அறிவியல் ஆயிரம் : சனியின் நிலவில் ஆறுகள்
26
சனியின் நிலவில் ஆறுகள்
சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களில் அதிக நிலவுகளை உடையது சனி. இதற்கு 274 நிலவுகள் உள்ளன. இதில் ஒன்று 'டைட்டன்'. இந்நிலையில் இதில் பூமியைப் போல ஆறுகள், ஏரிகள், மழைப்பொழிவு உள்ளிட்ட நீர்சுழற்சி உள்ளது. ஆனால் இவற்றில் எதிலும் ஒரு துளி கூட நீர் இருப்பதில்லை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நீருக்குப் பதிலாக, அந்த நிலவின் மொத்த வானிலை அமைப்பும் திரவ நிலையில் உள்ள மீத்தேன், ஈத்தேன் ஆகியவை தான் உள்ளது. அங்குள்ள பனிப்படலத்திற்கு அடியில் நீர் பாறையைப் போல உறைந்த நிலையில் உள்ளது என தெரிவித்துள்ளனர்.
தகவல் சுரங்கம் : கார்கில் வெற்றி தினம்
இந்தியாவின் கார்கில் மலைப்பகுதியை குறுக்கு வழியில் ஆக்கிரமித்த பாகிஸ்தானை அடித்து விரட்டி நம் ராணுவ வீரர்கள் 1999 ஜூலை 26ல் வெற்றிக் கொடி நாட்டினர். போரில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கார்கில் தினம் கடைபிடிக்கப்படுகிறது. லடாக் யூனியனில் கார்கில் உள்ளது. இங்கு குளிர் காலத்தில் வெப்பநிலை மைனஸ் 48 டிகிரி செல்சியஸ். 1999 ஏப்ரலில் பாக்., ராணுவம், பயங்கரவாதிகளுடன் ஊடுருவியது கண்டுபிடிக்கப்பட்டது. இதைதொடர்ந்து 'ஆப்பரேஷன் விஜய்' பெயரில் இந்திய ராணுவம் போரிட்டு பாகிஸ்தானை வெற்றி கண்டது.
W