அறிவியல் ஆயிரம் : ஒரே நேரத்தில் நான்கு கோள்கள்
சூரிய குடும்பத்தில் அனைத்து கோள்களும் சூரியனை வெவ்வெறு சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வருகிறது. இதில் எப்போதாவது சில கோள்கள் ஒன்றாக அணிவகுக்கும். இந்த வாரம் (ஏப். 16 - ஏப். 23) புதன், செவ்வாய், சனி, நெப்டியூன் ஆகிய நான்கு கோள்களை பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதிலும் ஏப். 20ல் சனி, செவ்வாய், புதன் கோள்கள் மிக நெருக்கமாக தெரியும். ஆனால் ஒவ்வொன்றும் லட்சக்கணக்கான கி.மீ., இடைவெளியில் இருக்கும். அதிகாலை 5:00 - 5:50 மணிக்குள் பார்க்கலாம். நெப்டியூனை தவிர மற்ற கோள்களை வெறுமனே பார்க்கலாம்.
தகவல் சுரங்கம் : நீண்டகாலம் வாழ்ந்த உயிரினங்கள்
பொதுவாக நாய்களின் ஆயுட்காலம் 10 - 15 ஆண்டுகள். ஆனால் போர்ச்சுகலை சேர்ந்த 'போபி' என்ற நாய் 31 ஆண்டு, 165 நாட்கள் உயிர் வாழ்ந்து, கின்னஸ் சாதனை படைத்தது. பூனைகளின் சராசரி வயது 15 ஆண்டுகள். ஆனால் அமெரிக்காவை சேர்ந்த 'கிரீம் பப்' பூனை, 38 ஆண்டு, 3 நாட்கள் உயிர் வாழ்ந்து கின்னஸ் சாதனை படைத்தது. பூமியில் உள்ள உயிரினங்களில் அதிக காலம் உயிர் வாழும் உயிரினம் 'கண்ணாடி கடற்பாசிகள்'. இவை 10 முதல் 15 ஆயிரம் ஆண்டுகள் உயிர் வாழும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.