரின் ஆகிய நான்கு மொழிகளிலும் வரவேற்புரை
ஆற்றி வருகை புரிந்த அனைத்து பெற்றோர்களையும் கவர்கின்றார்.
குறிப்பாக மென்ரின் மொழியில் வரவேற்பு கூறிய போது,சீனப்பெற்றோர் அனைவரும் கைகளைத் தட்டி
மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். சுமார் ஒரு மணி நேரமாக நிகழ்ச்சி சுமூகமாக நடைபெறுகிறது.
வாய்ப்பை பயன் படுத்திக் கொண்டு,எதிர்பாராமல் நிகழ்வுக்கு வருகையளித்த மாவட்ட காவல்
துறைத் தலைவர் உயர்திரு.தமிழரன் அவர்களை நிகழ்வில் சிற்றுரை வழங்க கேட்டுக்
கொள்கிறேன்.அவரும் எனது வேண்டு கோளை மறுக்காமல்,பிள்ளைகளின் பாதுகாப்பு, பெற்றோர்கள்
மேற்கொள்ள வேண்டிய கடமைகள் பற்றி துல்லியமாக பல அரிய தகவல்களை அவரது உரையில்
எடுத்துக் கூறினார்.
“அடுத்து பேசிய தொழிலதிபர் திரு.தமிழன்பன், எனக்கு ஆரம்பக் கல்வியைப்
புகட்டி, பண்பாளனாக, வாழ்வில் உயர்வதற்கு உந்து சக்தியாக விளங்கியத்
தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின் அர்பணிக்கு நன்றிகூறும் வகையிலும், தமிழ்ப் பள்ளிகளில்
மாணவர்களின் எண்ணிக்கையைக் கூட்டும் வகையிலும் ஆண்டுதோறும் கல்வி நிதி வழங்க விரும்புகிறேன்.
இந்த ‘செம்பூர்ண பாலர்’ பள்ளியில் கல்வி பயிலும் ஆறு வயதுடைய முப்பது மாணவர்களுக்கான
ஓராண்டுக் கல்விக் கட்டணத்தை வழங்க விரும்புகிறேன்.இவர்கள் அனைவரும் தவறாமல் முதலாம்
ஆண்டில் தமிழ்ப்பள்ளிக்குச் செல்லவிருப்பதை உறுதி செய்யப்படுவார்கள். இந்த ஆண்டு முதல்
அந்நிதி என் நிறுவனத்தின் சார்பாக ஆண்டு தோறும் வழங்கப்படும்!” என்று கூறி
மரி.50,000- க்கான காசோலையைப் பள்ளி நிர்வாகியான என்னிடம் வழங்கி பின் இருக்கையில்
அமர்கிறார்.
அவரது உரையைக் கேட்டுத் தமிழ்ப் பெற்றோர்கள் வாயடைத்துப் போகின்றனர்.

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
May 8, 2015, 1:24:29 PM5/8/15
to brail...@googlegroups.com
பின்நவீனத்துவ எழுத்தாளர் வருகிறார்
கே.எஸ்.சுதாகர்
‘பிரபல பின்நவீனத்துவ (Postmodernism) எழுத்தாளர் சாரங்கன் அவர்கள் எதிர்வரும் மாதத்தில்
(20.06.2015) நடைபெற இருக்கும் எழுத்தாளர் விழாவில் கலந்து கொள்வதற்காக, இந்தியாவில்
இருந்து வருகை தர இருக்கின்றார். ஒரு வாரகாலம் நடைபெறும் இந்த எழுத்தாளர்
விழாவின்போது அவர் என்னுடைய வீட்டில் தங்கியிருப்பார். அவருடன் கலந்துரையாடுவதற்கு
வசதியாக ஒருநாள் கூட்டமொன்று ஒழுங்கு செய்யப்படுகின்றது. கலந்துகொள்ள விருப்பமானவர்கள்
தொடர்பு கொள்ளவும் – பாலமுருகன்’ – என்று ஒரு விளம்பரம் பத்திரிகையில் வெளியாகியிருந்தது.
பெண்கள் பற்றியும் செக்ஸ் பற்றியும் கூசாமல் எழுதுவதில் வல்லவர் சாரங்கன். அதுவே
’பின்நவீனத்துவம்’ என நினைத்துக்கொள்ளும் பாலமுருகன், விளம்பரத்தில் ‘பிரபல பின்நவீனத்துவ
எழுத்தாளர் சாரங்கன் ….’ எனப் போட்டுக் கொண்டார். சாரங்கன் அரச அழைப்பின் பேரில் வருவதால்,
அவருக்கு ஏற்கனவே தங்குமிட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தன. சிற்றியில் ஐந்து
நட்சத்திர ஹோட்டலில் தங்க வசதி இருந்தபோதும், பாலமுருகனின் அன்புத் தொல்லையால் அவரது
வீட்டில் தங்குவதற்கு சாரங்கன் உடன்பட்டிருந்தார்.
பாலமுருகன் சமீபகாலங்களில் எழுதத் தொடங்கிய ஒரு இளம் படைப்பாளி. அவர் தன்னை எப்போதும்
ஒரு வித்தியாசமான எழுத்தாளராகக் காட்டிக் கொள்ள முனைபவர். அவர் தனது சிறுகதைகள்
நாவல்களிற்குப் போடும் தலைப்புகளிலிருந்து அவரை அடையாளம் கண்டுகொள்ளலாம். அடிக்கடி
இந்தியா சென்று வருவார். அங்கே அவருக்கு விருதுகள், பொன்னாடை எல்லாம் காத்திருக்கும்.
சென்று வந்த பின்னரும் அவரைத்தேடி விருதுகள் பறந்து வரும். அவர் பணத்தை வாரி இறைத்து
’இந்த மாதிரியான’ வேலைகளைச் செய்து வருகின்றார் என்று இலக்கிய வட்டாரத்தில் ஒரு பேச்சு
பரவலாக உள்ளது. அவருடைய உழைப்பு முழுவதும் அதிலேயே கரைந்துவிடும்.
பாலமுருகனும் பிரபல பி.ந.எழுத்தாளர் சாரங்கனும் பேஸ்புக் நண்பர்கள். புலம்பெயர்ந்த
நாட்டுப் படைப்புகளையும் படைப்பாளர்களையும் பற்றி எழுது எழுது என்றெல்லாம் எழுதிக்
கிழித்து யூனிவர்சிட்டிப் பட்டங்களையெல்லாம் பெற்றுவிட்டார் பாலமுருகன். ஆனால் யாராவது
பேஸ்புக்கில் போடும் எந்தவொரு புலம்பெயர் விழாக்களைப் பற்றியோ படைப்புகள் அல்லது படங்களைப்
பற்றியோ ஒரு ’லைக்’ ஒரு ‘மூச்சு’ விடமாட்டார் பாலமுருகன்.
பாலமுருகனும் அவனது நண்பனும் மெல்பேர்ண் எயப்போர்ட்டில் சாரங்கனுக்காகக் காத்திருக்கின்றார்கள்.
கம்பீரமான நெடிய உயரம். தடித்த மீசை. கண்டவர்களைக் கவர்ந்து கொள்ளும் வசீகரத் தோற்றம்.
சாரங்கன் வந்துவிட்டார்.
சம்பிரதாயக் கை குலுக்கல்கள். கேட்டுக் கேட்டே அலுத்துப் போன பிரயாணம் பற்றிய கேள்விகள்,
விசாரணைகள். கார் ரொலமறைன் எயர்போட்டிலிருந்து சறுக்கிக் கொண்டு கிழம்புகின்றது. ஒரு
காலத்தில் ‘சுக்கா சுக்கா’ என்று நூறு வேகத்தில் ஓடிய ’வெஸ்டேர்ண் றிங் றோட்’, இப்ப ஐந்து
வருடமாகக் கிழறுப்பட்டு ‘நாய் வேறு சீலைப்பாடாகக்’ கிடக்கின்றது.
வீட்டிற்கு வந்துவிட்டார்கள். இரண்டு அடுக்கு மாடி வீடு வெறிச்சோடிக் கிடக்கின்றது.
“என்ன குடிக்கின்றீர்கள்? காப்பி… ரீ…?”
“ஒரே வெக்கையாக் கிடக்கு. ஏதாவது கூல் ரிங்ஸ் தாருங்கோ.”
ஃபிரிஜ்ஜைத் திறந்து சாரங்கனுக்கும் நண்பனுக்கும் கூல்ரிங்ஸ் கொடுத்தான் பாலமுருகன்.
”எங்கே மனைவியும் மகளும்? உங்களுடைய மகளுக்கு அப்போது பத்துப் பன்னிரண்டு வயதிருக்கும்.
இந்தியாவுக்கு வந்தபோது ஆட்டுக்குட்டிக்குப் பின்னாலே ஓடித் திரிந்தாள் அல்லவா? நோட்டி
கேர்ள்…” சாரங்கனின் கண் முன்னே பாலமுருகனின் அழகான மனைவியும் சுட்டிப்பெணும் தோன்றினார்கள்..
”இப்பவும் ஞாபகம் வைச்சிருக்கிறியள். அது நாலைஞ்சு வருஷத்திற்கு முன்னாலை. பிறகெல்லாம்
தனியத்தானே இந்தியா வந்து போறனான். மகள் இப்ப பெரிய பெண். பன்னிரண்டாம் வகுப்புப்
படிக்கின்றாள்.”
”ஆமாம்… அவர்களைத்தான் தேடுகின்றேன். எங்கே அவர்கள்?”
“மகளிற்கு இப்போது பாடசாலை விடுமுறை என்றபடியால், அவளையும் கூட்டிக் கொண்டு தனது
தாயாரின் வீட்டிற்குப் போய்விட்டார் மனைவி.”
சாரங்கனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. பாலமுருகனுடன் பின்நவீனத்துவம் பற்றி முன்னர்
சர்ச்சையில் ஈடுபட்டது ஞாபகத்திற்கு வந்தது.
“நான் வருவது பற்றி அவர்களுக்குத் தெரியுமா?”
”தெரியுமே! ஆனால் அவர்கள் இருந்தால் குடித்துக் கும்மாளமிட முடியாது என்பதால் நான் தான்
அவர்களை அனுப்பி வைத்தேன்.”
நான் குடித்துக் கும்மாளமிடவா இங்கு வந்தேன். அதற்கும் மேலாக சாரங்கனின் மனதிற்குள்
இன்னொன்று ஓடியது. பாலமுருகன் என்னை ஒரு கீழ்த்தரமான எழுத்தாளன் என எண்ணிவிட்டானே!
“உங்கள் ரொயிலற்றை ஒருக்கால் யூஸ் பண்ண முடியுமா?” சாரங்கனின் கேள்விக்கு “தாராளமாக”
என்று சொல்லிக்கொண்டே ரொயிலற்றைக் காட்டினான் பாலமுருகன்.
சாரங்கன் ரொல்யிலற்றுக்குள் நுழைந்ததும்,
“இவனையும் வீட்டிலை வைச்சுக் கொண்டு, மனிசி பிள்ளையையும் வீட்டிலை வைச்சிருந்தா என்னைப்
பற்றி சனம் என்ன நினைப்பினம்?” நண்பனைப் பார்த்து சிரித்துக் கொண்டே சொன்னான் பாலமுருகன்.
ரொயிலற்றுக்குள் இருந்த சாரங்கன், தான் நிற்கவேண்டிய சிற்றி ஹோட்டலுக்கு ஒரு குறும் தகவல்
அனுப்பினார்.
”தயவு செய்து பின்வரும் முகவரிக்கு ஒரு ரக்‌சி அனுப்பி வைக்கவும். நன்றி.”
“வீட்டிற்குள் ஒரே புளுக்கமாக் கிடக்கு. வாருங்கள் வெளியே நின்று காற்றோட்டத்தில்
கதைப்போம்” வீட்டிற்கு வெளியே வந்து ஒன்றும் நடவாதவர்போல பலதும் பத்தும் என கதைத்துக்
கொண்டிருந்தார் சாரங்கன்.
”முன்னர் அடிலயிட்டில் நடந்த விழாவின் போது சல்மான் ருஷ்டியும், மெல்பேர்ணில் நடந்தபோது
அம்பையும் கலந்து கொண்டிருக்கின்றார்கள். இந்தத் தடவை நான் வந்திருக்கின்றேன்” என்றார்
சிரித்தபடியே சாரங்கன்.
சற்று நேரத்தில் ரக்‌சி ஒன்று வாசலில் வந்து நின்றது. வீட்டிற்குள் சென்று தனது பாக்கைத்
தூக்கிக் கொண்டார் சாரங்கன். ’பாய்’ என்று சொல்லிவிட்டு நிதானமாக நடந்து ரக்‌சியில் ஏறிக்
கொண்டார்.

Dr. s. divakar

unread,
May 10, 2015, 11:32:32 AM5/10/15
to brail...@googlegroups.com
நல்ல மொக்கை

நன்றி!

கடுங்காற்றும் மழைகாட்டும்,
கடும் நட்பும் பகை காட்டும்

வலைப்பக்க முகவரி: http://kadhirvemban.wordpress.com
அலைபேசி: 9444143645
Skype ID: divakar.sekar2
தனி மின்னஞ்சல்: nagad...@gmail.com

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
May 10, 2015, 11:40:11 AM5/10/15
to brail...@googlegroups.com
                                           

www.writerimayam.com

எது இலக்கியம் எது தலித் இலக்கியம்

-இமையம்

1980-85 காலக்கட்டத்தில் தமிழவன், பாவண்ணன் போன்றவர்கள் கன்னடத்திலிருந்து தமிழிற்கு பல மொழிபெயர்ப்புகளை செய்தனர். அதன் வழியாக கன்னட தலித் இலக்கியம் தமிழிற்கு அறிமுகமானது. நிறப்பிரிகை பத்திரிக்கை தலித் இலக்கியம் குறித்த பேச்சைத் துவங்கியது. அ.மார்க்ஸ், ரவிக்குமார் போன்றவர்கள் தலித் அரசியல், தலித் இலக்கியம் குறித்த பேச்சை வளர்த்தெடுத்தனர். மதுரை அரசரடியில் செயல்பட்டு வரும்-தலித் ஆதார மையம்-கருத்தரங்குகளை நடத்தியது. பல வெளியீடுகளை வெளியிட்டது. ஆண்டுதோறும் தலித் கலை விழா ஒன்றையும் நடத்தியது. தமுக்கு என்ற இதழையும் நடத்தியது. சிவகாமி புதிய கோடாங்கிஎன்ற மாத இதழையும், ரவிக்குமார் தலித்என்ற இதழையும் நடத்தினார்கள். கவிதா சரண் என்ற இதழ் நடத்தப்பட்டது. விடியல் பதிப்பகம் பல மொழிப்பெயர்ப்புகளை வெளியிட்டு ஆக்கப்பூர்வமான செயல்களை செய்தது. அம்பேத்கார், அயோத்திதாசர், இரட்டைமலை சீனிவாசன் போன்றவர்களுடைய எழுத்துக்கள் மறுபிரசுரம் கண்டன. அவர்களுடைய எழுத்துக்கள் பேசுபொருளாயின. நூறு பிரதிகள் அச்சிடுகிற பத்திரிகையிலிருந்து இந்தியா டுடே வரை தலித் சிறப்பிதழ்கள் வெளியிட்டன. UGC பணம் கிடைத்த ஒவ்வொரு கல்லூரியும் தலித் இலக்கியம் குறித்த கருத்தரங்குகளை நடத்தியது. பேராசிரியர்களும் தங்களுடைய பங்களிப்பாக M.Phil., Ph.D ஆய்வு செய்த மாணவர்களுக்கு தலித் இலக்கியத்தில் ஆய்வு செய்யுங்கள்என்று கூறினார்கள். அதோடு பல தொகுப்பு நூல்களையும் வெளியிட்டு தலித் விடுதலையை வென்றெடுக்கதங்களுடைய பங்களிப்பைச் செய்துள்ளனர். மார்க்சிய இலக்கியம் குறித்து, அமைப்பியல்வாதம் குறித்து வாதித்துக் கொண்டிருந்தவர்கள் படிப்படியாக தலித் இலக்கியம் குறித்துப் பேசினார்கள். பிறகு படிப்படியாக தலித் இலக்கியம் குறித்துப் பேசுவதைக் குறைத்து விளிம்புநிலை, பெண்ணியம் என்று பேசவும் எழுதவும் ஆரம்பித்தனர். தற்போது தமிழ் இலக்கிய மைதானம் காலியாகக் கிடக்கிறது. தமிழகத்தில் தலித் இலக்கியம் குறித்த உரையாடல் கால் நூற்றாண்டு காலம்வரைகூட நிற்கவில்லை. அதற்கு தலித் இன மக்களின் வாழ்வு குறித்த காத்திரமான படைப்புகள் உருவாகாதது ஒரு காரணமாக இருக்கலாம்.

தமிழ் நாட்டில் தலித் இலக்கியம் குறித்துப் பேசிய அளவுக்கு படைப்புகள் உருவாகவில்லை. கட்டுரைகளும், தொகுப்பு நூல்களும்தான் அதிகளவில் வந்தன. அழகிய பெரியவன், பாமா, சோ.தருமன், ஸ்ரீதர கணேசன், N.T.ராஜ்குமார், மதிவண்ணன், சுகிர்த ராணி, சிவகாமி, இந்திரன், விழி.பா.இதயவேந்தன், அன்பாதவன் என்று பலர் எழுதினார்கள். இவர்கள் எழுதியதுகூட சிறிய எண்ணிக்கைதான். இவர்கள் எழுதியது இலக்கியமா, தலித் இலக்கியமா என்ற கேள்வியும், ஒரு படைப்பிற்கான சிறந்த கூறுகளைக் கொண்டிருந்தனவா என்ற கேள்வியும் இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக தலித் இலக்கியத்திற்கான வரையறை என்ன, யார் எழுதுவது, யாரைப்பற்றி எழுதுவது, எந்தக் காலக்கட்டத்தில் எழுதுவது தலித் இலக்கியம் என்ற கேள்வியும் இருக்கிறது. தலித் படைப்பாளிகளின் படைப்புகள்-தலித் படைப்புகள் என்று மதிப்பிடப்படாமல் வேறுவிதமாக மதிப்பிடப்பட்டிருந்தால் அப்படைப்புகளின் தரம் என்ன, மதிப்பு என்ன?

தலித் என்ற சொல் சுட்டும் பொருளை உணர்ந்து, தமிழகத்தில் தலித் அரசியல் எழுச்சி பெற்ற பிறகு எழுதப்பட்ட தலித் நாவல்கள் எத்தனை, சிறுகதைத் தொகுப்புகள், கவிதைத் தொகுப்புகள் எத்தனை? இப்படைப்புகள் சமூகச்சூழலில், அறிவுச்சூழலில் ஏற்படுத்திய தாக்கம் என்ன? புதிதாக எழுதப்பட்ட படைப்புகள் எவை எவை, எழுத்தாளர்கள் யார் யார் என்று கேட்டால் நம்மிடம் பட்டியல்கள் இல்லை. கே.ஏ.குணசேகரனின் வடு’ (2005) என்ற அவருடைய சுயசரிதை தலித் அரசியல் பேசப்பட்ட பிறகு எழுதப்பட்ட ஒரே சுயசரிதை. தலித் இலக்கியத்தின் உச்சமாகக் கொண்டாடப்பட்ட பாமாவின் கருக்குதலித் படைப்பு என்று மதிப்பிடாமல் இலக்கியப் படைப்பாக மட்டுமே மதிப்பிட்டிருந்தால் அப்படைப்புக்கான இலக்கிய மதிப்பீடு என்னவாக இருந்திருக்கும்? ராஜ் கௌதமன் எழுதிய சிலுவைராஜ் சரித்திரம் (2002) -இலக்கியமாக, தலித் இலக்கியமாக அதற்குரிய இடம் என்ன? அழகிய பெரியவனின் தகப்பன் கொடி’ (2002) நாவல் தலித் நாவலாகப் பேசப்படாமல் போயிருந்தால், சோ.தருமனின் கூகை (2005) தலித் அடையாளத்தின் கீழ் வைத்து பேசப்படாமல் போயிருந்தால் இந்நாவல்கள் பெற்றிருக்கும் இலக்கிய அங்கீகாரம் என்னவாக இருந்திருக்கும்? விழி.பா.இதேயவேந்தன் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார். தலித் படைப்பாளி, தலித் படைப்பு என்ற அடையாளத்திற்குள், பட்டியலுக்குள் அவர் இருக்கிறார். தலித் இலக்கியம் என்று ஒருவகை உருவாகாமல் போயிருந்தால் விழி.பா.இதயவேந்தனின் எழுத்துக்கள் என்னவாகியிருக்கும்? இப்படியான பட்டியலில் அன்பாதவன், தலித் சுப்பையா, அரங்க மல்லிகா, தலையாரி, பாப்லோ அறிவுக்குயில், இந்திரன், ஆதவன் தீட்சண்யா, ஜே.பி.சாணக்யா, பிரதிபா ஜெயச்சந்திரன், தய்.கந்தசாமி, வெ.வெங்கடாசலம், ஸ்டாலின் ராஜாங்கம், ராஜமுருகபாண்டியன், அபிமானி…. போன்ற பலரும் இருக்கிறார்கள்.

தமிழகத்தில் தலித் எழுச்சி, தலித் அரசியல், தலித் இலக்கியம் குறித்த பேச்சு வேகம் பெற்ற அதேகாலத்தில்தான் ரியல் எஸ்டேட், தொழில்நுட்பத்துறை, பன்னாட்டு நிறுவனங்களின் வருகையும் நிகழ்ந்தது. வளர்ச்சி என்பது நகர்ப்புற வளர்ச்சிதான் என்று அரசாங்கமும், சமூகத்தின் ஒரு பிரிவு மக்களும் செயல்பட்டனர். தாராளமயக் கொள்கையை மத்திய அரசு கொண்டு வந்ததும் இதே காலக்கட்டத்தில்தான். ரியல் எஸ்டேட், தொழில்நுட்ப பூங்கா, பன்னாட்டு நிறுவனங்களின் வருகை, நகர்ப்புற வளர்ச்சி, தாராளமயக் கொள்கை அனைத்தும் சேர்ந்து ஒரே நேரத்தில் கிராமத்து மனிதர்களை குறிப்பாக தலித்களை வேலையற்றவர்களாக மாற்றியிருக்கிறது. கிராமத்தின் வாழ்வாதாரங்கள் சிதைக்கப்பட்டு வருகின்றன. விளைநிலங்கள் உணவு உற்பத்தி சாராத தொழிலுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தலித்கள் பெரும்பாலும் நிலம் சார்ந்த, உணவு உற்பத்தி சார்ந்த உழைப்பில் ஈடுபடுபவர்கள். அந்த உழைப்பிலிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து இதுவரை தமிழில் பேசப்படவும் இல்லை, எழுதப்படவும் இல்லை. நாம் பேசியதெல்லாம் கிருத்துவ மிஷனரி அமைப்புக்குள் இருக்கும் சாதி ஏற்றத்தாழ்வுகள் குறித்து மட்டுமே. அதுவும் சிறு அளவில் dஎழுதி, அதிலும் அதிரடியான வாக்கியங்களை எழுதி- கவன குவிப்பை ஈட்டுவது மட்டுமே. இது / யாசகம் அல்ல / யுத்தபேரிகை / தீக்குச்சிகள் / உறக்கம் கலைந்துவிட்டன / ஜுவாலைகள் / தேசம் முழுவதும் தெரிகின்றன. (ராஜமுருக பாண்டியன் யுத்த பேரிகை – 2004) இது போன்ற கவிதைகள் உணர்த்த விரும்புவது என்ன? பட்டிமன்றப் பேச்சுகள், ஊர்வலத்தில் எழுப்பப்படும் கோசங்கள் போன்றவை கவிதை ஆகாது. தலித் இலக்கியத்திற்கு ராஜ்கௌதமன் கொடுத்த விளக்கம் விநோதமானது. தலித் இலக்கியம் சுகமான வாசிப்புக்கு உரியதல்ல. படிப்பவர்கள் சூடாக வேண்டும், முகம் சுளிக்க வேண்டும். குமட்டலை ஏற்படுத்த வேண்டும். படிப்பவனின் இதயமும் கண்களும் சிவக்க வேண்டும்” (தலித்ய விமர்சனக் கட்டுரைகள். ராஜ் கௌதமன்.ப.26) இப்படி எழுதுவதுதான் தலித் இலக்கியமா? இந்த வரையறையால்தான் தமிழில் தலித் இலக்கியம் உருவாகவில்லையோ என்னவோ? பரபரப்பை உருவாக்க நினைப்பவர்களால் படைப்பை உருவாக்க முடியாது. தலித்திய மனோபாவத்தில் தலித்திய பார்வையில் எழுதப்பட்ட படைப்புகள் என்று சொல்கிறார்கள். தலித்திய மனோபாவம், தலித்திய பார்வை என்பது என்ன? தலித் சிந்தனையாளர்கள்தான் பதில் சொல்ல வேண்டும். தலித்களின் வாழ்க்கையை எழுதுகிறோம் என்று சொன்னால்கூட ஏற்க முடியும். தலித்ய மனோபாவத்தில், தலித்ய பார்வையில் எழுதுகிறோம் என்பதை ஏற்க இயலாது. தலித் என்பது ஒரு இனம். அதற்குக்கீழே சாதிகளே இல்லை என்பது நிஜமா? ஏற்றத் தாழ்வு கொண்ட சாதிகளை ஒரு பொது அடையாளத்தின் கீழ் கொண்டு வருவது சாத்தியமா? தமிழகத்திலுள்ள தலித்களின் மொத்த சனத்தொகையில் எவ்வளவு பேருக்கு தலித் இலக்கியம், தலித் அழகியல், தலித் அரசியல், தலித் கலை, பண்பாடு போன்ற சொற்கள் அறிமுகமாகியிருக்கின்றன? இனவரைவியல் சார்ந்த, நிலவியல் சார்ந்த, தலித்களுக்கென்று இருக்கும் தனித்த தொழில்கள் குறித்து இதுவரை தமிழில் எழுதப்பட்ட தலித் படைப்பு எது? தலித்களின் வரலாற்றை, பண்பாட்டு- கலாச்சார கூறுகளை புனைவாக்கிய படைப்பு எது, படைப்பாளி யார்? அப்படியான நாவல்-படைப்புகள் வரவில்லையென்றால் தலித் படைப்புகளில் பேசுகிற, தலித் வாழ்க்கை என்பது என்ன என்ற கேள்வி வருகிறது. அதிரடியான பேச்சுகளும், அதிரடியான வாக்கியங்களும்தான் தலித் இலக்கியம் என்றும் அதனால் ஏற்படும் உடனடி பலனும்தான் தலித் இலக்கியம் என்றும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். இப்போது / யாரேனும் கேட்க நேர்ந்தால் / பளிச்சென்று சொல்லி விடுகிறேன் / பறச்சி என்று” (பளிச்சென்று சொல்லி விடுகிறேன், சுகிர்த ராணி 2003). இப்போக்கு தலித் இலக்கியத்திற்கும், தலித் எழுத்தாளர்களுக்கும் சிறு நன்மையையும் ஏற்படுத்தாது. தலித் எழுச்சி, தலித் விடுதலை, தலித் பெண்ணியம், தலித் கலை, தலித் பண்பாடு, தலித் இலக்கியம் என்ற பேச்சே இப்போது இல்லை. அடங்க மறு, அத்து மீறுஎன்ற அரசியல் கோசங்களைக்கூட இப்போது அதிகமாகக் கேட்க நேரவில்லை. சரித்திரத்தின் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறோம்என்று காத்திருக்கலாம்.

கலகமொழி, கலகக் குரல், கலக இலக்கியம்-தலித் இலக்கியம் என்ற முழக்கதோடு எழுதப்படுவது இலக்கியமா? இந்த முழக்கங்கள் தற்காலிக கவர்ச்சி அரசியலை முன்வைக்கவும் மலினமான புகழைப் பெறவும் பயன்படும். தலித் எழுத்தாளர்களுக்கு அறிவார்ந்த கலாச்சார பார்வையும், சூழலோடு தங்களுடைய அனுபவங்களை சேர்த்துப் பார்க்கிற பார்வையும் இல்லை எனலாம். தலித்என்பது தற்போது வர்த்தகப் பெயராக இருக்கிறது. தலித் மக்களின் விடுதலை என்பது வெறும் அரசியல் அதிகாரத்தைப் பெறுவதால் மட்டுமே முழுமைபெறாது. சமூகத்தின் அனைத்துத் தளங்களிலும் குறிப்பாக கருத்தியல் தளத்தில் ஓயாத போராட்டம் நடத்தாமல் சாத்தியம் இல்லை.

1960-70 காலக்கட்டத்தில் தமிழகத்தில் இருந்த தொழிற்சாலைகள் எவ்வளவு, தொழிலாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு? இப்போது எவ்வளவு தொழிற்சாலைகள் இருக்கின்றன? எத்தனை லட்சம் தொழிலாளர்கள் இருக்கிறார்கள்? 1967ல் டி.செல்வராஜ் மலரும் சருகும் என்ற நாவலை எழுதுகிறார். தொ.மு.சி.ரகுநாதன் பஞ்சும் பசியும் என்ற நாவலை எழுதுகிறார். இன்று தமிழகத்தில் எத்தனை ஆயிரம் கம்பெனிகள் இருக்கின்றன, எத்தனை லட்சம் தொழிலாளர்கள் இருக்கின்றனர்; இன்று ஏன் பஞ்சும் பசியும், மலரும் சருகும் போன்ற நாவல்கள் உருவாகவில்லை? இன்றைய மார்க்சிய எழுத்தாளர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? தோழர் என்ற வார்த்தையைக்கூட இப்போது அரிதாகத்தான் கேட்க முடிகிறது. இந்தியா தாராளமயக் கொள்கையைக் கடைப்பிடித்து கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் கடந்துவிட்டன. தாராளமயக் கொள்கையால் பன்னாட்டு கார்பரேட் நிறுவனங்களின் அசுரத்தனமான வளர்ச்சி, நவீனமயமாக்கல், உலகமயமாக்கல், தொழில்நுட்பப் புரட்சி போன்றவற்றால் தமிழ் சமூகத்தில், மக்களின் மனோபாவத்தில், சூழலில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன, இதில் தலித் மக்கள் அடைந்த பாதிப்புகள் என்ன என்பது குறித்த பதிவுகள் போதிய அளவுக்கு இல்லை. எலிக்கறியைத் தின்றவர்கள் யார், கால்காணி, அரைக்காணி என்று வைத்திருந்த நிலங்களை பன்னாட்டு நிறுவனங்களிடம் கொடுத்துவிட்டு பெருநகரத்து சேரி வாழ் மக்களாக மாறிக் கொண்டிருப்பவர்கள் தலித் மக்கள்தானே. இது தலித்களின் பிரச்சனை இல்லையா? தலித் எழுத்தாளர்கள் நினைக்கிற பிரச்சனைகள் மட்டும்தான் தலித்களின் பிரச்சனைகளா? இடதுசாரிகள் வர்க்கப்போராட்டம், முதலாளி, தொழிலாளி குறித்து மட்டுமே பேசினார்கள். இந்தியா தமிழகத்தில் நிலவும் சாதியமைப்புகளால் ஏற்படும் உழைப்புச் சுரண்டல், பொருளாதார சுரண்டல்கள் குறித்துப் பேசவில்லை. திராவிடர் கழகத்தினர் மதத்தைப் பற்றியும், மூட நம்பிக்கைகளைப் பற்றி மட்டுமே அதிகமாகப் பேசினார்கள். சாதிகளின் கொடூர முகம் குறித்துப் பேசவில்லை. ஒட்டுமொத்த சமூக மாற்றம் சாதியை ஒழித்துவிடும் என்பது இவர்களின் நம்பிக்கை. இந்த நம்பிக்கையை தலித் சிந்தனையாளர்கள், அறிவு ஜீவிகள், எழுத்தாளர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா? தலித் எழுத்தாளர்கள் இதுவரை தாங்கள் பட்ட இழிவுகளைப் பற்றி அதுவும் அரையும் குறையுமாகத்தான் எழுதியிருக்கிறார்கள். தங்களுடைய தனித்த கலாச்சார, பண்பாட்டுக் கூறுகளின் பெருமைகளை அல்ல. தலித் என்ற சொல் சுட்டும் உண்மையான பொருளை உணர்ந்து காலம் காலமாக அனைத்து வகைகளிலும் சுரண்டப்பட்ட, அனைத்து வகைகளிலும் வஞ்சிக்கப்பட்ட மக்களுடைய வாழ்வின் சிறுபகுதியாவது ரத்தமும் சதையுமாக வரலாறாக அல்ல, ஆவணமாக அல்ல, இலக்கியமாக எழுதப்பட்டிருக்கிறதா? இதுவரை தமிழில் தலித் இலக்கியம் உருவாகவே இல்லை. உருவானமாதிரி ஒரு காட்சிப்பிழைதான் ஏற்பட்டது. அடையாளப்படுத்தப்பட்ட படைப்புகள்கூட விளக்கங்களாக, உரைகளாக மட்டுமே இருந்தன.

தமிழ் இலக்கிய உலகம் இலக்கிய படைப்புகளை மதிப்பிடுகிற முறை உலகில் வேறு எங்கும் இல்லாத ஒன்று. தலித் இனத்தைச் சேர்ந்த ஒருவர் தலித் இன மக்களின் வாழ்க்கையை கதையாக்கினால் அதற்குப் பெயர் தலித் இலக்கியம். தலித் அல்லாத ஒருவர் தலித் இன மக்களின் வாழ்க்கையை எழுதினால் அது இலக்கியம். ஒரு இலக்கியப் படைப்பை மதிப்பிடுவதற்கான அளவுகோல், அப்படைப்பை எழுதிய எழுத்தாளனின் சாதியா என்ற கேள்வி எழுகிறது. அக்கேள்விக்கு ஆமாம்என்று பதில்தான் சொல்ல முடியும். பூமணியின் பிறகு (1976), சிவகாமியின் ஆனந்தாயி, பழையன கழிதலும் 1990-வரை இலக்கியம். 90-க்கு பிறகு பூமணி, சிவகாமியின் நாவல்கள் தலித் நாவல்களாக அடையாளப்படுத்தப்பட்டது, விநோதமானது. 1990-வரை ராஜ் கௌதமன் மார்க்சிய விமர்சகர். 90-க்கு பிறகு தலித் விமர்சகர், தலித் சிந்தனையாளர், தலித் நாவலாசிரியர். 90-வரை ரவிக்குமார் மார்க்சிய சிந்தனையாளர். 90-க்கு பிறகு தலித் சிந்தனையாளர், தலித் எழுத்தாளர். தலித்பத்திரிகையாளர், இந்திரன் மார்க்ச்சிய சிந்தனையாளர், கலை விமர்சகர், பிறகு தலித் படைப்பாளி. N.T.ராஜ்குமார் தலித் கவிஞர். அவர் எழுதுவது தலித் கவிதை. மதிவண்ணன் தலித் கவிஞர். அவர் எழுதியது தலித் கவிதை. சுகிர்தராணி தலித் கவிஞர். தலித் இலக்கியம் இருக்கிறது, தலித் கவிதை இருக்கிறது. ஆனால் தலித் சினிமா மட்டும் தமிழ்நாட்டில் இல்லை. தலித் இசை, தலித் நடனம் இல்லை. பிள்ளை கொடுத்தாள் விளைஎன்ற சிறுகதையை சுந்தர ராமசாமி எழுதியதால் அது இலக்கியம். அதே கதையை தலித் இனத்தைச் சேர்ந்த ஒருவர் எழுதியிருந்தால் அது தலித் சிறுகதையாகி இருக்கும். நந்தன் நாடகத்தை- இந்திரா பார்த்தசாரதி எழுதினார். அதனால் அது இலக்கியம். நந்தன் கதையை ஒரு தலித் எழுதியிருந்தால் அது தலித் இலக்கியம். கீழ்வெண்மணி கொடூரத்தை குருதிப்புனல் என்ற பெயரில் இந்திரா பார்த்தசாரதி எழுதினார். அதனால் அது இலக்கியம். கீழ்வெண்மணி பிரச்சனையை தலித் எழுதியிருந்தால் அது தலித் இலக்கியம். மார்க்சிஸ்ட்டுகள் எழுதியிருந்தால் அது மார்க்சிய இலக்கியமாகியிருக்கும்.

இலக்கியம் சாதியோடு சம்பந்தப்பட்டதா? இலக்கியம் எழுதப்படுவதின் நோக்கம்சாதியை ஒழிக்கவா, வளர்க்கவா- சாதியை இறுகச் செய்வதற்காகவா? இன ரீதியான அடையாளப்படுத்துதல் எதற்காக? இலக்கியத்தில் சாதி ரீதியான ஒதுக்கீடு பெறுவதற்காகவா என்ற கேள்வி தவிர்க்க முடியாதது. இலக்கியத்திலும் இடஒதுக்கீடு செய்வதும், ஒதுக்கீட்டைப் பெறுவதும் நடக்கிறது. இன்று தமிழ் வாசகர்கள் எழுத்தாளர்கள் அதிகம் உச்சரிக்கிற பெயர் மார்க்கவஸ். இவரை நாம் எந்த அடையாளத்தின் கீழ் வைத்துப் படிக்கிறோம், கொண்டாடுகிறோம்?

இலக்கியத்திலும் வரையறைகளும் அடையாளப்படுத்துதல்களும், முத்திரை குத்துதல்களும் நடக்கின்றன. சாதிக்கொரு சங்கம் இருப்பதுபோல் சாதிக்கொரு இலக்கிய வகையும் இருக்கிறது. தலித் எழுத்தாளர்களுக்கு மட்டும்தான் முத்திரை குத்துதல், வகைப்படுத்தி ஒதுக்குதல் என்பதில்லை. பிராமணர் அல்லாதவருக்கும் இதுதான் விதி.

டி.செல்வராஜ் எழுதிய மலரும் சருகும் (1967), தேநீர், தொ.மு.சி.ரகுநாதன் பஞ்சும் பசியும், கு.சின்னப்பாரதி எழுதிய தாகம், சங்கம், மேலாண்மை பொன்னுசாமி, பொன்னீலன் எழுதுவது எல்லாம், மார்க்சிய இலக்கியம். ராஜம்கிருஷ்ணன் எழுதிய கரிப்புமணிகள் நாவல் மட்டும் மார்க்சிய இலக்கியம். இந்நாவலில் தொழிலாளர்கள், போராட்டம், செங்கொடி வருவதால் மார்க்சிய இட ஒதுக்கீடு. ராஜம் கிருஷ்ணன் எழுதிய பிற படைப்புகள் எல்லாம் பெண்ணிய இலக்கியம். அம்பை எழுதியது இலக்கியம் அல்ல-பெண்ணிய இலக்கியம். தமிழவன் எழுதிய ஏற்கெனவே சொல்லப்பட்ட மனிதர்கள்- சர்ரியலிச நாவல். சாருநிவேதிதா எழுத்தாளர். அவர் எழுதியது செக்ஸ் இலக்கியம். ஜி.முருகன் செக்ஸ் எழுத்தாளர். அவர் எழுதிய மரம் செக்ஸ் நாவல்.

கி.ராஜநாராயணன் எழுதியது நாயக்கர் இலக்கியம். நாஞ்சில் நாடன் எழுதியது வெள்ளாளர் இலக்கியம். சண்முகசுந்தரம், பெருமாள் முருகன் எழுதுவது கவுண்டர்கள் இலக்கியம். சாதியின் பெயரால் அழைத்தால் நாகரீகமாக இருக்காது என்பதற்காகத்தான், அதாவது இடைநிலைச் சாதியினர் எழுதியவற்றுக்கு வட்டார இலக்கியம் என்ற அடையாளம் வழங்கப்பட்டது. இலக்கியத்தின் தனிப்பிரிவுகளாக முத்திரை குத்தியதையும், தாங்களாகவே முத்திரை குத்தி கொண்டதையும் எதன் பொருட்டுச் செய்தார்கள்? கொங்குநாடு, நாஞ்சில்நாடு, கரிசல், வட்டார இலக்கியம் என்ற பெயரிலும், மார்க்சிய, பெண்ணிய, தலித்ய, விளம்புநிலை, பிற்பட்டோர் இலக்கியம் என்ற முத்திரை குத்தப்பட்டு-இலக்கியத்தின் கிளைப் பிரிவுகளாக, தொங்கு தசைகளாகவே அடையாளப்படுத்துவதின் நுண் அரசியல் என்ன? தமிழ்நாட்டில் யாரெல்லாம் எழுத்தாளர்கள், எதுவெல்லாம் இலக்கியப் படைப்புகள் என்ற கேள்வி முக்கியமானது. பிராமணர்கள்தான் எழுத்தாளர்கள். அவர்கள் எழுதியதுதான் இலக்கியம். முத்திரை குத்துதலை விரும்பி ஏற்றுக்கொண்டதும்-மார்க்சிய, பெண்ணிய, தலித்திய-எழுத்தாளர்கள் என்று அறிவித்துக் கொண்டதும் ஒரு அரசியல்தான். சாதகமான சமூகச்சூழலை, அரசியல் சூழலைப் பயன்படுத்திக்கொள்ள, மலிவான விளம்பரம் தேடிக்கொள்ள, தங்களுடைய பண்டங்களை விற்பனை செய்துகொள்ள பிறர் குத்திய முத்திரையை முனகலில்லாமல் ஏற்றுகொண்டார்கள், முத்திரை குத்தாதபோது தாங்களாகவே குத்திக்கொண்டார்கள். இலக்கியப்படைப்பு என்பது விற்பனைப் பண்டமல்ல. இலக்கியப் படைப்பின் நோக்கம் வியாபாரமுமல்ல. சமூகச் சூழலை, அரசியல் சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொள்ள எழுதுவது வியாபாரமாகலாம். இலக்கியமாகாது. சமூக, அரசியல் சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொள்வது மட்டும்தான் தமிழகத்தில் நடந்தது. 1980-1990-வரை தமிழ்நாட்டில் தலித் எழுத்தாளர் என்ற அடையாளத்தின்கீழ் ஒருவருமே இல்லை. மார்க்சிய இயக்கங்களோடு, மார்க்சிய இலக்கியங்களோடு, தொடர்புடையவர்கள், எழுதியவர்கள்-குறிப்பாக தலித்தாக இருந்தவர்கள்-1990-க்கு பிறகு தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல், சமூகச்சூழலைப் பயன்படுத்திக்கொள்ள தங்களை தாங்களே தலித் எழுத்தாளர்களாக அறிவித்துக் கொண்டார்கள், அடையாளப்படுத்திக்கொண்டார்கள். நேற்றைய மார்க்சிய எழுத்தாளர்கள்தான் இன்றைய தலித் எழுத்தாளர்கள். தலித் எழுத்தாளர்கள் என்று தனியாக ஒருவரும் தமிழ்நாட்டில் உருவாகவில்லை. தமிழ்நாட்டில் தலித் எழுத்தாளர்களாக அறிவித்துக் கொண்டவர்களின் பட்டியல் நீண்டதல்ல. அந்தப் பட்டியலில் இருந்தவர்களில் முக்கால்வாசிபேர் ஒரு சில கவிதைகளோடு, ஒரு சில கட்டுரைகள், கதைகளோடு தங்களுடைய இலக்கிய வாழ்க்கையை முடித்துகொண்டுவிட்டார்கள் என்பதும் உண்மை. தலித் எழுத்தாளர்கள் தங்களுடைய படைப்புகளை பெரும் பத்திரிகைகள் வெளியிடுவதில்லை என்று குறைப்பட்டுக்கொள்வது இழிவானது. அதைவிட இழிவானது தலித்களை கொண்டே தலித் இலக்கியங்கள் குறித்துப் பேச வைப்பது. இது முன்காலத்தைவிட இப்போதுதான் தீண்டாமைக் கொடுமை அதிகமாக இருக்கிறது என்பதற்குச் சான்று.

தலித்களின் ரட்சகர்களாகக் காட்டிக்கொள்பவர்கள் தலித்கள் எழுதுவது மட்டுமே தலித் இலக்கியம் அல்ல. பிறரும் அந்த வலியை உணர்ந்து எழுத முடியும் என்று பலரும் கூறுகிறார்கள். தாங்கள் தலித் விரோதிகள் அல்ல என்று காட்டுவதற்காக கூட்டங்களில் முழங்கி வருகிறார்கள். தொகுப்பு நூல்களும் வெளியிடுகிறார்கள். அதற்கு சிறந்த உதாரணங்கள் கோடை உமிழும் குரல்’ (2005 திலகவதி) என்ற தொகுப்பு நூல். தலித் பெண்ணியம் (1993) கலக மொழி – (தலித் கலைகளும், தலித் கலை விழாக்களும்) பா.மோகன் லார்பீர் (2003), குரலற்றவனின் குரல் தலித் பண்பாட்டு அரசியல் கதைகள் யாழினி முனுசாமி (2009). “இந்த கலக அரசியல் தமது இறுதி இலக்கை அடையாமலே இடைநிறுத்தம் செய்யப்பட்டு தேக்கம் கண்டுவிட்டது. சமூக ஏற்றத்தாழ்வுகளைத் தகர்த்து எறிந்துவிட்டு ஆதிக்க சாதியினரின் அடக்குமுறை அரசியலை அடியோடு மாற்ற வந்த இந்த மாற்று அரசியல் இன்று மாற்றம் கண்டு ஆற்றில் இறங்கிய மண் குதிரையாகி கரைந்து காணாமல் போய்விட்டது.” (தலித் அரசியல், ஒரு பார்வை-வீ.ஏழுமலை. புதிய கோடங்கி நவம்பர்-2010)- தலித் இலக்கியம். மண் குதிரையாகிவிட்டது என்று தலித் எழுத்தாளர்களே அறிவித்துவிட்டபிறகு, பிற இனத்தவர், தாங்கள் தலித் ஆதரவு இலக்கியம் படைப்போம் என்பது வேடிக்கையானது. எப்படி உங்களுடைய வாழ்வை பிறர் வாழ முடியாதோ, எப்படி உங்களுடைய சாவை பிறர் சாக முடியாதோ அதேமாதிரிதான் தலித்களுடைய வாழ்வைப் பிறர் வாழவும் முடியாது, எழுதவும் முடியாது. முடியும் என்று சொல்கிறவர்கள் பன்றி குட்டிகளை வளர்க்கட்டும். பன்றிக் குட்டிகளோடு தங்களுடைய குழந்தைகளை விளையாட விடட்டும். பன்றி விட்டைகளைப் பொறுக்கட்டும். பன்றியை அறுக்கும்போது பக்கத்தில் உட்கார்ந்து கறியைக் கூறு போடட்டும், கறியை காக்காய் தூக்கிக்கொண்டு போகாமல் இருக்க காவல் காக்கட்டும். பன்றிக் கறியை கூச்சமில்லாமல் உறவினர்களோடு உட்கார்ந்து மகிழ்ச்சியோடு சாப்பிட்டுவிட்டு வந்து சொல்லட்டும் நானும் தலித் ஆதரவாளன்தான் என்று. பாசாங்கு, பாவனை இலக்கியமாகாது.

எது இலக்கியம் எது இலக்கியமல்ல என்று வரையறுப்பது கடினம். அவ்வாறு வரையறுக்கவும் முடியாது. இலக்கியம் குறித்து நாம் பேசத்தான் முடியும். அதற்கு இலக்கணம் வகுப்பது சாத்தியமல்ல. இலக்கியத்தின் நோக்கம் என்ன, எது இலக்கியம் என்பதற்கு சம்பந்தப்பட்டப் படைப்புதான் சிறந்த பதில். எது இலக்கியப் படைப்பு அல்ல என்பதற்கும் சம்பந்தப்பட்ட நூல்தான் பொறுப்பு. இலக்கியப் படைப்பு இலக்கணத்திற்குள் அடங்காது. குறிப்பிட்டதொரு அடையாளத்தின் கீழ் வகைப்படுத்துவது சரியல்ல என்றால், வட்டார எழுத்துக்கள், மார்க்சிய, பெண்ணிய, தலித்தியப் படைப்புகள் என்று எதன்பொருட்டு வகைப்படுத்துகிறார்கள். வட்டார பார்வையோடு, மார்க்சிய, பெண்ணிய, தலித் பார்வையோடு எழுதப்படும் படைப்புகள் முழு உண்மைகளைப் பேசுகின்றனவா? தத்துவங்களுக்காக, கொள்கைகளுக்காக, நம்பிக்கைகளுக்காக, விதிகளுக்காக, குறிக்கோள்களுக்காக அல்லது அதனுடைய முகமூடியை அணிந்துகொண்டு எழுதப்படுவதெல்லாம் இலக்கியப் படைப்புகள்தானா? முகமூடி அணிந்துள்ள ஒருவரால் எவ்விதமான பாரபட்சமுமின்றி சமூகத்தின் அதன் இயல்பான போக்கிலேயே அணுகி உண்மைகளைக் கண்டறிந்து எழுத இயலுமா? வகைப்படுத்துதல்கள் எதன்பொருட்டு நடக்கின்றன, அதற்கான அரசியல் செயல்பாடுகள்தான் என்ன? வகைப்படுத்துதல்கள் அடையாளப்படுத்துதல்கள் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு எந்த விதத்தில் பயன்சேர்க்கும்?

மார்க்சியம், பெண்ணியம், தலித் என்பது ஒரு சொல். வார்த்தை என்பது வாகனம் மட்டுமே. அது ஒரு அடையாளம். வார்த்தைகள் சுட்டிக்காட்ட மட்டுமே செய்யும். வார்த்தைகள் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட ஒன்றை உணர்த்த வேண்டும். வார்த்தைகள் முக்கியமல்ல. அது சுட்டும் பொருளே முக்கியம். நம்முடைய எழுத்தாளர்கள் பொருளை விட்டுவிட்டு வார்த்தைகளை மட்டுமே பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் தமிழில் உண்மையான இலக்கியம்- அது எந்தப் பெயரில் இருந்தாலும் உருவாகவில்லை. அதேமாதிரி வாழ்க்கைப்பற்றிய உண்மை முக்கியம். நமது குறிக்கோள்களும், நம்பிக்கைகளும் முக்கியமல்ல. இவை ஒரு எழுத்தாளனுக்கு சுமைகளாகவே இருக்கும். சுமைகளை உதறித்தள்ளிவிட்டு வாழ்வை தரிசிக்கும்போது உண்மையான இலக்கியப் படைப்பு சாத்தியப்படும். படைப்பு விளக்கமாக இருக்காது. அது உண்மையின் தரிசனமாக மட்டுமே இருக்கும். எல்லா அறிவியலையும்விட இலக்கியம் உண்மையானதாக இருக்கும். கோட்பாடுகள் தத்துவங்கள் விளக்கங்களைக் கொண்டது. எதிர்காலத்தை தத்துவத்திற்குள் கொண்டுவர முடியுமா? வாழ்க்கை நடந்துகொண்டிருப்பது. அது ஒரு பயணம். அந்தப் பயணத்தை நுணுகிப் பார்க்க விரும்புகிறவர் கோட்பாடு, தத்துவம் என்ற சுமைகளுடன் செல்லமாட்டார். ஒரு கோட்பாடு மற்றொரு கோட்பாட்டை, ஒரு தத்துவம் மற்றொரு தத்துவத்தைத் தோற்கடிக்கும். ஆனால் இலக்கியப் படைப்பு மற்றொரு படைப்பைத் தோற்கடிக்காது. மாறாக புதிய படைப்பு உருவாகக் தூண்டுகோலாக மட்டுமே இருக்கும். இலக்கியம் என்பது மலர்தல், செய்யப்படுவதல்ல. அதற்கு இலக்கு தீர்வு, நோக்கம் என்பதெல்லாம் இல்லை. கோட்பாட்டின், தத்துவத்தின் உதவியோடு வாழ்வை பார்ப்பது-கண்களைக் குருடாக்கிவிடும். இது எல்லா இலக்கிய படைப்பாளிக்கும் பொருந்தும்.

வாழ்க்கை சூட்சுமமானது. அதற்கு வரையறை இல்லை. அதற்கு வழியோ பாதையோ இல்லை. ஒருவகையில் சொன்னால் அது பாதை இல்லாத பாதை. அந்தப் பாதையைப்பற்றி சுதந்திரமான எழுத்தாளன் மட்டுமே எழுத முடியும். கோட்பாட்டின் அடிப்படையில், சூத்திரங்களின் இலக்கணங்களின், விதிகளின், நம்பிக்கைகளின் அடிப்படையில் இயங்குகிற ஒருவரால் எழுத முடியாது. காரணம். இவை எல்லாம் போதை. உலகிலேயே மிகப்பெரிய போதை கோட்பாடு, கொள்கை நம்பிக்கைதான். இவற்றின் அடிப்படையில் எழுதப்படுவது இலக்கியமல்ல. அது தலித் இலக்கியமாக இருந்தாலும்.

—————————-

12.12.2010 தில்லி தமிழ் சங்கத்தில் படிக்கப்பட்டது.

கணையாழி ஏப்ரல் 2011

-- 
-- 
இருள்கவிந்தால் ஒளிகிளம்பி விரட்டுதல்போல் இன்னுயிராம் தமிழ்க்கின்னல் சூழுமென்றால் திரள்திரளாய் ஒளிப்பிழம்புத் தீரர் கூட்டம் திரண்டெழுந்தால் பகையிருட்டுத் தூள் பறக்கும். 
இவன் 
கெ. குமார் 
உதவிப் பேராசிரியர் 
தமிழ்த் துறை மாநிலக் கல்லூரி தன்னாட்சி சென்னை-5. 


அலைபேசி எண் – 9444218357. 
kaviku...@gmail.com

-- 
-- 
இருள்கவிந்தால் ஒளிகிளம்பி விரட்டுதல்போல் இன்னுயிராம் தமிழ்க்கின்னல் சூழுமென்றால் திரள்திரளாய் ஒளிப்பிழம்புத் தீரர் கூட்டம் திரண்டெழுந்தால் பகையிருட்டுத் தூள் பறக்கும். 
இவன் 
கெ. குமார் 
உதவிப் பேராசிரியர் 
தமிழ்த் துறை மாநிலக் கல்லூரி தன்னாட்சி சென்னை-5. 


அலைபேசி எண் – 9444218357. 
kaviku...@gmail.com

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
May 10, 2015, 12:03:55 PM5/10/15
to brail...@googlegroups.com
www.writerimayam.com
சங்கவை – (நாவல்) இ.ஜோ.ஜெயசாந்தி
இமையம்
சங்கவை பெண்ணிய நாவலல்ல. நாவலில் விவரிக்கப்படுகிற உலகம் முற்றிலும் பெண்களுடைய
உலகமும் அல்ல. ஆண்கள், அவர்களுடைய மன இயல்பு, உளவியல் விருப்பம், வக்கிரம், சீண்டல்,
திமிர்தனம் பற்றிய நாவல். பெண்கள் பேசுகிறார்கள் ஆண்களைப் பற்றி. கலைவாணி, ஈஸ்வரி,
சங்கவை, தமிழ்ச்செல்வி, சௌந்தரா, விஜயா, சரோஜினி மேனன், மரகதம், பிரியா, செண்பகம்,
சைலு என்று நாவலுக்குள் நிறைய பெண்கள் வருகிறார்கள். இவர்கள் தங்களுடைய வலி, கண்ணீர்,
காயம், சந்தித்த அவமானம், இழிவைப் பற்றி பேசாமல் சமூகம் பற்றி பேசுகிறார்கள். ‘சங்கவை’
நாம் வாழும் உலகம் பற்றி பேசுகிறது.
கலைவாணி, ஈஸ்வரி, சங்கவை, தமிழ்ச்செல்வி நான்குபேரும் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண்கள்.
உயர் படிப்பிற்காக சென்னைக்கு வந்தவர்கள். இப்பெண்களின் வழியே இரண்டு உலகம் வாசகர்களுக்கு
காட்டப்படுகிறது. ஒன்று சென்னை வாழ்க்கை, மற்றது கிராம வாழ்க்கை. நாவலின் எந்த
இடத்திலும் கிராம வாழ்க்கை சிறந்தது என்றோ, தாழ்ந்தது என்றோ, நகர வாழ்க்கை சிறந்தது
என்றோ, தாழ்ந்தது என்றோ பதிவாகவில்லை. இது இந்த நாவலின் பலங்களில் ஒன்று.
சங்கவை ஒரு நாவலல்ல. பல நாவல்களின் தொகுப்பு. தமிழ் இலக்கிய மரபில் – காவிய மரபில்
ஒரு கதை என்றால் அதில் நூற்றுக்கணக்கான கிளைக்கதைகள் இருக்கும். அந்த கிளைக்கதைகளுக்குள்
பல உட்கதைகள் இருக்கும். இதுதான் நமது இலக்கிய மரபு. வாய்மொழி கதைசொல்லலிலும்,
புராண, இதிகாசக் கதைகளிலும், நாட்டார் கதைகளிலும் இத்தன்மை இருப்பதை அறியலாம். அந்த
தன்மையைச் சங்கவை நாவலில் பார்க்க முடிகிறது. பல உட்கதைகளைக் கொண்டது மட்டுமல்ல.
நாவலைப் பலவிதமாகவும் பல மொழிகளிலும் எழுதிப் பார்த்திருக்கிறார். சங்கவை கனவு காணும்
இடங்கள் அனைத்தும் புதுவிதமான மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. பாலியல் சீண்டலுக்குள்ளான
ஒரு பேராசிரியையின் துயரம் நாட்குறிப்பு வடிவில் எழுதப்பட்டிருக்கிறது. இது போன்ற
வடிவ முயற்சிகள் ஒரு நாவலாசிரியருக்கான சாவல்கள். ஜெயசாந்தி புதிய சவால்களை
எதிர்கொண்டிருக்கிறார். புதிய சவால்களை உருவாக்கியிருக்கிறார். நம்முடைய புராண
இதிகாசக் காப்பியங்களில் சிறுசிறு பாத்திரங்கள்கூட மிகுந்த முக்கியத்துவம் பெற்றவையாக
இருக்கும். அதே குணத்தைச் சங்கவை நாவலில் வரக்கூடிய சிறுசிறு பாத்திரங்களும்
பெற்றிருக்கிறார்கள். நாவலுக்குப் பலம் சேர்த்திருக்கிறார்கள்.
சங்கவை கல்விச் சூழலைப் பற்றிய நாவல். தமிழகத்தில் குறிப்பாகத் தனியார், தன்னாட்சிக்
கல்லூரிகள், ஆசிரியர்களை எப்படி பார்க்கிறது? எப்படி நடத்துகிறது? ‘சிறந்த கல்லூரி’
என்ற பெயருக்காக அந்த பெயரைத் தக்கவைப்பதற்காக நிர்வாகமும் பேராசிரியர்களும் எப்படி
நடந்துகொள்கிறார்கள்? நிர்வாகத்திற்குத் தங்களுடைய விசுவாசத்தைக் காட்ட பேராசிரியர்கள்
போடும் நாடகம், அவர்கள் பேராசிரியர்கள் தானா? படித்தவர்கள் தானா? என்ற கேள்வியை
எழுப்புகிறது. தங்களுடைய பதவியைத் தக்க வைத்துகொள்வதற்காக என்னென்ன விதமான
இழிசெயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பதை அப்பட்டமாக இந்நாவல் பேசுகிறது. பிறரை
அவமானப்படுத்துவதில் மனிதமனம் கொள்ளும் மகிழ்ச்சி என்பது விந்தையானது. ஆண்
பேராசிரியர்கள் பெண்பிள்ளைகளைப் பாலியல் தொந்தரவு செய்வது, சீண்டல், இழுத்தடித்தல், காக்க
வைத்தல் போன்றவற்றை மட்டுமே செய்கிறார்கள். பெண் பேராசிரியர்கள் ஆண் பேராசிரியர்களைவிட
மோசமாக நடந்துகொள்கிறார்கள். பெண் பிள்ளைகளின் நடவடிக்கைகள், செய்கைகள், உடுத்துகிற
உடை, நடக்கிற விதம், பேசுகிற விதம் குறித்து மாணவிகளைப் பார்க்கிற பார்வை, நடத்துகிற
விதம் – பெருந்துயரம். இது ஒரு நாவல்.
கலைவாணி என்கின்ற முனைவர் பட்ட ஆய்வாளர் தன்னுடைய வழிகாட்டி ஆசிரியரால் படுகிற
பாலியல் துன்பங்கள், சீண்டல்கள், புறக்கணிப்புகள் போன்றவற்றை தாங்க முடியாததால் தற்கொலை
செய்துகொள்கிறாள். கலைவாணியின் சாவு அவளுடைய தங்கை ஈஸ்வரிக்குக் காலம் கடந்து தெரிய
வருகிறது. ஈஸ்வரியையும் கலைவாணியையும் படிக்க வைப்பதற்காக அவளுடைய குடும்பம் பட்ட
துயரங்கள், ஈஸ்வரி மேற்படிப்பிற்காக செல்லவிருக்கும் பயணத் திட்டங்கள், அவர்களுடைய
குடும்பப்பின்னணி, கிராமம், அதன் அமைப்பு, உறவுகள், அதன் சிக்கல்கள் இது ஒரு நாவல்.
மன்னர் மன்னன் என்ற துறைத்தலைவரால் ஓயாமல் பாலியல் சீண்டலுக்குள்ளாகும் மாணவியல்ல ஒரு
பேராசிரியரின் துயரம். தனக்கேற்பட்டச் சித்திரவதையை, கசப்பான அனுபவத்தை
நிர்வாகத்திடமும், முதல்வரிடமும், முறையிட்டுமுறையிட்டுத் தோற்றுப்போன, கல்லூரி
நிர்வாகத்தாலும் சகப் பேராசிரியர்களாலும் அவதூறு பரப்பப்பட்ட, இழிவாகப் பேசப்பட்ட,
நடத்தப்பட்ட ஒரு பேராசிரியையின் மனக்குமுறல், போராட்டம். கல்லூரி நிர்வாகம் –
கல்லூரியின் புனிதம் என்ற பெயரைக் காப்பாற்றச் செய்யும் இழிசெயல்கள், தந்திரங்கள்,
ஏமாற்றுவேலைகள் – இது ஒரு நாவல்.
பத்துவயதுகூட நிரம்பாத ஆந்திரவைச் சேர்ந்த ’சைலு’ என்ற சிறுமி பாலியல் பலாத்காரம்
செய்யப்பட்டது. அதனால் அச்சிறுமிக்கு ஏற்பட்ட மனப்பிறழ்வு. பாலியல் பலாத்காரத்தை நேரில்
பார்த்த சிறுவன். கொடூரத்தை நேரில் பார்த்ததால் தொலைக்காட்சிகளுக்கும், செய்திதாள்களுக்கும்
பேட்டியளித்துபேட்டியளித்து சலித்துப் போவது, காவல்நிலையம், நீதிமன்றம் ஆகியவற்றுக்குச்
சாட்சி சொல்ல சென்றுசென்று திரும்புவது, ஆதரவற்ற குழந்தைகள், அனாதை இல்லங்கள்,
காப்பகங்களில் வாழும் குழந்தைகளின் மனநெருக்கடிகள், மனம் பேதலித்து ஆற்றில் வெள்ளம்
வருவதை அறியாமல் நடந்து செல்கிற சைலுவை காப்பாற்றப் போய் சங்கவை காணாமல் போவது. இது
ஒரு நாவல்.
சங்கவை, ஈஸ்வரி, தமிழ்ச்செல்வி, எபி, அரவிந்த், பிரான்ஸ் தேசத்துக்காரன் போன்றவர்களுடைய
நட்பு மனிதர்களால் அன்பைப் பெறாமலோ வழங்காமலோ இருக்க முடியாது. காயங்கள், துன்பங்கள்,
துரோகங்கள், கயமைத்தனம் என்று பலதும் இருந்தாலும் மனிதர்களுடன் தானே மனிதர்கள்
வாழமுடியும்? இது ஒரு நாவல்.
தமிழ்ச்செல்விக்கும் எபிக்குமான காதல். அரவிந்துக்கும் பிரியாவுக்குமான காதல்.
சங்கவைக்கும் பிரான்ஸ் தேசத்துக்காரனுக்குமான நட்பு, அன்பு, மறைமுகமான காதல் . இந்த
மூன்று காதல்களின் தோல்வியும் அந்த தோல்விக்குப் பின்னுள்ள துயரம் ஒருபுறம். அரவிந்த்
அவனுடைய மனைவி, எபி அவனுடைய மனைவி கேத்தரின் இவர்களுக்கான உறவு. இது ஒரு நாவல் .
சைலு, மீனலோசனி, மெர்வின் சங்கீதா, ராஜா, பாலா என்று குழந்தையின் உலகம். குடும்பத்தைக்
காப்பாற்ற சுண்டல் விற்கும் சிறுவன், வன்புணர்ச்சிக்குட்படுத்தப்பட்ட சைலு அதை நேரடியாகப்
பார்த்த முதன்மை சாட்சி பாலா. இரண்டு அனாதைக் குழந்தைகள் உள்ள காப்பகங்கள் அங்கு வாழும்
குழந்தைகள். இது ஒரு நாவல்.
தாயிடம் பால் குடிப்பதைக்கூட மறக்காத பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கிற வழக்கம்- எப்படி
தமிழ்ச் சமூகத்தின் நாகரிகமாகப், பண்பாடாக மாறியது. அரசு இலவசமாகத் தரவேண்டிய கல்வி
எப்படி தனியார் மயமாயிற்று? வியாபாரமாயிற்று? குழந்தைகள் குழந்தைகளாக இல்லாமல் பணம்
பறிப்பதற்கான கருவிகளாக எப்படி மாற்றப்பட்டார்கள்? தாய்மொழியில் பேசவிடாத, தாய்மொழியில்
படிக்கவிடாத, பள்ளிகள் எப்படி தரமான சிறந்தப் பள்ளிகளாக இருக்கும்? “இந்த
பள்ளிக்கூடத்தில் தமிழும் சொல்லித் தர்றாங்களா? அப்படின்னா வந்திருக்கவே மாட்டேன் ”என்று
கேட்டு அதிர்ச்சி அடைகிற எபியின் மனைவி கேத்தரின். இது ஒரு நாவல்.
தமிழ்ச்செல்வி, அவளுடைய விதவைத்தாய் மருதாயி, அவளுடைய வாழ்க்கை, உழைப்பு, கிராமம்,
தமிழ்ச்செல்வியின் கவிதைகள், மருதாயியின் மரணம், எபியின் மீதான அன்பு, எபி வேறொரு
பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளுதல், தனியார் பள்ளியில் வேலை செய்வது, அரசு வேலை
கிடைப்பது, தமிழ்ச்செல்வியின் வாழ்க்கை. இது ஒரு நாவல்.
சென்னை சென்ட்ரல், எக்மோர், பூந்தமல்லி நெடுஞ்சாலை, கன்னிமரா நூலகம், பாண்டி பஜார், பரந்த
கல்லூரி வளாகங்கள், உயர்ந்த கட்டிடங்கள், பெசண்ட் நகர் கடற்கரை என்று சென்னை சார்ந்த
விவரிப்புகள் ஒருபுறம். மறுபுறம் ஆலங்குளம், கொக்கிரக்குளம், முத்தாலம்குறிச்சி, வீர
மாணிக்கப்புரம், கண்டரமாணிக்கம், வண்ணாரப்பேட்டை, ஆனாப்பட்டி போன்ற கிராமங்கள் நாவலில்
விஸ்தாரமாக விவரிக்கப்படுகிறது. சென்னை சென்ட்ரலில் மின்சார ரயிலுக்காகக் காத்திருக்கும்
பெருந்திரளான மனிதக் கூட்டத்தைக் காட்சிப்படுத்துகிற நாவலாசிரியை ஆனாப்பட்டி ஆற்றில்
ஊர்க்கதை பேசியபடி நிதானமாகக் குளியல் போடும் பெண்களைப் பற்றியும் எழுதுகிறார்.
செயற்கையாக அல்ல இயற்கையாக. கிராமம், நகரம், அதன் வாழ்வு. நெருக்கடி. இது ஒரு நாவல்.
சங்கவை – அரசியல் நாவல் என்றும், குழந்தைகள் நாவல் என்றும், கல்விச் சூழல் பற்றிய நாவல்
என்றும், ஆசிரியர் – மாணவர் உறவு பற்றிய நாவல் என்றும், பாலியல் தொந்தரவுக்குள்ளான
பெண்கள் பற்றிய நாவல் என்றும், முறிந்து போன காதல்கள் பற்றிய நாவல் என்றும், நாட்டார்
தெய்வங்கள் பற்றிய கதைகள், நம்பிக்கைகள் பற்றிய நாவல் என்றும், தன்னுடைய அன்பை கண்ணீரை
வலியை, கவிதையாக வெளிப்படுத்துகிற தமிழ்ச்செல்வி பற்றிய நாவல் என்றும், இயற்கை
விவசாயம் பற்றி பேசுகிற சேது குமணன் பற்றிய, குழந்தைகள் மீது அளப்பரிய அன்பு கொண்டுள்ள
கமலவேணி பற்றிய நாவல் என்றும் : இப்படி பல நாவல்களின் தொகுப்பாக இருக்கிற நாவல் சங்கவை.
சங்கவை நாவலில் கிராமத்திலிருக்கும் படிக்காத, நாகரீகமில்லாத பெண்களைவிட படித்த,
நாகரீகம் மிக்க, பதவியிலிருக்கிற பெண்கள் மட்டுமல்ல பெண் குழந்தைகளும் பாலியல் ரீதியாக
அதிக துன்பத்திற்கு ஆளாகிறார்கள் என்பதைக் காட்சி ரூபமாக உணர முடிகிறது. சங்கவை நாவல்
பெண்கள் படும் துயரம் பற்றிப் பேசினாலும் நவீனப் பெண் எழுத்தாளர்கள் மாதிரி – முலை,
யோனி, பனிக்குடம், மாதவிடாய் வலி போன்ற வார்த்தைகளை எழுதி தானொரு பெண்
நாவலாசிரியை, பெண் சிந்தனையாளர் போன்ற பட்டங்களைப் பெறவோ, மலினமானப் புகழைப் பெறவோ,
ஜெயசாந்தியின் எழுத்து முயற்சிக்கவில்லை. இது இந்நாவலின் சிறப்புகளில் ஒன்று. சங்கவை
நாவலில் பெண்கள், அவர்களுடைய மன உலகம் பற்றி பேசப்படுகிறது. ஆண்களின் உலகமும்
பேசப்படுகிறது. ஆண்களின் இழி குணத்தைப் பேசும்போது – ஆண்களை குற்றம் சொல்லாமல் நமது
பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் குற்றம் சுமத்துகிறது. ஆண்களுக்கான திமிர் தனத்தை
நம்முடைய கலாச்சாரமும் பண்பாடும்தானே தருகிறது என்ற குற்றச்சாட்டும், இந்த சமநிலை
பார்வை தான் மற்ற பெண் எழுத்தாளர்களின் எழுத்துகளிலிருந்து சங்கவை நாவலை விலக்கியும்,
சற்று உயரத்திலும் வைத்திருக்கிறது.
நாவல் முழுவதிலும் ஒரே நேரத்தில் மூன்று விதமான மொழிகள் பயன்படுத்தப்படுகின்றன.
நகரத்து மொழி, கிராமத்து மொழி, கனவு மொழி. மொத்த நாவலிலும் மொழி சார்ந்த குழப்பங்கள்
ஏதுமில்லை. ஏழெட்டு நாவல்களின் தன்மையை உள்ளடக்கியதாக இருந்தாலும் கதையிலும் கதை சொன்ன
விதத்திலும் குறைபாடு ஏதுமில்லை. இது ஜெயசாந்தியின் எழுத்திற்குக் கிடைத்த வெற்றி.
பல்வேறு சிறப்புகளைக் கொண்டிருக்கிறது சங்கவை நாவல். அதேநேரத்தில் சில சறுக்கல்களையும்
கொண்டிருக்கிறது. படித்த விவரமான சங்கவை பாலியல் வன்புணர்ச்சிக்குட்படுத்தப்பட்ட
மனப்பிறழ்வு கொண்ட சைலு என்ற குழந்தையைக் காப்பாற்றப் போய் காணாமல் போவது நம்பும்படியாக
இல்லை. கதையின் வெற்றி என்பது நம்பகத்தன்மையைப் பொறுத்தது மட்டுமே.
தனியார் கல்லூரியின் தாளாளர் சேதுகுமணன், அவருடைய தாராளக் குணம் இயற்கை விவசாயம்
சார்ந்த அவருடைய ஈடுபாடு, அடித்தளமில்லாமல் இருக்கிறது. தனியார் கல்லூரிகள், பள்ளிகள்
அதனுடைய தாளாளர்கள், முதல்வர்கள் எப்போதும் கெடுபிடியாகவும் கடுமையான சட்டத்திட்டங்களை
கடைப்பிடிப்பவர்களாக மட்டுமே இருப்பார்கள். கெடுபிடிகள் தானே தனியார் கல்லூரி
பள்ளிகளின் பெருமை. அதை சேதுகுமணனும் கமலவேணியும் இழந்திருப்பது ஏற்புடையதாக இல்லை.
நாவலில் வரக்கூடியவர்கள் அனேகம்பேர் புனிதர்களாக இருக்கிறார்கள். அதிலும் பெரிய புனிதர்
எபி. ஈஸ்வரி, சங்கவை, தமிழ்ச்செல்வி போன்றவர்களுக்கு அவர் ஓடிஓடிச் செய்கிற உதவி
ஆச்சரியம். பெண்களின் மனமறிந்து குறிப்பறிந்து செயல்படுகிறார். சங்கவையின்
பிறந்தநாளுக்கு வைரமோதிரம் பரிசளிக்கிறார். அன்பு, நட்பு, உதவும் குணத்திற்கு ஒரு
எல்லை உண்டுதானே. உயிராகக் காதலிக்கும் தமிழ்ச்செல்வியைப் புறக்கணித்து தாய் தந்தையரின்
பேச்சை மீறாத பிள்ளையாக, புனிதராக எபி இருக்கிறார். இரவும் பகலும் ஓயாமல்
ரசித்துரசித்து காதலித்த, காதலன் வேறு ஒரு பெண்ணை மணந்துகொள்ளும்போது மிகவும்
நிதானமாகவும், கண்ணீரோடும், இழப்பை ஏற்றுக்கொள்ளும தமிழ்ச்செல்வி – அதிசய பெண்தான்.
புனித பெருமைகள் ஏன் பெண்களுக்காக மட்டுமே உருவாக்கப்படுகின்றன. தமிழ்ச்செல்வி பாத்திரம்
செயற்கை.
கலைவாணி, சங்கவை, ஈஸ்வரி, தமிழ்ச்செல்வி இவர்களின் நட்பு மொத்த நாவலில் எந்த இடத்திலும்
கசப்பாகவில்லை. சங்கவை மீது அவளுடைய மாமா நரசிம்மனும், அத்தை மரகதமும் காட்டுகிற
அன்பு – மிகை. நரசிம்மனும், அத்தையும் எந்த இடத்திலும் முகம் சுளிக்காதது ஆச்சரியச்சம்.
புனிதர்கள் எப்போதும் புனிதர்களாகவும், கழிசடைகள் எப்போதும் கழிசடைகளாகவே இருப்பார்களா?
ஆண்கள் எழுதினாலோ, பெண்கள் எழுதினாலோ கதைகளில் வரக்கூடிய பெண்கள் மட்டும் எப்போதும்
‘வெள்ளை மனம்’ கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதிசயம் தான். “ஒருபோதும் வாடாத
பிச்சிப்பூவாய் இருக்கும் அக்காவின் கண்கள்” (ப.435) இது போன்ற சித்தரிப்புகள் பெண்களை
முடமாக்குகிற கருவிகள். இந்த கருவிகள் ஒழிக்கப்பட வேண்டுமென்று பேசுகிற, எழுதுகிற
நாவலாசிரியர் அதை மறந்துவிட்டு எழுதுவது நாவலாசிரியரின் குற்றமல்ல. நமக்குள்
நம்முடைய பண்பாடு, கலாச்சாரம் எப்படி ஊறி இருக்கிறது என்பதற்கு இது போன்ற
சித்தரிப்புகள் உதாரணம்.
சங்கவை நாவலில் மதம் சார்ந்த, தெய்வ நம்பிக்கைகள் சார்ந்த, கனவுகள், சம்பவங்கள்
சித்தரிப்புகள் அதிகம் வருகின்றன. ஆனால் சாதி சார்ந்த, சாதி இழிவுகள் சார்ந்த பேச்சு
எங்குமே வரவில்லை. நம்முடைய சமூகத்தில் பொதுவெளியிலும் கல்வி நிலையங்களிலும்
மனிதர்களை இழிவு செய்கிற பெரிய ஆயுதம் சாதி. அது குறித்து நாவலில் ஒரு சொல்கூட
இல்லை. தமிழர்கள் சாதி சார்ந்த அடையாளங்களுடன் தானே எப்போதும் வாழ்கிறார்கள்?
ஈஸ்வரியை ‘ஈஷ், ஈஷ்’ என்று அழைப்பதும் சங்கவையைச் ‘சங்கு’, ‘சங்கி’ என்று அழைப்பதும்,
செண்பகத்தைச் ‘செண்பா’ என்று அழைப்பதும் எரிச்சலூட்டுகின்றன. தமிழர்கள் ஏற்கனவே
தங்களுக்கான பல அடையாளங்களை இழந்து விட்டார்கள். பெயரையும் இழப்பது நியாயமில்லை.
தமிழ் நாவல் இலக்கியப் பரப்பில் சங்கவை நாவலுக்கு நிச்சயமாக ஒரு இடம் உண்டு. அந்த இடம்
நாவலின் மையத்திற்கு, நாவல் எழுதிய மொழிக்கு, கட்டமைப்புக்கு, கிளை கிளையாகக் கதைகளை
உருவாக்கியதற்கு, நாவலின் சமூக அக்கறைக்கு மதிப்பு வாய்ந்த இடமுண்டு.
சங்கவை (நாவல்),
இ.ஜோ.ஜெயசாந்தி,
வெளியீடு – விருட்சம்,
சீத்தாலட்சுமி அப்பார்ட்மண்ட்ஸ்,
16 – ராகவன் காலணி,
மேற்கு மாம்பலம்,
சென்னை – 33,
விலை – 820.
உயிர்மை – ஏப்ரல் 2015.

