உலகின் பெரிய பறவைஉலகில் பல்வேறு வகையிலான பறவைகள் வாழ்கின்றன. இதில்
பெரிய பறவை எது என்பதில், சர்வதேச விஞ்ஞானிகளிடம் மாறுபட்ட கருத்துகள்
இருந்தன. இது குறித்த ஆய்வுகள் பல ஆண்டுகளாக நடந்தது. இந்நிலையில்
லண்டனைச் சேர்ந்த விலங்குகள் அமைப்பு, இதற்கு ஒரு முடிவை கொண்டு
வந்துள்ளது. இதில் 'வோரோம்பி டைட்டன்' என்ற பறவை உலகில் பெரியது என
கண்டுபிடித்துள்ளனர். 'வோரோம்பி' என்றால் 'பெரிய பறவை' என அர்த்தம்.
பறவையின் உயரம் 9.84 அடி. எடை 800 கிலோ. இது இந்திய பெருங்கடலில்
மடகாஸ்கார் தீவில் உள்ளது.தகவல் சுரங்கம்கபீர் யாத்திரைஇந்தி கவிஞர்
கபீரை சிறப்பிக்கும் வகையில் ராஜஸ்தானில் அக்டோபரில் கபீர் யாத்திரை என்ற
பெயரில் நாட்டுப்புற கலைஞர்களின் இசையாத்திரை நடைபெறுகின்றது. இதில்
கபீரின் பக்தி இலக்கிய பாடல்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகின்றது.
திருக்குறளைப் போல, இந்தியில் இரு வரியிலான 'தோஹே'க்களை எழுதியவர் கபீர்.
இவர் காசியில் முஸ்லிம் நெசவாளர் குடும்பத்தில் வளர்க்கப்பட்டார். இதனால்
மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் சிறந்த நெசவாளருக்கான 'சந்த் கபீர் விருது'
வழங்குகிறது. இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக பாடுபட்டவர்.
இது உங்கள் இடம்
Colors:
அ+
அ-
Print
e-mail
உயர் நீதிமன்றம் இன்னும் விழிக்க வேண்டும்!ஆர்.ஆத்மா, கூடுவாஞ்சேரி,
காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:-
ஆக்கிரமிப்பு நிலங்களுக்கு பட்டா வழங்கக் கூடாது; -ஆக்கிரமிப்
பாளர்களுக்கு கருணை காட்டக் கூடாது...-நீர் நிலைகளை கபளீகரம்
செய்தவர்கள், உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும்; -லஞ்ச அதிகாரிகள்
சிறைக்குள் தள்ளப்பட வேண்டும் என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது;
இது, வரவேற்புக்கும் பாராட்டுதலுக்கும் உரியது!தமிழகத்தை, 50
ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்ட திராவிட கட்சியினர், புறம்போக்கு, நீர்நிலைகள்
என, எதையும் விட்டு வைக்காமல், கபளீகரம் செய்து விட்டனர்.அதிகாரிகளின்
ஆதரவுடன், தங்களுக்கும், தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும்,
உறவினர்களுக்கும் பட்டா போட்டுக் கொண்டனர். புறம்போக்கு நிலங்களை,
'பிளாட்' போட்டு விற்று, பல தலைமுறைகளுக்கும் சொத்து சேர்த்து
விட்டனர்!இதற்கெல்லாம் துணை போன அதிகாரிகள் தான், முதல் குற்றவாளிகள்.
மக்கள் வரி பணத்தில் சம்பளம் மற்றும் இதர வசதிகளையும் அனுபவித்து, மக்கள்
நலனுக்கு எதிராகச் செயல்பட்ட அவர்களை, மன்னிக்கவே முடியாது. 'குற்றம்
இழைத்த அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும்' எனச் சொல்லி, நீதிபதி தன்
உத்தரவை நிறுத்தியிருக்கலாம். ஆனால், அதையும் தாண்டி, அவர்கள் சிறைக்குள்
தள்ளப்பட வேண்டும் எனக் கூறியுள்ளது; இதிலிருந்து, அதிகாரிகள் மீது,
நீதிமன்றம் கொண்டுள்ள கோபம் வெளிப்படையாக தெரிகிறது! மக்கள்
பிரதிநிதிகள், சட்டத்தை அறியாமல், நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்யும்
முன், சட்டப் பிரிவுகளை விளக்கி, சரியான நடவடிக்கை எடுக்கச் செய்வதே,
அதிகாரிகளின் பணி. ஆனால், தவறுகளுக்கு மூலகாரணமாக உள்ளோர், அதிகாரிகளே
என்பது, நீதிமன்றங்களுக்கும் தெரிந்து விட்டது.சென்னை உயர் நீதிமன்ற
ஆணைப்படி, தவறு செய்த அதிகாரிகள், முறையாக விசாரிக்கப்பட்டு, சிறைக்குள்
தள்ளப்பட வேண்டும். அப்போது தான் புறம்போக்கு நிலங்களும், நீர்
ஆதாரங்களும் பாதுகாக்கப்படும். 'எவ்வளவு அடித்தாலும் தாங்கறாண்டா...'
