அறிவியல் ஆயிரம் தினமலர்

263 views
Skip to first unread message

TAMIL BEAUTY TRICKS

unread,
Jun 18, 2019, 9:13:37 PM6/18/19
to valluvanpaarvai, inaiat...@googlegroups.com
எச்சரிக்கும் கருவிஅதிகமாக சாப்பிடுதல், பாஸ்ட்புட் உணவு அடிக்கடி
சாப்பிடுதல், மது, புகைப்பிடித்தல், நகம் கடித்தல், இன்டர்நெட்டில் அதிக
நேரம் செலவிடுதல் என ஒவ்வொருவருக்கும், வெவ்வேறு கெட்ட பழக்கங்கள்
இருக்கும். இதனை தடுக்கும் விதத்தில், நமக்கு அலர்ட் தரும் கருவியை
அமேசான் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 'கைச்செயின்' போல இருக்கும் இதனை நம்
கையில் அணிந்து கொள்ளலாம். நாம் அதிகமாக சாப்பிடும் போது, இக்கருவி ஒரு
'எலக்ட்ரிக் ஷாக்' அடித்து நம்மை எச்சரிக்கை செய்யும். இதே போல ஒவ்வொரு
கெட்ட செயலின் போது, இவ்வாறு இக்கருவி செயல்படும்.
தகவல் சுரங்கம்பெரிய நன்னீர் ஏரி
ரஷ்யாவின் சைபீரியாவில் உள்ள பைகால் ஏரி, உலகின் பெரிய மற்றும் ஆழமான
நன்னீர் ஏரி. இதன் பரப்பளவு 31,722 சதுர கி.மீ. நீளம் 636 கி.மீ. அகலம்
79 கி.மீ. சராசரி ஆழம் 2,442 அடி. அதிகபட்ச ஆழம் 5,387 அடி. உலக
நன்னீரில் ஐந்தில் ஒரு பங்கு இதில் உள்ளது. இந்த ஏரியில் 27 தீவுகள்
உள்ளன. 2,000க்கும் மேற்பட்ட தாவரங்கள், உயிரினங்களின் வாழிடமாக உள்ளது.
'அங்காரா' என்ற ஆறு இந்த ஏரியில் இருந்து உற்பத்தியாகிறது. குளிர்
காலத்தில் உறைந்து முழுவதும் பனிக்கட்டியாகிவிடும். குளிர்காலம்
முடிந்ததும் ஏரியில் எழும்பும் அலைகளால் பனிக்கட்டி கரைந்து விடும்.

TAMIL BEAUTY TRICKS

unread,
Jun 19, 2019, 9:26:35 PM6/19/19
to valluvanpaarvai, inaiat...@googlegroups.com
அறிவியல் ஆயிரம்

காக்கும் மரங்கள்
வெயிலில் தான், மரங்களின் தேவையை உணர்கிறோம். தற்போது விரைவில் வளரும்
மரங்களுக்கு தான் முக்கியத்துவம் தரப்படுகிறது. ஆனால் அந்தந்த இடத்திற்கே
உரிய பாரம்பரிய மரங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என சுற்றுச்சூழல்
நிபுணர்கள்
கூறுகின்றனர். பறவைகளை ஈர்க்கும் மரங்கள் தான், காடுகளின் பரப்பளவு
அதிகரிக்க காரணமாக உள்ளன. அவற்றின் எச்சம் மரங்கள் பரவ காரணமாகின்றன.
வெயிலுக்கு உகந்தது வேப்பமரம். வெயிலில் அதிக அளவில் படர்ந்து நிழல்
தருவது ஆலமரம். பனை, வெயிலின் வெம்மையை குறைத்து குளிர்ச்சி தருகிறது.
தகவல் சுரங்கம்
இளம் சபாநாயகர்

லோக்சபாவின் 12வது சபாநாயகராக பதவி வகித்தவர் ஜி.எம்.சி. பாலயோகி.
ஆந்திராவில் 1951ல் பிறந்த இவர், சட்டம் படித்தவர். தெலுங்கு தேசம்
கட்சியை சேர்ந்த இவர், முதன்முதலாக 1991ல் லோக்சபா எம்.பி., ஆக
தேர்வானார். 47 வயதில் லோக்சபா சபாநாயகராக பொறுப்பேற்றார். இவர்தான்
நாட்டின் இளம் சபாநாயகர் என்ற பெருமைக்குரியவர். முதன்முறையாக 1998
மார்ச் 24 முதல் 1999 அக்., 19 வரை லோக்சபா சபாநாயகராக பதவி வகித்தார்.
பின் 1999 அக்., 22ல் மீண்டும் பதவியேற்றார். 2002 மார்ச் 3ல் பதவியில்
இருக்கும் போதே, ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தார்.

TAMIL BEAUTY TRICKS

unread,
Jun 20, 2019, 9:17:50 PM6/20/19
to valluvanpaarvai, inaiat...@googlegroups.com
அறிவியல் ஆயிரம்
சிரிப்பூட்டும் வாயு
தனிமங்களில் ஒன்று நைட்ரஸ் ஆக்சைடு. இது N2O என்ற வாய்ப்பாட்டை கொண்டது.
இந்த வாயுவை முகரும் போது, நரம்புகள் கிளர்ச்சியடைந்து, சிரிப்பை
உண்டாக்குவதால், இது 'சிரிப்பூட்டும் வாயு' என அழைக்கப்படுகிறது. இவ்வாயு
மருத்துவமனை களில் அறுவை சிகிச்சைகளின் போது, நோயாளிகளுக்கு தற்காலிக
மயக்கத்தை ஏற்படுத்துவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. 1799ம் ஆண்டு
இங்கிலாந்தை சேர்ந்த அறிவியல் அறிஞர் ஹம்ப்ரி டேவி. நைட்ரஸ் ஆக்சைடு
வாயுவின் சிரிப்பூட்டும் தன்மையை ஆராய்ந்து கண்டறிந்தார்.
தகவல் சுரங்கம்

அமைதியான நாடு
2019ம் ஆண்டு), முதலிடத்தை அயர்லாந்து பிடித்துள்ளது. 163 நாடுகள் இதில்
இடம்பெற்றுள்ளன. முதல் பத்து இடங்களில் அயர்லாந்து, நியூசிலாந்து,
போர்ச்சுக்கல், ஆஸ்திரியா, டென்மார்க், கனடா, சிங்கப்பூர், ஸ்லோவேனியா,
ஜப்பான், செக் குடியரசு ஆகியவை இடம்பெற்றுள்ளன. கடைசி பத்து இடத்தில்
ஆப்கன், சிரியா, தெற்கு சூடான், ஏமன், ஈராக், சோமாலியா, மத்திய ஆப்ரிக்க
குடியரசு, லிபியா, காங்கோ, ரஷ்யா ஆகியவை உள்ளன. இப்பட்டியலில் இந்தியா
141வது இடத்தில் உள்ளது.

TAMIL BEAUTY TRICKS

unread,
Jun 21, 2019, 9:02:22 PM6/21/19
to valluvanpaarvai, inaiat...@googlegroups.com
அறிவியல் ஆயிரம்

வறட்சியை தாங்கும் கோதுமை
உலகளவில் பருவநிலை மாறுபாட்டால், மழைப் பொழிவு குறைந்துள்ளது. ஆனால்
உணவுப்பொருளின் தேவை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. போதிய மழையின்மையால்
உணவுப்பொருள் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் பிரிட்டனை
சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள புதிய ரக கோதுமை ரகம், வறட்சியை
தாக்குப்பிடித்து, குறைந்தளவு தண்ணீரில் விளையும் என தெரிவித்துள்ளனர்.
உலகளவில் விவசாயத்துக்கு 80 - 90 சதவீதம் நன்னீர் பயன்படுத்தப்படுகிறது.
ஒரு கிலோ கோதுமை உற்பத்தி செய்ய 1,800 லிட்டர் தண்ணீர்
பயன்படுத்தப்படுகிறது.
தகவல் சுரங்கம்

ஆயிரம் கோடி
உலகின் மக்கள்தொகை தற்போது 770 கோடி. இது 2030ம் ஆண்டில் 850
கோடியாகவும், 2050ம் ஆண்டில் 970 கோடியாகவும், 2100ம் ஆண்டில் 1,090
கோடியாகவும் அதிகரிக்கும் என ஐ.நா., மதிப்பிட்டு உள்ளது. முன்னதாக
2017ல், ஐ.நா., ஆய்வில் 2100ம் ஆண்டுக்குள் மக்கள்தொகை 1,120 கோடியாக
அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டிருந்தது. தற்போதைய ஆய்வில் வளர்ச்சி
வீதம் குறைந்துள்ளது. அடுத்த 30 ஆண்டுகளில் இந்தியா, நைஜீரியா,
பாகிஸ்தான், எத்தியோப்பியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் மக்கள்தொகை
அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TAMIL BEAUTY TRICKS

unread,
Jun 22, 2019, 10:03:11 PM6/22/19
to valluvanpaarvai, inaiat...@googlegroups.com
அறிவியல் ஆயிரம்

உருகும் இமயமலை
இமயமலை என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் சமவெளியையும் திபெத்திய மேட்டு
நிலத்தையும் பிரிக்கும் ஒரு மலைத்தொடர். இது ஆசியாவில் அமைந்துள்ளது.
உலகின் உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் இம்மலைத்தொடரில் உள்ளது. கடல்மட்டத்தில்
இருந்து 23,600 அடிக்கும் மேல் உயரமான 50 மலைத்தொடர்கள் இதில் உள்ளன.
இமயமலை பனிச்சிகரங்கள் 1975 முதல் 2000ம் ஆண்டு வரை உருகிய அளவை விட,
கடந்த 2000ம் ஆண்டிலிருந்து தற்போது வரை இமயமலை பனிச்சிகரங்கள் இரண்டு
மடங்கு அளவு அதிகமாக உருகியுள்ளன என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் சுரங்கம்

விதவைகள் தினம்
கணவனை இழந்து பரிதவிக்கும் விதவைகள் மறு வாழ்வுக்கு உதவ வலியுறுத்தி,
ஐ.நா., சார்பில் ஜூன் 23ம் தேதி உலக விதவைகள் தினம்
கடைபிடிக்கப்படுகிறது. உலகில் 25.8 கோடி விதவைகள் உள்ளனர் என ஐ.நா.,
மதிப்பிட்டுள்ளது. கணவர்களை இழந்து வாடும், இப்பெண்களின் அடிப்படை தேவை
மற்றும் அவர்களின் உரிமைகளை நிறைவேற்ற வேண்டும்
என இத்தினம் வலியுறுத்துகிறது. சொத்துகளை தர மறுத்தல், வீட்டை விட்டு
வெளியேற்றுதல், கட்டாயப்படுத்தி மறுமணம் செய்ய வைத்தல் போன்ற
துன்பங்களுக்கு இப்பெண்கள் ஆளாகின்றனர்.

TAMIL BEAUTY TRICKS

unread,
Jun 23, 2019, 9:33:39 PM6/23/19
to valluvanpaarvai, inaiat...@googlegroups.com
அறிவியல் ஆயிரம்

பச்சை நகரங்கள்

வெயில் காலத்தில், மரங்களைக் குறித்து அதிகம் நினைக்கிறோம். ஒரு மரத்தின்
நிழல் தரும் இயற்கை குளிர்ச்சியை, 100 மின்விசிறிகள் ஒருங்கிணைந்து
சுழன்றாலும் தர முடியாது என கூறுவர். ஒரு நிலப்பரப்பில் 33 சதவீதம்
காடுகள் இருக்க வேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது. சண்டிகரில் 35.7
சதவீதக் காடுகள் இருப்பதால், இந்தியாவின் 'கிரீன் சிட்டி' என
அழைக்கிறோம். மற்ற நகரங்களைப் போல இல்லாமல், சுற்றுச்சூழல்
பாதுகாப்புக்கு ஏற்றவகையில், அதிக மரங்களுடன் சண்டிகர் திட்டமிட்டு
உருவாக்கப் பட்டது.
தகவல் சுரங்கம்

'தலைநகர்' கேன்ஸ்

ஹாலிவுட், மும்பையின் பாலிவுட், தமிழகத்தின் கோலிவுட் போன்று எதுவுமே
இல்லாமல், உலக திரைப்படங்களின் தலைநகர் என்ற சிறப்பினை கேன்ஸ் நகரம்
பெற்றுள்ளது. இங்கு உலகின் தலைசிறந்த படங்கள் திரையிடப்படும். திரைப்பட
விழாக்களும் நடப்பதால், பிரான்சில் உள்ள கேன்ஸ் நகருக்கு இந்தப் பெருமை.
ஆண்டுதோறும் மே மாதம் நடக்கும் திரைப்பட விழாவுக்கு, 2 லட்சம் பேர்
கூடுகின்றனர். உலகளவில் ஊடகங்களால் அதிகம் ஒளிபரப்பு செய்யப்படும்
விழாக்களில், இது 3வது இடத்தில் உள்ளது.

TAMIL BEAUTY TRICKS

unread,
Jun 24, 2019, 9:26:10 PM6/24/19
to valluvanpaarvai, inaiat...@googlegroups.com
மூழ்கும் நிலப்பரப்புவட அமெரிக்காவில் உள்ள கிரீன்லாந்து, உலகின் பெரிய
தீவு நாடு. இது அட்லாண்டிக், ஆர்க்டிக் கடல்களின் நடுவே உள்ளது. இதன்
பரப்பளவில், நான்கில் மூன்று பங்கு பனிக்கட்டிகளால் ஆனது. இது
அண்டார்டிகாவுக்கு அடுத்து பனிக்கட்டிகள் அதிகமுள்ள பகுதி. இந்நிலையில்
இந்த நுாற்றாண்டுக்குள், கிரீன்லாந்தின் மொத்த பனிக்கட்டிகளில், 4.5
சதவீத பனிக்கட்டிகள் உருகி விடும். இது உலகளவில் கடல்நீர்மட்டம், 13
இன்ச் உயர்வதற்கு வழிவகுக்கும். மேலும் அடுத்த 3,000 ஆண்டுகளில்
கிரீன்லாந்தில் பனிக்கட்டிகளே இல்லாத சூழல் ஏற்படும் என
ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தகவல் சுரங்கம்நீளமான சுரங்கப்பாதை
மலைகளை குடைந்து சுரங்கப்பாதை அமைக்கப் படுகிறது. உலகில் உள்ள சுரங்க
சாலைகளில், நீளமான சுரங்க சாலை நார்வே நாட்டில் அமைக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள லியர்டால் மற்றும் அருள்லாந்து ஆகிய பகுதிகளை இணைக்கிறது.
1995ல் சாலை பணி தொடங்கப்பட்டது. 2000ம் ஆண்டு திறக்கப்பட்டது.
இருவழிச்சாலையாக அமைக்கப்பட்டுள்ளது. சுரங்க சாலையின் நீளம் 24.51 கி.மீ.
சுரங்கச்சாலை 30 அடி அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலை அமைப்பதற்காக
25 லட்சம் கன மீட்டர் அளவிலான பாறை கற்கள் உடைத்து எடுக்கப்பட்டன.

TAMIL BEAUTY TRICKS

unread,
Jun 25, 2019, 9:26:23 PM6/25/19
to valluvanpaarvai, inaiat...@googlegroups.com
அறிவியல் ஆயிரம்

புதிய தீயணைப்பு கருவி
பெரிய கட்டடங்களில் தானியங்கி தீயணைப்பு தடுப்பு தொழில்நுட்பம்
அமைக்கப்பட்டிருக்கும். சிறிய கட்டடங்களில், சிவப்பு நிற தீயணைப்பு
கருவி, சுவரில் பொருத்தப்பட்டிருக்கும். தீ விபத்து ஏற்பட்டால், தீயை
உடனே அணைப்பதற்கு பயன்படும். தீ விபத்து ஏற்பட்டால், எளிதாக
பயன்படுத்தும் விதமான தீயணைப்பு கருவி தென்கொரியாவில்
உருவாக்கப்பட்டுள்ளது. பூச்செடி ஜாடியை போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில்
பொட்டாசியம் கார்பனேட் நிரப்பப்பட்டுள்ளது. இதனை தீ ஏற்படும் இடத்தை
நோக்கி எறிந்தால், தீ அணைந்து விடும். பயன்படுத்துவதற்கு எளிதானது.
தகவல் சுரங்கம்

கடலுக்கு அடியில் சாலை
கிழக்கு ஆசிய நாடான ஜப்பானில் உள்ள செய்கான் சுரங்கப்பாதை, கடலுக்கு
அடியில் அமைக்கப்பட்டுள்ளது. இருவழி ரயில் பாதையாக அமைக்கப்பட்டுள்ளது.
1988ல் பயன்பாட்டுக்கு திறக்கப் பட்டது. கடல் தரைப்பகுதிக்கு கீழே 790
அடி ஆழத்தில், இந்த சுரங்க ரயில்பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஹன்சு என்ற
இடத்தில் தொடங்கி ஹொக்கைடோ என்ற இடத்தில் முடிகிறது. ரயில்பாதையின் மொத்த
நீளம் 53.85 கி.மீ. இதில் 23.3 கி.மீ., துாரம் கடலுக்கு அடியில்
அமைக்கப்பட்டுள்ளது. இப்பாதையில் ரயில் மணிக்கு 140 கி.மீ., வேகத்தில்
செல்கிறது.

TAMIL BEAUTY TRICKS

unread,
Jun 26, 2019, 9:23:56 PM6/26/19
to valluvanpaarvai, inaiat...@googlegroups.com
அறிவியல் ஆயிரம்

காபியின் ரகசியம்
காலை முதல் இரவு வரை, சிலருக்கு காபி குடிக்காமல் இருக்க முடியாது.
அதிகப்படியாக காபி குடிப்பதும் ஆபத்துதான். காபியில் உள்ள 'காபைன்'
மூளையை சுறுசுறுப்பாக்குகிறது. இதனால் துாக்கமின்மை ஏற்படும் என கூறுவர்.
ஆனால் 'காபி' குடிப்பதால் உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய்
கட்டுப்படுத்தப்படுகிறது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காபியில்
உள்ள
'காபைன்' சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது. இதனால் உடல் உற்சாகமாக
செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் சுரங்கம்

பிசியான விமான வழித்தடம்
உலகில் பெரும்பாலான நாடுகளில் விமான போக்குவரத்து வசதிகள் உள்ளன. இதில்
பிசியான சர்வதேச விமான போக்குவரத்து நடைபெறும் வழித்தடமாக சிங்கப்பூர்
முதல் மலேசியாவின் கோலாலம்பூர் வழித்தடம் திகழ்கிறது. ஒரு வழித்தடத்தில்
ஓர் ஆண்டில் இயக்கப்படும் விமானங்கள் எண்ணிக்கை அடிப்படையில் 'ஏர்
டிராபிக்' கணக்கிடப்படுகிறது. சிங்கப்பூர் - கோலாலம்பூர் வழித்தடத்தில்
ஆண்டுக்கு 30,187 விமானங்கள் பறக்கின்றன. பிசியான உள்நாட்டு விமான
போக்குவரத்து நடைபெறும் வழித்தடமாக தென்கொரியாவின் ஜிம்போ - ஜெஜூ உள்ளது.

TAMIL BEAUTY TRICKS

unread,
Jun 27, 2019, 9:17:01 PM6/27/19
to valluvanpaarvai, inaiat...@googlegroups.com
அறிவியல் ஆயிரம்
மீத்தேன் பயன்

செவ்வாய்கிரக ஆய்வில், மீத்தேன் வாயுவை கண்டறிவதும் ஒன்று. ஏனெனில்
மீத்தேன் இருப்பின், அது உயிரினங்கள் வாழ்வதற்கான ஆதாரம். உயிரினங்கள்
என்பது மனிதன், விலங்குகள் மட்டுமல்ல, நுண்ணியிரிகளாகக் கூட இருக்கலாம்.
இதன் வேதியியல் வாய்ப்பாடு சி.எச்4 (ஒரு கார்பன், 4 ஹைட்ரஜன் சேர்ந்தது).
ஒரு மீத்தேன் மூலக்கூறு, 25 கார்பன்-டை-ஆக்சைடின் மூலக்கூறுகளுக்கு சமம்.
எரியும் தன்மை கொண்டது. மீத்தேன், சமையல் எரிவாயுவில் இது முக்கிய பங்கு
வகிக்கிறது. குளிர்பதன பெட்டி தயாரிப்பு உள்ளிட்ட பலவற்றுக்கு
பயன்படுகிறது.
தகவல் சுரங்கம்

நர்மதை நதி

மத்தியபிரதேசத்தின் மைகான் மலைத்தொடரில் அமர்காண்டக் சிகரத்தில்
உற்பத்தியாகி, விந்திய சாத்பூரா மலைகளுக்கிடையே ஓடி இறுதியில்
அரபிக்கடலில் கலக்கிறது. இந்தியாவில் மேற்கு நோக்கி பாயும் நதிகளில் மிக
நீளமான நதி. நர்மதை வட இந்தியாவையும், தென்னிந்தியாவையும் பிரிக்கும்
முக்கிய நதி. குஜராத்தை வளப்படுத்தும் சர்தார் சரோவர் அணை, நர்மதை
நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. ம.பி., மஹாராஷ்டிரா, குஜராத் ஆகிய
மாநிலங்கள் இந்நதியால் பயனடைகின்றன. இந்நதியின் நீளம் 1,312 கி.மீ. இது
புண்ணிய நதியாக கருதப்படுகிறது.

TAMIL BEAUTY TRICKS

unread,
Jun 28, 2019, 9:02:08 PM6/28/19
to valluvanpaarvai, inaiat...@googlegroups.com
ஏரியாக மாறும் பனிக்கட்டி
கிரீன்லாந்து பனிக்கட்டிகளின் கீழே மறைந்திருந்த, திரவ நிலையில் உள்ள 54
புதிய ஏரிகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு முன்,
பனிக்கட்டிகளின் கீழ், 4 ஏரிகள் மட்டுமே இருந்தன. அண்டார்டிகா
பனிக்கட்டிகளின் கீழே, திரவ நிலையில் 470 ஏரிகள் உள்ளன என
ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கிரீன்லாந்தின் மொத்த
பனிக்கட்டிகளும் உருகினால், அது உலகின் கடல்நீர்மட்டம் 22 அடி உயர
காரணமாக அமையும். வெப்பநிலை உயர்வு காரணமாக, கிரீன்லாந்து பனிக்கட்டிகள்
உருகத்தொடங்கியுள்ளன.

தகவல் சுரங்கம்

உயரமான மேம்பாலம்
உலகில் உள்ள மேம்பாலங்களில், உயரமாக கட்டப் பட்ட மேம்பாலம் பிரான்சில்
கட்டப்பட்டு உள்ளது. அங்குள்ள மில்லவ் நகரில் ஜார்ஜ் பள்ளத்தாக்கில்
இப்பாலம் உள்ளது. தரைப்பகுதியில் இருந்து பாலத்தின் உயரம் 1,104 அடி.
மூன்று ஆண்டுகளில் பணி முடிக்கப்பட்டு 2004ல் பாலம் திறக்கப்பட்டது.
கான்கிரீட் மற்றும் இரும்பினால் அமைக்கப்பட்டுள்ளது. பாலத்தின் நீளம்
8,070 அடி. அகலம் 105.2 அடி. பாலம் அமைப்பதற்கான செலவு ரூ.3,094 கோடி.
உலகின் 2வது உயரமான மேம்பாலம் துருக்கியின் இஸ்தான்புலில் உள்ளது. இதன்
உயரம் தரையிலிருந்து 1,056 அடி.

TAMIL BEAUTY TRICKS

unread,
Jun 30, 2019, 12:33:53 PM6/30/19
to valluvanpaarvai, inaiat...@googlegroups.com
அறிவியல் ஆயிரம்

குறையும் மன அழுத்தம்
சமூக வலைதளங்களை பயன்படுத்துவதன் மூலம், ஒருவருக்கு மன அழுத்தம், பதட்டம்
போன்றவை, 1.63 மடங்கு குறைகிறது என அமெரிக்காவின் மெச்சிகன் பல்கலைக்கழக
ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களை
பயன்படுத்தல் என்பது இளைஞர்களுக்கு மனதை உற்சாகமாக வைக்கிறது. சமூக
வலைதளங்களால் தகவல் தொடர்பு எளிதாகிறது. நண்பர்கள் மற்றும் உறவுகள்
வட்டத்தை பெருக்கிக்கொள்ள முடிகிறது. 13 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட
ஆய்வில், 63 சதவீதம் பேர் தங்களது மன அழுத்தம் குறைகிறது என
தெரிவித்துள்ளனர்.


தகவல் சுரங்கம்

விண்வெளியில் வலம்
விண்வெளி துறையில் இன்று பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்படுகின்றன.
முதன்முதலில் விண்வெளிக்கு சென்று சாதனை படைத்த வீரர் யூரி காகரின். இவர்
ரஷ்யாவை சேர்ந்த இவர் 1934 மார்ச் 9ல் பிறந்தார். விமான ஓட்டுநர் பயிற்சி
பெற்ற இவர், 1961 ஏப்., 12ம் தேதி, ரஷ்யா விண்வெளி மையம் சார்பில்,
விண்ணுக்கு வெற்றிகரமாக அனுப்பப்பட்ட 'வோஸ்டாக்' விண்கலம் மூலம்
விண்வெளிக்கு சென்றார். 108 நிமிடங்கள் விண்வெளியை வலம் வந்தார். இவர்
பல்வேறு நாடுகளின் விருதுகளை பெற்றுள்ளார். 1968ல் 34 வயதில் மறைந்தார்.