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
May 10, 2015, 12:07:02 PM5/10/15
to brail...@googlegroups.com
www.writerimayam.com
விருந்தாளிகள் விட்டுச் செல்லும் வாழ்வு – ம.நவீன்
இமையம்
விமர்சனம் என்பது அரிதாகிவிட்டது. விமர்சனம் இருக்கிறது என்று சொன்னால் அது முதுகு
சொறிந்து கொடுப்பதாக, நட்பு சார்ந்ததாக, ஆதாயம், அரசியல், எதிர்ப்பார்ப்பு நிறைந்ததாக
இருக்கிறது. ஒரு படைப்பை அதன் பலம் சார்ந்து, தரம் சார்ந்து விமர்சிக்கின்ற பண்பு
அருகிவிட்டது. இப்போக்கு இலக்கியப் படைப்பிற்கு மட்டுமல்ல மொழிக்கும் இழப்பு. பொய்
உரைகளையே நாம் இலக்கிய விமர்சனம் என்று கொண்டாடுகிறோம். பொய், புகழ் உரைகளை
நாடுகிறவன், வெகுமதி எனக் கருதுகிறவன் இலக்கியப் படைப்பாளி அல்ல. ஒரு படைப்பை
படிப்பதற்கும், அது குறித்துப் பேசுவதற்கும், எழுதுவதற்கும் அறிவும், பயிற்சியும்
வேண்டும். ரசனை உணர்வும் வேண்டும். பிற வறுமைகளை எளிதில் போக்கிவிட முடியும். அறிவு
வறுமையை எப்படி போக்க முடியும்? போர் நடந்துகொண்டிருக்கும் நாட்டில், வறுமை, பசி
நிறைந்த நாட்டில் வாழ முடியும். ஆனால் அறிவு வறுமை நிறைந்த நாட்டில் வாழ்வது எளிதல்ல.
தமிழ்ச் சமூகம் அறிவு வறுமைக்கு உட்பட்ட சமூகமாக இருக்கிறது. அறிவு வறுமை நிறைந்த
சமூகத்தில் எங்காவது சிறு வெளிச்சம் தென்பட்டால் அதுதான் பெரிய மகிழ்ச்சி. ம.நவீன்
எழுதிய – ‘விருந்தாளிகள் விட்டுச் சொல்லும் வாழ்வு’ கட்டுரைத் தொகுப்பில் – கைவிளக்கு
வெளிச்சம் இருக்கிறது.
அண்மைக்காலத்தில் ம.நவீன் படித்த நூல்களைப்பற்றிய விமர்சனங்கள்தான் – பனிரெண்டு கட்டுரைகளாக
இந்நூலில் இடம் பெற்றுள்ளன. நாவல்களையும், தன் வரலாற்றுக் கதைகளையும் படிக்கும்போது
தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை எவ்விதமான பாசாங்கும் இல்லாமல், என்ன நினைப்பார்களோ என்ற
பயமில்லாமல் எழுதியிருக்கிறார். எழுத்தின் பலம் என்பது உண்மைதான். அது இந்தத் கட்டுரை
நூலில் இருக்கிறது.
அ.ரங்கசாமி எழுதிய ‘நினைவுச் சின்னம்’, ‘இமையத் தியாகம்’ நாவல்கள் குறித்து இரண்டு
கட்டுரைகள் இருக்கின்றன. இந்த இரண்டு நாவல்களும் எப்படி மலேசிய வாழ்வை, வரலாற்றை, சமூக
இயங்கியலை புனைவுக்குள் கொண்டு வந்திருக்கிறது, வரலாறு எப்படி நாவலானது என்பதை ரசனை
உணர்வுடன் சொல்கிறார் ம.நவீன். ஒரு நாவலாசிரியனின் வேலை கதை சொல்வது மட்டுமல்ல. கதையை
அல்ல காலத்தை எப்படி ஆவணமாக்குகிறான், அதை எப்படி கலையாக்குகிறான் என்பதையும்,
அக்காரியத்தை அ.ரங்கசாமி எப்படி நேர்மையான முறையில் செய்திருக்கிறார் என்பதையும் அழகாக
சொல்கிறார் கட்டுரை ஆசிரியர். அதே நேரத்தில் ‘இமையத் தியாகம்’ நாவலில் என்னென்ன விதமான
குறைபாடுகள் இருக்கிறது என்பதையும் பட்டியலிட்டுள்ளார். ஒரு படைப்பில் குறைகளைக்
காண்பது என்பது காழ்ப்புணர்வால் ஏற்படுவதல்ல.
ப.சிங்காரத்தின் – ‘புயலிலே ஒரு தோணி’ நாவலின் கதைக் களம், கதை நிகழும் காலம்,
அன்றைய மனிதர்களின் வாழ்க்கை, செயல்பாடுகள், இரண்டாம் உலகப்போர் ஏற்படுத்தும் விளைவுகள்,
நாவலின் மையப் பாத்திரமான பாண்டியனின் மன உலகு எப்படிப்பட்டதாக இருந்தது என்பதை
நாவலாசிரியர் எப்படி விவரித்திருக்கிறார் என்பதை ம.நவீன் சொல்கிறார். நாவலை
படிக்கத்தூண்டும் விதமாக, நன்றாக கதை சொல்லத் தெரிவது மட்டுமல்ல, ஒரு நாவலை மற்றொரு
நாவலுடன் ஒப்பிட்டும் சொல்கிறார். ‘புயலிலே ஒரு தோணி’ – நாவல் எந்த விதத்தில்
முக்கியமானது? அதற்கான காரணங்கள் எவை? இந்த நாவல் எழுதப்பட்ட காலத்தில் பல நாவல்கள்
தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ளன. பல நாவல்கள் இருந்தும் – குறிப்பாக இந்த நாவலை மட்டும்
ஏன் பேச வேண்டும்? ஒரு நாவல் எப்படி கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது என்ற கேள்விக்கு
– மொழி, கதையின் மையம், கதையை சொன்னவிதம், சமூகப் பொருத்தம் என்று பலதும் சேர்ந்துதான்
நாவலுக்கான மதிப்பை ஏற்படுத்துகிறது ப.சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’யும்,
அ.ரங்கசாமியின் ‘இமையத் தியாகமும் எப்படி ஒன்றுக்கொன்று இணைந்தும், முரண்பட்டும்
நிற்கின்றன என்பதையும் ம.நவீன் ஒப்பிடுகிறார். இந்த ஒப்பீடு புதிதாக நாவல்களை
படிப்பவர்களுக்கு புதிய வாசல்களைத் திறந்துவிடும். படைப்பு குறித்த வெளிச்சத்தைக்
கூட்டும். ஒரு விமர்சகன் செய்ய வேண்டிய வேலை இதுதான். அன்பை சொல்வதல்ல விமர்சனம்.
சா.ஆ.அன்பானந்தனின் – ‘மரவள்ளிக்கிழங்கு’ நாவல் மலேசிய மக்களின் இருண்டகால, வறுமை
நிறைந்த வாழ்வை நேர்மையோடும் அழகியல் உணர்வோடும் எப்படி பதிவு செய்தது? அந்நாவல் எப்படி
மலேசிய இலக்கிய உலகில் முக்கியமான இடத்தைப் பிடித்தது? என்பதை கட்டுரை ஆசிரியர்
விரிவாக எழுதியிருக்கிறார். ஒரு இலக்கியப் படைப்பு எழுதப்படுவதின் நோக்கம் வாசகர்களை
குஷிப்படுத்துவதல்ல. குஷிப்படுத்துகிற படைப்புகளைத் தருகிறவன் எழுத்தாளன் அல்ல.
குஷிப்படுத்துகிற படைப்புகளைப் படிக்கிறவன் தேர்ந்த வாசகனும் அல்ல. ‘மரவள்ளிக்கிழங்கு’
நாவல் குறிப்பிட்ட கால வாழ்வை அப்பட்டமாக சொன்னது. இப்படியான நாவல்களின் மூலம்தான் –
நாம் நமக்கான வேர்களை அறிய முடியும் என்று சொல்கிற ம.நவீன், ஜோ.டி.குரூஸின் ஆழி சூழ்
உலகு எப்படியானதொரு வாழ்வை பதிவு செய்தது என்பதையும் சொல்கிறார். ஒரு இனக்குழு மக்கள்
எப்படி ஓயாமல் போராடி தங்களை நிலைநிறுத்திக் கொள்கிறார்கள்? அதற்கான எத்தனங்கள்,
போராட்டங்கள், பலிகள், எவைஎவை என்பதை மனச்சாய்வின்றி கலைஞன் எப்படி பதிவு செய்கிறான்
என்பதையும் நாவலாசிரியனுக்கான கடமை என்ன என்பதையும் ‘மரவள்ளிக் கிழங்கு’, ‘ஆழி சூழ்
உலகு’ நாவல்களின் வழியே விளக்கமாக சொல்கிறார்.
ஜி.நாகராஜனின் ‘குறத்தி முடுக்கு’, நாளை மற்றுமொரு நாளே’ – இரண்டு நாவல்களைப்
பற்றியும் ஒரு கட்டுரை உள்ளது. இரண்டு நாவல்களின் அசலான தன்மை குறித்தும் கட்டுரை
ஆசிரியர் பேசுகிறார். ஜி.நாகராஜின் பலம் எது, பலவீனம் எது – அதையும்
எழுதிருக்கிறார். அதே நேரத்தில் ஜி.நாகராஜனின் எழுத்துலகம் பற்றி தமிழ் அறிவுலகம்
புனைந்து வைத்திருக்கும் கற்பனை என்பது மோசடி என்கிறார். ஒருவர் ஒரு படைப்பை பிரமாதம்
என்று சொல்லிவிட்டால் ஏன் எல்லாருமே ‘பிரமாதம்’ என்று சொல்கிறார்கள்? மாற்றுக் கருத்தை
முன்வைத்தால் தான் ரசனையற்றவன், இலக்கிய அறிவு அற்றவன் என்று சொல்லிவிடுவார்கள் என்ற பயமா
என்று ம.நவீன் கேட்கிறார். தங்கமான கேள்வி. ஒரு படைப்பை எப்படி அணுக வேண்டும்.
புரிந்துகொள்ள வேண்டும் என்பதைப்பற்றி நல்ல விளக்கங்களைத் தந்திருக்கிறார் கட்டுரை
ஆசிரியர். திறம் மிக்க செயல்.
‘நாடு விட்டு நாடு’ (முத்தம்மாள் பழனிச்சாமி), ‘கருக்கு’ (பாமா), ‘நான் வித்யா’
(ஸ்மைல் லிவிங் வித்யா), ‘முள்’ (முத்து மீனாள்) ஆகிய நான்கு தன் வரலாற்றுக்
கதைகளைப்பற்றிய ஒரு கட்டுரையும் நூலில் இடம் பெற்றுள்ளது. நான்கு நூல்களையும்
ஆழமாகவும், விமர்சனப்பூர்வமாகவும் படித்திருக்கிறார். அதே நேரத்தில் நான்கு நூல்களையும்
ஒப்பிட்டும் பார்த்திருக்கிறார். மற்ற தன் வரலாற்றுக் கதைகளைவிட நாடு விட்டு நாடு –
மட்டும் எப்படி மேலோங்கி நிற்கிறது. அதற்கான காரணத்தை விரிவாக சொல்கிறார். ஒரு
படைப்பு தனக்கான தரத்தை, மதிப்பை தானே உருவாக்கிக்கொள்ளும். எந்த ஒரு படைப்பையும் புறக்
காரணிகளால் தூக்கி நிறுத்த முடியாது- அப்படி நிறுத்தினாலும் கொஞ்ச காலம்தான். சொல்லிக்
கொடுத்த பேச்சும், கட்டிக்கொடுத்த சோறும் கொஞ்ச நாளைக்குத்தான் நிற்கும். ‘கருக்கு’,
‘முள்’, ‘நான் வித்யா’ ஆகிய நூல்களைவிட ‘நாடு விட்டு நாடு’ – முதன்மையான இடத்தை
எப்படி பெறுகிறது என்றால் – எழுத்திலுள்ள நேர்மை. உண்மை. அதுதான் மற்ற படைப்புகளை
பின்னே தள்ளிவிடுகிறது. ஒரு நல்லப் படைப்பின் வழியேதான் மோசமான படைப்புகளை அடையாளம்
காணமுடியும். இதுதான் கலைப்படைப்பிற்கான அளவுகோல். நல்ல தரமான படைப்பு பல தரமற்ற
படைப்புகளுக்கு சாவுக் குழியை வெட்டும் என்று ம.நவீன் சொல்கிறார். நல்ல விமர்சனம். நல்ல
பார்வை.
தரம் கெட்ட படைப்புகளை தரமான படைப்புகளின் வழியேதான் அறிய முடியும் என்பதற்கு
‘செம்மண்ணும் நீல மலர்களும்’ (எம்.குமாரன்) என்ற நாவலை அடையாளப்படுத்துகிறார் ஒரு
கட்டுரையில். மலேசிய நாவல் பற்றி பேசும்போது ‘செம்மண்ணும் நீல மலர்களும்’ – நாவலை
தவிர்த்துவிட்டுப் பேசமுடியாது என்று நாவல் குறித்தும், நாவலாசிரியர் குறித்தும்
கட்டுரை ஆசிரியர் தருகிற தகவல்கள் மனதிற்கு இசைவாக நம்பும்படியாக இருக்கிறது.
மலேசியாவில் நல்ல இலக்கியம் உருவாவதற்கு தன் எழுத்தின் வழியே புதிய சத்தான விதைகளைத்
தூவியவர்களில் எம்.குமாரனும் ஒருவர். ‘செம்மண்ணும் நீல மலர்களும்’ – நாவலின் உண்மைத்
தன்மை, புனையப்பட்ட விதம், சொல்முறை என்று நாவலைப்பற்றி மிகவும் விரிவாக
எழுதியிருக்கிறார். ம.நவீனுடைய எழுத்து – விமர்சனம் என்பது – படைப்பு சார்ந்தது, அதன்
தரம் சார்ந்தது. எழுத்தாளன் சார்ந்தது அல்ல.
‘இராமனின் நிறங்கள்’ (கோ.முனியாண்டி) என்ற நாவலும், ’சூதாட்டம் ஆடும் காலம்’
(ரெ.கார்த்திக்கேசு) என்ற நாவலும் என்ன தரத்திலானவை? மையக் கதையில், கதையை சொன்ன
முறையில், கதையை சொல்ல தேர்ந்தெடுத்த மொழியில், சோதனை, புதுப்போக்கு, வடிவ முயற்சி
என்று எதுவுமே இல்லாத படைப்புகள் எப்படி கவனம் பெறுகின்றன? சமூகத்தில் அங்கீகாரம்
பெறுகின்றன? என்ற முக்கியமான கேள்வியை ம.நவீன் எழுப்புகிறார். அதற்கு ‘இராமனின்
நிறங்கள்’, ‘சூதாட்டம் ஆடும் காலம்’ என்ற இரண்டு நாவல்களையும் எடுத்துக்கொள்கிறார்.
அரசியல்வாதிகளை, பிரமுகர்களை வைத்து நாவல்களை வெளியிடுவதால் ஏற்படுகிற விளம்பர
வெளிச்சம்தான். நாவல் கலையின் வெற்றியா? மேடை நாகரீகம் கருதி புகழப்படும் பொய்யான
புகழுரைகளும், அலங்கார வார்த்தை ஜோடனைகளும்தான் இலக்கிய விமர்சனமா? இப்படியான
சொற்களில் மயங்கி திரிபவன் நிஜமான கலைஞனா? மலேசிய இலக்கிய உலகம் அரசியல்வாதிகளின்
வாழ்த்துகளையே பெரும் வெகுமதியாக கருதுகிறது. (இது தமிழ்நாட்டிற்கும் அப்படியே
பொருந்தும்) இப்படியான இழி செயல்களுக்கு, மலிவான புகழ் வெளிச்சத்திற்கு எதிரானவனே
கலைஞன். புகழ் தேடி அதிகாரத்திற்குப் பின்னால், பணத்திற்குப் பின்னால் போவதற்கு நேர்
எதிரான மனம் கொண்டவனே நிஜமான எழுத்தாளன் என்று சொல்கிற கட்டுரை ஆசிரியர் அதற்கான
காரண காரியங்களையும் எழுதுகிறார். போலிகளை அறிந்துகொள்வதற்கு இது மாதிரியான
படைப்புகளும், படைப்பாளிகளும் உதவவே செய்கிறார்கள் என்று சொல்கிறார். அதை பயப்படாமல்
சொல்கிறார். கட்டுரை ஆசிரியரின் கோபம் தனி மனிதக் காழ்ப்பு அல்ல. படைப்பின் பலவீனம்
சார்ந்த கோபம். போலிகள் கொண்டாடப்படுவதால் ஏற்படுவது. தார்மீகக் கோபம்.
இசங்கள் பல எழுத்தாளர்களுடைய எழுத்தின் வலிமையைக் குன்ற செய்திருக்கிறது. புதிய பாணி,
புதிய மொழி, புதிய எழுத்து என்ற போக்கில் பல எழுத்தாளர்கள் தங்களுடைய எழுத்தின்
வலிமையை இழந்திருக்கிறார்கள். அப்படி தன் எழுத்தின் வலிமையை இழந்த எழுத்தாளர்களில்
ஒருவர் கே.பாலமுருகன். அவருடைய நாவல் நகர்ந்துகொண்டிருக்கும் வாசல்கள். நல்ல எழுத்தாளர்
வளமான அனுபவத்திற்குச் சொந்தக்காரர். கதை சொல்லவும், அதை தெளிவாக சொல்லவும் தெரியும்.
ஆரம்பத்தில் அப்படித்தான் இருந்தார். அண்மைக்காலமாக மொழியின் கவர்ச்சியில் சிக்கி – கதையை
உருவாக்குவதற்குப் பதிலாக – மொழியை, உயிரற்ற, சாரமற்ற மொழியை மட்டுமே
உருவாக்குகிறார். அதற்கு நல்ல உதாரணம் – நகர்ந்துகொண்டிருக்கும் வாசல்கள் – என்று சுட்டிக்
காட்டுகிறார் ம.நவீன். மொழி ஒருபோதும் வாழ்கையை உருவாக்காது. வாழ்க்கைதான் ஒரு மொழியை
உருவாக்கும் என்று சொல்லும் கட்டுரை ஆசிரியரின் வாதம் மெய். வரலாற்று நாவல்கள் என்று
தமிழ் எழுத்தாளர்கள் தண்டிதண்டியாக, குப்பைகளாக எழுதி குவித்துக்கொண்டிருக்கும்போது
அண்மைக் காலத்தில் நடந்த ‘வீரப்பன்’ தேடுதல் வேட்டையில் நடந்து கொடூரங்களைப்பற்றி
ச.பாலமுருகன் எழுதிய ‘சோளகர் தொட்டி’ எப்படி நாவலாகி இருக்கிறது, கலையாகி
இருக்கிறது என்று ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறார்.
விருந்தாளிகள் விட்டுச் செல்லும் வாழ்வு – நூலின் வழியே ம.நவீனுக்கு ஆழ்ந்தப் படிப்பு
இருக்கிறது. படித்தவற்றை ஒப்பிட்டுப் பார்த்து ஆராயும் திறன் இருக்கிறது. அதை நல்ல
மொழியில் சொல்லவும் ஆற்றல் இருக்கிறது என்பதற்கு இந்நூல் சாட்சி. கட்டுரை ஆசிரியரின்
விமர்சனம் படைப்பு, அதன் தரம், முக்கியத்துவம் சார்ந்ததாக மட்டுமே இருப்பது
ஆரோக்கியமானது. தனி மனித வெறுப்பு, குழு சார்ந்த வெறுப்பு எங்குமே இல்லை.
பன்னிரெண்டு கட்டுரைகளின் வழியே இருபது நூல்களைப்பற்றி விரிவாக எழுதியிருக்கிறார்.
‘விருந்தாளிகள் விட்டுச் செல்லும் வாழ்வு’ – கட்டுரைத் தொகுப்பு பெரிய வீட்டில் சிறிய
அகல் விளக்கை ஏற்றியதைப் போன்றது. விளக்கு சிறியதுதான். ஆனால் நல்ல வெளிச்சம். இது
விட்டுக்கொடுத்தல்கள், சமரசங்கள், உள்நோக்கங்கள் இல்லாததால் ஏற்பட்ட வெளிச்சம்.
‘விருந்தாளிகள் விட்டுச் செல்லும் வாழ்வு’
(கட்டுரைத் தொகுப்பு)
ம.நவீன்,
வெளியீடு – வல்லினம் (2013),
28, C Jalan SG 3/2,
Taman Sri Gombak,
Batu Caves,
Selangor,
Malaysia.
கணையாழி – ஏப்ரல் 2015

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
May 10, 2015, 12:12:16 PM5/10/15
to brail...@googlegroups.com
www.writerimayam.com
திருடன் மணியன் பிள்ளை : (தன் வரலாறு) ஜி.ஆர்.இந்துகோபன்
விமர்சனம் : இமையம்
கேரளாவின் வாழத்துங்கல் என்ற கிராமத்தில் 1950-ல் கொடித்தறவாடு என்ற குடும்ப பெயர்கொண்ட
சேரூர் வடக்கேதில் இல்லத்து மணியன் பிள்ளை பிறந்தார். பதினோராவது வயதில் தந்தை இறப்பு,
வறுமை, பசி, ஏழ்மை ஏற்படுகிறது. பதினாறாவது வயதில் எதிர்வீட்டு பெண் சொன்னதற்காக
உறவினர் வீட்டுகுழந்தையினுடைய இடுப்புச் செயினை அவிழ்த்து வந்து கொடுக்கிறார். முதல்
திருட்டு. பிறகு நண்பர்களுடன் உள்ளூர் கோவிலில் உண்டியல் உடைக்கும் முயற்சி. முப்பது
காசு சட்டைப் பையில் இருந்ததால் ஜெயிலுக்கு அனுப்பப்படுகிறார். பதினேழு வயது.
பதினெட்டு என்று போலீஸ் சொல்லச் சொல்கிறது. அப்படியே சொல்கிறார். ஆறுமாத சிறைத்தண்டணை.
கேரளாவின் புகழ்பெற்ற திருடன் மணியன் பிள்ளை உருவான கதை. 1967-68-ல் ஆரம்பித்த
திருடன் வாழ்க்கை 1995 வரை நடக்கிறது. திருடன் வாழ்க்கை எப்படியிருந்தது என்று திருடன்
மணியன் பிள்ளை சொல்ல ஜி.ஆர்.இந்துகோபன் எழுதியிருக்கிறார். வாசகனின் மனதை கரைக்கும்
விதத்தில்..
ஒரு திருடனின் இருபத்தி ஐந்து முப்பது ஆண்டுகால வாழ்க்கை – வாழ்வின் கொடூரம்,
சொல்லித்தீராத, எழுதிமாளாத, அழுது வடிக்க முடியாத கண்ணீர் கதை. ஒவ்வொரு பக்கத்தை
படிக்கும்போதும் என்ன நடக்குமோ எப்படி முடியுமோ என்று திகிலாக இருக்கிறது. எது
உண்மை, எது பொய், எது நடக்கும், எது நடக்காது, இப்படியெல்லாம் நடக்க முடியுமா என்றால்
முடியும் என்றுதான் திருடன் மணியன் பிள்ளையின் கதை சொல்கிறது. திருடன் வாழ்க்கையில் –
தான் திருடிய வீடுகள், திருடிய பொருள்கள், போலீசிடம் மாட்டியது, அனுபவித்த
சித்ரவதைகள், ஜெயில் வாழ்க்கை, ஜெயிலிலிருக்கும் பாலியல் தொந்தரவுகள், திருட்டுப்
பணத்தில் உல்லாசமாக வாழ்ந்தது, பத்மினி, மாலதி, மெகருன்னிஸாவுடன் திருமணம் செய்து
வாழ்வது, காதல் வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, நான்கு வருடம் கர்நாடகாவில்-ராஜபோக
வாழ்க்கை, கர்நாடக மாநிலத்தில் நான்கே ஆண்டுகளில் எம்.எல்.ஏ.வாகி, மந்திரியாகும்
வாய்ப்புக்குரிய திருடன், மக்களால் வணங்கப்படுகிற திருடன், பெந்தகொஸ்தே சபையில் சேர்ந்து
‘வேத சாட்சியம் சொல்வது’, காவல் துறையினரை, ஜெயில் அதிகாரிகளை பெட்டிஷன்போட்டு
கலங்கடிப்பது, நீதிமன்றத்தில் தனக்குத்தானே வாதாடி –நீதிமன்றத்தைக் கலகலப்பாக்கி தப்பிப்பது
– திருட்டுப் பொருளை வாங்கி விற்று கோடீஸ்வரர் ஆனவர்கள், கஞ்சா விற்பவர்கள், கள்ள நோட்டு
அடிப்பவர்கள், பெண்களை வைத்து தொழில் செய்பவர்கள், ஆடம்பர வாழ்விற்காக பாலியல் தொழில்
செய்யும் பெண்கள், கணவனுடைய சாவை தள்ளிப்போட விபச்சாரியாகும் பெண்கள், திருடனை
விரும்பி காதலிக்கும் பெண்கள் என்று விரிகிறது கதை. சமூகம் யாரையெல்லாம் கண்டு
அஞ்சுமோ, பழிக்குமோ, ஒதுங்கிப் போகுமோ-அவர்களைப் பற்றிய கதைகள், ஈனத்தொழில் செய்பவர்கள்,
மானமோ, வெட்கமோ இல்லாதவர்கள், ஒவ்வொருவருக்கும் எப்படியெல்லாமோ வாழ்க்கை அமைகிறது.
விதவிதமான மனிதர்கள், விதவிதமான வாழ்க்கை – ஒவ்வொரு சொல்லும் கண்ணீரால்
எழுதப்பட்டிருக்கிறது. ஜி.ஆர்.இந்துகோபனின் மொழி – செழுமையானது.
திருடன் மணியன் பிள்ளையின் கதை ‘ஐயோ பாவம்’ என்று சொல்ல வைக்கிறது. பலருடைய
வயிற்றெரிச்சலை கொட்டிக்கொண்ட திருடனின் மீது இரக்கம் கொள்ள வைக்கிறது. ஓரளவு சுமாரான
வாழ்வு வாழ்வதற்கு, திருந்தி வாழ்வதற்கு எடுக்கப்பட்ட அத்துணை முயற்சிகளும்
தோற்றுப்போய்விட்டதே என்று வருத்தம் ஏற்படுகிறது. மணியன்பிள்ளை – ஈவு இரக்கமற்ற பெரும்
திருடன்தான். பெண்கள் சேமித்து வைத்திருக்கும் பணத்தைத் திருடுவதற்காக சமையலறையிலுள்ள
டப்பாக்களை அலசுகிறவன்தான். திருடிய பணத்தில் பெண்களோடு சேர்ந்து லாட்ஜ்களில் உல்லாச
வாழ்க்கை வாழ்ந்து பணத்தை ஆவியாக்குகிறவன்தான். தன்னுடைய ஈனச் செயலால் ஒரு பாவமும்
செய்யாத, தாயை, சகோதரிகளை, உறவினர்களை, நம்பிவந்த பெண்ணை அவமானத் தீயில்
பொசுக்கியவன்தான். காவல் நிலையம், நீதிமன்றம் என்று அலையவிட்டவன்தான். வயிற்றில் பிள்ளையைக்
கொடுத்துவிட்டு ஓடியவன்தான். அப்படிப்பட்டத் திருடன் மணியன்பிள்ளையின் கதையைப் படிக்கும்
போது ஏன்கண்ணீர் வருகிறது?
வயிற்றுக்கு இல்லாதவர்களிடம் திருடவில்லை. கடைசிவரை யாரையும் காட்டிக்கொடுக்கவில்லை.
பட்டினியோடு படுத்துக் கிடக்கும் மனிதர்களின் வீட்டின் முன் பலமுறை சீனிக்கிழங்கை வைத்து
விட்டுப்போகிறான். காதல் செய்து மணந்து கொண்ட கணவன். உயிருக்கு போராடுகிறான். மருந்து
வாங்க பணத்திற்காக லாட்ஜில் விபச்சாரத்தில் ஈடுபடும் பெண், யாரென்றே தெரியாத பந்தளத்தில்
பிறந்த பெண்ணுக்காகத் திருடப்போகிறான். போலீசிடம் மாட்டிக்கொள்கிறான். திருடப்பட்ட பணம்,
யாருடைய உயிரைக்காப்பாற்ற திருடினானோ – அந்த உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. பணம்
வருவதற்குள் – உயிர்போய்விடுகிறது, மணியன்பிள்ளை ஒரே ஒரு முறை பிறருக்காகத்
திருடினான். முகமறியாத மனிதனுக்காக – பெண்ணுக்காக – தங்களுக்காக ஒருவன் திருடி பணம்
கொண்டு வந்திருக்கிறான் – என்பது கூட அந்தப் பெண்ணுக்கும் – செத்துப்போன அந்த மனிதனுக்கும்
தெரியாது. மணவறைத் திருடன் சொல்கிற கதையைக் கேட்டு அழுகிற திருடன், கள்ளநோட்டு
அடிக்கிற குட்டப்பன் கொடுக்கிற பணத்தை வாங்காமல் திருடியே பிழைத்துக்கொள்வதாக கூறுகிற
திருடன். யாராலுமே திருட முடியாது என்று நம்பியிருந்த வீட்டில்
திருடி-வீட்டுக்காரர்களாலேயே பாராட்டப் பெற்ற திருடன். இது போன்ற பல சம்பவங்கள் திருடன்
மணியன்பிள்ளைமீது அன்புகொள்ள வைக்கிறது. உலகில் முற்றிலும் மோசமானவன் என்று எவருமில்லை.
முதல் நாள் கோடீஸ்வர வாழ்க்கை. மறுநாள் பிச்சைக்காரன் வாழ்க்கை. இதுதான் திருடர்களுக்கு
விதிக்கப்பட்டது.
திருடன் மணியன்பிள்ளையின் கதை – உண்மையில் சமூகத்தில் யார் நிஜமான திருடன் என்ற
கேள்வியை ஓயாமல் எழுப்பிக்கொண்டேயிருக்கிறது. திருட்டுப்பொருளை நீதிமன்றத்தில்
ஒப்படைப்பதற்குப் பதிலாக தன்னுடைய வீட்டுக்கு எடுத்து செல்கிற போலீஸ்காரர்களா? போலீஸ்
கஸ்டடியில் இருக்கும் கணவனை பார்க்கவரும் திருடனின் மனைவிகளை பயன்படுத்திக்கொள்ளும்
போலீஸ்காரர்கள், பாலியல் தொழில் செய்யும் பெண்ணை அழைத்துவந்து மாறிமாறி
பயன்படுத்திவிட்டு, இறுதியில் தங்களுக்கு சுகம் கொடுத்த இடத்திலேயே எட்டிஉதைத்து
சித்ரவதைசெய்யும் போலீஸ்காரர்கள், திருடனின் வீட்டுக்குச் சென்று, திருடனின் மனைவியைப்
பயன்படுத்திக்கொள்ளும் போலீஸ்காரர்கள், ஜெயிலில் சட்டவிதிகளை பயன்படுத்தாத, கைதிகளுக்கான
உணவுப் பொருட்களை திருடும் போலீஸ்காரர்கள் – யார் திருடன்? திருடனிடமிருந்து –
திருட்டுப்பொருட்களை வாங்கி கோடீஸ்வரரானவர்கள், திருடனின் பணத்திலிருந்து சாமி
திருவிழாவை பிரமாண்டமாக நடத்தும் ஊர்ப்பெரியவர்கள், அறிவைப் பயன்படுத்தி கோடிகோடியாக
திருடும் பெரும் திருடர்கள் – சமூகத்தில் இதுதான் திருட்டுக்கான இடம் என்று
அடையாளப்படுத்த முடியாத அவலம். கோடிகோடியாக வரிஏய்ப்பு செய்யும் முதலாளிகள் – சமூக
அந்தஸ்தில் உள்ளவர்கள். வயிற்றுக்காக திருடுகிறவன் உள்ளே – ஆடம்பரத்திற்காக, கோடிகோடியாக
திருடுகிறவன் வெளியே – சமூகத்தில் யார் திருடன்? – யார் குற்றவாளி? – திருடன் மணியன்
பிள்ளை – இக்கேள்விகளை கேட்பதற்காகவே தன்னுடைய கதையை சொன்னதுமாதிரி இருக்கிறது. எது
திருடர்களுடைய வாழ்க்கை? எது மானஸ்தர்களுடைய வாழ்க்கை? மானஸ்தர்கள் மட்டுமே வாழும்
பூமியா இது?
தொடக்கத்தில் எந்த வழியும் இல்லை. எல்லா வழிகளும் அடைக்கப்பட்டுவிட்டன என்ற நிலையில்
திருடவும், விபச்சாரத்தில் ஈடுபடவும் ஆரம்பிக்கின்றனர். பிறகு அதுவே
வாழ்க்கையாகிவிடுகிறது. மீறி ஒரு கௌரவமான வாழ்வை வாழலாம் என்று திருடர்களும்,
விபச்சாரிகளும் எடுக்கின்ற எல்லா முயற்சிகளும் எப்படியோ தோற்றுப்போய்விடுகிறது. சமூகக்
குற்றவாளிகள் என்று அடையாளப்படுத்தப்பட்டவர்கள் – ‘திருடன்’, ‘விபச்சாரி’ என்ற
பட்டத்திலிருந்து ஒருநொடிகூட விலகியிருக்க, விலகிவாழ முடிவதில்லை. காவல் நிலையம்,
நீதிமன்றம், ஜெயில் – ஒரு மனிதனை எளிதில் குற்றவாளியாக மட்டுமல்ல நிரந்தர
குற்றவாளியாக்கிவிடும். வறுமை, ஏழ்மை, பசி, சந்தர்ப்பம், சூழ்நிலை திருடனாக,
விபச்சாரியாக மாற்றுகிறது. நீதிமன்றத்திற்கு தேவை சாட்சி, உண்மை அல்ல.
காவல்நிலையத்திற்கு, நீதிமன்றத்திற்கு தேவை – வழக்கு. ஜெயிலுக்குத் தேவை குற்றவாளி,
வயிற்றுக்காக திருடுவதும், வசதிக்காக திருடுவதும் – ஒன்றுதான் சட்டத்தின்முன். ஜெயில்
ஒரு மனிதனுடைய மன இயல்பை மாற்றிவிடாது. ஜெயில் பெரும் திருடர்களின் கூடாரமாக
இருக்கிறது. ஜெயிலின் சட்டவிதிகள் ஒருபோதும் நிறைவேற்றப்படாததாக இருக்கிறது. சட்டம்
ஒரு மனிதனுடைய உடலைத்தான் ஜெயிலுக்குள் அனுப்புகிறது. மனதை அல்ல. தவறான
வாழ்க்கைக்குள் மனிதர்களை தள்ளிக்கொண்டேயிருப்பது எது? இதுதான் திருடன் மணியனின் கேள்வி.
ஆடம்பரத்திற்காகவும், உல்லாசத்திற்காகவும் ஒருவன் பணத்தைத் தேடுகிறான். பசிக்காக ஒருவன்
பணத்தைத் தேடுகிறான். பணத்திற்குத் தெரியுமா? பசியைப்போக்க பயன்படப்போகிறோம்,
உல்லாசத்திற்காக, ஆடம்பரத்திற்காக பயன்படப்போகிறோம் என்று. பணத்தின் மதிப்பு
பயன்படுத்துகிற தன்மையைப் பொறுத்து அமைகிறது.
திருடர்கள் பற்றிய விபரங்களை சொல்கிறார் மணியன்பிள்ளை. பால்பொடி மட்டுமே திருடும்
திருடன். மழைக்காலங்களில் மட்டுமே திருடும் திருடன். ஐ.ஆர்.எஸ். வேலையை விட்டுவிட்டு
திருடுவதிலுள்ள தில்லுக்காக திருடவந்த திருடன். ஜெயிலிலிருந்து தப்பித்துச்
செல்வதற்காகவே அற்பத்திருட்டுகளில் ஈடுபடும் திருடன். எவ்வளவுதான் கை
தீய்ந்துபோயிருந்தாலும் பாவப்பட்டவர்களின் வீட்டில் திருடாத திருடன். வசதியானவர்களின்
வீட்டில், குறிப்பாக மருத்துவர்களின் வீடுகளில் விரும்பித்திருடும் திருடன், திருடும்
போது வீட்டிலுள்ள பெண்களை தொந்தரவு செய்யாத திருடன், முதல் இரவில் மட்டுமே திருடும்
(மணவறை) திருடன், முதலிரவில் கணவன் தூங்கும்போது, புதுப்பெண்ணுடன் படுக்கும் திருடன்,
வங்கியில் திருடும் திருடன். பிடிப்பட்டதுமே உண்மையைச் சொல்லிவிடுகிற திருடன் என்று
எல்லாவகையான திருடர்களைப் பற்றியும் விரிவாகச் சொல்கிறார். அதோடு பழையகாலத் திருடர்கள்
கொலை செய்வதில்லை, கூட்டாக திருடப்போவதில்லை, பெண்களை தொந்தரவு செய்வதில்லை, கோவிலில்
திருடுவதில்லை, சாமி சிலைகளைத் திருடுவதில்லை என்று சொல்கிறார். நவீனகால திருடர்கள்
கூட்டாக திருடுகிறார்கள். நவீன ஆயுதங்கள், கருவிகளோடு திருடுகிறார்கள். எளிதில் கொலை
செய்கிறார்கள். கோடிக்கணக்கில் திருடுகிறார்கள் என்றும் சொல்கிறார். அதேநேரத்தில்
திருடர்கள் திருடுவதின் மூலம் கிடைக்கும் பணம் எப்படி ஆவியாகப்போகிறது என்பதையும்
சொல்கிறார். ஆடம்பர வாழ்க்கை, பெண்கள் தொடர்பு, குடி, இப்படித்தான் சீரழிகிறது.
திருடர்களுக்கான உகந்த நேரமும், சுபவேளையும் இருட்டுத்தான். இருட்டில்தான் திருடர்கள்
உயிர்பெறுகிறார்கள். பாலியல் தொழிலாளிகள் உயிர்பெறும் நேரமும் இருட்டுத்தான்.
திருடர்களும் பாலியல் தொழிலாளிகளும் புதியபுதிய மேய்ச்சல் நிலங்களை நோக்கி
நகர்ந்தபடியே இருக்கிறார்கள் என்று சொல்கிற மணியன்பிள்ளை – எந்தெந்த வீட்டில் எப்படியெல்லாம்
திருடினார் என்ற ரகசியத்தையும், ஜன்னல் கம்பிகளை வளைக்கும் நுட்பங்களையும் அழகாகச்
சொல்கிறார். அதோடு உலகில் பாதுகாப்பான வீடு, பாதுகாப்பாக இருக்கிறோம் என்று யாரும்
சொல்லமுடியாது. இதுவரை உங்களுடைய வீட்டில் திருடன் நுழையவில்லை என்றால் – உங்களுடைய
வீடு அவ்வளவு பாதுகாப்பானது என்று அர்த்தமில்லை. உங்களுடைய வீடு இன்னும் திருடனின்
கண்ணில் படவில்லை அவ்வளவுதான் என்ற ரகசியத்தையும், சொல்லி எல்லாரையும் கலங்கஅடிக்கிறார்.
திருடர்களுக்கென்றே வளைந்து கொடுக்கும் சன்னல் கம்பிகள், திருடர்கள் பயன்படுத்த வேண்டும்
என்பதற்காகவே வீட்டைச் சுற்றி விட்டுக்காரர்கள் வைத்திருக்கும் பொருட்கள், திருட முடியாத
வீடு என்று ஒன்று இன்றுவரை உலகில் கட்டப்படவே இல்லை என்று வீட்டுக்காரர்களை தூங்கவிடாமல்
செய்கிற பல உண்மை கதைகளையும் சொல்கிறார். திருடர்களின் வாழ்க்கை சாகசங்களால் நிறைந்தது,
ஒவ்வொரு திருட்டும் ஒரு சாகசம், ஒவ்வொருமுறை போலீசிடமிருந்து, கோர்ட்டிலிருந்து
தப்பிப்பதும் சாகசம்தான். மற்றவர்களை கலங்க வைக்கும் சாகசம். திருடர்கள் ஒருபோதும் சாக
விரும்புவதில்லை. தற்கொலை செய்துகொள்ள நினைப்பதுகூட இல்லை. யாசகம் கேட்பதில்லை.
எவ்வளவு திருடினாலும் நிறைவானது என்று சொல்வதில்லை. திருடர்கள் ஒருவரையொருவர்
நம்புவதில்லை என்று திருடர்களின் குணங்களையும் மன இயல்புகளையும் சொல்கிறார். அதே
நேரத்தில் காட்டிக்கொடுத்தலும், வஞ்சகமும், துரோகமும் மிகவும் இயல்பாக நடக்கும் – நிஜ
அதிசய உலகம். திருடர்களின் மன உலகும், போலீஸ்காரர்களின் மன உலகும் எப்படி ஒன்றுபோலவே
இருக்கின்றன? அதிசயம்தான்.
திருடன் மணியன் பிள்ளை கலகக்காரர். ஊரில், போலீசில், நீதிமன்றத்தில், ஜெயிலில்,
கள்ளுக்கடையில், லாட்ஜில் என்று எல்லா இடத்திலும் நீதிபேசுகிற, சட்டம், தர்மம், நியாயம்,
சமூக ஒழுங்கு, புரட்சி, சமத்துவம் பேசுகிற கலகக்காரன் – சமூக விமர்சகன். தன் கதையை
சொல்வதின்வழியே சமூகத்தை விமர்சிக்கிறார். தான் யோக்கியன், தவறுதலாக திருடிவிட்டேன்,
தெரியாமல் பல குற்றக்காரியங்களை செய்தேன் என்று ஒரு இடத்திலும் சொல்லவில்லை. தன்னை
நிரபராதி என்றோ, கழிவிரக்கத்திற்காகவோ தன் கதையை சொல்லவில்லை. தன் கதையின் வழியே
சமூகத்தின் மீது, நீதியமைப்பின் மீது, மற்ற சமூக அமைப்பு, நிறுவனங்களின் மீது கேள்விகளை
எழுப்புகிறார். கேள்வி எழுப்புகிறவன் குற்றவாளி. கேள்வி குற்றமானது அல்ல. குறையானது
அல்ல. சமூகத்தில் யார் கௌரவமான மனிதன்? எது கௌரவமான வாழ்க்கை? ஏழ்மையை சமூகம் ஏன்
குற்றமாகப் பார்க்கிறது. ஏழ்மையை பழக ஏன் சமூகம் கற்றுக்கொள்கிறது. சமூகத்தில் யார்
திருடன், யார் சமூகவிரோதி, இப்படி ஆயிரமாயிரம் கேள்விகள். இந்த கேள்விகளால்தான்
திருடன் மணியன் பிள்ளையின் தன் வரலாறு உயிர்பெறுகிறது. ஜி.ஆர்.இந்துகோபனின் மொழி
அதற்கு துணை நிற்கிறது.
திருடனுக்கென்று குடும்ப வாழ்க்கை இருக்கமுடியுமா? அப்படியான வாழ்க்கை மீது ஆசைப்பட
முடியுமா? திருடர்களுக்கு குற்றவுணர்ச்சி ஏற்படுமா – என்றால் ஏற்படும் என்றுதான் மணியன்
பிள்ளை சொல்கிறார். கள்ளநோட்டு அச்சடிக்கும் குட்டன், திருடப் போன இடத்தில் மணப்பெண்ணின்
மீது ஆசை ஏற்பட்டு, அவளைத் தொட்டதும் தன் மகளின் நினைவு வந்ததால், மணப்பெண்ணைத் தட்டி
தூங்க வைத்த – மணவறைத் திருடன், சலீம்பாயாக வாழும் காலத்தில் மணியன்பிள்ளை நடந்துகொள்ளும்
விதம் – இது ஒரு திருடனின் கதை என்று மட்டுமே படித்து விட்டு நகர்ந்துவிட முடியாது.
எவ்வளவு கொடூரம் நிறைந்தவர்களாக இருந்தாலும் போலீஸ்காரர்களும் மனிதர்கள்தானே. சுகு,
செல்லப்பன் பிள்ளை, நந்தகுமாரன் – போன்ற போலீஸ்காரர்களின் – கருணை என்பது – பெரும்
கருணைதான். முடிந்தவரை நீதிமன்றம் மிகுந்த கருணையோடுதான் நடந்துள்ளது. திருடனுக்கும்
சட்டம் நல்லது செய்யும். கருணை காட்டும் என்பதற்கு பல கதைகளைச் சொல்கிறார். வியப்பாக
இருக்கிறது. தங்கப்பன், கிருஷ்ணன் குட்டி, சிவன் பிள்ளை, தேங்காய் பாபு, இடிவெட்டு
மைதின், அப்துல் ரகீம், மணவறைத் திருடன் போன்ற பல திருடர்களின் சாகசங்கள் நம்மனதில்
நிலைத்து நிற்கின்றன.
தன்னுடைய கதையில் மணியன்பிள்ளை திரும்பத்திரும்ப பயன்படுத்திய ஒரு சொல் – விதி
தீர்மானித்தது என்பது, திருடன் தண்டனை அனுபவிக்கிறான் சரி. லட்சம் லட்சமாக பணம், பொருள்
இருந்தும் – அவை திருடியதால் வந்தது என்பதற்காக – ஒரு பைசாகூட, ஒரு நூல் சீலைகூட
வாங்காத ஒரு பாவமும் செய்யாத மணியன்பிள்ளையின் தாய் – சகோதரிகள் – அதே நேரத்தில் –
திருட்டு வழக்கிலிருந்து மகனை மீட்பதற்காக – நிலத்தைவிற்று, காவல் நிலையத்திலும்,
நீதிமன்ற வாசலிலும் நிற்கும் தாய் – திருடனுடன் சகவாசம் வைத்ததற்காக எந்தத் தப்பும்
செய்யாமலேயே – தண்டனையை, அவமானத்தை அனுபவித்த – திருடனுடைய உறவினர்கள்,
திருடனிடமிருந்து ஒரு காசு வாங்காத, ஒரு வேளை சோற்றுக்குக்கூட ஒரு பொருளையும்
வாங்காத, திருடிவிட்டு மாட்டிக்கொள்ளும் ஒவ்வொருமுறையும் எதையாவது விற்றுவந்து ஜாமீன்
எடுக்கக் காத்திருக்கும், தாய், சகோதரி, மனைவி, தன்கணவனை அடிப்பதில் கொஞ்சம்
குறைக்கட்டும் என்று போலீசுக்காரர்களுடன் படுக்கும், படுப்பதற்கு செல்லும் மனைவிகளின்
நிலையையும் விதிதான் தீர்மானித்ததா? திருடனின் தாய், திருடனின் சகோதரி, திருடனின்
மனைவி என்ற பட்டம் – அவமானத் தீயில் பொசுங்கி சாகிறார்களே சாகும்வரை – இதுவும் விதி
தீர்மானித்ததா? படிப்புக்காக விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்ணுக்காக, கணவனைக் காப்பதற்காக
விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்ணுக்காக அழுத கண்கள் – மணியன்பிள்ளையினுடையது – இந்த முரண்
– மனித மனத்தின் விசித்திரம். பதிமூன்று வயது சிறுமியை சினிமா தியேட்டருக்கு
அழைத்துச்சென்று பயன்படுத்திக்கொள்கிற, பதினாறாவது வயதிலேயே எதிர்வீட்டு ஆசிரியையால்
பயன்படுத்திக்கொள்ளப்படுகிற, மடத்துப் பெண்களால் பயன்படுத்திக் கொள்ளப்படுகிற, ரதியை
இழுத்துக்கொண்டு ஓடுகிற, பணம் தந்து பயன்படுத்திக்கொள்கிற ‘அக்கா’ என்கிற பெண், சினிமா
தியேட்டரில் பயன்படுத்திக் கொள்ளும் பெண், ஜானகி, சந்திரிகா, தாட்சாயினி, பொன்னம்மா
என்று திருடன் மணியன் பிள்ளையின் வாழ்க்கையில் நூறுக்கும் அதிகமான பெண்கள் வருகிறார்கள்.
ஈடுபாட்டுடன் வருகிறார்கள் என்பதுதான் அதிசயம். பெண்களைத் தவறாக பயன்படுத்துகிற,
பெண்களால் தவறாகப் பயன்படுத்திக்கொள்ளப்படுகிற மணியன் பிள்ளை ஓயாமல் பெண்களுக்காகப்
பேசுகிறார். தொடர்ந்து பாலியல் தொழிலாளிகள் குறித்து, அவர்களுடைய பாவப்பட்ட நிலை
குறித்து அக்கறையோடு பேசுகிறார். அதோடு திருடப்போகும் வீடுகளில் அடிவாங்கி, உதை
வாங்கி இரவு முழுவதும் அழுதுகொண்டிருக்கும் பெண்கள் குறித்தும் கவலைப்படுகிறார். வீடு
அமைதியாக தூங்குவதற்கு, வாழ்வதற்கான இடமாக பெண்களுக்கு இருப்பதில்லை என்று சொல்கிற
திருடன், பெண்கள் கழற்றி வைத்திருக்கும் நகைகளை மட்டுமே திருடுவார். அணிந்திருக்கும்
நகைகளை திருடுவதில்லை. பிரமாதமான கொள்கை. இப்படி பல முரண்கள். முதலாளி வர்க்கத்தின்
மீது, பணக்கார வர்க்கத்தினர் மீது ஓயாமல் காறி துப்பிக்கொண்டேயிக்கிறார். மணியன் பிள்ளை
சந்தித்த பெண்களில் குற்றவுணர்ச்சியுள்ள ஓரே ஒரு பெண் நாடக-நடிகை மேபு மட்டும்தான்.
திருடன் மணியன் பிள்ளையின் கதை, வேதனையில், வலியில், அவமானத்தில், பற்றியெறியும்
பசியில், காயத்தில், சீழில், கண்ணீரில் உருவானது. இது மணியன் பிள்ளையின் கதை அல்ல. கேரள
சமூகத்தின் கதை. ஜீ.ஆர்.இந்துகோபன் எந்த சொற்கள் கல்லையும் பொடியாக்குமோ, எந்த சொற்கள்
கண்ணீரைப் பொங்கி பீரிடச் செய்யுமோ, அந்த சொற்களால் எழுதியிருக்கிறார். திருடன் பிள்ளையின்
கதை நன்றாக இருக்கிறது என்று சொல்லமாட்டேன். வலியில், வேதனையில் துடிக்கிறவனின்-வலி
நன்றாக இருக்கிறது, ரசிக்கும்படியாக இருக்கிறது என்று எப்படி சொல்ல முடியும்?
திருடன் மணியன் பிள்ளை (தன்வரலாறு),
ஜி.ஆர்.இந்துகோபன்,
காலச்சுவடு பதிப்பகம்,
நாகர்கோவில்.
டிசம்பர் 2013
விலை ரூ.590/-
அம்ருதா – மார்ச் 2015

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
May 10, 2015, 12:34:00 PM5/10/15
to brail...@googlegroups.com
www.writerimayam.com
நிகழ்தலும் நிகழ்தல் நிமித்தமும் – பூங்குழலி (மலேசியா)
விமர்சனம் – இமையம்.
nigazhthalum
உலகில் எழுதப்படுகின்ற எல்லா இலக்கியப் படைப்புகளின் நோக்கமும் அன்பை சொல்வதற்கான
வார்த்தையை, வழியைத் தேடுவதுதான். கண்டடைவதுதான். அந்த வகையில் பூங்குழலி அன்பை
சொல்வதற்கான சிறந்த வழியாக, மொழியாக, வடிவமாக கவிதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.
அவருக்கு அன்பை சொல்வதற்கான சொல்லும், மொழியும், வழியும் கிடைத்ததா என்பதை “நிகழ்தலும்
நிகழ்தல் நிமித்தமும்” கவிதைத் தொகுப்பை படிக்கிற வாசகர்கள் அறிவார்கள்.
நிகழ்தலும் நிகழ்தல் நிமித்தமும் தொகுப்பில் இரவுப்பற்றிய கவிதைகள், குழந்தைகள், தனிமை,
காத்திருப்பு, தொலைந்துபோவது, அன்பை, விருப்பத்தை சொல்வதற்கான வார்த்தைகளுக்காக
அலைவது, காத்திருப்பது போன்றவை குறித்துத்தான் அதிகம் எழுதப்பட்டிருக்கின்றன.
கவிதைகளில் மனிதர்களைக்காட்டிலும் பறவைகள், விலங்குகள், பூச்சிகள் அதிகம் இடம்
பிடித்திருக்கின்றன. மனித வாழ்க்கையின் பெரும் போராட்டம் என்பது அன்பை கொடுப்பதற்கும்,
பெறுவதற்குமானதாக இருக்கிறது. அதற்காகத்தான் அனைத்து வகையான துரோகங்களும்,
விழைவுகளும், விட்டுகொடுத்தல்களும், சகிப்புத்தன்மைகளும், சமரசங்களும், சோரம்போதலும்.
எழுதித் தீராதப் போராட்டம். பெரும் கதை. மனிதகுலம் ஓயாமல் தேடிக்கொண்டிருக்கிற,
போராடி, பேசிக்கொண்டிருக்கிற பெரும் கதையைப்பற்றி, தனக்கு வசப்பட்ட சொற்களின், சொற்களின்
கூட்டுக் சேர்க்கைகளின் வழியே காட்சிப்படுத்துகிறார் பூங்குழலி.
அன்பு கொடுக்கப்படுவதுமல்ல, பெறப்படுவதுமல்ல. உணரப்படுவது, அறிவது. இதுதான்
பூங்குழலியின் கவிதைகள் தரும் செய்தி. ஒளியைப்போல, ஒலியை, வாசனையை, நாற்றத்தைப்போல,
காற்றைப்போல அறிய, உணரப்படுகிற ஒன்றாக இருக்கிறது. இந்த முடிவை நோக்கி அதிரடியாக
இல்லாமல், வெறும் அறிவிப்பாக இல்லாமல் மிக இயல்பாக நகர்ந்த விதம் பிரமிப்பு. அதனால்
நிகழ்தலும் நிகழ்தல் நிமித்தமும் – கவிதைகளாக இருக்கின்றன. எது கவிதை, யார் கவிஞன்,
கவிதை எப்படி உருவாகிறது, அதற்கான மொழி எது என்பதற்கு நல்ல உதாரணங்கள் இத்தொகுப்பில்
இருக்கின்றன. நல்லக் கவிதைகளும், நல்லக் கவிதைத் தொகுப்புகளும் இல்லாமையே தற்காலத்தில்
தமிழ்ச் சமூகம் கவிதை குறித்த பேச்சைக் குறைத்திருப்பதற்குக் காரணம்.
தமிழ்க் கவிதைகள் அதிகம் பார்க்காத, பேசாத, அக்கறைப்படாத, பதிவு செய்யாத, உலகம்,
குழந்தைகளின் உலகம். வளர்ந்த மனிதர்களுடைய அழுகையும், கண்ணீரும், புலம்பலும்,
பரிதவிப்புகளும்தான் இலக்கியப் படைப்புகளுக்கான கச்சாப் பொருள் என்று நினைக்கிறோம்.
அழகிய, புதிர்கள் நிறைந்த, இழப்பையும், வலியையும், வஞ்சகத்தையும் உடனே மறந்துவிடுகிற
குழந்தைகளின் உலகத்தை தமிழ் இலக்கிய உலகம் புறக்கணித்தே வந்திருக்கிறது. ஆனால்
பூங்குழலியின் கவிதை உலகம் – குழந்தைகளுக்கானதாக இருக்கிறது. “எங்கள் பால்யம், வீட்டு
சுவர் எங்கும், வரையப்பட்டிருந்தன”. எளிய சொற்கள். இந்த அனுபவம் எல்லா
மனிதர்களுக்குமானது, எல்லா மனிதர்களும் வாழ்ந்த வாழ்க்கை. ‘எங்களுக்கென்று ஒரு வீடு
இருந்தது’ – கவிதை நம்முடைய பால்ய காலத்திற்குள் பயணம் செய்ய வைக்கிறது. நாம் பெற்றது,
இழந்தது, சேமித்து வைக்கத் தவறியது, எது பாதுகாக்கப்பட வேண்டியது, எது அரிய
பொக்கீஷம்? பழைய நினைவுகள் அழுவதற்கும், சிரிப்பதற்கும் மட்டுமல்ல, மீள் வாழ்க்கைக்குரியது.
எல்லாரும் வாழ்ந்த வாழ்க்கை. எல்லாரும் எழுத வேண்டிய கவிதை. பூங்குழலி
எழதியிருக்கிறார். நம்மை அடையாளம் காண வைப்பது, உணரவைப்பது, படிக்கிற ஒவ்வொருவருடைய
அனுபவமாக, உலகமாக மாற்றுகிற, அந்த அரிய ரசவாதத்தை செய்கிற படைப்புகளை கலை
என்கிறோம். அவற்றை உருவாக்கியர்களை கலைஞன் என்கிறோம். பூங்குழலிக்கு நன்றாக எழுத
வருகிறது என்பதற்கு ‘எங்களுக்கென்று ஒரு வீடு இருந்தது’ என்ற கவிதை மட்டுமல்ல,
தொகுப்பில் பல கவிதைகள் சாட்சிகளாக இருக்கின்றன.
குழந்தைகளுடைய உலகம்பற்றி எழுதிய அளவிற்கு மனிதர்கள் தொலைந்துபோவதுப் பற்றியும்
பூங்குழலி நிறைய எழுதியிருக்கிறார். மனிதர்கள் ஓயாமல் தொலைத்துக்கொண்டும்,
தொலைந்துப்போய்க்கொண்டும் இருக்கிறார்கள். ஏன்? அதுதான் வாழ்க்கை. பொது வெளியில் மட்டுமல்ல,
தங்களுக்குள்ளேயே மட்டுமல்ல, காலத்தில், இடத்தில், நினைவுகளில், தனிமையில்,
காத்திருப்பில், இரவில் தொலைந்துபோகிறார்கள். தொலைந்து போவது ஒரு சுகம்.
தொலைந்துபோவதை தேடுவது ஒரு சுகம். எது பெரியது? இரண்டும்தான் என்கிறார் கவிஞர்.
தன்னைத் தொலைப்பதில்தான் அதிக ஆர்வம் கவிஞருக்கு. தொலைந்துபோவதில் வருத்தம் இல்லை. துக்கம்
இல்லை. அச்சம்கூட இல்லை. மகிழ்ச்சியா என்றால் அதுவும் இல்லை. தொலைந்துபோவதும், அதற்காக
புதியபுதிய சூழலை, சந்தர்ப்பங்களை உருவாக்குவதும் – அதற்கான ஏற்பாடுகளை செய்வதும்
மகிழ்ச்சி, வாழ்வு. ஓயாமல் தன்னை தொலைத்துக்கொண்டே இருக்கிறார். தொலைப்பதே
தேடுவதற்காகத்தான். சலிக்காத சாகச விளையாட்டு. தொலைந்து போவதும், தேடுவதும்தான்
வாழ்வின் நிமித்தமா? “எனக்கான சொற்களை, எனக்குள் மட்டுமே, பேசிக்கொண்டிருக்கிறேன்.”
என்பதுகூட ஒரு நிலையில் இல்லாமல் ஆகிவிடுகிறது. தன்னை மட்டுமல்ல தனக்கான சொற்களையும்
தொலைத்துவிடுகிறார். மொழி இழப்பு சாத்தியமா? ஆமாம் என்கிறது பூங்குழலியின் கவிதைகள்.
ஒவ்வொரு கணமும் அறிந்தும், அறியாமலும் நம்மை தொலைத்துக்கொண்டிருக்கிறோம். தொலைப்பதற்கு
ஓடிக்கொண்டிருக்கிறோம். விநோதம்தான். தொலைந்து போவது எப்படி? அதில் எத்தனை வகைகள்
இருக்கின்றன? வாழ்க்கையை இலக்கியம்தான் கற்றுத்தர முடியும் என்பதற்கு நல்ல உதாரணங்கள்
இத்தொகுப்பின் கவிதைகளுக்குள் இருக்கின்றன.
தொலைந்து போவதை மட்டுமல்ல இரவையும் கொண்டாடுகிறார் பூங்குழலி. இரவு அவருக்கு
தூங்குவதற்கானது அல்ல. செயல் ஊக்கம் பெறுவதற்கானது. இரவில்தான் கவிஞரின் உலகம்
செயல்படவும், வாழவும், ஆரம்பிக்கிறது. இருட்டிலா, வெளிச்சத்திலா வாழ்க்கை? இருளும்,
ஒளியும் நம் மன உருவங்கள்தானே. இரவை நாம் தூங்குவதற்காக மட்டுமே ஒதுக்கி
வைத்திருக்கிறோம். நாளின் ஒரு பகுதியை செயல்படாமைக்கென்று ஒதுக்கி வைத்திருக்கிறோம்.
இருள், இருட்டு, இரவு – எப்படி அர்த்தப்படுத்தி வைத்திருக்கிறோம்? மூதேவி. ஸ்ரீதேவி
மட்டும் மனிதர்களுக்கு போதுமா? மூதேவியோடு ஒரு நாள் இல்லாவிட்டால் மனிதர்கள்
என்னாகிறார்கள்? இருட்டிற்கும் வெளிச்சத்திற்கும் வித்தியாசமில்லை. எல்லாம் நம்முடைய மன
உருவங்கள். கவிஞர் இரவுக்கு தன்னை முழுமையாக ஒப்புக்கொடுக்கிறார். அதோடு நம்மையும்
இரவின் ஒலிகளுக்குள், புதிர்களுக்குள் இட்டுச் செல்கிறார். இதுதான் பூங்குழலி கவிதைகள்.
மனிதர்களுடன் சேர்ந்திருப்பதைவிடவும் தனிமையிலும், அதன் வெறுமையிலும் இருப்பதுதான்
கவிஞருக்கு பெரு விருப்பமாக இருக்கிறது. பூங்குழலி தனிமையை எதிர்கொள்ளும் விதம்
புதிது. மனிதர்கள் எப்போதும் பெரும் கூட்டத்திற்குள் இருக்கவும், புழங்கவுமே
விரும்புகிறார்கள். ஆனால் கவிஞரின் மனம் பொது மனோபாவத்திற்கு எதிர்திசையில்
பயணிக்கிறது. இந்த முரண்தான் கவிதைக்கான கச்சாப்பொருள். தொகுப்பிலுள்ள அநேகக் கவிதைகள்
வெறுமையை நோக்கி பயணம் கொண்டதாகவே இருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் வாழ்வது
அவரவருக்குரிய பிரத்தியோகமான தனிமையிலும் வெறுமையிலும்தான். கவிதைகளில் வெறுமை,
தனிமை குறித்த புகார் இல்லை. புகழ்ச்சி இல்லை. பொக்கீஷம் என்று நாம் சேமித்து
வைத்திருக்கும் எல்லா நினைவுகளுமே – வெறுமையைக் காட்டக்கூடிய, பேசக்கூடியதாகவே
இருக்கிறது. தனிமையை, வெறுமையைப்பற்றி மேலோட்டமாக அல்ல ஆழமாக உணர்ந்து பேசினாலும்
எந்த இடத்திலும் தவிப்பு, ஏக்கம், இழந்ததின் வலி, தப்பிக்க வேண்டும் என்ற ஆர்வம் இல்லை.
ஆனால் வெறுமையை நோக்கி பயணிப்பதில் கவிஞரின் மனம் கொள்ளும் விழைவு வியப்பளிக்கிறது.
பூங்குழலியின் வெறுமையைப்பற்றி பேசும் கவிதைகள் பல நம்முடைய மரபில் பெரும் செயலாக
பின்பற்றப்பட்டு வந்த வனவாசம், முதுமக்கள் தாழி போன்ற பண்பாட்டுக் கூறுகளை
நினைவுப்படுத்திக் கொண்டேயிருக்கிறது. இதுதான் மரபையும் நவீனத்துவத்தையும் இணைப்பது.
இணைப்புப்புள்ளியை கவிஞர் சரியாகவே செய்திருக்கிறார்.
நிகழ்தலும் நிகழ்தல் நிமித்தமும் – கவிதைத் தொகுப்பில் ஆண், பெண், மன உலகின்
விசித்திரங்கள் காட்சியாக்கப்பட்டிருக்கின்றன. ஆச்சரியமளிக்கும் வகையில் பெண்கள் ஓயாமல்
கேள்விகளைக் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அதை வேகவேகமாகவும் கேட்கிறார்கள். ஆனால்
ஆண்கள் எப்போதும்போல எல்லாக் கேள்விகளுக்கும் ஒரே வார்த்தையில் பதில் சொல்கிறார்கள். “சரி”,
“பார்க்கலாம்”, “செய்”, “தொந்தரவு பண்ணாத”, “உன்னிஷ்டம்”. இதை பூங்குழலி “உன்னைச் சுற்றி
இறந்து கிடக்கும் சொற்களை பொறுக்கி எடுக்கிறேன்” என்று எழுதுகிறார். அன்பை பகிர்வதில்,
ஏற்பதில் எவ்வளவு சிக்கல்கள்? சிக்கலைப்பற்றி, அதற்கான சூழலைப்பற்றிப் பேசாமல் – அதன்
வலியைப்பற்றி கவிதை பேசுகிறது. எதையும் கோராத, எதையும் முன்மொழியாத கவிதைகள்.
“நம்பிக்கையுடன், சிரித்துசிரித்து, வளர்த்த காதல், காயமாய், சீழ்ப்பிடித்து நாறுகிறது.”
மனித உறவுகள், மனங்கள் எல்லாமே காயமாகவும் சீழ்ப்பிடித்தும்தான் இருக்கிறது. சிரிப்பு
எப்படி காயமானது? சீழானது என்பதுப்பற்றி பல கவிதைகள் தொகுப்பிற்குள் இருக்கின்றன.
வாசகரின் மனதை காயமாக்கும் விதத்தில், காயத்தை உணரும் விதத்தில் ஒரு படைப்பு
எழுதப்படுமானால் அதுதான் படைப்பு. கலை.
பூங்குழலி பெண். அவருடைய கவிதைகளில் எங்குமே கண்ணீர் இல்லை. புகார், புலம்பல்,
பரிதவிப்பு, குறை கூறல், ஆண் மீதான பகை, வெறுப்பு துளியும் இல்லை. ஆச்சரியம். அதே
மாதிரி முலை, யோனி, மாதவிடாய், வலி, பெண் உடல், உடல்மொழி, உடல் அரசியல், ஆண் அறியா
ரகசியம் போன்ற சொற்கள் ஒரு இடத்திலும் இல்லை. இதுதான் அவருடைய சொற்களை கவிதையாக்கி
இருக்கிறது. தன்னை உணர்தல், தான் வாழும் காலத்தை, வாழும் வாழ்க்கையை எழுதுவது – கவிதை
என்பதை உணர்ந்தது மட்டுமல்ல அதை உயிருள்ள சொற்களால் எழுதியிருக்கிறார்.
பூங்குழலி மலேசியாவில் பிறந்தவர். அங்கேயே வாழ்கிறவர். அந்த நாட்டின் மலைகள், மேடு
பள்ளங்கள், ஆறுகள், செடிகொடிகள், காற்று, மரம், வாசனை எங்குமே பதிவாகவில்லை என்பதும்,
மலேசியா என்றால் ரப்பர் தோட்டம் என்பது மாறி இப்போது செம்பனை மரங்கள் அறுபது சதவிகித
காடுகளில் வளர்கின்றன? ரப்பர் தோட்ட தொழிலாளிகள் என்னவானார்கள்? எந்தக் குறிப்பும் இல்லை.
பூங்குழலி எழுத வேண்டியது மலேசிய மண்ணுக்கான கவிதையை, அதன் அடையாளத்தை. கவிதையின்
ஜீவன் அந்த அடையாளத்திற்குள் இருக்கிறது. கவிஞர் அறிய வேண்டியது இதைத்தான். சமூகத்தின்
மீதான ஈடுபாடு, அக்கறைதான் இலக்கியப் படைப்பின் அடிப்படை. உயிர்.
நிகழ்தலும் நிகழ்தல் நிமித்தமும் – கவிதைத் தொகுப்பை ஒரே மூச்சில் படிக்க முடியும்.
அவ்வாறு படிக்க முடிவதற்கு ஒவ்வொரு கவிதையும் பல ஈர்ப்புகளை தனக்குள் கொண்டிருப்பதுதான்.
நிகழ்தலும் நிகழ்தல் நிமித்தமும் (கவிதைத்தொகுப்பு) – பூங்குழலி (மலேசியா)
வெளியீடு – வல்லினம்,
28, C Jalan SG 3/2.
Taman Sri Gombak,
Batu Caves,
Selangor,
Malaysia.
உயிர்மை – மார்ச் 2015