என்ற, 'காமெடி' நடிகர் வடிவேலு நடித்த காட்சி போல், உயர்நீதி மன்றம்
தினம் தினம், என்ன தான், அரசையும், அதிகாரிகளையும், எவ்வளவு
குட்டினாலும், அவர்கள் எதையும் கண்டுகொள்வதாக
தெரியவில்லை!தொகுப்பூதியஆசிரியர்கள் அய்யோ பாவம்!எஸ்.ஆதங்கன், செம்பட்டி,
திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: காலமுறை ஊதியம்
அடிப்படையில், அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 'முதுகலை பட்டதாரி ஆசிரியர்
நியமனம் நடைபெற்றால், அடிப்படை ஊதியமாக மாதம், 36 ஆயிரத்து, 900 வழங்க
வேண்டும்.இத்துடன், 9 சதவீதம் அகவிலைப்படி மற்றும் வீட்டு
வாடகைப்படியும், மருத்துவப்படியும் அடங்கும்.இடைநிலை ஆசிரியருக்கு
அடிப்படை ஊதியம், 20 ஆயிரத்து, 600 ரூபாய்; பட்டதாரி ஆசிரியருக்கு
அடிப்படை ஊதியம், 36 ஆயிரத்து, 400 ரூபாய். இத்துடன், வழக்கமான படிகள்
உண்டு.அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 7,500 ரூபாய் தொகுப்பூதியம்
அடிப்படையில் பெற்றோர் - ஆசிரியர் கழகத்தின் கட்டுப்பாட்டில் பணியாற்ற,
1,500 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு
வருகின்றனர்.இவர்கள், 2019 பிப்ரவரி வரை பணியில் இருப்பர். பிளஸ் 1,
பிளஸ் 2 வகுப்பிற்கு, இவர்கள் பாடம் நடத்த வேண்டும். நாகப்பட்டினம்,
திருவண்ணாமலை, திருவள்ளூர், வேலுார் ஆகிய மாவட்டங்களில், 100க்கும்
மேற்பட்ட ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்; 11 பாடங்களுக்கு இந்த
நியமனம் உண்டு. தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் பெறும் ஆசிரியர்கள்,
வாரம் குறைந்தது, ஐந்து நாட்கள் வகுப்பு எடுக்க வேண்டும். காலை, மாலை
மற்றும் விடுமுறை நாட்களிலும் பிளஸ் 1, பிளஸ் 2க்கு வகுப்புகள் எடுக்க
வேண்டும்; இவர்களுக்கு மாதம், 7,500 என்பது மிக மிக குறைந்த
ஊதியம்.காலமுறை ஊதியம் அடிப்படையில் வழங்கப்படும், முழு சம்பளத்தில்
மூன்றில் ஒரு பங்காவது, தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு வழங்க
வேண்டும்.கூடுதல் கல்வி தகுதியுடன் பணியாற்றும், உபரி இடைநிலை, பட்டதாரி
ஆசிரியர்களை நல்ல முறையில் பயன்படுத்த, கல்வித்துறை புது முறையை உருவாக்க
வேண்டும்.கூடுதல் கல்வி தகுதிக்கு, கூடுதல் ஊதியம் அரசு வழங்கி வருகிறது.