TAMIL BEAUTY TRICKS

unread,
Jun 30, 2019, 9:26:45 PM6/30/19
to valluvanpaarvai, inaiat...@googlegroups.com
அறிவியல் ஆயிரம்

வெப்பமான நாள்
பிரிட்டனில் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை கோடைகாலம் நிலவும். பிரிட்டனில்
இந்தாண்டு அதிகபட்ச வெப்ப நிலை ஜூன் 29ல் பதிவானது. அதாவது இங்கிலாந்து
தலைநகர் லண்டன் மற்றும் தெற்கு இங்கிலாந்து பகுதிகளில் ஜூன் 29ல் 95
டிகிரி பாரன்ஹீட்
(35 டிகிரி செல்சியஸ்) வெப்பநிலை பதிவானது. இதுவே இந்தாண்டு இதுவரை பதிவான வெப்ப
நிலையில் அதிகபட்சம். ஆனால் பிரிட்டன் வரலாற்றில் அதிகபட்ச வெப்பநிலை
என்பது 1976ம் ஆண்டு சவுத்தாம்டன் நகரில் 96.08 டிகிரி பாரன்ஹீட் (35.6
டிகிரி செல்சியஸ்) வெப்பநிலை பதிவானது.

தகவல் சுரங்கம்

முதல் பெண்மணி
உலகின் உயரமான சிகரம் எவரெஸ்ட். இதன் உயரம் 29,029 அடி. இச்சிகரத்தில்
முதலில் ஏறி சாதனை படைத்த பெண்மணி என்ற பெருமைக்குரியவர் ஜூன்கோ தபேய்.
1939ல் ஜப்பானின் புகுஷிமாவில் பிறந்த இவர், 10 வயதில் இருந்து மலையேற்ற
பயிற்சியை தொடங்கினார். ஜப்பானில் உள்ள நாசு மலையில் ஏறி சாதித்தார்.
ஆங்கில பட்டப்படிப்பு முடித்தவர். 1975ல் எவரெஸ்ட் சிகரத்தில்வெற்றிகரமாக
ஏறினார். மேலும் இவர், உலகின் ஏழு உயரமான மலைகளில் ஏறிய முதல் பெண்மணி
என்ற சாதனை யையும் படைத்துள்ளார். 2016ல் இவர் மறைந்தார்.

TAMIL BEAUTY TRICKS

unread,
Jul 2, 2019, 9:10:14 PM7/2/19
to valluvanpaarvai, inaiat...@googlegroups.com
அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் கடந்த மே 25 முதல் ஜூன் 19 வரை
மட்டும் 1,060 சிறிய வகை நில அதிர்வு ஏற்பட்டுள்ளது என கலிபோர்னியா
இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி தெரிவித்துள்ளது. இவற்றில் பெரும்பாலானவை 2
ரிக்டர் அளவுக்கு கீழும், சில 3.2 ரிக்டர் அளவுக்கு கீழும் பதிவாகியது.
இதனால் இந்த நில அதிர்வை மக்களால் உணர முடியவில்லை. கலிபோர்னியாவில்
தினமும், 1 ரிக்டர் அளவுக்கு கீழ், மூன்று நில அதிர்வு ஏற்படுகிறது.
1994ல் 6.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 72 பேர் பலியாகினர்.

தகவல் சுரங்கம்: முதல் பெண் அமைச்சர்
இந்தியாவின் முதல் பெண் மத்திய அமைச்சர் என்ற பெருமைக்குரியவர்
ராஜ்குமாரி அம்ரித் கவுர். இவர் 1889ல் உ.பி.,யின் லக்னோவில் பிறந்தார்.
பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலையில் பட்டம் பெற்றவர். நேரு
அமைச்சரவையில் நாட்டின் முதல் சுகாதார துறை அமைச்சராக பதவி வகித்தார்.
1947 முதல் 1957 வரை பத்தாண்டுகள் பதவியில் இருந்தார். சுதந்திர போராட்ட
வீராங்கனை, சமூக ஆர்வலர் மற்றும் காந்திய கொள்கையை கடைபிடித்தவர்.
அனைத்து இந்திய பெண்கள் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் செயலர் பதவிகளை
வகித்துள்ளார்.

TAMIL BEAUTY TRICKS

unread,
Jul 3, 2019, 8:53:04 PM7/3/19
to valluvanpaarvai, inaiat...@googlegroups.com
மேற்கு ஐரோப்பாவில் கடந்த ஜூன் மாதம், வெப்பமான மாதமாக பதிவாகியது என
செயற்கைக்கோள் பதிவுகள் தெரிவிக்கின்றன. ஐரோப்பாவில் கடந்த ஆண்டு ஜூன்
மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்தாண்டு ஜூனில் சராசரியாக 2 டிகிரி
செல்சியஸ் வெப்பம் கூடுதலாக பதிவாகியுள்ளது. உலகளவில் கடந்தாண்டு ஜூனுடன்
ஒப்பிடும் போது, இந்தாண்டு ஜூனில் வெப்பநிலை 0.1 டிகிரி செல்சியஸ்
அதிகரித்துள்ளது. ஐரோப்பாவில் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும்
ஸ்பெயின் ஆகிய நாடுகளில் இந்தாண்டு வெப்பம் கூடுதலாக இருந்தது என
தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் சுரங்கம் : முதல் இந்தியர்

ஆங்கில கால்வாயை நீந்தி கடந்த முதல் இந்தியர் என்ற பெருமைக்குரியவர்
மிஹிர் சென். மேற்கு வங்கத்தில் 1930ல் பிறந்தார். சட்டம் முடித்த இவர்,
இங்கிலாந்து சென்றார். 1950ல் புளோரன்ஸ் சாட்விக் என்பவர் ஆங்கில
கால்வாயை நீந்தி கடந்த முதல் அமெரிக்கர் என்ற செய்தியை படித்தார். இதனால்
ஆர்வமடைந்த இவர், 1958ம் ஆண்டு ஆங்கில கால்வாயில் தோவர் என்ற
இடத்திலிருந்து கலாய்ஸ் வரை நீந்தி சாதித்தார். மொத்தம் 14 மணி நேரம்
மற்றும் 45 நிமிடத்தில் இத்துாரத்தை கடந்தார். பத்ம பூஷன், பத்மஸ்ரீ
உள்ளிட்ட சில விருதுகளை பெற்றுள்ளார்.

TAMIL BEAUTY TRICKS

unread,
Jul 4, 2019, 9:12:24 PM7/4/19
to valluvanpaarvai, inaiat...@googlegroups.com
உலகில் ஆண்டுதோறும் 200 கோடி டன் திட கழிவு குப்பைகள்
உருவாக்கப்படுகின்றன. இது 8 லட்சம் ஒலிம்பிக் போட்டியின் நீச்சல் குளத்தை
நிரப்புவதற்கு சமம். உலகின் சராசரி குப்பைகளின் அளவை விட, அமெரிக்கர்கள்
மூன்று மடங்கு அதிகமாக பிளாஸ்டிக் மற்றும் உணவு கழிவுகளை
உருவாக்குகின்றனர். குப்பைகளை மறுசுழற்சி செய்வதிலும், அமெரிக்கா
பின்தங்கி உள்ளது. இங்கு 35 சதவீத குப்பைகள் மட்டுமே மறுசுழற்சி
செய்யப்படுகின்றன. மறுசுழற்சி செய்வதில் ஜெர்மனி முதலிடத்தில் உள்ளது.
அங்கு 68 சதவீத குப்பைகள் மறுசுழற்சி செய்யப்படுகின்றன.

தகவல் சுரங்கம்: முதல் தலைவர்
காங்., தலைவர் பதவியை ராகுல் சமீபத்தில் ராஜினாமா செய்தார்.
நுாற்றாண்டுகள் கடந்த காங்கிரசின் முதல் தலைவராக பதவி வகித்தவர்
டபிள்யு.சி. பானர்ஜி. 1844ல் கோல்கட்டாவில் பிறந்தார். சட்டம் படித்த
இவர், 1885ல் தலைவரானார். மும்பையில் நடந்த காங்., மாநாட்டில் தலைவராக
தேர்வானார். மீண்டும் 1892ல் தலைவரானார். காங்., கட்சியின் இரண்டாவது
தலைவராக 1886ல் பதவி வகித்தவர் தாதாபாய் நவுரோஜி. பின் பத்ருதின்
தியாப்ஜி, ஜார்ஜ் யூல், வில்லியம் வெட்டர்பர்ன், மேஹ்தா, அனந்தசார்லு
ஆகியோர் அடுத்தடுத்து தலைவர்களாக இருந்தனர்.

TAMIL BEAUTY TRICKS

unread,
Jul 5, 2019, 9:14:09 PM7/5/19
to valluvanpaarvai, inaiat...@googlegroups.com
இன்றைய பள்ளி குழந்தைகள் முதுகில் சுமந்து செல்லும் புத்தக பை அதிக
எடையுள்ளதாக இருக்கிறது. எல்.கே.ஜி., படிக்கும் குழந்தைகள் கூட அதிக
புத்தகங்களை சுமக்க நேரிடுகிறது. சில நாடுகளில் புத்தகங்களுக்கு பதிலாக,
கம்ப்யூட்டர் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் குழந்தைகளின் எடையில்,
10 சதவீத எடைமிக்க புத்தக பைகளை மட்டுமே, குழந்தைகள் பயன்படுத்த
வேண்டும். அதே போல ட்ரோலி எனப்படும் தள்ளிச்செல்லக்கூடிய பைகளை
பயன்படுத்துபவர்கள், 20 சதவீத எடைமிக்க புத்தகங்களை கொண்டு செல்ல
வேண்டும் என பிரிட்டன் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தகவல் சுரங்கம்: காண்டாமிருகங்களுக்கு சிறப்பு படை
காசிரங்கா தேசிய பூங்காவில், காண்டாமிருகங்களை பாதுகாக்க சிறப்பு படையை
அம்மாநில அரசு உருவாக்கி உள்ளது. இப்படையில் 82 பேர்
நியமிக்கப்பட்டுள்ளனர். காண்டாமிருகங்கள் வேட்டையாடப்படுவதை தடுப்பதே
இதன் நோக்கம். காசிரங்கா பூங்கா, அசாம் மாநிலத்தில் கோலாகாட் மற்றும்
நாகவுன் மாவட்டத்தில் உள்ளது. இங்கு 2,413 காண்டாமிருகங்கள் உள்ளன. இங்கு
புலிகள் காப்பகமும் உள்ளது. இது 1980ல் உருவாக்கப்பட்டது. 1985ல்
யுனெஸ்கோவின் பாரம்பரிய பண்பாட்டு சின்னங்கள் பட்டியலில்
சேர்க்கப்பட்டது. இதன் பரப்பளவு 430 சதுர கி.மீ.

TAMIL BEAUTY TRICKS

unread,
Jul 7, 2019, 9:17:11 AM7/7/19
to valluvanpaarvai, inaiat...@googlegroups.com
இன்றைய சூழலில் குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை, 'ஒபிசிட்டி' எனப்படும்
உடல் பருமன் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு
உடற்பயிற்சியின்மை, தவறான உணவு பழக்கவழக்கம் போன்ற பல காரணங்கள் உள்ளன.
உடல் பருமனாக இருப்பவர்களுக்கு 13 விதமான கேன்சர் ஏற்படுவதற்கு வாய்ப்பு
உள்ளது என பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
பிரிட்டனில் ஆண்டுதோறும் புகை பிடிப்பவர்களை விட, உடல் பருமனாக
இருப்பவர்கள் தான் அதிகளவில் கேன்சரால் பாதிக்கப்படுகின்றனர் என
பிரிட்டிஷ் தொண்டு நிறுவனம் தெரிவிக்கிறது.

தகவல் சுரங்கம் : அனுபவ எம்.பி.,க்கள்
பதினேழாவது லோக்சபாவில் உள்ள எம்.பி.,க்களில், அதிகமுறை எம்.பி., என்ற
பெருமையை மேனகா (பா.ஜ.,) மற்றும் சந்தோஷ்குமார் கேங்வார் (பா.ஜ.,)
பெற்றுள்ளனர். இருவரும் எட்டு முறை லோக்சபாவுக்கு தேர்வாகியுள்ளனர்.
இதற்கடுத்து தற்போதைய எம்.பி.,க்களில், ஏழு முறை லோக்சபாவுக்கு தேர்வான
வர்கள் பட்டியலில் மோகன்பாய் சான்ஜிபாய் (சுயேச்சை), சுரேஷ் கொடிகுனில்
(காங்.,), வீரேந்திர குமார் (பா.ஜ.,), முலாயம் சிங் யாதவ் (சமாஜ்வாடி)
ஆகிய 4 எம்.பி.,க்கள் இடம்பெற்றுள்ளனர். அடுத்து ஆறு முறை லோக்சபாவுக்கு
தேர்வானவர்களில், 11 எம்.பி.,க்கள் உள்ளனர்.

TAMIL BEAUTY TRICKS

unread,
Jul 7, 2019, 9:17:45 PM7/7/19
to valluvanpaarvai, inaiat...@googlegroups.com
குரங்கு ஒரு பாலுாட்டி விலங்கு. வால் நீளம் தவிர்த்து 16 செ.மீ., முதல்
ஒரு மீட்டர் உயரம் வரை என பல வகைகள் உள்ளன. பழம், இலை, பூச்சிகள்
போன்றவற்றை உண்கின்றன. 'குரங்கில் இருந்து மனிதன் தோன்றினான்' என்ற
பரிணாம வளர்ச்சிக் கொள்கையை டார்வின் முன்மொழிந்தார். இந்நிலையில்
பருவநிலை மாற்றத்தால், தென் அமெரிக்காவில் குரங்குகள் இனம் அழியும்
சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க ஆய்வு தெரிவித்து உள்ளது. அதிகரிக்கும்
வெப்பநிலையால் அடுத்த 30 ஆண்டுகளில் குரங்குகள், மனித குரங்கு உள்ளிட்ட
பல்வேறு வகை குரங்கினங்கள் அழிவை சந்தித்துள்ளன.

தகவல் சுரங்கம்: நீளமான ஏரி
கேரளாவில் உள்ள வேம்பநாடு ஏரி, இந்தியாவின் நீளமான ஏரி என
அழைக்கப்படுகிறது. இதன் பரப்பளவு 2,114 சதுர கி.மீ. ஆழப்புலா, கோட்டையம்
மற்றும் கொச்சி ஆகிய மாவட்டங்களில் இந்த ஏரி பரவி உள்ளது. இந்த ஏரியில்
'நேரு படகு போட்டி' ஆண்டுதோறும் நடக்கிறது. இதன் அதிகபட்ச நீளம் 96.5
கி.மீ. அதிகபட்ச அகலம் 14 கி.மீ. அதிகபட்ச ஆழம் 39 அடி. இந்த ஏரியில்
பதிரமானல், பெரும்பாலம், பல்லிபுரம் போன்ற தீவுகள் உள்ளன. இதில் உள்ள
படகு வீடுகள், சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்க்கிறது. பெரியாறு, பம்பா,
மீனச்சில் போன்ற ஆறுகள் இதில் கலக்கின்றன.

TAMIL BEAUTY TRICKS

unread,
Jul 8, 2019, 9:00:34 PM7/8/19
to valluvanpaarvai, inaiat...@googlegroups.com
இந்தியாவில் 2019 ஜன.31ன் படி, அகல ரயில் பாதைகளின் இடையே குறுக்கிடும்
ஆளில்லா லெவல் கிராசிங் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு
தெரிவித்துள்ளது. மூடுதல், சுரங்கப்பாதை, பணியாளர்களை நியமித்தல் போன்றவை
மூலம் ஆளில்லா லெவல் கிராசிங் இல்லாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது. ரயில்
பாதைகளில் 93 சதவீதம் அகல ரயில் பாதை (1,20,000 கி.மீ.)
மாற்றப்பட்டுள்ளது. மீட்டர் கேஜ் ரயில் பாதைகளில் 1,500 ஆளில்லா லெவல்
கிராசிங் இன்னும் மூடப்படாமல் உள்ளது. இதையும் ஒழிக்க ரயில்வே நடவடிக்கை
எடுத்து வருகிறது.

தகவல் சுரங்கம் : நீளமான ரயில் பாதை
இந்திய ரயில்வே 18 மண்டலங்களைக் கொண்டது. இதில் ஒன்று தெற்கு மத்திய
ரயில்வே. இந்த மண்டலம் சார்பில் சமீபத்தில் புதிதாக சுரங்க மின் ரயில்
பாதை திறக்கப்பட்டது. இதன் நீளம் 6.6 கி.மீ. உயரம் 21 அடி. இதுதான்
இந்தியாவின் நீளமான சுரங்க மின் ரயில் பாதை என அழைக்கப்படுகிறது. இது
ஆந்திராவின் நெல்லுார் மாவட்டத்தில் செர்லோபள்ளி முதல் ராபுரு ரயில்
நிலையம் வரை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விஜயவாடா - கூடூர் ரயில்
பாதையில் போக்குவரத்து நெரிசல் குறையும். இந்த சுரங்கப்பாதை பணி 43
மாதத்தில் முடிக்கப்பட்டுள்ளது.

TAMIL BEAUTY TRICKS

unread,
Jul 9, 2019, 9:08:32 PM7/9/19
to valluvanpaarvai, inaiat...@googlegroups.com
அறிவியல் ஆயிரம்: ஆபத்தில் சுறா
பதிவு செய்த நாள் : ஜூலை 10, 2019 00:00
Google404. That’s an error.The requested URL was not found on this
server. That’s all we know.
Advertisement
Colors:




அ+
அ-
Print
e-mail
Post Comments
சுறா என்றாலே பயம் தான். இது சாதாரணமாக மனிதர்களை தாக்கி இரையாக்கி
விடும். வேகமாக நீந்த வல்ல பெரிய மீன் வகைகளில் ஒன்று. இவை கூர்மையான பல
பற்களைக் கொண்டுள்ளது. சுறா மீன்களுக்கு வாழ்நாள் முழுவதும் பல் வளர்ந்து
கொண்டே இருக்கும். பல வகை சுறாக்கள் வாழ்கின்றன. இவை மீன் உள்ளிட்ட
கடல்வாழ் உயிரினங்களை உண்கிறது. இந்நிலையில் உலகளவில் கடலில் கலக்கும்
பிளாஸ்டிக் மாசுபாட்டால், சுறா இனங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
பிரிட்டனில் ஆய்வு நடத்திய விஞ்ஞானிகள், 557 சுறா மீன்கள் உடலில்
பிளாஸ்டிக் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

தகவல் சுரங்கம்: விண்வெளி சுற்றுலா பயணி
அமெரிக்காவை சேர்ந்தவர் டென்னிஸ் டிட்டோ. 1940ல் பிறந்த இவர் ஒரு
ஏரோநாட்டிகல் இன்ஜினியர் மற்றும் தொழிலதிபராக விளங்கியவர். மேலும் இவர்
தான் உலகின் முதல் விண்வெளி சுற்றுலாப் பயணி என அழைக்கப்படுகிறார். 2001
ஏப்.,28ல் விண்வெளி அமைக்கப்பட்டுள்ள, சர்வதேச விண்வெளி மையத்துக்கு
சுற்றுலா சென்றார். ரஷ்யாவின் 'சோயுஜ் டி.எம் - 32' விண்கலம் மூலம்
விண்வெளிக்கு பயணித்தார். ஏழு நாட்கள் மற்றும் 22 மணி மற்றும் 4 நிமிடம்
விண்வெளியில் தங்கியிருந்தார். இவர் தன் விண்வெளி பயணத்துக்காக, ரூ.137
கோடி பயணக்கட்டணமாக செலுத்தினார்.

TAMIL BEAUTY TRICKS

unread,
Jul 10, 2019, 9:11:23 PM7/10/19
to valluvanpaarvai, inaiat...@googlegroups.comn
உலகளவில் வெப்பநிலை உயர்வு பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இதனால்
உணவு உற்பத்தி பாதிப்பு, வறட்சி, கடல்நீர்மட்டம் உயர்வு போன்ற
பாதிப்புகள் காத்திருக்கின்றன. 2050க்குள் வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி
செல்சியஸ்க்கு மேல் அதிகரிக்காமல் இருக்க வேண்டும் என விஞ்ஞானிகள் இலக்கு
நிர்ணயித்து உள்ளனர். இதை நிறைவேற்ற, உலகளவில் புதிதாக 100 கோடி எக்டேர்
பரப்பளவில் காடுகளை அதிகப்படுத்த வேண்டும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
அதிகளவிலான மரங்களை நடுவது, வெப்பநிலை உயர்வை கட்டுப்படுத்தும் என
தெரிவித்துள்ளனர்.

தகவல் சுரங்கம்: நோபல் பரிசுக்கு மாற்று
சுவீடனின் ஜேக்கப் வோன் யுக்ஸ்குல் என்பவர் 1980ல் 'ரைட் லைவ்லி ஹூட்'
என்ற விருதை உருவாக்கினார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மனித உரிமை,
தன்னிறைவு வளர்ச்சி, சுகாதாரம், கல்வி மற்றும் அமைதி ஆகிய பிரிவுகளில்
உலகளவில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் இந்த விருது
வழங்கப்படுகிறது. இது நோபல் பரிசுக்கு மாற்று விருது என கருதப்படுகிறது.
ஆனால் இவ்விருதுக்கும் நோபல் பரிசுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.
இந்த விருதுக்கு வழங்கப்படும் மொத்த பரிசுத்தொகை ரூ.1.5 கோடி. இது தேர்வு
செய்யப்படுபவர்களுக்குள் பகிர்ந்து அளிக்கப்படுகிறது.

Palaniappan kandasamy

unread,
Jul 11, 2019, 10:33:11 AM7/11/19
to brail...@googlegroups.com
என்றைக்கு தொழில் புரட்சி ஏற்பட்டதோ அன்றே பிதித்தது சனியன்; அதன் பிறகுதான் கருப்புப்ரதேசம், அமிலமழை சூழல்மாசு இவ்வனைத்தின் காரணமாக பூமி சூதேற்றம் முதலியன. நமது பேராசையால் நாம் உருவாக்கிய மாசுகளை எப்படிக்களைவது? நிலத்திலும் நீரிலும் உள்ள மாசுகளை மரு ஆக்கம் செய்வோம். நமது தேவைக்காக பூமியிலுள்ள மலை நதிகள் சுரங்கங்கள் ஆகியவற்றிலிருந்து பொருட்களை எடுப்பதை விடுத்து ப்ளாஸ்ட்டிக் மரம் போன்ற பயிர்செய்யக்கூடிய மற்றும் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களை பயன்படுத்துவோம். வீடுகளைப்போல் சாலைகளையும் மாடிச்சாலை அமைப்போம். நகரங்களை பக்கவாட்டில் வளர்வதை கட்டுப்படுத்தி உயரமாக வளர்ப்போம். எதுவுமே செய்யமுடியாத அணுக்கழிவுபோன்றவற்றை நமது வாயுமண்டலத்தை தாண்டி வானவெளியில் செவ்வாயை நோக்கி வீசிவிடுவோம். இனிக்கழிவுகள் உருவாகாமல் பார்த்துக்கொள்வோம். அப்போதுதான் நமது சந்ததிக்கு வாழ்வதற்குத்தகுதியான உலகத்தை அளிக்கமுடியும். நன்றி, வாழ்க. உயர்ந்த இடத்திலிருந்தால் ஒளிவிளக்காயிருக்கவேண்டும்.
கந்த பழனியப்பன், தொலைத்தொடர்புத்துரை வாழ்வூதியர், கோவை 4.
--
--
You received this message because you are subscribed to the Google
Groups "Brailleacl" group.
To post to this group, send email to brail...@googlegroups.com
To unsubscribe from this group, send email to
brailleacl+...@googlegroups.com

---
You received this message because you are subscribed to the Google Groups "Brailleacl" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to brailleacl+...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/brailleacl/CAGdjB30Ps4%3Ds3A23KSpV6xu8jy8JJ%3DuxBPTxGPcRUp1%3DYK2iPg%40mail.gmail.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


---
This email has been checked for viruses by Avast antivirus software.
https://www.avast.com/antivirus

TAMIL BEAUTY TRICKS

unread,
Jul 11, 2019, 9:07:54 PM7/11/19
to valluvanpaarvai, inaiat...@googlegroups.com
மனிதர்களுக்கு வயது அதிகரிக்க அதிகரிக்க நுரையீரல் செயல்பாடு குறைவது
வழக்கம். ஆனால் மாசுபாடான காற்றை சுவாசிப்பதால் நுரையீரல் செயல்பாட்டில்
பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக 'நாள்பட்ட நுரையீரல் அடைப்பு
நோய் (சி.ஓ.பி.டி.,)' ஏற்படுகிறது. பிரிட்டனில் 3 லட்சம் பேரிடம்
நடத்தப்பட்ட ஆய்வின்படி, இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக
மரணங்களில், சி.ஓ.பி.டி., நோய் மூன்றாம் இடம் வகிக்கிறது. அடுத்த
பத்தாண்டுகளில் இந்நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்
என மதிப்பிடப்பட்டுள்ளது.