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
May 10, 2015, 12:42:04 PM5/10/15
to brail...@googlegroups.com
www.writerimayam.com
உண்மைக் கதை
இமையம்
“இங்க வள்ளலார் அனாத இல்லம் எங்க இருக்கு?” என்று செல்வம் ஆட்டோக்காரனிடம் கேட்டான்.
“கவர்மண்டு ஆஸ்பத்திரி தெரியுமா?” என்று ஆட்டோக்காரன் திரும்பி கேள்விக்கேட்டான்.
“தெரியும்.”
“கவர்மண்டு ஆஸ்பத்திரிய தாண்டி நேரா மேற்கப் போ. நீ சொல்ற எடம் வந்துடும்.”
“ஆட்டோ வருமா?”
“அறுபது ரூபா ஆவும். ஏறுங்க போவலாம்” என்று ஆட்டோக்காரன் சொன்னான்.
“பரவாயில்ல. மேல பத்து ரூபாக்கூட தரன்” என்று சொன்ன செல்வம் பஸ் ஸ்டாண்டு பக்கம்
பார்த்தவாறு நின்றுகொண்டிருந்த லீலாவதியிடம் “வா. வந்து ஆட்டோவுல ஏறு. போவலாம்” என்று
சொல்லிவிட்டு, லீலாவதி என்ன சொல்கிறாள் என்றுகூட கேட்காமல் ஆட்டோவிற்குள் ஏறப்போனான்.
“நடந்து போவலாம்.”
ஆட்டோவில் ஏறாமல் திரும்பிப்பார்த்து “என்னம்மா சொல்ற? பணம் போனா போவுது. வா. ஏறு.
ஆட்டோவுல போனா சீக்கிரம் போயிடலாம்” என்று சொல்லிவிட்டு செல்வம் ஆட்டோவில் ஏறி உட்கார்ந்தான்.
“கல்யாணத்துக்காப் போறம்? முகூர்த்த நேரம் முடியுறதுக்குள்ளார போவணுமின்னு வேகமா
போறதுக்கு? நான் வன வாசம்தான பேறன்.”
செல்வத்தின் முகம் செத்துப்போயிற்று. உடனே ஆட்டோவைவிட்டு கீழே இறங்கி லீலாவதிக்குப்
பக்கத்தில் வந்து நின்றுகொண்டு “வெயிலா இருக்கும்மா.” என்று சொன்னான்.
“நான் அவ்வளவு வேகமாப் போயி என்னா செய்யப்போறன்?”
“விசாரிக்கத்தான போறம்? ஒடனே தங்கவாப் போற? வா. ஆட்டோவுல போயிடலாம்.” கெஞ்சுவது
மாதிரி சொன்னான்.
“நான் சீக்கிரம் போவணுமா? நான் சுடுகாட்டுக்குப் போறதில ஒனக்கு அவவ்ளவு ஆசயா?”
லீலாவதி சாதாரணமாகத்தான் கேட்டாள். ஆனால் அவள் கேட்டவிதம் செல்வத்தை கோபம் கொள்ள வைத்தது.
அடுத்த வார்த்தை பேச தெம்பு இல்லாமல் செய்தது. அதனால் அவளைப் பார்ப்பதைத் தவிர்த்துவிட்டு
ஆட்டோவையும், டிரைவரையும் பார்த்தான்.
“நடந்தே போவலாம்.” சண்டைக்காரனிடம் சொல்வது மாதிரி லீலாவதி சொன்னாள்.
“நான் எதுக்கு சொல்றன்னு புரியுதா? நடக்கிறதுக்கு கஷ்டமா இருக்கும்ன்னுத்தான் சொன்னன்.”
“அவசரமின்னா நீ வீட்டுக்குப் போ. நான் நடந்தே போறன். நானா விசாரிச்சிக்கிறன். நீ எங் கூட
வந்தாத்தான் சேக்க மாட்டங்க. நான் தனியா போனா அனாதன்னு சொல்லிடுவன். நம்புவாங்க.”
செல்வத்துக்கு கோபத்தில் முகம் சிவந்து போயிற்று. “நான் ஒண்ணு சொன்னா நீ வேற ஒண்ணா
புரிஞ்சிகிற.” லீலாவதியைப் பார்க்காமல் முகத்தைத் திருப்பிக்கொண்டு ரோட்டைப் பார்த்தான்.
லீலாவதியையும் செல்வத்தையும் மாறிமாறி பார்த்த ஆட்டோக்காரன் “ஆட்டோ வாணாமா?” என்று
கேட்டான். அவன் கேட்டதற்கு பதில் சொல்லாமல் “அனாத இல்லத்தில யார வேணுமின்னாலும்
சேத்துக்குவாங்களா? பணம் கட்டணுமா? சாதி பாப்பாங்களா?” என்று லீலாவதி கேட்டாள்.
லீலாவதியை ஏறஇறங்க பார்த்த ஆட்டோக்காரன். பட்டும்படாமலும் சொன்னான் “இலவசம்தான். பணமெல்லாம்
கட்ட வேண்டியதில்ல. அனாதயா இருக்கணும்.”
“அனாதையா இல்லன்னா சேக்க மாட்டாங்களா?”
“சேக்க மாட்டாங்க” என்று சொன்ன ஆட்டோக்காரன் “ஆட்டோ வேணுமா? வேணாமா?” என்று கேட்டான்.
“நான் அனாததான். என்னெ சேத்துக்குவாங்களா?”
“போயி கேட்டுப்பாரு” என்று சொன்ன ஆட்டோக்காரன் செல்வத்தின் பக்கம் திரும்பி “ஆட்டோ
வேணுமா? வேணமா?” என்று வேகமாகக்கேட்டான். அவன் வாயைத் திறக்காததால் வெடுக்கென்று
ஆட்டோக்காரன் நான்கு ஐந்து அடி தூரம் தள்ளிப்போய் நின்றுகொண்டு சவாரி பிடிப்பதற்கு முயன்றான்.
லீலாவதிக்கு சப்பென்றாகிவிட்டது. அனாதை இல்லத்தில் தன்னை சேர்த்துக்கொள்ள மாட்டார்களோ என்ற
கவலை வந்தது. அதே நேரத்தில் ஆட்டோக்காரன் மீது கோபம் உண்டாயிற்று. “பணம் காசு
கொடுக்கிறதவிட இப்ப சனங்களுக்கு பேசுறதுதான் பெரிய கஷ்டமா இருக்கு.” என்று சொன்னாள்.
மொட்டையாக ஒரே வரியில் பதில் சொல்லிவிட்டு தூரமாகப்போய்விட்டானே என்று ஆச்சரியப்பட்டு
ஆட்டோக்காரனையே பார்த்தாள். பக்கத்தில்போய் விசாரிக்கலாமா என்று யோசித்தாள். செல்வம்
பக்கத்தில் நின்றுகொண்டிருக்கும்போது எப்படி கேட்க முடியும் என்று தயங்கினாள். அப்போது
இடித்துவிடுவது மாதிரி ஒரு பஸ் வந்ததும் பயந்துபோய் பின்னால் தள்ளி நின்றாள். அதைப்
பார்த்த செல்வம் “கொஞ்சம் ஓரமா வாம்மா” என்று சொன்னான்.‘
“போவம். வா.”
“வெயிலா இருக்கு. அவ்வளவு தூரம் குச்சிய ஊணிக்கிட்டு நீ எப்பிடி நடப்ப? ட்ராபிக்கா வேற
இருக்கு. ஆட்டோவுல போயிடலாம்மா.” கெஞ்சுவது மாதிரி கேட்டான்.
“வழிய மட்டும் சொல்லு. நான் போய்க்கிறன்.” கறாராக சொன்னாள். முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
செல்வம் தலையில் அடித்துக்கொண்டான். “ஒருத்தர் பேச்ச ஒருத்தர் கேக்காததாலதான் போவக் கூடாத
எடத்துக்கொல்லாம் போவ வேண்டியிருக்கு.”
“நீ வழிய மட்டும் சொல்லு.”
“விதிய மாத்த யாராலயும் முடியாது.” என்று அலுப்புடன் சொன்னான். கோபத்துடன் லீலாவதியைப்
பார்த்தான்.
“சீக்கிரம் செத்துப் போறவங்கதான் புண்ணியம் செஞ்சவங்க. நான் புண்ணியம் செஞ்சவ இல்லெ.”
“பஸ் ஸ்டாண்டுல நின்னுக்கிட்டு என்னம்மா பேசுற?” வெறுப்புடன் கேட்டான்.
“போற எடத்தில என்னா சொல்லப் போறாங்கன்னு தெரியல. அதுவே பெரிய மனக் கொதிப்பா இருக்கு.
வா போவம். நடக்கிறது நடக்கட்டும். நான் நெனைக்கிறதுதான் நடக்கணுமின்னு சட்டமா இருக்கு.
எனக்கு ஒரு தெய்வமும் தொண இல்லாம போயிடுச்சி’‘ எதிரிலிருந்த அன்னபூரணி ஹோட்டலைப்
பார்த்தவாறு சொன்னாள்.
“அம்மா.”
“வர்றதா இருந்தா வா. இல்லாட்டிப் போ” என்று சொன்ன வேகத்திலேயே நடக்க ஆரம்பித்தாள்.
“அப்படி இல்ல. இப்பிடி.” என்று சொல்லிவிட்டு தலையில் அடித்துக்கொண்டான்.
அவன் சொன்ன மாதிரியே கிழக்கில் நடக்காமல் மேற்கில் நடக்க ஆரம்பித்தாள் லீலாவதி. அவளுக்குப்
பின்னால் நடக்க ஆரம்பித்தான் செல்வம்.
குச்சியை ஊன்றிக்கொண்டு லீலாவதி நடப்பதை பார்ப்பதற்கு செல்வத்திற்கு கஷ்டமாக இருந்தது.
இடுப்பை வளைத்துவளைத்து, உடம்பை கோணிகோணி நடப்பதை பார்ப்பதற்கு என்னவோ மாதிரி
இருந்தது. கால்களை நெளித்துநெளித்து ஒவ்வொரு அடியையும் மெல்லமெல்ல எடுத்து வைத்துத்தான்
அவளால் நடக்க முடியும். பார்ப்பவர்கள் விநோதமாக பார்ப்பார்கள். நடக்க முடியாத ஆளை நடத்தி
அழைத்துக்கொண்டு போவதற்காக, தெரிந்தவர்கள்தான் என்றில்லை ரோட்டில் போகிற யார்
வேண்டுமானாலும் திட்டுவார்கள் என்ற எண்ணம் வந்ததும் செல்வத்திற்கு லீலாவதியின்மீது கோபம்
உண்டாயிற்று. ரோட்டில் போகிற கார், பஸ், ஆட்டோ, ஸ்கூட்டர், ஆட்கள் எல்லாம் என்ன நினைப்பார்கள்
என்பது அவனுக்கு பெரும் கவலையாக இருந்தது. ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாமல்
நொண்டிநொண்டி லீலாவதி பித்துப்பிடித்த மாதிரி நடந்து கொண்டிருந்தாள். அவள்
நடந்துகொண்டிருந்த விதம் ஏற்கனவே தெரிந்த இடத்திற்கு போவது மாதிரி இருந்தது. “சொல்றத
கேட்டாத்தான? ஆட்டோவுல போனா என்னா கேடு வந்துடும்? கிழட்டு முண்டச்சிக்கு என்னா
பிடிவாதம்? சனியன்” என்று சொல்லிவிட்டு பல்லைக் கடித்தான்.
லீலாவதியின் பிடிவாதம் செல்வத்திற்கு ஆச்சரியமாக இருந்தது. புதுப் பெண்ணாக இருந்தாள்.
ஒரு வாரமாக சாப்பிடவில்லை. படுத்த இடத்தைவிட்டு எழுந்திருக்கவில்லை. யாரிடமும் ஒரு
வார்த்தை பேசவில்லை. “அனாத ஆசிரமத்துக்குப் போறன்” என்பதையே மந்திரம் சொல்வது மாதிரி
சொல்லிக்கொண்டிருந்தாள். காரணம் கேட்டால் பதில் சொல்லவில்லை. கெஞ்சிகெஞ்சிப் பார்த்துவிட்டு
அக்கம்பக்கத்து வீட்டார்களிடம் சொல்லி லீலாவதியிடம் பேச வைத்தான். தெருவில் இருந்த பலரும்
வந்து சொல்லிப் பார்த்தார்கள். சாப்பாடு மட்டுமல்ல பச்சைத் தண்ணீரைக்கூட அவள் குடிக்கவில்லை.
வெறுத்துப்போய் “இந்த வயசில இம்மாம் புடிவாதமா? போய்தான் தெரிஞ்சிக்கிட்டு வரட்டும். ஒரு
வாரம் இருந்து பாக்கட்டும். அப்பத்தான் வீட்டோட அரும தெரியும். சின்ன புள்ளைங்களவிட
அதிகமா அடம் புடிச்சா என்னா செய்ய முடியும்? வயசு ஆயிட்டாலே புத்தி கோளாறாயிடுது.
குழந்தைகள வச்சிருக்கிறதவிட வயசானவங்கள வச்சிருக்கிறதுதான் இந்த காலத்தில பெரிய
சிக்கலா இருக்கு.” என்று ஒருவர் தவறாமல் சொன்னார்கள். வேறு வழியில்லாமல்தான் செல்வமும்
ஒத்துக்கொண்டான். காலையில் கிளம்பும்போதுகூட “சாப்புடு” என்று கெஞ்சினான். ஒரு நூல்
அசையவில்லை. காலையில்கூட சாப்பிடவில்லையே என்ற எண்ணம் வந்ததும் வேகமாக பக்கத்தில் வந்து
“ஏதாச்சும் சாப்புட்டுட்டு போவலாம். வீட்டுலதான் சாப்புடல. கடயிலியாவது சாப்புடன்.
போனதுமே எப்பிடிம்மா சேத்துக்குவாங்க? எப்ப சாப்புட முடியுமோ? நீ சாப்புட்டு எட்டு
ஒம்போது நாளாயிடிச்சே” என்று உடைந்துபோன குரலில் சொன்னான்.
“பசிக்கல.”
“நான் சொல்றத கேளும்மா.”
“அப்பிடியாச்சும் நான் செத்தா சரி.” பேச்சை வெட்டிவிட்டாள். ஆனால் செல்வம் விடவில்லை.
“ஒரு காப்பியாச்சும் குடியன்.”
“வெறும் வயித்தில குடிச்சா குடலப் புரட்டும். வாண்டாம்.”
“இளநிக்காரன் நிக்குறான். ஒண்ணு வாங்கட்டுமா?”
“தேவயில்ல.”
“பெத்த புள்ளைக்கிட்ட எதுக்கு புடிவாதம்? சொன்னாக் கேளும்மா.” செல்வம் கெஞ்சினான்.
லீலாவதியை எப்படியாவது சாப்பிட வைத்துவிட வேண்டும் என்பது அவனுடைய விருப்பமாக இருந்தது.
“வெயிலா இருக்கு. போயிடலாம். போற எடத்தில என்னா சொல்வாங்களோ? அனாதயா இருந்தாத்தான்
சேப்பாங்களாம்.”
“எதுக்கு வெட்டிவெட்டிப் பேசுற? ஓரமா வா. காருக்காரன் ஏத்திப்புடப்போறான்.” என்று
சொல்லி லீலாவதியின் கையைப் பிடித்து லேசாக நகர்த்திவிட்டான்.
“அப்படித்தான் ஒண்ணும் நடக்க மாட்டங்குது. சனியன் நமக்கு எதுக்குன்னு ஒவ்வொரு காருகார
நாயும் ஒருங்கிஒதுங்கிப் போவுதுங்க.”
“கண்டபடி பேசாத. இங்கப்பாரு. ‘சாப்புட வாங்க’ன்னு ஒரு ஹோட்டல் இருக்கு. வா. போயி
ரெண்டு இட்லி தின்னுட்டுப் போயிடலாம். கோபப்படாம சொல்றத கேளு.”
“வாண்டாம். ஓட்டலுக்கு இப்பிடியெல்லாம் பேரு வைக்க ஆரம்பிச்சிட்டாங்களா? சனியன்
புடிச்சவங்க.” முன்னைவிட வேகமாக நடக்க முயன்றாள். லீலாவதியின் செய்கை செல்வத்தைப்
பைத்தியம் பிடிக்க வைத்துவிடும்போல இருந்தது. ஒரு நொடி அவளைப் பார்க்காமல் இருப்பதற்கு
முயன்றான். ரோட்டில் போகிற வண்டி வாகனங்களைப் பார்க்க முயன்றான். மனம் எதிலும்
நிற்கவில்லை. திரும்பி லீலாவதியைப் பார்த்தான். கோபமாகவும் இருந்தது, வருத்தமாகவும்
இருந்தது. கோபம்தான் அதிகமாக இருந்தது. அவளுடன் ரோட்டில் நடந்துகொண்டிருப்பது கூடுதல்
எரிச்சலை உண்டாக்கியது. எரிச்சலைக் கட்டுப்படுத்த முடியாமல் கேட்டான்.. “வீட்டுக்காப்
போறம்? போன ஒடனே சாப்புட்டுக்கலாம்ன்னு இருக்க. இல்லெ சொந்தக்காரங்க, தெரிஞ்சவங்க
வீட்டுக்குப் போறமா?”
“நான் வன வாசம் போறன், சுடுகாட்டுக்குப் போறன்.”
“எனக்கு கோவத்த உண்டாக்காத” என்று கத்திய செல்வம் மறுநொடியே குரலை மாற்றிக்கொண்டு
தன்மையான குரலில் சொன்னான் “நான் எந்தத் தப்பும் செய்யல. நீதான் அடம்புடிச்சிக்கிட்டு அனாத
இல்லத்துப்போறன்னு வர? இத்தினி வருசத்தில நான் எப்பயாச்சும் ஒன்னெ எடுத்தெறிஞ்சிப் பேசி
இருக்கனா? கெட்ட வாத்த சொல்லி திட்டி இருக்கனா?”
“வீட்டு விசயத்த ரோட்டுல எதுக்குப் பேசுற?”
லீலாவதியின் குரலில் எந்த தடுமாற்றமும் இல்லை. எட்டு ஒன்பது நாட்களாக சாப்பிடாத
பெண்ணினுடைய குரல் மாதிரி இல்லை. மனப்பாடம் செய்து வைத்திருந்த வார்த்தைகளை சொல்வது
மாதிரி ஒவ்வொரு வார்த்தையையும் பயன்படுத்தினாள். செல்வத்திற்குத்தான் குழப்பம்.
வார்த்தைகளைத் தேடினான். தடுமாறினான். லீலாவதி அனாதை இல்லத்தில் சேர்ந்துவிட்டால்
பரவாயில்லை என்றும், சேர்ந்து விடக்கூடாது என்றும் ஒரே நேரத்தில் இரண்டு ஆசைகளும்
அவனுக்கு இருந்தன. சேர்த்துகொள்வார்களா, சேர்த்துக் கொள்ள மாட்டார்களா? மகன் இருப்பதால்
சேர்த்துக் கொள்ள மாட்டேன் என்று சொல்லிவிடுவார்களா? திடீரென்று பாசம் வந்த மாதிரி
பக்கத்தில் வந்து நடந்துகொண்டே சொன்னான் “என்னெ புரிஞ்சிக்க மாட்டியாம்மா?”
“ஒனக்கு வெக்கமா இருந்தா திரும்பிப் போயிடு. வழிய கேட்டுக்கிட்டு நானே போயிக்கிறன்.
பாதி தூரம் வந்திருக்க மாட்டம்?”
“நான் என்ன சொல்றன்? நீ என்ன சொல்ற?” கோபத்தில் கத்தினான்.
“நீ எங்கூட வர்றதுதான் தொந்தரவு. அங்க வந்து ‘இது எங்கம்மா’ன்னு சொல்லாத. தெரிஞ்ச
பொம்பள, தெருக்கார பொம்பளன்னு சொல்லிடு. அப்பத்தான் என்னெ சேத்துக்குவாங்க.”
“வாய மூட மாட்டியா? பேசுறதுக்கும் ஒரு அளவு இல்லெ?” என்று சொல்லி முறைத்தான்.
கோபத்தில் தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்.. “எல்லாம் என் தல எழுத்து. ஒனக்கு புள்ளையா
பொறந்து நான் படுற பாடு இருக்கே. அதுக்கு நான் செத்துப்போவலாம்.”
“நாங்கதான் ஆசப்பட்டு பெத்தம் ஒன்னெ. நீ கேக்கல.” லீலாவதியினுடைய கண்களிலிருந்து கண்ணீர்
வந்தது.
“எதுக்காக இந்த வாத்தய சொல்ற? நானா அனாத இல்லத்துக்குப் போன்னு சொன்னன்? நீதான் திமிர்
புடிச்சிப்போயி வர.”
செல்வத்திற்கு மண்டை வெடித்துப் போகிற அளவுக்கு கோபம் உண்டாயிற்று. வீடாக இருந்திருந்தால்
பெரிய சண்டை போட்டிருப்பான். காட்டுக் கத்தலாகக் கத்தியிருப்பான். கோபத்தில் கெட்ட வார்த்தை
சொல்லி திட்டியிருப்பான். லீலாவதியை அடிக்க முடியாமல் தன்னுடைய பிள்ளைகளைப் போட்டு
அடித்திருப்பான். வீட்டிலுள்ள பொருட்களை தூக்கிப்போட்டு உடைத்திருப்பான். பெரிய ரகளை
நடந்திருக்கும். கடைத் தெருவில் என்ன செய்ய முடியும்? ரோட்டின் இரண்டு பக்கமும் இருந்த
கடைகளை பார்த்தவாறு நடந்தாலும் அவனுடைய மனம் நெருப்பாக எரிந்துகொண்டிருந்தது. எதைப்
பார்த்தாலும் கோபம் குறைவது மாதிரி தெரியவில்லை. மனம் வெறுத்துப் போய் சொன்னான் “ஏண்டா
பொறந்தம்ன்னு இருக்கு.”
செல்வத்திற்குத்தான் நடக்க முடியவில்லை. ஆனால் லீலாவதி கால்களை இழுத்துஇழுத்து வைத்து
வேகமாக நடந்துகொண்டிருந்தாள். ரோடு, வண்டி, வாகனங்கள், ஆட்கள், வெயில், வியர்வை
கசகசப்பு எதையும் அவள் பொருட்படுத்தவில்லை. வழி அவளுடைய கண்களில் இல்லை. மனதில்
இருந்திருக்க வேண்டும். நடை அவ்வளவு வேகமாக இருந்தது. ஸ்கூட்டர்கள், பஸ், கார் என்று
வரும்போதுகூட அவள் ஒதுங்கியோ, தயங்கியோ நடக்கவில்லை. செல்வத்திற்கு வியப்பாக இருந்தது.
அவளை நடக்க வைக்கும் சக்தி எதுவென்று தெரியவில்லை.
அரசு பொது மருத்துவமனைக்கு அருகில் வந்ததும் லீலாவதி நின்றாள். செல்வமும் நின்றான்.
ஒருவருக்கொருவர் பார்த்துகொண்டனர். ஆனால் பேசிக்கொள்ளவில்லை. ஜென்ம விரோதிகள் பக்கத்தில்
நிற்க நேரிட்டது மாதிரி இருவரும் நின்றுகொண்டிருந்தனர். செல்வம் வாயைத் திறக்காமல்
நிற்பதை பார்த்த லீலாவதி “தடம் தெரியுமா?” என்று கேட்டாள்.
“கேக்கணும்” என்று சொல்லிவிட்டு பக்கத்திலிருந்த மருந்து கடைக்குச் சென்று
விசாரித்துவிட்டு வந்து “அடுத்தத் தெருவுல கடசியில இருக்காம்.” என்று வழிப்போக்கிக்கு
சொல்வது மாதிரி சொன்னான்.
“எப்பிடி?”
“இப்பிடி.”
செல்வம் கையைக்காட்டிய பக்கம் லீலாவதி நடக்க ஆரம்பித்தாள். பக்கத்தில் கூடவே
நடந்துகொண்டிருந்தவன் ரகசியம் சொல்வது மாதிரி சொன்னான் “கோவப்படாத. இப்பவும் ஒண்ணுமில்ல.
வீட்டுக்குத் திரும்பிப் போயிடலாம். மருமவக்கிட்ட கோவிச்சிக்கிட்டு யாராச்சும் அனாத
இல்லத்துக்கு போவாங்களா? நீ அவகிட்ட எத்தினியோ முற சண்ட போட்டிருக்க, ஏன்னு ஒரு முற
கேட்டிருப்பனா? ஒன்னெ வுட்டுட்டு நான் எப்பிடி சோறு திங்கிறது?” செல்வம் அழுதான்.
“எனக்கு யாரு மேலயும் கோவமில்ல. வருத்தமில்ல. வீட்டவிட்டு வந்துட்டப் பின்னால திரும்பி
எந்த முகத்தோட போறது?”
“அது ஒன்னோட வீடும்மா.”
“தப்பு. என்னோட வீடு இல்ல. ஒம் பொண்டாட்டியோட வீடு. ஒன்னோட வீடு. ஒன் மாமியா வீட்டு
சனங்களோடது.”
“எதுக்குப் பிரிச்சிபிரிச்சிப் பேசுற? அவதான் வேத்தாளு. நானுமா?” செல்வத்தின் கண்களில்
கண்ணீர் திரண்டு நின்றது.
“யாரும் யாருகிட்டயும் பேசாத வீட்டுல எப்பிடி இருக்கிறது? ஆளுங்க இல்லாதப்பக்கூட அந்த
வீடு எங்கிட்ட பேசிக்கிட்டு இருந்துச்சி. இப்ப அந்த வீடு எங்கிட்ட பேசல. அதனாலதான் வெளிய
வந்தன். அந்த வீட்டுக்கு இப்ப யார்யாரோ வர்றாங்க. யாராரோ போறாங்க.”
“என்னம்மா சொல்ற? புரியல. கலாமணி தப்பு செய்யுறாளா? கெட்ட நடத்த உள்ளவளா?”
“நான் அப்பிடி சொல்ல.” நடப்பதை நிறுத்திவிட்டு செல்வத்தை விநோதமாகப் பார்த்தாள்.
அவளுடைய கண்களில் கண்ணீர் வந்தது.
“நான் என்னா தப்பு செஞ்சன்? எம் புள்ளைங்க என்னா தப்பு செஞ்சிச்சி? அதுகளகூட பாக்காம
வர்ற? மாமியா-மருமவ சண்ட ஒலகத்தில எல்லா வீட்டுலயும் நடக்குறதுதான? புதுசாவா
நடக்குது? இல்லெ நம்ப வீட்டுல மட்டும்தான் நடக்குதா? வயசாயிடிச்சி. நீ கொஞ்சம்
அனுசரிச்சிப்போனா என்ன?”
“நான் எத அனுசரிப்பன்?” லீலாவதியின் கண்களில் நெருப்பு பறந்தது. செல்வத்தை
எரித்துவிடுவது மாதிரி பார்த்தாள். பல்லைக்கடித்தப்படி “நான் அனுசரிச்சிப் போவன், ஒம்
பொண்டாட்டி ஊர் சுத்தப் போவாளா? பேரு வச்சியிருக்கான் பாரு கலாமணின்னு திருட்டு
மணின்னு வைக்காம. எல்லாத்துக்கும் அவள பெத்தவன சொல்லணும்.” சத்தமாகக் கேட்டாள்.
“என்னம்மா சொல்ற?” பரிதாபமாகக் கேட்டான்.
“வாயக் கிண்டாத. எம் போக்குல என்னெ வுட்டுடு. அதான் ஒனக்கும், ஒம் புள்ளைங்களுக்கும் நல்லது.”
“என்னெப் புடிக்கல சரி. எம் பொண்டாட்டிய புடிக்கல. எம் பொண்டாட்டி வீட்டு சனங்கள புடிக்கல
சரி. பேரப் புள்ளைங்களகூட நீ நெனைக்கலியா?”
“அந்த ரெண்டு சனியனுங்களாலத்தான் இத்தினி வருசமா நான் அந்த வீட்டுல குந்தியிருந்தன்.’’
“இப்பியும் அதுங்களுக்காக இருந்திட்டுப் போயன்.”
“இனிமே அந்த வீட்டுல நான் இருக்க மாட்டன். பொட்டச்சிக்கு எதுக்கு தனியா செல்ஃபோனு? ஒரு
பொட்டச்சி போனுல எம்மாம் நேரம் பேசலாம் ஒரு நாளக்கி?” நடக்க ஆரம்பித்தாள் லீலாவதி.
“எம் பொண்டாட்டி தப்பு செய்யுறாளா? நீ சந்தேகப்படுறியா? அவ வீட்டு சனங்க வரும், போவும்.
பணம் கொடுப்பா. அத சொல்றியா? தப்பு செய்யுறான்னு சொல்லு அவள வெட்டிச் சாய்க்கிறன்.”
“பணம் காசா எனக்கு பெருசு?” நின்று திரும்பிப் பார்த்துக்கேட்டாள் லீலாவதி.
“அப்பறம் ஒனக்கு என்னாதான் பிரச்சன?” வழியை மறித்துக்கொண்டு கேட்டான் செல்வம்.
“தெருவுல என்னா செய்யுற நீ?”
“காரணத்த சொல்லு.”
“எனக்கு ஒரு பிரச்சனயுமில்ல.”
“இதான் ஒன்னோட முடிவா?”
லீலாவதி கொஞ்சம்கூட தயங்கவில்லை. யோசிக்கவில்லை. ஒரே வெட்டாக வெட்டினாள் “ஆமாம்.”
செல்வத்தின் கைகளை விலக்கிக்கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.
“அப்பாவ ஆட்டிப் படச்ச மாதிரியே என்னெயும்தான் ஆட்டிப்படச்ச. சாதாரணமாவே நீ அதிகமா
பேசுவ. இந்த ஒரு வாரமா அளவு கடந்து பேசுற.”
நடப்பதை நிறுத்திவிட்டு கேட்டாள் “ஒன்னெயும் ஒங்கப்பனையும் நான் ஆட்டிப்படச்சனா?”
லீலாவதியின் கண்களில் கண்ணீர். முதன்முதலாக வாய்விட்டு அழுதாள்.
“‘கட்டுன பொண்டாட்டியவிட, முப்பது நாப்பது வருசம் ஆக்கிப்போட்டவளவிட, சூத்து துணிய
அலசி கொடுத்தவளவிட, கூடப்படுத்து எழுந்திருச்சவளவிட – மூத்திரம் வுடுற நேரத்தில
பெத்த புள்ளை நீ. ஒனக்காகத்தான ஒங்கப்பன் தூக்குல தொங்கி செத்துப்போனான்?” கோபத்தில்
கத்தினாள். அவளுடைய உடம்பு நடுங்கியது. அவளுடைய கைகள் கைக்குச்சியை
அழுத்திப்பிடித்தன. அவளுடைய அழுகையும், பேச்சும் செல்வத்தை நிலைகுலைய வைத்துவிட்டது.
அவளை சமாதானப்படுத்துவது மாதிரி சொன்னான் “ நான் ஒண்ண நெனச்சிக்கிட்டு சொல்றன். அத நீ
வேற ஒண்ணா நெனச்சிக்கிற. எத சொன்னாலும் தப்புத்தப்பாப் போயிடுது.” அவனுடைய கண்களில்
கண்ணீர். “ரெண்டு பொம்பளைங்ககிட்ட நான் மாட்டிக்கிட்டுப் படுறபாடு இருக்கே, மருந்த
குடிச்சிட்டு செத்துடலாம். எல்லாம் என் தல எழுத்து” தலையில் அடித்துக்கொண்டான்.
“நில்லும்மா பேசிட்டு போவலாம்.” செல்வத்தினுடைய பேச்சை லீலாவதி கேட்கவில்லை.
வள்ளலார் அனாதைகள் இல்லத்திற்கு முன்வந்து நின்றாள் லீலாவதி. கட்டிடத்தைப் பார்த்தாள். பெரிய
வீடாக தெரிந்தது. கட்டிடத்தின் வாசலைப்பார்த்தாள். கல்யாண மண்டபத்தின் வாசல் மாதிரி
பெரியதாக இருந்தது. உடனே உள்ளே போகலாமா, யாரையாவது பார்த்து விசாரித்துவிட்டு
போகலாமா என்று யோசித்தாள். பக்கத்திலிருந்த வேப்ப மரத்தின் நிழலுக்கு வந்து
நின்றுகொண்டு, கட்டிடத்திற்குள் இருந்து ஆட்கள் யாரும் வெளியே வருகிறார்களா என்று
பார்த்தாள். அறிமுகம் இல்லாத பெண்ணுக்குப் பக்கத்தில் நின்றுகொண்டிருப்பது மாதிரி செல்வம்
அவள் பக்கத்தில் நின்றுகொண்டிருந்தான். லீலாவதி அவனைப் பார்ப்பதைத் தவிர்த்தாள்.
அனாதைகள் இல்ல கட்டிடத்திற்குள் இருந்து பத்து வயது மதிக்கத்தக்க ஒரு பெண் பிள்ளை வெளியே
வந்ததைப் பார்த்ததும் “யே, பாப்பா இங்க வா.” என்று லீலாவதி கூப்பிட்டாள்.
“என்னா?”
“இங்க வாம்மா.”
“என்னா?” என்று கேட்டுக்கொண்டே அந்தப் பிள்ளை லீலாவதியின் முன் வந்து நின்றது.
“நீ இங்க உள்ள புள்ளையா?”
“ஆமாம்.”
“இங்க சேர முடியுமா? சேத்துப்பாங்களா?”
“தெரியல.”
“இங்க சேரணுமின்னா யாரப் பாக்கணும்?”
“அண்ணன.”
“எந்த அண்ணன்?”
“இளயராஜா அண்ணன.”
“யாரு அவுரு.”
“ஓனரு.”
“இருக்காரா?”
“ம்.”
“என்னெ அழச்சிக்கிட்டுப்போயி வுடுறியா தாயி?”
“நான் கடைக்கி போவணும்.” என்று சொல்லிவிட்டு அந்தப் பிள்ளை லீலாவதியைத் திரும்பதிரும்பப்
பார்த்துக்கொண்டே நடக்க ஆரம்பித்தது.
லீலாவதிக்கு திடீரென்று பயம் உண்டானது. உள்ளே இருக்கக்கூடிய ஆள் எப்படி இருப்பார்? தன்னை
சேர்த்துக்கொள்வாரா? சேர்த்துக் கொள்ளவில்லை என்றால் என்ன செய்வது? காரணமின்றி தெற்கிலும்
வடக்கிலும் பார்த்தாள். கிழக்கிலும் மேற்கிலும் பார்த்தாள் பிறகு செல்வத்தைப் பார்த்தாள். அவன்
“வள்ளலார் அனாதைகள் இல்லம்” என்று கட்டிடத்தின் மேல் எழுதியிருந்ததைப்
படித்துக்கொண்டிருப்பது தெரிந்தது.
“நீ போயி உள்ளாரப் பாத்துட்டு வரியா?”
“வாண்டாம்மா.” செல்வத்தின் கண்களில் கண்ணீர் இருந்தது. அதை மறைப்பதற்காக முகத்தை வேறு
பக்கம் திருப்பிக்கொண்டான்.
லீலாவதி கட்டிடத்திற்குள் நுழைந்தாள். முதலில் பெரிய ஹால் இருந்தது. ஹாலின் வடக்கு
பக்கமாக ஒரு அறை இருந்தது. அறையை ஒட்டி சுவரில் பெரிதாக வள்ளலார் படம் இருந்தது.
படத்துக்குக் கீழே குத்து விளக்கு ஒன்று எரிந்துகொண்டிருந்தது. அதிக சத்தமில்லாமல் ‘அருட்
பெருஞ்ஜோதி தனி பெரும் கருணை’ என்ற பாட்டு கேசட்டில் ஓடிக்கொண்டிருந்தது கேட்டது.
ஹாலின் தென்பகுதியில ஆறு ஏழு வயதுள்ள இரண்டு பெண் பிள்ளைகளும் ஒரு பையனும் உட்கார்ந்து
ஏதோ எழுதிக்கொண்டிருப்பது தெரிந்தது. குச்சியை ஊன்றி நின்றுகொண்டிருந்த லீலாவதியைப்
பார்த்ததும் அந்த பிள்ளைகளுக்கு என்ன தோன்றியதோ ஒன்றும் சொல்லாமல் மிரளமிரள பார்த்தன.
அதில் பச்சை நிறப் பாவாடை கட்டியிருந்த பிள்ளை எழுந்து ஹாலின் வடக்குப் பக்கமாக இருந்த
அறைக்குள் ஓடியது. லீலாவதி கூப்பிட்டதை அந்தப் பிள்ளை காதில் வாங்கவில்லை. சிறிது
நேரத்தில் அந்த பிள்ளையும் நடுத்தர வயதுள்ள ஆளும் அறையிலிருந்து வெளியே வந்தனர். ஆளைப்
பார்த்ததுமே அடையாளம் தெரிந்த மாதிரி லீலாவதி இளையராஜாவுக்கு வணக்கம் சொன்னாள்.
“யாரம்மா பாக்கணும்?”
“ஒங்களத்தான்.”
“என்னையா?”
“ம்.”
“என்னா விசயம்மா?”
“சும்மாத்தான்.”
லீலாவதியின் தோற்றம், பேச்சு, பார்வை எல்லாமும் சேர்ந்து இங்கு அவள் ஏன் வந்திருக்கிறாள்,
ஏன் தன்னை பார்க்க வேண்டும் என்று சொல்கிறாள் என்பதெல்லாம் ஒரு நொடியிலேயே அவனுக்கு
புரிந்துவிட்டது. ஆனாலும் தெரியாத மாதிரி கேட்டான் “என்னா வேணும்? சொல்லுங்கம்மா.”
லீலாவதிக்கு பேச்சு வரவில்லை. வீட்டிலிருந்து கிளம்பி, கட்டிடத்திற்கு முன் வரும்வரை
இருந்த தைரியத்தில் ஒரு துளிகூட இப்போது இல்லை. நாக்கிலிருந்த ஈரமெல்லாம் வறண்டு
போய்விட்டது. அதோடு வாய் திறக்கவும் மறுக்கிறது. வார்த்தை வரவில்லை. ஆனால் கண்ணீர் மட்டும்
எந்த தடையும் இல்லாமல் வந்துகொண்டிருந்தது-
“என்னெ பாக்கணுமா? இல்லெ இங்க தங்கி இருக்கிறவங்கள பாக்கணுமா?”
லீலாவதிக்கு என்ன சொல்வது, எப்படி சொல்வது என்று தெரியவில்லை. வீட்டிலும், வழியிலும்
பேசிய பேச்சு, காட்டிய வீராப்பு எல்லாம் இருந்த இடம் தெரியவில்லை. லீலாவதி அழுதாள்.
அதை இளையராஜா பொருட்படுத்தவில்லை. அவள் மாதிரியான பல பெண்களுடைய கண்ணீரை
பார்த்துப்பார்த்து சலித்துப் போயிருந்தவன் மாதிரி “என்னெ பாக்கத்தான் வந்தீங்களா?” என்று
திரும்பவும் கேட்டான்.
“ஆமாம்.” என்பது மாதிரி லீலாவதி தலையை மட்டும் ஆட்டினாள்.
“நான் வெளிய போவணும். விசயத்த சொல்லுங்க.” அப்போது உள்ளே வந்த செல்வம் இளையராஜாவைப்
பார்த்து “வணக்கம் சார்” என்று சொன்னான்.
“வணக்கம். வாங்க.”
“சார் இளையராஜாவா?”
“நான்தான்.”
“இந்த இல்லத்த நடத்துறவருதான?”
“ஆமாம்.”
“இது எங்கம்மா சார்” என்று லீலாவதியைக் காட்டினான் செல்வம்.
“அப்பிடியா?”
“ஒங்கக்கூட கொஞ்சம் பேசணும் சார்.”
“என்ன விசயம்?”
“சும்மாதான் சார்.” செல்வத்தின் குரல் தாழ்ந்துவிட்டது. இளையராஜாவைப் பார்ப்பதையும் தவிர்த்தான்.
“ஏதாச்சும் உதவி செய்யப்போறீங்களா? பொறந்த நாளா, கல்யாண நாளா, நினைவு நாளா?”
“அதெல்லாம் இல்ல சார்.”
“பின்னெ?”
“போன வாரம் இந்த அனாத இல்லத்தப் பத்தி லோக்கல் டி.வி.யில ஒரு செய்தி வந்துச்சி. அத
பாத்ததிலிருந்து ‘நான் அங்க போயி சேந்துக்கிறன்’ன்னு சொல்லி எங்கம்மா அடம்புடிச்சிக்கிட்டு
வந்துடுச்சி சார்” செல்வத்தினுடைய குரலில் அவ்வளவு வெறுப்பும் கசப்பும் இருந்தது.
“உதவி செய்யுறவங்க செய்யலாம்ன்னு விளம்பரம் கொடுத்திருந்தன். ஒரு உதவியும் வரல. நீங்கதான்
வந்து இருக்கீங்க.” இளையராஜா சிரித்தான்.
“என்னால முடிஞ்சத நான் கொடுக்கிறன் சார்” செல்வம் உற்சாகத்துடன் சொன்னான்.
“அப்பிடி செஞ்சீங்கன்னா பெரிய உதவியா இருக்கும். ரொம்ப சிரமப்பட்டுத்தான் பதிமூணு
வருசமா நடத்திக்கிட்டு வரன்.”
“பதிமூணு வருசமாவா?”
“ஆமாம்.”
செல்வம் பேசவில்லை. லீலாவதி பேசவில்லை. இளையராஜாவும் பேசாமல் ஹாலை பார்த்தவாறு
நின்றுகொண்டிருந்தான். அப்போது சட்டென்று லீலாவதி இளையராஜாவின் காலில் விழுந்து
கும்பிட்டாள். அதைப் பார்த்ததும் செல்வத்திற்கு உயிரே நின்றுவிடும் போலிருந்தது. கோபத்தில்
அவனுக்கு உடம்பு நடுங்க ஆரம்பித்தது. ஆனால் இளையராஜா சாதாரணமாக “எழுந்திரும்மா”
என்று மட்டுமே சொன்னான். என்ன தோன்றியதோ செல்வத்தையும் லீலாவதியையும் மாறிமாறி
பார்த்தான். பிறகு “உள்ளார வாங்க” என்று சொல்லிவிட்டு தன்னுடைய அலுவலக அறைக்குள்
போனான். அவனுக்குப் பின்னால் லீலாவதியும், செல்வமும் போனார்கள். இளையராஜா உட்கார்ந்திருந்த
நாற்காலிக்கு எதிரிலிருந்த மரப் பெஞ்சில் இருவரும் உட்கார்ந்தனர். இளையராஜா பேசவில்லை.
செல்வம் பேசவில்லை. லீலாவதிதான் பேசினாள் “என்னெ அனாதயா சேத்துக்குங்க. புண்ணியமா
இருக்கும்.” கையெடுத்துக் கும்பிட்டாள்.
“எதுக்காக நெனச்சதுக்கெல்லாம் அழுவுறீங்க? கும்புடுறீங்க?” என்று லேசான கோபத்துடன்
கேட்டான். பிறகு குரலை மாற்றிக்கொண்டு “இது அனாதைங்களுக்காக நடத்துறது.
ஒங்களுக்குத்தான் மகன் இருக்காரில்ல?” என்று சொல்லி லேசாக சிரித்தான்.
“எல்லாம் இருக்கு. ஆனா எதுவும் இல்லெ.” லீலாவதியின் குரலில் அவ்வளவு கசப்பு இருந்தது.
கண்களில் கண்ணீர் இருந்தது.
“நான் சொல்றத புரிஞ்சிக்குங்க. சொத்துபத்து உள்ளவங்கள, புள்ளைங்க உள்ளவங்கள சேத்துக்க
ஆரம்பிச்சா எல்லாரும் இந்தத் தப்ப செய்ய ஆரம்பிச்சிடுவாங்க. அந்த அளவுக்கு நடத்துறதுக்கு
எங்கிட்ட வசதியும் இல்ல” இளையராஜா சிரித்தான்.
“எனக்கு வீடு இல்ல. புருசன் இல்லெ.”
“என்னாச்சி?”
“செத்து எட்டு வருசமாச்சி. அப்பவே செத்திருக்கணும். வயசாயி உயிரோட இருக்கக் கூடாது.
அதிலயும் இடுப்பு ஒடிஞ்சிப்போயி.” லீலாவதியின் கண்களில் கண்ணீர்.
“இடுப்புல என்னா? சரியா நடக்க முடியாதா?”
“கஷ்டப்பட்டுத்தான் நடக்கணும். பஸ்ஸில ஏறும்போது படிக்கட்டுலயிருந்து சறுக்கிவுட்டு
விழுந்து இடுப்புல எலும்பு முறிஞ்சிப்போச்சி. கோரிமேடு ஆஸ்பத்திரியில ஆறு மாசம்
கெடந்தன். வயசாயிடிச்சி. ஆப்பரேசன் செய்ய முடியாது. முடிஞ்சவரைக்கும் குச்ச
வச்சிக்கிட்டு கால ஜீவனத்த ஓட்டுங்கன்னு அனுப்பிட்டாங்க” லீலாவதி தலையைக்
கவிழ்த்துக்கொண்டாள். அழுகையில் அவளுக்கு உடம்பு குலுங்கியது.
பேச்சை மாற்றுவதற்காக “சார் என்னா செய்யுறீங்க?” என்று செல்வத்திடம் இளையராஜா கேட்டான்.
“அரசாங்க ஸ்கூல்ல க்ளர்க்கா இருக்கன்.”
“பரவாயில்ல. ஏம்மா, ஒங்க மகன் அரசாங்க வேலயில இருக்காரு. அனாதைன்னு சேக்கச் சொல்றீங்க?
இந்த மாதிரி எடத்துக்கெல்லாம் நீங்க வரக் கூடாது.”
“மனசு செத்துப் போச்சி.”
“என்னம்மா சொல்றீங்க?” ஆச்சரியத்துடன் கேட்டான் இளையராஜா.
“எப்படியாச்சும் என்னெ இங்க சேத்துக்குங்க. ஒங்களுக்கும் புண்ணியம் ஒங்களப் பெத்தவங்களுக்குப்
புண்ணியம்.” லீலாவதி அழுதாள். கையெடுத்துக் கும்பிட்டாள்.
“சேத்துக்கிறது பிரச்சன இல்லெ. ஒங்கள மாதிரி செல பேரு வீட்டுல சண்ட போட்டுக்கிட்டு
வருவாங்க. ஒரு வாரம் போனதும் கோவம் கொறஞ்சிடும். அப்பறம் வீட்டுக்குப் போவனும்ன்னு
அடம்புடிப்பாங்க. பதிமூணு வருசமா நான் பாக்காத கதயா. பேசாம வீட்டுக்குப் போங்க”
சிரித்துக்கொண்டே சொன்னான்.
“ரவரவ புள்ளைங்கெல்லாம் தூக்குல தொங்கி சாவுதுங்க. எளம் புள்ளைங்க எல்லாம் ரெண்டு மூணு
புள்ளைங்கள வுட்டுட்டு தீக்குளிச்சி சாவுதுங்க. மாமியா சண்ட போட்டா, புருசன் சண்ட
போட்டான்னு எம்மாம் பேரு செத்துப்போறாங்க? பரீட்சயில பெயில்ன்னுக்கூட புள்ளைங்க
செத்துப்போவுதுங்க. ரவரவ புள்ளைங்களுக்கு இருக்கிற மனசு எனக்கு இல்லெ. ஒலகத்த வெறுக்கத்
தெரியல. அந்த மனசு இல்லாததால எம்மாம் அசிங்கம்?”
“என்னம்மா சொல்றீங்க?” ஆச்சரியமாகக் கேட்டான் இளையராஜா.
“வாழப் புடிக்கல. சாகவும் முடியல.”
திடீரென்று நினைவுக்கு வந்த மாதிரி “எப்ப சாப்புட்டீங்க?” என்று கேட்டான். லீலாவதி பதில்
சொல்லவில்லை. செல்வம்தான் சொன்னான்.. “எட்டு நாளாச்சி.”
“ஐயோ கடவுளே” என்று பதறிப்போன இளையராஜா லீலாவதியிடம் “சாப்புடுறீங்களா?” என்று
கேட்டான். பிறகு யாரிடமும் என்றில்லாமல் பொதுவாக சொன்னான் “சோறுதான் உலகம். அது
இல்லன்னா எப்பிடி?”
“என்னெ சேத்துக்குங்க சாமி. சாப்பாடு வாண்டாம்.”
“நீங்க அனாதைன்னு சொன்னா ஒரு கேள்வியும் இல்லம்மா. ஒடனே சேத்துக்குவன். வீட்டுல சண்டயா?”
என்று நிதானமாகக் கேட்டான் இளையராஜா.
“அதெல்லாமில்ல.”
லீலாவதியின் முகம் கோணியதைப் பார்த்த இளையராஜா செல்வத்தின் பக்கம் திரும்பி “சொந்த
மகனா?” என்று கேட்டான்.
“ஆமாம்.’’
“எத்தன பேரு?”
“நான் ஒருத்தன்தான்.”
இளையராஜா சிறிதுநேரம் ஒன்றுமே பேசாமல் இருந்தான். சிறிதுநேரம் செல்வத்தையும்
லீலாவதியையும் ஆராய்வது மாதிரி பார்த்துக்கொண்டிருந்தான். ரொம்பவும் சலிப்பான குரலில்
“ஒங்கம்மா ரொம்ப மனக் கொழப்பத்தில இருக்காங்க. வீட்டுக்கு அழைச்சிக்கிட்டுப் போங்க. ஒரு
வாரம் ஆனா எல்லாம் சரியாப்போயிடும்” என்று சொன்னான்.
“வேண்டாம் சாமி.” என்று குரல்விட்டு அழுதுகொண்டே கையெடுத்துக் கும்பிட்டாள் லீலாவதி.
அதைப் பார்த்த செல்வத்துக்கு எழுந்து ஓடிவிட வேண்டும்போல இருந்தது. கோபத்தில் அவனையும்
அறியாமல் கத்தினான் – “கொஞ்ச நேரம் பேசாம இருக்கியா?”
“சாவப்போற கிழவிக்கு எதுக்கு வாய்?”
வெறுப்புடன் லீலாவதியைப் பார்த்தான் செல்வம். பல்லைக் கடித்தான். தலையில் அடித்துக்கொண்டான்.
வேகமாக சொன்னான் “அது இஷ்டப்படியே இருக்கட்டும் சார். மாசா மாசம் நீங்க சொல்ற பணத்த நான்
கொடுத்திடுறன்.”
“பணத்துக்காக இத நான் நடத்தல.” வெட்டிவிட்டான் இளையராஜா.
“பணத்துக்காக நடத்துறீங்கன்னு நான் சொல்லல சார்” என்று சொன்ன செல்வத்தின் குரல்
உடைந்துபோயிற்று. சிறிதுநேரம் பேசாமல் இருந்தான். என்ன தோன்றியதோ “நான் யார் பேச்ச
கேக்குறது? எங்கம்மா பேச்சக் கேட்டா ‘ஒங்கம்மா பேச்சயே கேளு’ன்னு எம் பொண்டாட்டி சொல்றா.
எம் பொண்டாட்டி பேச்சக் கேட்டா ‘ஒம் பொண்டாட்டி பேச்சயே கேளு’ன்னு எங்கம்மா சொல்லுது. ஒரு
வருசமாவே எங்கம்மாவுக்கும் எம் பொண்டாட்டிக்கும் இடையில என்னாமோ நடக்குது. அத என்னான்னு
என்னால கண்டுபிடிக்க முடியல. எனக்கு பைத்தியம் புடிச்சிடும்போல இருக்கு” என்று
சொல்லும்போதே அவனுக்கு கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. மூக்கை உறிஞ்சிக்கொண்டு சொன்னான்
“கருண அடிப்படயில வேலைக்கிப்போனதால ஒரு பயலும் மதிக்க மாட்டங்குறான். எல்லா வேலயும்
என் தலயிலயே கட்டிடுறானுவ. அறுபது பேரு வேல செய்யுற ஸ்கூலு. ஒரு நிமிசம் நிக்க
நேரமில்ல. சனி ஞாயிறுலயும் வேலதான். சம்பளம் போடுறது, சரண்டர் போடுறது, ஜி.பி.எஃப்.
போடுறது, சி.எல்.போடுறது, மெடிக்கல் லீவ் போடுறதுன்னு ஒரே வேல. வாத்தி்யாருங்க பாடம்
நடத்தறாங்களோ இல்லயோ எந்த பேங்குல என்னா லோனு தரான்னு தெரிஞ்சிகிட்டு விதவிதமா லோன்
போட்டுகிட்டே இருப்பாங்க. அதுக்கும் நாந்தான் தபால் எழுதணும். எல்லாத்துக்கும்மேல தெனம்
ஒரு புள்ளி விவரம் கேக்குறான் கவர்மண்டுல. எல்லாத்துக்கும் ஒரே க்ளர்க்கு என்னா பண்ணுவான்?
கம்ப்யூட்டர் டைப்பிங் தெரியாது. அதனால எல்லாத்துக்கும் வெளியவெளிய ஓடுறன். வேல
பாப்பனா? குடும்பச் சண்டயப் பாப்பனா சார்?” செல்வம் லேசாக அழுதான்.
சிறிதுநேரம் யாருமே பேசவில்லை. செல்வம் அழுதபோது லீலாவதியின் கண்களும் லேசாகக்
கலங்கியதைப் பார்த்தான் இளையராஜா. ஆனால் எதுவும் சொல்லாமல் உட்கார்ந்திருந்தான். அப்போது
ஐந்து ஆறு வயது உள்ள ஒரு பையன் “அண்ணா” என்று சொல்லிக் கத்திக்கொண்டே உள்ளே ஓடிவந்தான்.
உடனே அந்தப் பையனை தூக்கி மடியில் வைத்துக்கொண்டே இளையராஜா “என்னடா கண்ணா? ஒனக்கு
என்னா வேணும்? சொல்லு செல்லம்” என்று கேட்டு கொஞ்ச ஆரம்பித்தான். சிறிதுநேரம் கழித்து
பையனைத் தரையில் இறக்கிவிட்டு “ஓடு. போய் விளையாடு தங்கம்.” என்று சொல்லி பையனைத்
துரத்திவிட்டான். பிறகு அவனாகவே “பொறந்து பத்து மணி நேரம்தான் இருக்கும்.
ஆஸ்பத்திரிக்குப் பின்னால யாரோ போட்டுட்டுப் போயிட்டாங்க. நாந்தான் தூக்கியாந்து வளக்கிறன்.
இன்னிக்கு ஞாயித்துக் கிழமங்கிறதாலதான் எல்லாம் இங்க இருக்கு. மத்த நாளா இருந்தா
ஸ்கூலுக்குப் போயிருக்குங்க.”
“படிக்கவும் வைக்கிறீங்களா?”
“ஆமாம். ஆனா எல்லாத்தயும் அரசாங்க ஸ்கூல்லத்தான் படிக்க வச்சியிருக்கன். வேற
வழியில்லங்கிறது ஒண்ணு, தனியார்ப்பள்ளிக்கூடத்த ஊடகப்படுத்தக் கூடாதுங்குறது ஒண்ணு.”
சிரிக்க முயன்றான் இளையராஜா. ஆனால் சிரிப்பு வரவில்லை.
“ஆச்சர்யம் சார்.” செல்வமும் இளையராஜாவும் பேசிக்கொண்டதை கவனிக்காத லீலாவதி.
“கடவுளே” என்று சொன்னாள். “பெத்த புள்ளைய தெருவுல போட்டுட்டு போறதுக்கு என்னா மனசு?
கல்லு மனசுதான். வேணாங்கற புள்ளைய எதுக்கு பெக்கறாங்க? ஜனங்களுக்கு புத்தி
எப்புடியெல்லாம் போவுது. ஒலகத்தில பொட்டச்சின்னு, தாயின்னு யாரதான் சொல்லுறது?”
“ஏன் சார் மொட்டப் போட்டிருக்கு. ஹாலிலிருந்த புள்ளைங்களுக்கும் மொட்டப் போட்டிருந்துச்சி”
தயக்கத்துடன் கேட்டான் செல்வம்.
“தானா குளிக்க முடியாத புள்ளைங்களுக்கு மொட்டப் போட்டிடுவம். குளிக்க வைக்கிறது
சுலபம். அப்பறம் பேன் புடிக்காது. சளி புடிக்காது. முடி வெட்டுற தொல்லையும்
இருக்காது. இங்க இருக்கிற வயசானவங்கதான் இவுங்கள பாத்துக்கிறாங்க.” லேசாக சிரித்தான்
இளையராஜா. திடீரென்று நினைவுக்கு வந்த மாதிரி லீலாவதியிடம் சொல்லுங்கம்மா” என்று கேட்டான்.
“என்னெ இங்க இருக்க வுடுங்க. மொட்டப் போட்ட புள்ளைய பாத்ததும் மனசு செத்துப்போச்சி.
வீட்டுல இருந்தாலும் நான் தனியாத்தான் இருக்கணும். மவன், மருமவக்கூட இருந்தாலும் தனியா
ஆளில்லாத வீட்டுல இருக்கிற மாதிரிதான். யாரும் யார்கிட்டயும் பேசாத வீட்டுல எப்பிடி
இருக்கிறது? மனசு தீஞ்சிப்போச்சி. எம் புருசன் இருந்தா எதுக்கு இங்க வரப்போறன்? சண்டாளன்
எதுக்குத்தான் தூக்குப்போட்டுக்கிட்டு செத்தானோ?” லீலாவதி அழுதாள்.
“ஒடம்புக்கு முடியாம சாகலியா?”
“இல்லெ.”
“பின்னெ எப்பிடி செத்தாரு?”
செல்வம் பேசவில்லை. லீலாவதியும் பேசவில்லை. இருவருமே தலையைக் கவிழ்த்துக்கொண்டு
உட்கார்ந்திருந்தனர்.
“பெரிய நோவு வந்து, வலி தாங்காம முடியாம தூக்கில தொங்கிட்டாரா?”
செல்வம் வாய் அடைத்துப்போய் உட்கார்ந்திருந்தான்.
“சொல்ல வேணாமின்னா விடுங்க. இப்ப ஒரு ஆளு உசுரோட இல்ல. அவ்வளவுதான்.” சலிப்புடன்
சொன்னான் இளையராஜா.
“என்னெ சேத்துக்கிறதா இருந்தா சொல்றன்.”
“என்னம்மா கண்டிசன் எல்லாம் போடுற?” என்று கேட்ட இளையராஜா வாய்விட்டு சிரித்தான்.
“சேத்துக்கிறன். சொல்லுங்க” மீண்டும் சிரித்தான்.
செல்வத்தைப் பார்த்தாள். அவன் அறையில் தொங்க விடப்பட்டிருந்த போட்டோக்களைப்
பார்த்துக்கொண்டிருந்தான்.
“எங்க வீட்டுக்காரரு அரசாங்கப் பள்ளிக்கூடத்தில ஓ.ஏ.வா.இருந்தாரு. எங்க பையன நல்லாத்தான்
படிக்க வச்சாரு. என்னா தல எழுத்தோ இவன் மண்டயில படிப்பு ஏறல. காலேஜ் போயி படிச்சதோட
நின்னுட்டான். வருசம் பூராவும் பரீட்ச பரீட்சயா எழுதினான். ஒண்ணுத்திலயும் பாசாவல.
சொத்துப் பத்து ஒண்ணும் இல்லெ. வீடும் இல்லெ. வேல ஒண்ணுதான். அத வச்சித்தான் சோறு. காட்டுல
கெடந்த நம்பளே அரசாங்க வேலைக்கி வந்துட்டம். டவுனுலியே இருந்த நம்ப புள்ளை இப்பிடி
இருக்குதே, வயசும் ஏறிக்கிட்டே போவுதேன்னு அந்த ஆளுக்கு மனசுல கவல. பையனுக்கு கல்யாண
வயசும் தாண்டிப் போச்சின்னு இன்னொரு கவல. மனசுல என்னா எண்ணம் வந்துச்சோ. ரிட்டயர்
ஆவறதுக்கு மின்னால தூக்குலத் தொங்கிட்டாரு.” வாயில் துணியை வைத்து அடைத்தும்
லீலாவதிக்கு அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. வாயை அடைக்க முடிந்தது. அவளால்
கண்ணீரை அடக்க முடியவில்லை. உடம்பு நடுங்கியது. தலையைக் கவிழ்த்துக்கொண்டாள். சிறிது
நேரம் கழித்து இளையராஜா கேட்டான் “சாவும்போது அவருக்கு வயசு என்னா?”
“அம்பத்தி ஒம்பதர.”
“எல்லாருக்கும் அம்பத்தி எட்டுலதான ரிட்டயர்மண்டு?”
“ஓ.ஏ., வாட்ச்மேனுக்கெல்லாம் அறுவது.” செல்வம் சொன்னான்.
“அப்பிடியா? எனக்குத் தெரியாது. கவர்மண்டு வேலயில இருந்த மனுசன் எதுக்கு தூக்குல
தொங்குனாரு?”
செல்வம் பதில் சொல்லவில்லை.
“தம் மவனுக்கு அரசாங்க வேல கெடைக்கணுமின்னு தூக்கில தொங்கிட்டாரு.”
“என்னம்மா சொல்ற?” இளையராஜா வாய் அடைத்துப் போய்விட்டான்.
“வேலயில இருக்கும்போது செத்தா தம் புள்ளைக்கி கருண அடிப்படயில வாரிசு வேல
கெடைக்கட்டும்ன்னுதான் தொங்கிட்டாரு.” லீலாவதி இப்போது அழவில்லை. அவளுடைய கண்கள் கலங்கவில்லை.
“புதுசாவும் இருக்கு. அதிசயமாவும் இருக்கு. ஒலகத்தில பெத்தப் புள்ளையை ரோட்டுல
போட்டுட்டுப்போறாங்க. தூக்கில தொங்கி செத்துப்போறாங்க. எத நம்பறது? அரசாங்கம் தொட்டில்
குழந்தை திட்டம்ன்னு தொடங்கி நடத்துற அளவுக்கு தெனம் ஒன்னுரெண்டு புள்ளைய ரோட்டுல, குப்ப
தொட்டியிலன்னு போட்டுட்டு போறாங்க. அதே மாதிரி வயசானவங்க தெனம் ஒருத்தராவது
ரோட்டுக்கு வந்துடுறாங்க.” என்று சொன்ன இளையராஜா “வேல கெடச்சிதா?” என்று கேட்டான்.
லீலாவதி பதில் சொல்லவில்லை.
“மூணு வருசம் கழிச்சி கெடச்சிது.” வேண்டா வெறுப்பாக செல்வம் சொன்னான்.
“பரவாயில்ல.”
“மூணு வருசம் அலயாத அலச்சல் இல்ல. நடக்காத நட இல்லெ. ஏறி இறங்காத ஆபீஸ் இல்ல. பணமும்
செலவாச்சி.” செல்வம் சலித்துக்கொண்டான்.
“சரி. இதுக்காகத்தான் செத்தாருன்னு தெரிஞ்சா வேலய கொடுத்திருக்க மாட்டாங்களே?”
“சீட்டு கெடச்சதுமே அடுப்புல போட்டுட்டன். இன்னிக்கித்தான் அதெப் பத்தி முதமுதலா வாயத்
தொறக்கிறன் எட்டு வருசம் கழிச்சி.” லீலாவதி அழுதாள்.
“சீட்டுல என்னதான் எழுதியிருந்தாரு?”
“அறுவது வயசு கிழவன் நானு. இனிமே உசுரோட இருந்து என்னா செய்யப்போறன்? நான் செத்தா
எம் புள்ளைக்கி கருண அடிப்படயில வாரிசு வேலயாவது கெடைக்கும். அத வச்சி அவனுக்கு
ஒருத்தன் பொண்ணு தருவான். இதென்ன அந்தக்காலமா? ஆள நம்பி பொண்ணு தர? வேலய நம்பி, பணத்த
நம்பி பொண்ணு தர காலமா இருக்கு. அவன் ஒருத்தனுக்காகத்தான் உசுர வச்சியிருந்தன்.
அவனுக்காகவே போவட்டும். எம் மனசுல கொற ஒண்ணும் இல்லெ. எப்பிடியாவது அலஞ்சி திரிஞ்சி
எம் புள்ளைக்கு ஒரு வேலய வாங்கு. ஒரு பொண்ணப் பாத்து முடிச்சி வை. நான் செத்த விசயம்
யாருக்கும் தெரியக் கூடாது’ன்னு எழுதியிருந்தாரு.”
லீலாவதி அழுகையை அடக்கிக்கொண்டு உட்காந்திருந்தாள். அதுவரை அமைதியாக இருந்த செல்வம்
கோபம் வந்த மாதிரி “எம் புருசன் செத்ததாலதான் ஒனக்கு வேல வந்துச்சின்னு தெனம்தெனம்
சொல்லிக்காட்டுனா மனுசன் எப்பிடி சார் உசுரோட இருக்க முடியும்?” என்று சொன்னான்.
அவனுக்கு கண்கள் கலங்கிவிட்டன.
“நீயும் ஒம் பொண்டாட்டியும் சும்மா இருக்கும்போது நானாவா வந்து அந்த பேச்ச எடுக்கிறன்?”
எரித்து விடுவது மாதிரி செல்வத்தைப் பார்த்தாள் லீலாவதி.
“நான்தான் ஒன்னோட மவன். நீ சொல்றத பொறுத்துக்குவன். என்ன இருந்தாலும் எம் பொண்டாட்டி
வேத்தாளுதான? அவ எப்பிடி ஒம் பேச்ச பொறுத்துக்குவா?”
“அப்பிடியா?” என்று ஒரு தினுசாகக் கேட்ட லீலாவதிக்கு கோபம் வந்துவிட்டது. “எம்
புருசனோட ஒழைப்ப அவளும்தான திங்குறா? அத நெனச்சிப் பாக்க வாண்டாமா? அம்மாவாச விரதம்
இருந்து இருக்கீங்களா? மாசி மகத்தில அந்தாளு பேருல ஒரு பாப்பான்கிட்ட ஒரு படி
பச்சரிசியும் ஒரு வாழக்காயும், ஒரு புடி அவித்திக் கீரையும் ஒரு தடவயாவது
கொடுத்திருக்கீங்களா? எல்லாத்துக்கும் நான்தான் போவணுமா? இதெ நான் கேட்டா, சண்டக்காரி.
மருமவள வாழவிடாதவ? அப்பிடித்தான? புருசன் பொண்டாட்டி சிரிச்சி பேசிக்கிட்டிருந்தா
எங்கம்மாவுக்கு புடிக்காதுன்னு நீயே சொல்லுவ”
“கத்தாதம்மா. ஒனக்கு விசயம் புரியல. ஒலகத்தில இருக்கிற எல்லா அப்பா அம்மாவும் தான்
பெத்த புள்ளைங்களுக்காகத்தான் உசுரு வாழுறாங்க. சம்பாதிக்கிறாங்க. ஆனா நீங்க ரெண்டு பேரு
மட்டும்தான் அதிசயமா எனக்காக வாழ்ந்த மாதிரியும், வளத்த மாதிரியும் பேசுறீங்க.”
லீலாவதிக்கு எங்கிருந்துதான் அவ்வளவு கோபம் வந்ததோ. “நானும் எம் புருசனும்
அதிசயமில்லதான். நீயும் ஒம் பொண்டாட்டியும்தான் அதிசயம். ஒன் மாமியா வீட்டு சனங்களும்
அதிசயம்தான்.”
“எதுக்கும்மா கத்துற?”
“நான் கத்தல. இனி நான் ஒன்னோட வீட்டுக்கு வல்லெ. என்ன உட்டுடு. ஆனா ஒண்ணு, ஒம்
பொண்டாட்டிய மட்டும் பத்தரமா வச்சிக்க. மானம் போனா உசுரோட இருக்கக் கூடாது.”
“நீ என்னா சொல்ற?” என்று செல்வம் திரும்பத்திரும்பக் கேட்டான்.
வேறு வழியின்றி சமாளிப்பதற்காக லீலாவதி சொன்னாள் “மனபேதலிப்புல ஏதோ சொல்லிட்டன். வாய்
தவறிடிச்சி. விடு பேச்ச.”
செல்வத்தின் முகம் தொங்கிப் போனதைப் பார்த்த லீலாவதி பேச்சை மாற்ற நினைத்தாள். “ஒம்
புள்ளைக்கி ஒடம்பு சரியில்லன்னா எப்பிடி தூக்கிக்கிட்டு ஓடுறீங்க? நான் எத்தன நாளு படுத்த
இடத்தவுட்டு எழுந்திருக்காம கெடந்தாலும் ‘என்னா ஏது’ன்னு கேக்குறீங்களா?”
“நான் ஒன்ன பாக்கலியா?” பரிதாபமாகக் கேட்டான் செல்வம்.
“நல்லா பாத்த.” வெடுக்கென்று முகத்தைத் திருப்பிக்கொண்டாள் லீலாவதி. “ஆறு மாசமா ஒரு
கைக் குச்சி வாங்கித்தான்னு கேட்டன். இன்னம் வந்து சேரல. நீ எப்பிடி பாத்தன்னு எனக்கு
தெரியாதா?” என்று சொல்லி முணகினாள்.
லீலாவதி மீது ஏற்பட்ட கோபத்தைக் காட்டாமல் இருப்பதற்காக இளையராஜாவிடம் கேட்டான் செல்வம்:
“பணம் கொடுக்கிறவங்களுக்கு ஸ்பெஷலா ஏதாச்சும் உண்டா சார்?”
“இல்லெ. இங்க அப்படி செய்யுறதில்ல. வயசானவங்க அறுபத்தி எட்டுப் பேரு இருக்காங்க. அதுல
நாலு பேரால சுத்தமா நடக்க முடியாது. பொறந்த குழந்தையிலிருந்து பதினாறு வயசு
புள்ளைங்க வரைக்கு மொத்தம் எழுபத்தி ஆறு பேரு இருக்காங்க. யாருக்கும் எந்த வித்தியாசமும்
இல்லெ. பென்ஷன் வாங்குறவங்க ஆறு பேரு இருக்காங்க. அவங்களுக்கும் ஒரே விதமான
நடைமுறைதான். காலயில இட்லி. மத்தியானம் சாப்பாடு, சாம்பாரு. ராத்திரிக்கு இட்லி,
தோசன்னு ஏதாச்சும் ஒண்ணு இருக்கும். அசைவம் எப்போதுமே கெடையாது.”
“பென்சன் வாங்குறவங்க ஏதாச்சும் உங்களுக்கு கொடுப்பாங்களா சார்?” ஆர்வத்துடன் கேட்டான்.
“நானா கேக்க மாட்டன். அவங்களா கொடுத்தா வேணாமின்னு சொல்றதில்ல. கொடுத்தாலும் நாநூறு
ஐநூறுதான் குடுப்பாங்க” என்று சொன்ன இளையராஜா லேசாகச் சிரித்தான். அப்போதுதான்
நினைவுக்கு வந்த மாதிரி சொன்னான் “நீங்க ஒங்கம்மாவுக்காக மட்டும்தான் பணம் தரணுமின்னு
இல்ல. மத்தவங்களுக்கும் ஒதவலாம். ஒதவுறதுக்கு தெரிஞ்சவங்களா இருக்கணுமின்னு அவசியமில்ல.
நீங்க பணமா தரலாம். பொருளா தரலாம். அரிசி, பருப்பு, மளிக சாமான், வேட்டி, துண்டு,
பொடவ, போர்வ, சோப்புக்கூட வாங்கித் தரலாம். எத கொடுத்தாலும் வாங்கிக்குவன். பதிமூணு
வருசமா இத நடத்திக்கிட்டு படாதபாடு படுறன். இத ஒரு வியாபாரமா, தொழிலா மாத்த நான்
விரும்பல.”
“நிச்சயமா என்னால முடிஞ்சத செய்றன் சார்.” செல்வம் உற்சாகத்துடன் சொன்னான். ரொம்ப
நேரத்திற்கு பிறகு அப்போதுதான் அவனுடைய முகம் லேசாக தெளிவடைந்த மாதிரி இருந்தது.
என்ன தோன்றியதோ “அனாத இல்லம் நடத்துறதுக்கும் ஒரு மனசு வேணும் சார்.”
“ஆரம்பிக்கும்போது கூர கொட்டாயிலதான் ஆரம்பிச்சன். அப்ப மூணு பேர்தான் இருந்தாங்க. சொந்த
எடம். சொந்த வீடு. அதனால பிரச்சின இல்லாம போவுது. இதுக்கு பின்னால ரெண்டு கட்டடம்
இருக்கு. எல்லாத்திலியும் ஆள் இருக்கு.” விரக்தியாக சிரித்தான் இளையராஜா.
“அப்பிடியா?”
“வீட்டுல, ஊருல பொழைக்கத் தெரியாதவன்னு சொல்லி திட்டுறாங்க. ஏதோ மனசுல பட்டுச்சி.
ஆர்வத்தில ஆரம்பிச்சன். இப்ப படாத பாடு. இத ஆரம்பிக்கும்போது எனக்கு இருபத்தி அஞ்சி
வயசு. கொஞ்சம் வயல் இருக்கு. அதுல வர்ற நெல்ல வச்சித்தான் இந்த வண்டி ஓடுது. எப்பிடியோ
பதிமூணு வருசம் ஓட்டிட்டன். நெனச்சா ஆச்சிரியமா இருக்கு.” சிறிது நேரம் ஒன்றும்
பேசாமல் இருந்த இளையரஜா மிகுந்த சலிப்புடன் சொன்னான் “எப்பயாச்சும் ஒருத்தர் ரெண்டு பேர்
வந்து ஆயிரம் ஐநூறுன்னு தருவாங்க. இல்லன்னா ஒரு வேள சாப்பாட்டுக்கான செலவ
ஏத்துக்குவாங்க. அதுகூட அப்பா அம்மா மேல நெனவு உள்ளவங்க. அதிகமா பொறந்த நாளுக்குத்தான்
பிஸ்கட்டு, பழம் வாங்கியாந்து கொடுப்பாங்க. இப்ப பொறந்த நாளு, கல்யாண நாளு
கொண்டாடுறவங்க அதிகமாகி இருக்காங்க. தமிழ்நாட்டுல புது வியாதி பரவி இருக்கு.
ஆனாலும் எனக்கு சந்தோசம்தான்.” இளையராஜா சிரித்தான்.
“உண்மதான் சார்.”
“அப்பா அம்மாவ ரோட்டுல வுடுறவங்களும், பெத்தப் புள்ளைய பொறந்ததுமே ரோட்டுல போட்டுட்டுப்
போறவங்களும் இருக்காங்க. ஒலகம்ன்னு இருந்தா அதிசயம் இருக்கத்தான செய்யும்?”
செல்வம் பேசவில்லை. அவனுடைய முகம் செத்துப்போயிற்று. முகத்தைத் தொங்கப்போட்டுக்கொண்டான்.
“அனாதப் புள்ளை ஒண்ணு இப்ப வந்துச்சே. அத நான் பாக்கட்டுமா?” லீலாவதி கேட்டாள்.
“கூப்புடுறன்.” என்று சொன்ன இளையராஜா “நீங்க கவர்மண்டு வேலயில இருக்கீங்க. நல்ல சம்பளம்
வரும். ஒங்கம்மாவுக்கும் பென்சன் வருது. சோத்துக்கு வழி இல்லாதவங்க செய்யுற வேலய நீங்களும்
செய்யாதீங்க. நான் சோறு போடுறதுக்காக சொல்லல. ஒங்களுக்கு செல்வம்ன்னு பேரு
வச்சிருக்காங்க. அவங்களுக்கு நீங்கதான் செல்வம். இது பேருக்காக மட்டும் வச்சதில்ல. நல்ல
பேரு.” என்று சொன்ன இளையராஜா செல்வத்தையே கூர்ந்துப் பார்த்தான். பிறகு நிதானமாக
சொன்னான் “இப்ப புது பேசன் ஒண்ணு நம்ம நாட்டுல உருவாக்கிகிட்டு வருது. கல்யாணத்துக்கு,
விசேசத்துக்கு, கோவிலுக்குப் போவும்போது வீட்டுல வயசானவங்க, ஒடம்புக்கு முடியாதவங்க
இருந்தா அவுங்கள கொண்டுபோயி ஆஸ்பத்திரியில விட்டுட்டுப் போறது. இப்ப இந்தத் தொழில் நல்லா
வளந்துக்கிட்டு வருது. மெடிக்கல் டூருன்னு வெளிநாட்டுக்காரங்க இந்தியாவுக்கு அதிகமா வர
ஆரம்பிச்சிட்டாங்க. ஆறு மாசம் வரை தங்கறாங்க. மத்த நாட்ட ஒப்பிடும்போது நம்ம நாட்டுல
செலவு ரொம்ப சீப். பெரியவங்கள வீட்டுல வச்சிக்க முடியாமதான் இந்தக்காரியங்கள செய்யுறாங்க.
சில பேரு பணத் திமிர்லயும் செய்யுறாங்க. நாட்டுல பணப்புழக்கம் அதிகமாயி இருக்கு. அதே
மாதிரி முதியோர் இல்லமும் அதிகமாயி இருக்கு.”
செல்வத்துக்கு ஒரு மாதிரியாக இருந்தது. அதே நேரத்தில் கோபமும் வந்தது. “இது என்னோட
ஆச இல்லெ சார். எங்கம்மாவோட ஆச. அதோட புடிவாதம். வேற வழியில்ல கூட வந்தன். அதோட
ஆசக்கி ஒரு வாரம் பத்து நாள் இருக்கட்டும். மனசு மாறிட்டா கூப்புட்டுக்கிட்டுப்போயிடுறன்.”
கடகடவென்று இளையராஜா சிரித்தான். “சொந்தக்காரங்க வீட்டுக்கு அனுப்புறீங்களா? கோயில்
குளத்துக்கு அனுப்புறீங்களா? ஒரு வாரம் போயிட்டு வரட்டும்ன்னு சொல்றதுக்கு. இது அனாத
இல்லம் சார்.” கடுமையான குரலில் சொன்னான் இளையராஜா.
செல்வம் மறு பேச்சு பேசவில்லை. கையைக்கட்டிக்கொண்டு ஊமை மாதிரி உட்கார்ந்திருந்தான்.
இளையராஜாவின் பேச்சு லீலாவதிக்கு திகிலை உண்டாக்கியது. தன்னை சேர்த்துக்கொள்ளாவிட்டால்
என்ன செய்வது? வீம்பு பிடித்துக்கொண்டு, சண்டை பிடித்துக்கொண்டு விட்டைவிட்டு வெளியே வந்த
பிறகு மீண்டும் அந்த வீட்டிற்குள் எப்படி போவது? மீறிப் போனால் கலாமணி என்ன சொல்வாள்?
அவளுடையப் பேச்சும், செய்கையும் தூக்கில் தொங்கி சாக செய்வதுபோல் இருக்கும். அதைவிட
பெரிய கொடுமை அவளுடைய நடத்தையைப் பொறுத்துக்கொண்டு இருப்பது. அவள் அடிக்கடி
வீட்டைவிட்டு வெளியே போய்விடுவதையும், வீட்டில் இருக்கிற நேரத்தில் யாரிடமோ ஓயாமல்
சிரித்துசிரித்து போன் பேசிக்கொண்டிருப்பதையும் எப்படி பார்த்துக்கொண்டிருக்க முடியும்?
சொன்னால் சண்டை நடக்கும். அடிதடியாகும். புருசன் வேண்டாம் என்று சொல்லிவிட்டு
ஓடிவிட்டால்? செல்வம் என்ன ஆவான்? பிள்ளைகள் என்ன ஆகும்? யோசிக்கயோசிக்க பைத்தியம்
பிடித்துவிடும் போலிருந்தது. திகிலாக இருந்தது. எது நடந்தாலும் நடக்கட்டும். எதற்கும்
தான் ஒரு சாட்சியாக இருக்க வேண்டாம் என்று நினைத்த லீலாவதி கெஞ்சுவது மாதிரி சொன்னாள்
“எனக்கு மாசம் ரெண்டாயிரம் வருது. பூராத்தயும் அப்பிடியே கொடுத்திடுறன். முகம்
சுளிக்காம ஒரு வாய் பச்சத் தண்ணி கொடுத்தா போதும். இந்த வயசில பணத்த நான் என்னா
செய்யப்போறன்? இங்க இருக்கிற புள்ளைங்களுக்கு மொட்டப் போடுறதுக்காவது என் புருசன் பணம்
செலவு ஆவட்டும். நான் இங்கியே இருந்துக்கிறன். புள்ளைங்களப் பாத்துக்கிறன். ஒரு ஆயா
அம்மாவா என்ன வச்சிக்குங்க. புள்ளைங்ககூட இருந்தா பொழுது போறது தெரியாது. இந்த
மாதிரி புள்ளைங்களுக்கு ஒதவுனா புண்ணியம் கெடைக்கும். கடசி காலத்தில ஏதாச்சும் செஞ்சி
நல்ல மோட்சத்துக்குப் போறன். அதுக்காச்சும் என்னெ வச்சிக்குங்க.” அழுதாள். கையெடுத்துக்
கும்பிட்டாள்.
இளையராஜாவுக்கு என்ன தோன்றியதோ கூர்ந்து அவளையேப் பார்த்தான். பிறகு
சமாதானப்படுத்துவது மாதிரி சொன்னான் “அழுவாதீங்க.”
“எனக்கு பணம் வாண்டாம். காசு வாண்டாம். யார்க்கிட்டயாவது பேசணும். சிரிக்கணும்.
அழுவணும். அதுதான் எனக்கு வேணும். அதுதான் எனக்கு பணம். தங்கம். சோறு. சாமி.”
கையெடுத்துக் கும்பிட்டாள்.
“பெத்த புள்ளை உசுரோட இருக்கும்போது நீங்க இப்பிடி பேசறதும் தப்பு. நான் சேக்குறதும்
தப்பு. கோவத்தில, ஆத்திரத்தில பேசுற பேச்சு. உண்ம இல்லெ.”
“தாலி கட்டுன புருசன்னு ஒருத்தன் இருந்தா நான் எதுக்கு இங்க வரப்போறன்? நூறு புள்ளை
இருந்தாலும் புருசன் மாதிரி வருமா?” வேகமாகக் கேட்டாள் லீலாவதி.
“சும்மா இரும்மா. ஒலகத்தில இல்லாத புருசன் மாதிரி திரும்பத்திரும்ப அதையே
சொல்லிக்கிட்டு இருக்கிற.” கத்தினான் செல்வம். அவனை முறைப்பது மாதிரி பார்த்த லீலாவதி
வேகமாகக் கத்தினாள் “ஒலகத்தில இல்லாத புருசன் இல்லெதான். ஆனா ஒலகத்தில இல்லாத அப்பன்டா
ஒனக்கு. அறுவது வயசுக்கும்மேல இருந்து என்னா செய்யப்போறம்? நம்ப புள்ளையாச்சும் வேல,
பொண்டாட்டி, புள்ளைன்னு இருக்கட்டும்ன்னு தூக்குல தொங்கி செத்த அப்பன் ஒலகத்தில யாருடா?”
லீலாவதிக்கு அழுகை வந்துவிட்டது. அழுதுகொண்டே சொன்னாள் “ஒலகத்திலேயே நீதான் நல்ல
புருசன். ஒம் பொண்டாட்டிதான் – நல்ல பொண்டாட்டி. அப்பிடித்தான் இருக்கட்டும். நல்லா இருங்க.
நீங்க நல்லா இருக்கிறத நானா தடுக்கப் போறன்? நீயும், ஒன் குடும்பமும்
கெட்டுப்போயிடும்ன்னுதான் நான் ராவும் பகலும் அழுவுறன். அதனாலதாண்டா நான் வீட்டவுட்டு
வந்தன். பெத்த புள்ள சாவட்டும்ன்னு நெனைக்கிறவளாடா நானு?” லீலாவதியின் அழுகை நிற்கவில்லை.
“நீ எதையோ இக்கு வச்சி பேசுற. அத ஒடச்சி சொல்லு. எனக்குப் புரிய மாட்டங்குது.”
“ஒனக்கு ஒண்ணும் புரிய வாணாம். தெரிய வாணாம். என்னெ இங்கியே விட்டுட்டுப் போ. இந்த ஒரு
உவகாரத்த மட்டும் நீ செஞ்சா போதும், ஒன்னெ பெத்ததுக்கு.” கத்தினாள்.
“கத்திகத்தியே மத்தவங்க வாய அடச்சிப்புடு.”
“ஆமாம் நான் கத்துறன். புத்திக் கெட்டுப்போயி. ஊருல இருக்கிற புள்ளைங்க மாதிரிதான நீயும்
படிச்ச? பரீட்ச எழுதின? ஏன் எதிலயும் நீ பாசாவல? அப்பிடி நீ பாசாயி ஒரு வேலைக்கி
போயிருந்தா ஒங்கப்பன் எதுக்கு சாவப்போறான்? இந்த வேல இல்லன்னா ஒம் பொண்டாட்டி ஒனக்கு
கழுத்த நீட்டியிருப்பாளா? அந்த சோத்துக்கு இல்லாத நாயிவோதான் ஒனக்கு பொண்ணக்
கொடுத்திருக்குமா?”
“எங்க வந்து என்னா பேசிக்கிட்டு இருக்கிற?” செல்வம் பல்லைக் கடித்தான்.
“சனங்களால ஏன் ஒண்ணா இருக்க முடியலங்கிறதுதான் எனக்குப் புரியல. நாய்கூட இருக்காங்க.
பூன, ஆடு, மாடுகூட இருக்காங்க. ஆனா மனுசன்கூட இருக்க முடியல. விநோதமா இருக்கு”
என்று சொல்லி சிரித்த இளையராஜா “கடசியா ஒங்க முடிவுதான் என்ன?” என்று கேட்டான்.
“நான் இங்கியே இருந்துக்கிறன். அதுக்குண்டான காச கொடுத்திடுறன்.” லீலாவதி வெட்டிப் பேசினாள்.
“நீங்க என்னா சொல்றீங்க?”
“ஒருத்தராச்சும் சந்தோசமா இருக்கணும் சார்.”
“புரியல.”
“மூணு வருசமா எங்கம்மாவுக்கும் எம் பொண்டாட்டிக்கும் சண்ட வரும். ஒடனே போயிடும். ஆனா
இப்ப ஆறு மாசமா சண்ட நிக்கல. ரெண்டு பேருக்கும் இடையில என்னமோ இருக்கு. இதுக்கே
எங்கம்மா பாத்து முடிவு பண்ணின பொண்ணுதான் எம் பொண்டாட்டி.”
“ஆமாம். ஆமாம். நல்லப் பொண்ணுதான். தங்கம்ன்னு பேரூ வைக்கல. அது ஒண்ணுதான் கொற.” லீலாவதி
வாயைக் கோணிக்காட்டினாள். முகத்தையும் திருப்பிக்கொண்டாள்.
“நீங்க ரெண்டு பேரும் போட்டுக்கிற சண்டயில யாரு சாவுறது?” வேகமாகக் கேட்டான் செல்வம்.
அப்போது பத்து வயதுள்ள ஒரு பெண் உள்ளே வந்தது.
“என்னம்மா?” என்று இளையராஜா கேட்டான்.
“மத்தியானம் சாப்புடுறதுக்கு தண்ணி இல்லியாம். சமையல்கார அக்கா சொல்ல சொன்னாங்க.”
“சுத்தமா இல்லியா?”
“இல்லெ.”
“கரண்டு இன்னம் வல்லியா?”
“இல்லெ.”
“கரண்டு இருக்கும்போதே மோட்டார போட்டு தண்ணி பிடிச்சி வச்சிக்குங்கன்னு எத்தன முற
சொல்றன். கேட்டாதான? இப்பத்தான் ஒரு நாளக்கி எட்டு மணி நேரம் கரண்ட நிறுத்துறாங்க. என்னா
கவர்மண்டோ?” என்று சலித்துக்கொண்ட இளையராஜா “நீ போ. இந்தா வரன். பசங்கள பின்னாடி போயி
வௌயாட சொல்லு. ஒரே சத்தமா இருக்கு” என்று சொல்லி அந்தப் பிள்ளையை அனுப்பிவிட்டு
“முடிவ சொல்லுங்க. என்ன செய்யலாம்?” என்று அலுப்புடன் கேட்டான்.
“என்னால தெனம்தெனம் சாவ முடியாது சார்.”
“முடிவ சொல்லுங்க.”
“எல்லாருக்கும் கஷ்டமா இருக்கு சார். பண கஷ்டத்தத் தாங்கிக்கலாம்.”
“எல்லாருக்கும்ன்னா?”
“எங்கம்மா அமைதியா இருக்கணும். எனக்கு எவ்வளவோ செஞ்சிருக்கு. அது கஷ்டப்படுறத என்னால
பாக்க முடியல. ஒரு வாரமா சாப்புடாம கெடக்கு. பணம் எவ்வளவு செலவானாலும் அது
அமைதியா இருந்தா போதும் சார். பணத்த நான் கட்டிடுறன்.” செல்வம் வேகவேகமாக சொன்னான்.
“முடிவுக்கு நீங்க ஏற்கனவே வந்திட்ட மாதிரி தெரியுது” என்று சொல்லி சிரித்தான்
இளையராஜா. பிறகு “நான் இத பணத்துக்காக நடத்தல. புரிஞ்சிக்குங்க. பணம்
சம்பாதிக்கணும்ன்னு நான் நெனச்சி இருந்தா வியாபாரம் செய்யலாம். துணி கட, இட்லி கட
நடத்தலாம். அரசியலுக்குப் போவலாம். எங்கப்பாவே முன்னாள் எம்.எல்.ஏ.தான். செத்துப்
போயிட்டாரு. எதுவும் வாணமின்னுதான் இதெ நடத்துறன். புரியுதா? மகன்னு நீங்க ஒரு ஆளு
வல்லன்னா ஒரு கேள்வியும் கெடையாது. ஒடனே சேத்திருப்பன். அந்த மாதிரி பொய்ச்சொல்லி
சேந்தவங்களும் அஞ்சாறு பேரு இங்க இருக்காங்க.”
“சாரி சார். ஒங்கள கஷ்டப்படுத்துறதுக்காக நான் அப்பிடி சொல்லல. நான் பக்கத்தில
திருமுட்டத்திலதான் வேல செய்யுறன். குடி இருக்கன். வெளி நாட்டுல இல்லெ. நெனச்சா ரெண்டு
மணிநேரத்தில வந்திடலாம். வாராவாரம் வந்து பாத்திட்டுப் போறன். இல்லெ தெனம்கூட வந்து
பாத்திட்டுப் போறன். பெத்தத் தாயப் பாக்காம எப்பிடி சார் இருக்க முடியும்? பெத்தத் தாயி
சார்.” செல்வம் அழுதான்.
“அமைதியா இருங்க” என்று இளையராஜா சொன்னதைக் காதில் வாங்காத செல்வம் “மாசாமாசம்
எவ்வளவு நான் தரணும்ன்னு மட்டும் சொல்லுங்க சார். கொடுத்திடுறன்.” என்று வேகமாக சொன்னான்.
“ஒங்க விருப்பம். கணக்கில்ல. கொடுக்கலாம். கொடுக்காட்டியும் இருக்கலாம். எதுவும் கட்டாயம்
இல்லெ. ஒங்கள மாதிரியான ஆளுங்க பணம் கொடுத்தா பெரிய ஒதவியாத்தான் இருக்கும். கரண்டு
பில் கட்ட ஒதவும்.” சிரித்தான் இளையராஜா.
மீண்டும் ஏதாவது குழப்பம் வந்துவிடுமே என்று பயந்த லீலாவதி “எனக்கு ரெண்டாயிரம் வருது.
அத நான் கொடுத்துக்கிறன். நீ ஒரு சல்லிக் காசுகூட தரக் கூடாது. மீறிக் கொடுத்தா நான்
அன்னிக்கே செத்திடுவன்.” வேகமாக சொல்லிவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
லீலாவதியை சீறுகிற பாம்பு மாதிரி பார்த்தான் செல்வம். ஆனால் அவள் அவனைப் பார்க்கவில்லை.
செல்வத்தையும் லீலாவதியையும் மாறிமாறிப் பார்த்த இளையராஜா. “ஒரு நிமிசம் வெளிய
இருங்க” என்று செல்வத்திடம் சொன்னான். ஏன் என்பது மாதிரி பார்த்தாலும் ஒன்றும் சொல்லாமல்
வெளியே போனான் செல்வம்.
லீலாவதியையே கூர்ந்துப் பார்த்த இளையராஜா கைப்பிள்ளைக்கு சொல்வது மாதிரி சொன்னான் “நீங்க
அனாத இல்லெ. மாசம் ரெண்டாயிரம் பென்சன் வருது. அத வச்சி சாப்புட்டுக்கிட்டு வீட்டிலேயே
அமைதியா இருக்கலாம். அதுதான் உங்களுக்கு நல்லது.”
“நான் சண்டபண்ற ஆளில்ல. ஊர் வம்பு பேசுற ஆளில்ல. என்னால ஒரு தொந்தரவும் வராது.
உட்கார்ந்த எடத்தவுட்டு எட்டப் போவ மாட்டன். சொல்ற வேலய செய்வன்.”
“நீங்க சொல்றதெல்லாம் சரி.” என்று சொன்ன இளையராஜா சிறிது நேரம் பேசாமல் இருந்தான்.
பிறகு சொன்னான் – “நீங்க ஏதோ பெரிய மனக்கஷ்டத்தில இருக்கீங்கன்னு தெரியுது. யாரால
பிரச்சன? எதனால பிரச்சனன்னு தெரியல. எதனால வீட்டவிட்டு வந்தீங்கன்னும் தெரியல. கோவத்தில
வீட்டவிட்டு வயசானவங்க வர்றது சரியில்ல. வீட்டுல இருந்தா ஒரு பிரச்சின. வெளிய வந்தா
ஆயிரம் பிரச்சின வரும் தெரியுமா? தனியா இருக்கிறதுதான் சாவு.”
“யாராலயும் எனக்கு பிரச்சன இல்லெ. என்னாலதான் பிரச்சன எனக்கு. வயசாயிடிச்சி. இடுப்பு
எலும்பு ஒடிஞ்சிப்போச்சி. புருசன் இல்லெ. இன்னம் சாவாம இருக்கன். அதுதான் பிரச்சன.
சிக்கலு.” லீலாவதி வாயில் கையை வைத்துக்கொண்டு அழுதாள்.
“ஒலகத்தில வயசானவங்க எல்லாருக்கும் இருக்கிற பிரச்சனதான் இது. புதுசா ஒண்ணும் இல்லெ.
ஒலகத்தில நம்பளுதின்னு ஒண்ணும் இல்லன்னு தெரிஞ்சிக்காததாலதான் எல்லாப் பிரச்சனயும். நீ,
நான்ங்கற போட்டிதான் பிரச்சன. அப்பறம் ஆச, அதிகாரம்”
“கெட்ட நடத்த உள்ள பொம்பள இருக்கிற வீட்டுல என்னால இருக்க முடியாது.”
“புரியல.”
“ஒண்ணுமில்ல. இஷ்டப்பட்டா சேத்துக்குங்க. இல்லன்னா வுட்டுடுங்க. சாவறதுக்கு ஒலகத்தில
வழியா இல்லெ. கடசி ஆச கேட்டுப் பாப்பம்ன்னு வந்தன்.” லீலாவதி அழுதாள்.
லீலாவதிக்கு அவசரப்பட்டு செல்வத்திடமும் சரி, மற்றவர்களிடமும் வார்த்தையை விட்டுவிட்டோமோ
என்று பயம் வந்தது. உயிர் போனாலும் செல்வத்திடம்கூட சொல்லக் கூடாது என்று நினைத்திருந்த
விசயம் எப்படி வாயிலிருந்து வந்தது? எது வெளியே தெரியக் கூடாது என்று வீட்டைவிட்டு
வெளியே போக வேண்டும் என்று நினைத்தோமோ அதையே சொல்லி சேர வேண்டுமா? செத்தாலும் சரி
வாயைத் திறக்கக் கூடாது என்று நினைத்தாள்.
கலாமணியின் மீது ஒரு நாளும் இல்லாத அளவுக்கு இப்போதுதான் அவளுக்கு கோபம் உண்டாயிற்று.
எங்கே வந்து உட்கார வைத்துவிட்டாள்? ஒரு வருசமாக எப்படி அவளுடைய நடத்தையில் மாற்றம்
ஏற்பட்டது? எப்போது செல்வம் அவளுக்கு செல்போன் வாங்கி கொடுத்தானோ அதிலிருந்துதான் எல்லா
மாற்றமும் ஆரம்பித்தது. பேச்சில், நடத்தையில், சிரிப்பில், உடையில், வெளியே போவதில் –
என்று எல்லாமும் தலை கீழாகிவிட்டது. செல்வம் வீட்டைவிட்டு கிளம்பினால்போதும் மறுநொடியே
செல்போனில் பேச ஆரம்பித்துவிடுவாள். குறைந்தது அரை மணி, ஒரு மணி நேரம் பேசுவாள்.
கேட்டால் ‘அம்மாவிடம் பேசினேன், அண்ணனிடம் பேசினேன்’ என்று சொல்வாள். பிள்ளைகளை
பள்ளிக்கூடத்தில் விடப்போகிறேன் என்று போவாள். போனால், திரும்பி வருவதற்கு ஒரு மணிநேரம்
ஆகும். சாயங்காலம் பிள்ளைகளைக் கூப்பிடப் போகிறேன் என்று போனால் அதற்கும் ஒரு மணிநேரம்
ஆகும். அதைக் கேட்கப் போய்தான் பத்து நாட்களுக்கு முன் கலாமணிக்கும் லீலாவதிக்கும் பெரிய
சண்டை நடந்தது. செல்வம் அலுவலகம் போன மறுநொடியே ஜோடித்துக்கொண்டு வெளியே கிளம்பினாள்.
போனவள் சாயங்காலம் நாலு மணிக்குத்தான் வந்தாள். வீட்டுக்கு வந்த கலாமணியிடம் “எங்கப்போன?
எப்ப திரும்பி வர்ர? நீ செய்யுறது குடும்பத்துக்கு ஏத்ததா? ரெண்டு புள்ளை இருக்கிறத
மறந்திடாத. செல்வத்துக்குத் தெரிஞ்சா என்னா ஆவும் தெரியுமா?” என்று லீலாவதி கேட்டதற்கு
கலாமணி சொன்ன பதில் செருப்பால் அடித்த மாதிரி இருந்தது.
“சொல்லு. என்னா சொல்லணுமோ சொல்லு. ஒலகத்திலியே ஒம் மவன்தான் மன்மத ராசாவா? எத ஆக்கி
வச்சாலும் அத அப்பிடியே தின்னு தீத்துடுவாரா? எத ஆக்கி, படச்சி வச்சாலும் மூந்துமூந்து
பாத்திட்டுப் போற ஆளுதான?”
“அப்பிடின்னா ரெண்டு புள்ள எப்பிடிப் பெத்த?”
“நீ பெத்த மாதிரிதான்.”
“சரிதான். ரெண்டு புள்ளை இருக்கு. அத மறந்திடாத.”
“நீ செத்தாத்தான் எனக்கு நிம்மதி. நீ என்னிக்கு மண்ணுக்குள்ளாரப் போற நாள் வருமோ?” என்று
சொன்னதைவிட பெரிய கஷ்டமாக இருந்தது “எத ஆக்கி வச்சாலும் மூந்துமூந்து பாத்திட்டுப் போற
ஆளுதான?” என்ற வார்த்தை. லீலாவதியை நெருப்பில் தள்ளியது மாதிரி இருந்தது. கலாமணி
சொன்ன வார்த்தையை செல்வத்திடம் சொன்னால் என்ன நடக்கும்? ஒரு நாள் இல்லை ஒரு நாள் சொல்லிவிட
நேர்ந்தால் – குடும்பம் என்னாகும் என்று யோசித்த லீலாவதி – அப்போதுதான் இனி வீட்டில்
இருக்கக் கூடாது என்று முடிவெடுத்தாள். வீட்டிலேயே இருந்தால் கலாமணி செய்வதை
பொறுத்துக்கொள்ளவும் முடியாது, செல்வத்திடம் சொல்லவும் முடியாது. மீறி சொன்னல் குடும்பம்
அழிந்து போகும் என்று நினைத்துத்தான் வந்தாள். ஆனால் அதை சொல்லும்படி இளையராஜா
கேட்கிறான். உயிர் போனலும் சொல்லக் கூடாது என்று முடிவெடுத்து வாயை மூடிக்கொண்டு
உட்கார்ந்திருந்தாள்.
“என்னம்மா ஒண்ணும் சொல்லாம உட்கார்ந்திருக்கீங்க?” என்று இளையராஜா கேட்டான். லீலாவதி வாயைத்
திறக்காததால் எழுந்து சென்று ஹாலில் நின்றுகொண்டிருந்த செல்வத்தை அழைத்துக்கொண்டு வந்தான்.
“எங்கம்மா என்ன சொல்றாங்க?” என்று சிரித்துக்கொண்டே செல்வம் கேட்டான்.
“ரொம்ப மன அழுத்தத்தில இருக்காங்க. மனசுல ஏதோ பெரிய காயம் இருக்கு. கொஞ்ச நாள்
இருக்கட்டும். பின்னால என்னா நடக்குதின்னு பாக்கலாம்.” எந்த ஈடுபாடும் இல்லாமல் சொன்னான்
இளையராஜா.
“நல்லதுதான் சார். இடம்மாறி இருக்கட்டும்.”
“என்னிக்கும்மா வர்றீங்க?” இளையராஜா கேட்டான்.
“நான் ஏற்கனவே வந்துட்டன். இப்பிடியே இருந்துக்க வேண்டியதுதான்.”
“சரிதான்.” இளையராஜா சிரித்தான். பிறகு செல்வத்தின் பக்கம் பார்த்து “ஏதாச்சும்
கொண்டாந்து கொடுக்கிறதா இருந்தா கொடுங்க.” என்று சொன்னான்.
“என்னம்மா எடுத்தாரணும்?” ரொம்பவும் அக்கறையுடன் கேட்டான்.
“எதுவும் வாணாம். நீ போயி ஒன் பொழப்பப்பாரு. குடும்பத்தப்பாரு.” வெடுக்கென்று சொன்னாள்.
“மாத்துத்துணிகூட வாணாமா?”
“வாணாம்.” ஒரே வெட்டாகக் பேச்சை வெட்டினாள்.
“அவுங்க ரொம்ப கோபமா இருக்காங்க. நீங்க போயீட்டு அப்பறமா வாங்க. பேசிக்கலாம்” என்று
செல்வத்திடம் சொன்ன இளையராஜா “உள்ளார வாங்க. மத்தவங்கள காட்டுறன். நீங்க எங்க படுக்கணும்,
எங்க இருக்கணும்ங்கிறத பாப்பம். ஒங்க வேலய நீங்கதான் பாத்துக்கணும். சமையல் செய்ய ஒதவணும்.
கூட்ட, பெறுக்க செய்யணும். சமைக்கிறதுக்கு மட்டும்தான் இங்க ஆள் இருக்கு. சின்னப்
புள்ளைங்கள பாத்துக்கணும்.” என்று சொல்லிவிட்டு செல்வத்தின் பக்கம் திரும்பி “நான் விழுந்தா
நீங்க தூக்கிவிடணும். நீங்க விழுந்தா நான் தூக்கிவிடணும். அதுக்காகத்தான் மனுசங்க சேந்து
வாழறது. அதுக்காகத்தான் சொந்தம் வச்சிக்கிறதெல்லம். அத மட்டும் நீங்க மனசுல வச்சிக்குங்க.
ரெண்டாயிரத்தி பதினாலுலியே ஒலகம் இப்பிடியிருந்தா இன்னம் அம்பது வருசம் கழிச்சி
எப்பிடி இருக்கும்? நெனைக்கவே பயமா இருக்கு.” என்று சொல்லிவிட்டு எழுந்து ஹாலுக்குப்
போனான்.
“ஒனக்கு தல எழுத்தாம்மா?” என்று சொன்ன செல்வம் அழுதான். லீலாவதி அழவில்லை.
“மாசாமாசம் வந்து ஒங்காச வாங்கிக்கிட்டு போ.”
“என்ன காசு?”
“ஒங்கப்பனோட பென்சன் பணம்தான்.”
“எனக்கு வாண்டாம்.” அழுதான் செல்வம்.”
“ஒங்கப்பன் ஒன்னத்தான பெத்தான்? அவன் காசு ஒனக்குத்தான் சேரணும். நான் ஒங்கப்பனுக்கு
பொறக்கல. அவனால ஒரு புள்ளையத்ததான் பெத்தன். எங்கப்பன் காசுதான் எனக்கு சேரணும்.”
“செத்தாலும் வாங்க மாட்டன்.” செல்வம் அழுதான்.
மடியில் வைத்திருந்த சிறு பொட்டலத்தை எடுத்து செல்வத்தின் கையில் திணித்துவிட்டு
ஹாலுக்கு வந்தாள் லீலாவதி. பின்னாலேயே வந்த செல்வம் லீலாவதி கொடுத்தப் பொட்டலத்தைத்
திருப்பிக் கொடுக்க முயன்றான். வெறுப்புடன் முகத்தைச் சுளித்துக்கொண்டு சொன்னாள் “அது
ஒனக்கு சேர வேண்டிய பொருளுதான்.”
“சார் நீங்க கிளம்புங்க. நாளக்கி வாங்க பேசிக்கலாம். எனக்கு வேல இருக்கு.” என்று
இளையராஜா சொன்னான்.
“நாளைக்கோ, நாளான்னைக்கோ வந்து பாக்குறன் சார்” என்று சொல்லிவிட்டு கையிலிருந்த
பொட்டலத்தை லீலாவதியிடம் கொடுக்க முயன்றான். அவள் தூரமாக நடக்க ஆரம்பித்ததும் வெறுப்புடன்
இளையராஜாவுக்கு வணக்கம் சொல்லிவிட்டு வெளியே வந்தான்.
லீலாவதி கொடுத்த பொட்டலத்தைப் பிரித்துப் பார்த்தான். மூக்குத்தி, தோடு, இரண்டு மோதிரம்
இருந்தது. நூறு ரூபாய் நோட்டுகள் முப்பது இருந்தது. செல்வத்தின் முகம் பிரகாசமானது.
பெரிய பாரத்தை இறக்கி வைத்தது மாதிரி பெருமூச்சுவிட்டான். உற்சாகமாக சிகரட்டைப்
பற்றவைத்தான். ஒரு சினிமாப் பாட்டை ஹம்மிங் செய்தபடியே பஸ்ஸ்டாண்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
அனாதை இல்லத்தின் வாசல் கதவு ஓரம் மறைந்து நின்று செல்வம் நடந்து போவதையேப் பார்த்து
அழுதுகொண்டிருந்த லீலாவதியை மட்டுமல்ல அந்த கட்டிடத்தையும் அவன் ஒரு முறைகூட திரும்பிப்
பார்க்கவில்லை.

