அறிவியல் ஆயிரம் : செவ்வாயில் உயிரினங்கள்

0 views
Skip to first unread message

Mohan

unread,
Jun 28, 2026, 7:39:13 PMJun 28
to valluva...@googlegroups.com, inaiat...@googlegroups.com, brailleacl
அறிவியல் ஆயிரம் : செவ்வாயில் உயிரினங்கள்

  அமெரிக்க விண்வெளி மையம் 'நாசா', செவ்வாய் கோளை ஆய்வுசெய்யும் விதமாக
2020ல் 'பெர்சிவிரன்ஸ்' ரோவரை அனுப்பியது. இது சமீபத்தில் செவ்வாய் கோளில்
உள்ள பாறைகளில் கார்பன் மூலக்கூறுகள் இருப்பதை கண்டுபிடித்துள்ளது. இது
செவ்வாயில் ஒரு காலத்தில் உயிரினங்கள் வாழ்ந்திருக்கலாம் என்பதற்கு வலு
சேர்க்கிறது என ஆய்வு தெரிவித்துள்ளது. இது குறித்து கூடுதலான விவரங்களை
சேகரிப்பதற்கு, அந்த செவ்வாய் பாறையில் இருந்து அதன் கற்கள், துகள்
மாதிரியை பூமிக்கு கொண்டு வந்து, விரிவான ஆய்வு செய்ய வேண்டும் என
விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

  தகவல் சுரங்கம் : தேசிய புள்ளியியல் தினம்



இந்திய புள்ளியியல் துறைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியவர்
புள்ளியியல் அறிஞர் பிரசந்த சந்திர மகிலனோபிஸ். 1893 ஜூன் 29ல்
கோல்கட்டாவில்பிறந்தார். 1931ல் இந்திய புள்ளியியல் நிறுவனத்தை
தொடங்கினார். இது மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை வடிவமைக்க, கொள்கை
முடிவுகளை எடுப்பதற்கு ஒரு சிறந்த ஆலோசனை மையமாக திகழ்கிறது. புள்ளி
விபரங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மகிலனோபிஸ் சாதனையை
அங்கீகரிக்கும்விதமாக அவரது பிறந்த தினமான ஜூன் 29, தேசிய புள்ளியியல்
தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

Reply all
Reply to author
Forward
0 new messages