அறிவியல் ஆயிரம் : இறாலில் 'பசுமை பிளாஸ்டிக்'

0 views
Skip to first unread message

Dhivisha dhivi

unread,
Jun 12, 2026, 8:26:36 PMJun 12
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம் : இறாலில் 'பசுமை பிளாஸ்டிக்'
 
  கடல் உணவு வகைகளில் ஒன்று இறால். இவற்றை சமைக்கும் போது, அதன் ஓடுகளை நீக்குவர். குப்பையாக சேரும் இந்த கழிவுகளில் இருந்து, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பிளாஸ்டிக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய பள்ளி மாணவி ஏஞ்செலினா அரோரா உருவாக்கிய இந்த பிளாஸ்டிக், 33 நாட்களில் மண்ணில் மட்கும் தன்மை கொண்டது. ஒருமுறை பயன்படுத்தி துாக்கி வீசும், பாலித்தீன் பைகளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்த பள்ளிப்பாடத்தின் போது, அதற்கு மாற்று என்ன என்ற ஆய்வில் ஈடுபட்டபோது இதை கண்டுபிடித்தார்.
 தகவல் சுரங்கம் : சர்வதேச அல்பினிசம் தினம்
 

 
'அல்பினிசம்' (வெண்தோல் குறைபாடு) என்பது முடி, தோல், கண்களில் மெலனின் நிறமி குறைவு காரணமாக ஏற்படும் ஒரு மரபணு கோளாறு. தோற்றத்தால் சமூகத்தில் பல இன்னல்களை சந்திக்கின்றனர். இதுபற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த ஐ.நா., சார்பில் ஜூன் 13ல் சர்வதேச அல்பினிசம் தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஆப்ரிக்காவில் 5000ல் ஒருவர், வட அமெரிக்கா, ஐரோப்பாவில் 20 ஆயிரத்தில் ஒருவருக்கு இப்பாதிப்பு உள்ளது. 'என் சருமத்துக்கு பெருமைப்படுகிறேன். அனைத்து சரும நிறங்களையும் கொண்டாடுகிறேன்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.
Reply all
Reply to author
Forward
0 new messages