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
May 10, 2015, 12:46:21 PM5/10/15
to brail...@googlegroups.com
www.writerimayam.com
புனைவுகளில் கூட தகர்க்கப்படாத உத்தப்புரம் மதில் சுவர்
இமையம்
2000க்குப் பிந்தைய தமிழ் இலக்கிய உலகம் விசித்திரமானது. ஒரு வகையில் வண்ணமயமானது.
ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, விளிம்பு நிலை, நாடோடி, பழங்குடியின
மனிதர்களுடைய வாழ்க்கைக் கதைகளாலும், மொழிகளாலும் இன்றைய தமிழ் இலக்கியம்
நிறைந்திருக்கிறது என்று நம்பலாம். காலம் காலமாக அறிவுத்துறையில் குறிப்பாக இலக்கியத்
துறையில் அசைக்க முடியாத பெரும் சக்தியாக இருந்தவர்கள் பிராமண வகுப்பைச் சேர்ந்த
எழுத்தாளர்கள்தான். தீவிர இலக்கியப் பரப்பிலும் சரி, வெகுஜன இலக்கியப் பரப்பிலும் சரி
பிராமண வகுப்பைச் சேர்ந்த எழுத்தாளர்களே அதிகம் எழுதினர். அவர்களுடைய வாழ்க்கையும்
மொழியும்தான் தீவிர இலக்கியப் பரப்பிலும், வெகுஜன இலக்கியப் பரப்பிலும் கோலோச்சின.
அதைத்தான் அனைத்து தரப்பு வாசகர்களும் படித்தார்கள். கொண்டாடினார்கள். ஆனால் இன்று அந்த
நிலை இல்லை. தீவிர இலக்கியப் பரப்பிலும் சரி, வெகுஜன இலக்கிய பரப்பிலும் சரி பிராமண
வகுப்பைச் சார்ந்த எழுத்தாளர்களின் எண்ணிக்கை இன்று சொற்பம்தான். இருக்கிறவர்களும் எழுதுவது
பிராமண வாழ்க்கையை அல்ல, அவர்களுடைய மொழியை அல்ல. பொது மொழியில் எழுதுகிறார்கள்.
பொது சமூகத்தின் வாழ்க்கையை எழுதுகிறார்கள். ஏன்? பிராமணர்களுடைய வாழ்க்கை முறையை,
அவர்களுடைய மொழியிலேயே எழுதினால் பொது வாசகர்கள் படிக்க மாட்டார்கள் என்ற எண்ணம் –
பிராமண வகுப்பைச் சேர்ந்த எழுத்தாளர்களுக்கு வந்துவிட்டதா- பிராமணர்களுடைய
வாழ்க்கையைப்பற்றி சொல்வதற்கு இன்று ஒன்றுமே இல்லையா? இன்று தமிழில் எழுதப்படுவதெல்லாம்
பிராமணர் அல்லாதோர் இலக்கியங்கள்தானா?
2000க்கு சற்று முந்தைய காலத்திலிருந்தே தமிழ் இலக்கியப் பரப்பிலிருந்து மட்டுமல்ல,
தமிழ் மொழியிலிருந்தும் தங்களை முற்றிலுமாக துண்டித்துக்கொண்டார்கள் பிராமணர்கள். ‘தமிழ்
சோறு போடாது‘ என்ற எண்ணம் வந்து, வீட்டுச்சூழலிலிருந்தும், கல்விச் சூழலிலிருந்தும்,
சமூகச் சூழலிலிருந்தும் தமிழ் மொழியை திட்டமிட்டே தவிர்த்துவிட்டார்கள். ஒரு மொழியின்
தேவையைப் பொருத்துத்தான், சம்பந்தப்பட்ட மொழியின் மீது ஈடுபாடும் அக்கறையும் ஏற்படும்.
இன்றைய பிராமணர்களுக்கு தமிழ்மொழி தேவை இல்லை என்றாகிவிட்டது. அதனால் தங்களுடைய
குழுந்தைகளை தமிழ்மொழியை அறியாதவர்களாக வளர்த்து – மொழி இழப்பு செய்தார்கள். ஒரு
தலைமுறை – தமிழ் மொழியை அறியாமலேயே வளர்ந்துவிட்டது.
எழுத்தின் மூலம் கதை சொல்லுதல் என்ற செயல்பாட்டிலிருந்து பிராமணர்கள் மெல்லமெல்ல
ஒதுங்கினார்கள். அதே நேரத்தில் சமூகச் சூழலும் அவர்களை ஒதுக்கியது. சமூகத்தின் அனைத்து
தரப்பினரும் கல்வி கற்கலாம் என்ற சூழல், கல்வி பரவலான சூழல். சமூகத்தின் அனைத்து
தரப்பினரும் கல்வி கற்றார்கள். அதனால் கதை எழுத வந்தார்கள். நிறையவே எழுதவும்
செய்தார்கள். யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் எழுதலாம், எந்த மொழியில்
வேண்டுமானாலும் எழுதலாம் என்ற, எழுத்தில் – இலக்கியத்தில் ஏற்பட்ட ஜனநாயகத் தன்மை பிராமண
வகுப்பைச் சேர்ந்த எழுத்தாளர்களுடைய ஆதிக்கத்தை குறைத்தது. பிராமண வாழ்க்கையை,
அவர்களுடைய மொழியில் படித்துப்படித்துக் களைத்துப் போயிருந்த வாசகர்கள், தாழ்த்தப்பட்ட,
பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலை, நாடோடி, பழங்குடியின மனிதர்களுடைய
மொழியும், வாழ்க்கையும் புதிது என்பதால் வரவேற்றனர். இதுவும் பிராமண எழுத்தாளர்கள் –
எழுத்து செயல்பாட்டிலிருந்து விலகுவதற்கு காரணம். பிராமணர் அல்லாதோர் இலக்கியப்
படைப்புகளுக்கு இன்று கிடைக்கிற வரவேற்பு என்பது, அதன் வணிகமயத்திற்கான வரவேற்புதான்.
கலைக்காக அல்ல, அழகியல் தன்மைக்காக அல்ல.
நிகழ்காலத்தில் பிராமண எழுத்தாளர்கள் அதிகம் இல்லை. அவர்களுடைய வாழ்க்கையோ, மொழியோ
தமிழ் இலக்கியத்தில் அதிகம் இல்லை என்பதை கொண்டாட வேண்டுமா – வரலாற்றில் இதுபோன்று
நிகழ்வது இயற்கை என்று எடுத்து கொள்ள வேண்டுமா? தற்காலத்தில் எழுதப்படுவதெல்லாம்
பிராமணர் அல்லாதோரின் எழுத்துக்கள்தான், இலக்கியங்கள்தான் என்று நூறு சதவிகிதம் சொல்ல
முடியுமா ? பிராமணியக் கறையும், கசடும் படியாத தமிழ் இலக்கியம் சாத்தியமா ? அப்படி
சொன்னால் அது பெரிய மூடநம்பிக்கை.
பிராமணர் அல்லாதவர்கள் பிராமண வாழ்க்கையை,மொழியை எவ்வளவு சிறப்பாக எழுதி காட்டுகிறோம்
பாருங்கள் என்று எழுதிக் காட்டியவர்கள் பலர். அதில் முதன்மையானவர் ஜெயகாந்தன். “அக்னி
பிரவேசம்” போன்ற பல சிறுகதைகளை அவர் எழுதியிருக்கிறார். பிராமண வாழ்க்கையையும்,
மொழியையும், பிராமணர்களைவிட சிறப்பாக எழுதியதால்தான் ஆனந்த விகடன் அவரைக்
கொண்டாடியது. பொது சமூகமும் கொண்டாடியது. ஜெயகாந்தன் கடைசியாக எழுதிய ஜெய ஜெய
சங்கர – நாவல் எந்த மொழியில், யாருடைய வாழ்க்கையை, எந்த பண்பாட்டு கூறுகளை தூக்கி
நிறுத்தியது என்பதை நாடறியும். பூமணி “நைவேத்தியம்“ என்ற நாவலை எழுதியிருக்கிறார்.
ஜெயமோகன் பல கதைகளை எழுதியிருக்கிறார்.
முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு, சமூக
அந்தஸ்து என்று கிடைத்த பிறகு, இந்த கால் நூற்றாண்டு காலத்தில்தான் – பிராமணிய இந்துமத
நம்பிக்கைகளை, சடங்குகளை, சம்பிரதாயங்களை, ஐதீகங்களை, கலாச்சாரப் பண்பாட்டுக் கூறுகளை
பிராமணர் அல்லாத சமூகத்தினர் அதிகமாகவும், விரும்பியும் பின்பற்றுகின்றனர். வரதட்சணை
என்ற பிராமணிய பண்பாடு – தமிழ் சமுகத்தின் பொது பண்பாடானது இப்படித்தான். ஆவணி
அவிட்டம், வைகுண்ட ஏகாதேசி, சிவராத்திரி போன்ற பெருந் தெய்வ வழிபாட்டு முறைகள் –
தமிழ் மொத்த சமூகத்திற்குமான பண்பாடாக எப்படி மாறியது? ‘புரட்டாசி மாதத்தில் கறி
சாப்பிடமாட்டேன்‘ என்று சொல்கிற மனிதர்கள் கிராமத்திலும்கூட அதிகம் பேர் இன்று
இருக்கின்றனர். எப்படி இது சாத்தியமாயிற்று? சிறு தெய்வ வழிபாட்டு முறைகள் எல்லாம்
கைவிடப்பட்டு பெருந் தெய்வ வழிபாட்டு முறைகள் பின்பற்றப்படுகின்றன. அப்படி பின்பற்றுவதை
பெரிய கௌரவமாகக் கருதுகின்றனர்.
நாடு, மொழி, தனித்த கலாச்சாரம், பண்பாடு, சிறுசிறு இனக்குழுக்களுக்கான அடையாளங்கள்
எல்லாம் அவசியமில்லை. இனி சாத்தியமுமில்லை. இதுபோன்ற தனித்த அடையாளங்கள் வளர்ச்சியை,
முன்னேற்றத்தைப் பாதிக்கும். ஆகவே உலகமயம், தாரளமயம், வியாபாரமயம், ஒரே பண்பாடு, ஒரே
கலாச்சாரம், உலகம் ஒரே குடையின் கீழ் என்ற முழக்கம் முழுமையாகப் பின்பற்றப்பட்டு வருவது
போலவே, மற்ற விசயங்களும் மைய நீரோடத்தில் கலக்க வேண்டும் என்ற பேராசை எல்லாரையும்
பிடித்தாட்டுகிறது. சிறுசிறு இனங்களின் நிலவியல் சார்ந்த, அடையாளங்கள் வேகமாக
அழிக்கப்பட்டுவிட்ட நிலையில், இனப்பாரம்பரியமும், நம்பிக்கைகளும், கதைகளும் முற்றாக
இழந்துவிட்ட நிலையில், விளிம்பு நிலை மனிதர்களின் சிறு தெய்வ வழிபாடு, கலாச்சாரம்
என்பதெல்லாம் காலாவதியாகிவிட்டது என்ற நிலையில் அப்படியிருப்பது நாகரீகமற்றது என்ற
மனப்போக்கு அடித்தட்டு கிராமப்புற மக்களிடமும் பரவிவிட்டது. இருபத்தியோராம் நூற்றாண்டு
வாழ்க்கைக்கு அது ஏற்றதல்ல என்ற மனோபாவம் கிராம, நகர மக்கள் என்று எல்லாரிடத்தும்
வளர்ந்துவிட்டது. பிராமணிய இந்து மத ஆதிக்கம் செலுத்தும் – சடங்குகளை, விழுமியங்களை,
சம்பிரதாயங்களை, நம்பிக்கைகளை பின்பற்றுவதால் மட்டுமே மைய நீரோட்டத்தில் ஒன்றிணைய
முடியும் என்ற முனைப்பும், எப்படியாவது பிராமணராகிவிட வேண்டும் என்ற பேராசையும்
படித்த, பதவியில் இருக்கிற, பணம் படைத்த, பிராமணர் அல்லாத சமூகத்தினரிடம்
வந்துவிட்டது. எங்கிருந்து வந்தோம், என்னவாக இருக்கிறோம், என்னவாக போகிறோம் என்ற தெளிவு
பிராமணர் அல்லாத சமூகங்களின் மக்களிடம் மட்டுமல்ல, எழுத்தாளர்களிடமும், அவர்களுடைய
படைப்புகளிலும் இருக்கிறதா? எதிர்க்கலாச்சார, கலகக் குரல் கொண்ட படைப்புகள் இதுவரை
தமிழில் வந்திருக்கிறதா? பிராமணியமாதலை நோக்கி, உலயமயமாதலை, நிறுவனமயமாதலை
நோக்கி வேகமாக சென்றுகொண்டிருக்கிறோம். அவ்வாறு செல்லும்போது எற்படும் சாதக, பாதகமான
அம்சங்களைப் பேசிய படைப்புகள் எவை? 1960லிருந்து 1990வரை எழுதிய – பிராமணர்,
பிராமணர் அல்லாத எழுத்தாளர்கள் ‘கடவுள்‘ என்ற சொல்லை பயன்படுத்துவதையும், கடவுள்
நம்பிக்கை சம்பந்தமான தகவல்களை எழுதவும் அஞ்சினர். ‘பிற்போக்குவாதி‘ என்று முத்திரை
குத்தி விடுவார்கள் என்று பயந்தார்கள். முற்போக்குவாதியாக காட்டிக்கொள்வதில்தான் அப்போது
எல்லாருக்கும் விருப்பம் இருந்தது. இன்று அந்த நிலை இருக்கிறதா?
ஒருவர் சென்னையில் வாழலாம். கன்னியாகுமரியில், கடலூரில், கோயம்புத்தூரில் –
தமிழ்நாட்டின் எந்த பகுதியிலும் வாழலாம். எங்கு வாழ்ந்தாலும் பெரும்பான்மையோரின் திருமணம்
எப்படி, யாரால், எந்த முறையில் நடத்தப்படுகிறது? புதுமனை புகு விழா, மஞ்சள் நீராட்டு
விழா , கருமகாரியச் செயல்பாடுகள் யாரால், எந்த முறைப்படி செய்யப்படுகிறது- ‘உபநயன
விவாஹ சுப முகூர்த்த பத்திரிக்கை‘‘ என்பதை ‘திருமண அழைப்பிதழ்‘ என்றும், உக்கிரத
சஷ்டியப்த பூர்த்தி சாந்தி ஆஹ்வாகன சுபமுகூர்த்தப் பத்திரிக்கை‘ என்பதை ‘அறுபதாம்
கல்யாணம்‘ என்று போடலாம். ‘ஜீர்ணோதாரண அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகத்தை ‘திருக்குட
புனித நன்னீராட்டு பெரு விழா’ என்றோ ‘குடமுழுக்கு’ என்றோ பத்திரிக்கை அச்சிடலாம்.
‘கிரகப் பிரவேசத்தை’ ‘புதுமனை புகுவிழா’ என்றும் பத்திரிக்கை மட்டும்தான் அச்சிட
முடியும். திருமணமோ, வீடு குடி புகுதலோ, மஞ்சள் நீராட்டோ, அறுபதாம் கல்யாணமோ, கரும
காரியமோ எதுவாக இருந்தாலும் இக்காரியங்களில் பின்பற்றப்படும் நடைமுறைகள், சடங்குகள்
எல்லாமே – பிராமணிய இந்துமத சடங்குகள்தான். வசதிபடைத்த, உயர் பதவியிலுள்ள, சமூக
அந்தஸ்து பெற்ற தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவர்களுடைய திருமணங்களை மட்டுமல்ல, அவர்களுடைய
வீட்டு அனைத்து விசேஷங்களையும் இன்று பிராமணர்கள்தான் நடத்தி வைக்கின்றனர். பிராமணிய
இந்துமத வைதீக முறைப்படி. காசு இல்லாதவர்களிடம்மட்டும்தான் பிராமணர்களுக்குத் ‘தீட்டு‘.
பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் எழுதுவது – மீட்டுருவாக்கம் செய்வதுதான் இலக்கியம் என்றால்
– இன்று தமிழ் மொழியில் எழுதப்படுகிற பண்பாடு, கலாச்சாரம், சடங்கு, நம்பிக்கை,
யாருடையது – யாருடைய இலக்கியம் எழுதப்படுகிறது என்ற கேள்வி முக்கியமானது.
பிராமணிய இந்துமதக் கருத்தியல்களையும், நம்பிக்கைகளையும், சடங்குகளையும் பின்பற்றுவேன் –
அதே நேரத்தில் நான் எழுதுவது பிற்பட்டோர் இலக்கியம், ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்டோர்
விளிம்புநிலை நாடோடி பழங்குடியின இலக்கியம் என்று ஒருவர் சொன்னால் அது உண்மையா?
கொங்கு நாட்டு இலக்கியம், கரிசல், நாஞ்சில் நாட்டு இலக்கியம், பிற்பட்டோர், ஒடுக்கப்பட்டோர்,
தலித் இலக்கியம் என்று சொல்வதெல்லாம் பிராமணிய இந்து மத – நெறிமுறைகளை, அறத்தை,
சாதி, மத நம்பிக்கைகளை வேறுவேறு பெயர்களில் எழுதுகிறோம் என்றுதான் அர்த்தம். பிராமணிய
இந்துமதம் வகுத்த – கவுண்டர், வெள்ளாளர், தலித்கள்‘ என்ற சாதி பாகுபாடுகளையும் அதன்
நடைமுறைகளையும் எழுதுவது என்பது – பிராமணிய இந்து மதம் வகுத்த நெறிமுறைகளை சரி
என்று ஏற்றுகொள்கிற செயல். பொதுமையத்தை நோக்கிய விழைவை அதிகம் கொண்டுள்ளோர்,
உலகமயத்தை, நிறுவனமயத்தை விரும்புகிறவர்கள் இன, அடையாள அரசியலைப் பேசுவதும்,
வட்டாரம், தலித்தியம் என்ற அடையாளங்களையும் பேணுவதிலும் அர்த்தமுண்டா? பிராமணியம்
அனைத்தையும் தன் வயமாக்கிக்கொள்ள முனைகிறது. இச்செயலுக்கு நிஜமான எழுத்தாளன்
எதிர்வினையாற்றுவார். மாறாக அச்செயலுக்கு சமூகத்தின் எல்லாத் தரப்பிலும் ஊக்கமே
அளிக்கப்படுகிறது. சிறுசிறு அடையாளங்களும் வேகமாக பிராமணியமாக மாறிக்கொண்டிருக்கிற
காலத்தில், பிராமணியமாக மாறுவதற்கு வேகமாக சென்று கொண்டிருக்கிற காலத்தில், வட்டார
எழுத்தாளன், தலித், விளிம்பு நிலை எழுத்தாளன் என்று எப்படி சொல்ல முடியும்? அப்படி
சொல்வது சரி என்றால் அவர்கள் எழுதியிருக்க வேண்டிய இலக்கியம் எப்படிப்பட்டதாக
இருந்திருக்க வேண்டும்?
1957ல் நடந்த இமானுவேல் சேகரன் படுகொலை, 1968ல் கீழ்வெண்மணி படுகொலை, 1979ல் உஞ்ஞனை,
1997ல் மேல வளவு, 1990ல் ராமநாதபுரம் கலவரம், 1999ல் மாஞ்சோலை தேயிலை தொழிலாளர் –
தாமிரபரணி படுகொலை, 2001ல் சங்கரலிங்கபுரம் கலவரம், 2002ல் திண்ணியத்தில் ராமசாமி,
முருகேசன் வாயில் மலம் திணித்த சம்பவம் எதுவும் தமிழ் மொழியில் கதையாகவில்லை.
இலக்கியமாகவில்லை. கடலூர் மாவட்டம் புளியங்குடியில் 2000ல் காந்தி, வெள்ளையன், மதியழகன்
மூன்று பேரையும் கழுத்தறுத்து கொன்றது, பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார் மங்கலம்,
கொட்காய்ச்சி ஏந்தல் – ஆகிய ஊர்களில் பஞ்சாயத்த தேர்தலை நடத்த முடியாது நின்ற இந்திய
அரசு – போன்ற விசயங்கள் எதுவும் தமிழில் கதையாகவில்லை. 2012ல் நடந்த நாயக்கன் கொட்டாய்
– நத்தம் காலனி சூரையாடல் – கண்ணகி முருகேசன் படுகொலை, தமிழ் இலக்கியப் பரப்பிற்கு
வரவே இல்லை. மீனாட்சிபுரம் மதமாற்றம், உத்தப்புரம் – மதில் சுவர் – புனை கதைகளில்கூட
தகர்க்கப்படவில்லை என்றால் தமிழகத்தில் எழுதப்பட்ட தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, விளிம்பு
மனிதர்களுடைய கதைகள் என்பது என்ன? மேடைகளில் பேச மட்டுமே இந்த சமூகக் கொடூரங்கள்,
ஆண்டுகள், ஊர்களின் பெயர்கள் பயன்படுகின்றன. அதற்குமேல் இந்த சம்பவங்கள் சமூகத்தில்,
அறிவுலகத்தில், இலக்கிய உலகத்தில் ஏற்படுத்திய தாக்கம் என்ன? ஒரு சம்பவம் வெறும் தகவலாக
சொல்லப்படுவதற்கும், இலக்கியப் படைப்பாக படிப்பதற்குமான வேறுபாடு அளப்பரியது. நாம்
எல்லாவற்றையும் வெறும் தகவலாக, புள்ளிவிபரமாக, பட்டியலாக மட்டுமே
தந்துகொண்டிருக்கிறோம். புள்ளி விபரத்திற்கு சமூகத்தில் எந்த மதிப்பும் இல்லை. தமிழில்
எழுதப்பட்டதெல்லாம் தனிமனித கதைகள், இழப்புகள், வலி, ஒப்பாரி, கண்ணீர் மட்டும்தான். இது
தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலை சமூகத்தின் கதை அல்ல, வரலாறு அல்ல,
கலாச்சார, பண்பாட்டு மரபுகள் அல்ல. அரசியல், பொருளாதார மாற்றங்கள் அல்ல. இலக்கியத்தில்,
வரலாற்றில் தனிமனித கதைகளைவிட ஒரு சமூகத்தின் கதையும் வரலாறும்தான் முக்கியம்.
வங்காள மொழியில் ‘காட்டில் உரிமை‘ (1995) என்ற நாவலை மகாசுவேதா தேவி
எழுதியிருக்கிறார். 1890 காலக்கட்டத்தில் பீர்ஸா முண்டா என்பவர் பழங்குடியின மக்களை
திரட்டி, பிரிட்டிஷ் நிர்வாகத்திற்கு எதிராகவும், உள்ளூர் நிலபிரப்புகளுக்கு எதிராகவும்
நடத்திய போராட்டத்தை காட்டில் உரிமை நாவல் பேசுகிறது. உண்மையான வரலாறு
நாவலாகியிருக்கிறது. எப்படி? பீர்ஸா முண்டா கலவரம் என்பது உலகம் அறிந்த பெரும்
போராட்டம். ஆனால் இன்று அதை படிக்கக்கூடியவர்களுக்கு பீர்ஸா முண்டா கலவரம் என்பது ஒன்றுமே
இல்லை. தகவல் மட்டும்தான். ஆனால் பீர்ஸா முண்டா கலவரத்தையே ‘காட்டில் உரிமை‘ என்ற நாவலாக
படிக்கும்போது வரலாறு புனைவாகி வேறுவிதமான அனுபவத்தை தருகிறது. நாவலில் வரும்
பாத்திரங்கள் நமக்குள்ளும், நிகழ்காலத்திலும் என்றும் நிலைபெற்ற மனிதர்களாகிவிடுகிறார்கள்.
இதுதான் நாவல் கலையின் வலிமை. வரலாற்றைப் புனைவாக்குவது பெரும் சவால். நாம் எளிய
சவாலுக்குக்கூட முகம் கொடுத்ததில்லை.
‘தெலுங்கு மொழியில் ‘அவன் காட்டை வென்றான்‘ (1996) என்ற நாவலை கேசவரெட்டி –
எழுதியிருக்கிறார். பன்றி மேய்ப்பவனுடைய வாழ்க்கைக் கதை. பன்றி என்பது நம் சமூகத்தில்
அருவருப்பானது. சாதியோடு இணைத்துப் பார்க்கப்படுவது. ஒரு பன்றி எட்டு குட்டிகளைப்
போடுகிறது. அன்று நிலவு தாமதமாக வருகிறது. பன்றியின் உரிமையாளன் ‘நிலவே, இன்று
ஏன் தாமதமாக வருகிறாய்? உன்னைவிட அழகான எட்டு நிலாக்கள் இங்கு உள்ளன. அதைப் பார்த்து
பொறாமைப் படுவதற்காகவாவது சீக்கிரம் வா.’ என்று அழைக்கிறான். ஒரு பன்றியும் எட்டு
குட்டிகளும்தான் நாவலின் மையம். மொத்த நாவலுமே அவைகள்தான். இந்திய நாவல் வரலாற்றில்
நிகழ்ந்த பெரும் அதிசயம் இது. இதுவரை இந்திய நாவல்களின் கதாநாயகர்கள் யார்யார் என்பதை
இந்த இடத்தில் நினைவு கொள்ளலாம். மலையாள மொழியில் தகழி சிவசங்கர பிள்ளை எழுதிய
‘தோட்டியின் மகன்‘ போன்ற நாவல்கள் இதுவரை தமிழில் ஏன் உருவாகவில்லை?
கேரள மாநிலத்தின் மேற்குக்கடைக் கோடியிலும், கர்நாடகத்தின் தெற்கு எல்லையை ஒட்டியும்
அமைந்த ஊர் – கையூர். 1938-1941 காலக்கட்டத்தில் விவசாயிகள் பெரும் போராட்டத்தில்
ஈடுபட்டனர். கையூரில் 1941- மார்ச் 28ம் தேதி நடைபெற்ற விவசாயிகளின் ஊர்வலத்தில் ஒரு
போலீஸ்காரர் இறந்துவிட, நூற்றுக்கணக்கான விவசாயிகள் கைது செய்யப்படுகின்றனர். கீழ் கோர்ட்,
மேல் கோர்ட், கருணை மனு என்று எல்லா முயற்சிகளும் எடுக்கப்படுகின்றன. கடைசியாக மன்னிக்க
முடியாதவர்களாக மடத்தில் அப்பு, சிருகண்டன், குஞ்ஞம்பு நாயர், அபுபக்கர் ஆகிய நான்கு
பேரையும் கண்ணனூர் சிறையில் 29.03.1943ல் தூக்கிலிட்டனர். சி.கே.நம்பியார் என்ற
சிறுவனுக்கு வயது காரணமாக ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இது நடந்த வரலாறு. இந்த
வரலாற்றை வைத்து கன்னட மொழியில் நிரஞ்சனா ‘சிரஸ் மரணா’ என்ற நாவலை 1955ல் எழுதி
வெளியிட்டார். மலையாள மண்ணில் நடந்த கதையை கன்னட மொழிக்காரர் நாவலாக எழுதுகிறார்.
1974ல் மலையாளத்தில் மொழிப்பெயர்க்கப்பட்டது. தமிழில் மொழிப்பெயர்த்தவர் மகேஸ்வரன் –
தலைப்பு – ‘நினைவுகள் அழிவதில்லை.’ கையூர் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுகிற
காலக்கட்டதத்தில் நாவலாசிரியர் – நிரஞ்சனா, பள்ளி மாணவராக இருந்தார் என்பது
முக்கியமானது. இதுபோன்ற அதிசயங்கள் எதுவும் தமிழில் நிகழவில்லை.
தமிழகத்தில் கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் ஆயிரக்கணக்கான அரசியல் கொலைகள்
நிகழ்ந்துள்ளன. எதுவுமே கதையாகவில்லை. ஆனால் வங்காளம், தெலுங்கு, மலையாள மொழியில்
அரசியல் கொலைகள், நக்சலைட் ஒழிப்பு – என்ற பெயரில் செய்யப்பட்ட கொலைகள் எல்லாம்
நாவல்களாகியிருக்கின்றன. தன் வரலாற்று கதைகளாகியிருக்கின்றன. வங்காள மொழியில் வந்த –
ஸதீநாத் பாதுரி எழுதிய ‘விடியுமா‘ (1980) என்ற நாவல் தீவிரவாதி என்று அரசால்
முத்திரை குத்தப்பட்ட ஒரு கைதியின் சிறை வாழ்க்கையைப் பேசுகிறது. கேரளத்தில் 1971ல்
சுட்டுக்கொல்லப்பட்ட ‘வர்க்கீஸ்‘ என்ற நக்சலைட் பற்றிய கதையை சொல்கிறது – ராமச்சந்திரன் நாயர்
எழுதிய “நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சி“ (2007) என்ற சுயசரிதை. 1976ல் பொறியியல்
கல்லூரியிலிருந்து அழைத்து செல்லப்பட்ட ‘ராஜன்‘ என்ற திரும்பி வராத தன்னுடைய மகனை
தேடி அலைந்த டி.வி. ஈச்சர வாரியர் என்பவரின் சுயசரிதை “ஒரு தந்தையின்
நினைவுக்குறிப்புகள்“ (2005) இப்படியான எழுத்துக்கள் ஏன் தமிழில் உருவாகவே இல்லை?
விடியுமா நாவலில் வரும் கைதியும், நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சியில் வரும்
‘வர்க்கீசும்‘, ஒரு தந்தையின் நினைவுக் குறிப்புகளில் வரும் ‘ராஜனும்‘ 1970களில்
இந்தியாவில் நடந்த நக்சலைட் தேடுதல் வேட்டையில் கொல்லப்பட்ட மனிதர்களுடைய கதை மட்டமல்ல.
1970-1980 காலக்கட்டத்தில் இந்தியாவில் நிலவிய அரசியல் சூழல், மிஸா கொடுமை, அறிவுச்
சூழலில், சமூகச்சூழலில் நிகழ்ந்த மாற்றங்கள், சமூகம் சந்தித்த கொடூரங்கள் அனைத்தும்
சொல்லப்படுகின்றன. அதற்காகத்தான் இந்த நூல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. மலையாளத்தில் ஒரு
‘பாலியல் தொழிலாளி’ – ‘நளினி ஜமிலா’ – வின் தன் வரலாற்றுக் கதையும், ஒரு திருடனின்
கதை – ‘திருடன் மணியண்பிள்ளை கதை’ தன் வரலாற்றுக் கதையும்கூட வந்திருக்கிறது.
இலக்கியமாக இருக்கிறது. கேரளாவில் ஆதிவாசிகளின் நிலங்களின் மீது ஆக்கிரமிப்பு செய்யும்
அரசு, பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக. ஒரு ஆதிவாசி பெண் போராடுகிறாள். அந்த
போராட்டம் கே.ஜானு வாழ்க்கை வரலாறு (2003) என்ற பெயரில் நூலாக வெளிவருகிறது.
தமிழில் அப்படி எதுவுமே நிகழவில்லை. தமிழகச் சூழல் எல்லா சம்பவங்களையும் சுருக்கி
தகவல்களாக மட்டுமே மாற்றி வைத்திருக்கிறது. தனிமனித ஊளைதான் தமிழ்நாட்டில் தலித் இலக்கியம்.
1920 வரை தமிழகத்தில் எங்கு கொலை நடந்தாலும், திருட்டு நடந்தாலும், பஞ்சம், வன்முறை,
கலவரம் நடந்தாலும் அவற்றை பாட்டாக கட்டி மக்கள் கூடும் இடங்களில், டேப்
அடித்துப்பாடப்படும். அதற்கு ‘கொலை சிந்து‘ என்று பெயர். அச்சு வசதி ஏற்பட்ட பிறகு
‘கொலை சிந்து நூல்கள் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டன. பிரிட்டிஷ் நிர்வாகத்திற்கு கொலை
சிந்து பாடுபவர்கள் பெரும் சவாலாக இருந்தனர். வாய்மொழி கதை சொல்லும் மரபிலிருந்து
உருவானது கொலைசிந்து. தாழ்த்தப்பட்ட, விளிம்பு நிலை எழுத்தாளர்கள் வளர்தெடுத்திருக்க
வேண்டிய வடிவம் அது. தற்காலத்தில் தமிழகத்தில் எவ்வளவு கலவரங்கள், கொலைகள் நடக்கின்றன?
அவை எல்லாம் ஏன் இலக்கியமாகவில்லை? பாடல்களாக பாடப்படவில்லை? அப்படிப் பாடப்பட்டிருந்தால்
மதுரை வீரன் கதை மாதிரி, நல்லத்தங்காள் கதை மாதிரி, சீவலப்பேரி பாண்டியன் கதை மாதிரி,
கண்ணகி முருகேசன் கதையும், திவ்யா இளவரன் கதையும், தாமிரபரணி படுகொலையும் தமிழகம்
முழுவதும் அழியாத கலைகளாக மாறியிருக்கும். மதுரை வீரனும், நல்லத்தங்காளும் எப்படி
தெய்வமாக மாற்றப்பட்டார்கள்? மற்ற கொலைகள் எல்லாம் ஏன் சிறு தெய்வங்களாக மாற்றப்படவில்லை
என்ற கேள்வி முக்கியமானது.
தமிழக எழுத்தாளர்கள் – குறிப்பாக தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலை
எழுத்தாளர்கள் எல்லாம் ‘நாங்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள். நாங்கள் எழுதுவது தூய
இலக்கியம். அரசியல் அல்ல, அரசியலை பேசுவது உன்னத இலக்கியம் அல்ல‘ என்று சொல்கிறார்களா?
அப்படியென்றால் ஒடுக்கப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், விளிம்புநிலை மக்களின் இலக்கியம் என்று
சொல்வது எதை? அரசியலுக்கு அப்பாற்பட்ட இலக்கியமோ, இலக்கியவாதியோ உலகில் உண்டா?
கீழ்வெண்மணி படுகொலையைப்பற்றி ‘குருதிப் புனல்‘ (1977) என்ற நாடகத்தை இந்திரா
பார்த்தசாரதி எழுதியிருக்கிறார். 2014ல் மீனா கந்தசாமி கீழ் வெண்மணியைப்பற்றி ஆங்கிலத்தில்
Gypsy Goddess என்ற நாவலை எழுதியிருக்கிறார். கீழ்வெண்மணி படுகொலையைப்பற்றி ‘நாங்க
மனுசங்கடா‘ என்று ஒரு கவிதை எழுதியிருக்கிறார் இன்குலாப். அதில் “நாங்க எரியும்போது
எவன் மசுர புடுங்கப்போனிங்க?‘ என்று ஒரு வரி வரும். அந்த ஒரு வரி தந்த வேகம் – மீனா
கந்தசாமியின் மொத்த நாவலும் தரவில்லை. இந்திரா பார்த்தசாரதி, மீனா கந்தசாமி, இன்குலாப்
– மூவருமே தாழ்த்தப்பட்ட இனத்தை சார்ந்தவர்கள் அல்ல. தாமிரபரணி படுகொலையைப்பற்றி மாரி
செல்வராஜ். ‘தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்‘ (2012) என்ற சிறுகதையை
எழுதியிருக்கிறார். இவ்வளவுதான் தமிழ் இலக்கியம் பதிவு செய்துள்ள – வரலாற்று
நிகழ்வுகள். அரசியல் கொலைகள் பற்றிய பதிவுகள். இந்தப் பதிவுகளின் வழியே அறிய நேர்வது
இன்று தமிழ் மொழியில் எழுதப்படுவதெல்லாம் – சமூக நிகழ்வுகள் அல்ல. சமூக வாழ்க்கை அல்ல
வரலாறு அல்ல. கற்பனையாக ஏதோ ஒன்றை எழுதுகிறார்கள் என்பதும் அதையும் பிராமணிய
மனோபாவத்துடனும் எழுதுகிறார்கள் என்பதும் தெளிவு. தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, விளிம்பு
நிலை எழுத்தாளர்கள் சமூக நிகழ்வுகளை, வரலாறுகளை, சமூக வாழ்க்கையை படைப்பாக
மாற்றுவதில்லை. ஆனால் தன் வரலாற்றுக் கதைகளை மட்டும் எப்படி ஆர்வத்துடன் எழுதுகிறார்கள்?
தாழ்த்தப்பட்டவர்களுடைய தன் வரலாற்றுக் கதைகள் மட்டும் எப்படி வரவேற்கவும்,
கொண்டாடவும்படுகின்றன?
மன்னர்களுடைய கதைகளை மட்டுமே வரலாறுகளாக, வரலாற்று நாவல்களாக புனையப்பட்டதிலிருந்து
முற்றிலுமாக விடுபட்டு – சமகால சம்பவங்களையும், வரலாற்று நாவல்களாக எழுத முடியும்
என்று ச.பாலமுருகனுடைய சோளகர் தொட்டி (2004) நிரூபித்துள்ளது. சந்தனக் கடத்தல்
வீரப்பனை தேடி வந்த கர்நாடக போலீசாரும், அதிரடிப் படையினரும் மலை வாழ் மக்களிடம் எப்படி
நடந்து கொண்டனர்? எவ்வளவு வன்முறைகள், எவ்வளவு மனித உரிமை மீறல்கள், வன்புணர்ச்சிகள்,
கணவன் முன்னிலையிலேயே பலர் மாறிமாறி வன்புணர்ச்சி செய்யப்பட்ட பெண்களின் அலறலும்
பெண்ணுறுப்பில் லத்திகளை செருகித் துன்புறுத்தப்பட்ட பெண்களின் அலறலும், மேற்குத் தொடர்ச்சி
மலையெங்கும் எதிரொலித்தது. அந்த கதறல்களின் தொகுப்புத்தான் சோளகர் தொட்டி. சோளகர் என்பது
மலைவாழ் மக்களின் பெயர் – ஒரு பிரிவு. தொட்டி – என்பது வாழிடத்திற்கான பெயர்.
ஆவணத்தை, அரசுக் கோப்புகளை வைத்து நாவலாக்க முடியும், கலையாக்க முடியும் என்பதற்கு
நல்ல உதாரணம் ‘சோளகர் தொட்டி‘. அரசும், அச்சு, காட்சி ஊடகங்களும், போலீசும், உருவாக்கிக்
காட்டிய உலகத்தின் மறுபக்கத்தை வீரப்பன் தொடர்பான, மலை வாழ் மக்களின் துயரத்தைக் காட்டியது
சோளகர் தொட்டி. சந்தன கடத்தல் வீரப்பன் தமிழ் நாவலில் முக்கியமான பாத்திரம். அவருடைய
மனைவி முத்து லட்சுமியும் ஒரு பாத்திரம். இன்று உயிருடன் உள்ள பல மனிதர்கள் நாவலில்
முக்கியமான பாத்திரங்களா இருக்கிறார்கள் என்பது தமிழ் நாவல் உலகில் நிகழ்ந்த பெரிய
அதிசயம். ச.பாலமுருகனும் சரி, சந்தன கடத்தல் வீரப்பனும் சரி இடைநிலை சாதியினர் என்பது
முக்கியமானது.
கலாச்சாரத்தில், பண்பாட்டில் மட்டுமா இன்று பிராமணிய இந்துமதம் கோலோச்சுகிறது.
திருமணம், வீடு கட்டுதல் போன்ற காரியங்களில் மட்டும் நாம் பிராமணியம் ஆகிவிடவில்லை.
பிராமணர் அல்லாத இனத்தவர்களுடைய குழந்தைகளுடைய பெயர்களை தொகுத்தால் தெரியும். தமிழகம்
எப்படி பிராமணியமாக மாறியிருக்கிறது என்பது. பிள்ளைகளுக்கு பெயர் வைப்பதில்கூட
பிராமணர்களை விஞ்சி பிராமணியத்தை கடைபிடிக்கிறார்கள் தமிழர்கள்.
பிராமணிய இந்து மதக் கருத்தியல், சடங்குகள், நம்பிக்கைகள், கலாச்சாரப் பண்பாட்டுக்
கூறுகளுக்கு எதிரான அத்தனை காரியங்களும், சிந்தனைகளும், கூர் மழுங்கிப்போட்ட நிலை.
இன்று பிராமணியம் சகலத்தையும் தன் வயமாக்கிக்கொண்டிருக்கும் காலத்தில் – தமிழ் இலக்கிய
உலகில் பிராமண வகுப்பை சேர்ந்த எழுத்தாளர்கள் இல்லை. பிராமண வாழ்க்கை முறை இல்லை, மொழி
இல்லை என்று இன்று சொல்ல முடியுமா? நம்முடைய சிந்தனையில் நடத்தையில், மனோபாவத்தில் என்ன
இருக்கிறதோ அதுதானே இலக்கியப் படைப்பாக மாறும்? நாம்தான் இரட்டை பிராமணர்களாக
இருக்கிறோமே. அப்படி இருக்கும்போது – தமிழில் எழுதப்படுவதெல்லாம் பிராமணிய இந்துமத
கோட்பாட்டு, மைய நீரோட்ட இலக்கியங்களாகத்தானே இருக்க முடியும்?
உயிர்மை – பிப்ரவரி 2015

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
May 10, 2015, 12:50:51 PM5/10/15
to brail...@googlegroups.com
www.writerimayam.com
கற்க கசடற-விற்க அதற்குத் தக – பாரதி தம்பி
எழுத்தாளர்: இமையம்
கற்பித்தல் செயலுக்கு தேவை ஆசிரியர் மாணவர்
மட்டுமே. கட்டிடங்கள் ஒருபோதும் கற்பிக்காது.
ஒரு நூலின் மதிப்பு அதை எழுதிய எழுத்தாளனால் ஏற்படுவதல்ல. சமூக பொருத்தத்தால், அதன்
உண்மைத் தன்மையால் ஏற்படுகிறது என்பதற்கு பாரதி தம்பியின் கற்க கசடற-விற்க அதற்குத் தக
என்ற நூல் சரியான உதாரணம். கல்வியாளர்கள், கல்வி நிறுவனங்கள், கல்வி அமைப்புகள், அரசு
அமைப்புகள் செய்ய வேண்டிய பெரிய வேலையை ஒரு சமூகவியலாளன் பார்வையில் மிகுந்த
பொறுப்புணர்ச்சியுடன் நிகழ் காலத்தில் பெரிய பிரச்சினையாக மட்டுமல்ல அடிப்படைப்
பிரச்சினையாகவும் அதிக சிக்கல்கள் நிறைந்த பிரச்சினையாகவும் இருக்கிற கல்வி குறித்து
எழுதியிருக்கிறார். தமிழக கல்விச் சூழலைப் புரிந்துகொள்வதற்கு இந்நூல் அரிய ஆவணமாக
இருக்கிறது.
அரசுப் பள்ளிகள் வீழ்ச்சி அடைவதற்கான காரணங்களாக எவைஎவை இருக்கின்றன, தனியார் பள்ளிகளின்
பெருக்கத்திற்கு எவைஎவை காரணங்களாக இருக்கின்றன? இவற்றிற்கு கல்விக் கொள்கைகள் காரணமா?
நிர்வாகமின்மை காரணமா? அரசின் பொறுப்பற்றத்தனம் காரணமா? பெற்றோர்களின் பேராசை காரணமா?
ஆசிரியர்களின் அலட்சியம் காரணமா என்று சமூக உளவியல் பார்வையோடு ஆராய்ந்திருக்கிறார்
பாரதி தம்பி. இந்நுாலின் பலம் என்பது பகுப்பாய்வு தன்மை மட்டுமல்ல உ்ண்மைத் தன்மையும்,
சமநிலையும்தான்.
“கல்வியிற் சிறந்த தமிழ்நாடு“ என்றோ “எழுத்தறிவித்தவன் இறைவன்“ என்றோ “கற்கை நன்றே கற்கை
நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே“ என்றோ, “அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம்
பதினாயிரம் நாட்டல் பின்னருள்ள தருமங்கள் யாவும் பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல், அன்ன
யாவினும் புண்ணியங் கோடி ஆங்கோர் ஏழைக் கெழுத்தறிவித்தல்“ என்று இன்று சொன்னால் அது நம்மை
நாமே கேலி செய்துக்கொள்வதைப் போன்றது. கடந்த நுாற்றாண்டுவரை பிறப்பின் அடிப்படையில்
பலருக்குக் கல்வி மறுக்கப்பட்டது. இன்று பணத்தால் மறுக்கப்படுகிறது. இந்த படிப்புக்கு,
இவ்வளவு விலை என்று விளம்பரப்படுத்தி விற்கப்படுகிறது. குழந்தைகள் இன்று பணம்
கறப்பதற்கான ஒரு வழியாக இருக்கிறார்கள். பணம் உள்ளவனுக்கு முதல் தரக்கல்வி. பணம்
இல்லாதவனுக்கு நாலாம் தரக் கல்வி. பணம் உள்ளவனுக்கு தனியார் பள்ளியில் கல்வி, பணம்
இல்லாதவனுக்கு அரசுப் பள்ளியில் கல்வி என்றாகிவிட்டது. தனியார் பள்ளியில்தான் தரமான
உலகத்தரமான சிறந்த கல்வி கிடைக்கிறது என்று மாணவர்கள் மட்டுமல்ல பெற்றோர்கள், அரசு
மட்டுல்ல , அரசு பள்ளி ஆசிரியர்களும் சொல்வதுதான் வேடிக்கையானது.
தன்னைப் புரிந்து கொள்ளுதல், தான் வாழும் சமூகத்தை புரிந்துகொள்ளுதல், தான் வாழும்
சமூகத்தின் முந்தைய வரலாறுகளை அறிந்துகொள்ளுதல், இயற்கையை புரிந்துகொள்ளுதல்
சமூகத்தோடும் இயற்கையோடும் இணைந்து வாழ்வதற்கும், புரிந்துகொள்வதற்கும் உதவுவதே கல்வி
என்ற நிலை மாறி, பணம் ஈட்ட, வெளிநாட்டில் வேலை செய்ய, முதலீடு செய்த பணத்தை பன்மடங்காக
பெருக்க என்பதாகக் கல்வியை மாற்றிவிட்டோம். குழந்தைகளை கறிக்கோழிகளைப் போன்று
வளர்ப்பதற்கு பழகிவிட்டோம். அதன் விளைவு கல்வி என்பதை வணிகப் பொருளாக, பண்டமாகச்
சந்தைப்படுத்திவிட்டோம். கல்வி என்பதின் உண்மையான பொருளை உணரத் தவறிவிட்டோம் என்பதுதான்
பாரதி தம்பியின் பெருங்கவலை. அந்தக் கவலைதான் கற்க கசடற-விற்க அதற்குத் தக.
தனியார் பள்ளியில் படிப்பது மட்டுமல்ல ஆங்கில வழியில் படிப்பதுதான் அறிவை வளர்க்கும்
என்று யார் சொன்னார்களோ? அப்படித்தான் மொத்த தமிழ்ச் சமூகமும் நினைக்கிறது. ஒரு
குழந்தையின் அறிவுத்திறன், கற்றல் திறன் தாய்மொழியில் பயிலும்போது மட்டுமே முழுமை
பெறும். எழுதுதல், பேசுதல், படித்தல், கேட்டல் ஆகிய செயல்பாடுகள் தாய்மொழியில் சம
அளவில் நிகழும் போதுதான் ஒருங்கிணைந்த ஆளுமைத்திறன் குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. ஆனால்
நிஜமான கற்றல் செயல்பாடுகளுக்கு எதிரிகளாக இருக்கக்கூடிய தனியார் பள்ளி முதலாளிகள்,
ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஆங்கிலத்தில் படிப்பதுதான் கல்வி, ஆங்கில மொழியில் படிப்பதுதான்
அறிவு, தனியார் பள்ளியில் படித்தால்தான் போட்டித் தேர்வில் வெற்றிபெற முடியும் என்ற பொய்ப்
பிரச்சாரத்தை செய்து அதில் வெற்றியும் பெற்றுவிடடனர் என்பதை வேதனையோடு பதிவு செய்யும்
பாரதி தம்பி தாய்மொழியின் வலிமை என்ன என்பது பற்றி கூறும் கருத்து முக்கியமானது.
தாய்மொழி வெறும் மொழியல்ல, ஊடகமல்ல. அது நமது பண்பாட்டின், கலாச்சாரத்தின்,
நாகரீகத்தின், அறிவின் அடையாளம் என்று கூறுகிறார். பண்பாட்டை, கலாச்சாரத்தை, நாகரீகத்தை,
அறிவை, தாய்மொழியைப் புறக்கணித்த ஒரு கல்வியைத்தான் நாம் நம் குழந்தைகளுக்கு
வழங்கிக்கொண்டிருக்கிறோம்.
அரசுப் பள்ளிகளின் வீழ்ச்சிக்கும், தனியார் பள்ளிகளின் பெருக்கத்திற்கும் அரசுதான் முதல்
குற்றவாளி என்று பல ஆதாரங்களோடு பாரதி தம்பி நிறுவிக்காட்டுகிறார். சுதந்திரம் பெற்று
அரை நுாற்றாண்டுக் காலம் முடிந்த பிறகு 2009-ல் 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட
அனைத்து குழந்தைகளுக்கும் இலவச ஆரம்பக் கல்வி கட்டாயம் என்று சட்டம் இயற்றுகிறது.
இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ளலாம் நமது அரசுகள் கல்வி வழங்குவதில் எவ்வளவு
முனைப்புடன் செயல்படுகின்றன என்பதை. கல்வி வழங்குவதில் முனைப்பு காட்டாவிட்டாலும்
இருக்கிற கல்வி அமைப்புகளை சீர்குலைக்கிற விதமாக செயல்படாமலிருந்தாலே பெரிய காரியம்.
புதிய திட்டங்கள், புதிய கொள்கைகள் என்ற பெயரில் நம்முடைய அரசுகள் கல்வி அமைப்புகளை
சீ்ர்குலைத்ததோடு இலவசமாகக் கல்வியை வழங்குகிற செயல்பாட்டிலிருந்து படிப்படியாக தன்னை
விடுவித்தும் கொண்டது.
1975-80 காலகட்டம்வரை கூட தமிழகத்தில் அரசுப் பள்ளிகள்தான் இயங்கின. அடிப்படை வசதிகள்
குறைவாக இருப்பினும் கல்விச் சூழல் சிறப்பாகவே இருந்தன. 1986-ல் ராஜீவ்காந்தி கொண்டு
வந்த புதிய கல்விக் கொள்கையால் நவோதயா, மாதிரிப் பள்ளிகளால் அதி புத்திசாலிகளுக்கு
மட்டுமே கல்வி, அதி புத்திசாலிகள் மட்டுமே தேவை என்ற முழக்கத்தை உருவாக்கி கல்வி
வழங்குவதில் பெரும் பாகுபாட்டை உருவாக்கியது. அதே காலகட்டத்தில் தமிழக முதலமைச்சராக
இருந்த எம்.ஜி.ஆர். இலவசமாக அனைவருக்கும் கல்வியை அரசே வழங்க வேண்டும் என்பதை மாற்றி
பணம் கொடுத்துப் பெறவேண்டியது கல்வி என்று தனியார் மயத்தை ஊக்குவித்தார். 1991-ல்
நரசிம்மராவ் புதிய பொருளாதாரக் கொள்கை ஒன்றைக் கொண்டுவந்து அரசு வழங்க வேண்டிய இலவசக்
கல்வி, சுகாதாரம், உணவு போன்ற அடிப்படைக் கடமைகளிலிருந்து முற்றிலுமாகத்
துண்டித்து்க்கொண்டு எப்படி அனைத்து சமூகத் துறைகளையும் தனியார்மயமாக்கினார் என்பதை
வரலாற்று சான்றுகளுடன், புள்ளி விவரங்களுடன் விரிவாக பாரதி தம்பி எழுதியிருக்கிறார்.
கல்வித் துறையில் ஏற்பட்ட சரிவு என்பது ஏதோ தற்காலத்தில் மட்டுமே ஏற்பட்டதல்ல என்பதுதான்
இந்த தகவல்கள், புள்ளிவிவரங்கள் நமக்குச் சொல்கிற செய்தி. கல்வித்துறையில் ஏற்பட்ட சீறழிவு
சமூகத்தின் எல்லாத் துறைகளையும் சீரழித்துவிட்டது என்பது வரலாறு.
நம்முடைய அரசுகள் எப்படி தன்னுடைய கடமைகளிலிருந்து விலகிச் செல்கிறன்றன? தனியார்
பள்ளிகளில் தங்கள் குழந்தைகள் படிப்பதையே பெற்றோர்கள் விரும்புகிறார்கள், ஆங்கில வழியில்
பயில்வதையே விரும்புகிறார்கள், இதற்கு அரசு என்ன செய்ய முடியும்? தனியார் பள்ளிகளின்
வளர்ச்சியை தடுக்கவும், அரசுப் பள்ளிகளின் வீழ்ச்சியைத் தடுக்கவும் அரசுப் பள்ளிகளில் ஆங்கில
வழியில் போதிக்க அரசாணை வெளியிட்டுள்ளோம் என்ற அரசின் அறிக்கையை பாரதி தம்பி கேள்வி
கேட்கிறார். தனியார் பள்ளிகளுக்கு தொடர்ந்து அங்கீகாரம் வழங்குவது ஏன்? தமிழகம் முழுவதும்
ஆயிரக்கணக்கில் முறையான அங்கீகாரம் பெறாமல் இயங்கும் பள்ளிகளின் மீது துறை சார்ந்த
நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை? போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாத தனியார் பள்ளிகளின்
அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யவில்லை? தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயக்குழுவை
அமைத்தது ஏன்? தனியார் பள்ளிகளில் சேரும் ஏழை மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே
ஏற்கும் என அறிவித்தது ஏன்? நடக்க முடியாத குழந்தைகளுக்கு ஸ்மார்ட் கிளாஸ், யோகா கிளாஸ்
நடத்தும் பள்ளிகளுக்கு அரசு ஏன் அங்கீகாரம் வழங்குகிறது? டாஸ்மாக் கடைகளை போன்று
தெருவுக்குத் தெரு மெட்ரிக், சி.பி.எஸ்.இ. பள்ளிகளை திறப்பதற்கு அரசு ஏன் தொடர்ந்து
அனுமதி வழங்கிக்கொண்டே இருக்கிறது? குழந்தைகளின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பவர் யார்?
நல்லாசிரியர் விருது கொடுக்கப்படுகிறதே? அவர்கள் எல்லாம் நல்லாசிரியர்கள் தானா? இப்படி
நூறு நூறு கேள்விகள் நூலில் இருக்கின்றன. கேள்விகள் பொய்யல்ல, புனைவு அல்ல. நிஜம்.
அரசு அறிந்த, சமூகம் அறிந்த நிஜம். இக்கேள்விகளுக்கு யார் பதில் தருவது?
தனியார் பள்ளிகள் குறித்து கற்க கசடற-விற்க அதற்குத் தக நூலில் உள்ள புள்ளி விவரங்கள்
நம்மை அதிர்ச்சியில் உறைய வைப்பவை. பிரிகேஜியில் ஒரு குழந்தைக்கான ஆண்டுக் கட்டணம் –
வி்ண்ணப்பம், ப்ராசஸிங், நன்கொடை, பேருந்து, புத்தகம், சீருடை, ஸ்மார்ட் கிளாஸ், யோகா
கிளாஸ் கட்டணம் என்று மொத்தம் 1.80 லட்சம். இந்தக் கட்டணம் வசூலிப்பது வெளிநாட்டில் அல்ல.
தமிழ்நாட்டில்தான். நான்காம், ஐந்தாம் வகுப்புகளுக்கு லேப்டாப்பிலேயே பாடம்
நடத்தப்படுகிறது என்று ஒரு பள்ளி விளம்பரம் செய்கிறது. வருடம் இரண்டு கோடி ரூபாய்
லாபம் தரும் பள்ளி விற்பனைக்கென்று கோவையில் ஒரு பள்ளி விளம்பரம் செய்திருக்கிறது.
தாம்பரத்தில் ஒரு பள்ளி நிர்வாகம் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்கிறது. ஒரு மனை வாங்கினால்
ஒரு குழந்தைக்கு சீட் ப்ரீ என்று அப்பள்ளி விளம்பரம் செய்திருக்கிறது. இந்த விளம்பரங்கள்
நமக்குச் சொல்வது கல்வியிற் சிறந்த தமிழ்நாடல்ல – கல்வி வியாபாரம் சிறந்த தமிழ்நாடு
என்பதைத்தான். இதுபோன்ற அதிர்ச்சிகரமான பல தகவல்களை நூல் முழுவதும் பாரதி தம்பி
பட்டியலிட்டுள்ளார். கல்வி என்பது வணிகம்-வியாபாரம், வர்த்தகப் பொருள்-பண்டம்
என்பதாகிவிட்டது. கல்வியைத் தேடி அலைந்த காலம் போய்விட்டது. இப்போது ஒவ்வொரு வீட்டின்
முன்னும் – பள்ளி வேன் வந்து காத்துகொண்டு நிற்கிறது. உங்களிடம் பணம் மட்டும்தான் இருக்க
வேண்டும். இந்த தகவல்களின் மூலம் நம்முடைய சமூகம் பாடம் கற்குமா?
முற்றிலும் வியாபாரமாகிவிட்ட, முற்றிலும் வியாபாரத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட
தனியார் பள்ளிகளைத்தான் நம் சமூகம் உலகத்தரமான பள்ளி என்று கொண்டாடுகிறது. வணிகமயமான
கல்வி நிறுவனங்களுக்கான தகுதி, அந்தஸ்து, சமூக மதிப்பு எப்படி ஏற்படுகிறது? அதிக
நன்கொடை, அதிக கட்டணம் வசூலித்தால் அது தரமானப் பள்ளி. விண்ணப்பக் கட்டணம் அதிக விலை
என்றால், விண்ணப்பப் படிவத்தை தருவதற்கு இழுத்தடித்தால், காத்திருக்க வைத்தால், பெரிய
சிபாரிசு வேண்டுமென்று சொன்னால், பெற்றோர்களுக்குத் தேர்வு வைத்தால், வகுப்பில்-பள்ளி
வளாகத்திற்குள் தமிழில் பேசியதற்காக அபராதம் விதித்தால் அது சிறந்த பள்ளி. உலகத்தரமான
பள்ளி.
100-க்கு 100 சதவீதம் தேர்ச்சி என்ற புள்ளி விவரம், ஸ்டேட் ரேங்க் இத்தனை பேர் என்ற புள்ளி
விவரம், பெற்றோர்களைக் காக்க வைத்தல், அவமானப்படுத்துதல், அதிக கெடுபிடிகளைக்
கடைபிடித்தல், விளையாட விடாமல் தடுத்து வைத்திருத்தல், பிரம்மாண்ட கேட், பிரம்மாண்டமான
கட்டிடங்கள் ஆகியவைதான் உலகத் தரமான பள்ளிக்கு நற்சான்று. தனியார் பள்ளி பெற்றோர்களைக்
கொடுரமாக நடத்துகிறது. கொடூரத்தை, இழிவை பெருமையாக ஏற்றுக் கொள்கிறோம். இழிவு
எப்படி பெருமையாக இருக்க முடியும்?
தனியார் பள்ளியில் கட்டிட வசதி இருக்கறதா? குடிநீர், கழிப்பறை, காற்றோட்டம், போதிய
வெளிச்சம் இருக்கிறதா என்று பார்ப்பதில்லை. தகுதியான ஆசிரியர்கள் முறையாக பட்டம்
பெற்றவர்கள் இருக்கிறார்களா என்று பார்ப்பதில்லை. பள்ளி வளாகம், ஏரியை ஒட்டியோ, குளத்தை
ஒட்டியோ, தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியோ இருக்கிறதா என்று பார்ப்பதில்லை. அரசிடம்
முறையான அங்கீகாரம் பெற்றிருக்கிறதா? விளையாட்டு மைதானம் இருக்கிறதா என்று
பார்ப்பதில்லை? ஆசிரியர் மாணவர் உறவு சுமூகமாக இருக்கிறதா என்று கூட பார்ப்பதில்லை.
பெற்றோர்கள் பார்ப்பதெல்லாம் 100 சதவீத தேர்ச்சி என்ற புள்ளி விவரத்தை மட்டுமே. பள்ளி
நிர்வாகம் குழுந்தைகளை இயந்திரங்களைப்போல நடத்துகின்றனவா என்பதை மட்டுமே பார்க்கின்றன.
கல்யாண வரன் தேடுவதில் காட்டப்படும் அக்கறையைக் காட்டிலும் ப்ரிகேஜியில் ஒரு குழந்தையை
சேர்ப்பதற்கு அதிக விசாரணையும் அக்கறையும் காட்டப்படுகிறது. அந்த விசாரணையும்
அக்கறையும் மதிப்பெண்ணை மட்டுமே நோக்கமாகக் கொண்டதாக இருக்கிறது. நம்முடைய கல்வி
அமைப்பு முற்றிலும் மதிப்பெண்ணை மட்டுமே நோக்கமாகக்கொண்டதுதானே. குழந்தை பயிலும் பள்ளி
வளாகம் குறித்த எந்த விசாரணையையும் எந்தப் பெற்றோரும் செய்வதில்லை என்பது பாரதி
தம்பியின் குற்றச்சாட்டு. இந்த குற்றச்சாட்டுக்கு யார் பதில் சொல்வது? அரசா? பெற்றோர்களா?
தனியார்மயக் கல்வி வியாபாரிகளுக்கு உறுதுணையாக இருப்பது பெற்றோர்களின் பேராசை.
முன்பு மெட்ரிக் பள்ளி என்று அலைந்தவர்கள் இப்போது சி.பி.எஸ்.இ என்று அலைகிறார்கள்.
பெற்றோர்களின் மன உலகம் எப்படி இருக்கிறது. “நம்ம குழந்தைகளோட எதிர்காலம் தானே நமக்கு
முக்கியம்“ என்றும் “நம் குழந்தைகளோட எதிர்காலத்துக்காக நாம செலவு செய்துதான் ஆக
வேண்டும்“ என்றும் “எல்லா அவமானத்தையும் சகித்துக் கொள்ளத்தான் வேண்டும்“ என்றும் “நம்
வாழ்க்கைதான் இப்படி இருக்கிறது நம் குழந்தைகளோட எதிர்காலமாவது நன்றாக இருக்கட்டுமே“
என்றும் “நான் படுகிற கஷ்டம் பெருசில்ல என் பிள்ளையோட எதிர்காலம்தான் முக்கியம்“ என்று
சொல்கிற, நினைக்கிற பெற்றோர்களின் மன உளவியலை நன்கு புரிந்துகொண்ட தனியார் பள்ளிகளின்
முதலாளிகள் தங்களின் கொள்ளை லாபத்திற்காக புதுப்புது விளம்பரங்களை, பிரச்சாரங்களை
எப்படியெல்லாம் செய்கிறார்கள் என்று பாரதி தம்பி ஒரு பட்டியல் தருகிறார். அரசுப்
பள்ளிகளில் படித்தால் போட்டித் தேர்வில் வெற்றி பெறமுடியாது. பன்னாட்டு கம்பெனிகளில்
வேலை கிடைக்காது, வெளிநாடுகளுக்கு செல்ல முடியாது. இன்றைய போட்டி உலகில் வெற்றிபெற
முடியாது. அரசு பள்ளிக்கூடங்கள் தண்டம். அவற்றில் படித்தால் உருப்பட முடியாது. அரசுப்
பள்ளியில் தமிழில்தான் பாடம் நடத்துவார்கள். அது உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை
முற்றிலுமாக சீரழித்துவிடும். தமிழ் மொழியில் படித்தால் மூளை வளராது. தனியார்
பள்ளியில் ஆங்கிலத்தில் படித்தால்தான் அறிவாளி. இப்படியான பிரச்சாரங்கள் நம் சமூகத்தின்
உளவியலையே மாற்றிவிட்டது. அரசுத் துறை என்றாலே சீர்கேடு என்ற மனப்போக்கை
ஏற்படுத்திவிட்டது. இந்தப் பொய்ப்பிரச்சாரத்தில் தனியார்ப் பள்ளி முதலாளிகள் மட்டுமல்ல அரசு
நிர்வாகமும், பெற்றோர்களும், முக்கியமாக ஆசிரியர்களும் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதுதான்
வேதனையானது.
இன்று தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களுடைய குழந்தைகள், அரசு அதிகாரிகளுடைய
குழந்தைகள், அரசியல்வாதிகளுடைய குழந்தைகள் எங்கு படிக்கிறார்கள்? 99 சதவீதம் தனியார்ப்
பள்ளியில்தான் படிக்கிறார்கள். தனியார் பள்ளிகளின் கொள்ளை லாபத்தை பெருக்கியவர்கள் யார்?
கல்வி என்ற பெயரில் நடத்தும் சமூகக் கொள்ளையை ஊக்குவித்தவர்கள் யார்? இந்த சமூக
குற்றத்துக்கு யார் பொறுப்பாளி என்று பல கேள்விகளை நம்முன் வைக்கிறார் பாரதி தம்பி.
சென்னையில் ஒரு புகழ்பெற்ற பள்ளியி்ல் படிப்பதற்காக ஒரு குடும்பம் திண்டுக்கல்லில் இருந்து
சென்னைக்கு குடிபெயர்ந்துள்ளது. இப்படி தமிழகம் முழுவதும் நுாற்றுக்கணக்கான குடும்பங்கள்
குடிபெயர்ந்துள்ளன. பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடக்கும் சமயத்தில்
நாமக்கல் மாவட்டத்திற்கு இரண்டு, மூன்று மாதங்களுக்கு மட்டுமே குடிபெயர்கிற
குடும்பங்களின் எண்ணிக்கை ஆயிரம் முதல் இரண்டாயிரம் வரை இருக்கும். இதற்கு யார்
பொறுப்பாளி? அரசுப் பள்ளி மோசம், அரசு கல்லுாரி மோசம் என்று சொல்கிற பெற்றோர்கள்,
தனியார் பள்ளி முதலாளிகள் தங்களுடைய குழந்தைகளுக்கு தமிழக அரசால் நடத்தப்படும்
மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கவேண்டும் என்றும், அண்ணா யுனிவர்சிட்டியில் இடம்
கிடைக்க வேண்டும் என்றும் ஏன் விரும்புகிறார்கள்? அது மட்டும் அரசு நடத்தும் நிறுவனங்கள்
இல்லையா?
ப்ரிகேஜிக்கு ஒரு ஆண்டிற்கு 1.80 லட்சம் செலவு செய்து படிக்க வைக்கிற பள்ளியின்
கல்வித்தரம் எப்படி இருக்கிறது? உலகத்தரம் வாய்ந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின்
மனநிலை என்னவாக இருக்கிறது? மனப்பாடம் செய்யும் இயந்திரங்களாகவே இருக்கிறார்கள்.
பாடத்தை புரிந்துகொண்டு படிக்கிற பழக்கமே இல்லாதவர்களாக இருக்கிறார்கள். எப்போதும்
தேர்வுகளைப் பற்றியும் தேர்வு முடிவுகளைப் பற்றியுமே கவலை கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
கட் ஆப் மதிப்பெண்களை மட்டுமே கனவாகக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். பக்கத்துவீட்டுக்காரர் ,
தெருவில் உள்ளவர்களைப்பற்றி மட்டுமல்ல தான் வாழும் ஊரைப்பற்றிக்கூட எதுவுமே தெரியாத
மொக்கைகளாக இருக்கிறார்கள். இவர்களுக்கு தனக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்களுடைய பெயர்
கூடத் தெரிவதில்லை. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் மொட்டையான மனப்பாடம் மட்டுமே.
படித்துக்கொண்டே இருக்கிறார்கள், பரிட்சை எழுதிக்கொண்டே இருக்கிறார்கள் அவ்வளவுதான.
தனியார் பள்ளி மாணவர்கள் குறித்த அழகிய சித்திரம் ஒன்றை பாரதி தம்பி தருகிறார்.
“இறுக்கிக் கட்டப்பட்ட முறுக்குக் கம்பிகளைப் போல இருக்கிறார்கள்“ என்று சொன்னாலும் தனியார்
பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தனியார் பள்ளிகளில் வேலை செய்யும் ஆசிரியர்கள் குறித்து
அவரிடம் அதிக இரக்க உணர்வே வெளிப்படுகிறது. “மாணவர்களும் பாவம் ஆசிரியர்களும் பாவம்“
என்று எழுதுகிறார். அதேநேரத்தில் தனியார் பள்ளி நிறுவனங்கள் சுய சிநதனைக்கு பதிலாக
அடிமைத்தனத்தையும், விட்டுக்கொடுத்தலுக்குப் பதிலாக தன்முனைப்பையும், நாகரிகத்துக்குப்
பதிலாக அநாகரிகத்தையும், சமத்துவத்திற்கு பதிலாக பாகுபாட்டையும், பொதுநலத்திற்குப்
பதிலாக சுயநலத்தையும், மன அழுத்தம் தாங்கமுடியாமல் தற்கொலை செய்து கொள்வதையும்,
விளையாட்டை வாழ்வின் அடிப்படையாகக் கருதாமல் எதிரியாக சித்தரிப்பதையும் தான் நாம்
தரமான உலகத்தரமான கல்வி என்று புகழ்கிறோம் என்று பொது சமூகத்தின் மீது கேள்வியை வைக்கிறார்.
நமது கல்வி கொள்கைகள் என்ன? ஆசிரியர் பேசுவார். மாணவர் பேசக்கூடாது. ஆசிரியர்
சொல்வார். மாணவர் எதிர்கேள்வியின்றி கேட்பார். இதுதான். ஆனாலும் கல்வித் திட்டத்தில் இல்லை
குளறுபடி அதை நிறைவேற்றுவதில்தான் இருக்கிறது. தனியார் பள்ளிகளில் மட்டுமல்ல அரசுப்
பள்ளிகளிலும் இன்று ஆசிரியருக்கும் மாணவருக்கும் எந்த உறவும் இல்லை. அதனால்தான் 1997-ல்
தமிழ்நாட்டில் முன்னெடுக்கப்பட்ட மாற்றுக் கல்வி முறையான தாய் தமிழ்ப் பள்ளிகள் பெரிய
வெற்றியை அடையவில்லை.
“அரசுப் பள்ளிகள்தான் நம் கல்வி உரிமையின் அடையாளம், எக்காரணம் கொண்டும் அதை விட்டுத்தர
முடியாது“ என்று எழுதுகிற பாரதி தம்பி நம் அடிப்படை உரிமையை யார் பறிக்கிறார்கள்
என்ற கூர்மையான கேள்வியை நம்முன் வைக்கிறார். போதிய கட்டிட வசதியை, குடிநீர்,
கழிப்பறை, இருக்கைகள், ஆசிரியர் நியமனத்தை செய்து தராத அரசு லேப்டாப்பும், சைக்கிளும்
எதற்காக வழங்குகின்றன என்ற கேள்வி முக்கியமானது. அரசுப் பள்ளியின் வீழ்ச்சிக்கு முக்கிய
குற்றவாளிகள் அரசு, ஆசிரியர், பெற்றோர் என இருந்தாலும் முதன்மையான குற்றவாளி
ஆசிரியர்களே என்பதை தன் ஆய்வு மூலம் நிரூபிக்கிறது இந்நூல். அரசுப் பள்ளிகளில் வேலை
செய்யும் ஆசிரியர்களுக்கு தங்கள் மீதோ, தாங்கள் செய்யும் வேலை மீதோ மதிப்போ, மரியாதையோ
கிடையாது. அதனால்தான் அரசுப் பள்ளிகள் மூடுவிழவை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.
அதோடு ஆசிரியர்களுடைய பொறுப்பற்ற, அக்கறையற்ற, கடமை உணர்வற்ற, ஊக்கமற்ற தன்மையால்,
அலட்சியத்தால் அரசுப் பள்ளிகள் சீரழிகின்றன. இன்று பல தனியார் பள்ளிகளில் பங்குதாரர்களாக
இருப்பவர்கள் அரசுப்பள்ளி ஆசிரியர்களே. தனியார் பள்ளிகளை தொடங்கலாம் என்ற விஷ விதையை
முதலில் தூவியவர்கள் அரசுப் பள்ளி ஆரிசியர்களே. அரசுப் பள்ளிகளின் வீழ்ச்சிக்கு
நிர்வாகத்தினுடைய கண்காணிப்பு முற்றிலும் இல்லாதது. அரசுப் பள்ளிகளின் வீழ்ச்சிக்கும்,
அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கற்றல் திறன் குறைபாட்டிற்கும் மாணவர்கள் அல்ல
காரணம். ஆசிரியர்கள்தான் என்பதோடு அரசுப் பள்ளியில் திறம்பட வேலை செய்யும்
ஆசிரியர்களும், திறம்பட இயங்கும் பள்ளிகளும் இன்னும் இருக்கவே செய்கின்றன என்பதையும்
பாரதி தம்பி எழுதியிருக்கிறார். இது அவருடைய பார்வையின் சமநிலையைக் காட்டுகிறது.
ஒரு புத்தகம் என்பது சமூகத்தை முழுமையாகப் புரிந்துகொள்வதற்கான வழி என்பதையும்,
காலத்தை பிரதிபலிக்கும் கண்ணாடி என்பதையும், குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட சமூகம்
எப்படி வாழ்ந்தது என்பதற்கான ஆவணம் என்பதையும், ஒரு நிஜமான எழுத்தாளன் சமூகத்தைப் பற்றி
மட்டுமே அக்கறை கொள்வான் என்பதையும் நிரூபித்துக் காட்டுகிறது பாரதி தம்பியின் “கற்க
கசடற-விற்க அதற்குத் தக“
கற்க கசடற-விற்க அதற்குத் தக – பாரதி தம்பி நூலுக்கு எழுதிய அனிந்துறை. டிசம்பர் 2014

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
May 11, 2015, 3:25:43 AM5/11/15
to brail...@googlegroups.com
aபெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்பட
4 பேரையும் விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

தமிழக முதலமைச்சராக இருந்தபோது ஜெயலலிதா, வருமானத்திற்கு அதிகமாக சொத்து
சேர்ந்ததாக, கடந்த 1996ஆம் ஆண்டில், சுப்ரமணியன் சுவாமி கொடுத்த புகாரின் பேரில்,
தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கில், கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி, ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேருக்கு,
நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்து.


இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அக்டோபர் 17ஆம் தேதி ஜெயலலிதா உட்பட நால்வருக்கும் ஜாமீன்
வழங்கியது. பின்னர் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில், கடந்த ஜனவரி 5ஆம்
தேதி ஜெயலலிதா மேல்முறையீட்டு மனு மீது கர்நாடக உயர் நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு
முன்பாக விசாரணை தொடங்கியது. கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி குற்றம்சாட்டப்பட்ட நால்வர்
தரப்பு வாதமும் நிறைவடைந்தது.

45 நாட்களில் விசாரணையை முடித்த நீதிபதி சி.ஆர்.குமாரசாமி, கடந்த மார்ச் 11ஆம் தேதி
தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தார். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி 3 மாதங்களுக்குள்
மேல் முறையீட்டு விசாரணையை முடித்த நீதிபதி, மார்ச் 12ஆம் தேதி முதல் தீர்ப்பு எழுதும்
பணியை தொடங்கினார்.

இந்நிலையில் திமுக தரப்பின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், பவானி சிங்கின் நியமனம்
சட்டப்படி செல்லாது. எனவே மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு எழுதும்போது பவானிசிங்
முன்வைத்த வாதத்தை கருத்தில் கொள்ளக்கூடாது. மாறாக திமுக தரப்பும், கர்நாடக அரசு
தரப்பும் தாக்கல் செய்யும் எழுத்துப்பூர்வ வாதத்தை கருத்தில் கொள்ள வேண்டும் என ஏப்ரல் 27ஆஆம்
தேதி உத்தரவு பிறப்பித்தது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து நீதிபதி குமாரசாமி ஏப்ரல் 29ஆம் தேதி முதல்
மேல்முறையீட்டில் மீண்டும் தீர்ப்பை திருத்தி எழுதும் பணியைத் தொடங்கினார். இந்நிலையில்,
தீர்ப்பு எழுதும் பணிகள் முடிவடைந்த நிலையில் மே 11ஆம் தேதி காலை 11 மணிக்கு தீர்ப்பு
அளிக்கப்படும் என்று கர்நாடக உயர் நீதிமன்ற பதிவாளர் பாட்டீல் அறிவித்தார். இதைத் தொடர்ந்து
கர்நாடக உயர் நீதிமன்ற வளாகத்தை சுற்றி ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு 144 தடை உத்தரவு
பிறப்பிக்கப்பட்டது. அதிமுகவினர் தொடர்ந்து குவிந்ததால் நீதிமன்ற வளாகத்தை சுற்றி
ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தீர்ப்பு வழங்குவதற்காக நீதிபதி குமாரசாமி இன்று காலை 10 மணிக்கு கர்நாடக
உயர் நீதிமன்றம் வந்தடைந்தார். அதிமுக தரப்பில் வழக்கறிஞர்கள் குமார், செந்தில், திமுக
பொதுச் செயலாளர் அன்பழகன் தரப்பில் வழக்கறிஞர்கள் சரவணன், தாமரைச் செல்வன் மற்றும்
சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தரப்பு வழக்கறிஞர்களும் வந்தனர். இதனிடையே,
தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி சம்பந்தனும் கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு வந்தார்.
விடுதலை

இதனைத் தொடர்ந்து சரியாக 11 மணிக்கு மேல்முறையீட்டு மனு மீது தீர்ப்பளித்த கர்நாடக உயர்
நீதிமன்ற தனி நீதிபதி குமாரசாமி , ஜெயலலிதா உள்பட 4 பேரின் மேல்முறையீட்டு
மனுக்களையும் ஏற்று, அவர்களை விடுதலை செய்து பரபரப்பு தீர்ப்பளித்தார்.
அபராதமும் ரத்து

ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் முன்வைத்த வாதங்களை ஏற்று, பெங்களூரு தனி நீதிமன்ற நீதிபதி
குன்ஹா அளித்த தீர்ப்பை ரத்து செய்வதாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார். இதனால்,
ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கு விதிக்கப்பட்ட அபராதமும் ரத்தாகி விடுகிறது.

