அறிவியல் ஆயிரம் : தங்கத்தை வெளியிடும் எரிமலை

1 view
Skip to first unread message

Dhivisha dhivi

unread,
Jul 1, 2026, 8:46:52 PM (7 hours ago) Jul 1
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம் : தங்கத்தை வெளியிடும் எரிமலை
 
 
அண்டார்டிகாவின் 'எரிபஸ்' எரிமலை தினமும் 80 கிராம் தங்க நுண்துகள்களை (ஆண்டுக்கு ரூ. 19 கோடி மதிப்பு) வெளியிடுகிறது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தென் துருவத்தில் இருந்து 1350 கி.மீ., தொலைவில் ரோஸ் கடலில் இந்த எரிமலை அமைந்துள்ளது. உயரம் கடல் நீர்மட்டத்தில் இருந்து 12,441 அடி. எரிமலை லாவா குழம்பில் இருந்து வெளியேறும் வெப்பமான வாயுக்களுடன் சேர்ந்து, இந்தத் தங்கத் துகள்கள் வளிமண்டலத்தில் கலக்கின்றன. இது 1000 கி.மீ., துாரம் காற்றில் பயணித்து பனிப்படலத்தில் படிகிறது. இதை சேகரிக்க முடியாது.
  தகவல் சுரங்கம் : விளையாட்டு பத்திரிகையாளர் தினம்
 

  விளையாட்டு, உடலுக்கு மட்டும் நல்லதல்ல. உலகையும் ஒருங்கிணைக்கிறது. விளையாட்டு போட்டிகள் தொடர்பான செய்தியை மக்களிடம் கொண்டு சேர்ப்பவர்கள் விளையாட்டு பத்திரிகையாளர்கள். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற போது 1924 ஜூலை 2ல் சுவிட்சர்லாந்தில் விளையாட்டுக்கான பத்திரிகையாளர்கள் சங்கம் தொடங்கப்பட்டது. இதன் 70வது ஆண்டு நினைவாக 1994 ஜூலை 2ல் உலக விளையாட்டு பத்திரிகையாளர்கள் தினம் தொடங்கப்பட்டது. இவர்களது பணியை பாராட்டுவதே இத்தினத்தின் நோக்கம்.

Reply all
Reply to author
Forward
0 new messages