அறிவியல் ஆயிரம் : நீரின் அடர்த்தி அதிகம் ஏன்
P
திட நிலையில் அணுக்கள் அல்லது மூலக்கூறுகள் குறிப்பிட்ட ஒழுங்கமைப்பில் இருக்கும். அவற்றில் அதிர்வு இயக்கம் இருந்தாலும், அதன் இடத்திலிருந்து நகராது. திரவ நிலையில் மூலக்கூறுகள் நகரும். வாயு நிலையில் அவை செல்லும் தொலைவு அதிகரிக்கும். அடர்த்தி என்பது குறிப்பிட்ட வெப்பநிலையில், குறிப்பிட்ட இட அளவில் எவ்வளவு மூலக்கூறுகள் உள்ளன என்பதைக் குறிக்கும். எனவே வாயு வடிவில் குறிப்பிட்ட அளவு இடத்தில் குறைவான மூலக்கூறுகளே இருக்கும். இதனால் அடர்த்தி குறைவாக அமையும். ஆனால் திரவ நிலையில் கூடுதல் மூலக்கூறுகள் அமைவதால் அடர்த்தி அதிகம்.
தகவல் சுரங்கம் : சுகாதாரமான பணியிடம்
விவசாயம், கட்டடம், துப்புரவு, சாலை, மின்சாரம், குடிநீர் வாரியம், சுரங்கம், அலுவலகம் உட்பட பல துறைகளிலும் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். பணியிடங்களில் அவர்களது சுகாதாரம், பாதுகாப்பை வலியுறுத்தி உலக தொழிலாளர் அமைப்பு ஏப். 28ம் தேதியை உலக பணியிட சுகாதாரம், பாதுகாப்பு தினமாக அறிவித்தது. பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு ஏற்படும் விபத்து, நோய்களை தடுப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கம். 'சிறந்த உளவியல் சமூகப் பணிச் சூழல்கள்: சிறந்த பணியாளர்கள், நிறுவனங்களுக்கான ஒரு வழி' என்பது இந்தாண்டு மையக்கருத்து.