அறிவியல் ஆயிரம் : ஒலி உருவாகும் விதம்

0 views
Skip to first unread message

Dhivisha dhivi

unread,
Apr 5, 2026, 9:19:39 PMApr 5
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம் : ஒலி உருவாகும் விதம்
 ஒவ்வொரு ஒலிக்கும் குறிப்பிட்ட சில பண்புகள் உள்ளன. நாம் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்வதற்கு ஒலி முக்கியம். ஒரு பொருள் அதிர்வுக்கு உட்படுத்தப்படும்போது ஒலி உருவாகிறது. ஒலி என்பது ஒருவகை ஆற்றல். ஒலி வெற்றிடத்தில் பரவ இயலாது. ஒலி பரவுவதற்கு காற்று, திரவம், திடப்பொருள் தேவை. ஒலியின் வேகம் திரவங்களை விட திடப்பொருள்களில் அதிகம். ஒலியின் வேகமானது வெப்பநிலை, அழுத்தம், ஈரப்பதம் உள்ளிட்ட பண்புகளை பொறுத்து மாறுபடும். வெப்பநிலை அதிகரிக்கும்போது ஒலி வேகமும் அதிகரிக்கிறது.
 தகவல் சுரங்கம் : அமைதிக்கான விளையாட்டு தினம்
 விளையாட்டு என்பது உடல், மனதை ஆரோக்கியமாக வைக்கிறது. பல்வேறு மொழி, இனம், கலாசார வேறுபாடுகளை கடந்து உலக மக்களை ஒருங்கிணைக்கிறது. விளையாட்டுக்கு உலகை மாற்றும் சக்தி உண்டு. சர்வதேச அளவில் நிலையான வளர்ச்சி, அமைதி, ஒற்றுமை, மனிதநேயம் ஏற்பட விளையாட்டு வழிவகுக்கிறது. இதை வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ஏப். 6ல் வளர்ச்சி, அமைதிக்கான சர்வதேச விளையாட்டு தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'விளையாட்டு இணைப்புகளை கட்டுதல், தடைகளை உடைத்தல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.
Reply all
Reply to author
Forward
0 new messages