அறிவியல் ஆயிரம் : குறைகிறதா பூமி சுற்றும் வேகம்

0 views
Skip to first unread message

Dhivisha dhivi

unread,
Jun 10, 2026, 8:47:09 PM (5 hours ago) Jun 10
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம் : குறைகிறதா பூமி சுற்றும் வேகம்
   

பருவநிலை மாற்றத்தால் பூமி சுழலும் விகிதத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என ஆஸ்திரியாவின் வியன்னா பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. பனிப்பாறைகள், பனிப்படலங்கள் உருகுவது படிப்படியாக பூமி சுற்றுவதை தாமதப்படுத்தி, நாட்களை சற்றே நீளமானதாக மாற்றுகிறது. பூமி நாள், தற்போது ஒவ்வொரு நுாற்றாண்டுக்கும் 1.33 மில்லி வினாடி நீளமானதாக உள்ளது. துருவப்பகுதி பனிப்படலம், பனிப்பாறைகள் உருகுவது, கடல்நீர்மட்ட உயர்வுக்கு வழிவகுக்கிறது. துருவப்பகுதி பனி உருகும்போது அதன் நீர் கடலுக்கு நகர்கிறது. இது பூமி மெதுவாக சுழல காரணமாகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 தகவல் சுரங்கம் : சர்வதேச விளையாட்டு தினம்
 
 

விளையாட்டு மகிழ்ச்சியை தருகிறது என உலகின் 71 சதவீத குழந்தைகள் தெரிவிக்கின்றனர். விளையாட்டு மூலமே குழந்தைகள் சிறப்பாக கற்றுக்கொள்கின்றனர்.கற்பனை, சிந்தனை திறன், தலைமைப்பண்பு, சவால்களை எதிர்கொள்ளும் திறன் வளர, விளையாட்டு ஒரு சக்திவாய்ந்த வாய்ப்பாக உள்ளது. உலகில் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு விளையாட்டு உரிமையை வழங்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ஜூன் 11ல் உலக விளையாட்டு தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'விளையாட்டை பாதுகாப்போம், குழந்தை பருவத்தை பாதுகாப்போம்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.
Reply all
Reply to author
Forward
0 new messages