தகவல் சுரங்கம்: அமெரிக்கா முதலிடம்
வாகனங்கள் இயங்குவதற்கு முக்கிய தேவை பெட்ரோல், டீசல். இது கச்சா
எண்ணெய்யிலிருந்து சுத்திகரிக்கப்பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது. உலகின்
கச்சா எண்ணெய் உற்பத்தியில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இங்கு 'ஒரு
நாளைக்கு 1.78 கோடி பேரல்' என்ற அளவில் கச்சா எண்ணெய் உற்பத்தி
செய்யப்படுகிறது. இது உலகின் கச்சா எண்ணெய் உற்பத்தியில் 18 சதவீதம்.
இரண்டாவது இடத்தில் சவுதி அரேபியா (ஒரு நாளைக்கு 1.24 கோடி பேரல்),
மூன்றாவது இடத்தில் ரஷ்யா (ஒரு நாளைக்கு 1.14 கோடி) உள்ளது. அடுத்தடுத்த
இடங்களில் கனடா, சீனா, ஈராக் உள்ளன.

TAMIL BEAUTY TRICKS

unread,
Jul 12, 2019, 9:21:22 PM7/12/19
to valluvanpaarvai, inaiat...@googlegroups.com
உலகளவில் தற்போது 'செயற்கை நுண்ணறிவு' ஆராய்ச்சி வேகமெடுத்து வருகிறது.
பல்வேறு நாடுகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் பற்றிய ஆய்வு
நடக்கிறது. செயற்கை நுண்ணறிவு என்பது இயந்திரங்களின் நுண்ணறிவு மற்றும்
இதனை உருவாக்குவதை நோக்கமாக கொண்ட கணினி அறிவியலின் ஒரு பிரிவு. கணினி
அறிவியலில் பல மிக கடினமான பிரச்னைகளை தீர்ப்பதற்கு உதவுகிறது.
இந்நிலையில் இன வேறுபாடு மற்றும் ஆண் - பெண் பாகுபாடு உள்ளதா என்பதை
அறியும் 'செயற்கை நுண்ணறிவு' தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகள்
உருவாக்கியுள்ளனர்.

தகவல் சுரங்கம்: அஞ்சல் குறியீடு
இந்திய தபால் துறையில் 'பின் கோடு' எனப்படும் அஞ்சல் குறியீட்டு எண் முறை
முக்கிய பங்கு வகுக்கிறது. அஞ்சல் சேர வேண்டிய முகவரியை சரியாக
கண்டுபிடிக்க உதவுகிறது. இது 1972 ஆக., 15ல் ஸ்ரீராம் பிகாஜி வேலங்கர்
என்பவரால் அறிமுகமானது. இது ஆறு இலக்க எண் கொண்டது. முதல் எண் மண்டலத்தை
குறிக்கிறது. இரண்டாவது எண் துணை மண்டலத்தையும், மூன்றாவது எண் மண்டலம்
மற்றும் துணை மண்டலத்துக்கு கீழ் வரும் மாவட்டத்தையும், அடுத்த மூன்று
எண்கள் அந்த மாவட்டத்தில் உள்ள சம்பந்தப்பட்ட தபால் நிலையத்தை
குறிக்கிறது.

TAMIL BEAUTY TRICKS

unread,
Jul 14, 2019, 9:04:02 PM7/14/19
to valluvanpaarvai, inaiat...@googlegroups.com
found on this server. That’s all we know.
Advertisement
Colors:




அ+
அ-
Print
e-mail
Post Comments
அண்டார்டிகாவில் உள்ள பெரிய பனிப்பாறை 'லார்சன் சி'. இந்த பனிப்பாறையில்
இருந்து, ஒரு பகுதியான 'ஏ - 68' என்ற பனிப்பாறை, இரண்டு ஆண்டுகளுக்கு
முன் உடைந்தது. இதன் பரப்பளவு 5,800 சதுர கி.மீ. இந்த பனிப்பாறை அளவு
என்பது லண்டன் நகரை விட, நான்கு மடங்கு பெரியது. இதன் நீளம் 160 கி.மீ.,
இது தற்போது 250 கி.மீ., துாரம் பயணித்து தெற்கு ஜார்ஜியா அருகில்
உள்ளது. அதே போல இந்த பனிப்பாறை 270 டிகிரி திரும்பியுள்ளது. உலகளவில்
அண்டார்டிகா மற்றும் கிரீன்லாந்தில் உள்ள பனிப்பாறைகள் உருகுவதால்,
கடல்நீர்மட்டம் உயரும் ஆபத்து உள்ளது.

தகவல் சுரங்கம் : ஆப்ரிக்காவின் பெரிய நாடு


உலகில் ஐரோப்பா, ஆசியா, ஆப்ரிக்கா, அண்டார்டிகா, வட அமெரிக்கா, தென்
அமெரிக்கா, ஆஸ்திரேலியா என ஏழு கண்டங்கள் உள்ளன. இதில் பரப்பளவு
அடிப்படையில் ஆப்ரிக்கா கண்டத்தில் உள்ள பெரிய நாடு அல்ஜீரியா. இதன்
பரப்பளவு 23.81 லட்சம். இது உலகளவில் பரப்பளவு அடிப்படையில் 10வது பெரிய
நாடு. இது துனிசியா, லிபியா, மொராக்கோ, மேற்கு சஹாரா, நைஜர் போன்ற
நாடுகளை எல்லைகளாகக் கொண்டுள்ளது. உலகளவில் கச்சா எண்ணெய் உற்பத்தியில்
அல்ஜீரியா 16வது இடத்தில் உள்ளது. இதன் மக்கள்தொகை 4.2 கோடி.

TAMIL BEAUTY TRICKS

unread,
Jul 17, 2019, 9:24:48 PM7/17/19
to valluvanpaarvai, inaiat...@googlegroups.com
அறிவியல் ஆயிரம்

சூரிய கிரகணம்

ஆண்டுதோறும் சூரிய கிரகணங்கள் ஏற்படுகின்றன. நிலவு தன் பாதையில் பூமியை
சுற்றி வரும் போது, ஒரு சமயத்தில் சூரியன் - பூமிக்கு இடையே வரும்.
அப்போது சூரிய ஒளிக்கதிர்களை நிலா மறைப்பதால், அதன் நிழல் பூமியில்
விழுகிறது. இதனால் பூமியில் இருந்து பார்ப்பவர்களுக்கு சில நிமிடங்கள்
சூரியனின் ஒரு பகுதியோ அல்லது முழுமையுமோ தெரிவதில்லை. இது 'சூரிய
கிரகணம்' என அழைக்கப்படுகிறது. சூரியன், நிலவு மற்றும் பூமி ஒரே
நேர்கோட்டில் இருக்கும் வரும்போது ஏற்படுகிறது. அமாவாசையன்று
ஏற்படுகிறது. ஆனால் அனைத்து அமாவாசையும் ஏற்படுவதில்லை.

தகவல் சுரங்கம்

நீளமான நதி
ஆஸ்திரேலியாவின் நீளமான ஆறு என அழைக்கப் படுவது முரே ஆறு. இதன் நீளம்
2,508 கி.மீ. ஆஸ்திரேலியாவின் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் உருவாகி மேற்கு
ஆஸ்திரேலிய மலைப்பகுதிகள் வழியாக கீழிறங்கி உட்புற சமவெளி பகுதிகளில்
பாய்கிறது. இந்த ஆறு நியூசவுத்வேல்ஸ், விக்டோரியா நகரங்கள் இடையே
எல்லையாக திகழ்கிறது. இது பல்வேறு ஏரிகள் வழியே பாய்கிறது. இறுதியாக
இந்திய பெருங்கடலின் தென்கிழக்கு பகுதியில் கலக்கிறது. 2010ம் ஆண்டு
நிலவரப்படி முர்ரே ஆற்றுக்கு 58 சதவீதம் இயற்கையான நீர்வரத்து உள்ளது.

TAMIL BEAUTY TRICKS

unread,
Jul 18, 2019, 9:06:35 PM7/18/19
to valluvanpaarvai, inaiat...@googlegroups.com
அறிவியல் ஆயிரம்

செலவின் வகைகள்
ஒவ்வொருவரும் பணத்தை விருப்பமான மற்றும் பல்வேறு தேவைகளுக்கு செலவு
செய்கின்றனர். ஆனால் ஒருவரது செலவு செய்யும் பழக்க வழக்கம், அவரின்
தனித்தன்மை
என்ன என்பதை காட்டுகிறது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில்
2,000 பேரிடம் நடத்திய ஆய்வில், அவர்களது கிரடிட் மற்றும் டெபிட் கார்டு,
ஆன்லைன் பரிமாற்றம் ஆகியவற்றின் பயன்பாடுகள் குறித்து கேட்கப்பட்டது.
இதில் விமான டிக்கெட், உணவு,
நன்கொடை, சேமிப்பு, தங்கம் என ஒவ்வொருவரும், ஒவ்வொரு பிரிவில் அதிகமாக
செலவு செய்வதாக தெரிவித்தனர்.
தகவல் சுரங்கம்

ஐம்பதாவது ஆண்டு
வங்கிகளின் சேவை மக்களுக்கு பயனுள்ளதாக உள்ளது. வங்கித்துறையில் தற்போது
பல நவீன வசதிகள் வந்துவிட்டன. இந்தியாவில் செயல்பட்டு வந்த 14 முக்கிய
தனியார் வங்கிகள், 1969 ஜூலை 19ல் நாட்டுடமையாக்கப்பட்டன. இதன் 50வது
ஆண்டு தினம் இன்று கடைபிடிக்கப் படுகிறது. சுதந்திரத்துக்குப்பின்
நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்காக,
பிரதமராக இருந்த இந்திரா இதனை செயல்படுத்தினார். பின் 1980ம் ஆண்டு
மேலும் ஆறு தனியார் வங்கிகள் நாட்டுடமையாக்கப்பட்டன. 1955ல் எஸ்.பி.ஐ.,
முதன் முதலாக நாட்டுடமையாக்கப்பட்டது.

TAMIL BEAUTY TRICKS

unread,
Jul 19, 2019, 9:02:36 PM7/19/19
to valluvanpaarvai, inaiat...@googlegroups.com
அறிவியல் ஆயிரம்குட்டி விமானம்

இங்கிலாந்தை சேர்ந்த ஓய்வு பெற்ற விமானி பாப் கிரிம்ஸ்டெட். இவருக்கு
வயது 70. இவர் இந்த வயதில் உலகின் சிறிய விமானத்தை 5 ஆயிரம் அடி
உயரத்தில் இயக்கி ஆச்சரியப்படுத்தியுள்ளார். அதிலும் விமானத்தை
பக்கவாட்டில் திருப்புதல் உள்ளிட்ட சாகசங்களையும் செய்துள்ளார். இந்த
விமானம் 13 அடி நீளம், 4 அடி அகலம் கொண்டது. இதன் எடை 81 கிலோ மட்டுமே.
இது மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் செல்லும் திறன் பெற்றது. இவர்
பிரிட்டன் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். போயிங் உள்ளிட்ட
பல்வேறு நவீன விமானங்களை இயக்கியவர்.

தகவல் சுரங்கம்

திருச்சிக்கு பத்து
செங்கல்பட்டு மற்றும் தென்காசி புதிய மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டதை
தொடர்ந்து தமிழக மாவட்டங்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளன. இதில்
அதிக மாவட்டங்களுடன் எல்லையை பகிர்ந்துள்ள மாவட்டமாக திருச்சி
திகழ்கிறது. இது புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், கரூர்,
நாமக்கல், சேலம், பெரம்பலுார், அரியலுார் மற்றும் தஞ்சை என பத்து
மாவட்டங்களுடன் எல்லைகளை பகிர்ந்துள்ளது. திருச்சி மாவட்டத்தின் பரப்பளவு
4,404 சதுர கி.மீ. தமிழகத்தின் முக்கிய ஆறான காவிரி, இம்மாவட்டத்துக்கு
வளம் சேர்க்கிறது.

Palaniappan kandasamy

unread,
Jul 20, 2019, 2:06:58 AM7/20/19
to brail...@googlegroups.com
ஆஸ்ட்ரேதியாவின் நீளமான நதியின் முழுப்பெயர் முர்ரேடார்லிங்; நன்றி, வாழ்க. உயர்ந்த இடத்திலிருந்தால் ஒளிவிளக்காயிருக்கவேண்டும்.
கந்த பழனியப்பன், தொலைத்தொடர்புத்துரை வாழ்வூதியர் கோவை 4.

-----Original Message-----
From: brail...@googlegroups.com [mailto:brail...@googlegroups.com] On Behalf Of TAMIL BEAUTY TRICKS
--
--
You received this message because you are subscribed to the Google
Groups "Brailleacl" group.
To post to this group, send email to brail...@googlegroups.com
To unsubscribe from this group, send email to
brailleacl+...@googlegroups.com

---
You received this message because you are subscribed to the Google Groups "Brailleacl" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to brailleacl+...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/brailleacl/CAGdjB30wGi5jeParsWuZ34HTswe50tEmkeD_71B2dykeXPHfYg%40mail.gmail.com.

TAMIL BEAUTY TRICKS

unread,
Jul 21, 2019, 12:57:02 AM7/21/19
to valluvanpaarvai, inaiat...@googlegroups.com
அறிவியல் ஆயிரம்

நீல நிறக்கோள்
சூரிய குடும்பத்தில் உள்ள எட்டாவது மற்றும் துாரத்தில் உள்ள கோள்
நெப்டியூன். சுற்றளவு அடிப்படையில் நான்காவது பெரியகோள். சூரியன் -
நெப்டியூன் இடையேயான துாரம் 450 கோடி கி.மீ. இது நீல நிறக்கோள் என
அழைக்கப்படுகிறது. இது 1846 செப்., 23ல் ஜோஹான் காலே மற்றும் யுர்பெய்ன்
லீ வெர்ரீயர் இணைந்து கண்டுபிடித்தனர். சூரியனை
ஒரு முறை சுற்றி வர 164 வருடங்கள் எடுத்துக் கொள்கிறது. இது எப்பொழுதும்
-346 டிகிரி வெப்ப நிலையிலேயே உறைந்து இருக்கிறது. இதனால் குளிர்ச்சியான
கோள் எனவும் அழைக்கப்படுகிறது.

தகவல் சுரங்கம்

நீளமான மலைத்தொடர்
தென் அமெரிக்காவில் உள்ள ஆண்டிஸ் மலைத் தொடர், உலகின் நீளமான மலைத்தொடர்.
இது இமயமலைக்கு அடுத்து, அதிக உயரமான சிகரங்களை கொண்ட 2வது மலைத்தொடர்.
இதன் நீளம் 7,000 கி.மீ. அகலம் 200 முதல் 700 கி.மீ. இதன் சராசரி உயரம்
13,000 அடி. இது வடக்கில் தொடங்கி தெற்கு வரை வெனிசுலா, கொலம்பியா,
ஈக்குடார், பெரு, பொலிவியா, சிலி, அர்ஜென்டினா என 7 நாடுகளில் பரவி
உள்ளது. இதன் உயரமான சிகரம்
அகோன்காகுகா (22,837 அடி). இது ஆசியாவுக்கு வெளியே உயரமான சிகரம் என

TAMIL BEAUTY TRICKS

unread,
Jul 21, 2019, 9:02:48 PM7/21/19
to brailleacl
அறிவியல் ஆயிரம்

குளிர்காலத்துக்கு ஏற்ற உணவு
எள் உடலில் உள்ள வெப்பத்தை அதிகரித்து, வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த
உதவும். குளிர்காலத்தில் ஆக்சிஜனின் அளவு குறைவாக இருக்கும். அதனால்,
சரியான உணவு முறையை பெறுவதற்கும் தேவையான பிராண வாயுவை உட்கொள்வதற்கும்,
வேர்க்
கடலைகளை உணவில் சேர்க்க வேண்டும். குளிர் காலத்தில் வெப்பம் தரும் உணவு
இஞ்சி சாப்பிட வேண்டும். சுக்கு, பூண்டு போன்றவைகளின் அளவையும்
அதிகப்படுத்தலாம். குளிர் காலத்தில் அவ்வளவாகத் தாகம் எடுக்காது.
ஆனாலும், போதிய அளவுக்குத் தண்ணீர் குடிக்க வேண்டும்.

தகவல் சுரங்கம்

பெரிய பூங்கா
உலகளவில் நிறைய தேசிய பூங்காக்கள் உள்ளன. இதில் கிரீன்லாந்தில் உள்ள
'வடகிழக்கு கிரீன்லாந்து தேசிய பூங்கா' உலகின் மிகப்பெரிய பூங்கா என
அழைக்கப்படுகிறது. உலகின் பெரிய பாதுகாக்கப்பட்ட பகுதியாக திகழ்கிறது.
இது 1974ல் தொடங்கி, 1988ல் விரிவு படுத்தப் பட்டது. இதன் பரப்பளவு
9,72,000 சதுர கி.மீ. பூங்காவின் சில பகுதிகள் பனிசூழ்ந்தது. இதுதான்
டென்மார்க்கில் தொடங்கப்பட்ட முதல் பூங்கா. 5,000 முதல் 15,000 கத்துாரி
எருமைகள், துருவக்கரடிகள் மற்றும் சில பறவைகள் பூங்காவின் கடற்கரை
ஓரத்தில் காணப்படுகின்றன.

TAMIL BEAUTY TRICKS

unread,
Jul 23, 2019, 9:28:57 PM7/23/19
to valluvanpaarvai, inaiat...@googlegroups.com
ஆபத்தில் தேனீக்கள் உடலுக்கு பல்வேறு வகையிலும் தேன் பயன் படுகிறது.
ரஷ்யாவில் சில மாதங்களாக தேனீக் களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என
மதிப்பிடப்பட்டுள்ளது. ரஷ்யா ஆண்டுதோறும் ஒரு லட்சம் டன் தேன் உற்பத்தி
செய்கிறது. இந்நிலையில் தேனீக்கள் அழிந்து வருவதால், தேன் உற்பத்தி
மட்டும் பாதிக்கப்படுவதில்லை. தேன் சார்ந்த மற்ற உணவுப்பொருட்களின்
உற்பத்தியிலும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் ரஷ்யா, தேனீக்களை
பாதுகாப்பதற்கு பல்வேறு திட்டங்களை தொடங்கியுள்ளது.

தகவல் சுரங்கம்
பெரிய மைதானம்
உலகில் அதிக இருக்கைகளின் அடிப்படையில் பெரிய மைதானம் 'ருன்கிராடோ மே தின
மைதானம்'. இது வடகொரிய தலைநகர் பியாங்யங் நகரில், ருன்கிரா தீவில்
அமைக்கப்பட்டுள்ளது. 51 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. 1989 மே1ல்
திறக்கப்பட்டது. இங்கு ஒரே நேரத்தில் 1,14,000 ரசிகர்கள் அமர்ந்து
போட்டியை காணலாம். இது கால்பந்து மைதானமாக பயன்படுத்தப்படுகிறது. சில
அத்லெட்டிக் போட்டிகளும் நடத்தப்படுகிறது. உலகின் இரண்டாவது பெரிய
மைதானம் அமெரிக்காவில் உள்ள மிச்சிகன். இங்கு 1.10 லட்சம் பேர் அமரலாம்.

TAMIL BEAUTY TRICKS

unread,
Jul 24, 2019, 9:18:38 PM7/24/19
to brailleacl
அறிவியல் ஆயிரம்

நிம்மதியான துாக்கம்
இன்றைய பரபரப்பான வாழ்க்கை சூழலில், நிம்மதியான உறக்கம் வராமல் பலர் சிரமப்
படுகின்றனர். இந்நிலையில் துாங்குவதற்கு 90 நிமிடம் முன்பாக குளித்தால்,
நன்றாக துாங்க முடியும் என அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழக ஆய்வில்
தெரிவிக்கப்பட்டுள்ளது. துாங்குவதற்கு முன் குளிப்பது, உடல் மற்றும் மனம்
என இரண்டுக்கும் நல்லது. 5,322 ஆய்வுகளை பகுப்பாய்வு செய்த டெக்சாஸ்
பல்கலை, 40 முதல் 43 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை, உறக்கத்துக்கான சூழலை
அதிகரிக்கிறது என தெரிவித்துள்ளது.

தகவல் சுரங்கம்

சிம்லா ஒப்பந்தம்
இந்தியா - பாகிஸ்தான் இடையே 1972 ஜூலை 2ல், ஹிமாச்சலப்பிரதேச தலைநகர்
சிம்லாவில் ஒப்பந்தம் ஏற்பட்டது. கடந்த 1971ல் இந்தியா - பாகிஸ்தான்
இடையே நடந்த போரில் இந்தியா வெற்றி பெற்றது. இதையடுத்து கிழக்கு
பாகிஸ்தான், வங்கதேசம் என்ற தனி நாடாக உருவாக்கப்பட்டது. இதற்கு பின்
ஏற்பட்ட இந்த ஒப்பந்தத்தில் இந்தியா - பாக்., வெளியுறவுத் துறை
அமைச்சர்கள் முன்னிலையில் இருநாட்டு பிரதமர்கள் கையெழுத்திட்டனர்.

TAMIL BEAUTY TRICKS

unread,
Jul 26, 2019, 9:01:25 PM7/26/19
to brailleacl
அறிவியல் ஆயிரம்

மாற்று மருத்துவம்
மாற்று மருத்துவ முறைகளில் ஒன்று ஓமியோபதி. இதனை கண்டுபிடித்தவர் ஜெர்மன்
இயற்பியலாளர் சாமுவேல் ஹானிமன். 1755 ஏப்.10ல் பிறந்த இவர், அலோபதி
மருத்துவத்தில் முதுநிலை பட்டம் பெற்றவர். ஜெர்மனியின் மான்ஸ்பீல்டு
பகுதியில் பணியாற்றினார். ஆனால் அலோபதி மருத்துவத்தின் மீது திருப்தி
இல்லாததால், ஓமியோபதி மருத்துவ முறையை 1796ம் ஆண்டு கண்டுபிடித்தார்.
ஓமியோபதியின் தந்தை என கருதப்படுகிறார். ஓமியோபதி மருந்துகள் இயற்கையில்
கிடைக்கும் பொருட்களில் இருந்து உருவாக்கப்படுகிறது.
தகவல் சுரங்கம்

பரவும் சோலார்
மின்சார உற்பத்தியில் அனல்மின், நீர்மின், காற்றாலை, அணுமின், சூரிய ஒளி
என பல வகைகள் உள்ளன. இதில் இயற்கையாக கிடைக்கும் சூரிய ஒளியை பயன்படுத்தி
தயாரிக்கப்படும் மின்சார உற்பத்தியின் பயன் குறித்து அரசு விழிப்புணர்வு
மற்றும் சலுகைகள் வழங்குகிறது. இந்நிலையில் முக்கிய கட்டடங்கள், ரயில்
நிலைய பிளாட்பார்ம் என பல இடங்களில் மேற்கூரை மீது சோலார் பேனல்கள்
அமைத்து மின்சாரம் தயாரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இவ்வகையில்
2022ம் ஆண்டுக்குள் 40 ஆயிரம் மெகாவாட்
மின்சாரம் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

TAMIL BEAUTY TRICKS

unread,
Jul 28, 2019, 12:14:49 AM7/28/19
to brailleacl
அறிவியல் ஆயிரம்
பிளாஸ்டிக் பொருளுக்கு மாற்று
உலகம் முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.
ஆனால் இது ஏற்படுத்தும் பாதிப்புகள் என்பது மிக ஆபத்தானது. இந்நிலையில்
பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக, சணலை பயன்படுத்தும் முறை வங்கதேசத்தில்
உருவாக்கப்பட்டுள்ளது. சணல் இழையை, மக்கக்கூடிய செல்லுலோஸ் தாள்களாக
மாற்றும் தொழில்நுட்பத்தை வங்கதேச விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். இதற்கு
'சோனாலி' என்று பெயர். இதற்கு அர்த்தம் 'கோல்டன்'. இதிலிருந்து பை
தயாரிக்கப்படுகிறது. இதற்கான வணிக உற்பத்தி 2019 இறுதியில் தொடங்குகிறது.


தகவல் சுரங்கம்
சுட்டெரிக்கும் வெப்பநிலை
உலக நாடுகளுக்கு வெப்பநிலை உயர்வு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. 20ம்
நுாற்றாண்டில் வெப்பநிலை உயர்வு, கடந்த 2000ம் ஆண்டுகளில் இல்லாத
அளவுக்கு உச்சத்தை தொட்டது என சுவிட்சர்லாந்து பல்கலைக்கழக ஆய்வில்
தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் வெப்பநிலை என்பது கடந்த இரண்டாயிரம்
ஆண்டுகளில், சில ஆண்டுகளில் குறைந்தும், சில ஆண்டுகளில் கூடியும் பதிவாகி
வந்தது. இதில் தற்போது தான், வெப்பநிலை அதிகளவில் பதிவாகியுள்ளது.
20ம் நுாற்றாண்டின் முடிவில், பூமியில் 98 சதவீத இடங்களில் வெப்பநிலை
அதிகளவில் பதிவாகியது.