3 நிமிடத்தில் தீர்ப்பின் முக்கிய அம்சத்தை மட்டும் வாசித்துவிட்டு நீதிபதி குமாரசாமி,
தனது அறைக்கு திரும்பினார். தீர்ப்பு மொத்தம் 900 பக்கங்கள் கொண்டதாக உள்ளதாகவும், அது
விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
May 11, 2015, 6:17:49 AM5/11/15
to brail...@googlegroups.com
தமிழ் நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.
தமிழ் நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.
Dra
( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு)
முன்னுரை
கலைகளின் அரசி என அழைக்கப்படுவது நாடகமாகும்.தமிழ் மொழி இயல், இசை, நாடகம் என்ற
மூன்று பிரிவுகளைக் கொண்டது. இவற்றுள் நாடகம் தொன்மையும், தனிச்சிறப்பும் வாய்ந்ததாகும்.
இயலும், இசையும் கலந்து கதையைத் தழுவி நடித்துக்காட்டப்படுவது நாடகமாகும். எட்டு
வகையான உணர்ச்சிகளை ஒருவர் தம் மெய்ப்பாடு தோன்ற நடிப்பது நாடகத்தின் தனிச்சிறப்பாகும்.
தெருக்கூத்துகளாக இருந்து, மேடைநாடகங்களாக மாறி, இலக்கிய நாடகங்களாக மலர்ச்சி பெற்ற
தமிழ்நாடகத்தின் தோற்றம் வளர்ச்சி குறித்து இக்கட்டுரை மதிப்பீடு செய்கிறது.
தமிழ்நாடகத்தின் தொன்மை
தொல்காப்பியர் ”நாடக வழக்கினும்” என்று நாடகத்தைக் குறிப்பிடுகிறார்.
சிலப்பதிகாரம் நாடகக்கூறுகளுடன் நாடகக் காப்பியமாகவே திகழ்கிறது.
அகத்தியம்,குணநூல், கூத்தநூல், சயந்தம், மதிவாணர் நாடகத் தமிழர், முறுவல் போன்ற
நாடக நூல்கள் பழந்தமிழர் வழக்கில் இருந்தன என்பதனை சிலப்பதிகாரத்திற்கு உரை
எழுதிய அடியார்க்கு நல்லார் குறிப்பிட்டுச் செல்கிறார்.
சங்ககால கூத்துகள்

குறவைக் கூத்து, துணங்கைக் கூத்து, ஆடிப்பாவை போன்ற கூத்துவகைகளை சங்ககாலத்தில்
காணமுடிகிறது.
இருவகை நாடகங்கள்

வேத்தியல், பொதுவியல் என நாடகங்களை இருவகையாகப் பகுக்கலாம். வேத்தியல் என்பது
வேந்தனுக்காக நடித்துக்காட்டப்படுவதாகும், பொதுவியல் என்பது மக்களுக்காக
நடித்துக்காட்டப்படுவதாகும்.
இருண்ட காலம்

சமண, புத்த சமயங்கள் கலைகளுக்கு எதிராக செயல்பட்டதால் இருண்ட காலத்தில் நாடகத்தமிழ்
ஒளியிழந்தது.
பல்லவர் கால நாடகங்கள்

நாயன்மார்களும், ஆழ்வார்களும் இசைக் கலைக்கு உயிரூட்டினர். எனினும் நாடகத்துக்கு பெரிய
செல்வாக்கு ஏற்படவில்லை. இக்காலத்தில் மகேந்திர வர்ம பல்லவனின் “மத்தவிலாச பிரகசனம்“ என்ற
நாடகநூல் புகழ்பெற்றிருந்தது. இன்னிசைக்கூத்து, வரலாற்றுக் கூத்து என இருவகை நாடக
மரபுகளும் இக்காலத்தில் இருந்தன.
சோழர் கால நாடகங்கள்

சோழர் காலத்தில் இராஜராஜனின் வெற்றிச்சிறப்பைப் பாராட்டும் “இராஜராஜவிஜயம்“
நிகழ்த்தப்பட்டது. இதில் நடித்தவர்களுக்கு “ராசராச நாடகப்பிரியன் என்று பட்டம் வழங்கினர்
என்பதைக் கல்வெட்டுகள் வழி அறியமுடிகிறது.
தமிழ் நாடகத்தின் எழுச்சி

இசுலாமியர் படையெடுப்புக்குப் பிறகு கலைகளுக்குப் பின்னடைவு ஏற்பட்டது. 17 ஆம்
நூற்றாண்டின் இறுதியில் நாடகங்கள் மீண்டும் புத்துயிர் பெற்று வளரஆரம்பித்தன.
குற்றாலக்குறவஞ்சி, முக்கூடற்பள்ளு, இராமநாடகக் கீர்த்தனை, நந்தனார் சரிதக் கீர்த்தனை ஆகிய
நாடகங்கள் மக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பைப் பெற்றன.

காசி விசுவநாதமுதலியார் அவர்களின் டம்பாச்சாரி நாடகம் தான் முதன்முதலில்
மேடையில் நடிக்கப்பட்ட சமூகநாடகமாகும்.

மேடைநாடக அமைப்புக்கு முன்மாதிரியான, நவாப் கோவிந்தசாமி ராவ் அவர்களை
தமிழ்நாடகத்தின் தாத்தா என்று அழைப்பர்.
தமிழ் நாடக மூவர்
பம்மல் சம்பந்தம் முதலியார், சங்கரதாசு சுவாமிகள், பரிதிமாற் கலைஞர் ஆகிய மூவரையும்
தமிழ்நாடக மூவர் என்று அழைப்பது வழக்கம்.
1.பம்மல் சம்பந்தம் – இவர் எழுதிய மொத்த நாடகங்கள் 93 ஆகும். இவரே தமிழ்நாடகத்தின் தந்தை
என அழைகப்படுகிறார். மேலும் இவரைத் தமிழ் சேக்சுபியர் என்றும் அழைப்பர். இவர்தம் நாடகங்கள்
இன்பியல், துன்பியல், கேளிக்கை, அங்கதம், நையாண்டி, புராணிகம், வரலாறு, மொழிபெயர்ப்பு
எனப் பலதரப்பட்டவையாகும்.
2.பரிதிமாற் கலைஞர் – நாடகம் படித்தல், நடித்தல், இலக்கணம் வகுத்தல் என மூன்று பெரும்
பணிகளை ஆற்றினார். நாடகவியல் என்ற தமிழ்நாடக இலக்கண நூலை இயற்றினார். இவர் படைத்த
நாடகங்களுள் ரூபாவதி, கலாவதி, மானவிஜயம், சூர்ப்பனகை ஆகியன குறிப்பிடத்தக்கனவாகும்.
3.சங்கரதாசு சுவாமிகள்- முறைப்படுத்தப்பட்ட தமிழ்நாடகவரலாறு இவரிலிருந்தே
தொடங்குகிறது. இருபதாம் நூற்றாண்டு நாடகத்துறையை நசிவடையாமல்க் காத்ததால் இவரைத்
தமிழ்நாடகத் தலைமையாசிரியர் எனப் போற்றுவர். அபிமன்யு சுந்தரி, இலங்காதிலகம், கோவலன்,
நல்லதங்காள், பிரகலாதன் உள்ளிட்ட 40 நாடகங்கள் இவர் படைத்தவையாகும்.
தமிழ் நாடகக் குழுக்கள்
பம்மல் சம்பந்தம் முதலியார் – சுகுணவிலாச சபை
சங்கரதாசு சுவாமிகள் - சமரசசன்மார்க்க சபை
சதாவதானம் கிருஷ்ணசாமிப் பாவலர் – பாலமனோகரசபா
என்.எஸ்.கே, பாலாமணி அம்மையார், கே.பாலசந்தர், எஸ்வி.சேகர், விசு ஆகியோரும்
நாடகக்குழுக்கள் வைத்து நாடகம் வளர்த்தனர்.
நாடகங்களின் வகை

நாவல்களைப் போலவே தமிழ்நாடகங்களையும் புராண நாடகம், இலக்கிய நாடகம் துப்பறியும்
நாடகம், வரலாற்றுநாடகம், நகைச்சுவை நாடகம், மொழிபெயர்ப்பு நாடகம், தழுவல் நாடகம், என
வகைப்பாடு செய்ய இயலும் சான்றாக புராண நாடகங்கள், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்
நிறைய தோன்றின. பிரகலாதன், ஐயப்பன், தசாவதாரம், சிறுதொண்டர் ஆகிய நாடகங்கள் அவற்றுள்
குறிப்பித்தக்கனவாகும். இலக்கிய நாடகங்களைப் படித்துமுடித்தவுடன் ஒரு நாடகம் பார்த்த
நிறைவு கிடைக்கும். அவ்வகையில், சுந்தரம்பிள்ளையின் – மனோன்மணீயம், பாரதிதாசனின் –
பிசிராந்தையார், மறைமலையடிகளின்- அம்பிகாபதிஅமாராவதி, அ.ச.ஞானசம்பந்தனின் தெள்ளாறு
எறிந்த நந்தி முதலிய நாடகங்கள் இலக்கி்ய நாடகங்களுள் குறிப்பித்தக்கனவாகும்.
முடிவுரை

இன்றை சூழலில் கல்விச்சாலைகளில் ஓரங்கநாடகம், நாட்டிய நாடகங்கள்
நடித்துக்காட்டப்படுகின்றன, வார, மாத இதழ்களிலும், வானொலி தொலைக்காட்சிகளிலும்
நாடகங்கள் நடித்துக்காட்டப்படுகின்றன. இன்று அதிகமான தொழில்நுட்பங்களோடு நிறைய படங்கள்
வருகின்றன. இவற்றுக்கெல்லாம் முன்னோடியாக அமைந்த மேற்கண்ட நாடகங்களையும் அக்கலையை வளர்த்த
சான்றோர்களையும் தமிழுலகம் என்றும் மறவாது.
இடுகையிட்டது முனைவர் இரா.குணசீலன் நேரம் Sunday, July 28, 2013 Email Post

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
May 11, 2015, 11:54:11 PM5/11/15
to brail...@googlegroups.com
Sunday, May 10, 2015
செய்தித்தாள் எப்படி டிவி ஊடகத்தை ஜெயித்தது?
Newspaper. by inbrainstorm
சின்ன வயதில் எனக்கு செய்திகள் ரொம்ப திராபையான ஒரு விசயமாக தோன்றின. அப்போதெல்லாம்
விளையாட்டு செய்திகள், அதுவும் குறிப்பாக கிரிக்கெட் செய்திகள், மட்டும் தான் படிப்பேன்.
ஏன் விளையாட்டு செய்திகளை முதல் பக்கத்தில் போடுவதில்லை என நான் யோசித்ததுண்டு. இப்போது
அதுவும் நிகழ்ந்து விட்டது. ஆங்கில ஹிந்துவின் முதல் பக்கத்தில் கிரிக்கெட் செய்தி மற்றும்
கிரிக்கெட் பத்தி ஒன்று கூட வருகிறது. வெகுசீக்கிரத்தில் சினிமா சேதிகளும் அது போல்
வரும் என நினைக்கிறேன்.

கொஞ்ச நாள் “மாலைமலரில்” வேலை பார்த்தேன். அது செய்திகள் மீதான என் பார்வையை மாற்றியது.
செய்திகள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு, உருவம் அளிக்கப்படுகிறது என
கவனித்தேன். சில நாட்களில் எங்கள் எடிட்டர் இவ்வாறு அலுத்துக் கொள்வார் “இன்னிக்கு செய்தி
எதுவுமே நல்லா இல்ல, அடச் சே”. பிறகு போக போக நானும் அப்படி யோசிக்க ஆரம்பித்தேன்.
செய்தி நிச்சயம் உண்மையானதாக இருக்க வேண்டும். ஆனால் செய்தியின் முக்கியத்துவம் உண்மையை
அறிவது அல்ல. ஒரு கதை படிக்கிற சுவாரஸ்யம் தான் செய்தியை நோக்கியும் நம்மை ஈர்க்கிறது.
வேலை செய்யும் இடத்தில் கூட்டமாக நின்று புரளிகளை கேட்கிற ஆர்வம் இருக்கிறதல்லவா அது
தான் செய்தியின் வணிக ஈர்ப்பு. இல்லாவிட்டால் தினசரி இவ்வளவு தகவல்களை அறிந்து
மனிதனுக்கு என்ன பயன்?
அப்டேட்டாக இருக்க வேண்டும். அதற்காக படிக்கிறேன் என சிலபேர் சொல்வார். ஆனால் நீங்கள்
அப்டேட்டாக இருக்கிறீர்கள் என யார் அக்கறைப்படுகிறார்கள்? அதற்கெல்லாம் எங்கே நேரம்? சதா
இணையமும் டிவியும் செய்திகளை நம் கண்களில் திணித்துக் கொண்டிருக்கும் சூழலில் அப்டேட்டாக
இருப்பதற்கு எந்த பிரயத்தனமும் தேவையில்லை. கண்களை மூடாமல் இருந்தால் போதும்.
தகவல்கள் தான் முக்கியம் என்றால் ஏன் நேற்றைய செய்திகளை நாம் பொதுவாக சீந்துவது இல்லை?
ஒன்றுக்கு மேற்பட்ட செய்தித்தாள்களை மேய்கிறவர்களுக்கு ஒரே செய்தியின் தகவல்களுக்கு இடையே
நுண்ணிய வேறுபாடுகள் இருப்பதை காண இயலும். தகவல்கள் வேறாக இருக்கின்றனவே என யாரும்
பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. பெயர்கள், இடங்களைத் தவிர யாருக்கும் தகவல்களும் முக்கியம்
அல்ல. சம்பவம் தான். அதுவும் ருசிகரமான சம்பவம்.
சுவாரஸ்யம் என்றதும் தினத்தந்தியின் சதக் சதக் நினைவுபடுத்தப்படும். ஆனால் தெ ஹிந்துவின்
மொழி கூட அடிப்படையில் ஒரு கதையாடலை கொண்டது தான். இப்போதெல்லாம் செய்தித்தாளை
பிரித்துப் படித்தால் எனக்கு ஒவ்வொறு அறிக்கையும் ஒரு கதையாகத் தான் படுகிறது.
உதாரணமாக ஆங்கில ஹிந்துவில் கோலப்பன் அடிக்கடி திமுக வாரிசு அரசியல், போட்டிகள்,
பூசல்கள் பற்றி எழுதுவதை படித்துப் பாருங்கள். “பொன்னியின் செல்வனில்” இருந்து ஒரு
சதியாலோசனை அத்தியாயத்தை பிய்த்து ஆங்கிலத்தில் மொழியாக்கியது போல் பரபரப்பாக இருக்கும்.
மனிதர்களுக்கு தம்மைச் சுற்றி நடக்கிற கதைகளை அறிந்து கொள்ளும் ஆர்வம் மிகுதி.
மிருகங்களுக்கும் தாம். நாய்கள் புழக்கம் உள்ள ஒரு தெருவுக்கு உங்கள் நாயை அழைத்துப்
போனால் அது மிகுந்த ஆர்வத்துடன் மண்ணை முகர்ந்தபடியே வரும். அங்குலம் அங்குலமாய் ஆராயும்.
அதன் மூலம் அங்கு அதிகாரத்தை ஸ்தாபிக்க மூத்திரம் பெய்துள்ள நாய்களை கணக்கெடுக்கும். ஒரு
புதுப்பகுதிக்கு போன உடனே நாய் அங்கு ஏற்கனவே எவ்வளவு நாய்கள் உள்ளன, அவை எப்படிப்
பட்டவை என ஒருவாறு கணித்து விடும். அதனால் தான் வாக்கிங் அழைத்துப் போகிற நாய்களை
தெருநாய்களுக்கு பிடிப்பதில்லை. அவை அங்கங்கே மூத்திரம் பெய்து ஏற்கனவே ஸ்தாபிக்கப்பட்ட
அதிகார வரையறைகளை மறுவரையறை செய்கின்றன. குழப்பம் உண்டு பண்ணுகின்றன. பத்திரிகை
படிக்கிற நாமும் இவ்வாறு முகர்ந்து பார்க்கும் வீட்டு நாயைப் போலத் தான்.
செய்திகளை படிப்பது போன்றே செய்திகளை உருவாக்குவது, அதை பரப்புவது ஆகியவையும்
அதிகாரத்துடன் சம்மந்தபட்டவை. அலுவலகங்கள், டீக்கடைகள், முகநூல், நண்பர்கள் கூடுமிடங்கள்
எல்லாமே செய்திகள் திரிக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்படுவதற்கான களங்கள் தாம்.
பத்திரிகைகள், செய்தி அலைவரிசைகள் இதை திட்டமிட்டு வணிக நலனுக்காக, அரசியல்
ஆதாயத்துக்காக செய்கின்றன. உதாரணமாக திமுக அனுதாபியான ஒரு நண்பர் முன்னர் முகநூலில்
ஒரு செய்தியை பகிர்ந்திருந்தார். ஒரு நள்ளிரவில் அவர் பைக்கில் போய்க் கொண்டிருக்கிறார்.
கடுமையான போக்குவரத்து நெரிசல். அவருக்கு பின்னால் ஒரு ஆம்புலன்ஸ் வீரிட்டலரியபடி
வருகிறது. சிலர் வேண்டாவெறுப்பாக வழிவிடுகிறார்கள். சிலர் முந்திக் கொண்டு
போகிறார்கள். முன்னே போகிற ஒரு கார் சட்டென ஒதுங்கி நின்று கொண்டு ஆம்புலன்ஸை போக
அனுமதிக்கிறது. அக்காரில் ஸ்டாலின் இருக்கிறார். ஸ்டாலின் இவ்வாறு பொதுநல நோக்கு மிக்க
ஒரு நல்ல மனிதர் எனும் செய்தியை நண்பர் பகிர்கிறார். எப்படி காருக்குள் இருந்தவர் ஸ்டாலின்
என நண்பர் அந்த இருட்டான வேளையில் கண்டறிந்தார் என தெரியாது. இது அவருக்கு நடந்ததாகவோ
அல்லது வேறு ஏதாவது நண்பர் தனக்கு நடந்ததாக கூறி அதை நண்பர் தன் செய்தியாக திரித்து
முகநூலில் எழுதியிருக்கலாம். ஆனால் இது போல் செய்திகளை உருவாக்கும் ஆர்வம்
மனிதர்களுக்கு மிகுதியானது. முகநூல், வலைப்பூக்கள் மற்றும் நேரடி அரட்டைகளில் இது போல்
எத்தனையோ செய்திகள் உருவாக்கப்படுவதை நீங்கள் கவனிக்கலாம். இது நாய் ஏற்கனவே மூத்திர
வீச்சம் அடிக்கும் பகுதியில் தன் பங்குக்கு காலை தூக்கி தீர்த்தம் தெளிப்பது போன்றது.
செய்தித்தாளில் முழுக்க படிக்க வேண்டியதில்லை என்பதை நான் சற்று தாமதமாகத் தான் கற்றுக்
கொண்டேன். அதனாலே எனக்கு அது ஆரம்பத்தில் அலுப்பூட்டியது. பிறகு தான் ஒவ்வொரு நாள்
செய்தித்தாளின் உள்ளும் நமக்கான ஒரு தனி செய்தித் தாள் ஒளிந்துள்ளதை கவனித்தேன். தினமும்
அதைத் தவறாமல் படித்து விடுவேன். நிறைய நேரம் இருந்தால் அங்குலம் அங்குலமாக ஒவ்வொரு
செய்தியையும் படிப்பேன். ஆனால் அனைத்து செய்திகளும் நமக்கானவை அல்ல.
செய்தி அறிக்கையின் வடிவமும் சுவாரஸ்யமானது. சில செய்திகளுக்கு தலைப்பை தாண்டி எந்த
முக்கியத்துவமும் இல்லை என அதன் எடிட்டரே நன்கு உணர்ந்திருப்பார். நாமும் படம் பார்த்து
தலைப்பை வாசித்து கடந்து விடலாம். உள்ளே ஒன்றும் இருக்காது. முதல் பத்திக்கு மேல்
எதுவும் இல்லாத அறிக்கைகள் உள்ளன. தந்தியில் இவற்றை அதிகமும் பார்க்கலாம். ஏனென்றால்
அறிக்கையின் முக்கிய அங்கமான கதையை தலைப்பு, படம் மற்றும் உபதலைப்புகள் மூலம்
முழுவதுமாய் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். மிச்சம் எல்லாம் “இப்படியான மரத்தை தான் அசோகர்
நட்டார்” வகையாகத் தான் இருக்கும்.
இன்னும் சில செய்திகளுக்கு ஒரு தொடர்ச்சி உருவாக்கப்பட்டு சுவாரஸ்யம் உண்டு பண்ணப்படும்.
ஆங்கில ஹிந்துவில் தொடர்ச்சியாக வந்த தானே தீப்பற்றி எரியும் குழந்தை பற்றின அறிக்கைகள்
உதாரணம். பெருமாள் முருகன் செய்திகளும் மற்றொரு உதாரணம். பெருமாள் முருகன் மிக
சமீபமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனு உட்பட ஹிந்துவில் பிரசிரித்துக்
கொண்டிருந்தார்கள். ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் அவர்களால் அச்செய்திக்கு உயிரளிக்க
முடியவில்லை. இது போன்ற தொடர் செய்திகளின் வளர்ச்சி ஒரு தொடர்கதை போன்றே இருக்கும்.
“மாலைமலரில்” குறுஞ்செய்தி மூலமாக செய்திகளை பிரசுரிக்கும் ஒரு பிரிவு
துவங்கினார்கள். அதற்காக நான் சில செய்திகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அளித்தேன்.
தினசரி வெளியாகும் சோதிட பத்தியை எனக்கு அளித்தார்கள். திருவல்லிக்கேணியை சேர்ந்த ஒரு
சோதிடர் தான் எழுதி வந்தார். அதை மொழிபெயர்க்க மொழிபெயர்க்க ஒரு விசயத்தை கவனித்தேன்.
ஒவ்வொரு ராசிக்கும் ஒரு குறிப்பிட்ட ராசியின் பலனை, அதன் பிரச்சனைக்கான தீர்வை
கொடுத்திருப்பார். ஒரு ராசிக்கான பலன் அடுத்த வாரம் அடுத்த ராசிக்கு போய் விடும்.
கொஞ்சம் கலைத்துப் போட்டு வாராவாரம் அதே ராசிபலனைத் தான் அவர் அனுப்பிக் கொண்டிருந்தார்.
மனிதர்களுக்கு அடிப்படையான பிரச்சனைகள் என அவர் சிலவற்றை வகுத்திருந்தார். தனம், நலம்,
குடும்ப நிலைமை, எதிர்பாராத பயணம் இப்படியான சில விசயங்கள். எப்படியும் எல்லாருக்கும்
மாறி மாறி இது குறித்த கவலைகள் தானே. இந்த உளவியலை வைத்து அவர் காய் நகர்த்திக்
கொண்டிருந்தார். இதைத் தனித்தனியாக வாசித்தால் கண்டுபிடிக்க முடியாது. மூன்று, நான்கு
வார ராசி பலன்கள் மொத்தமாக எனக்கு கிடைத்ததால் பிடிபட்டது. எனக்குத் தோன்றியது –
எதற்கு இதைப் போய் மாங்குமாங்கென்று ஒவ்வொரு முறையும் மொழியாக்க வேண்டும்? ஒரு வாரம்
மொழிபெயர்த்தை அடுத்த வாரம் சற்றே மாற்றுவேன். ஒரு ராசிக்கான பலனை இன்னொன்றில்
பொருத்துவேன். சில சொற்களை மட்டும் புதிதாய் புகுத்தி கொடுத்து விடுவேன். அவ்வளவு
தான். என் வேலை சுளுவாக முடியும். நான் இருந்தது வரை இது குறித்து யாரும் சந்தேகம்
எழுப்பவில்லை. அந்த சோதிடரே படித்துப் பார்த்தால் கூட சந்தேகம் எழாது. கவனமாய் இரண்டு
பிரதிகளை வைத்து ஒப்பிட்டால் மட்டுமே கண்டுபிடிக்க இயலும். அதனால் தான் எனக்குத் தோன்றும்
செய்தித்தாளில் வருகிற சோதிடப் பக்கம் ரொம்ப சுவாரஸ்யமான பகுதி என. மனித உளவியலை
நன்கு புரிந்து கொண்ட ஒருவர் தான் அதை நன்றாக தொடர்ந்து மக்கள் படிக்கும்படி எழுத முடியும்.
ஒரு செய்தி அறிக்கை எழுதுவது ஒரு தனியான கலை. கட்டுரை எழுதுவதை விட சிரமமானது.
டெக்கான் கிரானிக்கல், இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற பத்திரிகைகளின் கோணல்மாணலான அறிக்கைகளை
படிக்கிறவர்களுக்கு அது இன்னும் நன்றாக புரியும். நல்ல அறிக்கை எழுத கூர்மையான மனம்
வேண்டும். செய்திகளை முக்கியத்துவத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்தி எளிமையாக தருவது
எளிதான காரியம் அல்ல. அதை விட சிரமம் ஒரு அறிக்கையை கதை போல எழுதுவது, ஆனால் இது
கதை அல்ல செய்தி எனும் உணர்வையும் அதேவேளை வாசகனுக்கு அளிப்பது. இது ரொம்ப ரொம்ப
முக்கியம். எக்ஸ்பிரஸ், கிரானிக்கலின் பலவீனம் அறிக்கைகள் கதையாக வெகுஎளிதில் பல்லிளித்து
விடும் என்பது. அதாவது எல்லாமே கதை தான், ஆனால் தகவல்களை நாம் தருகிற விதத்தில் ஒரு
வறட்டு கரார்தனம் அதில் தொனிக்க வேண்டும். சிரிக்காமலே டைமிங் நகைச்சுவை சொல்வது போன்ற
கெட்டிக்காரத்தனம் அது.
ஆங்கில ஹிந்து பத்திரிகையின் செய்தி உருவாக்கத்தில் ஒரு முக்கியமான மாற்றத்தை கடந்த
ஐந்து வருடங்களில் கவனித்திருப்பீர்கள். இப்போதெல்லாம் வறட்டு அதிகார பூர்வ செய்திகளை விட
பரபரப்பான, சற்றே உணர்ச்சிகரமான செய்திகளுக்கு தான் அதிகமாய் முன்னணி இடம்
அளிக்கிறார்கள். இதை நான் ஒரு வீழ்ச்சியாகப் பார்க்கவில்லை. முக்கியமான செய்தி என்றால்
எது? ஒரு ஊழல் வெளிப்படும் தருணம், பட்ஜெட் அறிக்கை, வெளியுறவுத்துறை அமைச்சர்களின்
துடுக்குத்தன அறிவுப்புகள், எதிர்க்கட்சியுடனான ஆளுங்கட்சி மோதல்கள் இவையெல்லாமே
சுவாரஸ்யமான கதைகள் தாமே. அறிவார்ந்த முக்கியத்துவம் கொண்ட எந்த பகுதியும் இவற்றில்
செய்திக்குரியது ஆகாது. அதை நடுப்பக்க அலசல் கட்டுரையில் மட்டுமே பேச முடியும்.
“பிரதமர் பாகிஸ்தானை எச்சரித்தார்” என்பதிலும் ஷஷிதரூருக்கு பாகிஸ்தானிய
பத்திரிகையாளருடன் கள்ள உறவா எனும் கேள்வியிலும் ஒரே நாடகிய மோதல் தானே இருக்கிறது!
ஒன்று இரு நாடுகளுக்கு இடையிலானது, இன்னொன்று ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலானது.
“மாலைமலரின்” மொழியாக்க பிரிவில் இருக்கையில் அலுவலகம் முடிய இரவு பதினொரு
மணியாகும். அப்போது நிருபர்கள் அனைவருக்கும் ஒரு செல்போன் வாங்கி அளித்தார்கள். எந்த
செய்தி வந்தாலும் உடனே அழைத்து எடிட்டர் அல்லது துணை எடிட்டரிடம் அவர்கள் சொல்லி விட
வேண்டும். தந்தியின் நிருபர்கள் ரொம்பவே கெட்டிக்காரர்கள், அனுபவசாலிகள் மட்டுமல்ல
ஆர்வக்கோளாறு மிக்கவர்களும் கூட. போன் சதா கிணுகிணுத்துக் கொண்டே இருக்கும். சில்லறை
செய்திகள் திருப்பதி உண்டியலில் போல கொட்டிக் கொண்டே இருக்கும். இது எங்களுக்கு
தலைவலியாக மாறியது. ஒருநாள் இரவு நாங்கள் கிளம்புவது எத்தனமாகிக் கொண்டிருந்தோம்.
மணி பத்தே முக்கால் இருக்கும். ஒரு கிராமத்தில் இருந்து ஒரு நிருபர் அழைத்து
சுருக்கமாக ஒரு செய்தி சொன்னார். மாலை நான்கு மணி அளவில் ஒருவர் தன் பக்கத்து வீட்டு
பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்து அப்பெண்ணுடன் சரசத்தில் ஈடுபட்டார். கதவை சாத்த மறந்ததால்
அவரது கணவன் வந்ததும் மாட்டிக் கொண்டார். பெரிய பிரச்சனையாகி விட்டது. இது தான்
செய்தி. எடிட்டர் கோபத்தில் அதை போட முடியாது என்று விட்டார். அப்போது யோசிக்க இந்த
அற்ப செய்தி எனக்கு ரொம்ப தமாஷாக பட்டது. இப்போது யோசித்தால் இச்செய்தியில் எந்த தவறும்
இல்லை எனத் தோன்றுகிறது. இதை செய்தவர் ஒரு உள்ளூர் அரசியல்வாதியோ தொழிலதிபரோ என்றால்
அது சட்டென முக்கியத்துவம் பெற்றதாகி விடும். சஷிதாரூர் என்றால் முதல் பக்கத்திலேயே
வந்து விடும். வெறும் குப்புசாமி என்றால் வராது. ஆனால் செய்தி ஒன்று தானே. இது போன்ற
ஒரு சந்தர்ப்பம் வாழ்க்கையில் வந்தால் என்னவாகும் என அறிய ஒரு வாசகனுக்கு ஆர்வம் இருக்கும்
தானே? இதை கொஞ்சமே கொஞ்சம் திரித்து வழக்கை போலிசார் விசாரித்து வருகிறார்கள் எனப்
போட்டால் முழுசெய்தியாகி விடும். அல்லது இரு குடும்பத்தினருக்கும் ஏற்கனவே தகராறு
இருந்து வருகிறது என்றால் அச்செய்தி மேலும் பிரசுரத்தகுதி கொண்டதாகும். அடிப்படையில்
எந்த செய்திக்கும் தேவை பின்னணி தான். பின்னணியை பொருத்தினதும் ஒரு கதை ஒரு
செய்தியாகிறது.
ரெண்டாயிரத்தின் துவக்கத்தில் டிவி ஊடகம் பெரும் வளர்ச்சி அடைய அது அச்சு செய்தி
ஊடகத்துக்கு கொள்ளி வைத்து விடும் என பயந்தார்கள். ஆனால் செய்தித்தாள்கள் பிழைத்தது
மட்டுமன்றி இன்று பல்கி பெருகி உள்ளன. உடனுடக்குடன் அறிவது தானே செய்தியின்
முக்கியத்துவம். ஆனால் ஆறிப் போன செய்தியை அடுத்த நாள் வாங்கி ஏன் மக்கள் வாசிக்கிறார்கள்?
அதுவும் இன்று இணையம் டிவியை முந்திக் கொண்டு நமக்கு செய்திகளை உடனுக்குடன்
பகிர்கின்றது. முக்கியஸ்தர்களின் டிவிட்டர் அறிவிப்புகளை அடுத்த நொடியே படிக்கிறோம்.
ஆனால் அவை அடுத்த நாள் தான் அச்சு பத்திரிகையில் பிரதான சேதியாக வெளியாகின்றன.
இச்சூழலில் செய்தித்தாள்கள் எப்படி தாக்குப்பிடிக்கின்றன?
இங்கு தான் செய்தியின் சூட்சுமம் உள்ளது. செய்தி என்பது உடனுக்குடன் அறிய வேண்டிய
வஸ்து என்று டி.வி மீடியா தவறாக புரிந்து கொள்கிறது. உடனுக்குடன் செய்தியை
அளிப்பதும், அதிகமாய் காட்சிகளை ஒளிபரப்புவதும்வே அலைவரிசைகளின் முன்னிரிமை. இது
செய்தியின் கதைத்தன்மையை கொன்று விடுகிறது. செய்தி என்பது உயிரற்ற ஒரு பொருளை
பெயர்த்து குப்பிகளில் அடைத்து அடுக்கியதாக டி.வி செய்தியில் மாறுகிறது. அதுவும்
உடனுக்குடன் ஒரு செய்தியின் தகவல்கள் அப்டேட் ஆவதும், புதுபுது செய்திகள் இடத்தை
ஆக்கிரமிப்பதும், ஏகப்பட்ட நிபுணர்களின் வாதபிரதிவாதங்கள் ஏற்படுத்தும் குழப்பமும்
செய்தியின் மிச்சசொச்ச ஆன்மாவையும் கொன்று விடுகிறது. இதனாலே இன்றும் ஒருநாள் பழைய
செய்தியை அடுத்த நாள் பத்திரிகையில் ஒரு கோர்வையான தெளிவான கதையாக வாங்கிப்படிக்க
மக்கள் விரும்புகிறார்கள். மக்களின் கதை கேட்கும் ஆர்வத்தின் நீட்சி தான் செய்தி வாசிப்பது
என்பதற்கு இதைவிட சிறந்த சான்று வேறு இராது. ஒரு சிறந்த சேதி நிருபர்களால் அவசர
அவசரமாக மைக் பிடித்து எச்சில் முழுங்கி துப்பப்படும் துண்டு தகவல்களால் உருவாவதில்லை.
ஒரு நல்ல சேதி ஒரு கைதேர்ந்த எடிட்டரின் புரிதல் மற்றும் பார்வையால் வடிகட்டப்பட்டு
உருவாகிறது.
செய்தித்தொகுப்பு எனும் வடிவத்திலும் டி.வி மீடியாவால் சோபிக்க முடியவில்லை.
அடிப்படையில் எதற்கும் பொறுமையின்மை எனும் நிலை அங்குள்ளதால் டி.வி மீடியாவால்
எதிர்காலத்திலும் மக்களின் செய்தி ஆர்வத்துக்கு முழுமையாக தீனிபோட இயலாமல் போகும்.
உண்மையில் மற்றொரு செய்தி ஊடகமாக, கிட்டத்தட்ட செய்தித்தாளுக்கு நெருங்கி வரும்
சாத்தியமும் களமும் இணையத்தில் உண்டு. ஆனால் இணையத்தில் செய்திகள் உருவாக்கப்படாமல், டிவி
மீடியா உருவாக்கும் செய்திகள் அங்கு விவாதிக்கப்படுகின்றன. வெளியே சொல்ல முடியாத
திருட்டுத்தனமான செய்திகள், புரளிகள் பிரசுரிக்க இணையதளங்கள், முகநூல் பக்கங்கள் உள்ளன.
ஆனால் ஒரு ஊரின் தனித்துவமான செய்திகளை ஒரு சின்ன குழுவாக சேகரித்து மிக சுலபமாக
ஒரு செய்தித்தாளை இணையத்தில் நடத்த இயலும். முகநூலில் உடனுக்குடன் அப்டேட் செய்ய இயலும்.
அதன் மூலம் விளம்பரங்கள் நாடி வணிக நலனும் பெற முடியும். ஆனால் இப்போதைக்கு இணைய
பதிவர்கள் இவ்விசயத்தில் கவனம் செலுத்தவில்லை.
ஓட்டப்பந்தயத்தில் முயலை தோற்கடித்த ஆமையாக டி.வி, டிவிட்டர், முகநூல் ஆகியவற்றுடன்
போட்டியிடாமல் அவற்றின் மூலம் செய்திகளை சுலபமாக திரட்டி செய்தித்தாள்கள் வளர்ந்து
வருகின்றன. முன்னெப்போதையும் விட இன்று செய்திக்கட்டுரைகள் எழுதுவது, பேட்டி எடுப்பது
நிருபர்களுக்கு எளிதாகி விட்டது. இன்னொரு புறம் தினசரி ஏதாவது ஒரு தலைப்பை
கண்டடைந்து, பேச ஆட்களை தேடி ஒரு விவாத நிகழ்ச்சி நடத்த டிவி ஒருங்கிணைப்பாளர்கள்
மூச்சு வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
“நீயா நானா” வெற்றி கண்டதற்கு ஒரு காரணம் அது டி.விக்குள் பத்திரிகை செய்தியின்
சூட்சுமத்தை உணர்ந்து வெளிப்படுத்தியது; ஒரு ரியாலிட்டி ஷோ வடிவில் மக்களை பேச வைத்து
அவர்களிடம் இருந்து செய்திகளை கதையாக அந்நிகழ்ச்சி உருவாக்கினது. மக்களின் செய்தியை
அது அம்மக்களிடமே விற்கிறது. அது அடிப்படையில் கவர் ஸ்டோரி வடிவை மிக அழகாக
காட்சிப்படுத்துகிறது. பொறுமையாக ஒரு செய்தியை எடுத்துக் கொள்கிறது. உதாரணமாக,
மருத்துவமனைகள் இன்று மக்களை கொள்ளையடிக்கின்றனவா? இச்செய்தியினுள் பல இழைகளை பிரித்து
மெல்ல மெல்ல இறங்கி செல்கிறது. ஒரு செய்திக்குள் பல செய்திகள், கதைகள் என விரிகிறது.
ஆதாரங்கள், உண்மைக்கதைகள் என செய்தியை வலுவாக்கிறது. இறுதியாக சிறப்பு விருந்தினர்
மூலம் ஒரு வித்தியாசமான பார்வையை செய்திக்கு அளிக்கிறது. இந்த பொறுமையும், மெல்ல
மெல்ல ஒரு கதையை நம்பகத்தன்மையுடன் கட்டியெழுப்பும் லாவகமும் பிற டி.வி செய்தி
நிகழ்ச்சிகளில் இல்லை. “நீயா நானா” அடிப்படையில் ஒரு விவாத நிகழ்ச்சி அல்ல. அது ஒரு
நவீன வில்லுப்பாட்டு. ரியாலிட்டு ஷோ தன்மை கொண்ட கூத்து நாடகம். இதை உணராமல் இதன்
அச்சில் சில விவாத நிகழ்ச்சிகளை பிற அலைவரிசைகள் உருவாக்கி தோல்வி கண்டன. மாலையானால
உட்கார்ந்து கதை கேட்க இன்றும் மனித மனம் ஏங்குகிறது. அந்த ஏக்கத்தை “நீயா நானா” நிறைவு
செய்கிறது.
எதிர்காலத்தில் செய்தித்தாளின் வடிவம் முழுக்க மாறும் என்கிறார்கள். ஒவ்வொரு
வாடிக்கையாளனுக்கும் அவனது தேவை, விருப்பம், வாழ்க்கைப்பார்வையை ஒட்டி தனியாக
தேர்ந்தெடுத்த செய்திகள் இணையம் மூலம் தனி பிரதியாக கொடுக்கப்படும் என ஊகிக்கிறார்கள்.
இன்று முகநூல் மற்றும் மின்னஞ்சல் நிறுவனங்கள் நமது இணைய புழங்கல் வரலாற்றைக் கொண்டு
நமக்கேற்ற பொருட்களை நம்மிடம் சந்தைப்படுத்த முயல்கிறதை பார்க்கிறோம். இதன் அடுத்த கட்டம்
தான் இப்படி தனிமனித தன்மை கொண்ட பிரத்யேக செய்தித்தாள் எனும் கனவு. ஒவ்வொரு பிரதியும்
அவரவர் ஆர்வம், தேவை பொறுத்து தனித்துவமானதாக இருக்கும். மென்பொருள் மூலம் இது
சுலபமாக சாத்தியப்படும் என நினைக்கிறேன். எனக்கு கிரிக்கெட், அறிவியல், சினிமா
பிடிக்கும் என்று கொள்ளுங்கள். இந்த பிரிவுகளுக்கு உள்ளே சில குறிப்பிட்ட செய்திகளை
அதிகம் வாசிப்பேன். குறிப்பிட்ட ஆளுமைகள், கட்சி, நிறுவனங்கள், பொருட்கள், பண்டங்கள் பற்றி
எனக்கு குறிப்பான செய்திகள் வேண்டும். இவை மட்டுமே என் மின் செய்தித்தாளில் இருக்கும்.
ஆனால் இந்த வடிவம் வெற்றி பெறுமா என்பது சந்தேகம் தான். எனக்கு ஒரு செய்தி வந்தால் நான்
பிறரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். பிறரும் அதை அறிந்து வைத்திருக்க வேண்டும். இந்த
இரண்டு சாத்தியமும் இல்லாவிட்டால் அது செய்தியே அல்ல. செய்தி படிக்கும் தேவைக்குள்
கூட்டாய் கதைகேட்கும் சுவாரஸ்யம், வேட்கை, விழைவு செயல்படுகிறது. அதனாலே
எதிர்காலத்திலும் நாம் ஒரே மாதிரியான, அனைவரும் விவாதிக்கக் கூடிய, சமூகத்தின்
மனசாட்சியை ஒரேமாதிரி உலுக்குகிற, ஒரே சமூக செண்டிமெண்டுகளை தொட்டுணர்த்துகிற, ஒரே
சமூக அச்சத்தை கிளர்த்துகிற செய்திகளை நாடிப் படித்துக் கொண்டிருப்போம்.

செய்தி வடிவம் மனித மனதை போன்றே புராதனமானது. ஒரு ஆண் ஒரு பெண்ணைக் முதலில் கண்டதும்
உடனடியாய் எங்கே பார்ப்பான் என்பதைப் போன்றே எந்த செய்தியை நோக்கி மனம் செல்லும் என்பதும்
எந்த காலத்திலும் மாறப் போவதில்லை.
(நன்றி: அம்ருதா, ஏப்ரல் 2015)
Posted by Abilash Chandran at 1:06 AM Email Post

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
May 11, 2015, 11:54:20 PM5/11/15
to brail...@googlegroups.com

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
May 12, 2015, 12:03:28 AM5/12/15
to brail...@googlegroups.com
Saturday, May 9, 2015
ஏன் தனியார்மயத்தை தவிர்க்க இயலாது?
Image result for engineering colleges in tamilnadu
என்னுடைய அருந்ததி ராய் கட்டுரையை ஒட்டி இக்கேள்வியை பின்னூட்டத்தில் ஒரு நண்பர்
கேட்டிருந்தார். என் சிற்றறிவுக்கு எட்டின வகையில் பதிலளித்து விடுகிறேன்.

தனியார் மயமாக்கத்தின் நற்பலன்களை நான் நேரடியாக வாழ்வில் அனுபவித்திருக்கிறேன். என்
மென்பொருள் நண்பர்கள் இதை என்னை விட நன்றாக அனுபவித்தவர்கள். நான் ஆங்கிலம் படித்தவன். நான்
படிக்கிற காலத்தில் அதற்கு சற்றும் மதிப்பில்லை. அப்படிப்பை நான் தேர்கிற வேளையில் ஊரில்
ஒரு ஐம்பது பேர்களாவது என்னை திசை மாற்றி விட முயன்றார்கள். நான் படித்து முடித்து
ஏதாவது ஒரு கல்லூரியில் மூவாயிரத்துக்கோ அல்லது பள்ளியில் ரெண்டாயிரத்துக்கோ தான் வேலை
செய்ய வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தேன். அந்த வேலைகளுக்கே அப்போது ஆயிரம்
போட்டிகள். ஆனால் என் படிப்பை முடித்ததும் ஊரில் உள்ள வேலைகள் பொறுக்க முடியாமல்
சென்னைக்கு வந்தேன். வந்த மூன்றே நாட்களில் எனக்கு வேலை கிடைத்தது. தொடர்ந்து வேலைகள்
மாற மாற சம்பளம் அதிகரித்தது. காரணம் திடீரென உலகமயமாக்கல் உருவாக்கின விரிவினால்
இங்கு பல தரப்பட்ட வேலைகள் முளைத்தது. ஏதாவது ஒரு பட்டம் முடித்தால் வேலை எனும் நிலை
இப்போதும் உள்ளது. எண்பது தொண்ணூறுகளில் நீங்கள் பிச்சை மட்டுமே எடுக்க இயலும். ஒரு சின்ன
சதவீதத்தினர் மட்டும் தேர்வெழுதி அரசாங்க, வங்கி வேலைகளுக்கு செல்வர். தனியார்மயமாக்கலை
எதிர்க்கிற பலரும் அதனால் பயன்பெற்றிருக்கிறோம்.
ஏன் பல மலையாளிகள் சென்னையை முகாமிடுகிறார்கள் என நீங்கள் யோசித்ததுண்டா? பிரித்திவ்
ராஜ் எனும் நடிரை கேள்விப்பட்டிருப்பீர்கள். தமிழிலும் சில படங்கள் செய்திருக்கிறார். நல்ல
வசதியான குடும்பத்தை சேர்ந்த அவர் கூட எங்கள் ஊரில் உள்ள ஒரு எளிய பொறியியல்
கல்லூரியில் தான் படித்தார். பின்னர் அவர் தான் அமெரிக்காவில் படித்ததாய் பீற்றிக் கொண்டது
வேறு கதை. ஆனால் கணிசமான மலையாளி இளைஞர்களும் இளம்பெண்களும் படிப்புக்காகவும்
வேலைக்காகவும் தமிழகத்தை நோக்கி படையெடுக்கிறார்கள். ஏனென்றால் கேரளாவில் போதுமான
கல்வி நிறுவனங்களோ தனியார் நிறுவனங்களோ இல்லை. அவர்கள் தமிழர்களைப் போல
தனியார்மயமாக்கலை எளிதில் தழுவிக் கொள்ளவில்லை. நீங்கள் திருவனந்தபுரம் போய் பார்த்தீர்கள்
என்றால் அது சென்னை புறநகரின் வளர்ச்சியடையாத பகுதி போல் இருக்கும். ஆனால் அங்குள்ள
மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு உண்டு. நம்மை விட அதிகம் உண்டு. நிறைய போராட்டங்களில்
ஈடுபடுவார்கள். பத்திரிகை படித்து எளிய மக்களும் விவாதிப்பார்கள். ஆனால் அதனால் மட்டும்
பலனில்லை. எப்போதும் ஒரு பெரும் பிரச்சனை இருக்க வேண்டும். அதனோடு மோதும் சக்தியும்
நமக்கு இருக்க வேண்டும். அப்போது தான் விளைவாக பல நன்மைகள் விளையும். கேரளாவில்
தனியார்மயமாக்கலுக்கு எதிரான அரசியல் இருக்கிறது. ஆனால் போதுமான தனியார்மயமாக்கல்
இல்லை. அதனால் அங்கே போதுமான மோதல் இல்லை. வளர்ச்சியும் இல்லை.
இந்த மோதலை நான் ஒரு சமரசம் என புரிந்து கொள்கிறேன். தனியார் மயமாக்கல் என்பது
வெறுமனே எதிர்மறைகளை மட்டும் உள்ளடக்கின ஒரு ராட்சஸன் அல்ல. அது ஒரு காலப்போக்கு.
சமூக பொருளாதார அழுத்தங்களால் விளைந்த ஒரு விசை. அது வரலாற்று நகர்வு. உங்களால் ஒரு
காருக்குள் இருந்தபடியே அதை கைகளால் உந்தி தள்ள முடியுமா? முடியாது. ஆனால் இறங்கித்
தள்ளலாம். அதே போல் தனியார் மயமாக்கலின் உள்ளே இருந்தபடியே அதை தடுக்க முடியாது.
காலத்தின் வெளியே இறங்கி அதைத் தள்ளி விடவும் மனிதனால் இயலாது.
நம்முடைய சிக்கல் நாம் தனியார் மயமாக்கலை எந்த உரையாடலும் இன்றி ஏற்றுக் கொண்டோம் என்பது.
அதன் பலன்களை நாம் முழுக்க இன்னும் அனுபவிக்கவில்லை என்பது. நம் நிலங்களை தனியார்
பறிக்கவும் நீரை மாசுபடுத்தவும் அனுமதிக்கிறோம். இதற்கு காரணம் நம்மிடையே போதுமான
அரசியல் பங்களிப்பு இல்லை. அரசாங்க எந்திரத்தை மக்கள் அதன்பாட்டுக்கு இயங்க விடுகிறார்கள்.
மக்களுக்கு அதிகமாய் அரசியல் புரிதல் ஏற்பட்டால் தான் தனியார் மயமாக்கலை அவர்களால் கையாள
முடியும். அதனுடன் பேச்சுவார்த்தைகள் செய்து அதன் தீமைகளை குறைத்து நன்மைகளை பெருக்க இயலும்.
இன்று முன்பிருப்பதை விட ஊழல்கள், பொருளாதார பிரச்சனைகள், நிலப்பறிப்பு போன்ற தனியார்
சதித்திட்டங்கள் வெகுசீக்கிரமாய் மக்களை போய் சேர்கின்றன. எழுபது, எண்பதுகளிலும் ஊழல்
இருந்தது. ஆனால் அன்று மீடியா வலுவாய் இல்லாததால் இவ்வளவு பரவலாய் செய்திகள் போய்
சேரவில்லை. மோடி மீடியா பிரச்சாரம் வழியாகவே காங்கிரஸ் அரசை சாய்த்துக் காட்டினார்.
நாளை மோடியின் சீரழிவை இதே பிரச்சாரம் வழியாய் வெளிப்படுத்தி அவரையும் வீழ்த்திக்
காட்டுவார்கள். போன முறை தி.மு.க வீழ்ந்ததற்கு மீடியா ஒரு முக்கிய காரணம் என
நினைக்கிறேன். தனியார் மயமாக்கல் மக்களின் அரசியலாக்கத்திற்கு ஒரு மிகச்சின்ன அளவிலேனும்
பயன்பட்டிருப்பதாய் நினைக்கிறேன்.
இங்கே மக்களுக்கு போதுமான தொழில்நுட்ப கல்வி வழங்க அரசு நிறுவனங்கள் இல்லாததனால் தானே
இந்தளவுக்கு பொறியியல் கல்லூரிகள் பெருகின. கிராமத்து பள்ளிகளில் இருந்து இவற்றில்
சேர்ந்து படித்தவர்கள் தான் இன்று தனியாரில் கைநிறைய சம்பாதிக்கிறார்கள். இக்கல்லூரிகள்
தோன்றவில்லை எனில் இவர்கள் எங்கு போயிருப்பார்கள்? ஆனால் நாம் இக்கல்லூரிகளின் தரத்தையும்
இவை வசூலிக்கும் அநியாய கட்டணங்களையும் பற்றி கவலைப்படவில்லை. அதனால் தான் கல்வித்தரம்
வீழ்ந்தது. இக்கல்லூரிகளைக் கண்டித்து அன்றே போராடாதது யார் தவறு? நம் தவறு தான்.
பள்ளிகளை எடுத்துக் கொள்வோம். அந்தஸ்துக்காகவும் ஆங்கிலத்துக்காகவும் தான் பலர் பிள்ளைகளை
தனியாருக்கு அனுப்புகிறார்கள் எனும் வாதம் பரவலாக உள்ளது. இது உண்மை அல்ல.
அரசுப்பள்ளியை விட தனியாரில் பாடத்திட்டம் இன்னும் வலுவாக உள்ளது. உதாரணமாய் ஒரு
ஒன்றாம் வகுப்பு மாணவனுக்கு பத்தாம் வகுப்புக்கான ஆங்கில இலக்கணம் கற்பிக்கிறார்கள். இது
அவசியமற்றது தான் என்றாலும் இம்மாணவர்களால் ஓரளவு சமாளிக்க முடியும் என்றால் பத்தாம்
வகுப்பு வரும் போது அவர்களது கல்வித்திறன் வெகுவாய் வளர்ந்திருக்கும். அழுத்தத்திற்கு
ஏற்றாற் போல் வளர்வது, தகவமைவது அடிப்படையான மனிதத் திறன். அதனால் அழுத்தம் ஓரளவுக்கு
நல்லது தான்.
இதில் இரு பார்வைகள் உள்ளன. ஒன்று அறிவுத்திறன் மிக்க கூர்மையான மாணவர்களை
உருவாக்குவது. இன்னொன்று சுதந்திரமாய் சிந்திக்கும் கற்பனை வளம் கொண்ட மாணவர்களை
உருவாக்குவது. தனியார் பள்ளி மாணவர்கள் கொஞ்சம் பிராயிலர் கோழி போல் இருக்கிறார்கள்.
சொந்தமாய் தவறுகள் செய்து முன்னேறுவதற்கான சாத்தியங்கள் அங்கு குறைவு. எல்லா பக்கமும்
ஆதரவுகள் தருவது வளர்ச்சிக்கு நல்லதல்ல. நான் ஐந்தாம் வகுப்பு வரை தனியாரிலும், அதற்கு
மேல் 12 வரை அரசுப்பள்ளியிலும் படித்தவன். அரசுப்பள்ளிகள் நிறைய சுதந்திரத்தையும்
பலதரப்பட்ட மக்களை பார்த்து பழக வாய்ப்பினையும் அளிக்கும். பண்பாட்டு கோணத்தில் பார்த்தால்
அரசுப்பள்ளியே நல்லது. அறிவையும் திறனையும் கணக்கில் கொண்டால் தனியார் நல்லது.
ஆனால் எதுவும் முற்றுமுழுதானது அல்ல. அரசுப்பள்ளியில் படித்தும் கூட வீட்டில் நிறைய
வாசிக்கிற மாணவன் தன்னை பெரிய அளவில் மேம்படுத்துக் கொள்ள இயலும். நல்ல கல்வி பள்ளிக்கு
வெளியில் தான் கிடைக்கும் என்பது என் நம்பிக்கை. என்னை போன்ற பண்பாட்டு ஆதரவாளர்கள்
இப்படித் தான் வெகுகாலமாய் சொல்லி வருகிறோம். ஆனால் நடைமுறை சார்ந்து யோசிக்கிறவர்கள்
ஒரு நிறுவனத்துக்கு நேர்முகத்தேர்வுக்கு சென்று வெல்லும் திறன் தம் பிள்ளைகளுக்கு
கிடைக்குமா என்றே கேட்கிறார்கள். தனியாரில் இவ்விசயத்தில் அதிக ஆதரவும் கட்டமைப்பு
வசதியும் தருகிறார்கள். நான் படித்த பள்ளியில் ஒரு நூலகம் இல்லை. கர்நாடகாவில் ஒரு
சிற்றூரில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு போயிருந்தேன். அங்கு ஒன்றாம் வகுப்பு
பிள்ளைகளுக்கு என மிக அழகான நூலகம் வைத்திருக்கிறார்கள். திருச்சி எஸ்.ஆர்.வி பள்ளியில்
பத்தாம் வகுப்பு வரையிலான பிள்ளைகளுக்கு பத்திரிகையே நடத்தி அதில் எழுத வைக்கிறார்கள்.
பல அறிவுஜீவிகளை, எழுத்தாளர்களை அழைத்து வந்து பேச வைக்கிறார்கள். ஆனால் இவையின்றியும்
குழந்தைகள் சிறப்பாய் வளர முடியும் தான். ஆனால் பொதுமக்கள் அதிக வாய்ப்புகளை தம்
பிள்ளைகள் பெறுவதைத் தானே விரும்புவார்கள்.

தனியார்மயமாக்கல் விவாதத்தில் நான் ஊசிமுனை அளவுக்கு தான் இங்கு தொட்டுப்
பேசியிருக்கிறேன். என்னை விட பொருளாதாரம் பற்றி நன்றாய் தெரிந்தவர்கள் இன்னும் விரிவாய்
விவாதிக்க இயலும். தனியார் எதிர்ப்பு கண்மூடித்தனமாய் இருக்கக் கூடாது என்பதே என்
கோரிக்கை. இது மிகவும் சிக்கலானது. எந்த பிரச்சனையையும் இரு பக்கங்களையும் கவனித்தே
பேச வேண்டும். ஒரு போக்கை வெறுக்க கூடாது. புரிந்து கொண்டு எதிர்க்கலாம்.
எதிர்த்தபடியே சிறப்பான தன்மைகளை உள்வாங்கிக் கொண்டு சமரசம் பேசலாம். நாமும் வளரலாம்.
Posted by Abilash Chandran at 1:39 AM Email Post
Email This

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
May 12, 2015, 1:54:30 AM5/12/15
to brail...@googlegroups.com
மதிப்புரை
திருடன் மணியன்பிள்ளையும்
திருடர் சத்தியமூர்த்தியும்
ts('body',1)
ts('body',-1)
இசை
இந்தப் புத்தகத்தைப் படிக்கவும் இது குறித்து எழுதவும் அடிப்படைத் தகுதியொன்று அவசியம்
என்று நினைக்கிறேன். அது தானும் ஒரு வகையில் திருடன்தான் என்கிற புரிந்துணர்வே. சமூகக்
கட்டுப்பாட்டைக் குலைக்கும் திருட்டு என்கிற குற்றம் தண்டனைக்குரியதாகிறது. இது போலவே
சமூகம் உருவாக்கி வைத்திருக்கிற ஒழுங்குகளைக் குலைக்கிற பலவும் தண்டனைக்குரிய
குற்றங்களே என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். திருடர்கள் “க்ளவுஸ்”
அணிந்துகொள்ளும் போதும் எங்கேனும் ஓரிடத்தில் தன் கைரேகையைத் தவற விட்டுவிடுகிறார்கள்.
ஆனால் வெடிகுண்டைச் சத்தமில்லாமல் வெடிக்க வைப்பதில் சமத்தர்களான நாம் வெகு நிதானமாக,
வெகு நுட்பமாக, தேர்ந்த கைகளால் குற்றங்களைச் செய்கிறோம். தனிமையில் நம் சிந்தை அடிக்கிற
கூத்துக்களை நாமே அறிவோம் என்கிறபடியால் நாம் மணியன்பிள்ளைக்கு சற்றும் சளைத்தவர்களில்லை.
இந்தப் புத்தகமெங்கும் விரவிக்கிடக்கும் துர்சாகசங்களும், கேடுகெட்ட செயல்களும் நம்மை
விட்டு எங்கோ தூரத்தில் இல்லை. “நாம் கொஞ்சம் துணிந்திருந்தால் செய்திருக்கக் கூடிய
அற்பத்தனங்கள்” தான் இவை. மணியன்பிள்ளை நினைத்ததை முடித்தவர்... நாம் நினைத்து நினைத்து
ஏங்குபவர்கள். ஒரு வகையில் திருடர்கள் அப்பாவிகள்தான். பிள்ளை சொல்கிறார்:
“வக்கிரமான அறிவுள்ளவர்கள் வேறு வழிகளில் பணம் சம்பாதிக்கிறார்கள். திருடன் நேரடியாகத்
திருடு வதன் மூலம் தன் அறியாமையைக் காட்டுகிறான். இருட்டில் வீட்டுக்குள் நுழைந்து பணத்தை
திருடிக்கொண்டு ஓடும் முட்டாள்தனம் அறியாமைதானே?” (பக்: 125)
எண்ணற்ற திருட்டுகளில் ஈடுபட்ட, பலமுறை சிறைசென்று திரும்பிய ஒருவரின் வரலாறு
என்பதால் இது மிகவும் சுவாரஸ்யமானது. சாகசங்களால் நிறைக்கப்பட்டது. ஜனரஞ்சகமானது
என்றுகூடச் சொல்லலாம். ஆனால் இதன் ஜனரஞ்சகத் தன்மையையும் மீறி இதை ஒரு இலக்கியப்
பிரதியாக்குவது, ஓயாது திருடிக்கொண்டிருந்தபோதும் அவரை விடாது துன்புறுத்திக்
கொண்டிருந்த குற்றவுணர்ச்சியும், அபூர்வமான சில தருணங்களில் குலையாத மனஉறுதியுடன் அவர்
நீதியின் பக்கம் நின்றதும்தான். கும்மிருட்டின் பாதையில் திடீரென மின்னி மறையும் ஒரு சின்ன
ஒளிக்கீற்று நம்மை ரொம்பவும் வசீகரித்து விடுகிறது.
இந்த வரலாற்றை எழுத்தாக்கியிருப்பவர் இந்துகோபன். என்னளவில் இது மணியன்பிள்ளையும்
இந்துகோபனும் சேர்ந்து எழுதியிருக்கும் ‘சற்றே மேம்படுத்தப்பட்ட’ மணியன்பிள்ளையின் தன்
வரலாறு. பிள்ளை சொல்லும் சம்பவங்களுக்குப் பின்னிருக்கும் வாழ்வியல் உண்மைகளை நோக்கி -
நாம் அறியாத அல்லது அறியாதது போல் பாசாங்கிக்கும் உண்மைகள் - தன் எழுத்தை நகர்த்திச்
செல்கிறார் இந்துகோபன். கச்சிதமும், கலாநேர்த்தியும், நுட்பமான பார்வையும் கூடிய இவரது
எழுத்துமுறை ஒரு புனைவின் மயக்கத்துடன் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. வரலாறுகூட
நேர்வரிசையில் அல்லாமல் கலைத்தே அடுக்கப்பட்டிருக்கிறது.
ஜனித்த இடத்திலேயே மொத்த வாழ்வையும் வாழ்ந்து தீர்த்து, அங்கேயே ஒரு ஆறடி நிலத்தைக்
கேட்டு வாங்கி உறங்கிக்கொண்டிருக்கும் ஒரு சாமானியனின் வாழ்வல்ல பிள்ளையின் வாழ்வென்பதால்,
இதில் வெவ்வேறு மனிதர்களுடைய வரலாறும், வெவ்வேறு காலத்தினுடைய வரலாறும் இயல்பாகவே
கலந்திருக்கிறது. மிடுக்காக உடுத்தியிருக்கும் இச்சமூகத்தின் சொறிப் புண்களைப் பார்வைக்கு
வைக்கிறது இந்தப் புத்தகம். ஜெயில் வாழ்க்கையைக் குறித்து எழுதிச்செல்லும் மணியன் பிள்ளை
எழுதுகிறார்:
“பிரபல நச்சலைட் ஓமனக்குட்டன்பிள்ளை எங்கள் ஊர்க்காரர்தான். நல்ல அறிவும் அரசியல் தெளிவும்
உள்ளவர். நான் கொல்லம் சப்ஜெயிலில் இருக்கும் போது ‘அவசர நிலை’க் கைதிகள் பலரைக்
கொண்டுவந்து அவமானப்படுத்தும் நோக்கத்துடன் நிர்வாணமாக அடைத்து வைத்தார்கள். அவர்கள் கோஷம்
முழக்கியபடியே அவமானத்தை மறந்தார்கள். வெளியே தரையில் சாக்குத்துணியை விரித்துப்
படுத்திருந்த நான் சாக்கையும் துணியையும் எறிந்து கொடுத்தேன். நாடே கொந்தளித்துக்
கிடக்கும் போது ஒருவர் மட்டும் அதை உடுத்துவாரா என்ன?” (பக்: 545)
“கைதிகளிடம் வெளிப்படும் பாலியல் ஆர்வம் சிலரிடம் தீவிரமாகச் செயலாற்றும். ஜெயிலில் ஏதோ
தேவைக்காக வந்த ஒரு அழகான இளம்பெண்ணின் பாதம் பட்ட மண்ணெடுத்து ஒரு நேர சுய
இன்பத்துக்குத் தூண்டுதலாக வைத்துக் கொண்ட ஒரு கைதியும் உண்டு.” (பக்: 447)
திருடப்போன இடத்தில் தன்னைப் பார்த்து பயத்தில் உறைந்துபோய் நிற்கும் மூதாட்டியிடம்
“பயப்படாதீர்கள் அம்மா.. நான் போய்விடுகிறேன்” என்று சொல்லிவிட்டு வந்த வழியே திரும்பி,
மதில்சுவரில் சாய்ந்து கொண்டு அழும் மணியன்பிள்ளையில் துவங்கி, உறக்கத்தில் இருக்கும்
தங்கவர்ண அழகியின் அழகில் மயங்கி அவள் கழுத்தில் கத்தியை வைத்துப் புணரும் மணியன்பிள்ளை
வரை பெண்களுடனான பிள்ளையின் உறவு புதிரானதாகவே இருக்கிறது. அவர் சில பெண்களை
வஞ்சித்திருக்கிறார். சில வாய்ப்புகளை உறுதியாக நிராகரித்திருக்கிறார். குடும்பம்
என்கிற அமைப்பில் வதையுறும் பெண்களின் மீதான அவரின் கரிசனம் விந்தையானதாக இருக்கிறது.
சொல்லத் தனக்குத் தகுதியில்லை என்பதை அவரே ஒப்புக்கொண்டாலும் சொல்லிய சொல்லில்
குற்றமொன்றுமில்லை.
“இதிலிருந்து ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். கேரளத்தில் வீடுகளுக்குள் புகுந்து
திருடுவது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது. இரவுகளை வேதனையில் கழிக்கும் ஏராளமான
பெண்களைக் கொண்ட நாடு இது. நான் புரிந்து கொண்டிருக்கிறவரையில் உடல் தேவையை நிறைவு
செய்தபின் இயல்பாகவே எதையோ இழந்துவிட்டதான ஒரு உணர்வு தோன்றுகிறது. இதன்
பிரதிபலிப்பு பல்வேறு விதமாக வெளிப்படுகிறது. சில மனங்கள் தன் இணையை மனோரீதியாகத்
துன்புறுத்த நினைக்கின்றன. சிலர் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள். பாலியல்
தாக்குதலுக்குப் பிந்தைய வன்முறைதான் இம்மனோபாவத்தின் உச்சநிலை. முத்தத்தில் துவங்கி
முத்தத்தில் முடியும் உறவு மிகவும் அபூர்வமாகவே வாய்க்கிறது.” (பக்: 412)
ஆமாம். “பாலியல் தாக்குதல்”. பாலியல் உறவல்ல.. அவன் எதோ ஒரு நடிகையின் மார்பைப்
பிசைந்து கொண்டிருக்க, அவள் பருவத்தில் தான் தவற விட்ட, எங்கோ இருக்கும் தன் காதலனுக்கு
உடலைக் கொடுத்துப் படுத்திருக்கிறாள். ஒரு முத்தம் கூட தராமல் ஒன்பது பிள்ளைகளைப்
பெற்றுப் போடும் பொன்னான வாழ்வு நம் வாழ்வு.
நல்லவர்களும், கெட்டவர்களும், சுமாரான நல்லவர்களும், சுமாரான கெட்டவர்களும், கொடிய
பாவிகளும், நீதியின் நிமித்தம் துன்பப்படுபவர்களும் காணக்கிடைக்கிற இப்புத்தகத்தில் சில
விசித்திரர்களும் தென்படுகிறார்கள்.
திருட்டு நடந்து விட்டது. போலீஸ் துப்பு துலக்குகிறது... திருட்டு நடந்த அன்று பலமான
இடியும்
மழையும் என்று தெரிய வந்தால், பிடி... அந்த ‘கார்காலத் திருடனை’ என்று பிடித்து
விடுமாம். கடலுக்குப் போய் மீன் பிடித்து வாழ்கிற அவருக்கு மின்னல் வெட்டி இடி
இடித்துவிட்டால் மனதில் சஞ்சலம் பிறந்துவிடுகிறது. அவர் பிள்ளையிடம் சொல்கிறார்:
“நான் திருடுவதற்கான காரணம் மீன் கிடைக்காமல் அல்ல. பணம் சம்பாதிக்க வேற என்னென்னவோ
வழிகள் இருக்கு. இதுக்கான காரணத்தை எப்படிச் சொல்லிப் புரிய வைக்கறதுன்னு எனக்குத்
தெரியல. அது... அதை ஒரு ரசனைன்னு சொல்லலாம். பயங்கரமான இடியும் மின்னலுமுள்ள
மழைக்காலத்தில் எந்தக் கவலையுமில்லாம மூடிப் போர்த்திட்டுத் தூங்குறவங்களைப் பார்க்க அழகாக
இருக்கும். மனப்பொருத்தமில்லாத கணவன் மனைவி கூட கட்டிப்பிடிச்சித் தூங்குவாங்க.
மழைக்காலமுங்கறது அன்பின் ஒரு மாத காலம். இதையெல்லாம் நான் உங்கிட்ட சொல்றதுக்கான
காரணம், உன்னால இதைப் புரிஞ்சுக்க முடியுங்குறதுதான். போலீசுக்குக் கலா ரசனையே
கிடையாது.” (பக்: 503)
இந்தப் புத்தகத்திலிருந்து கலையுடன் தொடர்புடைய வேறொரு கூற்றும் நினைவுக்கு வருகிறது,,
“கலைஞனின் மனவோட்டத்தை முன்னரே கணித்து விடுவதென்பது இயலாத விசயம். அவனது குணம்
இயல்புக்கு மாறான, வேறுபட்ட பல நுட்பங்களும், சிக்கல்களும் முரண்களும் கொண்டதாக
இருக்கும். குற்றவாசனைக்கான காரணமும் இதுதான். கவிஞனுக்குக் கவி மோட்சமில்லாதது போன்ற
ஒரு பிணைப்பு இதிலுமிருக்கிறது. இது திருடனிடமும், மோசடிக்காரனிடமும்,
பிக்பாக்கெட்காரனிடமும் குற்றவாசனையாகக் கிடக்கிறது. இது தூண்டுதலடையும் போது அவன்
திருடுகிறான்.” (பக்: 433)
‘கவிஞனுக்குக் கவிமோட்சமில்லாதது போன்ற’ என்கிற வரியை, கவிதை குறித்தான எனது சில
வரிகளோடு ஒட்டி வைத்துப் பார்க்கையில் வியப்பு மேலிட்டது...
“100 கவிதை எழுதத் தெரிந்தவனுக்கு 101வது கவிதையை எழுதத் தெரிவதில்லை...”
“இதனால்தான் பிரமாதம் என்று நமக்கு நாமே சிலாகித்துக் கொள்ளும் சில கவிதைகளைக் கொஞ்ச
நாள் கழித்து நாமே கிழித்துப் போட்டு விடுகிறோம். கவிதையுடன் ஆடும் இந்தப்
பகடையாடத்தில் சமயங்களில் நமக்கு தோல்வி கிடைப்பினும், இந்த மர்மம் தான் கவிதையின் தீரா
இளமையை காத்து நிற்கிறது. நாமும் கவிதையும் மாறி மாறி வெட்டிக்கொள்வதில் தான் ஆட்டம்
சூடு பிடிக்கிறது. நாம் கவிதையை நோக்கி மேலும் மூர்க்கத்துடன் முன்னேறப் பார்க்கிறோம்”
இந்த மாறி மாறி வெட்டிக்கொள்வதென்பது திருட்டுக்கும், கவிதைக்கும் பொதுவோ என்னவோ?
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக எழுதப்பட்ட சிலப்பதிகாரத்தில் கள்வர்கள் பற்றிய
குறிப்புகள் காணக்கிடைக்கின்றன.
‘மந்திரம், தெய்வம், மருந்தே, நிமித்தம்
தந்திரம், இடனே, காலம், கருவி என்று
எட்டுடன் அன்றே - இழுக்கு உடை மரபின்
கட்டு உண் மாக்கள் துணை எனத் திரிவது?’
என்கிறது சிலம்பு.
அதாவது மந்திரம், தெய்வம், மருந்து, நிமித்தம், தந்திரம், இடம், காலம், கருவி ஆகிய
எட்டையும் கள்வரின் துணைகள் என்கிறது அது. இன்று எழுதப்பட்டிருக்கிற இத்திருடனின்
சரிதத்திலும் இந்தக் ‘கள்வரின் துணைகள்’ இயல்பாகவே பயின்று வந்திருப்பதைப் பார்க்க
முடிகிறது. மேலும் ஒரு அதிதீர சண்டைக்காட்சியையும் சிலம்பு காட்டுகிறது.
திருட்டின்போது திருடனுக்கும் ஒரு இளவரசனுக்கும் இடையே சண்டை மூண்டு விடுகிறது.
இளவரசன் தன் உடை வாளை உருவுகிறான். பதிலுக்கு திருடன் வாள் எதையும் எடுக்கவில்லை.
அந்த வாளின் உறையை மட்டும் இளவரசனிடமிருந்து பறித்துக் கொண்டு, அவன் வாள்
வீசும்போதெல்லாம் உறையை அந்த வாளினுள் திணித்துத் தப்பி மறைகிறான் திருடன்.
திருடனின் மேல் அன்று ஏற்றப்பட்ட மாயமும், தீரமும் கலந்த சாகச பாவம் இன்றுவரை தொடர்ந்து
வருகிறது. நம் வீட்டில் நிகழாதவரை நாமும் அச் சாகசங்களை ரசிப்பவர்களாகவே இருக்கிறோம்.
நாயகர்கள் கொள்ளைக்காரனாக நடித்த அனேகத் திரைப்படங்களை நாம் வெள்ளிவிழா கொண்டாட
வைத்திருக்கிருக்கிறோம். அவன் அந்தப்பணத்தில் சின்னதாக ஒரு அனாதை விடுதி கட்டியிருக்க
வேண்டும் என்பதுதான் நமது ஒரே நிபந்தனை.
சிலர் தன்னுடைய 16ஆவது வயதில் பேப்பரையும் பேனாவையும் எடுத்து வைத்துக்கொண்டு தன்
வாழ்வை வரையத்துவங்குகிறார்கள். தன் ஆயுளையும் அவர்களே முடிவு செய்து கொள்கிறார்கள்.
சாவதுவரை தன் வாழ்வு எத்திசையில் பயணிக்க வேண்டுமென்பதை அவர்கள் கடவுளுக்கு வரைந்து
காட்டுகிறார்கள். கடவுளும் மறுபேச்சுப் பேசாமல் அவர்களது பாதையைச் செம்மை செய்து
வைக்கிறார். ஆனால் வேறு சிலருக்கோ ஒரு துண்டுக்கோடு வரையவும் உரிமையில்லை. அவர்கள்
கதறித்துடித்து கடவுளை நோக்கி கையை உயர்த்துகையில், கடவுள் அவரது கைகளை வேறெங்கோ
உயர்த்துகிறார். இத்தொகுப்பு முழுக்க பிள்ளை விதி விதியென்று புலம்புகிறார். அவர்
வாயிலிருந்து வருவதால் விதியை நாம் நம்பியாக வேண்டியிருக்கிறது.
“கடவுளின் கையில் தான் நம்முடைய ஒவ்வொரு அசைவுமிருக்கிறது. அவனுடைய லீலாவினோதங்களை
நாம் வாழ்கையாக வாழ்ந்து தீர்க்கிறோம்” (பக்: 571).
590 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தில் மகத்தான வரிகள் நிறையவே உள்ளன. கட்டாயம் 365
தேறும். பொன்மொழிகளைக் கோர்த்து ஒரு காலண்டர் செய்வது போல் இந்த வரிகளைக் கோர்த்து ஒரு
காலண்டர் தயாரிக்கலாம். ஒரு தாளைக்கூட எளிதில் கிழித்தெறிந்துவிட முடியாத காலண்டராக
அது இருக்கும். ஆகஸ்ட் 15, ஜனவரி 26, டிசம்பர் 6 போன்ற நல்லநாள் கெட்டநாட்களில் அச்சிடப்
பொருத்தமான வரிகள் இதில் உண்டு. அவ்வப்போது கொஞ்சம்
‘காற்று வாங்கிக் கொள்வதின்’ மூலம் பிழைத்துக்கிடக்கிற என் பிறந்தநாளிற்கான பொருத்தமான
வாசகத்தை நான் தெரிவு செய்துவிட்டேன்.
“கடவுளுக்கு பூமியில் ஒரு பிரதிபிம்பம் உண்டென்றால் அது காற்று மட்டும்தான்” (பக்: 138).
யூசுப் இடறாத இணக்கமானதொரு தேர்ந்த மொழியில் இந்நூலைப் பெயர்த்திருக்கிறார். நூலின் சில
வரிகளை வாசிக்கையில் இது மலையாள மூலத்தில் எப்படி இருந்தது என்று கேட்டறியும் ஆவல்
எழுந்தது
அவசியம் வாசிக்கவேண்டிய புத்தகம். உறுதியாக இதைச் சம்பிரதாயமான முடிப்பிற்காக சொல்லவில்லை.
(மதுரை ‘பிசகு’ நிகழ்வில் வாசிக்கப்பட்ட கட்டுரை)
உள்ளடக்கம்

