அறிவியல் ஆயிரம்: பூமியின் சிறப்பு...
சூரிய குடும்பத்தில் பூமியில் மட்டுமே மனிதர்கள் வாழ்கின்றனர். இந்த பூமி பல சிறப்புகளை பெற்றது. இது 450 கோடி ஆண்டுக்கு முன் உருவானது என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இது சூரியனில் இருந்து 15 கோடி கி.மீ., துாரத்தில் உள்ளது. பூமியின் ஒரே துணைக்கோளான நிலவு, 3.84 லட்சம் கி.மீ. துாரத்தில் உள்ளது. பூமி, சூரியனை ஒருமுறை சுற்றி வர 365.25 நாட்கள் ஆகிறது. இதன் வேகம் மணிக்கு 1670 கி.மீ., பூமிக்கு அருகில் உள்ள கோள் - வெள்ளி (3.80 கோடி கி.மீ.,). பூமியின் மொத்த பரப்பளவு 51 கோடி சதுர கி.மீ., இதில் நீர்ப்பரப்பு (36.11 கோடி சதுர கி.மீ.,) தான் அதிகம்.
தகவல் சுரங்கம்: உலகின் அதிசய தீவு
தென் அமெரிக்காவில் உள்ள ஈக்வடார் நாட்டின் மாகாணங்களில் ஒன்று கலபாகோஸ். அந்நாட்டு தலைநகர் குவைட்டோவில் இருந்து 965 கி.மீ., துாரத்தில் உள்ளது.
பரப்பளவு 8010 சதுர கி.மீ., இதில் 127 தீவுகள் உள்ளன. மக்கள்தொகை 33 ஆயிரம். உலகின் மற்ற பகுதியில் காண இயலாத அபூர்வ விலங்குகள், பறவைகள், தாவரங்கள், பூச்சிகள் இங்கு வாழ்கின்றன. இதனால் இது 'அதிசய தீவு' என அழைக்கப்படுகிறது. 1978ல் ஐ.நா.,வின் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டது. பரிணாம வளர்ச்சியை கண்டறிந்த விஞ்ஞானி சார்லஸ் டார்வின், இத்தீவில் ஆராய்ச்சி செய்துள்ளார்,