professer k. kumar
unread,Jun 15, 2013, 11:17:39 PM6/15/13Sign in to reply to author
Sign in to forward
You do not have permission to delete messages in this group
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
to brail...@googlegroups.com, Thamaraikkannan B
நடைகொண்ட படை வேழம்
பிறப்பு
வ. இரா. மகாலிங்கம்
6 செப்டம்பர் 1930
சாலை நயினார் பள்ளிவாசல் திருநெல்வேலி மாவட்டம்
இறப்பு
4 அக்டோபர் 1998
சென்னை
இருப்பிடம்
சென்னை
தேசியம்
இந்தியர்
மற்ற பெயர்கள்
பிள்ளைப் பாண்டியன்
காஞ்சித் தலைவன்
களக்காடு சா. பெரிய பெருமாள்
வீதியூர் நீதிக்கிழார்
கல்வி
கலை முதுவர், முனைவர்
பணி
தமிழ்ப் பேராசிரியர்
பணியகம்
தில்லி பல்கலைக் கழகம், தில்லி.
அறியப்படுவது
தமிழாய்வு
பட்டம்
உலகப் பெருந்தமிழன்
பெற்றோர்
வ. இராமையா, அன்னலட்சுமி
வாழ்க்கைத் துணை
முனைவர் சாலினி இளந்திரையன்
பிள்ளைகள்
இல்லை
உறவினர்கள்
தங்கை: முனைவர் ஞானபுசுபம்
சாலை இளந்திரையன் தமிழ்ப் பேராசிரியர்; திறனாய்வாளர்; சொற்பொழிவாளர்; கவிஞர்;
எழுத்தாளார்; இதழாளர்; அரசியற் செயற்பாட்டாளர்; பொதுவுடைமைத் தமிழ்தேசியச் சிந்தனையாளர்.
பொருளடக்கம் [மறை]
1பிறப்பு
2கல்வி
2.1பள்ளிக் கல்வி
2.2கல்லூரிக் கல்வி
2.3ஆய்வுக் கல்வி
3புனைப்பெயர்
4திருமணம்
5பணி
5.1கல்லூரியில்
5.2அரசு அலுவலகத்தில்
5.3பல்கலைக் கழகத்தில்
5.4ஓய்விற்குப் பின்னர்
6படைப்புகள் [9]
6.1ஆக்கங்கள்
6.2தொகுத்துப் பதிப்பித்தவை
6.3மொழிபெயர்ப்பு
6.4சாலை இளந்திரையனைப் பற்றிய நூல்கள்
7இதழ் பணிகள் [10]
8பயணங்கள்
9அமைப்பாக்கப் பணிகள்[12]
9.1உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகம்
9.2இந்தியப் பல்கலைக் கழக தமிழாசிரியர் மன்றம்
9.3அறிவியக்கப் பேரவை
9.4உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம்
9.5தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம்
10சமூக - அரசியற் செயற்பாட்டுப் பணிகள்
11விருதுகள்
12மறைவு
13சான்றடைவு (List of Refences)
பிறப்பு[தொகு]
சாலை இளந்திரையனின் இயற்பெயர் வ. இரா. மகாலிங்கம் என்பது ஆகும். இவர் திருநெல்வேலி
மாவட்டத்தின் களக்காட்டிற்கு அருகில் உள்ள சாலை நயினார் பள்ளிவாசல் என்னும் சிற்றூரில் 6
செப்டம்பர் 1930 ஆம் நாள் வ. இராமையா – அன்னலட்சுமி இணையருக்கு மகனாகப் பிறந்தார்.