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
May 12, 2015, 2:11:23 AM5/12/15
to brail...@googlegroups.com, kaviku...@gmail.com
மனிதநேய தரிசனம் - திருடன் மணியன்பிள்ளை
IMG_7737
ரயில் தண்டவாளங்களுக்கு மிக அருகேயுள்ளது மணியன் பிள்ளை இப்போது வசிக்கும் வீடு.
கேரளாவில் தென்மேற்குப் பருவ மழை துவங்கிவிட்ட ஜூன் மாதத்தின் பிற்பகுதியில்
மழைத்தூறலுடன் கொல்லம் அருகேயுள்ள இரவிபுரத்திலுள்ள அந்த வீட்டிற்குச் சென்றபோது
குழந்தைமை பொருந்திய சிரிப்புடன் வரவேற்கிறார் மணியன்பிள்ளை. தொலைக்காட்சியில் ஏதோ
ஒரு சீரியல். வெளியே தடதடத்து ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு ரயில். ஓர் உரையாடலுக்குத்
தயாராய் எதிரில் வந்து அமர்கிறார்.
யார் இந்த மணியன்பிள்ளை? “பதினேழு வயதுமுதல் இன்று வரையிலான என்னுடைய வாழ்க்கை
முழுவதுமே பயத்தாலும் பாதுகாப்பின்மையாலும் உழன்றுகொண்டிருக்கிறது. இளமையை என்னால்
அனுபவிக்க இயலவில்லை. மனைவியுடன் ஒருபோதுமே மன அமைதியாகப் படுத்துத்
தூங்கியதுமில்லை. குற்றவாளிகளாலும் குற்றவாசனையுள்ளவர்களாலும் நிம்மதியாகத் தூங்க
முடியாது. சிறைச்சாலைகளும் போலீசாரின் சித்திரவதைகளும் தந்த வியாதிகள்...” என்கிறார்
‘நான்’ என்கிற தலைப்பில் தன்குறித்து எழுதும் முன்னாளில் திருடனாயிருந்த மணியின்பிள்ளை.
ஒரு நாள் திருடனை வாழ்நாள் திருடனாக்கியது காவல்துறை என்பதை தனது சுயசரிதையில்
பல்வேறு வாழ்க்கைச் சம்பவங்கள் மூலம் நமக்குச் சொல்கிறார். இவர் சொல்லச் சொல்ல மலையாளத்தில்
ஜி.ஆர். இந்துகோபன் எழுதிய இவரது சுயசரிதை நூல் இன்றுவரை 6,000 பிரதிகள்
விற்றிருக்கின்றன. அண்மையில் தமிழில் குளச்சல் முகமது யூசுப் மொழியாக்கத்தில் தமிழில்
’திருடன் மணியன்பிள்ளை’ என்கிற பெயரில் வெளிவந்தது. தமிழ் இலக்கிய வட்டாரத்தில் பெரும்
கவனத்தை ஈர்த்த இப்பிரதி குறித்து மலையாள இலக்கிய உலகில் நூல் வெளியான சமயத்தில் கனத்த
மௌனம் நிலவியதாக மதுரையில் இந்த நூலுக்காக நடந்த விமர்சனக்கூட்டத்தில் பேசிய
ஜி.ஆர்.இந்துகோபன் வருத்தத்துடன் குறிப்பிட்டார். அதே கூட்டத்தில் வந்து பேசமுடியாமல்
கண்ணீர் சிந்தியவாறே கூட்டத்தை நோக்கி கைக்கூப்பிய மணியன்பிள்ளையின் மனதில் பொங்கும்
மனிதநேயத்தை தரிசிக்கவேண்டுமெனில் நூலை வாசிப்பது ஒன்றுதான் வழி. இவர் திருடிய ஒரு
வீட்டின் சிறுமி நீதிமன்றத்தில வந்து அழுததைப் பார்த்த அவர் சிறையிலிருந்து ஒரு கடிதம்
எழுதி “மகளே! மாமா திருடியதை உனக்கே திருப்பித் தந்துவிடுவேன். இனி நீ
நீதிமன்றத்துக்கு வரவேண்டாம். அழவும் வேண்டாம்” என்று ஒரு அக்குழந்தையிடம் பாவமன்னிப்பு
கேட்கும் இடம் ஒன்றுபோதும்.
நூலில் காவல்துறை அதிகாரிகள், நீதிபதிகள், சிறைத்துறையினர், பெரும்புள்ளிகள்,
அரசியல்வாதிகள் என்று பலர் குறித்தான உண்மைகள் எழுதப்பட்டிருக்கின்றன. அவர்கள் எல்லாம் இதை
எவ்வாறு எதிர்கொண்டனர்? “நீதிபதிகள் போன்ற வெகு சிலருடைய பெயர்களை மாற்றிக்
குறிப்பிட்டிருக்கிறேன். மற்றபடி என் உறவுக்காரர்கள் இதை விரும்பவில்லை. ஆனால் எனக்கு
அவர்களுடன் எந்த பேச்சுவார்த்தையும் இந்த நூல் வருவதற்கு முன்பிருந்தே இல்லை” என்கிறார்
மணியன்பிள்ளை. நூல் வெளியானபின் காவல்துறை அவர்மீது இதுவரை 12 வழக்குகள்
போட்டிருக்கிறது. அதில் 11 வழக்குகளில் மீண்டு ஒரே ஒரு வழக்கு மட்டும்
நடந்துகொண்டிருப்பதாகக் கூறுகிறார் மணியன்பிள்ளை சகோதரியின் வீட்டில் வசிக்கிறார்.
சாலைகளில் பேருந்தில் ரயிலில் என்று செல்லும்போது மக்கள் அடையாளம் கண்டுகொண்டு வந்து
பேசுவதைக் குறிப்பிடும் அவர் “மக்கள் என்னிடம் நீங்கள்தானா மணியன்பிள்ளை என்று கேட்டு
அன்போடு அணைத்துக்கொள்கிறார்கள். என்ன வித்தியாசம் பாருங்கள்!” என்கிறார்.”நான் 95ல்
வி.ஆர்.எஸ். வாங்கிவிட்டதால் இப்போது ஃபீல்ட் எப்படி இருக்கிறதென்று தெரியவில்லை.” என்று
சிரிக்கிறார்.
ஒரு கச்சிதமான திரைக்கதை போல உள்ளது மணியன்பிள்ளையின் வாழ்க்கை. 65 வயதாகும் அவருடைய
வாழ்வில் நிகழ்ந்தவற்றைவிட ஒரு சினிமா எதையும் பெரிதாகச் சொல்லிவிடப்போவதில்லை. அத்தனை
திகில், திருப்பங்கள், வேதனைகள், மரணங்கள், உயரங்கள், பள்ளங்கள் என்று எல்லாவற்றையும்
பார்த்துவிட்ட அவரிடம் எல்லாமே அனுபவங்களாக எஞ்சி நிற்கின்றன. மணியன்பிள்ளையிடம் இந்த
நூலில் உங்களுக்குப் பிடித்த பகுதி எது என்று கேட்டால் “அம்மா குறித்தவைதான்” என்கிறார்.
தன் பர்ஸில் நடிகை அமலாவின் சாயலில் இருக்கும் மனைவி மெஹருன்னிசா, தங்கை, தங்கையில்
பிள்ளைகள் என்று குடும்பத்தினர் அத்தனை பேரின் புகைப்படங்களையும் பாஸ்போர்ட் அளவில்
வைத்துக்கொண்டே போகுமிடமெல்லாம் செல்கிறார். மெஹருன்னிசாவை மணக்க முஸ்லிமாக மாறி
யூசுப் பாட்சாவானார்.
IMG_7671
இவருடைய நூலை பல்கலைக்கழகத்தில் பாடமாக வைக்கும்படி பரிந்துரைக்கப்பட்டபோது அது ஒரு
திருடனின் சுயசரிதை என்பதாலேயே நிராகரிக்கப்பட்டது. ஆனால் என்ன முரண்பாடு? அவருடைய
கதை இன்று சினிமாவாகி உலகமே பார்க்கப்போகிறது. ”பலர் என்னை பணம் சேர்க்கச்
சொல்கிறார்கள் இனி சேர்த்து என்னதான் செய்யப்போகிறேன்? என் கதை சினிமாவாகப் போகிறது.
அப்போது கொஞ்சம் பணம் கிடைக்கும். அதில் இரண்டு செண்ட் நிலம் வாங்கி ஒரு வீடு கட்டவேண்டும்.
இதுதான் ஒரேயொரு ஆசை எனக்கு. ” என்கிறார்.
26 திரைப்படங்களிலும் 30 நெடுந்தொடர்களிலும் நடித்திருக்கிறார். தமிழில் ‘வேட்டைக்காரன்’
படத்தில் சாமியார் வேடத்தில் நடித்த மணியன்பிள்ளைக்கு தமிழில் விஜய் படங்கள் என்றால்
மிகவும் இஷ்டம். அழகாகப் பாடும்திறன் கொண்டவர் இப்போது உடல்நலம் சரியில்லை என்பதால்
பாடுவதில்லை. மலையாளத்தில் மிகவும் பிடித்த இசையமைப்பாளர் ரவீந்திரன். தமிழில்
எம்.எஸ்.விஸ்வநாதன். இந்தியில் பப்பிலஹரி என்று அடுக்குகிறார். தமிழில் தன் அபிமான
பாடலென அவர் குறிப்பிடும் பாடல் இது. “குயிலைப் புடிச்சு கூண்டிலடைச்சு
கூவச்சொல்லுகிற உலகம். இந்தப் பாட்டைக் கேட்டால் கண்ணீர் விட்டு அழுவேன். அப்படித்தானே என்
வாழ்க்கையும். நிம்மதியில்லாத வாழ்க்கை. அதற்குக் காரணமும் நான் தான். வேறு யாரைச் சொல்ல
முடியும் நான்” என்கிறார்.
வாழ்த்துங்கல் கிராமத்தின் ரயில்வே கேட்டை கடந்து வந்து அந்த ஆட்டோ ஸ்டாண்டுக்கு வந்து ஆட்டோ
ஏற்றிவிடுகிறார். தங்கும் விடுதிக்கு விரையும் ஆட்டோவிலிருந்து இறங்கியபின் பேசிய
நூறு ரூபாயிலிருந்து பத்து ரூபாய் குறைத்துக்கொண்டு தொண்ணூறு ரூபாய் மட்டும்
வாங்குகிறார் ஆட்டோ ஓட்டுநர். வியப்போடு புருவம் உயர்வதைப் பார்த்துவிட்டுச் சொல்கிறார்.
“நீங்கள் மணியன் அண்ணனின் விருந்தாளியல்லவாமணியன் அண்ணனுக்காக பத்து ரூபாய்
குறைத்துக்கொண்டேன் அவரை எங்களுக்குப் பிடிக்கும். அவர் எப்போதும் கொழுத்தவர்களிடம் திருடி
இல்லாதவர்களுக்குத் தந்து உதவுவார்” என்கிறார்.
****
புத்தகத்திலிருந்து...
--------------------------------
பாட்டுப் பாடியே வலியைச் சுட்டெரித்துக் கொண்டிருந்தால் அம்மா. எனது குழந்தைப் பருவத்து
நினைவுகலில் செத்துக்கிடந்த நிறைய பாடல்களை மாஅ பாடிப்பாடி உயிரூட்டினாள். ஒருநாள்,
பெரிய அக்கா வரும்போது படுத்திருந்தபடியே அம்மா பாடிக்கொண்டிருந்தாள். ‘’என்னதான்
முடியலைன்னாலும் பாட்டுக்கெல்லாம் ஒரு குறையுமில்லை,” அக்கா கேலி செய்தாள். பிறகு
பாட்டுக் கேட்கவில்லை. தான் சொன்னதைக் கேட்டு அம்மா பாட்டை நிறுத்தியிருப்பாளென்று
நினைத்து அவள் உள்ளே போனாள். அதற்குள் அம்மாவும் போய்விட்டாள். வாய் திறந்தபடியே
இருந்தது. பாதி பாடல் அம்மாவின் உதடுகளில் தங்கியிருந்தது.
மணிக்குட்டன் தன் சட்டையைக் கழற்றி அவளிடம் கொடுத்தான். அதை அணிந்து அவள் தண்ணீரில் இறங்கி
நின்று துணியை அவிழ்த்து அவனிடம் கொடுத்தாள். அவள் குளிக்கும்போது அவன் விலகியிருந்து
அழுக்குத் துணுகளை ஒரு கல்லில் அடித்துத் துவைத்தான். அன்று அவன் செய்த வேலைகளைப்
புரிந்துகொள்வதற்கான அறிவு எங்களுக்கில்லை. .....அன்று அவளிருந்த நிலைமை இப்போதும் என்
கண்களில் நிற்கிறடு. அனாதைமையின் மனித பிம்பம். அவனை உதாசீனம் செய்யுமளவிலான
தன்னம்பிக்கை அன்று அவளிடம் தென்படவே இல்லை. ...எங்கள் மனங்களிலிருந்து பங்களா
மணிக்குட்டன் ஒருபோதுமே மாய்ந்துவிட முடியாது. ஒருபோதுமே! அவளுடைய உடுப்புகளை
கல்லில் அவன் துவைத்துப் பிழிந்த அந்தக் காட்சி ஒன்றே போதும், இதற்குச் சான்று!
என்னுடைய இச்சிறு உடலானது ஒரு வீட்டினுள் நுழைந்துவிட்டால் பிறகு ஆட்சியதிகாரத்தின்
எல்லாக் கட்டமைப்புகளும் ஓடி வருகின்றன மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள், உயரதிகாரிகள்,
தொழிட்நுட்பப் புலனாய்வாளர்கள், மக்கள் திரள், அவர்களை விரட்டியடிக்கும் போலீசார்,
அதிகாரவர்க்கத்தின் இந்தப் பதற்றம் நமக்குள் தோற்றுவிக்கும் மமதை, நான் உருவாக்கி வைத்த
உற்சவம் கனஜோராக நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதிலிருக்கும் அக மகிழ்ச்சி. இதுதான் ஒரு
திருடனின் மனதினுள் செயல்படுகிற அம்சங்கள்.
***
என்னுடைய வழக்குகளுக்கு நானே வழக்கறிஞர். புதிதாக வந்த நீதிபதிகள் கேட்பார்கள்: “நீ ஏன்
வக்கீல் ஏற்பாடு செய்யல? கேஸ்ல ஜெயிக்க வேண்டாமா?” நான் சொல்வேன்: “யுவர் ஹானர், நான்
நிரபராதின்னு தெளிவுபடுத்த வேண்டிய தேவை ஏதோ ஒரு வழக்கறிஞரை விடவும் எனக்குத்தானே
அதிகம்?”
என்னுடைய வழக்குகள் கொல்லம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிற நாட்களில், நீதிபதியாக
இருந்த சுரேந்திரநாத பணிகர் கோட்டுப்போட்ட ஜூனியர் பையன்களிடம் சொல்வார்: “மதியத்துக்குப்
பிறகு மணியன்பிள்ளையோட வழக்கு இருக்கு. சீக்கிரமாக சாப்பிட்டுட்டு வந்தீங்கன்னா வாதாடக்
கத்துக்கலாம்.”
***
அப்போது ஜனதா கட்சியால் சட்டமன்றத் தொகுதிக்குத் தேர்வு செய்யப்பட்டிருந்த வேட்பாளர் நான்.
அன்று பிடிபடாமலிருந்திருந்தால் திருடர்கள் ஒற்றுமையுடன் வாழும் அரசியல் அரங்கில்
நானுமொரு ‘விலைமதிக்க’ முடியாத அன்பளிப்பாகி இருப்பேன். அந்தத் தேர்தலில் ஞனதா
கட்சிதான் அதிகாரத்திற்கு வந்தது. ‘சிறுபான்மை’ சமூகம் என்பதால் அமைச்சர்வையிலும்
வாய்ப்புக் கிடைக்கும் என்று பேசிக்கொண்டார்கள்.
***
ஒரு வீட்டினுள் திருடுவதற்காக நுழைந்தேன். சமையல் கட்டின் கம்பியை வளைத்து உல்லே
ஏறினேன். ஒரு கையில் கத்தி, மற்றொரு கையில் டார்ச். எதுவோ அசைவதுபோல் சத்தம் வந்தது.
லைட் அடித்துப் பார்த்தேன். வெளிச்சம்பதிந்த இடம் ஒரு மூதாட்டியின் கண்கள். அதில்
உலகத்திலுள்ள எல்லாத் தீவினைகளையும் ஒருசேரப் பார்த்துவிட்டதுபோன்ற பயம் தெரிந்தது. அந்த
அம்மா நடுக்கத்துடன் துவண்டுகொண்டிருந்தார். வேதனையின் மெல்லிய சீகாரம் அவரிடமிருந்து
வெளிப்பட்டது. பயம் ஒரு வனமிருகம்போல் அவரை வலைத்திருந்தது. எனக்கு என்னவோ போலாகிவிட்டது.
நான் மெதுவாகச் சொன்னேன்: “பயப்பட வேண்டாம்மா! நான் போயிடறேன்” வந்த வழியாக வெளியேறி,
வீட்டின் மதில் சுவரில் சாய்ந்து நின்று வாய்விட்டு அழுதேன். இந்த அளவுக்கு மற்றவர்கள்
பயந்து வெறுக்கிற துஷ்டனாக மாறிவிட்டேனே!இந்த இடத்தில் என்னுடைய அம்மாவாக
இருந்திருந்தால்...மதிலில் தலியை முட்டி அழுதேன். பிறகு எல்லாமே தகர்ந்துவிட்டவன்போல்
திரும்பி நடந்தேன்.
***
குழந்தைப் பருவத்து நினைவுகள் தீராத இரணங்களாகி விடும். வேதனைகளையும் அவமானஞ்களையும்,
நான்கைந்து வயதிலிருந்தே குழந்தைகள் மனதில் பாதுகாத்து வைத்திருப்பார்கல். பச்சை மனங்களை
ஒருபோதும் புகைய வைத்து விடக்கூடாது
***
குட்டப்பனின் வாட்ச் ரிப்பேருக்கான சாதங்களிருக்கும் பெட்டியைச் சுமந்துகொண்டு ஐந்தாறு
மாதங்கள் அவனுடன் திரிந்தேன். ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் ஏறி வாட்ச் ரிப்பேர் செய்யணுமா என்று
கேட்கும் வேலை என்னுடையது. நிறைய சொந்தக்காரர்கலின் வீடுகளுக்கும் சென்றேன். “குறவனோட
பெட்டியை நாயர் பையன் சுமபப்தா?” இதை அவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. பட்டினி
கிடக்கும்போது கூப்பிட்டு ஒரு பிடி சோற்றுப் பருக்கைத் தந்ததில்லை; நாலணா காசு தந்து
ஏதாவது வாங்கிச் சாப்பிடு என்று சொன்னது கிடையாது. வீட்டிற்கு வந்து அம்மாவிடம் பராதி
மட்டும் சொனனார்கள்.
***
இன்றெல்லாம் மூன்று நான்கு திருடர்களாக சேர்ந்து வருகிறார்கள். பயமுறுத்தித்
திருடுகிறார்கள். பெண்களையும் தொந்தரவு செய்கிறார்கள். எவ்வளவு தைரியமுள்ள திருடனாக
இருந்தாலும் சரி.வீட்டிலிருப்பவர்கள் பார்த்துவிட்டால் ஓடிவிடத்தான் வேண்டும். அது ஒரு
மரியாதை. திருடனாகிவிட்டோம்தான். இருந்தாலும் கொஞ்சம் மரியாதையுடன் நடந்துகொள்ளலாமா?
வேண்டாமா?
****
உங்களுடைய வீடுகளில் இதுவரை திருடன் நுழையவில்லை என்பதற்காக நீஙக்ள் பலத்து
பாதுகாப்பினுள் இருக்கிறீர்கள் என்று அர்த்தமில்லை. டிருடன் உஞ்கள் வீட்டை இன்னும்
நோட்டமிடவில்லை. அவ்வளவுதான். உங்கள் வீடு அவனுடைய கவனத்தில் படவில்லை என்பது மட்டும்தான்
உங்களுடைய பாதுகாப்பு.
****
இந்தப் புத்தகத்தை உங்களால் சுவாரஸ்யமாக வாசிக்க முடியும். காரணம், நீங்கள்
சட்டத்தின்கண்களில் பாதுகாப்பாக இருக்கிறீர்கள். ஆகவேதான் சில இடங்களில் உங்களால்
சிரிக்கவும் முடிகிறது. எனுடைய கண்ணிரின் உப்பு கலந்த ஒரு கடல் இந்தப் புத்தகம்.
செய்துத் தீர்த்த பாவங்களின் ஆகமொத்த சாரம். ஒரு திருடனை ஊரிலோ வீட்டிலோ யாருமே
வேலைக்கு வைத்துக்கொள்ள மாட்டார்கள்.

(நன்றி: இந்தியா டுடே)

Posted by கவின் மலர் at 5:27 p.m. Email Post

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
May 12, 2015, 6:04:04 AM5/12/15
to brail...@googlegroups.com
ம.மதிவண்ணனின் கவிதைகள்
லதா ராமகிருஷ்ணன்
----
'அலட்டிக் கொள்வதில்லை அவள்
இளக்காரமும் அலட்சியமும் தொனிக்க
கடந்து போவாள்
காகிதத்தில் பொதிந்து வைத்து
காலத்தில் மிதந்து வருமிவையெல்லாம்
ஒரு மிருகப் புணர்ச்சியின் வக்கிரத்துளி படர
கிழிந்து கிடக்கும் யோனிமயிர் துடைக்கவும்
பிரயோஜனப் படாது என்பதால். '
_கவிஞர் ம.மதிவண்ணனின் முதல் தொகுப்பான 'நெரிந்து ' என்ற கவிதை நூலில் இடம்
பெறுகிறது மேற்காணும் கவிதை. 'கிழிந்து கிடக்கும் யோனிமயிர் ' என்ற வரியை மட்டும்
எடுத்துக் காட்டி இந்தக் கவிதையை 'ஆபாசக் கவிதை ' என்று பகுப்பவர் இருக்கக் கூடும்.
அவர்களைப் பார்த்துக் கேள்வி கேட்கிறது ம,மதிவண்ணனின் மற்றொரு கவிதை:
- 'எவருமறியா உன் ஜட்டிக் கிழிசலைப் போல்
நீ மட்டுமே அறிந்தவை
உன் மனசின் கசடுகள்.
சொல்லத் துணிவுண்டா உனக்கு ?
உன் அந்தரங்கங்களில்
நீ ஒளித்து வைத்திருக்கும் எல்லாமும்
வேப்பமரத்தடி மணலில்
சூரியனுக்குத் தெரியாமல்
நீ புதைத்து வைத்த
முதலாய் விழுந்த சிங்கப் பல்லைப் போல்
ஒரு பாவமுமறியாதவையே என '
-அந்தரங்கங்களில் ஒளித்து வைத்திருக்கும் எல்லாவற்றையும் அம்பலமேற்ற முடியுமா, ஏற்றத் தான்
வேண்டுமா, அது முறையா, என்றெல்லாம் கேள்விகள் எழுப்பப்படலாம். கவிஞனுக்கு சிலவற்றை
சொல்லியே தீர வேண்டும் என்று உக்கிரமாய் தோன்றுகிறது. எழுதி விடுகிறான். இந்த
உக்கிரத்தை கவிஞர் ம.மதிவண்ணனின் கவிதைகளில் உணர முடிகிறது. அருந்ததியர் குலத்தில்
பிறந்தவர். ஒரு விழிப்புணர்வு கூடிய 'தலித் ' கவிஞராக 'நெரிந்து ', 'நமக்கிடையிலான
தொலைவு ' ஆகிய இரண்டு கவிதைத் தொகுப்புகளின் மூலம் தன்னை வெளிப்படுத்திக்
கொண்டிருப்பவர். 'யோனி ', முலை ' என்று வந்தாலே 'வக்கிர மனதுக்காரர்களாய் சக
கவிஞர்களைப் பழிப்பவர்கள் மதிவண்ணன் கவிதைகளில் இடம் பெறும் 'பீ ', குண்டி ', கக்கூஸ் ',
முதலிய வார்த்தைகளைப் பற்றி என்ன சொல்வார்களோ... மதிவண்ணன் கவிதைகளில் பாலியல்சார்
பிரயோகங்கள் சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை , வர்க்கபேத அரசியலை சாடவே
பயன்படுத்தப்படுகின்றனவே அல்லாமல் பாலியல் சார் சுதந்திரத்தையோ, கலவியின்பத்தையோ
எடுத்துரைக்க இடம்பெறுவதில்லை என்பதால் ஒழுக்கவியலாளர்கள் இவர் கவிதைகளை
எதிர்க்காமலிருக்கக் கூடும். அழகியலளவில் மதிவண்ணன் கவிதைகள் எதிர்க்கப்படவும் கூடும்.
எல்லாவற்றுக்கும் மதிவண்ணன் கவிதைகளிலேயே பதில் இருக்கிறது.
- 'எதிர்ப்படும் போதெல்லாம்
என் மேல் காறி உமிழ்வதை
ஒரு பிறவிக் கடமையைப் போலவே
செய்து வருகிறாய்
தாமதமாகவே உறைத்தது
உன் வெள்ளுடுப்பை வெட்டி அதிகாரத்தை
இன்ன பிறவற்றை
நிச்சயிக்கவென்றே
எச்சில் நீர் உனக்கு
ஊறும் ரகசியம்.
இப்போதெல்லாம்
உன் வாயிலடைக்க
கைகளில் கொண்டு திரிகிறேன்
தூமைத் துணிகளையும்
தூமையில் தோய்ந்த
இக்கவிதைகளையும்.
_ ஆக, தூமையில் தோய்ந்த கவிதைகளை, அல்லது, சொற்பிரயோகங்களை
கவிஞர் பிரக்ஞாபூர்வமாகவே உபயோகிக்கிறார். அதற்கு அவசியம் என்ன ?
'சுற்றிச் சூழ எங்கும்
நிச்சயமின்மையின் கொடி
படர்ந்து நெருக்குவதாகி விட்டது
எனது வெளி.
கை கால்களின் அசைவைக் கூட
அனுமதிக்காத இறுக்கம் இது.
வாளோடும் வார்த்தைகளோடும்
நீ வருவது
அடுத்த நிமிடமாய் கூட இருக்கலாம்.
பத்திரமாய் ஒளித்து வைக்கிறேன்
என் உயிரை
பதட்டத்தில் துடிக்கும்
இதயத்தின் தாளத்திலான
இந்தப் பாடல்களில். '
_ 'வெட்டியெடுத்துச் செல்லத் தோதாய் முடி கொண்ட தலைகளின் கீதம் ' என்ற தலைப்பில்
'நமக்கிடையில் ஆன தொலைவு ' தொகுப்பில் மதிவண்ணன் எழுதியுள்ள இக்கவிதையில் பேசப்படும்
உயிரின் பதட்டமே அத்தகைய வார்த்தைகளை தெரிவு செய்து கொள்கிறது.
வார்த்தைகளால் ஆனது கவிதை. ஆகச் சிறந்த வார்த்தைகள் ஆகச் சிறந்த வரிசைக்கிரமத்தில் '
என்பார்கள். அப்படி, ஆகச் சிறந்த வார்த்தைகளாய், தான் சொல்ல விரும்பும் சேதியை , அல்லது
வெளிப்படுத்த விரும்பும் உணர்வை, அதற்குரிய அழுத்தத்துடன் சொல்வதற்கென தேர்ந்தெடுத்துக்
கொள்வது கவிஞனுடைய இயல்பு. 'அரைத்த மாவையே அரைக்கும் விதமாக, பழகிய, பரவலாக
அமுலிலுள்ள நடையிலேயே கவிதை படைக்கப் பிடிக்காமல் 'பரிசோதனை ' முயற்சியாய் எழுதிப்
பார்க்க விரும்புவதும் கவிஞனிடத்தில் அமைந்திருக்கும் இயல்பான ஆர்வம். இதையெல்லாம் பார்க்க
மறுப்பவர்களாய் 'அதிர்ச்சி மதிப்பீட்டிற்காய் ' இத்தகைய வார்தைகளை உபயோகிக்கிறார்கள் 'என்று
குற்றம் சாட்டுபவர்களை என்ன சொல்ல ? எந்த ஆதாரத்தைக் கொண்டு இத்தகைய குற்றச்சாட்டை வைக்க
இயலும் ? அதிர்ச்சி தரும் வார்த்தைப் பிரயோகங்கள் மூலம் வாசகர்களின் கவனத்தைப் பெற
விரும்புவர்களால் தொடர்ந்து அதே பாணியில் எழுதி வர இயலாது. சில விஷயங்களை அதிக
வீச்சோடு கூற சில வகையாக எழுதிப் பார்க்கிறார்கள். தங்களுக்கான மொழிநடையை அடையும்
போக்கிலும் சிலர் வார்த்தைகளைப் புதுவகையாகப் பிரயோகித்துப் பார்க்கலாம்.மேலும்,
பாலியல்சார் சொல்லாடல்களால் மட்டும் தான் இத்தகைய 'கவனங்கோரல்கள் ' நடந்தேற வேண்டுமா என்ன
? மிகையுணர்ச்சிச் சொல்லாடல்களாலும் கூட, அதீத மொழிப் ப்ரக்ஞையோடு சொற்களைத் திருகிப்
பிரயோகிப்பதிலும் கூட மேற்படி 'கவனங்கோரும் ' முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம் என்பதே உண்மை.
- 'மூச்சிரைத்து நுரை தள்ள
வெகுதூரம் வந்து விட்டேன் உன்னைத் தொடர்ந்து.
இன்னுமெவ்வளவு துரம் போக்கு காட்டி
இழுத்துப் போக உத்தேசித்திருக்கிறாய் ?
அண்டி தெறிக்க குலைக்குமிவை
மேலே விழுந்து குதறும் நிமிடமும்
தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கிறது.
வலுவும் வழியும் இல்லாவிட்டாலும்
திரும்பலைக் குறித்து யோசித்தாயிற்று பலமுறை.
கண்ணீரிலும் குரோதத்திலும் செய்தது
கிடுக்கியோடு தொலைவில் காத்திருக்கிறது வீடு
என் விரைகளை நசுக்க. '
_ 'நெரிந்து தொகுப்பில் இடம் பெற்றுள்ளது மேலேயுள்ள கவிதை. ' 'என் விரைகளை நசுக்கி '
என்பதற்கு பதிலாய் வேறுவிதமாய் எழுதியிருக்கலாம் கவிஞன் என்று சொல்லக் கூடியவர்களிடம்
கவிஞன் என்ன விதமாய் எதிர்வினையாற்ற முடியும் ? 'இந்த வரியை அவர் தைரியமாய் தன்னுடைய
பிள்ளைகளிடம் காண்பித்து வாசிக்கச் சொல்ல முடியுமா ' என்று கேட்பது எத்தனை
சிறுபிள்ளைத்தனமானதுஸசமூகக் கட்டுமானங்களால், சமூகத்தில் தான் ஏற்றாக வேண்டியிருக்கும்
பாத்திரங்களாலும், பாவனைகளாலும் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் கவிமனம் ஒரு 'வலி
நிவாரணமாய் ' , நிர்வாணியாய் எழுதும் வரிகளை, அவனை மூச்சுத் திணறச் செய்துக்
கொண்டிருக்கும் அதே சமூகக் கட்டுமான அளவுகோல்களைக் கொண்டு எடையிடுவது எத்தனை
அவலமானது... அதுவும், அறங்காவலர்களாய் இத்தகைய அளவுகோல்களைக் கொண்டு ஒருவர் கவிஞனை
அளக்கப் புகும் போது அத்தகைய ஒழுக்கவியலாளர்களின், அவர்களைச் சார்ந்தவர்களின்
சமூகரீதியிலான அடையாளங்களையும், அவை சார் அரசியலையும் விமரிசிப்பதும்,
கேள்விக்குட்படுத்துவதும் அவசியமாகிறது. இதையே மதிவண்ணனின் பின்வரும் கவிதை
குற்ப்பாலுணர்த்துகிறது;
'பட்டனாயிருந்தாலும்
பொண்ணு தர வேணுமானால்
செருப்பு கட்டித் தர வேணுமென
கேட்ட வாலன் பகடையின்
புதல்வர்களிடமிருந்து
'பாட்டா ', 'நைக் ' குழுமங்கள்
மாட்டுத் தோலை அபகரித்துப் போன அன்று
செருப்புத் தைக்கும் எங்கள் ஊசிகளில்
ஒன்று
பழஞ்செருப்பு தைத்தாற்றிக் கொண்டது.
ஒன்று
நீங்கள் பேளும் கக்கூசில் தவறி விழுந்தது
ஒன்று
இக்கவிதையைக் கட்டத் துவங்கியது.
_சில கவிதைகளில் 'வெறுப்பு ' தூக்கலாக இடம்பெற்றிருக்கிறது. உதாரணமாக, 'எனக்கும்
தமிழ் தான் மூச்சு/பிறர் மேல் அதை விடாதிருக்க/சாத்தியமில்லை எனக்கு ', என்று
ஆரம்பிக்கும் 'த்தமிழும், மூச்சும் ' என்ற கவிதை கவிஞர் ஞானக்கூத்தனின் 'எனக்கும் தமிழ்
தான் மூச்சு/ஆனால்/பிறர் மேல் அதை விட மாட்டேன் ' என்ற கவிதைக்கான எதிர்வினையாற்றலாக
மதிவண்ணனின் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. ஞனக்கூத்தனின் கவிதையே ஒரு எதிர்வினையாற்றல்
என்பதையும் நினைவுகூர வேண்டியது அவசியம். பெரிய அளவில் எந்தவிதமான அங்கீகாரமும்
கிடைத்து விடாமல், எனில் இத்தனை வருடங்களாக தொடர்ந்து கவிதைவெளியில் இயங்கி வரும்
ஞானக்கூத்தனின் , 'சூத்திரர் தெருக்களென்று சொல்லுவார்/ஏற்றார்போல்/மாட்டுதோல்
உலரும்/ஆடு/கோழிகள் வாழும்/ ' ' என்று ஆரம்பித்து , 'தனிப்பட வர மாட்டாமல்/கடவுளின்
துணையில் / அங்கே/ வருகிறான் பார்ப்பான் / சாமி/வலம் வர வேதம்பாடி ' என முடியும்
'அந்தத் தெரு ' முதலான பல கவிதைகள் ஒற்றைப் புரிதலைத் தாண்டியவை என்பதையும் நாம்
கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லத் தோன்றுகிறது.
'சாதிமான்கள் சதித்துக் கொன்ற
பகடைவீரனுக்கே
அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகமாம்
'திண்ணிய 'த்தில் மட்டுமல்ல
தினந்தோறும் தின்று கொண்டிருக்கிறது
'பீ ' 'யை என் சனம்
தெரிந்து பாதி தெரியாமல் பாதி '
_போன்ற பல கவிதைகள் ' நெரிந்து ', 'நமக்கிடையிலான தொலைவு ' ஆகிய இரண்டு
தொகுப்புகளிலும் இிடம் பெற்றிருக்கின்றன. தாழ்த்தப்பட்ட சாதியினராய் சமூகத்தில் அல்லல்படும்
மக்களுக்காய் மனம் வெம்பியும், கொதித்தும் பேசுகின்றன. வார்த்தைகளை 'உரிமைப் போராட்ட
ஆயுதங்களாய் ' கவிஞர் மதிவண்ணன் பயன்படுத்தியிருப்பதை இந்த இரண்டு கவிதைத்
தொகுப்புகளிலும் காணக் கிடைக்கிறது. அரசியல் கட்டுரைகளடங்கிய ஒரு நூலும் சமீபத்தில்
வெளியாகியிருக்கிறது. 'வார்த்தைகளுக்குள் கொடுக்குகளை ஒளித்து வைக்கும் வித்தையை
படிப்பித்த என் குடியின் முதல் சுயமரியாதைக்காரன் ஈ.வே.ரா 'வுக்கு என்று தன் இரண்டாவது
கவிதைத் தொகுப்பை 'பெரியாருக்கு ' சமர்ப்பணம் செய்திருக்கிறார் கவிஞர்.
_ 'எப்படி ஒன்றாய்/வளர்க்கப் போகிறோம்/இந்த முற்றத்தில்/ சோறு போடும் பன்றிகளையும்/ நீ
கொண்டு வரும்/முல்லைச் செடியையும் '
என்று கேள்வியாய் விரியும் சிறு கவிதை தொடங்கி கவிஞர் மதிவண்ணனின் கவிதைகள் 'மனித
நாகரீகத்தை நோக்கி வீசப்படும் கேள்விகள்.மனசாட்சியுடைய மனிதர்களெல்லோரையும் பெரிதும்
அலைக்கழிக்கும் வீச்சும், காத்திரமும் கொண்டவை.
'நமக்கிடையிலான தொலைவு ' ;- நூல் வெளியீடு-கருப்புப் பிரதிகள்
மின்னஞ்சல் ; karup...@rediffmail.com
----
ramakris...@yahoo.com

CopyrightThinnai.com

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
May 12, 2015, 6:19:11 AM5/12/15
to brail...@googlegroups.com
ஜாதி வெறியைத் தூண்டுவது யார்?
8
விவரங்கள்
எழுத்தாளர்: கொளத்தூர் மணி
தாய்ப் பிரிவு: பெரியார் முழக்கம்
பிரிவு: பெரியார் முழக்கம் - ஏப்ரல் 2015
C வெளியிடப்பட்டது: 12 மே 2015
கோயில் கட்டுகிறவர்கள் - கல்லூரி வியாபாரம் நடத்துகிறவர்கள் - தங்கள் சுயநலனுக்காக ஜாதி
வெறியைத் தூண்டி விடுகிறார்கள் என்று ‘எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்’ பரப்புரை
இயக்கத்தை 20-03-2015 அன்று சென்னை பெரம்பூரில் தொடங்கி வைத்து கழகத் தலைவர் கொளத்தூர்
மணி ஆற்றிய உரையின் சில பகுதிகள்:
“எங்கள் தலைமுறைக்கு ஜாதிவேண்டாம்” என்ற பரப்புரை பயணம் சென்னை மாவட்டக் கழக தோழர்களால்
நடத்தப்படுவது இது இரண்டாவது முறை. இந்த முறை திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக
தமிழகம் முழுவதும் ஆறு முனைகளில் இருந்து தொடங்குகிறது. தொடர்ச்சியாக இப்படிப்பட்ட
செயல் திட்டங்களை நாங்கள் எடுத்து வந்த போதும், இன்றைய சூழலில் –கடந்த இரண்டு ஆண்டுகளாக,
ஓரிரு ஜாதியவாதிகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, வளர்த்துக் கொள்வதற்காக
பொதுமக்களிடம் ஜாதி உணர்வை தூண்டிவிட்டதை பார்த்து ஒவ்வொரு ஜாதியினரும் அவ்வாறு நடக்க
தொடங்கிவிட்ட சூழலில் தான் இப்படிப்பட்ட ஒரு பயணத்தை நாம் நடத்தவேண்டிய தேவை வந்தது.
இந்த பயணத்தின் வழியாக பெரியாரின் அடிப்படைக் கொள்கையான ‘ஜாதி ஒழிப்பை’ மக்களிடம்
எடுத்துச் செல்வதுதான் நோக்கம்.
‘பறிபோகிறது எங்கள் நிலம்’ என்பது பற்றி திருமூர்த்தி விளக்கிப் பேசினார். இப்போது
வந்திருக்கின்ற சட்டம் நிலத்தை எப்போது வேண்டு மானாலும் யார் வேண்டுமானாலும் எடுத்துக்
கொள்ளலாம். தாது மணல் கொள்ளை ஒருபுறம் நடந்துகொண்டிருக்கின்றது; மீத்தேனுக்காக
தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மண் பாலைவனம் ஆக்கப்படுகின்றது; இப்படி பல வகையில்
நமது கனிம வளம் கொள்ளைப் போகிறது. நமக்கான இட ஒதுக்கீடு அரசு துறைகளில் மட்டும்தான்
என்ற சூழலில் வேக வேகமாக எல்லாவற்றையும் தனியார் மயமாக்கிக் கொண்டே போகிறார்கள்.
உலகிலேயே பெரிய தொழில் வாய்ப்பை வழங்குகின்ற நிறுவனம் நமது இரயில்வே துறையைக் கூட
தனியாருக்கு கொடுக்க துணிந்துவிட்டார்கள் என்ற போக்கைப் பார்க்கின் றோம் இப்படி நமக்கான
வேலைவாய்ப்புகள் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. ஆனால் இவற்றை பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல்
எல்லாவற்றையும் மறந்துவிட்டு, ஜாதி என்ற ஒன்றில் தனது கவனத்தை முழுதும் குவித்து, தான்
மட்டுமல்லாமல் இந்த சமுதாயத்தையும் அதன் பக்கம் திருப்பி ஜாதிவெறியை ஓங்கச் செய்கின்ற
முயற்சியை, தடுப்பதற்கான முயற்சி தான் இந்த பயணம்.
நாங்கள் பயணம் செய்யும் இடங்களில் பேசப் போவதெல்லாம் அங்கிருக்கும் இளைஞர்களைப்
பார்த்துத்தான், பிற்படுத்தப்பட்ட ஜாதியினரிடம் – தங்களை உயர்வான ஜாதியாக கருதிக்
கொண்டிருக்கிற மக்களிடம் போய் இந்து மதத்தின்படி நீங்கள் பெரிய ஜாதி அல்ல என்பது ஒன்று;
எப்படி இருந்தாலும் உங்களுடைய முன்னோர்கள் அறியாமையின் காரணமாக இந்த ஜாதியை
கடைபிடித்திருக்கக் கூடும். ஆனால் நீங்களோ கல்வி பெற்றிருக்கின்றீர்கள் – உயர் கல்வி
பெற்றிருக்கின்றீர்கள் – வேலை வாய்ப்புகளுக்காக மாநிலம் விட்டு மாநிலம் இந்தியா முழுவதும்
பரவி செல்கின்றீர்கள்; இந்தியாவை விட்டு வெளிநாடு களுக்கும் கூட செல்கின்றீர்கள்;
உங்களுக்கு ஒரு பரந்து விரிந்த விசாலமான பார்வை கிடைத்திருக்கின்றது; நீங்களுமா இந்த
ஜாதியை பேசிக் கொண்டிருக்க வேண்டும்? உங்கள் தலைமுறையிலாவது விட்டுத் தொலையுங்கள் என்ற
கோரிக்கையை முன்வைத்து பேசுவதுதான் எங்கள் திட்டம். ஆனால் இப்போது வந்திருப்பவர்களெல்லாம்
ஒருபக்கம் ஜாதி வெறியையையும் மற்றொரு பக்கம் மத வெறியையும் தூண்டிவிடப் பார்க்கின்றார்கள்.
பி.ஜே.பி ஆட்சிக்கு வந்த பின்னால், அவர்கள் now or never என்ற ஒரு கொள்கையை வைத்திருக்
கின்றார்கள்; இப்போது செய்தால் தான் – இல்லா விட்டால் எப்போதும் முடியாது என்று வேக
வேகமாக தொடங்கிவிட்டார்கள் தங்கள் வேலையை. எம்.ஜி.ஆர் வாரம், சிவாஜி வாரம், ரஜினி
வாரம் என்று தொலைக் காட்சிகளில் வருவதைப் போல, இந்த வாரம் மாட்டுக்கறி வாரம் -
சமஸ்கிருத வாரம் – பத்து பிள்ளைகள் வாரம் என்று அதையே நாம் பேசிக் கொண்டிருக்கும்படி
நம்மை செய்துவிட்டார்கள்; அவர்கள் செய்யும் கொடுமைகளின் பக்கம் நமது கவனத்தையே விடாமல்
பார்த்துக் கொண்டிருக் கின்றார்கள். ஆனால் அவர்கள் என்னென்னவற்றை யெல்லாம் மாற்றத்
தொடங்கியிருக்கிறார்கள் – எதிலிருந்து மாற்றத்தை கொண்டுவரத் துடிக்கிறார்கள் என்பதை நாம்
பார்க்க வேண்டும்.
சில ஆண்டுகளுக்கு முன்னால் விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற சில அமைப்புகள் திரிசூலத்தை
கொடுத்து மூன்று எதிரிகளை சொன்னார்கள்; முதலில் முஸ்லீம்கள் அடுத்து கிறிஸ்துவர்கள்
அடுத்து மதசார்பின்மை பேசுபவர்கள் என்றான். இப்பொழுது அதை மாற்றி அமைத்துக் கொண்டான்.
குiஎந ஆள (ஐந்து எம்) என்கிறார்கள்; முதலில் மார்க்சிஸ்ட் இரண்டாவது மெட்டீரியலிஸ்ட்
மூன்றாவது மெக்காலேயிஸ்ட் நான்காவது மிஷனரிஸ் கடைசியாக முஸ்லீம்ஸ் என்கிறான். முஸ்லீம் மீது
உள்ள கோபம் போய் விட்டதாக யாரும் நினைக்க வேண்டாம்; முதலில் இருந்து சொன்னவை எல்லாம்
மறந்தாலும் கடைசியாக சொன்னது மறக்காமல் மனதில் அழுத்தமாக நிற்கும் என்பதால் தான் முஸ்லீமை
கடைசியாக சொல் கின்றார்கள்.
மெக்காலே மீது கோபம் ஏன்?
இவர்களை நோக்கி நம்மை திருப்பிவிடுவதில் ஒவ்வொன்றாக நீங்கள் எண்ணிப் பாருங்கள்;
மார்க்சியத்தின் மீதான கோபம் ஒரு வேலை பணக் காரனுக்கு வரலாம்; கடவுள்
நம்பிக்கையாளர்களுக்கு மெட்டீரியலிஸ்ட் மீது கோபம் வரலாம்; மெக்காலே மீது என்ன கோபம்?
கல்விமுறையை இந்த நாட்டிற்கு கொண்டு வந்தவர்மீது என்ன கோபம்? மெக்காலே கொண்டு வந்த
கல்விமுறை தான் நம்மை அடிமையாக்கியது என்று நம்மவர்கள் சிலர் சொல்கின்றார்கள்;
ஆங்கிலேயரிடம் அடிமையாக இருங்கள் என்றா சொல்லிக் கொடுத்தார்? கல்வி முறையில் என்ன கற்றுக்
கொடுத்தார்? நம்ம ஆள் எதையுமே படிக்க மாட்டான்; எவனோ சொல்லி சென்றதை இவனும் சொல்லிக்
கொண்டே இருப்பான்; இவன் படித்து தெரிந்து கொள்வதில்லை.
உதாரணமாக ‘தஞ்சை பெரிய கோவிலின் நிழல் கீழே விழாது’ என்று எவனோ சொல்லிவிட்டு போனதை
இன்றும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்; அங்கு போய் பார்த்தால் நிழல் விழுவதைப் பார்க்க
முடியும். அரிஸ்டாட்டில் அவர்கள் ‘பெண்களுக்கு இரண்டு பல் குறைவு’ என்று சொல்லிக் கொண்டே
இருந்தவர்; அவரின் மனைவி வாயைத் திறந்து பார்த்திருந்தாலே தெரிந்திருக்கும் அதைவிட்டு
சொல்லிக்கொண்டே இருக்கிறாரே என்று அவரைப் பின்னால் கிண்டல் செய்தார்கள் என்பதாகச் சொல்வார்கள்.
யாராவது பரப்பிவிடும் கருத்தை உறுதிபடுத்திக் கொள்ளாமலேயே பல கருத்துகள் பின்பற்றப்படு
கின்றன; அதில் ஒன்று தான் மெக்காலே பற்றியது. வேதம் புனிதமானது என்கிறார்கள்;
கருப்பர்களை (நம்மவர்களை) அழிப்பதற்காக, மது – மாமிசம் கொடுத்து இந்திரனைத் (கடவுளை)
துணைக்கு அழைப்பதைதான் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டிருக் கின்றது; அதை படித்து
பார்க்காமலேயே புனித மானது என்று சொல்லி வருகிறார்கள். இதை யெல்லாம் பார்த்த மெக்காலே
‘மினிட் ஆன் எஜுகேசன்’ என்று எழுதுகிறார். அதில் சொல்லு கிறார்…. ‘இந்த நாட்டில்
இருக்கின்ற இலக்கியங்கள் –அறிவுச் செல்வங்கள் (பாரசீக, அரேபிய, சமஸ்கிருத மொழிகளெல்லாம்
அப்போது இருந்தது) என்று சொல்வதை எல்லாம் சேர்த்துப் பார்த்தேன்; இவைகள் சொல்லுகின்ற
செய்திகள், ஐரோப்பிய தொடக்கப் பள்ளி மாணவனின் புத்தகத்தில் இருக்கும் செய்திகளின்
அளவுக்குக் கூட இல்லை’ என்று.
இங்கிருந்த அறிவியல், வரலாறு, புவியியல் எல்லாமே வேடிக்கையாக இருக்கின்றது; இவனுடைய
புவியியலில் பாற்கடல் எல்லாம் இருக்கின்றது. ஆயிரம் அடி உயர அரசர்கள் இவனுடைய
வரலாற்றில் இருக்கின்றார்கள். அறிவியல் ஒன்றுமே இல்லை. எனவே இவர்களுக்கு நாம் அறிவியலை
கொடுத்தாகவேண்டும் வரலாற்றை கொடுத்தாக வேண்டும் புவியலைப் பற்றிய செய்திகளை புரிய
வைக்க வேண்டும் என்பதற்காக ஒரு கல்வி முறை வேண்டும் என்று சொன்ன மெக்காலேவை ஆங்கிலத்தை
நம்மீது புகுத்தியவன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
மெக்காலே சொல்கிறார்… “எங்களில் சரிபாதி பேர் தாய் மொழியில் கல்வி வேண்டும் என்றார்கள்;
நாங்கள் சரிபாதி பேர் ஆங்கிலத்தில் தான் வேண்டும் என்று சொன்னோம்; நாங்கள் எல்லாம்
விவாதித்து ஒரு முடிவுக்கு வந்தோம்; முதலில் ஆங்கிலத்தில் கல்வியை கொடுப்பது, அதன்
வழியாக அறிவை பெற்ற அந்தந்த மொழிக்காரர்கள் ஒரு இருபது -முப்பது ஆண்டுகளில் தங்கள்
மொழியில் நூல்களை கொண்டுவந்து விடுவார்கள் என்று முடிவு செய்தோம்” என்று.
அரசின் தூண்களாக மூன்றைத்தான் சொல்வார்கள்; ஒன்று சட்டம் இயற்றுகின்ற துறை, அடுத்து
நீதித்துறை, மற்றொன்று நிர்வாகம் செய்கின்ற அரசு அதிகாரிகள் துறை. இந்த மூன்றிலும்
ஒன்றுகூட ஒழுங்காக இல்லை. இதன் மீதெல்லாம் நமது கவனம் செல்லவே விடுவதில்லை. நாடாளுமன்ற
உறுப்பினர்கள் பொறுப்பற்று பேசுகின்றார்கள். கோட்சேவுக்கு சிலை வைக்க வேண்டும் என்று
பி.ஜே.பி சொல்கின்றான். ஒரிஜனல் காந்தியை கொன்று வழக்கு நடத்தி, உயர் நீதி மன்றத்திற்கு
போய், மேல் முறையீட்டில் உறுதி செய்யப்பட்டு, தூக்கில் போடப்பட்ட கோட்சேவை தேசபக்தன்
என்கிறான்; ஆனால் இராஜீவ் காந்தியை கொன்றதாக வழக்கு ஏதும் நடத்தப்படாமலேயே, குற்றம்
சாட்டப்பட்ட பிரபாகரனின் படம் வைத்தால் கூட கைது செய்கிறார்கள்; என்ன நிர்வாக துறை இது?
தமிழ்நாட்டை எப்படியாவது பிடித்தாக வேண்டும் என்று ஒவ்வொன்றாக செய்கிறார்கள். 1925 இல்
தொடங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் தொண்ணூறு ஆண்டுகள் கழித்து 2014 இறுதியில் தான் இட ஒதுக்கீட்டை
ஏற்றுக் கொள்கிறோம் என்று அறிவித்திருக்கின்றார்கள். கடந்த ஆட்சியில் இட ஒதுக்கீடு பற்றிய
சிக்கல் வந்த போது, தமிழ்நாட்டில் மட்டும் ஏற்றுக் கொள்வதாக, இங்கிருக்கும் பி.ஜே.பி.யினர்
சொன்னார்கள். தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டை எதிர்க்க முடியாது என்ற நெருக்கடியை உனர்ந்து
பி.ஜே.பி சொன்னதை இப்போது ஆர்.எஸ்.எஸ்ஸும் சொல்கிறான். திருக்குறளை தேசிய நூல்
ஆக்குவோம் என்று தருண்விஜய் சொல்கிறார். அவருக்கு பாராட்டு விழாவும் நடத்தியாகிவிட்டது.
இப்படிப்பட்ட சூழலில் அவர்கள் சொல்கிறார்கள் எங்கள் பிரதமர் எப்போது வெளிநாட்டு
தலைவர்களிடமெல்லாம் கீதையை கொடுத்தாரோ அப்போதே கீதை தேசிய நூலாக முடிவு
செய்யப்பட்டதாக தான் பொருள் என்கிறார் சுஷ்மா சுவராஜ்.
கீதை: விவேகானந்தர் கூறியது என்ன?
கீதையை பற்றி நாங்கள் கேட்கும் கேள்விகள் ஒருபுறம் இருக்கட்டும்; கீதையைப் பற்றி அம்பேத்கர்
எழுதியதை கூட விடுங்கள். பார்ப்பனர்களின் ஹீரோ விவேகானந்தர் என்ன சொல்கிறார்?
(காங்கிரசில் காந்தி, பி.ஜே.பி யில் மோடி என பார்ப்பன ரல்லாதவரை கொண்டுவந்து வைத்துக்
கொண்டு உங்கள் ஆள் என்று நம்மிடம் காட்டுவார்கள்; அப்படிதான் விவேகானந்தரையும் இவர்கள்
காட்டுகிறார்கள்.) போர் நடந்து கொண்டிருக்கும் போது கிருஷ்ணன் அர்சுணனுக்கு சொன்னது தான்
கீதை; இவ்வளவு பெரிய புத்தகமாக இருக்கிறதே ! சண்டை நடக்கும் போது யார்
சுருக்கெழுத்தில் குறிப்பெடுத்தது? என்று விவேகானந்தர் கேட்டார். இது ஒரு பித்தலாட்டம்
என்ற பொருளில் விவேகானந்தர் சொன்ன கீதையை தான் தேசிய நூலாக்க வேண்டும் என்று சொல்கின்றான்.
விவேகானந்தர் மேலும் பலவற்றை கேட்டார். வயதான மாடுகளை பாதுகாக்க கோசாலை என்று
நடத்துபவர்கள் நன்கொடை கேட்டு விவேகானந் தரிடம் சென்றார்கள்; (ஞான தீபம் என்று
விவேகாந்தரின் நூல்களை தொகுத்து போட்டிருக் கிறார்கள் வாய்ப்பிருப்பவர்கள் படித்துப்
பாருங்கள்) பீகாரில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவாமல் இதை ஏன் செய்து
கொண்டிருக்கிறீர்கள் என்று விவேகானந்தர் கேட்டதற்கு, என்ன இருந் தாலும் கோமாதா நமது தாய்
அல்லவா? என் கிறார்கள். ஆம் உங்களைப் போன்ற புத்திசாலிகளை வேறு யார் பெற்றிருக்க
முடியும்? என்கிறார் விவேகானந்தர். இதை நாங்கள் பேசும் வீரமணியோ அம்பேத்கரோ எழுதவில்லை;
பார்ப்பனர்கள் பாராட்டும் விவேகானந்தர் சொல்கிறார்.
மோடியின் கண்டுபிடிப்புகள்
அறிவியலை பரப்புவதற்கு ஆய்வதற்கு பல நிறுவனங்கள் இருக்கின்றன; இப்போது மோடி புதுசா
அறிவியலை கண்டுபிடிக்கின்றார். பிளாஸ்டிக் சர்ஜரி அந்த காலத்திலேயே - புராணத்திலேயே
இருந்திருக்கின்றது; இல்லையென்றால் விநாயகரின் உடலில் யானையின் தலை எப்படி
ஒட்டப்பட்டிருக்க முடியும்? என்று விஞ்ஞானிகள் மாநாட்டில் பிரதமர் மோடி பேசுகிறார். இந்த
மடையன்களும் (விஞ்ஞானிகள்) கேள்வி கேட்காமல் - எதிர்ப்பு தெரிவிக்காமல்
கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். குழந்தையின் கழுத்தின் சுற்றளவு எவ்வளவு? யானையின் கழுத்தின்
சுற்றளவு எவ்வளவு? என்ற சிறு கேள்வியை அன்று பெரியார் கேட்டார். எவரிடமிருந்தும் பதில்
வரவில்லை
அந்த காலத்திலேயே புஷ்பக விமானம் இருந்ததாக மோடி பேசுகிறார்; அதே போல இங்கு வளவன்
ஏவா வானவூர்தி (பைலட் இல்லாத ராக்கெட்), கைவிட்டகலா கால இயந்திரம் (ரிஸ்ட் வாட்ச்)
இருந்தது என்று இங்கிருக்கும் புலவர்களும் புழுகி கொண்டிருக்கிறார்கள். இருவர் சொல்வதும்
பொய்தான்; யார் பொய் சொன்னாலும் ஏற்றுக் கொள்ள முடியாது. ‘தமிழ் படித்தாலே உனக்கு கண்
பின்னால் போய் விடுகிறது’ என்றார் பெரியார். நாளைக்கு என்றே எந்த புலவரும்
பேசுவதில்லை; இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் என்பார்கள். இதைச் சொன்னால் பெரியாரை
கோபித்துக் கொள்கிறார்கள்; ‘கடவுளையும் காதலையும் விட்டால் உன் இலக்கியங்களில் என்ன
இருக்கின்றது? எடுத்துக் காட்டு’ என்றார் பெரியார். அப்படி காட்டுவதற்கு எதுவும் இல்லை.
சிலர் பட்டிமன்றங்களில் பேசுவதற்கு மட்டும் பயன் பட்டிருக்கலாமே தவிர வேறு எதற்கு பயன்பட்டது?
துரியோதனன் மனைவியும் கர்ணனும் தாயம் ஆடிக்கொண்டிருந்தார்களாம்; துரியோதனன் வந்ததைப்
பார்த்து எழுந்த அப்பெண்ணின் முந்தானையைப் பிடித்து கர்ணன் இழுத்தானாம்; முத்துகள் எல்லாம்
உதிர்ந்து விட்டதாம். உடனே துரியோதனன் ‘பொறுக்கவோ, கோக்கவோ’ என்று கேட்டானாம்;
“அதற்குப் பொறுத்துக் கொள்ளட்டுமா? கோபித்துக் கொள்ளட்டுமா? என்பதும், பொறுக்கிக்
கொடுக்கட்டுமா? கோர்த்துக் கொடுக்கட்டுமா? என்பதும் பொருள்” என்று கூறுகிறார்கள்; வட
இந்தியாவில் நடந்ததாகச் சொல்லபடும் கதை இது; துரியோதனன் தமிழில் எப்படி
பேசியிருப்பான்? என்று யாரும் கேள்வி கேட்பதில்லை. இப்படித் தான் இவர்கள் தொடர்ந்து
புழுகுகிறார்கள்.
பாரதப் போர் நடக்கிற போது, அரண்மனையில் இருக்கும் கண் தெரியாத திரிதராஷ்டரனிடம்,
சஞ்சயன் என்பவன் ஒரு கருவி மூலமாக பார்த்துப் போரின் நிலைமையைப் பற்றி சொல்லுகின்றானாம்;
எனவே அந்த காலத்திலேயே தொலைக்காட்சி இருந்தது என்கிறார். இவை எல்லாவற்றையும்
விஞ்ஞானிகளில் மாநாட்டிலேயே பேசுகிறார்கள். படிப்புக்காரன் யாரும் அங்கு எதிர்ப்பு
தெரிவிக்கவில்லை. ‘ஆலிஸ் இன் தி வொண்டர் லேண்ட்’. அரேபியன் கதைகள் இதையெல்லாம் கடவுள் என
நம்பாமல் கதை என்று படித்துக் கொண்டே போகிறார்கள்; ஆனால் இவர்கள் மட்டும் நம்மை நம்பச்
சொல்கிறார்கள். அதன் மீது தன்னுடைய ஆட்சியை – அறிவியலை எல்லாவற்றை யும் கட்டமைத்து விட
எண்ணுகின்றார்கள்; எல்லாம் அதையொட்டி போகவேண்டும் என்கிறார்கள்.
ஹரியானாவில் செத்துப் போன மாட்டின் தோலை உரித்ததற்காக, ஐந்து பேரை கொன்றான். மனித
உயிர்களைவிட, செத்த மாட்டை உயர்வாகக் கருதி கடந்த ஆட்சிக் காலத்தில் இப்படி செய்ததை
நீங்கள் அறிந்திருப்பீர்கள். (ஈழ சிக்கல் வருகின்ற போதெல்லாம் அவ்வப்போது கிரிக்கெட் போட்டி
வந்துவிடும்; பலரும் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி அனைத்து பிரச்சனையையும் மறந்து
விடுவார்கள்.) இப்படி பல சிக்கல்கள் நடக்கும்போதெல்லாம் நம் நாட்டில் அவ்வப்போது ஜாதி
சிக்கல்கள் வந்துகொண்டே இருக்கின்றது. ஜாதி வாதம் பேசப்படுகின்றது. ஜாதியை உயர்த்தி
பேசுபவர்கள் யார்? பலன் அனுபவிக்கும் ஜாதியா? இல்லையே பாதிக்கப்பட்டவன் அல்லவா பேசிக்
கொண் டிருக்கிறான். அவர்களிடம் போய் அவர்களை விளங்கச் செய்வதற்குத் தான் இந்தப் பயணம்.
பெரியார் ஜாதியை பற்றி பல விளக்கங்களை சொல்லியிருக்கின்றார். சுயமரியாதை இயக்கம்
தொடங்கும் முன்பே காங்கிரஸ்காரராக இருக்கும் போதே பேசத் தொடங்கிவிட்டார்; காங்கிரஸ்
மாநாடுகளில் பேசுகிறார். காரைக்குடி ஜில்லா மாநாட்டிற்கு பெரியார் தான் தலைவர்; அந்த
தலைமை உரையில், மனுதர்மத்தைப் பற்றி, சூத்திரன் என்பதற்கான அர்த்தம் பற்றி, தாழ்த்தப்
பட்டவர்களை அவமதிக்கலாமா என்பதைப் பற்றி பல பிரச்சனைகளை பேசுகிறார். தீண்டாமை என்பதில்
இருக்கும் மூடத்தனத்தையும், மூர்க்கத்தனத்தையும் பார்த்தப் பின்னால் நாளைக்குப் பார்த்துக்
கொள்ளலாம். இன்று என்ன அவசரம் என்று கருதுவதற்கு என் மனம் இடம் தர மறுக்கிறது என்று
எழுதுகிற அளவிற்கு தீண்டாமையின் கொடுமையைப் பெரியார் உணர்ந்திருந்தார்; ஆனால்
பாதிக்கப்பட்ட நாம் உணரவில்லை.
(தொடரும்)

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
May 12, 2015, 6:22:57 AM5/12/15
to brail...@googlegroups.com
திருநங்கைகள் உரிமை
8
விவரங்கள்
எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்
தாய்ப் பிரிவு: பெரியார் முழக்கம்
பிரிவு: பெரியார் முழக்கம் - ஏப்ரல் 2015
C வெளியிடப்பட்டது: 12 மே 2015
திருநங்கைகளுக்கு சம உரிமை வழங்க வலியுறுத்தி தி.மு.க. உறுப்பினர் திருச்சி சிவா,
மாநிலங்களவையில் கொண்டு வந்து தீர்மானம் நிறைவேற்றியிருப்பது வரவேற்கக்கூடிய வரலாற்றுச்
சிறப்பு மிக்க நிகழ்வாகும். இதை ஒருமித்த தீர்மானமாக நிறைவேற்றிட அவையின் முழுமையான
ஆதரவைப் பெறுவதற்கு ஒத்துழைத்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியையும் கருத்து
மாறுபாடுகளுக்கு அப்பால் பாராட்ட வேண்டும்.
பிறப்பின் அடிப்படையில் சமூகத்தில் வேறுபாடுகளையோ, இழிவுபடுத்துதலையோ சகிக்க
முடியாது. அதை ஒழித்தாக வேண்டும் என்பதே பெரியாரியல். திருநங்கைகள் உரிமைகளும்
அவர்களின் சுயமரியாதையும் அங்கீகரிக்கப்பட வேண்டும். இப்போது மேலவையில் குரல்
வாக்கெடுப்பு வழியாக நிறைவேற்றப்பட்டுள்ள ‘திருநங்கைகள் உரிமைச் சட்டம்-2014’
நாடாளுமன்றத்தின் விவாதத்துக்கும், வாக்கெடுப்புக்கும் அனுப்பி வைக்கப்படவிருக்கிறது.
நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாநிலங்களவை காட்டிய வழியில் வழிமொழிந்து திருநங்கைகளின்
உரிமைக் கதவுகளை திறந்துவிட வேண்டும் என்பதே மனித சமத்துவம் பேணும் அனைவரின்
எதிர்பார்ப்பும் ஆகும்.
45 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக தனிநபர் கொண்டுவந்த ஒருவரைவுத் தீர்மானம் ஒரு
மனதாக ஏற்கப்பட்டு, சட்டமாக்கப்பட்டுள்ளது. இது தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர்
திருச்சி சிவாவுக்கு கிடைத்துள்ள வரலாற்றுப் பெருமை. திருநங்கைகளுக்கு எதிராக
உடலியல், கருத்தியல் அடிப்படையில் திணிக்கப்பட்டு வந்த வன்முறைகள் அதிகரித்த நிலையில்
இப்படி ஒரு வரைவு நகலைக் கொண்டு வந்ததாக திருச்சி சிவா குறிப்பிட்டுள்ளார்.
பிறப்பில் ஊனமாகிப் போன இவர்களில் திருநங்கைகள் மட்டுமின்றி திருநம்பிகள் என்று
இருபாலினத்தவர்களும் இருக்கிறார்கள். பெண், ஆண் பாலினத்தில் மாற்றுத் திறனாளிகளை
வகைப்படுத்துவது போன்றே இவர்களையும் பெண்-ஆண் மாற்றுத் திறனாளிகளாகக் கருதப்பட வேண்டும்
என்று, திருநங்கை லிவ்விங் °மைல் வித்யா கூறியிருக்கும் கருத்தை நாம் வரவேற் கிறோம்.
அதேபோல், ‘மூன்றாம் பால் இனம்’ என்ற சொற்றொடரைப் பயன்படுத்துவதும் ஏற்க இயலாததேயாகும்.
அப்படியானால் முதலாம் பால் இனம், இரண்டாம் பால் இனம் என்ற படிநிலை ஏற்றத் தாழ்வுகளை
மறைமுகமாக ஏற்பதாகிவிடும்!
ஜாதியமைப்பில் நிலை நிறுத்தப்பட்டுள்ள மேல், கீழ்படி நிலைகளே ஒடுக்குமுறைகளை திணித்துக்
கொண்டிருக்கின்றன. திருநங்கைகள், திருநம்பி களையும் அதே நிலைக்குத் தள்ளிவிடக் கூடாது
என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
பெண்-ஆண் என்ற பிறப்பின் அடிப்படை யிலான அடையாளங்களானாலும் கருப்பு-வெள்ளை என்ற இன
அடிப்படையிலான அடையாளங்களாலும் பாகுபாடுகளுக்கு உள்ளாக்கப்படக் கூடாது என்பதே உலகம்
முழுதும் ஏற்றுக் கெள்ளப்பட்டிருக்கிற கொள்கை.
அய்க்கிய நாடுகள் இந்த மானுட சமத்துவத்தையே உரிமைகளாக ஏற்றுக் கொண்டிருக்கின்றன. தமிழர்
சமுதாயத்துக்கு ‘சுயமரியாதை’ என்ற பெயரில் பெரியார் முன் வைத்த சிந்தனைப் புரட்சியும்
இதே நோக்கம் கொண்டதுதான்.
திருநங்கைகளை அவர்கள் பிறப்பின் அடிப்படையில் இழிவுக்கு உள்ளாக்கக்கூடாது என்ற அதே சமூக
நியாயம், ‘பிராமண’, ‘சூத்திர’ பாகுபாடுகளுக்கும் பொருந்தக் கூடியதேயாகும்.
பிறவியின் அடிப்படையில் மானுட சமத்துவத்தை மறுக்கும் எந்த கொள்கையும் ஒழிக்கப்படவேண்டும்
என்ற உயரிய நிலையை எட்டும்போது மட்டுமே மனிதகுலம் அதன் முழுமையான சிறப்பை
அடையும். அதைத்தான் வள்ளுவர், ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்றார். அந்த கொள்கை
வழியில் ‘திருநங்கை’ உரிமைகளுக்கு ஏற்புவழங்கிய மாநிலங்களவைத் தீர்மானத்தை வரவேற்கிறோம்.

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
May 12, 2015, 6:47:55 AM5/12/15
to brail...@googlegroups.com
ஜெ. விடுதலை - நீதியின் வாழ்வு தன்னை
நிதி கவ்வும்
8
விவரங்கள்
எழுத்தாளர்: செ.கார்கி
தாய்ப் பிரிவு: சமூகம் - இலக்கியம்
பிரிவு: கட்டுரைகள்
C வெளியிடப்பட்டது: 12 மே 2015
jayalalitha sasikala 567
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதாவும் மற்ற மூன்று கூட்டுக் களவாணிகளும்
விடுவிக்கப்பட்டிருக்கின்றார்கள். நீதிபதி குமாரசாமி தனக்கு கொடுக்கப்பட்ட பணியை மிகச்
சிறப்பாக செய்து முடித்திருக்கின்றார். இப்படி ஒரு தீர்ப்பு வரும் என்று யாரும்
எதிர்பார்த்திருக்க மாட்டோம். ஆனால் நீதிமன்றங்கள் மீது முற்று முழுதாக நம்பிக்கை
வைத்திருக்கும் படித்த மேட்டுக்குடி வர்க்கத்திற்கும், நடுத்தர வர்க்கத்திற்கும் இது ஒரு
சாட்டையடி தீர்ப்பு!
ஜனநாயகம் என்பது முதலாளி வர்க்கத்தின் பிரதிநிதி என்று நாம் சொல்லும் போது நம்மை
ஏளனமாகப் பார்த்தவர்கள் தங்கள் கருத்துக்களை பரிசோதனை செய்து கொள்வதற்கான வாய்ப்பு இது.
எந்த சாட்சியங்களின் அடிப்படையில் குன்ஹா ஜெயாவுக்கு நான்கு ஆண்டுகள் சிறையும்,
100கோடி ரூபாய் அபராதமும் விதித்தாரோ அதே சாட்சியங்கள் அடிப்படையில் குமாரசாமி
ஜெயாவையும் மற்ற நான்கு பேரையும் விடுவித்திருக்கின்றார். இந்திய நீதிமன்றம் என்பது ஆளும்
வர்க்கத்தின் கூலிப்படை என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக இப்போது தெரிந்திருக்கின்றது. ஊழல்
என்பது நீதிமன்றத்திற்கு வெளியே நடக்கும் ஒரு அந்நியமான நடவடிக்கை அல்ல, அதை நீதிமன்றம்
கட்டுப்படுத்துவதற்கு, அது நீதிமன்றத்திற்கு உள்ளேயும் நடக்கும் ஒரு உயிரோட்டமான
பிரச்சினை. அதை இதே கட்டமைப்பிற்குள் நின்று ஒரு போதும் நம்மால் தீர்க்க முடியாது. இந்த
ஜனநாயகம் சதவீதக்கணக்கில் ஊழலை அனுமதித்திருக்கின்றது. 10 சதவீதத்திற்கும் அதிகமான
சொத்தை கணக்கில் வராமல் சேர்த்ததாக நிருபிக்கப்பட்டால் தான் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட
முடியும். அது 10 சதவீதத்திற்கு குறைவு என்றால் உங்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது.
இதற்குப் பெயர்தான் ஜனநாயகம்!.
ஜெயலலிதா உண்மையில் யோக்கியம் என்றால் என்ன மயித்துக்கு 18 வருடம் வாயுதா மேல
வாயுதா வாங்கி வழக்கை இழுத்தடித்தார் என்று குமாரசாமியால் சொல்லமுடியுமா? கலைஞர்
சரியாகவே சுட்டிக்காட்டி இருக்கின்றார், வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடக்கும் போது
ஜெயா தரப்பு வழக்கறிஞர் குமார் “இது அரசியல் ரீதியில் பழிவாங்கும் நோக்கத்தில்
தொடரப்பட்டுள்ள பொய் வழக்கு” என்று சொன்னதற்கு இதே நீதிபதி குமாரசாமி “குற்றவாளிகள்
மீது கூறியுள்ள புகார் உண்மையில்லை என்பதை உறுதி செய்வதற்கான எந்த ஆதாரத்தையும்
முழுமையாகக் காட்டாமல், வாய்வழியாக பொய்வழக்கு என்று சொன்னால் எப்படி ஏற்றுக்கொள்ள
முடியும்? அரசுத் தரப்பில் 259 சாட்சிகள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். புகார் உண்மை
என்பதை நிரூபிக்கும் வகையில் 2 ஆயிரத்து 341 ஆவணங்கள் தாக்கல் செய்து
உறுதிபடுத்தியுள்ளனர். குற்றவாளிகளின் தரப்பில் 99 சாட்சிகளும் 385 ஆவணங்கள் மட்டுமே
தாக்கல் செய்துள்ளீர்கள். அதிலும் அரசுத்தரப்புக் குற்றத்தை முறியடிப்பதற்கான ஆதாரங்கள்
சொல்லிக்கொள்ளும் வகையில் இல்லை” என்று கூறியிருக்கின்றார். இது ஒன்றே போதும் அங்கே என்ன
நடந்திருக்கும் என்று ஊகிப்பதற்கு.
ஆனால் இந்தத் தீர்ப்பு இறுதி தீர்ப்பல்ல, கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு
செய்யும் என்று சொல்லி உள்ளதால் நாம் இன்னும் ஒரு பதினெட்டு ஆண்டுகள் காத்திருப்போம். ஏன்
என்றால் இனி வழக்கு மெதுவாகத்தான் நடக்கும் சாத்தியக்கூறு இருக்கும். அப்படியே வேகமாக
நடந்தாலும் தத்து போன்ற நேர்மையான(?) நீதிபதிகள் என்ன மாதிரி தீர்ப்பு வழங்குவார்கள் என்று
நமக்குத் தெரியும்!
ஜெயா விடுவிக்கப்பட்டதை அறிவித்தவுடன் தொண்டை கிழிய கத்தி தெருவில் வருபவன்
போனவனுக்கெல்லாம் இனிப்பு கொடுத்து, பட்டாசு வெடித்து ஒரு திருவிழா போல கொண்டாடிய
என் மானமுள்ள இனிய தமிழ்மக்களே! இந்த நொடியில் உங்களிடம் சொல்வதற்கு ஒன்று இருக்கின்றது
என்னிடம்.
வேதவள்ளி, வேதவள்ளி என்றொரு பெரிய பாப்பாத்தி தன் மகள் சின்ன பாப்பாத்தி கோமளவள்ளி
உடன் கர்நாடகத்தில் இருந்து கிளம்பி தமிழகத்துக்கு பஞ்சம் பிழைக்க வந்தார். முதலில்
திரைப்படத்துறையில் பெரிய பாப்பாத்தி வேதவள்ளிக்கு வாய்ப்பு கிடைத்தது. அவர் தன் பெயரை
ஸ்டைலாக சந்தியா என்று மாற்றிக் கொண்டார். பின்னர் குட்டி பாப்பாத்தி கோமளவள்ளிக்கும்
கலைத்துறையில் சேவை செய்யும் பெரும்பாக்கியம் கிடைத்தது. அவரும் தன்னுடைய பெயரை
ஜெயலலிதா என்று ஸ்டைலாக மாற்றிக்கொண்டார். பின்னர் பல திரைப்படங்களில் குத்துப்பாட்டுக்கு
கலக்கல் நடனமாடி இரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அதிலும் குறிப்பாக நம்
நாடு படத்தில் அவர் பாடிய “நான் ஏழு வயசுல இளநி வித்தவ, பதினேழுல நிலைச்சி நின்னவ”
என்ற தத்துவப் பாடல், அவரை புகழின் உச்சியிலேயே கொண்டு போய் நிறுத்தியது.
முதலில் நீங்கள் நிறுத்துங்கள், இந்த கருமத்த எல்லாம் எதுக்கு இப்ப எங்ககிட்ட சொல்லீட்டு
இருக்கிறீங்க என்று நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது. கொஞ்சம் சிரமம் பாக்காமல் நான்
சொல்வதைக் கேளுங்கள் என் இனிய தமிழ் மக்களே! சினிமாவிலே அயிட்டம் சாங்குக்கு ஆட்டம்
போட்டவள், சினிமாவுக்கு நடிக்கவந்த பல பெண்களை தன்னுடன் படுக்கக் கூப்பிட்ட பொறுக்கிகள்,
பெண்கள் வயிற்றில் பம்பரம் விட்ட நாக்குத்துறுத்திகள், நிஜ வாழ்க்கையில் ஒன்றும், ஒன்றும்
இரண்டு என்று கூட சொல்லத் தெரியாத கூமுட்டை கம்மநாட்டிகளுக்கெல்லாம் ஓட்டு போட்டு
எம்.பிக்களாகவும், எம்.எல்.ஏக்களாகவும் தேர்ந்தெடுத்து அனுப்பிய என் இனிய தமிழ்மக்களே,
கொஞ்சம் பொறுமையாகக் கேளுங்கள்.
இன்று ரேசன் கடையிலே அரிசி இல்லை, கோதுமை இல்லை பாமாயில் இல்லை என்று ஏகத்துக்கும்
கோபித்துக் கொள்ளும் மக்களே அன்று உங்களுக்குத் தெரியாதா, ஜெயா ஒரு மோசடிப் பேர்வழி!
என்றும் கொள்ளைக்காரி! என்றும். ஒருமுறை ஏமாந்தால் அவனை முட்டாள் என்று சொல்லலாம் ஒவ்வொரு
முறையும் ஏமாறும் உங்களை என்னவென்று சொல்வது. தொண்ணுத்தி ஆறில் இருந்து எத்தனை ஊழல்
வழக்குகள் ஜெயாவின் மீது போடப்பட்டன. ஆனால் அதற்குப் பின்னரும் அவரையே நீங்கள் இரண்டு முறை
தேர்ந்தெடுத்தீர்கள். அதற்குக் காரணம் நீங்கள் பிழைப்புவாதத்திலும், சுயநலத்திலும்
மூழ்கிக்கிடக்கிறீர்கள், அரசியல் என்பதை பொறுக்கித் தின்பதற்கான ஓர் இடமாகவே நீங்கள்
பார்க்கிறீர்கள். ஊழல் என்பது இந்திய ஜனநாயகத்தின் பிரிக்கமுடியாத ஓர் அங்கம் என்ற
முடிவிற்கு நீங்கள் வந்துவிட்டீர்கள். இதை மாற்றுவதற்கான எந்த முயற்சியும் எடுக்காத, எடுக்க
விரும்பாத கோழைகளாக நீங்கள் மாறி வெகு காலம் ஆகிவிட்டது. ஆனால் இலை அமைதியை
விரும்பினாலும் காற்று விடாது, மக்களே!
ஜெயாவின் மீது இதுவரை எத்தனை ஊழல் வழக்குகள் போடப்பட்டிருக்கின்றது என்பது அவருக்கே
தெரியாது, அத்தனை வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன. வண்ணத்தொலைக்காட்சி வழக்கு, டான்சி
நில வழக்கு, பிளசண்ட் ஸ்டே விடுதி வழக்கு, டிட்கோ-ஸ்பிக் பங்குகள் வழக்கு, பிறந்த நாள்
பரிசு வழக்கு, சொத்துக்குவிப்பு வழக்கு, வருமானவரி வழக்கு என அனைத்து வழக்குகளிலும்
தன்னுடைய பண பலத்தாலும், அதிகார பலத்தாலும், பார்ப்பன சாதி பலத்தாலும் அவர் விடுதலை
ஆகிவிட்டார். இந்திய நீதிமன்றங்களில் புரையோடிப்போய் இருக்கும் பார்ப்பன சனாதான தர்மத்தின்
மேலாண்மையும், ஊழலும், ஜெயா என்ற ஊழல் பெருச்சாளியை சட்டத்தின் சந்து பொந்துகளில் எல்லாம்
ஓடி ஒளிய அனுமதித்தது. அந்தப் பெருச்சாளியை தொடர்ந்து தமிழ்நாட்டை கொள்ளையடிக்க
அங்கீகாரம் வழங்கியது.
ஆனால் நீதியையே தங்கள் வாழ்க்கையாக கருதும் ஆச்சாரியா, குன்ஹா போன்ற நேர்மையான
மனிதர்கள் ஜெயாவின் உச்சிக் குடுமியை பிடித்து தரதரவென்று நீதிமன்றத்திற்கு இழுத்து
வந்தனர். நல்லதொரு தீர்ப்பும் தந்தனர். ஆனால் அனைத்து நீதிபதிகளும் அவ்வாறு இருப்பதில்லை.
தத்துக்களும், குமாரசாமிகளும் தான் நீதிமன்றத்தில் 99 சதவீதம் இருக்கின்றனர்.
ஆளுநரை சந்தித்து ராமதாஸ் அளித்த மனுவில் கூறப்பட்டிருக்கும் ஊழல் குற்றச்சாட்டுகள்
ஜெயாவை சாகும்வரை தூக்கில் போட்டாலும் திருந்தாத ஈனப்பேர்வழி என்று காட்டுகின்றது
என்பதை, ஜெயா விடுதலை அடைந்து விட்டார் என்று கொட்டம் அடிக்கும் அம்மா அடிமைகள்
அறியமாட்டார்கள். கிரானைட் ஊழல், சட்டவிரோத தாதுமணல் கொள்ளை, ஆற்று மணல் கொள்ளை,
மின்சாரம் கொள்முதல் செய்ததில் ஊழல், கட்டுமான மற்றும் கட்டட அனுமதி வழங்குவதில் ஊழல்,
பொதுவிநியோகத் திட்டத்திற்கான பருப்பு கொள்முதல் செய்தததில் ஊழல், முட்டை ஊழல், ஆவின்பால்
ஊழல், போக்குவரத்து துறை பணியாளர்கள் நியமனத்தில் ஊழல், பொதுப்பணிதுறை ஊழல்,
கல்வித்துறை நியமனத்தில் ஊழல், பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நியமனத்தில் ஊழல்,
பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள் நியமனத்தில் ஊழல், ஆசிரியர்களுக்கு இடம்மாறுதல்
தந்ததில் ஊழல், பசுமை வீடு கட்டும் திட்டத்தில் ஊழல், மது விற்பனையில் ஊழல், ஸ்சோ அப்பா…..
இப்பவே கண்ணக் கட்டுது.
சார் நாம எவ்வளவுதான் சொன்னாலும் கேக்கவே மாட்டேன் என்று அடம்பிடிக்கும் மக்களிடம்
சொல்லி என்ன பயன்?.ஆனால் சொல்வது நம் கடமை என்பதால் சொல்லுகின்றோம். மானமும் அறிவும்
மானிடர்க்கு அழகு என்றார் பாரதிதாசன். எம் மக்கள் அந்த நிலையை அடைவதற்கு இன்னும் ஒரு
யுகம் தேவைப்படும் போல் இருக்கின்றது.

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
May 12, 2015, 6:56:32 AM5/12/15
to brail...@googlegroups.com
ஜெயலலிதா விடுதலையும், முதலாளிகளின் நீதியும்
8
விவரங்கள்
எழுத்தாளர்: திருப்பூர் குணா
தாய்ப் பிரிவு: சமூகம் - இலக்கியம்
பிரிவு: கட்டுரைகள்
C வெளியிடப்பட்டது: 12 மே 2015
Jaitley Jayalalitha
நீதி நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது அல்லது நீதி தலைகுனிந்திருக்கிறது, தோற்றுப்போய்
இருக்கிறது......... அப்படி பொத்தம்பொதுவாக ஒன்றுமில்லை. காரணம் காலத்துக்கும் மாறாத
நிலைநிறுத்தப்பட்ட நீதியென்று ஒன்றுமில்லை. ஆண்டான் – அடிமை காலத்து நீதிக்கும், தற்போதைய
நீதிக்கும் இடையிலான நீதி வேறுபாட்டை நாம் பேச வேண்டியதில்லை. அது கம்யூனிஸ்டுகளின்
அறிவியல் கண்ணோட்டத்தை பொறுத்துக் கொள்ள முடியாதவர்களை முணுமுணுக்க வைக்கும். ஆனால்
வெள்ளையர் காலத்து நீதி இன்று அப்படியே இல்லைதானே!
ஆகவே, வர்க்கத்திற்கு ஏற்ற நீதிதான் உள்ளது; அதை அந்தந்த வர்க்கங்கள்தான் பயன்படுத்த முடியும்.
ஏற்கனவே ஜெயலலிதா தண்டிக்கப்பட்டபோது “ஜெயலலிதாவுக்கு தண்டனை – கார்ப்பரேட்டுகளின்
விளையாட்டு – ஆளும்வர்க்க கூட்டு” என்ற கட்டுரையை எழுதியிருந்தோம். அது குறித்து
முகநூலில் எழுந்த விவாதத்தில் ஜெயலலிதா ஒரேயடியாக தண்டிக்கப்பட்டு தூக்கி
வீசப்படவில்லை; கண்டிக்கப்பட்டிருக்கிறார்; ஒரு சுமூகமான விட்டுக்கொடுத்தல்களுக்குப் பிறகு
அவர் மீண்டு வருவார் என்று சொன்னோம். கடந்த வாரம் ஒரு பத்திரிகை நண்பரிடமும் அதையே
சொன்னபோது சான்ஸே இல்லையென்று கடுமையாக மறுதலித்தார்.
இப்போது ஜெயலலிதா விடுதலையாகிவிட்டார்.
எழுத்தாளரும், வழக்குரைஞருமான தோழர் இரா. முருகவேள் “யாருக்கும் தலை வணங்காத ஒரு
நீதிபதி. ஒருதீர்ப்பு.கண்டிப்பும் கறாருமான இன்னொரு நீதிபதி. இன்னொரு தீர்ப்பு.
இடைக்காலத்தில் ஒரு சட்டம் நிறைவேற ஆதரவு.......” என்று சொல்கிறார். எப்படி
கம்யூனிஸ்டுகளால் மட்டும் இப்படி உண்மைகளை போட்டு உடைக்க முடிகிறது?
ஒரு சின்ன கணக்கு பார்க்கலாம்!
தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவில் சொத்துடைய வர்க்கங்களுக்கு என்ன தேவையிருக்கிறது? நிலம்
கையகப்படுத்தும் அவசர சட்டம் போன்ற எண்ணற்ற சட்டங்களை நிறைவேற்ற வேண்டும்; ஒரு ஈவு
இரக்கமற்ற சுரண்டலை வேகமாக நடத்த வேண்டும்; எதிர்ப்புகளை தயவுதாட்சண்யமின்றி நசுக்க
வேண்டும்; அதற்கேற்ற நபர்களை, கட்சிகளை மத்தியிலும், மாநிலத்திலும் அதிகாரத்திற்கு
கொண்டுவர வேண்டும் என்பதுதானே?
இந்த கணக்குபடி தமிழ்நாட்டிற்குப் பொருத்தமானவர் யார்?
ஸ்டாலின், அழகிரி, கனிமொழி, மாறன் சகோதரர்கள் என பல செல்வாக்குள்ள முதலாளிகளும், அந்த
முதலாளிகளுக்கிடையேயான அதிகாரப் போட்டிகளுமாக சீரழிந்து கொண்டிருக்கிற தி.மு.க
பொருத்தமானதில்லை.
அரசியல் விளையாட்டுகளுக்குப் பொருத்தமாக தன்னை வளர்த்துக்கொள்ள இயலாத தே.மு.தி.க
விஜய்காந்தும் பொருந்தவில்லை.
பகுத்தறிவு, பொதுவுடமை மற்றும் தேசிய இன அரசியலில் முன்னேறிய தமிழ்நாட்டைப்
புரிந்துக்கொள்ளாத பி.ஜே.பி. வடமாநிலங்களில் செயல்படுவதுபோல் எதையாவது செய்ய
முயல்வதும், தொடக்கத்திலேயே பலமான எதிர்ப்புகளை சந்திப்பதும் வாடிக்கை. எனவே அதுவும்
பொருத்தமில்லை.
ஆகவே ஆளும்வர்க்கத்தின் தேவையை நிறைவு செய்ய இன்றைக்கும் பொருத்தமானவராக ஜெயலலிதா
மட்டுமே இருக்கிறார். அணு உலைகளுக்கெதிரான கூடங்குளம் மக்களின் போராட்டத்தை எவ்வளவு
தந்திரமாக ஒடுக்கி ஆளும்வர்க்கத் தேவையை நிறைவேற்றித் தந்தார். பிறகு ஏன் இடையில்
ஜெயலலிதா நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டார்?
இன்னொரு கணக்கைப் பார்ப்போம்!
முதலாளிகளும், முதலாளித்துவ கட்சிகளும் ஆளும்வர்க்கத்திற்குள் இருக்கும்
சகப்பிரதிநிதிகள்தான். அதேநேரத்தில் அதற்குள் சின்ன வேறுபாடுகளும், அதற்கேயான
முரண்பாடுகளும் இருக்கிறது. அந்த முரண்பாடுகளை தேவைக்கேற்ற வகையில் தீர்த்துக்கொள்கிறது.
முதலாளிகளுக்கு, கிடைப்பதையெல்லாம் அந்த நொடியிலேயே கொள்ளையடிக்க வேண்டுமென்ற
லாபவெறி. ஆகவே அவர்கள் தனது சேவகர்களான ஆட்சியிலிருப்பவர்களை அதற்கேற்ற மூர்க்கத்துடன்
நிர்பந்திக்கிறார்கள்.
ஆனால் ஆட்சியிலிருப்பவர்களுக்கு இன்னொரு நிர்பந்தமும் இருக்கிறது. அது மக்களை
சமாதானப்படுத்துவது. இல்லையென்றால் மக்கள் அடுத்த தேர்தலில் தங்களை நிராகரித்து
விடுவார்கள் என்ற பயம். தங்களது ஆட்சியாதிகாரம் நீடிக்க வேண்டுமென்றால் சில
சீர்த்திருத்தங்களையாவது செய்தாக வேண்டுமென்கிற கட்டாயம்.
இந்த நிலையில் முதலாளிகள் சொல்வதையெல்லாம் ஆட்சியிலிருக்கும் முதலாளித்துவ கட்சி
அப்படியே செய்துவிட முடியாதென்பதுதான் முரண்பாடு. இந்த முரண்பாடுகள் எப்படியெல்லாம்
தீர்க்கப்படுகிறது என்பதுதான் ஜெயலலிதா வழக்கும், தீர்ப்பும்.
இப்போது ஜெயலலிதா விட்டுக்கொடுத்தாரா?அம்மா குடிநீர், அம்மா உணவகம், அம்மா மருந்தகம்,
அம்மா சிமெண்ட் போன்ற ஓட்டுக்கான சீர்த்திருத்தங்கள் கைவிடப்படுகின்றனவா?
அல்லது அவைகளைப் பின்னால் பார்ப்போம், தற்போது நிலம் கையகப்படுத்தலுக்கான அவசர சட்டங்கள்
போன்றவற்றை நிறைவேற்றி தந்தால்போதும் என முதலாளிகள் விட்டுக்கொடுத்துள்ளனரா?
நீதிமன்றங்களுக்கே வெளிச்சம்!
- திருப்பூர் குணா

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
May 12, 2015, 7:51:17 AM5/12/15
to brail...@googlegroups.com
வேற்று கிரகவாசிகள்
8
விவரங்கள்
எழுத்தாளர்: ஜெயச்சந்திரன்
தாய்ப் பிரிவு: அறிவியல் ஆயிரம்
பிரிவு: விண்வெளி
C வெளியிடப்பட்டது: 10 அக்டோபர் 2012
இந்த பிரபஞ்சத்தில் பூமியன்றி, வேறு கோள்களில், உயிர்கள் இருக்கின்றனவா அல்லது நாம்
மட்டும் இந்த பிரமாண்டத்தில் தனிமையில் இருக்கிறோமா என்ற கேள்வி அனைவரையும் கவர்ந்த ஒன்று.
பிரபஞ்சத்தில் உயிர்கள் இருக்கின்றன, அதுவும் பல கோள்களில் இருக்க வாய்ப்பு உள்ளது என்று
அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
சில நூறு ஆண்டுகளுக்கு முன் ஒரு கண்டத்தில் இருக்கும் மனிதன், மற்ற கண்டங்களில் மனிதர்கள்
வாழ்வது தெரியாமல் இருந்தான். அதுபோல நாமும் இப்பொழுது மற்ற கோள்களில் வாழும்
உயிர்களைப் பற்றி அறியாமல் வாழ்கிறோமோ?
avatar_370
நம் பூமியில் மட்டுமில்லாது மற்ற கோள்களிலும் உயிர்கள் இருக்கின்றன‌ என்பதற்கு,
அறிவியலாளர்கள் மிக எளிமையான ஒரு வாதத்தை முன் வைக்கின்றனர். "மாவெடிப்பு (BIG
BANG) நடந்தபோது இந்த பிரபஞ்சத்தில் ஒன்றுமே இல்லை. இந்த பூமியே இல்லை. ஹைட்ரோஜென்
மற்றும் ஹீலியம் என்ற இரண்டு தனிமங்கள் மட்டும் தான் முதலில் தோன்றின. இந்த பிரபஞ்சத்தில்
நாம் காணும் சகல நட்சத்திரங்களும், கோள்களும், அந்த ஹைட்ரோஜென் மற்றும் ஹீலியம் ஆகிய
அடிப்படை தனிமங்கள் பல ரசாயன மாற்றங்கள் அடைந்து உண்டானவை. அப்படி அந்த இரண்டு
தனிமங்களிளிருந்து உண்டான கோடான கோடி கோள்கள் அனைத்திலும் உயிர் உண்டாகி பரிணாம
வளர்ச்சி அடைய முடியாமல், அவைகளில் ஒன்றான நம் கோளில் மட்டும் தான் அது சாத்தியமானது
என்று கூறுவது தவறு" என்பதுதான் அந்த வாதம்.

