அறிவியல் ஆயிரம் : அதிகரிக்கும் உடல் பருமன்

0 views
Skip to first unread message

Dhivisha dhivi

unread,
Jan 20, 2026, 8:21:55 PMJan 20
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம் : அதிகரிக்கும் உடல் பருமன்

 ிக்கும் உடல் பருமன்

இந்தியாவில் உடல் பருமனால் பாதிக்கப்படுபவர்கள்எண்ணிக்கை, 15 ஆண்டுகளில் இரு மடங்கு அதிகரித்து உள்ளது என தேசிய குடும்ப சுகாதாரஆய்வு தெரிவித்துள்ளது. இதில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் 1.4%ல் இருந்து 3.1 சதவீதமும், 15 - 49 வயதுக்குட்பட்டோரில் பெண்கள் 12.6%ல் இருந்து 24%, ஆண்கள் 9.3%ல் இருந்து 23 சதவீதமும் அதிகரித்துள்ளது. உலகில் 2050ல் உடல் பருமனுள்ள மூன்று இளைஞர்களில் ஒருவர் இந்தியராக இருப்பர் என உலக ஆய்வு தெரிவித்துள்ளது. துரித உணவு, உடல் உழைப்பின்மை உள்ளிட்ட பல காரணங்களால் உடல் பருமன் ஏற்படுகிறது.
 தகவல் சுரங்கம் : மூன்று மாநிலம் உருவான நாள்

 ந்தியாவில் 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்கள் உள்ளன. இதில் வடகிழக்கில் உள்ள 7ல், மூன்று மாநிலங்கள் உருவான தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. வடகிழக்கு பகுதி சட்ட விதி 1971ன் படி திரிபுரா, மணிப்பூர், மேகாலயா ஆகியவை 1972 ஜன.21ல் மாநிலங்களாக உருவாக்கப்பட்டன. மணிப்பூர், திரிபுரா 1949ல் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. 1956ல் யூனியன் அந்தஸ்து வழங்கப்பட்டது. அம்மக்களின் மாநில கோரிக்கை 1972ல் நிறைவேற்றப்பட்டது. அசாமின் ஒரு பகுதியாக இருந்த மேகாலயா 1969ல் தன்னாட்சி பகுதியானது. 1972ல் மாநிலமாக உருவாக்கப்பட்டத
Reply all
Reply to author
Forward
0 new messages