TAMIL BEAUTY TRICKS

unread,
Jul 28, 2019, 8:59:18 PM7/28/19
to valluvanpaarvai, inaiat...@googlegroups.com
அறிவியல் ஆயிரம்

வெப்பநிலை தரும் மனஅழுத்தம்
உலகம் முழுவதும் வெப்பநிலை அதிகரிக்கிறது. இதன் காரணமாக கிரீன்லாந்து,
அண்டார்டிகா, அலாஸ்கா போன்ற பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள், விஞ்ஞானிகள்
கணித்ததை விட வேகமாக உருகுகின்றன. அதிகரிக்கும் வெப்ப நிலை உயர்வு,
தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. மன அழுத்த பிரச்னையை
உருவாக்கு வதாகவும் அமெரிக்க ஆய்வு தெரிவித்துள்ளது. இந்நிலை தொடர்ந்தால்
2050க்குள் அமெரிக்கா, மெக்சிகோவில் தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை 21
ஆயிரமாக உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் சுரங்கம்

ஓய்வு கிடைக்குமா

நவீன உலகிலும் வீட்டு வேலைகளை பெண்களே செய்ய வேண்டியுள்ளது. இதுகுறித்து
பிரிட்டனில் நடந்த ஆய்வில், ஏழு சதவீத கணவர்கள் தான், வீட்டு வேலைகளை
மனைவியுடன் சமமாக பங்கிட்டுக்கொள்கின்றனர். 8,500 பேரிடம்
கணக்கெடுக்கப்பட்டது. இதில் 93 சதவீத பெண்கள், வீட்டு வேலைகளை தனியாகவே
செய்கின்றனர் என தெரிவித்துள்ளனர். கணவன் - மனைவி இருவரும் வேலைக்கு
போனாலும், அங்கும் மனைவி தான் வீட்டு வேலையை செய்கின்றனர். இதற்காக
அவர்கள் வாரத்தில் 20 மணி நேரம் செலவிடுகின்றனர்.

TAMIL BEAUTY TRICKS

unread,
Jul 29, 2019, 9:11:12 PM7/29/19
to valluvanpaarvai, inaiat...@googlegroups.com
வயதான அதிபர்அமெரிக்காவின் தற்போதைய அதிபராக இருப்பவர் டொனால்டு டிரம்ப்.
இவர் பதவியேற்கும் போது, அமெரிக்காவின் வயதான அதிபர் என்ற பெயரை
பெற்றார். தற்போது இவரது வயது 73. இவரது பதவிக்காலம் 2021ல் முடிகிறது.
இந்நிலையில் அமெரிக்காவின் அடுத்த அதிபராக வருபவரின் வயது 70 ஆக
இருக்கும் என ஆய்வு தெரிவித்துள்ளது. தற்போது மக்களின் சராசரி ஆயுட்காலம்
அதிகரித்துள்ளது. அந்த வகையில், எதிர்காலத்தில் வரும் அதிபரும்
வயதானவராகதான் இருப்பார். வயது என்பது வெறும் நம்பர் தான். திறமைக்கு
வயது ஒரு தடையில்லை.
தகவல் சுரங்கம்

மகாலட்சுமி எக்ஸ்பிரஸ்
சமீபத்தில் மும்பை வெள்ளத்தில் ஒரு ரயிலில் இருந்து 1,050 பயணிகள்
மீட்கப்பட்டனர். இந்த ரயிலின் பெயர் 'மகாலட்சுமி எக்ஸ்பிரஸ்'. இது மும்பை
சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் இருந்து, அம்மாநிலத்தில் உள்ள
கோலாப்பூர் ரயில் நிலையம் வரை செல்கிறது. பயண துாரம் 518 கி.மீ. பயண
நேரம் 11 மணி மற்றும் ஐந்து நிமிடம். சராசரி வேகம் மணிக்கு 55 கி.மீ.,
தினமும் செல்லும் ரயில் 18 இடங்களில் நின்று செல்கிறது. மீட்டர்கேஜ்
ரயில் பாதை இருந்த போது, இந்த ரயில், பெங்களூருவில் இருந்து
மஹாராஷ்டிராவின் மீரஜ் வரை இயக்கப்பட்டது. பின் ரத்தானது.

TAMIL BEAUTY TRICKS

unread,
Jul 30, 2019, 9:30:35 PM7/30/19
to brailleacl
அறிவியல் ஆயிரம்

சிறிய குரங்கு
உலகின் மிகப்பெரிய காடு என்றழைக்கப்படும் அமேசான் வனப்பகுதியில், உலகின்
சிறிய வகை குரங்கு வாழ்ந்ததற்கான ஆதாரத்தை விஞ்ஞானிகள்
கண்டுபிடித்துள்ளனர். இது உருவத்தில் எலியின் அளவை போலவே இருந்துள்ளது.
அமெரிக்காவின் டியூக் பல்கலை மற்றும் பெரு நாட்டை சேர்ந்த பியூரா தேசிய
பல்கலை ஆகியவற்றை சேர்ந்த விஞ்ஞானிகள் குழு அமேசான் காட்டில் ஆராய்ச்சி
மேற்கொண்டனர். அப்போது 1.8 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய பற்களை
கண்டுபிடித்தனர். இதனை ஆராய்ந்த போது, அது சிறிய அளவிலான குரங்கு இனத்தை
சேர்ந்தது என உறுதி செய்தனர்.
தகவல் சுரங்கம்

நீண்டகால முதல்வர்
கர்நாடகாவில் நீண்டகாலம் முதல்வர் பதவி வகித்தவர் தேவராஜ் அர்ஸ்.
மைசூரூவில் 1915ல் பிறந்த இவர், காங்., மூலம் அரசியல் வாழ்க்கையை
துவக்கினார். 1952ல் முதன்முறையாக எம்.எல்.ஏ., ஆனார். இதற்குப்பின் 1980
வரை தொடர்ந்து எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப் பட்டார். 1972 மார்ச் 20 -
1977 டிச., 31 வரை முதன் முறையாக கர்நாடக முதல்வர் பதவியில் இருந்தார்.
பின் 1978 பிப்., 28 - 1980 ஜன., 7 வரை இரண்டாவது முறையாக பதவி
வகித்தார். மொத்தம் 7 ஆண்டுகள், 234 நாட்கள் முதல்வராக இருந்தார். இவரது
ஆட்சியில் பல்வேறு சமூக சீர்திருத்தங்களை மேற்கொண்டார்.

TAMIL BEAUTY TRICKS

unread,
Jul 31, 2019, 9:14:41 PM7/31/19
to brailleacl
அறிவியல் ஆயிரம்

இருபது கோடி மரக்கன்றுகள்

இயற்கையை பேணிக்காப்பதில் மரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆப்ரிக்க
நாடான எத்தியோப்பி யாவில் ஒரே நாளில் 20 கோடி மரக்கன்றுகள் நட்டு சாதனை
படைத்துள்ளனர். ஒரே நாளில் அதிக மரக்கன்றுகள் நடுவது இதுவே முதல்முறை.
இதற்கு முன் இந்தியாவில் 2016ல் ஒரே நாளில் 5 கோடி மரக்கன்றுகள்
நடப்பட்டது. வெப்பநிலை உயர்வு மற்றும் வறட்சி ஆகியவற்றை தடுப்பது இதன்
நோக்கம். எத்தியோப்பியாவில் ஆயிரம் இடங்களில் மரக்கன்றுகள் நடும்
நிகழ்ச்சி நடைபெற்றது. 400 கோடி மரக்கன்றுகளை நடுவதே இலக்கு என அந்நாட்டு
அரசு தெரிவித்துள்ளது.


தகவல் சுரங்கம்

பெரிய பூங்கா
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தேம்ஸ் நதிக்கரையில் அமைந்தள்ள 'கிவி
கார்டன்', உலகின் மிகப்பெரிய தாவரவியல் பூங்கா என அழைக்கப்படுகிறது.
1759ல் இப்பூங்கா திறக்கப்பட்டது. 85 லட்சம் தாவரங்கள் இங்கு
பாதுகாக்கப்படுகின்றன. ஆண்டுதோறும்
13.5 லட்சம் சுற்றுலா பயணிகள் இங்கு வருகை புரிகின்றனர். 300 ஏக்கர்
பரப்பளவில் அமைந்துள்ளது. இப்பூங்கா, யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய
பண்பாட்டு சின்னங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இப்பூங்காவுக்குள்
கண்ணாடி மாளிகை தோட்டம் ஒன்று உள்ளது. 1,100 பேர் பணிபுரிகின்றனர்.

TAMIL BEAUTY TRICKS

unread,
Aug 1, 2019, 9:24:26 PM8/1/19
to brailleacl
உலகளவில் பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பயன்பாடு அதிகரித்துக்கொண்டே
செல்கிறது. இதன் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டாலும்,
மக்களிடம் பயன்பாடு குறைவதில்லை. இந்நிலையில் இங்கிலாந்தில் பாலிதீன்
பைகளின் விற்பனை வெகுவாக குறைந்துள்ளது. இங்கிலாந்தில் உள்ள பெரிய
சூப்பர் மார்க்கெட் கடைகளில், ஒருமுறை பயன்படுத்தப்படும் பாலிதீன் பைகள்,
2018 - 19ம் ஆண்டில் 54.9 கோடி பைகள் விற்பனை ஆனது. இது இதற்கு முந்தைய
ஆண்டில் 100 கோடியாக இருந்தது. 50 சதவீதம் விற்பனை சரிந்துள்ளது. இது
வரவேற்கத்தக்கது.

தகவல் சுரங்கம்: பாரதீப் துறைமுகம்
நாட்டின் முக்கிய துறைமுகங்களில் ஒன்று பாரதீப் துறைமுகம். இது மத்திய
அரசின் கீழ் செயல்படுகிறது. ஒடிசாவின் பாரதீப் நகரில் அமைந்துள்ளது.
மகாநதி ஆறு, வங்கக்கடலில் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இது
கோல்கட்டாவில் இருந்து 388 கி.மீ., தொலைவிலும், விசாகபட்டினத்தில்
இருந்து 481 கி.மீ., தொலைவிலும் உள்ளது. ஒடிசாவின் முன்னாள் முதல்வர்
மறைந்த பிஜூ பட்நாயக் முயற்சியால் இத்துறைமுகம் தொடங்கப் பட்டது. 1962ல்
கட்டுமானப் பணி தொடங்கப்பட்டு, 1966ல் திறக்கப்பட்டது. இங்கு 2017 -18ல்
10.20 கோடி டன் சரக்குகள் கையாளப்பட்டது.

TAMIL BEAUTY TRICKS

unread,
Aug 2, 2019, 9:34:45 PM8/2/19
to brailleacl
ஐ.நா., சபையின் கீழ் பல அமைப்புகள் செயல் படுகின்றன. இதில் உணவு மற்றும்
விவசாய கழகமும் ஒன்று. இது 1945 அக்., 16ல் தொடங்கப்பட்டது. இதன்
தலைமையகம் இத்தாலியின் ரோம். உலகில் ஒருவர் கூட, பட்டினியால்
பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கத்தில் இந்த அமைப்பை ஐ.நா., உருவாக்கியது.
உலகளவில் விவசாயம், உணவுப்பொருள், காடுகள், மீன்வளம் போன்றவற்றை
அதிகரிப்பதே இதன் நோக்கம். மேலும் உலக மக்கள் அனைவருக்கும் சத்தான உணவு
கிடைக்க வேண்டும் என பாடுபடுகிறது. இதில் 197 நாடுகள் உறுப்பினர்களாக
உள்ளன.

தகவல் சுரங்கம்: முந்தும் மேற்குவங்கம்
சணல் என்பது நீண்ட, மென்மையான, தாவர இழை. இதிலிருந்து சணல் கயிறு
தயாரிக்கப்படுகிறது. இந்தியாவின் சணல் உற்பத்தியில் 50 சதவீதத்துக்கு
மேல் வடகிழக்கு மாநிலங்களில் தான் நடைபெறுகிறது. சணல் உற்பத்தியில்
முதலிடத்தில் மேற்குவங்கம் உள்ளது. இங்கு 1,425 ஏக்கரில் சணல் உற்பத்தி
செய்யப்படுகிறது. ஆண்டுக்கு 18.17 லட்சம் கிலோ சணல் உற்பத்தியாகிறது.
இரண்டாவது இடத்தில் பீஹார் உள்ளது. இங்கு 343 ஏக்கரில் 3.6 லட்சம் கிலோ
உற்பத்தியாகிறது. மூன்றாவது இடத்தில் அசாம் உள்ளது. இங்கு 172 ஏக்கரில்
1.7 லட்சம் கிலோ உற்பத்தியாகிறது.

TAMIL BEAUTY TRICKS

unread,
Aug 4, 2019, 12:05:17 AM8/4/19
to brailleacl
உலகில் குறிப்பிட்ட நாடுகளில் மட்டுமே அணுமின் நிலையங்கள் உள்ளன. இதில்
அதிகளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் அணுமின் நிலையமாக ஜப்பானில்
உள்ள காஷிவஜாகி - கரிவா அணுமின் நிலையம் இருந்தது. இங்கு 7,965 மெகாவாட்
மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால் கடந்த 2011ல் அங்கு ஏற்பட்ட
நிலநடுக்கத்தின் காரணமாக பாதிப்புக்கு உள்ளானது. இதனால் இந்த அணுமின்
நிலையம் மூடப்பட்டது. தற்போது இங்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்படவில்லை.
1985ல் தொடங்கப்பட்ட இந்த அணுமின் நிலையம், 4.2 சதுர கி.மீ., பரப்பளவில்
அமைக்கப்பட்டது.

தகவல் சுரங்கம் : பெண் பாதுகாப்பு
இந்தியாவில் பெண்களுக்கான உரிமைகளை வலியுறுத்துதல், பெண்கள் மீதான
குற்றங்களை தடுத்தல், பெண்கள் நலன் காத்தல், பெண்களுக்கான சம உரிமையை
பெறுதல் போன்றவற்றை நோக்கமாக கொண்டு தேசிய பெண்கள் ஆணையம் தொடங்கப்
பட்டது. இது ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பு. 1992ம் ஆண்டு
உருவாக்கப்பட்டது. இதன் முதல் தலைவராக பொறுப்பேற்றவர் ஜெயந்தி பட்நாயக்.
இதுவரை எட்டு பேர், இதன் தலைவர்களாக பணியாற்றியுள்ளனர். ஒன்பதாவது
மற்றும் தற்போதைய தலைவராக இருப்பவர் ரேகா சர்மா. இவர் 2018 ஆக., 7ல்
இப்பொறுப்பை ஏற்றார்.

TAMIL BEAUTY TRICKS

unread,
Aug 5, 2019, 9:54:29 PM8/5/19
to brailleacl
கோடையில் குளிர்ச்சியையும், குளிர்காலத்தில் சிறிது கதகதப்பையும்
அளிக்கும் கிரானைட் கற்கள் மிக விலை அதிகம். குளிர்காலத்தில் மிதமான
கதகதப்பை, ஆத்தங்குடி தரைக்கற்களும் தருகின்றன. வட்டார அளவில்
உற்பத்தியாகும் இதன் உபயோகம் தமிழகத்தில் பரவலாக தெரியவில்லை. சிவகங்கை
மாவட்டத்தில், செட்டிநாட்டுப் பகுதியில் ஆத்தங்குடியில் கிடைக்கும்
ஒருவகை வாரிமண் பயன்படுத்தி இவை தயாராகின்றன. மெருகூட்டத் தேவை இல்லை.
நீண்ட நாள் உழைப்பு மற்றும் நிறம் மங்காத சாயங்களின் பயன்பாடு போன்றவை
இதன் சிறப்புகள்.

தகவல் சுரங்கம்: சங்கராபரணம் ராகம்
சுதந்திர தினத்தில் இசைக்கப்படும் தேசிய கீதம் 'ஜனகனமன'வின் ராகம்
சங்கராபரணம். தமிழிசையில் சங்கராபரணத்தை பழம்பஞ்சுரம் என்பர்.
இந்துஸ்தானி இசையில் சங்கராபரணத்திற்கு இணையான ராகம், பிலாவட் தாட்.
கர்நாடக இசையில் ஒவ்வொரு ராகத்தின் பெயருமே, அதன் இயல்பை வெளிப்படுத்தும்
விதத்தில் தான் இருக்கும். சங்கரன் என்னும் சிவனின் ஆபரணம் பாம்பு.
சங்கராபரணம் என்பது மறைமுகமாக பாம்பைக் குறிக்கும் ராகம். இந்த ராகத்தில்
பாம்பின் சீற்றத்தை உணர முடியும் என்பதால் சங்கராபரணம் என பெயர்
வைத்தனர்.

TAMIL BEAUTY TRICKS

unread,
Aug 6, 2019, 9:51:51 PM8/6/19
to valluvanpaarvai, inaiat...@googlegroups.com
பழங்களில் மாம்பழம் மட்டும் தான் 'சூப்பர் புரூட்' என்ற சிறப்பு பெயரினை
பெற்றுள்ளது. வேதிப் பொருட்களை பயன்படுத்தி பழுக்கச் செய்யும்
மாம்பழங்கள் மட்டுமே உடலுக்குப் பிரச்னையை ஏற்படுத்துகின்றன. மற்றபடி
மாம்பழங்கள் அதிக நன்மை தருகின்றன. மாம்பழத்தில் நார்ச்சத்து மற்றும்
'வைட்டமின் ஏ' உள்ளன. மாம்பழத்தின் தோலில் உள்ள நார்ச்சத்து, உணவு
மண்டலம், கழிவு நீக்க மண்டலத்துக்கு ஏற்றது. மாம்பழத்தை தோலுடன்
சாப்பிடும் போது, அதிலுள்ள பூச்சிக் கொல்லிகளின் நச்சுத் தன்மையை நீக்க,
கல் உப்பு போட்ட நீரில் கழுவ வேண்டும்.

தகவல் சுரங்கம்: கர்நாடகாவின் 'நெற்களஞ்சியம்'
கர்நாடகாவின் 'நெற்களஞ்சியம்' என மாண்டியா அழைக்கப்படுகிறது.
தமிழகத்திற்கு வரும் 'கர்நாடகா பொன்னி' அரிசி மாண்டியாவில் தான் அதிகம்
விளைகிறது. மாண்டியாவில் காவிரிக்கு 'பொன்னி' என்ற ஒரு பெயர் உள்ளது.
காவிரி ஆற்று நீரில் விளையும் நெல் ஆததால், 'கர்நாடகா பொன்னி' என பெயர்
வந்தது. 1930ல் கிருஷ்ணராஜசாகர் அணை வருவதற்கு முன், மாண்டியா பகுதி
வளமின்றி இருந்தது. நெல் தவிர, நீர் அதிகம் தேவைப்படும் கரும்பையும்
மாண்டியா விவசாயம் செய்கிறது. மாண்டியாவில் கேழ்வரகும் அதிகம் விளைகிறது.

TAMIL BEAUTY TRICKS

unread,
Aug 7, 2019, 9:36:39 PM8/7/19
to brailleacl
மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தி பிளாஸ்டிக் குடங்கள்
செய்யப்படுகின்றன. மறுசுழற்சி நல்லது தான். ஆனால் இவை அறிவியல்
பூர்வமாகச் செய்யப்பட வேண்டும். ஏனெனில் பிளாஸ்டிக் குடங்கள்
உற்பத்தியில், மருத்துவக் கழிவுகளில் வரும் பிளாஸ்டிக்கும் பயன்படுத்தப்
படுகின்றன. மறுசுழற்சிக்கு முன்னர் இவை ஆட்டோ கிளேவ் முறையில், சரியான
விகிதத்தில் பாக்டீரியல் தன்மையை நீக்கியவையாக இருக்க வேண்டும். ஆனால்
இது பின்பற்றப்படுவதில்லை. நிறங்களும், பாதிப்பை ஏற்படுத்தும்
நிறப்பொருட்களாக உள்ளன.

தகவல் சுரங்கம் : நகரும் தபால் நிலையம்
இயற்கை எழில் கொஞ்சும் காஷ்மீரில் பல்வேறு சுற்றுலா இடங்கள் உள்ளன. இதில்
ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரியும் ஒன்று. குளிர்காலத்தில் இந்த ஏரி உறைந்து
விடும். இதில் சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கான படகு வீடுகள் உள்ளன. இந்த
ஏரியில் நாட்டின் முதல் நகரும் தபால் நிலையம் செயல்படுகிறது. இது 2011ல்
தொடங்கப்பட்டது. உலகளவில் முதல் நகரும் தபால் நிலையமும் இதுதான். தால்
ஏரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை இந்த நகரும் தபால் நிலையம் ஈர்க்கிறது.
சிலர் இந்த தபால் நிலையத்துக்குள் சென்று தங்களுக்கு பிடித்தவர்களுக்கு
தபால் அனுப்புகின்றனர்.

mari samy

unread,
Aug 8, 2019, 9:10:13 AM8/8/19
to brailleacl

Thank you for this service


--
--
You received this message because you are subscribed to the Google
Groups "Brailleacl" group.
To post to this group, send email to brail...@googlegroups.com
To unsubscribe from this group, send email to
brailleacl+...@googlegroups.com

---
You received this message because you are subscribed to the Google Groups "Brailleacl" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to brailleacl+...@googlegroups.com.

TAMIL BEAUTY TRICKS

unread,
Aug 8, 2019, 9:27:08 PM8/8/19
to brailleacl
உலக வரலாற்றில் அமெரிக்கா தான் முதன்முதலாக அணுகுண்டு தாக்குதலை
தொடங்கியது. 'லிட்டில்பாய்' எனும் 60 கிலோ எடையுள்ள அணுகுண்டை, 'பி-29 ரக
எனோலாகெய்' என்ற அமெரிக்க விமானம், ஆக., 6ம் தேதி ஜப்பானின் ஹிரோஷிமா
நகரின் மையப்பகுதியில் வீசியது. இது 4 சதுர மைல் சுற்றளவுக்கு அழிவை
ஏற்படுத்தியது. 1.40 லட்சம் பேர் பலியாகினர். பின் மூன்று நாட்களில் ஆக.,
9ல் ஜப்பானின் மற்றொரு நகரான நாகசாகியில், 'பேட்மேன்' என்ற 2வது
அணுகுண்டை வீசியது. இதில் 1 லட்சம் பேர் பலியாகினர். இதன் பாதிப்பு
இன்றும் தொடர்கிறது.

அறிவியல் ஆயிரம்: தலைவலி போக்கும் 'காபி'
காலை எழுந்தவுடன் காபியுடன் தான் பலரும் அன்றைய நாளை தொடங்குகின்றனர்.
காலையில் இருந்து இரவு வரை பல முறை காபி குடிப்பவர்கள் இருக்கத்தான்
செய்கின்றனர். இந்நிலையில் தினமும் மூன்று அல்லது அதற்கு மேல் காபி
குடிப்பதால் ஒற்றைத் தலைவலி பிரச்னை குறைகிறது என அமெரிக்க ஆய்வில்
தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் 100 கோடி இளைஞர்கள் ஒற்றைத்தலை வலி
பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒற்றைத் தலைவலி பிரச்னை என்பது உலகின்
மூன்றாவது பெரிய நோயாக இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TAMIL BEAUTY TRICKS

unread,
Aug 9, 2019, 9:05:38 PM8/9/19
to brailleacl
தினமும் குறைந்தது 30 நிமிடம் உடற்பயிற்சி செய்வது உடலுக்கு பல்வேறு
நன்மைகளை அளிக்கிறது. அதுவும் காலையில் செய்யும் உடற்பயிற்சியில் தான்
அதிக பலன்கள் உள்ளன. காலையில் உடற்பயிற்சி செய்யும் நேரத்தை விட, இரண்டு
மடங்கு மற்ற நேரங்களில் செய்தாலும் பலன் இல்லை என ஆய்வில்
தெரிவிக்கப்பட்டுள்ளது. காலையில் உடற்பயிற்சி செய்தால் அதிகளவில் உடல்
எடையை குறைக்க முடியும். காலை தவிர மற்ற நேரங்களில் உடற்பயிற்சி
செய்பவர்கள் அதிக நேரம் உடற்பயிற்சி செய்தும் எடை குறையவில்லை என
கூறுவதற்கு இதுதான் காரணம்.

தகவல் சுரங்கம்: உயரமான விலங்கு
பூமியில் வாழும் விலங்குகளில் உயரமானது ஒட்டகச்சிவிங்கி. இது
ஆப்ரிக்காவில் அதிகளவில் காணப்படுகின்றன. ஒட்டகம் மாதிரி உயரமாகவும்,
சிறுத்தைபுலி மாதிரி புள்ளிகளை பெற்றிருப்பதாலும் இதற்கு ஒட்டகச்சிவிங்கி
என பெயர் வந்தது. இவை 16 அடி முதல் 18 அடி உயரம் வரை இருக்கும். நீண்ட
கழுத்தை உடையது. இது வெப்பமான வறண்ட பகுதிகளில் வாழ்கிறது. இவை தோலுக்காக
அதிகளவில் வேட்டையாடப்படுகின்றன. இதன் எடை 900 கிலோ வரை இருக்கும்.
ஒட்டகச்சிவிங்கியின் குட்டிகள், பிறந்த சில மணி நேரத்தில் எழுந்து
ஓடக்கூடியவை.