நம் சூரிய மண்டலத்திலேயே, குறிப்பாக செவ்வாயிலும் மற்றும் சில கோள்களின் நிலவுகளிலுமே
உயிரினங்கள் இருக்க அதிக வாய்ப்புண்டு என்ற முடிவுக்கு வருகின்றனர் அறிவியலாளர்கள்.
நம்முடைய சூரிய குடும்பத்திலேயே உயிர் இருக்க வாய்ப்பு உள்ளபோது பிரபஞ்சத்தின் மற்ற
கோடான கோடி கோள்களில் சிலவற்றில் அது சாத்தியமாகாதா?

பல கோள்கள், அது சுற்றிவரும் நட்சத்திரங்களுக்கு அருகாமையில் இருந்தால் அதிக வெப்பத்தின்
காரணமாகவும், நட்சதிரங்களிலிருந்து அதிக தொலைவில் இருந்தால் வெப்பம் இன்மை
காரணமாகவும், உயிர் தோன்ற ஏதுவாக இல்லாமல் இருந்திருக்கலாம். சூரியனுக்கு அருகிலுள்ள
புதன் சுமார் 450 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் வாடிக்கொண்டிருக்கின்றது.
சூரியனிலிருந்து தொலைவில் உள்ள கோள்களும் அதன் நிலவுகளும் வெப்பமே இல்லாமல்
இருக்கின்றன. அல்லது கோள்கள், வியாழன் போல வாயுக்கோள்களாகவும், பல, செவ்வாய் போல காந்தப்
புலன் இன்மை, காற்று மண்டலம் இன்மை போன்ற பல காரணங்களினால் உயிர் தோன்றி வளர்ச்சி
அடையாமல் போயிருக்கலாம். அவை போக இன்னும் பல்லாயிரக்கணக்கான கோடி கோள்கள்
இருக்கின்றனவே... உயிர் தோன்றி வளர, அவை ஏதுவானதல்லவா?
நம் சூரிய குடும்பத்தில் ரவுடிகள் போல சுற்றிவரும் பாறைகளிலும் (asteroid), வால்
நட்சத்திரங்களிலும் (comets) உயிர் உண்டாவதற்கான அடிப்படை ரசாயன மூலக்கூறுகள்
காணப்படுவது பிரபஞ்சத்தில் உயிர் இருப்பதற்கு ஒரு சான்று எனக் கொள்ளலாம். நம் கோளுக்கு
பிரபஞ்சத்திலிருந்து, இந்த வகையான சூரிய குடும்பத்தைச் சுற்றிவரும் பாறைகளின் மூலமும்,
உயிர்கள் வந்திருக்க வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன என்று அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.
நம்பவே முடியாத இடத்தில் உயிர்கள்
1977 இல் கடலுக்கு அடியில் சுமார் 7000 அடி ஆழத்தில் வெப்ப நீர் உற்றுக்களை
கண்டுபிடித்தனர். 400 டிகிரி C என்ற வெப்பநிலை கொண்ட அந்த நீரூற்றுக்கள் கடலின் தரை
மட்டத்தில், பூமிக்குள்ளே உள்ள எரிமலை குழம்புகளினால் சூடாக்கப்பட்டு வெளியே வேகமாக
வருகின்றன. பல நச்சு ரசாயனங்கள் நிறைந்த இந்த நீரூற்றை ஆய்ந்த ஆய்வாளர்கள், ஒரு மிகப்
பெரிய அதிசயத்தைக் கண்டனர். அங்கே பல உயிர்கள் அந்த ரசாயன பொருட்களையே உணவாக உண்டு,
சூரிய வெளிச்சம் சற்றும் இல்லாத அந்த இடத்தில் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
உயிர்கள் வாழ முடியவே முடியாது என்று நினைத்த இடத்தில், உயிர்களைக் கண்ட
அறிவியலாளர்கள் அப்போதுதான் உணர்ந்தார்கள், பிரபஞ்சத்தின் எந்த மோசமான இடத்திலும் உயிர்கள்
வளர சாத்தியம் உண்டு என்று.
அதுமாத்திரமல்ல, உறைநிலைக்கு மிகக்குறைவான ஆர்க்டிக் துருவப் பிரதேசங்களிலும், மிக
அமிலத்தன்மை கொண்ட இடங்களிலும், உயிர்கள் வாழ்வதைக் கண்ட அறிவியலாளர்கள், பிரபஞ்சத்தில்
உயிர்கள் வேறு கோள்களில் இருக்கின்றனவா என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டனர்.
ஆதாரம் கிடைப்பதுதான் இனி நடக்க வேண்டியது.
பிரபஞ்சத்தில் உயிர்களைத் தேடலாமா?
பிரபஞ்சத்தில் உயிர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். முதலாவது, பரிணாம வளர்ச்சி
அடையாத பாக்டீரியா போன்ற உயிரினங்கள். இரண்டாவது, மனிதனைப் போன்ற அறிவுஜீவிகள்.
மூன்றாவது மனிதனை விட அதிக அறிவியல் வளர்ச்சி கண்ட உயிர்கள். அவர்களுக்கு நாம் 'சூப்பர்
மனிதர்கள்" என்று பெயர் கொடுப்போம். இரண்டாவது வகை, மூன்றாவது வகை உயிர்கள் உருவத்தில்
மனிதர்களைப்போல இருப்பார்கள் என்று கற்பனை செய்து கொள்ள வேண்டாம். சில திரைப்படங்களில்
அவர்களது உருவங்களை கற்பனை செய்து சித்தரித்திருப்பார்கள். அதை விட மோசமான உருவமாக
இருந்தாலும் ஆச்சரியப் பட வேண்டாம்.
கதாநாயகர்கள் போல நல்ல அழகான உருவத்தையே எதிர்பார்க்கும் மனிதர்கள், உருவத்தில்
மோசமாகவும், அறிவில் சிறந்தவர்களான அவர்களைக் காண நேர்ந்தால், திரும்பிக் கூட பார்க்காமல்
சென்று விடுவார்களோ?
முதலாவது வகையான பாக்டீரியா போன்ற ஆரம்ப கட்ட உயிரினங்கள் பல கோள்களிலும் இருக்கும்
என்பதில் எள்ளளவும் ஐயப்பாடு இல்லை. நம் கேள்வியெல்லாம் மனிதன் போன்று வளர்ச்சியடைந்த
உயிர்களும், அதனிலும் அதிக வளர்ச்சி கண்ட சூப்பர் மனிதர்களும் உள்ளனரா? உண்டு என்றால்
அவர்கள் நம்மை ஏன் நம்மை தொடர்பு கொள்ளவில்லை என்பதுதான். அதற்க்கான காரணத்தை
விவாதிக்கத்தான் இந்த கட்டுரை.
அண்டத்தில் அறிவுஜீவிகளை தேடும் பணியானது, 'செட்டி' ( SETI --SEARCH FOR EXTRA
TERRESTRIAL INTELLIGENCE ) என்ற அமைப்பினால் பிரபஞ்சத்தில் எங்கிருந்தாவது செயற்கை
ரேடியோ கதிரலைகள் பூமிக்கு வருகின்றனவா என்று கவனிப்பதுதான். செயற்கை ரேடியோ அலைகள்
அறிவுஜீவிகளால் தான் உருவாக்க முடியும். பிரபஞ்சத்திலிருந்து பல காரணங்களினால்
இயற்கையாக ரேடியோ கதிரலைகள் பூமிக்கு வரும். ஆனால் வேற்று கோள் அறிவுஜீவிகள்
செயற்கையாக உண்டாக்கிடும் கதிரலைகளை அறிவியலாளர்கள் பிரித்து அறிய முடியும். அவ்வாறு
செய்திகள் வந்தால் அதுதான் வேற்று கோளில் நம்மைப் போன்ற அறிவுஜீவிகள் வாழ்வதற்கு
அடையாளமாகும். இதற்காக அதிநவீன ரேடியோ தொலைநோக்கிகளை உபயோகித்து இரவு பகல் என்று
பாராமல் வருடம் முழுவதும் வானத்தை ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர்.
இதுவரை ஏன் நம்மை தொடர்பு கொள்ளவில்லை?
1930 ஆம் ஆண்டுகளில் நாம் பூமியில் உபயோகிக்க ஆரம்பித்த ரேடியோ அலைகள், நம் பூமியில்
பயணிப்பது போன்று, நம் பூமியை விட்டு பிரபஞ்சத்திலும் பயணம் செய்ய ஆரம்பித்துள்ளன. நாம்
அந்த அலைகளை வேற்று கிரக மனிதர்களைச் சென்றடையும் நோக்கத்துடன் அனுப்பவில்லை. நம்
தேவைக்குத்தான் ஒலிபரப்பானது. 1930லிருந்து 2012 வரை, சுமார் எண்பது ஆண்டுகள், இவை
நம்மை விட்டு ஒளியின் வேகத்தில் அதாவது வினாடிக்கு மூன்று லட்சம் கிலோ மீட்டர் என்ற
வேகத்தில் பயணம் செய்துள்ளன. வேற்று கோளில் வாழும் அறிவுஜீவிகள் சுமார் 80 ஒளியாண்டுகள்
என்ற தொலைவுக்குள் இருந்தால், அன்று நம்மிடமிருந்து சென்ற அந்த அலைகள், இப்போது அவர்களை
சென்றடைந்திருக்கும். அவர்களால் இப்போது நம் ஒலிபரப்பை கேட்க முடியும் . 'இப்போதுதான்'
கேட்க முடியும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
நம்மிடமிருந்து சென்ற அலைகள், நாம் அண்டத்தின் இந்தப் பகுதியில் உள்ள பூமியில் இருப்பதை
அவர்களுக்கு அடையாளம் காட்டி கொடுக்கும். இந்த பூமியில் அறிவுஜீவிகள் இருப்பதைப்
புரிந்துகொண்டு அவர்கள் ரேடியோ அலைகள் மூலம் உடனே செய்தி அனுப்பினால் அது நம்மை
வந்தடைய இன்னும் எண்பது வருடங்களாகும்.
அவர்கள் வாழும் கோள் ஒருக்கால் 200 ஒளியாண்டுகள் தொலைவில் இருந்தால் நம்மிடமிருந்து சென்ற
கதிரலைகள் அவர்களைப் போய்ச்சேர இன்னும் 120 வருடங்களாகும் . (ஏற்கனவே எண்பது ஆண்டுகள்
அலைகள் பயணம் செய்தாயிற்று அல்லவா). அதை வாங்கிய பின் அவர்கள் நமக்குப் பதில் அனுப்பினால்
அது நம்மை வந்து சேர மீண்டும் 200 ஆண்டுகளாகும்.
alien_370
ஆயிரம் ஓளி ஆண்டுகள் தொலைவில் இருந்தால் நமக்குப் பதில் வர சுமார் இன்னும் இரண்டாயிரம்
ஆண்டுகளாகும்.
நாம் வேற்று கோள் வாசிகளை தொடர்பு செய்ய முடியாமல் போனதற்கு, நம் கோளுக்கும் மற்ற
கோள்களுக்கும் உள்ள பென்னம் பெரும் தொலைவுகள் தான் முக்கிய காரணம் ஆகும்.
நூறு ஆண்டுகளுக்கு முன்பு, பூமியில் இருக்கும் நமக்கு, பிரபஞ்சத்திலிருந்து வரும்
அலைகளை வாங்கி பதில் அனுப்பும் தொழில் நுட்பம் தெரியாது. அந்தக் காலத்தில் நமக்கு ஒரு
செய்தி வந்திருந்தால் நாம் அதை தவற‌விட்டிருக்கவும் வாய்ப்புண்டு.
அதேபோல , ஒருக்கால் நம்மிடமிருந்து சென்ற அந்த அலைகளைப் பெற்று அதைப் புரிந்துகொள்ளும்
அறிவியல் தெரியவில்லை என்றால், அவர்களுக்கு நாம் இங்கிருப்பது தெரியாமல் போய்விடும்.
எப்போது வேண்டுமானாலும் செய்தி வந்து சேரலாம்
நாற்பது ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள ஒரு கோளில் அறிவுஜீவிகள் இருக்கிறார்கள் எனக்
கொள்வோம். நம்மிடமிருந்து எண்பது ஆண்டுகளுக்கு முன் சென்ற அலைகள் நாற்பது ஆண்டுகளுக்கு
முன் அவர்களைச் சென்று அடைந்திருக்கும். அவர்கள் அதைக் கேட்டு பதில் அனுப்பியிருந்தால்
நாற்பது ஆண்டுகள் பயணம் செய்து பூமிக்கு அது வந்து சேரும் நேரமாகிவிட்டது. எப்போது
வேண்டுமானாலும் செய்தி வரலாம்.
அல்லது ஆயிரம் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள, நமக்கு முன்னரே விஞ்ஞானம் வளர்ச்சியடைந்த,
ஒரு கோளிலிருந்து புறப்பட்ட அலைகள் ஆயிரம் ஆண்டுகள் பயணித்து, இப்போது நம்மை வந்தடைய
சாத்தியக் கூறுகளும் உள்ளன.
வாவ் (WOW)
1977 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் தேதி, தேடுதல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த குழு,
பிரபஞ்சத்தின் ஒரு திசையிலிருந்து ஒரு செய்தியைப் பெற்றது. 'வாவ்' (wow) என்ற அந்த
செய்தி சுமார் 70 நொடிகள் நீடித்தது. பரவசமடைந்த விஞ்ஞானிகள் அந்த செய்தி சுமார் 200
ஒளி ஆண்டுகள் தொலைவிலிருந்து வந்ததை அறிந்துகொண்டனர். உடனே பதில் கொடுத்தனர்.
உலகமெங்கும் பரபரப்பு நிலவியது. ஆனால் அந்த செய்தி தொடர்ந்து வராமல் நின்று விட்டது.
அதற்கு நாம் கொடுத்த பதில் போய்ச் சேர 200 ஆண்டுகளாகுமே. அதற்குப் பிறகுதானே அவர்கள்
நாம் இருப்பதை அறிந்துகொள்ள முடியும்.
தேடுதல் பணியை 'செட்டி' சுமார் 40-50 ஆண்டுகளாக செய்துவருகிறது. பிரபஞ்சத்தைப்
பொருத்தவரை இது மிக மிக குறுகிய காலம். தேட ஆரம்பித்து சில ஆண்டுகளே ஆவதற்குள்
பிரபஞ்சத்தில் அறிவுஜீவிகள் இல்லை என்ற முடிவுக்கு வரமுடியாது. நம் பால் வெளி
மண்டலத்திலேயே பல கோள்களில் அறிவுஜீவிகள் இருப்பதற்கான வாய்ப்புண்டு என்று விஞ்ஞானிகள்
உறுதியாக நம்புகின்றனர். ஏனென்றால் நம் பால்வெளி மண்டலத்திலேயே பல ஆயிரம் கோடி
நட்சத்திரங்களும், அதைச் சுற்றி பல கோள்களும் உள்ளன .
கெடுவாய்ப்பு
பிரபஞ்சத்தில் ஒவ்வொரு நட்சத்திரமும் ஒன்றை விட்டு ஒன்று மிகுந்த தொலைவில் உள்ளதால், ஒரு
கோளில் இருந்து அனுப்பப்பட்ட செய்தி மற்ற கோளை அடையும் முன்னரே, செய்தி அனுப்பிய கோள்,
துரதிஷ்டவசமாக அழிந்து போவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன் என்பது மிகவும்
கசப்பான, மறுக்க முடியாத உண்மை. சில கோள்கள் ஆயிரம் ஒளிவருடங்கள் தொலைவிலும், சில
லட்சம் அல்லது கோடிக்கணக்கான ஒளிவருடங்கள் தொலைவிலும் உள்ளபோது அங்கிருந்து வரும்
செய்திகள் இங்கு வந்து சேருவதற்குள் அந்த கோள் அல்லது அதில் வாழும் உயிர்கள் அழிந்து போக
வாய்ப்புள்ளது.
ஒரு நம்ப முடியாத உண்மை என்னவென்றால், இந்த பூமியில் இதுவரை உயிர்கள் தோன்றி மனிதன்
எனும் ஓர் அற்புத பிறப்பு பரிணாமம் அடைந்தது மிக மிக ஆச்சரியமும் அதிசயமுமாகும் என்று
அறிவியலாளர்கள் கூறுகின்றனர். ஏனென்றால் இந்த பிரபஞ்சம் நம்மில் பல பேர் நினைப்பதுபோல
அமைதியானது அல்ல. வானத்தை பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கு வானத்தில் பெரிய விபத்துக்கள்
தெரியாததால் அப்படி தோன்றுகிறது.
உண்மை என்னவென்றால் பிரபஞ்சத்தில் பல அழிவுகள் அவ்வப்போது நடந்து கொண்டிருக்கின்றன. நம்
பூமியும் இதற்கு விதிவிலக்கில்லை. நம்மில் பலர் இந்த பூமி எப்போதும் பாதுகாப்பாக
இருக்கும் என்ற ஒரு நம்பிக்கையுடன் இருக்கின்றனர். பூமிக்கு பல பாதுகாப்புகள் இருந்தாலும்
பற்பல ஆபத்துகளும் காத்துக் கொண்டிருக்கின்றன என்பதுவும் மறுக்க முடியாத உண்மை. இந்த
பூமி இதற்கு முன் பல முறை பெரும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. ஆறு கோடி
ஆண்டுகளுக்கு முன், அண்ட வெளியில் இருந்து சுமார் மணிக்கு 30,0000 கிலோ மீட்டர்
வேகத்தில் வந்த ஒரு விண்வெளிப் பாறையினால் (ASTEROID) பூமி தாக்கப்பட்டது என்றும் அந்த
தாக்குதலினால்தான் 'டைனோசர்' (dynosaur) என்ற, அப்போது பூமியை ஆண்டுவந்த மிருகங்களை
பூமி இழந்தது என்று விஞ்ஞானிகள் கூறினர். அப்போதைய அரசியல்வாதிகள் அதை நம்பவில்லை.
விஞ்ஞானிகளும், சிந்தனையாளர்களும் சொன்னதை ஆட்சியாளர்கள் கேட்டிருந்தால் மனித குலம் நல்ல
வளர்ச்சி கண்டிருக்குமே. அவர்கள்தானே விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிக்கு பணம் கொடுப்பது!!
அண்டவியல் வளர்ச்சி அடைந்த பின் நம் கண்ணாலேயே அந்த மாதிரி தாக்குதலைப் பார்க்க நமக்கு
ஒரு சந்தர்ப்பம் 1994 இல் கிடைக்கப் போவதாக கூறினர் விஞ்ஞானிகள். அதிர்ந்து போன அரசியல்
வட்டாரம் அதைப் பார்க்கத் தயாரானது. நல்லவேளை தாக்குதல் வியாழன் மேல்தான். நம் மேல் வரும்
பல தாக்குதல்கள் வியாழனின் ஈர்ப்புவிசையினால் வியாழனைத் தாக்கியுள்ளன. வியாழன்
இல்லாவிட்டால், பூமிக்கு 'சங்கு' முன்பேயே ஊதப்பட்டிருக்கும்.
aliens_370
விஞ்ஞானிகள் சொன்ன நாளில், அந்தத் தாக்குதல் எல்லோரும் பார்க்க வியாழனின் மேல் நடந்தது.
வியாழன் பூமியை விட பல மடங்கு பெரிது. தாக்குதல் நடந்தபின் பூமி அளவு பெரிய
நெருப்பு வியாழனில் எரிவதை, மனித வரலாற்றில் முதன் முறையாக விஞ்ஞானிகளும்
அரசியல்வாதிகளும் தொலைநோக்கியின் மூலமாக 'லைவ்' ஆக கண்டனர். அறிவியலாளர்கள் கூறியது
போல நடந்ததைக் கண்டபின் தான் அரசியல்வாதிகளுக்கு அறிவியல் உண்மைகளைத்தான் கூறுகிறது
என்று புரிந்தது . அதன்பின்னர் அண்டவியல் ஆராய்சிகளுக்கு உதவி கொடுக்கப்பட்டது.
இதுபோல பல தாக்குதல்களில் இருந்து தப்பிய பூமி ஒரு 'ஜாக்பாட்' அதிர்ஷ்டசாலி என்று
கூறுகின்றனர் அறிவியலாளர்கள். மூன்று சீட்டு விளையாடும் போது மூன்று சீட்டும் 'ஏஸ்' ஆக
ஒருமுறையல்ல இரண்டு, மூன்று முறை வந்தால் எவ்வளவு அதிர்ஷ்டமோ அவ்வளவு அதிர்ஷ்டம் பெற்றது
பூமி என்று கூறுகின்றனர்.
அழகான பெண்ணை வர்ணிக்க நிலவை உதாரண‌த்திற்கு சொல்வார்கள். ஆனால் நிலவை நேரில்
பார்த்தாலோ அல்லது அதன் 'க்ளோஸ் அப்' புகைப்படத்தையோ பார்த்தார்களேயானால், அதன் பிறகு
பெண்ணை வர்ணிப்பதற்குப் பதிலாக, வசை பாடுவதற்குத் தான் நிலவை பயன்படுத்துவர். ஏனென்றால்
நிலவில் அவ்வளவு குழிகள். அம்மைத் தழும்பு முகம் போல இருக்கும். எல்லாம் வாங்கிய
தாக்குதலின் அடையாளங்கள். பூமிக்கும் இந்த தாக்குதல் நிகழ்ந்திருக்கிறது. ஆனால் மழை,
பூகம்பம், எரிமலை, கண்ட அசைவுகள், கடலரிப்பு போன்றவற்றால் அவை பெரும்பாலும் மறைந்து
போய்விட்டன. சைபீரியாவிலும், அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்திலும் மற்றும் பூமியின்
சில பகுதிகளிலும் இந்தத் தழும்புகளைக் காணலாம்.
புதன் கோளும் ஒரு பலத்த தாக்குதலுக்கு உள்ளாயிருக்கின்றது.
பிரபஞ்சம் வயது அடைந்து கொண்டே இருக்கின்றது. நமது சூரிய குடும்பமும் விதிவிலக்கல்ல.
நமது செவ்வாய் கோள் ஒரு காலத்தில் பூமியைப் போலவே காந்தப் புலன் உள்ள கோளாகவும், தண்ணீர்,
வளிமண்டலம் உள்ள கோளாகவும் இருந்தது. அங்கே ஆரம்பகட்ட உயிரினங்கள் இருந்ததற்கான
வாய்ப்புகள் உள்ளன என்று பல அறிவியலாளர்கள் நம்புகின்றனர். மேலும் செவ்வாயிலிருந்து உயிர்
பூமிக்கு வந்திருக்க வாய்ப்புண்டு என்றும் கூறுகின்றனர். ஆனால் தற்போது அதற்கு காந்தப்
புலன் இல்லை. நீர் வற்றிவிட்டது. துருவப் பிரதேசங்களிலும், நிலத்திற்கு அடியில் சில
இடங்களிலும் தான் நீர் இருப்பதாகத் தெரிகிறது. வளிமண்டலம் அடர்த்தி குறைந்ததாக மாறிவிட்டது.
இந்தப் பரிணாம மாற்றம் அடையக் காரணம், செவ்வாய் பூமியை விட சிறியதாய் இருப்பதால்
செவ்வாயின் உள்ளே உள்ள உருகிய இரும்பு காலப்போக்கில் குளிர்ந்து கெட்டியாகி விட்டது.
பூமியின் உள்ளே கெட்டியான இரும்பும், அதைச் சுற்றி உருகிய இரும்பும் சுழல்வதால் காந்தப்
புலன் உருவாகிறது. செவ்வாயில் அந்த உருகிய இரும்பு குளிர்ந்து கெட்டியாகி விட்டதால்
காந்தப் புலன் இல்லாமல் போய்விட்டது. இந்த காந்தப் புலன் இல்லாவிட்டால், சூரிய காந்தப்
புயல்களினால் பூமி தாக்கப்பட்டு உயிர்கள் இல்லாத ஒரு வறண்ட பிரதேசமாக மாறிவிடும்.
அதுதான் செவ்வாயில் நடந்த‌து. ஒரு காலத்தில் உயிர் வளர்ச்சிக்கு சாதகமாக இருந்த
செவ்வாயின் வளிமண்டலம், நம்மில் பலரும் வணங்கும் சூரியனின் நாசகரமான கதிர்
வீச்சுகளினாலேயே தகர்க்கப்பட்டது. அதனால் நீர் வற்றி, வறண்ட குளிர்ந்த பிரதேசமாக மாறிவிட்டது.
குழந்தை பிறக்கும்போதே இறப்பது போல, பிரபஞ்சத்தில் ஒரு கோளில் உயிர்கள் தோன்ற
ஆரம்பிக்கும் சமயம், அந்தக் கோள் பிரபஞ்சத்தின் அழிவு சக்தியால் ஒரு உபயோகமில்லாத இடமாய்
மாறிவிடுகிறது.
பூமியில் இந்த காந்தப்புலன் வடக்கிலிருந்து தெற்காக வந்து கொண்டிருக்கின்றது. அப்படி
தொடர்ந்து எப்பொழுதுமே நடந்து கொண்டிருக்காது. சில காலத்திற்குப் பிறகு அது தடம் மாறி
தெற்கிலிருந்து வடக்காக செல்ல ஆரம்பிக்கும். அதிர்ச்சியான செய்தி என்னவென்றால் அந்த மாற்றம்
பூமியில் ஆரம்பித்துவிட்டது என்று சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தால்
பூமியில் உள்ள உயிரினங்கள் எல்லாம் அழிந்து போகும் வாய்ப்புண்டு. இது போன்ற பல அழிவுகள்
எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்பதனால்தான், மனிதனை வேறு ஒரு கோளில்
குடியமர்த்துவதற்கு அறிவியலாளர்கள் முயற்சிகள் ஆரம்பித்துள்ளனர்.
நமது சகோதரி என்று அழைக்கப்பட்ட வெள்ளி, பித்தளை ஆனாலும் பரவாயில்லை. பழைய
துருப்பிடித்த தகரம் ஆகிவிட்டது. எல்லோராலும் ரசிக்கப்படும், ஒருகாலத்தில் பூமியைப்
போன்று இருந்த வெள்ளி, அதிபயங்கர புயல்களையும், கந்தக அமில மழையையும், நச்சு
வாயுக்களை கொண்டதுமான, உயிர்கள் பரிணமிக்க முடியாத ஒரு நரகமாக மாறிவிட்டது.
'சொர்க்கமாக நாம் நினைத்தது வெறும் நரகமாக மாறிவிட்டது'. வெள்ளி மற்றும் செவ்வாயின்
பரிணாம வளர்ச்சியைக் காணும் நாம், நம் பூமிக்கும் வயதாகிக் கொண்டிருக்கின்றது என்ற
உண்மையை மனிதில் கொள்ள வேண்டும்.
நமக்கெல்லாம் ஆதாரமாயிருக்கும் சூரியனுக்கும் வயதாகிக் கொண்டிருக்கிறது. அது தன் பாதி
வயதை எட்டிவிட்டது.
ஏராளமான குழந்தைகள் பிறக்கும் போது இறப்பது, ஐந்து வயதை கடப்பதற்குள் போதிய
உணவின்றி இறப்பது, வாலிபப் பருவம் அடைவதற்குள் இன்னும் ஏராளமானவர் இறப்பது போல,
பிரபஞ்சத்திலும் உயிர் தோன்றும் போதே அழிந்து போகும் கோள்கள், உயிர் தோன்றிய சில
காலத்திலேயே அழிந்து போகும் கோள்கள், உயிர் தோன்றி மனிதனைப் போன்ற பரிணாம வளர்ச்சி
அடைவதற்குள் அழிந்து போகும் பல கோள்கள் உள்ளன. ஆகவே பிரபஞ்சத்தில் பலப் பல நிலைகளில்
உயிர்கள் பரிணாம வளர்ச்சியடைந்தக் கோள்களை காண வாய்ப்புண்டு.
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விடுமோ?
சரி, ஒரு கோளிலிருந்து செய்தி வந்து விட்டது. அதற்கு நாமும் பதில் அனுப்பிவிட்டோம்.
இருவருக்கும் மற்றவர்கள் பிரபஞ்சத்தில் எங்கிருக்கின்றனர் என்று அறிந்துவிட்டது. மேலே என்ன
செய்வது? ஒன்றும் செய்யமுடியாது. அவர்கள் அங்கேயும் நாம் இங்கேயும் இருந்து கொள்ள
வேண்டியதுதான். எப்படி அவர்களைப் போய் சேர முடியும்?
மேலை நாடுகளில் நடந்த விஞ்ஞான வளர்ச்சி நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன.
பாராட்டப்படவேண்டிய பல முன்னேற்றங்கள். நிலவுக்கு மனிதன் சென்றுவிட்டான். ஆனால் பிரபஞ்ச
தொலைவுகளை கணக்கில் எடுக்கும் போது மிக மிக அருகில் உள்ள நிலவு வரைக்கும்தான் மனிதன்
சென்றுள்ளான் என்பதுதான் உண்மை. இன்னும் சில வருடங்களுக்குப் பிறகு சூரியனின் மற்ற
கோள்களுக்கும் செல்ல முடியலாம். ஆனால் பல நட்சத்திரக் கூட்டங்களைக் கடந்து, வேறு எங்கோ
உள்ள ஒரு கோளுக்குச் செல்ல இப்போதைய விஞ்ஞானத்தில் வழியில்லை. ஏனென்றால் நட்சத்திரங்களைக்
கடந்துசெல்வது என்பது மிக மிகக் கடினம்.
நமக்கு மிக அருகில் இருக்கும் நட்சத்திரம் சுமார் நான்கு ஒளியாண்டுகள் தொலைவில்
இருக்கின்றது. ஒளியாண்டு என்பது சுமார் ஒன்பதரை லட்சம் கோடி கிலோ மீட்டர்களாகும்.
அதாவது அருகிலுள்ள நட்சத்திரமே சுமார் நாற்பது லட்சம் கோடி கிலோ மீட்டர்கள் தொலைவில்
உள்ளது. சில புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கோள்கள் ஆயிரம் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளன.
மீண்டும் நினைவில் கொள்ளவேண்டியது வினாடிக்கு மூன்று லட்சம் கிலோ மீட்டர்கள் செல்லக் கூடிய
வாகனத்தில் பயணித்தால் அந்த நட்சத்திரத்தை சென்றடைய நான்கு ஆண்டுகள் ஆகும். வேண்டிய வேகம்
வினாடிக்கு மூன்று லட்சம் கிலோ மீட்டர். நாம் நம் விஞ்ஞான வளர்ச்சியில் அடைந்துள்ள வேகம்
மிகக் குறைவு. விண்மீன்களை போய்ச்சேர, இப்போது நம்மிடமுள்ள வாகனத்தில் சென்றால் பல நூறு
ஆண்டுகள் பிடிக்கும்.
பல நூறு ஆண்டுகள் விண்வெளியில் பயணம் செய்வது மிக மிகக் கடினம். அத்தனை காலத்தில்
அண்டவெளியின் கதிர்வீச்சு மனிதனைக் கொல்ல நிறைய வாய்ப்புகள் உள்ளன. வெகு காலம் பூமியை
விட்டு பயணிக்கும்போது நிச்சயமாக மனிதன் மனதளவில் பாதிக்கப்படுவான். அவன்
உடலுறுப்புக்கள் பல பாதிக்கப்படும். எல்லாவற்றிற்கும் மேலாக, மனிதனின் ஆயுள் காலம் அதற்கு
இடம் கொடுக்காது .
ஒரு நீண்ட அண்டவெளி பயணத்தில் மனிதனுக்கு ஏற்படும் பல பிரச்சனைகளைத் தீர்க்க கடும்
ஆராய்ச்சியில் இறங்கியுள்ளனர் அறிவியலாளர்கள். உதாரணத்திற்கு ஒன்றே ஒன்றை எடுத்துகொள்வோம்.
முக்கியமானது மனிதனின் ஆயுட்காலம். அதை மரபணு மாற்றம் மூலமாக நீட்டிக்க வழி வகைகளை
ஆராய்ந்து , அந்த ஆய்வின் விடையை சில பிராணிகளில் செலுத்தி அதன் வாழும் காலத்தை
அதிகரித்து ஆரம்ப வெற்றியும் பெற்றுள்ளனர் என்பது மிகவும் முக்கியமான செய்தியாகும்.
துருவக்கரடிகள் வருடத்தில் பல மாதங்கள் கடும் குளிர் காரணமாக, உண்ணாமல் உறங்கிக்கொண்டே
இருக்கும். மாதக்கணக்கான இந்த தொடர் உறக்கத்தை ஆங்கிலத்தில் ஹைபெர்நேசன் (HYBERNATION)
என்று கூறுவார்கள்). அந்த மிருகத்தில் இதற்குக் காரணமான் மரபணுக்களை கண்டுபிடித்து அதை
மனிதனின் உடலில் செலுத்தி, பயண நேரத்தை தூங்கிக் கழிக்க வழி செய்யும் உத்தியை
விஞ்ஞானிகள் பயன்படுத்த முயற்சி செய்கின்றனர்.
ஆண், பெண் இணையாகத்தான் அனுப்ப முடியும். குழந்தை பிறப்பு, வளர்ப்பு உள்பட நீண்ட
பயணத்தின்போது விண்வெளி வீரர்கள் சந்திக்கும் இதுபோன்ற பிரச்சனைகள் ஏராளம். அவை
ஒவ்வொன்றையும் தீர்க்க விஞ்ஞான உலகம் கடினமான, ஆச்சிரியப்பட வைக்கும் ஆராய்ச்சிகளை செய்து
கொண்டிருக்கின்றது. இந்த வகையான ஆராய்ச்சிகளில் வெற்றி கிடைக்குமா என்பதெல்லாம்
பொறுத்திருந்து பார்க்க வேண்டியதுதான்.
அதனால் வேறு ஒரு கோளில் அறிவுஜீவிகள் இருப்பது தெரிந்தும் கூட, கைக்கு எட்டியது
வாய்க்கு எட்டவில்லை என்பது போல நாமும் அவர்களும் அவரவர் இடத்தில் இருந்துகொள்ள
வேண்டியதுதான். சந்திப்பதற்கு இப்போது வழியே இல்லை.
வருங்காலத்தில் என்ன நடக்கும்?
aliens_vs_predator_380
வருங்காலத்தில் அறிவியல் மேலும் வளர்ச்சி அடையும்போது, ஒளியின் வேகத்தில் செல்லும்
வாகனத்தைக் கண்டுபிடித்து, அதில் பயணம் செய்யும் சிரமங்களையும் நிவர்த்தி செய்தபின் அல்லது
வேறு சில உத்திகளின் மூலம் நட்சத்திரப் பயணத்தை எளிதாக்கி, பூமியை விட்டுச் சென்று
மனிதன் வெகு தொலைவில் உள்ள பல கோள்களில் வசிக்கத் துவங்குவான். அப்போது விசித்திரமான,
வினோதமான, எதிர்பார்க்காத ஒரு பரிணாம வளர்ச்சி அந்த கோள்களில் உள்ள மனிதர்களுக்கு நடக்கும்.
விண்வெளி ஆராய்ச்சியின் ஆரம்ப கட்ட நாட்களில் விண்வெளியில் சில நாட்கள் இருந்து விட்டு
வந்த விண்வெளி வீரர்கள், இங்கே பூமியில் இறங்கும் போது, அவர்களால் நிற்க முடியாது.
அவர்களை தூக்கிக்கொண்டு தான் செல்வார்கள். ஏனென்றால் 'வெளி' யில் ஈர்ப்பு விசை இல்லை. நம்
கைகளைக் காட்டிலும் கால்கள் பலமானதாக இருக்கக் காரணம், நாம் நடக்கும்போது நம் கால்கள் தான்
ஈர்ப்பு விசையை எதிர்த்து நம் உடலை தூக்கிக்கொண்டு செல்கின்றது. அதனால் கால்கள்
வலுப்பெறுகின்றன. ஈர்ப்பு விசை இல்லையென்றால் கால்கள் கைகளைப் போலத்தான் இருக்கும். அதனால்
தான் விண்வெளி வீரர்கள் சில மாதங்கள் கழித்து திரும்பி வரும்போது, அவர்களால் நிற்க இயலவில்லை
ஈர்ப்பு விசை குறைவாக உள்ள ஒரு கோளில் மனிதன் பல ஆண்டுகளாக வசிக்க ஆரம்பித்தால்,
அவனுடைய கால்கள் தட்டுக் குச்சி போல ஆகும். பூமியில் வாழும் மனிதனுக்கும் அவனுக்கும்
முதல் உடல் வேற்றுமை வரும். ஒருக்கால், அந்த கோள் ஈர்ப்பு விசை பூமியை விட அதிகமாக
இருந்தால், அவனது கால்கள் நம் கால்களை விட மிக வலிமையாக இருக்கும். அந்தக் கோளின்
ஈர்ப்பு பலமடங்கு அதிகமாக இருந்தால் , அங்கே நடப்பதே மிகக்கடினமாக இருக்கும். ஊர்வது
தான் எளிதாயிருக்கும். அங்கே உள்ள மனிதர்கள் அதைத்தான் செய்ய ஆரம்பிப்பார்கள். நமக்கும்
அவர்களுக்கும், இது போன்ற பல உடலமைப்பு வேறுபாடுகள் தோன்றும். காலப்போக்கில் அவர்களுக்கு
ஒரு மனிதனைப் போன்ற தோற்றம் கூட இல்லாமல் போய்விடும். அவர்கள் பூமிக்குத் திரும்ப வந்தால்,
நாம் அவர்களைப் பார்த்து நம் உறவினர்கள் என்று சொல்ல மறுப்போம். சிம்பன்சி குரங்குகளை நம்
உறவினர் என்று ஒத்துக்கொள்ள இப்போது நாம் மறுப்பது போல. சிம்பன்சி குரங்குகளுக்கும்
நமக்கும் 98 சதவீதம் மரபு ஒற்றுமைகள் இருந்தாலும் நாம் விசேஷ பிறவி என்று பெருமையாகப்
பிதற்றுகிறோமே, அதுபோல.
இப்போது உலகில் உள்ள வெவேறு நாடுகளில் மனிதர்கள் வெள்ளை, கருப்பு, சப்பை மூக்கு போன்ற
வேறுபாடுகளுடன் இருப்பது போல, ஒவ்வொரு கோளிலும் மனிதர்கள் ஒவ்வொரு விதமான நூதனமான
மாற்றம் அடைவார்கள். ஆனால் அனைவரும் மனிதர்கள் தான். அவன் ஜப்பானிலிருந்து வந்தவன், இவன்
ஆபிரிக்காவிலிருந்து வந்தவன் என்று நாம் இப்போது கூறுவது போல, அப்போது இவன் அந்தக்
கோளிலிருந்து வந்தவன், இந்த கோளிலிருந்து வந்தவன் என்று அவர்களை அடையாளம் சொல்லும் நிலை
வரும்.
வாயஜெர் விண்கலம் (voyager)
1977 இல் 'வாயஜெர் ஒன்று' மற்றும் 'வாயஜெர் இரண்டு' என்ற இரண்டு விண்கலங்கள்
அனுப்பபட்டன‌. வியாழன், சனி, யூரேனஸ், நெப்டியுன் ஆகிய கோள்களை ஆய்வு செய்யவும், நமது
சூரிய குடும்ப எல்லையைத் தாண்டி, விண்மீன்களுக்கு இடையேயான 'வெளியில்' பயணம் செய்து
ஆய்வு நடத்தவும் இவை அனுப்பப்பட்டன‌.

இவை இரண்டிலும் தங்க முலாம் பூசப்பட்ட ஒளி, ஒலி தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. அதில்
மனிதன் மற்றும் இங்குள்ள பல உயிர்களின் உருவங்கள், பல்வேறு மொழிகள், கலாச்சாரம், அறிவியல்
வளர்ச்சி, இசை ஆகிய பூமியைப் பற்றிய பல செய்திகள் பதியப்பட்டுள்ளன. இந்த விண்கலம் பயணம்
செய்யும்போது , வேற்றுக்கோள் அறிவுஜீவிகள் இந்த தகட்டை காண்பார்களேயானால், நம்மைப் பற்றி
எல்லா விவரங்களையும் தெரிந்து கொள்வார்கள் என்று எண்ணத்தில் அப்படி செய்தார்கள்.
சூரியனை விட்டு சுமார் 1800 கோடி கிலோமீட்டர்கள் பயணம் செய்து, மேலும் தன் நட்சத்திரப்
பயணத்தை வெற்றிகரமாகத் தொடரும் அந்த விண்கலம் வேற்றுக்கோள் அறிவுஜீவிகளுக்கு நம்மைப்
பற்றிய விவரத்தை என்றாவது ஒருநாள் நிச்சயமாகக் கொடுக்க உதவும் என்று நம்புகிறார்கள்.
சூப்பர் மனிதர்கள்
சரி, நாம் சூப்பர் மனிதர்களைத் தேடுவோம். நமக்கு பழங்கால குகைவாசிகள் எப்படியோ
அதுபோலத்தான் அவர்களுக்கு நாம். விஞ்ஞானத்தில் அவர்கள் நம்மை விட பல மடங்கு
முன்னேறியவர்கள். அவர்களை நாம் தேட வேண்டிய அவசியம் இல்லை. நம்முடைய சிக்னல் கிடைத்தால்
போதும். சூப்பர் மனிதர்கள் இருந்தார்களேயானால், அவர்களே நம்மைத் தேடி வந்துவிடுவார்கள்.
வேற்றுக்கோள் சூப்பர் மனிதர்கள் இங்கு வந்ததாக பல சுவையான திரைப்படங்கள் வந்துள்ளன. அவர்கள்
நம்மில் பலரைக் கடத்திச் சென்றதாகவும், கடத்திச் சென்ற மனிதர்களின் உடலில் சில
ஆராய்ச்சிகளுக்குப் பிறகு அவர்களைத் திரும்ப பூமியில் மீண்டும் கொண்டு வந்து
விட்டுவிட்டதாகவும் வெகு சுவாரசியமான, திகிலூட்டும் கதைகள், குறிப்பாக மேலை
நாடுகளில் பல உண்டு. பலரும் அவர்களைப் பார்த்ததாகவும் கூறுகின்றனர் . ஆனால் அவர்கள்
கூற்றை ஆய்ந்த விஞ்ஞானிகளும், மேலை நாட்டு அரசாங்கங்களும் அப்படி ஒரு கடத்தலோ அல்லது
மற்ற சம்பவங்களோ நடக்கவில்லை என்று கூறுகின்றனர். அரசாங்கம் உண்மையை மூடி மறைக்கின்றது
என்று பலர் வாதிக்கின்றனர்.

koi_mil_gaya_380
வாதங்களும் எதிர்வாதங்களும் மேலை நாடுகளில் அனல் பறக்க விவாதிக்கப்பட்டு வருகின்றன. நம்
நாட்டில் அது இல்லை. நமக்கு இங்கே வேறு பல பிரச்சனைகள் நிறைய இருக்கின்றனவே.
சூப்பர் மனிதர்கள் இங்கே வருவதற்கு, அவர்களுக்கு நாம் முன்பு விவாதித்த, நட்சத்திரப் பயணத்
தடைகள் இருக்காது. அவைகள் அனைத்திற்கும் விஞ்ஞான விடைகள் கண்டுபிடித்து, வெற்றிகரமாக
அவர்களால் இங்கு வந்து சேர முடியும். நட்சத்திரப் பயணம் செய்யும் அளவுக்கு வளர்ச்சி
கண்டவர்கள் ஒரு கோளில் தொடந்து இருக்க மாட்டார்கள். நாடோடி மன்னர்களாகத்தான் இருப்பார்கள்
என்று அறிவியலாளர்கள் கருதுகின்றனர். இந்தப் பூமியில் கிடைக்கும் நிலக்கரி, பெட்ரோல்
போன்ற சக்தியின் ஆதாரங்கள் தீரத் தொடங்கி நாம் முழிப்பது போல, அவர்களது கோளில் இவை
எல்லாம் தீர்ந்து விட்டால், அதைப் பற்றி கவலைப்படாமல், 'ஒளி வேக' வாகனத்தை எடுத்துக்கொண்டு
அடுத்த கோள் நோக்கிச் சென்றுவிடுவார்கள். அணு சக்தியினால் பிரச்சனைகள் வருவதால், அதையும்
தவிர்த்து, நட்சத்திரங்களின அருகே ஆயிரக்கணக்கான 'ரோபோ'களை அனுப்பி, நட்சத்திரத்தின்
சக்தியையே உறிஞ்சக்கூடிய அளவு வல்லமை பெற்றவர்களாக இருக்கக்கூடும்.
சரி வந்துவிட்டார்கள். என்ன நடக்கும்?
நமது காட்டுப்பகுதிகளில் இன்னும் வேட்டையாடி உணவு உண்டு கொண்டு இருக்கும் மிகவும்
பின்தங்கிய சமூகத்தினரை நம்முடைய இந்த கால தொழில்நுட்ப அறிஞர்கள் சந்திக்க நேர்ந்தால் என்ன
செய்வார்கள்? இந்த பாமரர்களால் தமக்கு எந்த பிரயோஜனம் இருக்காது என்று கண்டுகொள்ளாமல்
சென்று விடுவாகள் அல்லவா? அதுபோல நம் நாடுகளுக்குள் நடக்கும் போர் மற்றும் மதம், இனம்,
மொழி என்ற பெயரால் நடக்கும் படுகொலைகளையும் காணும் சூப்பர் மனிதர்கள் பூமியில் வாழும்
இவர்கள் 'மனிதன் என்னும் போர்வையில் வாழும் மிருகங்கள்' என்று அறிந்து, இனி இந்தப் பக்கம்
தலைவைத்துக்கூட படுக்காமல் இருக்கவும் வாய்ப்புண்டு.
சூப்பர் மனிதர்கள் பூமிக்கு வந்து, நம் நிலைமையைக் கண்டபின், இவர்களால் உபயோகமில்லை
என்று தொடர்பு கொள்ளாமல் சென்று விட்டிருக்கலாம் என பலர் உறுதியாக நம்புகின்றனர். சிலரை
பிடித்துக் கொண்டுபோய், மனித உடலைப் பற்றி சில ஆராய்ச்சிகளை நடத்திவிட்டுச் சென்றிருக்கலாம்.
மேற்கத்திய நாடுகளில் வாழ்ந்தவர்கள், ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து மக்களைக் கொண்டுபோய்
அடிமைகளாக வைத்துக் கொண்டது போல, நம்மைப் பிடித்துக் கொண்டு சென்று நம் உழைப்பை
இனிமேல் அவர்கள் உறிஞ்ச ஆரம்பித்துவிடுவார்கள் என்று பலர் நம்புகின்றனர். மாபெரும்
விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாகிங் அவர்களே இதனை ஒத்துக்கொள்கிறார். அவர்கள் நம்மைக் காணாத வரை
நல்லதுதான். நாம் 'வாயேஜர்' மூலமாக பிரபஞ்சத்திற்கு அனுப்பிய செய்தி தவறு எனவும்
கூறுகிறார்.
பலர், சூப்பர் மனிதர்கள் அறிவியலில் மேம்பட்டிருப்பதைப் போல , மனித நேயத்திலும்
உயர்ந்திருப்பார்கள் என்றும், இங்கே வந்து நம் நிலைமையைக் கண்டு, மனமிரங்கி, நம்
பிரச்சனைகளைத் தீர்க்க வழி சொல்லி, பூமியில் பஞ்சமும் பட்டினியும், நோயும், கூடங்குளம்
போன்ற பிரச்சனைகள் இன்றி மக்கள் ஆனந்தமாக வாழ வழி வகுப்பார்கள் என்றும் கருதுகிறார்கள்.
நம் பூமியிலயே அறிவியல் வளர்ந்த அளவுக்கு, மனித நேயம் வளரவில்லை. அதுபோல அவர்களும்
அறியலில் முன்னேறியிருந்தாலும் மனித நேயம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று கனவு
காணக்கூடாது என்பதைச் சுட்டிக்காட்டி அவர்கள் நமக்கு உதவ மாட்டார்கள் என்று
எதிர்க்கட்சியினர் வாதிடுகிறார்கள்.
'அவள் வருவாளா' என்ற திரைப்படப் பாடல் போல , 'அவர்கள் வருவார்களா' என பலர் மேலை
நாடுகளில் காத்திருக்கின்றனர். சூப்பர் மனிதர்கள் மேல் நம்பிக்கை கொண்டவர்கள் மனம் தளராது,
செட்டி அமைப்புக்கு தங்கள் கையிலிருந்து பணம் கொடுத்து 'தேடுதலைத்' தொடர, செட்டியை
ஊக்குவிக்கின்றனர்.
உங்கள் பொன்னான வாக்குகள், 'தேவர்கள் போன்ற அவர்கள் வரவேண்டும்' எனும் கோஷ்டிக்கா அல்லது
அவர்கள் வந்தால் 'இந்தியாவுக்குள் நுழைந்த வெள்ளையனைப் போலதான்' எனும் மாற்று கோஷ்டிக்கா?
உங்கள் வாக்குகளை பின்னூட்டமாக கீழே பதிவு செய்யுங்கள்.
- ஜெயச்சந்திரன் (jayacha...@gmail.com)

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
May 12, 2015, 8:01:45 AM5/12/15
to brail...@googlegroups.com
கற்கால மனிதர்கள் கடல் பயணம் செய்தார்களா?
8
விவரங்கள்
எழுத்தாளர்: விஞ்ஞானி க.பொன்முடி
தாய்ப் பிரிவு: அறிவியல் ஆயிரம்
பிரிவு: புவி அறிவியல்
C வெளியிடப்பட்டது: 27 ஆகஸ்ட் 2009
ஆசியக் கண்டத்திற்கும் ஆஸ்திரேலியக் கண்டத்திற்கும் இடையில் சுமத்ரா, ஜாவா, பாலி, லம்போக்,
சும்பவா, புளோரஸ், திமோர் என வரிசையாகப் பல தீவுகள் அமைந்திருக்கின்றன. இதில் புளோரஸ்
என்ற தீவில் உள்ள ஒரு குகையில் இருந்து பதினெட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த,
மூன்று அடி உயரமேயுள்ள கற்காலக் குள்ள மனிதர்களின் எலும்புகளையும் அவர்கள் பயன்படுத்திய
கற்கருவிகளையும் ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த மானிடவியல் ஆராய்ச்சியாளர்கள்
அகழ்வாராய்ச்சியில் எடுத்திருக்கின்றனர்.
ஏற்கனவே திமோர் தீவில் இருந்தும் தீவுக் கண்டமான ஆஸ்திரேலியாவில் இருந்தும்
நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கற்கால மனிதர்களின் எலும்புகளையும்
கற்கருவிகளையும் ஆராய்ச்சியாளர்கள் எடுத்திருக்கின்றனர். ஆனால் புளோரஸ் திமோர் ஆகிய
தீவுகளை அடைவது அவ்வளவு சுலபம் அல்ல.
குறிப்பாக லம்போக் சும்பவா புளோரஸ் திமோர் ஆகிய தீவுகள் நாலாயிரம் அடி
ஆழமுள்ள கடல் பகுதியில் அமைந்திருக்கின்றன. முக்கியமாக பாலி தீவில் இருந்து லம்போக்
தீவு, முப்பது கீலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. மேலும் இந்த இரண்டு தீவுகளுக்கும்
இடையே “சேப்” என்று அழைக்கப்படும் ஆபத்தான கடல் நீரோட்டமும் ஓடுகிறது. எனவே பாய்மரக்
கப்பல் அல்லது இயந்திரப் படகு மூலமாகவே இக்கடல் பகுதியைக் கடக்க முடியும். எனவே கற்கால
மனிதர்கள் எப்படி இந்த ஆபத்தான கடல் பகுதியைக் கடந்து புளோரஸ், திமோர் ஆகிய
தீவுகளுக்கும் ஆஸ்திரேலியக் கண்டத்திற்கும் சென்றார்கள் என்பது குறித்து
ஆராய்ச்சியாளர்களுக்கு இடையே கருத்து மோதல்கள் எழுந்திருக்கின்றன.
அறுநூறு அடி ஆழமுள்ள கடல் பகுதியால் பிரிக்கப்பட்டிருக்கும் இந்தியாவிலும்
இலங்கையிலும் கூட கற்கால மனிதர்களின் எலும்புகளும், கற்கருவிகளும்
எடுக்கப்பட்டிருக்கின்றன. இதற்கு பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் அறுநூறு அடி
வரை தாழ்வாக இருந்த பொழுது கற்கால மனிதர்கள், இந்தியாவில் இருந்து இலங்கைக்குச்
சென்றிருக்கிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
அதன் பிறகு கடல் மட்டம் அறுநூறு அடி உயர்ந்ததற்கு நிலத்தின் மேல் இருந்த பனி
உருகிக் கடலில் கலந்ததே காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர் ஆனால் நாலாயிரம்
அடி வரை ஆழமுள்ள கடல் பகுதியால் பிரிக்கப்பட்டிருக்கும் புளோரஸ் திமோர் ஆகிய
தீவுகளுக்கும் ஆஸ்திரேலியக் கண்டத்திற்கும் கற்கால மனிதர்கள் எப்படி சென்றார்கள் என்பது
ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
டிம் வைட் என்ற ஆராய்ச்சியாளர், புளோரஸ் தீவிற்கு கற்காலக் குள்ள மனிதர்கள் பாலி
தீவில் இருந்து சுனாமி அலைகளால் அடித்துக் கொண்டு வரப்பட்ட மரக் கிளைகள் மூலம்
வந்திருக்கலாம் என்று கூறுகிறார்.
ஆனால் ராபர்ட் பெட்நரிக் என்ற ஆராய்ச்சியாளரோ இந்தோனேசியத் தீவுகளுக்கு இடையே
ஓடும் கடல் நீரோட்டங்களை, கட்டுமரம் போன்ற மரக் கலங்கள் மூலமாக, துடுப்பு போட்டு வலிந்து
கடந்தால்தான் கடக்க முடியும் என்று கூறுகிறார். கூறியதோடு நிற்காமல் அவர் சோதனை
முயற்சியாக கட்டுமரம் மூலம் பாலி தீவில் இருந்து லம்போக் தீவிற்கு சில மாதிரிப்
பயணங்களையும் மேற்கொண்டார். அவரது கட்டுமரக் கடல் பயணத்தை பி.பி.சி. செய்தி
நிறுவனமும். நேஷனல் ஜியாகிரபிக் சேனலும் செய்திப் படமாகத் தயாரித்தன.
முக்கியமாக கட்டுமரம் முழுக்க முழுக்க கற்கருவிகளைக் கொண்டுதான்
தயாரிக்கப் பட்டிருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. ஆனால் கல்லைக் கொண்டு
மூங்கில்களை வெட்டும் பொழுது மூங்கில்களில் விரிசல்கள் ஏற்பட்டன. இது போன்ற மூங்கில்களைக்
கொண்டு கட்டுமரம் செய்தால் அந்தக் கட்டுமரம் கடலில் மிதக்காமல் மூழ்கி விடும். எனவே
முக்கிய நிபந்தனை விலக்கிக் கொள்ளப்பட்டு, இரும்புக் கருவிகள் மூலம் கட்டுமரம்
செய்யப்பட்டது. அதே போல் கல்லைக் கொண்டு ஒரு துடுப்பைக் கூட செய்ய முடியவில்லை.
கட்டு மரம் தயாரானதும் பாலி தீவில் இருந்து அதிகாலை ஆறு முப்பது மணிக்கு
உதவிக் கப்பல்கள் புடை சூழ, கட்டுமரம் கடலில் இறங்கியது. மொத்தம் பனிரெண்டு பேர்,
முதலில் மூவர் மட்டுமே துடுப்பு போட்டனர். மூன்று மணி நேரத்தில் அவர்கள் களைத்ததும்
அடுத்த மூன்று பேர் துடுப்பு போட்டனர். உச்சி வெய்யிலில் அவர்களும் சோர்ந்து விட, உடன்
அடுத்த செட் பணியைத் தொடங்கியது. அதே நேரத்தில் கட்டுமரம் ஆழமான கடல் பகுதியை
அடைந்தது. இது வரை முன்னேறிக் கொண்டு இருந்த கட்டுமரத்தை கடல் நீரோட்டம் பக்க வாட்டில்
இழுத்தது.
இருப்பினும் விடாப்பிடியாகத் துடுப்பு போட்டதில் ஒருவர் மயங்கி விழ,
அவருக்குப் பதிலாக உதவிக் கப்பலில் இருந்து வந்த ஒருவர் மூலம் மறுபடியும் கட்டுமரம்
செலுத்தப்பட்டது. அதற்குள் கடல் நீரோட்டம் கட்டுமரத்தை வெகு தூரம் இழுத்துச் சென்றதில், இது
வரை எதிரில் தெரிந்த தீவே கண்ணில் இருந்து மறைந்துவிட்டது. எனவே கட்டுமரம் பழைய
இடத்திற்குக் கொண்டு வரப்பட்டு, மறுபடியும் துடுப்பு மூலம் செலுத்தப் பட்டது.
ஆனாலும் கட்டுமரம் அங்குலம் அங்குலமாகவே முன்னேறியது. இந்நிலையில் எதிர்பாராத
விதமாக காற்று திசை மாறி வீசிய பொழுது, கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி
முன்னேறியதில் மாலை ஆறு முப்பது மணிக்கு லம்போக் தீவிற்கு, முன்பே இருக்கும் ஜிலி என்ற
தீவில் கட்டுமரம் கரை ஒதுங்கியது. “ஓரிரு நிமிடங்கள் நாங்கள் ஓய்வு எடுத்து இருந்தாலும்
எங்களால் கரையை அடைந்திருக்க இயலாது” என்று கட்டுமரத்தை செலுத்தியவர்கள் மூச்சிரைக்கக்
கூறினார்கள். ஆக மொத்தம் பனிரெண்டு மணிநேரம் தொடர்ந்து துடுப்பு போட்டும் லம்போக் தீவை
அடையும் முயற்சி தோல்வியடைந்தது.
தற்கால மனிதர்களாலேயே கடக்க இயலாத கடல் பகுதியை கற்கால மனிதர்கள் எப்படி
கடந்திருப்பார்கள்?
இது குறித்து லாயின் டேவிட்சன் என்ற ஆராய்ச்சியாளர், கடந்த இரண்டரை லட்சம்
ஆண்டுகளுக்கு முன்பிருந்து, எழுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை கற்கால மனிதர்கள்
பயன்படுத்திய கற்கருவிகளில் பெரிய அளவில் மாற்றம் ஏதுமின்றி ஒரே மாதிரி
காணப்படுகின்றன. எனவே கற்கால மனிதர்களின் அறிவு நிலையில் மாற்றம் ஏற்பட்டிருக்கவில்லை.
எனவே கற்கால மனிதர்கள் நீண்ட காலத் திட்டம் போட்டு தொலை தூரக் கடல் பயணங்களை மேற்கொள்ளும்
அளவுக்கு அறிவு வளர்ச்சி பெற்றிருக்கவில்லை என்று டேவிட்சன் கூறுகிறார்.
எல்லாவற்றுக்கும் மேலாக திமோர் தீவில் இருந்து ஆஸ்திரேலியக் கண்டம் ஆயிரம் கிலோ
மீட்டர் தூரத்தில் அமைந்திருப்பதால், திமோர் தீவில் இருந்து பார்த்தால் ஆஸ்திரேலியக் கண்டம்
இருப்பது கண்ணுக்கே தெரியவில்லை. எனவே கண்ணுக்கே தெரியாத ஒரு இலக்கை நோக்கி கற்கால
மனிதர்கள் கடல் பயணம் மேற்கொண்டிருப்பார்களா? அது மட்டுமல்லாது திமோர் தீவிற்கும்
ஆஸ்திரேலியக் கண்டத்திற்கும் இடையில் இருக்கும் ஆழ் கடல் பகுதியைக் கடக்கவே பெட் நரிக்
குழுவினருக்கு ஆறு நாட்கள் ஆனது. இது போன்ற பகல் இரவுப் பயணங்களை அதுவும் “கடலில்”
கற்கால மனிதர்கள் மேற்கொண்டிருப்பார்களா? ஆறு நாட்களுக்கு கற்கால மனிதர்கள் உணவுக்கும்
முக்கியமாக குடி நீருக்கும் என்ன செய்திருப்பார்கள்?
“காட்டு மிராண்டிகள் கடல் பயணம் செய்ய வில்லை. கடல் மட்டம் தான் நாலாயிரம் அடி தாழ்வாக
இருந்திருக்கிறது.”
எனவே ஆசியக் கண்டத்திலிருந்து நாலாயிரம் அடி ஆழமுள்ள கடல் பகுதியால்
பிரிக்கப்பட்டிருக்கும் ஆஸ்திரேலியக் கண்டத்தில், நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த
கற்கால மனிதர்களின் எலும்புகளும் கற்கருவிகளும் காணப்படுவதற்கு, நாற்பதாயிரம்
ஆண்டுகளுக்கு முன்பு இந்தோனேசியப் பகுதியில் கடல்மட்டம் நாலாயிரம் அடி வரை தாழ்வாக
இருந்ததே காரணம்.
எனவே நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆசியக் கண்டத்திற்கும் ஆஸ்திரேலியக்
கண்டத்திற்கும் இடையில் நிலத் தொடர்பு இருந்திருக்கிறது. அதன் வழியாகவே கற்கால மனிதர்கள்
ஆசியக் கண்டத்திலிருந்து ஆஸ்திரேலியக் கண்டத்திற்கு நடந்தே தான் சென்றிருக்கிறார்கள். அதன்
பிறகு கடல் மட்டம் உயர்ந்திருக்கிறது அதே நேரத்தில் நிலப் பகுதியும் ஆங்காங்கே உயர்ந்ததால்
தொடர்ச்சியாக இருந்த நிலப் பகுதி பல துண்டுகளாக உடைந்ததுடன், கடல் மட்டமும் உயர்ந்ததால்
பல தீவுகளாக உருவானது. அதனால் கற்கால மனிதர்களால் தீவை விட்டு வெளியேற இயலாமல்
தீவுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டனர்.
நிலம் ஏன் உயர்ந்தது? கடல் மட்டம் ஏன் உயர்ந்தது?
பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு படிப் படியாகக் குளிர்ந்து
இறுகியதால் பல்வேறு அடுக்குகளில் பாறைத் தட்டுகள் உருவானது. இந்நிகழ்வில் பாறைக்
குழம்பில் இருந்து நீரும் வாயுக்களும் எண்ணெயும் பிரிந்ததால் பாறைத் தட்டு அடர்த்தி
குறைந்ததாக உருவானது. இதனால் அடர்த்தி அதிகமான பாறைக் குழம்பில் உருவான அடர்த்தி
குறைந்த பாறைத் தட்டுகள் மேல் நோக்கி உயர்ந்ததால் நிலப் பகுதிகள் உயர்ந்தது. அதே நேரத்தில்
பாறைக் குழம்பு குளிர்ந்த பொழுது அதிலிருந்து பிரிந்த நீர், ஆழ் கடல் சுடு நீர் ஊற்றுக்கள்
வழியாக கடலில் சேர்ந்ததால் கடல் மட்டம் நாலாயிரம் அடி உயர்ந்தது.
இவ்வாறு நிலப் பகுதிகள் உயரும்பொழுது தான் நில அதிர்ச்சி நிலச் சரிவு
சுனாமி போன்ற இயற்கைப் பேரழிவுகள் ஏற்படுகின்றன.
கண்டங்கள் நகர்கின்றன என்று கூறுவது சரியல்ல.
கடல் மட்டம் பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்த பொழுது கண்டங்களுக்கு இடையில் நிலத்
தொடர்பு இருந்தது. அதன் வழியாக விலங்கினங்கள் ஒரு கண்டத்தில் இருந்து மற்றொரு
கண்டத்திற்கு இடம் பெயர்ந்தன. அதன் பிறகு கடல் மட்டம் உயர்ந்ததால் கண்டங்கள் கடல் பகுதியால்
பிரிக்கப்பட்டன.
எனவே ஒரே வகை விலங்கினங்கள் கடல் பகுதியால் பிரிக்கப்பட்ட பல்வேறு கண்டங்களில்
காணப்படுவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்வாக இருந்ததே காரணம்.
ஆனால் ஒரே வகை விலங்கினங்கள் பல கண்டங்களிலும், தீவுகளிலும் காணப்படுவதற்கு, ஒரு
காலத்தில் இந்த நிலப்பகுதிகள் யாவும் ஒன்றாக இணைந்து ஒரு பெரியகண்டம் இருந்ததாகவும் அதன்
பிறகு அந்தப் பெருங்கண்டம் பல துண்டுகளாக உடைந்து பல்வேறு திசை நோக்கி நகர்ந்து கொண்டு
இருக்கின்றன என்று கற்பனையாக ஒரு விளக்கம் கூறப்படுகிறது.
குறிப்பாக அட்லாண்டிக் கடலால் பிரிக்கப்பட்ட தென் அமெரிக்காவிலும்
ஆப்பிரிக்காவிலும் மெசோசாரஸ் என்ற நிலத்தில் வாழ்ந்த விலங்கின் எலும்புகள் காணப்படுவதற்கு,
முன்பு ஒரு காலத்தில் இந்தக் கண்டங்கள் ஒன்றாக இணைந்து இருந்தன என்றும் பிறகு பிரிந்து
நகர்ந்து கொண்டிருக்கின்றன என்றும் முற்றிலும் தவறான ஒரு விளக்கம் கூறப்படுகிறது.
ஆனால் உண்மையில் நிலம் உயர்ந்து கொண்டிருக்கிறது அதன் காரணமாகவே நில அதிர்ச்சி
ஏற்படுகின்றது.
- விஞ்ஞானி க.பொன்முடி. (g.po...@yahoo.com)

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
May 12, 2015, 8:12:26 AM5/12/15
to brail...@googlegroups.com
பூமி வெப்பமடைந்தால் மாரடைப்பு,
சுவாசக் கோளாறுகளால் இறப்போர் எண்ணிக்கை கூடும்
8
விவரங்கள்
எழுத்தாளர்: ஆதி வள்ளியப்பன்
தாய்ப் பிரிவு: அறிவியல் ஆயிரம்
பிரிவு: புவி அறிவியல்
C வெளியிடப்பட்டது: 21 ஜனவரி 2010
காலநிலை மாற்றத்தால் உலக சுகாதாரம் ஆபத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. காலநிலை மாற்றம்
காரணமாக ஏழைகளுக்கு நெருக்கடி அதிகரிக்கும், ஊட்டச்சத்து குறைவு பரவலாகும். நில
மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிப்பதற்கு ஏற்ப மாரடைப்பு, சுவாசக் கோளாறுகளால் இறப்போர்
எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்கிறார் விஞ்ஞானி அந்தோனி மெக்மைக்கேல். ஆஸ்திரேலிய தேசிய
பல்கலைக்கழகத்தின் சர்வதேச தொற்றுநோய் மற்றும் மக்கள்தொகை சுகாதார மையத்தின் தலைவராகச்
செயல்பட்டு வருகிறார் மெக்மைக்கேல். அத்துடன் காலநிலை மாற்றத்துக்கான பன்னாட்டு அரசுக்
குழுவின் இடம்பெற்றுள்ள முக்கிய உறுப்பினர்களில் ஒருவர். உலக சுற்றுச்சூழல் மாற்றங்களால்
ஏற்படும் சுகாதார ஆபத்துகள் பற்றி பேசுகிறார்:

காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளால் உருவாகி வரும் நோய்களைப் பற்றி... கடந்த இருபது
ஆண்டுகளில், உலகம் முழுவதும் நோய்களின் தோற்றத்தில் பல்வேறு மாறுபாடுகள் ஏற்பட்டு
வருகின்றன. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளில் இவற்றின் வேர்
அமைந்திருப்பது தெரிகிறது. உலகின் வெப்பமான பகுதிகளில் மட்டுமே பரவி வந்த மலேரியா
தற்போது கிழக்கு ஆப்பிரிக்க மேட்டுப்பகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
சிஸ்டோசோமியாசிஸ் (Schistosomiasis) என்ற தண்ணீர் நத்தைகளால் தொற்றும் நோய் சீனாவின்
வடக்குப் பகுதிக்கு பரவிவிட்டது. இந்த நத்தைகளை முன்பு இந்தப் பகுதியில் பார்க்க
முடியாமல் இருந்தது.

உணவாகப் பயன்படும் சிப்பிமீன் நச்சாவது தொடர்பாகவும் தகவல்கள் வருகின்றன. அலாஸ்கா
கடற்கரைப் பகுதியில் அவ்வப்போது தென்பட்டுக் கொண்டிருந்த இந்த சிப்பிமீன், தற்போது
அப்பகுதியில் மிகச் சாதாரணமாக பார்க்கக் கிடைக்கிறது. அலாஸ்கா பகுதி கடல்நீரின்
வெப்பநிலை கோடை காலத்தில் 15 டிகிரி செல்சியஸ் அதிகரித்துவிட்டால், சிப்பிமீன் வளரும்
தளங்களில் நோய்த்தொற்று நீடித்திருப்பதற்கான உகந்த சூழ்நிலையை உருவாகும். வங்கதேசத்தில்
சமீபத்தில் பரவிய காலரா நோய் தாக்குதலுக்கும், எல்நினோ சுழற்சியால் அந்த நாட்டின் கடற்கரை
நீர் வெப்பமடைவதில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளுக்கும் தொடர்பு இருப்பதாக சமீபத்திய
ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் வெப்பஅலைகள் காரணமாக நெருக்குதல்கள் அதிகரிக்குமா?
வளர்ந்த நாடுகளில் இப்பிரச்சினை தொடர்பாக அதிகம் ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது. வெப்பநிலை
அதிகரித்தால், இறப்போரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். அன்றாட வெப்பநிலை அதிகரிப்பதன்
காரணமாக, மாரடைப்பு மற்றும் சுவாசக் கோளாறுகளின் தாக்கம் உயர்வதன் காரணமாகவே இந்த
இறப்புகள் பெருமளவு ஏற்படுகின்றன. வளரும் நாடுகளில் இப்பிரச்சினை தொடர்பாக இன்னும்
அதிக ஆராய்ச்சிகள் நடக்கவில்லை.

இது போன்ற பிரச்சினைகளால் யார் அதிகம் பாதிக்கப்படுவார்கள்? முதியவர்கள், பல்வேறு
உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்படுபவர்கள், குறைந்த தரமுள்ள வீடுகளில் வாழும் ஏழைகள்
ஆகியோர் வெப்பஅலைகளால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். 1995ம் ஆண்டு ஏற்பட்ட சிகாகோ
வெப்பஅலையால் நூற்றுக்கணக்கானோர் இறந்தனர். அவர்களில் பெரும்பாலோர் ஏழைகள்,
சிறிய-காற்றோட்ட வசதிகள் இல்லாத அடுக்குமாடிகளில் வாழ்ந்தவர்கள்தான். கடுமையான
வெப்பத்தால் சமூக அமைதி கெடும் என்பதாலும் மேலும் சிலர் இறந்ததாக தகவல்கள் வந்தன.
வெப்பநிலை அதிகரிப்பால் பெரும்பாலோர் அடுக்குமாடிகளில் குடியிருப்பு வீடுகளுக்குள்
அடைந்து கொண்டதால், நடத்தை சார்ந்த மனநோய் பாதிப்புகள் ஏற்பட்டது தொடர்பாகவும் தகவல்கள் வந்தன.

வேறு என்ன சுகாதார பிரச்சினைகள் ஏற்படும்? ஆர்டிக் பனிப்பிரதேசத்தில் வாழும் இனுயிட்
மக்களிடம் ஏற்படும் உடல் பருத்தல் மற்றும் காலநிலை மாற்றம் இடையிலான சுவாரசியமான
தொடர்பாகள் தொடர்பாக ஆராய்ச்சிகள் நடந்துள்ளன. வெப்பநிலை அதிகரிப்பால் ஆர்டிக் பகுதியில்
உறைபனி, மிதக்கும் பனிப்பாறைகள் கண்மூடித்தனமாக உருகி வருகின்றன. இதன் காரணமாக
அப்பகுதியில் உள்ள பல்வேறு உயிரினங்கள் இடம்பெயர்ந்து வருகின்றன. இதனால் இனுயிட் மக்கள்
தங்கள் பாரம்பரிய உணவு ஆதாரங்களைச் சார்ந்திருக்க முடியாமல் சிக்கலை எதிர்கொண்டு
வருகின்றனர். இதற்கு பதிலாக பதப்படுத்தப்பட்ட, சுத்திகரிக்கப்பட்ட உணவுப் பண்டங்களை அவர்கள்
அதிகம் உண்ண ஆரம்பித்துள்ளனர். இதிலிருந்து காலநிலை மாற்றம் நமது உணவு சங்கலியையும்
சீர்குலைக்கிறது என்பது தெரியவருகிறது.

இந்தியா எந்த மாதிரியான பிரச்சினைகளை எதிர்கொள்ளும்? இந்தியாவின் பெருநகரங்களில்
வெப்பஅலை வீசுவதன் கடுமையும், தாக்குதல் எண்ணிக்கையும் அதிகரிக்கும். கோடை காலங்களில்
சுற்றியுள்ள கிராமப்புறங்களைவிட நகர்ப்புறங்களில் இரவு நேர வெப்பநிலை 5 டிகிரி
செல்சியஸ் அதிகமாக இருக்கும். இதனால் சேரிகள் மற்றும் தரமற்ற வீடுகளில் குடியிருக்கும்
மக்கள் பாதிக்கப்படுவர். காலநிலை மாற்றம் பயிர் மகசூலை குறைக்கும், நீர்நிலைகள் வறண்டு
போகும். இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் கிழக்கு மகாராஷ்டிராவில் வாழும் 20-30 லட்சம்
மக்கள் வறட்சியால் இடம்பெயர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வயிற்றுப்போக்கு, காலரா,
சிக்குன்குன்யா, டெங்கு போன்ற நோய்களின் தாக்குதல் பெருகிவிடும்.

காலநிலை மாற்றத்துக்கு தகவமைத்துக் கொள்ள எந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுக்க
வேண்டும்? 10 ஆண்டுகளுக்கு முன்பு கணிக்கப்பட்டதைவிட மாற்றங்கள் தற்போது அதிவேகமாக
நடைபெற்று வருகின்றன. எதிர்கால ஆபத்துகள் தொடர்பாக நமக்கு முழுமையான புரிதல் இல்லை
என்றாலும்கூட, ஆபத்துகளின் தாக்கத்தை குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க
வேண்டும் என்ற நெருக்கடி அதிகரித்து வருகிறது. அனைத்து ஆராய்ச்சிகளையும் நடத்துவதற்கு
முன், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று நெருக்கடியை உருவாக்குவது
சாதகமான ஒரு சூழ்நிலை அல்ல.

குறிப்பாக தெற்கு ஆசியாவின் உணவுதானிய மகசூலில் காலநிலை மாற்றம் பெரும்தாக்கத்தை
ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. மக்கள்தொகை அதிகரிப்பை கணக்கில் எடுத்துக் கொண்டால்,
நிலைமை இன்னும் மோசமாகி விடும். மண்வளம் அதிகமாக சுரண்டப்படும், நீர்நிலைகள், நன்னீர்
ஆதாரங்கள் வறண்டு போகும். இந்தியா போன்ற நாடுகளில் ஏற்கெனவே பாதிக்கும் மேற்பட்ட
குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலை நிலவுகிறது. காலநிலை
மாற்றம் இப்பிரச்சினையை இன்னும் தீவிரமாக்கும். எனவே, ஊட்டச்சத்து குறைவு பிரச்சினையில்
தகவமைப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தேவை இருக்கிறது.

காலநிலை மாற்றம் போன்ற பிரச்சினைகளில் உலக சுகாதார நிறுவனம் மற்றும் உலக வங்கி போன்ற
நிறுவனங்களின் நிலை என்ன?
பொருளாதார வளர்ச்சி பிரச்சினைகள் தொடர்பாக மட்டுமே உலக வங்கி முதன்மை அக்கறை செலுத்தி
வந்தது. மனிதர்கள் வாழும் சூழ்நிலைகள் மேம்பட வேண்டும் என்றால் கல்வி, சுகாதாரம் போன்ற
விஷயங்களும் அதற்கு ஈடான முக்கியத்துவம் கொண்டவை என்று தற்போதுதான் உணர
ஆரம்பித்திருக்கிறது. காலநிலை மாற்றத்தை உலக சுகாதார நிறுவனம் பழைமை
மனப்பான்மையுடனே அணுகுகிறது. இந்த ஆண்டுதான் அதிலிருந்து விடுபட்டு வெளியே வந்து,
காலநிலை மாற்றம் முக்கிய பிரச்சினை என்று முதன்முறையாக கூறியுள்ளது. இது மிகப்
பெரிய முன்னெடுப்பு.

