அறிவியல் ஆயிரம் : பூமியில் விழும் விண்வெளி குப்பை

0 views
Skip to first unread message

Dhivisha dhivi

unread,
May 22, 2026, 8:47:04 PMMay 22
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம் : பூமியில் விழும் விண்வெளி குப்பை
 

 
செயற்கைக்கோள், ராக்கெட்டுகளின் உதிரி பாகங்கள் (விண்வெளி குப்பை) பூமியின் மீது விழும் வாய்ப்பு அதிகரித்துள்ளது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். விண்வெளி துறையில் தனியார் வரவுக்குப்பின் செயற்கைக்கோள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உலகில் 1960களில் ஆண்டுக்கு 100 என செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டன. இது 2016ல் 200 என உயர்ந்தது. 2025ல் 4500 ஆனது. அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ், ராக்கெட் லேப்ஸ் நிறுவனங்கள் எதிர்காலத்தில் ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்களை அனுப்ப திட்டமிட்டுள்ளதால் மேலும் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளனர்.
 தகவல் சுரங்கம் : உலக ஆமைகள் தினம்
 

 
ஜெல்லி மீன்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்தவது, கடல் புற்களை நிலைநிறுத்துதல், கடலோர மணல் திட்டுகளை வளப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் கடலின் சுற்றுச்சூழலுக்கு ஆமைகள் உதவுகின்றன. ஆமைகள் அழிவுக்கு பிளாஸ்டிக் குப்பைகள் முக்கிய காரணம். ஆமைகள், அதன் வாழ்விடங்களை பாதுகாக்க வலியுறுத்தி மே 23ல் உலக ஆமைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 300 வகை ஆமைகள் உள்ளன. ஆயுட்காலம் 150 - 300 ஆண்டுகள். இவை ஊர்வன இனத்தை சேர்ந்தவை. மணிக்கு 5.5 கி.மீ., வேகத்தில் செல்வதால் எளிதில் சுறா, திமிங்கலங்களுக்கு இரையாகின்றன.

Facebook sha
Reply all
Reply to author
Forward
0 new messages