அறிவியல் ஆயிரம் : 'ஹைட்ரஜன்' ரயில்

0 views
Skip to first unread message

Dhivisha dhivi

unread,
Dec 17, 2025, 8:15:02 PM12/17/25
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம் : 'ஹைட்ரஜன்' ரயில்


 'ஹைட்ரஜன்' ரயில்

உலகின் ரயில் போக்குவரத்தில் அமெரிக்கா, சீனா, ரஷ்யாவுக்கு பின் நான்காவது இடத்தில் இந்தியா உள்ளது. இந்திய ரயில்வேயில் பெரும்பாலும் மின்சாரத்தில் இயங்கும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் 'ஹைட்ரஜனில்' இயங்கும் ரயில் அறிமுகபடுத்தப்படும் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இது ஹைட்ரஜன் செல்லில் இயங்கும். இது ஹைட்ரஜன், ஆக்சிஜன் இணைந்து ரயிலுக்கு தேவையான மின் சக்தியை வழங்குகிறது. டீசல் ரயில் போல இதில் கார்பன் வெளியீடு இல்லை. இதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்றது.
தகவல் சுரங்கம்

  குள்ளமானவர், உயரமானவர்

ஆஸ்திரியாவின் ஆடம் ரெய்னர், குள்ளமானவர், உயரமானவர் என பெயரெடுத்தவர். 1899ல் பிறந்த இவர் 18 வயதில் 122.55 செ.மீ., உயரமே இருந்தார். இதனால் முதல் உலகப்போரின் போது, அந்நாட்டு ராணுவ தேர்வில் (குறைந்தது 148 செ.மீ.,) நிராகரிக்கப்பட்டார். ஆனால் அடுத்து அசாத்தியமாக, ஆண்டுக்கு 9 செ.மீ., வளர்ந்தார். 1932ல் 33 வயதில் உயரம் 7 அடி, 2 இன்ச் (218 செ.மீ.,) என இருந்தது. இவரது அசாத்திய வளர்ச்சிக்கு 'பிட்யூட்டரி அடினோமா' பாதிப்புதான் காரணம் என கண்டறிந்த டாக்டர்கள் அதற்கு 'ஆப்பரேஷன்' செய்தனர். 1950ல் அவர் மறையும் போது உயரம் 234 செ.மீ.
Reply all
Reply to author
Forward
0 new messages