தமிழில் : ஆதி வள்ளியப்பன்
நன்றி: டவுன் டு எர்த்

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
May 12, 2015, 8:37:51 AM5/12/15
to brail...@googlegroups.com
மண்ணை (நோ, சா)கடிக்கும் மனிதர்கள்!
Maravalli hand
இனம் இனத்தோடுதாம் சேறும் என்பது ஒவ்வொரு நபருக்கும், உயிரினத்திற்கும் சாலப் பொருந்தும்
போல் இருக்கிறது.
ஆம்! நான் சட்ட ஆராய்ச்சியை விட்டு வெளியில் வந்து எட்டிப்பார்த்தால், கிடைக்கும் நட்புகளில்
ஆராய்ச்சியாளர்களே அதிகமாக கிடைக்கிறார்கள். ஆராய்ச்சியாளர்கள் என்றால், எல்லோரும் முனைவர்
பட்டம் பெற்ற முட்டாள்கள் என நினைக்காதீர்கள்.
என்னைப் போன்ற பள்ளிப்படிப்பையும், தொழிற்படிப்பையும் முடித்தவர்களே!
படிப்பிற்கும் செய்யும் ஆராய்ச்சிக்கும் சற்றும் சம்பந்தம் இல்லாதவர்களே!!
நான் எப்படி நீதித்துறையில் நடக்கின்ற எல்லாமே தவறு என்று தெளிவாக குறிப்பிடுகிறேனோ,
இதுபோலவே அவரவர்கள் செய்யும் ஆராய்ச்சி பற்றி பேசும் போது, இவர்களின் பேச்சும்,
செயல்பாடும் அத்துறையில் நடக்கின்ற எல்லாமே தவறு, பித்தலாட்டம் என்றே தோண்றுகிறது.
நாங்கள் சொல்வது உண்மை என அவ்வப்போது நிரூபித்து காட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.
இப்பேல்லாம் யாரப்பாத்தாலும், ஆரோக்கியமா இருக்கனும்னா, சத்தான உணவ சாப்பிடனும். ஆனால்,
உணவுலியே சத்து இல்லியே. அப்புறம் நமக்கு எப்படி சத்து கிடைக்கும் என புலம்பித்
தள்ளுகிறார்கள்.
இப்புலம்பலை முதலீடாக வைத்தே, சத்தான உணவு வகைகள், சத்து மாவுகள் என எல்லா பொருட்களின்
உள்ளே இருந்த சத்துக்கள் யாவும், சந்தடி சத்தமில்லாமல் பெயருக்கு முன்னால் சேர்க்கப்பட்டு,
கொள்ளை லாபத்தில் விற்கப்படுகிறது.
உணவுக்கான அடிப்படை மூலக்கூறு பொருட்கள் எதற்குமே கால நிர்ணயம் இருக்காது. அரிசியை
எடுத்துக் கொண்டால், அது பழகபழக சாதத்தின் கொள்ளளவு அதிகமாக கிடைக்கும் என்று, அடுத்த
வருடத்துக்கு தேவையானதை இவ்வருடமே தயார் செய்து வைத்திருப்பார்கள்.
குற்றவாளிகளை சிறையில் அடைத்து, கொஞ்சம் கொஞ்சமாக (நோ, சா)கடிப்பது போல, இப்போது
எல்லா பொருட்களையுமே பொட்டலங்களில் அடைத்து விடுகிறார்கள். இப்பொருட்களின் உயிர்ப்பு
தன்மை இவ்வளவு நாட்கள்தான் என முத்திரை வேறு குத்தி விடுகிறார்கள்.
விரைவில் கெட்டுப் போகும் தன்மையுள்ள பொருட்களில் சிறிது உப்பை கலந்து வைத்தால்
கெட்டுப்போகாது என கலந்து வைப்பார்கள். உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பதில் இதுவும்
பொதிந்துள்ளது போலவே தெரிகிறது.
அந்த உப்பில் என்ன எழவ கலக்குறாங்களோ தெரியல, உப்பு பாக்கெட்ல கூட காலாவதி தேதியை
முத்திரை குத்திடுறாங்க. எனக்கு தெரிஞ்சி இதுக்குதான், அதிகபட்ச கால வரையறை, இரண்டு
வருடம்.
நாங்கெல்லாம் ரொம்பவே விழிப்பறிவுணர்வு உள்ளவங்க என்று சொல்லிக் கொள்பவர்கள், காலாவதி
தேதி நேற்றோடு முடிந்திருந்தால், அதே சத்து மாவோ அல்லது வேறு எதுவோ விஷ மாவாகி
அல்லது விஷப்பொருளாகி உயிரே போய் விடுவது போல வாங்க மறுக்கும் புத்திசாலிகளாக
இருக்கிறார்கள்.
காலையில் செய்தது மாலையில் வீணாகி விடும் என்றால் அதற்கு மணி கணக்கு. இன்று செய்தது
நாளை அல்லது ஓரிரு நாட்களில் வீனாகி விடும் என்றால் அதற்கு நாட்கள் கணக்கு. இப்படித்தான்
வாரக்கணக்கு, மாதக்கணக்கு, வருடக்கணக்கு எல்லாமே.
ஆகவே, ஒரு வாரம்தான் காலக்கெடு என்றால், இரண்டு மூன்று வாரங்களுக்கு சாப்பிடலாம்.
மாதக்கணக்கில்தான் வைத்திருக்க கூடாது. இப்படி ஒவ்வொன்றுக்கும் காலக்கெடுவை கணக்கிட்டு
நாமே நீட்டித்துக் கொள்ளலாம்.
இதில் உங்களுக்கு சந்தேகம் ஏதும் இருந்தால், ஒரே பொருளில் இரண்டு பொட்டலங்களை வாங்குங்கள்.
ஒன்றை காக்கெடுவுக்கு முன் சாப்பிட்டு பாருங்கள். மற்றதை நீங்களே நீட்டித்த
காலக்கெடுவுக்குப் பின் சாப்பிட்டு பாருங்கள். ஒன்றும் ஆகாது.
என் உடம்பு என்ன சோதனைச் சாலையா, எல்லாப் பரிசோதனைகளையும் செய்வதற்கு என எண்ணிலாம்,
மருத்துவர்களிடம், இதிலும் குறிப்பாக ஆங்கில மருத்துவர்களிடம் சோதனை சாலையாகத்தான்
உடம்பை ஒப்படைக்கிறீர்கள் என்பதை ஒருபுறம் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
மறுபுறம், காலக்கெடு முடிந்த பொருளை அதனை தயார் செய்தவர்கள் அழித்து விடுவார்கள் என
எண்ணுகிறீர்களா… அவர்களுக்கு பொருட்களால் வரும் கொள்ளை லாபம் முக்கியமா அல்லது உங்களது
உடல் நலத்திற்காக, பொருள் நட்டத்தை விரும்புவார்களா… காலக்கெடு முடிந்த பொருட்களை
மீண்டும் புதிதாக பொட்டலம் போட்டு அனுப்பி விடுவார்கள். அவ்வளவே!
இந்த ரகசியத்தை எல்லாம், பொட்டலப் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டிருப்பவர்களை நைசா போட்டு
வாங்குனிங்கனா தெரிஞ்சிக்கலாம்.
சரி, நம்ம விட்ட விசயத்தை திரும்பவும் ஆரம்பிப்போம்.
விளையும் பொருட்களிலேயே சத்து இல்லை என்றால், மண்ணில் சத்துக்கள் இல்லை என்றுதானே அர்த்தம்.
ஒரு விதை போட்டால், பல்லாயிரம் விதைகளாக பெருக்கித்தரும் ஆற்றல் கொண்ட மண்ணில் இருந்த
சத்துக்கள் எல்லாம் எங்கே போயிற்று?
இதில் விதையில்லா ரகம் வேறு வந்து விட்டது. விதையோட எடை குறையுமே, விதைகளை
நீக்கவேண்டிய அவசியம் இல்லியே என அதை விரும்பி சாப்பிடுபவர்களும் உண்டு.
இப்படி சாப்பிடுபவர்களை நான் கேட்கும் கேள்வி, நீங்கள் சாப்பிடும் விதையில்லாத பழம்,
எப்படி தன் வாரிசுகளை உருவாக்க இயலாதோ, அதுபோல நீங்களும் உங்களது வாரிசை உருவாக்க
முடியாமல் போகலாம் இல்லியா?
வாரிசு இல்லாதவர்கள், தாங்கள் உட்கொள்ளும் உணவு முறை குறித்து பரிசீலனை செய்யவும்.
நாம் மருந்துகளை சாப்பிட்டு சாப்பிட்டு, நோஞ்சானக ஆனது போல, மண்ணும் நாம் போடும்
பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டு சாப்பிட்டு நோஞ்சானாகி விட்டது. ஆதலால் மண்ணைக்
காக்காமல், நாம் நம்மை காக்க முடியாது. நாம் மண்ணைக் காத்தால், மண் நம்மை காக்கும்
என்றார்கள், இந்த விவசாய ஆராய்ச்சியாளர்கள்.
Radish
உர வகைகளை பயன்படுத்தாமல், சான வகைகளையும் இதர பொருட்களையும் உரமாக
பயன்படுத்துகிறார்கள். பூச்சிக்கொல்லியை அடித்து பூச்சை கொலல்லாமல், பூச்சி விரட்டியை
தெளித்து விரட்டுகிறார்கள். இவைகள் எல்லாம் இவர்களது சொந்த தயாரிப்புகளே!
வேதங்களில் இதுபற்றி எல்லாம் சொல்லப்பட்டுள்ளதாக சொல்லும் இவர்கள், திரு. தாத்தாச்சாரியார்
என்பவர் வேதங்களில் இருந்து இவர்களுக்கு எடுத்துச் சொல்வதாக சொல்கிறார்கள்.
இவர்களைப் பற்றி ஏற்கனவே ஆ! முள்ளங்கி…!! என்கிற தலைப்பில் எழுதி உள்ளேன். இது ஓர்
அதிசய முள்ளங்கி!
இதேபோன்று, தற்போது மரவல்லி கிழங்கை பயிர் செய்து எடுத்து, சுற்று வட்டார மக்களை
எல்லாம் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளனர். மேலும், அந்த சுற்று வட்டாரத்தில் இவர்கள் விவசாயம்
செய்யும் இடம் மட்டுமே, பச்சை பசேல் என இருக்கிறது.
ஆ முள்ளங்கி கட்டுரையில் நான் குறிப்பிட்டுள்ளபடி, இவர்கள் சொல்லும் முறையில் விவசாயம்
செய்தால், இந்தியா மட்டுமன்று, சோமாலியா மட்டுமன்று, உலகிற்கே இந்தியா உணவு கொடுக்க
முடியும் என்பதை யாராலும் மறுக்க முடியாது போலும்.
ஆம்! இந்த மரவல்லி கிழங்கு 1.5 அடி சுற்றளவும், 2.5 அடி உயரமும், 5.4 கிலோ கிராம்
எடை கொண்டதாகவும் இருக்கிறது.
Maravalli sit
எல்லோரும் பசி, பட்டிணி, பஞ்சம் என பேசிக் கொண்டிருக்க, இவர்களோ இப்பிணிகளைப் போக்க
என்னென்ன செய்யலாம் என யோசித்து, அதன்படி சத்தமில்லாமல் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
சொந்தமாக விவசாய நிலம் இல்லாதவர்கள் இப்படியெல்லாம் பாடுபடும் போது, ஏக்கர் கணக்கில்
வைத்துள்ள நீங்களெல்லாம் என்ன செய்யப் போறிங்க என்பதே என் கேள்வி?
இவர்களின் வழிகாட்டுதல்களை பெற விரும்புபவர்கள் திரு.ராமானுஜம் +919444425801,
திரு.குமார் +918453557193 ஆகிய உலாப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாமே!
யார் எந்த இனமாக இருந்தாலும், இனம் இனத்தோடு சேர்ந்தாலும், எல்லா இனங்களும் இறுதியில்
மண்ணுக்குள்தாம் போக வேண்டும். ஆனால், அம்மண்ணுக்கே மருந்தடித்து மருந்தடித்து, நம்மை
செறிக்கும் தன்னை இல்லாமல் செய்து, புழுபுழுத்துப் போகச் செய்து விடுவார்கள்
போலிருக்கிறதே… அந்தோ கொடுமை…

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
May 14, 2015, 12:21:41 AM5/14/15
to brail...@googlegroups.com
தமிழகம் உட்பட 8 மாநிலங்களில் உள்ள
பொறியியல் கல்லூரிகளில் 50 ஆயிரம் 'போலி' ஆசிரியர்கள்: அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் உள்ள பொறியியல் கல்லூரிகள், தங்கள் ஆசிரியர்களை மற்ற கல்லூரிகளுடன்
பகிர்ந்து கொள்வது எல்லோருக்கும் தெரிந்த ரகசியமாகவே இருந்து வருகிறது. அதை
நிரூபிக்க இப்போது புள்ளிவிவரங்களே உள்ளன. ஒரு கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியரின்
பெயர், இன்னொரு பொறியியல் கல்லூரியின் ஆசிரியர் பணிப் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது.
எட்டு மாநிலங்களில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள தகவல்களில், 90 சதவீதத்துக்கும்
மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் இதுபோல் ஒரே ஆசிரியர் 2 கல்லூரிகளில் பணிபுரிவது
தெரியவந்துள்ளது. இதுபோல் 8 மாநிலங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட 'போலி'
ஆசிரியர்கள் இருப்பது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட தகவல்கள் மூலமே தெரிகிறது.
அங்கீகரிக்கப்பட்ட அனைத்து பொறியியல் கல்லூரிகளும், தங்கள் கல்லூரியில் பணிபுரியும்
ஆசிரியர்களின் பெயர் பட்டியலை, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலிடம் சமர்ப்பிக்க
வேண்டும். அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஆசிரியர்களை, வேறு கல்லூரியில் பணிபுரிய
அனுப்பக் கூடாது. ஆனால், இந்த விதிமுறைகளை பூர்த்தி செய்வதற்காக ஒரே ஆசிரியரின் பெயர்
பல கல்லூரிகளின் பெயர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
ராகேஷ் ரெட்டி டபுடு மற்றும் அவரது குழுவினர் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி
கவுன்சில் வெப்சைட்டில் இருந்து, 'பேஃக்கல்டி' என்ற பொது வெப்சைட்டில் பதிவிறக்கம் செய்து
ஆய்வு செய்துள்ளனர். எட்டு மாநிலங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் ஆசிரியர்கள்
விவரங்களை ஆய்வு செய்தனர். அதில் கிடைத்த முடிவுகளை 'தி இந்து' ஆங்கிலம் நாளிதழுடன்
பகிர்ந்து கொண்டனர். ராகேஷ் குழுவினரின் ஆய்வில் கிடைத்த அதிர்ச்சி தகவல்கள் வருமாறு:
* ஆந்திரா, தெலங்கானாவில் மட்டும் ஏறக்குறைய 8,000 ஆசிரியர் பெயர்கள், ஒன்று அல்லது
அதற்கு மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளின் ஆசிரியர் பெயர் பட்டியலில் மீண்டும்
இடம்பெற்றுள்ளன. அதாவது மொத்தம் உள்ள பொறியியல் கல்லூரி ஆசிரியர்களில், நான்கில் ஒரு
பங்கினர் போலி ஆசிரியர்கள். மாநிலங்களில் ஒட்டுமொத்தமாக 1,500-க்கும் மேற்பட்ட
அங்கீகரிக்கப்பட்ட பொறியியல் கல்லூரிகளில், 90 சதவீத கல்லூரிகளில் குறைந்தபட்சம் ஒரு
ஆசிரியர் பெயராவது போலியாக இடம்பெற்றுள்ளது.
* தமிழ்நாட்டில் 8,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், பல கல்லூரிகளில் பணிபுரிவதாகத்
தெரிகிறது. தமிழ்நாட்டில் உள்ள மொத்த பொறியியல் கல்லூரி ஆசிரியர்களில் ஐந்தில்
ஒருவரின் பெயர் மீண்டும் இடம்பெறுகிறது. அதேபோல் மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள
ஆசிரியர்களில், நான்கில் ஒருவரின் பெயர் மீண்டும் இடம்பெற்றுள்ளது. இந்த மாநிலத்தில்
மொத்தமுள்ள பொறியியல் கல்லூரிகளில் 95 சதவீதம் குறைந்தபட்சம் ஒருவர் பெயராவது
போலியாக உள்ளது. மொத்தமாக பார்க்கையில் மகாராஷ்டிராவிலும் 8,000 ஆசிரியர்களின்
பெயர்கள், பல கல்லூரிகளின் ஆசிரியர் பெயர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
* உத்தரப் பிரதேசத்தில் பாதிக்குப் பாதி ஆசிரியர்களின் பெயர்கள் திரும்ப இடம்பெறுகின்றன.
ஒடிஸாவில்இந்த எண்ணிக்கை 40 சதவீதமாக உள்ளது. இந்த 2 மாநிலங்களிலும் உள்ள ஒவ்வொரு
பொறியியல் கல்லூரியிலும் ஒருவரின் பெயராவது திரும்ப இடம்பெறுகிறது. ஒடிஸாவில்
2,500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் பெயர்களும் உ.பி.யில் 8,000-க்கும் மேற்பட்ட
பெயர்களும் பல கல்லூரிகளின் ஆசிரியர் பட்டியலில் உள்ளன.
* குஜராத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கல்லூரியில் 2,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின்
பெயர்கள் இடம்பெறுகின்றன. இங்கு 97 சதவீத கல்லூரிகளில் ஒருவர் பெயராவது போலியாக
இருக்கிறது. கர்நாடகாவில் 3,000-க்கும் மேற்பட்ட போலி பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இங்கு
92 சதவீதமாக உள்ளது.
இப்படி ஒரு ஆசிரியரின் பெயரே பல கல்லூரிகளில் இடம்பெறுவது குறித்து, சம்பந்தப்பட்ட
கல்லூரிகளோ, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலோ விளக்கம் அளிக்க
முன்வரவில்லை. தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டாலோ மற்றும் இ மெயிலில் கேள்விகள்
அனுப்பி விளக்கம் கேட்டாலோ பதில் அளிக்கவில்லை.
இதுகுறித்து ராகேஷ் ரெட்டி கூறும்போது, ''அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி
கவுன்சிலின் விதிமுறைகள் பகிரங்கமாக மீறப்பட்டுள்ளன. கவுன்சில் வெளியிட்ட தகவல்களை
வைத்து, ஒரு ஆசிரியரின் பெயர் பல கல்லூரிகளில் இடம்பெறுவதை நம்மை போன்றவர்களாலேயே
கண்டுபிடிக்க முடியும்போது, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில்
அதிகாரிகளுக்கு தெரியாமல் போக வாய்ப்பில்லை'' என்கிறார்.
(ஐதராபாத்தை சேர்ந்த ஆர்.ரவிகாந்த் ரெட்டி, விஜயவாடாவைச் சேர்ந்த எஸ்.சந்தீப் குமார்,
நாகர்கோவிலைச் சேர்ந்த அறிவானந்தம் ஆகியோரும் இந்தச் செய்திக்கு தகவல்கள் அளித்து உதவி
உள்ளனர்.)
Keywords: 8 மாநிலங்கள், பொறியியல் கல்லூரிகள், 50 ஆயிரம் 'போலி'
ஆசிரியர்கள், அதிர்ச்சி தகவல்

இடுகையிட்டது Velan Thangavel நேரம் புதன், மே 13, 2015

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
May 14, 2015, 11:52:12 AM5/14/15
to brail...@googlegroups.com
செயலலிதா சொத்துக்
குவிப்பு வழக்கை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும்!
8
விவரங்கள்
எழுத்தாளர்: பெ.மணியரசன்
தாய்ப் பிரிவு: சமூகம் - இலக்கியம்
பிரிவு: கட்டுரைகள்
C வெளியிடப்பட்டது: 14 மே 2015
செயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிபதி குமாரசாமி கொடுத்த தீர்ப்பில் கூட்டல்
கழித்தல் கோளாறு வந்து அறத்தின் முன் அத்தீர்ப்பு அந்தரத்தில் நிற்கிறது.
அ.இ.அ.தி.மு.க.வின் வெற்றிக் கும்மாளங்களும் விக்கித்து நிற்கின்றன.
எந்தக் கூட்டலால் தீர்ப்பில் தண்டனைக் கழித்தல் ஏற்பட்டதோ என்ற ஐயம் பரவலாக உலா வருகிறது.
இந்தியாவின் தேர்தல் அரசியல் பெரும்பாலும் கையூட்டில் பால் குடித்து வளர்ந்து, பெரும்
கொள்ளையில் கொழுப்பேறித் திரிவதுதான். இங்கொருவர் அங்கொருவராக சிலர் மாட்டிக்
கொள்கிறார்கள். அந்தச் சிலர்கூட தண்டிக்கப்படவில்லையென்றால், நாட்டில் நீதி – ஞாயம்
என்பவற்றின் அடிச்சுவடுகூட இல்லாமல் போய்விடும்.
modi jayalalitha 500
அரசியல் தலைவர்களின் ஊழல்களை அன்றாடம் பார்த்து அலுத்துப் போன மக்களுக்கு, லல்லு பிரசாத்
மட்டும்தான் ஊழல் செய்தாரா, செயலலிதா மட்டும்தான் ஊழல் செய்தாரா என்ற சமாதானங்கள்
இருக்கலாம். ஆனால், சமூகத்தில் எதிர்காலத்திலாவது நேர்மையும் ஞாயமும் நிலைக்க
வேண்டுமென்று அக்கறைப்படும் விழிப்புணர்வுள்ள மக்களுக்கு, அகப்பட்டுக் கொண்டவராவது
தண்டிக்கப்பட வேண்டுமல்லவா என்ற கவலை ஏற்படும்.
செயலலிதா வழக்கில் அவரும், அவருடைய குடும்பமல்லாத குடும்பத்தாரும் கர்நாடக உயர்
நீதிமன்றத்தில் விடுதலை செய்யப்பட்டதைப் பற்றி, நமக்கு ஆசாபங்கம் ஏதுமில்லை;
வருத்தமேதுமில்லை. சட்ட நெறிகளின்படி நீதி வழங்கப்பட்டிருக்கிறதா என்ற செய்தியில்தான்
நமது அக்கறையுள்ளது.
பெங்களூர் உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு, சட்ட நெறிகளின்படி நடத்தப்படவில்லை என்பது உச்ச
நீதிமன்றம் காலம் கடந்து வழங்கிய தீர்ப்பின் வழி உறுதியாகிறது. வழக்கறிஞர் தொழிலுக்கு
இழிவைச் சேர்க்கும் வகையில் நடந்து கொண்ட பவானி சிங், செயலலிதா வழக்கில் அவருக்கு
எதிர்த்தரப்பு, அதாவது அரசுத் தரப்பு வழக்கறிஞராக செயலலிதா ஆட்சியால் அமர்த்தப்பட்டார்.
பவானிசிங்கும் செயலலிதா வகையறாக்களுக்கு தான்பட்ட நன்றிக் கடனை தீர்த்தார்.
தொடக்கத்திலேயே பவானிசிங்கை அரசுத் தரப்பு வழக்கறிஞராக தமிழக அரசு அமர்த்தியது
செல்லாது என்று வழக்குத் தொடுத்தவர்களில் ஒருவரான தி.மு.க. பொதுச் செயலாளர்
பேராசிரியர் அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட்டார். அவ்வழக்கை உடனடியாக
விசாரிக்காமல், உச்ச நீதிமன்றம் மிக அலட்சியமாக தள்ளித் தள்ளி போட்டது. கடைசியில், ஞாயம்
வழங்கியதுபோல் காட்டிக் கொள்வதற்காக நீதிபதிகள் மதன் பி. லோகூர், பானுமதி ஆகியோர்
அமர்வுக்கு அவ்வழக்கை தள்ளிவிட்டார் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தத்து.
இவ்வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞரை அமர்த்தும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை என்றும்
கீழ் நீதிமன்றத்தில் அவர் அரசுத் தரப்பு வழக்கறிஞராக செயல்பட்டதால் உயர் நீதிமன்ற மேல்
முறையீட்டிலும் புதிய அமர்த்த ஆணையில்லாமல் அவர் தானாகவே அரசுத் தரப்பு வழக்கறிஞர்
ஆகிவிடும் உரிமையில்லை என்றும், நீதிபதி லோகூர் தீர்ப்பெழுதினார். நீதிபதி பானுமதியோ
கீழ் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு வழக்கறிஞராக இருந்தவர், இயல்பாகவே மேல் முறையீட்டிலும்
அரசுத் தரப்பு வழக்கறிஞராக நீடிக்க உரிமையிருக்கிறது என்று தீர்ப்பு எழுதினார்.
இரு நீதிபதிகளும் வெவ்வேறு தீர்ப்பு எழுதியதால், அத்தீர்ப்புகள் செயலுக்கு வர வாய்ப்பில்லை.
எனவே, நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு இவ்வழக்கை
தத்து அனுப்பினார்.
மூன்று நீதிபதிகளும் ஒருமித்தத் தீர்ப்பு வழங்கினர். மாவட்ட நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு
வழக்கறிஞராக செயல்பட்டதினால் புதிய நியமன ஆணை இல்லாமல் தானாகவே பவானிசிங் உயர்
நீதிமன்ற மேல் முறையீட்டு வழக்கிலும் அரசுத் தரப்பு வழக்கறிஞராக வாதாட உரிமையில்லை
என்று மூன்று நீதிபதிகளும் தீர்ப்பளித்தனர். இவ்வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞரை அமர்த்தும்
அதிகாரம் கர்நாடக அரசுக்குத்தான் இருக்கிறதே தவிர, தமிழக அரசுக்கு இல்லை என்றும்
தீர்ப்பெழுதினர்.
அத்துடன், 24 மணி நேர அவகாசத்திற்குள் பேராசிரியர் அன்பழகனும் கர்நாடக அரசும் தங்கள்
தங்கள் வாதத்தை எழுத்து வடிவில் குமாரசாமி நீதிமன்றத்தில் அளிக்க வேண்டுமென்று
கட்டளையிட்டனர். பவானி சிங் வாதத்தைக் கணக்கிலெடுத்துக் கொள்ளாமல், புதிதாக அளிக்கப்படும்
இவ்விரு வாதங்களை கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டுமென்றும், கீழ் நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை
கணக்கிலெடுத்தக் கொள்ள வேண்டுமென்றும், ஊழல் என்பது சமூகத்தில் மிகப்பெரிய தீமை என்பதை
கவனத்தில் கொள்ள வேண்டுமென்றும் நீதிபதி குமராசாமிக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மூவரும்
அறிவுரையும் வழங்கியிருந்தனர்.
கர்நாடக அரசு புகழ் பெற்ற வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா அவர்களை இவ்வழக்கில் அரசுத் தரப்பு
வழக்கறிஞராக அமர்த்தியது. ஆச்சார்யாவும், பேராசிரியர் அன்பழகன் வழக்கறிஞரும் மறுநாளே
தங்கள் தங்கள் வாதங்களை எழுத்து வடிவில் நீதிபதி குமாரசாமியிடம் அளித்தனர்.
11.05.2015 அன்று காலை 11 மணிக்கு பெங்களுரு உயர் நீதிமன்றத்தில் இவ்வழக்கில் தீர்ப்பளித்த
நீதிபதி குமாரசாமி, செயலலிதா உள்ளிட்ட நால்வரையும் முற்றிலுமாக விடுதலை செய்தார்.
இத்தீர்ப்புக்கு, குமாரசாமி கூறிய காரணங்களில் மிக மிக முகாமையானது, தீர்மானகரமானது
செயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக சொல்லப்பட்ட குற்றச்சாட்டு
பொருந்தாது என்பதுதான்!
வங்கிகளில் வாங்கிய கடனை வருமானக் கணக்கில்தான் சேர்க்க வேண்டும் என்றும், செயலலிதா தமது
10 நிறுவனங்களின் பெயரில் வாங்கிய கடன் 24,17,31,274 ரூபாய் என்றும் இதில்
5,99,85,274 ரூபாய் கடன் திருப்பி செலுத்தப்பட்டுவிட்டது என்றும், மிச்சமுள்ள கடன்
18,17,46,000 ரூபாய் என்றும் குமாரசாமி கணக்கிட்டுள்ளார். நிலுவையிலுள்ள இந்தக் கடன்
18,17,46,000 ரூபாயை செயலலிதாவுக்கு நிலம் மற்றும் இதர வழிகளில் வந்த வருமானமான
16,59,19,654 ரூபாயுடன் சேர்த்து மொத்த வருமானம் 34,76,65,654 ரூபாய் என்று
கணக்கிட்டார். செயலலிதாவுக்குள்ள சொத்தின் மதிப்பு 37,59,02,466 ரூபாய். வருவாய்க்கு
அதிகமாக கணக்கில் வராமல் உள்ள தொகை ரூபாய் 2,82,36,812. அதாவது, வருமானத்தைவிட
8.12 விழுக்காட்டுத் தொகை அதிகம்.
ஏற்கெனவே உச்ச நீதிமன்றத் தீர்ப்பொன்று, வருமானத்தைவிட 10 விழுக்காடு வரை கணக்கில் வராதத்
தொகை இருக்கலாம் என்று கூறியுள்ளது. 10 விழுக்காட்டிற்கும் குறைவாகவே, செயலலிதாவின்
கணக்கில் வராத வருமானம் இருப்பதால் அது குற்றமல்ல என்றுகூறி, விடுதலை செய்துள்ளார்
குமாரசாமி.
தொண்டையில் சிக்கிக் கொண்ட கருவாட்டு முள்ளாக மாட்டிக் கொண்ட சிக்கல் குமாரசாமி போட்ட
கூட்டல் கணக்கில் ஏற்பட்ட பெருந்தவறாகும். தமது 10 நிறுவனங்களின் மூலம் செயலலிதா பெற்ற
கடன்களை தலைப்பு வாரியாகப் போட்ட குமாரசாமி அதன்கூட்டுத் தொகை ரூ. 24,17,31,274
என்று போட்டுள்ளார். ஆனால், நாம் வாய்மொழியாகக் கூட்டிப் பார்த்தாலும் கணிப்பான் வழியாகக்
கூட்டிப் பார்த்தாலும் மொத்த கடன் வருமானம் ரூ. 10,67,31,274 மட்டுமே.
உள்ள விவரப்படியான இந்த கடன் வருமானத்தை மற்ற வருமானத்தோடு சேர்த்துக் கூட்டினால்,
கணக்கில் வராத அதிகத் தொகை 16,32,36,812 ரூபாய். அதாவது இது, 76.75 விழுக்காடு
அதிகமாகும்.
10 விழுக்காடு விதிவிலக்கிற்கும் 76.75 விழுக்காட்டிற்கும் ஏணி வைத்தாலும் எட்டாது.
இந்த இரண்டு தொகைக்கும் இடையே குமாரசாமி தொங்கிக் கொண்டுள்ளார். தவறு செய்வோர், தங்களை
அறியாமல் சில தடயங்களை விட்டு செல்வர் என்பார்கள். அந்தப் பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.
1. வருமானத் தொகை குறித்த கூட்டல் கணக்கு தவறு.
2. பவானி சிங்கை நீக்கிய பிறகு, கர்நாடக அரசு அமர்த்தும் வழக்கறிஞரை வாய்மொழி வாதம்
செய்ய அனுமதிக்காதது இரண்டாவது தவறு.
3. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தத்து அவர்களின் செயல்பாடுகள் குறித்து நம்பிக்கைக்
குறைவு பரவலாக ஏற்பட்டுள்ளது. பவானி சிங்கை நீக்கிய மூன்று நீதிபதிகள் ஊழலுக்கு
எதிராக போட்ட கூச்சல் வெறும் நாடகம் தானா என்ற ஐயம் பலருக்கு ஏற்பட்டுள்ளது.
4. ஊழல் வழக்கில் செயலலிதா விடுதலை செய்யப்பட்டார் என்ற செய்தி வந்தவுடன் தலைமை அமைச்சர்
நரேந்திர மோடி, தமது மகிழ்ச்சியை செயலலிதாவுக்கு தொலைப்பேசி வழி தெரிவித்தது சில
ஐயப்பாடுகளை எழுப்புகிறது. இந்த ஐயத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில், முதலில்
வழக்குத் தொடுத்த சுப்பிரமணிய சாமி இவ்வழக்கை உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய
மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.
எனவே, கர்நாடக அரசு உடனடியாக செயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கை உச்ச நீதிமன்றத்தில்
மேல் முறையீடு செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றத்துக்கு எந்த இழுக்கும் வராத வகையில், சட்ட
நெறிகளைக் கடைபிடித்து இவ்வழக்கை விசாரிக்க, நேர்மை முத்திரை பதித்துள்ள நீதிபதிகளை
அமர்த்த வேண்டும்.
- பெ.மணியரசன், தலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்.

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
May 14, 2015, 12:07:44 PM5/14/15
to brail...@googlegroups.com
விண் இயல்
வித்தகர் மேகநாத் சாஹா
8
விவரங்கள்
எழுத்தாளர்: பி.தயாளன்
தாய்ப் பிரிவு: வரலாறு
பிரிவு: இந்தியா
C வெளியிடப்பட்டது: 14 மே 2015
தற்போதைய வங்காள நாட்டின டாக்கா மாவட்டத்தில் சியோரதாலி எனும்
கிராமத்தில் 1893 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 6 ஆம் நாள், ஜகநாத சாஹ – புவனேசுவரிதேவி
தம்பதியினரின் மகனாகப் பிறந்தார்.
தமது கிராமத்தில் ஆரம்பக் கல்வி பயின்றார். ஆனந்த குமாரதாஸ் என்ற
மருத்துவரின் உதவியால் நடுநிலைப்பள்ளியில் சேர்ந்து பயின்று முதல் மாணவராகத் தேர்ச்சி
பெற்றார். அரசு உதவித் தொகை அளித்தது.
டாக்கா கல்லூரிப் பள்ளியில் 1905 ஆம் ஆண்டு சேர்ந்து கல்வி பயின்று
கொண்டிருந்தார். அப்போது வங்கப் பிரிவினை ஏற்பட்ட காலம். நாடு முழுவதும் வங்கப்
பிரிவினைக்கு எதிரான போராட்டம் தீவிரமாக நடைபெற்று வந்தது. மேகநாத் சாஹா பயின்ற
பள்ளிக்கு வங்கப் பிரிவினைக்குக் காரணமான ஆளுநர் கர்சன் பிரபு வருகை புரிந்தார். அவரது
வருகையை பள்ளி மாணவர்கள் புறக்கணித்தனர். மேகநாத் சாஹாவும் மாணவர்களும் இணைந்து நின்று
ஆளுநரை புறக்கணித்ததால், அவருக்கு அரசு வழங்கி வந்த கல்வி உதவித் தொகையை
நிறுத்திவிட்டது. பள்ளியை விட்டு வெளியேறினார். அவரிடம் தாய் நாட்டுப் பற்று மேலோங்கி
நின்றது.
கிஷோரிலால் ஜீப்ளி கல்விக்கூடத்தில் சேர்ந்தார். கல்கத்தா பல்கலைக் கழக
நுழைவுத் தேர்வில் 1909 ஆம் ஆண்டு கிழக்கு வங்க மாணவர்களில் முதல் மாணவராகத் தேறினார்.
டாக்கா கல்லூரியில் இடைநிலை அறிவியல் தேர்வில் வேதியியலிலும், கணிதவியலிலும் முதல்
தகுதி பெற்றுத் தேர்ச்சியடைந்தார். மேலும், ஜெர்மன் மொழியிலும் தேர்ச்சி பெற்றார்.
பின்னர், கல்கத்தா பிரசிடென்சிக் கல்லூரியில் சேர்ந்து பயின்றார்.
பி.சி.ரே, ஜே.சி.போஸ், டி.என்.மல்லிக், சி.இ.குல்லிஸ் முதலிய புகழ்பெற்ற
பேராசிரியர்களிடம் கல்வி கற்கும் நல்வாய்ப்பைப் பெற்றார்.
கணிதவியலில் இளங்கலைச் சிறப்புப் பட்டம், பயன்பாட்டுக் கணிதவியலில்
முதுகலைப் பட்டம் பெற்றார். இந்தியப் பொருளாதாரப் பணித் தேர்வு எழுத விழைந்தார் சாஹா.
அரசு அதற்கு அனுமதி வழங்கவில்லை.
கல்கத்தா பல்கலைக் கழகத்தில் 1916 ஆம் ஆண்டு புதிதாகப் பல்கலைக் கழக
அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டது. அக்கல்லூரியில் கணிதவியல் துறையில் விரிவுரையாளராகச்
சேர்ந்தார். பின்னர் இயற்பியல் துறைக்கு மாற்றப்பட்டார்.
சாஹா, நீர்நிலைப்பு இயல், நிறமாலை அளவியல், வெப்ப இயங்கியல்
முதலிய தலைப்புகளில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தினார்.
செல்வி ஏக்னஸ் கிளார் என்பவர் எழுதிய, சூரியன் மற்றும் விண்மீன்கள்
குறித்து இரண்டு நூல்கள் சாஹாவின் கவனத்தை ஈர்த்தன. மேலும் பிளாங்க் நெர்னஸ்ட் எழுதிய
அறிவியல் நூல்களும் இவரது சிந்தனையைக் கூராக்கின. ஜன்ஸ்டின் பொது சார்பியல் கோட்பாட்டின்
நிரூபனத்தை, ஜெர்மன் மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார் சாஹா.
மின்காந்த கோட்பாடுகள் மீதான ஆய்வு முடிவுகள், ‘மேக்ஸ்வெல் தகைவுகள்’
எனும் கட்டுரையை 1917 ஆம் ஆண்டு ஃபிலாசிபிகல் மேகசின்’ என்ற அறிவியல் இதழில் வெளியிட்டார்.
விண் இயற்பியலில், “தனிப் பாங்கான கதிர்வீச்சு அழுத்தம்” குறித்த
இவரது ஆராய்ச்சியைப் பாராட்டி கல்கத்தா பல்கலைக் கழகம் முனைவர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.
சாதாரண நெருப்பில் சோடியம் பொலிவுடனும், சூரிய ஒளியில் இருண்டும்
வெளிப்படுவதேன்? “உண்மையில், எரியும் நெருப்பில் சோடியம் தன் கிளர்ந்த நிலையிலிருந்து
தாழ்ந்த ஆற்றல் தளத்திற்குக் கீழே விழும்போது தனக்கே உரிய ஆற்றலை உமிழ்கின்றது. அதனால்
கோடு பொலிந்து காணப்படுகிறது. அதே வேளையில் சூரியனில் இந்த சோடியம் அவை தனக்கே
உரித்தான சூரிய ஆற்றலை உறிஞ்சி புறச் சுற்று வட்டாரத்தில் உள் எலக்ட்ரானை உதறிவிட்டு
அயனியாக நிலைத்திருப்பதாயின் நிறமாலையில் இருண்ட கருப்புக் கோடு அல்லது வெற்றிடம் தான்
பதிவாகும்.” - இதுதான் ‘சாஹா சமன்பாடு’ ஆகும். இவர் வெளியிட்ட, ‘கோட்பாட்டியல்
நோக்கில் விண் இயற்பியல்’ எனும் நூலின் முன்னுரையில், “இத்துறை முன்னோடியாக போர் (Bohr)
கருதப்பட்டாலும், அணுக்கோட்பாட்டியல் அடிப்படையில் விண்மீன் நிறமாலையினை விளக்க முற்பட்ட
‘மேகநாத் சாஹா’ எனும் இந்திய இயற்பியலாலர் குறிப்பிடத்தக்கவர்” என்று எஸ்.ரோஸ்லாண்ட் எனும்
அறிஞர் குறிப்பிட்டுள்ளார்.
சாஹா, கல்கத்தா பல்கலைக் கழகம் 1919 ஆம் ஆண்டு வழங்கிய ‘பிரேசந்த்’
ராய்சந்தி உதவித் தொகை’ மூலம் அய்ரோப்பா சென்றார். லண்டனில் இரண்டு ஆண்டுகள் ஆராய்ச்சியில்
ஈடுபட்டார். தாயகத்திற்கு 1921 ஆம் ஆண்டு திரும்பினார். கல்கத்தா பல்கலைக் கழகத்தின்
இயற்பியல் துறையில் ‘கெய்ரா’ பேராசிரியராகச் சேர்ந்தார். (கெய்ராவைச் சேர்ந்த குமார்
குருப்பிரசாத் சிங் பெயரிலான சிறப்பு இருக்கை அது)
தமது முப்பதாவது வயதில் அலகாபாத் பல்கலைக் கழகத்தில் 1923 ஆம்
ஆண்டு, இயற்பியல் துறைத் தலைவராகப் பொறுப்பேற்றார். பதினைந்து ஆண்டுகள் இப்பணியில் நீடித்தார்.
கல்கத்தா, இந்திய அறிவியல் பேரவைச் சங்கத்தின் இயற்பியல் கணிதத்துறைக்
கருத்தரங்கம் 1926 ஆம் ஆண்டு நடைபெற்றது. அக்கருத்தரங்கிற்குத் தலைமை வகித்துச் சிறப்பித்தார்.
சாஹா இலண்டன் அரசவைக் கழகச் சான்றோனாக (F.R.S.) வும் 1927 ஆம்
ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய அரசும் இவரது ஆராய்ச்சிப் பணிக்கு உதவித் தொகை
வழங்கியது.
சாஹா, ஜெர்மனி, இங்கிலாந்து, லாகூர் போன்ற பல இடங்களுக்கு
அறிவியல் பயணம் புரிந்தார்.
கல்கத்தா பல்கலைக் கழகத்தின் இயற்பியல் துறை ‘பாலிட்‘ பேராசிரியராக
1938 ஆம் ஆண்டு பதவி ஏற்றார். கல்கத்தா நகரில் இயங்கிவந்தார். ‘இந்திய அறிவியல் வளர்ச்சி
சங்கத்தின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சாஹா பெரும்பாடுபட்டார். இச்சங்கத்தின்
இயக்குநராகவும் செயல்பட்டார்.
அலகாபாத் ‘தேசிய அறிவியல் கழகத்தின்’ முதல் தலைவராகவும், ‘தேசிய
அறிவியல் நிறுவனத்தின்’ இரண்டாவது தலைவராகவும் விளங்கினார் சாஹா’
மேனாள் குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் 1948
ஆம்ஆண்டு நியமித்த, இந்திய அரசின் பல்கலைக் கழகக் கல்விக் குழு உறுப்பினராகவும், ‘இந்திய
அறிவியல் செய்திச் சங்கத்தின் வெளியீடான, ‘அறிவியலும் கலாச்சாரமும்’ எனும் திங்களிதழின்
கட்டுரையாளராகவும், தேசியத் திட்டக்குழு உறுப்பினராகவும் மேகநாத் சாஹா விளங்கினார்.
சோவியத் அறிவியல் கழகத்தின் 220-வது ஆண்டு விழாவில் இந்திய
பிரதிநிதியாக ரஷ்யாவிற்குச் சென்று கலந்துகொண்டார்.
கல்கத்தா வடமேற்குத் தொகுதியிலிருந்து 1951 ஆம் ஆண்டு பாராளுமன்ற
உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்திய விண்இயற்பியல் அறிவியலாளரான மேகநாத் சாஹா 16.02.1956 ஆம்
நாள் இயற்கை எய்தினார். அவர் மறைந்தாலும், அவரது பெயர் இந்திய அறிவியல் வரலாற்றில்
நிலைத்து நிற்கும்!

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
May 14, 2015, 12:17:07 PM5/14/15
to brail...@googlegroups.com
இன்பாக்ஸ்
8
விவரங்கள்
எழுத்தாளர்: ஸ்ரீரங்கம் மாதவன்
தாய்ப் பிரிவு: சமூகம் - இலக்கியம்
பிரிவு: சிறுகதைகள்
C வெளியிடப்பட்டது: 13 மே 2015
'நிழலாய் தொடர்வேன்' அப்டின்னு ஒரு வித்தியாசமான நேம்ல பிரண்ட். ரிக்வெஸ்ட் வந்துச்சு.
கன்பார்மா ஃபேக் ஐடிதான்.
lady ghost
உள்ள போய் பாத்தா புல்லா நேச்சர் ஸ்டில்ஸா இருந்திச்சி. ஜென்டர் பொண்ணுதான்.
வழக்கம்போல லைட்டா செக் பண்ணி 'வில்லங்கம்' எதுவும்.இல்லன்னு அக்சப்ட் பண்ணேன்.
அப்பயிருந்து ஒரே லைக் மழைதான். எண்ணெய் வழியற என் புரொபைல் போட்டாவுக்கும் கசாமுசா
கவர்போட்டாவுக்கும் எனக்கே வெளங்காத என் இத்துப்போன போஸ்ட்டுகளுக்கும்.தேடித்தேடிவந்து லைக்
போட்டுட்டு போவா.
சூப்பர் பிரமாதம் பின்னீட்டிங்க என கமென்ட்கள் வேறு.
கொஞ்சநாள்லயே அவ நேம் எனக்கு நல்லா மைன்ட்ல ரிஜிஸ்ட்ராயிடுச்சி. எந்த போஸ்ட் போட்டாலும் அவ
லைக் போட்டுட்டாளான்னு பார்க்க ஆரம்பிச்சேன்.
எத்தனைvபேர் பாராட்டி கமென்ட் பண்ணாலும் அவ வந்து கமென்ட் பண்ண மாட்டாளான்னு ஏங்க ஆரம்பிச்சேன்.
அவளை இம்ப்ரஸ் பண்றதுக்காகவே கன்னாப்பின்னான்னு மண்டையச் சொறிஞ்சி புண்ணாக்கி கவிதை
கண்ராவியெல்லாம் போஸ்ட் பண்ண ஆரம்பிச்சேன்.
திடீர்னு சிலசமயம் டியாக்டிவேட் பண்ணிட்டு காணாம போயிருவா.
அவ பேரைப்போட்டு சர்ச் பண்ணி சர்ச் பண்ணி தவியாத் தவிப்பேன்.
அப்பத்தான் ஒருநாள் இன்பாக்ஸுக்கு வந்து 'ஹாய்' அப்டீன்னா.
பொதுவா எனக்கு சேட்டிங்கே புடிக்காது. அதிகம்போனா நாலு கான்வர்சேசன். அவ்ளவுதான்.
என் ஒய்புக்கு எம்மேல இருக்கிற ஒருகோடி பிராதுல இதுவும் ஒன்னு. நா அவகூட சாட்
பண்றதில்லைன்னு.
அட ஆமாங்க எனக்கு கல்யாணமாயிருச்சி. ஸோ வாட். உங்க நியாயதர்மத்தை எல்லாம் ஓரமாவச்சிட்டு
கதையக் கேளுங்க. இல்லாட்டி பேக் பட்டன் அமுக்கி வெளிய போயிருங்க.
ஆச்சா ? அவ சாட்டுக்கு வரவும் எனக்கு கையும் ஓடல காலும் ஓடல. ரொம்ப வருஷமாச்சு.
இதுமாதிரி பீல் பண்ணி. ட்வெல்த் படிக்கிறப்ப பிரியாகிட்ட பீல் பண்ணது, காலேஜ் பர்ஸ்ட் இயர்ல
சரண்யாகிட்ட பீல் பண்ணது.
அட போங்கய்யா. இன்னும் வெளக்கமா வேற சொல்லனுமா.
எனக்கு அவளை ரொம்ப புடிச்சிருச்சி. ஒருமாதிரி லவ்வுக்கு முன்னாடி ஸ்டேஜின்னு
வச்சிக்கங்களேன்.
நானும் ஹாய் சொன்னேன். அப்பறம் நார்மலான நலம் விசாரிப்பெல்லாம் முடிஞ்சு. நாந்தான் கேட்டேன்.
உங்க ஜென்டர்ல பொண்ணுன்னு இருக்கு. உண்மையில நீங்க பொண்ணுதானான்னு நா எப்டி நம்பறது ? என்
நம்பருக்கு போன் பண்ணி பேசுங்க இல்லாட்டி இந்த சாட்லாம் வேணா. எப்பவும் போல லைக்
கமெண்ட்டோட நிப்பாட்டிக்குவம். அப்டி இப்டின்னு பிட்டுகளை அள்ளிவுட்டேன்.
கொஞ்சநேரம் ஸைலன்ட்டா இருந்துச்சி.
அப்பறமா, நிஜமா நா பொண்ணுதான். பசங்க டார்ச்சருக்கு பயந்துகிட்டுதான் ஃபேக் ஐடில
இருக்கேன். ப்ளீஸ் என்னை நம்புங்க அப்படீன்னா.
அப்ப எங்கிட்ட மட்டும் ஏன் உண்மைய சொல்ற ? என்னயிருந்தாலும் நா ஒரு ஆம்பளைதானேன்னு கேட்டேன்.
இல்ல நீங்க வேறன்னு சொன்னா.
வேறன்னா ? அப்டீன்னேன் உள்ளுக்குள்ள ஒரே குஜால் கும்மாளம்.
வேறன்னா வேறதான்னா.
நா ஒருமைக்கி தாவிட்டேன். ப்ளீஸ் ப்ளீஸ் சொல்லு. அப்டின்னா என்ன அர்த்தம் ?
அப்டீன்னா அப்டீன்னா அப்டித்தான்.
எனக்கு டவுட்டு தீரல. சரி அப்ப உன் நம்பர் சொல்லு. கால் பண்றேன்னேன்.
அவ தயங்கிட்டு, சரி தரேன். பட் இப்ப வேணாம். டாடி மம்மிலாம் இருக்காங்க. சன்டே பேசலாம்னா.
அது போதுமேன்னு நெனச்சிக்கிட்டேன். நா உமனைசர்லாம் இல்லங்க. ஒரு பொண்ணை இம்ப்ரஸ் பண்ண
நெனைக்கிற, அவளோட ஜாலியா பழக நெனைக்கிற சாதாரணமான ஒரு ஆண்.
எப்ப வரும்னு பரபரப்பா காத்திருந்தேன். அந்த சன்டேயும் வந்துச்சி. அவ சொன்ன ஐடியாப்படியே
அவ குடுத்த நம்பருக்கு, காலைல பத்துமணிக்கி ஒருவாட்டி மிஸ்கால் குடுத்தேன்.
ஒடனே கால் வந்துச்சி. அட்டன்ட் பண்ணி ஹாய் சொன்னேன்.
செம்ம பீமேல் வாய்ஸ்ல 'எஸ் யார் வேணும்' ன்னு கேட்டுச்சி.
நா ரகசியமா எம்பேரைச் சொல்லி தெரியலியான்னு கேட்டேன்.
அவ என்ன சொன்னான்னு நீங்க நெனைக்கிறீங்க?
அப்டிலாம் எனக்கு யாரையும் தெரியாதுன்னு சொல்லி பட்டுன்னு போனைக் கட் பண்ணிட்டா.
எனக்கு டென்சன்ல கையெல்லாம் நடுங்குது. வேர்த்துக் கொட்டுது.
சனியன் புடிச்சவ ஒரிஜினல் பேர் கேட்டதுக்கு நாம நேர்ல மீட் பண்றப்ப சொல்றேன்னாளே. நாமளா
போயி வழிஞ்சோம்.
ஈத்தரை தானாத்தானே வலிய வந்துச்சி. இனிமேப்பட்டு இன்பாக்ஸ் வரட்டும் வச்சிக்கிறேன்னு, என்
கடுப்பையெல்லாம் அடக்கிக்கிட்டு கெடக்கேன்.
அன்னிக்கி ராத்திரியே இன்பாக்ஸுக்கு வந்தா. கோவமான்னு கேட்டா. நான் என்ன சொல்லிருப்பேன்னு
சொல்லுங்க. ரொம்பக் கோவமா ரிப்ளையே பண்ணாம, இருக்கனும்னுதான் நெனச்சேன். பட் பாழாப்போற
மனசு கேக்கல.
ஏன் போன்ல எங்கிட்ட தெரியாத மாதிரி பேசி இன்ஸல்ட் பண்ண ? ஒன் கொரலை கேக்கனும்னு எவ்ளோ
ஆசையாயிருந்தேன். இப்டி ஏமாத்திட்டியேன்னு பொலம்பி அவ இன்பாக்ஸை ஈரமாக்கினேன்.
அதுக்கு அவ செல்லமா கொஞ்சலா வார்த்தையெல்லாம் யூஸ் பண்ணி 'இல்லப்பா. வீட்ல எல்லாரும்
இருந்தாங்க. ஏற்கனவே சண்டை. அதான் பேசமுடியல.. ப்ளீஸ் கோவிச்சிக்காதடா' ன்னா.
அந்த 'டா' வுல எவனாயிருந்தாலும் கரைஞ்சுதான் போவான். நானும் கரைஞ்சேன்.
அதுக்கப்பறம் நாங்க ரொம்ப நெருக்கமாயிட்டோம். எங்க இன்பாக்ஸ் புல்லா காதலும் முத்தமும்
பொங்கிவழிஞ்சுது. எனக்கிருந்த ஒரே கொறை, எப்ப போன்ல பேசனும்னு சொன்னாலும், எதாச்சும்
சாக்குசொல்லி தட்டிக்கழிச்சா.
என்னதான் காதல்போதைல தலைகுப்புற கெடந்தாலும். எனக்குள்ள ஒரு வண்டு கிர்ர்ர்ர்ர்ர்ருன்னு
சந்தேகமா கத்துச்சி. இந்தப் பக்கம் லவ்விகிட்டே அந்தப்பக்கம் அவளைப் பத்தி துப்பறிய ஆரம்பிச்சேன்.
அவ குடுத்த செல்நம்பரை பிரண்டு மூலம் ட்ரேஸ் பண்ணி, அட்ரஸ் பேர்லாம் கண்டுபுடிச்சேன். பேரு
'வெண்பா'. சொல்றப்பவே காதுல கவிதை வழியுதுல்ல ?
அட்ரஸ் நா இருக்கிற ஊர்லருந்து 100 கிமீ தள்ளி இருந்துச்சி.
அவளுக்கே தெரியாம அவளை பாக்கனும்னு துடிச்சேன். அந்த வீக் என்ட்லயே அபீஷியல் ட்ரிப்புன்னு
வீட்ல பொய் சொல்லி அவளைத்தேடி போனேன்.
அவ வீட்டைக் கண்டுபுடிச்சேன். பட் என்ன சொல்லி உள்ள போறதுன்னு கொழம்பிட்ருந்தப்பதான், அவ
வீட்டு மாடில டூலெட்னு தெரிஞ்சது. சரி வீடுபாக்கற மாதிரி போய் நோட்டம் போடலாம்னு
கேட்டைத் தட்டினேன்.
நடுவாந்தரமா ஒரு அம்மா வெளிய வந்துச்சி. அவ அம்மாவாயிருக்கும்போல.
மெல்ல, வீடு காலின்னு பாத்தேன். உள்ள வரலாங்களான்னு பவ்யமா கேட்டதும், உள்ள கூப்டாங்க.
நொழைஞ்சதும் முன்னாடியே சிட்டவுட் சேர்ல உக்காரச் சொல்லி குடிக்க தண்ணி குடுத்தாங்க.
என்னைப்பத்தி புல்லா விசாரிச்சாங்க. எல்லாம் சொல்லிட்ருந்தப்பதான், வீட்டுக்குள்ளருந்து அந்தப்
பொண்ணு வந்துச்சி. அவளாயிருக்குமோன்னு ஒரு செகன்ட் நெனச்சேன்.
அவதான் பேஸ்புக்ல என் போட்டோல்லாம் பாத்துருக்காளே. பட் இந்தப் பொண்ணு என்னைப் பாத்த
பார்வையிலயே தெரிஞ்சிருச்சி. இது அவ இல்லைன்னு.
என்னடா இதுன்னு யோசிச்சிட்ருக்கேன். வாங்க மாடிக்கிபோயி வீட்டைப் பாக்கலாம்னு
கூப்பிடுறாங்க.. மாடியேறி கதவைத் தொறந்தப்பறம் உள்ள நொழைஞ்சதும் மனசு ஹேஹேய்
ஹூர்ர்ர்ர்ர்ர்ரேன்னு சந்தோசத்துல கூத்தாடுறதை கஷ்டப்பட்டு கன்ட்ரோல் பண்ணிக்கிட்டேன்.
ஏன்னா அவ டைம்லைன்ல இருக்கிற அத்தனை நேச்சர் ஸ்டில்ஸும் அங்க சொவத்துல போட்டோவா
தொங்கிட்ருக்கு. கரக்டாதான் வந்துருக்கேன்னு தோணுச்சி.
மெல்ல அவங்ககிட்ட, "இந்த போட்டோஸ்லாம் நல்லாருக்கேங்க எங்க வாங்கினதுங்க"ன்னு கேட்டேன்.
அம்மாவும் மகளும் ஒருத்தரை ஒருத்தர் பாத்துகிட்டாங்க.
அந்த பொண்ணுதான் சொல்லுச்சி. "இதெல்லாம் எங்க அக்கா எடுத்த போட்டோங்க"..
"ஒ அப்டீங்களா ? அவங்ககிட்ட நல்ல திறமையிருக்குங்க. பாத்துக்கங்க. எங்க அவங்க இல்லிங்களா" ?
அந்தம்மா கொஞ்சம் அழுதுக்கிட்டே சொன்னாங்க. "அவ ஒரு வருசம் முந்தி செத்துப்போயிட்டா".
எனக்கு டார்ச்சாயிருச்சி. ஒரே கொழப்பம் பயம் டென்சன். "அய்யோ என்னாச்சிங்க" ன்னு கேட்டேன்.
"நல்லாதாங்க இருந்தா. உங்க மாதிரிதான். ஐடி கம்பெனில வேல பார்த்துட்ருந்தா. பேஸ்புக்ல
எவனையோ லவ் பண்ணிருக்கா. கடைசில அந்த பாவிப்பய ஏற்கனவே கல்யாணமாயி கொழந்தையெல்லாம்
இருந்திருக்குன்னு தெரிஞ்சதும்"...
பாவம் சூஸைட் போல.. அவங்களால பேசமுடியாம கதறியழுதாங்க. எனக்கு என்ன பண்றதுன்னே
தெரியல. அப்ப அவ யாரு? எதுக்கு இந்த செல்நம்பர் குடுத்தா?
கெளம்பறப்ப அந்த பொண்ணு குடுத்த கான்டாக்ட் நம்பரும், அவ குடுத்த நம்பரும் ஒண்ணுதான். நல்ல
பேன்ஸி நம்பர்னு நா சொன்னதும், இது எங்கக்கா யூஸ் பண்ணிட்ருந்ததுன்னு விரக்தியா சொல்லிச்சி.
எனக்கு உள்ளுக்குள்ள கொலநடுக்கம். ஏதோ பெரிய சதிவலைல மாட்டிகிட்டனோன்னு பீதியாவுது.
அப்ப அவகிட்டருந்து மெஸெஜ் வருது.
"கோவமா"?
நா அல்லுகலங்கிப் போயி அர்ஜன்ட்டா அவ ஐடியை பிளாக் பண்ணிட்டேன். அஞ்சு நிமிஷம் கழிச்சி,
பிளாக் பண்ண அந்த ஐடிலயிருந்து மறுபடி வந்த மெசெஜ்ல இப்டி இருந்துச்சி.
"u never stop me
come to inbox”
- ஸ்ரீரங்கம் மாதவன்

"கெ. குமார், உதவிப் பேராசிரியர் "

unread,
May 15, 2015, 12:40:24 PM5/15/15
to brail...@googlegroups.com
a 8
விவரங்கள்
எழுத்தாளர்: யாக்கன்
தாய்ப் பிரிவு: தலித் முரசு
பிரிவு: பிப்ரவரி07
C வெளியிடப்பட்டது: 03 மே 2010
ஒரு ஜனநாயக அமைப்பில் நீதித் துறைக்கு கிடைத்திருக்கும் சுதந்திரமும் தனித்துவமுமே,
அவ்வமைப்பின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் என்பார் பாபாசாகேப் அம்பேத்கர். இயல்பான ஒரு
ஜனநாயக அமைப்பில், சட்டமியற்றும் நிறுவனங்களாலும், நிர்வாக எந்திரத்தாலும்
குடிமக்களுக்கு இழைக்கப்படும் கேடுகளைக் கண்டறிந்து, அரசமைப்புச் சட்ட வழிகாட்டலின்படி
நிவர்த்தி செய்ய வேண்டிய முக்கியக் கடமையாற்றுகிறது நீதித்துறை. இந்திய ஜனநாயக
அமைப்பிலும்கூட வேறு எவற்றையும்விட நீதித்துறை, வலுவானதாகவும் தற்சார்புடையதாகவும்
உருவாக்கப்பட்டிருக்கிறது. அரசின் கருவியாகவே செயல்படுகின்ற போதிலும், நால்வர்ண இந்து
பண்பாட்டில் பல்லாயிரம் சாதிகளாய் சிதறிக் கிடக்கும் நூறுகோடி இந்திய மக்களின் அனைத்துச்
சமூகப் பிரச்சனைகளுக்கும், அரசியல் சிக்கல்களுக்கும், மக்களின் குற்ற நடவடிக்கைகளுக்கும்
நீதி வழங்கும் மிகப் பெரும் பணியைச் செய்து கொண்டிருக்கிறது நீதித்துறை.
Ambedkar
தேசத்தின் எல்லைக்குட்பட்ட வான், நீர், நிலம், காற்று அவற்றில் வாழும் அனைத்து உயிரினங்களின்
மீதும் தீர்ப்பளிக்கிற இணையற்ற அதிகாரத்தை, நீதி அமைப்பு பெற்றிருப்பதற்கான காரணம்,
பாகுபாட்டுணர்வு எதுவுமற்ற மாசற்ற நீதியின் அதிகாரத்தை அது நிலைநிறுத்தும் என்ற
நம்பிக்கைதான். நமது அரசமைப்புச் சட்டத்தின் கர்த்தாக்கள், நீதித்துறையை உருவாக்குங்கால்,
அதன் அதிகார மய்யங்களில் வந்தமரப்போகும் இந்தியர்களைப்பற்றியும் உயர்வான மதிப்பீடு
கொண்டிருந்தார்கள். முன்னுதாரணம் எதுவுமற்ற அந்த முடிவின் விளைவுகள், அய்ம்பதாண்டு
காலத்திற்குப் பிறகு வெளிப்படத் தொடங்கியுள்ளன. மீப்பெரு வட்டமாய் நெளிந்து கொண்டிருக்கும்
நாடாளுமன்றப் பாம்பின் தலையை, கரடுபட்ட தனது நீள் அலகால் கொத்தத் தொடங்கிவிட்டது நீதிக்
கழுகு.
வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறும் மக்கள் பிரதிநிதிகளின் அதிகாரம், வருங்காலத்தில் மணல்
கயிறாய் கலைந்து போகும் என்று சோதிடம் பேசுகிறார், உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர்.
இயற்றப்படவிருக்கும் சட்டங்களின் மீதும் தீர்ப்பெழுதும் அதிகாரம் எமக்குண்டு என்கிறார் மற்றொரு
உச்ச நீதிமன்ற நீதிபதி. பாம்பிற்கும் கழுகிற்குமான விரோதம் தொடங்கியது, இன்றோ நேற்றோ
அல்ல. 1950 இல் இந்தியா தன்னை ‘குடியரசு' என அறிவித்துக் கொண்டு இயங்கத் தொடங்கிய
போதே அது தொடங்கிவிட்டது.
சுதந்திர இந்தியாவில் தனி ஆட்சி அதிகாரம் செலுத்திய கடைசிக்கால ஜமீன்தார்களின் அனைத்து
சிறப்பு உரிமைகளையும் குடியரசு இந்தியாவின் அரசமைப்புச் சட்டம் பிரிவு 31(2) ரத்து
செய்தது. அதை எதிர்த்து பீகார், அலகாபாத் உயர் நீதிமன்றங்கள் அளித்த வெவ்வேறு தீர்ப்புகளின்
அடிப்படையில், நிலச் சீர்த்திருத்த சட்டங்களை நீதிமன்ற விசாரணை அதிகாரத்திலிருந்து
விலக்கி வைக்க நேரு அமைச்சரவை முடிவு செய்தது. அப்போது சட்ட அமைச்சராக இருந்த
பேரறிஞர் அம்பேத்கரின் வழி காட்டலின்படி, பிரதமராக இருந்த நேரு 1951 இல் இந்திய
அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தார். அச்சட்டத் திருத்தத்தின் மூலம், இந்திய
அரசமைப்புச் சட்டத்தில் ஒரு புதிய சட்டப் பிரிவு சேர்க்கப்பட்டது. அதற்கு ஒன்பதாவது
அட்டவணை என்று பெயரிடப்பட்டது.
அடிப்படை உரிமைகளை வழங்கும் சட்டப் பிரிவுகள் 14, 19, 20 மற்றும் 21 இன் அடிப்படையில்,
ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்படும் சட்டங்களை விசாரணைக்கு உட்படுத்தாமலிருக்க,
நீதிமன்றங்களிடமிருந்து காப்பாற்ற 31 ‘பி' என்ற பிரிவுடன், ஒன்பதாவது அட்டவணை
உருவாக்கப்பட்டது. மன்னர் மானிய முறை ஒழிப்பு, ஜமீன்தாரி முறை ஒழிப்பு, வரம்பற்ற
நிலவுடைமை ஒழிப்பு ஆகியவற்றை நடைமுறைப்படுத்த உருவாக்கப்பட்ட சட்டங்கள், ஒன்பதாவது
அட்டவணையில் சேர்க்கப்பட்டன. ஒன்பதாவது அட்டவணையில் இன்றுவரை மொத்தம் 284 சட்டங்கள்
சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றில் 281 சட்டங்கள் நிலச்சீர்திருத்தம் தொடர்பானவை. 69 சதவிகித
இடஒதுக்கீட்டை வழங்கும் தமிழ் நாடு அரசின் 1993 ஆம் ஆண்டு சட்டம், ஒன்பதாவது அட்டவணையின்
‘31 சி' பிரிவில் 257 ஆவது சட்டமாக சேர்க்கப்பட்டுள்ளது.
தற்பொழுது, ஒன்பதாவது அட்டவணையில், உச்ச நீதிமன்றம் கை வைத்திருப்பது, இந்திய
ஜனநாயகத்திற்கு நெருக்கடியை உருவாக்கியிருக்கிறது. சனவரி 11 அன்று, உச்ச நீதிமன்றத்
தலைமை நீதிபதி ஒய்.கே. சபர்வால் தலைமையில் ஒன்பது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய
அரசமைப்புச் சட்ட அமர்வு, ஏப்ரல் 24, 1973க்குப் பிறகு, ஒன்பதாவது அட்டவணையில்
சேர்க்கப்பட்டிருக்கும் சட்டங்கள், தனி மனித அடிப்படை உரிமைகளை வழங்கும் பிரிவுகளுக்கு
எதிராக இருக்குமானால், அவற்றை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் என
அறிவித்திருக்கிறது. காரணம், ஒன்பதாவது அட்டவணையில், முரண்பாடுகளைக் கொண்ட சட்டங்கள்
சேர்க்கப்பட்டிருப்பதாகக் குற்றம் சுமத்தும் உச்ச நீதிமன்றத்தின் கழுகுப் பார்வை, தமிழக
அரசின் 69 சதவிகித இடஒதுக்கீட்டு சட்டத்தின் மீதுதான் குத்திட்டு நிற்கிறது.
‘50 சதவிகிதத்திற்கு மேல் இடஒதுக்கீடு இருக்கக் கூடாது' என எந்தவித சட்ட ஆதாரமும்,
வழிகாட்டுதலுமின்றி எதேச்சதிகாரமாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த கட்டளைக்கு எதிராக, 69
சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கி வரும் இடஒதுக்கீட்டுச் சட்டத்திற்கு, விளக்கம் கேட்டு
அறிவிக்கை அனுப்பியிருக்கிறது உச்ச நீதிமன்றம். ஒன்பதாவது அட்டவணையை விசாரிக்கத்
துணிந்த பின், அது அனுப்பிய முதல் விசாரணை அறிவிக்கை அது. இடஒதுக்கீடுகள் மீது உச்ச
நீதிமன்றம் காட்டிவரும் காய்மையை அதன் பல்வேறு தீர்ப்புகளில் நாம் காண முடியும். ஆனால்,
இடஒதுக்கீட்டை குறிவைத்து ஒன்பதாவது அட்டவணைக்குள் நுழைந்திருக்கும் உச்ச நீதிமன்ற
நீதிபதிகள், அரசமைப்புச் சட்டத்தின் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் தங்களுக்கானதாக மாற்றிக்
கொள்ள முனைந்திருக்கிறார்கள் என்பதை நாம் குறிப்பிட்டறிந்து கொள்ள வேண்டும்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகளிடம் உருவாகியிருக்கும் இந்த பேராதிக்கச் சிந்தனை, ஜனநாயகத்தின்
அடிப்படையான கருதுகோள்களை மிரளச் செய்திருக்கிறது. சட்டங்களை சட்ட அவைகளில்
விவாதத்திற்கு வைக்கும் முன்பு, உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று உச்ச
நீதிமன்ற நீதிபதிகள் விரும்புகிறார்கள். இயற்றப்பட்ட சட்டங்களின்படி செயலாற்ற வேண்டிய
நீதிபதிகள், இயற்றப்படவிருக்கும் சட்டங்களை விசாரித்துத் தீர்ப்பெழுதும் அதிகாரம் வேண்டும்
என எண்ணுவது வேடிக்கையானது!
பிரதிநிதித்துவ மக்களாட்சியில், அரசமைப்புச் சட்டத்தின் முதல் மதிப்பைப் பெறுபவர்கள் மக்கள்
பிரதிநிதிகள்தாம்; உச்ச நீதிமன்ற நீதிபதிகளல்ல. முதல் மதிப்பைப் பெறும் இடம்
நாடாளுமன்றம்தான்; உச்ச நீதிமன்றம் அல்ல. முதல் அதிகாரமும் மக்கள் பிரதிநிதிகளுக்குத்தான்.
இந்திய அரசமைப்புச் சட்டம், நாடாளுமன்றத்திற்கு அளிக்கும் அதிகாரத்தைத் தடுத்து
நிறுத்துவதற்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு எந்த அரசமைப்புச் சட்டப் பிரிவும்
ஆதரவளிக்கவில்லை. ஆனால், நாட்டின் ஒரே ஒரு அதிகார மய்யமாக உச்ச நீதிமன்றத்தை உருவாக்க
முயலும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் செயல்பாடுகள், இந்திய மக்களாட்சியில் பெரும் கேடுகளை
மட்டுமே உருவாக்கப் போகின்றன. வழக்கு - விசாரணை தீர்ப்பு ஆகியவற்றின் மூலம் ஒருபோதும்
மக்களிடையே ஜனநாயக உணர்வுகளை உருவாக்க முடியாது.
உச்ச நீதிமன்றத்தின் அண்மைக்கால அரசமைப்புச் சட்ட அமர்வுகளின் தீர்ப்புகள், நாடாளுமன்றத்தின்
மீதும், ஆட்சியாளர்கள் மீதும் நீதித்துறைக்கு ஏற்பட்டிருக்கும் நம்பிக்கையின்மையின்
வெளிப்பாடுகளே! அரசையும் அதன் அதிகாரத்தையும் பயன்படுத்தி, ஆட்சியாளர்களின்
சுயநலன்களுக்காகப் புதிய சட்டத்தையே உருவாக்கிய வெட்கக்கேடான வரலாறுகள், இந்திய
நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றங்களுக்கும் உண்டு.
நாட்டின் அய்ம்பதாண்டுகால ஜனநாயகம், வெறும் தேர்தல் நடைமுறைகளாகவே அறியப்பட்டுள்ளதால்,
சாதியத்தால் பிளவுண்ட மக்களிடையே ஜனநாயக உணர்வுகளை உருவாக்குவதில் மிகப்பெரும்
பின்டைவைச் சந்தித்திருக்கிறது. அரசியலில் நீண்ட காலமாக அங்கீகரிக்கப்பட்ட சாதியமே, இன்று
கிரிமினல் உளவியலாகப் பரிணமித்திருக்கிறது. இந்திய ஜனநாயகத்தின் வேர்களில் நீர்விட உச்ச
நீதிமன்றம் விழையுமேயானால், ஏற்றத்தாழ்வுகளாலும், ஒடுக்குமுறைகளாலும் பகைமை
உணர்வுகளாலும் தகித்துக் கொண்டிருக்கும் சமூகங்களின் மீது அது கவனம் கொள்ள வேண்டும்.
சாதியத் தீங்கோடு பன்னாட்டுப் பெருவணிக நிறுவனங்களின் அச்சுறுத்தலும் சேர்ந்து, மக்களைச்
சிதறடித்துக் கொண்டிருக்கின்றன. எனவே, நாட்டில் நிலவிக் கொண்டிருக்கும் சமூகப்
பதற்றத்திலிருந்து மக்களை விடுவிக்கத் துணியாத வரை, சட்டமியற்றும் அவைகளில் நிரம்பி
வழியும் ஊழல் மலிந்த மனிதர்களிடமிருந்து - நாட்டின் எதிர்காலத்தை மீட்க, உச்ச நீதிமன்றம்
நடத்தும் போராட்டங்கள் எதிர்மறை விளைவுகளையே உருவாக்கும்.
அதே நேரத்தில், நீதித்துறை தன்னளவில் ஒரு ஜனநாயக முனைப் போடு செயல்படுகிறதா என்ற
கேள்வியும் எழுகிறது. நீதி கேட்டு வழக்கு மன்றத்தை நாடியவர்கள் பெரும்
அதிர்ச்சியடையுமளவிற்கு, ஊழலும் நிர்வாகச் சீர்கேடும் மலிந்துள்ளன. பாதிக்கப்பட்டவர்கள்
நீதிக்காக காலவரையறையின்றி காத்துக்கிடக்கிறார்கள். நாடு முழுவதும் 30 லட்சத்திற்கும்
மேற்பட்ட வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. விசாரணைக் கைதிகளாக சிறையிடப்பட்டவர்கள்,
குற்றம் நிரூபிக்கப்படாமலேயே ஆயுட்சிறை அனுபவித்து வருகிறார்கள். அகமதாபாத் நீதிமன்றம்
ஒன்று, நாட்டின் குடியரசுத் தலைவருக்கும் தலைமை நீதிபதிக்கும் வழக்கு அறிவிக்கை
அனுப்புகிறது. உயர் நீதிமன்ற நீதிபதிகள்கூட ஊழல் வழக்குகளில் கைதாகின்றனர். ‘உச்ச
நீதிமன்றத்தின் தீர்ப்புகள் சில நேரம் தவறாக இருக்கக் கூடும். ஆனாலும், அதுதான்
இறுதியானது' என்கிறார் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஒய்.கே. சபர்வால். தவறானது
ஒருபோதும் நீதியாக இருக்க முடியாது. தவறாக வழங்கப்பட்ட நீதியும் இறுதியானதாக இருக்காது.
காஷ்மீர், அசாம் போன்ற மாநிலங்களில் நீதித்துறை செயலிழந்து நிற்கிறது. முற்றிலும்
ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்துவிட்ட பின்னர், காஷ்மீரிகளுக்கு ‘ராணுவ நீதியே' சட்டத்தின்
நீதியாக மாற்றப்பட்டுவிட்டது. அதைவிட, பல்லாயிரக்கணக்கான கிராமங்களில் கொடிய
வன்முறைக்குள்ளாகும் ஒடுக்கப்பட்ட, படிப்பறிவற்ற தலித் மக்களுக்கும், பழங்குடி மக்களுக்கும்
சட்டங்கள் வழங்கும் உரிமைகளைப் போலவே நீதியும் சென்றடையவில்லை. கடந்த அய்ம்பதாண்டு
காலத்தில் சாதி இந்துக்கள் இழைத்த வதைகளில் பாதிக்கப்பட்ட அம்மக்களின் கண்ணீரோடு,
அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நீதியும் உலர்ந்து போய்விட்டது! வழக்குப் பதிவு கூட
செய்யப்படாமலேயே புதைக்கப்பட்ட படுகொலைகள் மற்றும் பாலியல் வல்லுறவு களுக்கெல்லாம் உச்ச
நீதிமன்ற நீதிபதிகள் பொறுப்பேற்க மாட்டார்களா?
ஆனால், இடஒதுக்கீடு என்று வந்துவிட்டால், உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு ஆயிரம் கண்கள்
முளைத்து விடுகின்றன. இடஒதுக்கீடுகளுக்கான சமூகப் பின்புலங்கள் அக்கண்களுக்குப்
படுவதில்லை. அரசின் இடஒதுக்கீடு தவிர்த்த பிற கொள்கை முடிவுகளைப் பற்றி அவர்கள் வாயே
திறப்பதில்லை. தலித் மக்களில் பொருளாதார வளர்ச்சி பெற்ற பிரிவினரை ‘கிரீமிலேயர்'
முத்திரை குத்தி, இடஒதுக்கீடுகளிலிருந்து வெளியேற்ற, அண்மையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்
அளித்த தீர்ப்பு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஒட்டுமொத்த இடஒதுக்கீடுகளையே
குழிதோண்டிப் புதைக்க நடத்தப்பட்ட சதி என திட்டவட்டமாகக் கூறமுடியும். இந்து சாதி
அமைப்பு, பண்பாட்டுத் தளத்தில் கிரீமிலேயர்களையும்கூட, பிறப்பின் அடிப்படையில்
இகழ்ச்சிக்குள்ளாக்கியே வைத்திருக்கிறது என்பதை உச்ச நீதிமன்றம் புரிந்துகொள்ளாமல் போனது
நாட்டின் கெடுவாய்ப்பாகும்.
நீதித்துறை நியமனங்கள்கூட வெளிப்படையாக இருப்பதில்லை. நீதிபதிகளின் தனிப்பண்புகள்,
கடந்தகாலச் செயல்பாடுகள், நேர்மையுணர்வு, சமூகப் புரிதல் ஆகியவை குறித்து எவ்வித
தகவலையும் மக்கள் அறிந்து கொள்ள முடிவதில்லை. நாட்டின் தலைமை அமைச்சரையோ, குடியரசுத்
தலைவரையோ தேர்வு செய்யும்போது, ஊடகங்கள் மூலம் மக்கள் விவாதங்கள் நடைபெறுவதைப் போல,
தலைமை நீதிபதி நியமனத்திலும் மக்கள் கருத்து அறியப்பட வேண்டும்.
மேலும் நீதிமன்றங்கள், நீதிபதிகள் மற்றும் வழக்கின் தீர்ப்புகள் குறித்து விவாதங்களை
எழுப்புவோர் மீதும், மாற்றுக் கருத்து தெரிவிப்போர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள்
தொடுக்கப்படுகின்றன. பேசுவதற்கும் கருத்துகளை வெளியிடுவதற்கும் அரசமைப்புச் சட்டம்
குடிமக்களுக்கு வழங்கியிருக்கும் உரிமையை, நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் மறுக்கிறது.
அரசமைப்புச் சட்டப் பிரிவுகள் 129 மற்றும் 215 ஆகிய பிரிவுகள், நீதிமன்றங்கள் மீதும்
நீதிபதிகள் மீதும் விமர்சனம் செய்பவர்களைக் குற்ற நடவடிக்கையின் கீழ் தண்டிக்க
நீதிமன்றங்களுக்கு அனுமதி வழங்குகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், விடுதலைக்குரல்
எழுப்பியவர்களை ஒடுக்குவதற்காகவே நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஜனநாயக
இந்தியாவிலும் அச்சட்டம் தொடர்ந்து தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. நர்மதா நதிப்
பிரச்சனையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து கருத்துத்
தெரிவித்ததற்காக, எழுத்தாளர் அருந்ததிராய் கைது செய்யப்பட்டார். பொதுநலனைக் கருதிக்கூட
நீதிமன்றத் தீர்ப்புகளை விமர்சிக்க நீதிபதிகள் அனுமதிப்பதில்லை.
2006 இல் கொண்டுவரப்பட்ட நீதிமன்ற அவமதிப்புச் சட்டத் திருத்தம், பொதுநலனில் அக்கறை
கொண்டும், உண்மையை அடிப்படையாகக் கொண்டும் விமர்சனம் செய்யப்படுகிறபோது, அவற்றை
நீதிமன்றங்கள் அனுமதிக்கலாம் என்கிறது. அச்சட்டத்திற்கு பலமளிக்கும் வகையில் நீதிபதிகள்
செயல்பட வேண்டும். உண்மையான ஜனநாயக மாண்புகளை மக்களிடையே துளிர்விடச் செய்வதில்
நீதித்துறை முன் முயற்சி எடுக்க வேண்டும். சமூகத்தோடு உறவாட முடியாமல் நீதிபதிகளுக்கு
விதித்திருக்கும் அத்தனைத் தடைகளையும் நீதித்துறை விலக்க வேண்டும். மக்களோடு கலந்து
உறவாடுகிறபோதுதான் சமூகத்தைப் பற்றிய புரிதலும், அறிவும் நீதிபதிகளுக்கு வாய்க்கும்.
நீதிமன்றங்கள் மீதும், நீதிபதிகள் மீதும் மிக உயர்ந்த புனித கருத்தாக்கம் மக்களிடையே
பராமரித்து, பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஜனநாயகத்திற்கு நேர் விரோதமான
இக்கருத்தாக்கத்தை உடைத்தெறிய வேண்டியது, நீதிபதிகளின் முதல் கடமையாகும். தேங்கிக்
கிடக்கும் எண்ணற்ற வழக்குகளை விரைந்து தீர்க்க, நீதித்துறையை ஜனநாயகப்படுத்த வேண்டியது
முன் தேவையாகும்.
அதை விடுத்து, நீதிப் பேரரசர்களாகத் தங்களை எண்ணிக் கொண்டு எதேச்சதிகாரத்துடன் நீதிபதிகள்
எல்லாவற்றிலும் கை வைப்பார்களேயானால், நாடு முழுவதும் பெரும் பதற்றம் ஏற்படுமே தவிர,
ஒருபோதும் நீதிபதிகள் கோலோச்சிவிட முடியாது. அத்தகைய அரசியல் பதற்றம், பல்லாண்டுகளாகத்
தீர்க்க முடியாமல் நீடித்துக் கொண்டிருக்கும் சமூகப் பிரச்சனைகளை மேலும் பின்னுக்குத்
தள்ளுவதாகவே அமையும். அதற்கு உடனடி உதாரணமாகியிருப்பவர் தமிழக முதல்வர் மு.
கருணாநிதி. ஒன்பதாம் அட்டவணையில் உள்ள சட்டங்களை விசாரிக்க உச்ச நீதிமன்றம் அறிவிப்புச்
செய்தவுடன், ‘புதிய அரசமைப்புச் சட்டம் வேண்டும்' என்று ஆளுநர் மூலம் கோரிக்கை
வைத்திருக்கிறார் அவர். மத்திய அரசின் வழிகாட்டும் குழு, அக்கோரிக்கையை உடனடியாக
ஆய்வுக்கு எடுத்துக் கொண்டதாக அறிவித்திருக்கிறது. தமிழக முதல்வர் முன்வைத்திருக்கும்
புதிய அரசமைப்புச் சட்டத்திற்கான கோரிக்கை, கடந்த அய்ம்பதாண்டு காலமாக திராவிட
இயக்கங்கள் நடத்திவரும் இடைநிலைச் சாதி அரசியலின் உச்சபட்ச வெளிப்பாடாக அமைந்துவிட்டது.
69 சதவிகித இடஒதுக்கீடுகளின் மீதுதான் உச்ச நீதிமன்றம் அறிவித்திருக்கிறது என்பதைத்
தெள்ளென அறிந்து கொண்டதால்தான், புதிய அரசமைப்புச் சட்டம் வேண்டும் என்கிறார் கருணாநிதி.
புதிய அரசமைப்புச் சட்டம் உருவாக்குவதை கொக்குப் பிடிக்கிற வேலையென எண்ணிக்
கொண்டிருக்கிறார் போலும்.
அனைத்து உலக நாடுகளின் அரசமைப்புச் சட்டங்களையெல்லாம் ஆய்ந்தறிந்து, இந்தியச் சூழலுக்கு
ஏற்றார்போல், சமத்துவத்தையும் சமூக நீதியையும் அடிப்படையாகக் கொண்டு, சமூக மாற்றத்தை
முன்னெடுக்கும் இணையற்ற இந்திய அரசமைப்புச் சட்டத்தை மாற்றுவதற்கு - இந்தியாவில் யார் உளர்
என்பதை கருணாநிதி அறிவிக்க வேண்டும். அதற்கு என்ன தேவை ஏற்பட்டுள்ளது என்பதையும் அவர்
தமிழக மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். எண்ணற்ற இடர்ப்பாடுகளை தலித் மக்களுக்கான
இடஒதுக்கீடுகள் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. அதற்காக ஒரு வார்த்தைகூட அவர் பேசியதில்லை.
இன்னும் சொல்லப்போனால், திராவிட இயக்க அரசுகள் பெரும் முட்டுக்கட்டைகளாகவே செயல்பட்டு
வந்துள்ளன. இப்போது பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டில் உச்ச நீதிமன்றம் கை வைக்கப்
போகிறது என்றதும், புதிய அரசமைப்புச் சட்டம் கேட்கிறார் கருணாநிதி. அவர் தொடர்ந்து
நடத்தி வரும் இடைநிலைச் சாதி அரசியலை ஜனநாயகத்திற்காகப் போராடும் தலித் இயக்கங்கள்
புரிந்து கொள்ள வேண்டும்.
- இருள் விரியும்

Saranya

unread,
May 15, 2015, 9:32:08 PM5/15/15
to brailleacl, buddingscholars, conventblossoms, accessindia, scholars_learners, keyboardusers, civilservices4theblind
Hi friends:
Download some files for competitive exams from the following link:

https://www.dropbox.com/s/6fetshvv69xxqmv/tnpsc%20text%20materials.rar?dl=0
Reply all
Reply to author
Forward
0 new messages