இவரை இவர்தம் பாட்டி சொக்கன் எனச் செல்லப் பெயரிட்டு அழைப்பார். [1]
கல்வி[தொகு]
பள்ளிக் கல்வி[தொகு]
சாலை இளந்திரையன் என்னும் வ. இரா. மகாலிங்கம் 1936சூன் முதல் 1941மே வரை களக்காட்டில்
உள்ள தொடக்கப் பள்ளியில் முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயின்றார். பின்னர் 1941
சூன் முதல் 1944 மே வரை டோணாவூரில் உள்ள நடுநிலைப் பள்ளியில் முதற் படிவம் (ஆறாம்
வகுப்பு) முதல் மூன்றாம் படிவம் (எட்டாம் வகுப்பு) வரை பயின்றார். நான்காம் படிவம்
(ஒன்பதாம் வகுப்பு) முதல் ஆறாம் படிவம் (பதினொன்றாம் வகுப்பு) வரை பாளையங்கோட்டையில்
உள்ள தூய யோவான் உயர்நிலைப் பள்ளியில் (St. Jones High School, Palyamkottai)
1944 சூன் முதல் 1947 மே வரை பயின்றார். [2]
கல்லூரிக் கல்வி[தொகு]
1948சூலை முதல் 1950ஏப்ரல் வரை சென்னைபச்சையப்பன் கல்லூரியில் இடைநிலை வகுப்பில்
(Intermediate) பயின்றார். அங்கு பேராசிரியர் மு. வரதராசன், அ. மு. பரமசிவானந்தம்,
அ. ச. ஞானசம்பந்தன் உள்ளிட்டவர்களிடம் பயின்றார். [3]
1950 சூலை முதல் 1952 ஏப்ரல் வரை சென்னை மாநிலக் கல்லூரியில் பயின்று கலை இளவர்
(Bachelor of Arts) பட்டம் பெற்றார். அதே கல்லூரியில் 1952 சூலை முதல் 1954 ஏப்ரல்
வரை பயின்று கலை முதுவர் (Master of Arts) பட்டம் பெற்றார். அப்பொழுது புகழ்பெற்ற
தமிழ்ப் பேராசிரியர்களான சரவண ஆறுமுகன், தெ. பொ. மீனாட்சிசுந்தரம், கொண்டல் சு.
மகாதேவன், சு. ந. சொக்கலிங்கம் ஆகியோரிடம் பயின்றார். [4]
ஆய்வுக் கல்வி[தொகு]
1954 சூலையில் சென்னை மாநிலக் கல்லூரியில் முதன் முறையாக இலக்கிய முதுவர் (Master
of Literature) பட்டத்திற்கான ஆய்வு வகுப்பு தொடங்கப்பட்டது. அவ்வகுப்பில் 1954 – 55ஆம்
கல்வி ஆண்டில் முதல் மாணவராகச் சேர்ந்து, பேராசிரியர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனாரை
நெறியாளராகக் கொண்டு ஆய்வு செய்து அப்பட்டத்தைப் பெற்றார். பின்னர் 1971ஆம் ஆண்டில்
தமிழ்நாட்டுப் பழமொழிகள் என்னும் தலைப்பில் சென்னைப் பல்கலைக் கழகத்தில், முனைவர்ப்பட்ட
ஆய்வினை மேற்கொண்டு, மெய்யியல் முனைவர் (Doctor of Philosophy) பட்டம் பெற்றார். [5]
புனைப்பெயர்[தொகு]
•
%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0…
இரா. இளந்திரையன் என்னும் பெயரில் 15.8.1950 நாளிட்ட பிரசண்ட விகடன் இதழில் வெளிவந்த
கவிதை
•
%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0…
இரா. இளந்திரையன் என்னும் பெயரில் 1.9.1950 நாளிட்ட பிரசண்ட விகடன் இதழில் வெளிவந்த கதை
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்ற காலத்தில் வ. இரா. மகாலிங்கம் அந்நாளில் புகழ்பெற்ற
இதழ்களான பிரசண்ட விகடன், தமிழ்ப் பொழில் உள்ளிட்ட பல இதழ்களில் இலக்கியக் கட்டுரைகள்,
கவிதைகள், கதைகள் எழுதத் தொடங்கினார். அப்பொழுது மாணவர்களிடம் பெரும் செல்வாக்குப்
பெற்றிருந்த திராவிட இயக்கக் கருத்தியலுக்கு மகாலிங்கமும் ஆட்பட்டிருந்தார். எனவே
அவ்வியக்க மரபின்படி தனக்கென ஒரு புனைப்பெயரை வைத்துக்கொள்ள விழைந்தார். ஆகவே சங்ககால
மன்னனான இளந்திரையன் பெயரை தன்னுடைய புனைப் பெயராகக்கொண்டு இரா. இளந்திரையன் என்னும்
பெயரில் படைப்புகளை ஆக்கினார். பின்னாளில் தன்னுடைய ஊர்பெயரின் முதற்பகுதி தனது
புனைப்பெயருக்கு முன்னே இணைத்து சாலை இளந்திரையன் ஆனார். [6]
திருமணம்[தொகு]
%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0…
பெரிதாக்கு
சாலினி இளந்திரையன் - சாலை இளந்திரையன் துணைவி
சாலை இளந்திரையன் சென்னை மாநிலக் கல்லூரியில் பயின்ற பொழுது அங்கு கலைஇளவர் (சிறப்பு)
பட்டத்திற்காக (Master of Arts) விருதுநகரைச் சேர்ந்த கனகசவுந்தரி பயின்று வந்தார்.