Palaniappan kandasamy

unread,
Aug 10, 2019, 2:34:02 AM8/10/19
to brail...@googlegroups.com
ஆராம்தேதி வீசிய அணுகுண்டு ஏற்படுத்திய நாசத்தை அரிந்தபின்னும் ஒன்பதாம்தேதி ஒரு அணுகுண்டை வீசிய அமரிக்க அயோக்ய நாடு செய்தது மரக்கமுடியாத மன்னிக்கமுடியாத மாபெரும் குற்றம் பாபம். நன்றி; வாழ்க. உயர்ந்த இடத்திலிருந்தால் ஒளிவிளக்காயிருக்கவேண்டும்.
கந்த பழனியப்பன் தொலைத்தொடர்புத்துரை வாழ்வூதியர் கோவை 4.

-----Original Message-----
From: brail...@googlegroups.com [mailto:brail...@googlegroups.com] On Behalf Of TAMIL BEAUTY TRICKS
--
--
You received this message because you are subscribed to the Google
Groups "Brailleacl" group.
To post to this group, send email to brail...@googlegroups.com
To unsubscribe from this group, send email to
brailleacl+...@googlegroups.com

---
You received this message because you are subscribed to the Google Groups "Brailleacl" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to brailleacl+...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/brailleacl/CAGdjB31PR%3DRB7PQ6pAchNOx2HQUWCXT50RFU38s-e5Y87rFX%2Bw%40mail.gmail.com.

TAMIL BEAUTY TRICKS

unread,
Aug 10, 2019, 9:32:17 PM8/10/19
to brailleacl
அறிவியல் ஆயிரம் : பனிச்சரிவு காரணம்பனிக்கட்டி என்பது நீர்,
குளிர்நிலையால் உறைந்து திடப்பொருளாக மாறுவது. இது வெப்பநிலை '0 டிகிரி'
செல்சியசுக்கு கீழ் குறையும் போது பனிக்கட்டியாகிறது. அதிகளவிலான
பனிக்கட்டிகள் ஒன்று சேர்ந்து மலைப்பகுதிகளில் படர்ந்திருக்கும். இவை
வானிலை காரணமாக சரிகின்றன. பனிபடர்ந்த சாய்வான மலைப்பகுதியில் இருந்து
பனிக்கட்டிகள் சரிவது பனிச்சரிவு எனப்படுகிறது. பனிக்கட்டிகள் சரியும்
போது வேகமாக கீழ்நோக்கி விழுகின்றன. வழியில் இருக்கும் மரங்கள்,
பொருட்கள், மக்கள் என அனைத்தையும் அடித்துச் சென்று மூடி மறைக்கின்றது.

தகவல் சுரங்கம் : காந்தி அமைதி விருது
உலகில் அகிம்சை வழியில் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்களை
ஏற்படுத்தும் தனிநபர் அல்லது நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் 'சர்வதேச
காந்தி அமைதி விருது' வழங்கப்படுகிறது. காந்தியடிகளின் கொள்கையை உலகளவில்
பரப்பும் நோக்கத்தில் 1995ல் காந்தியடிகளின் 125வது பிறந்த தினத்தில்,
இவ்விருது மத்திய அரசால் உருவாக்கப்பட்டது. விருதுடன் ரூ. 1 கோடி ரொக்கம்
வழங்கப்படுகிறது. 1995ல் முதல் விருதை பெற்றவர் தான்சானியாவை சேர்ந்த
ஜூலியஸ் ரைரரே. 2018ல் ஜப்பானின் யோகேய் சசகவாவுக்கு வழங்கப்பட்டது.

TAMIL BEAUTY TRICKS

unread,
Aug 12, 2019, 12:49:03 AM8/12/19
to brailleacl
உலகளவில் இருதய பிரச்னையால் பாதிக்கப்படு பவர்களின் எண்ணிக்கை
அதிகரிக்கிறது. இருதய ரத்த குழாய் அடைப்பு பிரச்னைக்கு, தீர்வாக
'ஸ்டன்ட்' முறை பின்பற்றப்படுகிறது. இதன் காரணமாக உலகளவில் ஆயிரக்கணக்கான
மக்களின் உயிர் காப்பாற்றப்படுகிறது. 'ஸ்டன்ட்' பல்வேறு வகைகளில் உள்ளன.
விலையும் மாறுபடுகிறது. இந்நிலையில் உலகில் தற்போது பயன்பாட்டில் உள்ள
பல்வேறு வகை 'ஸ்ட்ன்ட்களை' விட 40 மடங்கு சிறிய 'ஸ்டன்ட்' கருவியை
சுவிட்சர்லாந்தின் பெடரல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி விஞ்ஞானிகள்
உருவாக்கியுள்ளனர்.

தகவல் சுரங்கம் : உலக இளைஞர்கள் தினம்
ஒரு நாட்டின் எதிர்காலம் இளைஞர்கள் கையில் உள்ளது. இளைஞர்களின்
வளர்ச்சிக்கு ஏற்பதான் நாட்டின் வளர்ச்சியும் அமைகிறது. இத்தகைய வலிமை
படைத்த இளைஞர்களை, ஒவ்வொரு அரசும் ஆக்கப்பூர்வ பணிகளில் ஈடுபடுத்த
வலியுறுத்தும் விதமாக, ஐ.நா., சபையால் 1999 முதல் ஆண்டுதோறும் ஆக.12ம்
தேதி உலக இளைஞர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. 'கல்வியை பரவலாக்குதல்'
என்பது இந்தாண்டு மையக்கருத்து. தற்போது 10 - 24 வயதுக்குட்பட்ட
இளைஞர்கள் 108 கோடி பேர் உள்ளனர் என ஐ.நா., தெரிவிக்கிறது.

TAMIL BEAUTY TRICKS

unread,
Aug 12, 2019, 9:22:34 PM8/12/19
to brailleacl
உத்தரகண்ட்டின் நைனிடால் நகரில் இருந்து 9 கி.மீ. துாரத்தில் மனோரா
சிகரத்தில், ஆரியபட்டா ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ஆப் அப்சர்வேஷன் சயின்ஸ்
(ஏ.ஆர்.ஐ.இ.எஸ்.,) ஆய்வு மையம் அமைந்துள்ளது. இது 1954 ஏப்.,20ல்
தொடங்கப்பட்டது. கடல் மட்டத்தில் இருந்து 6,401 அடி உயரத்தில் உள்ளது.
இங்கு வானவியல், வான் இயற்பியல் துறைகளில் ஆராய்ச்சி
மேற்கொள்ளப்படுகின்றன. இம்மையத்தில் கோள்கள் மற்றும் நட்சத்திரங்களை தொலை
நோக்கி மூலம் காண்பதற்கான வசதி உள்ளது. முன் அனுமதியுடன் பார்வையாளர்கள்
அனுமதிக்கப்படுகின்றனர்.

தகவல் சுரங்கம் : உயரமான ரயில் நிலையம்
இந்தியாவின் உயரமான ரயில்வே ஸ்டேஷன் 'ஜூம் ரயில் நிலையம்'. இது உலகளவில்
14வது இடத்தில் உள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 7,407 அடி உயரத்தில்
அமைந்துள்ளது. ஹிமாச்சல் மாநிலத்தில் சில்குரியில் இருந்து டார்ஜிலிங்
செல்லும் மலை ரயில்பாதையில், இந்த ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில்பாதை
மலை ஏற்ற இறக்கங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப்பயணிகளை இந்த
ரயில் பாதை வெகுவாக ஈர்க்கிறது. இதில் செல்லும் ரயில் நீராவி இன்ஜினில்
செயல்படுகிறது. யுனெஸ்கோ உலக பண்பாட்டு சின்னத்தில் இடம் பெற்றுள்ளது.

TAMIL BEAUTY TRICKS

unread,
Aug 13, 2019, 9:09:09 PM8/13/19
to brailleacl
உலகளவில் பருவநிலை மாற்றம் தொடர்பாக ஆய்வு செய்ய, ஐ.நா., சார்பில்
ஆண்டுதோறும் பருவநிலை மாற்றம் மாநாடு நடத்தப்படுகிறது. சுற்றுச்சூழலை
மாசுபடுத்தும் மற்றும் வெப்பநிலை உயர்வுக்கு காரணமாக இருக்கும் பசுமை
இல்ல வாயுக்களை குறைப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இம்மாநாட்டில்
விவாதிக்கப்பட்டுள்ளன. இதன் முதல் மாநாடு 1995ல் ஜெர்மனியின் பெர்லின்
நகரில் நடந்தது. இதன் எட்டாவது மாநாடு 2002ல் இந்திய தலைநகர் டில்லியில்
நடந்தது. 2019ம் ஆண்டுக்கான மாநாடு டிச., 2 - 13 வரை சிலியில் நடைபெற
உள்ளது.

தகவல் சுரங்கம்: சில்குரி 'காரிடர்'
இந்தியா - வடகிழக்கு இந்தியாவையும் இணைக்கும் ஒரே பாதையாக 'சிலிகுரி
காரிடர்' உள்ளது. இது 22 கி.மீ., துார அகலம் மட்டுமே கொண்டது. இது 'கோழி
கழுத்து' எனவும் அழைக்கப்படுகிறது. இதன் இருபுறமும் நேபாளம் மற்றும்
வங்கதேசம் உள்ளது. இதன் வடக்கில் பூடான் உள்ளது. இப்பாதை 1947 இந்தியா -
பாக்., பிரிவினையின் போது, உருவாக்கப்பட்டது. இது இந்தியாவுக்கு
முக்கியமான பகுதி. இந்தியாவையும் - வடகிழக்கு மாநிலங்களையும் இணைக்கும்
ஒரே பாதை. இப்பகுதியில் ராணுவம், அசாம் ரைபிள்ஸ், எல்லை பாதுகாப்பு படை
ஆகியவை கண்காணிக்கின்றன.

TAMIL BEAUTY TRICKS

unread,
Aug 14, 2019, 9:30:26 PM8/14/19
to brailleacl
இந்தியாவில் குறிப்பிட்ட பகுதியில் தயாரிக்கப்படும் பொருட்கள் அல்லது
விளைவிக்கப்படும் பொருட்கள் தனித்துவம் பெற்றிருந்தால், அப்பொருட்களுக்கு
மத்திய அரசு 'புவிசார் குறியீடு' வழங்கி பாதுகாக்கிறது. இக்குறியீடானது
பொருளின் தரத்தையும், நன்மதிப்பையும் வெளிப்படுத்துகிறது. இதனால்
இப்பொருட்களுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்கிறது. இந்தியாவில் புவிசார்
குறியீடு சட்டம் 1999ல் அறிமுகமாகி 2003ல் அமலுக்கு வந்தது. இதுவரை
இந்தியாவில் 350க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு, புவிசார் குறியீடு
வழங்கப்பட்டுள்ளது.

தகவல் சுரங்கம்: சீனா முதலிடம்
உலகளவில் பலரும் தேயிலை உடன், ஒவ்வொரு காலைப் பொழுதையும்
தொடங்குகின்றனர். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் தேயிலை தோன்றியது.
சீனா தான் இதனை அறிமுகப்படுத்தியது. தேயிலை உற்பத்தியில் உலகில்
முதலிடத்தை சீனா தான் பெற்றுள்ளது. அங்கு ஆண்டுக்கு 24.73 லட்சம் டன்
தேயிலை உற்பத்தியாகிறது. இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. இங்கு 13.25
லட்சம் டன் உற்பத்தியாகிறது. அடுத்த இடங்களில் கென்யா, இலங்கை,
வியட்நாம், துருக்கி, இந்தோனேசியா, மியான்மர், ஈரான் ஆகிய நாடுகள் உள்ளன.

TAMIL BEAUTY TRICKS

unread,
Aug 15, 2019, 9:14:48 PM8/15/19
to brailleacl
அனல் மின்சாரம், நீர்மின்சாரம், காற்றாலை மின்சாரம், அணு மின்சாரம்,
சோலார் மின்சாரம் என பல வழிகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
மற்ற வகை மின்சார உற்பத்திக்கு செலவு அதிகம். ஆனால் இயற்கையாக கிடைக்கும்
சூரிய ஒளியை பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதனால் செலவும் குறையும்,
அனைத்து இடங்களிலும் உற்பத்தியை பரவலாக்கலாம். எதிர்கால மின்தேவைக்கு
சோலார் மின்சாரம் தான் உகந்தது. இந்நிலையில் சீனாவில் நிலக்கரி உள்ளிட்ட
மற்றவகை மின்சாரத்தை விட, சூரிய மின்சாரம் குறைந்த செலவில்
வழங்கப்படுகிறது.

தகவல் சுரங்கம்: முதல் பெண்
இந்தியாவில் அறிவியல் மற்றும் அதன் பயன்களை ஊக்குவிக்கும் பணியில்,
இந்திய தேசிய அறிவியல் கழகம் ஈடுபடுகிறது. இது 1935 ஜன., 7ல் தொடங்கப்
பட்டது. புதுடில்லியில் அமைந்துள்ளது. பிரிட்டனை சேர்ந்த புவியியலாளர்
சர் லீவிஸ் லெய் பெர்மார் இதனை தொடங்கினார். முதல் தலைவராகவும்
பணியாற்றினார். சாந்தி ஸ்வரூப் பட்நாகர், சத்யேந்திர நாத் போஸ், ஹோமி
பாபா, சி.என்.ஆர். ராவ் போன்ற விஞ்ஞானிகள் இந்த அமைப்பின் தலைவர்களாக
இருந்துள்ளனர். சமீபத்தில் இதன் முதல் பெண் தலைவ ராக சந்திரிமா சாஹா
என்பவர் நியமிக்கப்பட்டார்.

TAMIL BEAUTY TRICKS

unread,
Aug 16, 2019, 9:13:29 PM8/16/19
to brailleacl
அறிவியல் ஆயிரம்

தாழ்வான இடம்
ஆசிய கண்டத்துக்குத் தெற்கே, ஜோர்டான் - இஸ்ரேல் இடையே உள்ளது சாக்கடல்.
இது கடல் அல்ல. உப்பு நீர் ஏரி. இங்கு மீன், நண்டு உள்ளிட்ட உயிரினங்கள்
வாழ இயலாது. இது 'சாக்கடல்' என அழைக்கப்படுகிறது. இதன் உப்புத்தன்மை 34.2
சதவீதம். இது மற்ற கடல்களைவிட 10 மடங்கு அதிகம். கூடுதல் உப்புத்
தன்மையால், இந்த நீரின் அடர்த்தி மனித எடையை விட அதிகம். இதனால் இங்கு
மிதக்க முடிகிறது. பூமியில் கடல் மட்டத்துக்கு கீழே தாழ்வான பகுதி
இதுதான். இது, 67 கி.மீ. நீளமும், 18 கி.மீ. அகலமும் கொண்டது.
தகவல் சுரங்கம்

பிரான்சின் நன்கொடை
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள லிபெர்டி தீவில் சுதந்திர தேவி
சிலை உள்ளது. காப்பரால் செய்யப்பட்ட இச்சிலையை அமெரிக்காவுக்கு, பிரான்ஸ்
நாடு அன்பளிப்பாக வழங்கியது. அப்போதைய அமெரிக்க அதிபர் குரோவர்
கிளிவ்லண்ட், 1886 அக்., 28ல் இச்சிலையை நிறுவினார். சிலையின் உயரம் 151
அடி. பீடத்துடன் சேர்த்து சிலையின் உயரம் 305 அடி. சிலையின் மொத்த எடை
204 டன். சிலையின் கீழிருந்து தலையில் உள்ள கிரீடம் வரை ஏறிச்செல்ல
படிகள் உண்டு. சூழ்நிலைக்கு ஏற்ப, படிகளில் ஏறுவதற்கு அவ்வப்போது அனுமதி
மறுக்கப்படுகிறது.

TAMIL BEAUTY TRICKS

unread,
Aug 18, 2019, 10:02:09 AM8/18/19
to brailleacl
அறிவியல் ஆயிரம்

தீக்குச்சியின் வரலாறு
தற்போது தீப்பற்ற பல சாதனங்கள் வந்தாலும், தீக்குச்சியின் பயன்பாடு
முக்கியத்துவம் பெறுகிறது. உலகில் முதன்முதலில் தீக்குச்சியை
இங்கிலாந்தின் ஜான் வாக்கர் கண்டுபிடித்தார். அது பாஸ்பரஸ் கலவையினால்
செய்யப்பட்டது. பின் அதே நாட்டின் ஜோன்ஸ், 1830ல் பாஸ்பரசைக் கொண்டு
தீக்குச்சி செய்தார். இருவரது தீக்குச்சிகளும் எந்த இடத்திலும்
பற்றிக்கொள்ளும் அபாயம் இருந்தது. பின் 1831ல் பிரான்சின் ஸாரியா,
கந்தகமும்- பாஸ்பரசும் சேர்ந்த தீக்குச்சியை உருவாக்கினார். இது
ஆபத்தில்லாமல் இருந்தது.
தகவல் சுரங்கம்

பெரு அதிசயம்
பெரு நாட்டில் 'மச்சு பிச்சு' என்பது, கடல் மட்டத்தில் இருந்து 7,970 அடி
உயரத்தில் அமைந்துள்ள 15ம் நுாற்றாண்டை சேர்ந்த வரலாற்று நகரம்.
“இன்காக்களில் தொலைந்த நகரம்” என அழைக்கப்பட்டு வந்த இப்பகுதி, இன்கா
பேரரசின் வரலாற்றுச் சின்னமாகக் கருதப்படுகிறது. இது 1911ல்
கண்டுபிடிக்கப்பட்டது. 1983ல் யுனெஸ்கோவின் உலக பண்பாட்டு சின்னங்களின்
பட்டியலில் இடம் பெற்றது. இது 2007ல் உலக அதிசயங்களில் ஒன்றாக
சேர்க்கப்பட்டது. தற்போது 'ராயல் எஸ்டேட்' என அழைக்கப்படும் இப்பகுதியில்
750 பேர் வாழ்கின்றனர்.

TAMIL BEAUTY TRICKS

unread,
Aug 18, 2019, 9:39:31 PM8/18/19
to brailleacl
அறிவியல் ஆயிரம்

குறையும் காய்கறி
உணவுப்பொருட்களில் காய்கறி முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் பல வகைகள்
உள்ளன. இவை உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கிறது. சில காய்கறிகளை
சமைக்காமலும், சிலவற்றை சமைத்தும் சாப்பிடலாம். இந்நிலையில் கடந்த 20
ஆண்டுகளில், காய்கறி உற்பத்தி வளர்ச்சி வீதம், 59 சதவீதம் குறைந்துள்ளது.
உலகளவில் ஏற்பட்ட மழையின்மை மற்றும் வறட்சி தான் இதற்கு காரணம் என
பிரிட்டன் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அதிகரித்து வரும்
வெப்பநிலை உயர்வால், நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து வருகிறது. இதனால்
உற்பத்தி பாதிக்கிறது.
தகவல் சுரங்கம்

உயரமான சிகரம்
ஐரோப்பாவின் உயரமான மலை என 'எல்ப்ரஸ் மலை' அழைக்கப்படுகிறது. இது
ரஷ்யாவின் தென்பகுதியில், ஜார்ஜியா நாட்டின் எல்லையை ஒட்டி காக்கசஸ்
மலைத்தொடரில் அமைந்து உள்ளது. எல்ப்ரஸ் மலையில் இரண்டு சிகரங்கள் உள்ளன.
மேற்கு சிகரத்தின் உயரம், கடல் மட்டத்திலிருந்து 18,510 அடி. இது
ஐரோப்பாவின் உயரமான சிகரம் என அழைக்கப்படுகிறது. கிழக்கில் உள்ள
இரண்டாவது சிகரத்தின் உயரம், கடல்மட்டத்தில் இருந்து, 18,442 அடி.
கிழக்கு சிகரத்தின் உச்சியை, 1829ல் கிலார் கச்சிராவ் ஏறி சாதித்தார்.
1874ல் கிரவ்போர்டு கிரவ் மேற்கு சிகரத்தில் ஏறி சாதித்தார்.

TAMIL BEAUTY TRICKS

unread,
Aug 19, 2019, 9:31:25 PM8/19/19
to brailleacl
முந்தும் சீனா, இந்தியாஉலகளவில் மழைப்பொழிவு குறைந்து புவி வெப்பம்
அடைகிறது. இதனால் கடல் நீர்மட்டம் உயர்வு, உணவுப்பொருள் பாதிப்பு, நீர்
பற்றாக்குறை, வறட்சி ஆகியவை ஏற்படுகின்றன. மழை பெய்வதற்கு மரங்கள்
அவசியம். இதனால் மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என
வலியுறுத்தப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளில், சீனா மற்றும் இந்தியாவில்
மரங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன என நாசா ஆய்வு தெரிவிக்கிறது. இதற்கு
அடுத்து, ஐரோப்பிய யூனியன், கனடா, ரஷ்யா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா
உள்ளிட்ட நாடுகள் உள்ளன.

தகவல் சுரங்கம்
தார் எக்ஸ்பிரஸ்
'காஷ்மீர்' விவகாரம் தொடர்பாக இந்தியா - பாக்., இடையே 'தார்' ரயில் சேவை
நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து
எல்லைப்பகுதியான முனபாவ் வரை 'தார் லிங்க் எக்ஸ்பிரஸ்' ரயிலை இந்தியா
இயக்குகிறது. பின் பயணிகளிடம் ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டு, பாக்.,
எல்லைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். பின் பாகிஸ்தானின் 'கோக்ராபர்' என்ற
இடத்திலிருந்து கராச்சி நகர் வரை, 'தார் எக்ஸ்பிரஸ்' என்ற ரயிலை பாக்.,
இயக்குகிறது. இந்த ரயில் சேவை 2006ல் தொடங்கப் பட்டது. இது 381 கி.மீ.,
துாரம் பயணம் செய்கிறது.

TAMIL BEAUTY TRICKS

unread,
Aug 20, 2019, 9:33:13 PM8/20/19
to brailleacl
அறிவியல் ஆயிரம்

பிளாஸ்டிக் தரும் ஆபத்து

சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிப்பதில் பிளாஸ்டிக் முன்னணியில் உள்ளது.
இதன் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டாலும், இதன் பயன்பாடு
குறையவில்லை. பிரிட்டன் கடற்கரை பீச்சில், விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில்,
சிறிய கூழாங்கற்கள் மற்றும் மலை கற்கள் போன்றவற்றை கண்டுபிடித்தனர். இதை
ஆய்வு செய்ததில், பல்வேறு பிளாஸ்டிக் பொருட்களின் குப்பைகள் ஒன்று
சேர்ந்து, இது போல மாறியுள்ளன என்பதை கண்டறிந்தனர். இதையடுத்து உலகளவில்
கடலோரங்களில் இது போல மண்ணில் புதைந்திருக்கலாம் என எச்சரித்துள்ளனர்.

தகவல் சுரங்கம்

இந்தியாவின் விடிவெள்ளி

மேற்கு வங்கத்தில் 1772 மே 22ல் ராம் மோகன் ராய் பிறந்தார். 'பிரம்ம
சமாஜத்தை' நிறுவினார். இந்த இயக்கத்தின் மூலம் நாட்டில் சமூக மற்றும் மத
சீர்திருத்த பணிகளில் ஈடுபட்டார். இரண்டாம் அக்பர் ஷாவால் இவருக்கு
'ராஜா' என்ற பட்டம் வழங்கப்பட்டது. அரசியல், பொது நிர்வாகம், கல்வி ஆகிய
துறைகளில் ஆலோனை வழங்கினார். ஆங்கிலம், லத்தீன், சமஸ்கிருதம், இந்தி
போன்ற மொழிகளில் பேசும் திறமை பெற்றிருந்தார். இவர் இந்தியாவின்
விடிவெள்ளி என அழைக்கப்படுகிறார். உடன்கட்டை ஏறுதல், குழந்தை திருமணம்
போன்றவற்றை எதிர்த்து போராடினார்.