வாரம் ஒன்றரை நாள் மட்டுமே பணி செய்யும் பகுதி நேர ஆசிரியர்கள், மாதம்,
7,700 ரூபாய் பெறுகின்றனர்.இப்படி ஒரு சூழலில், தொகுப்பூதிய, முதுகலை
ஆசிரியர்களுக்கு, மாதம், 12 - 15 ஆயிரம் ரூபாய் வழங்க, கல்வித் துறை
அமைச்சர் செங்கோட்டையன் நடவடிக்கை எடுக்க வேண்டும்!மத்திய அரசு காணாமல்
போகும்!ஆர்.மகேசன், அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டத்திலிருந்து
எழுதுகிறார்: இந்திய எண்ணெய் நிறுவனங்கள், மத்திய அரசின் கட்டுப்பாட்டில்
உள்ள பொதுத் துறை நிறுவனங்கள் தான்; இவை, நஷ்டத்தில் இயங்கும்
நிறுவனங்கள் அல்ல. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களில் ஒன்றான, இந்தியன்
ஆயில் கார்ப்பரேஷனில், 33 ஆயிரம் பணியாளர்கள் உள்ளனர். 2016 - 17ல், இந்த
நிறுவனத்தின் நிகர லாபம் மட்டும், 19 ஆயிரத்து, 106 கோடி ரூபாய்! பொதுத்
துறையின் குறிக்கோளாக, மக்கள் நலம் தானே ஒழிய, லாப நோக்கல் அல்ல என்று
தான், பொருளாதாரத்தில் பயிற்றுவிக்கப்படுகிறது. ஆனால், லாப நோக்கத்தில்
இயங்கும் தனியார் நிறுவனங்களை போல், இவை செயல்படுகின்றன. மத்திய - மாநில
அரசுகள், 35 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும், ஒரு பொருளுக்கு, 50
ரூபாய் வரி விதிப்பது, ஏற்றுக் கொள்ளக்கூடிய விஷயம் அல்ல!தமிழகத்தில்,
ஓட்டு வங்கியை குறி வைத்து வழங்கப்படும், இலவசங்களுக்காக மட்டும்,
ஆண்டுக்கு, பல ஆயிரம் கோடி ரூபாய் வீணடிக்கப்படுகிறது. இதை நிறுத்தினால்,
மாநில அரசு விதிக்கும், 'வாட்' வரியை குறைக்க முடியும். விடாக்கண்டனும்,
கொடாக்கண்டனுமாக செயல்படும் மத்திய - மாநில அரசுகள், கச்சா எண்ணெய் விலை
உயர்வு, டாலருக்கு நிகரான, இந்திய ரூபாயின் மதிப்பு குறைவு என, காரணங்களை
கூறி, பாமர மக்களின் தலையில் நன்றாக மிளகாய் அரைக்கின்றன. பெட்ரோல்
விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை, எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து திரும்ப
பெற்று, உடனடியாக, ஜி.எஸ்.டி., வரி விதிப்புக்குள் கொண்டு வர, மத்திய
அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், அடுத்த ஆண்டு நடைபெற
இருக்கும் பொதுத்தேர்தலில், ஆளும் கட்சிக்கு எதிர்மறையான விளைவை
ஏற்படுத்தும்!'வீரமணி... இனியும் ஈடுபடாதீர்!'ஆர்.நடராஜன், முதல்வர்,
தனியார் கலைக் கல்லுாரி (பணி நிறைவு), திண்டுக்கல்லிலிருந்து
எழுதுகிறார்: ஹிந்து கடவுள்களையும், பிராமணர்களையும் அவதுாறாக
எழுதுவதையே, தன் வாழ்க்கை லட்சியமாக கொண்டவர், தி.க.,வின் வீரமணி.
