அறிவியல் ஆயிரம் : வெப்பநிலையால் பாதிக்கும் பென்குயின்

0 views
Skip to first unread message

Dhivisha dhivi

unread,
Jan 30, 2026, 7:45:34 PMJan 30
to valluvanpaarvai, brailleacl, inaiathendral

அறிவியல் ஆயிரம் : வெப்பநிலையால் பாதிக்கும் பென்குயின்

பனிப்பாறை உள்ளிட்ட குளிரான பகுதிகளே பென்குயின் வாழ்வதற்கு ஏற்றவை. இந்நிலையில் அதிகரிக்கும் வெப்பநிலை உயர்வு, அண்டார்டிகா பென்குயின்கள் வழக்கத்தை விட சீக்கிரமாகவே முட்டையிடுவதற்கு வழிவகுக்கிறது. இவை 'டியூக்ஸ்டோ' இன பென்குயின்கள் 2100க்குள் முற்றிலும் அழியும் ஆபத்தை உருவாக்கியுள்ளது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அண்டார்டிகாவில் வெப்பநிலை 2012ஐ விட, 2022ல் 3 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது. இதனால் பத்தாண்டுக்கு முன் பென்குயின்கள் முட்டை இட்ட காலத்தை விட தற்போது 2 வாரம் முன்னதாகவே இட வைக்கிறது.

தகவல் சுரங்கம் : தியாகிகள் தினம்

இந்திய சுதந்திர போராட்டத்தை தலைமையேற்று நடத்தியவர் மகாத்மா காந்தி. 1947 ஆக. 15ல் சுதந்திரம்பெற்ற நேரத்தில் கூட, மக்களிடம் ஒற்றுமையை வலியுறுத்தி கோல்கட்டாவில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். 'அகிம்சை' கொள்கையை வாழ்க்கை முழுதும்கடைபிடித்தார். 1948 ஜன.30ல் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது நினைவு தினம், உயிர் தியாகம் செய்த சுதந்திரபோராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. சுதந்திர போராட்ட வீரர்களின், வீரச் செயல்களை இன்றைய தலைமுறையினருக்கு தெரிவிப்பதே இதன் நோக்கம்.

Reply all
Reply to author
Forward
0 new messages