TAMIL BEAUTY TRICKS

unread,
Aug 21, 2019, 9:23:07 PM8/21/19
to brailleacl
அறிவியல் ஆயிரம்

பச்சை நிறத்துக்கு காரணம்
பசுமை, அமைதி, வெற்றி போன்றவற்றை குறிப்பதற்கு 'பச்சை' நிறம்
பயன்படுத்தப்படுகிறது. இயற்கையின் நிறமே பச்சை தானே. இந்நிறத்தை காண்பது
கண்கள் மற்றும் மனதுக்கு மகிழ்ச்சியான உணர்வை ஏற்படுத்துகிறது.
மருத்துவமனைகளில் ஆப்பரேஷன் தியேட்டர் அறை, டாக்டர்கள் மற்றும்
செவிலியர்கள் 'பச்சை' நிற ஆடை பயன்படுத்துகின்றனர். இதற்கு காரணம், அடர்
சிவப்பு கொண்ட ரத்தத்தை பார்க்கும் போது, அது டாக்டர்களை அயர்வுக்கு
உள்ளாக்கி விடும். இதனை மாற்றுவதற்காக, அறை மற்றும் ஆடைகள் பச்சை
நிறத்தில் பயன்படுத்தப்படுகிறது.
தகவல் சுரங்கம்

அணுசக்தி கழகம்
இந்திய அணுசக்தி ஆணையம் 1948 ஆக., 10ல், அறிவியல் ஆராய்ச்சி துறையின்
கீழ் தொடங்கப் பட்டது. பின் 1958 மார்ச் 1ல் அணுசக்தி துறைக்கு கீழ்
கொண்டு வரப்பட்டது. அணுசக்தி துறை என்பது, பிரதமரின் இலாக்காக்களில்
ஒன்றாக உள்ளது. இந்த ஆணையம், அணுசக்தி ஆராய்ச்சி செய்வது, அணுசக்தி
குறித்து விஞ்ஞானிகளுக்கு பயிற்சி வழங்குதல் போன்ற பணிகளில் ஈடுபடுகிறது.
இந்த ஆணையத்தின் முதல் தலைவராக விஞ்ஞானி ஹோமி பாபா, 1948 - 1966 வரை பதவி
வகித்தார். தற்போதைய தலைவராக கே.என்.வியாஸ் உள்ளார்.

TAMIL BEAUTY TRICKS

unread,
Aug 22, 2019, 11:18:57 PM8/22/19
to brailleacl
அறிவியல் ஆயிரம்

முதல் சுரங்க ரயில்
இந்தியாவில் டில்லி, மும்பை, சென்னை, கோல்கட்டா உள்ளிட்ட சில முக்கிய
நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை நடைபெறுகிறது. கோல்கட்டாவில் நீருக்கு
அடியில் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. விரைவில்
பயன்பாட்டுக்கு வர உள்ளது. இது நீருக்கு அடியில் அமைக்கப்படும் நாட்டின்
முதல் சுரங்கப்பாதை. நீளம் 520 மீட்டர். அகலம் 1.4 மீட்டர்.
கோல்கட்டாவையும், ஹவுராவையும் இணைக்கும் விதமாக, கங்கை ஆற்றின் கீழ் இந்த
ரயில்பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஆற்று நீர்மட்டத்தில் இருந்து 33 மீட்டர்
ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

தகவல் சுரங்கம்
குறைந்த நாள் முதல்வர்
இந்தியாவில் இதுவரை 16 பெண்கள், மாநில முதல்வராக பதவி வகித்துள்ளனர்.
நாட்டின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமைக்குரியவர் சுசேதா கிருபளானி.
இவர் உ.பி.,யின் முதல்வராக 1963 - 1967 வரை இருந்தார். அதிக நாட்கள்
பதவியில் இருந்த பெண் முதல்வர் ஷீலா தீட்சித். இவர் டில்லி முதல்வராக
5,504 நாட்கள் இருந்தார். அதிக முறை பதவியேற்ற பெண் முதல்வர் ஜெயலலிதா.
இவர் தமிழக முதல்வராக ஆறுமுறை இருந்தார். மிக குறைந்த நாள் பதவி வகித்த
பெண் முதல்வர் ஜானகி ராமச்சந்திரன். தமிழக முதல்வராக 23 நாள் மட்டுமே

TAMIL BEAUTY TRICKS

unread,
Aug 27, 2019, 5:06:49 AM8/27/19
to brailleacl
அமேசான் தீயால் ஆபத்துஉலகின் மிகப்பெரிய காடு அமேசான். இதன் பரப்பளவு 50
லட்சம் சதுர கி.மீ. பிரேசில், பெரு, கொலம்பியா, வெனிசுலா, பொலிவியா
உள்ளிட்ட நாடுகளில் பரவி உள்ளது. சமீபத்தில் அமேசான் காட்டின் ஒரு
பகுதியில் தீ பற்றி எரிகிறது. அணைக்கும் முயற்சி நடைபெறுகிறது.
இந்நிலையில் தீயினால் அதிகளவில் கார்பன் மோனாக்சைடு வெளியேறுகிறது. இது
சில வாரங்களுக்கு அப்படியே வளிமண்டலத்தில் தங்கியிருக்கும். இதனால்
அப்பகுதியில் காற்று மாசுபாடு அதிகரிக்கும் என நாசா விண்வெளி மையம்
தெரிவித்துள்ளது.

தகவல் சுரங்கம்
இமயமலை பயிற்சிஇந்தியாவில் சாகச சுற்றுலாவை பிரபலபடுத்த பல்வேறு
முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இமயமலையில்
137 மலை சிகரங்களில், வெளிநாட்டு மலையேற்ற வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள
மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த சிகரங்கள் ஜம்மு காஷ்மீர்,
ஹிமாச்சலபிரதேசம், உத்தரகண்ட் மற்றும் ஹரியானா மாநிலங்களில் உள்ளன.
இதற்குமுன் வெளிநாட்டு வீரர்கள், இந்த சிகரங்களில் ஏறுவதற்கு பாதுகாப்பு
மற்றும் உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெற வேண்டும் என்றிருந்தது.

TAMIL BEAUTY TRICKS

unread,
Aug 27, 2019, 9:13:11 PM8/27/19
to brailleacl
அறிவியல் ஆயிரம்

சூரிய ஒளி ரயில் பாதை

உலகின் முதன்முதலாக சூரிய ஒளி ரயில் பாதை பிரிட்டனில்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இங்கி லாந்தின் ஹேம்ஷயர் நகரில் உள்ள ரயில்
பாதையில் விளக்குகள், சிக்னல்கள் ஆகியவை முற்றிலும் சூரிய ஒளி
மின்சாரத்தில் இயங்குகிறது. இதற்காக நுாறு சோலார் பேனல்கள்
பொருத்தப்பட்டு, மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. எதிர்காலத்தில்
சோலார் ஒளியில் இயங்கும் ரயிலை இயக்குவதற்கு இது தொடக்கமாக இருக்கும் என
விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 2040க்குள் ரயில்வேயில் டீசல் பயன்பாட்டை
முற்றிலும் தவிர்க்க பிரிட்டன் திட்டமிட்டுள்ளது.


தகவல் சுரங்கம்
யு.ஏ.இ.,யின் தந்தை
சமீபத்தில் பிரதமர் மோடிக்கு, அந்நாட்டின் உயரிய விருதான 'ஆர்டர் ஆப்
சயீத்' வழங்கப்பட்டது. இவ்விருது யு.ஏ.இ., யின் முதல் அதிபராக இருந்த
சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான் என்பவர் பெயரால் வழங்கப்படுகிறது. 1918
ல் பிறந்த இவர், 30 ஆண்டுகளுக்கும் மேலாக அபுதாபி மன்னராக பதவி
வகித்தார். பின் யு.ஏ.இ., என்ற யூனியன் உருவாக காரணமாக இருந்தார். இதனால்
'யு.ஏ.இ.,யின் தந்தை' எனவும் அழைக்கப்படுகிறார். யு.ஏ.இ., என்பது
அபுதாபி, அஜ்மான், துபாய், சார்ஜா, புஜைரா, உம் அல்-குவைன், ராஸ் அல்
கைமாஹ்
ஆகிய ஏழு பகுதிகளை கொண்டது.

TAMIL BEAUTY TRICKS

unread,
Aug 28, 2019, 9:17:42 PM8/28/19
to brailleacl
அறிவியல் ஆயிரம்
செவ்வாயில் உங்கள் பெயர்

செவ்வாய் கிரகத்துக்கு, 'மார்ஸ் 2020 ரோவர்' விண்கலத்தை 'நாசா', 2020
ஜூலை 17ல் செலுத்த திட்டமிட்டுள்ளது. இது 2021 பிப்., 21ல் செவ்வாயில்
தரையிறங்கும். இது செவ்வாயில் உயிர் வாழ்வதற்கான தடயங்கள், தட்பவெப்பம்
உள்ளிட்ட ஆய்வுகளில் ஈடுபடும். இதில் உலகளவில் மக்களின் பெயர்களை இலவசமாக
பொறிப்பதற்கான வாய்ப்பை 'நாசா' வழங்கியுள்ளது. இதற்கு
mars.nasa.gov/participate/send-your-name/mars2020 ல் பெயர், இமெயில்
போன்றவற்றை பதிவு செய்ய வேண்டும். நேற்றுவரை 88.57 லட்சம் பேர் பதிவு
செய்துள்ளனர்.


தகவல் சுரங்கம்

நடமாடும் அணுமின் நிலையம்

உலகில் முதன்முதலாக நீரில் மிதக்கும் 'அகாடெமிக் லோமோனோசோவ்' என்ற அணு
மின் நிலையத்தை ரஷ்யா தொடங்கியுள்ளது. இந்த அணுமின் நிலையத்தை கட்டி
முடிக்க 22 ஆண்டுகள் ஆனது. இதன் பயணம் ரஷ்யாவின் முர்மான்ஸ்க் என்ற
இடத்தில் இருந்து புறப்பட்டு ஆர்டிக் கடல் பகுதியில் 5 ஆயிரம் கி.மீ.,
துாரம் பயணம் செய்து பெவிக் என்ற இடத்தில் முடிகிறது. 472 அடி நீளமும்,
98 அடி அகலமும் கொண்டது. 21,500 டன் எடையை தாங்கும். 69 பேர்
பணியாற்றுகின்றனர். இதில் தலா 35 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் இரண்டு
அணு உலைகள் உள்ளன.

TAMIL BEAUTY TRICKS

unread,
Aug 29, 2019, 9:10:59 PM8/29/19
to brailleacl
அறிவியல் ஆயிரம்

தண்டுவடம் பாதுகாப்பு
உடலின் முக்கிய உறுப்புகளில் ஒன்று முதுகுத்தண்டு. தற்போது
பெரும்பாலானோர், கம்ப்யூட்டர் சார்ந்த பணிகளில் ஈடுபடுவதால், அதிக நேரம்
இருக்கையில் அமர்ந்து பணியாற்ற நேரிடுகிறது. உட்காரும் போது முதுகை
வளைக்காமல் நேராக உட்கார வேண்டும். ஆனால் பலரும் இதனை செய்வதில்லை.
இதனால் முதுகுவலி பிரச்னைக்கு ஆளாகின்றனர். இந்நிலையில் நாம் நேராக
உட்காருவதற்கு நம்மை அலர்ட் செய்யும் 'ஸ்மார்ட்வாட்ச்'
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது நாம் வளைந்து உட்காரும்போதெல்லாம், ஒலி
எழுப்பி நம்மை நேராக உட்கார சொல்லி எச்சரிக்கிறது.


தகவல் சுரங்கம்

குடி தண்ணீரில் பிளாஸ்டிக்
உலகம் முழுவதும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும்
நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதிலிருந்து பிளாஸ்டிக்கின் பாதிப்பு
எந்தளவுக்கு உலகை அச்சுறுத்துகிறது என்பது தெளிவாகிறது. இந்நிலையில்
மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள், தற்போது குடிக்கும் குடிநீர் குழாய் மற்றும்
வாட்டர் பாட்டிலிலும் கலக்கிறது. இதன் தற்போதைய நிலை உடல்நலத்துக்கு
பாதிப்பை ஏற்படுத்த தொடங்க வில்லை. ஆனால் எதிர்கால ஆபத்தில் இருந்து
தப்பிக்க, இதுகுறித்து ஆராய்ச்சி நடத்தப்பட வேண்டும் என உலக சுகாதார
நிறுவனம் தெரிவித்துள்ளது.

TAMIL BEAUTY TRICKS

unread,
Aug 30, 2019, 9:01:05 PM8/30/19
to brailleacl
அறிவியல் ஆயிரம்

மாங்குரோவ் காடுகள்
கடல் அரிப்பைத் தடுக்கவும், சுனாமி பாதிப்புகளை தடுக்கவும் மாங்குரோவ்
எனும் அலையாத்தி
காடுகள் பயன்படுகின்றன. மாங்குரோவ் காடுகள் கடல் நீரில் வளர்வது இல்லை.
கடல் நீரை உறிஞ்சி, அதில் உள்ள உப்பை பிரித்து, நல்ல நீரில்தான்
வளர்கின்றன. இந்த மரங்களின் விழுதுகள், ஆலம் விழுதுபோல படர்ந்துவிடும்.
நிலமும் கடலும் சேரும் பகுதிகளில், சில இடங்கள் மண்ணும் நீரும் சேர்ந்து
சேற்றுப் பகுதியாகவும், சில அடி உயரத்திற்கு நீர் நிறைந்தும் இருக்கும்.
அலையாத்தி தாவரங்கள் இச்சூழலில் வளர்கின்றன.
தகவல் சுரங்கம்

புதிய தலைநகரம்
இந்தோனேசியா தலைநகரை ஜகார்தாவுக்கு பதிலாக போர்னியோ தீவுக்கு மாற்ற அந்நாட்டு
அரசு திட்டமிட்டுள்ளது. உலகின் மூன்றாவது பெரிய தீவு போர்னியோ. இது
ஆசியாவின் மிகப்பெரியது. இத்தீவை மூன்று நாடுகள் பிரிக்கின்றன. இதன் 73
சதவீத பகுதியை இந்தோனேசியாவும், 26 சதவீதத்தை மலேசியாவும், ஒரு சதவீதத்தை
புரூனேயும் பிரிக்கின்றன. இத்தீவு மக்கள் அடர்த்தி குறைந்த பகுதிகளில்
ஒன்று. இத்தீவில் உள்ள மழைக்காடுகள், உலகின் பழமையான மழைக்காடுகளில்

TAMIL BEAUTY TRICKS

unread,
Aug 31, 2019, 10:17:09 PM8/31/19
to brailleacl
அறிவியல் ஆயிரம்

பாதுகாக்க வேண்டிய 'பவளம்'
நிலத்தில் இருப்பது போலவே, கடலிலும் பல்லுயிரிய அமைப்புகள் நிறைய
இருக்கின்றன. அவற்றில் பவளப்பாறைகள் முக்கியமானது. 'பவளம்' எனப்படும் ஒரு
வகை கூட்டுயிரிகள் சுரக்கும் சுண்ணாம்பு பிணைப்புகளால், பவளப்பாறைகள்
உருவாகின்றன. பார்ப்பதற்கு அழுத்தமான சுண்ணாம்பு செடிகளின் தொகுப்பு போல
இவை இருக்கும். இந்தத் தொகுப்புகளோடு, பல வகையான நுண்ணுயிரிகள் ஒட்டி
வளர்ந்து பவளப்பாறைகளின் தன்மையை நிர்ணயிக்கின்றன. பவளப்பாறைகள் பல
வண்ணங்களில் இருப்பதால், கண்கவரும் பூஞ்சோலை மாதிரி தெரியும்.

தகவல் சுரங்கம்

பண்பாட்டு பாதுகாப்பு
ஒவ்வொரு நாடும், வெவ்வேறு பண்பாடு மற்றும் கலாசாரத்தை கொண்டுள்ளது.
உலகில் இயற்கை மற்றும் கலாசாரத்தை பிரதிபலிக்கும் இடங்களை பாதுகாக்கும்
வகையில் ஐ.நா.,வின் யுனெஸ்கோ அமைப்பு, பண்பாட்டு சின்னங்கள் பட்டியலை
உருவாக்கியது. உலகளவில் இதில் 1,121 இடங்கள் இதுவரை இடம் பெற்றுள்ளன.
இதில் 869 கலாசாரம் பிரிவிலும், 213 இயற்கை பிரிவிலும், 39 இரண்டும்
கலந்த பிரிவிலும் உள்ளது. இதில் இந்தியாவின் 38 இடங்கள் இடம் பெற்றுள்ளன.

TAMIL BEAUTY TRICKS

unread,
Sep 2, 2019, 1:59:08 AM9/2/19
to brailleacl
ஆசியாவின் பெரிய பாலைவனம் 'கோபி பாலைவனம்'. இது சீனாவின் வடக்கு பகுதி
முதல் மங்கோலியாவின் தெற்கு பகுதி வரை பரவி உள்ளது. இதன் பெரும்பாலான
பகுதி மணல் பாங்காக இல்லாமல், கற்பாங்காகவே உள்ளது. பரப்பளவு 12.95
லட்சம் சதுர கி.மீ. நீளம் 1,500 கி.மீ. அகலம் 800 கி.மீ. கடல் மட்டத்தில்
இருந்து 2,990 - 4,990 அடி வரையிலான உயரத்தில் அமைந்துள்ளது. இதன் சராசரி
ஆண்டு மழைப்பொழிவு 194 மி.மீ. இங்குதான் முதல் டைனோசர் முட்டை
கண்டுபிடிக்கப்பட்டது.

தகவல் சுரங்கம்: உயரமான நன்னீர் ஏரி
உலகின் உயரமான இடத்தில் உள்ள நன்னீர் ஏரி என மானசரோவர் ஏரி
அழைக்கப்படுகிறது. இது சீனா கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் அமைந்து
உள்ளது. கைலாஷ் மலைத்தொடர் மூலம் இந்த ஏரி உருவானது. இது இந்து, புத்தம்
மற்றும் ஜெயின் சமூகத்தினருக்கு ஆன்மிக இடமாக திகழ்கிறது. இதன்
நீர்பிடிப்பு பரப்பளவு 410 சதுர கி.மீ அதிகபட்ச ஆழம் 300 அடி. கடல்
மட்டத்தில் இருந்து 15,060 அடி உயரத்தில் உள்ளது. குளிர்காலத்தில் இந்த
ஏரி நீர் முழுவதும் உறைந்து பனிக் கட்டியாகி விடும்.

TAMIL BEAUTY TRICKS

unread,
Sep 3, 2019, 9:20:28 PM9/3/19
to brailleacl
சூரிய குடும்பத்தில் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி,
யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய கோள்கள் உள்ளன. இதில் சூரியனுக்கு
அருகில் உள்ள கோள் மற்றும் சிறிய கோள் புதன். இது 87.97 நாட்களில்
சூரியனை ஒருமுறை சுற்றி விடுகிறது. சூரியனை வேகமாக சுற்றும் கோள் புதனில்
சூரிய வெப்பத்தை தக்க வைத்துக்கொள்ள வளிமண்டலம் இல்லாததால் மற்ற கோள்களை
விட வெப்பமாக இருக்கிறது. இதனால் 'வெப்பமான கோள் எனவும்
அழைக்கப்படுகிறது. மெரினர் 10, மெசஞ்சர் ஆகிய இரண்டு விண்கலங்கள் புதனை
ஆய்வு செய்ய நெருங்கின.

தகவல் சுரங்கம் : இயற்கையின் அழகு
இந்தியாவின் யூனியன் பிரதேசங்களில் ஒன்று லட்சத்தீவு. இது அரபிக்கடல்
பகுதியில் உள்ளது. பல தீவுகளை உள்ளடக்கியுள்ளது. இதன் தலைநகரம் கவராட்டி.
இதன் பரப்பளவு 32.6 சதுர கி.மீ. 2018 கணக்கின் படி, இதன் மக்கள்தொகை
சுமார் 78,568. இங்கு பெரும்பாலான மக்கள் பேசும் மொழி மலையாளம்.
இத்தீவில் அகாட்டி விமானநிலையம் உள்ளது. இங்குள்ள மக்களின் முக்கிய
தொழில் மீன் பிடித்தல் மற்றும் தேங்காய் எண்ணெய் உற்பத்தி. இதன் மொத்த
பரப்பளவில் 97 சதவீதம் காடுகளாக உள்ளன.

TAMIL BEAUTY TRICKS

unread,
Sep 4, 2019, 9:19:29 PM9/4/19
to brailleacl
உலகளவில் பிளாஸ்டிக் பயன்பாட்டால், சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. இதன்
பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வு தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஏதோ ஒரு வடிவில், நாம் சாப்பிடும் உணவிலும், மைக்ரோ
பிளாஸ்டிக் துகள்கள் கலந்து விடுகிறது. இதனால் நம் குடல்
பாதிக்கப்படுகிறது. சராசரியாக ஓராண்டில் ஒருவர், அவரையும் அறியாமல் 73
ஆயிரம் பிளாஸ்டிக் துகள்களை உட்கொள்கிறார். பிளாஸ்டிக் துகள்கள்
உட்கொள்வதற்கான காரணத்தில், பாட்டில் குடிநீர் முன்னணியில் உள்ளது. தவிர
காற்று, சாலை பணி, துணி தயாரித்தல் போன்ற பல உள்ளன.

தகவல் சுரங்கம்: சாக்லேட் தயாரிப்பு
'சாக்லேட்' என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும்
பிடித்தமானது. எந்த ஒரு மகிழ்ச்சியான தருணங்களிலும் இடம்பிடிக்கிறது.
கொக்கோ மரத்தின் கொட்டையின் விதைகளில் இரந்து பெறப்படும் கொழுப்பு
பாகத்தின் கலவையை சர்க்கரை, பால் மற்றும் பல இடு பொருட்களை சேர்ப்பதன்
மூலம் சாக்லேட் தயாரிக்கப்படுகிறது. இனிப்பூட்டப்படாத சாக்லேட், கரும்
சாக்லேட், பால் சாக்லேட், மிதமாக இனிப்பூட்டப்பட்ட சாக்லேட், கசப்பு
-இனிப்பு சாக்லேட், வெள்ளை சாக்லேட், கொக்கோ துாள் என பல வகைகளில்
தயாரிக்கப்படுகிறது.

TAMIL BEAUTY TRICKS

unread,
Sep 6, 2019, 9:27:40 PM9/6/19
to brailleacl
களைகளை எடுப்பது போல், விவசாயத்தில் கிளைகளை வெட்டுவதும் முக்கியமானது.
மரத்தின் கிளைகளை வெட்டினால் தான் கீழ்ப் பகுதிக்கு அதிக சூரிய ஒளி
கிடைக்கும். காற்றோட்டமும் இருக்கும். இதனால் அதிகளவில்
ஒளிச்சேர்க்கையும் நடைபெறும். பழங்கள் அதிக அளவில் விளைய சூரிய ஒளி
அவசியம். கிளைகளை வெட்டுவதால் மரத்தில் காயம் ஏற்படும். இதன் மூலமாக
பூச்சிகள் ஊடுருவும். இதனைத் தடுக்க வெட்டப்பட்ட இடத்தில் பூசணக்கொல்லி
தடவ வேண்டும். மரங்களை அல்ல, கிளைகளை வெட்டுங்கள் என்பது, பழ
விவசாயத்தில் முக்கிய கொள்கையாக பரவி வருகிறது.

தகவல் சுரங்கம்: கங்கையின் பிறப்பிடம்
உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில் கங்கோத்ரி நகரம்
அமைந்துள்ளது. இது இமயமலைத் தொடரில் 10,200 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
இது இந்துக்களின் புனிதத்தலமாக விளங்குகிறது. இங்கு கங்கை அம்மனுக்கு
கோவில் உள்ளது. இங்குதான் கங்கை நதி உற்பத்தியாகிறது. ஆனால்
கங்கோத்ரியில் ஓடும் ஆற்றுக்கு பெயர் பாகீரதி. இந்த ஆறு உத்தரகண்டின்
தேவபிரயாகை என்ற இடத்தில் வரும் போது தான், கங்கை நதியாக உருவெடுக்கிறது.
2011 மக்கள்தொகை கணக்கின் படி, கங்கோத்ரியின் மக்கள்தொகை 606. இதன்
எழுத்தறிவு 89 சதவீதம்.

TAMIL BEAUTY TRICKS

unread,
Sep 7, 2019, 9:04:14 PM9/7/19
to brailleacl
உலகளவில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி,
பொருளாதாரம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு 1901 முதல்,
ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இதில் அதிகபட்சமாக சர்வதேச
செஞ்சிலுவை சங்கத்துக்கு 1917, 1944 மற்றும் 1963 என மூன்று முறை
அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதற்கு அடுத்ததாக பார்தீன், மேரி
கியூரி, பாலிங், சாஞ்சர் ஆகிய விஞ்ஞானிகள், இரண்டு முறை நோபல் பரிசு
பெற்றவர்கள். அதே போல ஐ.நா. வின் அகதிகளுக்கான ஆணையம் இரண்டுமுறை நோபல்
பரிசு பெற்றுள்ளது.

தகவல் சுரங்கம் : முதல் பாதுகாப்பு அமைச்சர்
சுதந்திர இந்தியாவின் முதல் பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பு வகித்தவர்
பல்தேவ் சிங். சீக்கியரான இவர் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றவர்.
ஆங்கிலேயரின் கிரிப்ஸ் துாதுக் குழுவுடன் பேச்சு நடத்திய இந்திய குழுவில்
இடம் பெற்றிருந்தார். 1902 ஜூலை 11ல் பஞ்சாபின் ரூபர் என்ற இடத்தில்
பிறந்தார். நேரு அமைச்சரவையில் 1946 - 1952 வரை பாதுகாப்பு அமைச்சராக
பதவி வகித்தார். இவரது பதவிக்காலத்தில் தான், முதன்முறை காஷ்மீரில்
இந்தியா - பாக்., இடையே போர் நடந்தது. 1952 மற்றும் ௧957ல் லோக்சபாவுக்கு
தேர்வானார். 1961ல் டில்லியில் மறைந்தார்.