'ஹிந்துக் கடவுள்களால், என் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது;
பிராமணர்களால், எனக்கு எப்போதும் கவலை தான்' என, எப்போதாவது கூறி
இருப்பாரா? ஹிந்துக்களாலும், பிராமணர்களாலும் தொந்தரவு இல்லாத போது, ஏன்,
தேவையில்லாத கருத்துக்களை கூற வேண்டும்... 'பகுத்தறிவு பகலவன்;
ஹிந்துக்கள் அல்லாத மற்ற இனத்தவர், தாழ்த்தப்பட்ட, மிகவும்
பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகவே நான் வாழ்கிறேன்' எனக் கூறும் வீரமணி,
இந்த சாதனைகளை நிகழ்த்தி விட்டு கூறினால், அனைவரும் அவரது செயல்பாட்டை
ஏற்றுக் கொள்வர். l தஞ்சாவூரில், அவருக்கு சொந்தமான பெரியார் - மணியம்மை
பல்கலையில், தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவ - மாணவியர்,
இவ்வளவு எண்ணிக்கையில் இலவச படிப்பு படித்துள்ளனர். விடுதிகளில் இவ்வளவு
பேர், இத்தனை ஆண்டுகளாக இலவசமாக தங்கி படிக்க அனுமதி அளித்துள்ளேன். இலவச
உணவை, இவ்வளவு மாணவர்கள் சாப்பிட்டுள்ளனர் என, பட்டியலிட்டு கூற
முடியுமா?l ஈ.வெ.ரா.,வின் ஒவ்வொரு பிறந்த நாள், நினைவு நாட்களில், இலவச
உடை, அன்னதானம் ஆகியவற்றால் பயனடைந்த தாழ்த்தப்பட்ட, மிகவும்
பிற்படுத்தப்பட்டோர் இவ்வளவு பேர் என, பட்டியலிட்டு கூற
முடியுமா?l தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இதுவரை,
இவ்வளவு வீடுகள், இலவசமாக கட்டி கொடுத்து உள்ளேன் என, பகிரங்கமாக
அறிவிக்க முடியுமா?l ஈ.வெ.ரா.,வின் அறக்கட்டளையை ஆண்டாண்டு காலமாக
அனுபவித்து வரும், வீரமணி, பிறருக்கு உதவாவிட்டாலும், சமுதாயத்தில்
அவரவர் விருப்பப்படி வணங்கும், ஹிந்து கடவுள்கள் மீதும், ஹிந்துக்கள்
மீதும் சேற்றை வாரி இறைக்கும் செயலில், இனியும் ஈடுபட வேண்டாம்.l எந்த
தமிழனும் உங்களை ஏற்றுக் கொள்ளாத போது, தனக்கு தானே, 'தமிழர்களின்
தலைவர்' என, சொல்வதையும் நிறுத்தி கொள்ள வேண்டும்!கருணாநிதி அயராத
உழைப்பால் தி.மு.க., கம்பீரம்! எஸ்.அர்த்தநாரி, இதய நோய் சிகிச்சை
நிபுணர், சென்னையிலிருந்து எழுதுகிறார்: மறைந்த முன்னாள், தி.மு.க.,
தலைவர், கருணாநிதியுடன், பல்வேறு சந்தர்ப்பங்களில் பழகியதை, வாசகர்களுடன்
பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்...நான், ராயப்பேட்டை அரசு
மருத்துவமனையில், தலைமை இதய நோய் நிபுணராக பணி புரிந்தேன். அப்போது,
கருணாநிதியின் சகோதரி மகன், அமிர்தம், மாரடைப்பால் அனுமதிக்கப்பட்டார்;
அவருக்கு சிகிச்சையில் ஈடுபட்டிருந்தேன்.கருணாநிதி, தன் கட்சி சகாக்கள்,
வீராசாமி, துரைமுருகன், மாறனுடன் வந்தார். என் அறையில் அமர்ந்து,
பேசினார். 'காலை, 4:00 மணிக்கு, எழுந்து, யோகா செய்து, அறிவாலயத்திற்கு
நடைபயிற்சிக்கு புறப்பட்டு விடுவேன். அப்போது, உடன் பிறப்புகள் சிலர்
வந்து சேர்ந்து விடுவர். கட்சி பிரதிநிதிகள், எம்.பி.,க்கள் கூட சில
நாட்களில் வந்து சேர்ந்து கொள்வர். 'ஆனால், என் மருமகன் மாறன் மட்டும்,
உதய சூரியன் உதித்த பின் எழுவார்' என்றார், கருணாநிதி. அவர் நகைச்சுவை
பேச்சை கேட்டு அனைவரும் குலுங்கி குலுங்கி சிரித்தோம்.என், 30 ஆண்டுகள்
மருத்துவ சேவையில், நான் கண்டறிந்த உண்மை என்னவென்றால், ஒவ்வொரு ஊரிலும்,
பல டாக்டர்கள், அவரது உதவியால் பணி புரிவது தான். கட்சியில் உள்ள
பலருக்கு, கருணாநிதி பல்வேறு உதவிகளை செய்து உள்ளார். அவரால், பலர்
டாக்டர்களாகி உள்ளனர்.சேலம் மாடர்ன் தியேட்டரில், சினிமா வசனகர்த்தா வாக
பணியாற்றிய கருணாநிதி, தயாரிப்பாளரும், இயக்குனரும், அதன் உரிமையாளருமான,
டி.ஆர்.சுந்தரத்துடன் இணக்கமாக இருந்தார். அப்போது, ஊழியர்கள் மத்தியில்,
'ஹிட்லர்' போல நடந்து கொண்ட, அவரிடம் கண்டிப்பை கற்றுக் கொண்டார்,
கருணாநிதி.பின்னாளில், தன் கட்சியினரிடம் கண்டிக்க வேண்டிய நேரத்தில்
கண்டிப்பும், பாசம் காட்ட வேண்டிய நேரத்தில் பாசத்தையும் காட்டினார்.