சாலை இளந்திரையனும் கனகசவுந்தரியும் காதலித்தனர். கல்லூரிக் கல்வி முடிந்ததும் இருவரும்
தத்தம் பெற்றோரின் ஒப்புதலோடு 1954 சூலை மாதம் விருதுநகரில் திருமணம் செய்துகொண்டார். [7]
பணி[தொகு]
கல்லூரியில்[தொகு]
1954 சூலை முதல் 1957 ஏப்ரல் வரை சென்னை மாநிலக் கல்லூரியின் தமிழ்த் துறையில்
ஆசிரியர் பணியிடம் ஒன்று தற்காலிகமாக ஏற்பட்டது. சாலை இளந்திரையன் அப்பணியில்
அமர்த்தப்பட்டார்.
அரசு அலுவலகத்தில்[தொகு]
1957 ஆம் ஆண்டின் நடுவில் இந்திய ஒன்றிய அரசின் விளம்பர, தகவல் ஒலிபரப்புத் துறையில்
மொழிபெயர்ப்பாளாரகப் பணியாற்றத் தொடங்கினார்.
பல்கலைக் கழகத்தில்[தொகு]
1959 ஆம் ஆண்டில் தில்லிப் பல்கலைக் கழகத்தில் தமிழ்துறை தொடங்கப்பட்டதும் சாலை இளந்திரையன்
அத்துறையில் விரிவுரையளராகப் பணியேற்றார். அப்பல்கலைக் கழகத்திலேயே 1972 ஆம் ஆண்டில்
பேருரையாளராகவும் (Reader) 1983 ஆம் ஆண்டில் பேராசிரியராகவும் (Professor) பதவி
உயர்வுபெற்றார். 1985 ஆம் ஆண்டில் விருப்ப ஓய்வுபெற்று தமிழகம் திரும்பினார்.
ஓய்விற்குப் பின்னர்[தொகு]
பின்னர் சென்னையில் சாலை அச்சகத்தை உருவாக்கி நடத்தினார். [8]
படைப்புகள் [9][தொகு]
ஆக்கங்கள்[தொகு]
மாணவப் பருவத்திலேயே கதை, கவிதை, கட்டுரை என எழுத்துப்பணியில் ஈடுபட்ட சாலை
இளந்திரையன் பின்வரும் நூல்களை எழுதியிருக்கிறார்.
வ.எண்
ஆண்டு
நூலட்டை
நூல்
பொருள்
பதிப்பகம்
குறிப்பு
01
1962
சாலை இளந்திரையன் கவிதைகள்
கவிதைகள்
யுனிவர்சல் பப்ளிஷர்ஸ், சென்னை.
02
1963
உலகம் ஒரு குடும்பம்
கட்டுரைகள்
03
1963
சிந்தனைக்கு
கட்டுரைகள்
04
1964
அன்னை நீஆட வேண்டும்
கவிதைகள்
05
1964
இரண்டு குரல்கள்
கட்டுரைகள்
பேராசிரியர் முனைவர் சாலினி இளந்திரையனுடன் இணைந்து எழுதியது
06
1965
சிலம்பின் சிறுநகை
கவிதைகள்
07
1965
புரட்சிக் கவிஞரின் கவிதை வளம்
திறனாய்வு
பாரதிதாசன் கவிதைகளைப் பற்றிய திறனாய்வு
08
1965
தமிழ்க் கனிகள்
கட்டுரைகள்
பேராசிரியர் முனைவர் சாலினி இளந்திரையனுடன் இணைந்து எழுதியது
09
1966
காலநதி தீரத்திலே
கவிதைகள்
10
1966
தமிழில் சிறுகதை
திறனாய்வு
11
1966
புதிய தமிழ்க் கவிதை
திறனாய்வு
12
1966
சிறுகதைச் செல்வம்
திறனாய்வு
தமிழ்ப் புத்தகாலயம், சென்னை
13
1966
தமிழனே தலைமகன்
கட்டுரைகள்
பேராசிரியர் முனைவர் சாலினி இளந்திரையனுடன் இணைந்து எழுதியது
14
1968
பூத்தது மானுடம்
கவிதைகள்
இரண்டாம் பதிப்பு 1999இல் பேராசிரியர் சாலய் இளந்திரயன் அறக்கட்டளயால் வெளியிடப்பட்டுள்ளது.
