அறிவியல் ஆயிரம் : மீண்டும் வருகிறதா 'எல்நினோ'

0 views
Skip to first unread message

Dhivisha dhivi

unread,
May 24, 2026, 10:31:12 PMMay 24
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம் : மீண்டும் வருகிறதா 'எல்நினோ'
 

 கடந்த 1877ல் ஏற்பட்ட 'சூப்பர் எல்நினோ' பாதிப்பால் உலகில் 5 கோடி பேர் பலியாகினர். பசிபிக் கடலின் வெப்பநிலை 2.7 டிகிரி செல்சியஸ் அதிகரித்து, உலகின் மழைப்பொழிவின் வடிவமைப்பை மாற்றியது. இதனால் உணவுப்பஞ்சம், நோய்கள் ஏற்பட்டது. இந்நிலையில் உலகின் சராசரி வெப்பநிலை 3 டிகிரி செல்சியசை தாண்டும். இதன் காரணமாக முந்தைய 'எல்நினோ'வை விட, சக்திவாய்ந்த 'சூப்பர் எல்நினோ', 2026ன் பிற்பகுதியில் நிகழும். இதனால் 1877 போல வறட்சி ஏற்பட வாய்ப்புள்ளது என வாஷிங்டன் பல்கலை ஆய்வு எச்சரித்துள்ளது.
 தகவல் சுரங்கம் : உலக கால்பந்து, தைராய்டு தினம்
 

 n கால்பந்து விளையாட்டை சிறப்பிக்கும் விதமாக ஐ.நா., சார்பில் மே 25ல் உலக கால்பந்து தினம் கடைபிடிக்கப்படுகிறது. பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் போது முதல் சர்வதேச கால்பந்து போட்டி 1924 மே 25ல் நடைபெற்றது. இதன் நுாற்றாண்டை சிறப்பிக்கும் விதமாக 2024ல் இத்தினம் தொடங்கப்பட்டது.

* தைராய்டு ஒரு சிறிய சுரப்பு. வண்ணத்துப்பூச்சி வடிவில் கழுத்தின் கீழ்ப்பகுதி மையத்தில் அமைந்திருக்கும். உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றங்களை கட்டுப்படுத்து கிறது. இதன் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த மே 25ல் உலக தைராய்டு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
Reply all
Reply to author
Forward
0 new messages