அறிவியல் ஆயிரம்: பறக்கும் சைக்கிள்
போக்குவரத்துக்கு மட்டுமல்ல, உடல் நலம், சுற்றுச் சூழலுக்கும் ஏற்றது சைக்கிள், ‛பெடல்' அழுத்துவதன் மூலம் சைக்கிள் நகரும். இந்நிலையில் இன்ஜின், பேட்டரி என எவ்வித எரிசக்தியையும் பயன்படுத்தாமல், சாதாரண சைக்கிளை இயக்குவது போல வெறும் ‛பெடல்' இயக்குவதால் ஏற்படும் சக்தியை வைத்து, பறக்க வைக்கும் தொழில்நுட்பத்தை ஜப்பான் மாணவர்கள் குழு அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்கான வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். தற்போது இத்தொழில்நுட்பம் சோதனை முறையில் உள்ளது. மேலும் இதை மேம்படுத்த வேண்டியுள்ளது என தெரிவித்துள்ளனர்.

தகவல் சுரங்கம்: நாணயம் தயாரிக்கும் இடம்
இந்தியா சுதந்திரம் பெற்றபின் 1950ல் முதன்முறையாக நாணய தயாரிப்பு தொடங்கப்பட்டது. தற்போது ஒன்று, இரண்டு, ஐந்து, பத்து, இருபது ரூபாய் நாணயங்கள் பயன்பாட்டில் உள்ளன. இவை மும்பை, ஐதராபாத், டில்லி, கோல்கட்டாவில் தயாரிக்கப்படுகின்றன.
எந்த நாணயம் எங்கு தயாரிக்கப்பட்டது என்பதை அதன் அடியில் தயாரிக்கப்பட்ட ஆண்டின் கீழ் உள்ள, வடிவம் வழியாக அறியலாம். ஒரு புள்ளி இருப்பின் அது டில்லி. ‛டைமண்ட்' வடிவம் இருந்தால் மும்பை. நட்சத்திர வடிவம் இருந்தால் ஐதராபாத். குறியீடே இல்லையெனில் அது கோல்கட்டாவில் தயாரிக்கப்பட்டவை.