TAMIL BEAUTY TRICKS

unread,
Sep 8, 2019, 9:12:42 PM9/8/19
to brailleacl
சூரிய குடும்பத்தில் உள்ள எட்டாவது மற்றும் துாரத்தில் உள்ள கோள்
நெப்டியூன். சுற்றளவு அடிப்படையில் நான்காவது பெரியகோள். சூரியன் -
நெப்டியூன் இடையேயான துாரம் 450 கோடி கி.மீ. இது நீல நிறக்கோள் என
அழைக்கப்படுகிறது. இது 1846 செப்.23ல் ஜோஹான் காலே மற்றும் யுர்பெய்ன் லீ
வெர்ரீயர் இணைந்து கண்டுபிடித்தனர். சூரியனை ஒரு முறை சுற்றி வர 164
வருடங்கள் எடுத்துக் கொள்கிறது. இது எப்பொழுதும் --346 டிகிரி வெப்ப
நிலையிலேயே உறைந்து இருக்கிறது. இதனால் குளிர்ச்சியான கோள் எனவும்
அழைக்கப்படுகிறது.

தகவல் சுரங்கம் : பெரிய பூங்கா
உலகளவில் நிறைய தேசிய பூங்காக்கள் உள்ளன. இதில் கிரீன்லாந்தில் உள்ள
'வடகிழக்கு கிரீன்லாந்து தேசிய பூங்கா', உலகின் மிக பெரிய பூங்கா என
அழைக்கப்படுகிறது. உலகின் பெரிய பாதுகாக்கப்பட்ட பகுதியாக திகழ்கிறது.
இது 1974ல் தொடங்கி, 1988ல் விரிவுபடுத்தப்பட்டது. இதன் பரப்பளவு
9,72,000 சதுர கி.மீ. பூங்காவின் சில பகுதிகள் பனி சூழ்ந்தது. இதுதான்
டென்மார்க்கில் தொடங்கப்பட்ட முதல் பூங்கா. 5,000 முதல் 15,000 கத்துாரி
எருமைகள், துருவக்கரடிகள் மற்றும் சில பறவைகள் பூங்காவின் கடற்கரை
ஓரத்தில் காணப்படுகின்றன.

TAMIL BEAUTY TRICKS

unread,
Sep 9, 2019, 9:17:06 PM9/9/19
to brailleacl
'பிளாஸ்மோடியம்' என்ற ஒட்டுண்ணி 'அனோபிலிஸ்' எனும் பெண் கொசுவின்
வயிற்றில் தொற்றிக் கொள்கிறது. இந்த கொசு ஒருவரை கடிப்பதன் மூலம்,
மலேரியா பரவுகிறது. இது உடலில் கல்லீரலை தாக்குகிறது. ரத்த சிவப்பு
அணுக்களை தாக்கி, மரணத்தை ஏற்படுத்தக்கூடியது. இந்நிலையில் மலேரியா
தடுப்பதற்கான மருந்துகளின் கண்டுபிடிப்பால், அடுத்த 30 ஆண்டு களுக்குள்
உலகில் மலேரியா பாதிப்பு இல்லாத நிலையை ஏற்படுத்தலாம் என 'தி லான்செட்'
பத்திரிகை தெரிவித்துள்ளது.

தகவல் சுரங்கம் : பெரிய துறைமுகம்
உலகில் அதிக சரக்குகளை கையாள்வதன் அடிப்படையில் உலகின் பெரிய துறைமுகமாக,
சீனாவின் ஷாங்காய் துறைமுகம் விளங்குகிறது. இது சீனாவின் ஷாங்காய் நகரில்
உள்ளது. இது 2010ம் ஆண்டு சிங்கப்பூர் துறைமுகத்தை பின்னுக்கு தள்ளி,
உலகின் பிசியான துறைமுகம் என்ற பெயரைப் பெற்றது. இத்துறைமுகம் 2016ம்
ஆண்டு 3.70 கோடி டி.இ.யு.,க்களை கையாண்டது. டி.யு.இ., என்றால்
'டுவென்ட்டி பூட் ஈக்வலன்ட் யூனிட். ஒரு கப்பலின் சரக்கு சுமக்கும் திறனை
அளவிட பயன்படுகிறது. இது ஆறு, கடல் சேர்ந்த துறைமுகமாக விளங்குகிறது.

TAMIL BEAUTY TRICKS

unread,
Sep 11, 2019, 12:38:05 AM9/11/19
to brailleacl
திமிங்கலம் என்பது நீரில் வாழும் பாலுாட்டி இனத்தை சேர்ந்தது. பல வகைகள்
உள்ளன. இந்நிலையில் பிரிட்டன் கடற்கரையில் கரை ஒதுங்கி உயிரை விடும்,
திமிங்கலங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என ஆராய்ச்சியாளர்கள்
தெரிவித்துள்ளனர். 2017ல் மட்டும் ஆயிரம் திமிங்கலம் இறந்தன. 2011 - 2017
வரை 4,896 (திமிங்கலம், டால்பின் மற்றும் கடற்பன்றி) பலியாகின. இது
முந்தைய ஏழு ஆண்டுகளை ஒப்பிடுகையில் 15 சதவீதம் அதிகம். இதற்கு நோய்,
பிளாஸ்டிக் துகள் போன்றவை காரணமா என ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து
வருகின்றனர்.

தகவல் சுரங்கம்: இலக்கு நிறைவேறுமா
சூரிய ஒளி மின்சாரம் இந்தியாவில் வேகமாக வளரும் துறையாக உள்ளது. 2019
ஜூலை 31 கணக்கின் படி, இந்தியாவில் 30.071 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி
செய்யப்படுகிறது. ஒரு மெகாவாட் சோலார் மின்சாரம் தயாரிப்பதற்கான பேனல்களை
நிறுவுதற்கான செலவு, உலகளவில் இந்தியாவில் தான் குறைவாக உள்ளது. 2022ம்
ஆண்டுக்குள் 100 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய, மத்திய அரசு இலக்கு
நிர்ணயித்துள்ளது. நாடு முழுவதும் 42 சோலார் மின்சார உற்பத்தி பூங்கா
நிறுவப்பட்டுள்ளன. கட்டடங்களின் மேற்கூரைகளில் சோலார் பேனல்கள் பொருத்த
வலியுறுத்தப்படுகிறது.

TAMIL BEAUTY TRICKS

unread,
Sep 11, 2019, 9:17:57 PM9/11/19
to brailleacl
பருவநிலை மாற்றத்தின் காரணமாக, உலகின் புல்வெளிப் பரப்பளவு குறைந்து
வருகிறது என ஆய்வு தெரிவிக்கிறது. பருவநிலை மாற்றத்தின் காரணமாக
கார்பன்டை ஆக்சைடு அளவு அதிகரித்தல், வறட்சி, வெப்பநிலை உயர்வு,
உணவுப்பொருள் உற்பத்தி குறைவால் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு என பல
பாதிப்புகள் ஏற்படுகின்றன. உலகளவில் 105 புல்வெளிப் பகுதிகளை ஆய்வு
செய்ததில், அடுத்த 10 ஆண்டுகளில் இதன் பசுமையின் வளர்ச்சி வீதம்
பெரியளவில் குறையும் என அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள்
தெரிவித்துள்ளனர்.

தகவல் சுரங்கம்: நீளமான சுவர்
'சீனப் பெருஞ்சுவர்' உலக அதிசயங்களில் ஒன்று. நீளம் 9,000 கி.மீ.
மங்கோலியா மற்றும் மஞ்சூரியாவில் இருந்து வந்த படையெடுப்புகளிலிருந்து
சீனப் பேரரசைக் காப்பதற்காக அமைக்கப்பட்டது. சுவர் முழுவதும் ஒரே
சமயத்தில் கட்டப்பட்டதல்ல. அடுத்தடுத்து வந்த மன்னர்கள் சுவரை
நீட்டித்தனர். எதிரிகள் குதிரைகளைக் கொண்டு வராமல் தடுப்பதே இதன் முக்கிய
நோக்கம். பல சுவர்கள் வெவ்வேறு காலம் கட்டப்பட்டிருந்தாலும், கி.மு., 220
முதல் 200ல், சீனப்பேரரசர் சின் சி ஹுவாங் கட்டிய சுவரே பெயர் பெற்றது.

Palaniappan kandasamy

unread,
Sep 12, 2019, 5:49:03 AM9/12/19
to brail...@googlegroups.com
வளர்ச்சி என்ற பெயரில் மனிதனால் உருவாக்கப்படும் மாசினால் பாதிக்கப்பட்டு தற்கொலைசெய்துகொள்ளும் திமிங்கலங்கள் ஒருபுரம், ஜப்பான் போன்ற நாடுகளால் வேட்டையாடப்படுவதால் இரக்கும் திமிங்களங்கள் ஒருபுரம் ஆக மனித காட்டுமிராண்டித்தனத்தால் ஏகப்பட்ட சேதாரம். எங்குமுடியுமோ! நன்றி. வாழ்க. உயர்ந்த இடத்திலிருந்தால் ஒளிவிளக்காயிருக்கவேண்டும்.
கந்த பழனியப்பன், தொலைத்தொடர்புத்துரை வாழ்வூதியர், கோவை 4.
--
--
You received this message because you are subscribed to the Google
Groups "Brailleacl" group.
To post to this group, send email to brail...@googlegroups.com
To unsubscribe from this group, send email to
brailleacl+...@googlegroups.com

---
You received this message because you are subscribed to the Google Groups "Brailleacl" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to brailleacl+...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/brailleacl/CAGdjB32htFw4Zj-2%3DchUDEfEn1d2R9HFvSCmoSwmG9bS_XFzEw%40mail.gmail.com.


---
This email has been checked for viruses by Avast antivirus software.
https://www.avast.com/antivirus

TAMIL BEAUTY TRICKS

unread,
Sep 12, 2019, 9:03:07 PM9/12/19
to brailleacl
அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் இன்று மனிதன் செய்யும் வேலைகளில்
சிலவற்றை, இயந்திரம் செய்ய தொடங்கி விட்டது. இதற்காக பல்வேறு வகை
ரோபோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வெள்ளம் மற்றும் கடல்நீர்
மாசுபாடு போன்ற இயற்கை சூழ்நிலைகளின் போது, தண்ணீர் மாதிரியை எடுத்து
பரிசோதிப்பதற்காக, 'பறக்கும் மீன்' போன்ற ரோபோவை லண்டனை சேர்ந்த
இம்பீரியல் கல்லுாரி விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இது தண்ணீரின்
மேற்பரப்பில் இருந்து, மேல்நோக்கி புறப்பட தொடங்கிய இடத்தில் இருந்து 85
அடி துாரம் பறக்கும். இதன் எடை 160 கிராம்.

தகவல் சுரங்கம்: தேசிய போலீஸ் நினைவகம்
இந்தியாவில் முதல் 'தேசிய போலீஸ் நினைவகம்' கடந்தாண்டு அக்., 21ம் தேதி
திறக்கப்பட்டது. டில்லியின் சாணக்யபுரி பகுதியில் 6.12 ஏக்கர் பரப்பளவில்
அமைக்கப்பட்டுள்ளது. இதில் 1,600 சதுரமீட்டர் பரப்பளவில், 5 கேலரிகள்
அமைக்கப்பட்டுள்ளன. இந்த நினைவகத்தில் மத்திய, மாநில போலீஸ் படைகளின்
வரலாற்று ஆவணங்கள், தனிப்பட்ட ஆயுதங்கள், சீருடைகள், பட்டன், முத்திரை,
பெல்ட்டுகள், நாய்படைகளின் தனித்துவமான போட்டோக்கள் வைக்கப்பட்டுள்ளன.
அருங்காட்சியகத்தை பொது மக்கள் இலவசமாக பார்க்கலாம்.இ

TAMIL BEAUTY TRICKS

unread,
Sep 13, 2019, 9:04:46 PM9/13/19
to brailleacl
இந்தியாவின் மேற்கில் மகாராஷ்டிரா, - குஜராத் மாநில எல்லையில் தபதி
ஆற்றுக்கு தெற்கே தொடங்கி மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, தமிழகம் மற்றும்
கேரளாவில் பரவி கன்னியாகுமரியில் முடிகிறது மேற்குத்தொடர்ச்சி மலை.
பரப்பளவு 1,60,000 சதுர கி.மீ., சராசரி உயரம் 3,900 அடி. நாட்டின் 40
சதவீத நீர் உற்பத்தி இதன் மூலமே கிடைக்கிறது. இது அரபிக் கடலில் இருந்து
வரும் குளிர்காற்றை மறைத்து, அதன் மேற்கு பகுதியில் உள்ள கேரளா மற்றும்
மேற்கு கடற்கரை பகுதிகளுக்கு நல்ல மழைப்பொழிவை தருகிறது. இதனால் இங்கு
இயற்கை எழில் மிகுந்துள்ளன.

தகவல் சுரங்கம்: ஊழல் கண்காணிப்பு
மத்திய அரசு அதிகாரிகள், அலுவலர்கள் மீதான லஞ்சம் மற்றும் ஊழல் புகார்களை
விசாரிக்க விஜிலென்ஸ் கமிஷன் எனப்படும், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம்
1964ல் தொடங்கப்பட்டது. இது ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பு. இதன் தற்போதைய
கமிஷனராக சரத்குமார் பதவி வகிக்கிறார். இதன் முதல் தலைவராக இருந்தவர்
நித்துார் சீனிவாச ராவ். மத்திய அரசு அலுவலகங்களில் லஞ்சம், ஊழல்
நடக்காமல் தடுப்பதே இதன் முதன்மையான நோக்கம். இது ஒரு புலனாய்வு
அமைப்பல்ல. தேவைப்படும் நேரங்களில் மற்ற மத்திய புலனாய்வு அமைப்புகளை
நாடுகிறது.

TAMIL BEAUTY TRICKS

unread,
Sep 15, 2019, 12:34:52 AM9/15/19
to brailleacl
எந்த நேரத்திலும் தேநீர் குடிக்கும் பழக்கம் பலருக்கு உள்ளது.
தென்கிழக்கு ஆசியாதான் தேயிலை செடியின் பூர்வீகம். சீனாவில் துவங்கி மற்ற
நாடுகளுக்கு பரவியதாக கூறப்படுகிறது. இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியில்
தேயிலை முதல்முறையாக பயிரிடப்பட்டது. உலகளவில் தேயிலை உற்பத்தியில் சீனா
முதலிடம் வகிக்கிறது. இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவில்
அசாம், மேற்குவங்கம் முதலிரண்டு இடத்தில் உள்ளன. 'கட்டஞ்சாயா' என்பது
கேரளாவில் பிரசித்த பெற்ற வார்த்தை. கொதிக்கின்ற நீரில், தேயிலை துாளை
கொட்டி அப்படியே தருவர்.

தகவல் சுரங்கம் : நர்மதா ஆறு
மத்திய இந்தியாவில் கோதாவரி, கிருஷ்ணாவுக்கு அடுத்து முக்கிய ஆறு நர்மதா.
இது 'குஜராத் மற்றும் மத்தியப்பிரதேசத்தின் வாழ்வாதாரமாக' விளங்குகிறது.
விந்திய - சாத்பூர மலைகளுக்கு இடையே, அமர்கண்டக் சிகரத்தில் நர்மதா ஆறு
உற்பத்தியாகிறது. இது மத்தியப்பிரதேசம், குஜராத் மற்றும் மகாராஷ்டிராவை
வளப்படுத்துகிறது. 1,312 கி.மீ., துாரம் பாய்ந்து அரபிக்கடலில்
கலக்கிறது. கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி பாயும் ஆறுகளில் தபதி, மஹி,
நர்மதா ஆறு முக்கியமானவை. குஜராத்தில் நர்மதா ஆற்றின் குறுக்கே சர்தார்
சரோவர் அணை கட்டப்பட்டுள்ளது.

TAMIL BEAUTY TRICKS

unread,
Sep 15, 2019, 9:08:05 PM9/15/19
to brailleacl
இந்தியா உள்பட பெரும்பாலான நாடுகளில், 'டீ' குடிக்கும் பழக்கம் உள்ளது.
சிலர் ஒரு நாளைக்கு மூன்று முதல் ஏழு முறை 'டீ' குடிப்பவர்களும் உள்ளனர்.
கிரீன் டீ, பிளாக் டீ என சில வகைகள் உள்ளன. இந்நிலையில் தினமும் 'டீ'
குடிப்பவர்களின் அறிவாற்றல் செயல்பாடு ஆரோக்கியமாக உள்ளது என சிங்கப்பூர்
தேசிய பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு தெரிவிக்கிறது. 'டீ' குடிப்பதால்,
வயது குறைவால் ஏற்படும் மூளையின் செயல்பாடு குறைவது தடுக்கப்படுகிறது. 60
வயதுக்கு மேற்பட்ட 36 பேரிடம் ஆய்வு நடத்தி, ஆய்வாளர்கள் இதனை
தெரிவித்துள்ளனர்.

தகவல் சுரங்கம் : முன்மாதிரி சட்டசபை
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பா.ஜ., தலைமையிலான ஆட்சி நடக்கிறது. முதல்வராக
ரகுபர்தாஸ் பதவி வகிக்கிறார். தலைநகர் ராஞ்சியில் கட்டப்பட்ட, இம்மாநில
சட்டசபையின் புதிய கட்டடத்தை சமீபத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இதற்கான கட்டடப்பணி 2015 ஜூன் 12ல் தொடங்கப்பட்டது. இதற்கான செலவு ரூ.465
கோடி. இது மூன்று தளங்களைக் கொண்டது. ஜார்க்கண்டின் புதிய சட்டசபை,
இந்தியாவில் உள்ள சட்டசபைகளில் 'முதல் காகிதம் இல்லாத சட்டசபை' என்ற
பெயரை பெற்றுள்ளது. சட்டசபையில் அனைத்தும் கம்ப்யூட்டர்
மயமாக்கப்பட்டுள்ளது.

TAMIL BEAUTY TRICKS

unread,
Sep 16, 2019, 9:07:10 PM9/16/19
to brailleacl
கானல் நீர் எப்படிதற்போது வெயில் சுட்டெரிக்கிறது. வெயில் காலத்தில்
சாலைகளில் செல்லும் போது துாரத்தில் நீர் இருப்பதை போல தோன்றும். ஆனால்
அருகில் சென்றால் இருக்காது. இது 'கானல் நீர்' என அழைக்கப்படுகிறது.
வெயில் காலத்தில், தரையின் அருகே வெப்பம் அதிகமாகி, காற்றின் அடர்த்தி
குறைவாக இருக்கும். அதே சமயம், மேலே உள்ள காற்று ஒப்பீட்டளவில் வெப்பம்
குறைந்து அடர்த்தி கூடுதலாக இருக்கும். எனவே, இந்தக் காற்று அடுக்குகள்
வழியே ஒளிக்கதிர்கள் வரும்போது, அவை வளைந்து, கானல் நீர் போன்ற தோற்ற
மயக்கத்தை ஏற்படுத்துகின்றன.

தகவல் சுரங்கம்
செஞ்சிலுவை சங்கம்உலகளவில் 1.7 கோடி பேர் (தன்னார்வலர்கள்,
உறுப்பினர்கள், ஊழியர்கள்) பணியாற்றும் அமைப்பாக, உலக செஞ்சிலுவை சங்கம்
திகழ்கிறது. உலகில் உள்ள அனைத்து மக்களின் வாழ்க்கை மற்றும் சுகாதாரத்தை
காப்பதே இதன் நோக்கம். உலகப் போர்கள் மற்றும் சில நாடுகளில் நடக்கும்
உள்நாட்டுப் போர் என அனைத்து போர் முனைகளிலும், மக்களை காக்கும் இவர்களது
பணி பாராட்டுக்குரியது. ஆண்டுதோறும் மே 8ல் உலக செஞ்சிலுவை சங்க தினம்
கடைபிடிக்கப்படுகிறது. இந்த அமைப்புக்கு 1917, 1944 மற்றும் 1963ல்

TAMIL BEAUTY TRICKS

unread,
Sep 17, 2019, 9:18:56 PM9/17/19
to brailleacl
அறிவியல் ஆயிரம்

நாவல் மருத்துவம்

நாவல் பழம் மட்டுமின்றி பட்டை, விதை, இலை, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவ
குணம் கொண்டது. இவ்வாறு ஒரு தாவரத்தின் அனைத்துப் பகுதிகளுமே மருத்துவக்
குணம் கொண்டுள்ளதை இயற்கை மருத்துவத்தில் 'சமூலம்' என்பர். பழமும்,
பழத்தை காய வைத்து அரைத்த பொடியும் சர்க்கரை நோய்க்கு பரிந்துரை
செய்யப்படுகிறது. பெண்களுக்கு ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கினை
நாவல் பழங்கள் கட்டுப்படுத்துகின்றன. நாவல் பழத்தில் கால்சியம், இரும்பு
சத்து அதிகமுள்ளதால் ஆஸ்டியோபோரோசிஸ், ரத்த சோகைக்கு பரிந்துரை
செய்யப்படுகிறது.

தகவல் சுரங்கம்

நீர்நாய்கள்

நீர்நாய் என்பது நீரில் வாழ தன்னை ஓரளவு தகவமைத்துக் கொண்ட ஒருவகைப்
பாலுாட்டி விலங்கு. மேற்குவங்கம் மற்றும் வங்கதேசத்தில் மீன் பிடிக்க
செல்லும் மீனவர்கள் தங்களுடன் நீர்நாய்களை அழைத்துச் செல்கின்றனர்.
படகுகளுடன் கட்டப்பட்டு இருக்கும் இந்த நீர்நாய்கள் ஆற்றுக்குள் சென்று
மீன்கள் இருக்கும் இடத்தை கண்டறிந்து அவற்றை மேலே அனுப்புகின்றன.
மீனவர்கள் எளிதாக மீன்பிடிக்க இவை உதவுகின்றன. இவை மீன்களை ஆர்வமாக
தேடும் என்பதால் மீன்பிடித்தலின் போது அவைகளுக்கு உணவு அளிக்கப்படுவது
இல்லை

TAMIL BEAUTY TRICKS

unread,
Sep 18, 2019, 9:06:01 PM9/18/19
to brailleacl
நீண்டதுார பயணம்

உலகில் தற்போது நீண்டதுார இடைநில்லா விமான சேவையை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்
நிறுவனம் இயக்கி வருகிறது. இந்நிறுவனம் சிங்கப்பூரில் இருந்து நியூயார்க்
நகருக்கு, 18 மணி நேரம் மற்றும் 45 நிமிடம் இடைநில்லா விமான சேவையை
இயக்குகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் 'கியான்டஸ்' விமான நிறுவனம்,
நியூயார்க் முதல் சிட்னி (19 மணி 8 நிமிடம்) மற்றும் லண்டன் முதல் சிட்னி
(20 மணி 20 நிமிடம்) என இரண்டு வழித்தடங்களில் இடைநில்லா விமான சேவையை
இயக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான சோதனையையும், இந்நிறுவனம்
நடத்தியுள்ளது.
தகவல் சுரங்கம்

உயரமான கட்டடம்

இலங்கை தலைநகர் கொழும்புவில் 'தாமரை' டவர் என்ற கட்டடத்தை, அந்நாட்டு
அதிபர் சிறிசேனா சமீபத்தில் திறந்து வைத்தார். இது தெற்காசியாவின் உயரமான
கட்டடம் என்ற பெயரை பெற்றுள்ளது. இது 17 மாடிகளைக் கொண்டது. உயரம் 1,148
அடி. இதற்கான செலவு ரூ. 712 கோடி. இதில் 80 சதவீதத்தை சீன அரசு
வழங்கியுள்ளது. இதில் ஓட்டல், ஷாப்பிங் மால், ரெஸ்டாரன்ட், 'டிவி' டவர்,
தொலைத்தொடர்பு மியூசியம் மற்றும் ஆடிட்டோரியம் ஆகியவை உள்ளன. 2012ல்
இலங்கை - சீன அரசு இணைந்து இந்த டவரை, அமைப்பதற்கு ஒப்பந்தம் செய்தன.

Palaniappan kandasamy

unread,
Sep 19, 2019, 10:12:09 AM9/19/19
to brail...@googlegroups.com
நண்பரே,
நீங்கள் நெடில் ஊ-வை எந்த கீபோர்டில் எந்த கமாண்டை பயன்படுத்தி எழுதுகிறீர்கள்? அது ஊ என்பதற்கு மாராக உஆ என ஒலிக்கிறது; தூரம் என்பது துஆரம் என ஒலிக்கிறது. நன்றி. வாழ்க. உயர்ந்த இடத்திலிருந்தால் ஒளிவிளக்காயிருக்கவேண்டும்.
கந்த பழனியப்பன், தொலைத்தொடர்புத்துரை வாழ்வூதியர், கோவை 4.