15
1968
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
கவிதைகள்
16
1968
Some Aspects of Modern Tamil Literature
சென்னையில் நடைபெற்ற இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டின் பொழுது வெளியிடப்பட்ட சிற்றேடு
17
1968
நேயப்பாட்டு
திறனாய்வு
18
1968
தமிழுக்காக
கட்டுரைகள்
19
1968
உலகத் தமிழர் – ஓர் நடப்பு வருணனை
20
1968
எங்கள் காவியம்
21
1968
தமிழ் தந்த பெண்கள்
பேராசிரியர் முனைவர் சாலினி இளந்திரையனுடன் இணைந்து எழுதியது
22
1969
புதுத்தமிழ் முன்னோடிகள்
திறனாய்வு
தமிழ்ப்புத்தகாலயம், சென்னை.
23
1970
வீறுகள் ஆயிரம்
கவிதைகள்
24
1970
சமுதாய நோக்கு
திறனாய்வு
தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.
தமிழிலக்கியத்தில் சமுதாய நோக்கோடு படைக்கப்பட்ட கவிதைகளைப் பற்றிய 13 கட்டுரைகளின்
தொகுப்பு.
25
1971
கூட்டின் அமைதி குலைகிறது
கட்டுரைகள்
26
1971
வெற்றி மலர்கள்
கட்டுரைகள்
27
1971
எழுச்சி வேண்டும்
கட்டுரைகள்
28
1972
Salai 4.jpg
புதுத்தமிழ் முதல்வர்கள்
திறனாய்வு
தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.
கட்டுரையாளர் அட்டாவதானம் வீராசாமியார், நாடகாசிரியர் இராமசாமி ராசு, கலைக்களஞ்சிய
ஆக்குநர் சிங்காரவேலர், திறனாய்வாளர் செல்வ கேசவர் ஆகிய நால்வரின் பணிகளைப் பற்றிய
திறனாய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு.
29
1972
நஞ்சருக்குப் பஞ்சணையோ?
கவிதைகள்
30
1972
நம்மைப் பற்றிய சிந்தனைகள்
31
1973
காலத்தின் கேள்விகள்
32
1973
திருந்திய திருமணம்
33
1974
தமிழ் மாநாடு
34
1975
எங்கள் பயணங்கள்
பயணக் கட்டுரைகள்
தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.
35
1975
உரைவீச்சு
உரைவீச்சு
தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.
1979ஆம் ஆண்டில் தமிழக அரசின் பரிசு பெற்றது
36
1976
நடைகொண்ட படைவேழம்
கவிதைகள்
37
1976
ஏன் இந்த மெத்தனம்?
38
1976
தமிழ்ப் பண்பாட்டுக்கு ஓர் இயக்கம்
39
1977
மக்கள் நாயக மரபுகள்
அரசியற் கட்டுரைகள்
தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.
மக்கள்நாயகம் தொடர்பான 22 கட்டுரைகளின் தொகுப்பு.
40
1977
உள்ளது உள்ளபடி
உரைவீச்சு
41
1978
கேள்விகள் ஆயிரம்
கட்டுரைகள்
42
1978
புரட்சி முழக்கம்
திறனாய்வு
1978ஆம் ஆண்டில் தமிழக அரசின் பரிசினைப் பெற்றது.
43
1979
களத்திலே கடிதங்கள்
கடிதங்கள்
எழுத்துச் சீர்திருத்தத்தை ஆதரித்து சாலினியும் சாலை இளந்திரையனும் பலருக்கும் எழுதிய
கடிதங்களின் தொகுப்பு
44
1980
தமிழகத்தில் அறிவு இயக்கம்
45
1981
காவல் துப்பாக்கி
உரைவீச்சு
சாலய் வெளியீடு, சென்னய்-86
60 உரைவீச்சுகளின் தொகுப்பு
46
தமிழ்நாட்டுப் பழமொழிகள்
சாலை இளந்திரையனின் முனைவர் பட்ட ஆய்வேடு
47
1981
027211.jpg
அய்ந்தாவது தமிழ் மாநாடு
48
1981
ஒரு புதிய தமிழ் எழுச்சி
49
1981
வெடிப்புகள் உடைப்புகள்
50
1982
பொறுத்தது போதாதா?
