அறிவியல் ஆயிரம்
உருவாகிறது புதிய கண்டம்
20 கோடி - 30 கோடி ஆண்டுக்குள் புதிய சூப்பர் கண்டம் உருவாகும் என ஆஸி.,யின் கர்டின், சீனாவின் பீகிங் பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. இதற்கு அமேசியா என பெயரிடப்பட்டு உள்ளது. ஆய்வின்படி பசிபிக் பெருங்கடல் படிப்படியாக சுருங்கி மூடும்போது, புவி தட்டுகள் ஒன்றிணைந்து பெரிய நிலப்பரப்பை உருவாக்கும். கடந்த 200 கோடி ஆண்டுகளில் ஒவ்வொரு 60 கோடி ஆண்டுக்கு ஒருமுறை பூமியின் கண்டங்கள் ஒன்றிணைந்து ஒரு சூப்பர் கண்டத்தை உருவாக்குகின்றன. இதன்படி தற்போதைய சில கண்டங்கள் 20 - 30 ஆண்டுக்குப்பின் ஒன்றிணையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கவல் சுரங்கம்
புகையிலைக்கு எதிராக தனிநபர் விழிப்புணர்வு; இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம்
புகையிலைக்கு எதிராக தனிநபர் விழிப்புணர்வு; இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம்
உலக புகையிலை எதிர்ப்பு தினம்
உலகில் 13 - 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் 3.7 கோடி பேர் புகையிலை பயன்படுத்துகின்றனர் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. புகையிலையின் தீமை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல், அதன் பயன்பாட்டை குறைக்க வலியுறுத்தி மே 31ல் உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. புகையிலையால் ஆண்டுக்கு 80 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். சிகரெட் தயாரிப்பதற்காக 60 கோடி மரங்கள் வெட்டப் படுகின்றன. புகை பிடிப்பதால் அவர் மட்டுமல்ல அவரது குடும்பமும் பாதிக்கப்படுகிறது. புகைப்பவருக்கு அருகில் நிற்பவருக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது.