அறிவியல் ஆயிரம் : ஆலங்கட்டி மழை பெய்வது எப்படி
வெயில் காலத்தில் நிலத்திற்கு அருகில் உள்ள காற்று அதிக வெப்பமடைகிறது. மேல் நோக்கி சென்று உறை வெப்ப நிலையில் சிறிய பனிக்கட்டிகளாகிறது. அவை சூடான காற்றோடு விழுவதால் சுற்றி தண்ணீர் படிகிறது. மேலே செல்லும் காற்று மறுபடியும் அந்த பனிக்கட்டியை குளிர்நிலைக்கு கொண்டு செல்கிறது. இது முந்தைய பனிக்கட்டியின் மேல் மேலும் பனி உருவாகிறது. இப்படி சூடான, குளிர்ந்த காற்றுக்கு நடுவே மேலும், கீழும் பலமுறை துாக்கி செல்வதால் பனிக்கட்டிகள் சேர்ந்து ஆலங்கட்டியாக மாறி எடை அதிகரிக்கிறது. பின் எடை தாங்காமல் ஆலங்கட்டி மழையாய் பூமியில் விழுகிறது.
தகவல் சுரங்கம் : உலக தொழிலாளர் தினம்
உலகின் சமூக, பொருளாதார வளர்ச்சியில் தொழிலாளர்களின் அர்ப்பணிப்பு, உழைப்பை அங்கீகரிக்கும் விதமாக உலக தொழிலாளர் அமைப்பு சார்பில் மே 1ல் உலக தொழிலாளர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. தொழிலாளர்களுக்கு '8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர துாக்கம்' என்ற வகையில் இருக்க வேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது 19ம் நுாற்றாண்டில் வளர்ந்த நாடுகளில் 12 - 18 மணி நேரம் கட்டாயம் வேலை என இருந்தது. இதை எதிர்த்து தொழிலாளர்கள் போராட்டங்களை நடத்தினர். இந்தியாவில் 1923ல் இத்தினம் தொடங்கப்பட்டது.