51
1982
ஏழாயிரம் எரிமலைகள்
52
1984
நாளுக்கு நல்லபடி
53
1986
தமிழுக்காக
54
1986
ஓராசிரியர் பள்ளிகள்
55
1986
ஒரு மேல்சாதி நயவஞ்சகம்
56
1986
புதிய கல்விக்கொள்கை
57
1987
நெருப்பிலே மலர்ந்த தாய்மொழிப் பூக்கள்
58
1987
கணீரென்று வாழுங்கள்
59
1988
உரிமைகொண்ட தேசிய இனங்கள்
60
1989
இந்தியம் ஈழம் நச்சலியம்
61
1989
இப்படித்தான் வாழ வேண்டும்
62
1989
Salai 6.jpg
கூடங்குளம் கொதிக்கிறது
63
1990
அறுபதில் சில வீச்சுகள்
உரைவீச்சு
சாலய் வெளியீடு, சென்னய் 86.
சாலயார் தன்னுடைய 60ஆம் வயதில் எழுதிய 70 உரைவீச்சுகளின் தொகுப்பு.
64
1990
நினய்வூட்டு
65
1990
மண்டல் குழு அறிக்கை ஒரு சமூகநீதி ஆவணம்
66
1990
நெருப்பை வளர்க்கிறார்கள்
67
1991
தமிழின் ஒரே கவிஞன்
திறனாய்வு
சாலை வெளியீடு, சென்னை.
பாரதிதாசனே தமிழின் ஒரே கவிஞன் என நிறுவ முனையும் நூல்
68
1991
சொக்கன் கதை: ஒரு வணங்காமுடியின் கதை
தன்வரலாறு
சாலய் வெளியீடு, சென்னை.
சாலை இளந்திரையனின் தன்வரலாற்று நூல்.
69
1992
தமிழ் தமிழன் தமிழ்நாடு
அரசியற் கட்டுரைகள்
இந்நூலை எழுதியதற்காக சாலை இளந்திரையன் மீது குற்றவியல் வழக்குத் தொடரப்பட்டது.
70
1992
Salai 5.jpg
ஈழத்துப் புலிகளுடன் 28 நாட்கள்
உரைவீச்சு
71
1997
நாட்டிலும் ஏட்டிலும் தமிழர்கள்
72
1997
தாய் எழில் தமிழ்
கவிதைகள்
73
2000
சுடர் ஏந்திய தமிழ் மலர்கள்
வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரைகள்
பேராசிரியர் சாலய் இளந்திரையன் அறக்கட்டளை, சென்னை.
வ.உ.சி., கவிமணி, பாரதிதாசன், கல்கி, திருவள்ளுவர், அறிஞர் அண்ணா ஆகியோரைப் பற்றி
தில்லி தமிழ்ச் சங்கத்தின் சுடர் இதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு
இந்நூல்களுள் தொகுக்கப்பட்டவை தவிர இன்னும் தொகுக்கப்பட வேண்டிய கட்டுரைகள், கவிதைகள்,
கதைகள் பல இருக்கின்றன.
தொகுத்துப் பதிப்பித்தவை[தொகு]
சாலை இளந்திரையன் தானே படைத்த நூல்களைத் தவிர, பின்வரும் ஐந்து நூல்களை தொகுத்துப்
பதிப்பித்திருக்கிறார்:
வ.எண்
ஆண்டு
நூலட்டை
நூல்
பொருள்
பதிப்பகம்
குறிப்பு
01
1969
தில்லி தமிழ்ச் சங்க அண்ணா மலர்
தில்லி தமிழ்ச் சங்கம்
02
1972
தில்லித் தமிழ்ச்சங்க வெள்ளிவிழா மலர்
தில்லி தமிழ்ச் சங்கம்
03
1974
மஹாகவியின் இரண்டு காவியங்கள்
கவிதைகள்
பாரிநிலையம், சென்னை
ஈழத்துக் கவிஞரான உருத்திரமூர்த்தி என்னும் மஹாகவி (புனைப்பெயர்) இயற்றிய கந்தப்ப சபதம்
என்ற கட்டுக்கதைச் சதகம், சடங்கு ஆகிய இரண்டு காவியங்களின் தொகுப்பு.