குடும்பத்தினர் மீதும், கட்சி உடன் பிறப்புகளிடமும், பாசமுள்ள தலைவராக
விளங்கினார், கருணாநிதி.இன்றும், தி.மு.க., நிலைத்து நிற்பதற்கு,
கருணாநிதியின் அயராது உழைப்பே காரணம்!பெட்ரோல் விலைசெஞ்சுரி அடிக்க
போகிறது!சொ.கவிச்செல்வம், சென் னையிலிருந்து எழுதுகிறார்: ஈரான் உடனான,
அணு சக்தி ஒப்பந்தத்திலிருந்து, உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான,
அமெரிக்கா தன்னிச்சையாக விலகியது.ஈரான் மீது, பொருளா தார தடையை
விதித்தார், அமெரிக்க அதிபர், டிரம்ப். இதனால், பொருளாதார ஸ்திரத்தன்மையை
இழந்து வருகிறது, ஈரான்! அந்நாட்டின் மீது, பெட்ரோலிய ஏற்றுமதிக்கான தடை
விதித்து, நவம்பர் முதல் நடைமுறைப்படுத்த, அமெரிக்கா முடிவு
செய்துள்ளது.'ஈரான் நாட்டுடன், வர்த்தக உறவுகளை நிறுத்தாத நாடுகள்
மீதும், பொருளாதார தடை விதிக்கவும் தயங்க மாட்டோம்' என்றும், அமெரிக்க
அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இந்தியாவுக்கான, கச்சா எண்ணெய்
தேவையை பூர்த்தி செய்வதில், ஈரான், மூன்றாம் இடத்தில் உள்ளது.பிற
நாடுகளிலிருந்து, இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயை விட, மிக குறைந்த
விலையில், ஈரானில் இருந்து, கச்சா எண்ணெயை, இந்தியா இறக்குமதி செய்து
வந்தது.நவம்பருக்கு பின், ஈரான் நாட்டிலிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி
செய்வதை நிறுத்த வேண்டும் என, சீனா, இந்தியா உட்பட பல நாடுகளுக்கு,
அமெரிக்கா கெடு விதித்துள்ளது.சர்வதேச அளவில் பெட்ரோல், டீசல் விலை
வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து வருகிறது.அமெரிக்காவின் நிர்ப்பந்தத்தை,
சீனா புறக்கணித்துள்ளது. ஆனால், அமெரிக்காவின் நட்பை இழக்க, இந்தியா
விரும்பவில்லை.இதனால், அமெரிக்காவின் நெருக்கடிக்கு, இந்தியா
செவிசாய்க்கும் நிலை உருவாகி உள்ளது. இனி, ஈரானிலிருந்து, கச்சா எண்ணெயை,
இந்தியா இறக்குமதி செய்யாது.கச்சா எண்ணெய் வழங்க, அமெரிக்கா முன் வரலாம்.
ஆனால், கச்சா எண்ணெய்க்கான சுத்திகரிப்பு செலவு பல மடங்கு
அதிகரிக்கும்.அமெரிக்க அதிபர், டிரம்பின் அதிரடி போக்கால், இந்தியா, சீனா
உள்ளிட்ட பல நாடுகள், கச்சா எண்ணெய் இறக்குமதியில், அதிக விலை கொடுக்கும்
நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.தற்போது, இந்தியாவில், ௧ லிட்டர் பெட்ரோல், 86
ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இன்னும், ஓரிரு வாரங்களில், 100 ரூபாயை
தொட்டாலும் தொடும்!