தகவல் சுரங்கம்

0 views
Skip to first unread message

Dhivisha dhivi

unread,
Jul 9, 2025, 9:28:53 PMJul 9
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
தகவல் சுரங்கம்


 


அதிக தண்ணீர் ஓடும் ஆறு

உலகின் மிக ஆழமான ஆறு என 'காங்கோ ஆறு' அழைக்கப்படுகிறது. இதன் அதிகபட்ச ஆழம் 720 அடி. இதன் நீளம் 4700 கி.மீ. இதற்கு 25 துணை ஆறுகள் உள்ளன. இது 'ஜயர்' ஆறு எனவும் அழைக்கப்படுகிறது. 'நைல்' நதிக்கு அடுத்து ஆப்ரிக்காவின் நீளமான ஆறு இதுதான். அதே போல அமேசான் ஆறுக்கு அடுத்து, உலகில் அதிகளவில் தண்ணீர் ஓடும் ஆறு இதுவே. இந்த ஆற்றின் வழித்தடங்களில் 40 நீர் மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆப்ரிக்காவின் மொத்த நிலப்பரப்பில் 13 சதவிகித பகுதியில் (40 லட்சம் சதுர கி.மீ.,) இந்த ஆறு பாய்கிறது. அட்லாண்டிக் கடலில் கலக்கிறது.

Dhivisha dhivi

unread,
Jul 12, 2025, 8:20:40 PMJul 12
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
தகவல் சுரங்கம்


மனிதர்கள் ஏறாத மலை

உலகில் அதிகளவில் மலை பரப்பளவை கொண்ட நாடு பூடான். இதன் மொத்த நிலப்பரப்பில் 98.8 சதவீதம் மலைகளே (இமயமலை தொடர்) உள்ளன. பூடானின் உயரமான மலை 'கங்கார் பியூன்சம்'. இதன் உயரம் சராசரி கடல் நீர்மட்டத்தில் இருந்து 24,839 அடி. இது மலையேற்ற வீரர்கள் ஏறாத உலகின் உயரமான மலை. 1983ல் இதில் மலையேற்றத்துக்கு பூடான் அனுமதி வழங்கியது. நான்கு வீரர்களின் முயற்சி தோல்வியில் முடிந்தது. பின் 1994ல் 19,500 அடிக்கு மேல் ஏறுவதற்கு அனுமதி மறுத்த அந்நாடு, பின் 2003ல் இருந்து மலை ஏறுவதற்கு முழுவதும் தடை விதித்தது.



 

Dhivisha dhivi

unread,
Jul 19, 2025, 9:51:25 PMJul 19
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
தகவல் சுரங்கம்

சர்வதேச நிலா, செஸ் தினம்


அமெரிக்காவின் 'நாசா' 1969 ஜூலை 16ல் அனுப்பிய 'அப்பல்லோ-11' விண்கலம் நிலவுக்கு சென்றது. இதில் கமாண்டர் நீல் ஆம்ஸ்ட்ராங், பைலட் மைக்கேல் காலியன்ஸ், பைலட் எட்வின் ஆல்ட்ரின் பயணித்தனர். இது ஜூலை 20ல் நிலவில் இறங்கியது. விண்கலத்தில் இறங்கி நிலவில் காலடி வைத்து நீல் ஆம்ஸ்ட்ராங் சாதனை படைத்தார். இந்நாள் ஐ.நா., சார்பில் சர்வதேச நிலவு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

* 'செஸ்' ஒரு பழமையான, அறிவுப்பூர்வ விளையாட்டு. சர்வதேச செஸ் கூட்டமைப்பு தொடங்கிய ஜூலை 20, உலக செஸ் தினமாக கொண்டாடப்படுகிறது.


 
 

 
 

Dhivisha dhivi

unread,
Jul 29, 2025, 9:05:12 PMJul 29
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
தகவல் சுரங்கம்

 சர்வதேச நண்பர்கள் தினம்

இன்பம், துன்பம் என அனைத்து சூழல்களிலும் துணையாக இருப்பவர்களே உண்மையான நண்பர்கள். அனைவருக்கும் இருக்கும் ஒரே உறவு 'நண்பர்கள்'. மற்ற உறவுகள் இயற்கையாக வருவது. நண்பர்கள் மட்டுமே நாம் தேர்வுசெய்யக்கூடியது. அனைவரது வாழ்க்கையிலும் நண்பர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். பல வேறுபாடுகளை கடந்தது நட்பு மட்டுமே. சொத்துகளை அதிகம் சேர்ப்பதை விட நண்பர்களை அதிகம் சேர்ப்பது முக்கியம். நண்பர்கள் தினம் பல நாடுகளில், வெவ்வேறு தேதியில் கடைபிடிக்கப்படுகிறது. ஐ.நா., சார்பில் ஜூலை 30ல் சர்வதேச நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

 

Reply all
Reply to author
Forward
0 new messages