04
1975
சுதந்திரத்துக்குப்பின் தமிழ்க்கவிதை
05
1982
எண்ணத்தின் வண்ணங்கள்
கட்டுரைகள்
பாரதியாரின் முன்னோடிகளைப் பற்றி தில்லி வாழ் தமிழாசிரியர்கள் எழுதிய கட்டுரைகள்
மொழிபெயர்ப்பு[தொகு]
சாலை இளந்திரையன் பின்வரும் நூலை மொழிபெயர்த்திருக்கிறார்:
வ.எண்
ஆண்டு
நூலட்டை
நூல்
பொருள்
பதிப்பகம்
குறிப்பு
01
1974
சுதந்திரப் போராட்டமும் மத்தியச் சட்டசபையும்
சாலை இளந்திரையனைப் பற்றிய நூல்கள்[தொகு]
சாலை இளந்திரையனின் மறைவிற்குப் பின்னர் பின்வரும் நூல்கள் அவர்தம் துணைவியார் சாலினி
இளந்திரையனால் தொகுக்கப்பட்டு வெளிவந்தன.
வ.எண்
ஆண்டு
நூலட்டை
நூல்
பொருள்
பதிப்பகம்
குறிப்பு
01
1998
சாலையார் பிளிறல்கள்
சாலையார் படைப்புகளில் இருந்து எடுக்கப்பட்டவை
பேராசிரியர் சாலய் இளந்திரயன் அறக்கட்டளை, சென்னை.
02
1999
பேராசிரியர் சாலய் இளந்திரயன் நினைவுமலர்
வாழ்க்கை வரலாறு
பேராசிரியர் சாலய் இளந்திரயன் அறக்கட்டளை, சென்னை.
பேராசிரியர் சாலை இளந்திரையன் பற்றி பலரும் படைத்த ஆக்கங்கள்
03
1999
சாலயாரின் கருத்துக் கோவை
சாலையார் படைப்புகளில் இருந்து எடுக்கப்பட்டவை
பேராசிரியர் சாலய் இளந்திரயன் அறக்கட்டளை, சென்னை.
04
2005 சூன்
நடய்கொண்ட படய் வேழம் சாலய் - சாலினி இளந்திரயன்
வாழ்க்கை வரலாறு (எழுதியவர்: சோ. சிவப்பிரகாசம்)
கலைநிலா பதிப்பகம், திருச்சிராப்பள்ளி.
பேராசிரியர் சாலை - சாலினி இளந்திரையன் ஆகிய இருவரைப் பற்றிய வாழ்க்கை வரலாறு
இதழ் பணிகள் [10][தொகு]
Salai 7.jpg
பெரிதாக்கு
தில்லி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் சுடர் என்னும் இதழ் வெளியிடப்படுகிறது. இவ்விதழின்
ஆசிரியராக 1960 ஆம் ஆண்டு முதல் 1971 ஆம் ஆண்டு வரை சாலை இளந்திரையன் பணியாற்றினார்.
1975 அக்டோபர் முதல் 1987 ஏப்ரல் வரை அறிவியக்கம் என்னும் இதழும் 17 மே முதல் 1993
ஏப்ரல் வரை வீரநடய் அறிவியக்கம் என்னும் இதழும் அறிவியக்கப் பேரவையின் சார்பில்
வெளியிடப்பட்டன. சாலை இளந்திரையன் அவ்விதழ்களின் சிறப்பாசிரியராகப் பணியாற்றினார்.
பயணங்கள்[தொகு]
1961 ஆம் ஆண்டில் சாலையர் இருவரும் சிங்கப்பூர், மலேசிய நாடுகளுக்கும்; 1962 ஆம் ஆண்டில்
இலங்கைக்கும் இலக்கியப் பயணம் மேற்கொண்டனர். 1974 ஆம் ஆண்டில் நான்காவது உலகத்
தமிழ்மாநாட்டின் பொழுது இலங்கைக்குச் சென்று வந்தனர். இவை தவிர, 1966 முதல் 1984 வரை
ஆண்டுதோறும் கோடைவிடுமுறைக் காலத்தில் தம் தமிழகத் தோழர்களின் உதவியோடு தமிழகத்தின்
பல்வேறு பகுதிகளுக்கும் சமூக – இலக்கிய – அரசியற் பயணம் மேற்கொண்டனர். [11]
அமைப்பாக்கப் பணிகள்[12][தொகு]
உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகம்[தொகு]
1964 ஆம் ஆண்டில் தில்லியில் உள்ள கீழ்க்கலை ஆராய்ச்சி மையம் தனது 26 ஆவது மாநாட்டை
கூட்டியது. அதிற் கலந்துகொள்வதற்காக தனிநாயகம் அடிகள் உள்ளிட்ட தமிழறிஞர்கள் பலரும்
உலகின் பல பகுதிகளிலிருந்து அம்மாநாட்டிற்கு வருகை தந்தனர். அவர்களோடு சாலை
இளந்திரையனும் இணைந்து உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தை நிறுவினர். இக்கழகமே உலகத் தமிழ்
மாநாடுகளை நடத்துகிறது.
இந்தியப் பல்கலைக் கழக தமிழாசிரியர் மன்றம்[தொகு]
1968 ஆம் ஆண்டில் சென்னையில் நடந்த இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டில் இந்தியத் தமிழ்ப்
பேராசிரியர்கள் பலருக்கு அவர்தம் ஆய்வுரைகளை நிகழ்த்த வாய்ப்புக் கிடைக்கவில்லை. எனவே
ஆண்டுதோறும் இந்தியத் தமிழ்ப் பேராசிரியர்கள் தம்முடைய ஆய்வுகளை வெளியிடுவதற்காக
இந்தியப் பல்கலைக் கழக தமிழாசிரியர் மன்றம் என்னும் அமைப்பை உருவாக்க சாலை இளந்திரையன்
உந்துசக்தியாக இருந்தார்.
அறிவியக்கப் பேரவை[தொகு]
1971 ஆம் ஆண்டில் குத்தூசி குருசாமியாரின் சுயமரியாதை இயக்கத்தைச் சார்ந்த நாத்திக
நந்தனார், மணிமார்பன் உள்ளிட்டோரின் உதவியோடு அறிவியக்கப் பேரவை என்னும் அமைப்பை சாலை
இளந்திரையன் உருவாக்கினார். அவ்வியக்கத்தின் வழியாகவே 1986ஆம் ஆண்டு வரை தம்முடைய சமூக
– அரசியற் செயற்பாடுகளை வெளிப்படுத்தினார். அதன் ஒரு பகுதியாக பின்வரும் மாநாடுகளை
நடத்தினார்:
நாள்
மாநாடு
இடம்
20. 5. 1979
எழுத்துச் சீர்மை மாநாடு
10. 5. 1980
அறிவியக்க மாநாடு
சென்னை
மே 1982
விழிப்புணர்ச்சி மாநாடு
குடந்தை
மே 1984
எழுச்சி நடை மாநாடு
திருப்பூர்
19. 5. 1985
அரசுத் திட்டங்களால் நலிந்தோர் வாழ்வு மலர்ந்ததா? கருத்துப் பேரரங்கு மாநாடு
பெருங்களத்தூர்
மே 1986
ஓராசிரியர் பள்ளிகள் சீரமைப்பு மாநாடு
குடந்தை
17. 5. 1987
இந்தி, ஆங்கில ஆதிக்க எதிர்ப்பு மாநாடு
ஈரோடு
22. 5. 1988
தமிழ்த் தேசிய இனமக்களின் வாழ்வுரிமை மாநாடு
சென்னை
மே 1989
கூடங்குளம் அணுமின் திட்டம், மழலையர் பள்ளிகள் எதிர்ப்பு இரட்டை மாநாடு
சென்னை
22. 8. 1992
வளர்தமிழ் மாநாடு
கோயமுத்தூர்
29. 12. 1993
மொழிச் சிறுபான்மையினர் உரிமைகள் சீரமைப்பு மாநாடு
சென்னை
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம்[தொகு]
1974 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காம் உலகத் தமிழ் மாநாட்டின் பொழுது அங்கு
கூடிய தமிழறிஞர்கள் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் என்னும் அமைப்பை உருவாக்கினர்.
அப்பணியில் சாலை இளந்திரையன் முக்கியப் பணியாற்றினார்.
தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம்[தொகு]
1980 ஆம் ஆண்டில் தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக் கழகத்தை நிறுவ தமிழக அரசு முடிவு
செய்தது. அதற்காக பேராசிரியர் முனைவர் வ. சுப. மாணிக்கம் தலைமையில் சாலை இளந்திரையன்
உள்ளிட்ட எண்மரைக்கொண்ட வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவில் தமிழ்ப் பல்கலைக்
கழகத்தின் வரைவுத் திட்டம் ஒன்றை சாலை இளந்திரையன் சமர்பித்தார். அதனை சிற்சில
மாற்றங்களுடன் வல்லுநர் குழு ஏற்றுக்கொண்டது. அதன் அடிப்படையிலேயே தமிழ்ப் பல்கலைக் கழகம்
உருவாக்கப்பட்டது.
சமூக - அரசியற் செயற்பாட்டுப் பணிகள்[தொகு]
விடுதலைப் போராட்டம் உச்சத்தில் இருந்த 1944-47 ஆம் ஆண்டுகளில் பள்ளி மாணவராக இருந்த
சாலை இளந்திரையன் இந்திய தேசிய காங்கிரசின் ஆதரவாளராக கதராடை அணிந்து இயங்கினார். [13]
1948 ஆம் ஆண்டில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்ற பொழுது திராவிட இயக்கக்
கருத்தியலால் ஈர்க்கப்பட்டு இயங்கினார். அதன் பின்னர் தன்னுடைய இறுதிநாள் வரை திராவிடத்
தந்தை ஈ. வெ. ராமசாமி பெரியாரின் அரசியற் கொள்கைகளையும் பாவேந்தர் பாரதிதாசனின்
இலக்கியக் கொள்கையையும் சாலை இளந்திரையன் பின்பற்றி வந்தார். பொதுவுடைமைத்
தமிழ்தேசியத்தை தன்னுடைய சமூக அரசியற் கொள்கையாகக் கொண்டு அறிவியக்கப் பேரவையை
உருவாக்கி தனது செயற்பாடுகளை மேற்கொண்டார். தன்மான வாழ்வியல், இந்திய தேசிய மறுப்பு,
மூடநம்பிக்கை ஒழிப்பு, ஈழவிடுதலை ஆதரவு, தமிழர் தன்னுரிமை ஏற்பு, நக்சலிய ஆதரவு
ஆகிய கொள்கைகளை வெளிப்படுத்தும் உரைகளை, படைப்புகளை, அறிக்கைகளை, கடிதங்களை சாலை
இளந்திரையன் தொடர்ந்து வெளியிட்டு வந்தார். [14]
1991 ஆம் ஆண்டில் பழ. நெடுமாறன் தடையை மீறி தமிழர் தன்னுரிமை பிரகடன மாநாட்டை நடத்தத்
திட்டமிட்டார். அம்மாநாட்டில் கலந்துகொள்ள தஞ்சாவூருக்கு வந்தால் கைதாவோம் என அறிந்தே
அங்கு வந்து சாலையர் இருவரும் கைதாயினர். தமிழ், தமிழன், தமிழ்நாடு என்னும் நூலை
எழுதியதற்காக இவர் மீது குற்றவியல் வழக்குத் தொடரப்பட்டது. [15]
விருதுகள்[தொகு]
1991 ஆம் ஆண்டில் பாரதிதாசன் நூற்றாண்டு நிறைவு விழாவில் இவருக்கு பாரதிதாசன் விருது
வழங்கப்பட்டது.
மறைவு[தொகு]
சாலை இளந்திரையன் நெஞ்சக நோயால் நீண்ட நாள்களாக அவதிப்பட்டு வந்தார். அவர் 4. 10. 1998
ஆம் நாள் மரணமடைந்தார். [16] அவரது விருப்பப்படியே அவரது உடல் சென்னை மருத்துவக்
கல்லூரி மருத்துவமனைக்கு ஆய்விற்காக அளிக்கப்பட்டது. [17]
சான்றடைவு (List of Refences)[தொகு]
--
“அடங்க மறு
அத்து மீறு
திரும்பி எழு
திருப்பி அடி
வெற்றி நமதே”
இவன்
கெ. குமார்
உதவிப் பேராசிரியர்
தமிழ்த் துறை
மாநிலக் கல்லூரி
சென்னை-5.
அலைபேசி எண் – 9444218357.