அறிவியல் ஆயிரம் PUBLISHED ON : மே 26, 2026 12:00 AM 4

2 views
Skip to first unread message

Dhivisha dhivi

unread,
May 25, 2026, 8:13:53 PMMay 25
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம்
 

  புற்றுநோயை தடுக்க வாய்ப்பு

 

 n
உலகில் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதற்கு உணவுமுறை மாற்றம், உடல்பருமன், உடற்பயிற்சியின்மை, சுற்றுச்சூழல் மாசு, தொற்று, மரபணு உட்பட பல காரணங்கள் உள்ளன. இருப்பினும் புகையிலை, புகைப்பிடித்தல், மது ஆகியவை 48 சதவீதமாக உள்ளது. எனவே இந்த பழக்கவழக்கத்தை தவிர்த்தாலே, புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்தில் 50 சதவீதத்தை குறைக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இதன்மூலம் நுரையீரல் சுவாச அமைப்பு, வயிறு, இனப்பெருக்க உறுப்பு பாதிப்பு உள்ளிட்ட புற்றுநோய்களை தடுக்கும் வாய்ப்புள்ளது.
  தகவல் சுரங்கம்
 
PUBLISHED ON : மே 26, 2026 12:46 AM
   உலகின் நீளமான நீரிணை
  தென்கிழக்கில் மலாய் தீபகற்பம் - தென்மேற்கில் இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவுக்கும் இடையே அமைந்துள்ளது மலாக்கா நீரிணை. இதன் நீளம் 930 கி.மீ., இதுதான் உலகின் நீளமான நீரிணை. இதன் அதிகபட்ச அகலம் 250 கி.மீ., குறைந்தபட்ச அகலம் 38 கி.மீ. இது பசிபிக் - இந்திய பெருங்கடலை இணைக்கும் உலகின் முக்கியமான கப்பல் போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றாக உள்ளது. ஆண்டுக்கு ஒரு லட்சம் கப்பல்கள் இவ்வழியாக பயணிக்கின்றன. கச்சா எண்ணெய், நிலக்கரி உள்ளிட்ட உலகின் மொத்த வணிகத்தில் 25 சதவீதம் இதில் நடைபெறுகிறது.

 
 


Reply all
Reply to author
Forward
0 new messages