-----Original Message-----
From: brail...@googlegroups.com [mailto:brail...@googlegroups.com] On Behalf Of TAMIL BEAUTY TRICKS
Sent: 19 September 2019 06:36
To: brailleacl
--
--
You received this message because you are subscribed to the Google
Groups "Brailleacl" group.
To post to this group, send email to brail...@googlegroups.com
To unsubscribe from this group, send email to
brailleacl+...@googlegroups.com

---
You received this message because you are subscribed to the Google Groups "Brailleacl" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to brailleacl+...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/brailleacl/CAGdjB30Ut7K-FdZMChmEWhkuuWcN1_8Op4n%2BRZAkHh745ALSJw%40mail.gmail.com.

Aravind R

unread,
Sep 19, 2019, 10:31:17 AM9/19/19
to brail...@googlegroups.com
ஊ ஊயிரெழுத்தாக செயல்படவேண்டுமாயின் t உபயோகப்படுத்தவும்.
உயிர்மெய்யெழுத்தாய் மெய்யெழுத்தோடு புணரும்போது shift + t
பயன்படுத்தவும்.
> https://groups.google.com/d/msgid/brailleacl/000001d56ef4%243ca54f80%24b5efee80%24%40com.
>


--
--
nothing is difficult unless you make it appear so.

r. aravind,

Assistant manager
Department of sales
bank of baroda specialised mortgage store, Chennai.
mobile no: +91 9940369593,
email id : aravi...@yahoo.com, aravind.a...@gmail.com.
aravind....@bankofbaroda.co.in.

Palaniappan kandasamy

unread,
Sep 19, 2019, 11:28:29 AM9/19/19
to brail...@googlegroups.com
நான் இதை சுட்டிக்காட்டியதற்கு காரணம் நெடில் ஊ-வை சரியாக ஊ-வென ஒலிக்குமாரு எழுதினால் நன்றாக இருக்கும் அதற்குரிய கமாண்டை பயன்படுத்துமாரு
கேட்டுக்கொள்கிறேன். நான் nhm new horizon medium writer-ஐ பயன்படுத்துகிறேன். நன்றி. வாழ்க. உயர்ந்த இடத்திலிருந்தால் ஒளிவிளக்காயிருக்கவேண்டும்.
கந்த பழனியப்பன், தொலைத்தொடர்புத்துர்ரை வாழ்வூதியர், கோவை 4.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/brailleacl/CAFZpANDkXXf8cQkpVSt2DW4%2B1nma3L6ChuDnwefbbr67ne-6iw%40mail.gmail.com.

TAMIL BEAUTY TRICKS

unread,
Sep 19, 2019, 9:29:34 PM9/19/19
to brailleacl
அறிவியல் ஆயிரம்

நெருப்பின் ரகசியம்
சூடான காற்றுக்கு அடர்த்தி குறைவு. குளிர்ச்சியான காற்றுக்கு அடர்த்தி
அதிகம். வெப்பக்காற்று அடைக்கப்பட்ட பலுான் மேலே பறக்கிறது. காற்றடைத்த
பந்து நீரில் மூழ்காமல் மிதக்கும். இதற்கு நீரைவிட காற்றடைத்த பந்தின்
மொத்த அடர்த்தி குறைவே காரணம். எனவே பந்து மிதக்கிறது. காற்றைவிட
வெப்பக்காற்றின் அடர்த்தி குறைவு. எனவே மேலே பறக்கின்றன. நெருப்பு
என்பது, காற்று சேர்ந்த வெப்பமான புகைதான். ஆகவே, அடர்த்தி குறைவான
நெருப்புப் பிழம்பும், அதிலிருந்து வரும் புகையும் புவிஈர்ப்புவிசையை
மீறி மேல்நோக்கி எரிகின்றன.

தகவல் சுரங்கம்

உயரமான ரயில் பாலம்

காஷ்மீரில் செனாப் நதியின் குறுக்கே இரும்பு மற்றும் கான்கிரீட் வகையிலான
ஆர்ச் வடிவ ரயில்வே பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் உயரம் ஆற்றின்
தரை மட்டத்தில் இருந்து 1,178 அடி. ஆற்றின் குறுக்கே கட்டப்படும் ரயில்
பாலங்களில் மிக உயரமான ரயில்பாலம் என்ற பெயரை பெற்றுள்ளது. பாலத்தின்
மொத்த நீளம் 4,314 அடி. இதில் ஆர்ச்சின் நீளம் 1,570 அடி. பாலத்தில்
மொத்தம் 17 துாண்கள் அமைக்கப்படுகிறது. இது காஷ்மீரின் உதம்பூர் மற்றும்
பாரமுல்லா நகரங்களை இணைக்கிறது. வடக்கு ரயில்வே மண்டலத்தின் கீழ்
இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

TAMIL BEAUTY TRICKS

unread,
Sep 20, 2019, 8:56:33 PM9/20/19
to brailleacl
கிரானைட் உற்பத்திமலைகளை குடைந்து, வெட்டி அல்லது வெடிவைத்து தகர்த்து
கிரானைட் கற்கள் எடுக்கப்படுகின்றன. பூமியின் அடியில் உள்ள மாக்மா என்ற
கற்குழம்பு குளிர்வடைந்து புளுட்டோனிக் பாறை உருவாகிறது. இதுவே நாளடைவில்
கிரானைட்டாக மாறுகிறது. பூமிக்குள் 1.5 கி.மீ., முதல் 50 கி.மீ.,
ஆழத்துக்குள் இம்மாற்றம் நடக்கிறது.இப்பாறைகள், மிக கடினமாகவும்,
பளபளப்பாகவும் இருக்கும். கிரானைட்டில் குவார்ட்ஸ், மைக்கா, பெல்ஸ்பார்
தாதுக்கள் உள்ளன. கிடைக்கும் இடங்களை பொறுத்து கிரானைட்டின் தன்மை
அமைகிறது. இதற்கேற்ப விலை நிர்ணயிக்கப்படுகிறது.தகவல்
சுரங்கம்இந்தியாவின் 'நைட்டிங்கேல்' சுதந்திர போராட்ட வீரர், காங்.,
கட்சியின் முதல் பெண் தலைவர், உத்தரபிரதேசத்தின் முதல் கவர்னர் போன்ற பல
பெருமைகளுக்கு உரியவர் சரோஜினி நாயுடு. 1879 பிப்., 13ல் ஐதராபாத்தில்
பிறந்தார். லண்டனில் பட்டப்படிப்பு முடித்தார். பெற்றோர் சம்மதத்துடன்
காதல் திருமணம் செய்தவர். காங்., கட்சியில் இணைந்த இவர், சுதந்திர
போராட்டத்தில் பங்கெடுத்தார். 1925ல் காங்., கட்சியின் தலைவரானார். இவர்
பல கவிதைகளை எழுதியுள்ளார். பல்வேறு சமூகப்பணிகளில் ஈடுபட்ட இவர்,
இந்தியாவின் 'நைட்டிங்கேல்' என அழைக்கப்படுகிறார். 1949 மார்ச் 2ல்

TAMIL BEAUTY TRICKS

unread,
Sep 21, 2019, 9:06:34 PM9/21/19
to brailleacl
அறிவியல் ஆயிரம்

அழிந்த வனப்பரப்பு
வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றம் போன்றவை, எதிர்கால உலகிற்கு
ஆபத்தானதாக மாறி உள்ளன. இதற்கு காடுகள் அழிவது முக்கிய காரணம்.
இந்நிலையில் 1990ம் ஆண்டில் இருந்து, தற்போது வரை உலக காடுகளின் மொத்த
பரப்பளவில், இந்தியாவின் பரப்பளவுக்கு சமமான காடுகள் அழிந்து விட்டன என
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது. உலகின்
மொத்த காடுகளின் பரப்பளவில், 30 லட்சம் சதுர கி.மீ., அளவிலான காடுகள்
அழிந்து விட்டன. உலகின் மொத்த பரப்பளவில் 20 சதவீதம் தான் தற்போது
வனப்பரப்பாக உள்ளது.

தகவல் சுரங்கம்

டேராடூன் சுற்றுலா
உத்தரகண்டின் தலைநகரம் டேராடூன். இது இமய மலையின் அடிவாரத்தில், டூன்
பள்ளத்தாக்கில், அழகிய மலைகளுக்கு இடையில் அமைந்துள்ளது. நகரின்
கிழக்கில் கங்கை நதியும், மேற்கில் யமுனை நதியும் ஓடுகிறது. இங்கு
மலையேற்ற பயிற்சியில் பலர் ஈடுபடுகின்றனர். முசோரி, ஆலி, ஹரித்வார்,
ரிஷிகேஷ், சோட்டா சார் அணை என பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கு
நுழைவாயிலாக டேராடூன் திகழ்கிறது. இங்கு டேராடூன் வன ஆராய்ச்சி நிலையம்,
டப்கேஷ்வர் கோவில், மல்சி மான் பூங்கா, இந்திய ராணுவ அகாடமி போன்ற பல
சுற்றுலா இடங்கள் உள்ளன.

TAMIL BEAUTY TRICKS

unread,
Sep 24, 2019, 12:43:52 AM9/24/19
to brailleacl
வேகமாக உருகும் பனிக்கட்டிபருவநிலை மாற்றம், உலகிற்கு ஆபத்தானதாக
மாறியுள்ளது. இதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் விஞ்ஞானிகள்
ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஆர்டிக் பகுதி கடலில் பனிக்கட்டிகள்
உருகுவது பூமியின் மற்ற பகுதிகளை விட, இரண்டு மடங்காக உள்ளது என
அமெரிக்காவின் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (என்.ஓ.ஏ.ஏ.,)
தெரிவித்துள்ளது. ஆர்டிக் பகுதியில் வெப்பநிலை, 2000ம் ஆண்டில் இருந்ததை
விட, 2016ல் 3.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்துள்ளது. இங்கு
அதிகபட்சமாக 2019 ஜூலை 26ல் 34.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.

தகவல் சுரங்கம்
மிதக்கும் ஏரி
வடகிழக்கு மாநிலத்தின் பெரிய நன்னீர் ஏரி என 'லோக்டாக் ஏரி'
அழைக்கப்படுகிறது. இது மணிப்பூர் மாநிலத்தில் உள்ளது. இதன் நீர்பிடிப்பு
பரப்பளவு 980 சதுர கி.மீ. நீளம் 35 கி.மீ. அகலம் 13 கி.மீ. இதன் சராசரி
ஆழம் 8.9 அடி. இது விவசாயம், குடிநீர் மற்றும் மின்சார உற்பத்திக்கு
பயன்படுகிறது. மணிப்பூர் ஆறு மற்றும் பல சிறிய ஓடைகள் மூலம், இந்த
ஏரிக்கு தண்ணீர் வருகிறது. இந்த ஏரிக்கு நடுவே 'கெபுல் லாம்ஜவ் தேசிய
பூங்கா' அமைந்துள்ளது. இது உலகின் ஒரே மிதக்கும் தேசிய பூங்காவாகும்.
மீன்பிடித்தலமாகவும் இந்த ஏரி பயன்படுகிறது.

TAMIL BEAUTY TRICKS

unread,
Sep 24, 2019, 9:04:43 PM9/24/19
to brailleacl
அறிவியல் ஆயிரம்

புதிய கண்டுபிடிப்பு
உலகளவில் அதிகளவிலான மரணத்துக்கு காரணமாக அமைவது கேன்சர். இதில் மார்பு
கேன்சர், வாய் கேன்சர் என பல்வேறு வகைகள் உள்ளன. இதற்கான மருத்துவ
சிகிச்சை முறைகளில் 'கீமோதெரபியும்' ஒன்று. ஆனால் இந்த சிகிச்சையின் போது
ஏற்படும் பக்கவிளைவால் பாதிக்கப்பட்டவரின் தலைமுடி நிரந்தரமாக
உதிர்கிறது. இந்நிலையில் இச்சிகிச்சையின் போது முடி உதிராமல் தடுக்கும்
முறைகளை பிரிட்டனில் உள்ள மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் டெர்மடாலஜி துறை
விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதற்காக CDK4/6 என்ற மருந்தை
கண்டுபிடித்துள்ளனர்.
தகவல் சுரங்கம்

எல்லை சாலை
இந்தியாவின் எல்லையோர பகுதிகளில் சாலை அமைக்கும் பணிகளில், எல்லை சாலை
கழகம் ஈடுபட்டுள்ளது. இது 1960 மே 7ல் தொடங்கப்பட்டது. தலைமையகம் டில்லி.
பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. 'கடின உழைப்பின் மூலம்
எதுவும் சாதிக்கக்கூடியது தான்' என்பது இக்கழகத்தின் தாரக மந்திரம்.
எல்லைகளில் சாலை அமைக்கும் பணி சவாலானது. இப்பணியில் இந்திய ராணுவ
இன்ஜினியர்களின் மேற்பார்வையில், எல்லைகளில் சாலை அமைக்கப்படுகிறது.
கடந்தாண்டு காஷ்மீரின் லே பகுதியில் உலகின் உயரமான இடத்தில் சாலை அமைத்து
சாதித்துக்காட்டினர்.

TAMIL BEAUTY TRICKS

unread,
Sep 25, 2019, 9:16:54 PM9/25/19
to brailleacl
அழியும் பறவைகள்பறவைகள் மனித இனத்திற்காக மரங்களின் விதைகளை பரப்பும்
உன்னத செயலை மேற் கொள்கின்றன. தன் எச்சம் மூலம் விதைகளை பரப்புகின்றன.
இந்நிலையில் வட அமெரிக்காவில் பறவை இனங்களுக்கு முன் எப்போதும் இல்லாத
அளவுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இங்கு 1970ம் ஆண்டிலிருந்து இதுவரை 300
கோடி பறவைகள் அழிந்து விட்டன. இது அங்குள்ள மொத்த பறவைகளில் 30 சதவீதம்
என அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஐம்பது ஆண்டுகளில் பறவைகளின்
அழிவுக்கு பல காரணங்கள் உள்ளன. தகவல் சுரங்கம்ஐ.நா., பொதுச்செயலர்
பதவிஐக்கிய நாடுகள் சபை 1945ம் ஆண்டு அக்., 24ம் தேதி நிறுவப்பட்டது.
இதன் தலைமையகம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ளது. இதன் தற்போதைய
பொதுச்செயலராக அன்டோனியா கட்டார்ஸ் உள்ளார். பொதுச்செயலரின் பதவிக்காலம்
ஐந்து ஆண்டுகள். ஐ.நா., சபையின் முதல் பொதுச்செயலராக இருந்தவர் டிரிக்வி
லய். நார்வே நாட்டை சேர்ந்த இவர், 1946 பிப்., 2 முதல் 1952 நவ., 10 வரை
பதவியில் இருந்தார். ஆறாவது பொதுச்செயலராக இருந்த பவுட்டர்ஸ் ஷாலி
என்பவர் மட்டும் ஐந்தாண்டுகள் பதவி வகித்தார். மற்ற அனைவரும் இரண்டுமுறை
பதவி வகித்தனர்.

TAMIL BEAUTY TRICKS

unread,
Sep 26, 2019, 9:01:13 PM9/26/19
to brailleacl
அறிவியல் ஆயிரம்

புதிய முயற்சி
உலகில் மனிதர்கள் வசிக்க முடியாத பகுதி அண்டார்டிகா. மிக குளிர்ச்சியான
இடம். முழுவதும் பனிக்கட்டிகளால் சூழப்பட்டுள்ளது. இங்குள்ள
பனிக்கட்டிகளில், பதினைந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன் உருவான
பனிக்கட்டியை தேர்வு செய்து, அதில் மூன்று கி.மீ., துாரம் ஆழத்தில்
துளையிட்டு ஆய்வு நடத்த விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். இதன்மூலம்
பருவநிலையை தடுப்பதற்கான காரணங்களை அறிய திட்டமிட்டுள்ளனர். 15 லட்சம்
ஆண்டுகளுக்கு முன் கார்பன் டை ஆக்சைடின் அளவு எந்தளவுக்கு இருந்தது
என்பதை விஞ்ஞானிகள் ஆய்வு செய்ய உள்ளனர்.



தகவல் சுரங்கம்
இந்திய சினிமாவின் தந்தை
இந்திய சினிமா துறையில் வழங்கப்படும் உயரிய விருது தாதாசாஹிப் பால்கே.
இது சினிமாவின் வளர்ச்சி, முன்னேற்றத்துக்கு பாடுபட்டவர்களுக்கு ஆண்டு
தோறும் வழங்கப்படுகிறது. 1969ல் இவ்விருது தொடங்கப்பட்டது. விருதுடன்
ரூ.10 லட்சம் ரொக்கம் வழங்கப்படுகிறது. தயாரிப்பாளர், இயக்குனர் என
பன்முக திறமை கொண்டவரும், இந்திய சினிமாவின் தந்தை எனப்படுபவருமான
துண்டிராஜ் கோவிந்த் பால்கே என்ற தாதா சாஹிப் பால்கேவை போற்றும் வகையில்
விருதுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது. முதல் விருது பெற்றவர் நடிகை
தேவிகா ராணி.

TAMIL BEAUTY TRICKS

unread,
Sep 29, 2019, 12:49:24 AM9/29/19
to brailleacl
அறிவியல் ஆயிரம்

ஆரோக்கியம் தரும் 'கிரீன் டீ'

சீனாவில் தொடங்கிய 'கிரீன் டீ' பழக்கம் ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இந்தியா
உள்ளிட்ட நாடுகளில் பரவியுள்ளது. பச்சை தேயிலை செடியின் நுனிக்கொழுந்து
இலைகளை பறித்து, அதை பசுமைத்தன்மை மாறாமல் பதப்படுத்தி, வெந்நீரில்
அருந்தும் வகையில் தயார் செய்யப்படுவதே கிரீன் டீ. இதில், 'ஆன்டி
ஆக்சிடென்ட்' அதிகம் உள்ளது. கிரீன் டீயை துாளாக வாங்கி பயன்படுத்த
கூடாது. உலர்த்திய கிரீன் டீ இலைகளை தினமும் மூன்று டம்ளர், 'கிரீன் டீ'
அருந்தினால் அது பல வழிகளில் நமக்கு நன்மை தருகிறது.
தகவல் சுரங்கம்

நுாற்றாண்டுகளை கடந்த டவர்
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உலக அதிசயங்களில் ஒன்றான 'ஈபிள் டவர்' உள்ளது.
இதனை அமைத்தவர் கஸ்டேவ் ஈபிள். இவரது பெயர், இதற்கு சூட்டப்பட்டுள்ளது.
1887 ஜன., 28ல் கட்டுமானப்பணி தொடங்கி, 1889 மார்ச் 15ல் பணி
நிறைவடைந்தது. மார்ச் 31ல் திறக்கப்பட்டது. 130 ஆண்டுகளைக் கடந்துள்ள
ஈபிள் டவரை காண்பதற்கு, உலகம் முழுவதும் இருந்து ஆண்டுதோறும் சராசரியாக
70 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இதன் உயரம் 984 அடி. மூன்று
தளங்கள் உள்ளன. டவரின் மேல் பகுதிக்கு செல்வதற்கு லிப்ட் வசதிகள் உள்ளன.

TAMIL BEAUTY TRICKS

unread,
Sep 29, 2019, 9:16:27 PM9/29/19
to brailleacl
அறிவியல் ஆயிரம்

'ஏசி'க்கு பதில் மரங்கள்

வெயில் காலத்தில் நிலவும் வெப்பத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள 'ஏசி'
பயன்படுத்தப் படுகிறது. ஆனால் 'ஏசி' பயன்படுத்துவதால் கூடுதல் மின்சார
செலவு மட்டுமல்லாமல், உலகின் வெப்பநிலை உயர்வுக்கும் காரணமாக அமைகிறது.
இதற்கு தீர்வு காணும் விதமாக, அதிகளவில் 'ஏசி' மெஷின்களை பயன்
படுத்துவதற்கு பதிலாக மரங்களை வளர்க்க வேண்டும் என பிரிட்டன் ஆய்வாளர்கள்
தெரிவித்துள்ளனர். பிரிட்டனில் 'பிளேன், செசிபிள் ஆக், செர்ரி' மரங்களை
வளர்த்தால், வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் குறையும் என ஆய்வாளர்கள்
பரிந்துரைக்கின்றனர்.
தகவல் சுரங்கம்

காற்றாலை மின்சாரம்

மின்சார உற்பத்தி முறைகளில் ஒன்று காற்றாலை மின்சாரம். இயற்கையாக
கிடைக்கும் காற்றின் மூலம் மின்சாரம் தயாரிப்பது சுற்றுச்சூழலுக்கும்
உகந்தது. உலகில் காற்றாலை மின்சாரத்தில் சீனா முதலிடத்தில் உள்ளது. அங்கு
221 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இரண்டாவது இடத்தில்
உள்ள அமெரிக்காவில் 96.4 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
மூன்றாவது இடத்தில் ஜெர்மனி (59.3 ஜிகாவாட்) உள்ளது. நான்காவது இடத்தில்
இந்தியா உள்ளது. இங்கு காற்றாலை மூலம் 35 ஜிகாவாட் மின்சாரம்

TAMIL BEAUTY TRICKS

unread,
Sep 30, 2019, 10:54:33 PM9/30/19
to brailleacl
நிலவில் ஐரோப்பா
பூமியின் ஒரே துணைக்கோளான நிலவை ஆராய்ச்சி செய்யும் பணியில் அமெரிக்கா,
சீனா, இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் ஈடுபட்டுள்ளன. எதிர்காலத்தில்
செவ்வாயில் மனிதர்களை குடியமர்த்துவதற்கு, நிலவு நுழைவாயிலாக இருக்கும்
என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். ஐரோப்பிய விண்வெளி மையம் சார்பில்,
நிலவுக்கு முதன்முதலாக மனிதனை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. ஐரோப்பிய
விண்வெளி மைய இயக்குனர் டேவிட் பார்கர் கூறும் போது, 'நிலவுக்கு
மனிதர்களை அனுப்பும் திட்டத்தை 'நாசா'வுடன் இணைந்து செயல்படுத்த உள்ளோம்'
என்றார்.

தகவல் சுரங்கம்


திறப்பு...

சீனாவின் முதல் விமான நிலையம் என அழைக்கப்பட்ட 'நன்யுவான் விமான
நிலையம்', சமீபத்தில் மூடப்பட்டது. இது தலைநகர் பீஜிங்கில்
அமைந்திருந்தது. இது 109 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்தது. அதே நேரத்தில்
பீஜிங்கில் புதிதாக உலகின் மிக பெரிய விமானநிலையத்தை, சீனா
தொடங்கியுள்ளது. அதிபர் ஜி ஜின்பிங், இதை திறந்து வைத்தார். 2014ல் இந்த
விமான நிலைய பணி தொடங்கப்பட்டது. இதற்கான செலவு ரூ. 77 ஆயிரம் கோடி. இதன்
பரப்பளவு, 98 கால்பந்து மைதானத்துக்கு சமம். இதில் நான்கு ஓடுபாதைகள்
உள்ளன.

TAMIL BEAUTY TRICKS

unread,
Oct 1, 2019, 9:24:54 PM10/1/19
to brailleacl
தினமும் ஒருவருக்கு எட்டு மணி நேர துாக்கம் அவசியம் என மருத்துவர்கள்
அறிவுறுத்துகின்றனர். இந்நிலையில் நான்கு இரவுகளில் துாக்கத்தில்
ஏற்படும் மாற்றம் கூட, உடல் எடையை கூட்டி விடும் என ஆய்வில்
தெரிவிக்கிறது. உடல் ஆரோக்யமான 15 பேர் தேர்வு செய்யப்பட்டு, 10 நாட்கள்
தங்க வைக்கப்பட்டனர். தினமும் ஐந்து மணி நேரத்துக்கு குறைவாகவே துாங்க
அனுமதிக்கப்பட்டனர். இரவு கொழுப்பு நிறைந்த உணவும் தரப்பட்டது.
இதற்குப்பின் அவர்களின் ரத்தத்தை ஆய்வு செய்ததில், அவர்களது உடலின் எடை
அதிகரிப்பதற்கான மெட்டபாலிசம் ஏற்பட்டது.

தகவல் சுரங்கம்: மனித உரிமை விருது
உலகளவில் மனித உரிமையை நிலைநாட்டுவதற்கு பங்களிப்பு செய்யும் தனிநபர்
மற்றும் அமைப்புகளுக்கு, ஐ.நா., சார்பில் 'மனித உரிமை விருது'
வழங்கப்படுகிறது. இவ்விருது 1968ல் தொடங்கப்பட்டது. ஐந்தாண்டுகளுக்கு
ஒருமுறை விருது வழங்கப்படுகிறது. இவ்விருது ஐ.நா., சார்பில் டிச.10ல்
கடைபிடிக்கப்படும் மனித உரிமை தினத்தன்று வழங்கப்படும். இந்தியா சார்பில்
ஒருவர் மட்டுமே இவ்விருதை பெற்றுள்ளார். 1988ல் இந்தியாவை சேர்ந்த சமூக
ஆர்வலர் பாபா ஆம்தேவ்க்கு இவ்விருது வழங்கப்பட்டது. இவர் தொழு நோயால்
பாதிக்கப்பட்டவர்களுக்காக பாடுபட்டார்.
It is loading more messages.
0 new messages