அறிவியல் ஆயிரம் : மறையும் ஆயுதம்
பாதுகாப்பு, விவசாயம், ஆராய்ச்சி, மருத்துவம், டெலிவரி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 'ட்ரோன்' பயன்படுத்துப்படுகிறது. தற்போதைய போர்களில் 'ட்ரோன்' அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் அதிவேகமாக சுழன்று, கண்முன்னே மறையும் புதிய வகை 'ட்ரோன்களை' அமெரிக்காவின் நார்த்வெஸ்ட்ரன் பல்கலை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இந்த 'ட்ரோன்' ஒவ்வொரு வினாடிக்கும் 25 முறை சுற்றுகிறது. இந்த வேகம் என்பது மனிதர்களின் கண்களுக்கு தெரிவது கடினம். இந்த 'ட்ரோன்' பார்வையில் தெரியும் அளவு என்பது மற்ற 'ட்ரோன்களை' விட 10 மடங்கு குறைவு.
தகவல் சுரங்கம் : சர்வதேச நிலவு, செஸ் தினம்
*அமெரிக்காவின் 'நாசா' 1969 ஜூலை 16ல் அனுப்பிய 'அப்பல்லோ-11' விண்கலம் நிலவுக்கு சென்றது. இதில் கமாண்டர் நீல் ஆம்ஸ்ட்ராங், பைலட் மைக்கேல் காலியன்ஸ், பைலட் எட்வின் ஆல்ட்ரின் பயணித்தனர். இது ஜூலை 20ல் நிலவில் இறங்கியது. நிலவில் முதலில் காலடி வைத்து நீல் ஆம்ஸ்ட்ராங் சாதனை படைத்தார். இந்நாள் ஐ.நா., சார்பில் சர்வதேச நிலவு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
* 'செஸ்' ஒரு பழமையான, அறிவுப்பூர்வ விளையாட்டு. சர்வதேச செஸ் கூட்டமைப்பு தொடங்கிய ஜூலை 20ல், உலக செஸ் தினமாக கொண்டாடப்படுகிறது.